<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d3361231228256067100', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நர்சரி ரைம்ஸாராய்ச்சி


எச்சரிக்கை : குழந்தை பாடல்களான baa baa black sheep, rain rain go away போன்றவற்றை குழந்தைகளுக்கு பாடிக்காண்பிப்பவர்கள் இதை படிக்காதீர்கள்


Rain Rain go away :: எலிஸபத் அரசி காலத்து பாடல் இது

1533-1603 காலகட்டத்தில் ஸ்பெயினும் இங்கிலாந்தும் எப்பொழுதும் சண்டைக்கோழிகள். 1588 வாக்கில் ஸ்பெயின் தனது கப்பற்படையோடு இங்கிலாந்துடன் சண்டைக்கு சென்றது. ட்யூக் ஆஃப் மெடினா, செடோனியா தலைமை வகித்த இப்படையில் 130க்கும் மேற்பட்ட பெரிய போர்க்கப்பல்கள் இருந்தன. அட்மிரல் லார்டு ஹோவர்டு தலைமை வகித்த ஆங்கிலப்படையிடம் இருந்ததோ 34 சிறிய போர்க்கப்பல்களும் 163 வணிக கப்பல்களும்.. ஆனால் ஆச்சரியமாக ஸ்பெயின் படுதோல்வி அடைந்தது.. இந்த தோல்விக்கு ஆங்கிலப்படையின் சிறிய கப்பல்களின் விரைந்து தாக்கும் திறன் மட்டுமல்ல, சூறாவளி மழையும் முக்கிய காரணம்.. சூறாவளியில் ஸ்பெயினின் பெரிய கப்பல்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை... எனவே தான்

Rain rain go away,
Come again another day.
We want to go outside and play
Come again some other day.

Jack and Jill :: பதினாறாம் லூயி சிரச்சேதம் செய்யப்பட்ட காலகட்டத்திய பாடல் இது

ப்ரெஞ்சு அரச பரம்பரையில் வந்த பதினாறாம் லூயி அவரது முன்னோடிகளோடு ஒப்பிடும் போது வலிவற்றவராக, அறிவு குறைந்தவராக, எளிதில் திசை திருப்பப்படுபவராக கருதப்பட்டார். 1770ல் மேரி ஆண்டோனெடை கல்யாணம் செய்த பின் மன்னரின் முடிவுகளில் மேரியின் ஆதிக்கம் மேலொங்கி இருந்தது (அப்பவே இப்படித்தானா?) (Jack and Jill)

இவர்கள் அரசனாகவும் அரசியாகவும் 1774ல் ஆனார்கள் (went up the hill)

அந்த காலகட்டத்தில் ப்ரான்ஸில் கடுமையான நிதி நெருக்கடி. ஆகவே மன்னர் கடுமையாக வரிவிதித்தார். அதனால் மன்னரின் மேல் மக்களுக்கு பற்று குறைந்து போராட தயாரானார்கள். மக்களை ஒடுக்குவதற்காக மன்னர் மேலும் வரி விதித்து நிதி மற்றும் சட்டத்தால் கசக்கி பிழிய ஆரம்பித்தார் (To fetch a pail of water)

ப்ரெஞ்சு மத்திய தர வர்க்கத்தால் இதை தாக்கு பிடிக்க முடியவில்லை. 1789ல் பரீஷிய நகர மக்கள் ஒன்று சேர்ந்து கோட்டையை முற்றுகை இட்டு மன்னரையும் அரச குடும்பத்தினரையும் சிறை பிடித்தார்கள் (Jack fell down)

1792ல் ப்ரான்ஸ் குடியாட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னர் மேல் வழக்கு தொடரப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. பாரிஸில் 1793 ஜனவரியில் கில்லட்டின் கொண்டு மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார் (and broke his crown)


அரசி மேரி அவர் மகனிடமிருந்து பிரிக்கப்பட்டு தீர்ப்பாணையத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பாரிஸில் அக்டோபர் 1793ல் சிரச்சேதம் செய்யப்பட்டார் (And Jill came (தலை உருண்டது) tumbling after)

Jack and Jill went up the hill
To fetch a pail of water;
Jack fell down
and broke his crown,
And Jill came tumbling after.

Ring around the rosies :: பொதுவாக சிறுவர்கள் கை கோர்த்துக்கொண்டு இப்பாடலை பாடியபடியே வட்டமாக சுற்றி வந்து கடைசி வரியில் கீழே விழுவார்கள்

1600ல் கடுமையான ப்ளேக் காய்ச்சலால் அவதிப்பட்டது இங்கிலாந்து. ப்ளேக்கின் ஆரம்ப அறிகுறி தோலில் ரோஸ் நிறத்தில் வரும் சொறி. (Ring around the rosies)

அப்போது எலிகளால் காற்றின் மூலம் ப்ளேக் பரவுவதை டாக்டர்கள் அறிந்திருக்கவில்லை. பிணங்களின் துர்நாற்றத்திலிருந்துதான் ப்ளேக் பரவுவதாக அவர்கள் நினைத்தனர்.. ஆகவே வேர்கள், மூலிகை, பூக்களின் இதழ் போன்றவற்றை கொண்டு அவர்கள் முகமூடி ;) அணிந்தனர் (A pocket full of posies)

ப்ளேக்கின் அடுத்த அறிகுறி தும்மல் (A-tishoo! A-tishoo!) > பிற்காலத்து பாடல்கள் தும்மலை மாற்றி ashes என்று பாடப்பட்டது. அது எரிக்கும் போது வரும் சாம்பலை குறிக்கும் < குழந்தைகள் கடைசி வரி பாடும் பொழுது அவர்களை அறியாமலேயே வீழ்ந்த அவர்களின் முன்னோரை நினைவு கூறுகின்றனர் (We all fall down)


Ring around the rosies,
A pocket full of posies,
A-tishoo!
A-tishoo!
We all fall down.

Humpty Dumpty sat on a wall :: ஹம்டி டம்டி என்பது கூன் விழுந்த ராஜாவான மூன்றாவது ரிச்சர்டை குறிக்கும்

அவர் wall என்ற பெயரில் ஒரு குதிரை வைத்திருந்தார் (Humpty Dumpty sat on a wall ஷேக்ஸ்பியர் கவிதையான ரிச்சர்டு III லும் இது வரும்)

போஸ்வொர்த் போரில் அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார் ( Humpty Dumpty had a great fall)

அவரின் எதிரிகள் அவரை சூழ்ந்து அவரை அங்கேயே கண்ட துண்டமாக வெட்டிப்போட்டு விட்டார்கள் (Couldn’t put Humpty together again)

Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall.
All the king’s horses,
And all the king’s men,
Couldn’t put Humptytogether again.

Baa baa, Black Sheep :: கடுமையான வரிவிதிப்பை சொல்லும் பாடல்

உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவுக்கு (மாஸ்டர்), ஒரு பங்கு ட்யூக் டச்சஸ் போன்ற உயர்குடி மக்களுக்கு (dame), கடைசி ஒரு பங்குதான் உழைப்பாளிக்கு (little boy) என்பதை சொல்லும் பாடல்.

Baa baa, Black Sheep,
Have you any wool?
Yes, marry, have I,Three bags full:
One for my master,
One for my dame,
And one for the little boy
That lives in the lane!

****

ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கா பதிவின் பின்னூட்டத்தில் அல்வா.சம்மி லண்டன் பிரிஜ் , ஜேக் அண்ட் ஜில் எல்லாம் நெகட்டிவ் திங்கிங்ல் முடிவதை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். மழை சேகரிப்பு காலகட்டத்தில் இருக்கும் நாம் ஏன் இன்னமும் rain rain go away என்று பாடிக்கொண்டிருக்கிறோம் என்று எனக்கும் ரொம்ப நாளாக ஒரு கேள்வி உண்டு... ஒரு நாள் அலுவலகத்தில் இது பற்றி கேட்ட பொழுது ஸ்பெயினை பிறப்பிடமாக கொண்ட சக ஊழியர் "ரெயின் ரெயின்" பின்னால் ஒரு அரச பரம்பரை கதை உண்டு என்ற செய்தியை சொன்னார். பின்பு வலையாராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இந்த பதிவு. இதில் சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் உண்டு...


எவ்வளவு சோகமான வரலாறுகளை உள்ளடக்கிய பாடல்களை குழந்தைகளுக்கு ஜாலியாக சொல்லிக்கொடுக்கிறோம் என்று சிலருக்கு தோன்றலாம். முதலில் ஆங்கில பாடல்களே நம் குழந்தைகளுக்கு தேவையா என்றும் சிலருக்கு தோன்றலாம். எனக்கு தோன்றியதென்னவோ, எனக்கு இந்த அர்த்தமெல்லாம் தெரியாமலே இருந்திருக்கலாம் என்றுதான்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முகமூடி, சுவாரஸ்யமான தகவல்கள்.. நான் ட்விங்கிள்..ட்விங்கிள் தவிர வேற பாடல்களை அதிகமா சொல்லித்தரலை. சம்மியோட பின்னூட்டத்தை நான் பார்க்கலை.. ஆனா எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த வாத்தியார் "London bridge is falling down, jack and jill, humpty dumpty எல்லா பாட்டும் ஒரே அபசகுனம்" என்று ஒரு முறை சொன்னது மனசுலே பதிச்சுடுத்து.
 



உங்க எச்சரிக்கையையும் மீறி இந்த பதிவை வாசித்த பின்னர் தோன்றியது, அட இந்த மழலைப் பாடல்களுக்குள்ளே இத்தனை பெரிய விஷயமெல்லாம் கூட இருக்கா.
 



தல, சூப்பர்..ரொம்ப அருமையா இருந்தது.. கலக்குங்க!
இது முகமூடி பதிவுதானே?? :) இல்லை ஞானபீடம் போட இருந்த பதிவ சுட்டுடீங்களா?
 



super padhivu thalai!

ithuthaan enga thalaivarin ilakkiya arivu! verentha katchiyilaavathu ithupola ilakkiya arivu konda thalaivan undaa?
 



அம்மா இங்கே வா வா.. , சூரியன் வருவது யாராலே... , இப்படி எவ்ளோ இனிமையான.. நல்ல அற்தமுள்ள பாடல்களை கொண்டு.. தாய்மொழியை அறிமுகப்படுத வேண்டும்...

ஆங்கில பாடல்களே வேனாம்னு இல்லை... அதற்கு முதலிடம் குடுக்கக்கூடாது...
 



புதுசாய் வீட்ல பேரன்/பேத்தி பொறந்து இருக்கா ( சரி சரி, பேரன்/பேத்தி யாரைவது தத்து எடுத்து இருக்கிறீரா ?)


நர்சரி ரைம்ஸ் பாடறீங்க அதுவும் இங்கிலீஸ¥ ரைம்ஸ். ஆங்கிலமே படிக்கவராது, தமிழைதான் பதிவில் போடுவேன் என்று கோழம் வேற.

ஏன்
அம்மா இங்கே வா வா
என்ற தமிழ் குழந்தை பாடல் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பதிவு போட்டு இருந்தாலாவது உமது தமிழ் தொண்டை நான் பாராட்டி இருப்பேன்.
 



செந்திலே நான் அதே மாதிரி ஆன பின்னூட்டம் இடுவதுக்குள்
சந்திலே முந்திக்கொண்டீரே..
 



ரம்யா.. நெகட்டிவ் திங்கிங்காகத்தான் நினைத்திருந்தேன்.. உங்க ஆசிரியர் சொன்ன மாதிரி சிலது அபசகுணமும்தான்..

நன்றி கலை

வீ.எம்... என்ன நக்கல் இருந்தா இந்த மாதிரி உபயோகமான பதிவ ctrl+A ஞானபீடம் பதிவா இருக்குமோன்னு சந்தேகப்படுவீங்க ;-)

சுரேஷ்.. புல்லரிக்க வைக்கறீங்களே.. போற போக்க பாத்தா நிறுவன தலைவர் பதவிய கூட வாங்காம விடமாட்டீங்க போல..

நன்றி செந்தில். பதிவில் குறிப்பிட்ட சுட்டியில இன்னும் சில தமிழ் பாடல்களும், அந்த பதிவில ஒரு சுட்டியும் இருக்கு.. அதையும் சொல்லிக்கொடுக்கலாம்.

சிறுசு... நான் ஆராய்ச்சிதான் பண்ணினேன். அனுபவிச்சேன்னு சொன்னேனா.. உண்மையிலேயே ஆங்கிலம் படிக்க வராது... ஜீன்ஸ் மாமா உதவியோடதான் ஆங்கில பத்திரிக்கை படிக்கிறது... அம்மா இங்கே வா வா பத்தி நீங்க ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டீங்கன்னா தமிழ் கூறும் நல்லுலகம் உங்கள வாழ்த்தும். என்ன சொல்றீங்க.
 



"பின் மன்னரின் முடிவுகளில் மேரியின் ஆதிக்கம் மேலொங்கி இருந்தது (அப்பவே இப்படித்தானா"

எப்பவுமே அப்படித்தான்...
 



தல கலக்குறீங்க? கொஞ்ச நாள் ஊருக்கு போய் இருந்ததால பதிவுகளேல்லாம் படிக்க முடியாம இருந்துச்சி. இப்பதான் வந்து படிக்க ஆரம்பிச்சேன். இந்த பாத்த ஒடனே ரொம்ப சந்தோசமாவும் கேட்ட கேள்விகளுக்கு விடை கெடச்ச மாதிரியும் இருந்துச்சி.

இத எல்லாம் பாத்துட்டு நம்ம மக்க ஆங்கில பாடல்கள் சொல்லி கொடுக்காம தமிழுக்கு மாறினா நல்லாதான் இருக்கும் என்ன சொல்லுறீங்க?

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் முகமூடி.
 



முகமூடி
roses என்பது கிறித்துவ மத சடங்கின் படி தேவைப்படும் ரோஸ்பெரி மணிகளை குறிக்கும். இதை போல I had a bird என்ற பாடல் சுரத்தைனால் இறந்தவர்களாஇ குறிக்கும். எழுதியமைக்கு நன்றி
 



முகமூடி மிகவும் அருமையான பதிவு.

ரிங் அரவுண்ட் த ரோசஸ் பாடல் பற்றித் தெரியும். மற்ற பாடல்களைப் பற்றிச் சொன்னமைக்கும் நன்றி.

இப்பொழுது பள்ளிகளில் அந்தப் பாடல்கள் சொல்லித்தரப் படுவதில்லை என்று நினைக்கிறேன். என்னுடைய மருமகனுடைய பள்ளியில் (செட்டிநாடு வித்யாஷ்ரம்) சொல்லித் தரும் ஆங்கில ரைம்ஸ் பாடல்கள் புதியனவாகவும் (இந்தியர்கள் எழுதியவை என நினைக்கிறேன்) நல்லவையாகவும் இருக்கின்றன.
 



தருமி // எப்பவுமே அப்படித்தான்... // மதுரைக்காரராச்சே... அப்படித்தான் தோணும்.. நாங்க சிதம்பரங்கோவ் (அப்படின்னு மனசுகுள்ள நினைச்சுகிட்டு இருக்கோம்)

வாங்க சம்மி.. ஊர்ல விசேஷம் எதுவும் உண்டா... அல்வா பதிவுகள் கொஞ்ச நாளா சத்தமே காணுமேன்னு சக பதிவர்கள் கூட கேட்டிருந்தாங்க... தமிழ் பாடல்கள் சொல்லிக்கொடுக்கறதாத்தான் கேள்வி..

நன்றி பத்மா. உங்களுடையதும் பொருத்தமாகவே இருக்கிறது. இதில் பல கதைகள் 'பாட்டி காலத்து' கதைகள் என்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கும்

நன்றி ராகவன். செட்டிநாடு வித்யாஷ்ரம் உங்கள் மருமகனுடைய பள்ளியா.. அப்போ நமக்கு ஒரு ஸீட் உண்டு என்று சொல்லுங்கள்... (குழந்தைக்கு அல்ல... எனக்கே... மீண்டும் ஒருமுறை நர்சரி படித்தால் நன்றாக இருக்காது?) நீங்கள் சொல்வது போலவே இப்பொழுது நிறைய பாடல்கள் ஆராய்ச்சி செய்து இசையுடன் சேர்ந்து பாடுவதாக இருக்கும்படி சொல்லிக்கொடுக்கிறார்கள் என நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
 



// நன்றி ராகவன். செட்டிநாடு வித்யாஷ்ரம் உங்கள் மருமகனுடைய பள்ளியா.. அப்போ நமக்கு ஒரு ஸீட் உண்டு என்று சொல்லுங்கள்... (குழந்தைக்கு அல்ல... எனக்கே... மீண்டும் ஒருமுறை நர்சரி படித்தால் நன்றாக இருக்காது?) //
கிழிஞ்சது. என்னுடைய மருமகன் படிக்கும் பள்ளி என்றேன். இந்த வருடம்தான் பள்ளியில் சேர்த்திருக்கிறோம். நீங்கள் என்னடா என்றால் எனக்குத் திருமணமாகி பிறகு பிறக்கப் போகும் மகளுக்கு இப்பொழுதே மாப்பிள்ளையும் பார்க்கின்றீர்கள். ஹா ஹா ஹா
 



நன்றி அண்ணாச்சி.

ஊருக்கு போய்ட்டு வந்ததுதான் விசேசம்....

போய்ட்டு வந்ததுல கொஞ்ச அலுவலக வேலை பாக்கி விழுந்துபோச்சு. அத முடிச்சிட்டு பதிவுகள போட்டுதாக்க வேண்டியதுதான்.
 



// கிழிஞ்சது. என்னுடைய மருமகன் படிக்கும் பள்ளி என்றேன் // ஓ.. அப்படியா சங்கதி... தமிழக அரசியல்ல "என் மருமகனுடையது" என்றால் அது அவருக்கு சொந்தம் என்று பொருள்... அந்த கண்ணோட்டத்திலேயே பார்த்துவிட்டேன். ஹிஹி...

// அத முடிச்சிட்டு பதிவுகள போட்டுதாக்க வேண்டியதுதான் // போட்டுத்தாக்குங்க... அப்படியே நம்ம விஜய பத்தி எதுனா செய்தி உண்டா..
 



சரி, உங்க கருத்து ??



கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link