ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி ?
பதிவுகள் இரண்டு வகைப்படும். ஆழமான பதிவுகள், அர்த்தமற்ற அரட்டை கச்சேரிகள்... ஆழமான பதிவுகள் அல்லாத அனைத்துமே அர்த்தமற்றவை லிஸ்டில் சேரும்.
முதலில் ஆழமான பதிவு எழுதுவது... அது எல்லோரும் நினைப்பது போல் கடினமல்ல. ரொம்பவும் எளிமையானதே. வாக்கியங்கள் அமைத்து விளையாடி இருக்கிறீர்களா? அதுதான் ஆழப்பதிவு எழுத அவசியமான திறமை... கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.
இப்பொழுது எல்லா பத்தியிலிருந்தும் ஒவ்வொரு வார்த்தை எடுத்து நடு நடுவில் சில பொருத்தமான வார்த்தைகள் தூவி வாக்கியம் அமைக்க வேண்டும்.
உ.ம் : திராவிட கோட்பாட்டில் விளைந்த மானுடவியல் எழுச்சி
முதலில் பின்னூட்டத்தில் ஆரம்பியுங்கள். ஆனால் கரணம் தப்பினால் மரணம்தான். வாக்கியங்கள் அமைக்கும் போது வார்த்தைகளை மாற்றி அமைத்தீர்களெனில் நீங்கள் காலி. அண்ணன்மார்களால் உங்களுக்கு முத்திரை குத்தப்படும். அப்புறம் நீங்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் அனானிமஸாக வந்து "முத்திரையாளரிடமிருந்து இது மாதிரி பின்னூட்டங்கள் வராமல் இருந்தால்தான் அதிசயமே" என்று பின்னூட்டம் இடுவார்கள்.
பயம் வேண்டாம். வலைப்பதிவுகளை கொஞ்ச காலம் பார்வையிட்டால் எப்படி வாக்கியம் அமைக்க வேண்டும் எப்படி அமைக்க கூடாது என்பது சுலபமாக புரிபடும். பழக பழக மேற்கண்ட வகையில் வாக்கியங்கள் பல அமைக்கும் திறமை வசப்படும்.
நீங்கள் ஆழமான பதிவரோ என்று பலரும் சந்தேகத்தோடும் ஆச்சரியத்தோடும் பார்க்க ஆரம்பிக்கும் காலகட்டம் இது. இதை நீங்கள் சரியாக உயயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்கியங்கள் அமைக்கும் போது தூவல் வார்த்தைகளை வாக்கியத்தோடு பொருந்தா வண்ணம் போட வேண்டும்
இந்து கருத்தியலை அறீவீக்கையாக்கும் (அச)மஞ்ச ஆதமாக்களின் அருத்தமற்ற அ(ப)/(ரு)த்தங்களின் விளைவாக பிராமணீய நிலைப்பாட்டுக்கு சிறார்களும் மற்றும் அறிஞர்களும் கொடுத்த (சம்)மட்டையடி காலத்துக்கும் ஆழமான கடுப்பை கொடுக்கும் என்பது திண்ணம்.
உங்களின் வாக்கியங்களில் உலக அறிஞர்களின் பெயர்களை உபயோகிப்பது மிகுந்த பலன் தரும். மார்ஸ், ப்ளூட்டோ, நெப்ட்யூன் போன்ற அறிஞர்களின் பெயர்கள் ஆரம்ப நிலையில் உதவலாம். காலம் செல்ல செல்ல நீங்கள் இன்னும் ஆழமான அறிஞர்கள் பெயரை உபயோகிக்க வேண்டும். இதற்கு நீங்கள் ஸ்க்ராம்ப்ளர் விளையாட தெரிந்த, தமிழ் தெரியாத பக்கத்து வீட்டு பையனின் உதவியை நாடலாம். பல எழுத்துக்களை அவனிடம் கொடுத்து ஒரு வார்த்தையாக கோர்க்க சொல்லுங்கள். உதாரணமாக அவன் பா மற்றும் ழ் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தால் தமிழ் தெரியாததால் அதை ழ்பா என்று சேர்ப்பான். உங்கள் அறிஞர் ரெடி. நீங்கள் செய்ய வேண்டியது உலகில் அதிகம் பேர் அறியாத ஒரு நாட்டை கண்டுபிடிப்பது மட்டுமே.
ஆப்பிரிக்க காண்டத்தில்* இருக்கும் ஜும்பலயா நாட்டில் வாழ்ந்த ழ்பா (1837-1893) திராவிட கொள்கை குறித்து சொல்வதை பாருங்கள். இந்து கருத்தியலை அறீவீக்கையாக்கும் (அச)மஞ்ச ஆதமாக்களின் அருத்தமற்ற அ(ப)/(ரு)த்தங்களின் விளைவாக பிராமணீய நிலைப்பாட்டுக்கு சிறார்களும் மற்றும் அறிஞர்களும் கொடுத்த (சம்)மட்டையடி காலத்துக்கும் ஆழமான கடுப்பை கொடுக்கும் என்பது திண்ணம். இதை இப்போதைய அறிவிலிகாள் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, அறிந்து கொள்ளவும் ஆர்வமற்றவ்ர்களாக இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது தமிழ் நல்லுலகத்தின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. எது எக்கோடு கெடுகிறதோ, அடுத்த தலைமுறை நாசம் என்பது மட்டும் தெளிவு..
(* :: கண்டம் என்பதன் இலக்கிய மொழி)
இது போன்ற இரண்டு பின்னூட்டங்கள் கொடுத்தால் போதும். சந்தேகம் அச்சரியம் எல்லாம் அகன்று நீங்கள் ஆழமான பதிவர் என்பது முடிவே ஆகிவிடும்.
இப்போது அடுத்த நிலை. இது போன்ற பல பின்னூட்டங்களை சரளமாக அமைக்கும் திறமை அமையும் போது நீங்கள் பதிவு ஆரம்பிக்க வேண்டும். ஆழமான பதிவர் என்பது வேறு, ஆழமான பதிவு என்பது வேறு. ஆழமான பதிவுக்கு நாம் போர்வெல் போடுபவர்களை ஆராய வேண்டும். தண்ணீரை தேடுவதுதான் போர்வெல் போடுவதன் நோக்கம். தண்ணீர் கிடைப்பது எவ்வளவுக்கெவ்வளவு கஷ்டமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு போர்வெல்லின் ஆழமும் அதிகரிக்கும். ஆகவே உங்கள் பதிவு படிப்பவருக்கு புரிவதற்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறதோ அவ்வளவு ஆழமான பதிவர் நீங்கள் என்பதாக உலகம் முடிவு செய்யும்.
இப்போது நீங்கள் ஆழமான பதிவர் ஆகிவிட்டீர்கள், பதிவுகளும் எழுதப்படுகின்றன. ஆனால் உங்கள் பதிவுக்கு ஒரு நாலு பேராவது பின்னூட்டம் இடவில்லையெனில் அது விழலுக்கு இறைத்த நீராகாதா? சாதா பின்னூட்டம் பெற இது சாமான்யர்களுக்கான பதிவும் அல்ல. ஆக எக்ஸ்க்ளூசிவ் பின்னூட்டங்கள் பெற நீங்கள் எக்ஸ்க்ளூசிவ் ரசிகர்கள் பெற வேண்டியது அவசியம்.
எக்ஸ்க்ளூசிவ் ரசிகர்கள் இரண்டு வகைப்படுவர்.
அ)ஆழமான பதிவை புரிந்து பின்னூட்டமிடுபவர்கள்
ஆ)ஆழமான பதிவை புரியாமலே பின்னூட்டமிடுபவர்கள்
அ) முதல் ரகம் doesn't exist. அது போன்றவர்கள் இருப்பதாக ஒரு தோற்றம் வரும். அது மாயை. சில சமயத்தில் ஆழமான பதிவர்கள் சிலர் உங்கள் நண்பர்களாக இருக்கும் நிலையில் புரிந்து பின்னூட்டமிடும் தோற்றத்தில் அவர்கள் சில பின்னூட்டங்கள் இடலாம். அந்த பின்னூட்டங்களும் "எல்லாருக்கும் புரிகிறது நமக்கு மட்டும் புரியவில்லையே" என்று சாதாரணமானவர்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளும் வகையில் புரியாமல் இருக்கும். ஆனால் உண்மையில் அவர்கள் அவர்கள் பாணியில் ஆழமான பின்னூட்டங்கள் இடுகிறார்கள். உதாரணமாக இப்போது கற்பு குறித்த விவாதிக்கும் எந்த பதிவிலும் சென்று நீங்கள் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை இடலாம்.
நியாந்தர்தால் கால மனிதர்களின் கலாச்சாரத்தை ஒப்பு நோக்கும் காலத்தில் ஒரு சாரார் கற்(றுப்)பு என்னும் கைவிலங்கை கால்விலங்காக போட அதுகுறித்த தளைகளை உடைத்தெரியும் ஆன்றோரின் வாக்கியத்தை சரிவர புரிந்து கொள்ளாததற்கு &(%$# க்கு பின்னாலுள்ள *%*# அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுவரை இது அதிகப்பிரசிங்கித்தனமாகவே எனக்கு படுகிறது.
ஆ) இப்போது இரண்டாம் ரகம். நம்புங்கள். இவர்களை நீங்கள் நினைப்பதை விடவும் உங்களுக்கு பேருதவி புரிவார்கள். அவர்களின் நம்பிக்கையை பெற முன்பெல்லாம் மிகவும் மெனக்கெட வேண்டும். ஆனால் மந்திர கீர்த்தி சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதுவும் சுலபமாகிவிட்டது.
மகீ சூத்திரம் - எளிய விளக்கம் :: ஹைஸ்கூல் விளையாட்டுத்திடலுக்கு சென்று பாருங்கள். கிரிக்கெட் மாட்ச் இடையில் சிறு வாக்குவாதம் நடைபெறும். பொதுவாக பேட், பால், ஸ்டம்பு ஸ்பான்ஸர் செய்தவனின் பின்னால் ஒரு கூட்டம் நின்றுகொண்டிருக்கும். அவர்கள்தான் உங்கள் இலக்கு. நீங்கள் இப்போது ஸ்பான்ஸர் செய்தவனுக்கு சாதகமாக தோன்றும் வண்ணம் ஒரு சில வாக்கியங்கள்
நீங்க எதுக்கு பேசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க, அவன் திருந்த மாட்டான். அவன் &%*# இருந்து வரான். அவன் நம்மாளு இல்ல.
போன்று பேச வேண்டும். இதைத்தான் நஞ்சை விதைத்தல் என்கிறார் வள்ளுவர். இதை ஆங்கிலேயன் பாணி பிரித்தாளும் சூழ்ச்சி என்போரும் உண்டு.. நமக்கு அது முக்கியமல்ல... இதை பேசும் போது தன்னம்பிக்கையோடு, கூட்டத்தின் மீது உங்கள் அடிமனதில் இருந்து பாசமாக இருக்கிறீர்கள் என்று தோன்றும் வண்ணம் பேச வேண்டும். இப்போது கூட்டத்தில் இருக்கும் பாசத்துக்கு ஏங்கும் தம்பிகள் சிலர் அண்ணா என்பார்கள். அவ்வளவுதான் உங்களுக்கு ரசிக சிகாமணிகள் கிடைத்து விட்டார்கள்.
இனி உங்களின் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் கியாரண்டி... என்ன ஒன்று பின்னூட்டங்கள் எல்லாம் ஸ்டீரியோ டைப்பாக
#) அண்ணே நீங்க சொன்னதற்கு பிறகுதான் எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் இருப்பதே புரிகிறது...
#) அண்ணே என்ன பண்றது பட்டாத்தான புரியுது, இனி நீங்க சொல்ற மாதிரியே தலையாட்டுறேன்...
#) ஸார் நீங்க தெய்வம் சார்..
என்றே இருக்கும்... கொஞ்ச நாள் சென்று
உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...
என்றாகும் போது நீங்கள் cream of ஆழப்பதிவர் லிஸ்டில் சேர்ந்து விட்டீர்கள்...காலம் செல்ல செல்ல உங்களின் ஆழத்தை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். இப்போது நீங்கள் சாதா ஆழப்பதிவர்கள் லிஸ்டில் இருக்கிறீர்கள். போக போக நீங்கள் எழுதவதன் நோக்கம் உங்களுக்கே புரியாமல் ஆகும் காலகட்டத்தில் நீங்கள் சூப்பர் ஆழப்பதிவர் லிஸ்டில் சேர விண்ணப்பிக்கலாம். அதில் சேர உங்கள் பதிவு மட்டுமல்ல, அதற்கு நீங்கள் போடும் படமும் புரியக்கூடாது.
இடமிருக்கும் படம் சா(சோ)தா பதிவர்கள் போடுவது. வலமிருப்பது அதே படம் சூப்பர் ஆழம் போடுவது. இதற்கு நீங்கள் ஃபோட்டோ ஷாப்பில் சிறிதளவாவது தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
இந்த வித்தை கைகூடும் போது நீங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் இருக்கும் சூப்பர் ஆழப்பதிவர் க்ளப்பில் ஒருவர்...
சாதாவோ சூப்பரோ ஆழப்பதிவராவதில் பயன்கள் பல உண்டு. முக்கியமானது உங்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை. உதாரணமாக சாதாரண பதிவர் மற்ற ஒருவரின் கருத்தை எதிர்க்கிறார் என்று கொள்வோம், சாதாரணர் மென்மையான குட்டு வார்த்தைகளை உபயோகித்தாலும் சமூகம் அவரை கீழ்த்தரமாக பார்க்கும். என்ன பண்பாடோ என்று சலிப்படையும். ஆனால் ஆழப்பதிவரோ ஒருவரின் சாதி, பிண்ணனி, குணாதிசயங்கள் என்று எதை பற்றியும் திட்டலாம். கேவலமான திட்டு வார்த்தைக்ள் உபயோகிக்கலாம். அவையெல்லாம் ஆழப்பதிவரானவர், சமுதாயத்தின் பிற்போக்குத்தனத்தின் மீதுள்ள தனது தார்மீகக்கோபத்தில், சமுதாயம் திருந்த வேண்டுமே என்ற சமூக அக்கறையோடு, வீணாய் போன சமூகத்துக்கு கொடுக்கும் சம்மட்டியடியாகவே பார்க்கப்படும்.
ஆல் த பெஸ்ட்.
சாதாரணமான அகலாமான பதிவுகளை விட உம்மிடம் இருந்து இது போன்ற ஆழமான பதிவுகளை நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த பின்னூட்டமே ஒரு 150 அடி ஆழ கிணற்றுக்குள் இருந்த "டைப்" பியதால் இதையும் ஒரு ஆழமான பின்னூட்டமாய் திராவிட பரிமாண வளர்ச்சியில் இது போன்ற விளிம்புநிலை பதிவுகளின் பின்னூட்டங்களின் அவ(சியத்)தை மேன்மைசாரா வாழ்க்கைமுறையின் ஜல்லியடிப்புகளை எதிர்த்து கூறியதை நான் வான்¢கோழி... சீ சீ வழிமொழிகிறேன்.
//இடமிருக்கும் படம் சா(சோ)தா பதிவர்கள் போடுவது
//
இந்த வாக்கியத்தை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால்
புதிய பமக , இதை எதிர்த்து, முகமூடி வாசலில் கஸ்மால பொடி வீசி போராட்டம் நடாத்தும் !
// திராவிட பரிமாண வளர்ச்சியில் இது போன்ற விளிம்புநிலை பதிவுகளின் பின்னூட்டங்களின் அவ(சியத்)தை மேன்மைசாரா வாழ்க்கைமுறையின் ஜல்லியடிப்புகளை எதிர்த்து கூறியதை //
வாங்க சின்னவன்... உடனே ஆழப்பதிவர் ஆகும் முயற்சியில இறங்கிட்டீங்க போல... கலக்குங்க... என்ன ஒன்னு கொஞ்ச நாள் கழிச்சி உங்க வீட்டுல உங்களுக்கு வேப்பிலை அடிப்பாங்க.. பாவம் நீங்க.
***
நன்றி பாண்டி... அத மறந்தே போயிட்டேன் பாருங்க. இருந்தாலும் போன மாதம் சூப்பர் காமெடி மாதமாச்சே.. நான் தேர்ந்தெடுக்க ஆரம்பிச்சா அப்புறம் செக்கூலரிஸ்டுங்க கூட்டமா கும்மி அடிச்சிருவாங்களோன்னு ஒரு ரோசனைதான்
***
அனானிமஸ், என்ன இப்படியெல்லாம் சொல்றீங்க. அய்யோ, எனக்கு ரொம்ப பயமா இருக்கே..
***
ஆனந்த், மகளிர் அணி வந்து போராடுமா? :P
அண்ணா ரொம்ப ஆழமாயிருக்கு. இத புரிஞ்சுக்கணும்னா 'பாப்லோ தெரிதா' (தெரிதா இல்ல) சொன்னா மாதிரி விளிம்புநிலை பதிவர் பண்டித பதிவ புரிஞ்சுக்கணும்னா பரிணாம சூத்திரமும் மேன்மைசார் வாழ்கைமுறையும் ஒருங்கே இணைந்த ஒரு கருத்தியம் எழுச்சி வாய்ந்த்த...
(அப்பா போதும்டா சாமி நானே வளுக்கி ஆழத்துல வுளுந்திட்டேன் இனி என்ன சென்னாலும் யாருக்கும் (என்னையும் சேத்துதான்)புரியபோரதில்ல)
Aio mukamoodi..
unka payam poii..
en kopam meii...
mutalil maththa manusanin kopathuthutkku RESPECT koddunka..
Adikkira kai than anaikkum
"நான் சொல்லவேண்டும் என்று நினைத்ததை நீங்கள் அப்படியே என்னைவிட அழகாக சொல்லிவிட்டீர்கள்."
இப்படிக் கூட ஒரு ஆழ்பதிவர்/அறிவுஜீவி பின்னூட்டம் இருக்குது, மிஸ் செஞ்சிட்டீங்களே முகமூடி
-shallow பதிவர்
1.வலைப்பதிவின் அரிச்சுவடியைக் கற்றுக் கொடுக்கும் அற்புதக் கையேடு
2. உங்களுக்கு எப்படி சார் இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குது?
3.தமிழ்ச்சூழலில் உங்களைப் போன்றோர் முன்வைக்கும் நுண் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்லர் நாங்கள்.
4.காப்பிக்கு (சர்க்கரை)சீனியின் அவசியம் பற்றிப் பேசும் நீங்கள் சீனியை நீரிழிவு நோய் உள்ள்வர்களுக்கும் பரிந்துரைக்க முடியுமா? அப்போது சர்க்கரை வேண்டாம் என்று சொல்பவர்கள் இப்போது மட்டும் சர்க்கரையின் அவசியம் பற்றிப் பேசுவதை நண்பர் புரிந்து கொள்ள வேண்டும்.
5. வெல்லத்தின் சிறப்பைப் பற்றியே இதுவரை பேசி வந்த கும்பல் இப்போது சீனியின் தன்மையைப் பற்றி பேசுவதன் நோக்கம் என்ன? காபிக்கு கேட்கும் சீனியை வெல்லப் பாயாசத்துக்கும் பயன்படுத்துவார்களா?
போன்ற பின்னூட்டங்களையும் முன்மொழிகிறேன்.
வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி மாதிரி முகமூடி பதிவில் ஆழப்பதிவர் என்ற புகழ் பெற கடும்போட்டி நிலவலாம்.
மறைத்தலற்று, நேரிடையான பதிவுகளின் நடுவில், சமூக விழுமியங்களின் மீது கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் எழுதுவதே தங்கள் அரசியல் என்று தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் முகமூடி போன்றோரின் இப்பதிவு அருவருக்க வைக்கிறது. "ஆழமுன்னா என்னா" என்று நாயகி கேட்பதற்கு "அது ரொம்ப டீப்பம்மா" என்று நாயகன் வழியாக இளையராஜா ஒரு படத்தில் கூறியதை பதிவரால் ஏற்க முடியவில்லையா அல்லது அதுவும் புரியாதது போல் நடிக்கிறாரா?
ழான் கௌ நாய்ராவ் (லித்துவேனியா 1434- 1438) கூறுகிறார்: இலக்கிய தரிசனம் என்பது இலக்கியத்தை தரிசனம் செய்வது மட்டுமல்ல, இலக்கியமாய் இலங்குவதுமே ஆம்.. இதுபோன்ற வெத்துப் பதிவாளகல் இதை நினைத்துப் பார்ப்பார்களா..பார்த்தாலும்தான் புரியுமா?
நகைச்சுவையைச் சுவையாகச் சொல்வது ஒரு வகை என்றும் கலை என்றும் கொண்டால், அதில் நீங்கள் செய்யும் வகையும் கலையும் புதுமை என்று சொல்வதற்கு இப்படி ஒரு பதிவும் அது சார்ந்த பின்னூட்டங்களும் எவ்வளவு ஆதாரமாக இருப்பதைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் கவலைப்படாமல் துணிச்சலோடு இங்கு இட்ட உங்களைப் பாராட்டுவதற்கு வருகின்ற அனைவரிலும் நான் முன்னிற்கவில்லையென்றாலும் பின்னிற்கவில்லை என்பதை அறிந்து பெருமகிழ்வு எய்தினேன். (இது எந்த வகைப் பதிவு முகமூடி?)
===============================
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
V
பின்னூட்டம்!
ஏதோ என்னால முடிஞ்ச ஆழமான பின்னூட்டம்! தப்பா இருந்தா திட்டாதிங்கப்பு! இந்த வெளையாட்டுக்கு நான் புதுசு...
சிறுகதை இலக்கிய வள்ளலின்
இந்தப் பதிவு எள்ளல்.
படிப்பவர் மனமெல்லாம் துள்ளல்.
வி.டி,ஆர். முயற்சியைக் கைவிட்டேன்.
எங்கேயோ போயிட்டீங்க முகமூடி..
குறைந்த பட்சம் உங்கள் பதிவில் பின்னூட்டம் இடும்போதாவது ஆழமான பதிவு/பின்னூட்ட சொற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தார்மீகக் கடமையை நான் எனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதோடு, ஜாலியாக ஏதாவது பின்னூட்டமிட முயற்சி செய்கிறேன் என்று உறுதி கூற விரும்பும்நிலையில் அந்த வார்த்தைகள் எனக்கே கேலிகுரியனவாக விளங்குகின்றன என்றால் நான் உங்கள் பதிவில் எப்படி மறுமொழியிட முடியும் என்பதற்கு நீங்களே ஒரு பதிவு போட்டுக் கற்றுக் கொடுங்கள்.
தட்டச்சு தான் என்றாலும் மூச்சிரைக்கிறது.
எனவே சிம்பிளாக:
பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
வந்து பின்னூட்டம் இட்டு இருப்பவர்கள் எல்லாம் (சோ)சாதா பதிவர்களே. ஒரே ஒரு ஆழ பதிவரைக்கூட இங்கு காணோம்.
ரொம்ப குழப்பிட்டீங்களே தல... நமக்கெல்லாம் இப்படி சொன்னா படிச்சு புரிஞ்சுக்கா 4 நாள் ஆகும்..
நல்லா புரியுற மாதிரி, பளிச்சுனு ஒரு 5 வரில இந்த பதிவு பற்றீ சொல்லுங்களேன்..
கலக்கல்! ஆனால் ஒரு மேட்டரை விட்டுவிட்டீர்கள். ஆழமான பதிவுகளுக்கு தலைப்பில் உம்மைத் தொகை ரொம்ப முக்கியம். உதா: த்ரிஷாவும் தக்காளி தொக்கும், குட்டைப் பாவாடையும் கருணாநிதியும், ஜேஜேவும் ஜயஜய சங்கராவும்... ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலிருந்தால் யதேஷ்டம்.
ரொம்ப குழப்பிட்டீங்களே தல... நமக்கெல்லாம் இப்படி சொன்னா படிச்சு புரிஞ்சுக்கா 4 நாள் ஆகும்..
நல்லா புரியுற மாதிரி, பளிச்சுனு ஒரு 5 வரில இந்த பதிவு பற்றீ சொல்லுங்களேன்..
எவ்வளவுக்கெவ்வளவு நீண்ட வாக்கியம் அமைக்கிரீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு
ஆழம் கூடிக்கொண்டே போகும். ஒரு வாக்கியத்தை MsWord இல் ஆரம்பித்தால்,
page break தாண்டிதான் முற்றுப்புள்ளி வரவேண்டும்.
இது போன்ற நீண்ட வாக்கியம் அமைத்தால் படிப்பவனுக்கு பாதி வாக்கியத்திலேயே
தலை கிறுகிறுவென சுத்தும். அப்புறம் ஏன் வம்பு என்று நீங்கள் சொல்வது சரி என்று
பினூட்டம் இட்டுவிடுவான்.
உதாரணத்திற்கு இந்த வாக்கியத்தில் குறைந்தது 75 வார்த்தைகள் உள்ளன.
ட்சுனாமி பயத்தில் வாழ்வு குறித்த பீதியுடன் தன் வீட்டை காலி செய்து,
மாமியார் வீடு வரை சென்று திரும்பி வந்த கதையை,
யதார்த்தமான நேர்மையான வார்த்தைகளில் முன்வைத்தவர், அந்த
அனுபவத்தில் (அதாவது உயிர்பயத்தில்) தான் அடைந்ததாக கற்பித்து கொண்ட
'ஞானத்தை' தந்ததற்காக, சுனாமிக்கு நன்றி சொன்ன வக்கிரத்தை கொண்டுபோய்
அசோகனின் கலிக்கத்து போருக்கு பின் ஏற்பட்ட மனமாற்றத்துடன் ஒப்பிட்டும்,
வைரமுத்து ஒரு கவிதை மூலம் கோடிக்கணக்கான மக்களின் சோகத்தை ஆ
பாசப்படுத்தியதை 'கவிஞ'னின் 'கடமை' 'உயற்வு நவிற்சி' என்றெல்லாம் ஜல்லியடித்து,
எல்லா மனித சமுதாயத்திற்கும் இயற்கையாய் இருக்கக் கூடிய மனிதாபிமானம் தார்மீகம்
எல்லாவற்றையுமே வலைமாமணிகள் ஆபாசப்படுத்திகொண்டிருந்த நேரம் அது. '
மேற்கூறிய வாக்கியத்தை மூன்றே வார்த்தையில் "It was 1947."
என்று எழுதினால் நீ இலக்கியம் படைக்க முடியாது.
முகமூடி
பின்னிப் பெடலெடுத்துட்டீங்க. நான் சொல்ல நினைச்சதை என்ன விட அழகாச் சொன்னீங்க (இந்த பின்னூட்ட காப்பி ரைட் வைத்துள்ள மதியான கருத்துசாமிக்கு நன்றி) நீங்க நிறைய மார்க்ஸீய, பெரியாரீய, பித்தளைகளைப் படித்து, படித்து, நிறைய பாதிக்கப் பட்டிருப்பது தெரிகிறது., இருந்தாலும் ஆழமான அகலமான ஒரு ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சியை செய்வதற்காக நீங்கள் மந்திர கீர்த்தி, கீர்த்தி குரங்குசாமி, வெள்ளி மணி, சூரிய சக்கரை வாசம், ராம சூரிய சக்கரை மலர் வாச்ம் போன்ற கருமாந்திரங்களைப் படிக்க நேர்ந்து, அதன் பின்னும் தெளிவாக இருப்பது உங்கள் மூளையின் அபாரமான தாங்கு திறனைக் காட்டுகிறது. இவர்களைப் படித்த மற்றவர்கள் யாரும் இது வரை கீழ்ப்பாக்கத்துக்கு மட்டுமே செல்ல நேர்ந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் சொல்ல மறந்துட்டீங்க, K G Bயை K G P ணூ எழுதுணா CBஈ ஐ CPஈ ஐன்னு எழுதுனா அறிவுஜீவிகளின் அறிவு தங்க மான மணியைப் போல பிரகாசிக்கும். அப்படி ஒரு ஞானம். அப்பயெல்லாம் எழுதிட்டா பதிவை அலாஸ்காலேருந்து மஸ்கா வரை பாராட்டிருவாங்க. அப்புறம் இந்த மந்திர கீர்த்தி மாதிரி அரை ஜீவிகளுக்கெகெல்லாம் உங்க பதிவில இம்பொட்டன்ஸ் கொடுத்து பெருச்சாளியை எல்லாம் பெருமாள் ஆக்கிறாதீங்க.
ரொம்ப நல்ல பதிவு. இதுவே இந்தா ஆண்டின் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.
பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை
வாழும் நின் ஒளிதான் இன்றேல்
வானிலே உடுக்கள் எல்லாம்
தாழங்காய், கடுக்காய் கள்போல்
தழைவின்றி அழகி ழக்கும்!
பாழ் என்ற நிலையில் வாழ்வைப்
பயிரிட்ட உழவன் நீ ; பைங்
கூழுக்கு வேரும் நீயே!
குளிருக்குப் போர்வை நீயே!
நொம்ப நல்லா இருந்துச்சுப்பா ..ஆயமா எயுதுவது இன்னாண்னு சுன்னதுக்கு நன்ரிப் பா ..நானும் அயகா ஆயமா எயுத பாக்குரன்
ஆஹா... தன்யனானேன்... இதுவரை ஆழப்பின்னூட்டங்களே பார்க்காத என் பதிவுக்கு இன்று இத்தனை ஆழப்பின்னூட்டங்களா.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சற்று நாட்களின் நிறைய ஆழப்பதிவுகள் வந்தால் மகிழ்ச்சிதான்.
நிறைய பின்னூட்டங்களுக்கு தனிப்பட பதில் சொல்ல ஆசை, நாளை முயற்சிக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி!
Hilarious post! Thanks!
//லேட்டஸ்டு உம்மைத் தலைப்பு: "காதரீனாவும் கிருஷ்ணனும்". உபயம்: ஸ்ரீகாந்த். //
;-)
ஆனா ஒன்றிரண்டு விசயம் மறந்துட்டீய அப்பு. நம்மூர்ல எழவு விழுந்தா கூட அதப்பத்தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்காரன் சொல்றதக் குறிச்ச அடிப்பட நானம் கூட இல்லாம ஒப்பாரி வக்கக் கூடாது, ஆனா அப்படி ஒப்பாரிவைக்கிரானுவ இந்த டமில்நாட்ல. இதுதான் பெரிய அவல நில அப்படீன்னு ஒரு முற்போக்கு போன சுநாமிக்கு ஆழப்பதிவு போட்டிருந்தத விட்டுட்டீக அப்பு! அந்த முற்போக்கு மனசு வருத்தப்படப்போவுது. அப்புறம் அந்த லிஸ்ட்ல 'பாசிச எதிர்ப்பெல்லாம்' விட்டுட்டீக. இதிலிருந்தே தெரியுதே நீரு ஒரு பாசிசக் கைக்கூலின்னு!
இன்னும் சில வார்ததைகள், ஆழமான பதிவு எழுத
டார்வின், பரிணாமவாதம், மீம், ஜீன், உயிரி, இனப்பெருக்கம்,டாகின்ஸ், சூசன் பிளாக்மோர்
இத்துடன் பெரியார், மார்க்சியம், தி.மு.க வை வைவதற்கும், கிறித்துவ, இஸ்லாமிய மதங்களை திட்டுவதற்கும் தேவையான வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்ளவும். ஆழமான பதிவு, கட்டுரை எழுத 20 வார்த்தைகள் போதும்.
முகமூடி, நான் பதிவுலகத்துக்குப் புதுசு.. இப்போ தான் இந்தப் பதிவப் பார்த்தேன்.. ஆழமான பின்னூட்டங்கள் எழுதுவது எப்படின்னு நல்லா தெரிஞ்சிகிட்டேன்.. இப்போ கூட எங்க ஆபீஸ் பேஸ்மென்ட்ல தான் உட்கார்ந்து இந்தப் பின்னூட்டத்தை எழுதறேன்.. (ஆழமா :) )
இந்த மாதிரி பதிவு எல்லாம் உங்க பக்கத்தில் தனிச் சுட்டி குடுத்தீங்கன்னா, என்னை மாதிரி புதுப் பதிவர்களுக்கு வசதியா இருக்கும் இல்ல :) :)
சரி, உங்க கருத்து ??