Friday, March 30, 2007

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?


பொதுவாகவே தமிழகம் முழுவதும் E&E என்றால் கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருக்கும் என்பதாக நாங்கள் படிக்கும் போது இண்டர்-யுனிவர்சிடி கேம்ஸ் போகும்போது பகிர்ந்து அறிந்ததுதான் என்றாலும் அண்ணாமலையின் இந்த பிரிவுகளில் - எல்லோரும் இல்லை - கால்வாசிக்கும் மேற்பட்ட வாத்திகள் சைக்கோக்களாக இருப்பார்கள்... அறையின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு மாணவர்கள் அனைவரும் வியர்வையில் குளிக்க குளிக்க ஒரு லூஸு பாடம் நடத்தும். என்னது Oscilloscopeல் Volt/Div என்று ஒரு Knob இருக்கிறதா... எங்க காட்டு என்று Ph.D முடித்த லாப் இன்சார்ஜ் ப்ரபொசர் ஞானி இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை நடந்து "ஆமா இருக்கு" என்று வழிந்து விட்டு போனாலும் லேபுக்கு வரும்போது முழுக்கை சட்டையில் இப்படி இருக்க வேண்டும், பேண்ட் அப்படி இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரூல்ஸை போட்டு தாளிக்கும்... மத்த டிபார்மெண்ட் மக்கள்ஸ் எல்லாம் ஜாலியாக இருக்க இந்த துறை மட்டும் 34 பக்கத்துக்கு அப்ஜெக்டிவ், ப்ரொசீஜர் என்று ஈயடிச்சான் காப்பியாக ரிகார்டை - இங்குதான் ஜூனியர்களை வாட்டுவது ஆரம்பமாகும் இடம் - எழுதி கழுத்தறுபடும். ஆணும் பெண்ணும் பேசினால் இந்த வாத்திகளுக்கு பேதி போகும். எப்பொழுது சான்ஸ் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆண்களாக இருந்தால் "ஏம்பா ஆனா அந்த ஐஸ்க்ரீம் கடையில பிகர் பார்க்க மட்டும் நல்லா தெரியுது, மத்ததுக்கெல்லாம்... " என்றும் பெண்களாக இருந்தால் "பேண்ட் சர்ட்ன்னு ஸ்டைலா போட்டுகிட்டு சினிமாவுக்கு கூட்டமா போய் கூத்தடிக்க தெரியிது ஆனா... "என்று குத்தி காண்பிப்பது. இண்டர்னல் மார்க் இருக்கிறது என்பதால் சம்பந்தா சம்பதமில்லாமல் பயங்கரமாக ஓட்டுவது என்பதெல்லாம் சகஜமாக நடக்கும் இடம் மின்/னணுவியல் துறை.

பிட் அடிக்கும்போது பிடிபட்டதால் மாணவி தற்கொலை என்று செய்தியை படித்தால் எழும் பொது சிந்தனை, இதென்ன இவ்வளவோ கோழையாக இருக்கிறார்கள் என்பதாக இருக்கும். ஆனால் அண்ணாமலையில் மாணவி தற்கொலை என்று வந்த செய்தியை படித்ததும், இந்த பெண் மட்டும் E&E அல்லது E&I பிரிவில் படிப்பதாக இருந்தால் இவளது தற்கொலைக்கு முக்கால் காரணம் விரிவுரையாளராகத்தான் இருப்பான் என்பதே எனது முதல் சிந்தனையாக இருந்தது. அவர்கள் மாணவர்களை நடத்தும் விதம் அப்படி... மனதளவில் ரொம்பவே பாதிப்பார்கள்.

அமெரிக்காவில் எல்லாம் ஒரு மாணவனோ மாணவியோ இது போன்ற அகால மரணம் அடைந்தால் அதனால் மனதளவில் பாதிக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு - மாணவர்களின் வயது காரணமாக - ஆறுதல் சொல்வதெற்கென்றே counsellors உண்டு. ஆகவே இந்த தற்கொலை செய்தியை கண்டவுடன் அண்ணாமலையில் தற்பொழுது படிக்கும் எனக்கு தெரிந்த அந்த மாணவன் நினைவு வந்தது. ஒருவேளை அவனுக்கு அந்த பெண்ணை தெரிந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றும் மேற்விபரங்களுக்கும் அவனை தொடர்பு கொண்டேன். பார்த்தால் அவன் அந்த மாணவியின் வகுப்பு தோழன்.

சேட்னா (தற்)கொலை பற்றி அவன் சொன்னது ::

சேட்னா நன்றாக படிக்கக்கூடியவள். அவளது GPA > 9.0/10.0... Group Discussion, Seminar போன்றவற்றில் நன்றாக பிரகாசிக்கக்கூடியவள். எல்லாரிடமும் நன்றாக பழக்ககூடிய சுபாவம். தோற்றத்திலும் நல்ல அழகு. சம்பந்தப்பட்ட விரிவுரையாளன் மணிக்குமார் இளைஞன்.. கடந்த ஒரு வருடமாகவே இந்த பெண்ணுக்கு செல்போன் மூலமாகவும் ஏனைய வழிகளிலும் டார்ச்சர் தந்து வந்துள்ளான். இவனுக்கு இன்னொரு விரிவுரையாளனும் கூட்டாளி. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று மாடல் தேர்வில் பங்கேற்ற மாணவி சேட்னாவிடம் சென்று அவள் பிட் வைத்திருப்பதாக தான் சந்தேகப்படுவதாக கூறியிருக்கிறான் மணிக்குமார்.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது செமஸ்டர் தேர்வு கூட இல்லை. வெறும் மாடல் தேர்வுதான். இந்த மாடல் தேர்வில் மார்க் வாங்குவதால் கிடைக்கும் அதிக பட்ச பயன் இண்டர்னல் மார்க்கின் ஐந்தில் அல்லது மூன்றில் ஒரு பங்கில் மட்டுமே உபயோகப்படும்.

சேட்னா அவன் குற்றச்சாட்டை மறுத்து தனது துணிகளை உதறி காண்பித்திருக்கிறார். மேலும் சந்தேகம் இருந்தால் பெண் விரிவுரையாளர் எவராவது வந்து தன்னை சோதித்துக்கொள்ளலாம் என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சேட்னாவின் உடையில் கையை விட்டு சோதனை செய்திருக்கிறான் மணிக்குமார். பிட் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. உடன் இதையும் ஏற்கனவே அவனால் தான் பாதிக்கப்பட்டதையும் துறைத்தலைவரிடம் சென்று புகாராக சொல்லியிருக்கிறார் சேட்னா. ஆனால் அவரோ விரிவுரையாளனையும் அழைத்து இது நீங்கள் இரண்டு பேரும் தீர்த்துக்கொள்ள வேண்டிய ப்ரச்னை என்று சொல்லியிருக்கிறார். வெளியில் வந்த உடனேயே "நீ எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்து கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் மணிக்குமார். தன் உடைக்குள் கைவிட்டு சோதனை நிகழ்ந்த அதிர்ச்சியிலும் அதனை துறைத்தலைவர் கூட கண்டுகொள்ளவில்லை என்ற அதிர்ச்சியிலும் சேட்னா தற்கொலை செய்து கொண்டாள்.

இந்த நிலையில் சேட்னா இறந்த பிற்பாடு கூட அந்த விரிவுரையாளர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது போக அந்த பெண்ணின் நடத்தை மீதே களங்கம் கற்பிக்க முயற்சி நட்ந்திருக்கிறது. சேட்னா நடத்தை ஒரு மாதிரி என்று நிர்வாகமும் போலீஸும் எழுதி கொடுக்க சொல்லி ஹாஸ்டல் மாணவிகளை வற்புருத்தியிருக்கின்றனர். விசாரணையின் போது 'அவ அடிக்கடி பாண்டி போறவளாமே' என்பது மாணவிகளிடம் விசாரணை என்ற பெயரில் அண்ணாமலை நகர் போலீஸ் விடுத்த ஸ்டேட்மெண்டில் ஒன்று. அவள் விபச்சாரி என்ற ரீதியிலேயே "விசாரணை" நடத்தப்பட அது SMS மூலமாக மாணவர்களை சென்றடைய மாணவர்கள் கொதித்திருக்கின்றனர்.. அதன் பிறகே ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றனர். போலீஸ் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி நிர்வாகம் அங்கு வர அதுவே கல்லெறிதல் முதற்கொண்டு கலவரமாக மாறியிருக்கிறது. உடனே பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற மூடல் நடத்தியாகிவிட்டது..

"அவ பாவம் க்ளாஸ் டாப்பர்ணே, அவள போயி பிட்டு வச்சிருக்கான்னு பொய் சொல்லி சாகடிச்சிட்டான் அந்த லெக்சரரு.. ஏண்ணே அந்தாள ஒரு சஸ்பெண்டு கூட பண்ணாம வச்சிருக்காங்க"

"சஸ்பெண்டு பண்ணா காலேஜ் பேரு கெட்டு போயிருமின்னு பண்ணியிருப்பாங்கப்பா"

"எண்ணனே இது, சஸ்பெண்ட் பண்ணா, தப்பு பண்ணவங்கள கண்டிக்கிறாங்கன்னு காலேஜ் மேல நல்ல பேருதான வரும். எப்படி அது கெட்ட பேரா ஆகும்"

"அது இல்லப்பா, சஸ்பெண்ட் பண்ணா, தப்ப ஒத்துகிட்ட மாதிரி இருக்கும். அப்படின்னா அங்க அப்படித்தான் நடக்குதுன்னு செய்தியாயிரும். அடுத்த வருசம் புள்ளங்கள அங்க சேக்க பேரண்ட்ஸ் பயப்படுவாங்க. வருமானம் வராதுல்ல"

"அதுக்காக எப்படின்னே இப்படி பொய் சொல்ல முடியுது இவங்களால... அது காப்பியடிச்சதாலதான் தூக்கு மாட்டிகிச்சின்னு எல்லா பேப்பர்லயும் வருது"

"கொஞ்சம் எங்கிட்ட போன கொடு... யேய். நீ கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா.. நேத்தியிருந்து நியூசையே பாத்துகிட்டு இருக்கான். சோறு தண்ணி சரியா சாப்பிட மாட்றான்"

"ஆமா.. கூடவே பேசி பழகுன பொண்ணு பொக்குனு செத்து போயிட்டா... எப்படி சாதாரணமா இருக்கிறது"

"நீ ரொம்ப மனச அலபாய விடாம இருடா... தப்பு செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கெடைக்கும்.. நீ கொஞ்சம் அமைதியா இரு" - இதை சொல்லும்போது எனக்கே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லை...

"ஆமாண்ணே, இந்த அண்ணாமலை நகர் போலீஸ் மாதிரி இல்லாம ஏ.எஸ்.பி எங்ககிட்ட நடந்த உண்மைய கேட்டு வாங்கி எழுதிகிட்டு போயிருக்கார். அதுதான் கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு... அவங்க அப்பாம்மாவுக்கு பர்னாலா கிட்ட இன்புளுயன்ஸ் இருக்கிறதா பேசிக்கிறாங்க.. பாவம் அவங்க.. அவ்ளோ தூரம் எடுத்து போக ரொம்ப செலவாகும்னு இங்கயே பொதச்சிட்டாங்க... எண்ணன்னே இது வாழ்க்கை"

ஒரு 20 வயது சிறுவன் என்ன வாழ்க்கை இது என்று கேட்டால் என்ன சொல்வது?


தினமலர் செய்தி
தினமணி செய்தி
தி ஹிந்து செய்தி

30 comments:

  1. EEE துறையில் விரிவுரையாளர்கள் psycho-வை போல நடந்து கொள்வது புரிந்து கொள்ளமுடியாதது. அதுவும் internal marks என்ற ஒன்று வந்த பிறகு இவர்கள் கொட்டம் தாங்க முடியாதது. university practical நெருங்கி வரும் சமயத்தில் என்ன தான் நல்ல படி record சமர்பித்தாலும், அது அறையின் சகல மூலைகளுக்கும் பறக்கும்.

    இவையெல்லாம் அவர் செய்வது, மாணவர்களிடையே தனக்கு ஒரு ultimate image-யை உருவாக்கவே.ஒரு வகையில் இது ஒரு குரூரத்தனம். மனதளவில் பலவீனமானவின் செயல்.

    இது போல நடந்த கொண்ட விரிவுரையாளர்களுக்கு வருட முடிவில் மாணவர்கள் ஆள் வைத்து அடித்த சம்பவங்களும் உண்டு.

    ReplyDelete
  2. shoking...இப்படிக் கூட செய்தி திரிப்பா ? பத்திரிகைகளுக்கு மனசாட்சி என்பதே கிடையாது போல

    ReplyDelete
  3. படித்தவுடன் மனது கனக்கிறது...எப்படியும் இந்த மணிக்குமாரை அரஸ்ட் செய்வாங்க...கடலூர் ஜெயில்ல தான் போடுவாங்க ( விசாரணை கைதியா இருந்தாலும் )

    என்னுடைய அப்பாக்கிட்ட சொல்லி செருப்பாலே அடிச்சு கையை காலை உடைக்க சொல்றேன்..அந்த நாயை..அதை வலைப்பூவிலும் போடறேன்...அதை படிக்கிற வாத்திப்பயலுகலுக்கு புத்தி வருதான்னு பாப்போம்...

    ReplyDelete
  4. ச்சே! ரொம்ப சோகமான செய்தி. அதைவிடக் கொடுமை செய்தித் திரிப்பு.

    CITல் எனது நண்பர்கள் படித்த போது ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டு விடுதியின் பின்புறம் இருப்புப் பாதையில் வீசப்பட்டான். போலீஸ் அந்த கேஸை எப்படி திரிச்சாங்க தெரியுமா?

    "தனிப்பட்ட பகையால் காமக்கொடூரன் கொலை". அவனோட அறையில சில பலான பத்திரிக்கைகள் இருந்திருக்கு. அதனால அவன் Pervertஆம். இவங்களையெல்லாம் என்ன சொல்றது...

    ReplyDelete
  5. மாணவர்கள் கல்லூரியை விட்டு சென்றபிறகும் EEE துறையில் விரிவுரையாளர்கள் psycho-வை போல நடந்து செமத்தியாய் வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.

    நான் விரிவுரையாளனாய் பணிபுரிந்த போது நடந்த Practicals தேர்வில் நான் Internal Examinerஆக இருந்தேன். நான் படித்தபோது எனக்கு விரிவுரையாளராய் இருந்த ஒருவர் அப்போது External Examinerஆக பணிபுரிந்தார். பழைய பகையை மனதில் கொண்டு எனது மாணவர்களுக்கு எல்லாம் ஒற்றை இலக்க மதிப்பெண் எழுதினார். என்னை கையெழுத்திடுமாறு கேட்டார். (பாவம் என்னை இன்னும் அவருடைய மாணவனாகவே நினைத்துவிட்டார்).

    அப்றம் என்ன, நான் போய் நிர்வாகத்திடம் சொல்லி (பின்ன? எங்கூருக்கு வேற ஊர் ஆளு வந்து ஆள நினைச்சா விட்டுடுவமா?), "செய்ய வேண்டியதை" செஞ்சேன்.

    கடைசியில அவர் ஒவ்வொரு மதிப்பெண்ணாக ப்ளேடு போட்டு சுரண்டி மீண்டும் நான் கேட்ட மதிப்பண்ணை எழுதுவதைப் பார்க்க காமெடியாய் இருந்தது.

    :-)))

    ReplyDelete
  6. வாசித்து மிக மனம் வருந்தினேன். அழகாகப் பிறப்பது கூடத் தவறா?
    இந்த வாத்திக்கு மனச்சாட்சி கொல்லாதா?? ஆனாலும் உங்க நாடு மிக மோசம்
    இதுவே! ஈழமானால் ;வாத்தியின் கதை காலி!!அங்கும் கோணங்கித் தனங்கள் இருந்தும்
    உயிர் பயம்;அடக்கமாக இருக்கிறார்கள். அதை நீங்களும் வரவைக்க வேண்டும்.

    ReplyDelete
  7. சன் டீவியில் ஒரு நிமிடச் செய்தியாய்ப் பார்த்து தலையும் காலும் புரியாமல் இருந்த பொழுது விஷயத்தை மீண்டும் விளக்கிச் சொன்னதற்கு நன்றி.

    ஒரு பெண்ணின் மேல் அனைவரின் முன் ஒரு ஆண் கை வைப்பதா? குற்றம் செய்த பெண்ணைக் கைது செய்யும் பொழுது கூட பெண் போலீஸர்தான் வேண்டும் என்கின்ற பொழுது இவருக்கு எப்படிக் கிடைத்தது இந்த அதிகாரம். இந்த குற்றத்திற்கு பாலியல் வன்முறை மற்றும் கொலை எனத்தான் இவர் மீது குற்றம் சாட்ட வேண்டும்.

    இதற்கு அவர் தரப்பிலும், கல்லூரி தரப்பிலும் சொல்லப்படும் செய்தி என்ன?

    ReplyDelete
  8. // "நீ எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்து கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது" //

    இந்த மாதிரி சைக்கோ கேஸ்கள் தமிழ்நாட்டில் நிச்சயம் உண்டு. அரசியல்வாதி ஆதரவு, போலீஸ்காரனின் கையலாகாத்தனம், பொதுமக்களின் மெத்தனம் அல்லது பயந்த சுபாவம் எல்லாம் சேர்ந்து ரவுடிகளை உச்சத்தில் வைத்திருக்கிறது. இணையத்து அசிங்கத்தைக்கூட தடுக்கவோ தண்டிக்கவோ இவ்வளவு படித்த நம்மால் ஒரு மயிரும் புடுங்க முடியவில்லை.

    வெறுமே பொறுமத்தான் முடிகிறது.

    ReplyDelete
  9. பொது இடத்தில் கட்டி வைத்து சாத்தச் செய்ய வேண்டும் இது போன்ற பாலியல் வன்முறைப்பாதகர்களை!
    யோகன் -பாரிஸ் சரியாகச் சொல்லியிருக்கிறார்!"ஆனாலும் உங்க நாடு மிக மோசம்!"

    வெட்கப்பட வேண்டிய விஷயம் இது!

    சமூக அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

    ReplyDelete
  10. ஹரி, இண்டர்னல் மார்க் எல்லா துறைகளுக்கும் உண்டு எனும்போது ஏன் எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் துறை மட்டும் இப்படி கேனத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். இளரத்தங்கள் சேரும்போது ஒழுங்கானவர்களாக சேர்ந்தாலும் நாளடைவில் இருக்கும் சைக்கோக்களின் குரூர பழக்க வழக்கத்தை தானும் ரசிக்க ஆரம்பித்து கெட்டுபோய் விடுகிறார்கள். இது வாழையடி வாழையாக தொடர்கிறது.

    *

    பத்திரிக்கைகளுக்கு தரப்பட்ட முதல் செய்தியை அப்படியே பிரசுரித்து இருக்கிறார்கள் போல. போகப்போக உண்மை நிலையை அவர்கள் பிரசுரிக்கலாம்.. நம்மூர் இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் பத்திதான் நமக்கு தெரியுமே

    *

    ரவி, மணிக்குமாரை காப்பாற்ற கண்டிப்பாக பல்கலை நிர்வாகம் முயலும். காலேஜ் இமேஜை காப்பாற்ற. செட்டியார் ராஜாவின் செல்வாக்கும் பணபலமும் பாதாளம் வரை பாயும். கைவைப்பார்களா என்று பார்ப்போம்.

    *

    கோபி, காமக்கொடூரன் என்பது கேஸை சுலபமாக முடிக்க வழி. படிக்கிற வயசில் எல்லாருமே செக்ஸ் புக் படித்துதான் வந்திருப்போம் எனும்போது பெரிசுகளாக ஆனவுடன் சமுதாய பொதுபுத்தி "படிக்கிற வயசுல என்னா செக்ஸ் புக் படிக்க சொல்லுது" என்று உடனே டைவர்ட் ஆகிவிடும். மத்தபடி இந்த எக்ஸ்டர்னல்ல "குத்தறது" எல்லாம் எல்லா இடத்திலயும் 'அரசியல்ல சகஜமப்பா'தான் போல...

    *

    யோகன், இந்த விஷயத்தில் கண்டிப்பாக எங்கள் நாடு மோசம்தான். ஓரிரு முறை வாத்திகள் கிராம மக்களிடம் செமத்தியாக அடிவாங்குவார்கள்.. அது தவிர இதுவரை கடுமையான தண்டனை என்று அவர்களுக்கு கிடைத்தது கிடையாது... ஒரு பள்ளியில் நிறைய மாணவிகளை உடல்ரீதியாக அப்யூஸ் செய்தாலுமே கூட பிறகு நடப்பது என்னவோ, பள்ளிக்கல்வி துறை ரீதியான விசாரணையும் அதற்கு தண்டனையாக இடமாற்றமுமே... இந்த குற்றத்தை எப்படி இவ்வளவு ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை... 18 வயதுக்கு குறைந்த எவரையும் sex abuse செய்தால் பொதுமக்களுக்கே கடுமையான தண்டனையும் அதுவே நம்பிக்கைக்கிரிய வாத்தியாக இருந்தால் இரட்டிப்பு தண்டனையும் தரும் வகையில் ஒரு விழிப்புணர்வும் சட்ட திருத்தமும் வர வேண்டும். எங்கே...

    *

    இ.கொ.. கல்லூரி தரப்பு செய்திதான் பத்திரிக்கையில் படித்திருப்பீர்களே.. மாடல் தேர்வில் பிட் அடித்து (காப்பி என்கின்றன சில பத்திரிக்கைகள்) பிடிபட்டதால் அவமானமடைந்து மாணவி தற்கொலை. (ஒரு சில பத்திரிக்கைகள் அவருக்கு பரீட்சை எழுத மீண்டும் சான்ஸ் தரப்பட்டது என்றும் சில பத்திரிக்கைகள் அவரை மற்ற மாடல் தேர்வுகள் எதையும் எழுத அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சொல்கின்றன).

    ஏற்கனவே மருத்துவ கல்லூரி மாணவன் நாவரசு விஷயத்தில் ஜான் டேவிட் குற்றவாளி அல்ல என்று "நீதி" சொல்லியாகிவிட்டது. இதுவரை குற்றவாளி என்று யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு கொலை என்றால் கல்லூரியின் இமேஜ் - வருமானத்துக்கு என்ன குறைச்சல் - பாதிக்கப்படும் என்பதால் இதை மூடி மறைக்கும் வகையிலான செய்திகள்தான் பரப்பப்படும்.

    ReplyDelete
  11. // தடுக்கவோ தண்டிக்கவோ இவ்வளவு படித்த நம்மால் ஒரு மயிரும் புடுங்க முடியவில்லை. வெறுமே பொறுமத்தான் முடிகிறது // கையாலாகாதனத்தை நினைத்து எரிச்சலாகத்தான் இருக்கிறது..

    *

    சமூக அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

    பொறுமையாக வரும்.. ஆனால் எவ்வளவோ செல்வாக்கான சென்னை பல்கலைக்கழக வி.சியின் மகன் கொலையிலேயே கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை.. பாவம் இந்த பெண். அவள் பெற்றோர் பஞ்சாபிலிருந்துகொண்டு எவ்வளவு போராடுவார்கள்.. பணபலத்தின் முன் என்னவிதமான நீதி கிடைக்கப்போகிறது...

    ReplyDelete
  12. "நீ எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்து கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் மணிக்குமார். தன் உடைக்குள் கைவிட்டு சோதனை நிகழ்ந்த அதிர்ச்சியிலும் அதனை துறைத்தலைவர் கூட கண்டுகொள்ளவில்லை என்ற அதிர்ச்சியிலும் சேட்னா தற்கொலை செய்து கொண்டாள்.

    எப்படி துறைத்தலைவர் கண்டுகொள்வார்???.

    இந்த அண்ணாமலை பல் கொலைக்
    கழகத்தில் வாத்தியார் வேலைக்கு ஆள்
    எடுக்கும் முறையை தெரிந்துகொண்டாலே, இவர்கள் லட்சணம் தெரிந்துவிடுமே.

    கிடைக்கப்போகும் சம்பளம், செய்யப்போகும் வேலையைப் பொறுத்து ஒவ்வொரு வேலைக்கும்
    ஒவ்வொரு தொகை லஞ்சம் நிர்னயம்
    செய்யப்பட்டுள்ளது.

    உங்களிடம் பணம் இருந்தால், உங்களுக்கு அண்ணாமலை பல் கொலை
    கழகத்தில் வேலை நிச்சயம். ஒரு
    வாத்தியாருக்கு தேவையான
    குணநலன்கள் ஒரு பொருட்டே அல்ல.

    அப்படி பெரும் லஞ்சத்தை கொடுத்து
    வேலையில் சேர்ந்த பணபலமும், அரசியல் பலமும் கொண்டவனாக இருப்பான் அந்த வாத்தி.அப்படியிருக்கையில் லஞ்சப் பணத்தைப் பங்கு போட்டு சாப்பிடும் துறை தலைவர்களும், பல் கொலை கழக நிர்வாகமும், அவன் மீது எப்படி நடவடிக்கை எடுக்கும்???.

    என்னைக் கேட்டால் மாணவர்கள், போலீசு, ஸ்ட்ரைக் என்று நேரத்தை வீனடிப்பதைவிட, அந்த வாத்தியை
    புரட்டி அடித்து, அனைவருக்கும் ஒரு பாடம் கற்பிக்கலாம்.
    என்றென்றும் அன்புடன்,
    பா.முரளி தரன்.

    ReplyDelete
  13. //மத்தபடி இந்த எக்ஸ்டர்னல்ல "குத்தறது" எல்லாம் எல்லா இடத்திலயும் 'அரசியல்ல சகஜமப்பா'தான் போல...//

    பொதுவா எக்ஸ்டர்னல்ல (வர்ற எக்ஸாமினருக்கும் இன்டர்னல் எக்ஸாமினருக்கும் பகை ஏதும் இல்லைன்னா) மார்க் போட்டுடுவாங்க. இன்டர்னல்லதான் கை வைப்பாங்க.

    இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்காம "தீர்ப்பை" சரியாக திருத்தி எழுத வைக்க வேண்டும். எல்லாமே அடுத்தவன் செய்ய வேடிக்கை பாக்கத்தானே நம்ம சனங்களுக்கு தெரியும். சில மாற்றங்களையாவது நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

    ReplyDelete
  14. முரளி, இந்த விஷயத்தை பற்றியும் சொல்ல நினைத்தேன். ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் இதுதானே நடக்கிறது என்று சொல்லாமல் விட்டேன். இன்று தேதிக்கு இன்ஜினியரிங் லெக்சரர் வேலைக்கு 10 லட்சம் என்று கேள்வி. எனக்கு தெரிந்து என் கூட படித்த ஒரு உருப்படாதது (படிப்பை பல கோல்மால் செய்துதான் முடித்தான் என்றாலும் அதனால் சொல்லவில்லை... படிப்பு என்பது எல்லாருமே முன்ன பின்னதான் உருப்படாதது என்பது வேறு விஷயத்தால்.. அவனுக்கு 420 என்பதுதான் பட்டப்பெயர்.. அவன் சொல்வது பொய் என்பது நமக்கு தெரியும் என்பது அவனுக்கும் தெரியும் என்றாலும் அதை கூசாமல் சொல்வான், திருடுவது, வேறு சில இல்லீகல், இம்மாரல் என்று இருந்தவன்) படிப்பு முடிந்த அடுத்த வருடமே ஜஸ்ட் 3 லட்சம் கொடுத்து அண்ணாமலையில் சேர்ந்தவுடன் இனி உருப்பட்டா மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டேன்.. அதுபோக ஒரு சில ஜாதிகளுக்கு இந்த பணத்திலும் டிஸ்கவுண்ட் உண்டு.

    *

    கோபி, இண்டர்னல் எக்ஸ்டர்னலில் மாற்றம் என்பதை எப்படி ஆரம்பிப்பது என்று மாணவன் நிலையில் இருப்பவனுக்கு தெரியாததுதான் சோதனை. உங்களிடம் எதுவும் டிப்ஸ் இருந்தால் கொடுங்கள். என் கூட படித்த ஒருவனுக்கு இண்டர்னலில் வெறும் 3/25 போட்டார்கள். அவன் செய்தது தப்புதான்.வாத்தியாரை ரொம்ப கேவலமாக ஒரு வார்த்தை சொன்னான். மூன்றாம் செமஸ்டர் பேப்பரை எட்டாம் செமஸ்டர் வரை அவன் க்ளியர் செய்யவில்லை. மற்றபடி ப்ராக்டிகலில் அது இன்னும் மோசமாகிறது. இண்டர்னலில் மட்டுமல்லாமல் எக்ஸ்டர்னலிலும் கை வைக்க உதவி புரியும் இடம் அது. அதாவது கனெக்சன் பெரும்பாலான நேரங்களில் கை கொடுக்காது. அந்த சமயத்தில் மற்றவர்களுக்கு உதவி புரியும் வாத்தியார் குறிப்பிட்ட ஆளை மட்டும் கண்டுகொள்ள மாட்டார். மேலும் சர்க்யூட் டயக்ரத்தில் ஏதாவது ஒரு சிறு பிழை என்றால் அதை மற்றவர்களுக்கு திருத்த அறிவுருத்தும் வாத்தியார் குறிப்பிட்ட ஆளுக்கு மட்டும் தப்பாக இருக்கிறது, கரெக்டாக வரைந்து கொண்டு வா என்று திருப்பி அனுப்புவார். அப்புறம் எப்படி பரீட்சையை முடிப்பது.இதில் குற்ற உணர்ச்சியும் இருக்காது.மாணவன் தன்னைத்தானே நொந்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.. தியரி பரவாயில்லை, ப்ராக்டிகலில் கப் வைப்பது போன்ற கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது என்பது ஏன் என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். அதிலேயே ரெஸ்ட் ஆஃப் த கோர்ஸ் ஒழுங்காக ஆகிவிடுவான். நானெல்லாம் - எங்க செட்டில் நிறைய பேர் - ஃபைனல் ரிசல்ட் வந்தபோது புழல் சிறையிலிருந்து ஆயுள் முடிந்து வெளிவரும் செல்வாக்கில்லாத சாதா ரண கைதி எப்படி உணர்வானோ அப்படி உணர்ந்தேன்/தோம்.

    ReplyDelete
  15. என்னுடைய பழைய பதிவை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்...


    ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா???



    மாதா, பிதா, குரு, தெய்வம்???


    பதிவிலிருந்து சில வரிகள்


    இதைவிட கொடுமை, எங்க EEE டிப்பார்ட்மெண்டில் இந்தியன் கவர்ண்மெண்ட்ல இருந்து அவார்ட் வாங்கின ப்ராஜக்ட் பண்ண பசங்களுக்கு 200க்கு 140 தான் போட்டாங்க. ஃப்ளைட் ஹைஜாக் தடுக்க ஹார்ட் பீட் வெச்சி தடுக்கறதுக்கு Embedded Systems வெச்சி ஏதோ பண்ணாங்க. கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்லையும், மெக்கானிக்கலையும் நல்லா மார்க் போடும் போது இவங்களுக்கு மட்டும் அப்படி என்னனு புரியல!!!

    ReplyDelete
  16. முதலில் தோன்றியது: இப்படிக்கூஉட நடந்திருக்குமா? அதை இப்படியும் திரித்திருப்பார்களா??

    இண்டர்னல் மார்க்குகள் ஒரு ஆசிரியருக்குத் தரும் சுதந்திரம் பல சமயங்களில் தேவை என்பதே என் வாதமாக இருக்கும். நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கருவி என ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.

    ஆனால், எப்படிப்பட்ட அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்குக் காத்திருக்கும் கேனையன்கள் சைக்கோக்கள் கையில் மாட்டினால் என்ன ஆகும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

    இப்படி ஒரு கொடூர மனவியல் தாக்குதல் நடத்திய நாய்க்கு தண்டனையாக பதவி உயர்வுகூடக் கிடைக்கலாம் என்றுள்ள நிலைமை!

    தற்கொலைக்குத் தூண்டிய மன உளைச்சலோடு நிற்காமல் நடத்தை வரை திரிப்பு செய்ய காத்திருக்கும் "எழுத்தறிவிப்போன்" - அவனுக்குத் துணைபோகும் பல்கலை நிர்வாகம், காவல்துறை, ஊடகங்கள்!

    மாணவர் சக்தி ஸ்ட்ரைக்குக்கு மட்டும் வீணாவதை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். இம்முறை அதற்கு மேலும் முடிவுகள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. தூ..இவனெல்லாம் ஒரு வாத்தி. எங்கே போகிறது தமிழகம். நான் படிக்கும் காலத்தில் சாதிக்க முடியாதவர்கள் தான் போதிக்க வந்தார்கள். இப்போது போதிக்க வந்து கற்பழிக்கிறார்கள் பொறுக்கிகள். இவர்களை நடுத்தெருவில் நாய் போல் அடித்து துரத்தி துரத்தி அடித்தாலும் மனது ஆறாது.

    ReplyDelete
  18. I am also an alumini of Annamalai Engineering. The EEE dept is horible, the teasing etc., .The amin reason being the theory for that subject and the practicals for that subject are conducted in the same semester as that of other practical orieneted subjects like chemistry. However due to lack of equipements one has to do the practicle , where the theroy subjet is yet to be covered. Hence the students have to come prepared for the practicle class, whcih they don't do and also not possible.The equipments are costly if not done properly it may be dangerous to the student life and some times too expensive if spoiled. Hence the professors are very strict before any students carry out their practiclas. Since lab marks are counted for exams students also behave like slave to their teachers.Professors taking this opportunity can do anything with the students. Apart from this now a days the HOD cannot take action on professors , since he may be affliated to some :JATI sangam or political connections. Tamil nadu spoiled by Hooligans of DK / DMK and vanniar snagam. Hats off to university system in tamil nadu.

    ReplyDelete
  19. 04.04.2007 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ::

    அண்ணாமலை பல்கலையில் போராடும் மாணவர்கள்... தற்கொலைக்கு தூண்டியது செக்ஸ் டார்ச்சரா?

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அழகான மாணவி-&படிப்பில் படு சுட்டியான சேட்னா, இப்போது உயிருடன் இல்லை. கடந்த 26&ம் தேதி மின்விசிறியில் துப்பட்டாவைக் கட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

    ‘பரீட்சை ஹாலில் ‘பிட்’ அடிக்கும் போது பேராசிரியரால் கையும்களவுமாக பிடிக்கப்பட்ட அவமானம் தாங்காமல் தான் சேட்னா தற்கொலை செய்து கொண்டார்’ என்கிறது பல்கலைக் கழக தரப்பு.

    ஆனால், ‘சேட்னா பிட் வைத்தி ருந்ததை கண்டுபிடித்ததுடன் விட்டிருந்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அதற்கு பதில், ‘இன்னும் வேறு எங்கெல்லாம் பிட் வைத்திருக்கிறாய்’ என அந்த விரிவுரையாளர் அவரது உடலில் கைவைத்தார். அதோடு கேவலமாகவும் பேசினார். அந்த அவமானம் தாங்காமல்தான் சேட்னா தற்கொலை செய்து கொண்டார்..’ என்கிறது மாணவர்கள் தரப்பு.

    இதில் எது உண்மை அல்லது இரண்டுமே உண்மையா என்பதெல்லாம் கேள்விக்குறியாக இருக்க... சேட்னாவின் மரணம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது! மாணவர்களின் போராட்டத்தால் பல லட்சக்கணக்கான பல்கலைக்கழக சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

    சேட்னா தற்கொலை செய்து கொண்ட விவரம் உடனடியாக பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வேலை செய்து கொண்டிருக்கும் அவரது பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. சேட்னாவின் தந்தை ராமச்சந்திரன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சண்டிகரில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிகிறார். வடக்கத்தி பெண்ணையே கல்யாணம் செய்திருக்கிறார். அவர்கள் வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என சொல்லப்பட்டதால், அந்த மூன்று நாட்களும் சேட்னாவின் உடல் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

    ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த சேட்னாவின் வகுப்பு மாணவரான ராஜாவிடம் என்ன நடந்தது என்று கேட்டோம்.

    ‘‘26&ம் தேதி மைக்ரோபிராசஸ் லேப் டெஸ்ட் நடந்தது. இந்த எக்ஸாம் தொடங்குறதுக்கு முன்னால 24&ம் தேதி நாங்க படிக்கிற சப்ஜெக்ட் சம்பந்தமா டால்மியாபுரத்துக்கு இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்குப் போயிருந்தோம். அதனால லேப் டெஸ்டுக்கு யாரும் சரியா படிக்கல. டெஸ்டை இரண்டு மூணு நாள் தள்ளிப் போடுங்கன்னு கேட்டும் முடியாதுனு சொல்லிட்டாங்க. எப்பவும் முதல் மார்க் வாங்குற சேட்னாவும் சரியா படிக்கல போலிருக்கு. அதனால டெஸ்ட் சம்பந்தமா ஏதோ பேப்பரை கொண்டு வந்துடுச்சு. டெஸ்ட் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷம் மணிக்குமார் என்ற லெக்சரர் சேட்னா கையிலருந்த பேப்பரை பிடுங்கிட்டார். அதோட, ‘நீ இன்னும் எங்கெல்லாம் என்னன்ன வச்சிருக்க’னு சொல்லி சேட்னாவோட கோட் பாக்கெட்ல கைய விடப்போனார். அதுக்குள்ள ஹால்ல இருந்த இன்னொரு விரிவுரையாளரும் பக்கத்துல வந்துட்டார். அப்புறம் அங்க என்ன நடந்ததுன்னு தெரியல. ஆனா சேட்னாவை ஹாலை விட்டு வெளியேற்றியதோட எல்லோரும் அவரைத் திட்டினாங்க. அந்தப் பொண்ணை அப்ப பார்த்ததுதான். அப்புறம் பொணமாத்தான் பார்த்தோம்..’’ என்று கண் கலங்கினார்.

    ஆனால் வேறு சில மாணவர்களோ, ‘‘ ‘டால்மியாபுரம் டூர் போற... கிளாஸ்ல பிட் அடிக்கிற... இப்படியெல்லாம் செய்யும் நீ இன்னும் வேற என்னவெல்லாம் செய்வே’னு கேவலமா பேசுனாங்க. அதனாலதான் சேட்னா தற்கொலை செய்துகிட்டார்’’ என்கிறார்கள்.

    சேட்னாவிடம் தவறாக நடந்து கொண்ட விரிவுரையாளர் மணிக் குமாரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என கோரி மாணவர்களின் போராட் டம் தீவிரமானதைக் கண்டு பல்கலைக் கழகத்துக்கு விரைந்து வந்தார் மாவட்ட எஸ்.பி&யான பிரதீப்குமார். அவர் கொடுத்த உத்தரவாதத்தால் மாணவர்கள் சன்னதம் குறைந்து கொஞ்சம் அமைதியானார்கள்.

    இந்நிலையில், 28&ம் தேதி மதியம் சேட்னாவின் பெற்றோர் சிதம்பரம் வந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சேட்னாவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘‘இப்பதானே அவளுக்கு கல்யாணம் செய்ய நிச்சயம் செஞ்சிருந்தோம்..’’ எனக் கதறி அழுத அவர்கள் சிதம்பரத்திலேயே உடலை எரித்துவிட்டு அஸ்தியை மட்டும் எடுத்துக்கொண்டு கண்ணீருடன் கிளம்பினார்கள்.

    ஆனால் அன்று மாலை, ‘சேட்னா மோசமான நடத்தை கொண்ட பெண் என்று எங்களை எழுதித் தரச் சொல்வதாக சேட்னாவின் வகுப்புத் தோழிகள் மிரட்டப் படுகிறார்கள்’ என்றொரு எஸ்.எம்.எஸ். செய்தி, காய்ந்த சருகுக் குவியலில் விழுந்த தீப்பொறி போல் மாணவர்கள் மத்தியில் பரவ, அன்று இரவிலிருந்தே ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டனர். நிமிடத்துக்கு நிமிடம் அவர்களின் வன்முறை கட்டுக்கடங்காமல் போனது. எஸ்.பி., ஏ.எஸ்.பி. என போலீஸ் பட்டாளமே வந்தும் மாணவர்களின் ஆவேசத்துக்கு அணை போட முடியவில்லை. கடைசியில் இரவு முழுவதும் துவம்சம் பண்ணிவிட்டு விடியலில்தான் மாணவர்கள் ஓய்ந்தார்கள்.

    இந்திய மாணவர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் கலிபாவிடம் பேசினோம். ‘‘அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பது சாதாரணமாகிவிட்டது. மதிப்பெண் போடும் அதிகாரம் தங்கள் கையில் இருப்பதைப் பயன்படுத்தி மாணவர்களை மிரட்டுகிறார்கள். சேட்னாவை பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறோம். அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். விரிவுரையாளர் மணிக்குமாரை சஸ்பெண்ட் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேட்னாவின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்...’’ என்றார்.

    விரிவுரையாளர் மணிக்குமாரை சந்திக்க முடியாததால் அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். அதில் பேசிய பெண்மணி, ‘‘நான் அவரது மனைவிங்க. பிரசவத்துக்காக காரைக்கால் வந்திருக்கேன். செல் என்கிட்டதான் இருக்கு’’ என்றார். ‘‘மணிக்குமாரோட நம்பர் ஏதாவது இருந்தா கொடுங்க’’ என்று கேட்டோம். ‘‘கட் பண்ணிட்டு கூப்பிடுங்க’’ என்றவர் அதோடு செல்லை ஆஃப் செய்து விட்டார்.

    பல்கலைக்கழகத்தின் பி.ஆர்.ஓ. செல்வத்திடம் இது குறித்து கேட்டோம். ‘‘அந்த மாணவி பிட் வைத்திருந்ததால் விரிவுரையாளர் பக்கத்தில் இருந்த இன்னொரு மாணவியை விட்டு சோதனை செய்தார். மற்றபடி அவர் மாணவியை தொட்டதாக சொல்லப்படுவது தவறு. போலீஸாரும் லேபில் இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்து விட்டார்கள். பிட் வைத்திருந்த அவமானம் தாங்காமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். வேறுவிதமான யூகங்களுக்கு வேலையில்லை. பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவியைப் பற்றி எழுதிக் கேட்டதாக சொல்லப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது’’ என்றார்.

    எது உண்மை என்பதை போலீஸ் விசாரணைதான் சொல்ல வேண்டும்!

    - கரு.முத்து

    ReplyDelete
  20. I also studied in Annamalai University but in agriculture department.Lots of Psycho are there.Especially they belong to staff union called AUTA.When I studied there, due to the tortures of staff, 3 students are died.It is a common one.

    ReplyDelete
  21. ஐயோ.. ஆசிரியர்கள் இவ்வளவு மோசமாகவா இருப்பார்கள்.. அவர்களுக்கு குழந்தைகள் இல்லையா??
    அவர்களுக்கு இப்படி நடந்தால் எப்படி இருக்கும் .

    ReplyDelete
  22. நெஞ்சு பொறுக்குதில்லையே....

    ReplyDelete
  23. I studied in E&I in Annamalai University, decade ago. The most psycotic and neurotic departments were E&I and EEE. But EEE easily wins the top spot with the max number of psychos. When we saw the Mechanical, Computer Science and Other dept students enjoy during their final semester, we really regretted taking up E&I and EEE as we had to take at least one more subject extra than other depts. Ofcourse, the record writing has still left me with a Carpal tunnel syndrome that occurs when you write passages of non sense. Most of the toppers in my class knew more about subject matter than the lecturers. I remember some lectures skipped huge chunks of units from subjects because he did not know about them, and has been doing this for years without anyone questioning him. One lecturer was always busy collecting money from students in one form or the other, Cuddalore students were the most pathetic lot as they had to buy material for his itthuponna Projector project.

    But having said this, there was never a physical form of harasment toward female students. Even a girl whose character was know to be shaddy was never troubled with. That the lecturers have fallen to such low level, shows the dictatorship kind of attitudes that these depts have traditionally maintained.

    ReplyDelete
  24. I am ALUMNI of ANnamalai University who passed out in 1983 (Mechanical Engg) and even then the E.E.E and E&I departments used to be the most NOTORIOUS.We used to dread to go to the electrical labaratory classes/examinations.
    There used to be hard core " PORUKKI" by name Parthasarathy who was a reader at that time, and he only used to use the most vulgar language with the students.
    There was an instance, when a set of 4th year students (Mine was a 5 year course) were detained in the lab well past midnight , because they had not completed the records and when asked, they were bit bold in explaining the reasons .
    Then the student representatives had to bring this matter to the notice of the Dean thru the hostel warden and then they were let go around 2.00 A M.
    I also recall that one of the lectureres used to take class on electrical engineering explaining how elcetricty was "MANUFACTURED" in Neyveli and "TRNASPORTED VIA MANDARAKUPPAM, BUVANAGIRI TO CHIDAMBARAM"
    This shows the calibre of the faculty of that department.
    It is great regret that things are going from bad to worse with passing years.

    K.G.Subbramanian

    ReplyDelete
  25. ivanugalalam nadutheruvula nirvanama odavitu avan amma appa ellarum paathathaan thirundhuvanugaa??koomutuai k_______.Kena________.

    ReplyDelete
  26. Im also an alumnus of Annamali University 15 yrs back.
    The situation is not good there but if u compare othe deemed universities like PRIST,Satyabama, annamali is good

    ReplyDelete
  27. sattangal kadumaiyanal kutrangal kuraium

    ReplyDelete
  28. sattangal kadumaiyanal kutrangal kuraiyum

    ReplyDelete
  29. pongada punnakkungala

    ReplyDelete
  30. pongada punnakkungala

    ReplyDelete