<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மகசேசே விருது சர்ச்சை


டி.எம்.கே சர்ச்சை குறித்து நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லையா என்று பலரும் என்னை கேட்கவில்லை. டி.எம்.கே என்றாலே சர்ச்சைதானே அதில் புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என்று என்னை கேட்காதவர்களிடம் நானும் சொல்லவில்லை. ஆனால் இது பெரிய டி அல்ல சின்ன டி... கர்நாடிக் சிங்கர் டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரம் என்று தெரிய வந்த போது எனக்கு பேரதிர்ச்சி.. ஏனெனில் நான் இதுவரை டி.எம்.கிருஷ்ணா ஒரு வயலில் வித்வான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். வயலின் வித்வான் டி.என்.கிருஷ்ணன், விருது விவகாரத்தில் பேசப்படுவது டி.எம்.கிருஷ்ணா என்று பி.ஏ.கிருஷ்ணன் பேஸ்புக் பதிவுகளின் மூலம் தெரிய வந்ததும்தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்தது.

ஜெயமோகன் பதிவுதான் சர்ச்சைக்கு மூலம் என்று அறிந்ததும் அதை முதலில் படித்தேன். கர்நாடிக் இசை குறித்து எதுவும் தெரியாது என்று டிஸ்க்ளெய்மர் கொடுத்துவிட்டு பிறகு அதை குறித்து எழுதிய ஜெயமோகனே டிஸ்க்ளைமர் கொடுக்கும் அளவு நிலைமை கைமீறி போயிருக்கும் நிலையில் எனக்கும் கர்நாடிக் சங்கீதத்துக்கும் இருக்கும் நீண்ட தொடர்பை முதலில் நான் விளக்கிவிட்டு கருத்து சொல்வதே நல்லது  என்பதால் முதலில் அதை சொல்லிவிடுகிறேன்.

எனக்கு முதன் முதலில் கர்நாடிக் சங்கீத பரிச்சயம் என்றால் அது சங்கராபரணம் திரைப்படம் மூலம்தான் என்றால் அது மிகையாகாது. ஆனால் அப்பொழுது நான் கைக்குழந்தையாக இருந்தபடியால் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நம் பாரம்பரிய இசையை குறித்த எந்த ப்ரஞ்சையும் இல்லாமல் இருந்ததை குறித்த‌ குற்றவுணர்ச்சியில் இருந்து தப்பித்தேன். பின்பு அலைகள் ஓய்வதில்லை படத்தில்  - சென்ட்ரல் தியேட்டரில் செகண்ட் ரன் - என் வயதொத்த சிறுவர்கள் (பிஞ்சிலேயே பழுத்தவர்கள்) எல்லோரும் ராதாவை சைட் அடித்துக்கொண்டிருந்த பொழுதில் எனக்கு மட்டும் கமலா காமேஷ் கற்றுக்கொடுத்த 'சரிமா கறி சரிநி கஸா' மேல் இயல்பாகவே வந்த ஈர்ப்புதான் என் ரத்தத்தில் சிகப்பணுக்களுடன் இசையும் சேர்ந்தே இருக்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்ட முக்கிய தருணம என்றால் அது மிகையாகாது.

இந்த இடத்தில் நான் கர்நாடிக் இசை என்று குறிப்பிடாமல் வெறுமே இசை என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்பதற்கு கவனத்தில் கொள்ளவும். ஏனெனில் எங்கள் வீட்டில் தண்ணீர் வைக்க என்று இருந்த பானையை கவிழ்த்துப் போட்டு தாளம் தப்பாமல் 'தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி' பாடலை நான் வாசித்த‌போதும், அதியமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் நெல்லிக்காய், கமர்கட் வாங்கித்தின்ன போன பொழுதில் அங்கு வந்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்றே தெரியாமல் அவர்கள் பாடிய 'ஓட்டு வேட்டை ஓநாயெல்லாம் ஓட்டு கேட்டு வாராங்களாம்' பாடலை பல மாதங்களுக்கு சுதி தப்பாமல் பாடிக்கொண்டு திரிந்த‌பொழுதும், எதிர் வீட்டு ஜெயபால் அண்ணனின் (அதிமுக முன்னாள் கவுன்சிலர்) தாயார் மறைந்த பொழுது பறையடிக்க வந்த கோஷ்டி வந்த நிமிடம் முதல் கிளம்பும் நிமிடம் வரை சோறு தண்ணி இல்லாமல் பக்கத்திலேயே இருந்து 'ஜன்ஜனக்கு ஜனக்கு ஜகம்' என்று ஆரம்பித்து உச்சம் தொடும் இசையை அனுபவித்த போதும் எனக்கு ஒரே வித ஈர்ப்பு ஏற்பட்டது என்பதில் இருந்து இசை என்பது எனக்கும் அகண்ட பிரபஞ்சத்துக்குமான‌ ஒரு கம்யூனிகேஷன் என்ற புரிதலை எனக்கு ஏற்படுத்தியது. தண்ணீருக்கு பானை கிடைக்காத கடுப்பிலும் என் தொணதொணப்பிலும் நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டேன். அப்பொழுது எதிர்த்த வீட்டு கவிதா பாட்டு கற்றுக்கொள்ள போன அதே இசையாசிரியரே எனக்கும் இசையாசிரியராக அமைவார் என்பது ஆண்டவன் சித்தமாக இருக்கும் என்று எனக்கு தெரியாது.

'இவன் பொண்ணு பார்க்க போகும்போது சமாளிக்கிற அளவுக்கு ரெண்டு பாட்டு கத்துக்கொடுங்க சாமி' என்று சொல்லப்பட்ட போது, இசை வாத்தியார் 'நான் சாமி இல்லைங்க, க்றிஸ்டியன்' என்று சொன்னது அப்பொழுது சாதாரண நிகழ்வுதான் என்றாலும் கர்நாடிக் சங்கீதம் என்பது அன்று முதல் இன்று வரை ஒரு குறிப்பிட்ட சட்டகத்துக்குள் அடைபட்டிருப்பதன் அரசியல் இப்பொழுது இந்த சர்ச்சையான நேரத்தில் புரிகிறது. பொண்ணு பார்க்க போகும்போது ஆண்களுக்கு பாட தெரிய வேண்டியதில்லை என்று நான் தெளிந்து கொண்ட நிமிடம் நான் வயலினுக்கு மாறிக்கொண்டேன். புன்னகை மன்னன் படத்தில் வரும் 'கால காலமாக வாழும் காதலுக்கு' பாடலில் வயலின் உபயோகப்பட்டதற்கும் இந்த நிகழ்வுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பல மாதங்களாக நோட்ஸ் பார்த்து நான் வயலினில் இழுத்த இழுப்புக்கும் இசை என்ற அந்த அற்புத அனுபத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை, இசை என்பது நோட்ஸில் இல்லை அது ஒரு அனுபவம் என்பதை அனுபவித்த நிமிடம் வயலின் க்ளாஸில் இருந்து நின்று விட்டேன். நான் நின்ற அதே நாளில் கவிதாவும் வெளியூர் காலேஜுக்கு மாறிப்போனது ஒரு தற்செயல் நிகழ்வு என்பதால் அதை குறித்து நாம் இங்கு பேச வேண்டியதில்லை.

பின்பு இசைக்கும் எனக்குமான தொடர்பு என்பது இளையராஜா, ரகுமானுக்கும் எனக்குமான தொடர்பு என்ற அளவில் மாறிப்போனது... அவர்கள் இருவரும் போட்ட அனைத்து பாடல்களிலும் கர்நாடிக் சங்கீதத்தின் ஏழு ஸ்வரங்களும் மாறி மாறி வருவதும் அனைத்து பாடல்களிலும் மாயாமாளவ கொள ராகத்தின் சாயலிலுமே இருப்பதை நான் நான் முயற்சிக்காமலேயே உணர்ந்த போது எனக்கு நான் பிரபஞ்ச இசையிலிருந்து விலகி அகாடமி(க்) இசை பக்கமாக போகிறேனோ என்று முதன் முதலாக பயம் வந்தது. அப்பொழுது முதல் பயம் போகும் வரை தேவா பாடல்கள் மட்டும் கேட்க ஆரம்பித்தேன்.

தெளிந்த பிறகே சென்னையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தி.நகர் வெங்கட்நாராயணா கோவிலில் நடக்கும் கர்நாடிக் இசை கச்சேரிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். இப்பொழுது இசை என்பது கேட்கும் கலை என்பதை விட பார்க்கும் கலை என்பது நன்றாக வசப்பட்டிருந்தது. சங்கீதம் கேட்க வந்த அனைத்து ஆண்ட்டி அங்கிள்ஸும் (தனது) தொடையில் தட்டி தட்டி விரலை எண்ணி மேடை கலைஞருக்கு டஃப் பைட்டு கொடுப்பதில் பெருமிதம் அடைகிறார்கள் என்பதையும், தாவணிகள் குறைய ஆரம்பித்து சுடிதார்கள் திராவிட கலாசாரத்தை ஆக்ரமிக்க ஆரம்பித்தையும் என்னை விட தீவிரமாக யாரும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு முறை ஜேசுதாஸ் பாடுவதை பார்த்துக்கொண்டிருந்த போது, 'வர வர எவனுக்கும் இசை மேல பக்தியே இல்லை, நோட்ட எதிர்ல வச்சிகிட்டு பாட்றான் பாரு' என்று ஒரு அங்கிள் கமெண்ட் அடித்த போது அது சரிதான் என்று தோன்றவே இப்போது வரை திநகர் சங்கீத கச்சேரிக்கே செல்வதில்லை.

இப்பொழுது டி.எம்.கிருஷ்ணா விவகாரத்துக்கு வருவோம். 'ensuring social inclusiveness in culture' என்ற பிரிவில் மகசேசே விருது அவர்கள் கொடுத்தார்களா இவர் வாங்கினாரா என்பதே முக்கிய கேள்வி. டி.எம்.கே என்ன செய்தார் என்று எனக்கு தனிப்பட தெரியாது. இது குறித்து ஜெயமோகன் பக்கத்தில் நான்கு பதிவுகளை படித்தேன். எதிர்கருத்தாக பிஏகே அண்ட் கோ சுவர்களில் எழுப்பப்பட்ட விவாதங்களையும் படித்தேன். கொத்தனார் லத்தீன் மொழியில் எழுதிய நீண்ட பதிவை மூன்று வரிகள் படித்தேன். அனைவர் சொல்வதும் சரியாகவே இருப்பதாக எனக்கு தோன்றுவதற்கு காரணம் எனது கர்நாடிக் பேக்ரவுண்ட்தான் என்றால் அது மிகையாகாது. இதெல்லாம் ஜல்லி... இந்த விருதுக்கு இவர் தகுதியானவர் அல்லது இல்லை என்று கட் அன்ட் ரைட் அல்லது ப்ளாக் அண்ட் வொயிட்டாக சொல் என்றால் இந்த விருதுக்கு இவர் சரியென்றே சொல்வேன். அதற்கான காரண்ம் -

கருணாநிதி சொல்வதுதான் கல்ச்சர் என்று நம்பும், பார்ப்பனர்களை தன் கல்ச்சரில் இருந்து exclude செய்து வைத்து சதா சர்வகாலமும் பார்ப்பனர்களை (பார்ப்பனீயத்தை அல்ல) திட்டி பாயை பிறாண்டுவதையே தன் பிழைப்பாக‌ வைத்திருக்கும், லக்கி கிருஷ்ணா, தனக்கு  டி.எம்.கிருஷ்ணாவால் ஆதாயம் கிடைக்காது என்ற நிலையிலும் டி.எம்.கிருஷ்ணாவை ஆதரித்து அறிக்கை விட்டதை எண்ணிப்பார்க்கும் போது டி.எம்.கிருஷ்ணா ensuring social inclusiveness in culture என்பதை சாதித்து விட்டதாகவே தோன்றுகிறது.

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அமெரிக்க அதிபர் தேர்தல் - சிறு குறிப்பு


நீ என்ன அரசியலில் பெரிய அப்பாடக்கரா?

இல்லை.

அப்புறம் எந்த அடிப்படையில் சிறு குறிப்பு வரைகிறாய்?

நல்ல கேள்வி. நேத்து மதர்ஸ் டே டின்னர் சாப்பிட போன இடத்தில் நவம்பர் எலக்சன் பற்றி பேச்சு வந்தது. என் சொந்த காதால் இந்த இரண்டு டயலாக்குகளையும் கேட்டேன்.

அ) சாண்டர்ஸா? அப்டின்னு ஒரு பொலிட்டீசியனா? எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. ஹில்லரிதான் எங்காளு. ஒரு லேடி ஃபர்ஸ்ட் டைமா பிரசிடண்ட் ஆகி சரித்திரம் படைக்க போறாங்க, எவ்ளோ பெரிய விஷயம். அவங்களுக்கு ஓட்டு போட்டு ஆதரவு தரணும்னு நாங்கள்லாம் வாட்ஸப்ல ஏற்கனவே முடிவு செஞ்சிட்டோம்;

ஆ) ட்ரம்புக்கு வோட்டு போடுவதுதான் இந்தியாவுக்கு நல்லதுன்னு போன வாரம் &^$*%& சைட்ல ஒரு செம ஆர்டிகிள் பார்த்தேன். சோ ட்ரம்புக்குத்தான் என் வோட்டு.

கோகனட் மில்க் மஃபின் என்ற ஒரு புது ஐட்டம் நன்றாக இருந்ததால் அதனால் எதேச்சையாக தொண்டையை அடைத்துக்கொண்டு அந்த விவாதத்தில் பங்கு பெறாமல் போன ஒரு குற்றவுணர்ச்சி நேற்றில் இருந்து அரித்துக்கொண்டே இருந்ததால் எனக்கு தெரிந்த ஆஃபாயில் அரசியல் ஞானத்தை ஆம்லெட் போட்டே தீர வேண்டும் என்று இந்த குறிப்பு.

மேலும் அமைந்தகரை டைம்ஸ் போன்ற வாராந்திர மேகசின்களில் வேறு சனி ஞாயிறு சிறப்பு பதிப்பில் சிறப்பு நிருபர்கள் ‘அமெரிக்காவுலயே புஷ் பையன், க்ளிண்டன் பொண்டாட்டின்னு வாரிசு அரசியல் இருக்க சொல்லோ, எங்க தலைவர் வந்தா மட்டும் தப்புன்றீங்கோ’ என்று தர்க்க பூர்வ கேள்வியை ரொம்ப நாட்களாகவே எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள், அவர்களிடமும் ஒரு உரையாடலை ஏற்படுத்தலாம் என்று ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.

சரி, நடத்து... எலக்டோரல் காலேஜ்ல இருந்து ஆரம்பிக்க போறியா?

நோ, எலக்‌ஷன் ப்ராசஸ் என்ன மட்டும்தான். ஏன் இப்பிடி நடக்குது, எதற்கு அப்படி நடக்குது என்பதற்கான சரித்திர பூகோள ஆராய்ச்சிகளை ஆர்வம் இருப்பவர்கள் விக்கிபீடியாவில் தேடிக்கொள்வார்கள்.

அப்புறம்?

ஆங்கில சொல்லை மொழிபெயர்த்து படுத்தாமல் தமிழில் ஆங்கில சொற்களாகவே எழுத உத்தேசம்.

++

முன்னோட்டம் # 1

அமெரிக்க அரசாங்கம் Checks and balances கோட்பாட்டின்படி ஒரு பிரிவுக்கு மட்டும் ஏகபோக அதிகாரம் சென்று விடக்கூடாது என்ற குறிக்கோள் அடிப்படையில் அதிகாரம் பரவலாக்கப்பட்டு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

(1) Legislative:
Senate மற்றும் House of Representatives என்று இரு பிரிவுகள் அடங்கிய காங்கிரஸால் ஆனது.
பொறுப்பதிகாரம்: சட்டம் இயற்றுவது, அதிபர் செய்யும் நியமனங்களை ஏற்பது அல்லது நிராகரிப்பது, தேவைப்பட்டால் அதிபரையே பதவியில் இருந்து நீக்குவது

(2) Executive:
அதிபர், துணை அதிபர் மற்றும் கேபினட்டால் ஆனது.
பொறுப்பதிகாரம்: சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, காங்கிரஸ் இயற்றும் சட்டங்களை ஏற்கவோ மறுக்கவோ அதிகாரம் (வீட்டோ பவர்) உண்டு.

(3) Judicial:
சுப்ரீம் கோர்ட் ஒன்பது ஜஸ்டிஸ்கள் ஆனது.
ஜஸ்டிஸ்கள் அதிபரால் நியமிக்கப்பட்டு செனட்டால் ஒப்புதல் அளிக்கப் படுபவர்கள்.
பொறுப்பதிகாரம்: சட்டத்தை நிலைநாட்டுவது, அரசியலமைப்புக்கு ஒவ்வாத சட்டங்களை நிராகரிப்பது.

முன்னோட்டம் # 2

- அமெரிக்காவில் 50 மாநிலங்கள்

- ஒரு மாநிலத்துக்கு இரண்டு செனட்டர்கள் என்று மொத்தம் 100 செனட்டர்கள். இவர்கள் பதவிக்காலம் ஆறு வருடங்கள்.
- 50 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 435 பிரதிநிதிகள் (ரெப்ரசெண்டேட்டிவ்கள்). இவர்கள் பதவிக்காலம் இரண்டு வருடங்கள்.

- அதிபர்/துணை பதவிக்காலம் நான்கு வருடங்கள்.

- செனட்டர்கள், ரெப்ரசன்டேட்டிவ்கள் மற்றும் அதிபர்/துணை அதிபர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். கேபினட் செக்ரட்டரிகள் (நம்மூர் அமைச்சர் போல) அதிபரால் நியமிக்கப்பட்டு காங்கிரஸால் ஒப்புதல் தரப்படுபவர்கள்.
நவம்பர் 8, 2016 அன்று அதிபர், துணை அதிபர், 34 செனட் உறுப்பினர்கள், 435 ரெப்ரசெண்டேடிவ்ஸ் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.

+++

 நவம்பர் 8, 2016 அன்று அதிபர், துணை அதிபர், 34 செனட் உறுப்பினர்கள், 435 ரெப்ரசெண்டேடிவ்ஸ் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அமெரிக்க அதிபராக மூன்று தகுதிகள் தேவை.
(1) பிறக்கும்போது அமெரிக்க குடிமகனாக பிறந்தவர்- natural born citizen
(2) 35 வயது
(3) அமெரிக்காவில் குறைந்தது 14 வருடங்கள் வாழ்ந்தவர்.

இந்த மூன்றும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அதிபர் பதவிக்கு போட்டி போடலாம்.

அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் பிரதானம். டெமாக்ரடிக் (ஜனநாயகம்) மற்றும் ரிபப்ளிகன் (குடியரசு). இவை இரண்டை தாண்டியும் கட்சிகள் உண்டு, ஆனால் அவற்றில் இருந்து அதிபர் என்பது தமிழ்நாட்டில் பாஜக முதல்வர் என்பது போல. எனவே சாய்ஸில் விடுவோம்.

கட்சி என்பது இந்தியாவில் போல் தலைவர், தலைவரை மீறி அணுவும் அசையாது போல் கிடையாது. கட்சிகளுக்கென்று சில அடிப்படை கொள்கைகள் உண்டு. டெமாக்ரடிக்ஸ் லிபரல்ஸ் (Liberals). ரிபப்ளிகன்கள் கன்சர்வேடிவ்ஸ் (Conservatives). பொதுவாக கட்சி சார்ந்த - ஏற்கனவே கவர்னர், செனட்டர் போன்ற பதவிகளில் பழம் தின்று கொட்டை போட்ட - ஆட்கள்தான் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார்கள் எனினும் எந்த ஒரு தனி நபரும் கொள்கை சார்ந்து கட்சி பிரகடனம் செய்து கொண்டு அப்படியே தேர்தலில் நிற்கலாம். குத்து மதிப்பாக சொன்னால் ரஜினிகாந்த் திடீரென தன்னை திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது போல. ட்ரம்ப் அப்படி திடீர் குபீர் ரிபப்ளிகன் ஆகி தேர்தலில் நிற்பவர்தான்.

இந்த வருடம் டெமக்ரடிக் பேனரில் 3 பேரும், ரிபப்ளிகன் பேனரில் 12 பேரும் அதிபர் ஆக விருப்பம் கொண்டார்கள். இப்படி கிளம்பும் எல்லோரையும் வடிகட்டி ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டுமே என்று முடிவுக்கு வர உதவுவது ப்ரைமரி தேர்தல் முறை. அதாவது பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் வேட்பாளர் தகுதித் தேர்தல். இது பிப்ரவரி 1 ஆரம்பித்து ஜூன் 14 வரை ஒவ்வொரு மாநிலமாக எல்லா மாநிலங்களிலும் மற்றும் அமெரிக்க ஆளுகைக்குட்பட்ட பிராந்தியங்களிலும் நடக்கும்.

மக்கள் வேட்பாளரை நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. அதாவது வேட்பாளர் பெயர், சின்னம் பார்த்து ஓட்டு குத்துவதில்லை. அதற்கு பதிலாக வேட்பாளரை ஆதரிப்பேன் என்று உறுதி அளிக்கும் வேட்பாளர் பிரதிநிதிகளுக்கு ஓட்டு போடுகிறார்கள். இவர்களுக்கு டெலிகேட்ஸ் (delegates) என்று பெயர். ப்ரைமரீஸ் எல்லாம் முடிந்த பின்பு டெலிகேட்ஸ் எல்லாம் ஒரு இடத்தில் கூடி (Convention) கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். உறுதி அளித்துவிட்டு பின்பு தனி டீலிங் போட்டுக்கொண்டு மாற்றி ஓட்டு போட்டால் என்ன செய்வார்களாம் என்பது எம்.எல்.ஏக்களை கடத்தி ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ‘கவனித்து’ ஆட்சி அமையப் பெற்ற் சரித்திர புகழ் பெற்ற நிலத்தில் இருந்து வந்த நமக்கு இயல்பாகவே எழும் சந்தேகம்தான். அப்படி மாற்றி ஓட்டலாம் என்றாலும் 99 சத்வீதம் செய்ய மாட்டார்கள்.
 
தகுதித் தேர்தல் இரண்டு வகைப்படும். ரகசிய ஓட்டு முறையில் வாக்குப்பெட்டி வைத்து தேர்தல் மாதிரியே நடப்பதற்கு பெயர் ப்ரைமரி (Primary). யாருடையதாவது வீடு, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிப் பேசி வெளிப்படையாக தலையை எண்ணி டெலிகேட்டை தேர்ந்தெடுக்கும் முறைக்கு பெயர் காகஸ் (Caucus). ப்ரைமரி தேர்தலை நடத்துவது மாநில நிர்வாகம். காகஸ் கட்சிகளால் நடத்தப்படுவது. ஒவ்வொரு மாநிலம் ஒவ்வொரு முறையை கடைபிடிக்கும்.

ப்ரைமரிஸ் குறிப்புகள்:

(அ) ஒவ்வொரு கட்சியும் தங்கள் ப்ரைமரி தேர்தல் திறந்த தேர்தலா (open primary) அல்லது மூடிய தேர்தலா (closed primary) என்று முன்கூட்டியே அறிவித்துவிடும். மூடிய தேர்தல் எனில் அந்த கட்சியில் பதிவு செய்த வாக்காளர் (registered voter) மட்டுமே ஓட்டு போட முடியும். திறந்த தேர்தல் என்றால் கட்சியில் பதிவு செய்த, செய்யாத யாரும் ஓட்டு போடலாம்.

உதாரணமாக கலிஃபோர்னியாவில் ரிபப்ளிகன் கட்சியின் தேர்வு மூடிய தேர்தல் முறை. தன்னை ரிபப்ளிகன் என்று பதிவு செய்த கலிஃபோர்னியா வாக்காளர் மட்டுமே ரிபப்ளிகன் ப்ரைமரியில் ஓட்டு போடலாம். ஆனால் டெமக்ரடிக் கட்சியின் தேர்வு ஓப்பன் முறை. தன்னை டெமக்ரடிக் வாக்காளர், அல்லது கட்சி சார்பில்லாத வாக்காளர் (Independent) என்று பதிவு செய்த யாரும் டெமக்ரடிக் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

ஜூன் 7 நடக்க இருக்கும் ப்ரைமரிக்கு மே மாதம் வரை எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது ஆன்லைனில் ஐந்து நிமிட வேலை. கவனிக்க வேண்டிய விஷயம்: பதிவு செய்த வாக்காளர்கள் கட்டுப்பாடு ப்ரைமரி (அதாவது தகுதித்) தேர்தலுக்கு மட்டுமே. பொதுத் தேர்தலில் வாக்காளர் எவரும் எந்த கட்சி வேட்பாளருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்.

(ஆ) சில மாநிலங்களில் டெலிகேட்ஸ் எண்ணிக்கை போட்டியில் இருக்கும் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விகிதப்படி பிரித்து கொடுக்கப்படும். உதாரணமாக 90 டெலிகேட்ஸ் மூன்று வேட்பாளர்கள் எனில் மூவரும் சம அளவில் ஓட்டு பெற்றிருந்தால் மூவருக்கும் தலா 30 டெலிகேட்ஸ். மற்ற மாநிலங்களில் எந்த வேட்பாளர் மெஜாரிட்டி வாக்குகள் பெறுகிறாரோ அவருக்கு அம்மாநிலத்தின் அனைத்து டெலிகேட்களும் அப்படியே கொடுக்கப்படும். உதாரணமாக 90 டெலிகேட்ஸ் மூன்று வேட்பாளர்கள் எனில் மூவரில் யார் அதிக ஓட்டு பெற்றிருக்கிறார்களோ அவருக்கு 90 டெலிகேட்ஸும் அப்படியே.

(இ) ப்ரைமரிஸ் காலத்தில் வேட்பளர்கள் இடையே தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கும். டெமக்ரடிக் வேட்பாளர்களுக்குள் Democratic Debates . ரிபப்ளிகன் வேட்பாளர்களுக்குள் Republican Debates. முக்கிய விஷயங்களில், எதிர்கால திட்டங்களில் ஒவ்வொரு வேட்பாளருக்குமான சிந்தனை என்ன என்று கேட்பார். டிவிக்களில் நேரடி ஒளிபரப்பாகும் இந்த விவாதங்கள் Independent வாக்காளர்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும்.

(ஈ) ரிபப்ளிகன் கட்சியில் 2,472 டெலிகேட்ஸ். எந்த வேட்பாளர் ஜூலை 18 முதல் 21 வரை க்ளீவ்லாண்ட்ல் நடைபெறும் ரிபப்ளிகன் கன்வென்ஷனுக்கு போகும் போது 1,237 டெலிகேட்ஸ் வைத்திருக்கிறாரோ அவரே ரிபப்ளிகன் வேட்பாளர்.

(உ) டெமக்ராடிக் கட்சியில் 4,051 டெலிகேட்ஸ். இது தவிர சூப்பர் டெலிகேட்ஸ் என்ற பட்டம் கொண்ட, தன் சுய விருப்பத்தின்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளிக்கும் பவர் கொண்ட கட்சி சார்ந்த அப்பாடகர்கள் 715 பேர். ஆக மொத்தம் 4,766. எந்த வேட்பாளர் ஜூலை 25 முதல் 28 வரை ஃபிலடெல்ஃபியாவில் நடைபெறும் டெமக்ரடிக் கன்வென்ஷனுக்கு போகும் போது 2,384 டெலிகேட்ஸ் வைத்திருக்கிறாரோ அவரே டெமக்ராடிக் வேட்பாளர்.

(ஊ) மெஜாரிட்டி நம்பர் டெலிகேட்ஸ் ஒரு தனி வேட்பாளருக்கு கிடைக்கவில்லை என்றால் போட்டி கன்வென்ஷன் (contested convention) நடைபெறும். வேட்பாளரை ஆதரிப்பேன் என்று உறுதி அளித்திருந்த டெலிகேட்ஸ் ஓட்டு ஓபன் ஆக்கப்பட்டு குதிரை பேரம் நடந்து ஒரு வழியாக ஒவ்வொரு கட்சியிலும் அதிபர் பதவிக்கான வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுகப்படுவதுடன் ப்ரைமரிஸ் தேர்தல் சுபம்.

+++

ப்ரைமரீஸ் தேர்தல்கள் முடிந்தவுடன் நடக்கும் கட்சி சார்பான கன்வென்ஷன்களின் முடிவில் அந்தந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். (தற்போதைய நிலவரத்தின் படி ரிபப்ளிகன் பார்ட்டி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், டெமக்ரடிக் பார்ட்டி சார்பில் ஹில்லரி க்ளிண்டனும் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன)

அவர்கள் தங்களுடைய துணை அதிபர் வேட்பாளர் யார் என்பதை பொது தேர்தலுக்கு முன்பு தேர்வு செய்து அறிவிப்பார்கள். தேர்தல் நடக்கும்போது அதிபர் மற்றும் துணை அதிபர் என்று ஒரு பேக்கேஜாகவே வாக்கு.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் முதல் திங்களுக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் (அதாவது 2016ல் நவம்பர் 8) அன்று பொதுத் தேர்தல் நடைபெறும்.

பொதுத்தேர்தலில் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். எனினும் தேசம் முழுமைக்கும் என்று வாக்குகள் எண்ணப்பட்டு அதில் யார் அதிக வாக்குகள் பெற்றார்களோ அவர்கள்தான் அதிபர் என்று *** முடிவு செய்யப்படுவதில்லை ***

பதிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்குகள் கணக்கிடப்படு, அந்த மாநிலத்தில் யார் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளரோ அவர் அந்த மாநிலத்தின் வெற்றி வேட்பாளர் என்று முடிவாகும்.

அதாவது கலிஃபோர்னியா மாநிலத்தில் மட்டும் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதில் டெமக்ரடிக் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றவர் என்றால் கலிஃபோர்னியாவில் டெமக்ரடிக் வேட்பாளர் வெற்றியாளர் என்று முடிவாகும்.

அமெரிக்காவில் 50 மாநிலங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கட்சி வெற்றியாளர் என்று தேர்வு செய்தால் 50 ல் மெஜாரிட்டி 26 மாநிலத்தில் வெற்றி பெற்றவர் அதிபர் என்று வர வேண்டும். *** ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் ***

மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் தொகை வேறுபடுகிறது. கலிஃபோர்னியா மாநிலத்தின் மக்கள் தொகை 3 கோடியே 88 லட்சம். வயோமிங் மாநிலத்தின் மக்கள் தொகை வெறும் 5 லட்சம். கலிஃபோர்னியாவுக்கும் ஒரு மார்க், வயோமிங்கிற்கும் ஒரு மார்க் என்றால் 4 கோடி மக்கள் தொகைக்கு என்று ஒரு வெயிட் வேணாம்? போங்காட்டமால்ல இருக்கு என்று கேள்வி எழுகிறது.

ஆகவே மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்துக்கும் எலக்டர்ஸ் (Electors) நம்பர் கணக்கிடப்படுகிறது. 50 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 435 ரெப்ரசெண்டேடிவ்ஸ் என்று முன்பு பார்த்தோமே, அது மக்கள் தொகை அடிப்படையில் தான். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் எண்ணிக்கை ப்ளஸ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறாத எண்ணிக்கையில் 2 செனட்டர்கள். இரண்டையும் கூட்டினால் வருவது அந்த மாநிலத்தின் எலக்டோரல் வோட்ஸ் (Electoral Votes).

உதாரணம் -

கலிஃபோர்னியா மாநிலம் - மக்கள் தொகை 3.88 கோடி -
53 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் + 2 செனட்டர்கள் = 55 எலக்டோரல் வோட்ஸ்

டெக்சாஸ் மாநிலம் - மக்கள் தொகை 2.69 கோடி
36 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் + 2 செனட்டர்கள் = 38 எலக்டோரல் வோட்ஸ்

வெர்மாண்ட் மாநிலம் - 6.26 லட்சம்
1 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட் + 2 செனட்டர்கள் = 3 எலக்டோரல் வோட்ஸ்

மொத்தமாக 50 மாநிலங்களுக்கும் இப்படியே கணக்கு போட்டால் வருவது 435 காங்கிரஸ் டிஸ்ட்ரிக்ட்ஸ் + 100 செனட்டர்கள் = 535 எலக்டோரல் வோட்ஸ். கூடவே Washington D.C க்கு ஒரு மூன்றை சேர்த்தால் மொத்தம் 538 எலக்டோரல் வோட்ஸ்.

இப்போது மீண்டும் மாநில வாரியான ஓட்டை பார்த்தோம் என்றால் -
ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்குகள் கணக்கிடப்படு, அந்த மாநிலத்தில் யார் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளரோ அவருக்கு அந்த மாநிலத்தின் எலக்டோரல் வோட்ஸ் மொத்தமும் அளிக்கப்படும்.

அதாவது ,
கலிஃபோர்னியா மாநிலத்தில் டெமக்ரடிக் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அவருக்கு 55 எலக்டோரல் வோட்ஸ்.

டெக்சாஸில் ரிபப்ளிகன் வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறார். அவருக்கு 38 எலக்டோரல் வோட்ஸ்.

இப்படியே எல்லா மாநிலங்களிலும் வெற்றி பெறும் வேட்பாளருக்கு அந்தந்த மாநிலத்தின் எலக்டோரல் வோட்ஸ் சேர்க்கப்படும்.

இறுதியில் 538 ல் மெஜாரிட்டியான 270 எலக்டோரல் வோட்டுக்களை எந்த வேட்பாளர் பெறுகிறாரோ அவரே அமெரிக்காவின் அடுத்த அதிபர்.

தேர்தல் மாலையே அடுத்த அதிபர் யார் என்று பெரும்பாலும் தெரிந்துவிடும். அவர் தேர்தல் நடந்த வருடத்துக்கு அடுத்த வருடம் ஜனவரி 20 அன்று பதவி ஏற்றுக்கொள்வார். சுபம்.

குறிப்புகள்:

1. சில சமயங்களில் பெருவாரியான மக்கள் ஒரு வேட்பாளரை விரும்பினாலும் (பாப்புலர் ஓட்டு) எலக்டோரல் வோட்டு முறையால் இன்னொரு வேட்பாளர் வெற்றி பெறுவார். சமீபத்திய உதாரணம் ஜார்ஜ் புஷ் vs அல் கோர் 2000ம் ஆண்டு. அந்த தேர்தலில் அல் கோர் பெற்ற மொத்த வாக்குகள் 50,999,897 (48.4%). புஷ் ஜூனியர் பெற்ற மொத்த வாக்குகள் 50,456,002 (47.9%) ஆனாலும் புஷ் ஜூனியர் அதிபராக தேர்வானார். காரணம் புஷ் பெற்ற எலக்டோரல் வோட்டுகள் 271 அல் கோர் 266

2. பெரும்பாலான மாநிலங்கள் காலகாலமாக ஒரு கட்சி சார்பானவை. உதாரணம் கலிஃபோர்னியா டெமக்ரடிக். டெக்சாஸ் ரிபப்ளிகன். ஆனால் ஒரு சில மாநிலங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் மதில் மேல் பூனைகள். எலக்டோரல் வோட்ஸ் அதிகமாகவுள்ள மதில் மேல் பூனை மாநிலங்களே - குறிப்பாக ஃப்ளோரிடா (29), பென்சில்வேனியா (20), ஒஹயோ (18) -அதிபர் தேர்தலில் முக்கிய யார் வெற்றி பெருகிறார்கள் என்பதில் முக்கிய பங்காற்றுபவை. 




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அம்பிகளுக்கு ரெமோ மேல்


வ.வா.ச படத்தில் வெட்டி ஆஃபிசர் சிவகார்த்திகேயன் பல் விளக்கிக்கொண்டே வண்டிப்பாதையில் பொறுமையாக நடந்து போவார். பின்னால் மணல் லோடு அடிக்கும் டிராக்டர் ஒன்று நடப்பவர் வேகத்துக்கு ஏற்ப அமைதியாக ஃபாலோ செய்யும். பொறுமை இழக்கும் சில்வண்டு ஒன்று ஹார்ன் அடித்துவிடும். ”எனக்காடி ஹார்ன் அடிக்கிற, உன்ன என்ன செய்றேன் பார்” என்று உடனே சி.கா தாசில்தாருக்கு ஒரு ஃபோன் அடிப்பார். டிராக்டருக்கு ஆப்பு.

இது வெறும் காமெடி காட்சி அல்ல. இதை போன்ற அநியாயத்தை கண்டவுடன் - தன் ஈகோ சீண்டப்பட்டால் மட்டும் - பொங்கும் ஏகப்பட்ட அந்நியன் பட அம்பிகள் நம்மிடையே உண்டு. காலேஜ் முடித்தவுடன் மிகக்கொஞ்ச காலம் த.நா.மி.வா எனப்படும் ஈ.பியில் பொழுதை ஓட்டிய பொன்னான சந்தர்ப்பத்தில் அம்பிகள் சிலரை சந்தித்திருக்கிறேன்.

+++

பச்சமுத்து ஒரு கன்ஸ்யூமர். அன்று கடுப்போடு வந்தார். தான் எதிர்பார்த்த வேலை தான் எதிர்பார்த்த காலத்தில் நடக்கவில்லை என்பதில் அவருக்கு எரிச்சல். JE அளித்த பதில்களில் அவருக்கு திருப்தி இல்லை என்று இங்கு வந்தார். இங்கும் அவருக்கு நடைமுறை சிக்கல் பொறுமையாக இன்னொரு முறை விளக்கப்பட்டது. அது தான் எதிர்பார்த்த பதிலாக இல்லாததில் அவருக்கு கோபம். பேச்சுவாக்கில்

‘நாங்க கட்டுற வரிதான் உங்களுக்கெல்லாம் சம்பளம் அத ஞாபகம் வச்சிகிட்டு வேலை செஞ்சீங்கன்னா நல்லது’

‘உக்காருங்க பச்சமுத்து’

தன் கோபத்துக்கு உடனடி மரியாதையா என்று பச்சமுத்துவுக்கு சின்னதாக சந்தேகம்.

‘ஸ்டெனோ கொஞ்சம் இங்க வாங்க’

ஸ்டெனோ வந்தார்

‘எழுதிக்கோங்க...

பெறுநர்: தலைமை பொறியாளர்.
ஐயா,
இப்பவும் இன்ன மாவட்டம், இன்ன டவுன் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எவருக்கும் என்னுடைய வரியில் இருந்து கண்டிப்பாக சம்பளம் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு பச்சமுத்து’

‘இதுல நம்ம பச்சமுத்து சார் பெர்சனல் டீட்டைல ஃபில்லப் பண்ணி டைப் பண்ணி சார்கிட்ட கொடுத்திடுங்க’

‘பச்சமுத்து சார், பக்கத்துலதான் போஸ்டாபீஸ்ல... கவர நீங்களே போஸ்ட் பண்ணிடுங்க. மறக்காம ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புங்க. இல்லைன்னா ஸ்டாம்புக்கு பதிலா உங்க வரியில இருந்து ஸ்டாம்ப் செலவை எடுத்துக்க சொல்லி போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு நோட் எழுதி அப்புறமா போஸ்ட் பண்ணுங்க.. இப்ப போய்ட்டு வாங்க’

+++

முனிரத்னம் வீட்டில் தேதி முடிந்தும் கரண்ட் பில் கட்டவில்லை என்று ஃப்யூஸ் கட்டையை பிடுங்கி வந்துவிட்டார்கள். மறுநாள் ஆள் அலுவலக்த்திற்கு வந்தார்.

‘என்ன சார், ஒரு நாளுக்கே (ஃப்யூஸ்) கட்டைய புடுங்கியாந்துட்டீங்க’

‘உங்கூட்டுக்கு மட்டும்னு தனியா இன்னொரு நாள் வரணும் பாருங்க.. அதான், சரி இப்ப என்ன வேணும்’

‘ஆர்.சி (ரீகனெக்‌ஷன்) வேணும் சார்’

‘ஜே.ஈய பாத்தீங்களா?’

‘பாத்தேன். ஆர்.சி சார்ஜ் கட்டணுங்கிறாரு. ஒரு நாள்தான சார் ஆயிருக்கு. அதுக்குள்ள என்ன சார் உள்ளூர்காரனுக்கு ஆர்.சி சார்ஜு’

‘கட்டைய புடுங்குறதுக்கு முன்னாடி வந்திருந்தா எதாவது பண்ணலாம். இப்ப ஒன்னும் பண்ண முடியாது. ஆர்.சி சார்ஜ் கட்டிட்டு போங்க ஆர்சி கிடைக்கும்’

‘சார், நம்ம தொகுதில இருந்துதான் அமைச்சர் தெரியுமில்ல. 2 மணி பஸ்ஸ புடிச்சேன்னா நைட் மெட்ராஸ். அமைச்சர தொந்தரவு பண்ண வேணாமேன்னு பார்த்தா ஓவரா போறீங்களே. ’

‘ஒன்னு செய்ங்க. 2 மணி பஸ்ஸ புடிக்காதீங்க. நைட்ல அமைச்சர பாக்க முடியாது. நைட் பஸ்ஸ புடிங்க. காலைல பார்த்துடலாம். அதுல என்ன ப்ரச்னை என்னன்னா, அமைச்சர் ரேஞ்சுக்கு அவர் எனக்கு போன் பண்ண மாட்டார். மேல்மட்டத்துல யாரயாவது சி.இ லெவல்ல கால் பண்ணுவார். அது மாறி மாறி கடைசில என்கிட்ட வந்து சேரும் போது நாள் கணக்குல ஆய்டும். அதுனால நீங்க என்ன பண்ணுங்க, இவரிடம் ஆர்.சி சார்ஜ் வாங்கக் கூடாது அப்படின்னு அமைச்சர் கிட்டயே ஒரு லெட்டர் வாங்கிடுங்க... அத விட பெட்டரா ஒன்னு சொல்லவா... இனி இவர் கிட்ட கரண்ட் சார்ஜே வாங்காதீங்கன்னு லெட்டர் வாங்கிட்டீங்கன்னா ரொம்பவே நல்லது. நாளைக்கி சாயங்காலம் லெட்டரோட வந்துடுங்க, நாலு பீஸ் கட்டை எக்ஸ்ட்ராவா போட்டு தரேன்’

விடுவிடுவென வீறாப்பாக போனவர் போனது பஸ்ஸ்டாண்டுக்கு இல்லையாம், ஆர்.சி சார்ஜ் கட்டிவிட்டு  வீட்டுக்குத்தான் போனாராம்.

+++

‘ போன வருஷத்துல இருந்து மாசம் தவறாம பில் கலக்டர் மேல், அக்ஸசர் மேல, லைன் மேன் மேலன்னு யார் மேலயாவது புகார் தெரிவிச்சி பெட்டிஷன் வருது. பெட்டிஷன் எல்லாம் ஒரே ஃபார்மேட். எல்லாத்திலயும் ஸ்டாப்பு ஸ்டாப்புன்னே எழுதியிருக்கும்.. அதாவது ஊழியர்னு எழுதினா காமிச்சி கொடுத்திருமாம். ரொம்ப நாள் கழிச்சிதான் தெரிஞ்சிது பெட்டிஷன் போட்டது அதோ அங்க பச்சை கட்டம் போட்டு உக்காந்திருக்காரே அவர்தான்னு.. நம்மாளுதான் இங்க ஐ.ஏ (Inspector of Assessment) வா இருக்காரு.  ஒரு டஜன் கவரும் ஒன்னேகால் ரூவா ஸ்டாம்பும்  வச்சிகிட்டு இந்தியன் படம் க்ரேசி மோகன் கணக்கா இண்டுவுக்கு லெட்டர் எழுதுறதுக்கு பதிலா ஹெட் ஆஃபிஸுக்கு பெட்டிஷன தட்டி விட்றாரு.  ஆனா என்ன பிரயோசனம். நடவடிக்கை எடுக்கப்பட்டதுன்னு ஒரு அக்னாலட்ஜ் கூட அனுப்ப முடில.. ஏன்னா எல்லா கடுதாசிலயும் அட்ரஸே இல்லாம, இப்படிக்கு பொதுமக்கள்னு போட்டு ஒரு பத்து பேர் பேரு கலர் கலர் பேனால எழுதியிருக்கு.. போதாததுக்கு ரெண்டு கைநாட்டு வேற.

+++

‘அலோ... என்ன சார் எங்க ஏரியா ட்ரான்ஸ்பார்மர் ரொம்ப பழசு.. பத்து வருசமா அதே ட்ரான்ஸ்பார்ம் மாத்த மாட்டீங்களா?’

‘ட்ரான்ஸ்பார்மர் எப்படி இருந்தா என்ன சார், உங்களுக்கு எதுனா ப்ரச்னையா’

‘என்ன ப்ரச்னையான்னு சாதாரணமா கேட்டுட்டீங்க.. எப்ப பார்த்தாலும் லோ வோல்டேஜ் சார்’

‘சரி விசாரிக்க சொல்றேன்.. உங்க பேர் அட்ரஸ் கொடுங்க’

’ப்ரச்னை எனக்கு மட்டும் இல்ல சார், எங்க தெருவுக்கே இருக்கு’

‘சரி, எந்த தெரு?’

‘எங்க ஏரியா முழுக்கவே அப்படித்தான் சார் இருக்கு.. ட்ரான்ஸ்பார்மர் மாத்தாத வரிக்கும் இதுக்கு விடிவுகாலம் கிடையாது’

‘சரி எந்த ஏரியா’

டொக்

’காலையில் மோட்டுவளைய பாத்துகிட்டு வெட்டியா படுத்திருந்திருப்பான். எதாவது உருப்படியா பொழுது போக்குவமேன்னு யோசனை பண்ணியிருப்பான். ட்ரான்ஸ்பார்மர் பழசாயிடுச்சே, மாத்த சொல்வோம்னு ஒரு கால போட்ருப்பான்’

+++

’சார் என் க்ளையண்டோட ஃபேக்டரில காலைல இருந்து கரண்ட் இல்லை. என்ன சார் ப்ரச்னை’

‘ஓ அப்டிங்களா.. லைன் மேன் நம்பருக்கு போட்டு என்னன்னு விசாரிச்சீங்களா?’

’என்ன சார் ரெஸ்பான்ஸ் இது. நான் வக்கீல் சோமசுந்தரம் பேசறேன். டிஸ்ட்ரிக்ட் கோர்ட்ல பெரிய லாயர். வேலை மெனக்கட்டு உங்கள்க்கு போன் பண்ணா நீங்க லைன் மேன கேட்டீங்களான்னு இர்ரெஸ்பான்ஸிபிளா எதிர் கேள்வி கேக்குறீங்க’

‘சார் நீங்க வக்கீலோ டாக்டரோ, ஃப்யூஸ் போறதுல ஆரம்பிச்சி ஷண்டிங், லைன் மாத்துறது, ட்ரான்ஸ்பார்மர் காலின்னு எக்கச்சக்க காரணத்துல எதாவது ஒன்னுனால அவுட்டேஜ் இருக்கும். உங்க க்ளையண்ட் ஃபேக்டரி இருக்கிறது என் ஆஃபிஸ்ல இருந்து 24 கிமீ தள்ளி. லைன் மேன் ஃபேக்டரி ஏரியாவுலதான் சுத்தி கிட்டு இருப்பாரு. அவருக்குதான் ஃபீல்ட் கண்டிஷன் உடனடியா தெரியும். அதிகபட்சமா ஜே.இ.க்கு எதாவது பெரிய அசம்பாவிதமா இருந்தாதான் எனக்கு தகவல் வரும். நீங்க என்கிட்ட கேட்டீங்கன்னாலும் நான் அவங்ககிட்ட கேட்டு என்ன நடந்ததுன்னு விசாரிச்சிதான் உங்களுக்கு பதில் சொல்லணும். அதுக்கு பதிலா நீங்களே லைன் மேன், ஜே.இ., ஏ.ஈ., ஏ.டி.இ., இந்த வரிசைல கேள்வி கேட்டீங்கன்னா யார்கிட்டயாவது இருந்து உடனடியா பதில் கிடைக்கும்.’

வக்கீலுக்கு இந்த பதில் திருப்தியாக இருக்காது. எவ்ளோ பெரிய வக்கீல், கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை அதுவும் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு சாதா ஊழியர் என்று கடுப்பாவார். மறுநாள் இதை க்ரீவன்ஸ் செல்லுக்கு அனுப்பிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்.

+++

சேர்மனாக ஞான தேசிகன் இருந்த காலத்தில் ஈ.பியில் ஒரு பெரிய மாறுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே கஸ்டமர்கள் தொடர்பு கொள்ள என்று சப் ஸ்டேஷன் காண்டாக்ட் நம்பர்கள் பரவலாக மக்களிடம் சேர்த்திருந்தாலும், கஸ்டமர் கேர் மேம்பாடு என்று லைன் மேனில் ஆரம்பித்து சி.இ வரைக்கும் சகட்டு மேனிக்கு எல்லார் போன் நம்பரையும் அச்சிட்டு விநியோகம் செய்து விட்டார்கள். ராத்திரி ரெண்டு மணிக்கு கரண்ட் போனால் சுத்திக்கொண்டிருந்த ஃபேன் முழுவதுமாக நிற்பதற்கு முன்பாக 20 பேர் இ.பிக்கு ஃபோன் அடிக்கிறார்கள். ப்ரச்னை என்னவென்றால் விநியோகிக்கப்பட்ட நம்பர்கள் கஸ்டமர் கேர் நம்பர்கள் அல்ல... எந்த ப்ரச்னைக்காக அழைப்புகள் வருகின்றனவோ, அதை சரிசெய்ய ஃபீல்டில் வேலை செய்யும் ஆட்களுடையவை. நான்காவது கால் வரும்போது லைன் மேன் ஏற்கனவே கம்பத்தில் இருப்பார். கீழேயே ஜே.இயும். இவர்கள் ப்ரச்னையை சரி செய்யும் முனைப்பில் அழைப்பை எடுக்காமல் இருந்தால் போதும் நம்ம வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அவ்வளவு திமிரா என்று நேராக ஈ.ஈயை கூப்பிடுவார்கள்.

+++

இன்று ஃபேஸ்புக்கில் படித்த உண்மை சம்பவம்:

மின் கன்ஸ்யூமரான ஒரு ஃபேஸ்புக் பதிவர் ஈ.ஈயை கூப்பிடுகிறார்.

ஏற்கனவே இந்த கன்ஸ்யூமர் தன்னை கூப்பிட்டு இருக்கிறார், எடுத்தவுடனேயே ஈ.ஈயை கூப்பிடுதுதான் அவர் வாடிக்கையோ எனும் எண்ணத்தில் கன்ஸ்யூமர் ஃப்யூஸ் கால் ஆஃபிஸ், ஏ.இ.இ ஆகியவர்களை ஏற்கனவே அணுகினாரா என்று தன் நியாயமான சந்தேகத்தை கேட்கிறார்.

அவர்களை கூப்பிட்டு அவர்கள் பதில் சொல்லவில்லை என்பதால் தான் ஈ.ஈஐ கூப்பிட நேரிட்டதாக கன்ஸ்யூமர் பதில் சொல்கிறார்.

சரி என்று பவர்கட் ப்ரச்னை எதனால் என்பதை ஈ.ஈ. விளக்குகிறார்.

அதற்குள் ஃப்யூஸ் கால், ஏ.இ.இ போன்ற அடுக்குமுறை ஈ.பி நிர்வாகம் சம்பந்தப்பட்டது. அந்த அடுக்கில் வரிசையாக அழைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது. கஸ்டமர் இஸ் கிங் எனவே யாரை கூப்பிட்டாலும் பதில் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை கன்ஸ்யூமர் ஈ.ஈயிடம் வலியுருத்துகிறார்.

தாம் வேலையாக இருக்கும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட விவாதம் அவசியமா எனும் ஈ.ஈயின் பதில் வாடிக்கையாளரை கோபப்படுத்துகிறது. இன்னும் 10 நிமிடத்தில் தான் ’பொறுப்பில்லாமல்’ பேசியதற்கு ஈ.ஈ வருத்தப்பட வேண்டியிருக்கும் என்றும்  இதற்கு முன்பு அங்கு ஈ.ஈயாக இருந்து மாற்றலாகி போனவரிடம் விசாரித்தால் தான் யார் என்று தெரியும் என்றும் ஈ.பி சேர்மன்வரை இதை தான் கொண்டு போகப் போவதாகவும் ஈ ஈயிடம் போனிலேயே சவால் விட்ட் போனை வைக்கிறார்.

பேக்ரவுண்டில் என்ன நடந்தது என்று நமக்கு சொல்லப்படுவதில்லை. ஆனால் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஈ.ஈயில் ஆரம்பித்து ஏகப்பட்ட பேர் போன் செய்து தவறுக்கு வருந்துகிறார்கள். மனைவிக்கு கணவரை நினைத்து பெருமிதம். பேக்ரவுண்டில் கன்ஸ்யூமர் செய்த மேஜிக் என்ன என்று மனைவி ஆர்வமாக கேட்கிறார்.

தான் இந்த ப்ரச்னையை இத்தோடு விடப்போவதில்லை என்றும் ஈ.பி சேர்மனை சந்தித்து எழுத்து பூர்வமாக இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டபின்பே அனைவருக்கும் இதை பரவலாக சொல்லப் போவதாகவும் கன்ஸ்யூமர் சொல்வதோடு பதிவு முடிகிறது.

+++

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு தரமான சேவை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே. நியாயமற்ற சேவைக் குறைபாட்டை களைய முயற்சிப்பதும் நியாயமே. ஆனால் சிறிய அசௌகரியங்களுக்கு எல்லாம் உடனடியாக ஜனாதிபதியை அழைப்பதற்கு முன்பு கொஞ்சம் பொறுமையாக அடுத்த பக்கமும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களுடன் பேச முயற்சிக்கலாம்.

அவர்கள் கரண்டை கெபாசிட்டருக்குள் ஒளித்து தங்கள் வீட்டுக்கு கொண்டு பதுக்கவில்லை, அவர்களும் ப்ரச்னையை சரி செய்யும் முயற்சியில்தான் இருப்பார்கள் என்று அவர்கள் ப்ரச்னையை திறந்த மனதுடன் அணுக முயற்சிக்கலாம்.

ரூல் புக்கை கையில் வைத்துக்கொண்டு சேர்மனுக்கு பெட்டிஷன் போடுவதால் உடனடியாக ஈ.ஈயை வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள் என்பதில்லை.  சேர்மன் அலுவலகத்தில் சீஃப் பி.ஆர்.ஓ என்று ஈ.ஈ. கேடரில் இருக்கும் ஒரு அதிகாரி இந்த ஈ.ஈயிடம் விளக்கம் கேட்பார். ஈ.ஈ. மிகப்பெரிய ப்ரச்னைக்கு தீர்வு காணும் வேளையில் இடையில் வந்த தொலைபேசி அழைப்புக்கு தன்னால் சரியாக பேச முடியவில்லை என்று தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு  கன்ஸ்யூமருக்கு கர்டஸி விளக்கம் ஒன்று அனுப்பப்படும். கன்ஸ்யூமர் சொந்தங்களிடமும், ஃபேஸ்புக்கிலும் அதை வெளியிட்டு விழிப்புணர்வூட்டி அடுத்த பவர் அவுட்டேஜின் போது 20 பேருக்கு பதில் 60 பேர் அழைக்க ஏற்பாடு செய்யலாம்.

அடுத்த பவர் அவுட்டேஜின் போது ஈ..ஈ ஃபோன் எடுக்க மாட்டார்

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

மாதொருபாகன் - செலக்டிவ் அறச்சீற்றம்


திராவிட திம்மி யுவகிருஷ்ணா 247வது தடவையாக பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை முன்னிட்டு செலக்டிவ் அறச்சீற்றம் கொஞ்ச நேரம் கொண்டு பின்பு தனது அந்த அறச்சீற்றத்துக்கு எதிராகவே மீண்டும் ஒரு அறச்சீற்றம் அடைந்திருக்கிறார். 

"இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை" என்ற முன்னறிவிப்போடு ஆரம்பிக்கிறது அவரது கட்டு உரை. இருந்தாலும் காலையில் எழுந்து வேறு கடமை செய்கிறோமோ இல்லையோ அறச்சீற்ற‌ கடமையை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் தனது கட்டுக்கு உரை கழட்டுகிறார்.

முதலில் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வருகிறது . என்ன புத்தகம், எதற்கு எரிக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது... ம.க.இ.க, திராவிடர் கழக தோழர்களோ, இஸ்லாமிய நண்பர்களோ எரித்திருந்தால் கோபம் வந்திருக்காது, ஆனால் மதவெறியர்கள் எனும்போது கோபம் ஆட்டோமேட்டிக்காக குபீரென்று  கொப்பளித்துக்கொண்டு வருவது பழக்கமாகிவிட்டதால், ‘மாதொருபாகன்’ நாவலுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கும் ஆதரவான இயக்கங்களில் பங்குகொள்ள தயாராக இருப்பதாக சில நண்பர்களிடம் கிருஷ்ன நாயக்கர்  வாக்கு வேறு கொடுத்து விடுகிறார்.

போராட்டத்துக்கு போவதற்காக கருப்பு சிவப்பு சட்டை அயர்ன் செய்ய கொடுக்கிறார். அயர்ன் வண்டிக்காரர் லேட் செய்துவிட அந்த கேப்பில் அந்நாவலின் 'objectionable content' என்னவென்பதை ஒரு நண்பர் முகநூலில் இட்டுவிடுகிறார். அதாவது மொத்த நாவலில் ஒரே ஒரு பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டு வலையேற்றப்படுகிறது. புதிய தலைமுறையில் பக்கம் பக்கமாக "ஆராய்ச்சி" கட்டுரை எழுதும் பழக்கம் கொண்ட கட்டுரையாளருக்கு இந்த ஒரு பக்கமே போதுமானதாக இருக்கிறது, தனது ஆதரவை முற்றிலுமாக ‘வாபஸ்’ வாங்கிக்கொள்ள... இனி அவர் வார்த்தைகளில் -

அறச்சீற்றம் ஏன் வாபஸ் - "அந்த இரு பக்கங்களையும் வாசித்தபோது திருச்செங்கோடுவாழ் நண்பர்களுக்கு எவ்வளவு கோபமும், வன்மமும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது" (2024 வாக்கில் எதாவது விஷயத்துக்கு என்னவாவது ஆதாயம் கிடைக்கலாம் என்பதால் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்)

செலக்டிவ் கருத்து சுதந்திரம்  -
"ஆதாரமில்லாமல் வாய்வழியாக சொல்லப்படுகிற ஒரு கதையை, இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்யப்படும்போது அது வரலாறாக நம்பப்பட்டு விடுகிற ஆபத்து இருக்கிறது." (ஆனால் திராவிட இயக்க 'தலைவர்கள்' சொல்லும் கட்டு கதையெல்லாம் வரலாறாக நம்பி பரப்புவது அன்னாரது வாழ்க்கையில் முக்கிய கடமை)

புனைவு குறித்து  -
"ஆதாரமற்ற அவதூறுகளை முற்போக்கின் பெயரால் ஆதரிக்க முடியாது. ‘தேவடியா பையா’ என்று திட்டினால் முற்போக்காளனாக இருந்தாலும், அவனுக்கும் கோபம் வருவதுதானே யதார்த்தம்?" (பார்ப்பான், பாப்பாத்திகளுக்கு இது பொருந்தாது என்பதை திரா விட‌ அடி மட்ட‌ உறுப்பு இனர் சொல்ல மறந்துவிட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்)

மாதொருபாகன் நாவலில் சித்தரிக்கப்படும் தேர் மயிலாப்பூர் தேர் என்றும் இதில் வரும் இனக்குழு பார்ப்பனர்கள் என்று மட்டும் சித்தரித்திருக்கப் பட்டிருந்தால் யுவகிருஷ்ணாக்கள், "நண்பர்களுக்கு" ஏற்படும் உணர்வுகளை பற்றியோ, நாவல் பேசும் "அவதூறு" பற்றியோ கவலைப்படாமல் இலக்கியத்தின் மொழி சுதந்திரத்துக்காகவும் கட்டற்ற கருத்து சுதந்திரத்துக்காகவும் நிபந்தனையற்ற அறச்சீற்றம் கொள்வார்கள். வேறு எந்த ஜாதி உணர்வு புண்பட்டாலும் செலக்டிவ் அறச்சீற்றம்தான்...

தொடர்புடைய வார்த்தைகள் தொட்டி - http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html

 

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

தமிழன் ஏன் இலக்கியம் வாங்குவதில்லை?


நான் எனக்கு மிகவும் பரிச்சயமான எங்கள் குடும்பத்தின் - சொந்தக்கார குடும்பங்கள் உட்பட்ட - புத்தக வாசிப்பு பழக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எங்கள் வீட்டிற்கு தினசரி ஒரு தமிழ் பேப்பர், இதழ் தவறாமல் தொடர்ந்து விகடன், குமுதம், ராணிமுத்து, மாலைமதி, கோகுலம் மற்றும் பூந்தளிர். எனக்கு கொஞ்சம் அதிகமாக நினைவு தெரிந்தவுடன் தொடர்ந்து ராணி காமிக்ஸ். பாக்கெட் நாவலில் தவறாமல் பிகேபி, ராஜேஷ் குமார், சுபா, பாலகுமாரன், சுஜாதா. சில‌ மாதங்களுக்கு ஒரு முறை பழைய பேப்பர்காரனிடம் கணிசமான தொகை தேறும் அளவுக்கு வீட்டில் புத்தக வாங்கல் இருந்து கொண்டே இருக்கும். 

எங்கள் நெருங்கிய சொந்தக்காரர்களை பொறுத்த வரை, இருவர் வீட்டில் வாரம் ஒரே ஒரு புத்தகம் - விகடன் அல்லது குமுதம் எதாவது ஒன்று மட்டும் - வாங்கி வந்தார்கள். ஒருவர் வீட்டில் மாதமொரு முறை புத்தகம் ஏதோ ஒன்று வாங்குவார்கள்.  இருவர் வீட்டில் எந்த புத்தகமும் வாங்குவதில்லை. ஆக என்னை பொறுத்த வரை, எங்கள் குடும்பம், எங்கள் சொந்தக்கார குடும்பங்களோடு ஒப்பிட்டால், சராசரிக்கு மேல் புத்தகம் வாசிப்பு உள்ள‌ குடும்பம். உங்களை பொறுத்து சற்று முன்னே பின்னேவும் இருக்கலாம்.

அப்போதெல்லாம் வாராந்திர/மாதாந்திர‌ புத்தகங்களில் எதாவது ஒரு தொடர்கதையாவது மிகவும் சுவாரசியமாக, புத்தக வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் அளவு, இருக்கும். அதையெல்லாம் கிழித்து பைண்ட் செய்து பின்னர் மீண்டும் முழு புத்தகமாக படிப்போம்.

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 1:  தமிழன் மீண்டும் படிக்க தூண்டும் அளவு சேமிக்க ஒர்த் ஆன இலக்கியமே வாங்குவான்.

நான் சென்னையில் ஒண்டிக்கட்டை குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கையில் மேன்ஷனில் எல்லாவிதமான புத்தகங்களும் புழக்கத்தில் இருக்கும். ஆனால் அவை புத்தக சந்தையில் விற்பனைக்கு வராத வகையிலான‌.தனி இலக்கியம்.  வேலை பார்த்தது என்னவோ ஐ.டி கம்பெனிதான் என்றாலும் உருப்படாத கன்சர்வேடிவ் சென்னையில் ஃபிகர் பார்க்க வேண்டுமென்றால் ஸ்பென்சர்ஸ் வரைக்கும் போக வேண்டும். ஆகவே வாரா வாரம் வெள்ளிக்கிழமையில் மதிய வாக்கிலேயே அலுவகலத்தில் இருந்து கிளம்பி  ஸ்பென்சர்ஸ் போவேன். அப்படியான ஒரு வெள்ளிக்கிழமையில் ஸ்பென்சர்ஸ் விட்டு வெளியே வரும்போது எதிரே காயிதே மில்லத் கல்லூரியில் புத்தக கண்காட்சி. அது பெண்கள் கல்லூரி. கல்லூரிக்கு அது விடுமுறை காலம் என்றாலும் அதற்கு முன் பெண்கள் மட்டும் கல்லூரி பார்த்ததில்லை என்பதால் அது எப்படித்தான் இருக்கும், அவர்களும் பெஞ்ச் மரம் போன்றவற்றில் ஆட்டின் அம்பு கல்வெட்டு எல்லாம் பொறிப்பார்களா என்ற ஆர்வ‌ குறுகுறுப்பில் காலேஜ் பார்க்கவென்று போனதுதான் முதல் புத்தக கண்காட்சி. அந்த காலகட்டத்தில் நான் போன அன்று மொத்த கண்காட்சிக்குமே மிஞ்சி போனால் வாசகர்கள்/பார்வையாளர்கள் என்று ஒரு 30-40 பேர் இருந்திருப்போம். அவ்வளவு பெரிய மைதானம் காத்தாடியது,

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 2:  தற்போதைய ஜனவரி புத்தக கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கில் வாசகர்கள் வருகிறார்கள். பெரிய பைகளில் வாங்கி போகிறார்கள். இருந்தும் எல்லா எழுத்தாளர்களும்/பதிப்பாளர்களும் சொல்வது - புத்தகங்கள் வெறும் ஆயிரங்களில்தான் விற்கின்றன. என்னதான் நடக்கிறது?

உள்ளே சென்றவன், அவ்வளவு புத்தகங்கள் ஒரே இடத்தில் பார்க்க கிடைத்த மகிழ்ச்சியில் பல மணிநேரங்கள் பொறுமையாக செலவிட்டு ஏழெட்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்தேன். என்னவென்று இப்போது துல்லியமாக ஞாபகம் இல்லை, ஆனால் அநேகமாக புத்தக பின்னட்டையின் அறிமுகத்தால் ஈர்க்கப்பட்டு வாங்கிய பரிச்சயமில்லாதவர்கள் எழுதிய நான் ஃபிக்சன்கள் ஒரு பாதியும் மற்ற பாதி சுஜாதா போன்ற மிகவும் பரிச்சயமான பெயர்கள் எழுதிய தொகுப்பு புத்தகங்களும்தான் என்று நினைவு.

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 3:  இந்த ப்ரச்னை இன்றளவும் இருக்கிறது. வாரந்திர புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ள ஒரு சராசரி வாசக‌ருக்கு அந்த வாரந்திர புத்தகங்கள் மூலம் அறிமுகமாகும் எழுத்தாளர்கள் தவிர்த்து மற்ற எழுத்தாளர்கள் பற்றியோ, புத்தகங்கள் குறித்தோ சரியான‌ அறிமுகம் கிடைப்பதில்லை

ஆர்வ மிகுதியில் வாங்கினாலும் ரூமுக்கு வந்ததும்தான் உரைத்தது புத்தகங்களில் விலை. அன்று விகடன் போன்றவை ஐந்து ரூபாய். நான் வாங்கிய புத்தகங்களின் சராசரி விலை 40-50 ரூ வரை. ஒரு புத்தகம் வாங்கும் விலையில் 10 விகடன் வாங்கலாமே என்றுதான் சராசரி மனம் கணக்கு போட்டது. இத்தனைக்கும் அப்போது நான் பேச்சு இலர் ஆவதற்கு முந்தைய காலகட்ட பேச்சிலர். குடும்ப சுமை என்று எதுவும் இல்லை. மேலும் வாங்கி வந்த புத்தகங்களை ஒரு முறை படித்த பிற்பாடு சேமிக்கும் அளவு - சிலவற்றை ஒரு முறை முழுதும் படிக்கும் அளவு கூட -  ஒர்த் என்று தோன்றாவிட்டால், அவற்றை தூக்கி போடும்போது என்னவோ காசை கரியாக்குவதாக தோன்றும். பட்டாசு வாங்கும்போதோ, பப்புக்கு போகும்போதோ கூடத்தான் காசை கரியாக்குகிறோம் என்றாலும் அதில் இருக்கும் சந்தோஷங்கள் அளவு புத்தகங்களில் கிடைக்கிறதா என்பதை சராசரி வாசக மனத்தால் நினைத்தால் புரியும்.

முன்னாலேயே ஒரு பின் குறிப்பு 4: விலை என்பது ஒரு மிக முக்கிய காரணி. சராசரியாக டேக் ஹோம் சம்பளமாக 20,000 வாங்கும் ஒரு வாசகனுக்கு 1000 ரூபாய் என்பது அவன் மாத சம்பளத்தில் 5%. ஒரே ஒரு புத்தகத்துக்கு தன் சம்பளத்தின் 5%ஐ செலவு செய்யும் அவன் அந்த புத்தகம் தரும் அனுபவ வொர்தினஸ் குறித்து யோசிப்பான். சராசரி டேக் ஹோம் 20,000ம் எத்தனை பேர் வாங்குகிறார்கள், வாசகர்களுக்கு இருக்கும் இதர குடும்ப செலவுகள் என்ன என்பது மாதிரி இன்னும் 48 காரணிகள் கொண்டு யோசிக்க வேண்டியது புத்தகத்தில் விலை.

எனக்கு இணையம் பரிச்சயமில்லாத காலகட்டங்களில் என்ன விதமான புத்தகங்கள் எப்படி வாங்கினேன்:
குமுதம், விகடன் போன்றவற்றில் செய்யப்படும் புத்தக அறிமுகங்கள் - அதிக பட்சம் 10 வரிகள் - எதாவது ஈர்த்தால் அவற்றை வாங்க முயற்சிப்பேன். சில சமயம் தொலைபேசி எண்கள் இருக்கும், தொலை பேசி அவர்கள் முகவரி வாங்கி நேரில் போய் வாங்கியிருக்கிறேன். அப்படி சென்னையின் பல பப்ளிஷர்கள் இடங்களுக்கு போயிருக்கிறேன். சில இடங்களில் புத்தக பைண்டிங் நடந்து கொண்டிருக்கும், ஈரம் காயாத புத்தகம் வாங்கியிருக்கிறேன். பக்கத்து வீடு கூட அறியாத ஒண்டு குடித்தன வீட்டின் மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்த நுரையின் கையோடு 'கருப்பு பிரதிகள்' பதிப்பக தோழரிடமிருந்து ஷோபா சக்தியின் 'ம்' வாங்கினேன். இன்று எல்லா புத்தகங்களும் எல்லா வெளியீட்டாளர்களும் புத்தக சந்தையில் கடை பரப்புகிறார்கள். ஆனால் புத்தக அறிமுகம்?

ஏகப்பட்ட ப்ரச்னைகள் இருந்தாலும் புத்தக சந்தை தவிர்த்து பார்த்தால் வருடம் 11.5 மாதங்கள் சரியான புத்தகக் கடைகள் இல்லாமை ஒரு பெரிய குறை: கண்ணுக்கெட்டும் (அதிக பட்சம் 6.5 அடிக்கு மேல் புத்தகங்கள் இருந்தால் பாவம்) அதிக பட்ச உயரத்தில் துறை வாரியான பிரிவில் அடுக்கி வைக்கப்பட்டு  நல்ல வெளிச்சத்தில் வாங்கத்தூண்டும் வகையில் ப்ரசென்டேஷன் செய்யப்பட்டிருக்கும் தமிழ் புத்தக கடை தமிழகத்தில் எனக்கு தெரிந்து இல்லை. ஆறு அடி உயரம் இருக்கும் நான் கையை உயர மேலே தூக்கி எடுக்கும் அளவு உயரத்தில் புத்தகங்கள். ஒன்று எடுத்தால் நான்கு வரும் அளவு நெருக்கம். அழுது வடிந்து கொண்டு சோகையான வெளிச்சம் என்று ஒரு புத்தக கடை எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ, அப்படி இருக்கின்றன கடைகள்.

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் புதிய புத்தகங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கில் எழுத்தாளர்கள் வருகிறார்கள். ஆனால் யாரை எதற்காக‌ வாங்குவது?

விகடன் தனது பெயராலும், தனது வெளியீடுகளுக்கு தனது வார இதழ்களில் நல்ல விளம்பரம் தருவதாலும் விகடன் ஸ்டால்களில் கூட்டம் சேர்கிறது. டிவியில் பிரபலாமானால் நல்ல பரிச்சயம் மற்றும் விற்பனை கிடைக்கும். கோபிநாத் ஏகப்பட்ட பேருக்கு ஆதர்ச இண்ஸ்பிரேஷன் குரு. சிவகார்த்திகேயன் புத்தகம் வெளியிட்டால் லட்சக்கணக்கில் விற்கும். மற்றபடி வெகுஜன இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களின் பெயர்கள் - வாசகர்களை கவரும் படி எழுதினால் - வாசகர்களிடம் ப‌ரிச்சயமாகிறது.  மற்ற எல்லாரும் கூட்டத்தில் ஒருவர்தான்.  இணையத்தில் (மட்டுமே ஒரு சிறு வட்டத்தில்) பிரபலமான பெயர்களான‌ ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா யாரையும், வாரம் தவறாமல் வெகுஜன இதழ்கள் படிக்கும், தவறாமல் தொலைக்காட்சி பார்க்கும் எனது சொந்தக்காரர்கள் ஒருவருக்கும் தெரியவில்லை.

இணையம் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் தவிர்த்த ஏனையோரை போய்ச்சேரவேயில்லை. எனக்கு தெரிந்து 50 வயதுக்கு மேற்பட்ட நிறைய படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் யாரிடமும் இணையச்சேவை இல்லை. இவர்கள்தான் லைஃபில் ஓரளவு செட்டிலாகி, மாத செலவு குறைந்து, புத்தகங்கள் வாங்கக்கூடிய வசதியுள்ள டார்கெட் வாசகர்கள். ஆனால் இவர்களிடம் புத்தகங்களோ, எழுத்தாளர்களோ ஒழுங்காக அறிமுகவாவதில்லை. அதற்கு காரணம் இவர்கள்தான், இவர்களுக்கு தன்னை தேடி அடையும் ஆர்வம் இல்லை என்று கர்வம் பிடித்த இலக்கியகர்த்தாக்கள்
ஆணவப்பேச்சு பேசுவார்களே ஒழிய அவர்களை சேரும் வழியை அடைய மாட்டார்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு பெரிய செருப்பு நிறுவனம், இரண்டு மார்கெடிங் ஆட்க‌ளை பழங்குடியினர் வசிக்கும் ஒரு தீவுக்கு சென்று சர்வே எடுத்து வர சொன்னது. வந்தவர்களில் ஒருவன் சொன்னான், அந்த தீவில் வசிக்கும் ஒருவருக்கும் செருப்பு அணியும் பழக்கம் இல்லை. அங்கே கடை பரப்பினால் நமக்கு பிழைப்பு ஓடாது, நஷ்டம்தான் வரும், ஆகவே முயற்சி செய்ய தேவையில்லை. இரண்டாமவன் சொன்னான், அந்த தீவில் வசிக்கும் ஒருவருக்கும் செருப்பு அணியும் பழக்கம் இல்லை. நாம் மட்டும் செருப்பு அணிவதன் பயன்களை சரியான முறையில் எடுத்து சொன்னால் நாம்தான் முண்ணனி செருப்பு நிறுவனம், முழு மார்கெட்டும் நம் கையில், ஆகவே உடனே முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் புத்தக சந்தை என்பது மிகப் பெரிய பொடன்ஷியல் உள்ள மாபெரும் சந்தை. வாசகர்களை  குறை சொல்லிக்கொண்டு கண்ணை மூடி இருக்கும் முதல்வகை மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்ஸ் கைகளில் இருந்து ஆப்பர்ச்சூனிட்டீஸை சரியாக பயன்படுத்திகொள்ள முனையும் இரண்டாம் வகைக்கு சந்தை மாறும்போது தமிழன் நிறைய‌ இலக்கியம் வாங்குவான். அதற்கு முன் இலக்கியவாதிகள் இலக்கியம் என்றால் என்ன என்பதை வரையரை செய்துகொள்ள வேண்டியது  முக்கியம்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சாரு, அவந்திகா மற்றும் ரஞ்சிதா


கேடு கெட்ட ஈன ஜென்மம் என்ற வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக கேட்டிருப்போம்.. ஆனால் ரத்தமும் சதையுமாக அப்படிப்பட்ட ஒரு ஜென்மம் நம்மிடையே உலவுகிறது என்பதை இன்று சாரு நிவேதிதா என்ற பெயரில் எழுதும் டிஷ்யு பேப்பர் எழுத்தாளன் நிரூபித்திருக்கிறான்.



எத்தனையோ லட்சக் கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு தான் துரோகம் செய்கிறோம் என்று அந்த நடிகைக்குத் தெரியாதா? என்று இன்று வியாக்கானம் பேசும் இந்த புடுங்கிதான் கடவுளை கண்டேன் என்று - அவர் எங்கேயோ இருக்க தான் கடலூரில் காரில் கடக்கும்போது கண்டேன் ; அவர் எங்கேயோ இருக்க ரிமோட் மோடில் ஆபரேஷன் செய்து வியாதியஸ்தர்கள் சொஸ்தமடையக்கண்டேன் ; அவர் ஆசீர்வாதம் செய்து தொட்டவுடன் தனக்கும் தன் மனைவிக்கும் மூட்டு வலி முடவாதம் நீங்கி பரிபூரண ஆரோக்கியமடையக்கண்டேன் என்று அந்த சாமியாரிடம் வாங்கிய காசுக்கு மேல் கண்டபடி கூவிக்கூவி தன்னை(யும் ஒரு ஆதர்ச எழுத்தாளன் என்று) நம்பிய லட்சக்கணக்கான... சரி சரி பத்துக்கணக்கான வாசகர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தான்.. அப்போது இவனுக்கு என்ன தண்டனை தருவது....

எது ஆன்மீக நம்பிக்கை... நாள்பட தெரு சந்துக்கு சந்து ஒருத்தன் சாமியார் வேஷம் போடுவான். அவன் பின்னால் கேள்வி கேட்காமல் போனால் அது ஆன்மீக நம்பிக்கையா? நித்தியானந்தா ஒரு கார்ப்பரேட் சாமியார்... எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, நாம் வயிறு வளர்க்க காசு கிடைக்கிறதே என்பதற்காக சகமனிதர்கள் பற்றிய நேயமே இல்லாமல் பூனை பெயரில் ஒளிந்து கொண்டு நடிகைகளை பற்றி தினமலரில் கிசுகிசு எழுதி வாழ்ந்தானே ஒரு அறிவழகன்... அவனை போலவே காசுக்காக காவி கட்டியவந்தான் ராஜசேகரனும் என்பதாக வைத்துக்கொள்வோம்... அவனை கடவுளாக பார்ப்பதோ, மனிதனாக பார்ப்பதோ, காதலனாக பார்ப்பதோ அவரவர் சவுகரியம்... அவனுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருந்ததற்காக அதையே உலகம் முழுக்க இருக்கும் ஆண்களோடும் அவர் செய்ய வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உனக்கு என்ன உரிமையோ அதிகாரமோ இருக்கிறது.. அப்போ, நித்தி மேட்டர் வெளிவந்த பின்பும் நீ எதுவும் பேச இயலா சொம்பு நிலைக்கு உன்னை ஆளாக்கி அந்த ஆசிரமத்தில் இருந்த அவந்திகா அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்தால்? இதுநாள் வரை சாமான் சிறுத்த (இதுவும் அவனே எழுதியதுதான்.. பெரிய புடுங்கி என்று காலம் காலமாக அடித்த பீத்தல் எல்லாம் ஒரு கைகலப்பின் போது வெளியே தெரிய வேறு வழியில்லாமல்) தான் ஊர் ஊருக்கு சைபர் செக்ஸுக்கு அலையும் போது மனைவியை மட்டும் சாமியாரினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து பாதுகாக்க தெரியும் சுயநலத்தில் கொஞ்சமே கொஞ்சம் தன் எழுத்தால் பாதிக்கப்படும் மற்ற பெண்கள் மீதும் வைக்கக்கூடாது?

எல்லா கார்ப்பரேட் சாமியார்களைப்போலவும் நித்தியானந்தாவும் ஒருவன். அபரிமிதமான காசு சேர்ந்தவுடன் வழக்கமாக ஏற்படும் பங்கு பிரித்தலின் போது பாகம் சரியாக கிடைக்காத ஒரு சக சாமியாரும் அவிர்ப்பாகம் சரியாக கிடைக்காத உயர்மட்ட சாமிகளும் கூட்டு சேர்ந்த்ததில் அவன் வேஷம் கலைந்தது... வேறு வழியில்லாமல் சந்தனக்கட்டை வெங்காய மட்டை என்று பலவிதமான கேஸ் அவன் மீது சுமத்தப்பட்டாலும் அந்த அறைக்குள் அவனுக்கும் நடிகைக்கும் இடையில் இருவரின் ஒப்புதலோடு காசுக்காக அல்லாமல் - இதை நிரூபிக்க முடியாது - சுய விருப்பத்தின் பேரில் நடந்த தனிப்பட்ட விஷயங்கள் கேஸ் போடுமளவிற்கு சட்ட ரீதியாக வலுவில்லாதவை... அதை வேசித்தனம் என்று சொல்ல முடியுமா? அதுவும் பொதுநலன் குறித்து கொஞ்சமும் அக்கரைப்படாமல் டிஆர்பி ரேட்டிங்காக ரிப்பீட் போட்ட டிவி, காசு வாங்கிக்கொண்டு லாகின் செய்து போர்னோ காட்டிய பத்திரிக்கை, சாமியாரிடம் வாங்கிய காசு செரிக்கும் முன்பே வார இதழ் கொடுத்த காசுக்கு அந்தர் பல்டி அடித்த எழுத்தாளன் போன்றவர்களின் பெருவேசித்தனங்களுக்கு முன்னால்?


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II


முன்பொரு காலத்தில் தன்னைத்தானே எழுதிக்கொண்ட ஒரு சிறுகதையின் மிச்சம்.

....

என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை... அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய. ஆனால்... நானாக தொடர்பு கொள்ள செய்த முயற்சி எல்லாவற்றிலும் என் குரல் கேட்டவுடன் எதிர்முனையில் வெறும் மௌனம்தான் கேட்கும்.

"ஏண்டா.. என்ன திடீர்னு வந்துட்ட.. திரும்பி வேலைக்கும் போகல?"

"ஆமா, என்ன பெரிய வேலை. எனக்கு பிடிக்கல..."

மூணு வாரங்கள் அப்படியே போனது. ரயில்வே ஸ்டேஷன் ஜமாவில் டேவிட் மட்டும்தான் கவனித்தான்.

"என்னடா, எப்பவும் நாளைக்கு நாலு தம்முக்கு மேல அடிக்க மாட்ட, இன்னிக்கி என்ன.. வந்து ஒன் அவர் ஆகல அதுக்குள்ள ஒரு பாக்கெட் காலி. அதுவுமில்லாம எப்பவும் எவனையாவது தாளிச்சிகிட்டே இருப்ப.. ரெண்டு நாளா கம்முன்னே இருக்க.. என்ன மேட்டரு"

இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அவளுக்கு பிடிக்காது.

"ஒண்ணுமில்லடா"

"என்ன அந்த பொண்ணு மேட்டரா?"

நிமிர்ந்து பார்த்தேன்.

"எல்லாம் குத்துமதிப்பா யூகிச்சி வச்சிட்டோம்டா.. நீயா என்னிக்காவது சொல்லுவன்னு வெயிட் பண்ணோம். என்ன ஆச்சு திடீர்னு"

"தெரியில..."

"...."

"...."

"சரி விடு. சும்மா நீ என் ஃப்ரண்டுன்னு இத சொல்றேன்னு நினைக்காத.. சீரியஸா சொல்றேன். அவளுக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்... வேலைய பாரு"

கோயமுத்தூர் ரூம்மேட்டுக்கு ஃபோன் செய்து அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்த என் சமாச்சாரங்களை அடுத்த முறை அவன் ஊருக்கு வரும்போது வீட்டில் தந்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன். வந்தாரை வாழவைக்கும் ட்ரிப்ளிக்கேன் மேன்ஷனில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது.

சென்னையில் படிப்புக்காக பணம் பிரட்ட அலைந்தது, கிடைத்த வாய்ப்புக்கு பங்கம் வராமல் படித்தது அல்லது படிக்க முயற்சித்தது, பகலெல்லாம் பல்லவன் பல்லனாக வேலை தேடி அலைந்தது, பீச்சாங்கரையில் இரவு நேர நிலா ஒளி + மாமாக்கள் அறிவுரைகளுக்கு மத்தியில் தண்ணியடித்து நீந்தியது என்று ஓட்டி ஒரு வேலையில் உட்கார்ந்த போது ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது அவளை 'அகஸ்மாத்தாக' சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டது. அதற்கப்புறம் இரண்டு நாடுகள் மாறி இன்னுமொரு மூன்றாண்டுகள் கழித்து வெகேஷனில் ஊருக்கு போயிருந்த போது ஆங்காங்கே சிதறிப்போயிருந்த நண்பர்களை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்து சந்தித்த ஒரு மாலைப்பொழுதில் பேச்சுவாக்கில் டேவிட் கேட்டான்.

"ரயில்வே ஸ்டேஷன்ல நாம பேசினமே ஞாபகம் இருக்கா.. இப்ப நினைச்சா தமாஷா இருக்கு இல்ல"

"இல்ல..."

"இன்னுமா ஞாபகம் வச்சிருக்க"

"ஒரு ஓரமா.. ஆமா இப்ப அவள பத்தின டீடய்ல்ஸ் யார்ட்ட கிடைக்கும். அவ பழைய நம்பர்க்கு ஃபோன் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னு வருது"

"நம்ம மலையாளத்தான்கிட்ட இருக்கும். அவன் இப்ப பெங்களூர்ல இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல இருக்கான்"

*

"டேய்.. நாந்தாண்டா"

"சொல்லு.. எப்ப வந்த"

"அதெல்லாம் நேரில பேசிக்கலாம். நீ அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி மெட்ராஸ் வா"

பத்தரை மணிக்கு கால்டாக்ஸியில் மலையாளத்தான் வந்து இறங்கிய போதே பாதி பேர் மட்டையாகியிருந்தனர். அப்புறம் முதல் விமான பயணத்தின் பக்கத்து இருக்கை ஃபிகரிடம் நடந்த கடலை பற்றியெல்லாம் விவரித்துவிட்டு மலையாளத்தான் மலையேறிய போது மணி மூன்றரை. டேவிட் கேட்டான்.

"டேய், அந்த இன்ஸ்டிட்யூட்ல வேலை செஞ்சுதே ஒரு பொண்ணு.. ஞாபகம் இருக்கா.. நீ அவங்க ஃபேமிலி கூட எல்லாம் நல்லா பழக்கம் இல்ல"

"நல்லான்னு இல்ல.. ஓரளவு. அவங்கப்பா அவங்க ஆபிஸ் மேட்டர் எல்லாம் நம்ம கடையிலதான் ப்ரிண்டிங்கு கொடுப்பாரு.. அந்த பொண்ணு மேல இவனுக்கு ஒரு கண்ணு இல்ல"

"அதெல்லாம் கிடக்கட்டும், அவங்க இப்ப எங்க"

"அவங்க அப்பாவுக்கு அப்பவே வேலூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சிடா.. அதுக்கப்புறம் அவ்வளவா கான்டாக்ட் இல்ல"

"வேலூர் நம்பர் உங்கிட்ட இருக்கா"

"பெங்களூர்ல இருக்கு.. திங்கக்கிழம ஊருக்கு போனவுடனே போன் பண்ணி சொல்றேன்"

செவ்வாய்க்கிழமை வேலூர் நம்பருக்கு போன் செய்தபோது "இல்லீங்களே... ஆறுமாசமா இந்த நம்பர் எங்களுதுதான்.. அப்படி யாரும் தெரியாதுங்களே" என்றார்கள்.

நான் இந்தியாவில் இருந்து திரும்பிய இரு மாதங்களில் அவளுக்கு கல்யாணம் ஆனது என்ற செய்தியை பிறகு மலையாளத்தான் இ-மெயில் செய்தான்.

**

ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவுடன் லாங் வீக்கெண்டுக்காக நயாகராவுக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அருவி என்றவுடன் பழைய அருவிப்பயண கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர..

"அப்ப ஒரு தடவ சித்தப்பா ஃபேமிலியோட வந்தப்போ, எத்தனை தடவ இந்த அருவிய பாக்குறது எனக்கு போரடிக்குதுன்னு, நான் ஒகேனக்கலுக்கு வரலைன்னு சொல்லி சித்தப்பா ஏகத்துக்கும் அப்ஸெட் ஆயிடுச்சே.. அன்னிக்கி நான் வராததுக்கு காரணம் வேற...போக வேண்டாம்னு எல்லாம் அவ சொல்லல.. போகணுமான்னு கேட்டா, நான் தான் வரலன்னுட்டேன்"

"என்னங்க அம்மாவுக்கு முன்னாடியே இதெல்லாம் சொல்றீங்க"

"ஆமா.. ஏழு வருசம் ஆயிடுச்சி.. இனி என்ன.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. அதுவுமில்லாம அம்மாவுக்கும் அப்பவே அரசல் புரசலா தெரியும் ஏம்மா?"

"அரசல் புரசலா என்ன.. நல்லாவே தெரியும்... நீ கோயமுத்தூர் வேலைய விட்டுட்டு வந்தியே அதுக்கு ஒரு ரெண்டு நாள் முந்தி மிஷினுக்கு போயிட்டு திரும்பி வரும்போது இண்ஸ்டிட்யூட்ல அந்த பொண்ண பார்த்தேன். என்னன்னு இப்ப ஞாபகம் இல்ல, ஆனா அன்னிக்கி அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் பேசிட்டுதான் வந்தேன்..."




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

நாயின் கானம்


போன வார நடுநிசியில்
வயதான நாயொன்று
வசதியான இடத்திலிருந்து
கானமிசைக்க தொடங்கியது

நேற்று முளைத்த நாய்களெல்லாம்
வயதானதனை மதிப்பதில்லை
என வருத்தத்தோடுவொரு வகுளாபரணம்

தம்மினத்தின் குணம் காக்கும்
தனதிருப்பின் முக்கியத்தை
நாயுலகம் உணருவதில்லையென
உயிர்நிலையிலிருந்துவொரு முகாரி

உயிர்வாழ இரை தேடும்
இன்றியமையா இடைவெளியிலும்
இ(ம்)சையை பாட நேர்ந்த.தன் அவலத்தை
எண்ணிவொரு ஏமாவதி

எத்தனை வித கானங்கள் அதில்
எத்தனையெத்தனை விசயங்கள்
உணரா மர உலகை தனக்குள்ளே
நொந்துவொரு நடபைரவி

*

அவசரமாய் ஓடிவந்து
அதிவிரைவு பேருந்துக்கு
காத்திருந்த இடைவெளியில்
ஆரம்பித்தான் காலனிவாசி
"வாரமா அந்த நாயோட
ஊளை தாங்க முடியலில்ல?"




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

குடும்ப சண்டையும் பொதுமக்களும்




கொறிப்பு :: மேற்கண்ட படத்தொகுப்புக்கும் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், மாறன்ஸ், கருத்து "கனி"ப்பு, வாரிசு அரசியல், மதுரை வன்முரை ஆகிய எந்த *க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மறைமுகமாகவோ நேரடியாகவோ எதாவது நினைவுக்கு வந்து தொலைந்தால் சிபிஐ உட்பட எவரும் பொறுப்பல்ல.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா


I've been prime minister of this country for just over 10 years ... I think that's long enough for me, but more especially, for the country. - Tony Blair.

அடப்பாவி, நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

நீங்க என்ன எப்ப வீட்டுக்கு அனுப்பிச்சாலும் சந்தோசமா போறேன். உயிரில்லாத மொழிக்கு சேவை செய்வதில் மிச்ச காலத்த கழிச்சிக்கிறேன்னு அறிக்கை மேல அறிக்கையா, வெறும் அறிவிப்ப மட்டும் விட்டுட்டு கடேசி வரைக்கும் பதவிய கெட்டியா புடிச்சி பொளப்பு ஓட்ட தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

நார்த் இங்கிலாந்து ஒரு பையனுக்கு, சவுத் இங்கிலாந்து இன்னொரு பையனுக்கு, அயர்லாந்து அத்தை பசங்களுக்கு, மான்செஸ்டர் மகளுக்குன்னு குத்தகை போட்டு கொடுத்திட்டு அவனவன் பதவி வெறியில அடிச்சிகிட்டு அதுல அப்பாவிங்கள போட்டு தள்றத பாத்து அழுதுகிட்டே அரசாங்க பணத்த அள்ளித்தெளிச்சி அரசியல் பண்ண தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

எது எக்கேடு கெட்ட எனக்கென்ன, எனக்கு விழா எடுங்கன்னு முப்பதாவது பிறந்த நாளு, ஐம்பதாவது கல்யாண நாளுன்னு எதுனா விழா எடுத்து அதுக்கு காலிவுட்டு கோலிவுட்டு நடிகைங்கள மார்பு கச்சை இடுப்பு கச்சையோட மட்டும் ஆட விட்டுட்டு ஆறு மணிநேரம் ஆனாலும் அத தான் மட்டும் ஒக்காந்து ரசிக்கணுமின்னு நினைக்காம எலிக்கறி சாப்பிடுற பிச்சைக்கார வெத்து பசங்களோட பசியாத்த அத கஷ்டப்பட்டு மருமகனோட டிவியில இலவசமா ஒளிபரப்பி எண்டர்டெயின் பண்ணத்தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

பொறந்ததுல இருந்து அரசியல்வாதியா மட்டுமே இருந்துட்டேன். வேற ஒண்ணும் தெரியாது. மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச காலத்தையும் பதவி நாக்காலியில நிம்மதியா கழிச்சிட்டு போலாம்னு பாத்தா அதுக்கு விடாம வம்பு பண்ற தகுதி இல்லாதவங்களோட எல்லாம் அரசியல் பண்ண வேண்டியது இருக்கேன்னு பார்லிமெண்டுல முதலைக்கண்ணீர் வடிச்சிட்டு அதுக்காக எல்லாரும் உச்சு கொட்டுறத பாத்து சந்தோசமா பொழப்பு ஓட்டாம நீயெல்லாம் என்னடா அரசியல்வாதி...

*

ஹாய் டமிள் காமன் மக்கள்ஸ் :: நமீதா இடுப்பு அழகா இல்ல த்ரிஷா இடுப்பு அழகான்னு மட்டுமே கருத்து கணிப்பு போடாம வாரிசுங்க சம்பந்தப்பட்டதா இருந்தா போட வேணாமின்னு தலைவரு எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்காம யாரோ என்னமோ கருத்து கணிப்பு போட்டு என்னமோ ப்ரச்னையாமே. எழவு மூணு சாவுதான விழுந்திருக்கு. செத்தவன் எல்லாம் என்ன தமிழக தலையெழுத்தையே மாத்துற அளவு அரசியல்வாதியா.. அதான் அவனுங்க அப்பன் ஆத்தா ஆயுசுக்கும் பாக்காத அளவு ரெண்டு லச்ச ரூவாய மனுநீதி சோழன் தந்திட்டாரே,வாங்கிகிட்டு பேசாம போக வேண்டியதுதான.. அதுவும் இல்லாம மனுநீதி சோழரு சிபிஐ விசாரணைக்கும் லெட்டரு போட்டுட்டாரு. சிபிஐ விசாரணை செஞ்சி எப்படியும் பதினஞ்சி இருவது வருசத்துல என்ன ஏதுன்னு சொல்லலையின்னா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சிய கவுத்திடுவாரு.. அப்புறம் என்ன.. பொத்திகிட்டு போவீங்களா. அத வுட்டுட்டு இதயெல்லாம் ஒரு ப்ரச்னை பண்ணிகிட்டு.. வேற எதுனா உருப்படியான விசயம் இருந்தா பாருங்கப்பா... எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு... இங்கன லாஸ் ஏஞ்சலீஸ் ஜூவுல கடல் ஆமை ஒண்ணு ஆயிரம் வருசமா மூச்சு வுட்டுகிட்டு இருக்காம். அதுக்கு ஏன் இன்னும் நிர்வாகம் விழா கொண்டாடாம இருக்குன்னு விசாரிக்க போகோணும்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

*னவீணத்தூவ பதிவு எழுதுவது எப்படி


இதென்ன இப்படி ஒரு துவம்/இஸம் இருக்கிறதா? என்றெல்லாம் வியப்பு அடைந்தால் நீங்கள் இன்னும் பதிவுலக பச்சா என்று அர்த்தம். யு ஆர் ரீடைரக்டட்டு & ரீரௌட்ட்டு டு :: ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி?

வலையுலகுல இந்த துவமெல்லாம் சகஜமடா.. அப்படியே நமக்கு ஏத்த மாதிரி ஒரு துவம் இல்லையின்னா நாமளா அப்பிடியே ஒண்ணு கிரியேட் பண்றதுதான் அப்படீன்ற டைப்பா நீங்க, அப்டீன்னா கமான் ஜ்டார்ட் மீசிக்..

இடுகை போடுறது படுத்துக்கிட்டு போத்திக்கிறது மாதிரின்னா, இந்த மாரி துவம் பதிவுகள் சமைக்கிறது போத்திகிட்டு படுக்கிறது மாதிரி. பாக்க வித்தியாசம இருக்குமின்னாலும் சமாச்சார் என்னவோ ஒண்ணுதான்.. பாத்தா மலைப்பா இருந்தாலும் ஒரு தடவ சமைச்சா போதும், அப்புறம் "ஜஸ்ட் தோ மினிட்ஸ்" அளவு பழகிடும்.

*

அ) பிச்சி போடுதல். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது சப்பாத்தி சுடும் நேரத்தில் உங்கள் ரவுசு பொறுக்காமல் உங்களை அ(ம)டக்க ஒரு டெம்பரரி ரிலீப் காக்கா சப்பாத்தி உங்களிடம் தரப்படும். அந்த சப்பாத்தியை...

1. கொடுத்தவுடன் முழுங்கிவிட்டு ரீவியில் யம்மாடி ஆத்தாடி பாக்க போவேன்
2. நாய்க்கு கொடுத்துவிடுவேன்
3. அதை கண்ட மாதிரி பிச்சி போட்டுவிட்டு அதில் பொம்மை உருவங்கள் கண்டுபிடித்து பயர் இஞ்சின் மாதிரி ஒரு உருவம் தெரிந்தால் அதற்கு வேலை தருவதற்காக கார்ப்பெட்டில் மூச்சா போவேன்

ஆ) பிரிச்சி மேய்வது. . உம், பக்கார்டி என்ற வார்த்தையை பார்த்தால்...

1. ரம் ஞாபகம்
2. அப்படின்னா என்னா
3. பக்கா ஆருடி, பக்கு கார்டு, பக்கா காருடி, பக்க கரடி, பக்காரு டிங், பக்கா டிங்கரடிங்காலே என்றெல்லாம் எந்த ஒரு வார்த்தையும் ஒரே வார்த்தையாக தோன்றாமல் பல வார்த்தைகளாக பல்லிளித்து பரிமாணம் காண்பிக்கிறது.

இ) வார்த்தை தொடுத்தல். ங்கா என்று சொல்ல சொன்னால்...

1. வேற வேல இல்ல என்று தூங்க போவேன்
2. ங்கா என்று மட்டும் சொல்லிவிட்டு நாய்க்கு எத்தினி பல்லு என்று அது வாய நோண்டி எண்ணி பார்ப்பேன்
3. ங்கா, தங்கா, மங்கா, திங்கா, ஜும்பா, ஜும்பரிக்கி ஜுலூப்பா, ஜும்பாலகரி, ஜலபுலஜங்க்ஸ், ஜிங்கிரிஜிப்பிடி, ஜிலுஜிலுஜும்பா, ஜங்கரிஜம்பா என்று ரைமிங்காக வார்த்தைகள் பிடிப்பேன்.

ஈ) ரெட்டை கிளவி (கிழவி அல்ல) காதல். கந்த சஷ்டி கவசம் பாடக்கொடுத்தால்...

1. நாலி வரி பாடிவிட்டு முழுசா பாடுனதாக கத விட்டு அதுக்கு லஞ்சமா சாக்லேட் கேப்பேன்
2. இது ஆத்திக கடவுளுக்காக அகண்ட வெளியிலந்து வந்த பாப்பான் எளுதுனது. இங்கயே புழு பூச்சியில இருந்து பொறந்த நம்ம சாதி சனம் இத செய்யக்கூடாதுன்னு அத எரிச்சி பீடி பத்திக்குவேன்
3. எடுத்தவுடன் நேராக பாதி பாட்டுக்கு போய் ரரரர,ரிரிரிரிரி,ருருருருரு,நகநகநக,டிகுகுண, டகுடகு,கடகட,கட்டுக்கடகட,டிகுடிகு,டங்குடிங்கிகு, விந்து விந்து என்ற பாராவை மட்டும் 'சனியனே போதும் பாடுனது, நிறுத்தி தொலை' என்று யாராவது பெல்டால் அடிக்கும்வரை கத்தி பாடுவேன்

உ) தொடர்வண்டி வார்த்தைகள். சுவத்தில் பல்லி சப்தமிட்டால்...

1. அது மாதிரியே சப்தமிடுவேன்
2. பல்லி வாலை எப்படியாவது வெட்ட முடிகிறதா என்று பார்ப்பேன்
3. பல்லி சப்பு தட்டுது, பறவ எச்சி கொட்டுது, பாம்பு கிஸ்ஸு அடிக்கிது, காண்டா மிருகம் குமுறுது, கழுத உறுமுது, கண்டாங்கி சேல நழுவுது, காட்டன் மேல தழுவுது, காட்டுச்சுப்பிரமணி நாட்டுக்கு போனா, கழுதமேல ஏற்ற குமரன் வேட்டைக்கு போனான் என்று தொடர்ச்சியாக சம்பந்தமில்லாமல் முழ நீளத்துக்கு முழங்குவேன்

ஊ) வார்த்தை அலங்காரம். I gotta pee என்பதை...

1. மூச்சா போகணும்
2. டாய்லட்
3. முதுகு தண்டுவடம், மூளை ஸ்டெம், செரிபரல் கார்டெக்ஸ் ஆகியவற்றின் நரம்பு மண்டலம் தசைகளின் மூலம் கட்டுபடுத்தும் அளவு நூறு முதல் நூத்திஐம்பது மில்லி என்றான காரணத்தால் கொஞ்சம் அசவுகரியம் ஏற்பட்டு மூத்திரப்பை எனப்படும் ப்ளாடரிலிருந்து மூத்திரம் வெளியேறியது என்றுதான் சொல்லுவேன்.

மேற்கண்ட மேட்டர்களில் எல்லாவற்றிலும் எண் 3ஐ தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவை விட நவீனத்த்துவம் ஊறிக்கிடக்கிறது. சும்மா அப்படியே பீச்ச வேண்டியதுதான். மற்ற எண்காரர்களும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சோனாகஞ்சியில் பாடி ஜோசியம் பாத்துவிட்டு வந்து அ முதல் ஊ வரை உள்ள குறிப்புகளை உபயோகித்து 'ஆழமான பதிவு' தயாரிக்கும்போது மீந்து போன சில பல நவீனத்துவ வார்த்தைகளையும் ஆங்காங்கே தூவி I gotta pee என்பதை எடுத்துக்கொண்டு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு சின்ன செய்முறை குறிப்பு கொறிக்கவும்.

" தன்னாலே தில்லாலே தண்டுவடம் நல்லால்லே. அம்மு கம்முனு ஆச்சி, எனக்கோ ஸ்டெம்மு ஸ்டன்னாச்சி.. கால்டெக்ஸு பாக்கத்துல கீது ஒரு பங்கு, நம்ம கார்ட்டேக்ஸுக்கோ ஊது சங்கு. எல்லாமும் சேந்துகிச்சி, நாமோ ஒரு சோத்து பச்சி மச்சி குச்சி கச்சி. தசைகளின் பின்ன ஏற்பட்ட கட்டுப்பாடு கடுப்பு கட்டுப்படு கட்டுக்கடங்காமல் கட்டு கட்டு கட்டுன்னு கடகடகடன்னு லொடலொடவா ஆயி கொஞ்ச போயி மிஞ்ச நாயி. ஊர்க்கோடி ஆல, பலா, வேப்ப, முருங்க, விலா, வேம்ப, ஆலிலக்கு, புல்லலுக்கு, புதினா, சிறுகீர, அறகீர, முழுகீர, பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, ஜூப்புமுர, இஞ்சிமுரப்பா, ஆலோல மூங்கி காட்டுல காச்சுர சாராயத்த சூடா அடிக்கிம்போது போத தெரியிற நூறு நூத்து அம்பது மில்லி மாதிரி எனக்கும் பிளாட்டரு க்ளாட்டரு ஆகாம சும்மா சலசலன்னும் சல்லுன்னும் (மூத்திர) கொழாய் வழியா குறியால வெளியேத்தினேன்ம்பா "

(மூத்திரம் போன்ற வார்த்தைகள் சரளமாக எழுதவும். தயக்கம் வேண்டாம். உங்கள் ஜாதியை பொறுத்து 'வார்த்தையில் இல்லை நாகரீகம். கருத்தில் மட்டும்தான்' என்ற ஆதரவு குரல் விட, for a nominal price, 'ஏஜன்சி' மூலம் ஆள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்)

ஓரளவு க்ளோஸா வரீங்களா.. ஓகே. இதுமாதிரியே இருக்க வேண்டும் என்பதில்லை, ஓவ்வொருவர் எழுத்தும் தனித்தன்மை கொண்ட நவீனத்துவம்தான். இந்த பார்முலா படி இப்போ இப்பதிவின் தலைப்பை பாருங்கள்.

*நவீனத்துவ என்பதை ஒரு எதுகை மோனையோடு (கே)ன+வீணா+த்தூ+வ என்பதாக பார்க்கும் சித்தி அடைந்திருப்பீர்கள்..

இப்போது நீங்கள் உங்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் - பதிவே சம்பந்தமில்லாததுதான், இதுல எங்க அதுக்கும் சம்பந்தமில்லாமன்னு எல்லாம் சலிச்சிக்க கூடாது - ஒரு ம்யூஜிக் போடணும். அட்லீஸ்ட் அதுவாவது உங்கட பதிவை கஷ்டப்பட்டு படிக்சி சன்னி கண்ட சனங்களுக்கு ஆறுதலா இருக்கும்.

http://www.musicindiaonline.com/p/x/0UX2koX1vd.As1NMvHdW/

இப்பிடி மூசிக் போடறதுல உள்ள இன்னொரு பிரயோசனம், இதுல டார்க்கெட்டு ஆடியன்ஸுக்கு எதாவது மெசேஜ் இருக்குமோந்து சாதா ரணம், டார் கெட்டு ரெண்டுமே பாட்ட முழுசா கேக்கும். அததுக்கு ஏத்தா மாதிரி பாட்ட பதிவோட லிங்கு பன்னி கெரோன்னு போகும்.

மண்ட சாயுற நேரம் கொஞ்ச நஞ்ச விசரயும் விட்டு வக்க கூடாது. மொத்தமா போட்டு தள்ள இன்னொரு விசயமும் இருக்கு. அத போட்டாத்தான் பதிவு முழுசு பெறும். அது படம்.

உங்க கம்பியூட்டரில் உள்ல குப்ப கூடயில் (அதாம் ரீசைக்கிளு பின்னு) எதாவது படம் இருக்காண்டு பாக்கோணும். அத ரீ ஸ்டோரு பண்ணிக்கணும். அந்த படத்த மைக்ரோசாப்டு பெயிண்டு பிரஸ்ஷுல ஓப்பன் பண்ணி அதுல ஒரு பாகத்த மட்டும் வெட்டி எடுக்கணும். அதாவது உங்க படம் 1280 x 1024 என்றால் ரேண்டமா அந்த படத்துல ஒரு பகுதிய 128 x 102 அளவுல வெட்டி புது படமா உருவாக்கிக்கோணும். பின் நவீனத்துக்கு ஏத்தா மாரி *னி, *த்து சம்பந்தப்பட்ட படங்களா இருந்தா ரொம்ப நல்லது. (இந்த வார்த்தைகளை பார்த்தால் உங்களுக்கு உடனே கூனி, கூத்து என்பதாக தோன்றினால் நீங்கள் இன்னும் முன்நவீனத்திலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பின்நவீனத்துவவாதியா இருந்தால் உங்களுக்கு அந்த வார்த்தைகள் சோ சோ சோ சோனி, நா நா நா நாத்து என்பதாக் தோன்றவேண்டும்)

ஹோம் வொர்க் :: சென்ற பதிவில் சொன்ன 'தி பார்க்' கேட்டுக்கு வெளியே குந்திகினு இருந்த ஒரு ஆளிடம் நடந்த இந்த உரையாடலை, கேன வீண த்தூ வ மார்க்க ச்சீய ரண பதிவாக மாற்றவும்.

ஏம்பா.. வருசம் முச்சூட இப்பிடி அழுக்காவே திரியிறியே. பாரு.. தலய தண்ணியே காணாம சிக்கு புடிச்சி கட்டி தட்டி போயி குருவி கூடு கட்டி வச்சிருக்கு. இதுக்கு மேல ஓட்டையே வுழாதுங்கிற அளவுல கிழிஞ்சி போன சட்டையும் முழுசு அரையாகி நூல் நூலா தொங்கற டப்பா டவுசரும் போட்ருக்க. நகம் ஏகத்துக்கும் வளந்து அதுக்கு கீழ அழுக்கு படிஞ்சி கிடக்கு. நாத்தம் வர கிழிஞ்ச சாக்க காவக்கார போர்வைன்னு போத்திகிட்டு துண்டு சுருட்ட வாயில வச்சிகிட்டே திரியிற. எவ்வளவோ பேர் நல்ல துணிமணி தராங்களே, ஒனக்கு ஏண்டாப்பா இப்பிடியே இருக்கணும்னு தோணுதுன்னு ஒரு வார்த்தை கேட்டா.... போடா வெண்ண, போன தீவாளிக்கி கோடி வூட்டு (லாஸ்) ஜிஞ்ஜிலிக்கி கொடுத்த கோமேதகம் பிராண்டு ஜட்டி போட்ருந்தனே பாக்கலியா.. என்ன பத்தி இந்த மாரி இன்னொருக்கா பேசுன ஒனக்கும் சாக்ரமண்டோ சங்கிலி பருப்பு கெதிதான்னு வுட்டான் ஒரு சாபம்.

*

வெயிட். பதிவு இவ்ளோதான்னாலும் அது முழுமை பெற இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அது நவீனத்துவத்தை அடுத்த நிலைக்கு, அதாவது இடுகையின் பின்னூட்டிலும் கொண்டு செல்லுதல்.

அதாவது உங்கள் இடுகையின் முதல் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

பின் ஊட்டு ஒன்று, அதில கேள்வி ரெண்டு ::

அ) அண்ணை, இந்த பதிவுல நீங்க சொல்லாதது எதுவும் உண்டா?
ஆ) அண்ணை, இந்த பதிவுல அப்பால கொஞ்சம் மப்பால நீங்க சொல்ல நனைக்கிறது எதுனா உண்டா?

- தன் வாயால தனக்கு தானே வெச்ச நெருப்பால வெந்த றக்கயால பறக்க முடியாம விந்தி விந்தி நடக்குற பாம்புடம்பும் யாளிமுகமும் கொண்ட நாத விந்து பேரு கொண்ட ஒரு ஜந்து (சுருக்கமா FD,Handicapped)

*

அதாவது உங்கள் பதிவின் இரண்டாம் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

ஒண்ணுமில்ல FDHங்கிற பேருல வந்த பின்னூட்டம் எனக்கு நானே போட்டுகிட்டதுதான். அதாவது திராவிட கச்சி தலைவரு கரு.நா.நிதி நெதமும் யாருக்குனா மெசேஜ் கொடுக்கணுமின்னு ஆசப்பட்டா இப்படித்தான் கூவாம்பேட்ட குப்புசாமி கேக்குறதா ஒரு கேள்விய எளுதி, உடன்கட்டை ஏறுற ஈன பிழைப்பேன்னு ஒரு பதிலும் எளுதி ஒட்டுவாறு. அது மாதிரியே, நானும் மெசேஜ் கொடுக்கலாமின்னு கேள்வி கேட்டுகினேன். கேட்டவரு பேரு பேன்ஸி பனியனாட்டமா இருக்கா.. இப்ப பதில்.

பறக்கவியால ஜந்து, இங்க வந்து குந்து, போகப்போற நொந்து. இரு மொதல்ல ஒரு கவித சொல்லிக்கிறேன்.நான் கவிஞர் குடுமிபேட்ட குஞ்ஞாயிங்கிற நாமகிரகணத்துல தேசவிசாரியா அலைஞ்ச ப்போ எளுதுனது.. இப்ப உட்டா அப்புறம் எப்பத்தான் இத நான் சொல் உரது. கேளு,

வாலாட்டி திரிகிறேன் நான்,
வள்ளென்று குலைக்கிறாய் நீ,
நம்மிருவரில் யாரடி நாய்?

- சிர்கா 37/13/1469

(கலைக்கிற நாய் வெறிக்காது மாதிரி புது கிழமொழி யாராவது எளுதுனா, அவங்களுக்கு அண்டாகாகசம் ஒரு பானை எலவச திட்டத்துல திரட்டி தரப்படும்)

அ) அப்பால என்னா கேட்ட, சொல்லாதது எதுவும் உண்டா... இதுல எதாவது சொல்லியிருக்கேன்னு நினைச்சியே அதுக்கே ஒனக்கு மாலும் ஜாலும் போடலாம்னாலும் சோக்கா கேட்டியே ஒரு கேள்வியேன்னு பதில் சொல்றேன் கேளு. இது ஒரு புவிக்கோட்டு கேட்டு பதிவு. அதாவது வல்லூறுலியோ கடலாமையிலயோ பிரயாணிச்சி ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி தூர தேசத்துல இருக்குற சிங்கத்தலை ஊருக்கு போனா, அங்க இலக்கிய விசாரத்துல என்ன விட மேன்மை தங்கிய அண்ணை ஒருத்தரு இருப்பாரு. அவரு எந்த மனவிசாரமும், தன சகாப்தமும், சகல சஞ்சாரங்களும் இல்லாத அட்வைஸு எளுத்தையே குப்பன்னுட்டாரு. அப்ப ரத்த கொதிப்பு தரும் இத்த என்னன்ன சொல்வாரு. அதனால அவருக்கு ஒரு முன்-வருத்தத்த பின்னாள்ல இல்லாம இந்நாள்லயே பேஸ்ட் அண்ட் போஸ்ட் பண்ணிட்டு எங்ட குப்பையில யாருக்க்காவது கோமேதகம் இல்லையின்னாலும் கோலிகுண்டாவது கெடக்காமலா போகுமின்னு மனச தேத்திங்கோன்னு மட்டும் சொல்லிக்கிறேன்

ஆ) அம்பு உட்ட ஒடம்பொறப்பே, நீ கேக்கிறியோ கேக்கலயோ சொல்லிக்கிரேன் கேளு. இது இதோட கடேசி. எது இதோட கடேசின்னு கேக்காத. இது இதோட கடேசிதான்.. அடுத்த தடவ இத நான் திருப்பியும் சொல்வேன். அப்போ போன தடவ கடேசின்னு சொன்னியே வாத்யாரேன்னு கேக்காத. அது அப்போதைய கடேசி. இது இப்போதைய கடேசி. கடிச்சி விட்ட காயமும், கிளிச்சி விட்ட கிங்கரரும் சும்மா இருக்குமோ சண்டமாருதமே என் ஞானத்தங்கமே. அதனால எத்தன தடவ சொன்னாலும், அந்த வார்த்த அப்போதக்கி மட்டும்தான் கடேசிய தவிர அது எப்போதைக்கும் கடேசி இல்லன்னு புரிஞ்சிக்க. அப்புறம் எம்க்கிட்ட இருக்கிற பெருங்காய டப்பாவுக்கு வயசு ரொம்ப ஆச்சி. அதுனால 83 வரிசம் மின்னாடி வாசமா இருந்ததயே கெலரி கெளரி இப்பவும் காலி டப்பாவுல வாசன இருக்கான்னு கேட்டு ரணகள ப் படுத்தாத..அப்புறம் நான் நேத்தி பொறந்த பாப்பாவுக்கும் அடுத்த வருசம் பொறக்கலாமான்னு ஆச்சரியமா நீந்திகிட்ட இருக்கிற வாலுள்ள வெள்ள ஆசாமிகிட்டயும் என்ன பத்தி சொல்றேன் கேளுன்னு இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆக்கிக்குவேன். நாள்பட சட்டி சுட்டதடா கை விட்டதடான்னுதான் ஆகுதே தவிர பிரயோசனம் எதுவும் இருக்கிறதா காணும். ஆகவே இதே கடஏசி. நெஞ்சம் கொஞ்சமாக http://www.musicindiaonline.com/p/x/gqQgCnsJSS.As1NMvHdW/ கேட்டு சுகம் பெறவும்.

*

தட்ஸ் ஆல். உங்களுக்கு *னவீணாத்தூவ பதிவு உழுவது கைகூட அந்த கண்டி கதிர்காமன் அருள் புரிவானாக.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?


பொதுவாகவே தமிழகம் முழுவதும் E&E என்றால் கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருக்கும் என்பதாக நாங்கள் படிக்கும் போது இண்டர்-யுனிவர்சிடி கேம்ஸ் போகும்போது பகிர்ந்து அறிந்ததுதான் என்றாலும் அண்ணாமலையின் இந்த பிரிவுகளில் - எல்லோரும் இல்லை - கால்வாசிக்கும் மேற்பட்ட வாத்திகள் சைக்கோக்களாக இருப்பார்கள்... அறையின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு மாணவர்கள் அனைவரும் வியர்வையில் குளிக்க குளிக்க ஒரு லூஸு பாடம் நடத்தும். என்னது Oscilloscopeல் Volt/Div என்று ஒரு Knob இருக்கிறதா... எங்க காட்டு என்று Ph.D முடித்த லாப் இன்சார்ஜ் ப்ரபொசர் ஞானி இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை நடந்து "ஆமா இருக்கு" என்று வழிந்து விட்டு போனாலும் லேபுக்கு வரும்போது முழுக்கை சட்டையில் இப்படி இருக்க வேண்டும், பேண்ட் அப்படி இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரூல்ஸை போட்டு தாளிக்கும்... மத்த டிபார்மெண்ட் மக்கள்ஸ் எல்லாம் ஜாலியாக இருக்க இந்த துறை மட்டும் 34 பக்கத்துக்கு அப்ஜெக்டிவ், ப்ரொசீஜர் என்று ஈயடிச்சான் காப்பியாக ரிகார்டை - இங்குதான் ஜூனியர்களை வாட்டுவது ஆரம்பமாகும் இடம் - எழுதி கழுத்தறுபடும். ஆணும் பெண்ணும் பேசினால் இந்த வாத்திகளுக்கு பேதி போகும். எப்பொழுது சான்ஸ் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆண்களாக இருந்தால் "ஏம்பா ஆனா அந்த ஐஸ்க்ரீம் கடையில பிகர் பார்க்க மட்டும் நல்லா தெரியுது, மத்ததுக்கெல்லாம்... " என்றும் பெண்களாக இருந்தால் "பேண்ட் சர்ட்ன்னு ஸ்டைலா போட்டுகிட்டு சினிமாவுக்கு கூட்டமா போய் கூத்தடிக்க தெரியிது ஆனா... "என்று குத்தி காண்பிப்பது. இண்டர்னல் மார்க் இருக்கிறது என்பதால் சம்பந்தா சம்பதமில்லாமல் பயங்கரமாக ஓட்டுவது என்பதெல்லாம் சகஜமாக நடக்கும் இடம் மின்/னணுவியல் துறை.

பிட் அடிக்கும்போது பிடிபட்டதால் மாணவி தற்கொலை என்று செய்தியை படித்தால் எழும் பொது சிந்தனை, இதென்ன இவ்வளவோ கோழையாக இருக்கிறார்கள் என்பதாக இருக்கும். ஆனால் அண்ணாமலையில் மாணவி தற்கொலை என்று வந்த செய்தியை படித்ததும், இந்த பெண் மட்டும் E&E அல்லது E&I பிரிவில் படிப்பதாக இருந்தால் இவளது தற்கொலைக்கு முக்கால் காரணம் விரிவுரையாளராகத்தான் இருப்பான் என்பதே எனது முதல் சிந்தனையாக இருந்தது. அவர்கள் மாணவர்களை நடத்தும் விதம் அப்படி... மனதளவில் ரொம்பவே பாதிப்பார்கள்.

அமெரிக்காவில் எல்லாம் ஒரு மாணவனோ மாணவியோ இது போன்ற அகால மரணம் அடைந்தால் அதனால் மனதளவில் பாதிக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு - மாணவர்களின் வயது காரணமாக - ஆறுதல் சொல்வதெற்கென்றே counsellors உண்டு. ஆகவே இந்த தற்கொலை செய்தியை கண்டவுடன் அண்ணாமலையில் தற்பொழுது படிக்கும் எனக்கு தெரிந்த அந்த மாணவன் நினைவு வந்தது. ஒருவேளை அவனுக்கு அந்த பெண்ணை தெரிந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றும் மேற்விபரங்களுக்கும் அவனை தொடர்பு கொண்டேன். பார்த்தால் அவன் அந்த மாணவியின் வகுப்பு தோழன்.

சேட்னா (தற்)கொலை பற்றி அவன் சொன்னது ::

சேட்னா நன்றாக படிக்கக்கூடியவள். அவளது GPA > 9.0/10.0... Group Discussion, Seminar போன்றவற்றில் நன்றாக பிரகாசிக்கக்கூடியவள். எல்லாரிடமும் நன்றாக பழக்ககூடிய சுபாவம். தோற்றத்திலும் நல்ல அழகு. சம்பந்தப்பட்ட விரிவுரையாளன் மணிக்குமார் இளைஞன்.. கடந்த ஒரு வருடமாகவே இந்த பெண்ணுக்கு செல்போன் மூலமாகவும் ஏனைய வழிகளிலும் டார்ச்சர் தந்து வந்துள்ளான். இவனுக்கு இன்னொரு விரிவுரையாளனும் கூட்டாளி. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று மாடல் தேர்வில் பங்கேற்ற மாணவி சேட்னாவிடம் சென்று அவள் பிட் வைத்திருப்பதாக தான் சந்தேகப்படுவதாக கூறியிருக்கிறான் மணிக்குமார்.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது செமஸ்டர் தேர்வு கூட இல்லை. வெறும் மாடல் தேர்வுதான். இந்த மாடல் தேர்வில் மார்க் வாங்குவதால் கிடைக்கும் அதிக பட்ச பயன் இண்டர்னல் மார்க்கின் ஐந்தில் அல்லது மூன்றில் ஒரு பங்கில் மட்டுமே உபயோகப்படும்.

சேட்னா அவன் குற்றச்சாட்டை மறுத்து தனது துணிகளை உதறி காண்பித்திருக்கிறார். மேலும் சந்தேகம் இருந்தால் பெண் விரிவுரையாளர் எவராவது வந்து தன்னை சோதித்துக்கொள்ளலாம் என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சேட்னாவின் உடையில் கையை விட்டு சோதனை செய்திருக்கிறான் மணிக்குமார். பிட் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. உடன் இதையும் ஏற்கனவே அவனால் தான் பாதிக்கப்பட்டதையும் துறைத்தலைவரிடம் சென்று புகாராக சொல்லியிருக்கிறார் சேட்னா. ஆனால் அவரோ விரிவுரையாளனையும் அழைத்து இது நீங்கள் இரண்டு பேரும் தீர்த்துக்கொள்ள வேண்டிய ப்ரச்னை என்று சொல்லியிருக்கிறார். வெளியில் வந்த உடனேயே "நீ எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்து கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் மணிக்குமார். தன் உடைக்குள் கைவிட்டு சோதனை நிகழ்ந்த அதிர்ச்சியிலும் அதனை துறைத்தலைவர் கூட கண்டுகொள்ளவில்லை என்ற அதிர்ச்சியிலும் சேட்னா தற்கொலை செய்து கொண்டாள்.

இந்த நிலையில் சேட்னா இறந்த பிற்பாடு கூட அந்த விரிவுரையாளர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது போக அந்த பெண்ணின் நடத்தை மீதே களங்கம் கற்பிக்க முயற்சி நட்ந்திருக்கிறது. சேட்னா நடத்தை ஒரு மாதிரி என்று நிர்வாகமும் போலீஸும் எழுதி கொடுக்க சொல்லி ஹாஸ்டல் மாணவிகளை வற்புருத்தியிருக்கின்றனர். விசாரணையின் போது 'அவ அடிக்கடி பாண்டி போறவளாமே' என்பது மாணவிகளிடம் விசாரணை என்ற பெயரில் அண்ணாமலை நகர் போலீஸ் விடுத்த ஸ்டேட்மெண்டில் ஒன்று. அவள் விபச்சாரி என்ற ரீதியிலேயே "விசாரணை" நடத்தப்பட அது SMS மூலமாக மாணவர்களை சென்றடைய மாணவர்கள் கொதித்திருக்கின்றனர்.. அதன் பிறகே ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றனர். போலீஸ் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி நிர்வாகம் அங்கு வர அதுவே கல்லெறிதல் முதற்கொண்டு கலவரமாக மாறியிருக்கிறது. உடனே பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற மூடல் நடத்தியாகிவிட்டது..

"அவ பாவம் க்ளாஸ் டாப்பர்ணே, அவள போயி பிட்டு வச்சிருக்கான்னு பொய் சொல்லி சாகடிச்சிட்டான் அந்த லெக்சரரு.. ஏண்ணே அந்தாள ஒரு சஸ்பெண்டு கூட பண்ணாம வச்சிருக்காங்க"

"சஸ்பெண்டு பண்ணா காலேஜ் பேரு கெட்டு போயிருமின்னு பண்ணியிருப்பாங்கப்பா"

"எண்ணனே இது, சஸ்பெண்ட் பண்ணா, தப்பு பண்ணவங்கள கண்டிக்கிறாங்கன்னு காலேஜ் மேல நல்ல பேருதான வரும். எப்படி அது கெட்ட பேரா ஆகும்"

"அது இல்லப்பா, சஸ்பெண்ட் பண்ணா, தப்ப ஒத்துகிட்ட மாதிரி இருக்கும். அப்படின்னா அங்க அப்படித்தான் நடக்குதுன்னு செய்தியாயிரும். அடுத்த வருசம் புள்ளங்கள அங்க சேக்க பேரண்ட்ஸ் பயப்படுவாங்க. வருமானம் வராதுல்ல"

"அதுக்காக எப்படின்னே இப்படி பொய் சொல்ல முடியுது இவங்களால... அது காப்பியடிச்சதாலதான் தூக்கு மாட்டிகிச்சின்னு எல்லா பேப்பர்லயும் வருது"

"கொஞ்சம் எங்கிட்ட போன கொடு... யேய். நீ கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா.. நேத்தியிருந்து நியூசையே பாத்துகிட்டு இருக்கான். சோறு தண்ணி சரியா சாப்பிட மாட்றான்"

"ஆமா.. கூடவே பேசி பழகுன பொண்ணு பொக்குனு செத்து போயிட்டா... எப்படி சாதாரணமா இருக்கிறது"

"நீ ரொம்ப மனச அலபாய விடாம இருடா... தப்பு செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கெடைக்கும்.. நீ கொஞ்சம் அமைதியா இரு" - இதை சொல்லும்போது எனக்கே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லை...

"ஆமாண்ணே, இந்த அண்ணாமலை நகர் போலீஸ் மாதிரி இல்லாம ஏ.எஸ்.பி எங்ககிட்ட நடந்த உண்மைய கேட்டு வாங்கி எழுதிகிட்டு போயிருக்கார். அதுதான் கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு... அவங்க அப்பாம்மாவுக்கு பர்னாலா கிட்ட இன்புளுயன்ஸ் இருக்கிறதா பேசிக்கிறாங்க.. பாவம் அவங்க.. அவ்ளோ தூரம் எடுத்து போக ரொம்ப செலவாகும்னு இங்கயே பொதச்சிட்டாங்க... எண்ணன்னே இது வாழ்க்கை"

ஒரு 20 வயது சிறுவன் என்ன வாழ்க்கை இது என்று கேட்டால் என்ன சொல்வது?


தினமலர் செய்தி
தினமணி செய்தி
தி ஹிந்து செய்தி


š இப்பதிவை மின்னஞ்சலிட