<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

புது வியாதியும் ப்ரிஸ்கிரிப்ஷனும்


டாக்டர், கொஞ்ச நாளாவே இவன் போக்கு சரியில்ல

என்ன பண்ணுது?

எதுக்கெடுத்தாலும் கோபப்படுறான், சம்பந்தமே இல்லாம அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சி போட்டு புரியாத பாஷையில புது புது வார்த்தையெல்லாம் சொல்றான்.

archerpelican.typepad.comசரி இருங்க ப்ளட் பிரஷர் செக்-அப் பண்ணுவோம்...

என்னங்க இது பி.பி லெவல் ஏகத்துக்கு எகிறி கிடக்கு. இந்த சின்ன வயசுல இவ்ளோ ரீடிங் நல்லதில்லையே. என்ன அவன எதுக்குனா திட்டினீங்களா?
இல்ல டாக்டர்.

பொம்பளைங்க ஹீரோ கம் வில்லனா நடிக்கிற பழிவாங்கற திகில் கேபிள் நாடகங்கள ரொம்ப பாக்குறாரா?
இல்ல டாக்டர்.

மாயாஜாலம்ன்ற பேருல வர்ற லூஸ¤ நாடகங்க எதுனா விடாம பாக்குறாரா?
இல்ல டாக்டர்.

எய்ட்ஸ¤க்கு மருந்து கண்டுபிடிச்சிட்டேன்னு சொல்லி கன்னா பின்னான்னு ஐ.நா. சபையில இருந்து ஐரோப்பா வரைக்கும் இருக்கிற எல்லா சயன்டிஸ்டுங்களையும் திட்டற சேலம் டாக்டர் பேட்டிய உன்னிப்பா கவனிக்கிறாரா?
இல்ல டாக்டர்.

சமீபத்துல ஏர் இண்டியாவில் இண்டர்நேஷனல் பயணம் எதுனா போனாரா?
இல்ல டாக்டர்.

தமிழக அரசியலை ரொம்ப உன்னிப்பாக கவனிக்கிறாரா?
அய்யோ இல்லையே.

என்னங்க எதுக்கு எடுத்தாலும் இல்லங்கறீங்க... நோயாதாரம் என்னான்னே தெரியலயே. சரி , ஒரு நாலு நாளக்கி அவர க்ளோஸா கவனிச்சாதான் ஒரு முடிவுக்கு வர முடியும். அவரோட இயல்புல எந்த மாற்றமும் இல்லாம அவர் பாட்டுக்கு இருக்கட்டும். மிச்சத்த நான் பாத்துக்கறேன். ஒன்னும் கவல படாதீங்க. குணப்படுத்திடலாம்.

நாலு நாள் கழித்து ப்ரிஸ்கிரிப்ஷன் சொன்னது : பீடித்த இரண்டே மாதத்தில் இரண்டு யுகங்களுக்கான எஃபக்டை தரும் இந்த வியாதியின் பெயர் ப்ளாகோஃப்ரீனியா. குறுகிய கால நிவாரணம், நோயாளி தமிழ் வலைப்பூக்கள் படிப்பதை ஒரு மண்டலம் தவிர்ப்பது. நிரந்தர நிவாரணம், அதை நிரந்தரமாக செய்வது.š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


Avoid blogs, they are endless ego trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big.
 இந்த புது நிவாரணியை பதிவு செய்த வலைப்பூ உல்க மருத்துவர் அய்யா அவர்களே,
இந்த பதிவுக்கு மிக்க நன்னி ( ஜன்னி இல்லைங்க . நன்னி ! )
 Avoid blogs, they are endless ego trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big.
 Is it any hint of something that is going to happen Mugamoodi?
 புரிந்துகொள்ள முடிகிறது நண்பா!
 முகமூடி,
நல்லாயிருக்கு.

கடைசில ஒரு வரி சேர்த்துருக்கலாம்.

"அதிலும் சிறந்த தமிழ் வலைப்பதிவாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முகமூடி வலைப்பதிவு பக்கம் போகாமலிருப்பது மிகவும் நல்லது"
 அய்யய்யோ...நீங்களும் பொட்டியக் கட்டப் போறீங்களா???
 தெருமுக்கு மேடையில நின்னுக்கிட்டு புஷ்ஷே உன் ஏகாபத்தியத்தை எதிர்க்கிறேன் என்று குரல் விடும் அழகில் வலைப்பதிவுகள் வாழ்வை சுவையாக்கிக் கொண்டு இருக்கின்றன. நேரம் கிடைக்கும் பொழுது அங்க இங்க மேஞ்சிட்டுப் போவீங்களா அதவிட்டுட்டு, இதுக்கெல்லாம் பிபியை ஏற்றிக்கிட்டு தூக்கம் வராம தவிச்சா அது யாரு தப்பு?
 பதிவில் சில வரிகள் படிக்கத் தொடங்கியவுடன் தெரிந்து விட்டது, நீங்கள் எத்திசையில் முடிக்கப் போகிறீர்கள் என்பது.
 If this means the end of this blog once and for all then it is most welcome.
 Avoid blogs, they are endless ego trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big.
Thus spaketh Sujatha whose ego trips are too numerous to mention.
He thinks too mich of himself.
 சிறுசு. நீங்க மட்டும்தான் என் பட்டத்த மறக்காம இருக்கீங்க. நன்னி.

hint எல்லாம் ஒன்னும் இல்ல சதீஷ். எல்லாம் காலமாற்றம்தான்.

ஞானபீடம், ப்ளாகோ·ப்ரீனியா வர வழியில்லாத வகையில் பதிவு எழுதும் உம்மை வலையுலக டாக்டர்கள் சங்கம் பாராட்டுகிறது

ஜோ ;-)))

சுதர்சன், ப்ரிஸ்கிரிப்ஷன்ல படிக்க கூடாதுன்னுதான் சொல்லியிருக்காரே தவிர எழுதக்கூடாதுன்னு இல்லியே ;)
(ஸாரி அனானி #2. உங்க welcome வேஸ்டா போச்சி)

ஈகோ ட்ரிப் அனோனிஸ், தங்கள் கருத்துக்கு நன்றி.

உஷா, பிபி படிக்கிற எனக்கு இல்லீங்க. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சி போட்டு சிந்திக்கிறாங்களே, அவங்களுக்கு (அத படிக்கிற நமக்கும் கொஞ்சம் போல பிபி எகிறும்னு வைங்க)... நீங்க புஷ்ஷ கேள்வி கேக்குற பொதுக்கூட்ட புத்திய பத்தி சொல்றீங்க... ஆனா நிலைமை அத விட மோசம்... கருத்து சொல்ற ஆளு அதுக்கு மாத்தா நடக்குறாரான்னு பண்ண விமர்சனமெல்லாம் போயி, அவரு அன்னிக்கி தாடி வச்சிருந்தாரா, இன்னிக்கி ஏன் மொட்ட அடிச்சிருக்காருன்னு எல்லாம் .யிராய்ராய்ச்சி பண்ற அளவு ஆயிடுச்சி நிலைமை...

தெருத்தொண்டன், "வழக்கமான பதிவு" காப்பிரைட் வச்சிருக்கும் உங்களுக்கு புரியாமலா.. அதுல விஷயம் என்னன்னா, இந்த பதிவுக்கே உங்க எஸ்.ரா பதிவில வந்த சில பின்னூட்டங்கள்தான் காரணம். நானும் முழுசா பின்னூட்டத்த எல்லாம் படிச்சிடலாம்னு எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஆனா ஒரு கட்டத்துக்கு மேல தாண்ட முடியல. யப்பா, என்னமா ஆராய்ச்சி பண்றாங்கடா சாமின்னு ஆயிப்போச்சி. ஆனாலும் உங்களுக்கு அசாத்திய பொறுமை, விபரமா பதில் சொல்லிகிட்டு இருந்தீங்க. நான் கூட சுடச்சுட ஒரு பதில் எழுதலாம்னு ஆரம்பிச்சேன்... ஆனா ஏற்கனவே என்ன சொல்றீங்கன்னு புரியாம ஐஸ்லாந்து அரசியல தவிர மத்த எல்லாத்தையும் முடிச்சி போட்டு தாக்கரவங்க நடுவுல நம்ம வேற பூந்தா அப்புறம் பதிவு திசை மாறி வேற எங்கயாவது போயிடும். அதான் (என்) உடலும் உள்ளமும் மகிழ இந்த பதிவு.
 >> நோயாளி தமிழ் வலைப்பூக்கள் படிப்பதை ஒரு மண்டலம் தவிர்ப்பது. நிரந்தர நிவாரணம், அதை நிரந்தரமாக செய்வது. >>

நல்லாக் கவனிச்சீங்கன்னா முகமூடியார் படிக்கிரவுங்களுக்கு மட்டும்தேன் இத பிரிஸ்கிரைப் பண்றாரு எழுதறவுகளுக்கு இல்லன்னு தோணுது.
 அட! Refresh பண்ணாமல் பின்னூட்டம் இட்டபிறகு - முகமூடியாரும் நான் நினைத்தது போல சொல்லியிருக்கார்!
 neo. எப்படியோ ஒரே ஒரே ஒரே ஒரு விஷயத்தையாவது உங்கள மாதிரியே நினைக்க முடிஞ்சிருக்கு எனக்கு ;-))
 >> உடலும் உள்ளமும் மகிழ இந்த பதிவு. >>

ஹாஹா! அப்பாடா! எத்தனை நாளா உள்ளமும் உடலும் 'சோர்ந்திருந்தது'?!

சிறந்த வலைப்பதிவாளர் விருது வாங்கியத விட இப்பம் இன்னுஞ் சந்தோசமா இருக்காப்புல தெரியுது! ;)

வாழ்க! :)
 முகமூடி
நீங்களே டாக்டர், நீங்களே நோயாளினு டபுள் ஆக்டா? :-)))

டயாக்னோஸிஸ் நல்லாதான் இருக்கு.
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link