<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

வறுமைக்கோடு என்றால் என்ன...


உலக மதிப்பீட்டின் படி தனிநபர் நாள் வருமானம் $1 (தோராயமாக மாதத்திற்கு ரூ.1300) க்கு கீழ் இருந்தால் அவர் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கிறார்... இந்தியாதான் ஏழை நாடாயிற்றே, இந்த கணக்கெல்லாம் நமக்குதவாது.... இந்திய அளவில் 1999-2000 வருடத்தைய மதிப்பீட்டின் படி, கிராமப்புறத்தில் தனிநபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு 327 ரூபாய்க்கு கீழும், நகர்ப்புறத்தில் தனிநபர் ஒருவர் மாதத்திற்கு 454 ரூபாய்க்கு கீழும் சம்பாதித்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வருவார்... இல்லையெனில் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இல்லை...


ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசன் (NSSO) ஒரு மாதம் முழுவதும் ஒரு குடும்பம் செய்யும் செலவின் அடிப்படையில் இந்த கணக்கை எடுக்கிறது... planning commission புள்ளிவிபரப்படி ::

வருடம் ** கிராமப்புறம் ** நகர்ப்புறம் ** மொத்தம் ** சதவீதம்
1973-74 ** 26 .13 கோடி ** 6.00 கோடி ** 32.13 கோடி ** 54.9%
1993-94 ** 24.40 கோடி ** 7.63 கோடி ** 32.04 கோடி ** 36%

மேலே கண்டது வருமானத்தை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கணக்கு.... img crtsy:gbgm-umc.org வறுமைக்கோடு என்பதை உணவு ஊட்ட குறைபாடு (ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 2400 நகரம்/ 2100 கிராமம் Kcal க்கும் குறைவான உணவு ஊட்டம்), கல்வியறிவு, அடிப்படையான மருத்துவ சுகாதாரம், வாழும் காலம் அதிகரிப்பது என்று கொண்டால் இந்த அளவு இன்னும் - கிட்டத்தட்ட 50% அளவு - அதிகரிக்கிறது... துல்லியமான புள்ளிவிவரம் இல்லையெனினும் 50 %க்கும் அதிகமான மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள்... 70 %க்கும் அதிகமான பெண்கள் கல்வியறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு. கிராம மக்கள் நகர்ப்புறத்திற்கு குடிபெயர்வதின் தாக்கம் கிராமப்புற அளவு குறைவதிலும் நகர்ப்புற அளவு அதிகரிப்பதிலும் தெரிந்தாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மொத்த ஜனத்தொகையின் அளவில் ஒன்றும் பெரிய மாறுபாடு இல்லை...

img crtsy:unknown internet source1999-2000 சர்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது... அதாவது 1993-94ல் 36 சதவீதமாக இருந்த வறுமைக்கோடு மக்கள் தொகை 1999-2000ல் 26 சதவீதமாக (26 கோடி மக்கள்) குறைந்து விட்டது என்பதே அது... அட ஒருபக்கம் என்னடா என்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், பட்டினிச்சாவுகள் அதிகரிப்பு, மக்கள் எலிக்கறி சாப்பிடுகிறார்கள் ; மறுபக்கம் என்னடாவென்றால் அரசாங்கத்தின் சீரமைப்பு காரணமாக சதவீதம் குறைந்திருக்கிறது ஏன் இந்த முரண் என்றால் இந்த முறை நிகழ்த்தப்பட்ட சர்வேயின் முறையில் மாறுபாடாம், அதுதான் காரணமாம்...

ஆனால் இனி கவலை இல்லை... வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பயன் படுத்த தற்போது பயன்பாட்டில் இருக்கும் "ஆவ்ரோ' ரக விமானங்களுக்கு பதில் புது ரக ஜெட் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மூன்று "எம்பரர்" ரக விமானங்களும் (ஒவ்வொன்றும தலா 100 கோடி ரூபாய்), மூன்று "போயிங்" விமானங்களையும் ( ஒவ்வொன்றும் தலா 150 கோடி ரூபாய் ) வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. 14 இருக்கைகள் கொண்ட எம்பரர் விமானங்களை உள்நாட்டு பயன்பாட்டுக்கும், போயிங் விமானங்களை வெளிநாட்டு பயணங்களின் போதும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விமானங்கள் வாங்கப்பட்டவுடன் அமைச்சர்கள் பறந்து பறந்து வறுமைக்கோடு மறைய பாடுபடுவார்கள்...

வறுமைக்கோடுக்கு கீழ் உள்ள மக்கள் நலன் ஒன்று மட்டுமே கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடக்க விடாமல் கூச்சலிடும்போது சபை நடக்காத ஒவ்வொரு நிமிடமும் வரி செலுத்துவோருக்கு ஆகும் செலவு $350 (தோராயமாக ரூபாய் 16 ஆயிரம் ஒரு நிமிடத்துக்கு - அரசாங்கம் பாராளுமன்றம் நடக்க ஒதுக்கும் பட்ஜெட் கணக்கின் படி) மட்டுமே என்பதை கணக்கில் எடுத்தால் இவர்களை ஓட்டு பொறுக்கிகள் என்று சொல்வது எவ்வளவு தவறென்று விளங்கும்...

துன்பத்தை தவிர வேறெதுவும் தெரியாத தங்கள் சந்தோஷத்துக்காகத்தான் செப்டம்பர் 7, 1995 அன்று 100 கோடி ரூபாய் செலவு செய்து கல்யாணம் செய்தார்கள் என்பதையும், பாவப்பட்ட பிறப்பான தங்கள் நலனுக்காகத்தான் அரசியல்வாதிகள் ஹைதராபாத் வரை சென்று ஓய்வான மனநிலையில் சிந்திக்கிறார்கள் என்பதும், அய்யனுக்காகவும் கண்ணகிக்காவும் சிலை வைத்து பாடுபடுகிறார்கள் என்பதும், ராமரையும் பாபரையும் கூப்பிட்டு தீர்வு காண முயல்கிறார்கள் என்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள், தார் அடிக்கிறார்கள் என்பதும் தெரியாமல் அதை தெரிந்து கொள்ள நேரத்தை செலவிட்டால் அடுத்த வேளை சோற்றுக்கு வழி கிடைக்காது, கூலி கொடுக்கும் முதலாளி திட்டுவான் என்று வாழும் இந்த மக்களை என்னவென்று சொல்வது...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முகமூடியாரே... என்னய்யா இது, திடீர்னு இந்த மாதிரி பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிட்டீரு?! நான் பதிவையும் பேரையும் படிச்சவுடனே ஒரு நிமிஷம் 'போலி முகமூடியோட பதிவு போலருக்கு'ன்னு நெனச்சிட்டேன்! ரொம்ப கெட்டுப்போயிட்டீரு... அம்புட்டு தான் சொல்ல முடியும்!
 



ஓய் மாயவரத்தாரே! கெட்டுப்போனது, முகமூடி மட்டுமல்ல ஓய்; நீரும் தானய்யா!! " புனிதப் பணியில் இணைத்துக் கொள்ளுங்கள்" பதிவைப் பார்த்துட்டு, சரி உம்ம பதிவ யாரோ ஒரு நல்ல ஆத்மா ஹைஜாக் பண்ணிட்டாரோன்னு நெனச்சேன். அப்புறம் தெரிஞ்சது 'கல்லுக்குள் ஈரம்'.

என்ன ஓய் பண்றது, நம்மல யாரும் வெட்டிப் பதிவர்கள்-னு சொல்லிடக்கூடாது-ங்கற எண்ணம் எனக்கும் அப்பப்ப எட்டிப்பாக்குது; ஏதாச்சும் ஒரு பதிவாச்சும் 'அட' அப்டீங்கறமாதிரி போடனும்; ஆனா எனக்குத் தெரிஞ்சதெல்லாம் 'அடை' சுடுறது எப்டீங்கற மாதிரிதான் :-( என்ன பண்றது, தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு 'மனம் உண்டு; மார்க்கம் தெரியலயே':-(

ஹூம்... காலம் மாறும்-னு காத்திட்டுருக்கேன்!.பாக்கலாம்!
அதோ... தூரத்தில் விடிவெள்ளி முளைக்கிறது; நம்பிக்கை துளிர் விடுகிறது!

- ஞானபீடம்!.
 



அந்த இரண்டு புகைப்படங்கள், வாங்கப்போகும் விமானங்களின் விலைப்பட்டியல் - இதை மட்டும் பதிவில் போட்டிருந்தால் எப்படி இருந்திருக்குமென்று நினைத்துப்பார்க்கிறேன்.
 



கேட்க மறந்துவிட்டேன்.
அந்த 'சுட்ட' படங்கள் எங்கிருந்து?
 



"மாதத்திற்கு 454 ரூபாய்க்கு கீழும் சம்பாதித்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வருவார்"

மாதம் 455 ரூபாய் ஒரு நபருக்கு சென்னையில் கானுமா? $1 கணக்குத்தான் பொருந்தும் போலும்!!! அது சரி, சென்னையில் விலைவாசி எப்பிடி இருக்கு... யாராவது விலைப்பட்டியலை எழுதினால் நல்லது!!!
 



ஆமா மாயவரம்... அப்ப நாங்களும் எப்ப no.1 வலைப்பதிவுன்னு பேர் வாங்கறது (கவனிக்கவும் :: இது வேற வாங்கறது... திராவிட இயக்க பாணியில தனக்கு தானே வாங்கிக்கிறது அல்ல) தமிழ் வலைப்பதிவுக்காகவே என்னை அர்ப்பணிச்சிகிட்ட என்கிட்ட இப்படியெல்லாம் பேசுகிறீர்களே...

ஞானபீடம் நீர் பரிசோதனை முயற்சி எதுவும் பண்ணாம இப்ப மாதிரியே எப்பவும் இருந்தாலே அது தமிழ் மக்களுக்கு பண்ர நல்லதுதான்யா. இத விட்டுபோட்டு சிந்தனாமுறையில எதுனா பதிவ போட்டு எங்கள அதிர்ச்சிக்குள்ளாக்காதீர் (புலிய - tigris - பாத்து பூனை - cat - சூடு போட்டுக்கலாமா)

தருமி அப்படி போட்டிருக்கலாம்தான்... ஆனா வறுமைக்கோட்டின் அளவுகோலை பார்த்தா அதிர்ச்சியா இருக்கு... விளக்கமா எழுதாம இருக்க முடியல.... அப்புறம் என் பதிவில் இருக்கும் படங்கள் எங்கிருந்து என்பதை படத்தின் மேல் எலிக்குட்டியை வைத்தால் (அழுத்த வேண்டிய அவசியம் இல்லை) img crtsy: என்று அதன் படமூலம் தெரியும்

nono கொஞ்சம் பொறுங்கள்... தேர்தல் நெருங்குச்சின்னா, நம்ம கருணாநிதி மேடைக்கு மேடை தன் ஆட்சியில எவ்ளோ அம்மையார் ஆட்சியில எவ்ளோன்னு ரொம்ப விளக்கமாவே விலைப்பட்டியல் வாசிப்பார் (5 வருசத்துல பயங்கர விலைவாசி ஏற்றமா இருக்கும்... ஆனா தன் ஆட்சியையே தான் ஒப்பீடு செய்யனும்னா பக்கத்து மாநிலங்களோட ஒப்பீடு செய்வார்... எல்லாம் 10 பைசா 15 பைசா வேறுபாட்டில இருக்கும்)
 



mugamoodi,

I never expected a pathivu like this from you ;-)

Anyway, it is a real eye opener for many, I suppose :)
 



என்ன பாலா முடிவே பண்ணிட்டீங்க... என்னோட சமூக நலன் குறித்த மற்ற பதிவுகள எ.கா ::

மஞ்ச மாக்கானும் பூதங்களும
கலியனின் நெஞ்சுக்கு சாத்தான் சொன்ன நீதி
புலிகளின் மூர்க்க குணம்
புதிய முறை லஞ்ச ஒழிப்புக்கு சிக்கல்
 



commoner சுட்டிக்காட்டியதற்கு நன்றி... அது சதவீதம்னு வந்திருக்கணும்... திருத்திட்டேன்.
 



source கொடுத்தமைக்கு நன்றி.
 



சரி, உங்க கருத்து ??