இலக்கிய சலிப்பும் கருத்துப் பதிவும்
நம் குற்றிலக்கியவாதிகள் சமுதாயத்தின் மீது சலிப்பும் கோபமும் கொள்ளும் சமயத்தில் எல்லாம் கர்த்தாக்களாக மாறி கருத்து உதிர்ப்பது சகஜம்தான் என்றாலும் சமீபகாலத்தில் இது அதிகரித்து வருகிறதோ என்று எனக்கு ஒரு பிரமை. இவர்களுடைய லேட்டஸ்ட் கோபம், ப்ளாக்கர்கள் மீது.
ப்ளாக் என்பது ஒரு பவர்புல் மீடியா. இதை தங்களுடைய டைரி குறிப்பு என்பதாக தமிழ் சமுதாயம் நினைத்து தங்களுக்கு தோன்றியதையெல்லாம் எழுதி வருகிறது. ப்ளாக் என்றால் இதைத்தான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற அளவில் கூட கட்டுப்பாடும் நெறிமுறையும் இல்லாத சமூகம் எப்போது முன்னேற போகிறது. சமுதாயத்தை புரட்டிப்போடும் வல்லமை கொண்ட ப்ளாக்கை போயும் போயும் குட்டி கருத்து, வெட்டி கருத்தெல்லாம் சொல்லி வீணடிக்கிறார்களே என்பது குற்றிலக்கியவாதிகளின் கோபம்.
சமூக அவலங்களை கவிதை எழுதுவதன் மூலம்தான் தீர்க்க வேண்டும், தீர்க்க முடியும் என்பது குற்றிக்க்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. உரைநடையோ, கட்டுரையோ, பேச்சுத்தமிழிலோ எழுதுவது சமூகத்துக்கு எந்த விதத்திலும் பயனாகாது என்பது தீர்க்கதரிசனம். எழுதினால் கண்டிப்பாக அது சமூகத்துக்கு பயனாகத்தான் இருக்க வேண்டும், சும்மாசுக்கெல்லாம் எழுதக்கூடாது என்பது அவர்களின் தார்மீக கோட்பாடு.
படைப்பாளியை மதிக்காத சமூகம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. இனியாவது அவர்களின் அறிவுரையை கேட்டு உருப்பட வழிகாண வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் இனி என் பதிவுகள் அனைத்திலும் ஒரு (குட்டி) கவிதையாவது எழுதிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன் (அவசரத்தில் முடி எடுத்திருக்கிறேன் என்று படித்துவிட்டதால் கீழே இன்னொரு உபரி கருத்து பதிவு). இனி கவிதை...
வாழ்வியல் தீர்வு
ப்ளாக்கரை
பெட்ரோலுக்கு
பத்த கொடுப்போம்
தீக்குச்சிக்கு தின்ன கொடுப்போம்னு நான் எழுதிய ஒரிஜினல் கவிதை காப்பிரைட் ப்ரச்னையில் சிக்கிக்கிடப்பதால் தற்காலிகமாக மாற்று வார்த்தைகள். இதில் பெட்ரோல் என்பதற்கு பதிலா தூய தமிழ்ல சீமெண்ணெய்னு தான் வந்திருக்கணும். ஆனா தளை தட்டுகிறது. தமிழ் கவிதைல த
*
சமுதாய கடமை முடிந்ததால் இனி கருத்து பதிவு.
பாரதிராஜா பட க்ளைமேக்ஸ் போல ஒரு நீதியோ கருத்தோ இல்லாம ஏதாவது குறிப்பபலுணர்த்தும் படங்கள பாத்தா நான் ரொம்பத்தான் கொழம்பி போயிடறது. அப்படித்தான் கீழ்க்கண்ட படங்கள வலையில பாத்தப்பவும் எனக்கு "தலை"யும் புரியல வாலும் புரியல. ஆனா ரூம்மேட் கிட்ட காமிச்சப்ப அவன் 5 நிமிசம் மோட்டுவளைய பாத்தான், 2 நிமிசம் சிரிச்சான். அப்புறம் திருப்பியும் மோட்டுவளை சிரிப்புன்னு கொஞ்ச நேரம் பண்ணிட்டு கிடு கிடுன்னு ஒரு கவிதை எழுதிட்டான். (அவன் அடிப்படையில ஒரு கவிஞன், பிறப்பிலேயே கவிஞன்னு தன்ன சொல்லிக்கிறதுண்டு. எனக்குத்தான் எப்படின்னு புரியறதில்ல) ஆனா கடைசி வரைக்கும் இந்த ரெண்டு படத்துக்கும் என்ன தொடர்பு, என்ன கவிதை எழுதினான்னு ஒன்னும் சொல்ல மாட்டேன்னுட்டான். அதுனால உங்ககிட்ட ஒரு உதவி. தயவு செஞ்சு இத பாத்தா உங்களுக்கு என்னா தோணுதுன்னு சொல்லுங்க...

அப்படியே ஒரு ஓட்டெடுப்பு. இத மட்டும் ஒரு பதிவா போட்டா அந்த பதிவுக்கு எந்த தலைப்பு பொருத்தமா இருக்கும் (மல்டிபிள் சாய்ஸ் கேள்விதான் பூந்து விளையாடலாம்)
டிஸ்க்ளெய்மர் : this weblog entry is a work of fiction. any actual resemblance to real life characters or events is purely unintentional. © mugamoodi
மக்கள்ஸ் கருத்து ::
//அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே...
அண்ணாசாமி: அதுவா... எனக்கு பிடிச்ச கருத்த சொல்றதுக்கு உனக்கு சுதந்திரம் உண்டுன்னு அர்த்தம்.//
என்ற அடிப்படையில் உமது கருத்தை நாம் மதிக்கிறோம் :-)
என்னதான் சிற்றோ குற்றோ இலக்கியவாதி இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் நீங்கள் உண்மையில் ஒரு முக்கியமான லகலகலகலகவாதிதான், அடச்சே - கலகவாதிதானென்பதை ஒப்புக்கொள்கிறேன்!! ;-)
எளக்கியத்தின் மீது கோபமா? எளக்கியந்தான் வாழ்க்கைனு இருக்கற நம்ம போல ஆட்கள குத்துறது நல்லா இல்ல சொல்லிபுட்டேன்..
நம்ம கவித...
லிஸாவுக்கு டிட்டோ ஜாஸ் போனதோ,
பார்ட்டின் எண்ணெய் குழாய் தான் வெடித்ததோ,
ஹோமரின் பெயர் தான் மறந்து போனதோ,
கம்பிளுக்கு குடிதான் மறந்ததோ,
மோவுக்கு குடித்தொட்டிதான் போனதோ!!!
சுட்டது யார்? யார்? யார்?
எரிகிறதை சுட்டது யார்? யார்? யார்?
அடாடா,
ரெண்டுமே ஒரே ஆளுன்னு தெரியாம அவசரத்துல் ஆண் பெண்னு கவித வுட்டுட்டேனே!
இருந்தாலும், பொருத்தமாத்தான் இருக்குதுன்னு நினைக்கிறேன்!
இளங்கவிகள ஆதரிக்கும் பமக-விற்கு நன்றீ!
இலக்கியவாதிகள் மயிர்களாகக் கருதும் வலைப்பதிவுகளைக் களைந்தால் மொட்டைதான் மிஞ்சும் எனக் காட்டியிருக்கிறீர்கள்.
டெமி... நல்ல மாடல்.
ஆஸ்டின் குஸ்சர் ... கெட்ட பையன்
//லிஸாவுக்கு டிட்டோ ஜாஸ் போனதோ,
பார்ட்டின் எண்ணெய் குழாய் தான் வெடித்ததோ,
//
யாருய்யா நம்மள பத்தி இலக்கியம் பேசறது ?
எச்சரிக்கை:
புயல் சின்னம் உருவாகி உள்ளது!
எந்த நேரமும் கரையைக் கடக்கலாம்!!
விளைவுகளின் விபரீதங்களைச் சந்திக்கத் தயாராக இருக்கவும்!!!
====================
********************
====================
குள்ள நரிகளின்
கொட்டம் அடக்க
புறப்படுகிறது ஒரு குட்டிச்சாத்தான்
சின்னவன், காப்பிரைட்டாவது அப்படியே வெளியாகுமா அல்லது சில ட்விஸ்டுகளுடனா?
*
அனானி, விளக்கமா சொல்ல முடியாது. ஒரு ஸ்மைலி போட்டு எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்
*
ஒ என்பதன் விளக்கம் யாதோ பாஸ்
*
சன்னாசி, நன்றி
*
இராம்ஸ், பதிவுல கவித எழுதவே மூச்சு முட்டுது. இதுல பின்னூட்டத்திலயே கவிதயா? குற்றி என்பதிலிருந்து பேரி என்பதாக ப்ரமோஷன் அடைய வாழ்த்து
*
ஞானபீடம், குட்டிச்சாத்தான் என்பது மட்டும்தான் சரி
*
சிறில், உண்மையிலேயே இப்பதிவிலிருந்தும் இந்த மாதிரி ஒரு அருமையான கருத்தை உரிப்பது என்பது நினைத்தே பார்க்க முடியாதது. அதிலும் உங்களுடையது நிஜமாகவே குற்றிகள் சிந்திக்க வேண்டிய கருத்து.
முகமூடி
ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்கு குசும்பு ஜாஸ்தி:-)
எனக்கும் புரியாத சங்கதி இதுதான் - என் டைரியில இதைத்தான் எழுதணும்னு யாராவது வற்புறுத்தினா முட்டாள்தனமாத்தானே இருக்கும்? பிடிச்சதைத் தேர்ந்தெடுத்துப் படிக்க அவங்கவங்களுக்கு புத்தி இருக்கில்லையோ?
வரவர அரசியல்வாதிகளைக் கண்டு ஒதுங்கறமாதிரி இலக்கியவாதிகளைக் கண்டும் ஒதுங்கவேண்டிய நிலைமை வந்துருமோன்னு இருக்கு.
//வரவர அரசியல்வாதிகளைக் கண்டு ஒதுங்கறமாதிரி இலக்கியவாதிகளைக் கண்டும் ஒதுங்கவேண்டிய நிலைமை வந்துருமோன்னு இருக்கு.//
என்னமோ, நிலா நீங்க சொல்வது கொஞ்சமும் சரியில்லை :-). அ.வாதிகளும், இ.வாதிகளும் உதிர்க்கும் முத்துக்களுக்கு இணையாய்
வடிவேலுவும், விவேக்கும் இன்ன பிற காமெடியன்களும் ஈடு இணையாக முடியுமா? வாழ்க்கையில இதெல்லாம் இல்லாட்டி ரசிக்காது.
:-))))))))))))))))))))))))))))))))
நிலா, உஷா சொல்ற மாதிரி குற்றிலக்கியவாதிகளின் சலிப்பும் கோபமும்தான் இ-இலக்கிய உலகில் கவுண்டமணி செந்தில் இல்லாத குறையை நீக்குவது. ரசிப்போம். இன்னும் அவர்கள் போக வேண்டிய தூரம் ரொம்ம்ம்ப அதிகம். ;))) (வர வர நானும் குற்றிலக்கியவாதி ஆயிடுவேன் போலருக்கேப்பா)
*
தெருத்தொண்டன், // [கலக(ல)] // பாத்தீங்களா உங்களுக்கு மட்டும்தானெ நான் டிஸ்க்ளெய்மரே போட்டேன். அத மட்டும் மிஸ் பண்ணிட்டு இப்படி சொல்றீங்களே... இது வெறும் லகலக பதிவு மட்டுமே ;))
இந்தக் கலகத்தோட மூலத்த (link) யாராவது தெரியப்படுத்துவீங்களா? :) (ரெண்டு நாளா ஊர்ல இல்ல, context புரிஞ்சா நல்லா இருக்கும்)
நீங்க மல்டிபிள் சாய்ஸ் கேள்வி கேட்டீங்க, நான் மல்டிபிள் சாய்ஸ் கவிதை கொடுக்கிறேன், புடிச்சுக்கோங்க!
1. வாரமலர் பின் அட்டைக் கவிதை -
அவனுக்கு இல்லாதது
அவளுக்கு
இருந்தது
-- முடி!!
2. ஏங்கித் தவிக்கும் காதலன் கவிதை (விகடன்? அவள் விகடன்?)
அடியே.. உன் அளவுக்கு
என்னால்
வளர்க்க முடியாததால்
வழித்தேனடி!
3. மீட்டருக்கு அடங்கிய வைர வரி
கார்மேகக் கூந்தலிலே நான் ஆட வந்தேன்..
என் கூந்தல் மொத்தமுமே கானாமல் போனேன்..
4. பின் நியாண்டர்தாலிய இருத்தலியல் சாரா நவீனத்துவக்கவிதை
ஒரு யுகமோ பார்த்திருந்தேன்..
யாரேனும் ஒருவர் தலையில்
உள்ள முடிகளை எண்ணியிருக்ககூடும்..
பின்னொரு நாளில் அதைக் கணக்கிடும்
பொறுமை எனக்கு வாய்க்கக்கூடுமோ?
மழித்தபோது கொட்டியது
குப்பை..
என் மனத்திலிருந்தும்..
VoW,
ரெண்டு நாள்தான ஊர்ல இல்ல... இது அதையும் தாண்டி புனிதமானது. இரவில் மொட்டை மாடியில் படுத்து மோட்டுவளையை வெறித்தால் மூலம் (link) புரிபடலாம்.
*
// உன் அளவுக்கு
என்னால்
வளர்க்க முடியாததால்
வழித்தேனடி! //
அது எதுக்கு அப்ப மட்டும் செய்யணும்கிறதுதான் கேள்வியே.
என்ன பெனாத்தலார், பேரிலக்கியவாதி ஆக ஆச வந்துடிச்சா.. பின்னூட்டத்தில எல்லாம் கவித எழுதறீங்க?
சரி, உங்க கருத்து ??