<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தினமலரின் சகிப்புத்தன்மை


தினமலர் இன்றைய
நட்சத்திர பதிவாக நமது பதிவை குறிப்பிட்டுள்ளது. தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் என்ற தலைப்பில் "முகமூடி - வலைத்தள சூத்திரம்" என்று குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறது...

தங்கள் கருத்துக்களை வலைத்தளத்தில் எழுதுவற்கும் அதற்கான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தான் பெற்ற அனுபவத்திலிருந்து சில தகவல்களை அள்ளி வழங்கியுள்ளார் முகமூடி. ஆழமான கருத்துக்களை பதிவு செய்தல், அரட்டை கச்சேரிகள், அர்த்தமற்ற பிற விஷயங்கள் என்று பிரித்து, அர்த்தத்துடன் ஆழமாக எழுதுவது எப்படி என்று சொல்லித் தருகிறார். எழுத்துத்துறை அல்லாத பிற துறையிலிருந்து எழுதுவோருக்கு இது மிகவும் உதவும் : mugamoodi.blogspot.com

தினமலர் குறிப்பிடும் பதிவு ::
ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி ?

தினமலரின் பார்வையை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. பின்ன.. 60 அடிக்கு ஆழமான பின்னூட்டம் இட்ட இளவஞ்சியில ஆரம்பிச்சி தாழங்காய் கடுக்காய் எல்லாம் போட்டு கவித செஞ்ச ஜும்பலயா ழ்பா வரைக்கும் அந்த பதிவோட கேரக்டருக்கு பலர் பலவிதமா அர்த்தம் கொடுக்க, நேர் கொண்ட பார்வை பார்த்த தினமலர் போல் எல்லாரும் இருந்தா கருத்து வேற்றுமைக்கெல்லாம் இடம் வருமா சொல்லுங்க...

வலைப்பதிவுகளை தினமலரில் தினம்தோறும் அறிமுகப்படுத்தும் அந்த முகமிலிக்கு எனது நன்றி.

வலைப்பதிவுகள் பத்தியெல்லாம் அறிமுகமே இல்லாம நேரா தினமலர்ல இருந்து யாராவது வந்தா அவர்கள் பார்க்க (படிக்கவும்தான்) ::

01. ஒரு சைவப் பதிவு
02.
அண்ணா பல்கலை மன்னராட்சி
03.
சிறுகதைப்போட்டி முடிவுகள்
04.
எஸ்.ஏ.ராஜ்குமாருடன் சந்திப்பு
05. மெட்டி ஒலி காற்றோடு
06. உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி
07.
புலிகளின் மூர்க்க குணம்
08.
முதல் விமான பயண வழிகாட்டி

மேற்கண்ட பதிவுகள தெரிவு செஞ்ச விதத்த சொன்னா நிறைய பேரு நிஜமாவே அடிக்க வருவாங்க. அதனால அப்பீட்டு... விட்டுப்போன மிச்ச சொச்ச பதிவுகள சைடுல பாருங்க ஒரு ட்ராப் டவுன் லிஸ்டு, அதுல இருந்து படிச்சுகுங்க. எல்லாப்பதிவும் இருக்கு.

சரி இந்த பதிவுக்கும் தலைப்புல சகிப்புத்தன்மைன்னு இருக்கே அதுக்கும் என்ன சம்பந்தம்கறீங்களா? இங்க போய் பாருங்க புரியும்...

தினமலர் ஜங்க் மலர்

இப்படி அடுத்து ரிலீஸ் ஆகப்போற என்னோட "சகிப்புத்தன்மை" பதிவுக்கு ஓவரா பில்டப் கொடுக்கிறேன். ஆனா பதிவு ரிலீஸ் ஆகும்போது "யானை படுத்தா குதிரை ஓடினா"ன்னு ஜல்லியடிக்கிற அளவு இல்லாம இருந்தா சரிதான்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பலே முகமூடி பலே!
 



தினமலரைப் பார்த்துவிட்டு ஆடிப் போய்விட்டேன். தீவிர எழுத்துக்கும் நக்கலுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதி இருக்கிறார்களா அல்லது உங்கள் பதிவையே நக்கல் அடிக்கிறார்களா என்று எனக்கு புலப்படவில்லை,

எவ்வாறு இருப்பினும் வாழ்த்துக்கள்!
 



ரொம்ப நாளாக இந்த மாயவரத்தான் என்பவரை காணவில்லை. எனக்கென்னமோ அவர்தான் தினமலரில் சேர்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது ;-)
 



வாழ்த்துகள் முகமூடி
 



வெரிகுட் !! கலக்குங்க முகமுடி, வாழ்த்துக்கள் .. இன்னும் நிறைய செய்தி தாள்களில் உங்கள் வலைப்பூ பற்றிய செய்தி வர வாழ்த்துக்கள்

இந்த நேரத்துல, சின்னவர் வேற முகமூடி திறக்க போறேன்.. கிழிக்க போறேனு பேசிகிட்டிருக்காரு..
 



வீ ஏம்.
இப்பவெல்லாம் எதை எழுதுவது என்றே பயமாய் இருக்கு. நீங்க வேற போட்டு கொடுக்கிறீங்களே.

முகமூடி,
நம்ம தினமூடி பத்திரிக்கையிலும் இந்த மாதிரி ஏதாவது பகுது ஆரம்பிக்கலாம்.
 



சக அமெரிக்க வலைப்பதிவு அன்பர்களே தங்களது உதவி இங்கே தேவை

http://yaathirigan.blogspot.com/2005/10/blog-post_20.html

அறிவிப்பு இடத்துக்கு நன்றி தல..

-
செந்தில் / Senthil
 



Dinamalar is really funny.
 



சரி, உங்க கருத்து ??