<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சிறுகதைப்போட்டி முடிவுகள்


கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்கு வினைசெய்து - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி
தாயே உனக்கரிய துண்டோ? - மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

தனக்குத்தானே புரட்சி பட்டம் கொடுத்துக்கொள்ளாத, ஆனால் புரட்சிக்கு இலக்கணமாய் வாழ்ந்த முண்டாசுக்கவிக்கு இன்று நினைவு நாள்.

***

அன்புள்ள முகமூடி,

நீங்கள் அனுப்பிய 30 கதைகளையும் படித்து முடித்துவிட்டேன். சிறந்தவை என என் மனதிற்குப்பட்டவற்றைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் கடைப்பிடித்த தேர்வுமுறை:

1.நீங்கள் அனுப்பிய pdf கோப்புக்களைத்தான் படித்தேன். வலைப்பதிவிற்குச் சென்று படிக்கவில்லை. உங்கள் pdf கோப்புக்களில் எழுதியவர் பெயர் இல்லை.(அது ஓரு பேருதவி) அதனால் இந்தக் கடிதத்தை எழுதும் இந்த வினாடி வரை பரிசைப் பெறப்போகிறவரின் பெயர் எனக்குத் தெரியாது.
2.முப்பது கதைகளில் 10 கதைகளை முதல் சுற்றில் வடிகட்டித் தேர்ந்து கொண்டேன்.
3.அந்தப் பத்துக் கதைகளிலிருந்து பரிசுக்குரியதைத் தேர்ந்திருக்கிறேன்.

கதைகளின் கருப்பொருள்,வடிவக் கட்டமைப்பு, மொழிநடை, வாசிப்பவரிடம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம், இவற்றை மனதில் கொண்டு கதைகள் மதிப்பிடப்பட்டன ::-
மாலன்

*****

முதல் பரிசு US $75 ::
இரு சம்பவங்கள் :: சுரேஷ் (penathal Suresh)

2ம் பரிசு US $25 ::
முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை :: சுதர்சன் கோபால்

3ம் பரிசு US $25 ::
வேட்டையாடு விளையாடு :: வினோத்

மூன்று பரிசுகளே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், தர வரிசையில் நான்காவதும் ஐந்தாவதும் இருக்கும் கதைகளை எழுதியவர் ஒருவரே.. எனவே ஊக்கப் பரிசு
Fifty Great Short Stories புத்தகம் பெறும் சிறுகதைகள்

சின்ன வட்டம் :: நெய்வேலி விச்சு
யார் குற்றம் :: நெய்வேலி விச்சு

இப்போட்டி சிறப்பான முறையில் நடக்க பங்களித்த
அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி..

பரிசு பெற்ற சுரேஷ் , சுதர்சன் கோபால் , வினோத் , நெய்வேலி விச்சு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...

(பரிசு குறித்த தனி மின்னஞ்சலுக்கு பதிலும், அது உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் உங்கள் மின்னஞ்சல் முகவரியும் எனக்கு மின்னஞ்சலிக்கவும்)

******

மாலன் அவர்களின்
குறிப்பு தொடர்ச்சி...

...பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கதைகளில் இந்த அம்சங்களை நீங்கள் காணலாம்.

முதல் பரிசுக்குரிய கதையாக நான் கருதுவது இரு சம்பவங்கள் என்ற கதை. முதல் சில வரிகளில் கதைக் களனை கச்சிதமாக கண்முன் கொண்டு வந்துவிட்டார் ஆசிரியர். ஒரு தொழிற்சாலை. டிரக் தயாரிக்கும் தொழிற்சாலை. வட இந்தியாவில் இருக்கிறது. வட இந்தியாவில் இருக்கிறது என்ற தகவல் முக்கியம். ஏனெனில் கதையில் பின்னால் மதக் கலவரம் வர இருக்கிறது. உழைப்பை நம்பிப் பிழைக்கும் ஒருவர், அவர் குடுமப்ச் சூழல் எல்லாம் உரையாடல் மூலம் நிறுவப்படுகிறது. வறுமை, நிச்சியமற்ற எதிர்காலம் இவைதான் மதவாதம் கால் கொள்ள இடமளிக்கிறது என்பது கோடிகாட்டப்படுகிறது. இதெல்லாம் ஆசிரியருக்குப் பிரசாரம் செய்ய வாய்ப்பளிக்கும் இடங்கள். ஆனால் ஆசிரியர் கதையின் வடிவ அமைதி கெடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதேபோல கதையில் நடக்கும் விபத்து, மதக்கலவரம் இரண்டும் செயற்கையாகத் தோன்றாத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் பயங்கரம் வர்ணிக்கப்படவில்லை. ஆனால் உணர்த்தப்படுகிறது.

இன்று பெரும்பாலும் மனிதர்களது செயல்களை அவர்களது சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன.மன்ம் விரும்பி நல்லது செய்ய முயல்பவர்கள் கூட மதவாதம், மதக் கலவ்ரம் இவற்றிற்கு ஆட்படும் போது, தங்களை அறியாமலே பிறர்க்குத் தீங்கிழைத்துவிடுகின்றனர். இந்தக் கருத்தை நறுக்கென சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வடிவ அமைதி குன்றாமல், குரலை உயர்த்தாமல், யதார்த்தம் கெடாமல், இன்றைய சமூகத்தின் எரியும் பிரசினையை ஒரு கோணத்தை சிந்தனைக்கு வைக்கும் கதை என்பதால் இதைத் தெரிவு செய்கிறேன்.

^^^^

இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துசாமி சாரிலிருந்து... கதை ஒரு நுட்பமான கதை. ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை சற்றும் மிகையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்கடி மொட்டையடித்துக் கொள்ளும் நிர்பந்த்தத்திற்குள்ளாகிறான் பழனிச்சாமி. அந்த மொட்டைக்குப் பின் ஒரு காரணம் இருக்கிறது. அது எவருக்கும் மகிழ்ச்சிதரும் காரணமல்ல. நிர்கதியான பெண்களை வெள்ளைப் புடவையை விட மஞ்சளும் காவியும்தான் காக்கிறது என்பதில் ஓர் உரத்து முழக்கப்படாத சமூக அவலம் இருக்கிறது. அம்மாவை அம்மாவாக, ஒரு புனிதப் பசுவாகப் பார்க்கிற மனோபாவம்தான் நம்மிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது. அவளை ஒரு பெண்ணாகவும் பார்ப்பதற்கு ஒரு பேருள்ளம் வேண்டும். தி.ஜானகிராமனுக்கு இருந்த அத்தகைய உள்ளத்தை இந்தக் கதாசிரியரிடமும் பார்க்க முடிகிறது. சமூகம் வகுத்துள்ள ஒழுக்கவிதிகளை வலியுறுத்தாமல் பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க முற்படும் அதே வேளையில் அதை முற்றிலும் அங்கீகரிக்க முடியாத சங்கடமும் கடைசியில் வெளிப்படுகிறது.யதார்த்தம், வ்டிவமைதி இவை கருதிக் கூடக் கதை இந்த விதமாக முடிந்திருக்கலாம்.

^^^^

பொதுவாக தமிழ்ச் சிறுகதைகள் எடுத்துக் கொள்ளும் கதைக்களனிலிருந்து வித்தியாசமான ஒன்றைத் தேர்ந்து கொண்டிருக்கிறார் 'வேட்டையாடு விளையாடு' ஆசிரியர். மெருகேறிய நடை.சிறுகதையின் சாத்தியங்கள், அதன் வடிவம் அதன் ஆசிரியருக்கு விதிக்கும் வரம்புகள் இவற்றை விளங்கிக் கொண்டு, திறமையோடு அதைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். சதுரங்க ஆட்டத்தின் தொழில்நுட்பத் தகவல்களின் அளவு அதிகம். ஆனால் அதுதான் கதைக்கு ஒருவித authenticityயைக் கொடுக்கிறது. என்றாலும் சாதாரண வாசகன் அவற்றில் சலிப்படையக் கூடும்.

^^^^

முன்பெல்லாம் 'மதம் என்பது அபின்' என்ற மார்க்சின் வாதத்தை திராவிடர் கழக நண்பர்கள் மதிற்சுவர்களில் எழுதி வைப்பது வழக்கம். அந்த மேற்கோளின் முழு வடிவமும் அதை எழுதியவருக்குத் தெரிந்திருந்தால், அதை எழுத முன்வந்திருப்பார்களா என்று அந்த சுவர் விளம்பரங்களைப் பார்க்கும் போது நான் நினைத்துக் கொள்வதுண்டு. இதயமற்ற சூழலில், ஆத்மாவை இழந்துவிட்ட சமூகத்தில் மதம் என்பது அபின் என்பது மார்க்சின் வாசகம். கடவுளை ஆதரித்து அல்லது எதிர்த்து அந்த வாசகம் பேசவில்லை. அது ஒரு உண்மையைக் குறிப்பிடுகிறது. A statement of a fact. அதாவது இரக்கமற்ற, பேராசை மிகுந்த சூழலில் எளிய மனிதனுக்கு ஒரு paliative ஆக,ஒரு வலி நிவாரணியாக மதம் செயல்படுகிறது என்பது அவர் சுட்டிக்காட்டும் உண்மை. சின்ன வட்டம் கதை இதைப் போன்ற ஓர் உண்மையை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. சில சிறிய ஆனால் முக்கிய மாற்றங்கள். மதத்திற்குப் பதிலாக கடவுள் என்ற நம்பிக்கை. இரக்கமற்ற சமூக சூழல் என்பதற்குப் பதிலாக போட்டி அதிகமாகிவிட்ட வகுப்பறை. தேர்வில் மதிப்பெண் வாங்குவது இத்தனை பெரிய விஷயமாகிவிட்டதா என்று தோன்றினாலும் இன்று பத்து, 12ம் வகுப்புகளில் இருக்கும் நடுத்தர வர்க்க மாணவர்களிடையே மதிப்பெண் பெறுவதென்பது ஒரு மன உளைச்சல் தரும் விஷயமாகத்தான் ஆகி விட்டது. ஓர் ஊன்றுகோலாக தனக்கு வெளியே ஓர் நம்பிக்கை தேவைப்படுவதைச் சொல்ல முனையும் ஆசிரியர், அதிலிருந்து கிளை பிரிந்து பெரிதினும் பெரிது கேள் என்ற Think Big சித்தாந்தத்தில் வந்து முடிக்கிறார். அது கதையை சற்று பலவீனப்படுத்திதான் விடுகிறது. என்றாலும் இன்றைய இந்திய சமூகத்தில் விதைக்கப்படவேண்டிய கருத்துக்களில் think big சிந்தனையும் முக்கியமானது என்பதால் இந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.

^^^^

ஒரு தனிமனிதனுடைய வீழ்ச்சியானாலும் சரி, சமூகத்தினுடைய வீழ்ச்சிக்கு என்றாலும் சரி, அதன் ஆதாரமாக அச்ச உணர்வே அமைந்துவிடுகிறது. Paranoia என்ற மனநோய்க்கு உள்ளான தனிமனிதர்களுடைய செயல்கள் பரிதாபத்திற்குரியதாகவும், குரூரமான நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதுண்டு. ஆனால் ஒரு அதிகார அமைப்பு (establishment) அந்த நிலைக்குள்ளாகும் போது அது பயங்கரமானதாக ஆகிவிடுகிறது. அதனால் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வு சிதைந்து போகும் கொடுமைகளை ஊடகங்கள் அவ்வப்போது நம் முன் வைத்துக் கொண்டுதானிருக்கின்றன. அணமையில் ஒரு பிரேசிலியன் லண்டனில் சுட்டுக் கொல்லப்பட்டது ஓர் உதாரணம். யார் குற்றம் என்ற கதையும் அது போன்ற ஒரு பொருளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இயல்பான சூழ்நிலைகளை அமைத்துக் கொண்டு ஆசிரியர் கதையை நடத்திச் செல்கிறார். ஆனால் அரசதிகாரம் மேற்கொண்ட அபத்தமான நடவடிக்கைக்காக, அந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் ஏன் குற்ற உணர்விற்கு, அவமான உணர்விற்கு உள்ளாக வேண்டும் என்பது விளங்கவில்லை. இது கதையை சற்று ஊனப்படுத்திவிடுகிறது என்றாலும் பேசப்பட வேண்டிய ஒரு சமகால பிரசினையைக் கதை பேசுவதால் அதைப் பாராட்டுகிறேன்.

^^^^

இந்தப் போட்டியில் படிக்கக் கிடைத்த கதைகள் நம் சமகால வாழ்க்கை பற்றி இளைஞர்கள், நடுவயதினர் கொண்டிருக்கும் பார்வைகள், அவர்களது மொழித்திறன், படைப்பாற்றல் இவை பற்றிய ஓர் நேரடி அனுபவத்தை எனக்குத் தந்தன. அவை நம்பிக்கை கொள்ள வைப்பதாகவே இருக்கின்றன.

*****

செப்டெம்பர் 15ம் தேதி முடிவுகளை அறிவிக்க வேண்டிய வேறு ஒரு போட்டியின் National Jury களில் ஒருவராக இருக்கும் மும்முரத்திலும் இப்போட்டிக்கு நடுவராக இருந்து சிறப்பித்த
மாலன் அவர்களுக்கு நன்றி...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாரதியின் நினைவு நாளில் தமிழுக்கு தொண்டு, பாராட்டுக்கள் முகமூடியாரே.
நடுவர் மாலனுக்கு நன்றி.
உஷா
 



முதலில் போட்டியை சிறப்பாக நடத்திய முகமூடி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். வலை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தாங்கள் மேற்கொண்ட முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது, இனியும் தொடரவேண்டும் என்பது என் விருப்பம். போட்டிக்கு வந்த முப்பது கதைகளையும் தன்னுடைய நேரத்தை ஒதுக்கி படித்து பரிசினைத் தேர்ந்தெடுக்க நடுவர் மாலன் எடுத்த முயற்சிக்கு நன்றி.

இந்த போட்டியில் என்னுடைய கதையும் பரிசு பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஊக்கத்துக்கு நன்றி. போட்டியில் வெற்றி பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் என் பாராட்டுகள்.

நான் இப்போட்டியில் வெற்றி பெறும் என்று நம்பிய, தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக நான் கருதும் கதை என் பெயர் சித்ரா. Mark Haddon என்ற அங்கில எழுத்தாளன் ஒரு நாவலில் விளக்க முயற்சித்த Autism பாதிப்பை ஒரு சிறுகதையாக அற்புதமாக படம்பிடித்த, உண்மையில் இப்போட்டியின் தரத்தை தாண்டிய கதை. சஞ்சித், உங்கள் எழுத்துப் பணி தொடர வேண்டும்.

மறுமுறை முகமூடிக்கு நன்றி.

-Vinodh
http://visai.blogspot.com
 



This comment has been removed by a blog administrator.
 



நன்றி உஷா,

வாழ்த்துக்கள் வினோத்.. "என் பெயர் சித்ரா" எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.. எனினும் ஆட்டிஸம் பற்றிய தனி சுட்டி இல்லாமல் அது அதனளவில் முழுமை பெற்றிருக்கவில்லை என்பது என் அபிப்பிராயம். (என் ஞாபகத்திலிருந்து) முதலில் அதை படித்த போது, ஏழ்மையின் பாதிப்பில் ஒரு சிறுமிக்கு நேரும் எண்ண ஓட்டங்கள் என்று எண்ணும் நிலையில் ஆட்டிஸம் குறித்த பாதிப்புக்களால் சித்ராவின் செயல்கள் சிறு குழப்பத்தை ஏற்படுத்தின. கதையின் முடிவில் ஸ்ரீகாந்தின் ஆட்டிஸம் குறித்த சுட்டியை கண்ட பிறகே அந்த குழப்பங்களுக்கு விடை கிடைத்தது. (நடுவருக்கு அனுப்பும் போது கதையை மட்டுமே அனுப்பினேன், சுட்டியை அனுப்பவில்லை... வெளி சுட்டியை இணைத்தால் சிறுகதையின் இலக்கணத்தை அது மீறும் என்று நான் எண்ணியதால்...) கதை ஆரம்பிக்கும் நிலையிலேயே ஆட்டிஸத்தை பற்றிய ஒரு குறிப்பை கதையின் போக்கில் வாசகர்களுக்கு அறியத்தந்திருக்கலாம், அல்லது அவளின் சூழ்நிலை அவளுக்கு தரும் குழப்பங்களை மட்டும் படம் பிடித்திருக்கலாம் என்பது என் கருத்து... எப்படியிருப்பினும் அது மிகச்சிறந்த கதைகளுக்குள் ஒன்றென்பதில் சந்தேகம் இல்லை...
 



well wisher

உங்கள் கருத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தமைக்கு மன்னிக்கவும்.
 



இந்தப் போட்டியில் இடம் பெற்ற ஒரு சில கதைகள் மட்டுமே எனக்குப் படிக்க கிடைத்தது. அதிலே சுரேஷின் கதையும் ஒன்று. நிச்சயம் ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும் என்று நினைத்தேன். மூன்றாம் பரிசு பெற்ற வினோத் எழுதிய கதையை இப்போதுதான் படித்தேன். வித்தியாசமான கதைக்களம்.

பரிசு பெற்றவர்களுக்கும், நெறிப்படுத்தி நடத்திய முகமூடிக்கும், உற்சாகமாகப் பங்கேற்ற அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். சிறப்பான முறையில் தேர்ந்தடுத்த மாலனுக்கும் , நன்றிகள்.
 



பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்திய முகமூடிக்கு பாராட்டுக்கள். தேர்வு செய்து தேர்வுக்கு நிறைவாக விளக்கமும் அளித்த மாலனுக்கு நன்றி.
 



போட்டியை நடத்திய முகமூடியாருக்கும், பங்குபற்றியவர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
 



பெனாத்தல் சுரேஷ்..மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஹையா..நான் யூகித்தவை தான் மிச்ச ரெண்டு கதைகளுக்கும்! பட்டம் எங்கே முகமூடி?
:-)
மனமார்ந்த வாழ்த்துக்கள் வினோத், சுதர்சன் கோபால்.

நல்ல போட்டி நடத்திய முகமூடிக்கும், நடுவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
 



சிறப்பு பரிசு பெற்ற நெய்வேலி விச்சுவிற்கும் மனமார்ந்த வழ்த்துக்கள்!
 



ஏதோ தமாஷ் என்று முதலில் நினைத்தேன். பிறகு சீரியஸாகப் போகிறது என்பதை உணர்ந்தேன்.. பத்ரி குறிப்பிடும் ஒரு தொழிலதிபர் இல்லாமல் ஒரு சிறப்பான இலக்கியப் பணியை முகமூடி முன்னின்று செய்திருக்கிறார். எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நடுவர் மாலனின் சேவைக்குப் பாராட்டுகள். பரிசு பெற்றோருக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்..
பாராட்டுகளை ஏற்றுக் கொள்ள முகமூடியைக் கழற்றி எறிந்து முகத்தைக் காட்டுங்கள் முகமூடி!
 



நல்ல போட்டி, முதலில் தமாஷாகத்தான் எடுத்துக்கொண்டு எழுதினேன். பிறகு, வந்திருந்த அருமையான படைப்புகளை பார்த்து ஊக்கம் கொண்டேன். பரிசு வரலாம் என நினைத்திருந்தாலும், முதல் பரிசு - நிச்சயமாக கனவு கூடக் காணவில்லை.

தேர்ந்த முறையில் போட்டியை நடத்திய முகமூடிக்கும், நேர நெருக்கடிக்கு இடையேயும் தேர்வு செய்த மாலனுக்கும் நன்றி.

சக வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

(நானும் "என் பெயர் சித்ரா" பரிசு பெறும் என்று கணித்திருந்தேன்)
 



இந்தப் போட்டியை திறம் பட நடத்திய
முகமூடியாருக்கு பாராட்டுக்கள்.Kept the excitement going till last moment.hats off.
நடுவராக இருந்து கதைகளை தெரிவு செய்து வலைப்பூ சிறு கதை முயற்ச்சிகளை உற்சாகப் படுத்திய மாலன் அவர்களுக்கு நன்றிகள்.

பங்குபெற்ற அனைவரின் முயற்சிகளும் குறிப்பிடப்பட வேண்டியவை.

பரிசு பெற்ற கதைகளைப் படைத்த நால்வருக்கும் வாழ்த்துக்கள் பல.

முகமூடியாரே தொடரட்டும் இது போன்ற உற்சாகமான வலை / தமிழ் சேவைகள்.

அன்புடன்...ச.சங்கர்
 



முதலில் முகமூடிக்கு வாழ்த்துக்கள், சிறப்பாக ஒரு போட்டியை நடத்தியதற்கு, சுரேஷின் முத்துசாமி சார் கதையைத்தவிர(அதை ஏற்கனவே சில முறை படித்துவிட்டதால்) மற்ற பரிசுகதைகள் அனைத்தையும் படித்தேன் நிறைவாக இருந்தது.

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், பங்கெடுத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் (ஹைய்யா எனக்கு நானே வாழ்த்துசொல்லிக்கிட்டேனே)

கதைகளை தேர்ந்தெடுத்த மாலன் அவர்களுக்கும் நன்றி

//தனக்குத்தானே புரட்சி பட்டம் கொடுத்துக்கொள்ளாத
//
என்ன முகமூடி சந்தடி சாக்குல இந்த புரட்சி புரோகிராமரையும் போட்டு தள்ளிட்டீங்க

நன்றி
 



அன்புள்ள முகமூடி,
நல்ல முயற்சி...நல்ல கதைகள்.
பரிசு பெற்றார்களுக்கு வாழ்த்துக்கள், மாலனுக்கு நன்றிகள்.
- அன்புடன், அருண் வைத்யநாதன்
 



முகமூடி, வாழ்த்துக்கள். பரிசு பெற்ற கதைகளைப் படித்தேன். நன்றாக இருந்தன. மாலனுக்கும் நன்றி.
 



முகமூடி
பாராட்டுக்கள்,மாலனுக்கு நன்றிகளும். சுரேஷ் கதை பரிசு பெறும் என்று நினைத்திருந்தேன். விச்சுவின் கதை இரண்டாவதாக வரும் என்று தோன்றியது. என் பெயர் சித்ரா பிடித்திருந்தாலும் சில சம்பவங்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருபபதைப்போல தோன்றியது. பரிசு பெற்ற வினோத், சுதர்சன், சுரேஷ, விச்சு விற்கு பாராட்டுக்கள்.
 



தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் படைத்த சுரேஷ் (penathal Suresh),சுதர்சன் கோபால்,வினோத்,
நெய்வேலி விச்சு விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தேர்ந்தெடுத்த நடுவர் மாலனுக்கும்,போட்டியில் பங்கேற்றவர்களுக்கும்,
முப்பது சிறுகதைகள் வரக் காரணியாயிருந்த முகமூடியாருக்கும் நன்றிகள்.
முகமூடி அடுத்ததாய் என்ன???
பாரதியின் நேசர்கள் மகிழும் வகையில் இன்று அறிவிப்பு.நன்றி

அன்புடன்
மதுமிதா
 



வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... முகமூடி மற்றும் மாலனுக்கு நன்றிகள்.
 



vaazhthugal
 



Mugamoodi,
Thanks for organising.
Congratulations to Winners.
 



முகமூடி நல்ல ஆக்கப்பூர்வமாக ஒரு விஷயத்தை அழகாக செய்து முடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
 



வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... முகமூடி மற்றும் மாலனுக்கு நன்றிகள்.
 



சுரேஷ் (penathal Suresh),சுதர்சன் கோபால்,வினோத்,
நெய்வேலி விச்சு விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முகமூடி மற்றும் மாலனுக்கு வாழ்த்துக்கள்
 



முகமூடி அவர்களே,

நீங்கள் சொல்வது புரிகிறது. "Leo Karner Institute for Children with Special Needs" என்பது ஒரு குறிப்பாக அமைந்திருக்க வேண்டும். எனினும் முப்பது கதைகளை நேரம் ஒதுக்கி படித்து அலசி தேர்வு செய்யும் அபார பணியை மாலன் செய்திருக்கிறார். இந்த முயற்சிக்கும், போட்டி இவ்வளவு சிறப்பாக நடந்தமைக்கும், மாலன், முகமூடி, கதை படைத்தோர், கதை படித்தோர், அனைவருக்கும் தமிழிணையத்தோர் ஒரு பெரிய 'ஓ'போட்டே ஆக வேண்டும்.

-Vinodh
http://visai.blogspot.com
 



வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
 



வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
போட்டியை ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடத்தி முடித்த முகமூடி அவர்களுக்கும், துணைநின்று சிறந்த சிறுகதைகளை அடையாளம் காட்டிய திரு. மாலனுக்கும் நன்றிகள்.
 



பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இதனை மிக அருமையாக நடத்திய முகமூடிக்கு என் பாராட்டுக்கள். இதனை Annual அல்லது Biannual போட்டியாக நடத்தலாமே; பல எழுத்தாளர்களை உருவாக்கும்!
 



இந்தப் போட்டியில் கதை எழுதி பங்குகொண்ட அனைத்து சக போட்டியாளர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் என்னுடைய நன்றியும் பாராட்டுகளும்.

more at
நன்றி

அன்புடன் விச்சு
 



சரி, உங்க கருத்து ??