<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

.யிர் கொடுத்து வளர்த்த தமிழ் மற்றும் பல


ஒரு வாரமா ஏன் பதிவேதும் போடல என்று ரத்தத்தில் மின்னஞ்சலிய குருமாகிழவன், அண்ணா உங்கள் கருத்தை படிக்காமல் குழப்பத்தில் உள்ளேன், தயவு செய்து விரைவில் பதிவு போடவும் என்று அன்புடன் வினவிய ஹைதராபாத் கீரைத்தோட்டத்தை சேர்ந்த சகோதரி லகலகா மற்றும் தொலைபேசியில், மின்னஞ்சலில், சாட்டிங்கில், விமானத்தில் என்று பலவிதங்களிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...


இப்பொழுதெல்லாம் ஒரு வாரம் தனித்தமிழில், ஒரு வாரம் படம் மட்டும் என்று விதம் விதமாக பதிவுகள் வரும்பொழுது உலகோடு ஒட்ட ஒழுகி நானும் புதுமையான முறையில் தினம் ஒரு பதிவாக போட்டுக்கொண்டுதான் இருந்தேன்... யாருக்கும் அது தெரியாததற்கு காரணம் நான் மௌன பாஷையில் எழுதியதுதான்...

வெட்கம் விட்டு கேட்கிறேன், இப்பொழுதாவது எச்சி.டி.பி://ம்யூசிக் அமெரிக்கா ஆன்லைனிலிருந்து "நான் போடும் மௌன பதிவு பார்க்கவில்லையா" என்ற பாட்டுக்கு லிங்க் கொடுக்கக்கூடாதா நேம்லெஸ்...

****

சிலர் .யிர் கொடுத்து தமிழ் வளர்க்கப்போகிறார்களாம்... இல்லையெனில் இன்னும் 30 வருடத்தில் தமிழுக்கு சங்கு என்று வேறு சிலர் ஒத்து ஊதி பயமுறுத்துகிறார்கள். சிலுக்குவார்பட்டியில் இன்னும் 30 வருடங்களில் நமது கோவணக்கிழவனார்கள் எலிக்கறி சாப்பிடும் அவலத்தை ஆங்கிலத்தில் டிஸ்கஸ் செய்வதை நினைத்து பார்த்தால் வயிற்றை கலக்குகிறது...

தமிழை வளர்த்தே ஆகவேண்டும் என்று வெறி பொங்குகிறது. தமிழ் வளர்க்க 10 வழிமுறைகள் என்று எதுவும் இருக்கிறதத? மேலும் .யிர் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்னென்ன... முழுமையாகவா, இன்ஸ்ந்தால்மெந்திலா எப்படி .யிர் கொடுப்பது, இதுவரை கொடுக்கப்பட்ட .யிர் அளவு என்ன, அதனால தமிழ் பெற்ற வளர்ச்சி எந்தளவு என்பதை யாராவது தெரியப்படுத்துங்கள்..

****

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இன்னொரு குட்டித்தலைவர் கிடைத்திருக்கிறார்... நவரச நாயகன் என அழைக்கப்பட்டவர் இனி வருங்கால முதல்வர் கார்த்திக் தேவர்... தங்கம் பூசிய உருத்திராட்சம், விளம்பர ஆசையில் தவிக்கும் மனம் தவிர மற்ற அனைத்தையும் துறந்த மதுரை 'மட' அதிபதி ஆதினம் ஸ்வாமிகள் கண்டிப்பாக அருள் புரிவார்... விவேக் தேவரும் துணை புரிவாராக.

****

சென்னை பல்கலைக்கழகம் மதராஸ் பல்கலைக்கழகம் என்றே அழைக்கப்படுமாம். எம்மெல்லே ஸீட் கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறலாம் என்ற கொள்கை உட்பட அனைத்து கொள்கைகளுக்காகவும் உயிர் கொடுத்த குடிமகனார் மதராஸை சென்னாப்பட்டணம் என்று பெயர் மாற்றம் செய்தவுடன் கூவத்தின் அருகில் வாழ்ந்த மக்களெல்லாம் உப்பரிகையில் சந்தோஷ்மாக காலாட்டிக்கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுது இன்னுமொரு பெயர் நீட்டு வைபவம்... சலசலப்பில் சில லட்சங்கள் செலவாகலாம்... ஆனால் மதராஸ் பல்கலை சான்றிதழ் கொண்டு சென்றால் உடனடியாக வேலை என்னும் லட்சியமல்லவா முக்கியம்.

****

அடச்சே... இது என்ன தூர்தர்சன் செய்திகள் ரேஞ்சுக்கு சவ சவன்னு ஒரு பதிவு.. எல்லாம் ஆபிஸில் வேலை செய்யணும்னு வந்த புது சட்டத்தால வந்த வினை... விரைவில் நார்மல்ஸி திரும்ப அந்த இமயமல பாப்பா அருள் புரியட்டும்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


:-)))))))))))))))))
 //இமயமல பாப்பா //

ஆருப்பா?
 நன்றி துளசியக்கா...

குஷ¤ம்பர்... ஆருன்னு தெரியாது... ஆனா நம்ம சக்கரக்கட்டி வயல்காரி அல்ல...
 முகமூடி,
உங்களை தேனீ நாட்டு சிங்கம் என்று Mr Anderson பேசிக்கொண்டு இருக்கிறாரே
என்னய்யா சங்கதி ?

What is the matter Dude ?

இனிமேல் ஆங்கிலத்தில்தான் ஒரு வாரத்துக்கு பின்னூட்டம் !
 முகமூடி,
அவனவன் பிள்ளைங்களுக்கு தமிழில் எழுதவும் பேசவும் சொல்லிக்கொடுக்க ,படிக்க ஏற்பாடு செய்தால் போதும் .மற்றபடி தமிழுக்காக உயிரையும் கொடுக்க வேண்டாம் ,மயிரையும் கொடுக்க வேண்டாம் (ராமதாஸ் கூட்டதுக்கும் ,உம்மைப்போல தமிழுணர்வைக் கேலி செய்து இன்பம் காணும் கூட்டதுக்கும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்)
 //இமயமல பாப்பா //

அவர் தமிழில் BABA என்று அறியப்படுவார்:-))
 // உங்களை தேனீ நாட்டு சிங்கம் என்று //

என்னங்காணும் இது புது கொயப்பம்...

// இனிமேல் ஆங்கிலத்தில்தான் ஒரு வாரத்துக்கு பின்னூட்டம் //

அப்பா... தமிழ் வளர்ச்சிக்கு சிறந்த முடிவை எடுத்திருக்கின்றீர்...
 // உம்மைப்போல தமிழுணர்வைக் கேலி செய்து //

ஜோ... என்ன இது அபாண்டம்... நான் மிகவும் உண்மையாக அல்லவோ அக்கேள்விகளை கேட்டேன்.. என் சந்தேகங்களின் என்ன குற்றம் கண்டீர்...
 //என்னங்காணும் இது புது கொயப்பம்

See this !
 // அவர் தமிழில் BABA என்று அறியப்படுவார் //

தமிழில் எழுதும்போது ஒற்றிலக்கணப்படி BA BA என்பதற்கு நடுவில் P போடவேண்டும் என்று தமிழறிஞர் பன்னன் சொல்கிறார். எதற்கு வம்பு என்றுதான் நான் ஆங்கிலத்தில் பாப்பா என்று எழுதினேன்.
 முகமூடி,
நீங்கள் கேலி செய்யவில்லையா என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டு கேளுங்கள்..இல்லையென்றால் பரவாயில்லை.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
 தங்கம் பூசிய உருத்திராட்சம், விளம்பர ஆசையில் தவிக்கும் மனம் தவிர மற்ற அனைத்தையும் துறந்த மதுரை 'மட' அதிபதி ஆதினம் ஸ்வாமிகள்!

Adra sakkai... adra sakkai!
 ஜோ வை எப்படி தமிழில் எழுதுவது. சோ என்றா?

எல்லாரும் அவங்க பெயரை முதலில் தமிழில் எழுதுவதில் இருந்து ஆரம்பிக்கலாமோ ?

:)
 முகமூடி அவர்களே,

இமயமலை பாபா கிடைக்கவில்லையெனின் இணைய பாபா'வை அணுகலாம் !!!

:-)
 //ஜோ வை எப்படி தமிழில் எழுதுவது. சோ என்றா?

எல்லாரும் அவங்க பெயரை முதலில் தமிழில் எழுதுவதில் இருந்து ஆரம்பிக்கலாமோ ?

:)//

சொந்தப்பேர் கூட இல்லாத அனானிமஸ் அவர்களே,
பெயர் மட்டும் 'தமிழ் நேசன்' -ன்னு வச்சுகிட்டா தமிழ் நேசன் ஆயிட முடியுமா? நான் கூட 'ஜோ' என்கிற சொந்தப்பெயரை விட்டு 'முகமூடி' ,'இட்லி பானை மூடி' இப்படி எந்த பெயரிலாவது வலைப்பதிக்க முடியும் .அப்படி தேவைப்படும் போது உம்ம கிட்ட கேக்குறேன்.
 //தேவைப்படும் போது உம்ம கிட்ட கேக்குறேன்.உங்க கிட்ட மட்டும் யாராவது
வந்து தமிழை எப்படி வளர்கிறது என்று "ஐடியா " கேட்டாங்களா என்ன ?

சொல்லுதுதல் யாருக்கும் எளிய !!

அனானிமஸ் என்று தமிழ் நேசனால் தமிழில் அழைக்கப்படும் ஒரு அனானி
 இட்லி தமிழ் அல்ல.

புட்டு என்பது சரி.

மூடி தமிழா . தெரியவில்லை.
 //அனானிமஸ் என்று தமிழ் நேசனால் தமிழில் அழைக்கப்படும் ஒரு அனானி//

தப்பு தாங்க! சொந்தப் பெயர் தெரியாத 'பொறம்போக்கு' -ன்னு சொல்லியிருக்கணுமுன்னு எதிர்பாக்குறீங்களோ?
 ஜோ... இவர்களிடம் விவாதிப்பதும், பேசுவதும் நேரவிரயம், ஒரு முடிவோடு இருப்பவர்களிடம் எதுவும் பேசமுடியாது விட்டுத்தள்ளுங்கள், இவர்கள் இப்படியே கேலி கிண்டல் செய்து கொண்டேதான் இருப்பார்கள் இவர்களுக்கு சிலரின் மீது தாங்க இயலாத அளவிற்கு கோபம் மற்றும் பொறாமை அதன் வெளிப்பாடாக எதை செய்தாலும் புகைச்சல் தான் வெளிப்படும். நல்லவேளை இவர்களுக்கு பிடிக்காதவர்கள் எல்லோரும் தாயை நேசியுங்கள் என்று கூறவில்லை, ஒரு வேளை அந்த பிடிக்காதவர் எல்லோரும் அவரவர்கள் தாயை நேசியுங்கள் என்று கூறினால் அதற்கு எதிர்ப்பதமாக இவர்கள் என்ன செய்வார்களோ? எதிர்காலத்திலும் அந்த பிடிக்காதவர் எல்லோரும் தாயை நேசியுங்கள் என்று சொல்லாமலிருக்க ஆண்டவனை வேண்டுகின்றேன்...
 // பெயர் மட்டும் 'தமிழ் நேசன்' -ன்னு வச்சுகிட்டா தமிழ் நேசன் ஆயிட முடியுமா? //

ஜோ... இதையேத்தான் எல்லாரும் கேட்கிறார்கள்... "நமது கோவணக்கிழவனார்கள் எலிக்கறி சாப்பிடும் அவலத்தை" மறந்து விட்டு தார் அடித்தால் தமிழ் வளருமா என்று... .யிர் கொடுப்பேன் என்று பினாத்துகிறார்களே... எவ்வளவு அவுன்ஸ் (தமிழில் வீசை என்பதா) கொடுத்தார்கள்... இதுவரை அப்படி பினாத்தியவர்கள் யாராவது உண்மையிலேயே கொடுக்கிறார்களா... சரி... மற்ற எல்லாத்தையும் நமது அடுத்த பதிவு "தமிழுணர்வு"ல பார்ப்போம்.

****

சின்னவன்... நம்மள வேற யாராவதோன்னு நினைச்சிகிட்டாரா அவரு... ஆனா சிங்கன்ன வரை சரிதான் ஹிஹி

****

அனானிமஸ், தூய தமிழில் நீங்கள் அனானிமோசு... என்று அழைக்கப்படுகிறீர்கள். அதை நீங்கள் உபயோகப்படுத்தினால் தமிழ் 4 இன்ச் வளரும்...

****

குஷ¤ம்பர்... அது ஆரு இணைய பாபா... நான் நினைக்கும் அவரா? மேலும் பாபா என்பது இலக்கணப்பிழை... பாப்பா என்பதே சரி என்று ஒருவர் சொல்கிறார்.

****

மோசு, இட்லிய புட்டுன்னு சொன்னீங்கன்னா... புட்ட என்னன்னு சொல்வீங்க... மூடி தமிழ் அல்ல, லிட் என்பதே சரி.. ஆனா முகலிட் என்றால் நல்லாவா இருக்கு சொல்லுங்க...
 //நல்லவேளை இவர்களுக்கு பிடிக்காதவர்கள் எல்லோரும் தாயை நேசியுங்கள் என்று கூறவில்லை, ஒரு வேளை அந்த பிடிக்காதவர் எல்லோரும் அவரவர்கள் தாயை நேசியுங்கள் என்று கூறினால் அதற்கு எதிர்ப்பதமாக இவர்கள் என்ன செய்வார்களோ? எதிர்காலத்திலும் அந்த பிடிக்காதவர் எல்லோரும் தாயை நேசியுங்கள் என்று சொல்லாமலிருக்க ஆண்டவனை வேண்டுகின்றேன்...//

குழலி,
ரொம்ப சரியா சொன்னீங்க..சொல்பவரின் யோக்கியதையை வைத்தே கருத்தை கடைபிடிக்க முடியும் என்று வெற்றுக்கூச்சல் போடுபவர்கள் ,யாரோ சொல்லிவிட்டார்கள் என்பதற்காக வீம்புக்காக தாயை வெறுத்தாலும் வெறுப்பார்கள் .இவர்கள் வாதத்தின் லட்சணம் அப்படித்தான் இருக்கிறது.
 முகமூடி,
மயிரைக் கொடுப்பேன் என்று சொன்னவர்களை கேலி செய்யுங்கள் .அது பற்றி எமக்கு கவலையில்லை .அதை சாக்காக வைத்துக்கொண்டு ,தமிழ் உணர்வையும் ,நமது மொழி இன்னும் சில தலைமுறைகளில் மங்கக்கூடிய சாத்தியத்தை தடுத்து நிறுத்த நமக்குள்ள கடப்பாட்டையும் ஒட்டு மொத்தமாக கிண்டல் செய்யாதீர்கள் .
 முகமூடி,
தமிழுக்கு ஆதரவாக பேசினால் உடனே தனித்தமிழில் தான் பேச வேண்டும் என்ற அவசியமில்லை .நான் ஒன்றும் தமிழறிஞன் அல்ல.மாணவன் தான் .ஆனால் தமிழறிஞர்களை கேலி செய்பவனல்ல.தனித்தமிழில் பேசுவதென்பது வேறு .தமிழ் உணர்வோடு இருப்பது என்பது வேறு .முடிந்த வரை நான் தமிழில் படிக்கிறேன் ,பேசுகிறேன் .என்னை விட அதை இன்னும் சுத்தமாக ,முனைப்பாக செய்பவர்களை எனக்கு மேலாக மதிக்கிறேன் .உம்மைப் போல குற்றம் கண்டு ,முழு தமிழறிஞனுக்கு மட்டுமே சொல்ல அருகதை உண்டு என்று விதண்டாவாதம் செய்வதில்லை.
 ஜோ... "பெயர் சொல்ல விரும்பாத பதிவர்" என்பதுதான் அனானிமஸை குறிக்கும் தமிழ்... அதை அவர் கிண்டலாக சுட்டிக்காட்டினால் பொறம்போக்கு என்ன இது பொறம்போக்கு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு

***

குழலி & ஜோ... வெற்றுக்கூச்சல், தாயை பழித்தாலும்.... அட அட அடா... காலச்சக்கரத்தில் ஏறி மனோகரா காலத்தை நேரில் பார்த்த ஒரு புல்லரிப்பு.... உங்களுக்கும் , மிக எளிதில் ரத்தத்தை சூடேற்றும் வித்தை கொடுத்த திராவிட இயக்க முறைகளுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!
 முகமூடி,
தாயை நேசிக்கவும் ,தாய் மொழியை நேசிக்கவும் உமக்கு வேண்டுமானால் இயக்கங்களின் போதனை தேவைப்படலாம் ..எமக்கு அது பிறக்கும் போதே ரத்தத்தில் இருக்கும் உணர்வு .சூடேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
 //அட அட அடா... காலச்சக்கரத்தில் ஏறி மனோகரா காலத்தை நேரில் பார்த்த ஒரு புல்லரிப்பு.... உங்களுக்கும் , மிக எளிதில் ரத்தத்தை சூடேற்றும் வித்தை கொடுத்த திராவிட இயக்க முறைகளுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!
//
எங்களுக்கு சொரணை இருக்கின்றது, யாராவது சொல்லித்தான் சூடேற்ற வேண்டுமென்ற அவசியமில்லை, சொரணை இல்லாதவர்களுக்காகத் தான் அந்த கூச்சல் எல்லாம், உங்கள் வார்த்தைகளில் சொல்லப்படும் வெற்றுக்கூச்சல்கள்....

தகவலுக்காக, தமிழில் நான் இன்னும் மாணவன் நிலையில் தான் உள்ளேன்.
 தமிழுணர்வு உள்ளவர்களுக்கெல்லாம் அந்த உணர்வு திராவிட இயக்கங்களால் தான் வந்திருக்க வேண்டும் என்று அளவுக்கு மீறி திராவிட இயக்க பிரச்சாரம் செய்யும் முகமூடிக்கு திராவிட இயக்கங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றன.இந்த அளவுக்கு திராவிட இயக்கத்திற்கு பாராட்டுரைகள் திராவிட இயக்கத்தினராலேயே செய்யப்படவில்லை.
 ஜோ
வீண் கூச்சல் போடுகிறீர்கள்.
முதலில் தமிழில் நீங்கள் எழுதுங்கள்
( நீங்கள் எழுதும் தமிழில் உள்ள ஆங்கில வார்த்தை குறித்துதான் எழுதப்பட்டது )
உடனே பொறம்போக்கு என்று இனிய தமிழில் பேசி உங்களின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியதற்கு
தமிழ்த்தாய் உங்களை பாலூட்டி பாராட்டுவார்.


பெயர் சொல்ல விரும்பாத ஜோ நண்பன் !
 
வீரப்பனின் முதலாமாண்டு நினைவுக்கு இந்த கவிதைகள் அர்ப்பணம் !!!

 அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த எனதருமை நண்பர் 'பெயரில்லா பிச்சை' அவர்களே,

//முதலில் தமிழில் நீங்கள் எழுதுங்கள்//

நீங்கள் - போதுமா?
 //நீங்கள் - போதுமா?


லொள் ( தமிழில் தான் சிரிப்பதும் கூட )
இந்த அளவு நகைச்சுவை உணர்வு வைத்து கொண்டா இந்த கூச்சல் போடுகிறீர் ?

ஜோ போட்ட பிச்சையில் வாழும் ஜோ நண்பன்..
 //ஜோ போட்ட பிச்சையில் வாழும் ஜோ நண்பன்//

போட்டதெல்லாம் போதும் .பெயர் சொல்ல முடியாதவர்களிடம் இதற்கு மேல் என் நேரத்தை பிச்சை போட முடியாது .பெயர் சொல்ல முடியாதென்றால் வேறு இடம் பார்க்கவும்.
 எந்த இடம் பார்க்க சொல்றீங்க ? இந்த இடம் உங்களதா ? முகமூடியின் பதிவு இது என்றல்லவா நான் நினைத்தேன்.
ரியல் எஸ்டேட் விலை அதிகம் அய்யா இந்த ஊரில் !

வேற இடம் கிடைக்காத ஜோ நண்பன் !
 http://kuzhali.blogspot.com/2005/09/blog-post_112750183823158842.html
 //எந்த இடம் பார்க்க சொல்றீங்க ? இந்த இடம் உங்களதா ? முகமூடியின் பதிவு இது என்றல்லவா நான் நினைத்தேன்.//

ஆனாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் தானய்யா! முகமூடி இடத்துல வந்து என்கிட்ட பிச்சை போடு பிச்சை போடுன்னா எப்படிங்க ? இருக்கதெல்லாம் போட்டாச்சுங்க ,இனிமே முகமூடி கிட்டே கேளுங்க ..திராவிட இயக்கங்கள் சார்பா அவருக்கு இந்நேரம் பிரச்சார நிதி வந்திருக்கும்.
 ஜோ

நான் எங்கய்யா உங்க கிட்ட பிச்சை கேட்டேன்
நீங்களா தான்

நீ பேரே தெரியாத பொறம்போக்கு, 'பெயரில்லா பிச்சை' , உனக்கு நேரப்பிச்சை போட முடியாது, வேற இடம் பார் "

என்றீர்.

ஜோ இருந்தாலும் உங்களுக்கு இந்த நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம் தான் !
---------------------
ஜோ விடம் எந்த பிச்சையும் கேட்காத ஜோ நண்பன்.

திட்ட உங்களு ஒரு பேர் வேண்டும் என்றால் " ஜோ நண்பன்" என்கிற "நோ" என்று வைத்துக் கொள்ளுங்கள்..
 //ஜோ போட்ட பிச்சையில் வாழும் ஜோ நண்பன்.//

//ஜோ விடம் எந்த பிச்சையும் கேட்காத ஜோ நண்பன்.//

ஏங்க அதுக்குள்ள பல்டி அடிச்சுட்டீங்க?
ரொம்ப தான் வழியாதீங்க நண்பரே!
உங்க பருப்பெல்லாம் இங்க வேகாது.நமக்கும் நக்கல் தெரியும் .தேவைப்பட்டால் உங்களுக்கு மேலாகவே தெரியும்..சரியா?

உருப்படியா எதாவது சொல்லுங்க.அப்புறம் பார்க்கலாம் .அதுவரைக்கும் நம்ம பதிலை எதிர் பார்க்காதீங்க.நன்றி!
 இந்த 'முகமூடி'யார் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லைதான்! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். ;)

ஜோ, குழலி,

மொழியுணர்வைப் புண்படுத்துகின்ற வகையில் பேச முற்படுபவர்களின் ஆதார நோக்கம் நேர்மையானதன்று என்பதை விளங்கிக் கொள்வது அத்தனை கடினமானதன்று.

இது ஒருவிதமான மனநோய்தான்.

ஆங்கிலத்தில் Post-Traumatic stress disorder என்பார்கள். அதாவது தொடர் மன அழுத்த நோய்.

'மொழிக்காகப் போராட்டம்' என்பது - 1938 ஆம் ஆண்டிலிருந்து 1965 வரையிலான திராவிட இயக்கத்தலைமையின் கீழ் நிகழ்ந்த பல 'மொழிப்போர்'களை - இவர்களுக்கு
நினைவூட்டிப் பாடாய்ப்படுத்துகிறது!

அது ஏன் என்கிறீர்களா?! - அந்தக் காலக் கட்டத்திலதான் தமிழர்களுக்குத் தம்முடைய 'அடையாலச் சிக்கல்கள்' ஒருவாறு அகன்று, வருணாச்சிரமக் கொள்ளைக்கூட்டத்தினின்றும் தமிழகம் காப்பாற்றப்பட்டது!

'மொழிப் போர்' அல்லது தமிழுக்காகப் போராட்டம் - என்றவுடன் இந்த 'சிகாமணி' களுக்கு, தங்கள் சமூகப் பொருளாதாரத் தனியுரிமையை இழந்து போன அந்தக் காலகட்டம் நினைவுக்கு வந்து தொலைக்க...வேறென்ன 'அந்நியன்' அளவுக்கு தலைவிரிகோல ஆட்டம் போட ஆரம்பிக்கிறார்கள்!

தமிழர்கள் திராவிட இயக்க 'மொழிப்போர்கள்' என்கிற ஆயுதம் வாயிலாக - அதன் மூலம் நிறுவப்பட்ட அரசியற் இயக்கங்களின் மூலமாக இந்திய ஒன்றியத்துக்கு அளித்த மாபெரும் கொடைகள் :

1. சமூக நீதி

2. மொழிவழி மாநிலங்கள் மற்றும் மொழிவழி மாநிலங்களின் தன்னாட்சிக்கான அரசியற்சட்டத்திருத்தம்

3. மாநில சுயாட்சி


சுதந்திரம் அடைந்ததினின்று இன்று வரை - இந்தியாவின் மாபெரும் அரசியற் இயக்கக் காரணிகளாக, அடிப்படைச் சித்தாந்தங்களாக - இவை மூன்றும்தான் உள்ளன!

இதைச் செய்து முடித்த "சிறிய" சாதனையைத் தவிர தமிழ்-திராவிட இயக்கங்கள் வேறு எதுவும் செய்து விடவில்லைதான்! ;)

அதனால்தான் - தமிழ்நாட்டின்

- மனிதவள மேம்பாட்டுக் குறியீடு

- கல்விநிலை மற்றும் அடிப்படைச் சுகாதாரம்

- பொருளாதாரக் குறியீட்டெண்கள்

- மனிதர் வாழ்கைத் தரம்

இவையெல்லாம் "மொழி வெறியே" இல்லாத(?!!) எல்லா வட மாநிலங்களையும் விடவும் அதிகமாக உள்ளது!

காவிப்பண்டாரங்களின் கூடாரங்களாக உள்ள பல மாநிலங்களின் 'சமூக அமைதி' மற்றும் 'சட்டம் & ஒழுங்கு', வாழ்க்கைத் தரம், கல்வி நிலை பற்றியெல்லாம் 'முகமூடிகளுக்குத்' தெரிந்திருக்க நியாயமில்லை பாவம்!

Those who live in Iron Masks shall be condemned to selective blindness!

Oh! and a Parting shot!

பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு முதமமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட அன்று, அவர் கையில் அப்போது அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தையும் பதவியேற்பு விழாவுக்குக் கொண்டு வந்திருந்தார்.

அது - Sommerset Maugham-இன்
"Summing up" என்கிற அவரது சுயசரிதை!

:)
 >> William Somerset Maugham
 ஜோ
நீங்களே எல்லாத்தையும் முடிவு பண்றீங்களே
நானா உங்ககிட்ட இருந்து பதிலை எதிர்ப்பார்த்து கிட்டு இருந்தேன்.

உஙக் ஊர்ல இப்ப என்ன டைம் ஆச்சு..நீங்கதான் விடிய விடிய உட்கார்ந்து கிட்டு பதிலை எதிர்பார்த்து கிட்டு இருக்கீங்க போல !

உங்க நக்கல்தான் நல்லாவே தெரியுதே. அதுக்கு மேலேயும் காட்டுங்க. பார்த்து ரசிக்கிறேன்.

ஜோ நண்பன்.
 //ஜோ போட்ட பிச்சையில் வாழும் ஜோ நண்பன்.//

//ஜோ விடம் எந்த பிச்சையும் கேட்காத ஜோ நண்பன்.//

ஜோ
சரியா படிங்க..
நான் எதையும் மாத்தி சொல்லவில்லை.
நான் பிச்சை கேட்கலை, நீங்களாகவே தான் போட்டுக் கொண்டு இருப்பதாக சொல்லிக்க் கொண்டு இருக்கிறீர்கள்.

தூக்க கலக்கமா ராசா ?

ஜோ நண்பன்.
 முகமூடி யாரென்று கண்டு பிடிப்பவர்கள் அப்படியே
நியோ யார் என்று கண்டுபிடிச்சு சொன்னால் நல்லாத்தான் இருக்கும் !
;-)
 முதல்ல இந்த தமிழ் உணர்வு, தமிழ் உணர்வு அப்படின்னா என்னன்னு சொல்லுங்கப்பா.

Aravind Krish: இந்த நியோ யாருன்னு இன்னுமா தெரியல்லே? சுடுகாட்டு நீர் அணிந்த மாடனைத் தெரியவில்லையா என்ன? சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்? பாண்டிய மன்னா? பிள்(ளை)ளாய். இப்பொழுது புரிந்ததா?

இப்படிக்கு
தமிழ் உணர்வு மங்கியவன்
 §ÀÃÈ¢»÷ «ñ½¡!!! Òø „¢ð. þó¾¢ ±¾¢÷ôÒ ±ýÈ ¦ÀÂâø Ã×Êò¾Éõ Àñ½¢ ¸ø¨Ä Å¢ðÎ ±È¢ó¾Åý ±øÄ¡õ «È¢»ý, ¦Á¡Æ¢§À¡÷ Å£Ãý. ¦Åðì¸ì §¸Î. §¿ü¨È Ã×ʸ¨Ç þý¨È ¾¢Â¡¸¢¸Ç¡¸ò ¾¢Ã¢Â ¨Åò¾Ð¾¡ý þó¾ ¾¢Ã¡Å¢¼ þÂì¸í¸Ç¢ý ´§Ã º¡¾¨É.

¾Á¢ú ¯½÷× þøÄ¡¾Åý
 போன பின்னூட்டம் யுனிகோடில்::

Anonymous said...

பேரறிஞர் அண்ணா!!! புல் ஷிட். இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ரவுடித்தனம் பண்ணி கல்லை விட்டு எறிந்தவன் எல்லாம் அறிஞன், மொழிபோர் வீரன். வெட்க்கக் கேடு. நேற்றைய ரவுடிகளை இன்றைய தியாகிகளாகத் திரிய வைத்ததுதான் இந்த திராவிட இயக்கங்களின் ஒரே சாதனை.

தமிழ் உணர்வு இல்லாதவன்
 neo சொல்கிறார் ::

தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, கல்விநிலை மற்றும் அடிப்படைச் சுகாதாரம், பொருளாதாரக் குறியீட்டெண்கள், மனிதர் வாழ்கைத் தரம் இவையெல்லாம் "மொழி வெறியே" இல்லாத(?!!) எல்லா வட மாநிலங்களையும் விடவும் அதிகமாக உள்ளது!

நியோ:: நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் "எல்லா" வட மாநிலங்களையும் விட அதிகம் என்பது நீங்கள் தனியாக எடுத்த புள்ளிவிபரமா? Planning Commission மற்றும் National Sample Survey Organisation புள்ளிவிபரங்கள் அதை பொய் என்கின்றன...

அது கிடக்கட்டும்... நீங்கள் சொன்ன விஷயங்களுக்கும் மொழிக்கும் நேரடி சம்பந்தம் இருக்குன்னு நம்புறீங்களா? எனில் விளக்குவீர்களா?
 APDIPODU வேறு ஒரு இடத்தில் said :

// தமிழுக்கும் அமுதென்று பேர் என்றார்கள் அன்று. இன்று முகமூடி கொடுக்கும் பேர்?. எத்தனையோ நல்ல பண்புகள் நம்மை விட்டு அகன்றதுக்கு மொழிப் பற்றின்மையே முதன்மைக் காரணம். //

APDIPODU :: "இன்று முகமூடி கொடுக்கும் பேர்?" என்பதை முதலில் நீங்கள் என் பதிவை படித்துவிட்டுத்தான் கேட்கிறீர்களா... நான் என்ன பெயர் கொடுக்கிறேன் என்று உங்களுக்கு தோன்றுகிறது??

"எத்தனையோ நல்ல பண்புகள் நம்மை விட்டு அகன்றதுக்கு மொழிப் பற்றின்மையே முதன்மைக் காரணம்." என்ற உங்கள் கூற்றை உங்களால் விரிவாக விளக்க முடியுமா???
 தமிழ் பொங்கி வரும் நண்பர்களின் பெயர்கள் எல்லாம்,

ஜோ, Neo


என்று தூய தமிழில் அழகாகவே இருக்கிறது. தமிழ் உணர்வு வர வேண்டும் என்றால் இந்த மாதிரி பெயர் வைத்துக்கொள்ள வேண்டும்
 முகமூடி,

//.யிர் கொடுத்து தமிழ் வளர்க்கப்போகிறார்களாம்...//

புள்ளிக்கு என்ன அர்த்தம் முகமூடி?. உங்களுடைய இப்பதிவை படித்த அன்றே மிக நீண்ட பின்னூட்டம் ஒன்றை எழுதிவிட்டு., சலிப்புடன் அழித்துவிட்டேன்., தெரியாதவர்களுக்கு எழுதலாம்.

//.யிர் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் .யிர் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்னென்ன... முழுமையாகவா, இன்ஸ்ந்தால்மெந்திலா எப்படி .யிர் கொடுப்பது, இதுவரை கொடுக்கப்பட்ட .யிர் அளவு என்ன, அதனால தமிழ் பெற்ற வளர்ச்சி எந்தளவு என்பதை யாராவது தெரியப்படுத்துங்கள்..//

இவையெல்லாம் விளையாட்டுக்காக எழுதுகிறீர்களா?., அப்படியெனில் தலைப்பையும் விளையாட்டாகவே வைத்தீர்களோ?. உண்மையில் உயிர் கொடுத்தவர்களைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று பதிவு இட்டவர் நீங்கள்தானே? நீங்கள் யாரை நினைத்து இப்பதிவை எழுதினீர்களோ, உண்மையில் உயிர் கொடுத்தவர்களை கேவலப்படுத்துகிறீர்கள்.


//உயிர் கொடுத்த குடிமகனார் மதராஸை சென்னாப்பட்டணம் என்று பெயர் மாற்றம் செய்தவுடன் கூவத்தின் அருகில் வாழ்ந்த மக்களெல்லாம் உப்பரிகையில் சந்தோஷ்மாக காலாட்டிக்கொண்டிருக்கிறார்கள்... //

மதராஸ் என்றே இருந்தால்... கூவத்தின் அருகில் வாழ்ந்த மக்களெல்லாம் உப்பரிகையில் சந்தோஷ்மாக காலாட்டிக்கொண்டிருப்பார்களா?. முட்டாள்தனமான, தேவையற்ற ஒரு சட்டம்!., மதராஸ் சென்னை ஆனதால்., மதராஸ் பல்கழைக்கழகம், சென்னை பல்கலைக்கழகமாகி விட்டதாம் (அரசாணை இல்லாமலேயே) ஆனால் சான்றிதழ்களில் மதராஸ் பல்கலைக் கழகம் என்றுதான் இருக்கிறதாம், அரசுக்கு வரும் பல்கலைக்கழகம் சம்பந்தமான கோப்புகளில், கடிதங்களில் மதராஸ் பல்கலைக் கழகம் என்றே இருக்கிறதாம்., ஏற்கனவே இருப்பதை சொல்வதற்கு ஒரு சட்டம். அதற்கு சபை நேரத்தை விழுங்குகின்ற ஒரு வாக்குவாதம். கேள்வி கேட்கக் கூடாதா?.

//மதராஸ் பல்கலை சான்றிதழ் கொண்டு சென்றால் உடனடியாக வேலை என்னும் லட்சியமல்லவா முக்கியம்.//

அடே அப்பா! இந்தக் கரிசனையை மாற்றம் செய்பவரிடம் சொல்லுங்கள். குடிமகனார்மீது ஏன் பாய்கிறீர்கள்?. அரசியலை கை அளவு தெரிந்துகொண்டு லபோ, திபோ என்று கடலளவு இரைச்சல் ஏன்?.

உங்களுடைய இப் பதிவு எவ்வளவு பேர் மனதை புண்படுத்தியிருக்கிறது என்று., பின்னுட்டங்களைப் பார்த்து தெரிந்திருப்பீர்கள். இருந்தாலும் மண் ஒட்டவில்லையென அடுத்த பதிவையும் எழுதியிருப்பீர்கள்.

அண்ணாச்சி., உங்க பக்கத்து வீட்டு 'தமிழை'ச் சொன்னிங்கன்னா யாரும் கேட்க மாட்டாங்க... ஆனா நாங்க பேசுற தமிழைச் சொன்னா நாலு பேர் திரும்பி ஏதும் சொல்லத்தான் செய்வோம். உங்களை வருத்தப் படுத்துவதோ., கோபப்படுத்துவதோ என் எண்ணமில்லை. .
 எனக்கு ஒன்று சொல்லுங்கள்.

இந்த பதிவு தமிழை பற்றியா அல்லது தமிழுக்காக உயிரை கொடுப்பவர்களை பற்றியா ?

ஏன் தமிழை கிண்டல்டிகிறாய் என்று பாய்ந்து பிறாண்டி க்கொண்டு இருக்கிறீர்கள் ?
 //இந்த நியோ யாருன்னு இன்னுமா தெரியல்லே?

அந்நியர்களின் அராஜகம் அதிகமாய் விட்டது...
:-))
 //உங்களுடைய இப் பதிவு எவ்வளவு பேர் மனதை புண்படுத்தியிருக்கிறது என்று., பின்னுட்டங்களைப் பார்த்து தெரிந்திருப்பீர்கள்.//

குழலி பதிவிற்கு வந்த பின்னூட்டத்தையும் சேர்த்து.
 இந்த அனானிமஸ் யாரென்று எனக்கு தெளிவாகவே தெரிகிறது.
 திருப்பள்ளி எழுச்சி நடந்தாச்சா ?
வா! ராசா வா !!
எல்லாரும் இங்க திருவோட்டை பிடிச்சிக்கிட்டு இருக்காங்க வந்து பிச்சை போட்டு தருமத்தை நிலைநாட்டுங்க !!

:-))

ஜோ வுக்கு மட்டுமே தெரிந்த அனானி !
 apdipodu...

என் பதிவை நீங்கள் புரிந்து கொண்ட பாங்கு தெரிகிறது.. புள்ளி வைத்ததில் நான் யாரை குறிக்கிறேன் என்பது விளங்கவில்லையா... உங்களை போன்றவர்களுக்காக :: உயிர் கொடுத்தாவது தமிழ் வளர்க்க முயற்சிக்கும் ராமதாஸை குறித்து எழுதப்பட்டது அது... இப்போது அப்படி ஒரு நெருக்கடி காலகட்டமா... உயிர் கொடுத்தாவது தமிழ் வளர்ப்பதாக முழங்குவதன் அர்த்தம், இறுதி வரை அந்த கொள்கைக்காக எந்த இடர் வரினும், உயிரே போனாலும் பின் வாங்காமல் மனம் தளராமல் உழைப்பேன் என்பதாக அர்த்தம் ஆகாதா? ஏன் இன்னும் உயிரை கொடுக்கவில்லை.. தமிழ் வளர்ச்சி எதிர்பார்த்த நிலையை அடைந்துவிட்டதா? அந்த பேட்டியை தொலைக்காட்சியில் கொடுத்துவிட்டு எங்கே போய்விட்டார். அதன் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சிக்காகவே தனது எல்லா செயல்களையும் ஆக்கிக்கொண்டாரா?... எப்பொழுது பார்த்தாலும் உயிர் கொடுப்பேன் என்று முழங்குபவர்கள் இயற்கையாக மரணம் வரும்வரை எல்லா சுகங்களும் அனுபவித்து வாழ, அந்த பேச்சில் உயிர் விடும் அப்பாவி இளைஞர்கள் உண்மையிலேயே உயிர் துறக்கிறார்களே அது ஏன்?

"அவர்கள் என்ன நினைப்பார்கள்" என்று நான்தான் எழுதினேன்... தலைவனுக்காக, தலைவன் மீது வந்த பழியை தன் சுயமரியாதைக்கு வந்த பழியாக நினைத்து மானம் தாங்காமல் உயிர் நீத்த அந்த நாலு பேரின் குடும்பங்கள் இன்று சோற்றுக்கு கும்பி காய்ந்து கிடக்க... அந்த சுயமரியாதை தலைவனோ தன் மீது பழி சொல்லியவரின் கரம் பற்றி அழுகிறான்... கொடுப்பதை கொடுங்கள், விரட்டி மட்டும் விட்டு விடாதீர்கள் என்று எலும்புக்காய் காத்துக்கிடக்கிறான்... உயிர் கொடுத்தவர்களை நீங்கள் தியாகி என்று சொல்லுங்கள்... எதிர் காலத்தில் உயிர் கொடுக்கும் எண்ணம் கொடுப்பவர்களை கண்டிக்கும் விதமாய் நான் அவர்களை முட்டாள்கள் என்கிறேன்...

என் இந்த பதிவு பலரை (என்னளவில் சிலர்தான்) புண்படுத்தியதாக நீங்கள் நினைத்தால் அது பதிவின் குற்றமல்ல... புரிதலின் குற்றம்... அதிலும் அந்த சிலரும் குதிரைக்கு கண் அங்கி போட்டது போல் எல்லாவற்றையுமமே வருணாசிரமக்கொள்கைகளையும் காவிப்பண்டாரங்களையும் கொண்டு மதிப்பிடும் போது அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை...

மேலும் இந்த பதிவு நீங்கள் நேசிக்கும் தமிழை கிண்டல் அடிக்கவில்லை. தமிழ் பெயரை சொல்லி தனது எதிர்காலத்தை வளர்க்க திட்டமிடும் வீணர்களை பற்றியது என்பதை நீங்கள் உணருவதும் உணராததும் உங்கள் இஷ்டம்..
 // முதல்ல இந்த தமிழ் உணர்வு, தமிழ் உணர்வு அப்படின்னா என்னன்னு சொல்லுங்கப்பா //

அதையேத்தான் அனானி நானும் கேக்கிறேன்.. ஏன் எல்லாரும் கன்னா பின்னான்னு உணர்ச்சி வசப்படுறாங்கன்னு தெரியல...

****

// தமிழ் பொங்கி வரும் நண்பர்களின் பெயர்கள் எல்லாம், ஜோ, Neo என்று தூய தமிழில் அழகாகவே இருக்கிறது. தமிழ் உணர்வு வர வேண்டும் என்றால் இந்த மாதிரி பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் //

மோடி மஸ்தான்.. இது சம்பந்தமாக ஏற்கனவோ ஒருத்தார் கேட்கப்போய்தான் பட்டம் வாங்கினார்... உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறதோ?

// இந்த பதிவு தமிழை பற்றியா அல்லது தமிழுக்காக உயிரை கொடுப்பவர்களை பற்றியா ? ஏன் தமிழை கிண்டல்டிகிறாய் என்று பாய்ந்து பிறாண்டி க்கொண்டு இருக்கிறீர்கள் ? //

இதையேத்தாம்பா நானும் கேட்கிறேன்

****

ஜோ & ஜோ வுக்கு மட்டுமே தெரிந்த அனானி ! என்னப்பா நடக்குது உங்க ரெண்டு பேருக்குள்ள...
 Neo is a "search editor" ;-)
 //அந்த சிலரும் குதிரைக்கு கண் அங்கி போட்டது போல் எல்லாவற்றையுமமே வருணாசிரமக்கொள்கைகளையும் காவிப்பண்டாரங்களையும் கொண்டு மதிப்பிடும் போது அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை...//

அதே போல் நீங்களும் தமிழ் என்றாலே திரவிட கழகங்களையும்., கழக கூட்டாளிகள் சொல்வது என்று மட்டும்தான் எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் பிரச்சனையே தமிழுக்கு மாறுங்கள் என்று இராமதாஸூம்., திரவிட கட்சிகளும் சொல்வதுதான். இவர்கள் இல்லாமல் லல்லு சொல்லியிருந்தால் கூட, லொல்லு பண்ணாமல் ஏற்று இருப்பீர்கள். (நீங்கள் பதிவில் யாரைக் குறிப்பிடீர்கள் என புரிந்தது- அது பற்றி கவலையில்லை எனச் சுட்டவே எழுதினேன்., குழலியுடன் சேர்த்து பா.ம.க பட்டம் கொடுத்துவிடுவீர்கள் என்பதால்). இப்பக்கூட தேவையில்லாமல் பெயர் மாற்றம் செய்யும் செல்வியை விட்டுவிட்டு, எப்போதோ மாற்றம் செய்த குடிமகனார் மீது பாய்கின்றீர்கள்.
 This comment has been removed by a blog administrator.
 முகமூடி,
உங்கள் பதிவுக்கு என்னுடைய முதல் பின்னூட்டம் இது தான்.

//முகமூடி,
அவனவன் பிள்ளைங்களுக்கு தமிழில் எழுதவும் பேசவும் சொல்லிக்கொடுக்க ,படிக்க ஏற்பாடு செய்தால் போதும் .மற்றபடி தமிழுக்காக உயிரையும் கொடுக்க வேண்டாம் ,மயிரையும் கொடுக்க வேண்டாம் (ராமதாஸ் கூட்டதுக்கும் ,உம்மைப்போல தமிழுணர்வைக் கேலி செய்து இன்பம் காணும் கூட்டதுக்கும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்)//
----------------------------------------------------------------
அதற்கு உம்முடைய எதிர்வினை..
//// உம்மைப்போல தமிழுணர்வைக் கேலி செய்து //

ஜோ... என்ன இது அபாண்டம்... நான் மிகவும் உண்மையாக அல்லவோ அக்கேள்விகளை கேட்டேன்.. என் சந்தேகங்களின் என்ன குற்றம் கண்டீர்...//
--------------------------------------------------------------------

என்னுடைய பதில்

//முகமூடி,
நீங்கள் கேலி செய்யவில்லையா என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டு கேளுங்கள்..இல்லையென்றால் பரவாயில்லை.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.//

-----------------------------------------------------------------------
இதற்கு சம்பந்தமில்லாமல் அனானிமஸிடமிருந்து வந்த எதிர்வினை

//ஜோ வை எப்படி தமிழில் எழுதுவது. சோ என்றா?

எல்லாரும் அவங்க பெயரை முதலில் தமிழில் எழுதுவதில் இருந்து ஆரம்பிக்கலாமோ ?

:)//
-------------------------------------------------------------------------

என்னுடைய பதில்

//சொந்தப்பேர் கூட இல்லாத அனானிமஸ் அவர்களே,
பெயர் மட்டும் 'தமிழ் நேசன்' -ன்னு வச்சுகிட்டா தமிழ் நேசன் ஆயிட முடியுமா? நான் கூட 'ஜோ' என்கிற சொந்தப்பெயரை விட்டு 'முகமூடி' ,'இட்லி பானை மூடி' இப்படி எந்த பெயரிலாவது வலைப்பதிக்க முடியும் .அப்படி தேவைப்படும் போது உம்ம கிட்ட கேக்குறேன்.
//

---------------------------------------------------------------------------
'ஜோ' -ங்கிறது என்னுடைய பெற்றோர் எனக்கு வைத்த பெயர் .தமிழ் பெயர் வைப்பதற்கும் தமிழ் உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நம்புகிறேன் .இருந்தாலும் என்னுடைய பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் தான் வைக்கப்போகிறேன்.

தனித்தமிழ் உபயோகிப்பவர் மட்டுமே தமிழுணர்வு பற்றி பேச முடியும் என்ற உங்கள் அரைவேக்காட்டு கருத்துக்கு என் பதில் இப்படி சொல்லி விட்டேன்..
//முகமூடி,
தமிழுக்கு ஆதரவாக பேசினால் உடனே தனித்தமிழில் தான் பேச வேண்டும் என்ற அவசியமில்லை .நான் ஒன்றும் தமிழறிஞன் அல்ல.மாணவன் தான் .ஆனால் தமிழறிஞர்களை கேலி செய்பவனல்ல.தனித்தமிழில் பேசுவதென்பது வேறு .தமிழ் உணர்வோடு இருப்பது என்பது வேறு .முடிந்த வரை நான் தமிழில் படிக்கிறேன் ,பேசுகிறேன் .என்னை விட அதை இன்னும் சுத்தமாக ,முனைப்பாக செய்பவர்களை எனக்கு மேலாக மதிக்கிறேன் .உம்மைப் போல குற்றம் கண்டு ,முழு தமிழறிஞனுக்கு மட்டுமே சொல்ல அருகதை உண்டு என்று விதண்டாவாதம் செய்வதில்லை.//

---------------------------------------------------------------------------------

இதற்குப்பிறகும் உமக்கு புரியவில்லையென்றால் ,ஒன்றும் செய்ய முடியாது .

அனானிமஸின் மற்றைய விதண்டாவாதங்களுக்கு என்னுடைய பதில்களை அறிவுடையோர் புரிந்து கொள்வர் ..அது உமக்கு புரியாதது ஒன்றும் வியப்புக்குரியதில்லை.
 இந்த பதிவின் மூலம் முகமூடிக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். வழக்கம் போல ராமதாஸ¤க்கு ஒரு குட்டு , ராமதாஸ் எதிர்ப்பு முகமூடி அணிந்து தமிழுக்கு ஒன்று(வழக்கமான திரித்தல்களுடன்).

ஜோ, இங்கு நீங்கள் அனானிமஸ¤க்கு பதில் அளித்தது தேவையற்ற செயல்.
நீங்கள் தொகுத்ததிலிருந்தே எப்படி தமிழுணர்வை ராமதாஸை முன்நிறுத்தி எதிர்ப்பது போல உங்கள் பெயரை இழுத்து உங்கள் விவாதத்தினை திசை மாற்றியது புரியும்.

அதேபோல் முகமூடியின் பதில்களை மட்டும் படித்துப் பாருங்கள். எத்தனை திசை திருப்பும், திரிக்கும் வேலைகள் என்பது தெளிவாகும்.
 முகமூடி,
ராம்கியின் 'அட்ரா சக்கை, அட்ரா சக்கை'யை வழிமொழிகிறேன் :)

மற்றபடி, .யிர் என்றால் என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது கிடைத்த சொற்களும், விளக்கங்களும் கீழே!

உயிர் -- சூப்பர் உதார்! அப்படியே தர முன்வந்தாலும், 'தமிழணங்கு' அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டாள் !

மயிர் -- சுலபமாக தர வல்லது தான். ஆனால், அப்புறம் பார்க்கச் சகிக்காமல் போய் விடுமே!

தயிர் -- என்றிருக்க வாய்ப்பில்லை. அதான், ஏற்கனவே 'அல்வா' கொடுத்தாகி விட்டதே!

பயிர் -- எங்கிருந்து கொடுப்பது, மழையே அப்படி இப்படி என்று பெய்யும்போது!

ஓசையில் ஒத்துப் போகும் சில சொற்கள்!

வயிறு -- அதற்குத் தானே இத்தனை ஆர்ப்பாட்டமும்!

கயிறு --- திரிப்பதில் கில்லாடிகள்!

என்றென்றும் அன்புடன்
பாலா
 ஜோ
பொறம்போக்கு, பிச்சை பற்றி எல்லாம் சொல்லமல் விட்டு விட்டியே ராசா
கில்லாடிமா மச்சி நீ,
இதையும் அறிவு உள்ளவர் புரிந்து கொள்வார்கள்.

:-)


ஜோ நண்பன்
 // தமிழ் பெயர் வைப்பதற்கும் தமிழ் உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நம்புகிறேன் //

இதை பெரிய அளவில் திருமா செய்யும் போது நான் சொன்னால் உடனே neo அதிலுள்ளா சமூக காழ்ப்புணர்ச்சியை கண்டுபிடிக்கிறார். apdipodu அதை தமிழுக்கு - இப்போது தமிழ் போராட்டக்காரரின் அடைமொழி - எதிரான எனது கருத்து என்கிறார்.

அப்புறம் உங்களுக்கு தேவையான கருத்தை மட்டும் ஒட்டி தைத்து என்னவோ நிரூபிக்க முயல்கிறீர். எனக்கு புரியவில்லைதான்.. ஒன்றும் செய்யாமல் இரும்.

****

சோழநாடன்... எதற்கு முகமூடியின் பதில்களை மட்டும் படிக்க வேண்டும்.. எங்கு எதை படித்தாலும் அதில் ஊடாடி படித்து உங்களுக்கு "தேவையான" விஷயங்களை மட்டும் படிப்பது உங்கள் பாணியா...

****

நன்றி பாலா

****

நன்றி ராம்கி... ஆதினம் நெற்கட்டும்செவல் கூட்டத்துக்கு போயிட்டு வரப்போ அவர பார்க்கணுமே... அதில் அவர் பேசும் கருத்துக்களே பல பதிவுகளை தரும்.
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link