<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பஸ் எரிப்பு வழக்கின் தீர்ப்பு - ஒரு வழியாக


தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு : 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு தூக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

- தினமலர் கடைசி செய்திகள்

இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுக்க ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளும் சட்ட போராட்டங்களும் இனி நிகழும். எனினும் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று பல காரணங்களுக்காக மனதார விரும்புகிறேன்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள் ::

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு

ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி


****

பிப் 16, 2007 - பத்திரிக்கை செய்தி குறிப்புகள்

முதலில் கண்ணில் பட்ட தினமலர் செய்தி ::

சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு துõக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அ.தி.மு.க., கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். மூன்று பேர் மீது பஸ்சை எரித்தது, மூன்று மாணவிகளை கொலை செய்தது மற்றும் 46 பேரை கொலை செய்ய முயற்சி செய்தது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என தீர்ப்பு கூறிய சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட் நீதிபதி கிருஷ்ணராஜா, இவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என சேலம் முதன்மை கோர்ட் நீதிபதி தெரிவித்திருந்தார். நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் தீர்ப்பு என்பதால், சேலம் நகரம் நேற்று பரபரப்புக்குள்ளாகி இருந்தது. நேற்று முன்தினம் மாலை முதலே அஸ்தம்பட்டி பகுதியிலும், கோர்ட் உள்ளேயும், வெளியேயும் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று கோர்ட்டில் கடும் கெடுபிடி நிலவியது. மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பின்னரே ஒவ்வொருவரும் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட் பணியாளர்கள், வக்கீல்கள் மற்றும் வழக்கு தொடர்புடையவர்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் பழனிசாமி (ஏ15), மாதேஸ் (ஏ27) ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் அழைத்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""உங்கள் மீதான குற்றம் நிரூபணமாகி உள்ளது. தண்டனை அளிக்க போகிறோம். ஏதாவது சொல்வதானால் சொல்லலாம்,'' என்றார். 28 பேரும் நீதிபதி முன் ஆஜராகி தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், கருணை காட்ட வேண்டும் என்றும், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்மதமே இல்லை என்றும் கருத்து கூறினர்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""தண்டனை அளிப்பது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. அதை மாற்ற முடியாது,'' என்றார். பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பில் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்களில் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவர் மீது பஸ்சை எரித்தது, பஸ்சுக்கு தீ வைத்து, மூன்று மாணவிகளை கொலை செய்தது, பஸ்சுக்குள் இருந்த 46 பேரை கொலை செய்ய முயற்சித்தது மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளன. இவர்களுக்கு கொலை செய்தமைக்கு மூன்று முறையும், கொலை முயற்சிக்கு 46 முறையும் தண்டனை வழங்கப்படும். மற்ற 25 பேர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, கலகம் ஏற்படுத்தியது
கொலை குற்றம் நிரூபணமான குற்றவாளிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் துõக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 25 பேருக்கும் மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

****

பிப்ரவரி 16, 2007 பஸ் எரிப்பு தீர்ப்பு: மாணவியின் தந்தை திருப்தி

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சேலம் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு திருப்தி தருவதாக கண்ணீர் மல்க கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியுள்ளார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக பஸ் எரிப்பில் இறந்து போன 3 மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி வந்திருந்தார்.

தீர்ப்புக்குப் பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் தீர்ப்பு உங்களுக்குத் திருப்தி தருகிறதா என்று கேட்டனர். அதற்கு கண்களில் நீர் ததும்ப வீராசாமி கூறுகையில், நாமக்கல்லில் இருந்து தீர்ப்பை அறிவதற்காக வந்துள்ளேன். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் கோரமாக பலியாகி விட்டாள்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருப்தி தருகிறது. சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள்.

வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.

கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம்

****

பிப்ரவரி 16, 2007 பஸ் எரிப்பு: 3 அதிமுகவினருக்கு தூக்கு25 பேருக்கு 7 ஆண்டு சிறை

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர்.

உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்)

ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,

மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

அதிமுக அரசால் ஏகப்பட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதால் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், 28 அதிமுகவினரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

****

Bus-burning case: 3 AIADMK men sentenced to death ::

Salem (TN), Feb. 16 (PTI): Seven years after the death of three girl students in the burning of a bus in Dharmapuri following the conviction of AIADMK leader J Jayalalithaa in a corruption case, a Salem Court today sentenced three AIADMK workers to death on charges of murder, and 25 others to seven years imprisonment.

The three girl students of the Tamil Nadu Agricultural University were charred to death when their institution's bus was set ablaze in neighbouring Dharmapuri district on February 3, 2000 by AIADMK workers protesting the conviction of Jayalalithaa in Kodaikanal Pleasant Stay hotel case.

Eighteen others had received burn injuries after the bus was intercepted by the party's agitated workers and set on fire.

Yesterday, First Additional Sessions Judge D Krishnaraja pronounced Nedu alias Nedunchezhiyan, then Secretary of the Dharmapuri town unit of AIADMK, Madhu alias Ravichandran, then local MGR Forum functionary, and P Muniappan, a former panchayat president, guilty of murder, attempt to murder and various other charges under the IPC.

After the three pleaded innocence, the Judge ordered cancellation of their bail and directed the police to take them into custody.

The Judge also held 25 other accused guilty of rioting and wrongful confinement among other lesser charges while convicting them.

In 2002, Jayalalithaa was cleared of the charges of non-application of mind in granting building permission in the Kodaikanal Hill Area in the hotel case by the Supreme Court.

****

பிப்ரவரி 16, 2007 மாணவிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் கண்ணீர்!

சேலம்: 3 மாணவிகளை உயிரோடு வைத்து எரித்துக் கொலை செய்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை மாணவிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றுள்ளனர்.

பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், தாமதமாக வந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் நீதி வென்றுள்ளது. 3 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை கொடுத்தது போதாது, மற்றவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.

சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள். வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.

கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இன்னொரு மாணவி ஹேமலதாவின் தந்தை கேசவசந்திரன் கூறுகையில், இத்தகைய படு பாதகச் செயலை இனியும் யாரும் செய்யக் கூடாது. இதைப் பார்த்தாவது இனி வன்முறையில் ஈடுபடுவோர் திருந்த வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார்.

இதேபோல பலியான காயத்ரியின் உறவினர்களும் தீர்ப்பை வரவேற்றனர்.

அதே போல தண்டனை விவரத்தை அறிய சேலம் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மறுபக்கம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுது சோகத்தை வெளிப்படுத்தினர். 'அம்மா' நம்ம பக்கம் இருப்பதால் பாதகமான தீர்ப்பு எல்லாம் வராது என இவர்கள் நினைத்திருந்ததாகத் தெரிகிறது.

அம்மாவுக்காக பஸ்ஸை எரித்த வழக்கில் அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கு தண்டனை தந்துவிட மாட்டார்கள் என இந்தக் கொலைகாரக் கும்பலும் கூட நினைத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு நீதி மரண அடி தந்துள்ளது.


****

பிப்ரவரி 16, 2007 தூக்கு தண்டைக்காக போராடிய வக்கீல் சீனிவாசன்

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், மாணவிகளை இரக்கமில்லாமல் எரித்துக் கொன்ற 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மிகத் தீவிரமாக வாதாடினார். அவர் இந்த வழக்கை நடத்திய விதத்தால் தான் இந்த வன்முறைக் கும்பலுக்கு கூண்டோடு தண்டனை கிடைத்துள்ளது.

வழக்கில் தொடர்புடைய 28 அதிமுகவினரும் குற்றவாளிகளே, அதிலும் 3 பேர் நேரடியான கொலையாளிகள் என நேற்று சேலம் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பை அறிவித்தார்.

இதையடுத்து எழுந்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன், கொலைக் குற்றவாளிகள் என நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் நிரூபிக்கப்பட்டுள்ளனர். கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கும் அரிதான வழக்குதான். எனவே இந்த 3 குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் வெளியே வந்தால் சமுதாயத்தில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது.

மாணவிகள் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பியபோது 2வது எதிரியும், 3வது எதிரியும் பஸ்சுக்குத் தீ வைக்கச் சென்றபோது, பேராசிரியைகள் அகிலா, லதா, டிரைவர் கந்தசாமி ஆகியோர் பஸ்சில் மாணவிகள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என காலில் விழாத குறையாக கெஞ்சினார்கள்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத 3வது எதிரி மாது என்கிற ரவீந்திரன், எல்லோரையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தச் சொன்னார். 2வது எதிரி நெடு என்கிற நெடுஞ்செழியன் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி (இதற்காக டிவிஎஸ் 50ல் பெட்ரோல் கேன் எடுத்து வந்தவர் இவர்) ஊற்றி தீ வைத்தார்.

இதற்கு 4வது எதிரி முனிப்பன் உடந்தை. எனவே இந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார் சீனிவாசன்.

சீனிவாசன் சந்தித்த சவால்கள்:

இந்த வழக்கில் 31 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவரான செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

ஆனால், இந்த வழக்கை முதல்வராக ஜெயலலிதா இருந்ததால் அதிமுகவினர் மீதான இந்த வழக்கை தலைமையின் உத்தரவுப்படி போலீசார் மிக அலட்சியமாக நடத்தினர். விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தினாலும் அதிமுகவினரை தப்ப வைக்க அரசும், போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக தெனாவட்டாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டனர்.

மேலும் போலீஸ் மற்றும் அதிமுகவினரின் மிரட்டலால் 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். (மொத்த சாட்சிகள் 22 பேர்). இதனால் இந்தக் கும்பல் மொத்தமாக வழக்கில் இருந்து தப்பிவிடும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை கோவைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று சாடிய நீதிபதி வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு மாற்றினார்.

மேலும் அரசு வக்கீலையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் நியமித்த புதிய வழக்கறிஞரான சீனிவாசனுக்கு போதிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தனர். மேலும் அவருக்கும் கூட மிரட்டல்கள் வந்தன. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.

ஆனாலும் சேர்ந்து போகாமல் வழக்கை நடத்தினால் சீனிவாசன். மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு 123 சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தச் செய்தார்.

அதில் தர்மபுரி கலெக்டர், கோவை விவசாயக் கல்லூரி துணை வேந்தர் ஆகியோரும் அடக்கம். இந்த வழக்கில் பஸ்சில் சென்ற ஆசிரியைகள், மாணவிகள் அளித்த சாட்சியம் தான் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதிமுகவினரின் மிரட்டல்களையும் மீறி எரிக்கப்பட்டபோது பஸ்சில் இருந்த மாணவிகளும் ஆசிரியைகளும் சாட்சியம் அளித்தனர்.

அப்போது அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அவர்கள் அழுத அழுகையும், மயங்கி விழுந்ததும் நீதிமன்றத்தில் இருந்தவர்களை எல்லாம் கண் கலங்கச் செய்தது. ஆனால், அதிமுக மட்டும் கலங்கவே இல்லை. இந்த 31 பேர் கும்பலை காப்பாற்றுவதில் தான் தீவிரமாக இருந்தது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்தனர்.

ஆனால், நீதிமன்றத்தின் உதவியோடு தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து நீதி வெல்ல உதவியிருக்கிறார் வழக்கறிஞர் சீனிவாசன்.

மிக பொருத்தமான தீர்ப்பு: சீனிவாசன்

முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் வாதாடினேன். அதை நீதிபதி ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது மிகப் பொருத்தமான, சரியான தீர்ப்பு.

இனிமேலாவது இதுபோன்ற கொடூர செயலில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு உள்ளவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார் சீனிவாசன்.

****

பிப்ரவரி 16, 2007 பஸ்: விசாரித்த போலீஸ் டீமூக்கு பதவி உயர்வு!

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் விசாரணையை நடத்திய மற்றும் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்களைத் திரட்டிய சிபிசிஐடி போலீஸ் டீமுக்கு முதல்வரின் பதக்கமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதற்கான பரிந்துரையை சிபிசிஐடி டிஐஜியான ராஜேந்திரன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ளார்.

டிஎஸ்பிக்கள் பி.கே.பெரியசாமி, ஏ.பெரியசாமி, கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராஜபாண்டி, தம்பிதுரை, மாதையன், போபாலன்,

போலீஸ்காரர்களான முத்துவேல், ரமேஷ்குமார், குமாரவேலன், சர்புதீன், ராஜன், குணசேகரன் ஆகியோரது பெயர்கள் பதவி உயர்வுக்காகவும் பதக்கத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் போலீஸ்õகரர்களுக்கு எஸ்.ஐ. பதவி தருமாறு ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.

இந்த வழக்கில் அதிமுக ஆட்சியின்போது சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அமுக்கவும் பலத்த நெருக்குதல் தரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

ஆனால், அதையும் மீறித் தான் இந்த அதிகாரிகளும் போலீசாரும் வழக்கை சாட்சியங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு முதன்முறையாக சிபிசிஐடி விசாரித்தபோது அதன் எஸ்.பியாக இருந்தவர் சமுத்திரப்பாண்டியன். இவர் இவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் உள்ளார்.

தீர்ப்பை அறிய சமுத்திரப்பாண்டியனும் சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கருத்து தெரிவிக்கையில், இது சிபிசிஐடி போலீஸுக்குக் கிடைத்த வெற்றி.

இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்களின் சாட்சியம், அவர்கள் கொடுத்த ஆதாரங்களும் பெரும் உதவியாக இருந்தன. 5 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மாணவிகள், நேரில் வந்து சாட்சி கூறியது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார்.

***

Dec 06, 2007 தர்மபுரி பஸ் எரிப்பு-3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் ::

தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வழக்கையே திசை திருப்பினர் போலீசாரும் அதிமுகவினரும். இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.

இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

(மாணவிகளை எரித்துக் கொன்றபோது இந்த நெடுஞ்செழியன் தர்மபுரி நகர அதிமுக செயலாளராக இருந்தார். மாது என்ற ரவிச்சந்திரன் தர்மபுரி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். முனியப்பன் புளியம்பட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார்)

இந்தத் தீர்ப்பை 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி முருகேசன், நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.

9 மாத விசாரணைக்குப் பின் இன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். தங்களது தீர்ப்பில் 3 கொலைகாரர்களுக்கும் சேலம் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரின் சிறை தண்டனையையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

தீர்ப்பின் முழு விவரம்:

அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதை காட்ட அடிக்கடி போராட்டங்கள் சாலை மறியல்கள் செய்கிறார்கள். சில சமயம் தீ எரிப்பு சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதையெல்லாம் ஏற்கவே முடியாது.

பலியான 3 மாணவிகளும் அறியா பருவத்தினர். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பு இல்லை.

தேவையில்லாமல் பஸ்சுக்கு தீ வைத்து எரித்து அவர்கள் 3 பேரையும் கொன்று விட்டனர். அவர்கள் தப்பிவிடாதபடி பஸ்சின் கதவை மூடி தீ வைத்துள்ளனர். 3 மாணவிகள் பலியானதை இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது திட்டமிட்ட கொலை மாதிரி தான்.

தீயில் கருகிய 3 மாணவிகள் துடிக்க, துடிக்க இறந்ததை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, பதபதக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது.

இதனால்தான் அவர்களுக்கு சேலம் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகளை பெற்றவர்கள் அதை ரத்து செய்யவேண்டும் என்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வாதத்தை ஏற்க இயலாது. இதனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக உள்ளன. 123 சாட்சிகள், 242 ஆவணங்கள் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன.

குற்றவாளிகளின் மேல் முறையீட்டை ஏற்று அவர்களை இந்த வழக்கிலிந்து விடுவித்தால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே வீணாகிவிடும். எனவே நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமையாகிறது.

இதனால் இந்த வழக்கை சாதாரணமாக விட்டு விட முடியாது. இவர்களது தண்டனையை குறைக்கவும் முடியாது.

நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்கள் தலா ரூ.59,000 அபராதம் கட்டவும் உத்தரவிடுகிறோம்.

அது போல மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதிபடுத்தப்படுகிறது. அவர்களும் தலா ரூ. 13,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றனர் நீதிபதிகள்.

7 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் விவரம்:

முத்து என்ற அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், ராஜூ, மணி என்ற கூடலர்மணி, மாதுராமன் (இவர் அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் என்பது குறிப்பிடத்தக்கது), முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தெளலத் பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகியோர்.

தண்டனை பெற்ற 28 பேருமே அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

***

jan 04, 2008 பஸ் எரிப்பு அதிமுகவினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு-அரசு உத்தரவு ::

சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.

இதையடுத்து இந்த மூவருக்கும் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படவுடுள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரையும் 2008 ஜனவரி 10ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை தூக்கில் போட கோவை சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனையை 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனும் (பி.எச்.பாண்டியனின் மகன்), அரசு தரப்பில் டி.குமரேசனும் வாதாடினார்கள்.

அதிமுகவினர் சார்பில் பாண்டியன் வாதாடுகையில், தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகல் எங்களுக்கு 14ம் தேதி தான் கிடைத்தது. தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் கிருஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால், 3வது வாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேளையில் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது தவறானதாகும். வரும் 10ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 3 பேரின் உயிருக்கு பாதகம் ஏற்படும் என்றார்.

வாதத்தை கேட்ட பின்னர் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பீல் செய்யப்படுவதற்கு முன்பாக தண்டனையை நிறுத்தி வைக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த பின்னர், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது.

சிறை விதிப்படி செஷன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வாரண்ட் பிறப்பித்து தண்டையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் சார்பில் அணுக வேண்டும். அங்குதான் இதுகுறித்து அவசர உத்தரவுகளை பெறமுடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தண்டனையை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது தவறு. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நிராகரிக்கப்பட்டு பின்னர் கவர்னர், ஜனாதிபதியிடம் கருணா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிராகரிக்கப்பட்டால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதி முருகேசன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டீர்கள். அங்கு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இந்த வழக்கு மீண்டும் 4ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது போன்ற சூழ்நிலையில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா. ஏற்கனவே இதுபோன்று உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதா. இதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல அரசு தரப்பிலும் தனது கருத்தை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார் நீதிபதி.

இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ராஜ இளங்கோ ஒரு பதில் மனு தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், மூன்று குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் கண்காணிப்பாளர் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த மூவரின் மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த உத்தரவின் நகலை நான் இந்த நீதிமன்றத்திடம் வழங்குகிறேன் என்று கூறி கோவை சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய உத்தரவின் பேக்ஸ் நகலை சமர்பித்தார்.

இதையடுத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மூன்று அதிமுகவினரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


***

ஜனவரி 18, 2008 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 அதிமுகவினரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு ஜனவரி 10ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் நவ்லேக்கர், பாஞ்சல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் அல்தப் அகமதுவும், அதிமுகவனர் தரப்பில் பி.எச்.பி. மனோஜ் பாண்டியன், சுசீல் குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.

அல்தப் அகமது வாதாடுகையில், 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அதிமுகவினரின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கு விசாரணை கீழ்க் கோர்ட்டில் சரியாக நடக்கவில்லை. முறைப்படி விசாரிக்கப்படவும் இல்லை. எனவே 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர்.

மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக முழு விபரங்களுடன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.

இதன் மூலம் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்கலாம் எனத் தெரிகிறது.




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ஆமாம், இந்த தண்டனை நிறைவேறினால்தான் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களும், பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்களும் அடங்குவார்கள்...(நிஜமாவா ?? )

ஆனால் 25 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பு...பிரச்சினை நடந்தபோது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவருக்கு, அவர் அந்த கட்சியில் அந்த ஏரியா கிளை செயளாளர் என்பதால் தண்டனை கொஞ்சம் ஓவர்..விட்டா ஜெயலலிதா உட்பட அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுப்பானுங்க போல...

எது மரண தண்டனைக்குறிய குற்றம் என்றும் கேள்வி எழுகிறது ?
 



என்னுடைய பின்னூட்டம் தான் முந்தையது. ப்ளாகர் சொதப்பல்.
 



முகமூடி,
தகவலுக்கு நன்றி!

ஒன்றுமறியாத மாணவிகளை எரித்துக் கொன்ற மாபாதகர்களுக்கு தூக்குத் தண்டனை தேவை தான்.
 



இனிமேல்,பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் முன்பு இது அவர்களை யோசிக்கவைக்கும்.
 



//எது மரண தண்டனைக்குறிய குற்றம் என்றும் கேள்வி எழுகிறது ?
//

செந்தழல் ரவி,
என்ன சொல்லுறீங்க ? அப்பாவி மாணவிகளை தப்பிக்க முடியாதவாறு பூட்டி வைத்து எரித்துக் கொன்ற நாய்களுக்கு மரண தண்டனை இல்லையென்றால் பின்னர் எதற்குத் தான் இருக்க முடியும்?
 



ஜோ,

நீதியின் பார்வையில் கூட உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றம் குறைந்த தண்டனைக்குரியதே...!!!

தீயில் எரித்து கொல்லப்பட்டனர் / பெண்கள் / மாணவிகள் என்றெல்லாம் யோசிப்பதால் தருமபுரியில் உள்ள அத்தனைபேரையும் எரித்து கொன்றால் என்ன என்று தோன்றும் உணர்ச்சி வேகத்தில் சிந்தித்தால்..

உண்மையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட / தண்டனை வழங்கப்பட்ட 90% பேர் குற்றமற்றவர்கள்...அரசியல் காரணங்களுக்காக தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்...

பஸ்ஸுக்கு தீவைத்ததாக சொல்லப்படும் நபர்கள் அப்பாவிகள் என்று நான் சொல்லவரவிலை, அவர்கள் தண்டனைக்கு உரிய குற்றம் செய்யவில்லை என்று கண்டிப்பாக நான் கூறவில்லை...

உணர்ச்சியின் வேகத்தில் பஸ்ஸை எரிக்க முயற்சி செய்துள்ளனர் அதில் இழப்புத்தான் இந்த சம்பவம்...

கோகிலவாணியை கொல்லவேண்டும் என்று யாரும் கிளம்பி செல்லவில்லை...அதனால் தூக்கு தண்டனை ஓவர்...!!!

முகமது அப்சலை இன்னும் தூக்கிலிடவில்லை...காரணம் தெரியுமா ?

அங்கே அமர்ந்திருப்பவை புனித பிம்பங்கள் அல்ல...!!!!
 



திருப்தி தருவதை விட இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்பதால் வரவேற்கிறேன்.

தனிப்பட்ட முறையில் அந்த மூவருக்காக பரிதாபப்படுகிறேன்..

தொண்டர்களின் நிலை இதுதான். தன் தலைவரின் மேல் கன்மூடித்தனமான வெறி.. அதற்காக எதனையும் செய்யும் மடத்தனம்.
லோக்கல் ஆள் எவனாவது தண்ணி வாங்கி கொடுத்து தலைவியை அரெஸ்ட் பன்னிடாங்க.. அதுக்கு நம்ம எதிர்ப்பை நல்லா காட்டனும்.. என்ன வேனா செய்ங்க.. நான் பாதுக்கறேன் என ஏற்றி விட்டு இருப்பான்.. இவன் மடத்தனமாக உணர்ச்சி வசப்பட்டு தீ வைத்து இருப்பான்..அதற்கு கிடைத்த தண்டனை.. மனித உயிரின் மதிப்பு தெரியாத காட்டானுக்கு கடைசியில் கிடைத்த தண்டனை இது..

சோற்றுக்கு காசு இல்லாத நினையிலும் தேர்தல் நேரத்தில் கட்சிக்கு சொந்த செலவில் போஸ்டர் அடிக்கும் தொண்டனில் ஆரம்பித்து இது போன்ற ஆட்கள் வரை அனைவர் மீதும் வெறுப்பு கலந்த பரிதாபம் வருகிறது.ப்பிஉ கலந்த பரிதாபம் வருகிறது.
 



"தூக்குத் தண்டனை" - i don't like.

even afsal,DMK men,ADMK men,muslim,hindu or christian hanging
is toomuch.
those people, who opposed sadam,afsal issue,now they support hanging.
 



செந்தழல் ரவி,
உங்கள் கண்ணோட்டம் அதிர்ச்சியளிக்கிறது.

ஏதோ உணர்ச்சி வேகத்தில் அவர்கள் பஸ்ஸை கொழுத்தினார்கள் .அதற்குள் இந்த மாணவிகள் இருந்துத் தொலைத்தார்கள் என்ற ரீதியில் சொல்லுகிறீர்கள் .

ஐயா! பல முறை உடன் சென்ற ஆசிரியர்களும் மாணவர்களும் கெஞ்சியிருக்கிறார்கள் .மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்ஸை மட்டும் எரித்திருக்கலாமே இந்த பன்னாடைகள் .வேண்டுமென்றே செய்தார்கள் ..கோகில வாணியை கொல்ல செல்லவில்லை என்பதால் சம்பந்தம் இல்லாத மாணவிகளை எரிப்பது ஒன்றும் அத்தனை பெரிய தவறில்லையா!ஐயகோ ..செந்தழல் ரவி..உங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா!ரொம்ப வருத்தமாயிருக்கு .இதுக்கு மேல இது பத்தி பேச விரும்பல்ல.
 



// உணர்ச்சியின் வேகத்தில் பஸ்ஸை எரிக்க முயற்சி செய்துள்ளனர் அதில் இழப்புத்தான் இந்த சம்பவம்... கோகிலவாணியை கொல்லவேண்டும் என்று யாரும் கிளம்பி செல்லவில்லை...அதனால் தூக்கு தண்டனை ஓவர்... //

ரவி... பஸ் எரிப்பு நமக்கு பழகிய ஒன்றுதான். ஆனால் பஸ்ஸோடு சேர்த்து மக்களையும் எரித்தது புதிது... பொதுவாக தருமபுரியில் கலவரம் என்று வரும்போது பஸ் எரிப்பது என்று முடிவு செய்தால் - என் நேரடி அனுபவத்தில் - அதில் உள்ள மக்களை இறங்க சொல்லி மிரட்டி, அவசர அவசரமாக என்றாலும், மக்கள இறங்கும் வரை பொறுத்திருந்து கலவரக்காரர்கள் பஸ்ஸுக்கு தீ வைப்பார்கள்.

ஜெயலலிதா கைது விவகாரத்திலும் பஸ் எரிக்கப்பட்ட பகுதியில் ஏற்கனவே அதிமுக ஆட்கள் ரோட் ப்ளாக் உட்பட்ட கலவரத்தில் ஈடு பட்டிருந்தனர். இதில் பஸ்ஸை எரிக்கும் முடிவோடு இருந்த கூட்டம் கோகிலவாணியை இறங்க சொல்லி மிரட்டி பிறகு தீ வைத்திருந்தால் யாரும் தடுத்திருக்கப்போவதில்லை... அப்படி செய்யாமல் உள்ளே மாணவிகள் இருப்பது தெரிந்தும் தீ வைத்தால் அதற்கு பெயர் படுகொலை மட்டுமே... பஸ்ஸை எரிப்பதற்காக டிவிஎஸ் 50 பெட்ரோல் டாங்கில் இருந்து பெட்ரோல் எடுக்கப்படவில்லை... பெட்ரோல் கேனில் வாங்கி வந்து உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த செய்திக்குறிப்பை பாருங்கள் :: மாணவிகள் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பியபோது 2வது எதிரியும், 3வது எதிரியும் பஸ்சுக்குத் தீ வைக்கச் சென்றபோது, பேராசிரியைகள் அகிலா, லதா, டிரைவர் கந்தசாமி ஆகியோர் பஸ்சில் மாணவிகள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என காலில் விழாத குறையாக கெஞ்சினார்கள். ஆனால் அதைப் பொருட்படுத்தாத 3வது எதிரி மாது என்கிற ரவீந்திரன், எல்லோரையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தச் சொன்னார். 2வது எதிரி நெடு என்கிற நெடுஞ்செழியன் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி (இதற்காக டிவிஎஸ் 50ல் பெட்ரோல் கேன் எடுத்து வந்தவர் இவர்) ஊற்றி தீ வைத்தார். இதற்கு 4வது எதிரி முனிப்பன் உடந்தை. எனவே இந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார் சீனிவாசன்.

இப்பவும் உணர்ச்சி வேகத்தில் திட்டமிடாமல் செய்யப்பட்டது என்றெல்லாம் வாதிட்டால் அது வெறும் ஜல்லி...
 



மரண தண்டனையை நான் எதிர்க்கிறேன்.

அவர்களை வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் போடலாம்.

அவர்கள் செய்ததை நான் நியாப்படுத்தவில்லை.

ஆனால் உயிருக்கு உயிர்தான் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
 



I agree with SenthamizRavi.
 



மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது பற்றி விவாதிப்பது வேறு.

ஆனால் இந்த குற்றம் உச்சபட்ச தண்டனைக்கு உரியது என்பது தான் என் எண்ணம்.தூக்குத்தண்டனை உச்சபட்ச தண்டனையாக இருக்கும் போது அது தான் பொருத்தம்.
 



தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த இடத்தில் பொது சொத்துக்கு (பேருந்து) நாசம் விளைவித்தது மட்டுமில்லாமல், உயிர்களையும் கொன்றதால் தூக்குதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்கிறேன். பொதுச் சொத்து நாசத்திற்கு மட்டுமே கூட - தூக்குதண்டனை தவிர்த்த கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

சட்டம் தெரிந்தவர்கள் யாரும் தயவுசெய்து பின்வரும் கேள்விக்குப் பதில் சொல்லுமாறு வேண்டுகிறேன். பேருந்தை எரிப்பது போன்ற பொதுச்சொத்துக்கு நாசம் விளைவிக்கிற குற்றங்களுக்கு - எத்தனை ஆண்டுகள் கழித்துவரை - நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. உதாரணமாக, அரசியல் கட்சி தொண்டர்கள் ஏதோ ஒரு கோரிக்கைக்காக - (1980களிலும் 1990களிலும் என்று வைத்துக் கொள்ளலாம்) - மரம் வெட்டுவது, பேருந்தை எரிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் - அவற்றுக்கும் - இந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கின் தீர்ப்பை உதாரணமாகக் காட்டி - நடவடிக்கை கோர முடியுமா?

- P.K. Sivakumar
 



PKS is opening a can of worms!
 



Nenchu niraintha theerppu!

The animals deserved the right punishment.
 



முதல்ல இருந்தே இதை ஒரு crusade மாதிரி follow பண்ணிட்டு வரீங்க. என்னை மாதிரி எருமை தோலுங்களுக்கும் சேர்த்து நீங்களே
கோபப்படுங்க. இவ்வளவு witness முன்னாடி பட்ட பகலில் பண்ற கொலைகளுக்கே தன்டனை கொடுக்க ஏழு வருஷமா? இன்னும் appeal பண்ணி Supreme Court வரை இழுத்துட்டு போய் தண்டனை கொடுக்கிறதுக்கு இன்னோரு பத்து வருஷமாயிடும். Bail, Parole எல்லாம் இல்லாம உள்ளயே
வச்சிருந்தாலே பெரிய விஷயம். தூக்கு தண்டனை மூலமா அரசே திட்டமிட்டு ஒரு உயிரை எடுக்கிறதுல எனக்கு சம்மதமில்லைங்கிற அதே
சமயத்தில்....... வேண்டாம், எதுக்கு.

என்னமோ.
 



இந்த வழக்கு இத்தனை வருடங்கள் நீடித்ததே இந்திய நீதித் துறைக்குத் தலைக்குனிவு. இன்னும் செஷன்ஸ் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம்கோர்ட், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், ஜனாதிபதியின் கருணை மனு, மத்திய அமைச்சரவையின் பரிந்துரை தோலான் துருத்தி என்று இந்தக் கேடுகெட்ட இந்திய நீதித் துறை ஏணிப்படியில் இன்னும் ஆயிரத்தெட்டுப் படிகள் உள்ளன இந்தக் கொலைகாரர்களின் வாழ்வை நீட்டிக்க.

சல்மான்கான் கொலை வழக்கு என்னவாயிற்று ?

சரவணபவன் அண்ணாச்சிக்கு பத்து வருடம் கொடுக்கப் பட்ட பின்பும் நிரந்தரமாக அவர் ஜாமீனில் வெளியே இருக்கும் மர்மம் என்ன ?

தேவைப் படும் பொழுது தேவைப் படுபவர்களின் கேஸ்கள் மட்டும் விசாரிக்கப் பட்டு மீண்டும் மர்மமாக மறந்து போக்கடிக்கப் படும் மர்மம் என்ன ?

இந்தியாவில் தண்டனை அப்பாவிகளுக்கும், வக்கற்றவர்களுக்கும் மட்டுமே வழங்கப் படுவது.

ஒரு முஸ்லீம் தீவீரவாதி தண்டிக்கப் பட்டால் அவனுக்கு வக்காலத்து வாங்குவதற்கு அருந்ததி ராய், அப்துல் கலாம் என்று ஆயிரத்தெட்டு பேர் கிளம்பி விடுகிறார்கள். அது போல் இந்தக் கொலையாளிகள் ஒரு வேளை சுப்ரீம் கோர்ட் பெஞ்சிலும் மரணதண்டனை விதிக்கப் பட்டு அந்தக் காலத்தில் ஜெயலலிதாவின் தயவால் மத்திய அரசு பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிலமை இருக்குமானால், இவர்களுக்கும் அப்பொழுது உள்ள ஜனாதிபதி மன்னிப்பு அளிக்க முயல மாட்டார் என்பது என்ன நிச்சயம்? இந்தியாவில் செல்வாக்கு மட்டும் இருந்தால் எந்த தண்டனையில் இருந்தும் தப்பிக்கலாம் என்பதே நீதி.

இவர்களுக்குத் தூக்கு அளிக்கப் பட்டது சரியே, பட்டப் பகலில் பஸ்ஸை எரித்துக் கொன்ற இந்த நாய்களுக்கு மரணதண்டனை அளிக்கப் படாவிட்டால் அந்தப் பாழாய்ப் போன மரண தண்டனை இருந்து என்ன போய் என்ன ? இவர்கள் அப்பீல் செய்வார்களேயானால், அந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டு விசாரிக்கப் பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் முடிவு உறுதி செய்யப் பட வேண்டும்.

இந்த முறை பஸ்ஸை எரித்ததில் மனித உயிரும் பலியானது போல் இனி எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் போராட்டத்திலும் உயிர் இழப்பு நேரா வண்ணம் இனி எந்த ஒரு அரசியல் பொறுக்கியும் மரம் வெட்டுவது, பஸ்ஸை எரிப்பது, இரயிலை எரிப்பது என்று கிளம்புவார்களேயாயின் அவர்களுக்கும் மரண தண்டனையே வழங்கப் பட வேண்டும் அல்லது கொளுத்த முயலும் , மரத்தை வெட்ட முயலும் நாய்களை கண்டவுடன் சுடப்பட வேண்டும். ஏற்கனவே வன்னிய வெறியன் ராமதாஸ் மரத்தை வெட்டும் பொழுது தண்டிக்கப் படாத காரணத்தினால்தானே இந்த ரவுடிகளுக்கும் தைரியம் கிடைத்தது? அதனால்தானே மாணவிகளுடன் பஸ்ஸைக் கொளுத்தும் அராஜகம் நடந்தது? ஆகவே இந்தக் கொலைக்கு மூலகாரணமான இதற்கு முன் அதே பகுதிகளில் பொதுச் சொத்தை நாசப் படுத்திய சமூக விரோதிகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையாவது வழங்கப் பட வேண்டும். இந்த வழக்கை விரைவில் நடத்த இயலா வண்ணம் முட்டுக் கட்டை போட்ட ஜெயலலிதாவுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த நீதித்துறையினருக்கும், போலீசுக்கும் யார் தண்டனை தருவது ?

ச.திருமலை
ச.திருமலைம்
 



கடைசி வாழ்நாள் வரை, 8' x 10' என்றளவில் இருக்கும் அறையில் உறங்கி - கடுங்காவல் தண்டனையுடன் - படிக்க தாளிகைகளில்லாமல் - கண்டு மகிழ தொ.கா போன்றவை இல்லாமல் - புகைக்க வெண்சுருட்டுகள் இல்லாமல் - உடல் வருந்தி அல்லது வருந்த வைக்கப்பட்டு இறக்காமல், சில நிமிடங்களில் இறந்து போக போகும் இக்குற்றவாளிகள் கொடுத்து வைத்தவன்கள் ;(

ஒரு வேண்டுகோள்

நீங்கள் இந்தியாவில் வசிப்பவர் என்றால் சோ ராமசாமி இத்தீர்ப்பு பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை எழுதிப் போடுங்கள். நன்றி.
 



// நீங்கள் இந்தியாவில் வசிப்பவர் என்றால் சோ ராமசாமி இத்தீர்ப்பு பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை எழுதிப் போடுங்கள் //

வாசன், நான் இந்தியாவில் தற்போது வசிக்கவில்லை. தங்களது பக்கத்து மாநிலமான கலிபோர்னியாவில் வசிக்கிறேன். அதைவிடுங்கள்...

அரசியல் தலைமையின் கடைக்கண் பார்வைக்காக அப்பாவிகளை கொன்ற அடிவருடி அடிமைகளை தனது ஆட்சிக்காலம் முழுமைக்கும் காப்பாற்ற முயற்சித்த ஜெயலலிதாவிடமும், இது சம்பந்தமாக சங்கே முழங்கு என்று மேடைக்கு மேடை கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இப்பொழுது மவுனம் சாதிக்கும் வைகோவிடமும், இது போன்ற சம்பவங்களை நிரந்தடமாக தடுக்கும் வண்ணம் செய்ய திட்டம் எதுவும் உள்ளதா இல்லையா என்று சுயநலம் தவிர்த்த எல்லா பொதுநல விஷயங்களிலும் முதுகெலும்பு இல்லாமல் வெறுமே அழகு தமிழில் தகிடுதத்த வார்த்தை விளையாட்டு மட்டும் விளையாடி காலத்தை கழிக்கும் கருணாநிதியிடமும், தர்மபுரி மாவட்ட படிப்பறிவு இல்லாத இளைஞர்களிடம் மூடத்தையும் மூர்க்கைத்தையும் விதைத்து வளர்த்து அறுவடை செய்து இதுபோன்ற பல சட்ட விரோத செயல்களுக்கும் பிள்ளையார் சுழி போட்ட ராமதாஸிடமும் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கலாம்... அதை விடுத்து சோ. ராமசாமி என்ன நினைக்கிறார் என்பதை அறிவதால் பத்து பைசாவுக்கு எதுவும் பிரயோஜனம் உண்டு என்று நினைக்கிறீர்களா?
 



// அவர்களை வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் போடலாம் // சிவபாலன், அரசியல் ஆதரவு பெற்ற கைதிகள் சிறையில் கஷ்டப்படுகிறார்கள் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா? செல்போன், பிரியாணி விடுத்து பார்த்தாலும் நம்மூரில் ஆயுள் தண்டனைக்கே காந்தி ஜெயந்தி மற்றும் ஏனைய விடுமுறை நாட்கள் போக சொற்ப ஆயுள்தான். இன்னமும் தலைவர் பிறந்த நாளுக்கு கைதிகள் விடுதலை மட்டும்தான் பாக்கி.. மேலும் ஆட்சி மாறும்போது இவர்கள் விசாரணைக்கு கொண்டு செல்லும்போது சிறையிலிருந்து தப்பித்தாலும் தப்பிக்கலாம். எனவே இது போன்ற ஈவிரக்கமற்ற திட்டம் போட்டு கொன்ற கொடூரர்களை பராமரிக்க இறந்தவர்களின் பெற்றோர் உட்பட்ட பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதை நான் எதிர்க்கிறேன்.

**

// அரசியல் கட்சி தொண்டர்கள் ஏதோ ஒரு கோரிக்கைக்காக - (1980களிலும் 1990களிலும் என்று வைத்துக் கொள்ளலாம்) - மரம் வெட்டுவது, பேருந்தை எரிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் - அவற்றுக்கும் - இந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கின் தீர்ப்பை உதாரணமாகக் காட்டி - நடவடிக்கை கோர முடியுமா? //

அப்புறம் அதற்காக எரிக்கப்படும் பேருந்துகள் வெட்டப்படும் மரங்கள் ஆகியவற்றுக்கு எங்கே போய் கேஸ் போடுவது? மேலும் அப்போது யார் மீது கை வைத்தால் இதெல்லாம் செய்யப்பட்டதோ அவர் இப்போது கை வைக்க முடியாத உயரத்துக்கு போய்விட்டார். எனவே இப்போது கிளறுவது முடியாத காரியம்.

*

// இந்த வழக்கை விரைவில் நடத்த இயலா வண்ணம் முட்டுக் கட்டை போட்ட ஜெயலலிதாவுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த நீதித்துறையினருக்கும், போலீசுக்கும் யார் தண்டனை தருவது //

ஜெயலலிதாவுக்கு சட்டப்படி தண்டனை தர முடியுமா? தர முடியும் ஒரே தண்டனை நிரந்தர வனவாசம்தான். ஆனால் பேய் ஆண்டது போது பிசாசையும் ஆள விடுவோம் என்ற நியதிப்படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் மாற்றம் தந்துகொண்டு தானே இருப்போம்...

*

நன்றி செந்தழல், வடுவூர் குமார், மனதின் ஓசை, சுவாமி மற்றும் அனானிஸ்.
 



தலை,

இது சம்பந்தப்பட்ட என் பதிவை பின்னூட்டமா போடறேன்.(எல்லாம் ஒரு விளம்பரம்தேன். கண்டுக்ககூடாது:))

ஜெயலலிதாவை விடுதலை செய்ய பஸ்ஸை எரித்து மூன்று மாணவியரை கொன்ற அதிமுகவினர் மூவருக்கும் மரண தண்டனை கிடைத்துள்ளது. பகத்சிங் திரு அப்சல் மகாத்மா அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது உயிரே போனதுபோல் ஓலமிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இப்போது எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பதாக தெரிகிறது. அப்சல் பகத்சிங் அவர்களை விடுவிக்க பேரணி, ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்திய வலைபதிவர்கள் சிலரும் அன்னை அருந்ததி ராயும் இப்போது பேச்சுமூச்சின்றி கப்சிப் என இருப்பதன் மர்மம் என்ன என்று யாருக்கும் புரியவில்லை. இதற்கும் அப்சலாவது காஷ்மிரி, ஆனால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும் தமிழர்கள்.

மேலும் இதில் வருத்ததைத்தரும் விசயம் என்னவென்றால் அதிமுகவினரான இவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைத்ததை வெளியே சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்ள கூட முடியவில்லையே என்று மரணதண்டனை எதிர்ப்பு மனித உரிமை பதிவர்கள் பலரும் வருத்தத்துடன் இருக்கிறார்களாம்:))))

இந்த விசயத்தை துருவி ஆராயந்ததில் எனக்கு தோன்றுவது இதுதான். இந்த மூவரும் உயிர் பிழைக்க உடனடியாக செய்ய வேண்டியது மதம் மாறுவதே. அப்படி மட்டும் இவர்கள் செய்தால் உடனடியாக தமிழ் வலையுலகமே இவர்களுக்கு ஆதரவாக திரளும்.இதை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நமது வலைபதிவர்கள் பலரும் தயாராக இருப்பார்கள். அப்சல் பகத்சிங் அய்யா மாதிரி இவர்களும் தப்பித்து விடுவார்கள்.

இந்த முட்டாள்கள் மூவரும் அதிமுகவில் சேர்ந்து தொலைத்திருக்கிறார்கள். பேசாமல் ஜெய்ஷ் , லஷ்கர் போன்ற இயக்கங்களில் சேர்ந்திருந்தால் சுதந்திர போராட்ட தியாகி என்றும், பகத் சிங் என்றும் பெயர் கிடைத்திருக்கும். 'ஜெயலலிதா வாழ்க' என்பதற்கு பதில் 'காஷ்மிர் வாழ்க' என்று சொல்லி பஸ்ஸை கொளுத்தியிருக்க வேண்டும் இவர்கள். விடுதலை போரில் நேதாஜியின் படைகள் ரயிலில் குண்டு வைக்கவில்லையா, அதைத்தானே இவர்கள் செய்தார்கள் என்றும் நமது நண்பர்கள் வாதிட்டிருப்பார்கள்.

இந்த சாமர்த்தியம் எதுவும் இல்லாத இந்த மூன்று முட்டாள் கூமுட்டைகளும் தூக்கில் தொங்குவதுதான் சரி.

என்ன நாஞ் சொல்றது?:-))))
 



செந்தழல் ரவில்லாம் ஒரு ஆளுன்னு முகமூடி மெனக்கட்டு பதில் சொல்லியிருக்க வேண்டாம்.
 



*** ச.திருமலையோட சிக்னேச்சர் ரெண்டு முறை வந்திருக்கறதோட அது மிஸ்டேக்காவும் இருக்கு. அது அனானி கமெண்ட் தானே, நீங்க அதை திருப்பி சரியா போடுங்க***

என்னை ஒரு 'ஆளுன்னு' பதில் சொன்னதுக்கு நன்றி தல...:))))

செந்தழல் ரவி
 



Hi

I am trying to say what Ravi wanted to say. This accedent or atrocity happend at the spurt of the moment. First, all girls, there is no gentleman, teachers or boys in that bus, except the driver... and all the ladies did or take quite a lot of bad decisions.

1) Chose to travel instead of stopping the bus where ever they are and wait for the help to arrive.
2) they put all the luggage and closed the back door - these was a crcuial mistake, as even the boys who followed them couldn't enter the bus and rescue them..so it left only way out is one way only.
3)Whey the offenders stopped the bus they did not got out of the bus,instead stay put in the bus.
4)If intention was to burn all the girls, there would have been many more deaths..the fact that only I am sorry to use the word only, but the fact is only 3 girls died, it shows that others got out.
5)The girls while trying to get down, we don't know, they might have been trying to pick their hand bags..or their cloths could have been got struck...these things do happen at the panic.

According to me, these were the terrfic judgement errors on the part of the teacher or elderly person in the bus.

Mind it, I am no way saying, the person(s) who tourched the bus should be pardoned. but please consider the above points too..

Sundar
 



என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் முகமூடி...?

மு.க, ஜெ ஜெ , ராமதாஸ், வைகோ போன்றவர்களை பற்றி நல்லதோ கெட்டதோ வலைப்பதிவுலகில் நிறையவே செய்தி
கிடைக்கிறது.

எனவே இவர்களிடமிருந்து எதிர்பார்க்க புதிதாக ஏதுமில்லை. கேட்கவும் ஒன்றுமில்லை, கேட்டாலும் பயனிருக்காது.

எனக்குத் தெரிந்தவரை சோ.ராமசாமி பற்றி தெளிவான கருத்துகள் பதிவுலகில் கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்கள் பற்றியும் ஏதாவது கருத்துக் கொண்டிருப்பவர் சோ.
சேட்டையாகவும் - கோமாளித்தனமாகவும் - நச்சுடனும் - பயனுள்ளதாகவும் இருக்கும் அவை.
ராஜதந்திரி என்றும் சிலரால் கருதப்படுகிறார். திரைமறைவு செயல்களில் வித்தகர் சோ..இல்லையா ..?

இவற்றை மனதில் நினைத்து, தர்மபுரி நிகழ்ச்சி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பற்றி சோ என்ன சொல்லியுள்ளார் என்பதை
தெரிந்து கொள்ள நினைத்தேன். மேலும் 20 வெள்ளி செலவு செய்து படிக்குமளவுக்கு துக்ளக் முக்கியமல்ல. அவ்வளவே.
 



குமுதம் அந்த நெருப்புல என் மகள் எப்படி போராடியிருப்பாள்?

வெங்கடேசன் வீட்டுக்குள் நுழைந்தபோது வரவேற்றுவிட்டு சலனமின்றி எதிரே அமர்ந்தார்.

கொஞ்ச நேரத்தில் கல்லூரியிலிருந்து வந்த மகனும் பக்கத்தில் அமர்ந்தார். ஹாலைத் தவிர வீட்டுக்குள் ஒரே இருட்டு. ஐந்து நிமிடமாகியும் அவர்கள் எதுவும் பேசவில்லை. திடீரென்று உள்ளிருந்து குரல்... ‘‘சாப்பிட கூப்பிட்டால் வரமாட்டேன்கிறா. சீக்கிரம் வாடா கண்ணு.... அம்மா சாப்பிடாம காத்திருக்கேன். சூடா இறக்கி வச்சிருக்கேன். ஐயோ. என் புள்ளைக்கு சூடு தாங்காதே...’’ இருட்டிலிருந்து வந்த அந்த இனம் புரியாத அலறலைக் கேட்டு உடம்பு உலுக்கியது. அதுவரை பேசாமல் இருந்த வெங்கடேசன் நம்மை பார்த்துவிட்டு.. வாயில் கையைப் பொத்தியபடி, ‘‘உள்ள போய் பாருங்க சார். என் மனைவிதான் அது. மகள் போனதிலிருந்து இப்படித்தான் திடீர் திடீர்னு அழுகிறாள். டி.வி.யில பஸ் எரியறதை திரும்பத் திரும்ப காட்டறதால இப்போ அதிகம் ஆயுடுச்சு.’’ என்றார். அது, தர்மபுரி பஸ் எரிப்பில் தீயில் கருகிய மாணவி காயத்ரியின் வீடு. வெங்கடேசன் அந்த அப்பாவிப் பெண்ணின் தந்தை!

அப்போது விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவராக இருந்து கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர்.

உள்ளே இருட்டிலிருந்து, ‘‘ஓடிவாடி கண்ணே... உங்கப்பா அழுவுறாரு. அவரை அழ விடாதே....’’ என்று அவரது மனைவி கொலஞ்சிபாய் மீண்டும் குரலெடுத்து அரற்றியபோது, வேண்டாம்... ஜென்ம எதிரிக்குக் கூட இந்த கஷ்டம் வரக் கூடாது! அவரை வெளியே சமாதானப்படுத்திக் கொண்டு வருவது பெரும்பாடானது. சற்று உற்று பார்த்தவர், ‘‘பெத்த வயிறு பற்றி எரியுது தம்பி. டி.வி.யில காட்டறான். எரியுது... எரியுது... அந்த நெருப்புப் புகையில என் பொண்ணு எப்படிப் போராடியிருப்பா. துடிச்சிருப்பா. ஐயோ... ஐயோ’’ என்று வயிற்றில் அடித்துக்கொண்டு கதறுகிறார். ஏழு வருடங்கள் ஆகியும் காலம் அவர்கள் ரணத்தை ஆற்றவில்லை. தன் தலைமையை திருப்திப்படுத்த அந்தக் கட்சி ரௌடிகள் வேட்டியை மடித்துக் கொண்டு பஸ்ஸில் பெட்ரோலை ஊற்றுவதற்கு முன்பு எத்தனை குடும்பங்கள் வாழ்நாள் முழுக்க இப்படி அணு அணுவாய் சாகப் போகிறது என்று ஒரு வினாடி யோசிக்கவில்லையே என்று ஆத்திரம் முட்டியது.

மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ள காயத்ரியின் அம்மாவின் கைநிறைய தீக் காயங்கள். நம் சந்தேகத்தைப் புரிந்து கொண்டு தனியே அழைத்த வெங்கடேசன் ‘‘அடிக்கடி குக்கரில் கைபட்டுடுச்சு என்கிறாள். எனக்கென்னமோ தன் மகள் பட்ட வேதனை தெரியணும்னு வேணும்னே சுட்டுக்கிறாளோனு தோணுது’’ என்றபோது தூக்கிவாரிப் போட்டது.

தங்கை ஸ்ரீதேவி ப்ளஸ் டூ முடித்தவுடன் மேற் கொண்டு படிக்க வைக்க யோசித்து, திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.

‘‘ஆமாம் சார். என் மகள் இறந்த கொஞ்ச நாட்களிலேயே தீராத நெஞ்சுவலி வந்து, முடியாம போய்ட்டேன். அப்புறம் பைபாஸ் பண்ணிக்கிட்டேன். சரி குழந்தைகளை நாம் இருக்கும்போதே செட்டில் பண்ணிடணும்னு முடிவு செய்தேன். பாருங்க. இந்தத் தீர்ப்பு வந்ததிலிருந்து என் மார்பு ‘முணுக் முணுக்’ கென்று வலிக்கிறது.’’ என்றவர், சட்டென்று ஏதோ யோசித்தவராய், ‘‘எங்கள் விருத்தாச்சலம் காலேஜில் நானே எத்தனையோ டூர் அழைச்சுட்டுப் போயிருக்கேன். பாதுகாப்பா எங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கேன். கடைசியில் என் குழந்தை டூர் போய், கரிக்கட்டையா திரும்பி வந்துட்டாள்.’’ நடந்த கோரத்தை வெவ்வேறு விதமாகப் பார்த்து தவித்த அந்தப் தந்தையைத் தேற்றுவது முடியாத காரியம் என்று தோன்றியது.

விடைபெறும் நேரம்....

‘‘என் மக எங்களுக்கு 60_ம் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாளே இந்நேரம். அவளுக்குக் கல்யாணம் பண்ணி பேரனைப் பார்த்திருப்பேனே...’’ மீண்டும் அந்தத் தாய் வற்றிப்போன தொண்டையில் சிரமப்பட்டு கதற, அதற்கு மேல் அங்கு நிற்க நம் நெஞ்சில் வலு இல்லை!

தாம்பரம்_ஹேமலதா

ஹேமலதாவின் இரண்டு அக்காக்கள் தங்கை, தம்பி, அம்மா, அப்பா என்று அந்தச் சிறிய வீட்டில் ஆறு பேர் இருக்கிறார்கள் என்ற சுவடே தெரியவில்லை. ஒரே நிசப்தம். இயந்திரமாக ஆளுக்கொரு பக்கமாக போய்க் கொண்டிருந்தார்கள். அப்பா கேசவ சந்திரன் பேச்சிலும், ஆறுதல் வார்த்தைகளிலும் நம்பிக்கை இழந்துவிட்டவர் போல அமைதியாக நம்மைப் பார்த்தார். செல்ல மகள் கருகிப் போய், இந்த ஏழு வருடமாக அவர்கள் வாழ்க்கையும் கருகிப் போய்விட்டது!

‘‘ஹேமலதாவின் நல்ல போட்டோ உள்ளதா?’’ _ அவர்கள் அமைதியைக் கலைத்துவிட்டு மெதுவாக ஆரம்பித்தோம். விரக்தியாகச் சிரித்தார் கேசவ சந்திரன்.

‘‘அந்த மாதிரியான சந்தர்ப்பங்களோ, ஃபங்ஷனோ வரலை சார். வீட்டுல மூத்த பெண்ணுக்கு கல்யாணம் கார்த்திகை நடக்கும்போது நிறைய போட்டோ எடுக்கலாம்னு நினைச்சிட்டிருந்தோம். ஹேமாவே அப்படியெல்லாம் ரொம்ப ஆசைப்பட்டாள். வேண்டாம் சார். எதுவும் கேட்காதீங்க. ஐந்து புள்ளைய பெத்தேன். ஒண்ணை அநியாயமா தீக்கு தாரைவாத்துட்டேன்.’’ அப்படியே நிறுத்திக் கொண்டார். அவர் அழவில்லை.

வங்கியில் பணிபுரியும் அப்பா, டீச்சரான அம்மா காசியம்மாள், வேலைக்குப் போகும் இரண்டு அக்காக்கள், பள்ளிக் கூடம் போகும் தம்பி, காலேஜ் செல்லும் தங்கை என்று வரம் போல வாய்த்த குடும்பம் ஹேமலதாவுடையது! இப்போது அவர்கள் மனதளவில் சின்னாபின்னமாகிவிட்டார்கள்.

‘‘பேங்க் வேலை முடிஞ்சவுடன் வீட்டுக்கு வந்தா அவள் ஞாபகம் வந்துடும். அந்த நினைவை மறக்க ஏதாவது விசேஷங்களுக்கு, வலுக்கட்டாயமா போவேன். அங்குள்ள பெண்கள் கலகலப்பா பேசும்போது என் பொண்ணு ஞாபகம் வந்துடும். அதனால் இப்பல்லாம் வெளியில் போறதையும் நிறுத்திட்டேன். என்ன சார் கொடுமை? வாழும்போதே இப்படியரு நரகம்..’’ படபடத்தார் ஹேமலதாவின் அப்பா.

ஹேமாவுடன் படித்து கல்யாணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டிலான சில பெண்கள் மிரட்டலைப் பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக சாட்சி சொல்ல வந்தது இந்த மனிதரின் பெரிய ஆறுதல்.

அவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு வாசலில் இரண்டு வளர்ந்த மாமரங்கள். ஹேமாவின் அப்பா வெறுமையாகச் சிரித்தார்.

‘‘இது எல்லாமே ஹேமா வச்சது சார். மாம்பழத்தை சாப்பிட்டுட்டு கொட்டைய ஞாபகமா புதைச்சு வைப்பாள். அத்தோட காசுகளை போட்டு புதைப்பாள். அப்பதான் மரத்தோட காசும் வளரும்னு ஒரு நம்பிக்கை. அதுங்க பாருங்க வளர்ந்து நிக்குது. வளர்ந்து வரவேண்டியவள் மண்ணோட கருகிட்டாள்’’ விடைபெறும்போது முதல் முறையாக அழுதார் அந்தத் தந்தை!

நாமக்கல் கோகிலவாணி

தங்கள் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசைப் பறிகொடுத்துவிட்டு நம்ப முடியாமல் நடைப்பிணமாகத் தவிக்கிறது கோகிலவாணியின் குடும்பம். மூக்கும் முழியும் திவ்யமாய் இருக்கும் கோகிலா, ஹாலிலுள்ள பூஜை அலமாரியில் நிலைத்து விட்டார். சுற்றிம் ரோஜாக்கள். சீரியல் பல்புகள். அலமாரி எதிரே அம்மா சரஸ்வதி வைத்த கண் வாங்காமல் தன் அழகு மகளைப் பார்த்துக் கொண்டிருக்க... கம கம ஊதுபத்தி மணம் அவர்கள் சோகத்தை மேலும் கூட்டுவது போல தோன்றியது.

‘‘திடீர்னு படத்துலேர்ந்து எந்திரிச்சு வந்து என்னை ஒரு நாள் கட்டிகிட்டு அழுவாள். இந்த அம்மா மனசைத் தேற்றுவாள்.’’ சட்டென்று திரும்பி மெல்லிய குரலில் நம்மிடம் சொல்லிவிட்டு ‘‘சரிதானே’’ என்றபோது, நமக்கு பகீர்ரென்றது.

‘‘அவளுக்கு நரம்புத் தளர்ச்சி மாதிரி இருக்கு. எதை எங்க வைக்கிறோம்னு தெரியலை. நாமளும் அழக்கூடாதுன்னு பொய்யா வாழறேன் சார்’’ என்று கண்களைத் துடைத்துக் கொண்டு வெறுமையாகச் சிரித்தபடி எதிரே சோபாவில் உட்கார்ந்தார், கோகிலாவின் அப்பா வீராசாமி. இந்த வழக்கில் குற்றவாளிகளை விடக் கூடாது என்று இறுதிவரை போராடியவர். இவரது சகோதரர்கள் இருவருக்குமே பெண் குழந்தை கிடையாதாம். அதனால் கோகிலா ஒட்டு மொத்த குடும்பத்திற்கே செல்லப் பெண் என்றார்கள். விவேக், இளங்கோ என்று இரண்டு அண்ணன்கள். தங்கை கோவையிலிருந்து வந்தால் குடும்பமே களைகட்டிவிடுமாம். லீவு முடியும் வரை அப்புறம் வீராசாமியின் வீட்டில் கோகிலா ஆட்சிதான்.

‘‘ரொம்ப சுட்டிப் பெண். கிண்டல், அரட்டைன்னு நேரம் போறதே தெரியாது. அவளுக்குத் தெரியாத விஷயமே கிடையாது. அவள் ஒரு வார்த்தை சொன்னால் சரியா இருக்கும். அதற்கு அப்பீலே கிடையாது. அந்த தங்கக் குழந்தைய இனி எப்ப பார்க்கப் போகிறேன். சீக்கிரம் போறதுக்குதான் எல்லாரிடமும் இவ்வளவு பாசத்தை காட்டினியா?’’ வீராசாமி நெற்றியை இறுக்கப் பிடித்துக் கொண்டு குனிந்து கொள்ள, கணவர் பேசியது எதையுமே காதில் வாங்காதவர் போல அவரது மனைவி வெறித்தபோது, நிச்சயமாக அவர் தன் செல்ல மகளுடன் கற்பனையுலகில் வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது.

அப்போது அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த தெருக்காரப் பெண்மணி ஒருவர், ‘‘அந்த அக்கிரமகாரன்களுக்கு தூக்கு தண்டனை போறாது சார்... நடு ரோட்டுல கை காலை கட்டிவச்சு அவனுகள மாதிரியே பெட்ரோலை வாங்கிட்டுவந்து தலையில ஊற்றி கொளுத்தணும். அந்த அயோக்கியன்க துடிச்சுகிட்டே சாகணும். சாவோட வலி தெரிய வேணாமா’’ என்று ஆவேசப்பட்டார்.

‘‘கடைசியா மதுரைலேர்ந்து போன்ல பேசும்போது கூட நாலு நாள்ல வந்துடுவேன் அம்மான்னு சொன்னாளே...’’ நாமக்கல்லிலிருந்து கிளம்பும்போது அந்தத் தாய் பரிதவித்தது இன்னமும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. உயர்நீதிமன்றம் போய் தூக்கிலிருந்து தப்பிக்கப் பார்க்கும் தர்மபுரி கரைவேட்டிகளே பதில் சொல்லுங்கள். அந்த பாசப் பறவைகளை நிர்மூலமாக்கிவிட்டு நீங்கள் மட்டும் வாழ வேண்டுமா?

_ வி. சந்திரசேகரன்,
ஆனந்த் செல்லையா.
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

‘‘பொதுவாகக் கொலைக் குற்றங்களுக்கு தற்போது ஆயுள்தண்டனை மட்டுமே பெரும்பாலும் தரப்பட்டு வருகிறது. அரிதிலும் அரிதான ஒரு சில வழக்குகளுக்கு மட்டுமே தூக்கு வழங்கப்படும். இந்த வழக்கினையும் அப்படிப்பட்ட ஒரு வழக்காகவே எடுத்து குற்றவாளிகளுக்குத் தீர்ப்பினைத் தரவேண்டும் என்று நான் நீதிபதியிடம் கோரியிருந்தேன். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இப்படி ஒரு மகத்தான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.’’ என்றார் அரசு சிறப்பு வழக்குரைஞரான சீனிவாசன். இந்த வழக்கில் ஆஷராகக் கூடாது என்று பல மிரட்டல்கள், நெருக்குதல்கள் இவருக்கு வந்தனவாம். அதையும் மீறி இவர் இந்த வழக்கில் ஆஷரானதால் கோபமுற்ற சிலர், 2005_ம் ஆண்டு மார்ச் 14_ம் தேதி இவர் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலும் நடத்தியிருக்கின்றனர். தன் மீதான கொலைவெறித் தாக்குதல் வெளியே தெரிந்தால் சாட்சிகள் கலவரமடைந்து சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்று அவர் இதைப் பற்றி போலீசில் புகார்கூட செய்யவில்லை. நடந்த சம்பவத்தை நீதிபதியிடம் மட்டும் சொல்லியிருக்கிறார்.

_வை.கதிரவன்

நாடே பரபரப்பாக எதிர்பார்த்த தர்மபுரி பஸ் எரிப்பு தீர்ப்பில் 3 பேருக்குத் தூக்கு தண்டனையும் 25 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணராஷா மதுரை (கொடைரோடு) அருகே உள்ள அம்மையநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது 150 வருட அரண்மனை பொட்டிசெட்டிபட்டி கிராமத்தில் உள்ளது.

இந்தத் தீர்ப்பின் பரபரப்பு இவரது கிராமத்தையும் பற்றிக்கொண்டது. 1942_ல் ஜமீன்தாரராக இருந்து அம்மைய நாயக்கனூர் ஜமீன் எல்லைக்குட்பட்ட 42 கிராம மக்களுக்கு, நல்லது, கெட்டது பார்ப்பது, கிராமப் பிரச்னைகளுக்குத் தீர்ப்புச் சொல்வது என்றிருந்த கடைசி ஜமீன்தார் (ஜமீன் ஒழிப்புக்குமுன்) ரெங்கசாமி நாயக்கரின் பேரன்தான் இந்த நீதிபதி. இரண்டு நாட்களாக அப்பகுதியில் ஆண்களும், பெண்களும் கூட்டம், கூட்டமாக அரண்மனையைக் காட்டி ‘‘பஸ் எரிப்பு தீர்ப்பு சொன்னது நம்ம ஜமீன்தாருதான். அவங்க பெரியவங்க அந்தக் காலத்துல ஜமீன்ல வச்சு தீர்ப்பு சொன்னாங்க. நம்ம பாண்டியரு கோர்ட்ல நீதிபதியா சொல்லிருக்காரு’’ என்றார்கள் பெருமையுடன்.

_ அரண்மனை சுப்பு
 



http://balaji_ammu.blogspot.com/2007/02/302-et-al.html
 



ஆக நாட்டாமை தீர்ப்பு வழங்கிட்டார்னு சொல்றீங்க. ஆக மூனு பேர் செத்ததுக்கு, இன்னும் மூனு பேரை கொன்று அந்த ரத்தத்தை பூசிக்கிட்டா அந்த வெறி அடங்கிருமா அந்த குடும்பத்துக்கு? இப்போ இன்னும் மூனு குடும்பம் நடுத்தெருவுல நிக்கப்போவுதே அதுக்கென்ன சொல்றீங்க.
 



சரி, உங்க கருத்து ??