<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பத்ம வியூகம்


img crtsy: masters-gallery & exoticartindia.com

கடந்த வாரம் முகமூடிக்கு கேள்வி, முகமூடிக்கு பதில், முகமூடிக்கு கடிதம், முகமூடிக்கு ஆலோசனை/அறிவுரை, முகமூடியின் முகத்திரை கிழிப்பு என்று ஒரே முகமூடி ஸ்பெஷல்தான்... புல்லரிக்கிறது. அத்தனையிலும் நான் கண்ட ஒரே ஒற்றுமை - அவை யாவும் ஊகங்கள்/எதிர்பார்ப்புகள் அடிப்படையில் அமைந்திருந்தன.

நீங்கள் வலையுலகிற்கு புதியவரா :: எனில் STOP. உடனே போன பதிவுக்கு செல்லுங்கள். சில விசயங்களில் ignorance really is bliss.

M

நான் திருமா பட்டை போட்டு விகடனில் வந்திருந்த புகைப்படத்தை போட்டு ஒரு பதிவு எழுதினேன். அதை எழுதிய பின்புதான் திருமா நாத்திகர் இல்லை என்பது அறிய வந்தது. திருமாவுக்கும் பெரியார் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை சரிபார்த்துவிட்டு மீள்பதியலாம் என்று அதை மறைத்து வைத்தேன்.

இதன் தொடர்ச்சியாக தருமி திருமா நெற்றியில் திருநீறு என்று ஒரு பதிவு எழுதுகிறார். மனசாட்சி மழுங்கியவர்களின் பார்வையில் படாமல் போகும் என்று இரு விஷயங்களை அதில் குறிப்பிடுகிறார். அட, தருமியின் மனதை தைத்த, அவரின் மனதில் நின்ற அந்த இரு விஷயங்களை பற்றி அவராவது விரிவாக விளக்கியிருக்கலாம், ஆனால் முகமூடியின் முகத்திரையை கிழிப்பதே பதிவின் பிரதான நோக்கம் என்பதால் அவரும் அவ்விரு விஷயங்களை விளக்கவில்லை.

அட, முகமூடிக்கு மனதில் வேண்டாம், கண்ணில் கூட ஏன் தைக்கவில்லை என்று அவராக யூகம் செய்து ஒரு கேள்வியை கேட்கிறார். முகமூடிக்கு தைத்ததா இல்லையா, ஒரு வேளை வேறு விதமாக தைத்திருக்கலாம் என்றெல்லாம் யோசிககவில்லை. முகமூடிக்கு தைத்தது வேறுவிதமாக :: இனியன் கொல்லப்பட்டதை தமிழ்நாட்டில் யாரும் கண்டிக்காததற்கு காரணம் இனியன் தலித், தாழ்த்தப்பட்டவன் என்பது திருமாவின் வாதம். இனியன் ஒரு அரசியல் கட்சியின் அங்கம். இனியன் கொலை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா, சொந்த காரணங்களுக்காகவா, உட்கட்சி பூசலா என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது. சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி
கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே "போதிய அளவு" கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா?

இரண்டாவது சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் திருமாவின் பெற்றோர் ஒண்டு குடிசையில் நாட்களை நகர்த்தியது. "ஒரு அரசியில்வாதியின் வீட்டிலா இப்படி" என்று தருமியே ஆச்சர்யம் கொள்கிறார். தருமி கொள்ளலாம், ஆனால் முகமூடி கேட்டால் அதில் இருக்கும் உள்குத்து பார்ட் 1 பார்ட் 2 வெளிவரும்.

என் கண்ணில் தைத்த இந்த விஷயத்தை பற்றியெல்லாம் நான் எதுவும் எழுதவில்லை. சமீப போராட்டங்களின் போது பெரியாரை முழங்கிய திருமாவை நாத்திகவாதி என்று தவறாக நினைத்து இவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று ஆச்சரியத்துடன் ஒரு பதிவை போட்டுவிட்டேன். உடனே விபூதிக்கு முகமூடி ஹோல்சேல் ஏஜன்ஸி எடுத்திருக்கிறாரா? என்று கேட்கிறார். முகமூடி தவறை உணர்ந்து பதிவை தூக்கினார் என்பது உண்மைதான். ஆனால் அது அவர் எழுதிய பதிவு தவறானது என்பதால் அல்ல, திருமா நாத்திகராக இருப்பார் என்ற அபிப்ராயம் தவறாக இருந்ததால். இப்பொழுதும் நான் போட்ட அந்த பதிவில் எந்த தவறும் இருப்பதாக நினைக்கவில்லை. திருமாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று வேறு யாராவது பட்டை போட்டோவோடு பதிவு எழுதினால், தமிழ் கடவுள் வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்ற விளக்கமெல்லாம் கிடைக்கும். நான் எழுதினால் அது கண்களை உறுத்தும் பதிவு.

that said, இங்கே தருமியின் ஒரு முக்கியமான எதிர்பார்ப்பை குறிப்பிடவேண்டும் "திருமாவின் நெற்றியில் இருந்த திருநீற்றைவிடவும் அதில் திருமா சொல்லியிருந்த இரு விஷயங்களே வாசிப்பவர்கள் மனதில் ஏறி இருக்க வேண்டும்" தன்னை போலவே மற்றவர்களும் சிந்தித்து, அதை அவர் போலவே வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இல்லையெனில் அவராக சில யூகங்கள் செய்து கொள்வார். பதிவுகள் என்பது personal diary of free minds/common public என்பது மாறி சிற்றிலக்கிய சம்மேளனமாக மாறி வருகிறது என்பதை பல இடங்களில் நான் பதிவு செய்திருக்கிறேன்.. இங்கேயும் அதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வலையுலகத்துக்கு ஒரே ஒரு தருமி போதும். மற்றவர் அவரவர் பாணியில் சிந்திக்கட்டும், எழுதட்டும்.

அவரின் வாதமான "முகத்திரைக்குள்ளிருந்து எழுதுவதால் மட்டுமே பதிவுகளில் ‘இத்தகைய தரம்’ அமைந்துவிடுகிறதோ" என்பது மிகவும் போலியாக எனக்கு தோன்றுகிறது. தருமி என்ற புனைபெயரில் எழுதும் பதிவர் ரொம்ப நாள் கழித்தே தம் உண்மையான பெயர், புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டார். அந்த ஒரே காரணத்துக்காகவே அடுத்தவரின் முகத்திரையை பற்றி கேள்வி கேட்கும் உரிமையை அவராகவே எடுத்துக்கொள்கிறார். அவரின் வாதத்தின் படி அவர் படம் வெளியாவதற்கு முன் ஒரு தரமும் இப்பொழுது வேறு தரமும் உள்ளதா அவர் எழுத்தில். இல்லை, அவர் புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன் எழுதப்பட்ட பதிவுகளை குப்பை பதிவுகளாக கணக்கில் கொள்ளலாமா என்பதை அவர் தயவு செய்து சொல்லட்டும். ஒருவருக்கு அவர்களின் மதிப்பீடுகளை பொறுத்து உயர்வு/தாழ்வாக தெரியும் விஷயங்கள் எல்லாருக்கும் அப்படி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. எனவே தயவு செய்து, நீண்ட நாட்களாக முகமூடி என்ற பெயரில்/அடையாளடத்தில் எழுதி வரும் என் முகத்திரை பற்றி மீண்டும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதிவர் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் எழுதிய வாக்கியத்தை ஒரு சக பதிவர் என்ற முறையில் என் மேல் உள்ள அக்கரையில் சொல்கிறார் என்பதாக மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன். அக்கரைக்கு நன்றி. அதே சமயத்தில் சமீபத்திய "அங்கீகரிப்பால் உயரத்தில் வைக்கப்பட்டுப் புகழ் பெற்றதால் அதற்குறிய பொறுப்போடு" என்ற அடைமொழியெல்லாம் வேண்டாம். நான் அந்த அங்கீகரிப்பை ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். முதலில் நான் என் கருத்துக்களை பதியும் ஒரு பதிவர். அங்கீகாரம் என்பது தணிக்கை என்ற ஆயுதத்தை தாங்களாக கையில் எடுக்கும் ஒரு நிலையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி அதனால் என் கற்பனையை பாதிக்கும் பாரமாக மாறும் எனும்பட்சத்தில் அந்த முள்கிரீடத்தை நான் சுமக்க தயாராயில்லை. ஆகவே உங்கள் விமர்சனங்களை தாராளமாக எழுதுங்கள். ஆனால் என் மேல் பிம்பம் எல்லாம் வேண்டாம்.

M

தருமியின் பதிவிலே கருத்து சொல்ல வரும் இளவஞ்சியின் கண்களுக்கு, மற்ற எல்லாவற்றையும் விட திருமா பதிவை தூக்கியது குற்றமாக தெரிகிறது. அப்படியே வெகு காலத்திற்கு முந்தைய ஒரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. "க.நா.சுவும் கக்கூஸ் க்ளீனரின் வாக்குமூலமும்" என்ற ஒரு பதிவின் தலைப்பு மட்டும் ஞாபகம் இருக்கிறது அவருக்கு. பதிவு உள்ளே எழுதியிருந்தது என்ன, அது எதைப்பற்றி, யாரைப்பற்றி என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. ஆனால் திருமா பதிவு தூக்கப்பட்டதற்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும்போது சும்மா ஞாபக அடுக்கிலிருந்து முந்தைய பதிவையும் தூசி தட்டுகிறார்.. அதாவது "முன்பொரு முறை சகபதிவாளர் கழிவரை சுத்தம் செய்பவர் என்று தெரிந்தவுடன் ‘கக்கூசுகிளினர்’ என்றொரு பதிவு வந்து அதையும் காணோம்" என்று ஒரே போடாக போடுகிறார். எந்த பிண்ணனி/விபரமும் தெரியாமல், அப்பதிவு எழுதப்பட்டது கழிவரை சுத்தம் செய்யும் தொழில் மேற்கொண்ட ஒருவரை பற்றி என்றும், அந்த காரணத்தினால்தான் அப்பதிவு தூக்கபட்டது என்றும் தனது சந்தேகத்தை உண்மை போலவே எழுதுகிறார்.

"எந்த சகபதிவாளரை பற்றி நான் பேசினேன்/நீங்கள் பேசுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அவர் செய்யும் தொழிலை பற்றியோ (அ) அவர் ஜானிட்டராகத்தான் இருக்கிறார் என்பதற்கோ ஆதாரம் காட்ட முடியுமா? நான் படித்த வரை அவரின் பதிவாலோ, இடுகைகளாலோ அவரின் பெயரோ, தொழிலோ மற்ற எந்த பர்சனல் விஷயங்களோ இன்று வரை அறிந்திருக்கவில்லை" என்று நான் கேட்ட பின், "அவரது தொழில் கழிவரை சுத்தம் செய்வது இல்லை என்ற என்னுடைய தகவல் தவறாதது எனில் என் மனப்பூர்வ மன்னிப்பை இங்கே கேட்டுக்கொள்கிறேன்!" என்று தனது மன்னிப்பை குற்றம்சாட்டப்பட்ட தருமி பதிவில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் கேட்கிறார். நல்லது.

இளவஞ்சி அறியாத மொடர்ன்கேர்ள் என்ற பதிவரை பற்றி பலருக்கு தெரியும். ரொம்ப நாள் முன்பு வாந்தி எடுத்து அதை புகைப்படம் பிடித்து போட்டு - டோண்டுவின் ஒரு பதிவு அந்த படத்துக்கு சமம் என்று - ஒரு பதிவு வந்தது, பின்னர் அது தூக்கப்பட்டது (அது குறித்தெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டோம்) பிறகு குசு விடும் சத்தத்தை வைத்தே ஒரு பதிவு வந்தது. சமீபமாக போலியின் வன்புணர்ச்சியால் டோண்டுவுக்கு குழந்தை கிழந்தை பிறந்தால் என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு வந்திருக்கிறது. இதையெல்லலம் செக்கூலரிஸ்டுகள் கண்டிக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அவர் புது பதிவர் அல்ல.இலங்கை தமிழில் வலை பதியும் பலருக்கும் அவர் யார் என்று தெரிந்தே இருக்கிறது. இளவஞ்சியின் ஆதர்சங்கள் பலர் அப்பதிவரின் பல பதிவுகளுக்கு பின்னூட்டம் எல்லாம் தருபவர்கள்தான். சின்னவன் என்ற பதிவருக்கும் அப்பதிவரை பற்றி, அவரின் பதிவை பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. அது எப்படி தெரியலாம்? முகமூடிதான் ஒருவேளை சின்னவனோ என்று "பனைமர தேள் தென்னைமரத்தில் நெறி" சந்தேகம் இளவஞ்சிக்கு வருகிறது. திடீரென இந்த சந்தேகம் நிறைய பேருக்கு ஒரே நேரத்தில் வருகிறது, அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது கண்முன் உள்ள விஷயத்தை பார்ப்போம்.

விளக்கம் கொடுத்த பின்னும் 'கக்கூசு கிளினர்' என்ற சொற்களில் தொக்கி நிற்கும் தொனி இளவஞ்சிக்கு வித்தியாசமாக படுகிறது. ஒரு முறை நண்பர்கள் சிலர் பீச்சுக்கு சென்றிருந்தோம். அப்போது கோணிப்பையில் குப்பை சேகரிப்பவர் ஒருவர் ஒரு செயலை செய்தார். அதை சுட்டி காட்டிய நான், அந்த குப்பை பொறுக்குபவர் செஞ்சத பாத்தியா என்றேன். குப்பை பொறுக்குபவர் என்று கேவலமாக பேசாதே! ragpicker என்று சொல் என்றான் ஒரு நண்பன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு போலீஸ்காரர், குதிரை ஓட்டுபவர், சுண்டல் விற்பவர் என்ற அடையாளம் போலவே ஒரு அடையாளத்துக்காக சொல்லப்பட்ட குப்பை பொறுக்குபவர் என்பது நாசூக்காக ragpick என்பதாக மாறி, அங்கே நான் சொல்ல வந்த விஷயம் மறக்கப்பட்டு வேறு ஒரு கோணத்தில் விஷயம் அலசப்பட்டது.

அது போலவே கழிவரை சுத்தம் செய்வதை தொழில் முறையாக கொண்ட ஒருவர் அளிக்கும் வாக்குமூலம் என்பதை குறிக்க கக்கூஸ் க்ளீனரின் வாக்குமூலம் என்று சொன்னேன். பதிவின் உள்ளே janitor என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டது. எத்தனை பேருக்கு janitor என்றால் என்னவென்று தெரியும் என்பதை சொல்லுங்கள். கழிவரை சுத்தம் செய்பவரின் வாக்குமூலம் அல்லது ஜானிட்டரின் வாக்குமூலம் என்று சொல்வதே சாலச்சிறந்தது என்று இளவஞ்சி நினைக்கலாம். கழிவரை சுத்தம் செய்யும் தொழிலை பற்றி கேவலமாக எதுவும் சொல்லப்படாத நிலையில் எனக்கு தோன்றிய வாசகத்தை நான் பதிவு செய்தேன். இதற்கு மேலும் 'கக்கூசு கிளினர்' என்ற சொற்களில் தொக்கி நிற்கும் தொனி இளவஞ்சிக்கு சரியானதாக படவில்லையெனில், அவரவருக்கு தோன்றுவதை எழுதி தங்கள் பெரிய மனுசத்தனத்தை வெளிப்படுத்திக்கொள்ளுங்கள். என்னளவில் ஒரு பதிவரின் சில பதிவுகளை சுட்ட அப்பதிவு எழுதப்பட்டது. அந்த பதிவின் பின்புலம் என்ன, ஏன் தூக்கப்பட்டது என்பதனை எல்லாம் மீண்டும் பேச விருப்பமில்லை.

என் பதிவு தூக்கப்படுவது / கருத்தில் தவறிருந்தால் திருத்தப்படுவது என்பதெல்லாம் ஒரு பெரிய குற்றமாக இதுவரை நான் கருதவில்லை. admin என்ற வகையில் எனக்கு அதற்கு உரிமை இருக்கிறது என்றே நினைத்திருந்தேன். தூக்கப்படும் பதிவோடு சம்பந்தப்படாதவர்களுக்கு எல்லாம் நான் விளக்கம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்திருக்கவில்லை. தற்போது உணர்கிறேன். இனி பதிவுகளில் correction/omission ஏதும் நிகழ்ந்தால் முன்கூட்டியே தெரிவிக்க ஏதுவாக, தணிக்கை கமிட்டி மெம்பர்கள் தங்களது mailing list எனக்கு அனுப்பி வைத்தால் முன்கூட்டியே தகவல் அனுப்பிவிடுகிறேன்.

M

இளவஞ்சியின் அடுத்த கேள்வி, அது எப்படி பொது வாழ்க்கைக்கு வந்தபின், ஒருவர் ஒரு கேள்வியை கேட்கும்போது எனக்கு அலுப்பாக உள்ளது என்று சொல்லலாம். வேண்டுமானால் அஞ்சால் அலுப்பு மருந்து அனுப்பி வைக்கிறேன்.

கருத்து1 :: "மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாதீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்... கவலை விடுங்கள்"

கருத்து2 :: போலியின் ஆட்டத்துக்கு provocater என்ற முறையில் டோண்டுவும் காரணம்.

முதல் கருத்து டோண்டுவை நோக்கி நான் சொன்னதுதான். அதை எடுத்துக்கொள்வது எடுத்துக்கொள்ளாததும் அவர் இஷ்டம். அவரை நான் ஒன்றும் கட்டாயப்படுத்த முடியாது. அதே கருத்தை என் புனுகு பூசாத நீதிபத்திகள் பதிவில் மீண்டும் சொல்லியிருக்கிறேன். அது இன்றும் மாறாத, நான் கடைபிடிக்கும் கருத்து. என் கருத்து மாறியிருக்கிறது என்பது நீங்களாக செய்து கொண்ட யூகம்.

நான் சொன்னதைத்தான் பலரும் கூறியிருந்தார்கள், கொஞ்சம் வார்த்தை மீறல்களோடு என்கிறீர்கள் நீங்கள். உண்மையிலேயே கருத்து 1க்கும் 2க்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லையா? கருத்து 1 என்பது ஆலோசனை. கருத்து 2 அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.

டோண்டு எல்லா இடங்களிலும் "போலி புராணம் பாடுவது" அவர் இஷ்டம். அதை பற்றி எனக்கு விமர்சனம் இருக்கலாம், அது எனக்கு எரிச்சலை உண்டு பண்ணலாம். அதை நான் அவரிடம் சொல்லியும் இருக்கிறேன். ஆனால் நமக்கு எரிச்சல் ஊட்டும் எத்தனையோ கருத்துக்கள் பல பதிவுகள் தோறும் மலிந்து கிடக்கின்றன. எல்லாவற்றுக்கும் நாம் எதிர்கருத்தை பதிவு செய்கிறோமா? ஆனால் அவர் செயலை குறை சொல்ல ஆரம்பித்து, அந்த விவாதம் அவர்தான் குற்றவாளி என்பதாக மாறுகிறது. மணியன் என்பவர் சொல்கிறார் :: Provocateur என்றமுறையில் இந்நிலைக்கு டோண்டுவும் ஒரு காரணமே... இந்த குற்றச்சாட்டை பற்றிய எனது பார்வையே, எனது புனுகு பூசாத நீதிபத்திகள் பதிவு.

அப்டிபோடு டோண்டு பதிவில் தனது ஒரு பதிவுக்கு வந்த ஒரேயொரு பின்னூட்டம் அவரை ரொம்ப பாதித்ததாக எழுதுகிறார். அதனால் எழுதும் ஆர்வமே போய்விட்டது என்கிறார். நல்லவேளை நண்பர்கள் உறவினர்கள் யாருக்கும் தெரியாது என்பதில் ஆறுதல் கொள்கிறார். எத்தனை பேர் கண்களில் அது பட்டதோ? என்று ஆயாசம் கொள்கிறார். அடுத்த வரியாக சொல்கிறார்: இப்படி என்னைப்போல் சம்பந்தமில்லாமல் ஏன் டோண்டு அவர்களே அவதியுற வேண்டும்? அதற்கு பிறகும் ஏன் நீங்கள் பிராமணர் மாநாடு சம்பந்தமாக எழுத வேண்டும்

அப்டிபோடு அவதியுறுவதற்கு டோண்டு எவ்வகையில் பொறுப்பாவார், அவர் என்ன எழுத வேண்டும் என்று இவர் எப்படி சொல்லலாம் என்பது எனக்கு புரியவில்லை. அதை நானும் கேட்கவில்லை, நீங்களும் கேட்கவில்லை... அது குறித்து எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை. ஏனெனில் அப்போதைய நிலையில் அப்பதிவிலேயே அது சம்பந்தமான வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்திருந்தது.

ஆனால் புனுகு பூசாத நீதிபத்திகள் பதிவில் வந்து "நீங்கள் சொன்னதையேதானே எல்லாரும் சொல்கிறோம்" என்கிறார் அப்டிபோடு. என் பதிவு அவருக்கு புரிந்ததா என்றே தெரியவில்லை. ஏனெனில், என் பதிவின் நோக்கம் புரிந்திருந்தால், டோண்டு பதிவிலேயே அப்டிபோடுவின் கருத்துக்கு பின்னாலேயே எழுதும் நாட்டாமையின் பின்னூட்டத்திலேயே இருக்கிறது அப்டிபோடுவின் கேள்விக்கான பதில் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை உணராமல் மீண்டும் வந்து அதே கேள்வியை என் பதிவில் கேட்கிறார். அன்றிருந்த மனநிலையில் மீண்டும் ஒரு முறை அதே வித்தியாசத்தை அப்டிபோடுவுக்கு சொல்ல எனக்கு விருப்பமில்லை.

கவனிக்கவும் :: நான் டோண்டு சொன்னதையோ, அப்டிபோடு சொன்னதையோ இதுவரை விமர்சிக்கவில்லை. எனக்கு தோன்றிய கருத்தை பதிவாக எழுதுகிறேன். பதிவையே புரிந்து கொள்ளாமல், அங்கே கேட்கப்படும் ஒரு கேள்விக்கு அப்போதைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்கிற என் நிலைப்பாட்டை சொல்கிறேன். அதை பெரும் குற்றமாக நீங்கள் கருதினால் நான் என்ன செய்ய முடியும்?

M

மேற்கண்ட இளவஞ்சியின் கேள்விகள் பதிவில் பின்னூட்டம் எழுதவரும் அப்டிபோடு என்மீது மிகவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அதாவது "நாட்டாமை, அன்னியன், திருப்பதி, மோடி மஸ்தான், லோக்கல் அன்னியன் இவர்களெல்லாம் யார்? உங்களின் அவதாரங்களா?" எதற்காக இவர்களெல்லாம் எனது அவதாரங்களா என்று கேட்கிறார் பார்த்தால் அவரின் காரணங்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருக்கின்றன... "டோண்டு அவர்களைக் கேட்டால் முகமூடிக்கும், ரவுசு, நாட்டமைக்கும் ஏன் தாங்கமுடியவில்லை?., மோடி பெயரில் மோடித்தனமாக வந்து என்னை வாழைபழம் சாப்பிடச் சொல்கிறது ஒரு அறிவுஜீவி. சம்பந்தப்பட்ட பதிவரோ அப்படியே அந்த விதயத்தை திசை திருப்பி மூடி வச்சிட்டார்"

இது ஒரு வாதமா? என் பதிவு டோண்டுவை கேட்டதால் தாங்காமல் எழுதப்பட்டதல்ல, கேட்கப்பட்ட கருத்தை தாங்கமுடியாமல் எழுதப்பட்டது. குற்றம் செய்தவரை விட அதற்கு தூண்டுதலாக இருந்தவரை கண்டிப்பதை பற்றி ஒரு பதிவு வந்து, அது டோண்டுவுக்கு ஆதரவாக "தோன்றி"னால் நானும் டோண்டுவும் கூட்டாளியா? அப்போது அந்த பதிவில் உங்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் சொல்லிய மணியன் "மற்றும் பலர்" என்ன உங்கள் அவதாரங்களா? ரவுசு, நாட்டாமைக்கு ஏன் தாங்க முடியவில்லை என்றெல்லாம் கேட்கிறீர்களே, டோண்டு உங்களுக்கு சொன்ன பதிலை கூட தாங்க முடியாமல் பலர் உங்கள் உதவிக்கு வந்தார்களே அதை ஏன் இங்கு நீங்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் மற்றவர்கள் அநியாயத்தின் பக்கம் என்று நீங்களே முடிவெடுத்து விட்டீர்களா? மோடி tums, வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றெறிச்சல் சரியாகும் என்று எழுதியதை பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் ஒரு வரி தனிமடலிலாவது சொல்லியிருந்தால் நீக்கியிருப்பேன். அதை விடுத்து, எதுவுமே சொல்லாத நிலையில் "விதயத்தை திசை திருப்பி மூடி வச்சிட்டார்" என்று என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.

இதற்கு காரணமாக சுமத்தும் இன்னுமொரு குற்றச்சாட்டு நீதிபத்திகள் பதிவில் நான் உபயோகப்படுத்திய ஒரே ஒரு வார்த்தை. விவாதத்தில் பதில் சொல்ல அலுப்பாக இருக்கிறது என்று நான் சொல்ல, அப்டிபோடு, "நல்ல காலம் விடுவிடுன்னு பதிவெழுதறதுக்கு அலுப்பில்லாம இருந்துச்சே!! :-))" என்று நகைச்சுவையாக (?!) குறிப்பிடுகிறார். உடனே நான், "என்ன பண்றது அப்டிபோடு, ஏதோ யாரோ என்னமோ சொன்னாங்கன்னுட்டு ஆத்தாமையில செல சமயம் விடுவிடுன்னு எழுதிடறதுதான். அட, அதெல்லாம் செம்மண் பூமியில பொறந்து வளர்றவங்க மட்டும்ல செய்யிறது. மத்தவங்க மூடீட்டு போவாங்களா? இதெயெல்லாம் நல்லது கெட்டதுன்னு சொல்லிக்கொடுக்க நமக்குன்னு ஆரு இருக்கா? இப்பத்தான படிச்சிகிட்டு வாரேன். சீக்கிரம் கத்துக்குவோம்"

இந்த இடத்தில் "நமக்கு" என்று நான் சொன்னது, என் பின்னால் நிற்கும் ஒரு குழுவிற்காக பேசுகிறேன் என்ற அர்த்ததில் அங்கலாய்ப்பாக தோன்றுகிறது அப்டிபோடுவிற்கு.

குழலியின் இது கதையல்ல நிஜம் பதிவில் APDIPODU இவ்வாறு எழுதுகிறார் :: "குழலி., என்ன விளையாட்டு இது? நான் எழுத நினைசதையெல்லாம் நீங்க எழுதிட்டிங்க. மெதுவா வரலாம்னு இருக்க நம்ம பயகல பட்டுன்னு இரண்டு பொடனில போட்டு "வாடா., வெரசா...."ன்னு சொல்றதுதான் என் நோக்கம். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்"... மேலும் இன்னொரு இடத்தில் அப்டிபோடு எழுதியது "நாம எப்பவுமே நம்மள நாமன்னுதான் சொல்லிக்கிறது வழக்கம்".

இப்போது அப்டிபோடு எழுதும் "நாம" "நம்மள" என்பதற்கெல்லாம் வேறு அர்த்தம் தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் அவர் பாணியிலேயே "நமக்கு" என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட "நமக்கு" என்ற என் வார்த்தை பிரயோகம், அப்டிபோடுவுக்கு நான் மற்றும் என் கூட்டாளிகள் என்பதாக படுகிறது. உடனே பொங்கி எழுகிறார். மத்தவங்க மூடிட்டு போவாங்களா என்பது என்னை குறித்து நானே எழுதிய வார்த்தை. அது தரக்குறைவாக உங்களுக்கு தோன்றலாம், ஆனால் ஒரு பதிவர் (நண்பன்) என்னை பார்த்து சொல்ல அப்போதுதான் அதை படித்துவிட்டு வந்திருந்தேன். இப்பதிவு முடியும்போது அதை நீஙக்ள் அறிவீர்கள்.

ஞானபீட பதிவில் மோடித்தனம் என்று எழுதியபோது அது உங்கள் வட்டார வழக்கு என்று நினைத்தேன். எங்களூரில் மோடிமூட்டுத்தனம் என்று ஒரு சொல் உண்டு. ஆனால் மோடி என்பதை போலி என்ற அளவில் உபயோகப்படுத்துகிறீர்கள். இதன் மூலத்தை என்னால் உணர முடிகிறது. ரொம்ப நாட்களுக்கு முன் தமிழ் ராம்வாட்சர், ஒரு சிலர் பதிவு பெயரில் மட்டுமல்லாமல் போலி பெயரிலும் பின்னூட்டம் எழுதுகிறார்கள் என்று ஐ.பி. எல்லாம் பிடித்து ஒரு பதிவு எழுதினார். போகிற போக்கில் "அய்யா, சம்பவத்த நான் பார்த்தேனுங்க. அப்பால வூட்டுக்கு திரும்பி போற வழியில சம்பவம் நடந்த எடத்துல இருந்து ஒரு 10 மைல் தொலைவுல முகமூடி வீடு இருந்திச்சிங்கய்யா" என்பது போல சம்பந்தமேயில்லாமல் சகுனித்தனமாக என் பெயரையும் தூவி அந்த பதிவை எழுதியிருந்தார். அப்பதிவில் எழுதப்பட்ட பெயர் மோடி. அப்பதிவிலேயே இது misleading ஆகவும் விஷம நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தேன். அப்பதிவு 2 நாட்களுக்கு பிறகு மொத்தமாக தூக்கப்பட்டது (இதை பற்றியும் யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை) பின்னாளில் வேறொரு இடத்தில் ஏன் இப்படி ராம்வாச்சர் அயோக்கியத்தனமாக எழுதினார் என்று நான் கேட்டபோது பெயரிலி மட்டும் "ராம்வாட்ச் அப்படி செய்தது தவறுதான்" என்று சொல்லிவிட்டு போனார். பெயரிலி ராம்வாச்சர் எழுதியதை தவறில்லை என்றால் ஆச்சா?, பாவம் அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்.. எதற்கு இவரிடம் போய் முறையிட்டுக்கொண்டு என்று வாளாவிருந்தேன். ஆனால் அன்று பற்ற வைத்த திரி நன்றாக வேலை செய்கிறது. இப்போது திடீரென அப்டிபோடுவிற்கு முன்பு மறைந்த சில பதிவில் நடந்த சம்பவங்கள் எல்லாம் திடீரென எப்படி ஞாபகம் வருகிறது என்பது எனக்கு தேவையில்லாத விஷயம். எனக்கு தேவையானது, கீழ்த்தரமான அந்த குற்றச்சாட்டு எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது? ஆத்திரம் கண்ணை மறைக்க உணர்ச்சிவசப்பட்டு அருவருப்பாகவும் அவதூறாகவும் ஞானபீட பதிவுகளில் எனக்கு செய்தி எழுதுவது எதனால்?

சரி, ஏதோ ஒரு அடிப்படையில் உங்கள் ஆதங்கத்தை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் என் பினாமிகள், அவதாரங்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியது சரியான செயல் அல்ல என்பது மேற்கண்ட என் விளக்கங்கள் மூலம் நீங்கள் உணருவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் என் விளக்கத்திற்கு பின்பும் நீங்கள் குற்றம் சாட்டுவதில் மாற்றம் இல்லை என்பது உங்கள் முடிவானால் மட்டும் கீழ்வரும் பத்தியை உங்களுக்கான என் பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல் உங்களுடன் விவாதம் செய்ய என்னால் முடியாது.

உங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு நீங்கள் யார், எங்கிருந்து எழுதுகிறீர்கள், ஆணா பெண்ணா, உங்கள் ஜாதி, மதம் பின்புலம் எதுவும் தேவையில்லாதது. அப்டிபோடு/மரம் என்ற இரண்டு பெயரில் எழுதும் நீங்கள் முகமூடி என்ற ஒரே பெயரில் எழுதும் என்னை பல பெயரில் எழுதுவதாக குற்றம் சாட்டுகிறீர்கள். டோண்டுவுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் எல்லாம் என்னுடைய போலி முகங்கள் என்று சொல்லும் நீங்களே ஒரு போலி என்கிறேன் நான். அன்னப்பறவை, மணியன் என்ற பெயரில் எல்லாம் வலைப்பதிவும், உங்களுக்கு ஆதரவாக உங்கள் கருத்தை வலியுறுத்த பல அவதார பெயர்களிலும், கேவலமான வார்த்தைகளில் திட்டி உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த சில சமயம் உங்கள் பெயர் பல சமயம் போலி பெயர்களிலிலும் உலவுகிறீர்கள். எங்கே போனாலும், "நான் நேர்மையானவள்" என்று சத்தியம் செய்கிறீர்கள். I dont believe your words, even if your tongue came notorized. even otherwise, உங்கள் சத்தியம் மற்றவர் மீது சேற்றை வாரி இறைக்க ஒரு தகுதியாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தான் மட்டும்தான் உலகத்தில் யோக்கியம் மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்ற மனநிலையை விட்டு வெளியே வாருங்கள். கருத்தை கற்பனை குற்றச்சாட்டுகளால் அல்லாமல் கருத்தால் எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் குற்றம் சாட்டும்போது ஒரு விரல் எதிராளியை நோக்கி நீளும் அதே நேரத்தில் உங்களை நோக்கி மூன்று விரல்கள் நீளும் என்ற நிதர்சனத்தை உணருங்கள்.

உங்களை விடவும் நான் உண்மையானவன். பல வலையுலக புனித பிம்பங்களை நேரடியாக பெயர் சொல்லி என் கருத்துக்களை எடுத்து வைத்தவன். உங்களை கேள்வி கேட்க எல்லாம் பினாமி பெயரில் வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை மற்றபடி உங்கள் மனத்திருப்திக்கு உதவும் எனில் எனது IP எண்ணை வைத்து நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம். என் IP கண்டுபிடிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. இல்லை நானே தரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், எனது IP, ISP எல்லாம் தருகிறேன், உங்கள் மீது நம்பிக்கை வரும் அளவு உங்களது முகவரி, தகவல்கள் மற்றும் உங்கள் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள்.

M

இளவஞ்சியில் பதிவில் நண்பன் என்பவர் வந்து என்னை பற்றி தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தியும், அவர் பங்குக்கு என்னை சிலரோடு சம்பந்தப்படுத்தியும் திட்டித்தீர்க்கிறார். முகமூடியின் பிம்பம் என்றெல்லாம் அவர் எழுதுவதை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. அவரின் இந்த செய்கைக்கு காரணம் அவரிடம் பொதுவாக நான் ஒரு சில கேள்விகள் கேட்டதுதான்.

ஊரில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு சிறுவன் "மாடு" என்ற கட்டுரையை மனப்பாடம் செய்திருப்பான். பரீட்சைக்கு போனால் அவனுக்கு "தென்னை மரம்" என்ற தலைப்பை கொடுத்து விடுவார்கள். கொஞ்சம் யோசிக்கும் சிறுவன், மாடு கட்டுரையை எழுதிவிட்டு, இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மாட்டை தென்னை மரத்தில் கட்டியிருந்தார்கள் என்று முடிப்பான். நண்பனுடன் விவாதம் செய்யும் வாய்ப்பு கிடைத்த போதுதான் அந்த சிறுவன் ஒரு கற்பனை கதாபாத்திரம் இல்லை என்பது எனக்கு புரிந்தது. வியக்க வைக்கும் (இப்படி கூட எழுத முடியுமா என்று...) கருத்துக்களை சொல்லும் நண்பனிடம் ஏதாவது எளிமையான கேள்வி கேட்டால் போதும், உடனே கேள்விக்கான நேரடி அர்த்தம் மட்டும் தவிர்த்துவிட்டு கேள்வியின் பின்புலம், அது இது என்றெல்லாம் சொல்லி ஒரு சில பின்னூட்டங்களும், கேட்டவருக்கு என் பதில் என்று ஒரு பதிவும் போட்டுவிடுவார். அதற்கு பயந்து எங்கும் அவருடன் நேரடியாக பேசியதில்லை. ஆனால் பதிரியின் ஒரு பதிவில் விதி விளையாடிவிட்டது.

மூன்றாம் மனிதரின் பார்வையில் பத்ரி எழுதிய பதிவை விமர்சனம் செய்யும் நண்பன் கருத்து சொல்லும்போது :: எல்லாவற்றையும் விட நகைப்புக்குரிய கோரிக்கையாக 15% சதவிகித ஒதுக்கீடு கேட்டதும், அதற்குப் பதிலாக ஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில் சொன்னதுமான நிகழ்வு தான். ஒ.சி-யில் 25% சதவிகிதம் என்பது மொத்தமாகப் பார்க்கும் பொழுது 8% ஆகும். இது நியாயமா? 3% மக்கட்தொகையே கொண்டவர்கள் 15 சதவிகிதம் கேட்டு, அதில் 8% பெறுவது ஒன்றும் பாதகமானதில்லையே! இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு - உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்?

இதை கண்டதும் நண்பனிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் :: நண்பன், பத்ரி இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில் :: நீங்கள் இதை இதையெல்லாம் சுட்டியிருக்கலாம், தவறிவிட்டீர்கள் என்ற அளவில் எழுதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் // இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு - உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்? // இது என்ன? பத்ரி என்பவர் ஜாதி உங்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் தெரிந்துவிட்டது என்பதால் அதிலேயே தொங்குவீர்களா? மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். இப்போது உங்கள் பாணியில் பேசினால், உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா?

இதையே சுந்தரமூர்த்தியும் கேட்கிறார் :: I thought of asking a similar question as Mugamudi did. You cannot put Badri on trial for the utterances of others lest you will face the same awkward situation for incidents involving people with whom you have nothing in common except the religious identity.

இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று நண்பன் எழுதிய பதிவின் பெயர் :: நண்பனின் அமெரிக்க எதிர்ப்பும், முகமூடிக்கு ஒரு பதிலும் அதில் அவர் எனக்கு சப்பையான ஒரு பதில் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட பேருக்கு பதில் சொல்கிறார். அவரின் அமெரிக்க எதிர்ப்பு பின்புலம் எல்லாம் வெளிப்படுத்துகிறார்.

அப்பதிவில் அவர் கொடுத்த விளக்கம். "முகமூடி உங்கள் தமிழ் சற்று தகராறு பிடித்தது போல் தெரிகிறது. Context என்று ஒன்றுண்டு. அதாவது, இடஞ்சுட்டி பொருள் விளக்குக என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? அதைப் போலத் தான். பேசப்படும் பொருளாக அங்கிருந்தது - பிராமிணர்கள். அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கையில், பிராமிணர்கள் என்பதை குறிப்பிடாமல், ''நீங்கள்'' என்று சொன்னேன். இந்த நீங்கள் - பத்ரியை சுட்டுகிறது என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்கள். என் எண்ணம் அதுவல்ல"

அவரின் விளக்கம் மொன்னையானது என்றாலும் அவ்விஷயத்தை மேலும் பெரிதாக்க விரும்பாமல் நான் சொன்னது :: சுட்டு பதிவு, என் தமிழ் தகராறு பிடித்தது என்றெல்லாம் நீங்கள் சொன்னாலும் நீங்கள் அந்த இடத்தில் கட்டுரையாளரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது படித்தவர்களுக்கு தெரியும். எனினும் பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் இதுபற்றிய விவாதம் இனி தேவையில்லாதது. அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்த்து சமைக்கிறீர்கள் என்ற என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. உங்களின் எல்லா எண்ணங்களையும் பதிவாக எழுதி, தலைப்பு வைக்கும்போது மாத்திரம் எங்கோ உங்களை கேள்வி கேட்டவர் ஒருவரின் பெயரை வைப்பது என்பது தெரிந்தே செய்தால அது அயோக்கியத்தனம். ஆனால் நீங்கள் தெரியாமல் செய்கிறீர்கள் என்பதால் மசாலா சமையல். இப்பதிவிலும் கூட எனக்கு பதில் என்று தலைப்பு வைத்துவிட்டு சம்பந்தமேயில்லாத பல விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தலைப்பை பார்த்துவிட்டு, நீங்கள் ஆழமாக பதிப்பவர் என்று ஏற்கனவே முன்முடிவுகளோடு வருபவர்கள் ஏதோ உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்கு எதிரான முகமூடிக்கு நீங்கள் பதில் சொல்வதாகவே நினைப்பர். உங்களின் ஒரே ஒரு பதிவை தவிர வேறு பதிவுகளை படித்திராத முகமூடிக்கும் உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைக்கும் என்ன சம்பந்தம். எளிமையான ஒரே ஒரு கேள்விக்கு தொடர்பிருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் ஆனால் உண்மையில் தொடர்பில்லாத எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு பதிவு. நியாயப்படி பார்த்தால் இப்பதிவின் தலைப்பு "பலருக்கு என் பதில்" என்பதாக இருக்க வேண்டும். தலைப்பு வைப்பது உங்கள் இஷ்டம், அதில் என் பெயர் இருப்பதால்தான் இவ்விளக்கமே அன்றி இது பற்றி எந்தவிதத்திலும் இதற்கு மேல் விவாதம் செய்ய விருப்பம் இல்லை. நன்றி.

அதற்கான அவரின் பதிலின் சுருக்கமான பொழிப்புரை :: என் ஒரேயொரு பதிவை படித்ததாக சொல்லும் நீங்கள் எப்படி மசாலா சமையல் என்று சொல்லலாம். யாரோ சொல்லிவிட்டார்கள், அதை முழுமையாக நம்பிவிட்டீர்கள். மற்றபடிக்கு படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.

மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரே ஒரு பதிவு என்பதை பிடித்துக்கொள்கிறார். ஏற்கனவே இது குறித்து விமர்சனம் செய்ய விருப்பம் இல்லை என்று நான் சொன்னதால், மீண்டும் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வளர்த்த விரும்பாமல், "ஒரே ஒரு பதிவு என்றாலும் பல இடங்களில் பார்த்த பின்னூட்டங்களே நான் அப்படி எழுதியதற்கு காரணம்" என்பதை அவருக்கு சொல்லவில்லை. ஆனால் இந்த கேள்வி மூலமும் அதற்கு நான் பதில் சொல்லாததாலும் என்னை மடக்கி விட்டதாகவும் என் போலி முகத்தை துகிலுரித்ததாகவும் உணர்ச்சிவசப்படுகிறார்.

M

பின்பு அவர் வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு என்று ஒரு ஒரு பதிவு எழுதுகிறார். பொறுமை இருப்பவர்கள் முழுப்பதிவையும் படிக்கவும். மொட்டை தலை முழங்கால் முடிச்சு என்றால் என்ன என்பது முழுவதுமாக விளங்கும்.

அவரது பதிவின் ஆரம்பமே இப்படியாக இருக்கிறது "இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள்தான்"

இங்கே எதிர்பாராத சோகம் என்று அவர் குறிப்ப்டுவது, தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்ட ஒரு நிகழ்வை பற்றி. அது குறித்த என் கருத்தாக, "நண்பன், இலக்கிய திறனாய்வு எல்லாம் செய்கிறீர்கள், ஆனால் "இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டன" என்று எழுதவேண்டியதை இப்படி எழுதியிருக்கிறீர்களே" என்று சாதாரணமாக கேட்டேன். நான் கேட்டதை விடுத்து திறனய்வு செய்பவர் என்பதை ஒரு குற்றமாக ஆக்கி பதில் சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த பதிவில் ஒரு இடத்தில் "தமிழ் உணவகத்தின் மாடியில் அமர்ந்து அவரது கவிதைத் தொகுதியைப் பற்றிய ஆய்வாகத் தொடங்கினோம் அண்ணன் செ.ரா.பட்டணம் மணி அவர்கள் தலைமையில். அவரது அகராதி கவிதைகள் என்ற குறுங்கவிதைகளிலிருந்து நண்பர்கள் குழாமின் ஒவ்வொருவரும் வாசித்து தங்கள் எண்ணங்களை வெளியிட்டனர். சில கவிதைகள் மிக விரிவான விவாதத்திற்கு இட்டு சென்றன என்றால் மிகையாகாது. சில எளிய கவிதைகள் சிந்தனைக்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது" என்று குறிப்பிடுகிறார். கவிதைகள் குறித்த விவாதத்தில் பங்கு கொள்கிறார், துவக்கு என்ற இலக்கிய அமைப்பில் இருக்கிறார் போன்ற விஷயங்களால் இலக்கிய திறனாய்வு செய்பவர் என்று குறிப்பிட்டுவிட்டேன். அவ்வளவுதான். போனால் போகிறது என்று பிற்பாடு அவரின் வாதத்துக்கு அவர் சொல்லும் நியாயம் : என்னை பொறுத்த வரை வீடுதான் உலகம். அதான் அப்படி எழுதினேன்.

அப்பதிவிலே ஒரு கதையை பற்றிய பார்வையை சொல்ல முனையும் அவர் சொல்லும் மற்றொரு கருத்து :: "படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது"

அவரிடம் நான் கேட்டது "நீங்கள் + உங்களால் அறிவுருத்தப்படும் நிலையில் இருக்கும் உங்கள் நெருங்கிய உற்றார் உறவினர் என்ன படித்தீர்கள்/ஏன் என்பதை முதலில் ஒரு முறை சொல்லிவிடுங்கள். கருத்து கந்தசாமியாக மாறி என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் நிதர்சனத்தை சொல்லுங்கள். கூடாது என்பது உங்கள் ஆசை. நடைமுறை என்ன? நான் +2 முடித்தபோது தமிழ் இலக்கியம், எனக்கு விருப்பமான இசைக்கருவி/இசை, பொறியியல் என்ற மூன்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெறுவது என் விருப்பம் என்ற வாய்ப்பு கிடைத்த போது நான் ஏன் பொறியியல் பட்டத்தை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன். ஆசைக்கு படிப்பவர்கள் சிறுபான்மை. வேலைக்கு படிப்பு என்பதுதான் பெரும்பான்மை. சிந்தனை தெளிவுக்கு சைடில் படிக்கலாம் என்பது பகுத்தறிவு. உடனே உதாரணம் காண்பிக்கிறேன் என்று ஒற்றை இலக்கத்தில் ஆள்காண்பிக்காதீர்கள். சுற்றுமுற்றும் பாருங்கள்.(ஏட்டுச்சுரைக்காய் - படித்தவர்கள் எல்லாம் நல்லபடி சிந்திக்கிறார்களா என்ற உபகேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)"

போலித்தனமாக அவர் செய்த பிரசங்கத்தை பற்றிய என் கேள்விக்கு இதோ இந்த நிமிடம் வரை அவர் மூச்சு கூட விடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக என்னை மிகவும் கீழ்த்தரமாக திட்ட ஆரம்பிக்கிறார். முதன் முதலில் அக்கதை பிரசுரமான போதே படித்த என்னிடம் "நீங்கள் அந்த கதையை வாசிக்கவில்லை என்று தீர்மானமாக சொல்கிறார். செவிடாகிப்போன காதுகளோடும் குருடாகிப்போன கண்களோடும் வலம் வருகிறேன் எனும் அவர், "மூடிக்கொண்டு போ" என்பதை எனக்கான பதிலாக திரும்ப திரும்ப வலியுறுத்தும் அவர், என்னை புழுவோடு ஒப்பிடும் அவர், கடைசியாக எல்லாரையும் போலவே "முகமூடிக்கு பின்னால் இருக்கும் திருமலை" என்று ஒரே போடாக போடுகிறார். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு மத இயக்கத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டு சட்ட விரோத செயலகள் பல செய்து கைதிலிருந்து தப்ப அமீரகத்திலே தஞ்சம் புகுந்திருக்கும் நண்பன், என்னை பார்த்து குற்றம் சாட்டுகிறார். (அவரின் பாணியில் பேச கேவலமாக இருக்கிறது. என்ன செய்வது. இது நாள் வரை என்னை யாரோடாவது ஒப்பீடு செய்யும்போதெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது இவர்களுக்கு உரைப்பதில்லை... இனி இப்படித்தான். இவ்வரிகள் நீக்கப்பட வேண்டுமாயின், என்னை திருமலையோடு ஒப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்)

நான் எனக்கு தோன்றிய எளிமையான கேள்வியை நேரடியாக கேட்க, இவர் என்னடாவென்றால் தனது கற்பனை மூட்டையை அவிழ்த்து விட்டு என்னன்னவோ பேசுகிறார். கீழ்த்தரமாக திட்டுகிறார். நான் இந்த ஆள் அவ்வளவுதான் என்று எதுவும் பேசாமல், மேலும் எதுவும் பேசவேண்டாம் என்ற கோரிக்கையோடு I'M APPALLED என்பதாக முடித்துக்கொண்டேன். ஆனால் அந்த appalledக்கு பதில் சொல்கிறேன் என்று "முகமூடிக்கு பின்னால் இருந்து கொண்டு மரியாதை வேறு எதிர்பார்க்கிறாயா? உன் புண்களை பொதுவில் நக்குகிறாய். படிக்காமல் விமர்சனம் செய்கிறாய்" என்றெல்லாம் வசவு விழுகிறது.

இதன் தொடர்ச்சியாக இளவஞ்சி பதிவிலும் சென்று "வேடமிட்டுக்கொண்டு திரிகிறேன், அநாநிக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியவில்லை, என் மீதான தனது அன்பை வெளிப்படுத்துகிறார். ஒரு பதிவு போடுவதும், எதிர்ப்பு வந்ததும் அதை நீக்குவது அல்லது திருத்துவது - கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். நேர்மையற்ற எழுத்துகளைப் பிறப்பிக்கும் இழிந்த மனிதர்கள்" என்ற பொன்னான கருத்துக்களை உதிர்க்கும் நண்பன் இன்று வரை தனது போலித்தனம் குறித்த கேள்விக்கு விளக்கம் அளிக்கவில்லை. நண்பனின் அந்த பதிவை படித்து விட்டு அப்டிபோடு வேறு நண்பன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்கிறார். என்ன புரிதலோ என்னவோ..

M

வலையுலகில் அனைவருக்கும் OPINIONS இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி மேகம் போல் வலையுலகை சூழ்ந்திருக்கும் ஒரு மாய அரசியல் இருக்கிறது. வெளிப்படையாக பேசாவிட்டாலும் அது எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது. Either you are WITH US or AGAINST US என்ற நிலைப்பாட்டை கோட்பாடாக கொண்டது அது.

எதை பற்றியும் கவலைப்படாமல் எனக்கு தோன்றியதை எழுதி வருகிறேன். அதற்காக பல பட்டங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பல ஊரை விட்டு தள்ளி வைக்க ஏதுவாக, ஊரைதம் பக்கம் வைத்திருக்கும் வலுவான பஞ்சாயத்தார் கொடுத்தது. img crtsy: silentra.comஎன் எழுத்து பிறப்பிக்கும் கற்பிதத்தில் கொடுக்கப்படும் பட்டங்களை பற்றி நான் என்ன செய்ய முடியும். ஜாதி பற்றி பேசாத என் மீது ஜாதி குற்றச்சாட்டும் யூகத்தின் பேரில் வைக்கப்பட்டது. வைத்தவர்கள் எல்லாம் தனது நடுநிலைமையை பச்சையாக ஒரு சார்பில் காண்பித்தவர்கள். முகமூடிக்கெல்லாம் எதற்கு பதில் போட்டு டைம் வேஸ்ட் செய்கிறீர்கள் என்று அப்பட்டமான சார்பு நிலையை எடுத்திருக்கும் அறிவு ஜீவிகள் விவாதிப்பவர்களை கட்டம் கட்டினால், முகமூடிக்கு பின்னூட்டம் போட்டால் உன்னை சும்மா விடமாட்டேன் என்று போலி புதியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறான். போலியாக என்னுடையதை போலவே இன்னொரு பதிவு ஆரம்பித்து புதியவர்களுக்கு எல்லாம் முகமூடியின் சார்பு நிலைகள் பற்றிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே ஒரு பின்னூட்டத்துக்கு அதிர்ச்சியடைபவர்களால் போன மாதம் மட்டும் என்னையும் என் குடும்பத்தாரையும் கீழ்த்தரமாக திட்டி வந்த 87 பின்னூட்டங்களை நான் யாருக்கும் தெரியாமல் மறைத்தது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும் கூட என் முகமூடிக்கு பின்னிருக்கும் முகம் என பலரால் பலரின் பெயர் சொல்லப்படுகிறது. சும்மா சந்தேகமாக அல்ல... அனுமானத்தோடு, வசவும் சேர்த்து. பின்பு பலரின் பெயர்கள் - போலிகள் உட்பட - என் பெயருடன் இணைத்து பேசப்படுகிறது. அது இன்று அப்டிபோடு, இளவஞ்சி, நண்பன் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத அளவா தமிழ் சமுதாயம் கோழைகளாகிவிட்டது? என் முகமூடிக்கு பின்னிருக்கும் முகமும் என் பின்புலம் பற்றிய அனுமானங்களும் என் கருத்தை விட முன்னெடுத்துச்செல்லப்படுவது எதனால்?

இந்த பதிவால் ஒரு ப்ரயோஜனமும் இருக்காது என்பது தெரியும். மீண்டும் இரு மாதங்களுக்கு பிறகு, முகமூடி என்ற பிரதான கதாபாத்திரம் தவிர மற்ற பாத்திரங்கள் மட்டும் மாறி இதே காட்சி அரங்கேறும். img crtsy: greatbanyanart.comநகைச்சுவையாக எழுதும் முகமூடி ஏன் விமர்சனங்களையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறார் என்று ஒரு முறை ஒரு பதிவர். இதுவரை என்னை பற்றி எழுதப்பட்ட நையாண்டி கிண்டல் பதிவுகளை நான் ரசித்தே வந்திருக்கிறேன். என் மீது சொல்லப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அல்லது அமைதி என்று நிலைப்பாடு எடுத்திருக்கிறேன். சத்தமில்லாமல் நடக்கும் இவை அது தெரிவதில்லை. ஆனால், விமர்சனம் என்பது போய் சக்கர பத்ம வியூகத்தின் நடுவில் நிறுத்தப்பட்டு எல்லா திசைகளிலிருந்தும் அம்புகள் வரும்போது ஒரு கேடயத்தையாவது கையில் வைத்திருப்பது அவசியமாகிறது . இதுநாள் வரை எல்லாவற்றையும் தனியொரு ஆளாக, எதிர்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் காலகாலமாக, அட்டை கத்தியோடு இருட்டில் சண்டைக்கு வருபவர்களை எதிர்கொள்வது மிகுந்த அயர்ச்சியை தருகிறது. இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் கேடயம் மட்டுமல்ல, அம்பறாத்தூணியும் கீழே வைக்கும் எண்ணம் வரும். அது வரைக்கும் மட்டுமாவது எனக்கு தோன்றியதை என் பதிவில் கிறுக்கிக்கொள்ள, இலக்கியத்தை பதிவுலகில் தேடும் இலக்கியக்காரர்கள் அனுமதி அளிப்பார்களாக.




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பேசும் போது கிடைக்கும் குரல் தொனி படிக்கும் போது கிடைக்காமல் போவதால், இதை படிக்கும் போது நான் கோபமாக எழுதியதை போல யாருக்கேனும் தோன்றலாம். நான் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகத்தான் எழுதியிருக்கிறேன். நீங்களும் நிதானமாக படித்தால் அது உங்களுக்கு புரியலாம்.
 



jsri,

பத்ம வியூகம் சக்கர வியூகம் என்று இரண்டு பெயர்களில் இதை அழைக்கிறார்கள் என்று இந்த தளத்திலே படித்திருந்தேன். இப்பொழுது நீங்கள் கேட்டதும் மீண்டும் தேடியதில் விக்கியில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லியிருக்கிறார்கள். அபிமன்யு உடைத்து உள்ளே சென்றது பத்ம வியூகம்தான். கடைசியில் நிராயுதபாணியாக சக்கரத்தை வைத்து போராடியதால் அது சக்கர வியூகமாக பார்க்கப்படலாம். சக்கர வியூகம் என்பது இன்னொரு போர் யுத்தி. பதிவில் திருத்தி விட்டேன். தகவலுக்கு நன்றி.

அந்த படம் ஒரே படம் அல்ல. இரண்டு படங்களை நான் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியிருக்கிறேன். அபிமன்யு படத்தை நீங்கள் இங்கிருந்து வாங்கலாம்.
 



ஒரே மயக்கமா வருது... யாராவது தண்ணி கொடுங்களேன்!
 



me too, saved the picture here

very long post, will take some time for me to read.
 



முகமூடி,

உங்களது கருத்துக்களுக்கு என் நன்றிகள்!

மீண்டும் ஒருமுறை நான் இப்படி சொன்னேன், நீங்கள் அப்படி எழுதினீர்கள், அன்றைக்கு சொன்னதற்கு இந்த அர்த்தம், இன்றைக்கு எழுதுவது இதனால் என்று நான் இதனை தொடர விரும்பவில்லை! அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை!

ஆனால், ஒரு வாசகனாக எனக்கிருக்கும் ஆதங்கத்தைவிட முக்கியமானது என ஒரு பதிவராக உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் சந்திக்கும் இடர்களையும் புரிந்துகொள்கிறேன்!

உங்களை சுற்றியிருக்கும் சக்கரவியூகத்தின் எதிரிகளில் ஒருவராக என்னையும் வைத்து எழுதியிருப்பதற்கான என் வருத்தங்களை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்!
 



கஷ்டப்பட்டு இந்த பெரிய பதிவை போட்டிருக்க வேண்டாம்!

தலைப்பை மட்டும் கொடுத்திருந்தால் எல்லாரும் "ஊகி"த்துக் கொண்டிருப்போம் :-))
 



//அப்டிபோடு அவதியுறுவதற்கு டோண்டு எவ்வகையில் பொறுப்பாவார், //

எத்தனையோ முறை அப்பதிவிலேயே., சொல்லியாச்சு., திரும்பத் திரும்ப நேத்துதான் புதுசா உலகத்த பார்க்கிற மாதிரி., கேள்விய கேட்டுவிட்டு., அடுத்தவர்களை குழந்தை என்று நக்கல் செய்வது.

//என் பதிவு அவருக்கு புரிந்ததா என்றே தெரியவில்லை//
எனக்கு பதிவு புரியாது., நண்பன் அரைவேக்காடு., இளவஞ்சி புரிந்து கொள்ளாமல் பதிவெழுதுகிறார். ஏன் தமிழ் மணத்தில எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத மூளை அமைப்பை கொண்டவர்கள். ஆனால் சின்னவன், ஞானபீடம் போன்றவர்கள் என்னை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்., எனவே அவர்கள் பதிவிற்குப் சென்று ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறேன் என்கீறீர்கள். அப்படித்தானே?.,

//சம்பந்தப்பட்ட பதிவரோ அப்படியே அந்த விதயத்தை திசை திருப்பி மூடி வச்சிட்டார்" //
இது டோண்டு அவர்களின் விவாதத்தைப் பற்றி சொன்னது., உங்களைளுக்குச் சொன்னதல்ல. நீங்கள் அடுத்தவர்களை குழந்தைகள் என்கிறீர்கள்.

//மோடி டும்ச், வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றெறிச்சல் சரியாகும் என்று எழுதியதை பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் ஒரு வரி தனிமடலிலாவது சொல்லியிருந்தால் நீக்கியிருப்பேன்//

தெரிந்தே அனுமதித்தது நீதானே?., தனி மடல் போடுவதெல்லாம் முகமூடியின் வேலை. மோடி மஸ்தான் என்ற பெயரில் அப்பின்னூட்டமே முகமூடி போட்டதுதான்.

//பதிவில் APADIPODU இவ்வாறு எழுதுகிறார் :: "குழலி., என்ன விளையாட்டு இது? நான் எழுத நினைசதையெல்லாம் நீங்க எழுதிட்டிங்க. மெதுவா வரலாம்னு இருக்க நம்ம பயகல பட்டுன்னு இரண்டு பொடனில போட்டு "வாடா., வெரசா...."ன்னு சொல்றதுதான் என் நோக்கம். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்"... மேலும் இன்னொரு இடத்தில் அப்டிபோடு எழுதியது "நாம எப்பவுமே நம்மள நாமன்னுதான் சொல்லிக்கிறது வழக்கம்".

இப்போது அப்டிபோடு எழுதும் "நாம" "நம்மள" என்பதற்கெல்லாம் வேறு அர்த்தம் தோன்றுகிறது எனக்கு. //

இதை படிக்கும் வாசகர்களிடமே விடுகிறேன்.

//ஞானபீட பதிவில் மோடித்தனம் என்று எழுதியபோது //
மோடி மஸ்தானைக் குறிக்க எழுதப்பட்டது அது. (மோடி மஸ்தான் என்ற பெயரில் அப்பின்னூட்டமே முகமூடி போட்டதுதான் என நான் நினைப்பதால் குறிப்பிட்டேன்)

//ரொம்ப நாட்களுக்கு முன் தமிழ் ராம்வாட்சர், ஒரு சிலர் பதிவு பெயரில் மட்டுமல்லாமல் போலி பெயரிலும் பின்னூட்டம் எழுதுகிறார்கள் என்று ஐ.பி. எல்லாம் பிடித்து ஒரு பதிவு எழுதினார்//
அந்தப் பதிவையும் நான் படிக்கவில்லை., ராம்வாட்சர் யார் என்பதும் எனக்குத் தெரியாது. எனவே அதற்கு பிறகு நீங்கள் பினாத்தியிருக்கிற உளறல்களை தமிழ்மணம் வாசகர்களுக்கே விடுகிறேன்.

//அன்னப்பறவை, மணியன் என்ற பெயரில் எல்லாம் வலைப்பதிவும், உங்களுக்கு ஆதரவாக உங்கள் கருத்தை வலியுறுத்த பல அவதார பெயர்களிலும், கேவலமான வார்த்தைகளில் திட்டி உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த சில சமயம் உங்கள் பெயர் பல சமயம் போலி பெயர்களிலிலும் உலவுகிறீர்கள்//

இதை தகுந்த ஆதாரத்துடன் விளக்கவேண்டுகிறேன். இப்படி அவதூறு பரப்புவதற்காக உங்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை உறுதியாக எடுப்பேன்.

//கருத்தை கற்பனை குற்றச்சாட்டுகளால் அல்லாமல் கருத்தால் எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள்//
இதை முகமூடி உணர்ந்தால் போதும்.

//உங்களை கேள்வி கேட்க எல்லாம் பினாமி பெயரில் வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை//

நான் கூறிய வசனத்தில் (இளவஞ்சியின் பதிவில்) எது முகமூடியை பாதித்ததோ அதையே திரும்பி ஊழையிடுவதால் நல்லவனாக வேடங்கட்டினாலும்., என்னைவிட தமிழ் மண நண்பர்கள் தாங்களை மிக நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால் இந்த ஊளையைப் பற்றி., எனக்கு வலையில்லை.

//உங்கள் மீது நம்பிக்கை வரும் அளவு உங்களது முகவரி, தகவல்கள் மற்றும் உங்கள் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். //
ஏன் சின்னவனைவிட்டு படங்காட்டச் சொல்லவா?. முகமூடியின், முகமூடி அனைவரும் அறிந்ததே., புதிய வலைபதிவர்கள் மட்டும் இதை அறியாமல் இருக்கலாம். அறிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.

http://njanapidam.blogspot.com/2006/01/blog-post_28.html
http://njanapidam.blogspot.com/2006/01/blog-post_26.html
http://njanapidam.blogspot.com/2006/01/coffee.html
http://njanapidam.blogspot.com/2006/01/circus.html

http://chinnavan.blogspot.com/2006/02/reason.html
http://chinnavan.blogspot.com/2006/01/copy.html

சின்னவனும்., ஞன பீடமும் சூழ்ந்து கொண்டு ஆடிய ஆட்டங்களுக்கு எல்லாம் தவறாமல் போய் பின்னூட்டம் அளித்து உற்சாகம் கொடுத்த மூகமூடி., ஒன்றுமே தெரியாததுபோல்., முகமூடியை மையப்படுத்தி ஆட்டம் நடந்ததாக., கவனியுங்கள் முதலில் டோண்டுதான் ஆட்டத்தில் இருந்தார். ஆனால் புனுகை பூசி டக்கென்று வெளிச்சத்துக்கு வந்தது முகமூடி., இப்போது பத்மவியூகம் .. அது இது என்ற சலம்பல் வேறு.., யார் தாக்கினார் அப்பனே ?., காற்றில் பத்மவியூகமாய் கற்பனை பண்ணிக் கொண்டு உன்னோட குதர்க்கவாத கத்திகளை வீசிக்கொண்டிரு., வியர்த்த உனக்கு விசிறி விட உன் அடிப்பொடிகள் வருவார்கள். ஆனாலும் கூட இப்படியே எவ்வளவு காலம் நண்பனே நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பாய்?. தனிப்பதிவு போட்டு எதிற்க்கும் அளவிற்கு முகமூடியின் தகுதிதான் தான் என்ன? பெரிய இலக்கியவாதியா., இல்லை அரசியல்வாதியா? ஒரு ஆதாரமுமில்லாமல் யாரையும் அவர்கள் செய்வதை நேராகக் குறிப்பிடும் துணிவுகூட இல்லாமல் மறைமுகமாக... ஒரு வார்த்தை 10 பதிவர்களை குறிப்பிடும் வண்ணம் எழுதி என்னேரமும் பிதற்றித் திரியும் முகமூடி., நான் நேரத்தை வீனாக்கி., தனிப் பதிவு போடும் அளவிற்கெல்லாம் தகுதியான ஆள் அல்ல என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்… இத்துடன் முகமூடிக்கு செயல்தான் நான் சொல்லப்போவதில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கலாம்., நான் பதில் அளிக்கப் போவதில்லை. ஏனெனில் என்னை விட அனைவருக்கும் இங்கு முகமூடியை புரிந்திருக்கிறது. இது எனது பதிவிலும் நகலிடப்படும்.
 



புரிந்துணர்வுக்கு நன்றி இளவஞ்சி. உங்களை எதிரியாகவெல்லாம் நினைக்கவில்லை.

*

அப்டிபோடு,

// ஆனால் சின்னவன், ஞானபீடம் போன்றவர்கள் என்னை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்., எனவே அவர்கள் பதிவிற்குப் சென்று ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறேன் என்கீறீர்கள். அப்படித்தானே? //

இனி யார் யார் பதிவுக்கு நான் சென்று பின்னூட்டம் இட வேண்டும் எனபதையும் உங்களை கேட்டுத்தான் செய்ய வேண்டுமா?

// தெரிந்தே அனுமதித்தது நீதானே?., தனி மடல் போடுவதெல்லாம் முகமூடியின் வேலை. மோடி மஸ்தான் என்ற பெயரில் அப்பின்னூட்டமே முகமூடி போட்டதுதான். //

என்ன தெரிந்தே அனுமதித்தேன். அப்டிபோடு என்று குறிப்பிட்டு பின்னூட்டம் வந்தால் அனுமதிக்கக்கூடாதா? அதை நீ(ங்கள்) வித்தியாசமாக பார்க்கிறேன் என்றால் உன்(ங்கள்) ஆட்சேபணையை ஏன் தெரிவிக்கவில்லை. சமீபமாக உண்மைவிளம்பி என்று ஒரு பின்னூட்டம் உள்ளதே உங்கள் பதிவில் அதை அப்பெயரில் போட்டுக்கொண்டது அப்டிபோடுவா?

// இதை தகுந்த ஆதாரத்துடன் விளக்கவேண்டுகிறேன். இப்படி அவதூறு பரப்புவதற்காக உங்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை உறுதியாக எடுப்பேன்//

(மோடி மஸ்தான் என்ற பெயரில் அப்பின்னூட்டமே முகமூடி போட்டதுதான்) அப்படியே இதற்கும், மற்ற இடங்களில் என்னை வேறு வேறு ஆட்களோடு சம்பந்தப்படுத்தி எழுதியதற்கும் ஆதரத்தை விளக்க வேண்டுகிறேன். கற்பனையான குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு சட்ட பூச்சாண்டி காட்டும், என் பெயரை வெளிப்படையாக அவதூறு செய்யும் உங்கள் மீது நானும் சட்ட நடவடிக்கை எடுக்க உறுதியாக இருக்கிறேன்.

// சின்னவனும்., ஞன பீடமும் சூழ்ந்து கொண்டு ஆடிய ஆட்டங்களுக்கு எல்லாம் தவறாமல் போய் பின்னூட்டம் அளித்து உற்சாகம் கொடுத்த மூகமூடி //

பல பேர் ஆடிய ஆட்டத்துக்கு தவறாமல் போய் பின்னூட்டம் அளித்து உற்சாகம் கொடுத்த அப்டிபோடு என்று நானும் சில பெயர்களை இங்கே குறிப்பிட முடியும்

// கற்பனை பண்ணிக் கொண்டு உன்னோட குதர்க்கவாத கத்திகளை வீசிக்கொண்டிரு //

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் யார் பதிவிலாவது தொடர்ச்சியாக பின்னூட்டம் இட்டால் கூட அது என் பினாமி என்று பினாத்திக்கொண்டிருக்கும் நீயா(நீங்களா) இதை சொல்வது. டோண்டுவின் பதிவில் ஏகப்பட்ட பேர், நீங்கள் சொன்ன அதே கருத்தை எழுதியுள்ளார்கள். ஆனால் என்னவோ என் நீதிபத்தி பதிவு அப்டிபோடுவுக்கு மட்டுமே எதிராக எழுதியது என்று குதர்க்கவாதம் பேசுவது ஏன். என்ன நீங்கள் அவர்கள் அனைவருக்குமான பிரதிநிதியா? இந்த பதிவை வெளிச்சத்துக்கு வருவதற்காக நான் எழுதவில்லை. ஒரு சில விஷயங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வரும் நிலையில் நான் இல்லை. நான் எப்படியோ எழுதிவிட்டு போகிறேன். ஆனால் தயவு செய்து நீங்கள் என்னை நண்பரே என்றெல்லாம் விளித்து கேவலப்படுத்த வேண்டாம்.
 



சண்டை பிடிக்கும் முகமூடி என்று பெயரிலி ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். பெயரிலியோடு சண்டைக்கு நிற்க எனக்கும் நேரமில்லை என்பதை அவருக்கு மாத்திரம் சொல்லிக்கொள்கிறேன்.

போலி பின்னூட்டங்கள் குறித்த ராம்வாச் பதிவில் வேறு பெயர்களும்தான் இடம் பெற்றிருந்தது என்று விளக்கம் கொடுக்கிறார். அதனால் எனக்கென்ன? நான் கேட்டது போலி பின்னூட்டங்களை விளக்க போட்ட ஒரு பதிவில் போலி பின்னூட்டம் போடாத என் பெயரை ஏன் குறிப்பிடவேண்டும் என்பதையே.
 



அப்டிபோடுவின் பதிவில் எழுதிய பின்னூட்டம் ::

மரம். வழக்கம் போலவே உணர்ச்சி கண்ணை மறைக்க சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறீர்கள்.

உங்களுக்கும் மாடர்ன் கேர்ளுக்கும் சம்பந்தம் என்று நான் எங்கே சொன்னேன் என்று காட்ட முடியுமா?

டோண்டுவின் மீது நீங்கள் விமர்சனம் வைப்பதை திசை திருப்புவது என் நோக்கமல்ல. ஒரு நிகழ்வை பற்றிய என் கருத்தை என் பதிவில் சொன்னேன். எடுப்பார் கைப்பிள்ளைகளை மெயில் அனுப்பி கூட்டம் சேர்த்தது நான் என்பது உங்கள் யூகம். டோண்டு பதிவில் நீங்கள் அக்காரியத்தை செய்தீர்கள் என்று நானும் சொல்ல முடியும். எனக்கு இதுவரை கூட்டம் சேர்க்கும் அவசியம் கண்டிப்பாக தேவைப்படவில்லை. நாலு பேர் உங்கள் கருத்துக்கு மாற்றாக கருத்து சொன்னால் மெயில் அனுப்பி ஆள் சேர்ப்பதா? grow up.

சட்ட பூச்சாண்டியெல்லாம் சூப்பர்தான். அதற்கு முன் நீங்கள் என் மேல் வைக்கும் குற்றச்சாட்டு என்ன என்பதை சொல்லுங்கள்.

என் மேல் நீங்கள் சொல்லும் சம்பந்தமில்லாத கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு சில விளக்கங்கள்இந்த பதிவிலே இருக்கிறது. முடிந்தால் படித்துப்பாருங்கள்
 



முகமூடி அவர்களுக்கு,
என்னுடைய ஒரு பின்னூட்டம் இத்தனை காராசாரமான,கிட்ட தட்ட அடிதடி சர்ச்சைக்கு வித்திட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நான் இந்த சர்ச்சைகளிலும் விவாதங்களிலும் விருப்பமில்லாதவன். நீங்கள் எல்லோரும் பரிமாறிக் கொள்ளும் சங்கேத/அங்கத வார்த்தைகளை புரிந்து கொள்ள நேரமில்லாதவன்.

டோண்டு அவர்களின் ஃபெவிகால் விளம்பரத்தை ஒட்டிய "அணைச்சாச்சு அணைச்சாச்சு" வாசகம்தான் போலிடோண்டுவை காசி முதலிய மற்றவர் பதிவிலும் பாய உசுப்பிவிட்டிருக்க வேண்டும் என்ற என் அனுமானத்தை ஒட்டியே provocateur என்ற சொல்லை எழுதினேன். அதுவும் என் பின்னூட்டத்திற்கு முன்னிருந்த காசியின் பின்னூட்டத்தினால் எழுந்த எண்ணம் தான்.

நான் எல்லோரின் தமிழ் எழுத்துக்களையும் இரசிக்கிறேன். அனைவரும் நல்ல திறமையோடு எழுதக் கூடியவர்கள். உங்கள் சக்தியை தமிழ்மணத்திற்கு பெருமை சேர்க்க செலவழியுங்கள் என இருதரப்பினரையும் வேண்டுகிறேன்.

கருத்துக்களுடன் மோதுங்கள்; கர்த்தாக்களின் பின்புலத்தோடல்ல.
 



எளக்கியம் குறித்த உங்கள் சில கருத்துக்கள் குறித்த எ.தா.அ:

//நகைச்சுவையாக எழுதும் முகமூடி ஏன் விமர்சனங்களையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறார் என்று ஒரு முறை ஒரு பதிவர்.//

எத்தனை பேர் சொன்னார்களென்று தெரியாது, நான் சொன்னேனென்பது எனக்குத் தெரியுமென்பதால் ஒரு சிறு விளக்கம்: இப்போதும் அதையேதான் சொல்கிறேன். சீரியஸாக எழுதவேண்டுமென்றால் சீரியஸாக எழுதுங்கள்; இல்லை, நான் செய்வது அங்கதம், அதிலுள்ள சீரியஸ்தன்மையை நீங்கள் புரிந்துகொண்டே ஆகவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் - குஷ்பூ, தர்மபுரி பஸ் எரிப்பு விவகாரங்கள் குறித்து நீங்கள் எழுதியதைத் தவிர பிறதெல்லாம் எனக்கு ஒரு சல்லிக் காசுகூட உபயோகமில்லாததென்பது என் நேர்மையான விமர்சனம். இதேபோல நான் கிறுக்கியதன்மேல் விமர்சனம் இருந்தால் சன்னாசி என்றோ மாண்ட்ரீஸர் என்றோ, அப்போது எந்தப் பெயரில் எழுதுகிறேனோ, தெளிவாக அதே பெயரைக் குறிப்பிட்டுக் கிழி கிழியென்று கிழிக்கவும் - ஆட்சேபணை ஏதுமில்லை. அதை விட்டுவிட்டு மயில்கள் மொத்தமாய்ப் பறந்தால் இடி விழும், தாய்க்கோழியும் குஞ்சுகளும் கூட்டமாய்ப் பதறி ஓடினால் பாம்பு வருகிறதென்று அர்த்தமென்று பொடிமட்டை விரிக்கும் மயில்ராவணன் & கோ பிரதிநிதி போல உங்கள் பின்னூட்டங்களை, பதிவை, தருக்கங்களைப் படிக்க நேர்கையில் அதே பொடிமட்டையை வெற்றிலை பாக்குடன் வைத்துத் திருப்பித் தருவதுதான் என்னால் முடிந்தது. உதாரணத்துக்கு, கீழே அடைப்புக்குறிகளுக்குள் சேமித்திருக்கும் உங்கள் வாக்கியங்களைப் படித்துப் பார்க்கவும். உங்களுக்குத் தோன்றியதை நீங்கள் எழுதிக்கொள்ள சுதந்திரம் வேண்டுமென்கிறீர்கள், அதே சமயம் எளக்கியவாதிகள் சம்மேளனமாக ப்லொக்குலொக்குகள் மாறிவருகின்றன என்றும் உங்கள் "விமர்சனத்தை" வைக்கிறீர்கள். இதைத்தான் தன் காலைத் தானே சுட்டுக்கொள்வது என்கிறேன். எளக்கியவாதி சம்மேளனம் குறித்து நீங்கள் விமர்சிப்பது மாதிரித்தான் (ஆபாச வசை இடும் இழிபிறவிகளைப்பார்த்து நான் சொல்வதும் ஒரு #&#$&^##$#Q$$#($*$(*&%(*#$&%(*$& தான், அதில் சந்தேகம் வேண்டாம்) உங்களை விமர்சிப்பவர்களும் செய்கிறார்கள் - பிம்பம் உருவாக்கல், முன்னே சொன்னதை வைத்து இப்போது சொன்னதை நோண்டுதல் என்று அனைவருக்கும் நிகழ்வதுதான் உங்களுக்கும் நிகழ்கிறது. இதில் ஏதோ அனைவரும் குறி வைத்து என்னை மட்டும் அஸ்வத்தாம ஹதஹ குஞ்சரஹ செய்கிறார்கள் என்று சொல்வது பெரும் வேடிக்கை.


//பதிவுகள் என்பது personal diary of free minds/common public என்பது மாறி சிற்றிலக்கிய சம்மேளனமாக மாறி வருகிறது என்பதை பல இடங்களில் நான் பதிவு செய்திருக்கிறேன்.. இங்கேயும் அதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.//

//ஆகவே உங்கள் விமர்சனங்களை தாராளமாக எழுதுங்கள். ஆனால் என் மேல் பிம்பம் எல்லாம் வேண்டாம்.//

//அது வரைக்கும் மட்டுமாவது எனக்கு தோன்றியதை என் பதிவில் கிறுக்கிக்கொள்ள, இலக்கியத்தை பதிவுலகில் தேடும் இலக்கியக்காரர்கள் அனுமதி அளிப்பார்களாக.//

நான்தான் எளக்கியத்தைப் பொளக்கிறேன், மற்றதை எழுதுபவர்களெல்லாம் வெறும் வேடிக்கை மாந்தர் என்னும் ஆசாமிகள் ஒரு வாசகனாக, என்னையும் சேர்த்துக் கடுப்பேற்றுபவர்களே - அதில் மாற்றுக் கருத்தில்லை. நகைச்சுவைக்கு இடமில்லை என்று நீங்கள் வருந்துவதுபோல அவர்களும் புலம்புகிறார்கள் - இதில் அவர்களிடம் மட்டும் என்ன குற்றத்தைக் கண்டீர்கள்? ஆனால் மேலே மேற்கோள் காட்டியிருப்பதுபோன்ற உங்கள் சில வாக்கியங்களைத் திரும்பத் திரும்ப சமீபத்தில் படித்து வருவதால், ப்லொக்குலொக்கில் யார் இந்தமாதிரி எளக்கியவாதி சம்மேளனம் செய்கிறார்களென்று குறிப்பிடுங்கள், எனக்கும் அப்படித் தோன்றுகிறதா என்று பார்க்கிறேன். தனக்குத் தோன்றுவதைத் தான் எழுத உரிமை வேண்டுமென்று நீங்கள் கேட்பது போல, தான்தான் பெரிய பருப்பு என்று கருதிக்கொள்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அது பிடிக்கவில்லையெனில், விமர்சிக்கவேண்டுமென்று தோன்றினால் சம்பந்தப்பட்ட பதிவில் போய் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடவும், யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. நான் வைப்பது மாதிரி விமர்சனத்தை வைக்க எனக்கு உரிமையில்லையா என்று கேட்கிறீர்கள் - நிச்சயம் உண்டு; அதே உரிமை பிறருக்கும் உண்டு, அதைச் செய்கையில் பெல்ட்டுக்குக் கீழே அடிக்கிறார்கள் என்றால் அதை நீங்கள் எதிர்ப்பதையும் யாரும் ஆட்சேபிக்கவில்லை. சில சமயங்களில் கழுத்தில் பெல்ட்டைக் கட்டிக்கொண்டு பெல்ட்டுக்குக் கீழே அடிக்கிறார்கள் என்று நீங்கள் புலம்புவதாக எனக்குப் படுவது ஏனெனில்:

நல்ல பதிவு, நன்றி என்று பல இடங்களில் இடித்து இடியாப்பம் பிழிந்துவிட்டு (நீங்கள் பிழிந்ததில்லையா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - சுட்டி தேடி நீதிபத்திகளுக்கு ஆதாரம் சமர்ப்பிக்க எனக்கும் அலுப்பாகத்தான் இருக்கிறது) பின், "நான் உன்னைச் சொல்லலையே, கிக்கீ கிக்கீ" என்பதைத்தான், அல்லது கேட்கப்பட்டால் "இது உனக்குக் கொப்பிரைட் பண்ணதா" என்று ஒரு முன்னெச்சரிக்கை லூப்பைப் பொதிந்து வைப்பதைத்தான் பொடிமட்டை விரிப்பதென்று குறிப்பிடுகிறேன். மயில்ராவணர்கள் இந்த "நல்ல பதிவு, நன்றி" நக்கல் அடிக்கும்போது அதில் தொக்கி நின்ற எரிச்சலைப் புரிந்துகொள்ள இரண்டு மூளையெல்லாம் தேவையில்லை. என்னய்யா நகைச்சுவை உணர்ச்சியே உனக்குக் கிடைக்காதா, தரமான அங்கதத்தை ரசிக்கும் இளகிய மனப்பான்மையே உனக்கு இல்லையா என்றெல்லாம் ஜல்லி அடிக்கவேண்டாம். ஜாலியாக இருக்கவேண்டுமானால் தில்லாலங்கடி போட்டுக்கொண்டு வாழ்க்கை முழுக்க சாலியாக இருக்கலாம், அதில் பிரச்னையில்லை. ஒரு சின்ன cut போட்டுவிட்டு, ரத்தம் கசியவிட்டு கசியவிட்டே எரிச்சலூட்டும் மிக சாதாரணமான யுக்தி உங்களுடையது - இதில் நகைச்சுவை எங்கே வந்தது? எங்கே போனாலும் எளக்கியவாதி பழுத்த பழம் புழுத்த அரிசி என்ற ரீதியில் மரண ஜல்லி அடிக்கவேண்டியது, அட நிறுத்துங்க தம்புடு உங்க அலப்பறையை என்றால் பத்ம வியூகம் சக்கர வியூகம் எனவேண்டியது. இதே பத்ம வியூகம் பதிவை வேறு யாராவது எழுதியிருந்தால் முகமூடி அதை நக்கலடித்து எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று என்னை யோசிக்க வைப்பதுதான் இந்தப் பதிவுக்கு ஒரு குறைந்தபட்ச மரியாதையைக்கூடத் தர மறுக்கவைக்கிறது. இதற்கு முன்பு அப்படிப்பட்ட பதிவுகளையும் பார்த்திருப்பதால், அப்படி யோசிப்பது பெரிய குற்றம், என்ன இவன் ஈவிரக்கமற்ற ஜென்மம் என்றெல்லாம் அட்டைக்கத்தியைத் தூக்காமல், "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்றில்லாமல் யோசித்துப் பார்க்க முயலவும். இதுதான் நிஜம். வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து, நினைப்பதை இப்படி எழுதாமல், எழுதப்பட்டது பிடிக்காவிட்டால் இரண்டு வரியில் குத்தலாக இரண்டு வரி எழுதிவிட்டுப் போவது பெரிய பிரம்மவித்தை இல்லை. குத்தல்தான் ஜாலியென்றால் சொல்லுங்கள், இப்படி பக்கம் பக்கமாக எழுதித் தாலியறுக்காமல் இரண்டு வரி, மூன்று வார்த்தைகள், நாலு ஜாலிலோ ஜிம்கானா படங்கள் என்று பொடிமட்டைக் குத்தலையும் பின்னூடமாகவோ பதிவாகவோ போட்டு தொடரலாம் - பிரச்சினையே இல்லை.

உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தம் குறித்து என் அனுதாபங்கள்.

உங்களது இந்த மேற்கோள்களெல்லாம், ஏதோ அரிவாளை வைத்து வெட்டிக்கொண்டிருக்கும் ரௌடிகளிடமும் போய் "என்னய்யா குற்றிலக்கியவியாதி மாதிரி சண்டை போடறீங்கோ" என்று காலதேசவர்த்தமானமின்றி எதுக்கெடுத்தாலும் ஒரே பஜனையைப் பாடும் one size fits all தத்துவம் மாதிரித்தான் - இந்த விஷயத்தில் நீங்கள் செய்துவருவதும் அதுதான் என்பது என் அபிப்ராயம்; மாற்றுக் கருத்திருந்தால் சொல்லுங்கள், சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்கிறேன்.
 



சன்னாசி, இலக்கியவாதிகள் சலிப்படைந்ததை பற்றி என்னால் விரிவாக பேச முடியும். ஆனால் இப்போது பேச விருப்பம் இல்லை. நான் எழுதியது ஆதங்கப்பட்ட சம்பந்தப்பட்டவருக்கு புரிந்து அது குறித்து எதிர்வினையும் வந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

சிற்றிலக்கியவாதி என்றெல்லாம் உங்களை பார்த்து சொல்லவில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்.
 



முகமூடி,

நன்றி.

உங்கள் முகத்தை இன்னும் அகலமாகத் திறந்து காட்டியதற்கு.

சிரிப்பாக இருக்கிறது - உங்கள் மனம் பிறழ்ந்த புலம்பல்களை வாசிப்பதற்கு.

அது போகட்டும் - ஏதோ ஒரு சிலர் மட்டும் வாசித்த சதவிகித கணக்குகளை இன்னும் பலருக்கு எடுத்து வைத்த உங்கள் திறமை புல்லரிக்க
வைக்கிறது. மிக்க நன்றி அந்த விளம்பரத்திற்கு!!!

அது சரி, யார் அந்த திருமலை?

கொஞ்சம் தெளிவுபடுத்தி விடுங்கள். உங்களை இமயமலை, எவரெஸ்ட் என்ற உயரங்களோடு ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், அதே சமயம்
உங்களை மிகவும் மட்டம் தட்டி விடவும் விரும்பவில்லை. ஆகையால், புனிதமான மலையாகக் கருதப்படும் அருகேயுள்ள திருப்பதியைத் தான்
அப்படிக் குறிப்பிட்டேன். குறைந்த அளவு அந்த அளவிற்காகவாது உயரத்தைத் தொடுங்கள் என்று. அதை நீங்கள் யாரோடோ சம்பந்தப்படுத்திக்
கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது.

நன்றி.

அப்புறம் நண்பன் - துபாயில் ஒளிந்திருக்கிறார்.... ஹா!!!

மிகுந்த அழுத்தத்தில் குழம்பி விட்டீர்கள் போலிருக்கிறது....

பாவம்...

(நண்பன்)
 



அண்ணே, ஏதோ இந்த ஐப்பி விவகாரத்தில் உங்களை மட்டும் சைடிலே உதைத்துவிட்டார்கள் என்பது மாதிரி நீங்கள் சொல்வது குறித்து, என்னுடைய Little world of Walter Mitty புராணத்தையும் கேளுங்கள்:

மயில்ராவண குஞ்சுக்கோழிகளில் ஒன்று குடுகுடுவென்று போய் என் பல்கலைக்கழக வலைப்பதிவிலிருந்து ஒரு லிங்கடித்துப் போட்டு 'இவர் யார்' என்று சினிமா பொன்னையா வேலை பார்த்தது தெரியாதா தலைவரே உங்களுக்கு? என்னைப் பொறுத்தவரையில் என் அடையாளத்தை வெளிக்காட்டாததன் நிலைப்பாடு இதுதான்: என்னை உனக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீ என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே. இந்த பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு ஆதரவு தருமுன் முன்னொரு காலத்தில் சில பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து தூக்கப்பட்டபோது கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று குதித்த அதே குஞ்சுக்கோழி சூடோனிம் சூடத்தைக் கொளுத்தி என் பதிவில் ஜால்ராப்பசங்களா போங்கடா போங்க உங்க அழுக்கு மனசைச் சொறிஞ்சுக்கோங்க என்று King KK என்ற பெயரில் கமண்டு விட்டதைப் பார்த்து, என்னய்யா நமக்கே தெரியாம இவ்வளவு அழுக்கா நமக்குள்ள என்று பின்னூட்டங்களில் தோண்டி இரண்டு screenshot எடுத்து, பொறுப்பாக ஐப்பி இன்னபிற அடையாளத் தகவல் இழவையெல்லாம் அழித்து, என்னய்யா இது இந்தப் புத்தியையும் ஊரிலிருந்து வர்றப்ப பெருங்காய டப்பாவுல அடைச்சுக் கொண்டுவந்திருக்கீங்களா என்றுகூடக் கேட்காமல், தவறு செய்வது மனித இயல்பு என்ற ரீதியில் பொறுமையாகப் பின்னூட்டத்தில் கேட்டால் அத்தனை பின்னூட்டங்களையும் வழிச்சு வாரி செப்டிக் டாங்க்குக்குள்ள போட்டு மூடியாச்சு, இப்ப நாய் கச்சிச்சி வேற. விளக்குமாத்துக் கொண்டை. அவனவனை அவனவன் வேலையைப் பார்க்கவிடாம ஏதோ தொழிலே அடுத்தவன் தலையைச் சீவுறதுதான்ங்கிற மாதிரி தொணதொணதொணன்னு ஓலைப்பாயில ஏதோ மோண்ட மாதிரிக் கடுப்பேத்த வேண்டியது, கடிக்கிறியே பதிலுக்குப் பிடி இந்தா என்று பதிலுக்குக் குரல்வளையை நோக்கிப் பாய்ந்தால் அய்யோ அடிக்கிறான் பிடிக்கிறான் என்று ஒரு Catch 22வை உருவாக்கி ஒப்பாரி வைக்கவேண்டியது. இது எதுவுமே தெரியாத அப்பாவி நீங்கள் எனில், இனிதான் விளங்கிக்கொள்ளவேண்டுமென்றால் தொண்டரடிப்பொடியிடமிருந்து மயில் வழி விளக்கம் பெறவும். இல்லை இது எதுவுமே எனக்குத் தெரியாது, யாருக்கு மயில் அனுப்பவேண்டுமென்று நீங்கள் சொல்கிறீர்களென்று புரியவில்லை, தயவுசெய்து குழப்பாமல் பொழிப்புரை தரவும் என்றால் சொல்லுங்கள், இனி தயவுதாட்சண்யமோ வேறெந்த இழவோ எதுவும் பார்க்காமல் முன்னே போட்ட படத்தையும் பின்னூட்டப் பொழிப்புரையையும் மறுபடி எங்கே இருக்கிறதென்று தோண்டி எடுத்து இங்கேயே போடுகிறேன் - என்ன ஓக்கேவா?

இல்லை ஓணான் தானாக எப்படி உள்ளே புகுந்துகொண்டு என்னைக் குத்துது குடையுது என்று நானும் ஒரு பதிவு போடவேண்டுமா?

//சிற்றிலக்கியவாதி என்றெல்லாம் உங்களை பார்த்து சொல்லவில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்.//
அதல்ல விஷயம். யாரையும் சொல்லுமுன் உங்கள் தராதரத்தையும் ஒருமுறை உரசிப் பார்த்துக்கொள்ளவும் என்றுதான் சொல்வது. பதிவுக்கு நன்றி இடியாப்பம் பிழிந்தது பற்றி வேறேதும் விளக்கத்தைக் காணோம்? பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கழுத்தில் கத்தியை வைப்பது என் நோக்கமில்லை - அதது அவரவர் ஆலோசிக்க வேண்டியது. நான் நினைப்பதை உங்கள் வாயிலிருந்து பிடுங்கவேண்டுமென்பதல்ல என் நோக்கம் என்றாவது புரிந்தால் சரி.
 



offliner to help folks manage their comments: coComment - Learn More
 



கோயபல்ஸ் தமிழில் பேசினால் இப்படித்தான் இருக்கும் ::

// உங்களை இமயமலை, எவரெஸ்ட் என்ற உயரங்களோடு ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், அதே சமயம் உங்களை மிகவும் மட்டம் தட்டி விடவும் விரும்பவில்லை. ஆகையால், புனிதமான மலையாகக் கருதப்படும் அருகேயுள்ள திருப்பதியைத் தான் அப்படிக் குறிப்பிட்டேன். //
 



சன்னாசி, உஙக்ளை என்னை எல்லாரையும் பத்தி எழுதியிருந்ததுதான். நான் என்னை பற்றி குறித்ததை கேட்கிறேன். நீங்கள் உங்களை குறிப்பதை கேளுங்கள்.

பெயரிலி (ராம்வாட்ச்சர்)யிடம் நான் கேட்டதும் இதுதான். அவர் யார் யார் IP பற்றியோ எழுதுவது அவரின் அரசியல்... சம்பந்தம் இல்லாமல் ஏன் என் IPஐ பொதுவில் எழுத வேண்டும் என்பதுதான் நான் கேட்டது. ஏன் என் IPஐ பொதுவில் எழுதுகிறீர்கள், அதற்கு என்ன சம்பந்தம் என்று விளக்கவும், இல்லையெனில் எழுதப்பட்ட இடத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் என் IPஐ அழிக்கவும் என்று நான் சொன்னதத அப்போது காதில் வாங்கவில்லை. இப்போது அந்த அழிக்கப்பட்ட விவகாரம் எல்லாம் பற்றி ஒருவர் பேசுகிறாரே எப்படி என்று நான் கேட்டால் என்னவோ இவரிடம் சண்டை போடுவதாக நினைத்து நாய்களின் கால்களுக்கு இடையில் ஆராய்ச்சி பண்ணுகிறார். சரி விடுங்க... இதையெல்லாம் உங்களிடம் சொல்லி ஆகப்போவது என்ன?

என்னை உனக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீ என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே :: எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி
 



//தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு மத இயக்கத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டு சட்ட விரோத செயலகள் பல செய்து கைதிலிருந்து தப்ப அமீரகத்திலே தஞ்சம் புகுந்திருக்கும் நண்பன், என்னை பார்த்து குற்றம் சாட்டுகிறார். (அவரின் பாணியில் பேச கேவலமாக இருக்கிறது. என்ன செய்வது. இது நாள் வரை என்னை யாரோடாவது ஒப்பீடு செய்யும்போதெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது இவர்களுக்கு உரைப்பதில்லை... இனி இப்படித்தான். இவ்வரிகள் நீக்கப்பட வேண்டுமாயின், என்னை திருமலையோடு ஒப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்)//

நோய் முற்றிவிட்டதோ! தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். விரைவில் குணமடைய எனது பிராத்தனைகளும், வாழ்த்துக்களும்.
** இலக்கண பிழை இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்றே நம்புகிறேன்:-))**
 



எஸ்ரா, குட்டிரேவதி, துப்பட்டா மேட்டர் ஞாபகம் வருது. முகமூடி நீங்கள் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவரா இருந்தா அப்பிடிபோடு என்ற பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொண்டு, 'அன்புள்ள சகோதரி, எதோ மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் ஆகிப் போச்சு, மன்னிச்சிக்கோங்க' என்று ஒரு பின்னூட்டம் போட்டு விட்டிருந்தால் இந்த மேட்டர் அதோட ஓவர் ஆயிருக்கும். அதை விட்டு விட்டு அவரோட இவ்வளவு சீரியஸா சண்டை போட வேண்டிய அவசியமே இருக்காது. டோண்டுவோட வியாதி பரவிட்டிருக்குது போல.
 



யப்பா.. தல சுத்துது.... என்னதான் நடந்துச்சு.. என்னதான் நடக்குது.... கொஞ்ச நாள் தமிழ்மணத்துக்கு வரலைனதும் ஒண்ணும் புடியலடா சாமி....!!!!
 



// நோய் முற்றிவிட்டதோ! தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். விரைவில் குணமடைய எனது பிராத்தனைகளும், வாழ்த்துக்களும் //

அன்புக்கு நன்றி முத்துக்குமரன். உங்கள் நண்பன் செய்த அதே வேலையைத்தான் - கற்பனையாக உருவகம் செய்தது - நான் செய்தேன் என்பது உங்களுக்கும் விளங்கவில்லையா? இல்லை நீங்களும் திருமலை என்பது திருப்பதி மலை என்ற பொய்யை சொல்லப்போகிறீர்களா? உங்கள் அன்புக்கு நன்றி. இதே அன்பை கட்டுக்கடங்காமல் போவதற்குள் உங்கள் நண்பனிடமும் செலுத்துங்கள்.
 



யப்பா.. தல சுத்துது.... என்னதான் நடந்துச்சு.. என்னதான் நடக்குது....
 



This comment has been removed by a blog administrator.
 



I have no time..see you later
 



முகமூடி,
இங்கே கொஞ்சம் வந்து போங்க
 



சன்னாசி,

நீங்கள் அளித்த பின்னூட்டம் கிடைத்தது. அதை நசுக்கவெல்லாம் எண்ணம் இல்லை. ஆனால் பப்ளிஷ் பண்ணுமுன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

X என்ற ஒரு பதிவரை நோக்கி சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்த கேள்விகளை எதிர்த்து சில வாதங்கள் நடக்கின்றன. இப்போது கேள்விகள் குறித்த என் பார்வையை ஒரு பதிவாக வெளியிடுகிறேன். அப்போது என் பதிவில் ஒரு விவாதம் நடக்கிறது. அதில் பதில் சொல்லும் Y என்ற பதிவர் shit என்கிறார். அதை மேற்கோளாக்கி Z என்பவர் டம்ஸ் மற்றும் * சாப்பிடுமாறு சொல்கிறார். அது வயிற்றெறிச்சல் என்பதாக புரிந்து கொண்டு நான் அனுமதிக்கிறேன். ஆனால் அது Y பதிவருக்கு வேறு அர்த்தம் தருகிறது. உடன் அவர்

அ) ஏகப்பட்ட பேர் X பதிவை கேள்வி கேட்டாலும் என் பதிவு Y பதிவரின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சி என Y குற்றம் சாட்டுகிறார். மேலும் என் மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் ::
ஆ) அவரது கேள்விக்கு எதிர்வாதம் வைத்தவர்கள் அனைவரும் என் அவதாரங்கள் என்பது
இ) மோடி மஸ்தான் என்ற பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டம் நானே வேறு பெயரில் எழுதிக்கொண்டேன் என்பது
ஈ) ஞானபீடம் பதிவில் பலருக்கு தேள் கடிக்கும் என்ற அவர் கருத்தை same to you என்று சொன்னேன் என்பதற்காக நான்தான் ஞானபீடம் என்ற பினாமி பெயரில் எழுதி வருகிறேன் என்பது.
உ) ஆனந்த்/சின்னவன் என்பவரோடு சேர்ந்து கூத்து அடிக்கிறேன் என்பது.
ஊ) அவரது ஆ, இ, ஈ, உ என்பவற்றை கற்பனை குற்றச்சாட்டுகளாக நீங்கள் வைப்பது போலவே நானும் வைக்க முடியும் என்ற என் வாதத்துக்காக என் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

இந்த சந்தர்ப்பத்தில் என் பெயரில் தவிர வேறு பெயரில் போலியாக எழுதாத என்மேல் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்ற என் ஆதங்கத்தை என் பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இது என்னை போலியாக சித்தரிக்க முயற்சிக்கும் அனைவருக்கும். இது போலவே ஒரு முறை போலி ஐடியில் பின்னூட்டம் போட்டவர்களை குறித்து எழுதப்பட்ட பதிவில் போலி பின்னூட்டம் எதுவும் இடாத என்னுடைய ஐபி முகவரியை "சம்பந்தமில்லாமல்" சும்மாவேனும் வெளியிட்ட பெயரிலியையும் கேட்டிருந்தேன்.

இப்போது Y பதிவரின் பதிவொன்றில் "விஷயத்தை கண்டுகொள்ளாதீர்கள்" என்று பதில் சொல்லும் - என்னுடைய போலி பதிவை பற்றி ஏற்கனவே நான் தள முகவரியோடு எழுதியிருந்த நிலையில் அங்கே போய் போலி எழுதிய பதிவை நான் எழுதியதாக நினைத்து எனக்கு அறிவுரை சொன்ன பொட்டீக்கடை முதற்கொண்டு - எத்தனை பேர் என்ன விஷயம் என்பதை அறிந்து சொல்கிறார்கள் என்பதை தவிர்த்தாலும் ஒருவரின் பதில் கவனத்தை ஈர்க்கிறது. அது ஜோ. அனானிமஸாகவும் நானே எழுதிக்கொள்கிறேன் என்பது ஒரு பின்னர் ஒருநாள் உணர்ந்ததாக குறிப்பிடுகிறார்.

எதிர்கருத்து சொல்பவர்களெல்லாம் என் அவதாரங்கள் அல்லது போலி, பலர் பெயரில் நான் எழுதிக்கொள்கிறேன், அநாநிமஸாகவும் நான் எழுதிக்கொள்கிறேன் என்பதாக புரிந்துணரும் நிலவும் சூழ்நிலை இப்போது. இச்சமயத்திலே என்னை குற்றம் சாட்டுபவர்களுக்கு என்று இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காகவாவது ஒரு தன்னிலை விளக்கம் கொடுப்போமே என்று எழுதப்பட்டது இப்பதிவு.

இந்த இடத்திலே என்னை பற்றி பேசுவதுதானே நான் செய்ய முடியும். "ஏதோ உங்களை மட்டும் செய்தார்கள் என்று நினைக்காதீர்கள், மற்றவரையும் என்னையும்தான் செய்திருக்கிறார்கள்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் நியாயத்தை நீங்கள் கேட்பதை பற்றி ஆட்சேபம் இல்லை எனக்கு. என் நியாயத்தை நான் கேட்கிறேன் என்று என் இடத்திலே கேட்கிறேன் நான்.

இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தில் King KK என்று பின்னூட்டம் எழுதியது ஆனந்த் என்பதை நிரூபித்து, அவரிடம் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். எப்பொழுதாவது King KK ஆனந்த் என்ற உங்கள் வாதத்தை நான் மறுத்திருக்கிறேனா? இல்லை நீங்கள் அப்படியெல்லாம் செய்தது தவறென்று சொல்லியிருக்கிறேனா... உங்களையும் ஐ.பியால் அடித்திருக்கிறார்கள் என்பதை இதற்கு முன் ஆனந்த் பதிவில் நடந்த விவாதங்கள் மூலமே அறிந்திருந்தேன். இப்போது மீண்டும் அந்த விவாதங்களை, மறைக்கப்பட்ட பின்னூட்டங்களை இப்போது நீங்கள் இங்கு பின்னூட்டமாக தந்திருக்கிறீர்கள். அதை வெளியிடுமுன் உங்களிடம் இந்த கேள்வி. எதிர்கருத்து சொல்பவர்களெல்லாம் என் அவதாரங்கள் அல்லது போலி என்பதாக புரிந்துணரும் நிலவும் இந்த சூழ்நிலையில் உங்கள் பின்னூட்டம் என்னவாக புரிந்து கொள்ளப்படும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். எனவே நான் ஆனந்த் அல்லது சின்னவன் இல்லை எனும் போது ஆனந்த் பற்றிய பின்னூட்டத்துக்கு இங்கு என்ன அவசியம் என்பதை தெரியப்படுத்துங்கள். இதுவரை தணிக்கை எதுவும் செய்ததில்லை. நான் கேட்பது நியாயமாக உங்களுக்கு படவில்லையெனில் தாராளமாக உங்கள் கருத்தை அப்படியே வெளியிடுகிறேன். நன்றி.

*

உங்கள் அஞ்சலில் இருந்து கீழ்க்காணும் விஷயத்தை மட்டும் எடுத்தாள அனுமதிக்க வேண்டுகிறேன். இது மட்டுமே அந்த மொத்த விவாதத்தில் நான் சம்பந்தப்பட்டது. இதில் பெயரிலி சொன்ன விஷயத்தைத்தான் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.


1:15 PM

முகமூடி said...


கேள்வி கேட்டாலோ, கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொன்னாலோ நையாண்டி எழுத்தாளனுக்கு தேவையா இது என்று கேட்கப்படுவதால் முதலில் ஒரு முன்னூட்டம் :: இதை எழுதும் போது தெளிவான சிந்தனையுடன், சூடு சொரணை, வெறுப்பு, விருப்பு களைந்து, மதன் பாப் மாதிரி சிரித்துக்கொண்டே எழுதுகிறேன் என்று உறுதி கூறுகிறேன்.

அப்பன் குதிருக்குள் இல்லை மாதிரி ஒரு பின்னூட்டம் இங்கே.

Mr X = Mr Y என்று எழுதும் போது சம்பந்தம் இல்லாமல் காசியின் பதிவில் பெயர் எழுதி (மட்டுமே) பின்னூட்டம் இட்ட என்னையும் வோச்சர் சைடு கிக்காக குறிப்பிட்டது முத்திரை குத்தவா, அவதூறு பரப்பவா அல்லது வேறு எதற்காகவோ என்று புரியவில்லை. கேள்விக்கு பதில் தரப்படமாட்டாது என்று டிஸ்க்ளைய்மர் கொடுத்தாலும் அப்பாவி பொதுஜனம் கேட்டால் ஒரு வேளை சொல்லலாம் என்று கேட்டால் அதற்கு பதிலும் இல்லை. தத்துவத்தின் வழியிலே வந்த கருத்தை வழிமொழிபவருக்கு புரிந்தவகையில் ஏதேனும் சொன்னால் தன்யனாவேன்.


1:29 PM

-/பெயரிலி. said...


முகமூடியின் வினாக்கு வோச்சர் பதில் கொடுத்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன். சைட் கிக் பின்னூட்டம் இட்டாரென்பதற்காக என்பதற்காக அவரை இழுத்து அய்பி கொடுத்தது சரிதானா என்பதனையேனும் விலக்க முன்னால் விளக்கியிருக்கவேண்டும்.
 



பிரசுரிக்க கேட்டு வந்த மடல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது ::

*

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவித்துக் கொள்வது
------------------------------------------

ச.திருமலைராஜனாகிய நான் ச.திருமலை என்ற பெயரில் மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளாக ராயர் காப்பி கிளப் என்ற யாகூ குழுமத்திலும் கடந்த ஒரு வருடமாக மரத்தடி குழுமத்திலும் எழுதி வருகிறேன். இது தவிர தமிழோவியம் இணையப் பத்திரிகையில் ச.திருமலைராஜன் என்ற பெயரில் சில கட்டுரைகளும், நிகழ்வுகள் பற்றிய பதிவுகளும் எழுதியதுண்டு. எனக்கு ப்ளாகர் வலைப்பதிவு எதுவும் கிடையாது. குழுமங்களில் நான் எழுதுவதைப் பதிவு செய்து கொள்ள ஒரு யாகூ 360 வலைப்பதிவு மட்டும் வைத்துள்ளேன். அதையும் தமிழ் மணத்துடன் இணைக்கவில்லை. பெரும்பான்மையான தமிழ் வலைப்பதிவுகளை நான் படிப்பதோ, அவற்றிற்கு பின்னூட்டமிடுவதோ கிடையாது. நான் மதிக்கும் ஒரு ஒரு சில வலைப்பதிவுகளில் மட்டும் எப்பொழுதாவது ச.திருமலை என்ற பெயரில் பின்னூட்டம் இடுவது மட்டும் உண்டு.

என்னைப் பற்றி ஒரு மனம் பிறழ்ந்தவன் தொடர்ந்து தமிழ் வலைப்பதிவுகளில் ஆபாசமாக எழுதி வருகின்றான் என்பதையும் அதையும் ஒரு சில வக்கிரம் பிடித்த பதிவர்கள் தங்கள் பின்னூட்டப் பெட்டியில் வைத்து அழகு பார்க்கிறார்கள் என்பதையும் நண்பர்கள் மூலம் அறிவேன். அதையும் நான் ஒரு சில தன்னிலை விளக்கங்களுக்கு மேல் பொருட்படுத்தியது கிடையாது. சமீப நாட்களாக ஒரு சில வக்கிரம் பிடித்த வலைப்பதிவர்கள் நானும் முகமூடி என்ற பதிவரும் ஒருவர்தான் என்ற விஷமத்தனமான வதந்திகளைப் பரப்பி வருவதை கேள்வியுற்று படித்தறிந்தேன். நான் எனக்குச் சரி என்று தோன்றும் கருத்துக்களை எனது பெயரிலே சொல்ல என்றும் தயங்கியது இல்லை. எனக்கு முகமூடி தேவையில்லை. எனக்கு முகமூடி போல பொறுமையாக எழுத வராது. தோன்றும் எண்ணங்களை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாகக் கொட்டி விடுவதே எனது இயல்பு. முகமூடி அவர்களின் கருத்துக்களுடன் நான் பெரிதும் ஒன்று படுகிறேன் என்றாலும் கூட எங்கள் இருவரின் பாணிகளும் வேறு வேறு. அவரது சமயோதிடமும், பொறுமையான், பொறுப்பான பதில்களும், அங்கதச் சுவையும், எழுத்துத் திறமையும் என்றும் என்னை எப்பொழுதுமே வியக்க வைத்துள்ளன. அதற்காக நான் முகமூடி மீது பெரும் மதிப்பும் அவரது சிந்தனைகள் மீது மரியாதையும் வைத்துள்ளேன். அவர் துணிவாக திராவிடக் கட்சி அரசியல்வாதிகளையும், போலிகளையும், காழ்ப்புணர்வாளர்களையும், விமர்சித்து வருவதை நான் பெரிதும் ஆதரிக்கிறேன், பாராட்டுகிறேன். முகமூடியின் புகழும் பெருமையும் அவரை மட்டுமே அடைய வேண்டும். அவரது திறமைக்கும் துணிவுக்கும், தார்மீகக் கருத்துக்களுக்கும் போலியாக ஒரு புகழினை நான் பெற்றுக் கொள்ள, பங்கு போட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஆகவே எல்லாப் புகழுமே முகமூடியையேச் சார வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்தத் தன்னிலை விளக்கத்தை இங்கு இடுகிறேன். மரத்தடியில் என்னை நன்கு அறிந்த "நண்பர்"களுகும் கூட ஒரு எதிரி போல் "யார் அந்தத் திருமலை" கேள்வி எழுப்புகிறார்கள். அந்தக் கேள்வியை விஷமத்தனமான வதந்தியைப் பரப்பும் முன் கேட்டிருக்க வேண்டும். வதந்தியைப் பரப்புவதையும், பொய்யான தகவல்களைப் பரப்புவதையும், இழிவாக எழுதுவதையுமே தொழிலாகக் கொண்ட இன்னொரு வலைப்பதிவரும் இதே வேலையைச் செய்து வருகிறார். இவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். "ச.திருமலையாகிய நானும் முகமூடி என்ற வலைப்பதிவாளரும் இரு வேறு நபர்கள்", "ச.திருமலையாகிய நான் முகமூடி என்பவர் அல்லன்". முகமூடி என்ற நபரை நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை.

எனது கூற்றின் மீது யாருக்கேனும் சந்தேகம் இருக்குமாயின் அவர்கள் தாராளமாக பாஸ்ரனில் இருக்கும் எல்லோருக்கும் நல்லவரான பாஸ்ரன் பாலாஜி அவர்களிடம் விளக்கம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அவருக்கு நாங்கள் இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதை நிரூபிக்க முடியும். இல்லாவிட்டாலும் கூட தருமி போன்ற தனிப் பட்ட தாக்குதல்களில் இறங்காத பதிவர்களிடம் என்னால் எளிதாக நாங்கள் இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதை நிரூபிக்க முடியும். அவரிடம் கேட்டு அறிந்து சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம். அதற்கும் மேல் வதந்திகளைப் பரப்பும் விஷமிகள் பற்றி நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை. என்னால் இயன்ற தன்னிலை விளக்கத்தை நான் அளித்து விட்டேன். முகமூடியில் புகழை நான் பங்கு போட விரும்பவில்லை.

முகமூடியில் துணிவான , வெளிப்படையான, கண்ணியமான கருத்துக்களுக்கு எனது ஆதரவும், பாராட்டுதல்களும், ஊக்குவிப்புகளும் என்றும் உண்டு. இது போன்ற விஷமிகளின் காழ்ப்புணர்வு மிக்க தூஷணைகளைக் கழிவறைகளில் கொட்டி விட்டு அவர் தன் பதிவுகளைத் தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். முகமூடியின் மீதான தனிநபர் தாக்குதல்கள் பொறாமை உணர்வாலும், காழ்ப்புணர்வாலும், உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆத்திரத்தினாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் எழுபவையே. அதைப் புரிந்து கொண்டு இது போன்ற திசை திருப்புதல்களின் தனது நேரத்தை வீணாக்காமல், தனது தெளிவான சிந்தனைகளையும், எழுத்துத் திறமையையும் அவர் தொடர்ந்து ஆக்க பூர்வமாக பயன்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ச.திருமலை
 



//அது ஜோ. அனானிமஸாகவும் நானே எழுதிக்கொள்கிறேன் என்பது ஒரு பின்னர் ஒருநாள் உணர்ந்ததாக குறிப்பிடுகிறார்.//
முகமூடி,
இது அதிகார பூர்வமாக அந்த அனானிமஸ் நீங்கள் தான் என்று நான் கூறுவதாக தோன்றினால் ,என்னுடைய வார்த்தை பிரயோகத்தில் தவறு தான் .ஒருவேளை அது உண்மை இல்லாமல் இருக்கலாம் .அப்படியென்றால் அதற்காக வருந்துகிறேன் .ஆனால் இந்த அனானிமஸ் நீங்களாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் முற்றிலுமாக எனக்கு நீங்கவில்லை என்பதை நேர்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

நீங்கள் அந்த பதிவில் தெம்பில்லாமல் அனானிமஸாக வந்து என்னை கிண்டல் செய்ததாக நான் நினைக்கவில்லை .அந்த வாதங்களும் ,அதிலிருந்த மட்டையான கேலியும் ,அடிப்படை வாதமுறைக்கு சற்றும் நியாயமில்லாத வகையில் இருந்தும் ,அதை நீங்கள் பச்சையாக ஆதரித்தது ,உங்கள் இமேஜை வெளிப்படையாக கீழிறக்காமல் ,அனானிமசாக வந்து அதை செய்து விட்டு ,வெளிப்படையாக அதை ஆதரிக்க மட்டும் செய்தீர்கள் என்ற அனுமானம் எனக்கு ஏற்பட்டது.அது இன்னும் மாறவில்லை.எது உண்மை என்று அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
 



முகமூடி: இந்தப் பொறியை நீங்கள் வைப்பீர்களென்று நான் யூகிக்காமலில்லை. மட்டுறுத்தலை இந்தளவு குதர்க்கமாக உபயோகப்படுத்தமுடியுமென்பதை மற்றுமொருமுறை நிரூபித்ததற்கு நன்றி. நான் இட்ட முழுப் பின்னூட்டத்தை வெளியிடாமல், தேவைப்பட்டதை மட்டும் வெட்டிப் போடுவதுதான், எக்ஸ் ஒய் என்று ஜல்லியடிப்பதைத் திரும்பத்திரும்பச் செய்வதுகுறித்து மகிழ்ச்சி. இந்தப் பொறியில் சிக்கி, என்ன முகமூடியாரே நான் அனுப்பிய பின்னூட்டத்தைப் போடமாட்டீர்களா, இதோ என் பதிவில் நானே அதைப் போடுகிறேன் என்று துள்ளுவது என் நோக்கம் அல்ல. அதுதான் உங்கள் நோக்கம் எனில், அதையும் செய்கிறேன். மற்றுமொருமுறை பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன் - உங்களை எந்தவிதத்திலும் ஆபாசமாகத் திட்டாத, என் தரப்பு நியாயத்தை உங்கள் போலவே விளக்கும் எனது பின்னூட்டத்தை கத்திரி வைக்காமல் முழுதாக இடவும். இது வேண்டுகோளா கட்டளையா என்பதல்ல விஷயம். கருத்து சுதந்திரம் குறித்தும், அடுத்தவன் கருத்தை மதிப்பது குறித்தும் நீங்கள் இதுவரை அடித்ததெல்லாம் ஜல்லியா இல்லையா என்று உங்களையே ஒருதரம் கேட்டுக்கொண்டு, பின்னூட்டத்தை உங்கள் பதிவில் இடவும். இது விளம்பரம் அல்ல என்று பதிவுகளில் போய் உங்கள் தரப்பு நியாயத்தை வைக்க முடியுமெனில், என் தரப்பு நியாயத்தை இங்கே வைக்க எனக்கும் உரிமையுண்டு.

//இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தில் King KK என்று பின்னூட்டம் எழுதியது ஆனந்த் என்பதை நிரூபித்து, அவரிடம் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். எப்பொழுதாவது King KK ஆனந்த் என்ற உங்கள் வாதத்தை நான் மறுத்திருக்கிறேனா?//

மற்றபடி, ஆனந்த் பெயரை ரிலீஸ் செய்து ஒரு dampener effect கொடுத்ததற்கு நன்றி. என் பதிவில் நான் இதைப் போட்டாலும் அது ஒரு நமநமத்துப்போன அதிரசமாகிவிடும் இல்லையா? ;-). சிக்கலை திறமையாகக் கையாண்டதற்கு நன்றி. இப்படித்தான் நடக்குமென்று நான் எதிர்பார்த்ததுதான். என் பதிவில் 'முகமூடி என் பதிவை வேண்டுமென்றே வெளியிடாமல் மட்டுறுத்தல் செய்து வைத்திருக்கிறார்' என்று எழுதினால், "எனக்கு மட்டுறுத்தல் செய்வதுதான் ஒரே வேலையா, இப்போதுதான் அதைப் பார்க்கிறேன்" என்றும் ஒரு பொறி வைத்திருப்பீர்களென்று யூகிக்கிறேன். அடுத்த முறை எவனையும் குற்றம் சொல்லுமுன் போய் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொள்ளவும். ஆனந்த்தின் அந்த ஒரு பதிவில் கூட நான் அவரது பெயரை வெளிப்படையாகச் சொன்னதில்லை. அனானிமஸ்ஸைக் குறிவைத்துச் சொன்னதாகத்தான் இருக்கும்.

உங்கள் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் துடைத்து எறிந்ததற்கு நன்றி. நலமாயிருக்க வாழ்த்துக்கள். என் பதிவில் இந்தப் பின்னூட்டத்தையும் இட்டு, நேற்று நான் இட்ட முழுப் பின்னூட்டத்தையும் இடுகிறேன். உங்கள் பதிவில் நான் இனிப் பின்னூட்டங்கள் இடாததால் நீங்களோ நானோ எந்தவிதத்திலும் குறைந்துவிடப்போவதில்லை என்பதால், அப்படியே இருக்கட்டும். இப்பின்னுட்டத்துக்குப் பதிலளிக்கத் தேவையில்லை, இதைப் பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் உங்கள் விருப்பம்.
 



சன்னாசி,

சும்மா உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்கவும் செய்பவர்களில் நீங்களும் ஒருவர் என்று கேட்டு ஒரே ஒரு கேள்விக்கு சிந்தித்து பதில் அளிக்குமாறு கேட்டிருதேன்.

நான் ஆனந்த் என்பவர் இல்லை எனும்போது இப்போது, இந்த இடத்தில் எனக்கான தற்காப்பு சண்டையின் நடுவில் உங்கள் சண்டையை இழுப்பது எதற்காக என்று ஒரே கேள்விதான் கேட்டேன்.

"இது விளம்பரம் அல்ல என்று பதிவுகளில் போய் உங்கள் தரப்பு நியாயத்தை வைக்க முடியுமெனில், என் தரப்பு நியாயத்தை இங்கே வைக்க எனக்கும் உரிமையுண்டு" என்று சொல்லிவிட்டீர்கள். நன்றி. உங்கள் தரப்பு நியாயமும் அப்படியே வெளியிடப்பட்டது.

கழுத்துக்கு கீழே அடிப்பதற்கும் இடுப்புக்கு கீழே அடிப்பதற்கும் வித்தியாசத்தை விளக்கிய உங்களுக்கு,நான் கேட்ட கேள்வியின அர்த்தமோ அல்லது விளம்பரத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதோ புரியாமல் இருக்கும் என்பதை நான் நம்ப தயாராக இல்லை. உங்கள் குறிக்கோள் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் நான் சொன்னதை புரிய கொஞ்ச நேரமே பொறுத்திருந்தால் உங்களுக்கு தானே விளங்கும். அனேகமாக ::

// பெயரிலி,இட்ட பதிவிலே நீங்கள்தானே ஐ.பி எண்ணை மறைக்கச்சொல்லியுள்ளீர்கள் அது குறித்து ஏதாவது சொல்வீர்களா? // எவ்வளவோ முறை சொல்லியும் மீண்டும் இதை இங்கேயும் அங்கேயும் (அ)ஒன்றும் புரியாமல் அல்லது சிந்திக்காமல் (ஆ) எஜமானுக்கு தனது அப்பட்டமான விசுவாசத்தை காண்பிக்க இன்னுமொரு வாய்ப்பு

என்ற ரீதியில் எழுதும் கார்த்திக்ராமாஸ் ஆரம்பித்து வைக்கலாம்.

பொடிமட்டை எல்லாம் பிரிக்காமல் இரு கேள்விகளுக்கு மட்டும் சுருக்கமாக நேரடியாக பதில் சொல்லவும் :: நான் போலி பெயரில் எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு பற்றி உங்கள் பார்வை என்ன? என் ஐபியை சம்பந்தமில்லாமல் எழுதிய பெயரிலியின் நேர்மை குறித்த உங்கள் பார்வை என்ன?
 



I am re posting my previous coment changing the font.
---------------
முகமூடி,
ஓரளவுக்காவது துரியோதனச் செயல்களை செய்துவிட்டும் உங்களை
நீங்களே அபிமன்யுவாக வரித்துக்கொள்வத்ற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லையாதலால் வழக்கம் போல் சிரித்துவிடுகிறேன். நிற்க.

//இங்கே தருமியின் ஒரு முக்கியமான எதிர்பார்ப்பை குறிப்பிடவேண்டும் "திருமாவின் நெற்றியில் இருந்த திருநீற்றைவிடவும் அதில் திருமா சொல்லியிருந்த இரு விஷயங்களே வாசிப்பவர்கள் மனதில் ஏறி இருக்க வேண்டும்" தன்னை போலவே மற்றவர்களும் சிந்தித்து, அதை அவர் போலவே வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. //
+
// அதை எழுதிய பின்புதான் திருமா நாத்திகர் இல்லை என்பது அறிய வந்தது. திருமாவுக்கும் பெரியார் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை
சரிபார்த்துவிட்டு மீள்பதியலாம் என்று அதை மறைத்து வைத்தேன். //
என்றால், திருமா யார் எவர் என்று தெரியாமலே , பெரியாரியாரியா என்றவுடனேயே, அவரது திருநீறு கூட உங்களுக்கு பிரச்சினையாகத் தெரிந்தால், உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்கத்தோன்றுகிறது?
விதயம் தெரியாமலே திருநீறுக்கு பதிவுபோடுவது எதைத் தீர்த்துக்கொள்ள?

இன்னும் எரிச்சலூட்டுவது, ஒரு படி மேலெ போய்,
//ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது. சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி
கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே "போதிய அளவு" கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா?
//

இப்படியெல்லாம் கேள்விகேட்பது. சுந்தரவடிவேலின் பதிவிலே, திருமாவின் உரையை கேட்டீர்களா? இல்லையென்றால் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல்.. எழுவெத்தெட்டு வெத்து கேள்விகள் கேட்டு விட்டு, நான் அபிம்னயு என்று கத்துவது யாருடைய கழிவிரக்கத்தை சம்பாதிக்க?
இங்கே நாலு பதிவர்கள் அதை இதை எழுதிவிட்டதுக்கே, அபிமன்யு அவதாரம் எடுத்தால், களத்திலே ஓயாமல் வேலைசெய்யும் திருமாவும், இன்னும், பிறரும் என்ன அவதாரம் தரித்துக்கொள்ளவேண்டும் ?கிருஷ்ணராகவா?

//சமீபமாக போலியின் வன்புணர்ச்சியால் டோண்டுவுக்கு குழந்தை கிழந்தை பிறந்தால் என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு வந்திருக்கிறது. இதையெல்லலம் செக்கூலரிஸ்டுகள் கண்டிக்க மாட்டார்கள். //
எனக்கு உண்மையாகவே புரியவில்லை, போலி டோண்டுவுக்கு எதிராகசொன்ன கருத்துக்கு, முகமூடி, "பெண்கள் உடையணிவதையும்,
பாலியல் வன்முறைக்கும், ஆதரவாக , கோர்ட்டு பேசுவது போல், **பகிடியாக** பதிவிடலாம் என்றால், மொடர்ன்கேர்ள் மட்டும் பகிடியாக
முகமூடியின் போக்கிலேயே, பகிடி இடக்கூடாதா?
நான் புரிந்து கொண்டது, போலி டோண்டு பிரச்சினையை எவ்வாறு
பாலியல் பலாத்காரங்களோடு ஒப்பிடிமுடியும் என்று கேட்பதாகத்தான் மாடர்ன்கேர்ளின் பதிவை புரிந்துகொண்டேன். என்னைப்பொறுத்தவரை, முகமுடியின் முதலொப்பீடே மிகவும் கண்டிக்கத்தக்கது.
கணினியில்,வேலையில்லா நேரத்தில் பதிவிட்டு இலக்கியவாதிகளாக ஆகிக்கொண்டிருப்பவர்கள், என்னையும் சேர்த்துத்தான், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை கொஞ்சமாவது சிரத்தையோடு அணுகினால் நல்லது.

அக்கப்போர்களை ஆரம்பித்துவிடுவது, நக்கல்களில் கிடைக்கும் சந்தோசத்தில் களிப்பது, பின்னர் யாராவது பிரச்சினையை பெரிதாக்கினால் அபிமன்யுயாகிவிடுவது. நீங்கள் திருந்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பெயரிலி இட்ட பதிவிலே நீங்கள்தானே ஐ.பி எண்ணை மறைக்கச்சொல்லியுள்ளீர்கள் அது குறித்து ஏதாவது சொல்வீர்களா?
 



முகமூடி,

உங்கள் விரிவான பதிலைக்கண்டு பூரித்துப்புளகாங்கிதமடைந்தேன் அதற்கு நன்றி.
வழக்கம்போலவே எதற்கு பதில்தேவையில்லையோ அதைத்தானே நோண்டுவீர்கள்?

அ வோ ஆவோ இல்லை , அ ஆ இரண்டுமேதான்... நீங்கள் உங்கள் வாசிப்புக்குத் தகுந்ததுபோல்
"அன்பே ஆருயிரே" என்றும் வாசிக்கலாம். வரும் ஞாயித்துக்கிழமை பொஸ்ரனிலே எமது எசமானருக்கு கடாவெட்டி கூழ் காய்ச்சுவதாக ஏற்பாடு அழைப்பிதழ் அனுப்பட்டுமா ? வசதி எப்படி?
அபியுமன்யுவுக்கு இன்னும் எத்தனை போர்கள் உள்ளனவோ யாமறியோம்..
நன்றி ;-)
 



என்னை குறித்து கேட்கப்பட்ட இடத்தில் கூட தன்னிலை விளக்கம் நீஈளமாக ஆகாமல் சுட்டியாய் அளித்த மாதிரியே...

... மேலே விவாதிக்கப்பட்ட சன்னாசியின் பின்னூட்டம் இங்கே வெளியிடப்படுகிறது.
 



முகமூடி,

திருமலையின் மடலைப் படித்த பின் கொஞ்சம் விளங்குகிறது. மரத்தடியில் நான் தீவிரமாகவெல்லாம் இயங்கவில்லை. அதே போல,
ராயர் காப்பி கிளப்பில் நான் உறுப்பினன் கூட கிடையாது. ஆகையால், திருமலையின் பெயரோ அல்லது அவர் இயங்கும் செயல்பாடோ
எனக்கு எப்போதும் நினைவில் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், மரத்தடியில் எங்களுக்கிடையில் எந்தவொரு கருத்துப்
பரிமாற்றமும் நடந்தது கிடையாது. ஆகையினால், எப்பொழுதும் அவர் பெயர் என் நினைவில் நின்றதில்லை.

நான் எப்பொழுதுமே, எங்குமே, கேலி, கிண்டல், நக்கல், நையாண்டியெல்லாம் செய்து எழுதிக் கொண்டிருப்பதில்லை. எதிராளிகள்
உபயோகிக்கும் வார்த்தைகளுக்குத் தகுந்த அதே தரத்திலுள்ள வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகிறேன். அதே போல் தான் இங்கும்
நிகழ்ந்தது. உங்கள் பெயரான முகமூடியைக் கொண்டே, உங்களின் திசை திருப்பும் வாதங்களை தடை செய்து விட வேண்டும் என்று
தோன்றிய பொழுது, மூடிக் கொண்டு போங்கள் என்று எழுதினேன். மூடியை மூடிக் கொண்டு போ என்று சொல்லாமல் எப்படி சொல்வது?

ஆனால், அதே சமயம் உங்களை ரொம்பவும் மட்டம் தட்டி விட கூடாது என்பதும் என் எண்ணமாக இருந்தது - காரணம், உங்களின் சில
நுணுக்கமான வாசிப்பு - விவாதத்திற்கு சம்பந்தமில்லாதது என்றாலும், எரிச்சலூட்டும் அளவிற்கு திசை திருப்புகிறீர்கள் என்றாலும் - அந்த
கவனித்து வாசிக்கும் திறமையை மட்டம் தட்டக் கூடாது என்று தான் நினைத்தேன்.

உங்களுக்கு வேண்டுமானால், அது கோயாபல்ஸாக இருக்கலாம் - அதற்கும் கூட பதில் எழுத நினைத்தேன். ஆனால்,
விருப்பமில்லை. எங்காவது ஒரு இடத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதனால் தான். இதற்கு முன்னர் கூட உங்கள்
பதிவில் நான் ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை - இந்த பதிவில் வந்ததைத் தவிர.

என்றாலும் இரண்டாவது முறையாக ஒரு பின்னூட்டமிட வேண்டிய அவசியத்திற்கு என்னைத் தள்ளி விட்டீர்கள்.

நான் திருப்பதி என்ற வார்த்தையை நேரடியாக பயன்படுத்தவில்லை - அது தவறாக பொருள் செய்து கொள்ளப்படும் என் பெயரின்
காரணமாக. அதனால் திருமலை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினேன். அதுவும் பின்னணி என்ன என்று தெரியாத பொழுது.
இப்பொழுது நீங்கள் கொடுத்த பின்னணி கொஞ்சம் விஷயத்தை விளக்கிற்று. திருமலை என்ற பெயரில் சிலர் போலி
பின்னூட்டங்களை வலைப்பூக்களில் இட்டிருக்கிறார்கள். அதைச் சிலர் அழியாது வைத்திருக்கின்றனர் என்பது நான் அறியாதது.
ஏனென்றால் நான் பின்னூட்ட அரசியலில் அதிக அளவு நாட்டம் கொள்வதில்லை. இந்த போலி பின்னூட்ட விவாதங்களில் எங்குமே
நீங்கள் என்னைக் கண்டிருக்க முடியாது. இரண்டாவது, திருமலை என்ற ஒரு நபர் இருப்பதே மறந்து போனது. எங்குமே ஒருவரோடு
ஒருவர் பேசிக் கொண்டதில்லை என்பதனால் இருக்கலாம்.

இந்த சமயத்தில்,

// முகமூடிக்குள்ளிருக்கும் திருமலை போன்ற பெருமித உயரங்களை அடையத் துடிக்கும் அந்த உண்மை முகம் வருத்தமடையப் போகிறது
அன்பரே!!! // என்ற வாக்கியத்தை நீங்கள் எப்படி வாசித்தீர்கள் என்பதற்கான விடை இப்பொழுது தான் கிடைத்தது. ஆபாச பின்னூட்டம்,
திருமலை என்ற உண்மையான மனிதர் இதையெல்லாம் உங்கள் கவனத்தில் இருந்து எப்பொழுதும் உறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது
என்பதை இப்பொழுது தான் அறிய முடிந்தது. ஏனென்றால் என்னைப் பொருத்தவரைக்கும் திருமலை என்பது ஒரு புனித மலை. ஒரு
வேளை நான் வெறும் மலை என்று குறிப்பிட்டிருந்தால் உங்களுக்கு எதுவும் தோன்றியிருந்திருக்காது.

ஆகையால், நான் எழுதிய ஒரு வரி, எந்த உள்நோக்கமும் இன்றி எழுதிய ஒரு வரி, (ஒளிந்து மறைந்து நான் தாக்கமாட்டேன் - நேரடியாகப்
பெயரைக் குறிப்பிட்டு தாக்குமளவுக்கு தைரியமும், விவேகமும் இருக்கும் பொழுது) தவறாகப் புரிந்து கொள்ளப்பட அதிக அளவுக்கு
உங்களுக்கு சாத்தியதைகள் இருக்கின்றன என்பதை உணர்கிறேன். ஒரு வரி - அதிகப்படியான பின்னணி அறிந்தவர்களுக்கு ஒருவிதமாகவும்
அந்த விவரங்கள் எதுவும் தெரியாதவனுக்கு வேறு மாதிரியாகவும் பொருள் தருகிறது என்பதை இப்பொழுது அறிகிறேன் - அதாவது,
ஒரு வரியை நேரடியாக வாசிப்பதற்கும், வரிகளுக்கிடையேயான வாசிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிகிறேன்.

திருமலை என்ற நண்பரைப் பற்றி, (quote போட மாட்டேன்) நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ள இருவரின் பெயரைத் தந்திருக்கிறீர்கள். போஸ்டன்
பாலாஜி மற்றும் தருமி. நன்றி. விசாரிக்கல்லாம் போவதில்லை. நீங்கள் எல்லோரும் அறிந்த இந்த இரு நண்பர்களின் பெயர்களைக் கொடுத்திருக்காவிட்டாலும்
நான் விசாரித்திருக்க மாட்டேன். பின்னணி தகவல்களே போதுமானவை.

ஒரு தவறான புரிதலால், மன உளைச்சலுக்கு உங்களை ஆளாக்கியமைக்கு வருந்துகிறேன். மேலும், திருமலை என்ற உண்மை நண்பருக்கும் இதனால் மனவருத்தம்
வந்திருக்கும். இந்த மாதிரியான - முகமூடி போன்ற மனிதருடனெல்லாம் என்னை இணைத்து எழுதுகிறானோ என்று. எந்த ஒரு விதத்திலும் என்னோடு
சம்பந்தப்பட்டிருக்காத ஒருவரைப் பற்றிய அபிப்பிராயங்களை நான் ஏன் சொல்ல வேண்டும்?

முகமூடி இந்த மாதிரியான ஒரு விமர்சனத்தை உங்கள் மீது வைக்க நான் முயற்சிக்கவில்லை - ஒரு ஆபாசப் பின்னூட்டம் எழுதியவராக. ஏதோ ஒரு
அறிவுரை மாதிரி எழுத முயற்சித்தேன். தப்பாக புரியப்பட்டுவிட்டது. என்றாலும், உங்கள் மீதான நல்லெண்ணம் எனக்கு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

உங்கள் மீது நல்லெண்ணம் எதுவுமில்லை என்பதால், உங்களை ஆபாசமானவராக சித்தரிக்க வேண்டிய அவசியமெல்லாம் எனக்கில்லை என்பதால், நீங்கள்
தான் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றாலும் கூட, உங்களுக்கிருந்த அழுத்தத்திலும் மற்ற பிற காரணங்களாலும் கூட, உங்களை ஒரு தவறான
புரிதலுக்கு உட்படுத்திய ஒரே காரணத்திற்காக - வருந்துகிறேன்.

நன்றி.

(நீளமான பதிவிற்கு மன்னிக்கவும். எதையும் கட் செய்யாமல், ரீடிங் பிட்வீன் த லைன் போகாமல், அப்படியே பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏதாவது
எடிட் செய்யப்பட்டதாகவோ, மாற்றம் செய்யப்பட்டதாகவோ தெரிந்தாலோ, அப்புறம் மீண்டும், உங்கள் பெயருடன் இந்த பதிவை என் வலையில் அரங்கேற்றுவேன். )
 



நேர்மையான விளக்கம், நண்பன் அவர்களே. சில நேரங்களில், புரிதலில் தவறு ஏற்படுவது சகஜம் தான். நாம் தமிழில் எழுதும் எல்லோர் எழுத்தையும் படிப்பது சாத்தியமில்லையே. ஆனால் அதை உணர்ந்து பின்னூட்டமிட்டிருக்கிறீர்களே, அது பாராட்டபட வேண்டிய விஷயம்.
 



I missed all these as I was in India. My hats off to you for your standa and your undaunted courage! Please keep it up!

naangaL irukkiROm!!
 



சரி, உங்க கருத்து ??