<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

புனுகு பூசாத நீதிபத்திகள்


உங்கள் பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கை கவனமாக பரிசீலித்ததில், குற்றம் சாட்டப்பட்டவரை விட நீங்கள்தான் பெரிய குற்றவாளி என்ற முடிவுக்கு பத்து நீதிபதிகள் அடங்கிய இந்த பெஞ்ச் வந்திருக்கிறது.

img crtsy: emp.byui.eduஎம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தற்போது விஜய் வரை, பெண்கள் எப்படி உடை உடுத்தலாம் எப்படி உடுத்தக்கூடாது என்று காலம் காலமாக திரையில் செய்யப்பட்ட பிரச்சாரத்தையும் மீறி நீங்கள் கவர்ச்சியாக உடையணிந்து சென்றிருக்கீறீர்கள். டீ.சர்ட் = பனியன் என்றும் ஷார்ட்ஸ் = ஜட்டி எனவும் அஸினே உணர்ந்து திருந்தி புடவைக்கு மாறிவிட்ட நிலையில் நீங்கள் டீ.சர்ட் ஷார்ட்ஸோடு வீதிகளில் வலம் வந்திருக்கிறீர்கள்.

பாலியல் உணர்ச்சி என்பது இயற்கையானது. உங்கள் உடையால் தூண்டப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஓரிருமுறை கையை பிடித்து இழுத்தபோது நீங்கள் கத்தி கூச்சல் போட்டிருக்கிறீர்கள். கூச்சல் போடுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் கோபத்தை மேலும் கிளறக்கூடும் என்பதை அறிந்தும் நீங்கள் மௌனமாகவில்லை. ஆக உங்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கு உங்கள் கூச்சலே முக்கிய காரணம் என்பது கனம் நீதிபதிகளின் முடிவு.

இப்போது உங்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்முறையில் சுகம் கண்ட குற்றம் சாட்டப்பட்டவன், அதை ஒழுங்காக உடையணிந்தவர்களிடமும் நிகழ்த்துகிறான். ஆக உங்கள் இருப்பு நம் சமுதாயத்தையே பாதுகாப்பற்றதாக்கிவிட்டது என்பதை கருத்தில் கொண்டு, இனியாவது ஒழுங்காக திருந்தி வாழ முயற்சிக்குமாறு சமுதாயத்தின் பால் கொண்ட அக்கரையால் இந்த கோர்ட் பரிந்துரை செய்கிறது. when rape is inevitable, lie back and enjoy என்ற பொன்மொழியை உங்களுக்கு இந்த கோர்ட் இலவசமாக வழங்குகிறது. முடியாது எனும்பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தப்பில்லை என்ற கோட்பாட்டை கோடு காண்பிக்க இந்த கோர்ட் விரும்புகிறது.

இப்படி சொல்வதனால் பாலியல் பலாத்காரம் செய்தவரின் நடவடிக்கையில் இந்த கோர்டுக்கு உடன்பாடு என்று அர்த்தமில்லை. அவரையும் இந்த பெஞ்ச் கண்டிக்கிறது.

disclaimer : this weblog entry is a work of fiction. any actual resemblance to real life events is purely unintentional. © mugamoodi



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


******மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாதீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்... கவலை விடுங்கள்.
# பொச்டெட் ப்ய் முகமூடி : Mஅய் 25, 2005 10:43 PM **********

இதத்தான் புணுகு பூசிய நீதிபத்தியே நாங்களும் சொல்றோம். நாக்கு நரம்பில்லாதது., தட்டச்சு செய்யும் கையும் அப்படியா????!!!!
 



somebody suddenly start writing in support of Gotseys and later told that they are not justifying him.
 



வணக்கம் அப்டிபோடு. நான் சொன்ன ஆலோசனைக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் தீர்ப்புகளுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் + கிளைக்கேள்விகள், பழைய சம்பவங்கள், செலக்டிவ் பாதிப்புகள், எல்லாவற்றிற்கும் விளக்கம் என கோனார் நோட்ஸ் போட அலுப்பாக உள்ளது. அவசியம் என்று என் சிறு மூளைக்கு தோன்றினால் அவசியம் எழுதுகிறேன்.

*

Anonymous, WHO? and why here?
 



பதிவு கண்டு ஒருகணம் துணுக்குற்றேன். Disc-lamer கண்டு தெளிந்தேன். இந்தப் பதிவிலுள்ள கருத்துக்கள் ஆழமானவை. அதற்கு நன்றி. ஆபாசங்கள் கண்டிக்கப்படவேண்டியவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை - சிந்தனை ரீதியிலான, வார்த்தைகள் வழி வராத, 'இவர் யார்' லிங்குசாமிகளின் நளினகுமார நாலுமுழ வேட்டி சுற்றிய டால்டா டப்பா ஆபாசங்கள் கூட. 'தவறான மரத்தைப்பார்த்துக்' குரைப்பதை புரோக்களோ 'my posse' பஞ்சாமிர்தங்களோ தயைகூர்ந்து மன்னித்தருள்வார்களாக. ஒருவேளை அதெல்லாம் சிவில் கோர்ட்டு கேஸோ என்னவோ?

:-) போல்டில் போட்டாயிற்று. ப்ளிங்ப்ளிங் என்று சவுண்டு வருமாறு கொடுக்க சுட்டி தேடினால் கிடைக்கவில்லை.

Shoot myself in the foot எல்ப்பி தட்டை ரிப்பீட்டேய் போட்டு வேறொரு வகையில் ஓடவிட்டதற்கு நன்றி.

மல்டிலேயர் பொடிமட்டையைப் பிரித்தாகிவிட்டது; இனி நஸ்யத்தை சர்ரென்று உள்ளிழுக்கவேண்டியதுதான் பாக்கி. ஒரு நாலு ஹச்சு போட்டால் தீர்ந்தது பிரச்னை. போடாத கோனார் நோட்ஸுக்கே அலுப்பென்றால், போட்டுக் களைத்த எத்தனை பேர் எங்கே போய் நியாயம் கேட்பது முகமூடி அவர்களே?

பார்வைகள் பலவிதம் என்ற தங்கள் பொன்மொழியைச் சுட்டிக்காட்டத் தேடினால் லிங்கு சிக்கவில்லை; பொறுத்தருள்க. நன்றி.
 



தல
என்னய்யா நடக்குது ? எனக்கு ஏதோ புரியலை ...
 



//நான் சொன்ன ஆலோசனைக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் தீர்ப்புகளுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் + கிளைக்கேள்விகள், பழைய சம்பவங்கள், செலக்டிவ் பாதிப்புகள், எல்லாவற்றிற்கும் விளக்கம் என கோனார் நோட்ஸ் போட அலுப்பாக உள்ளது. //

அப்டிப்போடு சாமி., நல்ல காலம் விடுவிடுன்னு பதிவெழுதறதுக்கு அலுப்பில்லாம இருந்துச்சே!! :-))
 



அப்பிடிப்போடு அவர்களே,
மே 25, 2005-க்குப் பிறகு காவிரியில் நிறைய தண்ணீர் ஓடி விட்டது. அவர் அப்போது சொன்னது அவ்வளவு சரியில்லையோ என்ற முடிவுக்கு வந்து விட்டார், ஏனெனில் அவர் அப்போதிலிருந்து நடந்து வந்த நிகழ்ச்சிகள், குற்றவாளியின் தரப்பில் செய்யப்பட்ட எஸ்கலேஷன்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு வந்தவர். அப்படிப்பட்ட ஒரு பின்புலனும் இல்லாத நீங்கள் அவர் அப்போது சொன்னதை மட்டும் பொறுமையாகத் தேடிப்போயிருக்கிறீர்கள். பின்னால் ந்டந்ததையும் பார்ப்பதுதானே. ஏன் இம்மாதிரி அரைவேக்காட்டுத்தனமான பின்னூட்டங்கள் இடுகிறீர்கள்?

உங்கள் தட்டச்சு செய்ய்ம் கைதான் நரம்பில்லாததுபோல தோன்றுகிறது.

கோனார் நோட்ஸ் தேவையானால் நான் போடுகிறேன். ஆனால் அதையெல்லாம் புரிந்துகொள்ளும் பொறுமை உங்களிடம் உண்டா என்பது தெரியவில்லை.

முகமூடி அவர்களே, பாதிக்கப்பட்டவர் மற்ற நல்லவர்கள் ஆதரவுடன் முயற்சி செய்து குற்றவாளியை ஒரு மாதிரி கட்டுப்படுத்தி வைப்பதைப் பார்த்து மற்றவர்கள் ஏன் அழ வேண்டும்? அவர்களுக்கு அவன் மேல் என்ன பரிவு?

இப்பின்னூட்டம் என் தனிபதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

இவ்வாறு செய்வதற்கு காரணம் இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைக் காட்டும் மூன்றாம் சோதனைக்குட்பட்டே என்று அப்பிடிப் போடு அவர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



//மே 25, 2005-க்குப் பிறகு காவிரியில் நிறைய தண்ணீர் ஓடி விட்டது. அவர் அப்போது சொன்னது அவ்வளவு சரியில்லையோ என்ற முடிவுக்கு வந்து விட்டார்//

டோண்டு இந்த இதெல்லாம் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். உங்க படத்த என்கிட்ட ஓட்டாதிங்க!!.

//அப்படிப்பட்ட ஒரு பின்புலனும் இல்லாத //
என்னய்யா... ஆபாச கமெண்டப் படிக்கிற பின்புலமா?.

//முகமூடி அவர்களே, பாதிக்கப்பட்டவர் மற்ற நல்லவர்கள் ஆதரவுடன் முயற்சி செய்து குற்றவாளியை ஒரு மாதிரி கட்டுப்படுத்தி வைப்பதைப் பார்த்து மற்றவர்கள் ஏன் அழ வேண்டும்?//
ஆபாசத்தை ஒரு மேட்டராக்கி சீப்- பப்ளிசிட்டி தேடிய நீங்கள்., காசியின் மட்டுறுத்தல் கட்டுப்பாட்டால் கட்டுக்குள் வந்ததை நீங்கள் பண்ணியதாக காட்டாதீர்கள். பண்றான் பண்றான்னு அழுததைத் தவிர நீங்கள்., இவ்விதயத்தில் ஒன்றும் பண்ணியதில்லை.

// அவர்களுக்கு அவன் மேல் என்ன பரிவு?//
ஷிட் !!!
 



சன்னாசி, நீங்கள் வழக்கம் போலவே பொடிமட்டையை பிரிக்க ஆரம்பிக்கிறீர்கள். நான் சொல்வது ஒன்றுதான். பொதுவாழ்க்கைக்கு வரும் யாரும் விமர்சனத்து தப்ப வேண்டியதில்லை. அதை நானும் செய்வேன், மற்றவர்களும் எனக்கு செய்யலாம். அதில் முதல் லேயரில் இருந்து டாப் லேயர் வரை நளினகுமாரர்களின் வசதிக்கேற்ப டால்டா டப்பாவே பஞ்சரத்ன கீர்த்தனையோ விதவிதமாக விமர்சிக்கலாம். தப்பேயில்லை. இங்கு கேள்வி identity theft மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வர்ணனை பற்றி. ஆனால் காற்றில் கலந்து வரும் பொடிக்கே ஆகாசத்துக்கும் பூமிக்குமாக தும்மல் போடுபவர்கள், மூக்குக்குள் பொடி கட்டி தட்டி போனவர்கள் பேசினால் அது வித்தியாசமான சத்தமாகத்தான் இருக்கும் என்பதை உணராமல் பேசுவதை குறித்தது மட்டுமே இது. Provocateur என்றமுறையில் நிகழ்காலத்துக்கு வாதியும் ஒரு காரணமென்றால், Provocate செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எத்தனை வாதிகளை உட்படுத்துவது? Provocate செய்யாத ஆனால் பாதிக்கப்பட்டும் சத்தம் போடாத பல/எல்லா வாதிகள் பற்றி அலசப்படுமா? மற்றபடி இது எல்.பி தட்டின் ரிப்பீட்டு என்று நீங்கள் நினைக்கலாம். நான் ரிப்பீட்டு போட்டால் அது இப்படி இருக்காது என்பதை மட்டும் மெதுவாக முனகிக்கொள்கிறேன். இது சம்பந்தமாக பேசாவிரதம் மேற்கொள்வதென முடிவு செய்திருப்பதால் வெறுமே நன்றி மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

"ஆபாசங்கள் கண்டிக்கப்படவேண்டியவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை" அட, இதனை நீதிபத்திகளும் தமது உரையின் இறுதி பேராவில் குறிப்பிட்டுள்ளனரே... மற்றபடி எந்த லிங்கு வேண்டும் என்று வெளிப்பட்டையாகவே கேளுங்கள். உங்களுக்கு தேடி தருவதற்கு காத்திருக்கிறேன்.

மற்றபடி என் சிற்றறிவுக்கு புரிந்துதான் பேசியிருக்கிறேன் என்றால் தன்யனானேன். இல்லையெனில் மன்னித்துவிட்டு பரிவாக விளக்கவும்.

*

என்ன பண்றது அப்டிபோடு, ஏதோ யாரோ என்னமோ சொன்னாங்கன்னுட்டு ஆத்தாமையில செல சமயம் விடுவிடுன்னு எழுதிடறதுதான். அட, அதெல்லாம் செம்மண் பூமியில பொறந்து வளர்றவங்க மட்டும்ல செய்யிறது. மத்தவங்க மூடீட்டு போவாங்களா? இதெயெல்லாம் நல்லது கெட்டதுன்னு சொல்லிக்கொடுக்க நமக்குன்னு ஆரு இருக்கா? இப்பத்தான படிச்சிகிட்டு வாரேன். சீக்கிரம் கத்துக்குவோம்.

அப்பால ஒரே ஒரு பின்னூட்டத்துக்கே சில பேரு அலுப்பாயி போயி பதிவையே மூட்டை முடிச்சு கட்டி வச்சிட்டு அப்புறம் வாழறதுக்கு வாக்கு கொடுத்திட்டோமேன்னு ஏனோ தானோன்னு மூச்சு விட்டு வாழ்ந்துகிட்டு இருக்காகளாமே, இந்த லட்சணத்துல நித்தம் நித்தம் அதையே பொளப்பா இருக்குறவுக எப்பிடி அலுப்பில்லாம பதிவு போடுறாங்கன்னு கேட்டனே. புதுசா பொஸ்தகம் எளுதலாம், ஆனா கோக்கு மாக்கா கேள்வி கேக்குறவுகளுக்கு எத்தினி நோட்ஸ்தான் போடுறதுன்றாரு முனியப்ப சாமி.

*

டோண்டு, ஒரு கதை உண்டு. ஒரு பணக்கார கருமி கிராமத்தில் சட்டை போடாமல் வாழ்ந்து கொண்டிருந்தானாம். அது குறித்து கேட்டவர்களுக்கு இந்த ஊரில்தான் நான் பணக்காரன் என்று எல்லாருக்குமே தெரியுமே, அப்புறம் யாருக்கு எதை நிரூபிக்க சட்டை என்றானாம். அவன் ஒரு நாள் டவுனுக்கு போன போது சட்டை போடாமல் போனானாம். அப்போது ஊர்க்காரர் அவனை நிறுத்தி அது பற்றி கேட்ட போது, அந்த ஊரில்தான் நான் யார் என்றே யாருக்குமே தெரியாதே அப்புறம் யாருக்கு எதை நிரூபிக்க சட்டை என்றானாம். அதுபோலவே நீங்களும் இனி யாருக்கும் உங்களை பற்றி நிரூபிக்க வேண்டிய நிலையில் தமிழ் வலைப்பதிவுகளில் இல்லை. எருதுப்புண் காக்கைக்கு தெரியாதுதான். ஆனால் போலி பற்றி பேசாமல் இயங்குவதே நல்லது என்பது என்னுடையா தாழ்மையான கருத்தும் கூட. provocate என்பதற்காக அல்ல, அதனால் ப்ரயோசனம் இல்லை என்பதற்காக.
 



சின்னவன், அறியாமை ஒரு வரம் ;)
 



//ஏதோ யாரோ என்னமோ சொன்னாங்கன்னுட்டு ஆத்தாமையில செல சமயம் விடுவிடுன்னு எழுதிடறதுதான்//.
பின்ன சொல்லுப் பொறுக்க மாட்டம்ல?

//அட, அதெல்லாம் செம்மண் பூமியில பொறந்து வளர்றவங்க மட்டும்ல செய்யிறது. மத்தவங்க மூடீட்டு போவாங்களா? //

நீங்க எப்படி வேணும்னாலும் போங்க., அது உங்க இஸ்டம்ல?.

//இதெயெல்லாம் நல்லது கெட்டதுன்னு சொல்லிக்கொடுக்க நமக்குன்னு ஆரு இருக்கா? இப்பத்தான படிச்சிகிட்டு வாரேன். சீக்கிரம் கத்துக்குவோம்//.

அடேயப்பா... சொல்லிக் கொடுக்க நமக்கு இன்னொரு ஆளு வேணுமாக்கும்?.


//அப்பால ஒரே ஒரு பின்னூட்டத்துக்கே சில பேரு அலுப்பாயி போயி பதிவையே மூட்டை முடிச்சு கட்டி வச்சிட்டு அப்புறம் வாழறதுக்கு வாக்கு கொடுத்திட்டோமேன்னு ஏனோ தானோன்னு மூச்சு விட்டு வாழ்ந்துகிட்டு இருக்காகளாமே, இந்த லட்சணத்துல நித்தம் நித்தம் அதையே பொளப்பா இருக்குறவுக எப்பிடி அலுப்பில்லாம பதிவு போடுறாங்கன்னு கேட்டனே//

அடப்பாவி., இது வேறயா?., ஏஞ்சாமி., என்னையப் பொடால போடறதுக்கு அம்புட்டுத் துடிக்கிற?., எழுதிகிட்டு இருக்கம்மப்பு. ஆப்பா விழுகனுமில்ல.. அதான் கொஞ்ச நேரமெடுக்குது. ஏனோதானோன்னு இந்தாப் போட்டுறுக்கிகல்ல... வாய் புளிச்சதோ... மாங்கா புலிச்சதோன்னு அப்பிடி நாங்க எழுத முடியுமா?.

//புதுசா பொஸ்தகம் எளுதலாம், ஆனா கோக்கு மாக்கா கேள்வி கேக்குறவுகளுக்கு எத்தினி நோட்ஸ்தான் போடுறதுன்றாரு முனியப்ப சாமி.//

கோக்குமாக்கா கேக்குரத பொருட்டா எடுத்துக் கிட்டு அங்கங்க தொலைபேசி ஜெயம் கொண்டம் காட்டப் பத்தி கேட்டுகிட்டு இருக்கமே?. நாங்கெல்லாம் கேள்விக்கு எதிரி கேள்வி கேட்குற ஆளுக., பதில் சொல்லுவோம்!!., ஆனாக் காத்திருக்கணும்ல?.

//பதிவையே மூட்டை முடிச்சு கட்டி வச்சிட்டு //
ஹா! ஹா!!., உங்க கற்பனை வளம் ஊரறிஞ்சது இல்லிங்களா?. ஒரு மாதம் பதிவு போடாம நாம இருக்கிறது இப்ப புதுசா இருந்தா... இத நீங்க சொல்லலாம்., சத்தம் போட்டு.

//எருதுப்புண் காக்கைக்கு தெரியாதுதான்//
எருதின் செய்கையால் காக்கைகளும் புண்படுகின்றன., அதையே பெரும்பாலோர் வலியுருத்துகிறோம். எப்போது புரிந்துகொள்வீர்கள்??????. எதையும் திரிக்காமல் !!!!.
 



கலக்கல் பதிவு முகமூடி. பாருங்களேன் இந்தப் பெண்களை. அந்த நீதிபத்திக்கு இருக்கிற ஞானம் கூட இல்லையே. மடந்தையர் என்ற பெயரை மடைந்தயர் என்று மாற்ற வேண்டும் போல. எத்தனை சினிமாக்கள் வந்திருக்கின்றன. எத்தனை கதாநாயகர்கள் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். எத்தனை கதாநாயகிகளும் தங்கைகளும் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்திக் கொண்டிருக்கிறார்கள். மாடியிலிருந்து குதித்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தும் திருந்த மாட்டேன் என்கிறார்களே. பெண்களே திருந்துங்கள். ( சரி. நான் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொண்டீர்தானே?)
 



"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... ........ " ஏம்பு மொகமூடி அடுத்த சொல்ல சொல்லாமிலே?
 



// நான் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொண்டீர்தானே? //

சரியாத்தான் புரிஞ்சிகிட்டேன்னு நான் நினைக்கிறேன் ராகவன். ஆனா நான் நினைச்சது சரிதான்னு நீங்க நினைக்கனும். நீங்களும் நானும் நினைச்சது சரிதான்னு ஊரு நினைக்கனும். அதோட ஒரு ஸ்மைலியும் போட்டுக்கிறேன் ;))

*

மஸ்தான் ...

*

அநாநிமஸு, ஒரு பத்து பக்கம் படிக்கிற அளவு தெம்பு வந்தவுடனே அடுத்த வரி பாடரேன் ராசா, அதுக்கு முந்தி நிறைய மனவலிமையும் பொறுமையும் அருள்வாய்...
 



கலக்கல் பதிவு முகமூடி.நீதிபதிகளுக்கு உறைக்குமான்னு தெரியல..
 



//சன்னாசி, நீங்கள் வழக்கம் போலவே பொடிமட்டையை பிரிக்க ஆரம்பிக்கிறீர்கள்.//

Same to you ஸ்டைல் பிளேட் திருப்பலா? நல்லது. நன்றி.
 



Judgement reserved.

This court also observes there are several instances of violent fighting while the matter is still subjudice.

The court vehemently condemns this and will not be able to pass a firm judgement till the fights are over!
 



// Same to you ஸ்டைல் பிளேட் திருப்பலா? // இல்லை. இதற்கும் முன் ஒரு முறை பொடி மட்டை பிரிக்கப்பட்ட ஞாபகம். repeat ஸ்டைல் என்று வேண்டுமானால் கொள்ளலாம். நான் முன்பே சொல்வது போல் provocation is the cause for all evils என்பதற்கு மட்டுமே என் கருத்து. மாற்றிருந்தால் எளிய முறையில் சொல்லி எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

*

அப்டி போடு தொலைபேசியெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி இந்த சின்ன பய புள்ளக்கி விளக்க பாடுபடுறீங்களா? சந்தோசங்க...

*

அய்யோ தாஸ¤. நீதிபதிக்கு உறைக்கிறதுக்கு எல்லாம் எளுத இந்த பயலுக்கு இன்னும் வயசு பத்தாது. சொம்மா நமக்கு தோணுனத அப்பப்போ மொனகிக்கிறதுதான்

*

பெனாத்தலார். எந்த உலகத்துல அய்யா வாழறீர். விசயத்த பாத்த மாத்திரத்துல சட்டு புட்டுன்னு தீர்ப்பு சொல்வீரா? அத உட்டுபோட்டு ரிசர்வ் எல்லாம் பண்ணிகிட்டு
 



//provocation is the cause for all evils என்பதற்கு மட்டுமே என் கருத்து//

இது உங்களுக்குப் புரிந்தால் சரி பாசு. பொடிமட்டையை முதலில் பிரிக்கத் தொடங்கி டிங்கிரி டிங்காலே போட்ட பஞ்சாமிர்த பழனியாண்டிகளின் இருத்தலியல் (இல்லை வழித்தலியல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்; மிதிக்கும் பஞ்சாமிர்தத்தை குதிகாலிலிருந்து அகற்றவேண்டுமானால் வழித்துத்தானே ஆகவேண்டும்?) சிக்கலுக்கான பதிலைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை உங்களது நடுநிலைமை, தர்க்கத்திறன் மீதுள்ள நம்பிக்கை அடிப்படையில் உங்களிடமே ஒப்படைக்கிறேன். நீங்கள் இனி ஒருவேளை கோனார் நோட்ஸ் ஏதும் போட்டால், படித்துத் தெளிந்து எனது சந்தேகங்களை இதே குழப்பத்துடன் முன்வைத்துத் தெளிய முயல்கிறேன். பதிலுக்கு நன்றி. உண்மையில் பொடி போட ஆரம்பித்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு நாளாக எப்படி பொடி போடாமல் விட்டோமென்று யோசிக்கையில் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

:-)

;-)
 



பழனியாண்டிகளின் வழித்தலியலால் தும்மல் கொஞ்சம் அதிகமாக போட்டிருக்கலாமே தவிர தும்மலுலே வழித்தலால்தான் என்று சமூகம் நினைப்பதாக நான் நினைத்து விட்டேன். அதற்கு, அதே சமூகத்தார் பழனியாண்டிகளின் பிறத்தியலுக்கு முன்பிருந்தே பொடி வியாபாரமும் தும்மலும் சற்றும் குறைவில்லாமல் நடந்து வருவதாகவும் சொல்வதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சிக்கலுக்கு எனக்கு தெரிந்த பதிலை என்னளவில் பின்பற்றித்தான் வருகிறேன். வழிக்கும்போது கிடக்கும் நறுமணத்தையும் மீறித்தான் வெளிப்பார்வைக்கு சுத்தமாக தெரிகிறது என்பது யாருக்கும் புரிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எல்லாரும் என் போலவே நடக்க வேண்டும் என்றா நான் எதிர்பார்க்க முடியும். அவரவர் வழியில் சிக்கலை தீர்த்து கொள்ள வேண்டியதுதான். கோர்ட் கோடு காண்பித்த வழிமுறைதான் சிக்கலுக்கு சிறந்த மருந்து என்று யாராவது சொன்னால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று மெதுவாக சொல்லலாம், ஆனால் அது யாரையாவது ப்ரொவகேட் செய்தால் என்ன செய்வது என்ற பயத்தினால் பேசாமல் இருந்து கொள்கிறேன்.

*

மேலே சொன்னது நேரா பதிலாக இல்லாமல் திரித்தலாக பட்டால் அது எனது புரித்தலியலின் கோளாறே தவிர யுக்தி அல்ல என்பதையும், புரித்தலியலுக்கும் காரணம் என தமிழ் அறிவே தவிர அவ்வளவுதான் அறிவு என்பதனால் அல்ல என்பதையும் ஒரு டிஸ்கியாக விட்டுக்கொள்கிறேன்.
 



அண்ணே முகமூடி அண்ணே
நீங்க குற்று/பேரி/இலக்கிய வியாதிதான் நான் ஒப்புக்கிறேன்.
இப்படி யாருக்கும் புரியாம எழுதறதை நீங்களும் பண்ணனுமா ?
பழனி மொட்டை, பஞ்சாமிர்தம். தாங்கலையடா சாமி !
 



//மேலே சொன்னது நேரா பதிலாக இல்லாமல் திரித்தலாக பட்டால் அது எனது புரித்தலியலின் கோளாறே தவிர யுக்தி அல்ல என்பதையும், புரித்தலியலுக்கும் காரணம் என தமிழ் அறிவே தவிர அவ்வளவுதான் அறிவு என்பதனால் அல்ல என்பதையும் ஒரு டிஸ்கியாக விட்டுக்கொள்கிறேன்.//

அப்படி வாங்க, சவாசு. காலங்காலமாக குற்றிகளும் பேரிகளும் ஏறி உலகளந்த மலையில் அரைக்காலே முக்கால் மலை ஏறியிருக்கிறீர்கள், இன்னும் கொஞ்சம் தம் பிடித்தால் ஒரே அழுத்தாக அழுத்தி பாதி மலையையும் தாண்டிவிடலாம். பாருங்கள், நேரம் செலவழித்து வந்து பின்னூட்டமிடும் பினாமிபஸ்களைக்கூட இப்படி திகிலடையவைக்கவேண்டுமா?

நானிருப்பது மலை அடிவாரத்தில்தானென்பது எனது தர்க்கசாஸ்திர டிசுக்கி.

;-)

:-)
 



// குற்று/பேரி/இலக்கிய வியாதிதான் நான் ஒப்புக்கிறேன். இப்படி யாருக்கும் புரியாம எழுதறதை //

பினாமிபஸ் (அநானிமஸ்க்கு இ.தமிழ்), நான் இலக்கிய மலையடிவாரத்துக்கு கீழ் குடைந்து இருக்கும் குகையின் அடித்தளத்தில் வாசம் செய்கிறவனாக்கும். என்ன போய் குற்றி பேரி என்று கவுரவப்படுத்தி ஞான செறுக்கை உண்டு பண்ணிவிடாதீர்கள். வருகைக்கு நன்றி

*

சன்னாசி, ஆரம்பத்திலேயே நேர்மையாக "புரியவில்லை, கருத்துக்கு நன்றி" டெம்ப்ளேட்டை ஓட்டியிருக்கலாம். ஆனால் இது மட்டும் புரியாதாக்கும், முயற்சியாவது செய்தியா நீ என்று மொடர்னாய் ஆராவது கேட்பார்கள் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்ததில் லேசா உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். எனது புரித்தலியலையும் தமிழ் அறிவையும் புடம் போட்டுக்கொள்ள உதவியதற்கு நன்றி ;)))))
 



//செறுக்கை//

ருக்கு ருக்குவில வர்ற ருக்கு. ஒரே றரறர தானா.

//இது மட்டும் புரியாதாக்கும், முயற்சியாவது செய்தியா நீ என்று மொடர்னாய் ஆராவது கேட்பார்கள் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்ததில்//

சவாசு, சவாசு, இதைத்தான் பொடிமட்டைண்ணேன்ணேன் :-)))) குறிக்க: நாலு இழுப்புதான், அஞ்சு இழுப்பில்ல, எண்ணிப் பாத்துக்கோங்க பாசு. என்ன இருந்தாலும் கற்பூரம் தான் போங்க; பக்குன்னு பத்திக்குதே?
 



அய்யோ தலை!!!

ஒரு மண்ணும் புரியலியே!!

இதுல வைட் காகேஸியன் (உபயம்; அவரே!) அடிச்ச ரேஞ்சுக்கு சன்னாசி ஏதோ சொல்றாரு. அவர் சொல்ற அதே வார்த்தைகள வச்சு நீரு வேற ஏதோயோ சொல்றீரு!

ரெண்டு பேரும் சேர்ந்து இராமநாதன இரம்நாதனா ஆக்கிபுடுவீங்க போலிருக்கே! :((

இந்த விஷயத்துல கட்சியின் கடை மட்ட தொண்டர்களுக்கும் புரியிறா மாதிரி ஒரு டிக்கியோ பானட்டோ போட்டா உமக்கு கோடி புண்ணியம் சாமி!

சன்னாசி சார் மற்றும் நம் தலைக்கு தனி விண்ணப்பம்,


லிங்குசாமி, பழனியாண்டி, புனுகுப்பூனை, பொடிமட்டை, டால்டா டப்பா, நளினகுமாரன்.. இதெல்லாம் என்னென்ன யார்யார்னு நமக்கும் விளங்கறா மாதிரி, ரெண்டு மவராசாக்களும் சேந்து முதல்ல ஒரு கோனார் நோட்ஸ் போடுங்கய்யா! கோயில் கட்டி கும்பிடுவோம் :(((

சின்ன பார்ட்டு, நீரும் நம்ம கட்சி தானா? அதுவாவது ஆறுதலா இருக்குய்யா!
 



இரம்ஸ்
அறியாமையே பலம் என்று அப்பவே தல சொல்லிட்டாரு.
நானும் இந்த விளையாட்டுக்கு வர்லை என்று அப்பவே கழண்டுகிட்டேன்.
உமக்கு ஏதாவது புரிந்தால் மயில் அனுப்பும். நான் அனுப்பியதையும் பாரும் .

திருப்பதி, பாதி மொட்டை, திருட்டு பீடி, பிருந்தாவனும் நொந்த குமாரனும், அமுல் நெய்
( என் பங்குக்கு ! )

:-) ;-) :-0
( ஸ்மைலியும் என் பங்குக்கு !)
 



// ருக்கு ருக்குவில வர்ற ருக்கு. ஒரே றரறர தானா //

ஞானத்தின் (அடி)பொடி மட்டத்தில் இருப்பவர்களுக்கு செருக்கு. உச்சிக்கு செல்ல செல்ல செறுக்கு... நல்ல வேளையாக நற நறவாக புரியாமல் போன வரை திருப்தி :))) (மூன்று மட்டும்தான்... உங்க அளவு வருமா?)

*

இரம்ஸ், புரியலையின்னா இருக்கவே இருக்கு அபிஸிந்த். நல்லா புரியும். நான் எழுதினதுக்கு நீங்க புதுசா எதுவும் நோட்ஸ் போட்டா எனக்கு அனுப்பி வைங்க...

*

சின்னவன், நோ மோர் நியூ கேரக்டர்ஸ் இன்ட்ரொடக்சன்... இருக்கற கேரக்டர்ஸ் இப்போதைக்கு போதும். அடுத்த பதிவுக்கு நிறைய தேவைப்படும். அப்ப ஊஸ் பண்ணிக்கலாம்.
 



//இதுல வைட் காகேஸியன் (உபயம்; அவரே!) அடிச்ச ரேஞ்சுக்கு சன்னாசி ஏதோ சொல்றாரு.//

ராமநாதன், அது அடிச்சாலாவது black humor வருதான்னு அப்புறமா முயற்சிக்கறேன். வேலைக்கு நடுவில அஞ்சஞ்சு நிமிசத்துக்கு ஜாலியா கமெண்ட் தட்டிவிட்டுட்டிருக்கேன், இந்த நேரத்துல ஒயிட் காகேசியன் அடிச்சா டால்டா டின்னை முதுகுல கட்டிரமாட்டாங்க? ;-) கேள்விகளைக் கேட்டுட்டதால இதுக்கான ஒரு ஜூவாரஜ்யமான சுட்டி இங்கே ;-)

சின்னவன், ஸ்மைலிய போல்டுல போட்டு போல்ட்டை முறுக்கணும்னு தெரியாதா? ;-). நாய் கச்சிச்சி போல; அடுத்து என்ன, ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா ஜனகனமணராஜ் ட்யூனா பாசு? கச்ச நாய் நம்ம ஊட்டு நாய் இல்லன்னாலும் ஒரு ராத்தல் பிச்சிருச்சு போல? ;-). ஆட்டத்துக்கு வராட்டியும் ஆம்னிபஸ்ஸுல அப்பப்ப ரெண்டு வாழைத்தாரை ஏத்திவிடுங்க, போய் சேத்துருவம் மக்கா.
 



//அப்ப ஊஸ் பண்ணிக்கலாம்.//

ஊஸ் பண்ணிக்கறப்ப முகமூடியை ஒதுக்கிட்டு இரண்டு ஷாட் ஊஸோவும் அடிங்க முகமூடி; ஊஸோ எனது மனப்பூர்வமான சிபாரிசு. ;-) (போல்ட்டு தீர்ந்துபோச்சு)

மேற்கண்ட (போல்ட்டு தீர்ந்துபோச்சு) அடைப்புக்குறிக்குள்ளே நம்ம காலை வாரிவிட ஒரு இன்ஸ்டண்ட் போயிண்ட் இருப்பதை கொப்பிரைட்டுக்குட்பட்டுக் குறித்துக்கொண்டீர்கள் தானே? :-)
 



// (போல்ட்டு தீர்ந்துபோச்சு) அடைப்புக்குறிக்குள்ளே //

நாலுல ரெண்டு போல்ட்டு களண்டுகிச்சி (போன பின்னூட்டத்துல)ன்னா க் கூட ரெண்டு டைட்டா மிச்சம் இருந்திருக்கணுமேன்னு நான் நினைக்கிறதையா கால் வாரின்னு சொல்றீங்க... அப்பிடி ஒரு நெனப்பே வரல. ராவுக்கு ரவையா ஊஸோ அடிக்கும்போது தோணுதான்னு பாப்பம். அப்புறம் கொஞ்சம் போல்ட்டு தேடி வைங்க... அடுத்த பொடி பதிவுக்கு நிறைய தேவைப்படும்.

; [ஸ்மைலியே இல்ல... இப்பவும் உங்கள விட கம்மிதான்]
 



//நாலுல ரெண்டு போல்ட்டு களண்டுகிச்சி (போன பின்னூட்டத்துல)ன்னா க் கூட ரெண்டு டைட்டா மிச்சம் இருந்திருக்கணுமேன்னு நான் நினைக்கிறதையா கால் வாரின்னு சொல்றீங்க...//

ஃபன்டாஸ்டிக். ப்ராவோ (இதுதவிர, இப்போதுதான் adjective houndஐயும் அவிழ்த்துவிட்டிருக்கிறேன், கௌவிக்கொண்டு வருவதைவைத்து முகமூடியின் சுதாரிப்புக்கான மீதிப் பாராட்டுக்கள் தொடரும் ;-)). கால்வாரின்னா என்ன தலைவா? Calvaryயா? அடடா, விவகாரம் சீரியஸாப் போகும்போல இருக்கே, யாரை சிலுவையில அறையறதா உத்தேசம்?

//அப்புறம் கொஞ்சம் போல்ட்டு தேடி வைங்க...//
போல்ட்டுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல, சீனாவிலும் தயாரிக்கப்படுகின்றன (இது நல்லா இருக்கே ஆட்டம்?).

(தேடவேண்டாம், நான் போட்டது இன்விசிபிள் ஸ்மைலி)

போரடிக்குது பாசு; வேலையைப் பாப்பம். அப்புறமா சந்திக்கலாம். G'night.
 



சன்னாசி
பிச்சாலும் பிச்சுது, கன்னா பின்னா என்று பிச்சிகிட்டு போச்சு.
இப்ப snoopy யை பார்தாலும் கூட பயமாத்தான் இருக்கு

:-)
 



// யாரை சிலுவையில அறையறதா உத்தேசம்? // யாரையும் அறையிற உத்தேசம் இல்ல அண்ணே. வழக்கம் போலவே என்ன விடுவிச்சிக்கிறதுக்காக அடிக்கப்பட்ட ஆணிங்கள பிடுங்கறது மட்டும்தான்... பாக்குற எடத்த பொருத்து அது அடிக்கிற மாதிரியும் சில சமயம் தெரியறதுண்டு ::)) GN
 



//ஃபன்டாஸ்டிக். ப்ராவோ (இதுதவிர, இப்போதுதான் adjective houndஐயும் அவிழ்த்துவிட்டிருக்கிறேன், கௌவிக்கொண்டு வருவதைவைத்து முகமூடியின் சுதாரிப்புக்கான மீதிப் பாராட்டுக்கள் தொடரும் ;-)). கால்வாரின்னா என்ன தலைவா? Calvaryயா? அடடா, விவகாரம் சீரியஸாப் போகும்போல இருக்கே, யாரை சிலுவையில அறையறதா உத்தேசம்?
//
இப்படியாக தன்மானத் தமிழர்க்கு புரியாவண்ணம், இறந்துபோன லத்தீன மொழியில் பேசும் மொழிவெறிஞர்க்கும் அதற்கு ஒத்தூதும் முன்னாள் .மிழினத் தலைவருக்கும் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்,
இரம்ஸ்,
பீட்டர் வட்டம்,
ரஷ்ய மாவட்டம்
 



சின்னவரே,
பதிவுக்கு அப்பாற்பட்ட ஒரு கேள்வி,
முகமூடி பதிவில் "பிருந்தாவனும் நொந்த குமாரனும்" பற்றி சொல்லியிருந்தீர்கள். அதன் ஆசிரியர் பெயர் மற்றும் மேல் விவரங்கள் இருந்தால் கொடுக்க முடியுமா? ஆதி காலத்தில் படித்தது. அந்த பஞ்சகல்யாணியை தவிர மற்றதெல்லாம் மறந்து விட்டது( அந்த நடிகை பெயரையும் சேர்த்து)..
இப்போதைய நிலையில் எனக்கு (சிலருக்கும் கூட) மிக அவசியம் :-)))))

ஐயா முகமூடியாரே, நீங்களும் சன்னாசியும் பொடிமட்டை பிரிப்பதில் ஆட்சேபனையில்லையென்றாலும் விரவும் நெ(¡)டியில் எங்கள் முடிகள் இருத்தலியலிருந்து விலக்கப்படுவதால் எழும் அழுகுரல் காதில் விழுதில்லையோ. பழனியாண்டிக்கோ, நளினகுமாரனுக்கோ வழித்தலிலே இருத்தலியலானாலும் கூட வழிக்கும்போது கிடக்கும் நறுமணத்தையும் மீறித்தான் வெளிப்பார்வைக்கு சுத்தமாக தெரிவது புரிந்தாலும்கூட வழித்ததை வீசாமல் கிளரிக் கிடைக்கும் நறுமணமின்பம் வையம்பெறவழிவகுத்தலை கழிக்க சொல்லும் முனகுதலே கூக அலறலாய் களிப்போடு பார்க்கப்படுகையில் கூகங்களை பட்டியிலிடும் (நீதி)பத்திகள் புனுகு வாசனையும் புரிந்துகொள்ளக்கூடியதே....

ரவையோ ஊஸோ சினேகமில்லவிட்டாலும் தொடர்பறுந்த நீலகண்டனை ராவு துணைக்கழைத்து வந்தாலாவது உங்கள் பரிபாசை புரியுதா பார்கிறேன்.

தர்ககசாஸ்திரம் காவியா, பச்சையா, மஞ்சளாவெல்லாம் தெரியாது என்பது இங்கே டிசுக்கி.
விசிபிலொ, இன்விசிபிலோ இங்கே ஸ்மைலி பர்சிஸ்டெண்ட்.

(அண்ணே உங்களையெல்லாம் பாத்து கத்துகிட்ட அப்பாவி புள்ள, தப்பா சொல்லியிருந்தா லூஸ்ல வுடுங்க. ஆனா லூசுன்னு விடாதிங்க:-( .)

இராமநாதரே கோயில்கட்ட சித்தாள் ரெடி. தேவையான கூப்பிடுங்க..
 



காஞ்சி நாடன்
அது பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய நாவல். பாக்கெட் நாவல் கொடிக்கட்டி பறந்த காலத்தில் படித்ததாக ஞாபகம். அதற்கப்புறம் ப்.கோ.பி. காமெடிய நாவல் ஏதும் எழுதினாரா தெரியவில்லை
 



// முனகுதலே கூக அலறலாய் // நிறைய பேர் சேர்ந்து முனகுவதால், மென்மையான (!) முனகல்(கள்) கூட அலறலாய் தோன்றுவதை பற்றியதே இது...

// தொடர்பறுந்த நீலகண்டனை ராவு துணைக்கழைத்து // இப்படியெல்லாம் வெளிப்படையான எண்ணங்களை பேசுகிறீர்களே. பார்த்து... ஒரு புறம் வன்னுடைய ஹிட் லிஸ்டிலும் அதன் தொடர்ச்சியாக இன்னொரு புறம் ப்ரவோகேடர் லிஸ்டிலும் சேர்க்கப்பட்டு இரு பக்கமும் இடி வாங்கும் நிலைக்கு வந்து விடப்போகிறீர்கள்.

அப்புறம் உங்களுக்கு இல்லாமயா ;)))))
 



சின்னவரே,
நன்றி (நன்னின்னு சொல்லனுமோ?)

ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.
என்ன குற்றத்திற்காக பொன்னிவளநாட்டிலிருந்து என்னை நாடுகடத்தினீர். :-(
 



"பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்" எழுதியது தேவிபாலா என்றுதான் எனக்கு ஞாபகம். செல்வா என்னும் துப்பறியும் நிபுணன் வந்து அடி உதை எல்லாம் படுவான். அவனுக்கு ஆஃபீஸ்பாய் முருகேசன். அவனை அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பான்.

ஈகிள்ஸ் ஐ நரேந்திரன் மற்றும் வைஜயந்தியும் சைடில் தலை காட்டுவார்கள்.ஒரு கதையி வைஜயந்தி பர்தா அணிந்து இவன் அலுவலகத்துக்கு வந்து ஒரு கவரைக் கொடுத்துச் செல்வாள்.

இப்பின்னூட்டம் என் தனிபதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

இவ்வாறு செய்வதற்கு காரணம் இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைக் காட்டும் மூன்றாம் சோதனைக்குட்பட்டே என்று அப்பிடிப் போடு அவர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



நரேந்திரன் வைஜெயந்தி - சுபா
பிரசன்னா லதா - தேவிபாலா
பரத் சுசீலா- பகோபி
விவேக் ரூபலா- ராஜேஸ் குமார்

இல்லையா ?
 



//இவ்வாறு செய்வதற்கு காரணம் இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைக் காட்டும் மூன்றாம் சோதனைக்குட்பட்டே என்று அப்பிடிப் போடு அவர்களுக்கு கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நீங்கள் யாருக்கு பின்னூட்டமிட்டாலும் சோதனை எனக்குத்தானா?., ஸ்ஸப்பா....!!!
 



டோண்டு,
ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. ஆனாலும் கதை நீங்கள் சொல்லியதில்லை என்று நினைக்கின்றேன். (ஒருவேளை நீங்கள் சொல்வது செல்வா வரும் பல கதைகளின் template என்பதால் கூட இருக்கலாம்).

இந்த கதையில் நாயகன்(பெயர் நந்தகுமாரன் என்று நினைக்கின்றேன்.) ஒரு கடத்தல் கும்பலை பிடித்து தந்து பணமும் புகழும் சம்பாதிக்க(மாமா பெண்ணை திருமணம் செய்ய என்று நினைக்கிறேன்) நண்பன் ஒருவனின் உதவி தேடி அவன் இருப்பிடம் போவான். நண்பனோ கூழாங்கல்லில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சில் ஈடுபட்டிருப்பான். எப்படி இந்த ஐடியா வந்ததென்றால் ஒருமுறை முழங்கையை ஓர் கூழாங்கல்லில் இடித்துக்கொள்ள அதிர்ச்சி ஏற்படும். அதனால் கல்லில் மின்சாரம் இருக்கிறது என்று முடிவுக்கு வந்து அந்த ஆராய்ச்சியை தொடங்குவான். அவனிடம் உள்ள மோட்டார் சைக்கிளின் பெயர் "பஞ்சகல்யாணி".
என்ன சிறப்பு என்றால் எந்தவிடமான திரவத்திலும் அந்த வண்டி ஓடும். என்ன "சுந்தரா டிராவல்ஸ்"
பஸ் போல புகைவரும், சத்தம் ஊரையே எழுப்பும். இறுதியில் அந்த கும்பலை பிடித்து விடுவார்கள். ஆனால் பிடிக்கும் போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டு 70-80 அப்பாவிகளையும் கொன்று விடுவதால் அவர்களுக்கும் ஆயுள்தண்டனை கிடைக்கும். இதுதான் கதை. ஆனால் புத்தகத்தை முடிக்கையில் வயிறுவலி நிச்சயம். அந்த அளவில் இருக்கும்.
 



சோழநாடன்
அதே அதே. நான் சொல்ற கதையும் அதே அதே
 



முகமூடி
நீங்க என்னதான் வஞ்சப் புகழ்ச்சியா எழுதிருந்தாலும் படிக்கும்போது பக்குன்னுதான் இருக்கு. :-(
 



டெஸ்ட் பின்னூட்டம்ப்பா... என்னோட மொதோ பின்னூட்டம் காணாமப் போயிடுச்சி...
 



// மொதோ பின்னூட்டம் காணாமப் போயிடுச்சி // குசும்பன், எங்கே அனுப்பப்பட்டது என்பதை ஆராயவும்.
 



// என்னதான் வஞ்சப் புகழ்ச்சியா எழுதிருந்தாலும் படிக்கும்போது பக்குன்னுதான் இருக்கு //

நிலா.. இது மாதிரி தீர்ப்பு எதிர்காலத்தில் தமிழ்நாட்டு நீதிமன்றம் எதுலயாவது உண்மையிலேயே கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுற்கில்லை... (சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மருமகள் தொடுத்த மானபங்க வழக்கின் நீதி விசாரணையின் போது நடந்த வாத பிரதிவாதங்கள், அறிவுரைகள், தீர்ப்பு(கள்) ஆகியவற்றை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?)

*

பிருந்தாவனமும் நொந்த குமாரனும் நானும் படித்த கதை. படு காமெடி. எழுதியவர் பிகேபிதான். என்னிடமிருந்து அதை கடன் வாங்கி சென்ற நண்பன் அதை திருப்பி தராமல் நான் நொந்த குமாரனாக ஆனது கிளைக்கதை
 



//

Modi Masthan said...

// அவர்களுக்கு அவன் மேல் என்ன பரிவு?//
ஷிட் !!!


அப்பிடி போடு அக்கா
என்ன ஆச்சு உங்களுக்கு. ரொம்பவே டென்ஷ்னில் இருக்கீங்க போல ரெண்டு நாளா.
நல்ல Tums ம், ****** சாப்பிடுங்க !
எல்லாம் சரியாப் போகும் !//

மேற்கண்ட பின்னூட்டத்தில் இருந்த ஒரு வார்த்தை ஆட்சேபகரமாக இருப்பதாக சம்பந்தப்பட்டவர் கருதுவதால் தணிக்கை செய்யப்படுகிறது.
 



சரி, உங்க கருத்து ??