<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d3361231228256067100', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கா ?


சமீபத்தில் toys 'r' us க்கு ஒரு பொம்மை வாங்கலாம்னு போனா அடேங்கப்பா... குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு எவ்ளோ பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக வளந்திருக்கு. (பிராணிகள் பராமரிப்பு இன்னொரு சாம்ராஜ்ஜியம்). என் சின்ன வயசு பொம்மை ஞாபகங்களான பச்சைக்கிளி (ப்ளாஸ்டிக் கிளி அடியில் சின்னதாய் இரண்டு சக்கரம் இருக்கும்) , நடவண்டி , நுங்கு வண்டி எல்லாம் இன்னும் வழக்கில் இருக்கான்னு தெரியல.


பேசும்/பாடும் பாடபுத்தகங்கள பாத்தப்போ நான் படிச்ச தமிழ் ரைம்ஸ் (இதுக்கு தமிழ் என்ன - மழலை பாடல்கள் என்பது சரியா) என்னான்னு யோசிச்சேன். 'அம்மா இங்கே வா வா' ஞாபகம் இருக்கு.... வேற ஒன்னும் இப்போதைக்கு ஞாபகம் வரல.. குழுவா மொத்த க்ளாஸ¤ம் ஒப்பிப்பதில் ஆத்திச்சூடி (முழு ஆத்திச்சூடியும் முதல் கமெண்ட்டில்) - ஆறுவது சினம் வரை ஞாபகம் வருது. அது வரைதான் இன்று அர்த்தமே புரிகிறது. முயற்சி செய்தால் வேறு சிலவற்றின் அர்த்தம் புரிகிறது. ஒளவியம் பேசேல் என்பதற்கு சத்தியமாக அர்த்தம் புரியவில்லை. தப்பு என்மேலன்னு எனக்கு தோனல. விரும்பு, சினம், ஊக்கம், கைவிடல், இகழ்ச்சி என்பதை தவிர மற்ற வார்த்தைகள் நமது அன்றாட பேச்சு வழக்கில் இன்று இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. ஆத்திச்சூடி கற்கும் ஒரு குழந்தை அதை ஒரு பாடமாக தவிர - அதிக பட்சம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு பாடிக்காண்பிக்க - வேறு விதத்தில் உபயோகப்படுத்துகிறதா? அப்புறம் எப்படி அடிமனதில் பதியும்.

ரொம்ப வருஷங்களுக்கு முன்பு சுஜாதா ஒரு கட்டுறையில் அவரது நண்பர் ஒருவர் - ராமானுஜம்? - குழந்தைகளுக்கான நர்சரி ரைம்ஸை அழகான தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதாக, பா பா ப்ளாக் ஷீப்பின் மொழி பெயர்ப்பை கொடுத்திறுந்தார். எளிமையாகவும் அழகாகவும் இருந்தது அது. (யார்கிட்டயாவது நல்ல தமிழ் ரைம்ஸ் இருக்கா). இப்போ மெட்ராஸ் பாஷையில் 'ட்விங்கிள் ட்விங்கிள்' பாடினால் இப்படி இருக்குமா?

பளிச்சி பளிச்சி தம்மாத்தூண்டு இஸ்டாரே!
ஆச்சரியமாத்தான்கீது நான் உன்ன பாக்க சொல்லோ!
ஒலகத்த விட்டு யம்மான் ஒசரத்துல கீர,
வானத்துல ஒரு வைரமணியாட்டமா மின்னிக்கினு
பளிச்சி பளிச்சி தம்மாத்தூண்டு இஸ்டாரே!

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ஆத்திச்சூடி

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
 



Ennaaaaaaa Ethuuuuu

Sirupullathnamalllaaaa irukkuuu
 



ஒரு ரைம்ஸ்

டப்பா டப்பா வீரப்பா
எப்பண்டா கல்யாணம்
பட்டம் பறக்குது
பள்ளிக் கூடம் தொறக்குது
மாசி பிறக்கட்டும்
மல்லிகைப்பூ பூக்கட்டும்
நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலை மீது ஏறிவா
மல்லிக்கை பூ கொண்டுவா
 



எம்ஜியார் சண்டை
பானுமதி கொண்டை
குளத்துல கொக்கு

என்று ஒரு பாடல் பாடுவோம். யாருக்காவது முழுதும் ஞாபகம் இருக்கா?
 



ஐயா முகமூடி,

இப்பவும் தமிழ்-ல குழந்தைகளுக்கான பாடல்கள் கெடைக்குது. நான் என் குழந்தைக்கு தமிழ் குழந்தைகள் பாடல் இசைவட்டுகளும் சில புத்தகங்களும் வாங்கிக்கொடுத்துள்ளேன்.

இதற்காக சுஜாதா சொன்ன மாதிரி பாபா பிளாக் ஸீப்பை மொழி பெயற்கனும்-னு இல்லை. அதற்கு பதில்

அம்மா இங்கே வாவா
ஆசைமுத்தம் தா தா
இலையில் சோறை போட்டே
ஈயை தூர ஓட்டு
உன்னை போல நல்லோர்
ஊரியாரு உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

போன்ற பாடல்களை சொல்லிக்கொடுக்கலாம்( இந்த பாடலை கல்லூரி ராக்கிங் காலத்தில் ஒரு சீனியர் கேட்டு தெரியாமல் அடிவாங்கி இப்பொழுது குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கும் போது படித்தது). இது போல பல நல்ல குழந்தைப்பாடல்கள் உள்ளன.

நிலா நிலா ஓடிவா, சொக்கன் விட்ட பம்பரம் சோமு விட்ட பம்பரம், மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாப்பழம்...இப்படி பல

மேலும் பல ஆங்கில குழந்தைப்பாடல்கள் நெகட்டிவ் திங்க்கிங்-ல முடியறத கேட்டிருக்கீங்களா?

லண்டன் பிரிஜ் ஸ் பாலிங் டவுண், ஜேக் அண்ட் ஜில் வெண்ட் அப்த ஹில் ஜேக் பெல் டவுண்...,
இப்படி நெறைய அது ஏன்?
 



குழந்தைப் பாடல்கள்

பாப்பா பாட்டு பாடுவோம்

மேற்சொன்ன சுட்டிகளில் அந்த இசைவட்டுக்கள் பற்றிய விபரம்.
 



திருக்குறள் பத்து அதிகாரத்துல சொல்றத அழகா ஒரே பாட்டுல சொல்லியிருக்காங்க
நம்ம ஒஉவை பாட்டி.
 



நன்றி சம்மி. சுஜாதா மொழிபெயர்ப்பை ஒரு தகவலாகத்தான் சொன்னேன். தமிழில் அழகான சிறுவர் பாடல்கள் நிறைய உள்ளன. இப்பவும் நமக்கு ஞாபகம் இருப்பது / ஞாபகப்படுத்திக்கொள்வதை குறித்துதான் இந்த பதிவு. நிலா நிலா ஓடிவா, மல்கோவா மாப்பழம் இரண்டும் இப்போ ஞாபகம் வருது... ஆங்கில குழந்தைப்பாடல்கள் நெகடிவ் திங்கிங்கில் முடிவதை நானும் கவனிச்சிருக்கேன். அத பத்தி மேலும் ஆராய்ச்சி பண்றேன். நீங்க சொன்ன சுட்டியில தகவல் இருக்கே தவிர எப்படி வாங்கறதுன்னு தகவல் ஒன்னும் காணோம்... நீங்க எப்படி வாங்கனீங்க.
 



எல்லாத்துக்கும் அர்த்தம் புரியுதா ஆதிரை ??
 



அல்வாசிட்டியாரே.. மேற்படி சி.டி. பர்மா பஜாரிலே கெடைக்குமா?! :)
 



அண்ணாச்சிகளா வணக்கம்,

மேற்சொன்ன இசைவட்டுக்கள் நம்ம மியூசிக் வோல்டு ல கிடைக்குது. மேலும் நான் 2 வட்டுக்களை அண்ணாநகரில் உள்ள ஒரு கடையில் வாங்கினேன் (கடைப்பெயர் நியாபகம் இல்லை, அண்ணாநகர் புளுஸ்டாரில்). இதுக்கு பர்மா பஜார் போகனும்-னு இல்லை. விலை 150 ல் இருந்து 400 ரூபாய் வரை. நான் வாங்கிய 4 வட்டுக்களில் 3 நன்றாக உள்ளது. ஒன்று கொஞ்சம் பரவாயில்லை.

ஏதோ பிள்ளைக்கு முதலில் தமிழை கொஞ்சம் கற்றுக்கொடுத்துவிட்டு பிறகு ஆங்கிலத்துக்கு தாவலாம் என்ற எண்ணம். மேலும் அயல்வாழ் இந்தியராகிய எமக்கு குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது இன்றியமையாததாகிறது.

மேலும் நமக்கும் பழைய தமிழ் பாடல்களை நியாபகப்படுத்திக்கொள்ள முடிகிறது. ;-)

ஆமா அண்ணாச்சி அந்த நெகட்டிவ் திங்கிங் பத்தி கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.

நன்றி.
 



auviyam auviyam = envy

sollvadhu
online tamil lexicon.
 



Nalla discussion. Unga katturayin valiyaga, sila padalkalai therindu konden. Nandrikal pala!
 



அண்ணாச்சிகளா,

நேத்தே இந்த சுட்டிய கொடுக்கனும்-னு நெனச்சேன் கொஞம் வேலை இருந்ததால கொடுக்கல.

ஆத்திச்சூடி விளக்கம்

என்ன உபயோகமா இருந்துச்சா? (எனக்கு இருந்துச்சி).
 



ரொம்ப நன்றி அல்வாசிட்டி, ஆத்திச்சசூடி இவ்ளோ இருக்குங்கறதே இன்னிக்கிதான் தெரிஞ்சிகிட்டேன். வீரபாண்டிய கட்டபொம்மன் பாணில சொன்னா வெட்கம்ம்ம்... அப்புறம் நிறைய ஆங்கில ரைம்ஸ் ஏன் நெகட்டிவ் திங்கிங்ல இருக்குன்னு பாக்க போனா அதுல ஏகப்பட்ட விசயம் இருக்கும் போல.... சுருக்கமா சொன்னா ஹம்டி டம்டி, ஜாக் அண்ட் ஜில் எல்லாம் சரித்திர காலத்துல ஒல்ட் இங்கிலாந்து அரச பரம்பறைய கேலி பண்றதுக்காக பாடிய பாடல்களாம். நம்மூர்ல சுதந்திர காலத்துக்கு முன் எப்படி நாட்டுப்பாடல்கள்/ பொம்மலாட்டங்கள வெள்ளக்காரனுக்கு எதிரா சூசகமா பாடினாங்களோ அப்படி.... இத பத்தி விரிவா ஒரு வலைப்பூ கட்டறேன்.
 



அண்ணாச்சி, கலக்கல் தான் போங்க? அரச பரம்பரைய கிண்டல் பண்ண குழந்தை பாடல்கள் தான் கெடச்சுதா? கண்டிப்பா இதபத்தி ஒரு தனி பதிவு போடுங்க படிக்க காத்துட்டு இருக்கேன்.

நன்றி.
 



http://paadal.blogspot.com/
 



இங்கே பார்க்கவும், இன்னும் சில பாடல்கள்

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
 



சரி, உங்க கருத்து ??



கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link