<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II


முன்பொரு காலத்தில் தன்னைத்தானே எழுதிக்கொண்ட ஒரு சிறுகதையின் மிச்சம்.

....

என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை... அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய. ஆனால்... நானாக தொடர்பு கொள்ள செய்த முயற்சி எல்லாவற்றிலும் என் குரல் கேட்டவுடன் எதிர்முனையில் வெறும் மௌனம்தான் கேட்கும்.

"ஏண்டா.. என்ன திடீர்னு வந்துட்ட.. திரும்பி வேலைக்கும் போகல?"

"ஆமா, என்ன பெரிய வேலை. எனக்கு பிடிக்கல..."

மூணு வாரங்கள் அப்படியே போனது. ரயில்வே ஸ்டேஷன் ஜமாவில் டேவிட் மட்டும்தான் கவனித்தான்.

"என்னடா, எப்பவும் நாளைக்கு நாலு தம்முக்கு மேல அடிக்க மாட்ட, இன்னிக்கி என்ன.. வந்து ஒன் அவர் ஆகல அதுக்குள்ள ஒரு பாக்கெட் காலி. அதுவுமில்லாம எப்பவும் எவனையாவது தாளிச்சிகிட்டே இருப்ப.. ரெண்டு நாளா கம்முன்னே இருக்க.. என்ன மேட்டரு"

இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அவளுக்கு பிடிக்காது.

"ஒண்ணுமில்லடா"

"என்ன அந்த பொண்ணு மேட்டரா?"

நிமிர்ந்து பார்த்தேன்.

"எல்லாம் குத்துமதிப்பா யூகிச்சி வச்சிட்டோம்டா.. நீயா என்னிக்காவது சொல்லுவன்னு வெயிட் பண்ணோம். என்ன ஆச்சு திடீர்னு"

"தெரியில..."

"...."

"...."

"சரி விடு. சும்மா நீ என் ஃப்ரண்டுன்னு இத சொல்றேன்னு நினைக்காத.. சீரியஸா சொல்றேன். அவளுக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்... வேலைய பாரு"

கோயமுத்தூர் ரூம்மேட்டுக்கு ஃபோன் செய்து அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்த என் சமாச்சாரங்களை அடுத்த முறை அவன் ஊருக்கு வரும்போது வீட்டில் தந்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன். வந்தாரை வாழவைக்கும் ட்ரிப்ளிக்கேன் மேன்ஷனில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது.

சென்னையில் படிப்புக்காக பணம் பிரட்ட அலைந்தது, கிடைத்த வாய்ப்புக்கு பங்கம் வராமல் படித்தது அல்லது படிக்க முயற்சித்தது, பகலெல்லாம் பல்லவன் பல்லனாக வேலை தேடி அலைந்தது, பீச்சாங்கரையில் இரவு நேர நிலா ஒளி + மாமாக்கள் அறிவுரைகளுக்கு மத்தியில் தண்ணியடித்து நீந்தியது என்று ஓட்டி ஒரு வேலையில் உட்கார்ந்த போது ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது அவளை 'அகஸ்மாத்தாக' சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டது. அதற்கப்புறம் இரண்டு நாடுகள் மாறி இன்னுமொரு மூன்றாண்டுகள் கழித்து வெகேஷனில் ஊருக்கு போயிருந்த போது ஆங்காங்கே சிதறிப்போயிருந்த நண்பர்களை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்து சந்தித்த ஒரு மாலைப்பொழுதில் பேச்சுவாக்கில் டேவிட் கேட்டான்.

"ரயில்வே ஸ்டேஷன்ல நாம பேசினமே ஞாபகம் இருக்கா.. இப்ப நினைச்சா தமாஷா இருக்கு இல்ல"

"இல்ல..."

"இன்னுமா ஞாபகம் வச்சிருக்க"

"ஒரு ஓரமா.. ஆமா இப்ப அவள பத்தின டீடய்ல்ஸ் யார்ட்ட கிடைக்கும். அவ பழைய நம்பர்க்கு ஃபோன் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னு வருது"

"நம்ம மலையாளத்தான்கிட்ட இருக்கும். அவன் இப்ப பெங்களூர்ல இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல இருக்கான்"

*

"டேய்.. நாந்தாண்டா"

"சொல்லு.. எப்ப வந்த"

"அதெல்லாம் நேரில பேசிக்கலாம். நீ அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி மெட்ராஸ் வா"

பத்தரை மணிக்கு கால்டாக்ஸியில் மலையாளத்தான் வந்து இறங்கிய போதே பாதி பேர் மட்டையாகியிருந்தனர். அப்புறம் முதல் விமான பயணத்தின் பக்கத்து இருக்கை ஃபிகரிடம் நடந்த கடலை பற்றியெல்லாம் விவரித்துவிட்டு மலையாளத்தான் மலையேறிய போது மணி மூன்றரை. டேவிட் கேட்டான்.

"டேய், அந்த இன்ஸ்டிட்யூட்ல வேலை செஞ்சுதே ஒரு பொண்ணு.. ஞாபகம் இருக்கா.. நீ அவங்க ஃபேமிலி கூட எல்லாம் நல்லா பழக்கம் இல்ல"

"நல்லான்னு இல்ல.. ஓரளவு. அவங்கப்பா அவங்க ஆபிஸ் மேட்டர் எல்லாம் நம்ம கடையிலதான் ப்ரிண்டிங்கு கொடுப்பாரு.. அந்த பொண்ணு மேல இவனுக்கு ஒரு கண்ணு இல்ல"

"அதெல்லாம் கிடக்கட்டும், அவங்க இப்ப எங்க"

"அவங்க அப்பாவுக்கு அப்பவே வேலூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சிடா.. அதுக்கப்புறம் அவ்வளவா கான்டாக்ட் இல்ல"

"வேலூர் நம்பர் உங்கிட்ட இருக்கா"

"பெங்களூர்ல இருக்கு.. திங்கக்கிழம ஊருக்கு போனவுடனே போன் பண்ணி சொல்றேன்"

செவ்வாய்க்கிழமை வேலூர் நம்பருக்கு போன் செய்தபோது "இல்லீங்களே... ஆறுமாசமா இந்த நம்பர் எங்களுதுதான்.. அப்படி யாரும் தெரியாதுங்களே" என்றார்கள்.

நான் இந்தியாவில் இருந்து திரும்பிய இரு மாதங்களில் அவளுக்கு கல்யாணம் ஆனது என்ற செய்தியை பிறகு மலையாளத்தான் இ-மெயில் செய்தான்.

**

ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவுடன் லாங் வீக்கெண்டுக்காக நயாகராவுக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அருவி என்றவுடன் பழைய அருவிப்பயண கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர..

"அப்ப ஒரு தடவ சித்தப்பா ஃபேமிலியோட வந்தப்போ, எத்தனை தடவ இந்த அருவிய பாக்குறது எனக்கு போரடிக்குதுன்னு, நான் ஒகேனக்கலுக்கு வரலைன்னு சொல்லி சித்தப்பா ஏகத்துக்கும் அப்ஸெட் ஆயிடுச்சே.. அன்னிக்கி நான் வராததுக்கு காரணம் வேற...போக வேண்டாம்னு எல்லாம் அவ சொல்லல.. போகணுமான்னு கேட்டா, நான் தான் வரலன்னுட்டேன்"

"என்னங்க அம்மாவுக்கு முன்னாடியே இதெல்லாம் சொல்றீங்க"

"ஆமா.. ஏழு வருசம் ஆயிடுச்சி.. இனி என்ன.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. அதுவுமில்லாம அம்மாவுக்கும் அப்பவே அரசல் புரசலா தெரியும் ஏம்மா?"

"அரசல் புரசலா என்ன.. நல்லாவே தெரியும்... நீ கோயமுத்தூர் வேலைய விட்டுட்டு வந்தியே அதுக்கு ஒரு ரெண்டு நாள் முந்தி மிஷினுக்கு போயிட்டு திரும்பி வரும்போது இண்ஸ்டிட்யூட்ல அந்த பொண்ண பார்த்தேன். என்னன்னு இப்ப ஞாபகம் இல்ல, ஆனா அன்னிக்கி அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் பேசிட்டுதான் வந்தேன்..."




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முகமூடி

மீண்டும் அசத்தியிருக்கிறீர்கள்... கொஞமாக சுஜாதாவின் தூண்டில் கதைகள் மாதிரி,

இதில் எனக்கு பிடித்தது இரண்டையும் தனித்தனி சிறுகதைகளாகவும் கொள்ளலாம்...ஒரே கதையாகவும் கொள்ளலாம். அப்படியாக அமைத்த கதை அமைப்பு சூப்பர்.

அது சரி...ஒரு வருடம் கழித்து சீக்குவல் எழுதியதின் ரகசியம் என்ன? நேத்து ராத்திரி படுத்துட்டு யோசிச்சிட்டு இருக்கும் போது கதைக்கான கரு,ஐடியா, இன்ஸ்பிரேசன் அல்லாம் கிடைத்தது என்று பீலா விட்டாலும் நாங்க நம்பித்தான் ஆகணும் :))

மீண்டும் ஒரு முறை மனமார்ந்த பாராட்டுக்கள்
 



பாஸ் அருமையான நடை...அம்மாவின் அஞ்சு நிமிட பேச்சு ஒரு மகனின் ஆயுள் கால ரகசிய வலியாகிப் போனதோ?!! :)
 



///அது சரி...ஒரு வருடம் கழித்து சீக்குவல் எழுதியதின் ரகசியம் என்ன? ///

மன்னிக்கவும்...தவறாக சொல்லி விட்டேன்.ஒரு வருடமல்ல... இரண்டு வருடங்கள் :)))
 



ச. சங்கர், அச், அச் ஒன்னுமில்லே "பரண்" ல தூசி இருக்குமில்லே :-)
 



ramachandranusha(உஷா) said...
""ச. சங்கர், அச், அச் ஒன்னுமில்லே "பரண்" ல தூசி இருக்குமில்லே :-)""


:)))
 



நன்றி ச.சங்கர்.

// ஒரு வருடம் கழித்து சீக்குவல் எழுதியதின் ரகசியம் என்ன // இது சம்பந்தமா உஷா என்னமோ எழுதியிருக்காங்களே, என்னன்னு உங்களுக்காச்சும் புரியுதா?

*

நன்றி உஷா. என்னமோ சொல்றீங்க.. என்னன்னுதான் புரியல.. உண்மையில் நேத்து ராத்திரி படுத்துட்டு யோசிச்சிட்டு இருக்கும் போது கதைக்கான கரு,ஐடியா, இன்ஸ்பிரேசன் அல்லாம் கிடைத்தது

*

நன்றி தேவ்

// ஆயுள் கால ரகசிய வலியாகிப் போனதோ // தினமும் புதிது புதிதாய் அனுபவங்கள் கிடைக்கையில் ஆயுள் கால வலி என்று ஒன்று இருக்க முடியுமா? காலப்போக்கில் வலிகள் மட்டுமல்ல முகங்கள் கூட மறந்துவிடும் என்றே நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
 



முகமூடி,

I endorse Sankar's views :)

Excellent story!

usha madam ennamO solla varAngkanRa aLavukku puriyuthu ;-)
 



பரண்ல இருந்த பழைய புத்தகத்தைத் தூசி தட்டி எடுத்துப் புரட்டிப் பார்த்தபின் இன்ஸ்பிரேஷன் வந்து, செய்த imit-creation (imitation என்று சொல்வது எங்கப் பழக்கம் இல்லை :-)) ) என்று சொல்கிறார் உஷாஜி. (அய்யா, கொளுத்திப் போட்டாச்சு :-)) ) - பி.கே. சிவகுமார்
 



தல, சூப்பர் கதை!! என்னதான் புது புது அனுபவமானாலும் பழைய வலிகள் மறந்து போகாது தல.

உஷாக்கா என்னமோ சொல்லி இருக்காங்க!! :))
 



எங்க ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை,எங்கு நிறுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.
அது இங்கு சரியாகவே நிறுத்தப்பட்டுடிருக்கிறது.
 



இந்த கதையின் தொடர்ச்சியை இரண்டு வருஷம் கழிச்சு ்வெளியிட்டதே அந்தக் காதலுக்கு செய்த ஒரு கதாஞ்சலி எனச் சொல்லலாம்.

நறுுக்கென இருந்தது முடிவு வரிகள்.
 



விளக்கம்- தமிழ்மணத்தில் பரண் என்று ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறதா, அதில் தன்னுடைய பழைய கதையைப் பார்த்ததும், எழுத்தாளரின் சிந்தனையைத் தூண்டப்பட்டு கதை தானே செகண்டு பார்ட் எழுதிக் கொண்டது.

வழக்கப்படி ஒரு சந்தேகம்- எழுத்தாளர் ஐயா! பையனின் அம்மா, பெண்ணுடன் பேசி காதலுக்கு டாடா காட்ட வைத்தார் என்றா சொல்ல வருகிறீர்கள்?
 



முகமூடி,

அம்மாக்களின் தலையீட்டால் இன்னும் எனென்னவோ நடக்கிறது.

என்னைப்பொறுத்தவரை படிக்க மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனென்றல் இதுதான் வாடிக்கையாக நிகழ்கிறதே.கர்ப்பனை பண்ணிப்பார்த்தேன்..

'எனக்கு இருக்கிற்தே அவன் மட்டும்தான்,இது mild,இன்னும், ஸ்ட்ராங்க அப்பிடின்னா....அவன் ஆம்பிள்ளை..என்ன வேணா பண்ணுவான்.....'
 



நன்றி எ.அ.அ.பாலா. உங்களுக்கு புரியறது இருக்கட்டும். எனக்கு புரியாத விஷயத்தை கொஞ்சம் சொல்லுங்க. இந்த கி.ஆ.ஆ அப்படீங்கிறது எ.அ.அ. வோட மனசாட்சி அப்படீன்னு சபையில பேச்சிருக்கே. அத பத்தி.

*

@ பி.கே.எஸ். இதுல எங்கியாவது சுபமங்களா 1957ல் வெளிவந்தது அப்படின்னு குறிப்பு இருக்கா? அப்புறம் என்ன இமிட்-க்ரியேஷன் அப்படீன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க :))

*

@ இ.கொ. // புது புது அனுபவமானாலும் பழைய வலிகள் மறந்து போகாது // இத உங்க வீட்டுக்காரம்மாகிட்ட படிக்க கொடுக்கக்கூடிய தைரியம் இருக்கான்னு உஷா கேட்கிறாங்க. சும்மா சுறுசுறுன்னு ரோஷமாகி அந்த விஷப்பரீட்சையிலெல்லாம் இறங்காதீங்க. அப்புறம் ரீஜண்டா வாங்கியிருக்கிற வெயிட் மெஷின்ல நீங்க ஏறதுக்கு பதிலா அதெல்லாம் உங்க மேல ஏறும். அப்பால உங்க இஷ்டம்.

*

நன்றி வடுவூர் குமார்

*

@ வி.எஸ்.கே. ஒரு நிமிஷம் கீதாஞ்சலின்னு சொல்றீங்களோன்னு நினைச்சி புல்லரிச்சிட்டேன்

*

@ உஷா

// விளக்கம்- // என்னங்க இவ்ளோ நல்லவரா இருக்கீங்க.. அதெல்லாம் எல்லாருக்கும் பிரியிது. சில சமயம் பிரிந்தும் பிரியாமல் இருக்கிறது ஒரு சொகம்தான்.

// வழக்கப்படி ஒரு சந்தேகம் // இந்த மாதிரி ஓவரா கட்டுடைச்சா அப்புறம் பின்னவீனத்துவ எழுத்துக்கே (அப்படீன்னா இன்னாதாம்பா அர்த்தம்) மதிப்பு இருக்காதுங்கிறது உங்களுக்கு தெரியாதா?
 



/////முகமூடி said...
நன்றி எ.அ.அ.பாலா. உங்களுக்கு புரியறது இருக்கட்டும். எனக்கு புரியாத விஷயத்தை கொஞ்சம் சொல்லுங்க. இந்த கி.ஆ.ஆ அப்படீங்கிறது எ.அ.அ. வோட மனசாட்சி அப்படீன்னு சபையில பேச்சிருக்கே. அத பத்தி.////

Well...Well...Well முகமூடி யாருன்னு எல்லோரும் குழம்பிட்டிருக்கும் போது முகமூடிக்கே ஒரு சந்தேகமா...இதோ தீர்த்து வைக்கிறேன்.

1.அவர் எ அ அ பாலா கிடையாது--எ அ பாலாதான்:)

2.நான் உபயோகிக்கும் பெயர் கி அ அ அனானி---கி ஆ ஆ கிடையாது :)

3.நான் எ அ பாலாவின் மனசாட்சி இல்லை ஏனென்றால் அவருக்கு மனசாட்சியே கிடையாது :) ( நான் அனுப்புற நிறைய போஸ்டிங்குகளில் சிலது தான் போடுறார்)

4. வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம் எ அ பாலாவே சொன்ன மாதிரி நான் அவரை எனது கொ ப செவாக பண்ணி விட்டேன் :)

விளக்கம் போதுமா?

கி அ அ அனானி
 



சரி, உங்க கருத்து ??