<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

காலேஜ் :: சரக்கு வச்சிருக்கேன்


சரக்கு வச்சிருக்கேன் தொடர்ச்சி...


காலேஜில் சேர்ந்து ரொம்ப நாட்கள் சரக்கு என்ற பேச்சே இல்லை (காலேஜில் அதற்கு பெயர் தண்ணி...) டே-ஸ்காலர்னு பேரு, ஆனா சேலத்துக்காரனுங்க நம்ம மும்மூர்த்திங்க ரூம்லதான் பாதி நேரம் கழியும். மூன்று பேரில் ரொம்பவும் கண்டிப்பானவன் மாமா.. குடும்ப நண்பன் என்ற வகையில் நமக்கு நாமே திட்டத்தில் மீதி ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு அதிகாரி வேலை வேறு செய்து கொண்டிருந்தான். அவன் இல்லாத நேரம் காட்டானுக்கு புதிய வென்சர்ஸில் இருக்கும் ஈடுபாடு வெளிவரும்... தண்ணியடிப்பதை பற்றிய காட்டானின் ஆர்வம், மாமா செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருந்த ஒரு நாளில் கன்னா பின்னாவென பீறிட்டது. இருந்தாலும் நாலாவது முறையாக கேட்டான்...

"டேய் ஒண்ணும் ஆகாதில்ல.. மாமா சினிமாவுல இருந்து வந்து கண்டுபிடிச்சிட்டான்னா என் படிப்புகே வேட்டுடா"

"அட நாந்தான் அனுபவசாலி சொல்றேனில்ல.. என் உடம்ப பாரு... எனக்கே கொசு கடிச்ச மாதிரிதான்டா இருந்தது.. உனக்கு என்னடா ஆகும்கிற..."

"சரி இருக்கறதிலேயே லேசு போதையா ஏதாவது ட்ரை பண்ணுவோம்டா..."

"சரி இவ்ளோ பயப்படுற, ஃபர்ஸ்ட் டைம்கிறதால நீ வேணா பீர் சாப்பிடு. எனக்கு ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறதால நமக்கு ஹாட்தான் சரிப்பட்டு வரும்.."


"ஒரு பீரும் ஒரு க்வார்டரும் கொடுங்க"

"க்வார்டர்னு பொதுவா சொன்னா எப்பிடி தம்பி. என்ன வேணுமின்னு சொல்லுங்க.."

என்ன வேணுமா, முன்ன பின்ன செத்திருந்தா சுடுகாடு தெரியும்.. என்னன்னு சொல்றது

"உங்க ஃபேவரிட்டு என்னங்க..."

"நமக்கு வகையில ஒரு ஃபேவரிட்டு இருக்கு தம்பி.. உங்களுக்கு என்ன வேணும், பிராந்தியா விஸ்கியா ரம்மா..."

ரம்.. ரேஸ் குதிரைகள் ஓடுவதற்கு முன் குடிக்கும் சமாச்சாரம் என்று படித்திருக்கிறோம். ஒரு வேளை ஜிவ்வுன்னு சுறுசுறுன்னு இருக்குமோ..

"ரம்மே கொடுங்க... என்னங்க இது ரம் கூலிங்ல இல்லையா"


பீரில் உள்ள வசதி, "கலக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்..." ஆனால் ரம்மு விஷயம் அப்படியா.. ஹாஸ்டலில் ஏது தம்ளர் எல்லாம்.. தண்ணீர் பிடிக்கும் ஜக்கில் ப்ராந்தியும் தம்ஸ்-அப்பும் கலந்த போது கொஞ்சம் வாய்மூடி காரியத்தில் மட்டும் கண்வைத்துக்கொண்டிருந்திருக்கலாம்... ஏதோ பேசப்போய் அது முற்றி போட்டியில் முடிந்தது... அதாவது முதல் தடவை தண்ணி அடிக்கும் காட்டானும் அனுபவசாலியான நானும் யார் முதன் முதலில் சரக்கை காலி பண்ணுவது... பீரை விட ஹாட்டில் பலமடங்கு ஆல்கஹால் அதிகம் என்ற என் வாதத்துக்கு "க்வார்ட்டர் ரம்மோட அளவு எங்க, அத விட நாலு மடங்கு இருக்கிற ஃபுல் பீரோட அளவு எங்க" என்ற அவனின் (சப்பை) எதிர்வாதம் ரூமில் இருந்த எல்லாருக்கும் சரியாக படவே பந்தயம் ஆரம்பமானது... சரி அதையும் பாத்திருவோம்.

நான் ஜக்கை காலியாக்கி தூக்கி போட்டபோது அவன் பீர் பாட்டிலில் பாதிதான் காலியாகியிருந்தது.. பந்தயத்தில் ஜெயித்துவிட்டோம். ஒரு சாதாரண பந்தயத்திற்கு போய், எனக்கு எதற்கு ஏகப்பட்ட பெருமிதம் தலைக்கு ஏறுகிறது.. இல்லை இதற்கு பெயர்தான் போதையா..

"மச்சி.. போதையெல்லாம் இல்ல.. கடக்கி போனது ரெம்ப டயர்டா ஒரு மாரி இருக்கு.. மெஷ்ஷ¤க்கு போம்போது எழுப்பு... அது வரிக்கும் லேஷா.."

தண்ணியடிச்சா தலை தரைக்கு சமமா ஆகக்கூடாது என்ற பாடத்தை வாழ்க்கை சில சமயம் போதையாய் இருக்கும் சமயத்திலும் கற்றுக்கொடுக்க நினைப்பதைத்தான் life is harsh என்றாரோ ஜும்பலயா அறிஞர் ழ்பா..

படுத்த சில நொடிகளில் சினிமாவில் தூங்கிக்கொண்டிருக்கும் ஹீரோயின் தொலைதூர ஹீரோவுக்கு நிகழும் ஏதாவது ஒன்றை நினைத்து திடுக்கென எழுவது போல எழுந்தேன். படுத்தால் பயித்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. நடந்தால் சரியாக போகுமோ... எழுந்து நின்றேன். ஆனால் காலுக்கு கீழே பூமி சுழலுவது போல் ஃபீலிங். 24 மணிநேரத்துக்கு ஒரு தடவை சுற்ற வேண்டியது ஏன் இப்போ மட்டும் ஒரு மணிநேரத்துக்கு 240 தடவை சுற்றுகிறது. உடனே உட்காராவிட்டால் விழுந்துவிடுவேன். உட்கார்ந்தால் பூமி சுற்றுவது நிற்கவில்லை.. மாறாக பூமிக்கு உள்ளேஏஏஏஎ உள்ளேஏஏஎ போகிறேன். ஒன்றும் புரியவில்லை.. ரூமில் எல்லாரும் சிரிப்பது மட்டும் தெரிகிறது... சரி படுத்து பார்ப்போம் என்று படுத்தால் பைத்தியம் பிடிப்பதில் ஏதும் மாற்றம் இல்லை.. அப்பொழுதைய நிலையில் நில், உட்கார், படு என்பதை தவிர வேறு எதுவும் செய்யும் நிலையிலும் நான் இல்லை.. ரூமில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் கொட்டிக்கொண்டு ஃப்ரெஷ் ஏர் வாங்கினால்தான் சரியாகும் என்று ஜன்னல் பக்கம் போனால் இழுத்து உள்ளே வீசப்பட்டேன். மூன்றாவது மாடியில் நின்று கொண்டு காற்று வாங்க ஜன்னலுக்கு வெளியே போவேன் என்று நினைத்துப்பார்க்காத ரூமீஸ் முகத்தில் இப்போது சிரிப்பு மிஸ்ஸிங்..

உடனே பாத்ரூமுக்கு ஓடி ஷவர் திறந்து பச்சை தண்ணீர் நடுமண்டையில் அடிக்க நின்றேன், இல்லை உட்கார்ந்திருந்தேன்.. இரண்டு நிமிசத்தில் ரூம் மக்கள் வந்துவிட்டார்கள்..

"டேய் போதும் வாடா"

"10 நிமிட்ஸ் மச்சி... ஆல்ரைட்.. ஒண்ணும் ப்ரச்னை இல்ல.."

"பத்து நிமிசமா, ஏற்கனவே 40 நிமிசமா நீ தண்ணியில நின்னுகிட்டு இருக்க.. ஜன்னி கின்னி வந்து தொலைய போகுது வந்து தொல.."

"இன்னும் ஒரு 5 நிமிசம்டா"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் வா.."

ரூமுக்கு இழுத்து வந்து தலை துவட்டி விட்டார்கள். ஆனால் நிற்பது, நடப்பது, படுப்பதை தவிர வேறு எதுவும் செய்யத்தெரியாதவனுக்கு ஷவரே சொர்க்கம்..


செமஸ்டர் முடிவில் வந்தது கோவா பயணம்... தேசிய மாணவர் படை மாணவர்கள் இந்திய ராணுவத்தின் பணிகளை அருகிருந்து கவனித்து பயன்பெற ஆர்மி அட்டாச்மெண்ட் கேம்ப்... உண்மையான ஆர்வத்தோடு தேசிய மாணவர் படையில் சேர்ந்த நான் கோவா போகும் பிரிவை எடுத்தது மட்டும், சீனியர் மாணவர்களின் கேம்ப் அனுபவங்களை கேட்டபின் ஏற்பட்ட ஆசையால்தான்... வந்து சேர்ந்துவிட்டோம் என்ற தகவலை வாத்தியாருக்கு தகவல் சொல்வதற்காக போன ஜால்ரா சுப்புவோடு சும்மா துணைக்கு போன கரூர்காரன் வரும்போது தனியாக வந்தான்..

"அவன் வீட்டுக்கு போன் பண்ணிகிட்டு இருக்கான்டா.., சரி நாம எதுக்கு சான்ஸ மிஸ் பண்ணுவானேன்னு..." பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு க்வார்ட்டரை எடுத்தான். டாக்டர்ஸ் ப்ராந்தி. ஏற்கனவே பட்ட அனுபவத்தால் சூடு கண்ட பூனையாக இருந்த எனக்கு தைரியம் ஊட்டி க்வார்ட்டரை நாங்கள் இருவரும் காலி செய்த போது ஒரு மாதிரி ஜிவு ஜிவு என்று நன்றாகவே இருந்தது. அப்படியே மேலதிக தகவலகள் நிறைய விசாரித்து வந்திருந்தான்... பீர் 8 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இருப்பதிலேயே காஸ்ட்லி பீர் கிங்ஃபிஷர், 13 ரூபாய். அதுவும், காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் ஒயின் ஷாப்பிலேயே எடுத்துக்கொண்டு 3 ரூபாய் தருகிறார்கள். இது தவிர ஃபென்னி என்று ஒரு சரக்கு இருக்கிறது.. coconut fenny, cashew fenny என்று பல டைப்பில் கிடைக்கும் ஃபென்னி லோக்கல் சரக்கு... விலையோ மலிவு, தரமோ அதிகம்..

தினமும் எங்கள் கேம்பிலிருந்து ஆர்மி கேம்புக்கு கூட்டி செல்வார்கள். ஒரு இரண்டு மைல் இருக்கும். வரும்போது அவனவன் நைசாக ஒதுங்கி, பீர் பாட்டிலை வாங்கி இடுப்பில் சொருக்கிக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் ரெயின் கோட் இருக்கும் என்பதால், வெளியே தெரியாது... இரண்டு நாட்கள் கழித்து வரும் சீனியர் பசங்க வந்தவுடன் அடிக்க முடியுமோ முடியாதோ என்று முடிந்தவரை இரு நாட்களில் ஃபென்னியும் பீரும் அடித்து மகிழ்ந்திருந்தோம்... இரண்டு நாட்கள் கழித்து வந்த சீனியர்கள் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, கரூர்காரனின் தகவல்களால் மகிழ்ந்து "அடங்கொக்கமக்கா, அப்பிடியா" என்று வாயெல்லாம் பல்லாகி சாதாரணமாக சொன்னார்கள் :: "சரி நாளையிலிருந்து வரும்போது எங்களுக்கும் வாங்கிட்டு வந்திருங்க.."

ஏற்கனவே இடுப்புல ஒண்ணு ரெண்ட எடுத்து வரதுக்கே தாவு தீர்ந்துடுது.. சில சமயம் ராணுவ கேம்ப் அருகிலேயே சான்ஸ் கிடைக்கும். அங்கிருந்து நம்ம கேம்ப் வரை இரு கி.மீக்கு இடுப்பில் பீர் பாட்டிலோடு நடப்பதை நினைத்து பார்த்தாலே திகிலாகிறது... இதுல இவனுங்களுக்கு வேற சேத்தா.. மறுநாள் பீர் மப்பில் பாத்ரூம் வரை நடக்க சோம்பேறித்தனம் கொண்டு "எவ்வளவுதரம்தான் அவ்ளோ தூரம் நடக்கிறது" அப்படியே வேலியோரமாக மூச்சா போக போன எனக்கு வேலியில் ஆள் நுழையும் அளவு இருந்த ஓட்டை தெரிய, அன்றிலிருந்து ரெயின் கோட் கடத்தலுக்கு அவசியம் இல்லாமல் போனது. இரவில் கேம்ப் அமைதியானவுடன், ஓட்டை வழியாக வெளியேறி கேம்புக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒயின் ஷாப்பில் வாங்கிக்கொண்டுவந்து அப்படியே திருப்பியும் கொடுத்து நன்றாகவே போனது பொழுது...

ஒரு நாள் பகலில் கேம்புக்குள் நுழையும்போது கேம்ப் வாசலில் திடீரென முளைத்த ரெயின் கோட்டு சோதனை மையம் மொத்த ரெஜிமெண்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்க ஜாலியாக இருந்தது எங்கள் யூனிட் மட்டும்... மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்... இயற்கை எழில் கொஞ்சும் கோவாவின் சாயங்கால வேளையில் மொத்த ரெஜிமெண்டுக்கும் உதாரணம் காட்டப்பட்ட பெருமிதத்தில் டீ குடித்த படி மற்ற அனைவரும் தண்ணி கடத்தலுக்காக Frog Jump தண்டனை அனுபவித்ததை பார்த்த போது அவர்களை நினைத்து பாவமாக இருந்தது... இல்லை இல்லையா...


அப்புறம் காலேஜில் எவனுக்காவது பிறந்த நாள், எவனுக்காவது ஆல் க்ளியர், எவனாவது முந்தின செமஸ்டர் கப் எல்லாம் க்ளியர், எவனாவது எல்லா சப்ஜெக்டும் காலி (வாஷ் அவுட்) என்று எல்லா விசேஷங்களுக்கும் பார்கள் எங்களால் சுபிச்ஷமடைந்தன... முக்கியமாக காதல் தோல்வி..

ஒரு நாள் கோவிலுக்கு போய்க்கொண்டிருந்த போது, எதிரில் நரியும் சண்முகமும்... நரி சொன்னான், "டேய் தண்ணி அடிக்கப்போயிகிட்டு இருக்கோம். எதுவும் பேசாம எங்கூட வா..."

நரி ஸ்மால் ஆர்டர் செய்தான்.. என் பார்வையை புரிந்து கொண்டவனாய், ட்ரீட் சண்முகத்துது என்றான்... அடப்பாவி சொந்த காசுன்னா பீரு.. அடுத்தவன்னா ஸ்மாலா... சரி ஊரோடு ஒத்து வாழ்...

"பேரர், எனக்கு ஒரு லார்ஜ், அப்படியே சிக்கன் 65 ஒரு ப்ளேட்...

சண்முகம் முகத்தில் சோகம் அப்பிக்கிடக்கிறது.. எதைப்பற்றியும் கவலைப்படாதவனாய் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்...

"என்ன சண்முகம் என்ன விசயம், எதுனா காதல் தோல்வியா"

நரிக்கு ஆச்சரியம் "எப்பிடிடா கண்டுபிடிச்ச"

"என்னது உண்மையிலேயே காதல் தோல்வியா, இவன் கப்பல் கவுந்தா மாதிரி இருக்கறத வச்சி குத்துமதிப்பா கேட்டேன்... பின்ன நாம என்ன கப் வாங்கறதுக்கு எல்லாமா இவ்ளோ ஃபீல் பண்ண போறோம்"

"ஆமாடா, லஷ்மி சண்முகத்துகிட்ட இனிமே ஃபிரண்ட்ஸா மட்டும்னா பழகலாம்னு சொல்லிட்டாலாம்"

"சரி, இப்ப அதுக்கு என்ன"

"என்னது, அதுக்கு என்னவா, சண்முகம் லஷ்மிய எந்தளவுக்கு உயிருக்கு உயிரா நேசிச்சான்னு உனக்கு தெரியாதா"

உண்மையில் தெரியாது...

"நரி, இப்ப எதுக்குடா இவன இங்க கூட்டிகிட்டு வந்த"

"பயங்கர சோகமா இருக்காண்டா.. யார்கிட்டயும் பேச மாட்றான். மதியத்துல இருந்து சாப்பிட கூட இல்ல... திடீர்னு சாயங்காலம் என்னடான்னா படிப்பும் வேணா, ஒரு வெங்காயமும் வேணாம், ஊரப்பாக்க போறேன்னு அனத்த ஆரம்பிச்சிட்டான்... அதான் கொஞ்சம் ஆறுதலா இருக்குமேன்னு... (ரகசியமாக) கொஞ்சம் தற்கொலை எண்ணம்கூட இருக்கும் போல தோணுது"

"சரிதான்.. நீயோ பேசுனா காசு கேப்பாங்களோன்னு மணிரத்னம் பாணில பேசுறவன்.. நீ இவனுக்கு ஆறுதலா..."

"அதான உன்ன துணைக்கு கூப்பிட்டேன்"

"சண்முகம்... இப்ப இந்த நிமிஷத்த எடுத்துக்க... லஷ்மி என்ன பண்ணிகிட்டு இருப்பான்னு நினைக்கிற"

சண்முகம் ஒன்றும் சொல்லவில்லை..

"பேரர், கொஞ்சம் வெங்காயம் கொண்டாங்க... அப்படியே இன்னொரு லார்ஜ்"

"சண்முகம்.. லஷ்மி இந்நேரம் நிம்மதியா தூங்கிகிட்டு இருப்பா... நீ என்னடான்னா... " என்று ஆரம்பித்து காட்டில் மவன் பெரிய படிப்பாளி என்று கனவுகளோடு காத்திருக்கும் அவன் பெற்றோர், இவன் மீது பாசமாக இருக்கும் உடன்பிறப்புகள் என்று சகலரையும் ஞாபகப்படுத்தி "இவ்ளோ பேரு உனக்காக தூக்கம் தொலச்சி இருக்க, நீ என்னடான்னா..." என்று சென்டியை போட்டு தாக்கி பூவே உனக்காக க்ளைமேக்ஸ் பிச்சை வாங்கணும் என்ற கணக்காக காதல் தத்துவங்கள் பலதை சொல்லி குழப்பி கொசுறாக சில சத்தியங்களையும் வாங்கி நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்த பின்னும் சண்முகம் தூங்கவில்லை, நாங்கள் தூங்கிப்போனோம்..

சண்முகம் சம்பவத்துக்கு அப்புறம் எங்கள் சர்க்கிளில் எவனுக்கு காதல் தோல்வி என்றாலும் சபையில் எனக்கு சில பல லார்ஜுகள் ரிசர்வ் செய்யப்பட்டது... தண்ணீ தட்டுப்பாடு என்றால் என்னவென்றே என்னால் உணர முடியாத அளவு யாருக்காவது காதலும் தோல்வி அடைந்துகொண்டே இருந்தது...


சரக்கும் சைடும் தொடரும்...



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//தண்ணீ தட்டுப்பாடு என்றால் என்னவென்றே என்னால் உணர முடியாத அளவு யாருக்காவது காதலும் தோல்வி அடைந்துகொண்டே இருந்தது...// மீண்டும்.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. வேணுமின்னா காலேஜுக்கு காலேஜ் காதல்தோல்வி'ன்னு கூட வச்சுக்கலாம் ;-)
 



தல,
நல்லாத்தான் சரக்கு வச்சுருந்திருக்கீங்க.

//பேரர், கொஞ்சம் வெங்காயம் கொண்டாங்க... அப்படியே இன்னொரு லார்ஜ்"
//
நண்பனின் சோகத்தை தன் சோகமாய்க் கருதி லார்ஜும் மறக்காமல் வெங்காயம், சிக்கன் 65 என்று சக்னாவும் மறக்காமல் ஆர்டர் செய்த உங்க compassion புல்லரிக்கவைக்கிறது.

ஆமா, காதல் தோல்வி விஷயத்துல empathy-ஆ, sympathy-ஆ இல்ல introjection-ஆ?
 



// காலேஜுக்கு காலேஜ் காதல்தோல்வி //

நீங்க இருந்தது டேபிளுக்கு இந்த பக்கமா, இல்ல பில் பே பண்ற அந்த பக்கமான்னு சொல்லுங்க ராசா...

*

// ஆமா, காதல் தோல்வி விஷயத்துல empathy-ஆ, sympathy-ஆ இல்ல introjection-ஆ? //

தனித்தனியா பகுத்து எல்லாம் பாக்க முடியல இராம்ஸ்.. நண்பனின் சோகம் நமக்கும் சோகம், அவ்வளவுதான்.. எங்கப்பா அந்த சில்லி சிக்கன் இன்னுமா வரல... (இப்படியெல்லாம் கோக்குமாக்கா கேக்கறீங்களா.. அடுத்த பொதுக்குழுல கவனிச்சிக்கிறேன்)
 



FANTASTIC!
SIMPLY HILARIOUS!

EAGERLY AWAITING FOR THE NEXT POST!
 



தல.. செம Refreshing Post.. கலக்கீட்டீங்க..
 



summaa sodukku poottu kaaleej atmaaSqpiyarai kaNNukku munnaati koNdu vanthittiingka.. nallaa "kalakkalaa" irunthathu.
 



சும்மா சொடுக்கு போட்டு காலேஜ் அட்மாஸ்ஃபியரை கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்திட்டீங்க.. நல்லா "கலக்கலா" இருந்தது.
 



"மச்சி.. போதையெல்லாம் இல்ல.. கடக்கி போனது ரெம்ப டயர்டா ஒரு மாரி இருக்கு.. மெஷ்ஷ¤க்கு போம்போது எழுப்பு... அது வரிக்கும் லேஷா

beautiful. :-)
 



மும்மூக்கி,

எப்பிடிய்யா இப்பிடி கலக்குற!
 



ம்.. ம்.. நடத்துங்க... :-)
 



கல்லூரி, விடுதி அப்படின்னாலே ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோரு கல்லூரி விடுதியிலும் ஒரு க்வார்டர் கோவிந்தன் உண்டு.

நான் படித்த கல்லூரியில் அந்த ஆண்டில் "ஆறுதல் கிடங்கு" குத்தகைதாரர் அடியேன்தான்.

அங்கு உங்களிடத்தில் அதே பொறுப்பில் நீர் இருந்திருப்பீர் போல!

நீங்கள் கூறியிருக்கும் பார்ட்டி காரணங்களோடு , கூடுதலாக ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் நண்பர்களும் பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதபடாத சட்டம்.

பி.கு. இப்போது திருந்தியாச்சி! (பார்ட்டி வைக்க ஆள் கிடைக்காதது கூட காரணமாக இருக்கலாம் :D)
 



கல்லூரி, விடுதி அப்படின்னாலே ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோரு கல்லூரி விடுதியிலும் ஒரு க்வார்டர் கோவிந்தன் உண்டு.

நான் படித்த கல்லூரியில் அந்த ஆண்டில் "ஆறுதல் கிடங்கு" குத்தகைதாரர் அடியேன்தான்.

அங்கு உங்களிடத்தில் அதே பொறுப்பில் நீர் இருந்திருப்பீர் போல!

நீங்கள் கூறியிருக்கும் பார்ட்டி காரணங்களோடு , கூடுதலாக ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் நண்பர்களும் பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதபடாத சட்டம்.

பி.கு. இப்போது திருந்தியாச்சி! (பார்ட்டி வைக்க ஆள் கிடைக்காதது கூட காரணமாக இருக்கலாம் :D)
 



நம்மல மாதிரி பெரிய குடிமகனாதான் இருந்திருக்கிறீங்க !!!

நானும் எதாவது முகமூடி போட்டுட்டுத்தான் நம்ம கதைய சொல்ல முடியும்.!!
 



//"நமக்கு வகையில ஒரு ஃபேவரிட்டு இருக்கு தம்பி.. உங்களுக்கு என்ன வேணும், பிராந்தியா விஸ்கியா ரம்மா..."//

அன்னைக்கு கையில கொஞ்சம் காசு இருந்ததுனால எல்லாத்துலேயும் ஒண்ணொண்ணு வாங்கி ஒரு கலக்கு கலக்கி அடிச்சு, அப்புறம் நடந்த கலாட்டா.....

என்னென்னவோ ஞாபகப் படுத்திட்டீங்க. ஹ்ஹூம்....
 



சரி, உங்க கருத்து ??