<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சமூகநீதி


img crtsy: fiddlesticksdallas.comஇட ஒதுக்கீடு சம்பந்தமாக நடந்த ஒரு சில விவாதங்களை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது... கோடு போட்டாலே ரோடு போடும் நம் இணையத்தின் புனித *சுக்கள் ரோடே கிடைத்தால் விட்டுவைப்பார்களா? ஒரு கூட்டம் தங்கள் கருத்தோட்டங்களை எல்லாம் சமூக நீதி என்ற பெயரில் விதவிதமான நகைச்சுவை பாணியில் சொல்லியிருந்தது. ஒரு கூட்டம் சமூக நீதி வேண்டும் என்று முதலைக்கண்ணீர் விட்டுக்கொண்டே தாங்கள் பிறந்த சாதியை பற்றி பெருமை பேசிக்கொண்டும் தனக்கு பிடிக்காத சாதிக்காரர்கள் முக்குவதை பார்க்க பேரானந்தமாக இருக்கிறது என்று பொட்டிச் செய்தி வெளியிட்டிருந்தது... இத்தனை களேபரங்களுக்கு இடையில் புள்ளி விவரங்களோடு உண்மையிலேயே அலசி பதிவு போட்டது நாலே பேர்... அவர்களையும் விவாதம் நடந்த்த விடாமல் இடையில் நாட்டாமை குஞ்சுகள் புகுந்து சொந்த புத்தி சுணங்கிய நிலையிலும் ஏதாவது கூவியே ஆகவேண்டும் என்ற அரிப்பில் ஆங்கங்கே வெட்டி ஒட்டி, 'யோவ் அதான் அவரு சொல்றாருல்ல, அட இவரும் சொல்றாரு, அப்புறம் என்ன புரியாம பேசற.. நான் ஒரு நாலு நாள் கழிச்சி விவரமா பதிவு போடுறேன்' என்று ஜகா வாங்கிக்கொண்டிருந்தார்கள்... இதில் ஹைலைட்டாக ஒரு ஆறு ஏழு பாயிண்டுகளை குறிப்பிட்டு இதெல்லாம் மரபணுக்களின் வழியாகவே வருகிறது என்று செக்கூலரிஸ ஆராய்ச்சி வேறு நடந்துகொண்டிருந்தது...

ஆயிரம் நிலவு இருந்தாலும் சூரியனுக்கு ஈடாகுமா, இருக்குது ஒரு சூரியத்தனமான பாயிண்டு "இணையத்தில் விவாதம் நடத்தி ஒரு மயிறும் புடுங்க முடியாது, அப்புறம் எதுக்குடா பேசறீங்க" ஒரு வழியா ஒரே ஒரு ஆளுக்கு விஷயம் புரிஞ்சிடுச்சிங்கற வரைக்கும் கொஞ்சம் சந்தோஷம்... (உலகநீதி புரிஞ்சிட்டதால இனிமே இவர் விவாதம் பண்ணவோ, .யிர்த்தன கருத்துகள் சொல்லவோ மாட்டாரான்னு யாரும் சிறுபிள்ளைத்தனமா கேக்கக்கூடாது... அட்வைஸ் இஸ் ஃபார் அதர்ஸ்)

சரி விஷயத்துக்கு வருவோம்... இவங்கள்ல முக்கா வாசி பேர படிக்கிறப்ப ரொம்ப பெருமிதமா இருக்கு... ஆனா இவங்க எல்லாம் உண்மையிலேயே சமூக நீதி குறித்த அக்கரையோடத்தான் பேசறாங்களா... இல்ல அரசியல்வாதி கணக்கா, அட கூகிள்காரன் ஃப்ரீயா ப்ளாக் கொடுக்கிறான், அதான் சும்மா சவடால் விட்டு பாத்தேன்.. இணையத்துல சவடால் விடாம பொண்டாட்டி புள்ளங்க கிட்டயா விடமுடியும், அங்கதான் நம்ம லட்சணம் தெரியுமே'ன்னு பேசறாங்களான்னு தெரியல..

அதனால வெத்து விவாதம் பண்ணாம ஒரு விஷயத்த ஆரம்பிச்ச மாதிரியும் இருக்கும்., நம்ம சமூக நீதி காக்க போராடும் இணைய சும்பன்கள் சம்பந்தமான சந்தேகத்த நிவர்த்தி பண்ணிய மாதிர்யும் இருக்கும்னு நினைச்சி இதை கேக்கறேன்... இதை வேண்டுகோள் என்றோ உறுதிமொழி என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்... ஆனால் சமூக நீதிங்கறது எனக்கு குளிக்கும்போது பொறி தட்டி, ஆபிஸ் போறப்போ டெவலப் பண்ணி, வலைப்பதிவுல கூட்டம் சேத்து கும்மியடிச்சிட்டு மறந்து போற விஷயம் இல்ல, உண்மையிலேயே அக்கரை இருக்கும் விஷயம்னு நினைக்கிற அன்பர்கள் இதை ஏற்கட்டும்...

அதாவது ஏந்த நாட்டு கரன்சியில் சம்பாதித்தாலும் சரி, இன்றைய நிலையில் Gross salary, இந்திய மதிப்பு ரூ.15000க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் தன் வாரிசுகளுக்கு சாதிச்சான்றிதழ் வாங்க மாட்டேன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் அதை கிழித்துப்போடுவேன், சமூகத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் மேலே வர உதவியாக ஏற்கனவே மேலே வந்த என் குடும்பம் இனி நான் சுயநினைவு இருக்கும் வரையில் அரசாங்கத்தின் சாதிச்சான்று வாங்கவோ, அதன் பலன்களை அறுவடை செய்யவோ தடையாக இருப்பேன் என்று உறுதி கூற வேண்டும்

(15K கம்மின்னு நினைச்சீங்கன்னா வறுமைக்கோடுன்னா என்னன்னு இங்க கொஞ்சம் பாத்துகிட்டு உங்க ரேஞ்ச நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...)

இன்று இதை சொல்லும் நான் இதுவரை ஜாதி சான்றிதழ் உபயோகப்படுத்தவில்லை (அதாவது ஜாதி சான்றிதழ் கூட உதவ முடியாத அளவு பூட்ட கேஸ்) எதிர்காலத்தில் இந்தியாவில் செட்டிலானாலும், என் வாரிசுகளுக்கு எந்த சூழ்நிலையிலும் ஜாதி சான்றிதழ் வாங்கவோ, என் வாரிசுகள் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டை உபயோகப்படுத்தவோ நான் சுயநினைவுடன் இருக்கும் வரை விட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். இது சில அரசியல்வியாதிகள் விடுவது மாதிரி வெத்து சத்தியம் இல்லை... இதை மீறினால் சாட்டை எடுத்து என்னை தோலுரியுங்கள் என்று சவடால் விட மாட்டேன்.. நானெல்லாம் சோறு தின்பவன். நாளை தேவைக்கேற்றவாறு ஜல்லியடித்து சப்பைக்கட்டு கட்டுவது என்னை போன்ற உருப்படாத சாமன்யர்களுக்கு வேறு எதையோ தின்பதற்கு சமம்... அது மட்டுமின்றி Pay it forward conceptல் என்னால் முடிந்தவரை குறைந்த பட்சம் மூன்று பேராவது இந்த கொள்கையை பின்பற்ற நான் பாடுபடுவேன் என்றும் கூறிக்கொள்கிறேன்...

இந்த முடிவை எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நன்றாக யோசித்து எடுங்கள். எடுத்த பின்பு அதை எச்சூழ்நிலையிலும் கைவிட முனையாதீர்கள்... அதை வெளிப்படையாக இந்த பதிவிலோ, உங்கள் பதிவிலோ, உங்களுக்கு வசதிப்பட்ட பதிவிலோ அறிவியுங்கள்.... இது ஒரு வலியுறுத்தல் இல்லை என்றாலும் சமூக நீதிக்காக "அறைகூவல்" விடும் சில செக்கூலரிஸ்டுகள் இதை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்... அப்படி எடுக்கவில்லையென்றால் ஒன்றும் குடி முழுகிவிடாது, அதிகபட்சமாக டஸ் பார்ட்டிகள் (டபுள் ஸ்டாண்டர்டு) விடுவது வெறும் முதலைக்கண்ணீர் ஊளை என்று 103 வது தடவையாக இன்னுமொரு முறை நிரூபணமாகும், அவ்வளவுதான்...

இதை விமர்சித்து வரப்போகும் வியாக்கியானங்களின் சிறு ட்ரைலர் ::

அ) இப்படி சொல்வதன் மூலம் அமுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு நைச்சியமான யுக்தி கையாளப்படுகிறது... இனிதான் நீங்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்

ஆ) என்னதான் நான் இன்று நல்ல சம்பளம் வாங்கினாலும் எப்போதும் வாங்குவேன் என்று எப்படி சொல்லமுடியும். அதனால் கொஞ்சம் யோசித்துதான் செய்ய வேண்டும்

இ) 3859 ஆண்டு காலம் இருந்ததை இரு தலைமுறையில் அழிக்க முடியுமா? மேலும் என் ஒருவனின் முடிவு என்ன பெரிதாக சாதிக்கப்போகிறது... அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுவதுதான் இதற்கு ஒரே வழி...

ஈ) அரசாங்கம் தருகிறது.. அனுபவிப்பது எனது வாரிசின் உரிமை... அவன் தனிமனித உரிமைகளில் தலையிட முடியாது...

உ) நான் கொஞ்சம் போல் சுயநினைவு இல்லாமல் இருந்த சமயம் பார்த்து என் பையன் போய் சாதி சான்றிதழ் வாங்கி வந்துவிட்டான். சுயநினைவோடு இருந்திருந்தால் கண்டிப்பாக தடுத்திருப்பேன்...
š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//சாதிச்சான்றிதழ் வாங்க மாட்டேன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் அதை கிழித்துப்போடுவேன், சமூகத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் மேலே வர உதவியாக //
//அதை வெளிப்படையாக இந்த பதிவிலோ, உங்கள் பதிவிலோ, உங்களுக்கு வசதிப்பட்ட பதிவிலோ அறிவியுங்கள்.//

நான் பொறுப்பா சாதி சான்றிதள் வீ.ஏ.ஓ ஆபீஸ் ப்யூனுக்கு 20ரூபா, தாசில்தார் ஆபீஸ்ல ரப்பர்ஸ்டாம்ப் வைக்கிறவருக்கு 10ரூபா'ன்னு குடுத்து வாங்கியிருக்கேன், அதுனால அதை கிழிக்கவெல்லாம் முடியாது :(

அப்புறம் என்னத்தை இங்க அறைகூவ போறேன்னா..

"உன்னனைய தான் நான் சம்பாரிச்சு படிக்கவச்சிருக்கேனில்ல, அப்புறம் எதுக்கு காலேஜ்'க்கு கோட்டா'ன்னு சொல்லி என்னை ஓபன் கோட்டாவுல அப்ப்ளை பண்ண வச்ச எங்கய்யனுக்காக, நான் ஒதுக்கீட்டுக்காக சாதிசான்றிதலை பயன்படுத்தறதா இல்லீங்க..

இடஒதுக்கீட்டுக்கு மட்டும் தான்.. ;)

//Pay it forward conceptல் என்னால் முடிந்தவரை குறைந்த பட்சம் மூன்று பேராவது // ஓகே.. ரைட்டு.. 1.நான், 2.எங்கய்யன், 3.எங்கம்மா.. ஓகேவா?

//என் வாரிசுகள் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டை உபயோகப்படுத்தவோ நான் சுயநினைவுடன் இருக்கும் வரை விட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்.// அடுத்தவங்க விருப்பத்துல நாம எதுக்குங்க தலையிடறது.. நான் இப்படி.. நீ இப்படி இருந்தா நல்லாயிருக்கும்னு ஒரு வார்த்தை சொல்லலாம்..
(எனக்கு அப்படித்தான் சொன்னாங்க)
 மேட்டர் என்னவோ நல்லா தான் இருக்கு. இது எந்த அளவுக்கு கைக்கூடி வரும் தெரியவில்லை. ஜாதி சான்றிதழ் நான் பள்ளி மற்றும் கல்லூரியில் சேரும் போது கேட்டார்கள். கொடுத்தேன். அத எந்த கருமத்துக்கு கேட்டானுங்க என்று எனக்கு அன்றும் புரியவில்லை. இன்றும் புரியவில்லை. முன்பு எல்லாம் எந்த பாரமாக இருந்தாலும் அதில் எந்த சாதி என்று கேட்டு இருப்பார்கள்.(BSRB, Railway). நம்மகிட்ட இருந்தது BC certi தான். OBC cer இருந்தால் தான் ப்ரீட்சை எழுதலாம் என்று சொன்னார்கள். போங்கடா நீங்களும் உங்க ப்ரீட்சையும் அப்ப தூக்கி ஏறிந்தது தான். இப்ப நீங்க சொல்வதை வைத்து பார்க்கும் போது அந்த கருமத்தை நம் வாழ் நாள் முழுவதும் தூக்கி ஏறிலாம் என்று தோண்றுகிறது. பேப்பரை தூக்கி ஏறிவது சுலபம். மனதில் இருந்து தூக்கி ஏறிய வேண்டும். அது முடியுமா என்று பார்க்க வேண்டும். நிறைய யோசிக்க வேண்டும். யோசிப்பேன். யோசிப்பதற்கு வாய்ப்பு அளித்தற்கு நன்றி.
 // அதுனால அதை கிழிக்கவெல்லாம் முடியாது :( // அதான் சொன்னனுங்களே... ஒன்னும் கட்டாயம் கிடையாது... அவங்க அவங்க இஷ்டம்தான்...

// உன்னனைய தான் நான் சம்பாரிச்சு படிக்கவச்சிருக்கேனில்ல, அப்புறம் எதுக்கு காலேஜ்'க்கு கோட்டா'ன்னு சொல்லி என்னை ஓபன் கோட்டாவுல அப்ப்ளை பண்ண வச்ச எங்கய்யனுக்காக // நல்லதுங்க... இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்.. எல்லாருக்கும் வாய்க்குமா.. அப்புறம் இங்க சாதி சான்றிதழ் உபயோகிக்கிறத விடவும் முக்கியமா சொல்ல வந்தது, பயோரியா பல்பொடி விக்கிற நாடுங்கள்ல உக்காந்துகிட்டு டாலர்ல சம்பாரிச்சிகிட்டு சமூக நீதிக்காக முழங்குகிறவர்களின் எதிர்கால கொள்கை பற்றியதே...

Pay it forward concept எனக்கு நானே சொல்லிகிட்டதுங்க... மத்தவங்க முடிஞ்சா பண்றதுதான்.. அதுக்காக கணக்கு காட்ட கேஸ் பிடிக்கும் கான்ஸ்டபிள் கணக்கா, ரிடையர் ஆனவங்க கிட்ட எல்லாம் கேன்வாஸ் பண்றது நல்லாவா இருக்கு...

// அடுத்தவங்க விருப்பத்துல நாம எதுக்குங்க தலையிடறது.. நான் இப்படி.. நீ இப்படி இருந்தா நல்லாயிருக்கும்னு ஒரு வார்த்தை சொல்லலாம்.. // நான் சொல்ல வந்ததும் கருத்து ரீதியான வலியுறுத்துல்தான்... நம்ம கருத்து சுதந்திரக்கொள்கைதான் ஊரறிந்த விஷயமாச்சே... அப்புறம், குடும்பத்துக்குள்ளயே கருத்து திணிப்பு கூடாதுன்னு நீங்க சொல்றீங்க... குமுகாயத்துல என்னடான்னா...
 Great! I also join with u.
 பெனாத்தல் சுரேஷ் பின்னூட்டம் மின்னஞ்சலிலிருந்து ::

பினாத்தலார் ஆகிய நான், இதுவரை எந்தக்காரணத்திற்காகவும் ஜாதிச் சான்றிதழ் வாங்கியதில்லை, வாங்கப்போவதில்லை என உறுதியளிக்கிறேன். பினாத்தலார் என்ற பெயருக்கு எந்த தாசில் அலுவலகத்திலும் ஜாதிச்சான்றிதழ் தரமாட்டார்கள் என்பதால் மட்டுமே அல்ல இம்முடிவு!


இந்தப்பின்னூட்டத்தின் தொனி மற்றும் மொழி காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 நாகை சிவா, நீங்கள் சொல்வது உண்மைதான்... ஆரம்ப நிலையில் இல்லையென்றாலும் பத்தாவது பரிட்சையில் ஆரம்பிக்கிறது இந்த இம்சை... ஆனால் என்னளவிலாவது அடுத்த தலைமுறையில் இதை நிறுத்துவதாக நினைத்திருக்கிறேன்... புற உலகை பொருத்த வரை சாதி என்ற இடத்தை எதுவுமே நிரப்பாமல் வெறுமையாக விட்டே முயற்சியை ஆரம்பிக்கலாம். கமல்ஹாசன் அப்படி செய்ததாக படித்திருக்கிறேன்.. அக உலகத்தை பொருத்த வரை இந்த கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நம் கையில்தான் இருக்கிறது.. நீங்கள் சொல்வது போல இதை மனதில் இருந்து தூக்கி எறிவதுதான் மிகவும் முக்கியம். எல்லாம் ஒரு முயற்சிதான்...

*

நன்றி ராம்கி...
 சாதிச் சான்றிதழ் வாங்க மாட்டேன், சாதிப் பெயரை எந்தத் தருணத்திலும் பயன்படுத்த மாட்டேன், எந்த சாதி என்று யாரையும் கேட்கவோ, நான் எந்த சாதி என்று யாரிடமும் சொல்லவோ எந்த சூழ்நிலையிலும் மறுத்து விடுவேன் என்று நானும் உறுதி மொழி எடுக்கிறேன்.

இதற்கு வாய்ப்பு தந்த முகமூடிக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்
 ஏதோ சாதிக்கணும்ங்கற முடிவுல இருக்காப்ல தெரியுது. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.:-)

எல்லா அப்ளிகேஷன் ஃபாரத்துலயும் சாதி, மதம் பற்றி கேக்கற நாட்டின் குடியுரிமையே வேணாமுன்னு சொல்லிடலாமான்னும் தோணுது. ஆனா உள்ளதும் போச்சேடா நொள்ளக் கண்ணான்னு நம்ம கதை ஆயிடக் கூடாது இல்லீங்களா.

ஆனாலும் ஒரு சிறு விண்ணப்பம்...
நீங்கள் அறிந்த வரையில் இந்த உறுதிமொழியை இந்திய நாட்டு பத்திரப் பதிவாக ஏற்றி அரசாங்கத்தில் பதிவு செய்ய முடியும் என்றால் நான் தயார். ஏன்னா, //என்னதான் நான் இன்று நல்ல சம்பளம் வாங்கினாலும் எப்போதும் வாங்குவேன் என்று எப்படி சொல்லமுடியும். அதனால் கொஞ்சம் யோசித்துதான் செய்ய வேண்டும்// இப்பிடி சொல்லி ஜகா வாங்கிக்க வேணாம் பாருங்க.

பிகு: பொட்டிச் செய்திக்கும், சூரியத்தனமான பாயிண்டுக்கும் இணைப்பு கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்...நானும் ஒரு முறை மறு வாசிப்பு செய்திருப்பேன்.;-)
அதோட அந்த 4,5 அறிவுஜீவிக்களுடைய (நீங்கள் அறிந்தவரையில்) பதிவிற்கும் இணைப்பு கொடுத்திருக்கலாம்.
 அடப்பாவிங்களா... ஏதோ நெட்டுல பிட்டப் போட்டோமா... மேட்டருக்கு மீட்டர் போட்டோமான்னு இருக்குற எடத்துல இப்பிடில்லாம் கஷ்டப்படுத்துறீங்களேப்பா நியாயமா? நேர்மையா? தர்மமா?

இப்படியே வுட்டா "சமூகநீதி காப்புப் பிரமாணம்" எடுக்க வைச்சிடு'வீங்க' போலருக்கு.

இடஒதுக்கீட்டை கண்டமேனிக்கு ஆதரிக்கும் உங்கள் நீண்ட நாள் வாசகர் பேராசிரியர் தருமி அவர்கள் இதே உறுதிமொழி எடுப்பாரா என்று அறிய ஆவலாயுள்ளேன். அப்படியே சிங்கப்பூர் சீமான்களும் செய்வார்களா?

(என்னாது நான் என்ன செய்யப்போறேனா? இதுவரைக்கும் என் வாழ்க்கையில் நான் செய்ததை கொஞ்சமாவது இக்கேள்வி கேட்டவர் செய்து விட்டு வரட்டும். பிறகு பார்க்கலாம். ஹிஹிஹி இது கொஞ்சம் ஜாஸ்திங்றீங்களா? அட அவனவன் கிள்ளிப்போட்டதுக்கே சுய தம்பட்டம் அடிச்சுக்குறான். இது ஜுஜூபி)

ரரா: பாத்துப்பா. பேச்சுலரா இருக்கும் போது இப்பிடியெல்லாம் உறுதிமொழி எடுத்தா பின்னாடி (அஃதாவது பின்னாளில்) பிரச்சினையாகலாம்ப்பா. சொல்லிட்டேன்.
 ஹை, இப்படியெல்லாம் எங்களை ஏமாத்த முடியாது. 3000 ஆண்டுகளா பொற ஊத்துன பாலு இப்பதான் தயிராயிட்டு இருக்கு. (என்னதான் நாங்க பீட்ஸா,பர்கர்ன்னு சாப்ட்டாலும்) தயிர் சாதம் கெடைக்கிற வரைக்கும் நாங்க இட ஒதுக்கீடு வேண்டாம்னு சபதம் எல்லாம் எடுக்க மாட்டோம்.
 என் பையனுக்கு ஜாதி மதம் இவைகளென்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்துள்ளேன்.

கிழிக்கவேண்டிய அவசியமில்லை வாங்கியிருந்தால் தானே அவனுக்கு

என்று என் மகனுக்கு ஜாதிகள் ஒழிந்தனவோ அன்றே எனக்கும்

மதம் என் தனி உரிமை நான் உயிருடன் இருக்கும்வரை என்னுடன் இருக்கும்
 நான் ரெடி முகமுடி நம்ம சிவா கதை தான் எனக்கும். நான் பயன்படுத்த மாட்டேன். 3 பேரு மேட்டரு தான் இடிக்குது.. அதுல கொஞ்சம் பாத்து செய்யுங்கோ.. முயற்சி செய்றேன் யாராவது மாட்டுறாங்களான்னு..
 உங்க சமூக நீதிக்கு ஒரு டஜன் தானா.

இதுதானா உங்கள் நீதி.

எங்கே சமூகநீதி காவலர்கள்?
 முகமூடி, வழித்தவறி ஒரு வழிபோக்கன் என்னிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளார்.

தயை செய்து பதில் சொல்லிடுங்க சார், அவர் வழித்தவறி வேறங்காவது போயிட போறாரு
 பார்ப்பனக் கும்பல் கூறுவது போல இட ஒதுக்கீடு தேசத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் திறமைதான் மக்களுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்வதாக இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் மானியத்தில் நடக்கும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கும் மருத்துவர்கள் பொறியாளர்களில், எத்தனை பேர் கிராமப்புறங்களில் உள்ள அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகிறார்கள்? எத்தனைபேர் அரசின் பொதுப்பணித் துறையில் சேர்ந்திருக்கிறார்கள்? இங்கே படித்து முடித்தவுடன் அமெரிக்காவிற்கும், இலண்டனுக்கும் மூட்டை கட்டும் இந்த ஓடுகாலிதனத்தைதான் "திறமை' என்ற பெயரில் மூடிமறைக்கிறது, பார்ப்பனக் கும்பல்.
 மேற்கண்ட கடைசி பின்னூட்டத்தை எழுதினது யாரு?

'இட ஒதுக்கீடு' சலுகையை அனுபவிச்சிட்டு அமெரிக்காவிலயும், சிங்கப்பூரிலயும், வளைகுடாவிலயும் உட்கார்ந்து சமூக நீதி பேசும் சமூக நீதி காவலர்களா? சூப்பரப்பு!
 அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ் பதிவில் இருந்து ::

@ July 19, 2006 10:52 PM க்கு நம்ம முகமூடி சொல்றது என்னன்னா:

குழலி,

என் கேள்வியை மீண்டும் சொல்கிறேன்... அதாவது ஏற்கனவே (ஒப்பீட்டு அளவில்) வசதியான சூழலை அடைந்த நீங்கள் (ஒப்பீட்டு அளவில்) இன்னமும் முன்னேறாமல் இருக்கும் சமூக கடைநிலை வாரிசுகள் பயன்பெற ஏதுவாக உங்கள் வாரிசுகளுக்கு சாதி சான்றிதழை வாங்காமல் இருப்பீர்களா இல்லையா? இதற்கு ஆம்/இல்லை என்ற பதிலை மட்டுமே எதிர்பார்க்கிறேன்... ஃபில் இன் த ப்ளாங்க்ஸ், இட்லி வடை போட்ட ஏ ப்ளஸ் பி ஹோல் பவர் என் ஃபார்முலா, ஸ்மைலி போட்டு நழுவிக்கொண்டே தவழுதல், சுட்டி கொடுத்து சுத்தி வளைத்து நழுவுதல் என்று மீண்டும் மீண்டும் எத்தனை முறை சித்து விளையாடினாலும் என் கேள்வியை மட்டுமே நான் கேட்பதாக இருக்கிறேன்... நன்றி, மீண்டும் வருக.

****

@ July 19, 2006 11:22 PM க்கு நம்ம குழலி / Kuzhali சொல்றது என்னன்னா:

முகமூடி நீரெல்லாம் சமூகநீதிக்காக அட்டென்டென்ஸ் எடுக்க ஆரம்பித்த காலத்திற்கு முன்பாக எடுத்த முடிவு அது, அதை வேறு சில இடங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் (என் ஊட்டு பாத்ரூமானு கேட்டாலும் கேட்பாங்கப்பு... ஏன்னா அப்பிடி வேற ஒன்னுக்கு கேட்ட ஆளுங்க தானே...) வலைப்பதிவில் வெளிப்படுத்தியது மார்ச் 15,2006 அதாவது நீங்க சமூகநீதி அட்டென்டன்சை தூக்க ஆரம்பிச்சதுக்கும் முன்னால...

http://kuzhalifeedbacks.blogspot.com/2006/03/blog-post.html
இந்த சுட்டியிலிருந்து சில வரிகள்...
------------------------------
//“நான் ஒதுக்கீட்டை அனுபவித்துப் படித்து முன்னேறிவிட்டேன்; என் மகனை/மகளை என்னால் படிக்கவைத்து ஓப்பனிலேயே சீட்வாங்கமுடியும்” என்று சொல்லி, அந்தந்த சமூகத்தினர் அவர்களுக்குக் கீழ் பள்ளி வாசலையே மிதிக்காத பெற்றோரின் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கட்டுமே. எத்தனைபேர் மதத்தை திட்டுவதை நிறுத்திவிட்டு இதைச் செய்வார்கள்? எனக்குத் தெரிந்து மூர்த்தி மட்டும் இதைச் சொல்லி இருக்கிறார்.
//
மதத்தில் இருந்துகொண்டே அதே மதத்தின் பல சீர்கேடுகளை திட்டிக்கொண்டே இதை செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கின்றார்கள் என்னையும் சேர்த்து, ஏற்கனவே எங்களில் பல சொந்தகாரர்களும் இந்த தலைமுறை சொந்தங்களும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர், ஸ்காலர்ஷிப் வாங்குவதற்கான விதிமுறைகள் பூர்த்தி செய்திருந்த போதும் என்னால் பணம் கட்ட முடியும் பணம் கட்ட முடியாத பிறர் பயன் படுத்திக்கொள்ளட்டும் என்று கூறியவர் போன தலைமுறை, மருத்துவர் கோவிந்தசாமி விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அவரது மகளுக்கு மிகப்பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை பயன் படுத்தவில்லை, அவரது மகளுக்கு அவர் சொன்னது நீ இட ஒதுக்கீட்டை பயன் படுத்தக்கூடாது பொது ஒதுக்கீட்டில் நீயாகத்தான் படிக்க வேண்டும் என்றார் (அப்போது அவர் சட்ட மன்ற உறுப்பினர் அல்ல) ஜெயஸ்ரீக்கு இதெல்லாம் தெரியாததால் யாருமே செய்யவில்லை என்று அர்த்தமில்லை,
---------------------
கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறேனே ஜெயஸ்ரீக்கு இதெல்லாம் தெரியாததால் யாருமே செய்யவில்லை என்று அர்த்தமில்லை அதில் இனி முகமூடிக்கு அட்டென்டன்ஸ் கொடுக்காததாலேயே என்றும் போட்டுக்கொள்ளலாம்....

//ஃபில் இன் த ப்ளாங்க்ஸ், இட்லி வடை போட்ட ஏ ப்ளஸ் பி ஹோல் பவர் என் ஃபார்முலா, ஸ்மைலி போட்டு நழுவிக்கொண்டே தவழுதல், சுட்டி கொடுத்து சுத்தி வளைத்து நழுவுதல் என்று மீண்டும் மீண்டும் எத்தனை முறை சித்து விளையாடினாலும் //
குருவே சரணம் எல்லாம் உங்கள் ட்ரெயினிங் தானே.... எம் ஆயுதங்களை முடிவுசெய்பவர்கள் .... என்று ஒருத்தர் சொல்லியிருக்காரே

சரி அப்போ நாளைக்கு நீ இதை கடைபிடிக்கலைனா அப்படினு அடுத்த கேள்வி கேட்கும் எண்ணமிருந்தால் முன் உம்ம பதிவில் என்ன சொன்னீரோ அதை செய்துகொள்ளும்...

அப்பாடி இந்த கடைசி லைன்ல எதுனா கிடைச்சிதா இனி என்னா சுத்த வேண்டியது தான் செலம்பத்தை...

****

@ July 20, 2006 8:41 AM க்கு நம்ம வேல்பாண்டி சொல்றது என்னன்னா:

குழலி,

நீங்கள் இடஒதுக்கீட்டை வைத்து முன்னேறியதாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டை பயன் படுத்தமாட்டீர் என்றும்
உறுதி எடுத்துள்ளீர்கள்.

உங்கள் முன்னேற்றத்தை எந்த அளவுகோல் கொண்டு அளந்தீர்கள். நீங்கள் பிராமணர்கள் முன்னேறிய அளவுக்கு முன்னேறியதாக உணர்கிறீர்களா?


முன்னேற்றம்/வளர்ச்சி என்றால் என்ன?

TVS, Infosys, போன்ற நிறுவனங்களை நிறுவி பிராமணர்கள் அவர்கள் இனத்தில் (அவர்களை விட) நலிந்தவர்களை உயர்த்துகிறார்கள். ஆனால் மாதச்சம்பளத்துக்கு வேலை பார்த்து தன் வயிற்றுப்பாடிற்க்கு அன்றாடம் உழைக்கும் உங்களால் உங்கள் இனத்தவரில் எத்தனை பேரை வறுமைக்கோட்டிற்க்கு மேல் வசதியான நிலைக்கு அழைத்து வர முடிந்தது?

உங்கள் வன்னிய இனத்தில் எத்தனை பேர் இது மாதிரியான மெகா நிறுவனங்களை நிறுவியுள்ளார்கள்.

சமூகத்தில் இட ஒதுக்கீட்டால் தற்போது தாங்கள் பெற்ற உங்களின் முன்னேற்றத்தால் பிராமணர்களுக்கு சமமாக உயர்ந்ததாக கருதுகிறீரா?
உங்கள் பிள்ளைகளுக்கு பிராமண பிள்ளைகளின் வளர்நிலை சூழலை ஏற்ப்படுத்தி கொடுக்க முடியுமா?

நீங்கள் சாதாரண கல்விசாலையில் BE முடித்தவராயின். உங்கள் மகள்/மகன் IITயில் பயில வேண்டாமா? IIT-ஐ உங்கள் இனம் எட்ட வேண்டாமா? ஏன் இந்த பிற்போக்குத்தனம்?

Creamy Layer-ஐ ஏன் இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்க கூடாது என்பதற்கான காரணங்களை இச்சுட்டியில் காண்க.

http://reservationfaqs.blogspot.com/2006/06/why-creamy-layer-should-not-be.html

முடிவுரை:
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தீட்சதர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக சொல்லப்படும் சிதம்பரம் கோயில் உரிமைகளை தலைமுறை தலைமுறையாக அனுபவித்துவரும் பிராமணர்கள் தன் உரிமைகளை விட்டுகொடுக்காத போது நீங்கள் ஏன் ஒரு தலைமுறையில் உங்களுக்கான இட ஒதுக்கீட்டை விட்டு தர வேண்டும்.-வேல்-
 வேல்பாண்டி, அப்பாவித்தமிழனின் மறுமொழிகள் கவனத்துக்குரியன.

இதையும் பார்ப்பனர் சதி எனச் சொல்லவரும் நேரம் தொலைவில் இல்லை.

நீங்கள் சொல்லுவதன் நோக்கம் புரிகிறது.

ஆனால், இன்னும் ஓரிரு தலைமுறைகள் போகவேண்டுமோ இது போலச் சொல்ல முடிவதற்கு என அஞ்சுகிறேன்.

பெருவசதி படைத்தவர்கள், இந்தச் சாதிகளில் இருந்து முதலில் செய்ய முன்வரலாம்; வேண்டும்!

மற்றபடி, எனக்கு என் சாதியைச் சொன்னால்தான் தகராறு! :)
எனவே இது ஒவ்வாது என நினைக்கிறேன்.

அப்படி ஒரு நிலை ஏற்படின் நானும் சாதியைக் காட்டி ஆதாயம் தேடமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.
 //அதாவது ஏந்த நாட்டு கரன்சியில் சம்பாதித்தாலும் சரி, இன்றைய நிலையில் Gross salary, இந்திய மதிப்பு ரூ.15000க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் தன் வாரிசுகளுக்கு சாதிச்சான்றிதழ் வாங்க மாட்டேன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் அதை கிழித்துப்போடுவேன், சமூகத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் மேலே வர உதவியாக ஏற்கனவே மேலே வந்த என் குடும்பம் இனி நான் சுயநினைவு இருக்கும் வரையில் அரசாங்கத்தின் சாதிச்சான்று வாங்கவோ, அதன் பலன்களை அறுவடை செய்யவோ தடையாக இருப்பேன் என்று உறுதி கூற வேண்டும்//

அப்படியென்றால் ஐ.ஐ.எம்மில் OBC இடங்களில் எப்படி ஆள் சேருவார்கள் என்று விளக்க முடியுமா

http://www.payanangal.in/2008/12/nair-service-society.html
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link