<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தமிழுணர்வு


உயிர் கொடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பற்றி சொல்லி அதுகுறித்த கேள்விகள் கேட்டால் வலைப்பதிவாளர்கள் சிலர் தமிழுணர்வால் நெஞ்சு விம்மி துடிக்கிறார்கள்... பிடிக்காத அரசியல்வியாதி கேட்பதால்தானே அதை எதிர்த்து கேட்கிறாய்... அவர்கள் தாயை பற்றி கேட்டால் என்ன செய்வாய் என்று குயுக்தி/அபத்தமாக ஒரு கேள்வி.. அரசியல்வியாதி தாயை பற்றி சொல்வதற்கு மட்டுமல்ல மற்ற எதற்குமே கேள்வி கேட்காமல் - திராவிட பாணியில் சொன்னால் பகுத்தறியாமல் - மண்டையை ஆட்டி ஏற்றுக்கொள்ளும் ஆட்டு மந்தை கூட்டத்தில் நான் இல்லை என்பதால் இந்த கேள்விக்கு பதில் சொல்வதும் தேவையில்லாதது... அதற்காக அப்படி சொல்பவர்களையும் தப்பு என்று சொல்ல முடியாது... தமிழை பழித்தவனை நாய் கடித்தாலும் விடேன் என்ற சினிமாவுக்கு எழுதப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்து வளர்ந்தவர்கள் வேறு எப்படி யோசிப்பார்கள்.. அவர்களை பொறுத்த வரை தமிழுக்காக போராடுகிறேன் என்று சொல்லிவிட்டால் போதும், அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை பார்த்து ஏதேனும் கேள்வி எழுப்பினால் உடனே ஃபத்வாதான்...


இந்த தமிழுண்ர்வாளர்கள் பயப்படுவது :: இப்படியே போனால் தமிழுக்கு விரைவில் சங்கு என்ற எண்ணத்தில்... Anxiety Disorder அல்லது Phobia என்பது ஒரு மனநிலை... இம்மனநிலை முற்றும் போது ஏதோ கெட்டது ஒன்று விரைவில் நடக்கப்போகிறது என்று மிகுந்த கற்பனை உணர்ச்சி கொண்டு அதிலேயே வாழ ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கேற்றார்போல் அவர்களின் செயல்பாடுகளும் மாறுபட ஆரம்பிக்கும்... உலகம் அழியப்போகிறது என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு அலைவது போல்தான் இதுவும்.... நம் அரசியல்கட்சிகளுக்கு இந்த மனநிலையா என்றால் இல்லை... ஆனால் அவர்கள் இந்த மனநிலையை சமூகத்துக்கு பரப்பும் செயலை நரம்பு முறுக்கேறும் எதுகை மோனையால் செய்வார்கள்... தமிழ் என்பது மொழி என்பதை மீறி அதற்கு ஒரு உருவகம் கொடுத்து, அதை ஒரு உயிர்ப்புள்ள ஜீவனாக ஆக்கி, அவ்வுருவமும் தாயும் ஒன்று என்பதாக மூளைச்சலவை செய்யப்பட்ட சமூகம், அவ்வரசியல் கட்சிகள் தமிழின் பெயரால் நிகழ்த்தும் அனைத்து செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக கருதும். மீறி விமர்சிப்பவர்கள் சமூக விரோதி என்ற அளவுக்கு பார்க்கப்படுவார்கள்...


இப்போது தமிழுக்கு பெரிய ஆபத்து வந்து விட்டது என்று கூக்குரலிடுகிறார்கள்.. எதன் அடிப்படையில்? இந்த தலைமுறை குழந்தைகளுக்கு தமிழில் ஒழுங்காக பேச எழுத வருவதில்லை என்பது மட்டுமா அது? இவர்கள் கிராமத்தில் படிக்கும் பிள்ளைகளையோ, சிறு நகரங்களில் படிக்கும் பிள்ளைகளையோ கணக்கில் எடுக்கிறார்களா? பெருநகரங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்கும் சில குழந்தைகள் "பீட்டர் விடுவதை" வைத்து அளக்கிறார்களா? தொலைக்காட்சியில் காம்பியரினிகள் சுளுக்கி சுளுக்கி தமிங்கிலீஷ் பேசுவது உலகத்துக்கே போகிறது. அது ஒரு வேளை அத்தோற்றத்தை தருகிறதா? ( ஆனால் அதை மாற்ற தாத்தாவுக்கே அதிகாரம் கிடையாதாம். அது அவருக்கு சம்பந்தமில்லாதவர்கள், அவர் சொல்லை கேட்காதவர்களின் பிஸினஸாம்... எதிரி தொலைக்காட்சியிலும் அதே கதைதான்... )

தமிழ் என்பது ஒரு மொழி... அதற்கு தனியாக உயிர் கிடையாது... தமிழ் பேசப்படுபவர்களால் மட்டுமே வாழ்வும் வளமும் பெறுகிறது... தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்றால் தனியாக அது எப்படி வாழும்... தமிழ் வாழ தமிழன் வாழ வேண்டும்... தமிழ் வளர மொழி பேசும் சமூகம் வளப்படுத்தப்பட வேண்டும்... சோறில்லாமல் கும்பி காய்பவனிடம் தமிழுக்காக உயிர் கொடுப்போம் என்று கத்தினால் போடா என் .யிரு என்றுதான் சொல்வான்.

திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்

தமிழுணர்வால் நெஞ்சு விம்மும் ஒருவரிடம் இந்த சிலப்பதிகார பாடலுக்கு அர்த்தம் கேட்டேன். இதில் வரும் வார்த்தைகள் அனைத்தும் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் "நான் இன்னும் மாணவன் நிலையில்தான் இருக்கிறேன்" என்று ஜல்லியடித்தார் அவர்... ஆனால் எதிர்காலத்துக்காக போராடுவது அவரது கடமையாம்... தார் வாளி கொண்டு வீரு நடை போடுகிறார்.

5000 வருடங்களாக பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் தாங்கி வந்த தமிழ் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் புழக்கத்தில் இல்லாத மொழியாக ஆகிவிடும் என்று சொல்பவர்களே அதனை உணர்ந்துததன் சொல்கிறார்களா என்பது வேறு விஷயம்... அத்தனை அச்சுறுத்தல்களையும் அவ்வப்போது சிலர் போராடித்தானே காப்பாற்றினார்கள் என்று சொல்கிறீர்களா.. அது உண்மைதான்.. ஆனால் அந்த போராட்டத்துக்கும் இப்போதைய சுயநலவாத குரங்கு செயல்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா... தார் அடிப்பதும், ஊர் பெயரை மாற்றுவதும், தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதும்தான் தமிழ் வளர வழியா... ஆங்கிலத்தை ஒழித்தால் தமிழ் வளர்ந்துவிடுமா.. நம் வீட்டு பிள்ளை எப்போதும் இரண்டாம் தகுதியிலேயே இருக்கின்றானே என்ற anxietyல், அவன் முதல் தகுதிக்கு வர சுலப வழி, முதல் தகுதியில் இருப்பவனை கொன்று விடுவதுதான் என்ற முடிவுக்கு வருவது அபத்தமாக இல்லையா...

****

மெட்ராஸ்னு இருக்கிற பேர சென்னைன்னு மாற்றினார்கள்... பம்பாய மாத்துறாங்கோ, கல்கத்தாவ மாத்துறாங்கோன்னு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு வேற... எது எதுல மத்தவங்கள பின்பற்றுவதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா... பம்பாயிலயும் கல்கத்தாவிலயும் சிகப்பு விளக்கு பகுதின்னு ஒன்னு தனியா உண்டு.. சென்னையிலயும் கொண்டு வருவாங்களோ... கேள்வி என்னவென்றால் இது தமிழ் வளர்ச்சிக்கு எந்த அளவில் உதவும்... அதற்கு ஆன லட்சக்கணக்கான ரூபாய்களை இலக்கிய வளர்ச்சிக்கோ, தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக்கோ கொடுக்கலாமே என்றால் இது ஒரு அடையாளக்குறியீடு என்று ஏதாவது சொல்வார்கள்.

ஆனால் இது ஒரு பெரிய விஷயமே இல்லை...விஷயம் என்னவென்றால் மாத்தியவர்... கல்லூரி முதல்வரா இருந்து சபாநாயகரா மாறுன சாத்தையா.. தன் பேர தமிழ்குடிமகன்னு மாத்துன மாதிரியே சுலபமா ஊர் பேர மாத்திட்டாரு... அடுத்த தேர்தல்ல கட்சி ஸீட் தரலையின்ன உடனே கட்சி மாறிட்டாரு... அதுவரை இவர் இருந்த திமுகவோட கொள்கைய அதிமுக பின்பற்ற ஆரம்பிச்சிட்டுதா இல்ல திமுக கொள்கை மாறிடுச்சா.. என்ன ஆச்சின்னு யாருக்கும் தெரியல...

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு தலைமுறையின் போக்கையே மாத்துற முடிவை எடுப்பது எப்படி சரியாகும்.. இதை கேட்க கூடாதா???

5 வகுப்பு வரை தமிழ் மட்டும்தான் கற்பிக்க வேண்டும்னு ஒரு முடிவு எடுத்தாங்க... இதன் பின்னணியில ஏதாவது அறிவியல் பூர்வமா ஆய்வு செய்யப்பட்டதா... ஆய்வு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது.. எதிர்பார்க்கும் மாற்றங்களை இந்த முடிவுகள் கொடுக்குமா... ஒரு மண்ணும் தெரியாது... இந்த முடிவ நீலாங்கறை பீச் கெஸ்ட் அவுஸ்ல உக்காந்துகிட்டு 4 பேரு எடுத்தா போதுமா.. இது என்ன ஜனநாயக நாடா இல்ல இவங்க அப்பன் வீட்டு சொத்தா... இது சம்பந்தமா முணுக்குன்னு ஒரு எதிர்ப்பு வந்த உடனே, அதை ஆய்வு செய்ய ஒரு குழு போடப்பட்டது... அதுக்கு தலைவரான நீதிபதி தமிழறிஞர் என்று அறியப்பட்டவர்.. அந்த காலகட்டத்தில் சென்னையின் பாதி இலக்கியக்கூட்டங்களில் அந்த நீதிபதியை காணலாம்.. மேலும் அந்த குழுவில் முக்கால்வாசி பேர் தமிழறிஞர்கள்... ரஷ்ய தேர்தல் மாதிரி முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டே அந்த பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடந்தது... அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அறிந்திருப்பார்கள் : அறிஞர்களின் "மாப் மென்டாலிட்டி" பற்றி... அப்புறம் என்ன ஆனது அந்த முடிவு... எதற்கு இந்த கூத்து...

மதராஸ்/சென்னை பல்கலை சர்ச்சையின் போது சன் டிவி பெயர் பற்றி கேட்டதற்கு அது கமர்சியல் விஷயம் என்கிறார் துரை முருகன்... தார் அடித்த ராமதாஸிடம் சன் டிவிக்கு ஏன் அடிக்கவில்லை என்று கேட்டால் அது 10 வருடத்துக்கும் மேலாக எஸ்டாப்ளிஷ் ஆகிவிட்ட ப்ராண்ட் நேம் என்று ஜல்லியடிக்கிறார். அப்ப 200 வருடத்துக்கும் மேலாக எஸ்டாப்ளிஷ் ஆன மதராஸை சென்னை என்று மாற்றினார்களே, அப்ப தோணவில்லையா அது... பல வருடங்களாக எஸ்டாப்ளிஷ் ஆன சிறு கடைகளின் தட்டிகளில் மட்டும் தார் அடித்து சன் டிவிக்கு அடிக்காததற்கு காரணம் எஸ்டாப்ளிஷ்மண்டா அல்லது அடிப்பவனுக்கு ஆட்டோவில் பாலா என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை...

என்னால் தமிழில் பேச, எழுத, புரிந்து கொள்ள முடியும். என் பிள்ளைகளுக்கும் அதை கற்றுக்கொடுப்பேன்.. ஆனால் அதை நானாக செய்வேன்... நீ செய்யத்தான் வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினால் போடா .யிரு என்றுதான் நானும் சொல்வேன்... ரவுடிக்கூட்டத்துக்கு என் கடை பெயரில் தார் அடிக்க உரிமை யார் கொடுத்தது? உன் சுதந்திரம் என்பது என் வீட்டு வேலியின் வெளிப்புறம் வரைதான். அதை தாண்டி வந்தால் செருப்பால் அடிக்கும் உரிமை என்னுடையது... மன்னராட்சி இல்லாத சனநாயக நாட்டில் நீ நினைப்பதை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஓட்டு போட்டோமே அதுங்களை கூட்டி சட்டம் கொண்டு வா... அதுவரை என் உரிமையில் தலையிடாதே..

பதவிக்கு வந்தோமா... சாகற வரைக்கும் ஆள் அம்புன்னு எல்லாத்தையும் அனுபவிச்சமா... புள்ள குட்டிங்க இல்ல உடன் பிறவா சொந்தம்னு எல்லாரையும் நல்ல பதவிக்கு வரவழைச்சமா... 10 தலைமுறை உக்காந்து சாப்பிடறதுக்கு சொத்து சேத்தமா... முடியாதப்போ எதுனா தோட்டத்தில ஓய்வு எடுத்தமான்னு போவீங்களா... என்னவோ தமிழ இவனுங்க பேர்ல காப்புரிமை செஞ்ச மாதிரி ரவுடிக்கூட்டத்த கூட்டி அராஜகம் பண்ணிகிட்டு...

எப்பொழுது எல்லாம் மக்களுக்கு பெருந்துன்பம் தோன்றுகிறதோ, அப்பொழுது எல்லாம் மக்களின் மனம் மகிழ்விக்க, அவர்களின் கவனத்தை திசைதிருப்ப உதவுபவை வீரப்பன், தமிழ் போன்றவை... இப்போது வீரப்பன் இல்லை, தமிழ் எப்போதும் இருக்கும்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


Neon, Joan saarbha
oru sabaash!
 



"5 வகுப்பு வரை தமிழ் மட்டும்தான் கற்பிக்க வேண்டும்னு ஒரு முடிவு எடுத்தாங்க..."

அச்சமயத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் பேராசிரியர் நன்னன் கலந்து கொண்டார். அவர் முடிவுக்கு ஆதரவாகப் பேசினார்.

அவரிடம் "ஐயா, தங்கள் பேரப் பசங்கள் மட்டும் ஆங்கிலப் பள்ளியில் படிக்கலாமா?" என்று கேட்டதற்கு அவர் "அது வேறு விஷ்யம், இங்கு அதைப் பற்றி என்ன பேச்சு" என்று கூறி விட்டார்.

நான் கூற நினைப்பது இதுதான். தமிழில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது சம்பந்தப்பட்ட பெற்றோர் எடுக்க வேண்டிய முடிவு. அரசியல் வியாதி இங்கு வரத் தேவையில்லை. அப்படி வர வேண்டுமென்றால் முதலில் தத்தம் வீட்டை ஒழுங்கிபடுத்தி விட்டு வரட்டும். அவ்வாறு இல்லாமல் ஜல்லியடித்தால் இம்மாதிரி பேச்சு கேட்க வேண்டியதுதான். அவர்களுக்கு ஆதரவாக ஜல்லியடிக்கும் வலைப்பதிவர்களே தத்தம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் என்ன நீட்டி முழக்கிக் கொண்டு வருவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



'தமிழ் என்பது ஒரு மொழி; தனித்தமிழ் என்பது ஒரு முயற்சி' - ஜெயகாந்தன்

நாங்க ஜெயகாந்தன் கட்சி!
 



//உயிர் கொடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பற்றி சொல்லி அதுகுறித்த கேள்விகள் கேட்டால் வலைப்பதிவாளர்கள் சிலர் தமிழுணர்வால் நெஞ்சு விம்மி துடிக்கிறார்கள்... //

அண்ணாட்சி நடைமுறை சிக்கலெல்லாம் நீங்குன பிறகு., கொடுக்க தயாரா இருக்கிக?., வேண்டாம் ... பாவம்... அப்புறம் நாங்க யார எதிர்த்து பின்னூட்டம் போடுறது?. தவிர உங்கள் சேவை இங்கே தேவை. பின்ன இப்பிடி புரியாமா மொழிக்கு உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து தாய் மாதிரின்னு நெனைச்சு வளர்கின்ற கூட்டத்த தடுத்து நிறுத்த ஆள் வேண்டாமா?

//தமிழ் வாழ தமிழன் வாழ வேண்டும்... தமிழ் வளர மொழி பேசும் சமூகம் வளப்படுத்தப்பட வேண்டும்...//
நம்ம அரசியல்வாதிகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுருவிக போல?., நம்ம நல்லா வளமா அமெரிக்காவில உக்கார்ந்துதான இருக்கோம்?., சரி அதுக்கு என்னா செய்யணும் சொல்லுங்க.

//இரண்டாம் தகுதியிலேயே இருக்கின்றானே என்ற அன்௯இஎட்ய்ல், அவன் முதல் தகுதிக்கு வர சுலப வழி, முதல் தகுதியில் இருப்பவனை கொன்று விடுவதுதான் என்ற முடிவுக்கு வருவது அபத்தமாக இல்லையா...//

இது அப்படியில்லங்க - ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்ப்பவனிடம்., உன் புள்ள பட்டினில சாகப் போறான்னு சுட்டிக் காட்டுவது. முதல் தகுதி!., எதற்கு முதல் தகுதி? ஆங்கிலத்திற்கும்., ஹிந்திக்கும் உங்கள் மாதிரி ஆளுக முதல் தகுதிய கெடுக்கிறிங்க. தமிழுக்கு இரண்டாம் தகுதி. உங்களுகெல்லாம் தார் மட்டும் போதுமா?

//எது எதுல மத்தவங்கள பின்பற்றுவதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா... பம்பாயிலயும் கல்கத்தாவிலயும் சிகப்பு விளக்கு பகுதின்னு ஒன்னு தனியா உண்டு.. சென்னையிலயும் கொண்டு வருவாங்களோ... //
துரை முருகன் சொன்னதுல பாதிய மறைச்சு மீதிய வாகா எழுதியிருக்கிறீர்கள் .... அதில் கொச்சைத் தனமான ஒரு கேள்வி வேறு., நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்த பம்பாய் கல்கத்தாவே மாறிவிட்டது சென்னை என்று மாற்றினால் என்ன என்றார்.
முட்டாள்தனமான, தேவையற்ற ஒரு சட்டம்!., மதராஸ் சென்னை ஆனதால்., மதராஸ் பல்கழைக்கழகம், சென்னை பல்கலைக்கழகமாகி விட்டதாம் (அரசாணை இல்லாமலேயே) ஆனால் சான்றிதழ்களில் மதராஸ் பல்கலைக் கழகம் என்றுதான் இருக்கிறதாம், அரசுக்கு வரும் பல்கலைக்கழகம் சம்பந்தமான கோப்புகளில், கடிதங்களில் மதராஸ் பல்கலைக் கழகம் என்றே இருக்கிறதாம்., ஏற்கனவே இருப்பதை சொல்வதற்கு ஒரு சட்டம். அதற்கு சபை நேரத்தை விழுங்குகின்ற ஒரு வாக்குவாதம். கேள்வி கேட்கக் கூடாதா?.

//இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு தலைமுறையின் போக்கையே மாத்துற முடிவை எடுப்பது எப்படி சரியாகும்.. இதை கேட்க கூடாதா???//

சாத்தையா எடுத்த (என்னா கிண்டல்?., ஏன் சாத்தையா தமிழ்குடிமகனாகக் கூடாதா?., எந்தக் கட்சிக்குப் போனாலும் அவர் தமிழ்குடிமகன் தான்) முடிவு எந்த தலைமுறைய எப்படி மாத்துச்சு?.

//5 வகுப்பு வரை தமிழ் மட்டும்தான் கற்பிக்க வேண்டும்னு ஒரு முடிவு எடுத்தாங்க... இதன் பின்னணியில ஏதாவது அறிவியல் பூர்வமா ஆய்வு செய்யப்பட்டதா... ஆய்வு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது..//

பொல்லாத அறிவியல் பூர்வம்.. என்ன ஆய்வு செய்யணும்?. எத்துணை சட்டம் போட்டாலும் ஆங்கில வழிக் கல்விலதான் படிக்க வைப்போம்னு நாம உறுதியா இருக்கோம்.

//மதராஸ்/சென்னை பல்கலை சர்ச்சையின் போது சன் டிவி பெயர் பற்றி கேட்டதற்கு அது கமர்சியல் விஷயம் என்கிறார் துரை முருகன்... //

அந்தம்மாவுந்தான் 'போயஸ் கார்டண்' இதையும்தான் சொன்னாரு துரைமுருகன்.

//ஓட்டு போட்டோமே அதுங்களை கூட்டி சட்டம் கொண்டு வா... //
அட சட்டம் கொண்டு வந்தாலும் சத்தாய்ப்பா... என்னாத்துக்கு கொண்டு வர்றிங்க? அதற்கு ஆன லட்சக்கணக்கான ரூபாய்களை இலக்கிய வளர்ச்சிக்கோ, தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக்கோ கொடுக்கலாமேன்னு அறிவுரை சொல்றிங்க. அப்புறம் சட்டம் கொண்டு வா செய்றேன்கிறீங்க... தலையச் சுத்துது சாமி!

//என்னவோ தமிழ இவனுங்க பேர்ல காப்புரிமை செஞ்ச மாதிரி ரவுடிக்கூட்டத்த கூட்டி அராஜகம் பண்ணிகிட்டு...//

அது உங்க பேர்ல இருக்கறது அவங்களுக்கு என்னா தெரியும்., நீங்க நினைக்கிற மாதிரித்தான் அவங்களும் இந்த முகமூடி வேலைக்குப் போனமா, சம்பளம் வாங்குனமா., சய்ந்தரமானா பதிவப் போட்டமா இருக்காமா, எங்களையே தாக்கிகிட்டுன்னு நினைக்கிறாங்க.

//அவர்களின் கவனத்தை திசைதிருப்ப உதவுபவை வீரப்பன், தமிழ் //
உங்கள் மாதிரி ஆளுக எப்பத் தமிழ் பத்தி பேசினாலும் மகிழ்ச்சிக்காக திசையத் திருப்புறாங்கன்னு நினைச்சு சிரிச்சுட்டு கண்டுக்காம போய்க்கிட்டு இருக்கறதுனாலதான் தார்சட்டிய தூக்குறாய்ங்க... (வீரப்பனோட கொண்டு போய் சேர்த்துட்டிங்க) ம்... திசை திருப்பறதுக்கு ஆயிரம் இருக்குண்ணே வீரணம், காவேரி, சேதுசமுத்திரம்னு. தயவுசெய்து தழிழைப் பத்தி சொல்லும்போது., நின்னு கேளுங்க.
இதுனால வளருமா? அதுனால வளருமான்னு ஆயிரம் கேள்வி கேட்போம்.. நாமெல்லாம் அடுத்தவன் நம்ம கால மிதிச்சுட்டு 'மன்னிச்சுக்கங்கன்னு' சொன்னா எகிறவும் 'சாரி' ந்னா 'ஹி! ஹி!! இட்ஸ் ஒகே' ந்னு வழியவும் பழக்கப்பட்ட கூட்டமா போய்ட்டோம். தமிழ் வளருமான்னு கேட்டு என்னா செய்யப் போறோம்? போய்த்தூங்குண்ணே.
 



முகமூடி தமிழ் வளர்ப்பது காப்பது எல்லாம் அபத்தம்.தமிழை உள்ளபடி வைத்திருந்தாலே போதும்.ஆனால் உள்ளபடி வைத்திருத்தல் என்பது எல்லோரும் நான் தமிழைப் பேசுவேன் எனது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பேன் என்று நீங்கள் சொன்னமாதிரிச் செய்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.ஆனால் அதை யார் செய்கிறார்கள் அப்படிச் செய்யாதவிடத்து தமிழ் இன்றைக்கிருக்கிறபடி நாளைக்கும் இருக்கும் என்கிறீர்களா?யாருமே பேசாதபோது வழக்கிலிருக்கும் தமிழ்ச்சொற்களுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிற போது நளைய சமுதாயம் தமிழை எங்கே தேடும் சிலப்பதிகாரத்திலும்,ஐங்குறுந்தொகையிலுமா தமிழைச் செம்மொழியாக்கல்தான் வேண்டாம் அரசியல் என்கிறீர்கள் இல்லை வாழும் மொழியாகத் தான் வைத்திருப்போம் என்றால் அதற்கும் கேலியா

நீங்கள் சொல்லும் சிலதையாவது புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் தமிழ் என்று சொன்னாலே பொங்கியெழுந்து வருகிறாரே டோண்டு என்ன காரணமாக இருக்கும்.எனக்குப் புரியவேயில்லை.கேட்டால் அன்புமணி அரிச்சுவடி என்று ஆரம்பிப்பார் பழைய குருடி கதவைத் திறடி கதைதான் வேண்டாம்
 



//'தமிழ் என்பது ஒரு மொழி; தனித்தமிழ் என்பது ஒரு முயற்சி' - ஜெயகாந்தன்

நாங்க ஜெயகாந்தன் கட்சி!//

ராம்கி,
தெரியுங்க! தமிழ்த்தாய் வாழ்த்தை எடுத்து கேவலம் ஒரு நடிகனுக்கு பாடியவர் தானே நீர்!
 



நான் ஆராதிக்கும் தமிழை என் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த நிறைய முயற்சிகள் எடுக்கிறேன். லீவில் `பொன்னியின் செல்வன்' `யவன ராணி'ன்னு அவள் ஆசையாகப் படிக்கிறாள்.அதுக்காக முழு பாடத்திட்டத்தையும் தமிழிலே படின்னு சொல்றது அடி முட்டாள்தனம். கலாச்சாரத்திலிருந்து அடிப்படைக் கல்வி வரை வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கணும். ரோட்லே தார் பூசுற நேரத்துக்குத் தன் பையனுக்கு `சிறுவர்மலர்' தமிழில் வாசிக்க உதவி செய்யலாம். அவங்களெல்லாம் பிரைவேட் ட்யூஷன் -ல் ஆங்கிலமும் ஹிந்தியும் சொல்லிக்கொடுக்கச் செய்திட்டுத்தானே போராடத்துக்கே வர்றாங்க!
உங்க பதிவை முன்னிறுத்தி மாலனின் பதிவு நன்றாக இருந்தது.
 



முகமூடி சொல்கிறார்:

>> நம் வீட்டு பிள்ளை எப்போதும் இரண்டாம் தகுதியிலேயே இருக்கின்றானே என்ற anxietyல், அவன் முதல் தகுதிக்கு வர சுலப வழி, முதல் தகுதியில் இருப்பவனை கொன்று விடுவதுதான் என்ற முடிவுக்கு வருவது அபத்தமாக இல்லையா... >>

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

இதைத்தான் - இந்த காழ்ப்பைத்தான் நான் சென்ற பதிவில் பின்னூடமாக இட்டிருந்தேன். மாலன் அவர்களின் பதிவிலும் இந்த 'கடுங் கடுப்பு' காழ்ப்புணர்வுதான் - இந்தக் கணவான்களின் புலம்பலுக்குக் காரணம் என்பதைக் கோடி காட்டியிருந்தேன்.

இவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்! வாழ்க! ;)
 



முகமூடி,

அருமையானதொரு விளக்கப் பதிவுக்கு பாராட்டுக்கள்!

தமிழுணர்வு மிக்கவர்களாக தங்களை சித்தரித்துக் கொண்டு உதார் விடுபவர்களை விமர்சனம் செய்தால், தமிழைக் கிண்டல் செய்வதாகச் சிலரால் எவ்வாறு எண்ண முடிகிறது ? அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள், சிலரின் பார்வையில், தமிழுணர்வு அற்றவர்களாகத் தோன்றுவதும் நல்ல கேலிக்கூத்து! தமிழை வைத்து ஆதாயம் தேடும் இந்த அரசியல்வாதிகளை விட தமிழ் வலைப்பதிவரில் பலரும் தமிழுணர்வு மிக்கவர்கள் தாம் என்பது என் கருத்து.

என்றென்றும் அன்புடன்
பாலா
 



>> மாலன் அவர்களின் பதிவிலும் இந்த 'கடுங் கடுப்பு' காழ்ப்புணர்வுதான் - இந்தக் கணவான்களின் புலம்பலுக்குக் காரணம் என்பதைக் கோடி காட்டியிருந்தேன். >>

என்பதை,

மாலன் அவர்களின் பதிவுக்கான பின்னூட்டத்திலும் இந்த 'கடுங் கடுப்பு' காழ்ப்புணர்வுதான் - இந்தக் கணவான்களின் புலம்பலுக்குக் காரணம் என்பதைக் கோடி காட்டியிருந்தேன்.

என்று வாசிக்கவும்.
 



நன்றி டோண்டு

***

ராம்கி... தமிழ் ....றையாளர்கள் நிறைந்த சபையிலே நம் கருத்துக்களை பேச அனுமதியில்லை.. அவர்கள் தமிழ் மீது கொண்ட பாசம் அத்தகையது. கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு ஜெயகாந்தனை பிடிக்கவில்லை எனின் உங்களுக்கும் பிடிக்காமல் போகட்டும்

****

அப்டிபோடு, நான் கிழக்கு எனில் நீங்கள் மேற்கு என்கிறீர்கள். மேலும் மேலும் ஒரே கோட்டில் இதை வளர்க்க எனக்கு விருப்பமில்லை.

****
ஈழநாதன்.. தமிழை நான் பேசுவேன், என் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுப்பேன் என்றுதான் எல்லாரும் வாழ்கிறார்கள். தமிழ் அறியாமல் குழந்தை வளர்ப்பேன் என்பது ஒரு சிறு சதவீதம்தான். தமிழ் பேசும் மொத்த மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் அந்த எண்ணிக்கையால் தமிழுக்கு ஆபத்து எல்லாம் ஒன்றுமில்லை. அப்படி ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்.

"வழக்கிலிருக்கும் தமிழ்ச்சொற்களுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிற" இது காலமாற்றம். விரும்புகிறோமோ இல்லையோ இது நடந்தே தீரும். ஒன்று தமிழ் சொற்களை புழக்கத்தில் விட ஏற்படுத்தும் முயற்சி. அல்லது அந்த சொல்லை தமிழாக ஏற்றுக்கொள்வது. இனி காபியை குழம்பி என்று ஆக்க முயற்சிப்பதை விட காபி என்பதையே தமிழ்ச்சொல்லாக ஏற்றுக்கொள்வது சிறந்தது.. ஆனால் குழம்பி என்பதை புழக்கத்தில் விட்டே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தாலும் அதில் எனக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை...

****

"அதுக்காக முழு பாடத்திட்டத்தையும் தமிழிலே படின்னு" இதை பற்றி நான் முன்னமே ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன்.. அதற்கு ஒரு பதிலும் இல்லை.

"உங்க பதிவை முன்னிறுத்தி மாலனின் பதிவு நன்றாக இருந்தது" ஆம் காலமாற்றத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தமிழும் நீண்டு வாழும் என்பது மிகவும் சரியானதே... விளக்கமாக அதில் பின்னூட்டம் இட முயற்சி செய்தேன்.. யாகூ இன்னும் புரிபடவில்லை...

****

neo , பூனைக்குட்டி வெளியில் வந்தது இருக்கட்டும்... எல்லாவற்றையுமே வருணாசிரமக்கொள்கைகளையும் காவிப்பண்டாரங்களையும் கொண்டு மதிப்பிடுகிறீர்களே, உங்கள் பெயர் என்ன... உண்மை பெயரை கேட்கவில்லை... சமூகநீதியாளர், சனநாயகவாதி, தமிழுணர்வாளர் இப்படியாக ஒரு பெயர் இருக்குமே அதை கேட்கிறேன்...

மேலும் தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, கல்விநிலை மற்றும் அடிப்படைச் சுகாதாரம், பொருளாதாரக் குறியீட்டெண்கள், மனிதர் வாழ்கைத் தரம் இவையெல்லாம் "மொழி வெறியே" இல்லாத(?!!) எல்லா வட மாநிலங்களையும் விடவும் அதிகமாக உள்ளது! என்று குறிப்பிட்டிருந்தீர்கள்...

அதற்கு பதில் கேள்வியக :: நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் "எல்லா" வட மாநிலங்களையும் விட அதிகம் என்பது நீங்கள் தனியாக எடுத்த புள்ளிவிபரமா? Planning Commission மற்றும் National Sample Survey Organisation புள்ளிவிபரங்கள் அதை பொய் என்கின்றன...

அது கிடக்கட்டும்... நீங்கள் சொன்ன விஷயங்களுக்கும் மொழிக்கும் நேரடி சம்பந்தம் இருக்குன்னு நம்புறீங்களா? எனில் விளக்குவீர்களா? - இது உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் நோக்கில் கேட்கும் கேள்வி. நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள்

****

// அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள், சிலரின் பார்வையில், தமிழுணர்வு அற்றவர்களாகத் தோன்றுவதும் நல்ல கேலிக்கூத்து! // நன்றி பாலா.
 



ஹி..ஹி.. செகன்ட் ஸ்டேட்மெண்ட்!

"தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமே;
தனித்தமிழ் என்பது ஒரு முயற்சி மட்டுமே;"

இப்படிக்கு,
கேவலமானவன்
 



//தமிழ் எப்போதும் இருக்கும்...//

வாழ்க வளமுடன்
 



அய்யோ அய்யோ!! ;-)
 



//5 வகுப்பு வரை தமிழ் மட்டும்தான் கற்பிக்க வேண்டும்னு ஒரு முடிவு எடுத்தாங்க... இதன் பின்னணியில ஏதாவது அறிவியல் பூர்வமா ஆய்வு செய்யப்பட்டதா... ஆய்வு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது..//


Accroing to the USF , In the Primary level we should teach in there mohter languae. then only they child can learn proberly.
If you want more informaction i am ready to give, because i am working for the Litracy project in north indian language
 



பரவாயில்லை ..உருப்படியாக எந்த சொந்த கருத்தும் இல்லாட்டியும் அடுத்தவங்களை
கிண்டல் பண்ணியும் நக்கல் பண்ணியுமே ஒரு குரூப் வாழுது.....இவனுங்களை கொண்டு போய் கர்நாடகாவில வாட்டள் நாகராஜ் கிட்ட விட்டால்தான் சரியாக இருக்கும்......முகமூடி அடிக்கிற கூத்து( இவரு சின்ன சோ ராமசாமி போல)
சின்ன டோண்டு????
 



//இப்படியே போனால் தமிழுக்கு விரைவில் சங்கு என்ற எண்ணத்தில்... Anxiety Disorder அல்லது Phobia என்பது ஒரு மனநிலை... //

பார்த்து முகமூடி, இப்படி 'நல்ல காரியத்துக்காகக்' குரல் கொடுத்துக் குரல் கொடுத்து உங்களுக்கும் exercise bulimia அல்லது தமிழ்bulimia ஏதும் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ;-)
 



முகமூடி அண்ணா,

தமிழினத்தலைவரின் (தமிழ் ஈனத் தலைவர் அல்ல) பேரன் பெயர் ஆதித்யா (கனிமொழியின் புதல்வன்) - - சுத்தமான சங்கத் தமிழ்ப் பெயர். (ஆனா, சமஸ்கிருதத்த மட்டும் செத்த மொழி, தேவ பாடைன்னு திட்டுவோம்).

ராமன் அடிமை - அதாங்க நம்ப கோமாளி தமிழ்க் குடிதாங்கியின் மருமகள் பெயர் சௌம்யா. இவருக்கான தமிழ்ப் பெயரை "மூக்காயி" என்று மாற்றுவாரா நம் தமிழ்க் குடிதாங்கி?

அன்புமணி - சௌம்யா இவர்களின் மக்கள் செல்வங்களில் ஒருவரின் பெயர் சங்கமித்ரா. இந்த செல்வங்கள் புது தில்லியில் உள்ள மிகப் புகழ் பெற்ற பள்ளியில் படிக்கிறார்கள். அங்கே தமிழ் மருந்துக்கும் கிடையாது. (தமிழ் படிச்சு ஒண்ணுத்துக்கும் உதவாது என்பதை ராமதாசு மற்றும் அன்புமணிக் கூட்டம் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன)

ராமதாசுக்குக் கொட்டை தாங்கும் குழலிக் கூட்டத்திற்கு இந்த விஷயங்கள் தெரியுமா? தெரிந்தாலும் கவலை இல்லை, நாங்க அப்படிதான் தார் பூசுவோம் என்று அடம் பிடித்தால், என் சார்பாக உங்கள் தலைவன் ராமதாசு முகத்திலும், அவர் மருமகள் சௌம்யா முகத்திலும் கொஞ்சம் பூசுங்கள். தார் பூசி தமிழை வளர்க்கலாம் என்று மரம் வெட்டிதான் சொல்கிறாரென்றால் படித்த உங்களின் அறிவு எங்கங்க போச்சு?


"அரணை நண்பன்" அனானி
 



சரி, உங்க கருத்து ??