<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ரஜினிகாந்தின் புத்தக meme


தமிழ்மணத்தில் பதிவுசெய்துள்ள வலைப்பதிவாளர்களின் புத்தக மீமால் (meme) கவரப்பட்ட ரஜினிகாந்த் இதில் கலந்து கொள்ளவேண்டும் என்று தனக்கும் மிகுந்த ஆவல் இருப்பதாய் அறிவித்ததன் பிண்ணனியில், அதற்கென ஒரு வலைதளத்தை ஒதுக்க இயலும் என்றாலும் தற்போதைக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிக்கொடுத்து உதவியிருக்கிறது குமுதம்.
தமக்கு பிடித்ததாக ரஜினி சொல்லும் புத்தகங்கள்::

லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்
ஆட்டோ பயாக்ரஃபி ஆஃப் எ யோகி
கீதா ஆஸ் இட் வாஸ்

படித்தால் இமயமலை போகும் அபாயம் இருப்பதால் படிக்கும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிக்கும் படி வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அப்படியே ஒரு பக்கபாட்டு ::

ரஜினிக்கும் சிம்புவிற்கும் ஒரு 5 அல்லது 6 வயது வித்தியாசம் இருக்கலாம்னு சொல்ற "அரசு" ரஜினியை விட சிம்பு பெரியவரா சிறியவரான்னு சரியா சொல்லாம பொதுமக்கள டீல்ல விட்டுட்டாரு. இது குறித்து மாட்டுக்கார மாடசாமிகிட்ட கருத்து கேட்டப்போ ::

அவங்க தலைவருக்கு வயசு சின்னதுன்ற அவங்க நினைபுல எங்களுக்கு ஒன்னியும் ப்ரச்னை இல்லீங்கோ.. ஆனா அதே நெனப்புல ரசினி ரெண்டு கையயும் பயில்வான் மாதிரி தூக்கிகிட்டு வெத்து உடம்போட இருக்கற படையப்பா போஸ்டர ஊரெல்லாம் ஒட்டினாங்களே.... எங்களையெல்லாம் ஒரு நிமிசம் நெனைச்சு பாத்தாங்களா.... சின்ன புள்ளங்கல்லாம் பயந்துடிச்சி... வேப்பில ஒடிச்சி ஒடிச்சி மரமெல்லாம் மொட்டயாயிடிச்சி. ஒமகுச்சிக்கு ஏன் ரஜினி தலைய ஒட்டி க்ராபிக்ஸ் பன்னியிருக்காங்கன்னு கேட்ட பெருசுங்களுக்கு வேற பதில் சொல்ல முடியல..

எங்கள விடுங்க, வாயில்லா சீவனுங்க என்ன பாவம் பண்ணிச்சி.... என் மாடுங்க பாட்டுக்கு நாலு போஸ்டர தின்னமா பால கொடுத்தமான்னு இருந்திச்சிங்க... மேற்படி போஸ்டர பாத்ததுபுட்டு மெரண்டு போயி படுத்ததுங்கதான்... அதுக்கப்புறம் போஸ்டர்னாலே பால் கறக்க மாட்டேங்குது..... என் பொளப்புக்கு பால்தான் போங்க..

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முன்னவெல்லாம் நம்ம 'கி'ராமராஜன் இருந்தாரு.. இப்போ தான் நம்ம 'சிங்கார வேலன்' இருக்காரே.. கூப்பிட வேண்டியது தானே... எப்படியா இருந்தாலும் 'கறந்திடுவாரே'.. அப்புறமென்ன கவலை?!
 கிராமராஜனும் சிங்காரவேலனும் என்னாதான் அந்தர்பல்டி அடிச்சாலும் அண்ணாமலை மாத்ரி ஒவர்நைட்டுல பணக்காரன் ஆவுற வித்தை கத்துக்க முடியலயே என்னா பண்றது
 அவர் சொன்ன புததகங்களைப் படித்துவிட்டுத்தான் இமயமலை போக வேண்டும் என்பதில்லை. அப்ப்டியே போனாலும் அவருடன் போகப்போவதில்லை. ஆனால் இப்போது இமயமலையில் இருக்கும் சாமியார்கள் ரஜனி வந்தாலும் வந்துவிட்வார் என்று பயந்து சீனாவில் உள்ள இமயமலைப் பகுதிக்குப் போய்விட்டார்களா. ரஜனி மீண்டும் படபிடிப்பு ஆரம்பித்த பின் இந்தியப் பகுதியில் உள்:ள இமயமலைக்கு வருவார்களாம். அந்த பாபவின் பிரதான சீடரே எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார், தொலைபேசியிலும் சொன்னார். ஆல்பஸ் மலைக்குப் போகலாம் என்றால் கோலிவுட்,பாலிவுட்,டெலிவுட் கும்பல்கள் படப்பிடிப்பு நடத்துவதால் சீனாவிற்குள் போவதே சரியானது என்று முடிவு செய்தார்களாம்.
 இதைப் படிச்ச கையோட 'கமல்ஹாஸனின் புத்தக மீமீ' பாக்கலாமுன்னு அவரோட
'அனுமதி' வாங்கிக்கிட்டுப் போய்ப் பார்த்தேன்.நானும் 'கமலோட' ரசிகைதான். அதனாலேதான்
அனுமதி கிடைச்சுதுன்னு வச்சிக்குங்கபா!!!

எல்லாம் ஒரே 'டிவிடி'யாத்தான் இருக்கு. இப்பெல்லாம் அவ்வளவா புத்த்கம் படிக்க நேரம் இல்லையாம்!
அடுத்த படத்துக்குக் கதை (இன்னும் வரப்போற படங்களுக்கும் சேத்துதான்!) யை புடிக்க எல்லா இங்கிலிபீசு
படங்களையும் பாக்கும்படி ஆகிப்போச்சாம்!!!!
 தாங்கள் முகமூடியை கழற்றி வைத்து விட்டு அந்த புத்தகங்களை படித்துப் பாருங்கள். என்னை பொறுத்தவரை அவற்றில் ஏற்கக் கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன.

//கிராமராஜனும் சிங்காரவேலனும் என்னாதான் அந்தர்பல்டி அடிச்சாலும் அண்ணாமலை மாத்ரி ஒவர்நைட்டுல பணக்காரன் ஆவுற வித்தை கத்துக்க முடியலயே என்னா பண்றது//

இந்த நகைச்சுவை நன்றாக இல்லை. இரண்டரை மணி நேர படத்தில் ஐந்து நிமிடம் போதுங்க. இல்லையெனில், பல்துலக்கி, குளித்து சாப்பிடுவதை மட்டுமே காட்ட முடியும்-:)
 ///அப்படியே ஒரு பக்கபாட்டு ::///

இது தான் முகமூடி குசும்பா???
 புலிக்குட்டி, நீங்க புத்தகங்களை எல்லாம் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா?? (இப்ப எங்க இருக்கீங்க... மலையிலயா??)... அப்புறம் ஒரு விசயம். கண்ணாடி போட்டு படிங்கன்னு சொல்றவங்கள கேள்விப்பட்ருக்கேன்... அது என்னா முகமூடிய கழட்டி வச்சிட்டு படிக்கறது.... நிறைய பேரு இத்தயே சொல்றாங்க, ஒன்னுமே புரியலே உலகத்திலே...

அப்புறம் புலிக்குட்டி, உங்க வகையறாவ பத்தி ஒரு பதிவு போட்றுக்கேன். படிச்சிட்டீங்களா?
 // இல்லையெனில், பல்துலக்கி, குளித்து சாப்பிடுவதை மட்டுமே காட்ட முடியும் // அப்படி காமிச்சாலும் நூறு நாள் ஓடிறுமில்லா...

நன்றி வீ.எம்... எல்லாம் உங்கள மாதிரி நல்லவங்க வல்லவங்க (எனக்கே ரொம்ப குளிருதே) கொடுக்கற ஆதரவுதான்.
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link