(தமிழ்) கடவுள் நம்பிக்கை இருக்கா?
இவரு பட்டையெல்லாம் போட மாட்டாருன்னு யாரோ சொன்னாங்களே?குறிப்பு : ஜனவரி 27 அன்று எழுதப்பட்டு அன்றே தூக்கப்பட்ட இந்த பதிவு, எதிர்காலத்தில், தலைப்பை மட்டும் ஞாபகம் வைத்துக்கொண்டு மேல்விபரங்கள் எதுவும் அறியாமல், அறியவும் விரும்பாமல், தனது கற்பனைகளை கருத்தாக்கி அஞ்சால் அலுப்பு மருந்து தயாரிக்க விரும்பும் அண்ணைகளுக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது.
தமிழ்மண பட்டையை பற்றி பலரும் பதிவுகள் எழுதிய நிலையில், 05-02-06 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் "திருமாவளவன் நெத்தியடி நிபந்தனை!" என்ற தலைப்பில் திருமாவளவன் நெத்தியில் அடித்த பட்டையுடன் காட்சி தரும் புகைப்படத்தை பார்த்ததும் இப்பதிவு எந்தவித குத்தும் இல்லாமல் எழுதப்பட்டது.
திருமாவளவன் விபூதி பூசுவதோ, கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பதோ பற்றி எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை. இதற்கு முன் திருமா பட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை நான் பார்த்ததில்லை என்பதாலும், சமீபத்திய சில நிகழ்வுகளில் திருமா பெரியாரை மேற்கோளிட்டு தந்த விளக்கங்களாலும் திருமாவளவன் நாத்திகர், பெரியாரின் நாத்திகம் உட்பட எல்லா கருத்துக்களையும் பின்பற்றுபவர் என்று "தவறாக" எண்ணி திருமாவளவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்ற எனது ஆச்சரியத்தை கேட்டிருந்தேன்.
இது கேட்கக்கூடாத கேள்வியா?
இப்படி கேட்பது பெரிய குற்றமா?
இந்த கேள்வியின் மூலம் அவருக்கு எதுவும் களங்கம் நிகழ்ந்துவிடுமா?
படம் நன்றி: விகடன்
தமிழ்ப்பதிவுகள்
புனுகு பூசாத நீதிபத்திகள்
உங்கள் பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கை கவனமாக பரிசீலித்ததில், குற்றம் சாட்டப்பட்டவரை விட நீங்கள்தான் பெரிய குற்றவாளி என்ற முடிவுக்கு பத்து நீதிபதிகள் அடங்கிய இந்த பெஞ்ச் வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தற்போது விஜய் வரை, பெண்கள் எப்படி உடை உடுத்தலாம் எப்படி உடுத்தக்கூடாது என்று காலம் காலமாக திரையில் செய்யப்பட்ட பிரச்சாரத்தையும் மீறி நீங்கள் கவர்ச்சியாக உடையணிந்து சென்றிருக்கீறீர்கள். டீ.சர்ட் = பனியன் என்றும் ஷார்ட்ஸ் = ஜட்டி எனவும் அஸினே உணர்ந்து திருந்தி புடவைக்கு மாறிவிட்ட நிலையில் நீங்கள் டீ.சர்ட் ஷார்ட்ஸோடு வீதிகளில் வலம் வந்திருக்கிறீர்கள்.பாலியல் உணர்ச்சி என்பது இயற்கையானது. உங்கள் உடையால் தூண்டப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஓரிருமுறை கையை பிடித்து இழுத்தபோது நீங்கள் கத்தி கூச்சல் போட்டிருக்கிறீர்கள். கூச்சல் போடுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் கோபத்தை மேலும் கிளறக்கூடும் என்பதை அறிந்தும் நீங்கள் மௌனமாகவில்லை. ஆக உங்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கு உங்கள் கூச்சலே முக்கிய காரணம் என்பது கனம் நீதிபதிகளின் முடிவு.
இப்போது உங்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்முறையில் சுகம் கண்ட குற்றம் சாட்டப்பட்டவன், அதை ஒழுங்காக உடையணிந்தவர்களிடமும் நிகழ்த்துகிறான். ஆக உங்கள் இருப்பு நம் சமுதாயத்தையே பாதுகாப்பற்றதாக்கிவிட்டது என்பதை கருத்தில் கொண்டு, இனியாவது ஒழுங்காக திருந்தி வாழ முயற்சிக்குமாறு சமுதாயத்தின் பால் கொண்ட அக்கரையால் இந்த கோர்ட் பரிந்துரை செய்கிறது. when rape is inevitable, lie back and enjoy என்ற பொன்மொழியை உங்களுக்கு இந்த கோர்ட் இலவசமாக வழங்குகிறது. முடியாது எனும்பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தப்பில்லை என்ற கோட்பாட்டை கோடு காண்பிக்க இந்த கோர்ட் விரும்புகிறது.
இப்படி சொல்வதனால் பாலியல் பலாத்காரம் செய்தவரின் நடவடிக்கையில் இந்த கோர்டுக்கு உடன்பாடு என்று அர்த்தமில்லை. அவரையும் இந்த பெஞ்ச் கண்டிக்கிறது.
disclaimer : this weblog entry is a work of fiction. any actual resemblance to real life events is purely unintentional. © mugamoodi
தமிழ்ப்பதிவுகள்
தலைப்பில்லாதது
இந்தியாவுக்கு maxim ஒத்துவருமா?
maxim தனது முதல் இதழிலேயே டூ-பீஸ் அழகியின் உடலோடு குஷ்பு முகத்தை ஒட்டு வேலை செய்து ‘‘Of course I am a virgin if you don’t count from the behind’’ என்று அடைமொழியும் கொடுத்து புதிய விவகாரம் ஒன்றை கிளப்பியிருக்கிறது. டிரஸ்ஸரின் முன் நிற்பது போல் இருக்கும் அந்த படத்தின் டிரஸ்ஸர் கண்ணாடியில் dinner with rajini என்று sticky pad செய்தியும், கண்ணாடி சட்டத்தில் ரஜினி, கமல், ஐஸ்வர்யா, ஜெயலலிதா(?) புகைப்படங்களும் குத்தப்பட்டிருக்கின்றன. டூ பீஸ் உடையில் நிற்கும் ஒரு பெண்ணின் முகத்தில் குஷ்பு முகத்தை மார்ஃப் செய்திருப்பது நன்றாகவே தெரிகிறது. போனால் போகிறது என்று குஷ்பு பற்றி ஒரு சிறு குறிப்பு...
படத்தின் பக்கவாட்டில் 100% போலி என்று பொடி எழுத்து உபகருத்து.. குஷ்பு ஆட்சேபம் தெரிவித்தை அடுத்து மாக்ஸிம் எடிட்டர் மன்னிப்பு கோரியிருக்கிறார். அப்போது அவர் விட்ட கருத்து :: ‘‘We respect and celebrate women in our magazine. We never intended to offend Khushboo and apologise to her,’’ இதில் முதல் பாதி எவ்வளவு நகைச்சுவையானது என்பது மாக்ஸிம் படித்தவர்களுக்கு புரியும்.
மாக்ஸிம் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதிலிருந்து தடுக்கும் ஒரு சட்டப்பிரிவை மீறியதற்காக காவல்துறையில் புகாரும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் பதியப்போவதாக குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தி
தினமலர் செய்தி
*
இந்தியாவில் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டாலும் மாக்ஸிம் பத்திரிக்கைக்கும் இந்தியா/இந்தியர்களுக்கும் நெடிய வரலாறு இருக்கிறது.
நவம்பர் 2000 மாக்ஸிம் இதழில் வந்த ஒரு சிற்றுரை :: "காந்தியை வெறுப்பதற்கு 3 காரணங்கள்". அதன் மொழிபெயர்ப்பு ::
1. அவர் ஒரு கேவலமான கணவர். காந்தி மனித குலத்தையே நேசித்திருக்கலாம், ஆனால் 1906ல் இருந்து தன் மனைவி கஸ்தூரிபாவை நேசிப்பதை நிறுத்துவிட்டார். உறவு கொள்வதை தடை செய்த அவர், ஒரு முறை ஆத்திரத்தில் (குறைந்த ரத்த அழுத்தத்தால் இருக்கலாம்) கஸ்தூரிபாவை வீட்டை விட்டே துரத்த இருந்தார்.
2. அவர் ஒரு மட்டமான அப்பா. மகாத்மா தன் பிள்ளைகளும் தன்னைப்போலவே துறவிவை போல வாழ வேண்டும் என்று நினைத்தார். எந்தளவு என்றால் அவரின் மூத்த மகன் ஹரிலால் தன் தந்தையை புறக்கணித்து, இஸ்லாம் மதத்தை தழுவி, ஒரு குடிகாரனாய் சாகும் அளவிற்கு.
3. அவர் ஒரு லாயக்கற்ற முன்மாதிரி. அவரின் பட்டினிப்போராட்டங்களும், ஒல்லியான உடல்வாகும் சமாதான முறை போராட்டகாரர்களுக்கு நம்பமுடியாத ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது. Dr. மார்ட்டின் லூதர் கிங், மதர் தெரசா மற்றும் ஏனைய தலைவர்கள் காந்தியால் தூண்டப்பட்ட, முறை தவறிய சாப்பாட்டால் ஏற்படும் கோளாறுகளால் வாழ்க்கை முழுக்க அவதிப்பட்டார்கள்.
இதை படித்து கொதித்த இந்தியர்கள் கடுமையாக கண்டனம் எல்லாம் தெரிவித்தாலும் அதை பற்றி மாக்ஸிம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதும் பின்பு நொந்து போய் மாக்ஸிம் பத்திரிக்கை படிக்காதீர்கள் என்று தங்களுக்குள் சங்கிலி அஞ்சல் பரிமாற்றம் மட்டும் நடந்திக்கொண்டார்கள் என்பதும் புகை மூட்ட ஞாபகம்.
மீண்டும் மாக்ஸிம் பத்திரிக்கை 2003ல் "சண்டை போடுவது உடல் கட்டுக்கோப்பாக இருக்க உதவுகிறது" என்ற தலைப்பில் ஒரு கார்ட்டூன் போட்டது... அப்போது வந்த பொடி எழுத்து உபகருத்து - "teach those pacifists a lesson about aggression"

இந்த முறை எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக மாக்ஸிம் மன்னிப்பு கேட்டது...
*
ஒரு காலத்தில் தொடர்ச்சியாகவும் இப்போது எப்போதாவதும் maxim மற்றும் அதன் தம்பியான stuff ஆகிய பத்திரிக்கைகளை படிப்பது வழக்கம்.. படிப்பது என்பதை விட பார்ப்பது என்பதுதான் பொருத்தம். இரண்டுமே மகா மகா குசும்பு பிடித்த பத்திரிக்கைகள். அதில் எழுதப்படும் கமெண்டுகள் படுபயங்கர இரட்டை அர்த்தங்கள் நிறைந்ததாகவும் நிறைய கட்டுரைகள் அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருக்கும். பல சமயம் அதில் வரும் பேட்டிகள் பேட்டி கொடுத்தவர் சொன்னது என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியாததாக இருக்கும். இந்த பத்திரிக்கையை அயல்நாட்டு பதிப்பு ரேஞ்சிலேயே தாங்க இன்னும் இந்தியா தயாராக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. ஒன்று இந்தியாவுக்காக stripped down version தயாரிக்க வேண்டும். இல்லை அடிக்கடி ஏற்படும் முதுகு வலிக்கு ஏதுவாக ஹோல்சேலில் மெத்தை வாங்க வேண்டியதுதான்.
அறிவுப்பசி அண்ணாசாமி : பெண்/பெண்மை இழிவு படுத்தப்பட்டிருப்பதை கண்டித்து இந்த முறையும் பண்பாட்டு காவலர்கள் ஊர்வலம் போவாங்களா?
தமிழ்ப்பதிவுகள்
இலக்கிய சலிப்பும் கருத்துப் பதிவும்
நம் குற்றிலக்கியவாதிகள் சமுதாயத்தின் மீது சலிப்பும் கோபமும் கொள்ளும் சமயத்தில் எல்லாம் கர்த்தாக்களாக மாறி கருத்து உதிர்ப்பது சகஜம்தான் என்றாலும் சமீபகாலத்தில் இது அதிகரித்து வருகிறதோ என்று எனக்கு ஒரு பிரமை. இவர்களுடைய லேட்டஸ்ட் கோபம், ப்ளாக்கர்கள் மீது.
ப்ளாக் என்பது ஒரு பவர்புல் மீடியா. இதை தங்களுடைய டைரி குறிப்பு என்பதாக தமிழ் சமுதாயம் நினைத்து தங்களுக்கு தோன்றியதையெல்லாம் எழுதி வருகிறது. ப்ளாக் என்றால் இதைத்தான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற அளவில் கூட கட்டுப்பாடும் நெறிமுறையும் இல்லாத சமூகம் எப்போது முன்னேற போகிறது. சமுதாயத்தை புரட்டிப்போடும் வல்லமை கொண்ட ப்ளாக்கை போயும் போயும் குட்டி கருத்து, வெட்டி கருத்தெல்லாம் சொல்லி வீணடிக்கிறார்களே என்பது குற்றிலக்கியவாதிகளின் கோபம்.
சமூக அவலங்களை கவிதை எழுதுவதன் மூலம்தான் தீர்க்க வேண்டும், தீர்க்க முடியும் என்பது குற்றிக்க்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. உரைநடையோ, கட்டுரையோ, பேச்சுத்தமிழிலோ எழுதுவது சமூகத்துக்கு எந்த விதத்திலும் பயனாகாது என்பது தீர்க்கதரிசனம். எழுதினால் கண்டிப்பாக அது சமூகத்துக்கு பயனாகத்தான் இருக்க வேண்டும், சும்மாசுக்கெல்லாம் எழுதக்கூடாது என்பது அவர்களின் தார்மீக கோட்பாடு.
படைப்பாளியை மதிக்காத சமூகம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. இனியாவது அவர்களின் அறிவுரையை கேட்டு உருப்பட வழிகாண வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் இனி என் பதிவுகள் அனைத்திலும் ஒரு (குட்டி) கவிதையாவது எழுதிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன் (அவசரத்தில் முடி எடுத்திருக்கிறேன் என்று படித்துவிட்டதால் கீழே இன்னொரு உபரி கருத்து பதிவு). இனி கவிதை...
வாழ்வியல் தீர்வு
ப்ளாக்கரை
பெட்ரோலுக்கு
பத்த கொடுப்போம்
தீக்குச்சிக்கு தின்ன கொடுப்போம்னு நான் எழுதிய ஒரிஜினல் கவிதை காப்பிரைட் ப்ரச்னையில் சிக்கிக்கிடப்பதால் தற்காலிகமாக மாற்று வார்த்தைகள். இதில் பெட்ரோல் என்பதற்கு பதிலா தூய தமிழ்ல சீமெண்ணெய்னு தான் வந்திருக்கணும். ஆனா தளை தட்டுகிறது. தமிழ் கவிதைல த
*
சமுதாய கடமை முடிந்ததால் இனி கருத்து பதிவு.
பாரதிராஜா பட க்ளைமேக்ஸ் போல ஒரு நீதியோ கருத்தோ இல்லாம ஏதாவது குறிப்பபலுணர்த்தும் படங்கள பாத்தா நான் ரொம்பத்தான் கொழம்பி போயிடறது. அப்படித்தான் கீழ்க்கண்ட படங்கள வலையில பாத்தப்பவும் எனக்கு "தலை"யும் புரியல வாலும் புரியல. ஆனா ரூம்மேட் கிட்ட காமிச்சப்ப அவன் 5 நிமிசம் மோட்டுவளைய பாத்தான், 2 நிமிசம் சிரிச்சான். அப்புறம் திருப்பியும் மோட்டுவளை சிரிப்புன்னு கொஞ்ச நேரம் பண்ணிட்டு கிடு கிடுன்னு ஒரு கவிதை எழுதிட்டான். (அவன் அடிப்படையில ஒரு கவிஞன், பிறப்பிலேயே கவிஞன்னு தன்ன சொல்லிக்கிறதுண்டு. எனக்குத்தான் எப்படின்னு புரியறதில்ல) ஆனா கடைசி வரைக்கும் இந்த ரெண்டு படத்துக்கும் என்ன தொடர்பு, என்ன கவிதை எழுதினான்னு ஒன்னும் சொல்ல மாட்டேன்னுட்டான். அதுனால உங்ககிட்ட ஒரு உதவி. தயவு செஞ்சு இத பாத்தா உங்களுக்கு என்னா தோணுதுன்னு சொல்லுங்க...

அப்படியே ஒரு ஓட்டெடுப்பு. இத மட்டும் ஒரு பதிவா போட்டா அந்த பதிவுக்கு எந்த தலைப்பு பொருத்தமா இருக்கும் (மல்டிபிள் சாய்ஸ் கேள்விதான் பூந்து விளையாடலாம்)
டிஸ்க்ளெய்மர் : this weblog entry is a work of fiction. any actual resemblance to real life characters or events is purely unintentional. © mugamoodi
கேபிள் மசோதாவும் சில கேள்விகளும்
தமிழக ஆளுர் சுர்ஜித் சிங் பர்னாலாவை, திமுக தலைவர் கருணாநிதி & தயாநிதி மாறன் இன்று சந்தித்து கேபிள் டிவி நிறுவனங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கான புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கேபிள் டிவி தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது என்றும், இதில் மாநில அரசு தலையிட உரிமையில்லை என்றும் கூறிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள மசோதா சட்ட விரோதமானது. இதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இதை தொடர்ந்து இன்று பிற்பகலில் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இதுல இவங்க எல்லாம் உண்மையிலேயே சட்டத்த பாதுக்காக்கத்தான் இவ்ளோ துடிக்கிறாங்கன்னு சொல்ற ஆறு மாசக்குழந்தைங்கள்லாம் கொஞ்சம் ஒத்துங்க.. நம்ம அறிவுப்பசி அண்ணாசாமிக்கு செல கேள்விகள் கீதாம்.
அ) ஜெயா ப்ளஸ் செய்தி அலைவரிசைய தொடங்கவும் சொந்தமா டெலிபோர்ட் அமைக்கவும் 2004லயே அனுமதி கிடைக்க அதனால விலை உயர்ந்த நவீன கருவிகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து, நிர்மாணிக்கப்பட்டு விட்ட நிலையில் நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்துவதற்கான உரிமத்தை அளிக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் 2004ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பிச்சும், பலமுறை நேரில் வலியுறுத்தியும், கடிதம் மூலமும் நினைவூட்டியும், அப்லிங்கிங் வசதிக்கான உரிமத்தைக் கொடுக்காமல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் இழுத்தடிப்பு செய்கிறது. இத கொஞ்சம் விசாரிச்சு என்னன்னு சொல்லுங்கன்னு ஜெயா உயர்நீதிமன்றத்துல கேஸ் போட்டு, அத விசாரிச்ச உயர் நீதிமன்றம், ஜெயா டிவியின் கோரிக்கையை சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய முறையில் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டதே, அதுக்கும் ஆளுநர் கிட்ட எதிர்ப்பு தெரிவிச்சீங்களா அமைச்சர் சார்?
ஆ) பொது வாழ்க்கைக்கு வந்த விஜயகாந்த் கல்யாண மண்டப விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னு சொன்ன மாதிரியே பொது வாழ்க்கைக்கு வந்த தயாநிதி கேபிள் டிவி விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாக்கூடாதுன்னு அறிக்கை தயாரிச்சி அப்புறம் அத கிழிச்சிப்போட்டுட்டாராமே டி.ஆர்.பாலு, உண்மையா?
இ) "ஏங்க, சன் டிவியில இப்படியெல்லாம் அபாண்டமா சொல்றாங்களே, இருட்டடிப்பு செய்றாங்களே, இதயெல்லாம் ஒரு வார்த்தை ஏன்னு கேட்க கூடாதான்னு கேட்டா மட்டும் சன் டிவி குழுமத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றாரே தலைவரு, இப்போ திரண்டு போயி ஆளுநர சந்திக்கிறாரே, இதத்தான் தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்றாங்களோ?
ஈ) நாட்டுல 40 பேர் செத்தா கூட உடல்நிலை காரணமா குட்டி தலைவர்கள களப்பணிக்கு அனுப்பற தலைவரும் சரி வூட்டுல உக்காந்து அறிக்கை வுடுறதோட கடமைய முடிச்சிக்கிற அமைச்சர் & எம்மெல்லே பெருமக்களும் சரி, மத்திய அமைச்சர் வூட்டு நாய் காணாம போனா கூட குடு குடுன்னு போயி ஆளுநர சந்திக்கிறாங்களே, அது ஏம்பா?
தமிழ்ப்பதிவுகள்
புது வியாதியும் ப்ரிஸ்கிரிப்ஷனும்
டாக்டர், கொஞ்ச நாளாவே இவன் போக்கு சரியில்ல
என்ன பண்ணுது?
எதுக்கெடுத்தாலும் கோபப்படுறான், சம்பந்தமே இல்லாம அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சி போட்டு புரியாத பாஷையில புது புது வார்த்தையெல்லாம் சொல்றான்.
சரி இருங்க ப்ளட் பிரஷர் செக்-அப் பண்ணுவோம்...என்னங்க இது பி.பி லெவல் ஏகத்துக்கு எகிறி கிடக்கு. இந்த சின்ன வயசுல இவ்ளோ ரீடிங் நல்லதில்லையே. என்ன அவன எதுக்குனா திட்டினீங்களா?
இல்ல டாக்டர்.
பொம்பளைங்க ஹீரோ கம் வில்லனா நடிக்கிற பழிவாங்கற திகில் கேபிள் நாடகங்கள ரொம்ப பாக்குறாரா?
இல்ல டாக்டர்.
மாயாஜாலம்ன்ற பேருல வர்ற லூஸ¤ நாடகங்க எதுனா விடாம பாக்குறாரா?
இல்ல டாக்டர்.
எய்ட்ஸ¤க்கு மருந்து கண்டுபிடிச்சிட்டேன்னு சொல்லி கன்னா பின்னான்னு ஐ.நா. சபையில இருந்து ஐரோப்பா வரைக்கும் இருக்கிற எல்லா சயன்டிஸ்டுங்களையும் திட்டற சேலம் டாக்டர் பேட்டிய உன்னிப்பா கவனிக்கிறாரா?
இல்ல டாக்டர்.
சமீபத்துல ஏர் இண்டியாவில் இண்டர்நேஷனல் பயணம் எதுனா போனாரா?
இல்ல டாக்டர்.
தமிழக அரசியலை ரொம்ப உன்னிப்பாக கவனிக்கிறாரா?
அய்யோ இல்லையே.
என்னங்க எதுக்கு எடுத்தாலும் இல்லங்கறீங்க... நோயாதாரம் என்னான்னே தெரியலயே. சரி , ஒரு நாலு நாளக்கி அவர க்ளோஸா கவனிச்சாதான் ஒரு முடிவுக்கு வர முடியும். அவரோட இயல்புல எந்த மாற்றமும் இல்லாம அவர் பாட்டுக்கு இருக்கட்டும். மிச்சத்த நான் பாத்துக்கறேன். ஒன்னும் கவல படாதீங்க. குணப்படுத்திடலாம்.
நாலு நாள் கழித்து ப்ரிஸ்கிரிப்ஷன் சொன்னது : பீடித்த இரண்டே மாதத்தில் இரண்டு யுகங்களுக்கான எஃபக்டை தரும் இந்த வியாதியின் பெயர் ப்ளாகோஃப்ரீனியா. குறுகிய கால நிவாரணம், நோயாளி தமிழ் வலைப்பூக்கள் படிப்பதை ஒரு மண்டலம் தவிர்ப்பது. நிரந்தர நிவாரணம், அதை நிரந்தரமாக செய்வது.
தமிழ்ப்பதிவுகள்
ஆஷா
முரசொலி இதற்கும் கார்ட்டூன் போடுமா?
‘‘கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக உங்களின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் இருக்கும் நிலத்தையும் மத்திய அரசு கையகப்படுத்துவதில்தானே பிரச்னை ஆரம்பிக்கிறது. மண்டபம் இடிபடுவதில் உங்களுக்கு வருத்தமா?’’
‘‘நான் பதில் சொல்ல வேண்டிய கேள்விதான் இது... சில விஷயங்களைத் தெளிவுபடுத்திடற வேண்டியதுதான். பாலத்துக்காக அரசு கையகப்படுத்தும் இடங்களைச் சேர்ந்தவங்களில் 161 பேர் எங்க சொத்துக்களை இடிக்கக் கூடாதுனு கேட்கிறாங்களாம். அந்தப் பட்டியல்ல என் பெயர் இல்லை சார். மண்டபத்தை இடிக்கிறாங்களா... இடிக்கட்டும், எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா, அதை வெச்சு என்னை அசிங்கப்படுத்த முயற்சி பண்ணா, நான் என் கச்சேரியை ஆரம்பிச்சிருவேன்.
என் மண்டபம் இருக்கிற இடத்தில் பாலம் வரலை. பாலத்துக்கான தரைவழிப் பாதைதான் வரப்போகுதாம்னு சொல்றாங்க. அதையும்கூட மண்டபத்துக்குப் பெருசா சேதம் வராம, முன்னாலேயோ பின்னாலேயோ பக்க வாட்டிலேயோ கொண்டு போக முடியும்னு அந்தத் துறை அதிகாரிகளா இருக்கிற சில நண்பர்களே சொன்னாங்க. மண்டபத்தைச் சுற்றி இருக்கிற இடங்களைத் தர்றோம்னு சொன்னால், மண்டபம் தான் வேணும்னு கேட்கிறாங்க. ரைட்டு, நான் அவங்க ரூட்டில் இடிச்சிருவேனோனு, அதுக்கு முன்னால் என் மண்டபத்தை இடிச்சுடணும்னு பார்க்கிறாங்களோ என்னவோ?’’
‘ஒரு விஷயமாக என்னைச் சந்திக்க வந்த விஜயகாந்த், வெளியே போய் எதற்காக என்னைச் சந்தித்தாரோ அதை அப்படியே மறுத்தார்’ என தி.மு.க. தலைவர் கருணாநிதி, நீங்கள் பொய் சொன்னதாகச் சொல்கிறார். உங்கள் பதில் என்ன?’’
‘‘படிச்சேன், சிரிச்சேன்! கலைஞரை பல முறை பல விஷயங்களுக்காகச் சந்திச்சிருக்கேன். ஆனால், இந்த முறை மட்டும் வீடு தேடி வந்தவனை, போட்டோ எடுத்து, அதை பிரஸ் நியூஸா கொடுத்து அரசியல் ஆக்கியது அவர்தான். நான் பொய் சொல்லலை. இன்னமும் நாகரிகம் கருதி, சில உண்மைகளைச் சொல்லாமல் இருக்கேன் என்பதுதான் உண்மை!’’
‘‘கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் சொத்து என்கிறார்கள். இழப்பின் வலியை எப்படித் தாங்குகிறீர்கள்?’’
‘‘வாழ்க்கையில் பல இழப்புக்களைச் சந்திச்சுப் பழக்கமாகிருச்சு. ஒரு கல்யாண மண்டபத்தை வெச்சு என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் எனக்குக் கொடுத்த காசை மக்களுக்கே திருப்பித் தர்றதா நினைச்சுட்டுப் போயிருவேன். நான் சின்ன வயசிலிருந்தே கொடுத்துப் பழக்கப்பட்டவன் சார். இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிட மக்களுக்காக இலவசமாகக் கொடுத்தேன். வருஷத்துக்கு 25 லட்ச ரூபாயை இல்லாதவங்களுக்குக் குடுக்கிறதுக்காகவே சம்பாதிக்கிறவன். நான் என் சொத்துக்களை வித்துதான் மாநாடு நடத்தினேன். என்னைப் பார்த்து ‘பொது வாழ்க்கைக்கு வந்த விஜயகாந்த் கல்யாண மண்டப விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது’னு புத்திமதி சொல்றார் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு. ஹலோ, நான் அரசியலுக்கு வர்றப்பவே காசோட வந்தவன். ஆனா, அரசியலுக்கு வந்து சம்பாதிச்சவங்க எனக்கு அட்வைஸ் பண்றாங்க. என் சொத்தை இதோ நான் சந்தோஷமா தர்றேன். மக்களுக்கு நல்லதுன்னா, என் மண்டபத்தை விட்டுக்கொடுக்கிறேன் சார் பெருமையா!’’
‘‘இது அரசியலாக்கப்படுவதுதான் வருத்தமா?’’
‘‘ஆமா, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கல்யாண மண்டபத்துக்கு கார் பார்க்கிங் எங்கேனு கேட்டப்போ முன்னாடி இருக்கிற இடத்தைக் காட்டினாங்க. அப்புறம் மாநகராட்சி அந்த இடத்தைப் பூங்காவாக்கணும்னு பிரச்னையை ஆரம்பிச்சதும் சினிமாவில் செட் போடற மாதிரி திடீர்னு ரெண்டு சேர் போட்டு, கொஞ்சம் பூச்செடிகள் வெச்சு அதில் சாயங்காலம் ஆட்களை உட்காரவெச்சு அது ஒரு பூங்காவாதான் இயங்குதுனு காட்டினாங்களே. அரசாங்கம் கேட்டதும் அந்த இடத்தைத் தூக்கிக் கொடுத்திருக்க வேண்டியதுதானே. அவங்ககிட்ட இல்லாத சொத்து சுகமா... காசு பணமா? அறிவாலயத்துச் சொத்துக்கு ஆபத்துனா மட்டும் சட்டப்படி சந்திப்பாங்களாம். என் மண்டபத்துக்கு பிரச்னைனா, பெருசா எடுத்துக்கக் கூடாதாம். நல்ல காமெடிங்க இது!
போக்குவரத்து வசதிக்காக கோயம்பேட்டில் பாலம் கட்டணும்னு கல்யாண மண்டபத்தை இடிக்கப்போறீங்க, சரி. அதே மாதிரி சென்னையில் கோடம்பாக்கம் மேம்பாலம்னு ஒண்ணு இருக்கே... தினம்தினம் டிராஃபிக்கில் திணறுதே. அதை ஏன் சின்னதா கட்டினாங்கனு விசாரிச்சுப் பாருங்க, ஒரு வரலாறு இருக்கும். ஏன், ஸ்டாலின் மேயரா இருந்தப்போ அதை இடிச்சு இன்னும் பெருசா கட்டியிருக்கலாமே. பாலத்துக்குக் கீழே முரசொலி இருக்கு, அதனால்தான் அதைத் தொடலைனு மக்கள் சொல்றாங்களே, அது உண்மையா... பொய்யா? கோயம்பேடு பாலமா, கோடம்பாக்கம் பாலமா எது சென்னைக்கு முதலில் முக்கியம்னு மக்களிடம் கேளுங்க சார், அவங்க பதில் சொல்வாங்க! பொது வாழ்க்கைக்கு வர்றவங்க எப்படி இருக்கணும், இருக்கக் கூடாதுனு எனக்கு சில பேர் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. நானும் சொல்றதுக்கு நிறைய இருக்கு... ஒவ்வொண்ணா மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கிறேன். எனக்கு எஜமான், மக்கள்தான்!’’
நன்றி & முழுப்பேட்டி படிக்க :: விகடன்
தமிழ்ப்பதிவுகள்
IndiBlog தேர்தல்
ரொம்ப நாளைக்கு முன்பு, பத்ரி பதிவில் இருந்த ஒரு படத்தை க்ளிக்கி சென்ற போது, தேசி ப்ளாக் அவர்ட் என்ற பெயரில் வலைப்பூவுக்கு தேர்தல் எல்லாம் நடக்கிறது என்பதையும் சென்ற வருடம் தேர்தல் நடக்கும் அளவு ப்ளாக் விஷயங்களில் சமூகம் தூள் பறத்திக்கொண்டிருக்கும் நிலையில் வலைப்பூ என்றாலே என்னவென்று தெரியாத நிலையில் நான் இருந்திருக்கிறேன் என்பதையும் அறிந்தேன். சென்ற வருட அவார்ட் வின்னர் பத்ரி.
இந்த வருடம் இதை பற்றிய அறிமுகம் பாஸ்டன் பாலாவால் தரப்பட்டிருந்தது(1). "எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டாங்களே" என்று நான் புலம்பும் அளவு ஒரு பிரிவில் அவர் பர்சனல் பார்வை இருந்தாலும், அவர் கொடுத்திருந்த சுட்டியை பிடித்து இண்டிப்ளாக்கீஸ் சென்று "நமக்கு நாமே" திட்டத்தில் என் ப்ளாக்கை பரிந்துரைத்துக்கொண்டேன்.சிலர் தவறாக நினைத்தது போல் இது சிலரால் சிலருக்கு மட்டுமே நடந்த தேர்தல் அன்று. யார் வேண்டுமானாலும் பரிந்துரைத்துக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இது இருந்தது. இருந்தாலும் பாஸ்டன் பாலா(1), ஐகாரஸ் ப்ரகாஷ்(2) ஆகியோரின் பதிவுகளை படிக்க தவறியிருந்தால் இத்தேர்தலை பற்றி அறிந்திருக்க முடிந்திருக்காதுதான்.
தேசி ப்ளாக் அவார்ட் பற்றி தமிழ் வலையுலகில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நான் சில விஷயங்களை சொல்ல விரும்பி எழுத ஆரம்பித்து பின்பு சில தனிப்பட்ட காரணங்களால் நிறுத்தி விட்டேன்.
சென்ற வருட அடிப்படையில், இந்த வருடம் **** வரலாம் என்பது என் கணிப்பாக இருந்தது. தனிப்பட்ட முறையில் என் பதிவு போட்டியில் இல்லாமல் இருந்திருந்தால் நான் ****வுக்கு ஓட்டு போட்டிருப்பேன்.
இன்று சன்னாசியின் பதிவில்(7) இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த அறிவிப்பும் வெற்றி பெற்ற முகமூடிக்கு வாழ்த்துக்களும் என்று பார்த்த போது உண்மையிலேயே நம்ப முடியவில்லை.
இத்தேர்தலை பற்றிய அறிமுகம் தந்த பாஸ்டன் பாலாவுக்கும், முடிவு அறிவிப்பினை முந்தித்தந்து முதல் வாழ்த்து அளித்த சன்னாசிக்கும் எந்த காரணத்தினால் எனக்கு ஓட்டு போட்டிருந்தாலும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
*
Indian weblog awards 2005முடிவுகள்
ஓட்டு நிலவரம்
*
IndiBlog தேர்தல் சம்பந்தமாக எனக்கு தெரிந்து வந்த தமிழ்ப்பதிவுகள்
#1. வலைப்பதிவுகள் - 2005 : இண்டிப்ளாக்ஸ் குறித்த பாஸ்டன் பாலாவின் அறிமுகம் மற்றும் பர்சனல் பரிந்துரைகள்
#2. போடுங்கய்யா ஓட்டு... : தேர்தலில் தமிழ்மணம் பங்குபெறுவது குறித்த ஐகாரஸ் பிரகாஷின் அறிமுகம் மற்றும் பிரச்சாரம்
#3. தேர்தல் துவங்கியது.. : தேர்தல் துவங்கியது என்ற ஐகாரஸ் பிரகாஷின் அறிவிப்பு
#4. போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து : ஓட்டு போடுவது எப்படிஎன்பது பற்றி பவுல்ரவிசங்கரின் விளக்க பதிவு
#5. இந்தியப் பதிவுகள் - 2005 : தன்னுடைய ஓட்டு எந்த பதிவுகளுக்குஎன்பது பற்றிய பாஸ்டன் பாலாவின் குறிப்புகள்
#6. தமிழ் வலைப்பதிவுகளும் இண்டிப்ளாக்ஸ் தேர்தலும் : இது பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை என்ற சுந்தரமூர்த்தியின் எண்ணங்கள்
#7. Indibloggies முடிவுகள் : இண்டிப்ளாக்கிஸ் முடிவு குறித்த அறிவிப்பும் வெற்றி பெற்றவருக்கு சன்னாசியின் வாழ்த்தும்
தமிழ்ப்பதிவுகள்
தாம்ப்ராஸ்
சமீப காலத்தில் நடைபெற்ற நகைச்சுவையில் ஒன்று பிராமண சங்க மாநாட்டு கோஷங்கள். இன்னொரு நகைச்சுவை இந்த மாநாடு சம்பந்தமாக - ஒரு சில யோசிக்க வைக்கும் கருத்துக்கள் தவிர்த்த - வலைப்பதிவு சமூகம் எழுப்பும் கோஷங்கள்.
*
பிராமணர் மாநாட்டில் கலந்து கொண்டதால் திராவிடர் கழக பீரங்கியான உண்மை நாளேடுக்கு சாலமன் பாப்பையா பேச்சு வியாபாரியாகிவிட்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட மீனவ பிரதிநிதியும் இவர்களின் விமர்சனத்துக்கு தப்பவில்லை. ஆக இதை ஒரு செய்தியாக இல்லாமல் தனது விமர்சனத்தோடும் சேர்த்து வழங்கியிருக்கும் உண்மையில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை. எப்படியும் உண்மைக்கு பிராமண சங்கத்திடமிருந்து விளக்க கடிதங்களும் வரப்போவதில்லை. ஆக இப்போதைக்கு உண்மை சொல்வதே மெய்...
*
தான் எல்லாரையும் விட நல்லா உரை எழுதுவேன் என்று சுஜாதா சொன்னார் என்று அர்த்தம் தொனிக்க சிலர் சுஜாதா பேச்சுக்கு உரை எழுதுகிறார்கள். சுஜாதா சொன்னது, "நமக்கு தமிழ் தெரியாது என்றார்களே, அவர்களையெல்லாம் விட நான் சிறப்பாக உரை எழுதுகிறேன்" என்று... இது சுஜாதா சிலருக்கு விட்ட "வாய்ஸ்" என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர உவேசாவுடன் எல்லாம் ஒப்பு நோக்க கூடாது.
சினிமா பிரபலங்களையெல்லாம் எதுக்கு முக்கியத்துவம் கொடுத்து தூக்கி விடணும், அவனுங்களுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு என்று முழங்கியவர்கள் எல்லாம் பாலசந்தர், டெல்லி கணேஷ், பிரமிட் நடராஜன் குறித்த பிம்பங்கள் உடைந்ததற்கு ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கு கமல் கலந்து கொண்டிருந்தால் வேண்டுமனால் ஒரு வேளை பிம்பம் உடைந்திருக்கலாம். தமிழ் சினிமாவோடு அவ்வளவாக பரிச்சயமில்லாதவர்களுக்கு பாலசந்தர் பிராமணர் என்று அறிந்ததை விட இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
விவேக்குக்கு கிடைத்த தர்ம அடியோடு பாலசந்தருக்கு கிடைத்த தர்ம அடியை ஒப்பீடு செய்தும் வருத்தப்படுகின்றனர் சிலர். விவேக்கோடு அந்த விழாவில் கலந்து கொண்ட செந்திலுக்கோ, தேவர் இன குட்டி தலைவர் கார்த்திக்கிற்கோ கிடைக்காத எதிர்ப்பு ஏன் விவேக்குக்கு மட்டும் என்று யோசித்தால் அதற்கு விவேக்கின் சாதி காரணமல்ல என்பது புரிய வரும். விஜய் தன் சொத்தை காப்பாற்ற ஜெயலலிதாவை சந்திப்பதற்கும் விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை காப்பாற்ற கருணாநிதியை சந்திப்பதற்கு உள்ள வித்தியாசம்தான். அந்த படத்திற்கு வசனம் நான் எழுதியதில்லை என்று சொல்ல முடியாத அளவில் காமெடி ட்ராக்கை தானே எழுதும் விவேக், படத்துக்கு படம், அடப்பாவிங்களா... இந்த சாதி வெறிய உடவே மாட்டீங்களாடா... பாரதிய பாருங்கடா... அப்துல் கலாம பாருங்கடா என்றெல்லாம் முழங்கிவிட்டு சின்னதாய் ஒரு ப்ரச்னை என்றவுடன் தேவர் இனத்தின் பலம் தெரியுமாடா உங்களுக்கு எனும்போது வரும் விமர்சனம் சாதீய நோக்கில் எழுப்பப்படுவதல்ல...
அமெரிக்காவின் KKK மாதிரி தமிழ்நாட்டில் தம்பிறாஸ் என்கிறார் ஒருவர். தம்பிறாஸ் மட்டும்தான் KKKவோடு ஒப்பு நோக்க உபயோகப்படுமா அல்லது எல்லா சாதி சங்கங்களுமா என்பதை சற்று விளக்கினால் நல்லாயிருக்கும். ஒட்டு மொத்த பிராமணர்களையும் லாரியில் ஏற்றினால் லாரிக்கு 4 பேர் குறைவார்கள் என்கிறார் ஒருவர். இவ்வளவு குறைந்த கூட்டத்தை பார்த்து ஏன் இவ்வளவு எதிர்ப்பு, பயம் என்றெல்லாம் தெரியாததால் இதை நகைச்சுவை துணுக்காக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 30 வருடமாக அடக்கி வைக்கப்பட்டவர்கள் இப்பொழுது சீறியிருக்கிறார்கள் என்பது நகைச்சுவை அல்ல. யார் அடக்கி வைத்திருந்தது... அரசாங்கம் தரும் இட ஒதுக்கீட்டு முறையை அடக்கி வைத்திருப்பது என்பதாக கொண்டால், இட ஒதுக்கீட்டில் பேலன்ஸ் வரும் வரை இது போன்ற மேலும் சில கூட்டங்கள் நடக்கும் என்பதை பார்க்க தயாராக வேண்டியதுதான்.
அஞ்சரை பெட்டி லாஜிக்கில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, எல்லா இடத்திலும் ஏதாவது வேறொன்றை தூவி சமையல் செய்யும் முற்போக்கு சிந்தனாவாதி சங்கத்தை சேர்ந்த நண்பர்களால் சந்தடி சாக்கில் குஷ்பு விவகாரமும் இதிலே இழுக்கப்படுகிறது. அறிவுஜீவிகளான இவர்கள்தான் குஷ்பு விவகாரத்தை ஆதரித்தவர்கள் என்ற பல்லவி காலம் கடந்த மந்திரமாகிவிடும் போலிருக்கிறது. மீண்டும் இதை பற்றி பேசினால் இந்தியா டுடே, கற்பு என்று ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதால் விட்டு விடுதலையாவோம்.
*
இட ஒதுக்கீடு பற்றி மாநாட்டில் பேசியதை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொல்லி தன் கழுத்தை தானே அறுத்துக்கொள்ளாது. வி.பி.சிங்கின் மண்டல் பரிந்துரைகளின் போது வட இந்தியாவில் தீக்குளிப்பு எல்லாம் நிகழ்ந்த போது தமிழகத்தில் நடந்த சம்பவங்களை அசை போட்டால், அரிவாளோடு சங்க கூட்டத்தில் வேண்டுமானால் வலம் வரலாமே தவிர தலைவன் சொல்லிவிட்டானே என்று வெளியில் அரிவாளோடு உலா வருவது எல்லாம் நடைமுறையில் நிகழ வாய்ப்பில்லை.
சரஸ்வதி ராமநாதனின் கலப்பு மணம் பற்றிய பிற்போக்கு சிந்தனை தவிர்த்து பார்த்தால் இதில் பேசிய எல்லாரும் கூட்டத்தை பார்த்தவுடன் வரும் உற்சாகத்தில், மேடையிலும் ஒத்த கூட்டம் உடன் இருக்கும் mob mentalityல் பேசியதை தவிர புதிதாக ஒன்றும் இல்லை... ஆனால் மற்ற சாதி கூட்டத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம், இதில் பேசியவர்கள் சாதாரண குட்டி செயலாளர்கள் அல்ல. மாறுபட்ட சிந்தனை வட்டத்தில் இயங்கும், கருத்துக்களை பரவலாக சமூகத்துக்கு சொல்லும் வாய்ப்பு உள்ள அறிவு ஜீவி கூட்டத்தை சேர்ந்த பலர் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு பேசியிருக்க வேண்டும். முதலில் இந்த கூட்டத்தில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்பதையே யோசித்திருக்க வேண்டும்.
கல்யாணத்துக்கு வரன்கள் பரிமாறிக்கொள்வது, சங்க கட்டிடத்திலோ கல்யாண மண்டபத்திலோ கூடி டீ வடை சாப்பிட்டு சாதியில் இருக்கும் பணக்கார ஆட்களில் சிலரை மைக் கொடுத்து பேசச்செய்து நன்றாக படித்த அந்த சாதி மாணவர்களுக்கு அங்கே ஸ்காலர்ஷிப்போ நோட்டு புத்தகமோ கொடுப்பது என்பதை மீறி கூட்டம் போடுவது, முழக்கம் இடுவது, எதிர்கால திட்டங்கள் பலனளிக்க தன் சாதி ஆள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை கூட்டத்துக்கு தெரியப்படுத்துவது, முக்கியமாக தன் பலத்தை எதிராளிக்கு உணர்த்த தீர்மானம் போடுவது என்று வரும்போது எல்லா சாதி சங்கங்களுமே ஒரே அஜெண்டாவில்தான் வருகின்றன. எல்லா சாதி சங்கங்களையுமே விஷப்பாம்புகள் என்று கருதும் எனக்கு, கட்டுவிரியனுக்கும் நல்ல பாம்புக்கும் வித்தியாசம் இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் அவசியமற்றதாகிறது.
தொடர்புடைய சுட்டிகள் :
பிராமண சாதிச் சங்க மாநாடு
நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்
தமிழ்ப்பதிவுகள்
என் ஓட்டு சஆஅஇ கட்சிக்கே
சும்மா பாலர் பாடத்திலிருந்து குலுக்கி போட்டு எழுதப்பட்டதல்ல இந்த தலைப்பு. சர்வஜன ஆத்மீக அரசியல் இயக்கம் (Estd: தெரியாது. தலைமை அலுவலகம்: கோவை) என்ற கட்சி தேர்தல் அறிவிப்பு கூட வெளியாகாத நிலையில் கோவையில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து இதர தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடிக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஏப்ரல் ஒன்றுக்கு இன்னும் நாள் இருக்கும் நிலையில் இதை தமாஷ் என்று நினைக்க முடியாது. இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் கட்சியை பார்ப்பது அரிது என்பதால் இந்த தேர்தலில் என் ஓட்டை இக்கட்சிக்கே அளிக்க முடிவு செய்திருக்கிறேன். விஜயகாந்து, கார்த்திக்குக்கு இவ்விஷயம் தெரிய வரும்போது இவர்களோடு கூட்டணி வைக்கும் சாத்தியமும் இருப்பதால் இப்பொழுதே என் ஓட்டை ரிசர்வ் செய்து வைக்கிறேன்.
இன்னும் வெளிநாட்டிலிருந்து ஓட்டு போடுவதற்கான மசோதா நிறைவேறவில்லை என்று எனக்கு மெயில் தட்டும் அன்பர்கள் அதற்கு முன்பாக கட்சி அமைப்போடு தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் தேர்தல் கமிஷனில் பதிய வேண்டும் என்று சஆஅஇ கட்சிக்கு ஒரு அஞ்சலை தட்டிவிட்டு, அப்படியே அக்கட்சியில் இருக்கும் 14 தொண்டர்களை பற்றிய விபரங்களையும் அறிந்து எனக்கு தெரியப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். 14 என்ற எண் அக்கட்சி சார்பாக போட்டியிடுபவர்கள் அக்கட்சி தொண்டர்களாகத்தான் இருக்க முடியும் என்ற அனுமானத்தோடு எழுதப்பட்டது, தவறாகவும் இருக்கலாம்.
*
இக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையெனில், கேரக்டர் குறித்து வருங்கால முதல்வர் அண்ணன் விஜயகாந்த் அவர்களாலேயே விசாரிக்கப்பட்டு படிப்பு மற்றும் மாவட்ட தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தும் திறமை ஆகியவற்றை நன்கு கவனித்து பின்பே நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட, நடமாடும் நகைக்கடை புகழ் ஆதிகேசவனின் கூட்டாளி என்றும் தேடப்படும் குற்றவாளி என்றும் காவல்துறை பதிவேடுகளில் உள்ள எம்.கணபதி அவர்களை சார்ந்த தே.மு.தி.கவுக்கே எனது ஓட்டு என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்ப்பதிவுகள்
ஹார்ம்லெஸ் விஜயகாந்த் ? - பாகம் 2
விஜயகாந்த், ஊர் ஊரா போயி 40 எம்.பி.க்களும் வேஸ்ட்ன்னு மக்களிடம் கடுமையாகப் பேசுறது அவரா பேசுறார்னு நான் நெனக்கல... தவிர, அவரைப் பத்தி என்னானு சொல்றது... அவரு ஹார்ம்லெஸ்!
அப்படீன்னு (அரசியல்) கலைஞர் சொல்லிட்டாரு.. சரி வ.முவோட மத்த நடவடிக்கைங்க பத்தி மக்கள் என்ன நெனக்கிறாங்க, மத்த (திரைப்பட) கலைஞர்ங்க என்ன நினைக்கிறாங்கன்னு பாக்குறதும் முக்கியம்ல...
மேல படம் தெரியலையின்னா புதுசா ஒரு விண்டோ ஓப்பன் பண்ணி "ஹார்ம்லெஸ் விஜயகாந்த் பாகம் 1" பாத்து இட்லி வடைய திட்டிட்டி வந்து பாருங்க. லோட் ஆகியிருக்கும்.
தமிழ்ப்பதிவுகள்
புதுவை சட்டமன்ற தேர்தல்
தெலுங்கு, மலையாளம் பேசும் சிறுபான்மை யேனாம், மாஹேயை விட்டால் இனம், நிறம், மொழி, கலாச்சாரம், உணவு பழக்கம், விழாக்கள், பண்டிகைகள், பொழுதுபோக்கு என்பற்றில் வித்தியாசமே இல்லாத புதுவை, காரைக்காலை உள்ளடக்கிய பாண்டிச்சேரியில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளின் தாக்கம் முக்கியமானது.
*
2001 பாண்டிச்சேரி தேர்தலுக்காக பிப்ரவரியில் தே.ஜ.கூவில் இருந்து வெளியே வந்து மார்ச்சில் ஜெயலலிதாவுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். 2001ல் ஒரு வன்னியரை பாண்டிச்சேரியின் முதல்வர் நாற்காலியில் அமர வைப்பேன் என்ற ராமதாஸின் கொள்கை (அ) ஆசையின் படி, பாமக அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் முதல் பாதி ஆட்சியில் பாமக முதல்வரும் அடுத்த பாதி ஆட்சியில் அதிமுக முதல்வருமாக பாண்டியை ஆளுவது என்ற அந்த உடன்படிக்கையோடு தேர்தலை சந்தித்தது அதிமுக கூட்டணி.
காங்/தமாகா/சிபிஐ கூட்டணி 13 (11+2+0)
திமுக/புதுவை மக்கள் காங்/பாஜக/விசி கூட்டணி 12 (7+4+1+0)
அதிமுக/பாமக கூட்டணி 3 (3+0)
மற்றவர் 2
என்றது ரிசல்ட் நிலவரம்.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காரணம் அப்போதைய முதல்வர் சண்முகத்தின் ஆட்சியின் கிராமப்புறங்களின் ஏழை மக்களை மனதில் கொண்டு தீட்டப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறைகள். காங் ஜெயித்தது பெரும்பான்மை கிராமப்புறங்களில், திமுக ஜெயித்தது பெரும்பான்மை நகர்ப்புறத்தில். அதிமுக கூட்டணி பெற்ற செய்தி : முதல் பாதி இரண்டாம் பாதி என்று என்ன, மாதா மாதம் கூட முதல்வர் பதவியை வைத்து ரிலே ரேஸ் ஆட நீங்கள் தயாராகுங்கள், ஆனால் நாங்கள் தயாராக இல்லை. பாமகவுக்கு 0/10, அதிமுகவுக்கு 3/20 என்பது ராமதாஸின் ஜாதி அரசியலை தமிழகத்திலிருந்து பாண்டிக்கு கடத்துவதிலேயோ, அவரின் வன்னிய முதல்வர் கோஷத்தையோ புதுவையின் பெரும்பான்மையினரான வன்னிய இனத்தவர் உட்பட்ட பாண்டிச்சேரி மக்களுக்கு ஏற்புடையதில்லை என்பதன் வெளிப்பாடே... ஜாதி அரசியல் பாண்டியில் எடுபடாது.
*
பாமக சார்பில் பேராசிரியர் ராமதாஸ¤ம் பாஜக சார்பில் லலிதா குமாரமங்கலமும் போட்டியிட்ட 2004 பாராளுமன்ற தேர்தல்தான் புதுவை இந்தியாவோடு இணைந்த பிறகு, பாராளுமன்றத்துக்காக காங்கிரஸ் போட்டியிடாத முதல் தேர்தல். பாஜகவும் பாமகாவும் முதல் முறையாக புதுவையில் போட்டியிட்டன.
இதுவே காங்கிரஸ்/வேறு கட்சி என்றால் கண்டிப்பாக வெற்றி என்று சொல்லிவிடலாம். இப்போது பாமக/பாஜக மோதல் என்பதால் சொல்வது கடினம் என்பதுதான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பான்மையினர் சொன்னது. பாஜகாவே தங்களின் வெற்றியின் சாதகமாக இதைத்தான் குறிப்பிட்டது. அப்போது காங்கிரஸ¤க்கு இத்தொகுதியை கொடுக்காத ஏமாற்றம் தந்த சோர்வில் இருந்த தொண்டர்களுக்கு முதல்வர் ரங்கசாமியும் பிரதேச காங் தலைவர் நாராயணசாமியும், இது காங்-பாஜக பலப்பரிட்சை என்று சொல்லி அவர்களுக்கு உற்சாகம் தர ஓவர்டைம் வேலை பார்த்தனர்.
தேசிய அளவில் எந்த அலையும் இல்லாத நிலையில், தமிழகத்து மாநில பிரச்னைகளான 2 லட்சம் அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அரசு ஒடுக்கியது, 3 லட்சம் போக்குவரத்து ஊழியர்களின் சலுகைகளை பறித்தது, குடிநீர் பஞ்சம், காவேரி பிரச்னையை அரசு கையாண்ட விதம் போன்ற விஷயங்களில் மக்களுக்கு அரசு மேல் இருந்த கோபத்தை பலமாக்கி திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, சிபிஐ, சிபிஐ(மா), முஸ்லீம் லீக் என்ற மாபெரும் கூட்டணியோடு தேர்தலை சந்தித்த ஜ.மு.கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணியை தேர்தல் பார்வையாளர்களே எதிர்பாராத வகையில் தமிழகம்-புதுவையில் துடைத்து எறிந்தது.
போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது ஜ.மு.கூ. புதுவையில் பேராசிரியர் ராமதாஸ் வெற்றி பெற்றார்.
காங். செயலாளர் நாராயணசாமி புதுவை மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த திமுக தலைமையிலான ஜ.மு.கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உறையில் பாமக பிரமுகர் எம். ராமதாஸின் வெற்றியை ஆளும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு மக்கள் தந்த தீர்ப்பாக எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
*
ஒருவரின் கல்வியறிவு, ஆளுமைத்தன்மை, கடந்து வந்த பாதை, மக்கள் செல்வாக்கு போன்ற விஷயங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒருவரின் ஜாதி அல்லது மதம் அடிப்படையில் முதல்வராக்குவோம் பிரதமராக்குவோம் என்ற கோஷம் ஆபாசமானது. ஆனால் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் ஜாதி முதல்வர் கோஷத்துடன் புதுவையை அணுக ராமதாஸ் முயற்சிக்கலாம். ஆனால் போன முறை போல், வெளிப்படையாக அறிவித்து பின்பு பாதி பிரச்சாரத்தில் மக்கள் மனநிலை அறிந்து அடக்கி வாசித்தது போல் அல்லாமல், இந்த முறை வேறு யுக்திகளை மேற்கொள்ளலாம். தேர்தலுக்கு முன் கூட்டணி எப்படி அமைந்தாலும், தேர்தலுக்கு அப்புறம் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில், தமிழகத்திற்கு இத்தனை எம்.எல்.ஏக்களுக்கு பதில் புதுவையில் முதல்வர் பதவி என்ற பேரம் தொடங்கும். அப்படி ஒரு சூழ்நிலையில், புதுவையில் திமுக/அதிமுக அல்லாத ஏதாவது ஒரு கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுமே பேரத்துக்கு படியும் என்பதுதான் உண்மை. இந்த பேரத்தில் உடன்பாடு இல்லையெனில் ஏதாவது ஒரு கூட்டணிக்கு தெளிவான அறுதிப்பெரும்பான்மை கொடுப்பதே புதுவை மக்கள் முடிவாக இருக்க வேண்டும்.
*
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்புதான். ஆனால் எந்த கூட்டணியோடு தேர்தலை சந்தித்தனரோ அதே கூட்டணியோடுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விடுத்து இந்திய ஜனநாயக வழிமுறைகளில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி கூண்டோடு கூடு தாவி குதிரை பேர ஊழலில் மக்களை கண்கட்டி ஏமாற்றுவது என்ற சமுதாயத்தை பீடித்த நோய் முற்றிப்போய்விட்டது.
தேர்தலில் முடிவு தெரிந்ததற்கு பிறகு கூட்டணி தாவுவதை போன்ற மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம் வேறொன்றுமில்லை. ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நம்பி ஓட்டு போடும் ஜனங்களை ஜனநாயக விதிமுறைகளில் இடம் இருக்கிறது என்று காரணம் காட்டி இன்னொரு கட்சி ஆட்சி அமைக்க வைக்கும் அவலத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்க்க வைக்கும் அவலம் நிறுத்தப்பட வேண்டும். இதற்கான சட்ட வரைவை கொண்டு வர எந்த கட்சிக்கும் ஆண்மை இருக்காது என்பதுதான் நிதர்சனம்.
அரசியலில் நீடித்து நிலைத்திருக்க இந்த தந்திரங்கள் தேவைதான், இல்லையெனில் காணாமல் போய்விடுவர் என்று சப்பை கட்டுவது சரியானதல்ல.. இது சரிதான் என்று சொல்ல ஆரம்பிக்கும் சமுதாயத்தில்
சாமியாராக நீடித்து இருக்க பாலியல் வன்முறை மற்றும் கொலை போன்ற தந்திரங்கள் தேவைதான்...
நிதி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு 30 சதவீத வட்டி என்ற கவர்ச்சியில் மக்களின் பணத்தை ஏப்பமிடும் தந்திரம் தேவைதான்...
குடும்பத்தை வாழவைக்க கன்னம் வைத்து திருடுவது என்ற தந்திரம் தேவைதான்...
ஒரு காரியத்தை செவ்வனே செய்து முடிக்க இலஞ்சம் என்று கொச்சைபடுத்தாமல் அன்பளிப்பு என்ற தந்திரம் தேவைதான்...
போன்ற கோஷங்களுக்கும் அர்த்தம் பிறக்க ஆரம்பித்துவிடும்.
தமிழ்ப்பதிவுகள்

