<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அண்ணா பல்கலை மன்னராட்சி


துணை வேந்தர் = துணை அரசன் என்பது மக்களாட்சியில் செல்லுமா...


அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் வரும் கல்லூரிகளில் மாணவர்கள் டீ.சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் ஆடைகளில் எந்தவிதமான வாசகங்களோ அல்லது உருவப் படங்களோ இருக்கக் கூடாது.

மாணவிகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணியக் கூடாது. சேலை, சுடிதார் போன்ற கவர்ச்சி இல்லாத உடைகளை அணியலாம். உடல் உறுப்புகள் தெரியும் அளவுக்கு மிகவும் மெல்லிய துணிகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது. இறுக்கமான உடைகளையும் அணியக் கூடாது.

எல்லா கல்வி நிறுவனங்களிலும் நன்னடத்தை விதிமுறைகள் என்று ஒரு வழிகாட்டி இருக்கும். அதில் ஒழுக்கமான உடை என்று சில வழிகாட்டுதல்கள் இருக்கும்... ஆனால் சிலர் தங்கள் (பிற்போக்கு) சிந்தனைகளை தாங்களாக வகுத்துக்கொண்ட சில விதிகளின் படி - அதிகாரம் இருப்பதால் - சட்டங்களாக செயல்படுத்திவிட்டு இவையெல்லாம் மாணவர்களின் நன்மைக்கு என்று ஒரு காரணத்தை சொல்லிவிடுவார்கள்...

கல்லூரி காலத்தில் எங்களின் துறையிலும் ஒரு பேராசிரியர் இப்படித்தான்.. முதல் நாள் லேபிற்கு சென்றவுடன் 25 பேரில 10 பேரை வெளியேற்றி விட்டார்... "இது என் லேப். நான் சில வழிமுறைகள் வகுத்திருக்கிறேன்... அதனை பின்பற்றினால் இங்கு வரலாம், இல்லையெனில் உங்கள் இஷ்டம்" என்றது அவர் சட்டம்...

அவரின் வழிமுறைகள்...

இன்ஜினியர் என்பவனுக்கு டீ.சர்ட் கூடாது, அரைக்கை சட்டை கூடாது, சட்டையில் பொம்மை எதுவும் இருக்ககூடாது, கட்டம் போட்ட சட்டை கூடாது... கோடு அல்லது ப்ளெயின் முழுக்கை சட்டை அணிந்து பேண்டில் இன் செய்து சூ போட்டு இருக்க வேண்டும். தலை கலையாமல் சீவி இருக்க வேண்டும்..

பெண்கள் ஓவர் கோட் போட்டு வரவேண்டும். சடையை கோட்டுக்குள் போட்டு இருக்க வேண்டும்.. சடை பின்னாமல் வரக்கூடாது. குட்டை முடியாக இருந்தால் போனி டெயில் போட்டு வரவேண்டும்... நம்புங்கள்... (இதில் சின்ன எழுத்தில் இருப்பது எனக்கும் உடன்பாடே... அந்த பேராசிரியர் இப்போது துறை தலைவராக இருக்கிறாராம்... இப்போது துறைக்கு என்ன சட்டமோ)

இதாவது பரவாயில்லை.. நான் இன்டர்நேஷனல் ட்ரைவிங் பர்மிட் எடுக்க பின்தங்கிய மாவட்டம் ஒன்றின் (நிரந்தர முகவரி அந்த ஊரில்) மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் சென்றிருந்தேன்... அழைக்கப்பட்டவுடன் உள்ளே சென்ற என்னிடம் ஆய்வாளர் I எடுத்தவுடன், "என்ன தம்பி வெளிநாடு எல்லாம் போறீங்க, ஆனா மரியாதை தெரியலையே" என்றார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை.. இன்னமும் பேசவே ஆரம்பிக்கவில்லையே... அவரே தொடர்ந்து, "பெரியவங்கள பாக்க வரும்போது இப்படியா மரியாதை இல்லாம டீ.சர்ட் போட்டு வருவீங்க..." அந்த சித்தாந்தத்தை கேட்பது அதுவே முதல் முறை. இத்தனைக்கும் காலர் வைத்த 250 ரூ மதிப்புள்ள பைபோர்டு டீசர்ட் போட்டு பேண்டில் இன் செய்து செமி-·பார்மல் சூ போட்டு டீசண்டாகத்தான் இருந்தேன்... "போங்க போய் சட்டை போட்டுகிட்டு வாங்க, மத்தத அப்புறம் பேசலாம்" என்று சொல்லி விட்டார்...

நான் என் தரப்பு வாதத்தை பேச வாயெடுத்தால் அங்கே இருந்த உதவியாளரோ, மன்னர் முன் நிற்கும் குற்றவாளிக்கு மன்னிப்பு கிடைத்திருக்கிறது, இவனென்றால்... என்ற பாணியில் வெளில போயிருங்க தம்பின்னு அடித்தொண்டையில் முனகுகிறார்... நான் இருப்பதோ வீட்டை விட்டு 300 கி.மீ தொலைவில்.. இதற்காக நான் ஒதுக்கி இருந்ததோ ஒரே நாள்.. வெளியில் வந்து ஒரு நண்பனை பிடித்து அவன் சட்டையை வாங்கி போட்டுக்கொண்டு அரை மணியில் மீண்டும் சென்றேன்... அப்புறம்தான் பர்மிட் கொடுத்தார்....

இவர்கள் எல்லாம் தம் சித்தாந்தங்களை செயல்படுத்த யார் அதிகாரம் கொடுத்தது... இது எல்லாம் தம் அதிகாரம் தரும் இறுமாப்பில் செய்யும் அகந்தை செயல்களில்லையா...

ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும்
வயசு வந்த நமக்கு
உடைய பார்த்தா கலைஞ்சி போகா
முதிர்ச்சி இல்லையாம்

மாணவர்களின் நன்மைக்காகத்தான் இதை செய்கிறோம் என்பது சுத்த பேத்தல்... கவர்ச்சி உடையால் கவனம் கலையலாம் என்றால் வெளியில் அவர்களின் மனதை ஒருமுகப்படுத்த யார் என்ன செய்கிறார்கள்... குறைந்த பட்சம் வகுப்புக்கு உள்ளே கவனம் கலையாமல் பாதுகாக்கிறோம் என்றால், இதற்கெல்லாம் கலையும் மனது உடையவன் வெறும் முகத்தை பார்த்தே கவனம் கலைவான்... இல்லை கல்லூரிக்கு உள்ளே நடக்கும் பாலியல் துன்புறுத்தலுல் முதலான குற்றங்களுக்கு இதுமாதிரியான உடைகள் காரணம் என்றால் அது பற்றி ஏதாவது ஆய்வு நடந்திருக்கிறதா... ஆய்வு முடிவில் எடுக்கப்பட்ட முடிவென்றால் தமிழகம் முழுவதும் இதை நடைமுறைப்படுத்தலாமே...

ஒரு வேளை இது தமிழகம் முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டால் மாணவர்கள் இன்னமும் சிறப்பாக நன்மை பெற ஏதோ நம்மாலான சில இலவச யோசனைகள் ::

பெண்கள் எல்லாரும் புர்கா அணிந்து கல்லூரிக்கு வரவேண்டும்...
ஆண்கள் எல்லாம் வேறு ஒரு நிறத்தில் புர்கா அணிய வேண்டும்...
பையனும் பெண்ணும் பேசினால் இன்டர்னல் மார்க்கு கோவிந்தா...
வகுப்பில் சந்தேகம் கேட்கும் போது ஆணா பெண்ணா என்று குரல் தெரியாமல் ஸ்க்ரேம்ப்ளர் பொருத்தப்படும்...
பைக் வைத்து அலம்பல் விடுவதை தவிர்க்க இனி அனைவரும் மாட்டு வண்டியில்தான் வரவேண்டும்...
வகுப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் திரைச்சீலை வைக்கப்படும்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நமது ஆடைகளை சுயமாக நமக்கு தேர்ந்தெடுக்க பரிபூரண உரிமையுண்டு. அதே நேரத்தில் நாம் கல்லூரியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும். பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னமாதிரி. எல்லாம் நம் நன்மைக்குத்தான் சொல்வார்கள். ஆடை என்பதே மானம் மறைக்கத்தான். இல்லை அவிழ்த்துப் போட்டுத்தான் வருவேன் என அடம் பிடித்தால் ஆண்களுக்குக் கொண்டாட்டம். பெண்களுக்கோ திண்டாட்டம். விளையாட்டில் ஆரம்பிக்கும் பிரச்னை பெரிய விபரீதத்தில் போய் முடியலாம்.

இப்படித்தா ஒருமுறை பேருந்தில் குற்றாடை(அதான் குறைந்த ஆடை) அணிந்த கல்லூரி இளம்பெண்கள் என்னைச் சுற்றின் நிற்க.. சரியான கூட்டம். வணியோ செம ஸ்பீடு. ஒரு 45 நிமிடம் வேற்று உலகம் சென்றுதான் வந்தேன். ஒருபக்கம் அவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. மறுபக்கம் குறைத்துப் போடச் சொன்னது யார்? இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என நினைத்துக் கொண்டேன். அக்கல்லூரியின் பெயர் குந்தவை நாச்சியார்!!! இப்போது சட்டங்கள் கடுமையாக்கப் பட்டிருக்கலாம்.
 



>>மாணவிகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் >>அணியக் கூடாது

>>உடல் உறுப்புகள் தெரியும் அளவுக்கு >>ஆடைகளை அணியக் கூடாது. >>இறுக்கமான உடைகளையும் அணியக் >>கூடாது.


எல்லாம் சரித்தான்.. இனி மாணவர்கள், கவனம் திசை திரும்பாமல்.. இந்த விதியை மீறுகிறார்களா என கண்காணிக்கும் ஆசிரியர்களுக்கு கொண்ட்டாட்டம்.. :-)))

நாங்கள் படித்த கல்லூரியிலும் டி.சர்ட் போட்டாலே குற்றம் என்றே இருந்தது... கிட்ட திட்ட.. ஆயிரத்து ஐநூறு ரூபாய் பைன் கட்டாமல் டகால்டி குடுத்தத்தே தப்பிக்க முடிந்தது....
 



இந்த ஒழுஙகுமுறையை நடைமுறைப்படுத்தினால் என்ன தவறு!? பள்ளி, கல்லூரிக்கு வரும்போது படிப்புக்குண்டான ஒரு சூழ்நிலை ஏற்படுத்த இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஒரு வரவேற்கத்தக்க முயற்சி....

சபாஸ்... துணைவேந்தரே...!

தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி மிஸ்டர் முகமூடி.
 



அன்பு முகமூடியாரே! lab ல் செல்லும் போது கோர்ட் போடுவது, சடை பின்னுவது, சூ போடுவது என்பது நமது பாதுகாப்புக்கு உரிய விசயம் என்பதால் அவற்றை உங்கள் குற்றச்சாட்டில் இருந்து வெளியே தள்ளுகிறேன்.

அந்த அந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு பங்கம் ஏற்படாதவரையில் உடை அணிவதில் தவறில்லை.

கல்வி கற்கும் இடம் என்பது உடை போன்ற சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருப்பது அளவிற்கு மிஞ்சாதவரையில் சரியே.

ஆனால்! நீங்கள் ஒரு அதிகாரியிடம் அவஸ்தை பட்டதை சொல்லி இருந்தீர்களே..அந்த அதிகாரியைத்தான் குறைகூற வேண்டும்.

ஒரு சில வரிகளில் உங்கள் கேள்வி நியாயமாக உள்ளது(உதாரணமாக , பெண்ணிடம் பேசுவதை தடுப்பது).

நன்றி!
 



மரத் தடி... பெண்கள் குற்றாடை அணிவது என்னவோ பாவம் என்பது மாதிரியும் அதற்கு நீங்கள் பாடம் கற்பித்தீர்கள் என்பது மாதிரியும் பெருமிதப்படுகிறீர்கள்...

அவர்கள் அரைப்பாவாடை அணிந்திருக்கலாம்... அது அவர்களின் கல்லூரியின் உடையாக இருந்தாலும் சரி அவர்களின் சௌகரியகத்துக்காக அணிந்திருந்தாலும் சரி அது அவர்களின் உரிமை

பெண்கள் உரிமை அவர்களோடு, எப்படி இருந்தாலும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே கற்பிக்காத சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்... சின்ன வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது இது... "அவன் ஆம்பள, அப்படித்தான் பார்ப்பான்... நீ பொம்பள இழுத்து மூடுனா இதுக்கெல்லாம் இடம் கிடைக்குமா..." என்பதற்கு பதில் "அடி செருப்பால..." என்று வசனம் ஆரம்பித்தால் கதை வேறு மாதிரி இருக்கும்...

நீ இப்படி உடை அணிந்தால் உனக்கு நன்றாக வேண்டும் என்று வன்முறையை புகுத்துகிறோம்.. வேறு உலகத்தை பார்ப்பவர்களுக்கு குற்றாடை அவசியம் இல்லை... எல்லா ஆடைகளும் அவர்களுக்கு ஒன்றுதான்....
 



செந்தில்.... 1500 ரூபாய் அபராதமா... ஒரு தடவைக்கா இல்லை விதிமீறலே வாழ்க்கையா ;)))
 



Girls wearing overcoat has a reason.Hair is a very good conductor of electricity.Hence,girls with long hair are requested to wear the overcoat and tuck the hair inside to prevent hair from contact with electricity and prevent them from getting electrocuted.
 



// படிப்புக்குண்டான ஒரு சூழ்நிலை ஏற்படுத்த இதுபோன்ற கட்டுப்பாடுகள் // அன்பு இவர்கள் பள்ளிச்சிறுவர்கள் என்றால் சரி... இவர்கள் கல்லூரியில் பயில்பவர்கள்... ஓரிரு வருடங்களில் கல்லூரி முடிந்துவிடும்... கட்டுப்பாடு கட்டுப்பாடு என்றான பின்பு திடீரென ஒரு நாள் இவர்கள் சமுதாயத்தில் ஒரு அங்கம்... பலர் வேலைக்காக பொறுப்பான பதவிக்கு போகப்போகிறவர்கள்... ஆண் பெண் கலந்த சூழ்நிலையில் சகஜமாக இருக்க வேண்டிய கட்டாயம்... அங்கே ஒழுங்காக இருக்கிறார்களே... அது ஏன் கல்லூரியில் முடியவில்லை... அதற்கு இவர்கள் கல்லூரியில் தயாரானால் என்ன தவறு...

எங்கள் கல்லூரியில் பெண்களோடு ஆண்கள் பேசினால் ஒரு எலக்ட்ரிகல் துறையின் ஆசிரியர்களுக்கு பிடிக்காது... இன்டர்னல் மார்க்கில் குத்துவார்கள் என்ற பயம் காரணமாக அத்துறை மக்கள் பதுங்கி பதுங்கி பேசுவர்கள்... பாதி ப்ரச்னைக்கு காரணம் இந்த கட்டுப்பாடும் அர்த்தம் இல்லாத ஆசிரியர்களின் சித்தாந்தங்களும்தான்...

என் கல்லூரி காலத்தில் என் நண்பனொருவன் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை கிண்டலடித்துக்கொண்டிருந்தான்... ஒரு நாள் அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து விட்டேன்... சில மாதங்களில் அவனுக்கு நண்பிகளும் இருந்தார்கள்... கிண்டல் அடிப்பதை அறவே விட்டுவிட்டான்...

என் வகுப்பில் பெண்களோடு பேசாமலே கல்லூரியை விட்டு வெளியேறிய நண்பர்களை எனக்கு தெரியும்... அவர்களில் ஒருவனை 'இதொன்றும் கம்ப சூத்திரம் இல்லை' என்று ஒரு நாள் எலக்ட்ரிகல் மெஷினரி லேபில் ஒரு பெண்ணிடம் ஒயராவது வாங்கி வா என்று அனுப்பினோம்... கிட்ட வரைக்கும் போய் பேசாமல் திரும்பிவிட்டான்... அவன் கல்லூரி முடிந்தவுடன் கல்யாணம் ஆனது... இதற்கு மேல் அவன் சொந்த விவக்கரம்... ஆனால் அந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள்...
 



ராமா & அனானிமஸ்...

பெண்கள் கோட் அணிவதை நான் குறையாக சொல்லவில்லை அவரின் பேச்சை நினைவு கூர்ந்து அப்படியே எழுதினேன்... என்ஜினியர்கள் ஆகப்போகிறவர்கள் ஒரு முன்னோடியாக சட்டை அணிந்து இன் செய்து சூ போட்டு இருக்க வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடுதான்... (கோட் விஷயத்தை ஒரு குறிப்பாக பதிவில் போட்டு விட்டேன்... தங்கள் கருத்துக்கு நன்றி...)

அவரின் சட்டத்தில் உடன்பாடு இல்லாத விஷயம், கட்டம் போட்ட சட்டையும், டீ சர்ட்டும்தான்... காலர் வைத்த டீ சர்ட் என்ன கேவலம் என்பது எனக்கு புரியவில்லை...
 



// படிப்புக்குண்டான ஒரு சூழ்நிலை ஏற்படுத்த இதுபோன்ற கட்டுப்பாடுகள் // அன்பு இவர்கள் பள்ளிச்சிறுவர்கள் என்றால் சரி... இவர்கள் கல்லூரியில் பயில்பவர்கள்... ஓரிரு வருடங்களில் கல்லூரி முடிந்துவிடும்... கட்டுப்பாடு கட்டுப்பாடு என்றான பின்பு திடீரென ஒரு நாள் இவர்கள் சமுதாயத்தில் ஒரு அங்கம்... பலர் வேலைக்காக பொறுப்பான பதவிக்கு போகப்போகிறவர்கள்... ஆண் பெண் கலந்த சூழ்நிலையில் சகஜமாக இருக்க வேண்டிய கட்டாயம்... அங்கே ஒழுங்காக இருக்கிறார்களே... அது ஏன் கல்லூரியில் முடியவில்லை... அதற்கு இவர்கள் கல்லூரியில் தயாரானால் என்ன தவறு...


நான் படிப்புக்குண்டான சூழ்நிலை என்று குறிப்பிட்டது, உடை தொடர்பாகத்தான், பேசுவதை கட்டுப்படுத்துதல் பற்றி அல்ல. அசிங்கமான உடை உடுத்துவதை கட்டுப்படுத்துவதில் தவறேதுமில்லை. அசிங்கத்துக்கு வரையறையில்லை என்பதாலும், சுதந்திரம் என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும் - கட்டுப்படுத்தல், வழிமுறை, நெறிமுறைப்படுத்தல் தவறில்லை. இது இங்கு சிங்கப்பூர் பள்ளி/கல்லூரி மாணவர்களைக் கண்கூடாக பார்ப்பதால் தோன்றிய கருத்து.
 



I wanted to write on this and totally slipped my keyboard ;-)

Couple of posts which influenced me:

Youth Curry - Insight on Indian Youth: Da VC Code

VKpedia: We men are such losers!
 



முகமூடி,

முன்னுக்குப்பின் முரணாகப் பேச வேண்டாம். நாங்கள் அவ்வாறு பேசவில்லை. முடி ஒரு எளிதில் கடத்தி என திருவாளர்.அன்னியன் சொன்னது உண்மை. தவிர அமிலம் போன்றவற்றாலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் சோதனைச் சாலைகளில் பாதுகாப்பு. இது உச்சகட்ட விழிப்பு நிலை என்றெல்லாம் இல்லை. வருமுன் காப்பு.

பேருந்தில் போனாலும் அவர்கள் படும் வேதனையைத்தான் கண்டேன். நான் தவறு செய்தேன் என்று சொல்லவில்லை. எனவே தவறாக எண்ண வேண்டாம். ஒரு பெண் தன்னைச் சுற்றி பெண்கள் அழுத்தி இருக்க படும் வேதனை பெரிதல்ல. ஆனல் ஒரு ஆண்மகன்மேல் மோதி விழி பிதுங்கி, வெளியே சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் பட்ட வேதனையை கண்டவன் நான். நான் நினைத்து இருந்தால் கூட அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. காரணம் அளவுக்கதிக கூட்டம். அதில் ஏறியது அவர்கள் தவறும் இல்லை. காரணம் அவர்கள் நிறுத்தத்திற்குப் பின்னர் ஏறிய கூட்டம்தான் அதிகம். ஆனாலும் அந்த குற்றாடை தவறுதானே? அவர்களுக்குச் சவுகரியமாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் அணியலாமா? குளியல் அறையில் துணி இல்லாமல் குளிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். உலகையே மறந்து ஆனந்தமாகக் குளிக்கிறேன். ஆனால் வசதி என்பதற்காக எங்கும் அதே நிலையில் என்னால் உலவ முடியுமா? பைத்தியம் எனச் சொல்லி கல்லால் அடிக்க மாட்டார்களா? பழாம்பெருமை பேசித் திரிய வேண்டாம், பழம் பஞ்சாங்கம் என்று சொல்லி எங்களை ஏளனம் செய்வது இருக்கட்டும். சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பென்பது சேலைக்குத்தான் என்பது தெரியும்தானே?!

உங்களுக்குச் சொல்ல என்னிடம் ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால் கொஞ்சம் காமம் கலந்து வரும். அவ்வாறு எழுதினால் காமப் பதிவுகள் எழுதுபவர்களுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாமல் போகக் கூடும். அதனால் யோசிக்கிறேன்.

இதோ ஒன்று, உண்மை நிகழ்ச்சி:-

கல்லூரிப் பெயர் வேண்டாம். ஊரும் வேண்டாம். கல்லூரியில் இருந்து 10கிலோமீட்டர் தொலைவில் இருந்து நிறைய நண்பர்கள் படிக்க வருவது வழக்கம். அந்த நிறுத்தத்தில் எப்போதுமே கூட்டம் அதிகம். பேரூராட்சி நிலையில் உள்ள ஊர் அது. எங்கள் கல்லூரியில் ஆண்களும் பெண்களும் வேற்று ஆடைகள் அணிவதில்லை. ஆனால் அதே நிறுத்தத்தில் ஏறிய பெண்கள் கல்லூரியின் மாணவிகள் எடுப்பாக உடையணிந்து ஏறி இருக்கின்றனர். முன்சொன்ன அதேபோல கட்டுக் கடங்கா கூட்டம். அந்த புதுமைப்பெண்ணும் எம் கல்லூரியின் மாணவரும் அருகருகில். ஆடைபற்றித்தான் ஏற்கெனவே பட்டும் படாமல் சொல்லி இருந்தேனே. அதிக நெருக்கத்தால்.. அப்படி இப்படி ஆக பையன் விழுந்து கடித்து விட்டான். வண்டி நிறுத்தப்பட்டு அனைவரும் தர்ம சாத்து சாத்தியபின் காவலரிடம் அவர் ஒப்படைக்கப் பட்டார். அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் வழக்காகிவிட்டது அந்த சம்பவம். அப்போதும்கூட பலரும் அப்பெண்ணின் மீதுதான் தவறு என்றனர். ஆனாலும் ஒருகணம் மிருகமாகிய அந்த மாணவனையும் பலர் குறை சொல்லத் தவறவில்லை. அப்பையனை கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.

துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்பதுபோல நமது மானத்திற்கு நாமே அணை கட்டுவதில் தவறில்லை. அது ஆடை என்ற தடுப்பாக இருக்கட்டுமே!
 



அன்பு அசிங்கத்துக்கு வரையறையில்லை என்பதாலும், சுதந்திரம் என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும் மிகவும் சரியான கருத்து... ஆனால் கட்டுப்படுத்தல், வழிமுறை, நெறிமுறைப்படுத்தல் இது ஆளாளுக்கு மாறுபடுகிறதே... பாஸ்டன் பாலா (நன்றி) கொடுத்துள்ள லிங்கில் மும்பை v.c. கொடுத்துள்ள நெறிமுறையை பாருங்கள்...

Allowed:
* Salwar Kameez ok but no deep neck. Sleeveless will do
* T-shirts that do not have a deep neckline or expose the navel
* Jeans, but no low-waist

Not allowed:
* Short skirts
* Body-hugging tops
* Sleeveless tops
* Shorts
* Tank tops

ஆக, நம்ம சட்டம் மும்பை இறக்குமதி - நம் கலாசார சாரம் தடவி... என்னவோ போங்க... (மும்பை பல்கலை மக்கள் எல்லாம் அண்ணா பல்கலை சட்டத்தை பார்த்தா சந்தோஷப்பட்டுக்குவாங்களா)

அதே சமயத்தில் In a feature we did at KC and HR (some of the more fashion-conscious colleges in Mumbai), 4 out of 5 students we shot would have met the VC's 'no exposure' guidelines. And even the one girl in a 'short skirt' doesn't look indecent or provocative in the least! என்பதையும் பார்க்க வேண்டும்... பொதுவாக கல்லூரியில் - exceptions ஒன்றிரண்டு தவிர - சட்டம் தேவைப்படாமலேயே டீசந்தாகத்தான் உடை அணிகிறார்கள்...
 



மரத்தடி... // அப்போதும்கூட பலரும் அப்பெண்ணின் மீதுதான் தவறு என்றனர் // இதைப்பற்றித்தான் நான் சொன்னேன்... நீங்கள் சொன்ன கதையில் வரும் ஆள் நீங்கள் குறிப்பிட்ட பெண் மீது விழாமல் சேலை கட்டிய பெண் மீது விழுந்திருந்தால் கூட்டம் என்ன சொல்லி இருக்கும்... ஏம்மா சேலை கட்டி வரே, சூடிதார் போட்டு வரவேண்டியதுதானே என்றா சொல்லும்...

ஆக கடிப்பது என்று முடிவு செய்தவன் கடிக்கத்தான் போகிறான்... ஒரு கூட்டமான பஸ்ஸில் ஒரு பெண்ணை கடிப்பவனுக்கு அப்பெண்ணின் உடையா தூண்டுதல்... அவன் மனம்தான் முக்கிய தூண்டுதல்... இப்பேற்பட்ட மென்டல்களின் ரசனைக்கேற்ப (அதாவது அவர்கள் கண் பதவிசான நம் உடையை பார்த்து கெட்டு போகாமல் ஜாக்கிரதையாக பார்த்து) பார்த்து உடை உடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறதே நம் பெண்கள் நிலை.
 



என்ன உடை போட்டு வர வேண்டும், என்ன நிறத்தில் போட்டு வர வேண்டும் என்பதெல்லாம் நெறிப்படுத்துதல் அல்ல, மாணவர்களுக்கு எரிச்சலூட்டக் கூடிய விஷயம். உடலை காட்டும் ஆடைகள் வேண்டாம் என்பது சரி, ஆனால் டீ-ஷர்ட்டுக்கு என்ன வந்தது? அது உடலை மறைக்க வில்லையா? இந்த சர்க்காரி பாபுக்கள் உடையைப் பற்றி தங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதுதான் நெறியோ?

அது என்ன பனியன் துணியால் ஆன எந்த ஆடைகளையும் அணியக் கூடாது என்று ஒரு ஆணை? பனியன் துணியால் ஆன உள்ளாடைகளையாவது அணியலாமா..? சுத்தக் கிறுக்குத்தனமாக இருக்கிறது. யார் கொடுப்பது இவர்களுக்கு இது போன்ற அதிகாரங்களை?

அடுத்த துணைவேந்தருக்கு கட்டம் போட்ட சட்டை பிடிக்காமல் போகலாம், உடனே கட்டம் போட்ட சட்டை பொடக்க் கூடாது என்று ஆணை பாயுமோ? முகமூடி, நீங்கள் சொல்வது போல இவர்களுக்கு துணை-வேந்தர் பதவி என்றவுடன் நிஜமாகவே வேந்தர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள் போலும்..
 



பெண்கள் குறைவாக உடை அணிவதே பெண்ணடிமைதனத்தில் வெளிப்பாடு என்பது என் கருத்து. நாம் சினிமாவில் பார்க்கும் குறை ஆடை நடனங்கள் என்ன முற்போக்குதனத்தையா குறிப்பிடுகிறது. அவர்களின் நோக்கம் வசதிக்காக இருக்க வேண்டுமே ஒழிய கண்காட்சிக்காக இருக்ககூடாது. ஏனென்றால் அவர்கள் இவ்வுலகத்தில் ஆண்களை வசீகரிக்க அவர்களின் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்று பிறக்கவில்லை. அவர்களும் ஆண்களை போலவே வாழ பிறந்திருகிறார்கள்.

வெளிநாடு பீச்களில் பெண்கள் டுபீஸ் உடைகளில்தான் உலாவுகின்றனர். அங்கு அவர்களின் கணவன்மார்கள் பெரிய பிரச்சினை எதுவும் கிளப்புதில்லை. பெண்களும் ஆண்களை கவரவேண்டும் என்று அதை அணிவதில்லை அவர்களின் வசதிக்காக தான் அணிகின்றனர். ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் மார்பை உடைபோட்டு மறைக்காமலே இருக்கின்றனர். இருந்தும் அவர்களுக்குள் நம் மாதிரி பிரச்சினைகள் எழுவதில்லை. ஏனென்றால் அவர்கள் பழங்குடிகள் என்று சொல்லப்பட்டாலும் மன்முதிர்ச்சியில் நம் மக்களை விட மேம்பட்டவராய் இருகின்றனர்.

பெண்கள் மென்மையானவர்கள் அவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறி அவர்களை மறைமுகமாக பலவீனப்படுத்தி பிறகு அடக்கியாளவே நம் ஆண் சமூகம் விரும்புகிறது. அவர்களை சொநத காலில் நிற்க பழக்குங்கள். பிறகு அவர்களே அவர்களின் நிலையை நிர்ணயித்து கொள்வார்கள்.
 



//மென்டல்களின் ரசனைக்கேற்ப (அதாவது அவர்கள் கண் பதவிசான நம் உடையை பார்த்து கெட்டு போகாமல் ஜாக்கிரதையாக பார்த்து) பார்த்து உடை உடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறதே நம் பெண்கள் நிலை.//

மீண்டும் ஒருமுறை உங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறேன்!

மானம் போனது அப்பெண்ணிற்குத்தான். தலைகுனிவு. வீட்டாருக்கும் ஏகப்பட்ட வருத்தம். அப்பையனோ விழுந்தெழுந்தவன்போல் துடைத்துச் சென்றான். நான் அப்பெண்ணை உடை விஷயத்தில் மட்டும்தான் தவறு சொல்கிறேன், கவனிக்க நடத்தையில் அல்ல!

பாகங்கள் வெளித்தெரியுமாறு அப்பெண் ஆடை அணிந்தது தவறு. அதனை சகஜமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நான் இன்னும் மேலைநாடுகள் போன்றதொரு சூழ்நிலைக்கு வரவில்லை.

ஆணும் பெண்ணும் தனித்துப் பேசினாலே அவன் இவளை வெச்சிருக்கான் என்னும் சூழல்தான் இன்றுவரை தமிழகத்தில். கற்பு விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிக கவனமாக இருக்க வேண்டும். நான் முன்பே சொன்னமாதிரி கெட்டுப்போன பையனுக்கு எப்படியாவது திருமணம் ஆகிவிடும். ஆனால் கெட்டுப்போன பெண் என்று கேள்விப் பட்டால் யாராவது கட்டுவார்களா? முதலில் நீர் கட்டுவீரா முகமூடியே?

எனவே பெண்ணானவள் தனது ஆடையை தாம் சுயமாக முடிவெடுத்து அணிய உரிமை கோரும் அதே நேரத்தில் காமாந்தகர்களின் கண்களில் இருந்து தம் உடல் பாகங்களை மறைக்கவும் தவறக் கூடாது.

அந்நிகழ்வினை நான் நியாயப் படுத்தவில்லை! ஆனாலும் அவ்வாறு ஒருவேளை திறந்துதான் போடுவேன் என்றால் விழுந்து கடிக்கத்தான் செய்வார்கள்!

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் சந்திர நமஸ்காரம் செய்து பயனில்லை!!!


சுதர்சன் சொல்வது யோசிக்கத் தகுந்தது. பனியனை அனுமதிப்பதில் தவறில்லை. நேற்று AXNல் ஒரு நல்ல கதை கொண்ட ஆங்கிலப்படம் பார்த்தேன். முதலும் இல்லை, கடையும் இல்லை. நடுவில் பார்த்தேன். நாயகி அணிந்திருந்த பனியனில் பால் தொழிற்சாலை( MILK FACTORY) என எழுதி இருந்தது. முதலில் பனியனுக்கு உரிமை கோரும் இளைஞர்கள் பின்னார் இவ்வாறான வாசகம் கொண்ட பனியன் போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தால் துணை வேந்தர் சொல்லி இருக்கலாம். என்றாலும் பனியனை அவர் நல்ல வாசகங்கள் கொண்ட பனியனை அனுமதிப்பதில் தவறேதும் இல்லை.

ஆசிரியர், தந்தை, தாய், தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என நமக்கும் மூத்தோர் நமக்கு நல்லதைத்தான் சொல்வார்கள். எனவே நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று பேசாமல் அவர்கள் சொல்வதை சற்றேனும் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்த வாழ்வு சுவைபட இனிக்கும்!
 



//அதனை சகஜமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நான் இன்னும் மேலைநாடுகள் போன்றதொரு சூழ்நிலைக்கு வரவில்லை//

மன்னிக்கவும் நான் என்பதனை நாம் என திருத்தி வாசிக்கவும்!
 



//ஆசிரியர், தந்தை, தாய், தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என நமக்கும் மூத்தோர் நமக்கு நல்லதைத்தான் சொல்வார்கள். எனவே நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று பேசாமல் அவர்கள் சொல்வதை சற்றேனும் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்த வாழ்வு சுவைபட இனிக்கும்!
//

அப்புறம் எதற்கு ஒரு மூளை அதற்கு சிந்திக்கும் திறன். இப்படி அடுத்தவங்க சொல்றபடிதான் வாழனும்னா அப்புறம் எதற்கு ஒரு பிறப்பு.

வாழந்தா நம்ம மனசு திருப்திக்கு வாழணும். அடுத்தவங்க திருப்திக்காக வாழறதுங்கிறது அடிமை வாழ்க்கை.
 



மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் படிக்கவும்: விதிமுறைகள் மீறுவதற்கே - Rules are made to be broken.
 



ரெண்டாவது சொன்னீங்களே.. டி.சர்டே வாழ்க்கை முறையா வாழ்ந்ததுக்கு.. 100, 100 ரூபாயாக சேர்த்த சொத்து அது.. , நிறைய.. பினாமி கணக்குல (துறைத்தலைவர் கண்ல படாததால) உண்டு , அது தனி கணக்கு... ;-)


பிரச்சனையை களையாமல், அதனால் வரும் விளைவுகளை தவிர்க்கும் முயற்சியே இது..

இப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்... இத்தகைய.. விதிமுறைகளை.., கொஞ்சம் COMMON SENSE உடன் போட்டுவிட்டு.. குழந்தைகளை.. சிறு வயதிலிருந்தே, பால் பிரித்து (உயர்வு, தாழ்வு).. வளர்க்காமல் இருந்த்தால்.. சரிப்படும்...

எனக்கு, தெரிந்தவர்களில், கட்டுப்பெட்டியாக வைக்கப்பட்ட நண்பர்களும் சரி, அதிக சுதந்திரமாக விடப்பட்டவர்களும் சரி, இரு பிரிவினரும் தவறு செய்துள்ளனர்,.. அளவுக்கு இறங்கினால் சுடிதாரும், ஆபாசமே ;-)

ஆக... புரிய வைத்து வளர்ப்போமே...

ps: Petitiononline site-la T.Shirt-ku edhira.. oru petition poduvoma ?! yaaravadhu aadharvu thara ready-ya ?
 



«¦Á⸸¡¨Åô §À¡ø '«Å¢úò¦¾Ã¢Ôõ ¸Ä¡îº¡Ãõ' ÅáÁø þÕìÌõ Ũà þó¾ ¯ò¾Ã× ºÃ¢§Â! ¿¡õ ÅÇÕõ ¿¡Î. ÒÄ¢¸¨Ç À¡÷òÐ §¾¨Å¢øÄ¡¾ þ¼í¸Ç¢ø ÝÎ §À¡ðÎì ¦¸¡ûÇì ܼ¡Ð.

ÌÈ¢ôÒ : Ţξ¨Äô ÒÄ¢ þø¨Ä. Å¢ÄíÌ.
 



சூப்பர் தல சூப்பர், ஏம்பா முகமூடி பின்னூட்ட டெம்ப்ளேட் வைக்காமல் சிரமமாக உள்ளது
 



//அப்புறம் எதற்கு ஒரு மூளை அதற்கு சிந்திக்கும் திறன். இப்படி அடுத்தவங்க சொல்றபடிதான் வாழனும்னா அப்புறம் எதற்கு ஒரு பிறப்பு.//

வெற்றித் திருமலை,

நல்லது யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் செய்வது, சொல்வது மட்டும்தான் நல்லதா? பின் எதற்கு பள்ளிக்குச் செல்கிறீர்? தாய்தந்தை சொல்லும் புத்திமதிகள் கூட தவறா என்ன? எல்லாவ்ற்றையுமே பின்பற்றச் சொன்னேன்? அவர்கள் கூறும் நல்லதுகளை எடுத்துக் கொண்டு அல்லதுகளை விட்டொழியுங்களேன். கல்லூரிப் பருவத்தில் இருக்கும் காளையர்களுக்கு காதல்தான் முக்கியமாகப் படும். மறுக்கிறீர்களா? அப்போது தந்தை சொல்வார், நன்றாகப் படி, முதல் மாணவனாகு, நல்ல வேலை கிடைக்கும், அழகுப் பெண்கள் வரிசையில் நிற்பர் என்று புத்திமதி சொல்வார். இது தவறா? கல்லூரி மாணவனுக்கு அந்த அறிவுரை வேப்பங்காயாகக் கசக்கும். பெண்ணின் அண்ணனிடம் அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்தி மருத்துவமனையில் படுத்திருக்கும்போதும் அதே அப்பா கட்டிப் பிடித்து அழுவார், "தம்பி சொன்னேனே கேட்டியா?"

இதற்குப் பெயர்தான் சுயமான சிந்தித்தலா வெற்றித் திருமலை?
 



I think this is more required for Non-engineering college students !!

IMHO compared to arts students, engineering have less time in indulging such acts.
 



இது பற்றி நான் பதிவு எழுதிக்கொண்டிருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள். இந்த மாதிரி விவகாரங்களுக்கு நேரத்தை வீண்டிப்பதை விட்டு ஆராய்ச்சி மாதிரி ஏதாவது செய்தார்களானால் அவர்களுக்கு புண்ணியமாகப்போகும்
 



So , for a change they got to try training their staff about coaching students , counselling etc.

provides a better result in the long run.however they do not provide the adequate publicity anna.univ v.c's nowadays are carving for.
 



இதோ மன்னரின் அடுத்த ஆணை, 'சினிமா பாடல்களுக்கு கல்லூரிகளில் நடனம் ஆடக் கூடாது'.

http://thatstamil.indiainfo.com/news/2005/08/18/college.html
 



MugaMoodi... I am just seeing this post.. Anyhow thanks for the link you posted in my post
 



சரி, உங்க கருத்து ??