Thursday, May 10, 2007

நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா


I've been prime minister of this country for just over 10 years ... I think that's long enough for me, but more especially, for the country. - Tony Blair.

அடப்பாவி, நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

நீங்க என்ன எப்ப வீட்டுக்கு அனுப்பிச்சாலும் சந்தோசமா போறேன். உயிரில்லாத மொழிக்கு சேவை செய்வதில் மிச்ச காலத்த கழிச்சிக்கிறேன்னு அறிக்கை மேல அறிக்கையா, வெறும் அறிவிப்ப மட்டும் விட்டுட்டு கடேசி வரைக்கும் பதவிய கெட்டியா புடிச்சி பொளப்பு ஓட்ட தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

நார்த் இங்கிலாந்து ஒரு பையனுக்கு, சவுத் இங்கிலாந்து இன்னொரு பையனுக்கு, அயர்லாந்து அத்தை பசங்களுக்கு, மான்செஸ்டர் மகளுக்குன்னு குத்தகை போட்டு கொடுத்திட்டு அவனவன் பதவி வெறியில அடிச்சிகிட்டு அதுல அப்பாவிங்கள போட்டு தள்றத பாத்து அழுதுகிட்டே அரசாங்க பணத்த அள்ளித்தெளிச்சி அரசியல் பண்ண தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

எது எக்கேடு கெட்ட எனக்கென்ன, எனக்கு விழா எடுங்கன்னு முப்பதாவது பிறந்த நாளு, ஐம்பதாவது கல்யாண நாளுன்னு எதுனா விழா எடுத்து அதுக்கு காலிவுட்டு கோலிவுட்டு நடிகைங்கள மார்பு கச்சை இடுப்பு கச்சையோட மட்டும் ஆட விட்டுட்டு ஆறு மணிநேரம் ஆனாலும் அத தான் மட்டும் ஒக்காந்து ரசிக்கணுமின்னு நினைக்காம எலிக்கறி சாப்பிடுற பிச்சைக்கார வெத்து பசங்களோட பசியாத்த அத கஷ்டப்பட்டு மருமகனோட டிவியில இலவசமா ஒளிபரப்பி எண்டர்டெயின் பண்ணத்தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

பொறந்ததுல இருந்து அரசியல்வாதியா மட்டுமே இருந்துட்டேன். வேற ஒண்ணும் தெரியாது. மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச காலத்தையும் பதவி நாக்காலியில நிம்மதியா கழிச்சிட்டு போலாம்னு பாத்தா அதுக்கு விடாம வம்பு பண்ற தகுதி இல்லாதவங்களோட எல்லாம் அரசியல் பண்ண வேண்டியது இருக்கேன்னு பார்லிமெண்டுல முதலைக்கண்ணீர் வடிச்சிட்டு அதுக்காக எல்லாரும் உச்சு கொட்டுறத பாத்து சந்தோசமா பொழப்பு ஓட்டாம நீயெல்லாம் என்னடா அரசியல்வாதி...

*

ஹாய் டமிள் காமன் மக்கள்ஸ் :: நமீதா இடுப்பு அழகா இல்ல த்ரிஷா இடுப்பு அழகான்னு மட்டுமே கருத்து கணிப்பு போடாம வாரிசுங்க சம்பந்தப்பட்டதா இருந்தா போட வேணாமின்னு தலைவரு எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்காம யாரோ என்னமோ கருத்து கணிப்பு போட்டு என்னமோ ப்ரச்னையாமே. எழவு மூணு சாவுதான விழுந்திருக்கு. செத்தவன் எல்லாம் என்ன தமிழக தலையெழுத்தையே மாத்துற அளவு அரசியல்வாதியா.. அதான் அவனுங்க அப்பன் ஆத்தா ஆயுசுக்கும் பாக்காத அளவு ரெண்டு லச்ச ரூவாய மனுநீதி சோழன் தந்திட்டாரே,வாங்கிகிட்டு பேசாம போக வேண்டியதுதான.. அதுவும் இல்லாம மனுநீதி சோழரு சிபிஐ விசாரணைக்கும் லெட்டரு போட்டுட்டாரு. சிபிஐ விசாரணை செஞ்சி எப்படியும் பதினஞ்சி இருவது வருசத்துல என்ன ஏதுன்னு சொல்லலையின்னா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சிய கவுத்திடுவாரு.. அப்புறம் என்ன.. பொத்திகிட்டு போவீங்களா. அத வுட்டுட்டு இதயெல்லாம் ஒரு ப்ரச்னை பண்ணிகிட்டு.. வேற எதுனா உருப்படியான விசயம் இருந்தா பாருங்கப்பா... எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு... இங்கன லாஸ் ஏஞ்சலீஸ் ஜூவுல கடல் ஆமை ஒண்ணு ஆயிரம் வருசமா மூச்சு வுட்டுகிட்டு இருக்காம். அதுக்கு ஏன் இன்னும் நிர்வாகம் விழா கொண்டாடாம இருக்குன்னு விசாரிக்க போகோணும்.



29 comments:

  1. எங்கேயோ ஒரு வெளிநாட்டில உக்காந்துக்கிட்டு வக்கணை பேசிக்கிட்டிருந்தா எப்படி? வாங்க சாமி, வந்து இந்தப் பயபுள்ளைகளத் திருத்துங்க. அத விட்டுப்புட்டு வஞ்சப்புகழ்ச்சி பாடிக்கிட்டிருக்கே. ஜார்ஜ் புஸ் ஐப் புடிச்சுக்கிட்டு ஈராக் போருக்குப் போய் வாங்கிக்கட்டிக்கிட்டான் இந்தப் பயபுள்ள. இவனைப் போய்ச் சொல்றியப்பு. இப்படி ஒரு அடிமுட்டாள் யாருன்னு தெரியக்கூடாதுன்னு தான முகமுடி போட்டுருக்கியளோ..

    ReplyDelete
  2. முகமுடி, எவ்வளவு புத்திசாலி அய்யா நீங்க. உலக மகா அயோக்கியனான டோனி ப்ளேருக்கு வஞ்ச இகழ்சி அணியில் பாராட்டா? நம்ம ஊர் லோக்கல் லோக்கல் அர்சியல்வாதி, அதுவும் கருணாநிதியை மட்டும் முன்வைத்து பாராட்டா? சரி, உங்க மூளைக்கு இதைவிட யோசிப்பது அதிகம்தான்!

    ReplyDelete
  3. "டா" போட்டு எழுதி விட்டீர்கள். உங்களை வேறுவழியில்லாமல் திராவிட குஞ்சுகளில் ஒருவராக நியமனம் செய்கிறேன்.

    ReplyDelete
  4. ஆகா தலைவரே எங்கடா ரொம்ப நாளா ஆளை காணோமேன்னு நினைச்சேன் வந்ததோட இல்லாம ஒரு பெரிய குத்து விட்டு இருக்கீங்க பாருங்க யப்பா உள்குத்தின் கலைஞரே வருக வருக :))..

    ReplyDelete
  5. // வாங்க சாமி, வந்து இந்தப் பயபுள்ளைகளத் திருத்துங்க // திருத்துறது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் சாமி... அதுக்கு ஊருக்குல்ல வரணும் இல்ல... சென்னைல இருந்து டில்லி போகலாம்னு தம்பியும் மதுரையில இருந்து சென்னை வர்ற அண்ணனும் எதேச்சையா சென்னை ஏர்போர்டுல "அக்னி நட்சத்திரம்" பாணியில எதிரும் புதிருமா சந்திச்சிக்கிறாங்கன்னு வையிங்க... என்னதான் ஏர்போர்டுல பேருக்கு சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் போர்ஸுன்னு ஒப்புக்கு சப்பாணியா ஒரு கோஷ்டி இருந்தாலும் மெஜாரிட்டிக்கு 'ஸ்காட்லாண்டு யாருடா" பழைய சோறு பெருமையவே இன்னும் பீத்தி(ங்)க்கிற காக்கி புடவை கட்டுன டமிள்நாட் போலீஸ்தான மெஜாரிட்டி. குஞ்சுங்க எல்லாம் 'பழக்க தோஷத்துல' ஏர்போர்டுலயும் அப்பத்தான் லாண்டிங் ஆகிற ப்ளேன்லயும் பெட்ரொல் பாம் போட மாட்டாங்கன்னு எதுனா உத்திரவாதம் இருக்கா...

    *

    // உலக மகா அயோக்கியனான டோனி ப்ளேருக்கு வஞ்ச இகழ்சி அணியில் பாராட்டா? // டோனி உலக மகா அயோக்கியனாவே இருக்கட்டும். பத்து வருசம்தானே ஆகுது... பத்தாது... எப்படியாது சாவுற வரைக்கும் பிச்சை எடுத்து, புரட்டு பேசி, கலவரம் செஞ்சி என்ன என்ன பண்ண முடியும்மோ எல்லாமும் பண்ணி எப்படியாவது நாக்காலியில ஒட்டிகிட்டு இருந்தா சாகும்போது ரெண்டு சிலையும் தேம்ஸ் நதியோரமா ஒரு சமாதி இல்ல ஒரு மணிமண்டபம் கிடைக்கும்னு நாக்க தொங்கப்போடாம, இருந்த வரைக்கும் போதும்னு சொல்லி பதவி விலகுறானே, அத்த என்ன சொல்றது. டோனிய விட மோசமா அக்கிரமும் அயோக்கியத்தனமும் பண்ண ஆளுங்க இருக்கு. பட்டியல் போட்டுத்தந்தா பதவி விலகிற்றானுங்களாமா? சும்மா தமிழ வச்சி விளையாடி பசப்பாம வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லணும்...

    ReplyDelete
  6. //I've been prime minister of this country for just over 10 years ... I think that's long enough for me, but more especially, for the country. - Tony Blair.//

    அப்டீன்னு இங்கிட்டு யாராச்சும் கொரலு வுட்டாங்களா? இல்லைல்ல?

    மக்கள் தொகைய வச்சிப் பாருங்க. அந்தூரு மக்கள் தொகைக்கு 10 வருசம். அப்டீன்னா நம்மூரு மக்கள் தொகைக்கு இன்னம் எவ்வளவு வருசம் நாக்காலில குந்தணும்? :-)

    ***

    இருக்கதுலயே பெரிய கொடுமை எது தெரியுமா? ரவுடி நாய்ங்க அட்டூழியத்த நடத்தனப்போ, லட்டிக் கம்பை கம்புக்கூட்டுக்குள்ள வச்சிக்கிட்டு சுத்தி நின்னுக்கிட்டு வேடிக்க பாத்துச்சே போலிசு. அவங்க மனசு 'இந்த எழவெழுத்த அரசியல்வியாதிங்களுக்கு பயந்துக்கிட்டு இந்த நாய்ங்க பண்றத வேடிக்க பாத்திட்டு 'பொத்திக்கிட்டு' நிக்க வேண்டியிருக்கே'ன்னு எவ்வளவு கொடஞ்சிருக்கும்?

    போலிசு ட்ரெஸ்ஸை மாட்டிக்கிட்டு கம்பீரமா போன அப்பா இப்படி அநியாயத்தக் கண்டுக்காம கையைக் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்துருக்கற போட்டோவைப் பாத்தா அவங்களோட புள்ளைங்களுக்கு எப்படி இருக்கும்?

    மகாநதில ஜெயில்ல அநியாயம் நடக்கறப்போ காவலுக்கு நிக்கற ஒரு போலிசு தாங்க முடியாம மூஞ்சைத் திருப்பிக்குவாரு. அந்த மொகத்துல தெரியற கையாலாகாதத் தனம்!

    இந்த மாதிரி பொம்மை போலிசா இருக்கறதுக்குப் பதிலா நாண்டுக்கிட்டு சாகலாம்!

    மத்தபடி எல்லா எழவுக் கட்சி ஆட்சிலயும் இம்மாதிரி அடாவடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. கவலைப் படாதீங்க. அடுத்த வாரம் மக்கள் எல்லாத்தையும் மறந்துட்டு 'நடுப்பக்க கவர்ச்சிப்படம்' பாக்க ஆரம்பிச்சுடுவாங்க!

    வாழ்க பணநாயகம்!

    ReplyDelete
  7. //ஐம்பதாவது கல்யாண நாளுன்னு//

    ஐயா ஒரு உண்மை தெரிஞ்சாகனும். கல்யாணம் ஆகி 50 வருடம் ஆனதுக்கு திருவிழாவா அல்லது 50 கல்யாணம் ஆனதுக்கு திருவிழாவா....

    வாழ்க திராவிடம் வளர்க வாரிசு அரசியல்

    ReplyDelete
  8. ஒரு பெரிய குத்து!!!!

    ReplyDelete
  9. இது தான் முகமூடி பாணி..
    ச்சும்மா 'நச்' சுன்னு சொல்லியிருக்கீங்க.

    எங்க மனசைப் படிச்சுச் சொன்ன மாதிரி இருக்கு..

    அன்புடன்
    சீமாச்சு

    ReplyDelete
  10. சூப்பருங்கண்ணாவ். டோ னி பிளேயரையும் இழுத்துவிட்டிட்டீய. எல்லாம் 10=ஆம் நம்பர் வீடு வரைக்கும் ஆட்டோ /டாடா சுமோ போவதுண்ணு தகிரியம்தான் போல.
    குடமுருட்டி குண்டு முதல் ஆகிவந்த திராவிடம்
    ஐயையோ கொல்லுறாங்க அதுவும் கூட திராவிடம்
    குடும்பத்தகராறுக்காக கொல்லும் வீர திராவிடம்
    காவல் துறையும் கைகட்டி செய்யுமடா சேவகம்
    குண்டுக்கட்டை திராவிடம் குடும்ப சொத்து திராவிடம்
    பிடிக்காத செய்தி வந்தால் அடித்து கொல்லும் திராவிடம்
    கொன்னதுக்கும் எரிச்சதுக்கும் கருத்து கணிப்பு காரணம்
    என்று சொல்லி கொன்னவனின் அடிவருடும் திராவிடம்
    மிச்ச கவிஜையையும் சில சூப்பரான திராவிட காட்சிகளையும்
    இங்கன-http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_10.html
    வந்து பாருங்கண்ணோவ்.

    ReplyDelete
  11. Who is the best dubukku?

    1. Madurai Mayor

    2. Tamil Nadu D.G.P

    3. Dinakaran employees

    4. Azagiri supporters

    ReplyDelete
  12. இதுக்கெல்லாம் பதில் எங்ககிட்டயிருந்து ஒன்னுதான். எங்குளுக்கு ஆண்ம கீது. அதனால பெத்துக்கறோம். வெச்சிக்கிறோம். உனக்கென்ன புள்ளயா, குட்டியா. நீ ஏன் பேசற. என்னோட வர்றியா. வெணுன்னா ஆட்டோக்கு நான் துட்டு தரேன். ....

    ஆமா, இந்த டோனிப்பயலுக்கும் ஏகப்பட்ட குழந்தைகளாமே, அதுகளுக்கு வாரிசு பதவி கிடயாதா?

    - மு.க

    ReplyDelete
  13. நீயெல்லாம் படிச்சவனா?
    உயிரில்லாத மொழிக்குச் சேவைன்னு சொல்லியிருக்கியே நீ எவண்டா சொல்.
    மரியாதை,நாகரீகம் கொஞ்சமும் இல்லாமல் என்ன எழிதி என்ன பயன்?
    சொல்வதை படித்தவனாய்,பண்பாடுள்ளவனாகச் சொன்னால் நீ மனிதன்,ஊளையிடும் நாயாக இல்லாமல் மனிதனாக முயற்சி செய்.பின் குறை கூறு.

    ReplyDelete
  14. தலை,

    //அதுக்கு ஏன் இன்னும் நிர்வாகம் விழா கொண்டாடாம இருக்குன்னு விசாரிக்க போகோணும்.//

    நிர்வாகமா கோடாடும்? ஆமையும், ஆமையோட புள்ளைகுட்டிங்களும்தான் கொண்டாடணூம்.

    எல்லாம் புத்திசாலித்தனத்தோட ஒரு போஸ்ட் போட்டு கடைசியிலே இப்படி சொதப்பிட்டீங்களே :-)

    ReplyDelete
  15. கூட இதயும் சேத்துக்க அப்பு,

    ஓட்டு போடாத மக்களை "சொரண கெட்டவனுங்க்" ன்னும், ஓட்டு போடும் போது, "சரியான தீர்ப்பு" ன்னும் மாத்தி மாத்தி ஜல்லி அடிக்கத் தெரியாத நீயெல்லாம் என்ன அரசியல்வாதி?

    ReplyDelete
  16. தமிழக அரசியல்வாதிகள் = அரசியல்"வியாதி"கள்.

    எந்த வியாதியாவது 10 வருசம் இருந்துட்டேன் இனி போயிடறேன்னு சொல்லுமா ?

    ReplyDelete
  17. தூள் ஸார்.. நீங்க எப்படி எழுதினாலும் கண்டுக்காம இருக்கிறவரைக்கும் அள்ளணும்ன்றதுதான் பகுத்தறிவு. இந்தப் பகுத்திறவை மட்டும் இவர்களிடமிருந்து யாரும் காப்பியடிக்க முடியாது.. அடிக்கவும் விட மாட்டார்கள். எந்த அடியாக இருந்தாலும் அவர்கள்தான் அடிப்பார்கள்.. அடி வாங்குவது நமது தலையெழுத்து..

    ReplyDelete
  18. //உயிரில்லாத மொழிக்கு//
    //பீத்தி(ங்)க்கிற காக்கி புடவை கட்டுன டமிள்நாட் போலீஸ்தான//

    புத்திசாலி பதிவர் டிஸ்யூ பேப்பர் பயன்படுத்தினாலும் நாறத்தான் செய்கிறது.
    இங்கிலாந்து மக்களுக்கு டோனி பிளேர் பிரதமரென்றால் நமக்கு கருணாநிதி முதல்வர். பிளேர் செய்தது சரியென்றால் நாம் செய்வது, செய்து கொண்டிருப்பது தவறு. ஏன் கருணாநிதியையும் பிளேரையும் ஒப்பிடுகிறீர்கள். உங்களையும் ஒரு சராசரி இங்கிலாந்து குடிமனையும் ஒப்பிடுங்கள்.
    சாப்பிட்டுவிட்டு எழுதுங்கள். பசியோடு எழுதினால் இப்படித்தான் வார்த்தை தறிகெட்டு ஓடும்.

    ReplyDelete
  19. உங்க அம்மா மட்டும் என்ன அடுத்த வருசம் அரசியல்ல இருந்து ரிடையர் ஆக போறாங்களா என்ன அப்படி ரிடையர் ஆனா எப்படியும் ஒரு சிலர தீ குளிக்க வெச்சிர மாட்டீங்க. வாஜ்பாயி, அத்வானில இருந்த இந்தியாவில் உள்ள எல்லா தலைவருமே மண்டய போடுற வரைக்கும் நாற்காலியில உட்காரனும்னு தான் கனவு கண்டுட்டு இருக்கானுக இதில் கலைஞரை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்

    ReplyDelete
  20. தல,
    இப்பதான் பதிவு போட்டுவந்தா இங்கன நேத்திக்கே பூந்து உங்க ஸ்டைல்ல பிச்சிருக்கீங்க...

    ஹூம்..

    ஆமா, அப்புறமா முகமூடிக்குப் பின் ப.ம.க எனக்குத்தான்னு தினமூடில ஒரு சர்வே விடலாமில்ல??

    ReplyDelete
  21. முகமூடிண்ணா

    எனக்கும் அந்த வெள்ளைப் பேமானி டோனிய நாக்கப் புடுங்கிக்கிற் மாதிரி நாலு கேள்வி கேட்க்கணும்னு ஒரேயடியா அரிக்குதுங்கண்ணா, நீங்க பெர்மிசன் கொடுத்தீங்கன்னா நானும் கேட்டுட்டுப் போயிருஎங்க்கண்ணா

    1. நீயெல்லாம் ஒரு பிரதமராடா? ஒரு தபாவாச்சும் உங்க நாட்டு ஆக்ஸ்ஃபோர்டு உனிவர்சிட்டியில போயி எனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுன்னு கேட்டிருப்பீயா? த் தூ , அப்படி கேட்டு அத எவனாவது எதித்துக் கேள்வி கேட்டா போலீசால நாலு போடு போட்டு தேம்ஸ் நதியாண்ட தூக்கி எறிஞ்சிருப்பியா ? அப்படி பசங்களக் கொன்னு போட்டு அப்பால டாக்டர் பட்டம் வாங்க தெம்பு இருக்கா உனக்கு ? என்ன அரசியவாதி நீ போ

    2. உங்க ஊரு தேம்ஸ் முதல்ல சாக்கடடையாக்க வேண்டியது அப்புறம் அத மணக்க வைக்கிறேன்னு சொல்லி கோடிக் கணக்கான பவுண்ட லவட்டிக்கிற வேண்டியது, இப்படி எதுனாச்சும் உன் சர்வீஸ்ல நீ செஞ்சினுக்கிறியா ? உனக்கெல்லாம் இன்னா மசிருக்கு பிரதமர் பதவி கேட்க்குது? அப்படி எல்லாம் செஞ்சிருந்தா பின்னாடி ராணி எல்லாம் கூட்டியாந்து பொன் விழா கொண்டாடியிருக்கலாம் நீ எல்லாம் ஒரு அரசியல்வாதி ?

    3. ஒன்னோட பார்லிமெண்டுல ஒரு தபாவாவது எதிர் கட்சி லேடிசோட கவுன கிழிச்சிருப்பே? போடி தேவடியான்னு திட்டியிருப்பே? பாவாடை நாடாவை அவுத்து அடில பாருன்னு கண்ணியமா பேசியிருப்பே ? அதெல்லாம் செஞ்சா பொன் விழா கொண்டாலாம்ல, உனக்கு அர்சியல் எல் கே ஜி கூடத் தெர்யலையே நீ எல்லாம் என்ன பிரதமர்னு குப்பையைக் கொட்டின போ


    4. லண்டன்ல வர்ற நியூஸ் பேப்பரை எல்லாம் என்னிக்காவது ஓன்னோட தொண்டர வச்சி கொளுத்தியிருப்பே? சோமாறி, சோதாப் பயலே, கபோதி, கசுமாலம்னு திட்டியிருப்ப அந்த எடிட்டரை எல்லாம்? ஒன்னும் தெரியாது, நீ எல்லாம் ஒரு அரசியல்வாதியாடா?

    5. ஆமா உனக்கு எத்தன பொண்டாட்டி, எத்தன வைப்பாட்டி ? குறைந்ஞ்சி ஒரு 5 ஆவது இருக்க வேண்டாம், அப்புறம் உன் மகளோட எலிமெண்டரி ஸ்கூல் படிக்கிற குட்டிகளையும் சேத்துக்கிடனும், அப்படி சேத்தீனு வையு, உன்னைய பெரிய பேராசிரியர்னு எல்லாம் கூப்பிடுவானுங்க, ஒரு மண்ணும் தெரியல, இப்படி ஒரு கூமுட்டையா இருக்கியே, குறைஞ்ச பட்சம் உங்க டி வில பேசுற குட்டில எதுனாச்சியும் கடத்திட்டுப் போயி ரேப் பண்ணியிருக்கியா? நீ எல்லாம் ஒரு அரசியல்வாதி?

    6. உங்க ராணி காருல ஊர்வலம் வர்றப்ப ஒன்னோட அடியாளுங்கள வைச்சி கல்ல விட்டு எறிஞ்சிருக்கியா ? அப்புறம் ராணிக்கு அடி பட்டு ரத்தம் வந்தா அது அடியில் ரத்தமா அல்லது அடியில் வந்த ரத்தமான்னு அடுக்கு மொழில கேட்டுருப்பீயா ? அப்படி எல்லாம் கேட்டிருந்தா அந்த ராணியே வந்து ஒன்னோட சொல்வன்மைய பாராட்டி பொன்விழா நடத்தியிருக்கும், நீயெல்லாம் ஒரு அரசியல்வாதி?

    8. ஒன்னோட பசங்க என்னிக்காவது பக்கிங்ஹாம் பாலஸ், ஹீத்ரூன்னு எதையாவது எப்பவாவது தீ ய வச்சுக் கொளுத்தியிருப்பானுங்களா? அதுக்கெல்லாம் ஒரு 50 ஆண்டுகால அரசியல் பண்பாடு, கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் வேணும் உனக்கு அதெல்லாம் எங்க இருக்கு போ

    9. ஏதோ எங்க கோயம்புத்தூரு மாதிரி குண்டு வைக்க மட்டும் அலொவ் பண்ணி நீயும் ஒரு அரசியல்வாதிதான்னு காண்பிக்க டிரை பண்ணியிருக்க, ஆனா அந்த கைதிகளுக்கு எல்லாம் மசாஜு, செல்ஃபோனு எல்லாம் தரியா இல்லியா?

    10. உனக்கு யாராவது அண்ணா பெரியார்னு தலிவன் இருக்கானா? தலிவன் இல்லாம நீ என்ன பெரிய அர்சியல்வாதி, அவனுங்களுக்கு பிரிட்டன் முழுக்க செல வச்சிருக்கியா, அல்லது சமாதி கட்டினிருக்கியா> ஒரு மண்ணும் தெரியாது நீ எல்லாம் ஒரு அர்சியல்வாதி

    ReplyDelete
  22. அண்ணா, எப்படீங்ண்ணா.

    கலக்கிட்டீங்க போங்க.

    ReplyDelete
  23. டோனி ப்ளெய்ர் நாக்கைப் பிடுங்கிகிட்டு சாவற மாதிரி ஒரு பதிவு!

    இவர்ல்லாம் ஒரு அரசியல்வாதியா!
    :))

    ReplyDelete
  24. முகமூடி,

    I am very sorry, ஆனா எனக்கு முன்ன பின்னூட்டம் போட்ட அனானி, உங்க பதிவ விட பின்னூட்டத்தில் நல்லாவே நக்கல் பண்றார். கோட்டை விட்டுட்டீங்க. ஜெயலலிதாவின் திமிரால், கருணாநிதி ஆட்சி. கருணாநிதியின் திமிரால் மறுபடியும் ஜெயலலிதாவின் ஆட்சி. யாராவது decentஆ, popularஆ ஆட்சியை பிடித்து எல்லோரையும் காப்பத்தக்கூடாதா? தயவு செய்து?

    சுவாமி

    ReplyDelete
  25. கலக்கிட்டிங்க தல...

    இந்துன்னா திருடன் அப்படின்னும், தீ மிதித்த அமைச்சரை இழிவுபடித்திவிட்டு தன்வீட்டுக்காரம்மாவை கூட்டிக்கொண்டு (முந்தைய ஆட்சிக்காலத்தில்) நண்பகல் 12 மணிக்கு சத்தமில்லாமல் திருவேற்காடு மாரியம்மன் கோயில்ல 1 மணி நேரம் சாமி கும்புட்ட நீயெல்லாம் ........யா?...

    ReplyDelete
  26. சூப்பர் முகமூடி.. தூள் கெளப்பிட்டீங்க....
    ஆனா படிச்சு முடித்தப்போ தமிழகத்துல ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் தான் இருக்க மாதிரி தோனுது... இல்லை.. ஒரு கெட்ட அரசியல்வாதி மற்றவற்கள் எல்லாம் நல்லவங்கனு தோனுது... வீ எம்

    ReplyDelete
  27. // உயிரில்லாத மொழிக்கு //


    well said,

    and close ur tamil (உயிரில்லாத மொழி) blog.

    and get out of this place...

    ReplyDelete
  28. //உங்க அம்மா மட்டும் என்ன அடுத்த வருசம் அரசியல்ல இருந்து ரிடையர் ஆக போறாங்களா என்ன அப்படி ரிடையர் ஆனா எப்படியும் ஒரு சிலர தீ குளிக்க வெச்சிர மாட்டீங்க. வாஜ்பாயி, அத்வானில இருந்த இந்தியாவில் உள்ள எல்லா தலைவருமே மண்டய போடுற வரைக்கும் நாற்காலியில உட்காரனும்னு தான் கனவு கண்டுட்டு இருக்கானுக இதில் கலைஞரை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்//

    1. அவர் கலைஞரை மட்டும் குறை சொல்ல வில்லை......

    சமஸ்கிரதம் என்ற "செத்து போன மொழிக்கு" வக்காலத்து வாங்கும் யாரையோ குறை சொல்கிறார்

    ReplyDelete