<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சாதனை இளைஞரும் ஒரு கொசுறு செய்தியும்


கோவையை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகரான முத்து என்பவர் சந்திரமுகியை தொடர்ந்து 102 நாட்கள் பார்த்து சாதனை (?!) படைத்துள்ளார்.


கேவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்த இவர், காய்கறிக் கடையில் பணி புரிந்து வருகிறார். சந்திரமுகி வெளியான ஏப்ரல் 14ம் தேதி முதல் கோவை ராம்நகரிலுள்ள குமரன் திரையரங்கில் தினமும் படத்தை பார்த்து வந்துள்ளார். ஒரு வாரம் படத்தை தொடர்ந்து பார்த்த பிறகு, இந்தப் படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100 நாட்களும் நான் தொடர்ந்து படத்தை பார்க்க வருவேன் என்று முத்து தியேட்டர் நிர்வாகியிடம் கூறியுள்ளார். முத்து கூறியபடியே தினமும் படத்தை பார்க்க வந்துள்ளார். தினமும் படம் பார்க்க வரும்போது தியேட்டர் நிர்வாகியிடம் சென்று தனது ஆஜரை பதிவு செய்துள்ளார்.

கொசுறு செய்தி:

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பல குடும்பங்களால், தங்கள் வாழ்வே கேள்விக்குறியாகிய நிலையில் குழந்தைகளின் கஷ்டத்தை காணச்சகியாமல், பெற்றோரால் கைவிடப்பட்ட 106 ஆதரவற்ற சிறுவர்/சிறுமியர் எங்களிடம் வளருகின்றனர். அவர்களோடு விளையாடவும், அவர்களுக்கு கல்வி கற்க உதவவும், பாடல், நடனம், இசை ஆகியவற்றை பயிற்றுவிப்பதற்கும், அவர்களுக்கு கைத்தொழில் முதலியவற்றை அறிமுகப்படுத்தவும் தங்கள் நேரத்தை தர இயலும் தன்னார்வலர்கள் தேவை - தேவதாஸ், India Volunteer Work Projects


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


super
 



emba,
andha ilaingar evlo mana urudhiyoda, avar kashtapatu, viyarvai sindhi sambadhicha kaasai, evlo urupadiya selavu panirukaar... nee enadana..

kevalam, ippidi oru kaariyathai keela poduriyay.. nee ellam oru Sutha Tamizhana (vijayakanth style-la.. kanna sevaka vachu, uruti uruti.. kannathu thasai ellam adhiria andha nee ellam-dra dialogue-ai padikavum)

thirundhugapa..

ps: haiyo.. thirundhu-nu sonadhu andha vethanai.. sorry saathanai ilaingarai illai, ungalai thaan.. ;-)
 



ஒரு முறை விஜய் படம் ரிலீஸான உடனே ரசிகர்கள் அவரின் ஆளுயர கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணார்கள் அப்படின்னு படிச்சுட்டு எனக்கு கோபம் வந்தது. அந்த பாலை எவ்வளவு ஏழை குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாம்னு சொல்லவே வேண்டியதில்லை.

ஒரே ஆறுதல் என்னன்னா இன்னும் இப்படி செய்யறவங்க minority யா தான் இருக்காங்க.. இன்னோரு விஷயம் நம்ம நாட்டுலே இப்படிபட்ட diversions இருக்கிறதுனாலே தான் இளைஞர்கள் crime போன்ற destructive விஷயங்கள்லே அவ்வளவா ஈடுபடறதில்லையோன்னு கூட நினைக்க தோணுது.
 



செந்தில் பொழைச்சுக்குவீரய்யா... ரஜினி கட்சி ஆரம்பிச்சா உங்கள மாதிரி தொண்டர்களுக்கு அரைவட்ட செயலாளர் பதவியாவது உண்டு

ரம்யா பால் அபிஷேகம் மட்டுமல்ல, சூடம் காட்டி தீபாராதனை எல்லாம் நடக்கும். ஒரு முறை ரஜினிக்கு நடந்த கூத்தை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்...
// crime போன்ற destructive விஷயங்கள்லே அவ்வளவா ஈடுபடறதில்லையோன்னு //
இவங்க பண்றது crime இல்லையெனினும் desctructive விஷயம்தான், என்ன சொல்றீங்க...
 



சம்பந்தமில்லாத ஒப்பீடு. நான் ஒண்ணும் பக்கா ரஜினி ரசிகன் இல்லை என்பதை நிரூபிக்க முகமூடியார் இவ்வளவு கஷ்டப்படணுமா?
 



ஒப்பீடு இல்லீங்க ராம்கி... இரண்டு செய்திகள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை (அ) தொடர்புள்ளவைன்னு வச்சிக்கோங்களேன்...

நான் பக்கா ரஜினி ரசிகன் இல்லைன்னு இனிமேதான் நிரூபிக்கனுமா...

ரஜினிகாந்தின் புத்தக meme
ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது
இந்த இரண்டு பதிவுகள் போதுமே... ரஜினி படங்களை ஜாலியாக பார்ப்பதுண்டு, ஆனால் படையப்பா படத்திற்கு பிறகு அவர் படங்கள் எதுவும் பார்க்கவில்லை
 



கட்சி தேர்தலிலே வெற்றி பேற வேண்டும் என்று விரல்வெட்டிக்கொள்ளும் தொண்டர்களுக்கும் இந்த ரசிகருக்கும் ஒன்றும் வேறு பாடில்லை.

//diversions இருக்கிறதுனாலே தான் இளைஞர்கள் crime போன்ற destructive விஷயங்கள்லே அவ்வளவா ஈடுபடறதில்லையோன்னு கூட நினைக்க தோணுது. //

போராட்டங்கள்,பிரச்சினைகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ அதை அடக்க காவல்துறையையும் இராணுவத்தையும் ஏவுவது ஒரு வழி, மற்றொரு வழி இந்த மாதிரியான diversion, சமீபத்தில் ஒரு முன்னாள் காவல்துறை தலைவர் ஒருவரின் பேட்டியில் தருமபுரி மாவட்டத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அங்கே கைப்பந்து விளையாட்டை பிரபலபடுத்தினோம் தீவிரவாதம் கட்டுக்குள் வந்தது என்றார்,

அதே போல் வட கிழக்கு மாகணங்களில் நடைபெறும் போராட்டங்களை மட்டுப்படுத்த போதைப் பொருள் புழக்கத்தில் விடப்படுவதாக சில இடங்களில் படித்தேன், இதனால் மேலும் உல்பா இயக்கத்தினர் திரைப்படங்களுக்கு தடை விதித்ததாகவும் பத்திரிக்கைகளில் படித்தேன்.

இது மாதிரியான உத்தி வரலாற்றில் பிரபலமானது தான் ஒபியம் வார் எனப்படும் அபினிப் போர் சீன தேசத்தில் நடந்ததும் இப்படி பட்ட ஒன்றுதான்.

பிரச்சினையை தீர்க்க வேலை வாய்ப்பு, வாழ்க்கைதரம் உயர்த்துதல், உள்கட்டமைப்பு, மற்றும் பிரச்சினையின் ஆரம்பத்தை ஆராயாமல் இது மாதிரி கைப்பந்தும்,திரைப்படங்களும்,போதையும் போராட்டத்தை நீர்க்க செய்யலாம், ஆனால் தலைமுறை இளைஞர்களின் சீரழிவுக்கு யார் பதில் சொல்வார்கள்??
 



// திரைப்படங்களுக்கு தடை விதித்ததாகவும் பத்திரிக்கைகளில் படித்தேன். // ஓ தடை விதிப்பதில் இவ்ளோ விஷயம் இருக்கா ;-)

// பிரச்சினையை தீர்க்க வேலை வாய்ப்பு, வாழ்க்கைதரம் உயர்த்துதல், உள்கட்டமைப்பு, மற்றும் பிரச்சினையின் ஆரம்பத்தை ஆராயாமல் இது மாதிரி கைப்பந்தும்,திரைப்படங்களும்,போதையும் போராட்டத்தை நீர்க்க செய்யலாம், ஆனால் தலைமுறை இளைஞர்களின் சீரழிவுக்கு யார் பதில் சொல்வார்கள்?? // ஆமோதிக்கிறேன்
 



என்ன முகமூடியாரே தினமலரின் எரிதங்களையும், 102 தடவை படம் பார்த்த ரஜினி ரசிகரையும் குட்டுவதை பார்த்தால் பின்னால் யாரையோ பலமாக குட்டப்போகின்றீர் போலிருக்கே... ம் ... நடத்துங்க ராசா
 



சரி, உங்க கருத்து ??