Wednesday, April 4, 2007

*னவீணத்தூவ பதிவு எழுதுவது எப்படி


இதென்ன இப்படி ஒரு துவம்/இஸம் இருக்கிறதா? என்றெல்லாம் வியப்பு அடைந்தால் நீங்கள் இன்னும் பதிவுலக பச்சா என்று அர்த்தம். யு ஆர் ரீடைரக்டட்டு & ரீரௌட்ட்டு டு :: ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி?

வலையுலகுல இந்த துவமெல்லாம் சகஜமடா.. அப்படியே நமக்கு ஏத்த மாதிரி ஒரு துவம் இல்லையின்னா நாமளா அப்பிடியே ஒண்ணு கிரியேட் பண்றதுதான் அப்படீன்ற டைப்பா நீங்க, அப்டீன்னா கமான் ஜ்டார்ட் மீசிக்..

இடுகை போடுறது படுத்துக்கிட்டு போத்திக்கிறது மாதிரின்னா, இந்த மாரி துவம் பதிவுகள் சமைக்கிறது போத்திகிட்டு படுக்கிறது மாதிரி. பாக்க வித்தியாசம இருக்குமின்னாலும் சமாச்சார் என்னவோ ஒண்ணுதான்.. பாத்தா மலைப்பா இருந்தாலும் ஒரு தடவ சமைச்சா போதும், அப்புறம் "ஜஸ்ட் தோ மினிட்ஸ்" அளவு பழகிடும்.

*

அ) பிச்சி போடுதல். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது சப்பாத்தி சுடும் நேரத்தில் உங்கள் ரவுசு பொறுக்காமல் உங்களை அ(ம)டக்க ஒரு டெம்பரரி ரிலீப் காக்கா சப்பாத்தி உங்களிடம் தரப்படும். அந்த சப்பாத்தியை...

1. கொடுத்தவுடன் முழுங்கிவிட்டு ரீவியில் யம்மாடி ஆத்தாடி பாக்க போவேன்
2. நாய்க்கு கொடுத்துவிடுவேன்
3. அதை கண்ட மாதிரி பிச்சி போட்டுவிட்டு அதில் பொம்மை உருவங்கள் கண்டுபிடித்து பயர் இஞ்சின் மாதிரி ஒரு உருவம் தெரிந்தால் அதற்கு வேலை தருவதற்காக கார்ப்பெட்டில் மூச்சா போவேன்

ஆ) பிரிச்சி மேய்வது. . உம், பக்கார்டி என்ற வார்த்தையை பார்த்தால்...

1. ரம் ஞாபகம்
2. அப்படின்னா என்னா
3. பக்கா ஆருடி, பக்கு கார்டு, பக்கா காருடி, பக்க கரடி, பக்காரு டிங், பக்கா டிங்கரடிங்காலே என்றெல்லாம் எந்த ஒரு வார்த்தையும் ஒரே வார்த்தையாக தோன்றாமல் பல வார்த்தைகளாக பல்லிளித்து பரிமாணம் காண்பிக்கிறது.

இ) வார்த்தை தொடுத்தல். ங்கா என்று சொல்ல சொன்னால்...

1. வேற வேல இல்ல என்று தூங்க போவேன்
2. ங்கா என்று மட்டும் சொல்லிவிட்டு நாய்க்கு எத்தினி பல்லு என்று அது வாய நோண்டி எண்ணி பார்ப்பேன்
3. ங்கா, தங்கா, மங்கா, திங்கா, ஜும்பா, ஜும்பரிக்கி ஜுலூப்பா, ஜும்பாலகரி, ஜலபுலஜங்க்ஸ், ஜிங்கிரிஜிப்பிடி, ஜிலுஜிலுஜும்பா, ஜங்கரிஜம்பா என்று ரைமிங்காக வார்த்தைகள் பிடிப்பேன்.

ஈ) ரெட்டை கிளவி (கிழவி அல்ல) காதல். கந்த சஷ்டி கவசம் பாடக்கொடுத்தால்...

1. நாலி வரி பாடிவிட்டு முழுசா பாடுனதாக கத விட்டு அதுக்கு லஞ்சமா சாக்லேட் கேப்பேன்
2. இது ஆத்திக கடவுளுக்காக அகண்ட வெளியிலந்து வந்த பாப்பான் எளுதுனது. இங்கயே புழு பூச்சியில இருந்து பொறந்த நம்ம சாதி சனம் இத செய்யக்கூடாதுன்னு அத எரிச்சி பீடி பத்திக்குவேன்
3. எடுத்தவுடன் நேராக பாதி பாட்டுக்கு போய் ரரரர,ரிரிரிரிரி,ருருருருரு,நகநகநக,டிகுகுண, டகுடகு,கடகட,கட்டுக்கடகட,டிகுடிகு,டங்குடிங்கிகு, விந்து விந்து என்ற பாராவை மட்டும் 'சனியனே போதும் பாடுனது, நிறுத்தி தொலை' என்று யாராவது பெல்டால் அடிக்கும்வரை கத்தி பாடுவேன்

உ) தொடர்வண்டி வார்த்தைகள். சுவத்தில் பல்லி சப்தமிட்டால்...

1. அது மாதிரியே சப்தமிடுவேன்
2. பல்லி வாலை எப்படியாவது வெட்ட முடிகிறதா என்று பார்ப்பேன்
3. பல்லி சப்பு தட்டுது, பறவ எச்சி கொட்டுது, பாம்பு கிஸ்ஸு அடிக்கிது, காண்டா மிருகம் குமுறுது, கழுத உறுமுது, கண்டாங்கி சேல நழுவுது, காட்டன் மேல தழுவுது, காட்டுச்சுப்பிரமணி நாட்டுக்கு போனா, கழுதமேல ஏற்ற குமரன் வேட்டைக்கு போனான் என்று தொடர்ச்சியாக சம்பந்தமில்லாமல் முழ நீளத்துக்கு முழங்குவேன்

ஊ) வார்த்தை அலங்காரம். I gotta pee என்பதை...

1. மூச்சா போகணும்
2. டாய்லட்
3. முதுகு தண்டுவடம், மூளை ஸ்டெம், செரிபரல் கார்டெக்ஸ் ஆகியவற்றின் நரம்பு மண்டலம் தசைகளின் மூலம் கட்டுபடுத்தும் அளவு நூறு முதல் நூத்திஐம்பது மில்லி என்றான காரணத்தால் கொஞ்சம் அசவுகரியம் ஏற்பட்டு மூத்திரப்பை எனப்படும் ப்ளாடரிலிருந்து மூத்திரம் வெளியேறியது என்றுதான் சொல்லுவேன்.

மேற்கண்ட மேட்டர்களில் எல்லாவற்றிலும் எண் 3ஐ தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவை விட நவீனத்த்துவம் ஊறிக்கிடக்கிறது. சும்மா அப்படியே பீச்ச வேண்டியதுதான். மற்ற எண்காரர்களும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சோனாகஞ்சியில் பாடி ஜோசியம் பாத்துவிட்டு வந்து அ முதல் ஊ வரை உள்ள குறிப்புகளை உபயோகித்து 'ஆழமான பதிவு' தயாரிக்கும்போது மீந்து போன சில பல நவீனத்துவ வார்த்தைகளையும் ஆங்காங்கே தூவி I gotta pee என்பதை எடுத்துக்கொண்டு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு சின்ன செய்முறை குறிப்பு கொறிக்கவும்.

" தன்னாலே தில்லாலே தண்டுவடம் நல்லால்லே. அம்மு கம்முனு ஆச்சி, எனக்கோ ஸ்டெம்மு ஸ்டன்னாச்சி.. கால்டெக்ஸு பாக்கத்துல கீது ஒரு பங்கு, நம்ம கார்ட்டேக்ஸுக்கோ ஊது சங்கு. எல்லாமும் சேந்துகிச்சி, நாமோ ஒரு சோத்து பச்சி மச்சி குச்சி கச்சி. தசைகளின் பின்ன ஏற்பட்ட கட்டுப்பாடு கடுப்பு கட்டுப்படு கட்டுக்கடங்காமல் கட்டு கட்டு கட்டுன்னு கடகடகடன்னு லொடலொடவா ஆயி கொஞ்ச போயி மிஞ்ச நாயி. ஊர்க்கோடி ஆல, பலா, வேப்ப, முருங்க, விலா, வேம்ப, ஆலிலக்கு, புல்லலுக்கு, புதினா, சிறுகீர, அறகீர, முழுகீர, பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, ஜூப்புமுர, இஞ்சிமுரப்பா, ஆலோல மூங்கி காட்டுல காச்சுர சாராயத்த சூடா அடிக்கிம்போது போத தெரியிற நூறு நூத்து அம்பது மில்லி மாதிரி எனக்கும் பிளாட்டரு க்ளாட்டரு ஆகாம சும்மா சலசலன்னும் சல்லுன்னும் (மூத்திர) கொழாய் வழியா குறியால வெளியேத்தினேன்ம்பா "

(மூத்திரம் போன்ற வார்த்தைகள் சரளமாக எழுதவும். தயக்கம் வேண்டாம். உங்கள் ஜாதியை பொறுத்து 'வார்த்தையில் இல்லை நாகரீகம். கருத்தில் மட்டும்தான்' என்ற ஆதரவு குரல் விட, for a nominal price, 'ஏஜன்சி' மூலம் ஆள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்)

ஓரளவு க்ளோஸா வரீங்களா.. ஓகே. இதுமாதிரியே இருக்க வேண்டும் என்பதில்லை, ஓவ்வொருவர் எழுத்தும் தனித்தன்மை கொண்ட நவீனத்துவம்தான். இந்த பார்முலா படி இப்போ இப்பதிவின் தலைப்பை பாருங்கள்.

*நவீனத்துவ என்பதை ஒரு எதுகை மோனையோடு (கே)ன+வீணா+த்தூ+வ என்பதாக பார்க்கும் சித்தி அடைந்திருப்பீர்கள்..

இப்போது நீங்கள் உங்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் - பதிவே சம்பந்தமில்லாததுதான், இதுல எங்க அதுக்கும் சம்பந்தமில்லாமன்னு எல்லாம் சலிச்சிக்க கூடாது - ஒரு ம்யூஜிக் போடணும். அட்லீஸ்ட் அதுவாவது உங்கட பதிவை கஷ்டப்பட்டு படிக்சி சன்னி கண்ட சனங்களுக்கு ஆறுதலா இருக்கும்.

http://www.musicindiaonline.com/p/x/0UX2koX1vd.As1NMvHdW/

இப்பிடி மூசிக் போடறதுல உள்ள இன்னொரு பிரயோசனம், இதுல டார்க்கெட்டு ஆடியன்ஸுக்கு எதாவது மெசேஜ் இருக்குமோந்து சாதா ரணம், டார் கெட்டு ரெண்டுமே பாட்ட முழுசா கேக்கும். அததுக்கு ஏத்தா மாதிரி பாட்ட பதிவோட லிங்கு பன்னி கெரோன்னு போகும்.

மண்ட சாயுற நேரம் கொஞ்ச நஞ்ச விசரயும் விட்டு வக்க கூடாது. மொத்தமா போட்டு தள்ள இன்னொரு விசயமும் இருக்கு. அத போட்டாத்தான் பதிவு முழுசு பெறும். அது படம்.

உங்க கம்பியூட்டரில் உள்ல குப்ப கூடயில் (அதாம் ரீசைக்கிளு பின்னு) எதாவது படம் இருக்காண்டு பாக்கோணும். அத ரீ ஸ்டோரு பண்ணிக்கணும். அந்த படத்த மைக்ரோசாப்டு பெயிண்டு பிரஸ்ஷுல ஓப்பன் பண்ணி அதுல ஒரு பாகத்த மட்டும் வெட்டி எடுக்கணும். அதாவது உங்க படம் 1280 x 1024 என்றால் ரேண்டமா அந்த படத்துல ஒரு பகுதிய 128 x 102 அளவுல வெட்டி புது படமா உருவாக்கிக்கோணும். பின் நவீனத்துக்கு ஏத்தா மாரி *னி, *த்து சம்பந்தப்பட்ட படங்களா இருந்தா ரொம்ப நல்லது. (இந்த வார்த்தைகளை பார்த்தால் உங்களுக்கு உடனே கூனி, கூத்து என்பதாக தோன்றினால் நீங்கள் இன்னும் முன்நவீனத்திலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பின்நவீனத்துவவாதியா இருந்தால் உங்களுக்கு அந்த வார்த்தைகள் சோ சோ சோ சோனி, நா நா நா நாத்து என்பதாக் தோன்றவேண்டும்)

ஹோம் வொர்க் :: சென்ற பதிவில் சொன்ன 'தி பார்க்' கேட்டுக்கு வெளியே குந்திகினு இருந்த ஒரு ஆளிடம் நடந்த இந்த உரையாடலை, கேன வீண த்தூ வ மார்க்க ச்சீய ரண பதிவாக மாற்றவும்.

ஏம்பா.. வருசம் முச்சூட இப்பிடி அழுக்காவே திரியிறியே. பாரு.. தலய தண்ணியே காணாம சிக்கு புடிச்சி கட்டி தட்டி போயி குருவி கூடு கட்டி வச்சிருக்கு. இதுக்கு மேல ஓட்டையே வுழாதுங்கிற அளவுல கிழிஞ்சி போன சட்டையும் முழுசு அரையாகி நூல் நூலா தொங்கற டப்பா டவுசரும் போட்ருக்க. நகம் ஏகத்துக்கும் வளந்து அதுக்கு கீழ அழுக்கு படிஞ்சி கிடக்கு. நாத்தம் வர கிழிஞ்ச சாக்க காவக்கார போர்வைன்னு போத்திகிட்டு துண்டு சுருட்ட வாயில வச்சிகிட்டே திரியிற. எவ்வளவோ பேர் நல்ல துணிமணி தராங்களே, ஒனக்கு ஏண்டாப்பா இப்பிடியே இருக்கணும்னு தோணுதுன்னு ஒரு வார்த்தை கேட்டா.... போடா வெண்ண, போன தீவாளிக்கி கோடி வூட்டு (லாஸ்) ஜிஞ்ஜிலிக்கி கொடுத்த கோமேதகம் பிராண்டு ஜட்டி போட்ருந்தனே பாக்கலியா.. என்ன பத்தி இந்த மாரி இன்னொருக்கா பேசுன ஒனக்கும் சாக்ரமண்டோ சங்கிலி பருப்பு கெதிதான்னு வுட்டான் ஒரு சாபம்.

*

வெயிட். பதிவு இவ்ளோதான்னாலும் அது முழுமை பெற இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அது நவீனத்துவத்தை அடுத்த நிலைக்கு, அதாவது இடுகையின் பின்னூட்டிலும் கொண்டு செல்லுதல்.

அதாவது உங்கள் இடுகையின் முதல் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

பின் ஊட்டு ஒன்று, அதில கேள்வி ரெண்டு ::

அ) அண்ணை, இந்த பதிவுல நீங்க சொல்லாதது எதுவும் உண்டா?
ஆ) அண்ணை, இந்த பதிவுல அப்பால கொஞ்சம் மப்பால நீங்க சொல்ல நனைக்கிறது எதுனா உண்டா?

- தன் வாயால தனக்கு தானே வெச்ச நெருப்பால வெந்த றக்கயால பறக்க முடியாம விந்தி விந்தி நடக்குற பாம்புடம்பும் யாளிமுகமும் கொண்ட நாத விந்து பேரு கொண்ட ஒரு ஜந்து (சுருக்கமா FD,Handicapped)

*

அதாவது உங்கள் பதிவின் இரண்டாம் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

ஒண்ணுமில்ல FDHங்கிற பேருல வந்த பின்னூட்டம் எனக்கு நானே போட்டுகிட்டதுதான். அதாவது திராவிட கச்சி தலைவரு கரு.நா.நிதி நெதமும் யாருக்குனா மெசேஜ் கொடுக்கணுமின்னு ஆசப்பட்டா இப்படித்தான் கூவாம்பேட்ட குப்புசாமி கேக்குறதா ஒரு கேள்விய எளுதி, உடன்கட்டை ஏறுற ஈன பிழைப்பேன்னு ஒரு பதிலும் எளுதி ஒட்டுவாறு. அது மாதிரியே, நானும் மெசேஜ் கொடுக்கலாமின்னு கேள்வி கேட்டுகினேன். கேட்டவரு பேரு பேன்ஸி பனியனாட்டமா இருக்கா.. இப்ப பதில்.

பறக்கவியால ஜந்து, இங்க வந்து குந்து, போகப்போற நொந்து. இரு மொதல்ல ஒரு கவித சொல்லிக்கிறேன்.நான் கவிஞர் குடுமிபேட்ட குஞ்ஞாயிங்கிற நாமகிரகணத்துல தேசவிசாரியா அலைஞ்ச ப்போ எளுதுனது.. இப்ப உட்டா அப்புறம் எப்பத்தான் இத நான் சொல் உரது. கேளு,

வாலாட்டி திரிகிறேன் நான்,
வள்ளென்று குலைக்கிறாய் நீ,
நம்மிருவரில் யாரடி நாய்?

- சிர்கா 37/13/1469

(கலைக்கிற நாய் வெறிக்காது மாதிரி புது கிழமொழி யாராவது எளுதுனா, அவங்களுக்கு அண்டாகாகசம் ஒரு பானை எலவச திட்டத்துல திரட்டி தரப்படும்)

அ) அப்பால என்னா கேட்ட, சொல்லாதது எதுவும் உண்டா... இதுல எதாவது சொல்லியிருக்கேன்னு நினைச்சியே அதுக்கே ஒனக்கு மாலும் ஜாலும் போடலாம்னாலும் சோக்கா கேட்டியே ஒரு கேள்வியேன்னு பதில் சொல்றேன் கேளு. இது ஒரு புவிக்கோட்டு கேட்டு பதிவு. அதாவது வல்லூறுலியோ கடலாமையிலயோ பிரயாணிச்சி ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி தூர தேசத்துல இருக்குற சிங்கத்தலை ஊருக்கு போனா, அங்க இலக்கிய விசாரத்துல என்ன விட மேன்மை தங்கிய அண்ணை ஒருத்தரு இருப்பாரு. அவரு எந்த மனவிசாரமும், தன சகாப்தமும், சகல சஞ்சாரங்களும் இல்லாத அட்வைஸு எளுத்தையே குப்பன்னுட்டாரு. அப்ப ரத்த கொதிப்பு தரும் இத்த என்னன்ன சொல்வாரு. அதனால அவருக்கு ஒரு முன்-வருத்தத்த பின்னாள்ல இல்லாம இந்நாள்லயே பேஸ்ட் அண்ட் போஸ்ட் பண்ணிட்டு எங்ட குப்பையில யாருக்க்காவது கோமேதகம் இல்லையின்னாலும் கோலிகுண்டாவது கெடக்காமலா போகுமின்னு மனச தேத்திங்கோன்னு மட்டும் சொல்லிக்கிறேன்

ஆ) அம்பு உட்ட ஒடம்பொறப்பே, நீ கேக்கிறியோ கேக்கலயோ சொல்லிக்கிரேன் கேளு. இது இதோட கடேசி. எது இதோட கடேசின்னு கேக்காத. இது இதோட கடேசிதான்.. அடுத்த தடவ இத நான் திருப்பியும் சொல்வேன். அப்போ போன தடவ கடேசின்னு சொன்னியே வாத்யாரேன்னு கேக்காத. அது அப்போதைய கடேசி. இது இப்போதைய கடேசி. கடிச்சி விட்ட காயமும், கிளிச்சி விட்ட கிங்கரரும் சும்மா இருக்குமோ சண்டமாருதமே என் ஞானத்தங்கமே. அதனால எத்தன தடவ சொன்னாலும், அந்த வார்த்த அப்போதக்கி மட்டும்தான் கடேசிய தவிர அது எப்போதைக்கும் கடேசி இல்லன்னு புரிஞ்சிக்க. அப்புறம் எம்க்கிட்ட இருக்கிற பெருங்காய டப்பாவுக்கு வயசு ரொம்ப ஆச்சி. அதுனால 83 வரிசம் மின்னாடி வாசமா இருந்ததயே கெலரி கெளரி இப்பவும் காலி டப்பாவுல வாசன இருக்கான்னு கேட்டு ரணகள ப் படுத்தாத..அப்புறம் நான் நேத்தி பொறந்த பாப்பாவுக்கும் அடுத்த வருசம் பொறக்கலாமான்னு ஆச்சரியமா நீந்திகிட்ட இருக்கிற வாலுள்ள வெள்ள ஆசாமிகிட்டயும் என்ன பத்தி சொல்றேன் கேளுன்னு இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆக்கிக்குவேன். நாள்பட சட்டி சுட்டதடா கை விட்டதடான்னுதான் ஆகுதே தவிர பிரயோசனம் எதுவும் இருக்கிறதா காணும். ஆகவே இதே கடஏசி. நெஞ்சம் கொஞ்சமாக http://www.musicindiaonline.com/p/x/gqQgCnsJSS.As1NMvHdW/ கேட்டு சுகம் பெறவும்.

*

தட்ஸ் ஆல். உங்களுக்கு *னவீணாத்தூவ பதிவு உழுவது கைகூட அந்த கண்டி கதிர்காமன் அருள் புரிவானாக.



21 comments:

  1. அண்ணை, இந்த பதிவுல அப்பால கொஞ்சம் மப்பால நீங்க சொல்ல நனைக்கிறது எதுனா உண்டா?

    ஒரு ரவுண்ட்ல குத்து லிமிட்லாம் கிடையாதா? இப்படி சகட்டுமேனிக்கு விட்டாக்க என்னாவறதாம்?

    டிஸ்கி: நான் யாரையும் *குறிப்பிட்டு* சொல்லவில்லை. எனக்குச் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அப்பாலிக்கா வரேன்.

    ReplyDelete
  2. // அண்ணை, இந்த பதிவுல அப்பால கொஞ்சம் மப்பால நீங்க சொல்ல நனைக்கிறது எதுனா உண்டா? //

    இந்த மப்பே இன்னும் கலயல.. இதுக்க அப்பாலயா... எனக்கே தெரியாம இருந்தாலும் இருக்கும். எதுக்கும் யூ ட்யூபுல போயி தி மாஸ்க் ஸ்பானிசு வெர்சன்னு எதுனா இருக்கான்னு தேடி பாருங்க :))

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. //எதாவது சொல்லியிருக்கேன்னு நினைச்சியே அதுக்கே ஒனக்கு மாலும் ஜாலும் போடலாம்னாலும் சோக்கா கேட்டியே ஒரு கேள்வியேன்னு பதில் சொல்றேன் கேளு. //

    பதிவைப்பார்த்த போது இதுக்கு அர்த்தம் புரியவேயில்ல... இப்போ ரெண்டு நிமிஷம் கழிச்சு நல்லா புரியுது..

    ஏன்? ஏன்? ஏன்?

    ReplyDelete
  5. என்னய்யா நடக்குது இங்கே?

    ReplyDelete
  6. அனானி.. ரிலாக்ஸ்... எலக்கியத்த தேடி எளமய தொலக்கிறப்ப சமூக கோமியத்துல இதுமாதிரி குறுஎழுத்த தாண்டுறது சகசம்தான்.. அதுக்காக எதுக்கு நடுமுதுக சூடாக்கி சாபமெல்லாம் விட்டு ஆயுச கொறச்சிகிட்டு... சாலிய இத்த கேட்டுகிட்டே எஸ் ஆயிக்கோங்க.. நன்னி.

    *

    / இப்போ ரெண்டு நிமிஷம் கழிச்சு நல்லா புரியுது.. /

    இராம்ஸு, இந்த நக்கலுதான வேணாம்கிறது.

    *

    வாங்க துளசியக்கா. ரொம்ப நாள் கழிச்சி இதே வாக்கியத்த கேட்ருக்கீங்க. நீங்க என்னவோ (நானும்தான்) அப் பாவியா தோணுறத எளுதிக்கிறோம். ஆனா நாட்டு நடப்புன்னு ஒன்னு இருக்கே... இந்த வாட்டியாவது க்ராஸ் ஃபயருன்னு எதுனா ஆரம்பிச்சா அதுல நீங்க மாட்டிக்காம இருக்க அந்த சிங்கை ச்சீனு & கோ அருள் பாலிக்கணும்.

    அப்புறம் என்ன கேட்டீங்க, "என்னய்யா நடக்குது இங்கே?" ன்னா... அது புரிஞ்சாத்தான் நான் என்னிக்கோ பேதி மரத்து ஞானத்த ரீச்சாயிருப்பனே..

    ReplyDelete
  7. முகமூடி அண்ணாச்சி,
    சூப்ப்ப்ப்ப்பர்..
    //பிச்சி போடுதல். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது சப்பாத்தி சுடும் நேரத்தில் உங்கள் ரவுசு பொறுக்காமல் உங்களை அ(ம)டக்க ஒரு டெம்பரரி ரிலீப் காக்கா சப்பாத்தி உங்களிடம் தரப்படும். அந்த சப்பாத்தியை...

    1. கொடுத்தவுடன் முழுங்கிவிட்டு ரீவியில் யம்மாடி ஆத்தாடி பாக்க போவேன்
    2. நாய்க்கு கொடுத்துவிடுவேன்
    //
    அப்படியே என்னோட ச்சின்ன வயசு சப்பாத்தியை நினைவுக்குக் கொண்டு வந்துட்டீங்க.

    எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதறீங்களோ...

    நல்லாயிருக்கு..

    நீங்க பதிவு போட்டாத்தான் ஒரு 'களையா' இருக்கு..

    நெறய புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு..

    வாழ்த்துகள்..
    அன்புடன்,
    சீமாச்சு...

    ReplyDelete
  8. அன்னான் ஈ, ஒரு கொளுகை அடிப்படடயில உங்க கொமண்ட வித்கோல்டு பண்ணிக்கிறேன். நன்னி..

    *

    சீமாச்சு, என்ன ரெண்டு சப்பாத்தி நினைவுகளோட நிறுத்திட்டீங்க.. மூணாவது பண்ணது இல்லயா நீங்க... நான் 13 விதம் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒருநா சாவகாசமா சாதா நவீன (ஸ்பெஷல் சாதா மாதிரி ஒரு காம்பினேஷன்) பதிவுல எளுதிக்கலாம்னு வுட்டுட்டேன்.

    அப்புறம் பிதாமகருக்கே ஒண்ணும் புரியலைன்னு காத்து நாக்குல செய்தி வருது.. அப்படி இருக்க உங்களுக்கு நெறய புரிஞ்சிதுன்னுல்லாம் சொல்லி கிலியேத்தாதீங்க.

    உங்களுக்காக இல்லைன்னாலும் ஊருக்காக ஒரு அருஞ்சொற்பொருள் சொல்லணுமின்னா, இதில் மெசேஜ் என்று எதுவுமில்லை.

    ReplyDelete
  9. ஆசானே, நான் இன்னும் ஆழமா எழுதிப் பழகலை அதுக்குள்ள இப்படி கேண வீணாப் போன துவத்தைச் சொன்னா என்ன செய்ய? நான் டெஸ்ட் எழுதிப் பார்க்கறேன். பாசா பெயிலான்னு சொல்லுங்க.

    அ) சப்பாத்தியை இரு பகுதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியை அப்படியே மடித்து ஒரு டெண்ட் போலச் செய்து கொள்ள வேண்டும். அதைப் பார்த்து ஐ! ஐ! அம்மம்! என்று ஆச்சரியமாகச் சொல்லிக்கொள்ள வேண்டும். மீதமிருக்கும் பகுதியை சின்னச் சின்னதாகக் கிழித்துக் கொண்டு, அவைகள் அந்த டெண்டினுள் செல்ல காசு வாங்க வேண்டும். அதிலும் வேகாத துண்டுகள் வந்தால் ஒரு ரேட், வெந்த துண்டு வந்தால் ஒரு ரேட், கருகிய துண்டுகள் வந்தால் ஒரு ரேட் எனத் தரம் பிரித்து வாங்க வேண்டும். ஆனால் அம்மா சொல்லுவாள் எந்தப் பீசும் வேஸ்ட் ஆகக் கூடாது என்று. சில துண்டுகளுக்கான கட்டணத்தை மற்ற துண்டுகளின் அப்பாவே கட்டச் சொல்லி ஒரு ரூல் போடுவேன்.

    ஆ) பக்கார்டி என்றால் ரம் ஞாபகம் வரும் என்பது வேண்டுமானால் எனக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் அன்றொரு நாள் இதே நிலவில் தங்கமணியுடன் ரோட்டில் செல்லும் பொழுது கடந்து சென்ற VW Beetleஐப் பார்த்து பக் கார் டி எனச் சொன்னதுதான் மறக்குமா? அல்லது மப்பு ஏற்றிக் கொண்டு இல்லாத ஒன்றைப் பற்றி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் எனக் கதைத்துக் கொண்டிருந்த நண்பன் ஒருவனைப் பார்த்து பக்கா RD எனச் சொன்னதுதான் மறக்குமா?

    இ) ங்கா சொன்ன ரங்கா ஞாபகம் வர, உடனே அவனோட அப்பா தங்காமல் கிளம்ப, பூங்கா, கீங்கான்னு எங்காவது போயி ராங்கா சுத்தி, மாங்கா தேங்கான்னு வாங்காம தின்னாம, ஆங்காங்கே மழை வரும் என சொன்னதை நம்பாம, நீங்கா இன்பம் பெற நேரா வீட்டுக்குப் போயிடறேன்னு கிளம்பிட்டாருன்னு எதாவது சொல்லத் தாங்காத் தொல்லை அப்படின்னு நம்ம ஆளுங்க ஜூட் விட்டுட்டு போறாங்க.

    ஈ) ரெட்டை கிளவி என்னங்க ரெட்டை கிளவி. பத்து பதினைஞ்சு கிளவிங்க வர ருக்குமணீ ருக்குமணி பாட்டை இடுப்பை வளைச்சு உடைச்சு பாடிற மாட்டோம். ஆமாம் 'ரெட்'டை கிளவின்னா சிகப்பு கோச்சுக்க மாட்டாரா?

    உ) பிறந்ததிலிருந்து இங்கு குடியிருக்கும் நான் நிம்மதியாகத் தூங்காமல், நேற்று வந்து சுவரேறிய இந்த பல்லியின் சத்தம் என்னை பாதிக்கின்றதே. வேகாத வெய்யிலில் வெளியே சுற்றி வந்த என் தூக்கத்தை வீட்டுக்குள் இருந்து வயிறு பெருக்கும் இந்த பல்லி இப்படி சத்தம் போட்டு கெடுக்கிறதே. இந்தப் பல்லியின் முட்டையை இடக்காரணமாக இருந்த பெரும்பல்லிகள் செய்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கவென்றே வெங்காயம் ஒன்றை வெளி கொண்டு வந்த பின்னும் இந்த பல்லிகளின் அட்டகாசம் அடங்கவில்லையே. இப்பல்லிகளுக்கெல்லாம் வாலறுக்காமல் ஓயப்போவதில்லை அப்படின்னு வீராவேசமா சூளுரைச்சுட்டு அப்படியே பல்லி வளர்ப்புத் துறையில் ஒரு உத்யோகம் வாங்கிக்கிட்டு செட்டில் ஆயிடுவேன்.
    ஊ) இதுக்கு அடுத்த பின்னூட்டம்தான்.

    ReplyDelete
  10. ஊ) ஏகாந்தப்பெருவெளியில்எங்கேயோ அலைந்துதிரிந்துநிலைகொள்ளா மாந்தரின்உணர்ச்சி கொந்தளிப்பைஉள்ளுணர்ந்து, அதன்வலியறிந்துஅதன்தாக்கமுணர்ந்து அவர்வலிகளை ஆராய நினைப்பது எப்படி இருக்கிறதோஅவனிதனில் அணுஅணுவாய்தன் வாழ்விழந்து தனக்கென்றுஎதுவுமில்லாமல் நேற்றையகாயங்களைமறந்துநாளை பற்றியநினைப்பேயின்றிஇன்றையப்பொழுதைஎப்படித் தள்ளப் போகிறோம் என்ற நினைப்பு தன்முன்னேபூதாகரமாய் வரஅதனை எதிர்க்கொள்ளும் அந்த பாட்டாளியின் மனமானது எப்படி ஒரு நிலைப்படுகிறதோ, அன்புசேர் நெஞ்சமேஅரங்கன்மஞ்சம் எனஅவனையே தொழுதுஉருகும்அன்பரின்மனமானது எப்படிஅவன்நினைவே உள்ளத்தில்நிறுத்தி வேறெதுவும்எண்ணாமலிருக்கிறதோஅது போன்று இன்று நாம்அருந்திய தண்ணீரும்திராட்சைரசமும்நம்முடலில் கலந்துமறைந்து பின்மூத்திரமாய்நம்பையில்இருந்து கனத்துஉடன்வெளியேற துடித்துநம்மூளையை மழுங்கடித்துவேறெதுவும் நினைக்காமல் செய்துதொடர்ந்து சிந்தனைஎல்லாம் மஞ்சள்மயமாக்கி என் மனதில் மஞ்சள்காமாலைநோயிறச்செய்து எங்கும்மூத்திரம் என்பதேபேச்சு, எதிலும்அதனைஅடிப்பதேஆச்சு எனக்கூறிஒரு கேள்விகேட்கின்றேன்,நான் என்னபட்டம்கேட்கிறேனா பதவிகேட்கிறேனாஎன யோசித்துப்பார்த்தால் அவைகளெல்லாம்ஒருபொருட்டே இல்லைஎன்றும்இன்றைக்கு கேட்பதெல்லாம்ஒண்ணுக்குஇருக்கஒரு இடமும்அதற்கு இருநிமிடமும்தானே.

    டிஸ்கி: எங்கேனும் தவறுதலாக வார்த்தைகளுக்கு இடையே கேப் இருந்தாலோ அல்லது கமா புல் ஸ்டாப் என எதாவது இருந்தாலோ அவை ஸ்பெல்லிங் மிஷ்டேக்குகளே.

    பாருங்க கிட்டத்தட்ட் 150 வார்த்தை, ஒரே வரி, படிச்சா என்ன எழுது இருக்கேன்னு எனக்கும் புரியலை. இது ஆழமான பின்னூட்டமா இல்லையா?

    நான் டெஸ்டில் பாசா? இல்லையா?

    ReplyDelete
  11. ஏதோ நம்மால் முடிந்தது...

    http://p00chandi.blogspot.com/2007/02/1.html

    ReplyDelete
  12. இலவசம், அங்கங்க கமா இருந்துச்சு, நீரூ பெயிலு :-)

    ReplyDelete
  13. முகமூடி வீணாத்தூவ என்ன என்று இலவசமா கோணார் போட்டாத்தான் வெளிச்சமாவுது. மக்கு தலை.

    ReplyDelete
  14. முகமூடி, கொத்தனார் உங்க லெவலுக்கு ஏறி சாரி ஆழமா இறங்கியிருக்காரு. அவரை கொஞ்சம் கவனிங்க உங்க பதவிக்கு ஆப்பு வைக்க போறாரு

    ReplyDelete
  15. உஷாக்கா, கமாவுக்குத்தான் டிஸ்கி போட்டாச்சே, அதனால கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கக் கூடாதா? :(

    ReplyDelete
  16. எனக்கு ஒண்ணு நல்லா புரிஞ்சு போச்சு:

    pee-ன்னா "முன் நவீனத்துவம்"
    poop-ன்னா "பின் நவீனத்துவம்"
    கரீட்டா?

    ஆமாம், உங்க பதிவுக்கு யார் பாஷ்யம் எழுதுவாங்க - கலைஞரா? நோ, நோ, அவருக்குத்தான் த.கு.தா-வை சமாளிக்கவே நேரம் பத்தல்லயே!
    அப்படீன்னா, ஆங், வீரமணியை விட்டு எழுதச் சொல்லலாம். அவரும் கட்டுப்படியாகல்லைன்னா, பதிவுலகத்தில அறிஞர்களுக்கு பஞ்சமேயில்லை.

    எஸ்.கே

    ReplyDelete
  17. //pee-ன்னா "முன் நவீனத்துவம்"
    poop-ன்னா "பின் நவீனத்துவம்"
    கரீட்டா?
    //

    வெஸ்டர்ன் டாய்லெட் ல பண்ணா தான் அது நவீனமாகுமா?

    ReplyDelete
  18. இ.கொ குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாகப் பாக்குராறே ! யப்போய் !

    ReplyDelete
  19. //முகமூடி, கொத்தனார் உங்க லெவலுக்கு ஏறி சாரி ஆழமா இறங்கியிருக்காரு. அவரை கொஞ்சம் கவனிங்க உங்க பதவிக்கு ஆப்பு வைக்க போறாரு//

    சிவாண்ணா? ஏன்? ஏன்? ஏன்? ஏன் இந்தக் கொலை வெறி?

    ReplyDelete
  20. வாலாட்டி திரிகிறேன் நான்,
    வள்ளென்று குலைக்கிறாய் நீ,
    நம்மிருவரில் யாரடி நாய்?


    நம்மிருவரில்
    வாலாட்டி குலைக்கிறாய் நீ
    வள்ளென்று திரிகிறேன் நான்
    நாய்
    யாரடி

    ReplyDelete
  21. வெஸ்டர்ன் டாய்லெட் ல பண்ணா தான் அது நவீனமாகுமா

    No ya, only if you use tissue paper it is modernity
    no tissue paper no cleaning
    only shitting is post-modern.
    you can call that an act of rebellion and subversion.

    ReplyDelete