<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி


img crtsy: creationism.org நாங்கள் யுவதிகள்
எங்களுக்கென கனவுகள் இருந்தன
எங்களுக்கென கற்பனைகள் இருந்தன
எங்களுக்கென ஆசைகள் இருந்தன

விரிந்து கொண்டிருந்த சிறகுகளின்
கடைசித்துளி ஈரம் காய்ந்த பின்
காணப்போகும் கற்பனை உலகை பற்றி
பகிர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்த
ஒரு அழகிய பொழுதில்
எதற்கென உணரும் முன்னே
எரிக்கப்பட்டோம்

நாங்களே உலகம் என்பதை தவிர

வேறு எந்த இயலும் தெரியாத
எம் இல்லங்களில்
இப்பொழுது
அடுப்பு பற்றும் பொழுதுதெல்லாம்
அழுகையும் சேர்ந்தே பற்றுகிறது

குடிகளை காக்க
கட்டியம் சொன்னவர்கள்
குற்றவாளிகளை மட்டும் காக்கும்
இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்காக
நெருப்பின் நாக்குகள்
உயிர் தின்ற
அந்த கடைசி நிமிடம் வரை
நாங்கள் பெருமிதம்தான் கொண்டிருந்தோம்

நாங்கள் யுவதிகள்
எங்களுக்கென கனவுகள் இருந்தன
எங்களுக்கென கற்பனைகள் இருந்தன
எங்களுக்கென ஆசைகள் இருந்தன


*

ஆறு வருடங்கள் முன்பு இதே நாளில் குடிகார தொண்டர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள் நினைவாக.



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


everybody is busy with the coming assembly election. nobody has time ti think about the innocent children who lost their lives for nothing. still you are remembering and wonderful kavithai also.sivamgss.
 



Very touching, mugamoodi..

my condolences to the families of the girls and our democracy!
 



உண்மைதான் முகமூடி, ஆறாத ரணமாகிப்போன அந்த நிகழ்வு இன்னும் அடி வயிற்றில் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அண்டை வீட்டாரின் பேத்தியான கோகிலாவாணியின் மரணம் இன்னும் நெஞ்சில் சமூகத்தின் பொறுப்பற்ற போராட்டங்கள் மீதான வெறுப்பை எரிய விட்டுக்கொண்டிருக்கிறது.
 



என் தங்கை அந்த சமயத்தில் அங்கு முதுகலை பயின்றுவந்தார், ஒரு மாதம் அவர் முகத்தினை என்னால் பார்க்கவே முடியவில்லை, அழுதது அழுதவன்னம், பாவம் அந்த இளம் தளிர்கள், என்ன பாவம் செய்தனர்? அந்த கல்லூரியில் படித்ததைத்தவிர? படுபாவிகள்.....:( நினைத்தாலே நெஞ்சு நடுங்குகின்றதே இன்றும்??
 



வழக்கில் தீர்ப்பு வந்தது
குற்றம் சாட்டப்பட்ட
அம்மாவுக்கு ஆயுள் தண்டனை
குற்றமற்ற இவர்களுக்கு
மரண தண்டனை


சாதிக்கும் முன்னே கருகிய மொட்டுக்களுக்கு என் இதயப்பூர்வமான கண்ணீர் அஞ்சலி.
 



நியாயம் கூட கிடைக்காது போல் இருக்கிறது....கோர்ட்டில் சாட்சிகள் பல்டி அடித்ததை கேள்விப்பட்டீரா?
 



நீங்களாவது நினைவில் வைத்துள்ளீர்களே...
 



//ஆயுள் தண்டனை//

உண்மையில் அம்மாவுக்கு கிடைத்தது ஒரு வருட சிறையும் ரூ 2000 அபராதமும்.

மூன்று நீதிமன்றங்களுக்கிடையே பந்தாடப்பட்ட இந்த எரிப்பு வழக்கில் சாட்சிகள் முன்னுக்கு பின் முரணாய் திருப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களை சாதாரணமாய் தருமபுரி தெருக்களில் பார்க்க முடிகிறது.

தீர்ப்பு!!???
 



anpin mugamoodi,
ungkaL anjaliyil naanum pangu kolkiRen. nandri.
moovarukum en nenjaarntha anjalikal
seemachu
 



கவிதைக்கும், கரிசனத்திற்கும் நன்றி. இந்த வழக்கின் தற்போதைய நிலையைக் குறித்து தகவலிருந்தால் விவரமாக எழுத முடியுமா?

// குற்றவாளிகளை மட்டும் காக்கும் //
அம்மாவும் யுவதிதான்! அம்மாவுக்கு பெரிய அறச் சிக்கல்--தன் இனத்தின் பக்கம் நிற்பதா அல்லது தனக்காக 'போராட்டம்' நடத்தியவர்கள் பக்கம் நிற்பதா என்று. குடிகளை விட கும்பிடுபவர்கள் முக்கியம் என்று முடிவெடுத்திருக்கிறார். இந்த நிகழ்வும், இந்த வழக்கு நடத்தப்படும் முறையையும் பார்த்தால், நம் நாட்டு குடிகார குடிமக்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு நாயக, நாயகிகள், அதிகாரம் படைத்த காவல் துறையினர் போன்றவர்கள் மீது வரும் கோபத்தை விட கையாலாகாத நீதித்துறை மீதே அதிகம் கோபம்கொள்ளச் செய்கிறது. குடிமக்களின் கடைசி நம்பிக்கை நீதித்துறை என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் ஒருவேளை அவர்களும் தொண்டர்-தலைவர்கள்-காவல் துறை என்ற ஊழல் அச்சின் இன்னொரு புள்ளியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நம் வசவுகளும், விமர்சனமும் தொண்டர்கள், காவல்துறையின் மீது பாரபட்சமின்றி பாயும், தலைவர்கள் மீது அவர்கள் யாரென்பதைப் பொறுத்து பாயும், நீதித்துறையை பற்றி மூச்சு விடமாட்டோம். பயமோ, அவர்கள் நேர்மை தவறாத நீதிமான்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையோ அல்லது பயம் கலந்த மரியாதையோ ஏதோ ஒன்று நம் வாயை அடைக்கிறது.

சரி, உங்களோடு காரசாரமாக விவாதிக்கும் உங்கள் நண்பர்களைக் காணவில்லையே!
 



அஞ்சலிகள் முகமூடி.
இந்தக் கொடுமையை செய்தவன்கள் சுதந்திரமாய் நடமாடுவது அதை விட கொடுமை. வயிறெரிகிறது.
 



ஒரு அரசையும்,ஆளும் அமைப்பையும் எத்ரித்து எப்படிப் போரட வேண்டும் என்பதே அரசியலில் முதல் பாடமாக இருக்க வேண்டும். கவனம் பெறவும் அதன் மூலம் அரசியல் பதவி பெறவும் மட்டுமே நடத்தப்படும் அரசியல் போராட்டங்கள் அப்பாவி மக்களையே காவு கொள்கிறது.

ஒரு தெருவில், அல்லது ஒரு ஊரில் ஏதேனும் ஒரு கொடுமை நடந்தால் அதை அனைவரும் சேர்ந்து தட்டிக் கேட்கும் பண்பு வேண்டும். அது நம்மிடம் இல்லை. தனக்குப் பாதிப்பு இல்லாதவரை யார் எப்படிப் போனால் என்ன என்று இருக்கும் பண்பு மாற வேண்டும். இது நாளைக்கே நமது குடும்பத்திலும் வரலாம்.

அந்த ஊர் மக்களாவது அறப்போராட்டம் நடத்தினால் நல்லது.

ஈடு செய்யமுடியாத இழப்பு.

நீதி கிடைத்தாலும் இது போன்ற அரசியல் எரிப்புகள் தவிர்க்கப்படவேண்டும். எப்படி என்றுதான் தெரியவில்லை.
 



மிகவும் வெட்கப்படக்கூடிய சம்பவங்களுல் இதுவும் ஒன்று, பாதிக்கப்பட்டு இவ்வளவு நாள் ஆகியும் நீதி கிடைக்காதது நீதி மன்றங்களின் மீது இருக்கும் நம்பிக்கையை குறைக்கின்றன.
 



முகமுடி வலியைச் சொன்ன கவிதை. மனம் கனத்து போனது . என் வாழ்வில் நான் சந்தித்த துயரமான சம்பவம் அது.

அப்போது நான் தர்மபுரியிதான் கல்லூரியில் படித்து வந்தேன். பெரும்பாலும் ஒரு நேரத்தோடு கல்லூரி முடிந்துவிடும். அன்றும் அதே போலத்தான் மதியமே கல்லூரி முடிந்துவிட்டது.
நான்கு ரோட்டுக்கருகில் அந்த கல்லூரி பேருந்துகள் நிறுத்தப்பட்டு எல்லோரும் மதிய உணவுக்கு சென்றீருந்தார்கள். நாங்களும் அந்த பேருந்தின் வண்ணத்தை கிண்டளடித்து கொண்டு சென்றோம். அப்போது யாருக்கும் தெரியாது, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு கொடுர சம்பவம் நடக்கபோகிறதென்று
நாங்கள் வழக்கம் போல கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை நான்கு மணி அளவில்தான் விசயம் தெரிந்தது. உடனே எல்லோரும் இலக்கியம்பட்டிக்கு சென்றோம். விவசாயக் கல்லூரி மாணவர்கள்
மிகவும் கோபமாகவும் ஆத்திரமாகவும் இருந்தனர். அங்கிருந்த போலிஸாரும் வெளி மாணவர்கள் யாரையும் அவர்களோடு பேச அனுமதிக்கவில்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் தர்மபுரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களை நெருங்கிவிட்டோம். பிறகு மாணவர்கள் எல்லோரையும் போலிஸார் அனுமதித்து விட்டனர். இருபது நண்பர்கள் மனிதச் சங்கலிபோல எரிக்கப்பட்ட அந்த பேருந்தைச் சுற்றி போலிஸார் நெருங்காவண்ணம் நின்று கொண்டோம்.
நேரமாக ஆக பதட்டம் கூடிக்கொண்டே போனது. போலிஸார் நான்கு புறமும் சுற்றி வளைத்திருந்தது எங்களுக்கு தெரியாது. எல்லோரின் மனதில் அடங்காத கோபம் மட்டும் இருந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேண்டும், அப்போதய முதல்வர்
கலைஞர் வரவேண்டும்( அது அதிகப்படியான எதிர்பார்ப்பு என்பது இப்போது உணர முடிகிறது), குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மாவட்ட ஆட்சித் தலைவரும் வந்தார், மாணவர்களோடு
பேசினார். யாரோ ஒரு மாணவன் ஆட்சித்தலைவரின் மேல் விழ போலிஸார் உடனே மாணவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். எல்லோரும் நாலாபுறமும் சிதறி ஓடினாலும் போலிசாரின் தாக்குதலுக்கு தப்பவில்லை. பேருந்தைச் சுற்றி நின்ற நாங்கள் எங்கள் கைகளை இறுகபிடித்துகொண்டு
என்ன நடந்தாலும் கலையக்கூடாது என்று நின்றோம். ஆனால் ஓடி வருபவர்கள் எங்கள் மீதும் விழ ஆரம்பிக்க அச்சம் வந்துவிட்டது. நாங்கள் தப்பிக்க வேண்டுமானால் அருகிலிருந்த சாக்கடையில் குதித்துதான் தப்ப வேண்டும் என்ற நிலை. போலிசாரும் வேகமாக தாக்க
வேறுவழியின்றி குதிதோடி தப்பினோம். சிலர் மேல் ரப்பர்குண்டுகள் உரசிச் சென்றன. அன்று மாலை அந்தப்பகுதியே போர்க்களம் போல இருந்தது. அரசு மருத்துவமனையை ஒட்டியிருந்த கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. ஒரு சில தொலைபேசி கடைகளை வலிய திறக்கச் செய்து
வீட்டிற்கு தகவல் சொன்னோம். அடுத்து என்ன செய்வது என்று எல்லோரும் விவாதித்தோம். மறுநாள் நான்கு ரோடு சந்திப்பில் கூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மறுநாள் மாணவர்கள் எல்லோரும் கூடினோம். ஏறத்தாழ நூறு பேருக்கு மேல், மாணவிகளும் இதில் அடக்கம்.
அப்பொது அரசியல்வாதிகள் பலரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன் என்று வந்தார்கள். இதை மாணவர்களே பார்த்து கொள்கிறோம், அரசியல்வாதிகள் யாரும் தலையிடாதீர்கள் என்று கண்டிப்பாக சொல்ல அவர்கள் திரும்பி போய்விட்டார்கள். அப்போது
ஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் மீதும் கோபம் வந்தது. இவர்கள் பிரச்சனைக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆத்திரம். வருவாய்துறை அதிகாரி ஒருவர் தொழிலதிபர் என்று சொல்லிக்கொண்டு மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். மாணவர்கள் கேட்டது நேற்று நடந்த
சம்பவம் போன்று எங்கள் மீதும் நடக்காது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்கவும் அவர் நகர்ந்து விட்டார். மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்து செல்ல பேருந்து வரவழைக்கப்பட்டன. அப்போது பார்த்து எங்கிருந்தோ ஒரு பெரிய கல் ஒன்று பேருந்து ஒன்றீன் கண்ணாடியை பதம்
பார்த்தது. எங்களுக்கும் பதட்டம் கூடிப்போனது. மாணவிகள் வேறு எங்களோடு இருந்தது அதை இன்னும் அதிகப்படுத்தியது. காவல்துறை உயரதிகாரி, தயவு செய்து கலைந்து விடுங்கள், சமூக விரோதிகள் மாணவர்கள் போர்வையில் ஏதேனும் செய்து விடக்கூடும் பின்பு நாங்கள் கடுமையான நடவடிக்கைகள்
எடுக்க வேண்டியிருக்கும், தேவையில்லாமல் பிரச்சனையை சிக்கலாக்காதீர்கள் என்று மென்மையாக சொன்னார். எங்களுக்கும் வேறு வழி இல்லை. கலைவதுதான் சரியானதாக இருக்கும் என்றுணர்ந்து கலைந்தோம்.

கல்லூரி காலத்தில் எங்கள் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்திவிட்ட சம்பவம் அது. கைது செய்யப்பட்ட பலரும் ஜாமினில் வெளிவந்த போது எங்களுக்கு நீதித்துறையே இவ்வளவுதானா, குற்றவாளிகளைச் தண்டிக்கமுடியாத நீதித்துறையின் மீதே வெறுப்பு வந்தது.
ஆட்சி மாற்றத்திற்கு பின் நீதி கிடைக்கலாம் என்றிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது. ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் இழுத்து கொண்டிருப்பது இன்னும் வேதனைக்குரிய ஒன்றே. தங்கள் மகள்களை இழந்த அந்த பெற்றோரின் துயரத்தில் பங்கு பெறுவதை விட வேறெதையும் செய்ய முடியாத கையறுநிலைதான் எல்லோருக்கும்.
 



உங்கள் பதிவில் மிகவும் பிடித்தது இதுவே. சுரேஷ் சொன்னத்யே திருப்பிச் சொல்ல வேண்டியதுள்ளது. அந்தக் குடும்பத்தினருக்கும் நமது குடியரசுக்கும் என் அனுதாபங்கள். எனக்கு நம் நீதியரசர்கள்,நீதித்துறை மீதெல்லாம் நம்பிக்கைபோய் நாளாகிவிட்டது. பார்ப்போம்..இந்த முறையாவது.
 



உங்கள் பதிவில் மிகவும் பிடித்தது இதுவே. சுரேஷ் சொன்னத்யே திருப்பிச் சொல்ல வேண்டியதுள்ளது. அந்தக் குடும்பத்தினருக்கும் நமது குடியரசுக்கும் என் அனுதாபங்கள். எனக்கு நம் நீதியரசர்கள்,நீதித்துறை மீதெல்லாம் நம்பிக்கைபோய் நாளாகிவிட்டது. பார்ப்போம்..இந்த முறையாவது.
 



அந்த அப்பாவிகளின் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கு கொண்ட அனைவர்க்கும் நன்றி. அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. கண்டிப்பாக அவர்கள் உயிர் வாழும் வரை, அக்குழந்தைகளின் கடைசி நிமிடங்களை நினைத்து நினைத்து, கொடுமை...

சம்பவம் நடந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து 2 கி.மீ. தூரம்தான். அந்த வழியில், அந்த இடத்தை நான் ஆயிரம் முறையாவது தாண்டி சென்றிருப்பேன். பஸ் எரிப்பு, கல் வீச்செல்லாம் எங்களுக்கு பழகியதுதான். கல்வீச்சில் ஒரு முறை பஸ்ஸ¤க்குள் இருந்த அனுபவம் உண்டு. பஸ் எரிப்பில் நேரடி அனுபவம் இல்லை. ஆனால் என் தந்தை பயணம் செய்த பஸ் ஒரு முறை கொளுத்தப்பட்டது. அன்று பயணிகள் எல்லாம் இறங்கும் வரை பொறுத்திருந்த அந்த கலவரக்காரர்களை போல இந்த குடிகாரர்களும் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் அப்பாவிகள் பலியாகியிருக்க மாட்டார்கள்.

இனியாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் இந்த வழக்கு நடக்கும் விதத்தை பார்த்தால் மெல்லிய நம்பிக்கைதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். இங்கே அரசாங்கமே நீதி மறுக்கப்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. உங்களிடம் இருக்கும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
 



சரி, உங்க கருத்து ??