<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

எஸ்.ஏ.ராஜ்குமார்- தினமூடி நிருபர் சந்திப்பு


பிரபல(?) இசையமைப்பாளர், கோரஸ் புகழ் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களை தினமூடி நிருபர் தன் கனவில் சந்தித்து பேட்டி கண்டார். அது இங்கே...


நிருபர்: எவ்வளவோ இசையமைப்பாளர் இருக்காங்க... ஆனா உங்க தனித்தன்மை என்ன சார்.

எஸ்.ஏ: ஸ்வரங்களை சேமிக்கிறது... என்ன அதிர்ச்சி லுக் விடறீங்க.. இப்ப பாத்தீங்கன்னா, ஏழே ஸ்வரங்கள்தான் இருக்கு. இவ்ளோ குறைச்சலா இருக்குற ஸ்வரங்கள நாம பாட்டுக்கு கன்னா பின்னான்னு வேஸ்ட் பண்ணிட்டா அடுத்த தலைமுறைக்கு ஸ்வரங்கள் இல்லாம போயிடும் இல்லையா, அதனால ஒரு படத்துக்கு ஒரு மெட்டு மட்டும்தான்னு சிக்கனமா பாட்டு போடறேன்.

ஆனாலும் ஒரு படத்துக்கு கொறஞ்சது 5 பாட்டுங்கற தமிழ் சினிமா இலக்கணத்த மீற்றதில்லை நான். என் படத்துலதான் ஒரே மெட்டு பலவித பாட்டா ஆகும்... முதல்ல ஒரு பாட்ட ஹீரோ ஜாலியா பாடற மாதிரி போடுவோம். அப்புறம் அதையே ஹீரோயின் ஜாலியா பாடுவாங்க. அப்புறம் ரெண்டு பேரும் சேந்து ஜாலியா பாடுவாங்க. அப்புறம் ஹீரோ அதே பாட்ட சோகமா பாடுவாரு, அப்புறம் ஹீரோயின் சோகமா பாடுவாங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேந்து... நடு நடுல கொஞ்சம் கோரஸ் தூவுவோம்.. இதுவே குடும்ப கதைன்னு பாத்தா முதல்ல அப்பா, அப்புறம் அம்மா, அப்புறம் அவங்க வீட்டு டாமி, அப்புறம்....

நிருபர்: போதும் சார், புரிஞ்சி போச்சி.. விக்ரமன் படத்துல மட்டும்தான் நீங்க இசையமைக்கிறீங்க.. அது உங்க கொள்கையா சார்.

எஸ்.ஏ: மண்ணாங்கட்டி. வேற எவன் கூப்பிடறான். ஸ்வர சேமிப்பு மாதிரி உயர்ந்த விஷயத்த பண்றவனுக்கு இந்த தமிழகம் கொடுக்கற கௌரவம் இதுதான் தம்பி... ஆனா விக்ரமன் அப்படி இல்ல. விக்ரமன் ஒரு சிறந்த லோ பட்ஜெட் இயக்குனர். இன்ஃபாக்ட் அவரு வீட்டுல மளிகை சாமான் வாங்குறப்போ போடற பட்ஜெட்டுல விழற துண்டுலதான் அவரு படமே எடுக்குறாரு... ஆனா அவரு படங்கள்ல நடிக்கிறவங்களுக்கு மூணு வேளை சாப்பாடு, சைக்கிள் ஓட்டியோட கூடிய வாகன வசதி மட்டுமல்ல நடிக்கிற வாய்ப்பும் சம்பளமா கொடுக்கிற பெரிய மனசு கொண்டவரு. என்னோட ஸ்வர சிக்கன கொள்கையால ஒரு மெட்டுக்கான சம்பளம்தான் வாங்குவேன்... அதான் எங்க வெற்றிக்கூட்டணியோட ரகசியம்.

நிருபர்: அப்புறம் ஏதோ ஒரு படத்துல கூட நடிச்சீங்க போலருக்கு

எஸ்.ஏ : ஆமாம்பா, நம்ம விஜயும் ரம்பாவும் நடிச்ச படம். பேர் ஞாபகம் இல்ல. ஒரு வடக்கத்தி இசையமைப்பாளர்தான் இசை. அதுல நான் ஒரு விழாவுல பாட்டு பாடறவனா நடிச்சேன். 'நாடோடி மன்னாஆஆஆ போகாதே...' ன்னு பெருங்கொரலெடுத்து நான் பாட்ட ஆரம்பிச்சதும் மக்கள் எல்லாம் ஒரு ரிலாக்ஸேசன் மூடுக்கு வந்து அல்லாரும் தம்மடிக்க வெளில போயி சந்தோசமா இருந்தாங்கன்னு பத்திரிக்கை காரங்க எல்லாம் புகழ்ந்து கூட எழுதுனாங்களே. அதுக்கப்புறம் மைக் எஸ்.ஏ ங்கர அளவுல வாய்ப்பு கிடைக்கும்னு பாத்தேன். படம் ஊத்திகிச்சி. ராசியில்லாத பாடக நடிகர்னு முத்திரை குத்திட்டாங்க...


அதுல இன்னொரு சோகம் என்னன்னா, படத்துக்கு நாந்தான் இசையமைப்பாளர்னு தப்பா நினைச்சி நிறைய பேரு பாட்டு கேட்டு வந்திட்டாங்க. ஒரே நேரத்துல அவ்ளோ மெட்டுக்கு என்ன பண்ணுவேன். அதனால அந்த படத்தோட பாட்ட போட்டு காமிச்சேன். பாட்டெல்லாம் நல்லா இருக்கவும், அது என் இசை இல்லன்னு தெளிஞ்சி அவங்களா போயிட்டாங்க...

நிருபர்: கொஞ்ச நாளா உங்க இசையில படமே வரலையே அது ஏன் சார்.

எஸ்.ஏ: அது ஒரு சோகமான காரணம்பா. என்ன பத்தி தெரியாத ஒரு வங்காளி தயாரிப்பாளர் ஒரு படத்துக்கு இசை அமைக்க கூப்பிட்டாரு. மெட்டு ரெடி. பாட்டு போட உக்காந்தா வாத்தியக்காரங்கல்லாம் இருக்காங்க, நம்ம கோரஸ் ஆர்டிஸ்ட் மாத்திரம் வரல. உங்களுக்கே தெரியும், கோரஸ் இல்லையின்னா இந்த எஸ்.ஏ. இல்ல... எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது.. மயக்கமா வருது... இருந்தாலும் சமாளிச்சி என் வாழ்க்கைல முத தடவ கோரஸ் இல்லாம பாட்ட போட்டு முடிச்சேன்...


அப்புறம் வந்திச்சிப்பா சோதனை, பிண்ணனி இசைங்கற பேர்ல.. நீங்களே சொல்லுங்க, பிண்ணனி இசைன்னா என்ன... படத்தோட மெயின் தீமுக்கான மெட்ட 10 பொண்ணுங்க சேந்து லல்லல்லல்லான்னு வாயாலயே ம்யூசிக் கொடுக்கணும்... கடைசி வரைக்கும் பிண்ணனி இசை போட முடியல. இந்த சம்பவத்தால நான் மனதளவில ரொம்ப நொந்து போனேன். ரொம்ப நாள் கழிச்சி இப்பத்தான் மீண்டு வந்திருக்கேன். நான் இல்லாம விக்ரமனும் படம் எடுக்கறத நிறுத்திட்டாரு.

ஆனா இப்ப 5 மெட்டு போட்டு வச்சிருக்கேன். மொத்தம் 5 X 5 = 25 பாட்டாச்சி. விக்ரமனும் இந்த காலகட்டத்துல 5 படம் எடுக்கற அளவு 15 லட்சம் ரெடி பண்ணிட்டாரு... என் கோரஸ் ஆர்டிஸ்டுங்க மட்டும் திரும்பி வரட்டும், அப்புறம் தமிழ்நாடு எங்கும் நம்ம இசைதான்..

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//ஸ்வரங்களை சேமிக்கிறது//
//இன்ஃபாக்ட் அவரு வீட்டுல மளிகை சாமான் வாங்குறப்போ போடற பட்ஜெட்டுல விழற துண்டுலதான் அவரு படமே எடுக்குறாரு//
//பாட்டெல்லாம் நல்லா இருக்கவும், அது என் இசை இல்லன்னு தெளிஞ்சி அவங்களா போயிட்டாங்க...//
//படத்தோட மெயின் தீமுக்கான மெட்ட 10 பொண்ணுங்க சேந்து லல்லல்லல்லான்னு வாயாலயே ம்யூசிக் கொடுக்கணும்... //
// 5 படம் எடுக்கற அளவு 15 லட்சம் ரெடி பண்ணிட்டாரு...//
நகைச்சுவை சும்மா அப்பிடி வருது உங்களுக்கு .ம்...நமக்கு வராவிட்டாலும்..ரசிக்க தெரிகிறது..கலக்குங்க!
 



இப்போ வலைப்பூவில் "நகைச்சுவை வாரம்" போலிருக்கிறது. பலர் தங்களுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ரசித்தேன். இதை அப்படியே ராஜ்குமாருக்கு அனுப்பி வையுங்கள்.
 



This comment has been removed by a blog administrator.
 



Hi mugamoodi,

Super comedy.. Kalakkuriingka?
While reading this essay.. i laughed in every paragraph.. Good.. write like this.
 



முகமூடி, மொதல்ல என்னோட வயித்து வலிக்கு பதில் சொல்லீட்டு அடுத்த பதிவுக்குப் போங்க.
 



ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.... லாலால லால லாலலா...

மறக்க முடியாத கோரஸ் தந்தவர் எஸ்.ஏ!

என்ன ஒன்னு, ரெண்டு வர்த்தக்கி எடயில ஒரு சின்ன gap கெடச்சாக் கூட ஒரு "லாலால" போடாம உடமாட்டாரு!

மத்தபடி, தவில் வாத்யம் கட்டாயம் இருக்கும்படி இசை அமைப்பார்!!

நல்லதொரு கனவைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, எஸ்.ஏ அவர்களுக்கு!!!
 



Vaanathapolae Nagaisuvai Manam padaicha Mugamoodiyee...

Thullatha manamum thullukirathu !!!
 



செம ரவுசுபா!
 



அய்யா முகமூடி,
முகமூடி, வீ. எம்., குழலி, ஞானபீடம் - இந்த நாலு பேரும் பயங்கர லொள்ளு பார்ட்டின்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?
 



இந்த மாதிரி தோன்றதுக்கு 'வயாகரா' மாதிரி ஏதாவது மாத்திரை போட்டுக்கொள்கிறீரா?

ஆமாம் தருமி... இதிலும் குழலி பயங்கர ரவுசு பார்ட்டி.. அவருடைய இந்த பதிவுகளை பார்த்தால் அவரின் நகைச்சுவை உணர்வு தெரியும் ..
 



சூப்பர் தல சூப்பர்.

மொதல்ல ஒரு கட்சி,
இப்போ ஒரு பத்திரிக்கை,
அடுத்தது என்ன ஒரு தொலைக்காட்சி சேனலா??

உங்க கனவு நிஜமாகட்டும்!
கலக்குங்க!
 



This comment has been removed by a blog administrator.
 



//முகமூடி, வீ. எம்., குழலி, ஞானபீடம் - இந்த நாலு பேரும் பயங்கர லொள்ளு பார்ட்டின்னு ///

என்னத்த சொல்றது தருமி , பாம்பின் கால் பாம்பறியும் ..
கத்திய வெச்சா, இல்ல அருவாமனைய வெச்சா கேக்காதீங்க தருமி !
 




முகமூடி- தினமூடி நிருபர் சந்திப்பு

 



//எஸ்.ஏ : ஆமாம்பா, நம்ம விஜயும் ரம்பாவும் நடிச்ச படம். பேர் ஞாபகம் இல்ல.//

என்கிட்டே ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கேட்டுருந்தா படத்தோட பேரைச் சொல்லியிருப்பேன்லெ.

'என்றென்றும் காதல்'

லலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலல்
 



தருமி,
நீங்கள் சின்னவனைச் சேக்கேலயே?
 



நன்றி ஜோ, சிறகுகள், ராகவன், ஜெகதீஸ்வரன், சுதர்சன், வீ.எம், கொழுவி.

பாஸிடிவ்.. இத ராஜ்குமாருக்கு அனுப்பறதா.. அப்புறமா கோரஸா வந்து கும்மாங்குத்து விட மாட்டாங்க..

வளவன், உங்களுக்கு எஸ்.ஏ பிடிக்குமா..

ஞானபீடம் எதுக்கு இப்ப இங்க எஸ்.ஏ.க்கு நன்றின்னு நான் தெரிஞ்சிக்கலாமா..

ஜிகிடி தேவாவ பத்தி எழுதத்தான் நீங்க இருக்கீங்களே.. கேப்டன்னா ஆரு?

தருமி, சின்னவனையும் கொழுவியையும் விட்டுட்டீங்க.. முகமூடிய தப்பா லிஸ்ட்ல சேத்துட்டீங்க.. சத்யராஜ் பாணியில கேக்கணுமின்னா, லொள்ளா, அப்படீன்னு ஒரு இருக்குங்களான்னா.. எங்கங்கண்ணா கிடைக்கும்..

சின்னவன் நல்ல் காபி ;)

துளசியக்கா கரெக்டா பிடிச்சீங்க 'என்றென்றும் காதல்'.. நீங்க ஒரு என் சைக்கிள பிடிங்க போங்க. அந்த படம் பாக்க படம் ரிலீஸான மூணாம் நாள் கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு அவசர அவசரமா போணோம். லேட்டாயிடுச்சின்னு ஏங்க டிக்கெட் இருக்கா, படம் போட்டாச்சான்னு கேட்டப்ப கவுண்டர்ல ஏன் முறைச்சான்னு உள்ள போனப்புறம்தான் தெரிஞ்சது... தியேட்டர்ல மொத்தமே நாங்க 10 பேருதான். அப்புறமா இன்னும் 3 பேரு வந்தாங்க. எல்லாம் ஒரு காலம்.
 



படித்தேன், சிரித்தேன்..நல்லா எழுதுறீங்க..உங்க கற்பனை பத்திரிக்கை பேரும் நல்லா இருக்கு
 



மொதல்ல ஒரு கட்சி,
இப்போ ஒரு பத்திரிக்கை,
அடுத்தது என்ன ஒரு தொலைக்காட்சி சேனலா??

தல, இதுக்கு இன்னா பதிலு?? சொல்லாங்காட்டி உட்ருவோமா?? ப ம க தொண்டனா , கொக்கா..அக்காங்???
 



நன்றி ரவி

வீ.எம். உங்க கேள்விய ஏற்கனவே பார்த்தேன். ஆனா பத்திரிக்கை , தொலைக்காட்சி இதெல்லாம் எனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள். அது ஏற்கனவே என்னோட பேரனுங்க நடத்துறது. என் பேச்சு அங்க எட்டுபடாது. நான் எதாவது சொன்னா கூட 'கம்முனு கெட'ன்னு அதட்டிடுவானுங்க. அதான் உங்களுக்கு ஒன்னும் சொல்ல முடியல.
 



அரசியலில் அனுபவம் முக்கியம்தான்
அதற்காக உங்களுக்கு பேரன்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று சொல்லி
உங்கள் உண்மை வயதை வெளியில் சொல்லிவிடாதீர்கள்.
 



// உங்கள் உண்மை வயதை //

அடடா. அவங்க எல்லாம் என் வளர்ப்பு பேரனுங்கப்பா.. அவங்களுக்கு 45 வயசாயிருக்க சொல்லொதான் நான் தத்தே எடுத்தேன்.
 



இசைக்கருவிகள் ஏதும் இல்லாமலேயே எல்லாப் படங்களுக்கும் க்ளைமாக்ஸ் ஒலிப்பதிவு செய்து கருவிகளின் பயன்பாட்டையும் சேமித்தவர் எங்கள் தங்கத் தலைவர் எஸ் ஏ.

ஐந்து படங்களுக்கு ஐந்து மெட்டா போட்டார்? தவறான தகவல். ஒரே மெட்டில் ஸ்கேலையும் பிட்சையும் மாற்றி ஐந்தாக்கி இருப்பார்.
 



This comment has been removed by a blog administrator.
 



This comment has been removed by a blog administrator.
 



Mugamoodi,

samma kalakkal pathivu :)

You have abundant sense of humour !!!!
 



மரத்தடியில் ஆசிப்மீரான் ஒரு முறை எழுதியிருந்தார் ...

//மற்ற இசைஅமைப்பாளர்கள் மற்றவர்களுடைய மெட்டுக்களைத் தான் திருடுவார்கள்
ஆனால் S.A ராஜ்குமார் தனது மெட்டுக்களையே திருடுவார் //

இவ்வளவு நல்லா எழுதுற நீங்க ஏன் தான் முகமூடி போட்டுக்குறிங்கன்னு தெரில..

என்றும் அன்பகலா
மரவண்டு
 



நன்றி பாலா..

மரவண்டு.. // ஆனால் S.A ராஜ்குமார் தனது மெட்டுக்களையே திருடுவார் // தேனிசை தென்றலுக்கே குரு...

நீங்க ஏன் தான் முகமூடி போட்டுக்குறிங்கன்னு தெரில.. என் முகமூடிக்கு பின்:: ஒரு உண்மைக்கதை
 



இதே ஸ்.ஏ.ராஜ்குமார் தான்
"சினப் பூவே மெல்லப் பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு",
"ஓ பொன் மாங்குயில் சிங்காரமாய்" போன்ற நல்ல பாடல்களையும் தந்தவர்.அப்புறம் என்னாச்சுன்னு தெரியல லாலா..லாலா..லாலா ஆரம்பிச்சிட்டாரு.
 



சரி, உங்க கருத்து ??