<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அம்பிகளுக்கு ரெமோ மேல்


வ.வா.ச படத்தில் வெட்டி ஆஃபிசர் சிவகார்த்திகேயன் பல் விளக்கிக்கொண்டே வண்டிப்பாதையில் பொறுமையாக நடந்து போவார். பின்னால் மணல் லோடு அடிக்கும் டிராக்டர் ஒன்று நடப்பவர் வேகத்துக்கு ஏற்ப அமைதியாக ஃபாலோ செய்யும். பொறுமை இழக்கும் சில்வண்டு ஒன்று ஹார்ன் அடித்துவிடும். ”எனக்காடி ஹார்ன் அடிக்கிற, உன்ன என்ன செய்றேன் பார்” என்று உடனே சி.கா தாசில்தாருக்கு ஒரு ஃபோன் அடிப்பார். டிராக்டருக்கு ஆப்பு.

இது வெறும் காமெடி காட்சி அல்ல. இதை போன்ற அநியாயத்தை கண்டவுடன் - தன் ஈகோ சீண்டப்பட்டால் மட்டும் - பொங்கும் ஏகப்பட்ட அந்நியன் பட அம்பிகள் நம்மிடையே உண்டு. காலேஜ் முடித்தவுடன் மிகக்கொஞ்ச காலம் த.நா.மி.வா எனப்படும் ஈ.பியில் பொழுதை ஓட்டிய பொன்னான சந்தர்ப்பத்தில் அம்பிகள் சிலரை சந்தித்திருக்கிறேன்.

+++

பச்சமுத்து ஒரு கன்ஸ்யூமர். அன்று கடுப்போடு வந்தார். தான் எதிர்பார்த்த வேலை தான் எதிர்பார்த்த காலத்தில் நடக்கவில்லை என்பதில் அவருக்கு எரிச்சல். JE அளித்த பதில்களில் அவருக்கு திருப்தி இல்லை என்று இங்கு வந்தார். இங்கும் அவருக்கு நடைமுறை சிக்கல் பொறுமையாக இன்னொரு முறை விளக்கப்பட்டது. அது தான் எதிர்பார்த்த பதிலாக இல்லாததில் அவருக்கு கோபம். பேச்சுவாக்கில்

‘நாங்க கட்டுற வரிதான் உங்களுக்கெல்லாம் சம்பளம் அத ஞாபகம் வச்சிகிட்டு வேலை செஞ்சீங்கன்னா நல்லது’

‘உக்காருங்க பச்சமுத்து’

தன் கோபத்துக்கு உடனடி மரியாதையா என்று பச்சமுத்துவுக்கு சின்னதாக சந்தேகம்.

‘ஸ்டெனோ கொஞ்சம் இங்க வாங்க’

ஸ்டெனோ வந்தார்

‘எழுதிக்கோங்க...

பெறுநர்: தலைமை பொறியாளர்.
ஐயா,
இப்பவும் இன்ன மாவட்டம், இன்ன டவுன் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எவருக்கும் என்னுடைய வரியில் இருந்து கண்டிப்பாக சம்பளம் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு பச்சமுத்து’

‘இதுல நம்ம பச்சமுத்து சார் பெர்சனல் டீட்டைல ஃபில்லப் பண்ணி டைப் பண்ணி சார்கிட்ட கொடுத்திடுங்க’

‘பச்சமுத்து சார், பக்கத்துலதான் போஸ்டாபீஸ்ல... கவர நீங்களே போஸ்ட் பண்ணிடுங்க. மறக்காம ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புங்க. இல்லைன்னா ஸ்டாம்புக்கு பதிலா உங்க வரியில இருந்து ஸ்டாம்ப் செலவை எடுத்துக்க சொல்லி போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு நோட் எழுதி அப்புறமா போஸ்ட் பண்ணுங்க.. இப்ப போய்ட்டு வாங்க’

+++

முனிரத்னம் வீட்டில் தேதி முடிந்தும் கரண்ட் பில் கட்டவில்லை என்று ஃப்யூஸ் கட்டையை பிடுங்கி வந்துவிட்டார்கள். மறுநாள் ஆள் அலுவலக்த்திற்கு வந்தார்.

‘என்ன சார், ஒரு நாளுக்கே (ஃப்யூஸ்) கட்டைய புடுங்கியாந்துட்டீங்க’

‘உங்கூட்டுக்கு மட்டும்னு தனியா இன்னொரு நாள் வரணும் பாருங்க.. அதான், சரி இப்ப என்ன வேணும்’

‘ஆர்.சி (ரீகனெக்‌ஷன்) வேணும் சார்’

‘ஜே.ஈய பாத்தீங்களா?’

‘பாத்தேன். ஆர்.சி சார்ஜ் கட்டணுங்கிறாரு. ஒரு நாள்தான சார் ஆயிருக்கு. அதுக்குள்ள என்ன சார் உள்ளூர்காரனுக்கு ஆர்.சி சார்ஜு’

‘கட்டைய புடுங்குறதுக்கு முன்னாடி வந்திருந்தா எதாவது பண்ணலாம். இப்ப ஒன்னும் பண்ண முடியாது. ஆர்.சி சார்ஜ் கட்டிட்டு போங்க ஆர்சி கிடைக்கும்’

‘சார், நம்ம தொகுதில இருந்துதான் அமைச்சர் தெரியுமில்ல. 2 மணி பஸ்ஸ புடிச்சேன்னா நைட் மெட்ராஸ். அமைச்சர தொந்தரவு பண்ண வேணாமேன்னு பார்த்தா ஓவரா போறீங்களே. ’

‘ஒன்னு செய்ங்க. 2 மணி பஸ்ஸ புடிக்காதீங்க. நைட்ல அமைச்சர பாக்க முடியாது. நைட் பஸ்ஸ புடிங்க. காலைல பார்த்துடலாம். அதுல என்ன ப்ரச்னை என்னன்னா, அமைச்சர் ரேஞ்சுக்கு அவர் எனக்கு போன் பண்ண மாட்டார். மேல்மட்டத்துல யாரயாவது சி.இ லெவல்ல கால் பண்ணுவார். அது மாறி மாறி கடைசில என்கிட்ட வந்து சேரும் போது நாள் கணக்குல ஆய்டும். அதுனால நீங்க என்ன பண்ணுங்க, இவரிடம் ஆர்.சி சார்ஜ் வாங்கக் கூடாது அப்படின்னு அமைச்சர் கிட்டயே ஒரு லெட்டர் வாங்கிடுங்க... அத விட பெட்டரா ஒன்னு சொல்லவா... இனி இவர் கிட்ட கரண்ட் சார்ஜே வாங்காதீங்கன்னு லெட்டர் வாங்கிட்டீங்கன்னா ரொம்பவே நல்லது. நாளைக்கி சாயங்காலம் லெட்டரோட வந்துடுங்க, நாலு பீஸ் கட்டை எக்ஸ்ட்ராவா போட்டு தரேன்’

விடுவிடுவென வீறாப்பாக போனவர் போனது பஸ்ஸ்டாண்டுக்கு இல்லையாம், ஆர்.சி சார்ஜ் கட்டிவிட்டு  வீட்டுக்குத்தான் போனாராம்.

+++

‘ போன வருஷத்துல இருந்து மாசம் தவறாம பில் கலக்டர் மேல், அக்ஸசர் மேல, லைன் மேன் மேலன்னு யார் மேலயாவது புகார் தெரிவிச்சி பெட்டிஷன் வருது. பெட்டிஷன் எல்லாம் ஒரே ஃபார்மேட். எல்லாத்திலயும் ஸ்டாப்பு ஸ்டாப்புன்னே எழுதியிருக்கும்.. அதாவது ஊழியர்னு எழுதினா காமிச்சி கொடுத்திருமாம். ரொம்ப நாள் கழிச்சிதான் தெரிஞ்சிது பெட்டிஷன் போட்டது அதோ அங்க பச்சை கட்டம் போட்டு உக்காந்திருக்காரே அவர்தான்னு.. நம்மாளுதான் இங்க ஐ.ஏ (Inspector of Assessment) வா இருக்காரு.  ஒரு டஜன் கவரும் ஒன்னேகால் ரூவா ஸ்டாம்பும்  வச்சிகிட்டு இந்தியன் படம் க்ரேசி மோகன் கணக்கா இண்டுவுக்கு லெட்டர் எழுதுறதுக்கு பதிலா ஹெட் ஆஃபிஸுக்கு பெட்டிஷன தட்டி விட்றாரு.  ஆனா என்ன பிரயோசனம். நடவடிக்கை எடுக்கப்பட்டதுன்னு ஒரு அக்னாலட்ஜ் கூட அனுப்ப முடில.. ஏன்னா எல்லா கடுதாசிலயும் அட்ரஸே இல்லாம, இப்படிக்கு பொதுமக்கள்னு போட்டு ஒரு பத்து பேர் பேரு கலர் கலர் பேனால எழுதியிருக்கு.. போதாததுக்கு ரெண்டு கைநாட்டு வேற.

+++

‘அலோ... என்ன சார் எங்க ஏரியா ட்ரான்ஸ்பார்மர் ரொம்ப பழசு.. பத்து வருசமா அதே ட்ரான்ஸ்பார்ம் மாத்த மாட்டீங்களா?’

‘ட்ரான்ஸ்பார்மர் எப்படி இருந்தா என்ன சார், உங்களுக்கு எதுனா ப்ரச்னையா’

‘என்ன ப்ரச்னையான்னு சாதாரணமா கேட்டுட்டீங்க.. எப்ப பார்த்தாலும் லோ வோல்டேஜ் சார்’

‘சரி விசாரிக்க சொல்றேன்.. உங்க பேர் அட்ரஸ் கொடுங்க’

’ப்ரச்னை எனக்கு மட்டும் இல்ல சார், எங்க தெருவுக்கே இருக்கு’

‘சரி, எந்த தெரு?’

‘எங்க ஏரியா முழுக்கவே அப்படித்தான் சார் இருக்கு.. ட்ரான்ஸ்பார்மர் மாத்தாத வரிக்கும் இதுக்கு விடிவுகாலம் கிடையாது’

‘சரி எந்த ஏரியா’

டொக்

’காலையில் மோட்டுவளைய பாத்துகிட்டு வெட்டியா படுத்திருந்திருப்பான். எதாவது உருப்படியா பொழுது போக்குவமேன்னு யோசனை பண்ணியிருப்பான். ட்ரான்ஸ்பார்மர் பழசாயிடுச்சே, மாத்த சொல்வோம்னு ஒரு கால போட்ருப்பான்’

+++

’சார் என் க்ளையண்டோட ஃபேக்டரில காலைல இருந்து கரண்ட் இல்லை. என்ன சார் ப்ரச்னை’

‘ஓ அப்டிங்களா.. லைன் மேன் நம்பருக்கு போட்டு என்னன்னு விசாரிச்சீங்களா?’

’என்ன சார் ரெஸ்பான்ஸ் இது. நான் வக்கீல் சோமசுந்தரம் பேசறேன். டிஸ்ட்ரிக்ட் கோர்ட்ல பெரிய லாயர். வேலை மெனக்கட்டு உங்கள்க்கு போன் பண்ணா நீங்க லைன் மேன கேட்டீங்களான்னு இர்ரெஸ்பான்ஸிபிளா எதிர் கேள்வி கேக்குறீங்க’

‘சார் நீங்க வக்கீலோ டாக்டரோ, ஃப்யூஸ் போறதுல ஆரம்பிச்சி ஷண்டிங், லைன் மாத்துறது, ட்ரான்ஸ்பார்மர் காலின்னு எக்கச்சக்க காரணத்துல எதாவது ஒன்னுனால அவுட்டேஜ் இருக்கும். உங்க க்ளையண்ட் ஃபேக்டரி இருக்கிறது என் ஆஃபிஸ்ல இருந்து 24 கிமீ தள்ளி. லைன் மேன் ஃபேக்டரி ஏரியாவுலதான் சுத்தி கிட்டு இருப்பாரு. அவருக்குதான் ஃபீல்ட் கண்டிஷன் உடனடியா தெரியும். அதிகபட்சமா ஜே.இ.க்கு எதாவது பெரிய அசம்பாவிதமா இருந்தாதான் எனக்கு தகவல் வரும். நீங்க என்கிட்ட கேட்டீங்கன்னாலும் நான் அவங்ககிட்ட கேட்டு என்ன நடந்ததுன்னு விசாரிச்சிதான் உங்களுக்கு பதில் சொல்லணும். அதுக்கு பதிலா நீங்களே லைன் மேன், ஜே.இ., ஏ.ஈ., ஏ.டி.இ., இந்த வரிசைல கேள்வி கேட்டீங்கன்னா யார்கிட்டயாவது இருந்து உடனடியா பதில் கிடைக்கும்.’

வக்கீலுக்கு இந்த பதில் திருப்தியாக இருக்காது. எவ்ளோ பெரிய வக்கீல், கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை அதுவும் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு சாதா ஊழியர் என்று கடுப்பாவார். மறுநாள் இதை க்ரீவன்ஸ் செல்லுக்கு அனுப்பிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்.

+++

சேர்மனாக ஞான தேசிகன் இருந்த காலத்தில் ஈ.பியில் ஒரு பெரிய மாறுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே கஸ்டமர்கள் தொடர்பு கொள்ள என்று சப் ஸ்டேஷன் காண்டாக்ட் நம்பர்கள் பரவலாக மக்களிடம் சேர்த்திருந்தாலும், கஸ்டமர் கேர் மேம்பாடு என்று லைன் மேனில் ஆரம்பித்து சி.இ வரைக்கும் சகட்டு மேனிக்கு எல்லார் போன் நம்பரையும் அச்சிட்டு விநியோகம் செய்து விட்டார்கள். ராத்திரி ரெண்டு மணிக்கு கரண்ட் போனால் சுத்திக்கொண்டிருந்த ஃபேன் முழுவதுமாக நிற்பதற்கு முன்பாக 20 பேர் இ.பிக்கு ஃபோன் அடிக்கிறார்கள். ப்ரச்னை என்னவென்றால் விநியோகிக்கப்பட்ட நம்பர்கள் கஸ்டமர் கேர் நம்பர்கள் அல்ல... எந்த ப்ரச்னைக்காக அழைப்புகள் வருகின்றனவோ, அதை சரிசெய்ய ஃபீல்டில் வேலை செய்யும் ஆட்களுடையவை. நான்காவது கால் வரும்போது லைன் மேன் ஏற்கனவே கம்பத்தில் இருப்பார். கீழேயே ஜே.இயும். இவர்கள் ப்ரச்னையை சரி செய்யும் முனைப்பில் அழைப்பை எடுக்காமல் இருந்தால் போதும் நம்ம வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அவ்வளவு திமிரா என்று நேராக ஈ.ஈயை கூப்பிடுவார்கள்.

+++

இன்று ஃபேஸ்புக்கில் படித்த உண்மை சம்பவம்:

மின் கன்ஸ்யூமரான ஒரு ஃபேஸ்புக் பதிவர் ஈ.ஈயை கூப்பிடுகிறார்.

ஏற்கனவே இந்த கன்ஸ்யூமர் தன்னை கூப்பிட்டு இருக்கிறார், எடுத்தவுடனேயே ஈ.ஈயை கூப்பிடுதுதான் அவர் வாடிக்கையோ எனும் எண்ணத்தில் கன்ஸ்யூமர் ஃப்யூஸ் கால் ஆஃபிஸ், ஏ.இ.இ ஆகியவர்களை ஏற்கனவே அணுகினாரா என்று தன் நியாயமான சந்தேகத்தை கேட்கிறார்.

அவர்களை கூப்பிட்டு அவர்கள் பதில் சொல்லவில்லை என்பதால் தான் ஈ.ஈஐ கூப்பிட நேரிட்டதாக கன்ஸ்யூமர் பதில் சொல்கிறார்.

சரி என்று பவர்கட் ப்ரச்னை எதனால் என்பதை ஈ.ஈ. விளக்குகிறார்.

அதற்குள் ஃப்யூஸ் கால், ஏ.இ.இ போன்ற அடுக்குமுறை ஈ.பி நிர்வாகம் சம்பந்தப்பட்டது. அந்த அடுக்கில் வரிசையாக அழைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது. கஸ்டமர் இஸ் கிங் எனவே யாரை கூப்பிட்டாலும் பதில் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை கன்ஸ்யூமர் ஈ.ஈயிடம் வலியுருத்துகிறார்.

தாம் வேலையாக இருக்கும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட விவாதம் அவசியமா எனும் ஈ.ஈயின் பதில் வாடிக்கையாளரை கோபப்படுத்துகிறது. இன்னும் 10 நிமிடத்தில் தான் ’பொறுப்பில்லாமல்’ பேசியதற்கு ஈ.ஈ வருத்தப்பட வேண்டியிருக்கும் என்றும்  இதற்கு முன்பு அங்கு ஈ.ஈயாக இருந்து மாற்றலாகி போனவரிடம் விசாரித்தால் தான் யார் என்று தெரியும் என்றும் ஈ.பி சேர்மன்வரை இதை தான் கொண்டு போகப் போவதாகவும் ஈ ஈயிடம் போனிலேயே சவால் விட்ட் போனை வைக்கிறார்.

பேக்ரவுண்டில் என்ன நடந்தது என்று நமக்கு சொல்லப்படுவதில்லை. ஆனால் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஈ.ஈயில் ஆரம்பித்து ஏகப்பட்ட பேர் போன் செய்து தவறுக்கு வருந்துகிறார்கள். மனைவிக்கு கணவரை நினைத்து பெருமிதம். பேக்ரவுண்டில் கன்ஸ்யூமர் செய்த மேஜிக் என்ன என்று மனைவி ஆர்வமாக கேட்கிறார்.

தான் இந்த ப்ரச்னையை இத்தோடு விடப்போவதில்லை என்றும் ஈ.பி சேர்மனை சந்தித்து எழுத்து பூர்வமாக இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டபின்பே அனைவருக்கும் இதை பரவலாக சொல்லப் போவதாகவும் கன்ஸ்யூமர் சொல்வதோடு பதிவு முடிகிறது.

+++

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு தரமான சேவை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே. நியாயமற்ற சேவைக் குறைபாட்டை களைய முயற்சிப்பதும் நியாயமே. ஆனால் சிறிய அசௌகரியங்களுக்கு எல்லாம் உடனடியாக ஜனாதிபதியை அழைப்பதற்கு முன்பு கொஞ்சம் பொறுமையாக அடுத்த பக்கமும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களுடன் பேச முயற்சிக்கலாம்.

அவர்கள் கரண்டை கெபாசிட்டருக்குள் ஒளித்து தங்கள் வீட்டுக்கு கொண்டு பதுக்கவில்லை, அவர்களும் ப்ரச்னையை சரி செய்யும் முயற்சியில்தான் இருப்பார்கள் என்று அவர்கள் ப்ரச்னையை திறந்த மனதுடன் அணுக முயற்சிக்கலாம்.

ரூல் புக்கை கையில் வைத்துக்கொண்டு சேர்மனுக்கு பெட்டிஷன் போடுவதால் உடனடியாக ஈ.ஈயை வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள் என்பதில்லை.  சேர்மன் அலுவலகத்தில் சீஃப் பி.ஆர்.ஓ என்று ஈ.ஈ. கேடரில் இருக்கும் ஒரு அதிகாரி இந்த ஈ.ஈயிடம் விளக்கம் கேட்பார். ஈ.ஈ. மிகப்பெரிய ப்ரச்னைக்கு தீர்வு காணும் வேளையில் இடையில் வந்த தொலைபேசி அழைப்புக்கு தன்னால் சரியாக பேச முடியவில்லை என்று தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு  கன்ஸ்யூமருக்கு கர்டஸி விளக்கம் ஒன்று அனுப்பப்படும். கன்ஸ்யூமர் சொந்தங்களிடமும், ஃபேஸ்புக்கிலும் அதை வெளியிட்டு விழிப்புணர்வூட்டி அடுத்த பவர் அவுட்டேஜின் போது 20 பேருக்கு பதில் 60 பேர் அழைக்க ஏற்பாடு செய்யலாம்.

அடுத்த பவர் அவுட்டேஜின் போது ஈ..ஈ ஃபோன் எடுக்க மாட்டார்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::



இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் அதிகம் விரவிக்கிடக்கும் வார்த்தை “நான் யார் தெரியுமா” என்பதாகத்தான் இருக்கிறது. இந்த வார்த்தை கழிவறையில் ஆரம்பித்து படுக்கையறை வீடு வாசல் தோட்டம் தெரு ஊர் என அங்கிங்கெனாதபடி உலவிக் கொண்டிருக்கிறது. ஒரு தேனீர்க் கடையில் டீ வாங்கிவரச் சொல்லும்போது கடைக்காரர்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு நல்லா போட்டுக் கொடுப்பார் என ஆரம்பித்து நம்ம ஆள்தான் கொஞ்சம் பார்த்து பண்ணிக் கொடுங்க என்பதுவரை தன் இன்ஃப்ளூயன்ஸ்களை எல்லா இடங்களிலும் பிரயோகிப்பவர் மலிவாகக் காணக்கிடைக்கிறார்கள்.இது குறிப்பாக தமிழகத்தில் அதிகம். நான் ஒரு கேபிள் ஒளிபரப்பாளான். இரண்டு வினாடி இடையில் படம் நின்றால் போதும் உடனடியாக கோபமாக தன் அலைபேசியை எடுத்து “ரெண்டுநாளா படமே ஓடலை என்னத்த கேபிள் ஓடுது, காசு மட்டும் ஒழுங்கா வாங்கறீங்கள்ல அதுமாதிரி படத்தை ஒழுங்கா ஓட்டவேண்டாமா? என ரத்தக் கொதிப்பு பேஷண்ட்டுகள் போல ஓலமிடுமிறார்கள். ஒரு சின்ன வேலைக்கும் அமைச்சர் வரை இழுக்கிறார்கள். அல்லது அமைச்சருடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை மறைமுகமாக உணர்த்த முயல்கிறார்கள்.வெள்ளுடுப்பு சட்டைப்பையில் அம்மா அல்லது அய்யா படம் சகிதமே வலம் வருகிறார்கள். இது சாதாரண குடிமகன் வரை பரவியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இத உலகத்தில் அதிகாரத்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்கிற நிலைக்கு தள்ளப் பட்டு எல்லோரும் அதிகாரத்தை உபயோகிக்க முயல்கிறார்கள்.இரண்டு மாத வாடகை பாக்கியில் டிசி செய்தால், அடுத்த நொடி உள்ளூர் கட்சிப் பிரமுகரிடமிருந்து அழைப்பு வருகிறது. ”சார்கிட்ட வச்சிக்காத தலைவர் வீட்டு ட்ரைவர்” அண்ணேந்தான் லெஃப்ட் ஹேண்டு எதுனாலும் அண்ணனுக்கு தெரியாம அமைச்சரே சைன் போடமாட்டாரு. அவனுக்கு அவன் மைத்துனனுக்கு மைத்துனனின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகனுடைய மாமனாரின் தம்பியின் பக்கத்து வீட்டுக்காரர் வரை இந்த பட்டியல் நீள்கிறது. இவன்கள் எப்போதும் சிரித்த முகத்துடன்தான் இருக்கிறார்கள். இவன்களின் ஈகோ சீண்டப் படாதவரை. இவன்களின் ஈகோக்களால் நாம்தான் காயடித்த மாடுகள் போல பேந்தப் பேந்த முழிக்கவேண்டியிருக்கிறது.
 



சரி, உங்க கருத்து ??