<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மீள்பதிவு - நாய் அழகுதான் கடிக்கும் வரை


சுதந்திரமாம் சுதந்திரம்
அண்டிப்பிழைக்கும் நமக்கெதற்கு

என் பிழைப்பே நாய்ப்பிழப்பு
சுயமென்ன வேண்டியிருக்கு

ஆயிரம் வருடம் அடிமை வாழ்வை
அனுபவித்து வாழ்ந்த என்னை
அவிழ்த்துவிட்டால் என்ன செய்ய

கோண வாலும்
கேன சிரிப்பும்
பொழைப்போட்ட போதுமெனக்கு

ஏற்றுக்கொண்டவனே எஜமான்
எஜமான் சொல்லே வேதம்

அடிபணிந்து காலம் ஓட்ட
போட்டதை தின்று பாதுகாக்க
எவனாயிருந்தால்தான் என்ன

img crtsy: dircon.co.ukநல்லவனா கெட்டவனா
நமக்கெதற்கு கவலை

எஜமானுக்கு முன் நடந்தால்
எலும்பு கிடைக்கும் ரவைக்கு

நியாயமா அநியாயமா
நமக்கெதற்கு சிந்தனை

தலைவனுக்கு எதிரியா
பாய்ந்து பிடுங்கு அஃதே மந்திரம்

மனித பாஷை புரியாதுதான்
எஜமானுக்கு வசவா வாழ்த்தா
நாய் நமக்கு அது எதற்கு
சிரிப்பில்லையா எதிராளி முகத்தில்
முதல் குரைப்பில் நன்றி காட்டு

தேவைப்படின் குரைத்து
அளவாக முறைத்து
அவ்வப்போது வாலாட்டி
அழகென்றே சொல்கிறது ஊர்

எனக்கும் வயதாகும்
என் குரைப்பும் மதிப்பிழக்கும்
குரல் நல்ல காவல் என்ற பார்வை
சகிக்க இயலா ஊளையென்றாகும்
அப்போது ஊரே என்மேல் கல்லெறியும்


*

இருந்தால் போல் இருந்து நேத்து பக்கத்து வீட்டு நாய்க்கு வெறி பிடித்து விட்டது... இவ்வளவு நாள் எப்போதாவது பொத்தாம் பொதுவாக குரைக்கும் நாய் இப்போது சம்பந்தமில்லாமல் எல்லாம் குரைக்க ஆரம்பித்து விட்டது. நாக்கில வெறி நீர் ஒழுக ஊளையிடும் அதன் குரலை கேட்க பாவமாக இருக்கிறது. அதன் வாழ்க்கை முறை பற்றி சிந்தித்த போது விளைந்த வார்த்தைகள் மேலே... இதை கவிதை என்று எவரேனும் சொன்னால் :: அட எனக்கு கூட கவிதை வருகிறதே...

*

டிஸ்கி :: மீள்பதிவு செய்யும்போது பின்னூட்டங்களையும் சேர்த்து போடவேண்டுமா என்பது முன்னோர் நோட்ஸில் சொல்லப்படாததால் வெறும் பதிவு மட்டும் இங்கு மீள்கிறது. பின்னூட்டத்துடன் கூடிய அசல் பதிவு இங்கு




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


மீள்பதிவுக்கு மிக்க நன்றி. நல்ல பதிவு, நன்றி.

உங்கள் நாய்க்கவிதையால் உந்தப்பட்டு, நர்சரிப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்காக நான் எழுதிய ஒரு 'ஹை-ஜோக்' ரைம்ஸ்...

Oh Bubba oh,
Won't you ever grow?
Look, dibbly dobbly doo,
"Jesus" found a screw!!

இந்தக் கவிதையை வடிக்க எனக்கு உதவிய முகமூடிக்கு என் மனப்பூர்வமான நன்றி.

Content above - Word count: 40

P.S: இன்றைய பொடிமட்டைத் தலைப்பு: சுயவிமர்சனம்
 



தங்கள் கவிதையில் "நாய் / வால் / குரைப்பது " வரும் இடங்களில் தேவையான வேறு வேறு வார்த்தைகளை போட்டுக்கொள்ளலாம் போலிருக்கிறதே (அல்லது வேறு ஏதாவது உள்குத்து இருக்கிறதா?)
:-)
 



He doesn't know his left from his right ... but he knows right from wrong என்ற அடைமொழியுடன் The Contender என்று ஒரு படம்... அதில் ஜனாதிபதி அடிக்கடி Swan Song என்று சொல்வார். உங்கள் கவிதையை Swan Song என்று சொல்லலாமா?

கருத்துக்கு நன்றி.

*

லதா. உள்குத்து என்றால் என்ன?
 



//உங்கள் கவிதையை Swan Song என்று சொல்லலாமா?//

MOMMY!! MOMMY!!! MOMMY!!! ஹிஹி ;-) Way to go, bossu, way to go! (வேண்டுமென்றால் என்னைக்குறித்து நானே சொல்லிக்கொள்கிறேனென்றும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் சந்தோஷத்தைக் கெடுப்பானேன்?)

Contender என்று நீங்கள் சொன்னதும் மார்லன் ப்ராண்டோவின் On the waterfront குறித்த ஹைப்பர்லிங்க் வந்துவிட்டது. "I want to be somebody... I want to be a contender" (Contendaah... என்று New England/பிரிட்டிஷ் உச்சரிப்புடன் வாசிக்க) வசனத்தை உங்கள் தர்க்கங்கள்மூலம் கூறமுயலும் உங்கள் தாகத்தையும் யோசித்துப் பார்க்கிறேன் - மடாஷுதான், அடச்சே, டமாஷுதான் போங்க.
 



சன்னாசி, டமாஷை ரசித்தீர்களா? ஏதோ என்னால் முடிந்தது... இதை பொறை, உப்பு பிஸ்கட், சூப்பு காலு போன்ற சமாச்சாரங்களை எஜமானி/னன் மஞ்ச பையிலிருந்து எடுத்து காட்ட காட்ட குசியகி துள்ளி குதிக்கும் பொமரேனியனை மனதில் வைத்து படியுங்கள் இன்னும் டமாஷா இருக்கும்.

*

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன - கலீல் கிப்ரான்

உங்கள் நடுநிலைமை மீது மட்டும் ஏன் இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்று யோசித்து பார்க்கிறேன். பப்பி நாய்களும் விசர் நாய்களும் உப்பு பிஸ்கட் சமாச்சாரங்களுக்காக துள்ளி குரைப்பது ஒரு புறம். பரமார்த்த குரு தனது மேஜிக் குல்லாவிலிருந்து "அமெரிக்காவில் மாடு ம்மா என்கிறது, இந்தியாவில் குழந்தை ம்மா என்கிறது ஆகா மாடு=குழந்தை" என்றெல்லாம் ஈக்குவேஷ முயல்களை காட்டி வித்தை காட்ட பரமார்த்த சீடர்கள் கைகொட்டி சிரிக்க என்று கூத்து ஒரு புறம் என்றிருக்க நானொ இதையெல்லாம் புறந்தள்ளி போகாமல் கேனையன் மாதிரி விளக்கம் கொடுத்து defensive ஆட்டம் ஆடிய இடத்தில் வந்து ஏதோ இடத்தில் நடந்த என்னவோ ப்ரச்னையை பின்னூட்டமாக போட்டு, அதை பரமார்த்த சீடர்களை நினைத்து பாருங்கள் என்று நான் உங்களிடம் கேட்ட பிறகும், அதற்கு பின் வந்த உங்கள் பதில் + அந்த பெரிய பின்னூட்டம் எல்லாம் பப்ளிஷ் பண்ணிய பிறகும் நீங்கள் முகமூடியின் நேர்மை பாரீர் என்றெல்லாம் திருகி மட்டுறுடுறுடுறுத்தினீர்கள். அட, சில பதிவுகளில் பின்னூட்டம் விடுவது "சப்போர்ட் காண்பிப்பது" என்ற ரீதியில் அதுமட்டும் சரியா என்று நீங்கள் என்னை கேள்வி கேட்கிறீர்களோ என்று நினைத்தேன்.. ஆனால் பரமார்த்த சீடர்களுக்காக காண்பிக்கப்பட்ட அஜக்மஜக் மேஜிக்கை நீங்களும் லேகியம் விற்றீர்களே... அப்ப பிரிஞ்சுது பொடி. உங்களுக்கு யார் மீதோ என்னவோ கோபம். அந்த "யாரோ" நான்தான் என்று தீவிரமாக நம்புகிறீர்கள். அதை முன்னிறுத்தியே உங்கள் roulette சுற்றுகிறது. மந்தை கூட்டத்தை தாண்டி பார்க்கும் என்னால் உங்களை மட்டும் ஏன் தாண்ட முடியவில்லை என்று யோசிக்கிறேன். அதனால் ஒன்றும் தப்பில்லை என்றே தோன்றுகிறது. நீங்களும் மந்தையில் ஒருவர் அல்ல என்று நான் நினைப்பதால் ஒன்றும் குடி முழுகிவிடாது...

*

குழம்பிய குட்டையின் பலனாக எனக்கு தெளிவாக தெரிந்த சில மீன் குஞ்சுகள் ::

மீன்குஞ்சு 1 :: விளக்கம் என்ற பெயரில் இருட்டில் வெளிச்சம் போட்டால் மட்டும் இருட்டு மறைவதில்லை. ஆக இனி விளக்கத்தில் நேரம் வீசாமல் நடக்கும் வேலையை மட்டும் பார்

மீன்குஞ்சு 2 :: என்னை உனக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீ என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே (இது உங்களுடையதுதான்)

மீன்குஞ்சு 3 :: நேர்மையாக கேட்டு ஆனால் மறுக்கப்பட்ட மூடப்பட்ட கதவுகளுக்கு உள்ளே இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக வெளியே போடப்படும் நகைச்சுவை நாடகங்கள் காரில் வரும் சிலருக்கு கேவலமாக தோன்றும் என்பதற்காக நாடகம் போடாமல் இருக்க முடியாது (இது அன்பே சிவம் விமர்சனம் அல்ல, ஒரு சுய சாசனம்)

*

உங்களுக்கு படங்கள் மீது ஆர்வம் right... இதற்கு முன் நான் குறிப்பிட்ட The Contender பாருங்கள். நன்றாக இருக்கிறது. விமர்சனம் கூட எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு விமர்சிக்க எல்லாம் அவ்வளவாக வராது :) சும்மா ஒரு ட்ரைலர் பாருங்கள். அதில் Laine என்ற பெண்மணி மீது ஒரு பரமார்த்த குருவால் "சந்தேகத்தில் பலன்" ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு வீசப்பட்டு அவர் reputation கிழித்து தோரணம் கட்டப்பட்ட நிலையில் ஜனாதிபதிக்கு மட்டும் வேறொரு சோர்ஸ் மூலம் உண்மை தெரிந்த பின் நடக்கும் உரையாடல் ::

President :: You know, Laine... you could've looked those pricks in the eye and told them the truth. Under oath. Told them they were full of shit. And barring that, you could've at least told me.

Laine :: But see, it really wasn't any of your business either, and it still isn't. Principles only mean something if you stick by them when they're inconvenient. If I ever did answer the questions... you know, even to exonerate myself... that would mean that it was okay for them to have been asked in the first place... and it isn't.

President :: You would sacrifice your reputation?

Laine :: Yes, I would.

Later, President's address to the congress :: So, ladies and gentlemen of this Congress... it pains my soul to tell you that you have brought blood and shame under this great dome. Your leadership has raised the stakes of hate to a level... where we can no longer separate the demagogue from the truly inspired. And believe this, there are traitors among us. And I'm not talking about those of you who sided against your party leadership. I'm talking about those of you who were patriots to your party... but traitors to the necessary end result: that of righteousness, the truth...

...So, let me make one thing clear. You come at us with whatever weapons that you have in your arsenal... but there is no weapon as powerful... as that of an idea whose time has come.
 



கவிதை நன்றாகத்தான் இருக்கிறது முகமூடி!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
 



வேறு யாரோ என்று நினைத்து உங்களைத் தாக்க அவசியமும் இல்லை, நீங்கள் யாரென்பது குறித்த எந்த அக்கறையும் இல்லை - இதைச் சொல்லத்தான் முடியும், நம்புவதும் நம்பாததும் உங்களது விருப்பம். பிறரைக்குறித்து நான் சொல்வது அனைத்தும் ஒருநாள் எனக்கும் பொருந்தக்கூடுமென்று உணராமலுமில்லை, இது அனைத்தும் ஒரு க்ளிஷேவாகத்தான் தோன்றுமென்றும் தெரியாமலில்லை.

//ஆனால் பரமார்த்த சீடர்களுக்காக காண்பிக்கப்பட்ட அஜக்மஜக் மேஜிக்கை நீங்களும் லேகியம் விற்றீர்களே... அப்ப பிரிஞ்சுது பொடி. உங்களுக்கு யார் மீதோ என்னவோ கோபம். அந்த "யாரோ" நான்தான் என்று தீவிரமாக நம்புகிறீர்கள்.//
No. If you still insist, so be it.
 



சரி, உங்க கருத்து ??