<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d3361231228256067100', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

என் முகமூடிக்கு பின்:: ஒரு உண்மைக்கதை


முகமூடி போட்டு எழுதுதுவதென்பது விளையாட்டு முடிவல்ல... என் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களின் அனுபவங்கள் என்னை முகமூடி போட வைத்தன... அவை::


அப்பத்தான் விவரம் தெரிஞ்ச வயசு... திடீர்னு மண்டைக்குள்ள 1000w பல்பு போட்ட உணர்வு... கையும் காலும் பரபரங்குது... சிந்தனை தறிகெட்டு பறக்குது... பக்கத்துல பாத்தா வெள்ளத்தாளு... எழுத ஆரம்பிச்சவந்தேன், 4 கொயர் பேப்பர் தீந்த பெறவுதான் நிறுத்துனேன்... படிச்சா பஞ்செல்லாம் காதிக்ராப்ட்ல துணியா வர்றப்ப எப்படி வெறப்பா இருக்குங்கறத பத்தி ஞானக்கட்டுர... சரின்னு 'கஞ்சிக்கு காதி'ன்னு பேர வச்சி பெரியவங்களுக்கு படிக்க கொடுத்தா, "எலா உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்" னு, எல்லாம் ஒரே பாட்ட பாடுறாங்கலே தவிர படிக்க கூட மாட்டேங்கறாங்க... இதுல எங்க என் காவியத்த விக்கிறது..


வெறுப்பாயிப்போயி சூடா தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல வாங்கி தின்னுகிட்டே எங்கியோ போயிட்டேன்.. என்னமோ கூட்டம் போல... பெரியவர் ஒருத்தரு மத்தில இருக்காரு... கறுப்பும் செவப்பும் மஞ்சளும் கலந்தா மாதிரி அப்பிடி ஒரு கலரு... சுத்தி ஒளிவட்டத்தோட ஏகப்பட்ட ஆளுங்க... ஜால்ரா சத்தம் வேற பெரிசா கேக்குது... எல்லாம் எலக்கியவாதிகளாம்... சரி என்னாதான் பேசுராங்கன்னு பாத்தா, ஏ அப்பா... மத்தி மனுசன் ஏதோ மகான் போலருக்கு...

"தொட்டு பாத்தா புல்லரிக்குது" ன்னு பாட்டா படிக்கிறாரு ஒரு ஒளிவட்டம், "பாத்தாலே பரவசமா இருக்கு" ன்னு கண்ணீர் உடுறாரு இன்னொரு ஒளிவட்டம்... என்னாங்க விசயம்னு பக்கத்துல இருந்த பெரிசுகிட்ட கேட்டேன்... மத்தி மனுசன் பல மூஞ்சி இருக்கறவராம்.. அதுல இலக்கிய மூஞ்சிக்கு பாராட்டு விழாவாம்.. (அவரு என் பொஸ்தக தலைப்பு மாதிரியே சவுண்டு வர்ற மாதிர் ஒரு பொஸ்தகம் எழுதியிருக்காராம். அதுக்கே நான் பெரும படணுமாம்) அப்பதான் பாக்குறேன், கையில இருந்த சுண்டல் தீந்து போச்சி... பட்டாணி கட்ன காயிதத்த பாத்தா நான் எழுதுன 'கஞ்சிக்கு காதி' கையெழுத்து பிரதியோட தாளு..

இந்த சம்பவத்துல என் அறியா மனசுக்கு என்னமோ புரியிர மாதிரி இருந்துச்சி...

அப்பால கொஞ்ச நாள் போனவாட்டி வளருட்டுமா வேணாமான்னு இருந்த மீசய தடவி பாத்துகிட்டு இருந்தேன்... பக்கத்து தெரு தோலனும் மீசக்காரனும் வந்தாய்ங்க... "எலேய், நம்ம பக்கத்து தோட்டத்துகாரன்கிட்ட மாங்கா கேட்டா தரமாட்டேங்கிராண்டா, வாடா போயி நாலு மரத்த வெட்டி நம்ம பவுரு என்னான்னு காமிப்போம்" னாய்ங்க.. "அடப்பாவி, ஏண்டா மரத்த வெட்டுனா பாவம்ல" ன்னேன்... "போடா போக்கத்தவனே, போன வருசம் ஆடியில காத்தடிக்க சொல்ல எத்தன மரம் விழுந்திச்சி அது பாவமா" ன்னானுங்க... "இல்லடா நம்ம சுயநலத்துக்காக இப்படி செய்யலாமா" ன்னேன்.. "ஏன் அன்னிக்கி தண்ணி வரலன்னு கெராமத்துல எல்லாம் ரோடு குறுக்க செவுரு கட்டுல, அது கூடத்தான் சுயநலம். இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா" ன்னான் தோலன்... "சரி போலீஸ் பிடிச்சிகிட்டா"ன்னேன்... "என்னாடா இவன் கேள்வியா கேக்குறான்... போலீஸ்லாம் நம்மள ஒன்னியும் செய்யாது, வாடா வெங்காயம்" னான் மீசக்காரன்... எனக்கு கெளம்பிருச்சி தெகிரியம்...

போயி மரத்த வெட்டலாம்னு ஒரு குத்து கூட குத்தியிருக்க மாட்டோம், தோட்டகாரன் நம்மள புடிச்சி அடி நொங்கெடுத்திட்டான்... போலீஸ்லயும் புடிச்சி கொடுத்திட்டான் (அது சந்தன மரமாம்) போலீஸ்ல வேற "ஏண்டா, தொரக்கி மரம் வெட்ட சொல்லுதோ... பஸ்ஸ வேற எரிக்க ப்ளான் போட்டீயாம் உங்கூட்டாளி சொன்னான்... ஏன் அவ்ளோ தெனவெடுத்தா எல்லா பயலும் அவனவன் கைய கால வெட்டிகிட்டு உங்க பகுர காமிக்க வேண்டியதுதானே" ன்னு சும்மா சாத்தி எடுத்திட்டாய்ங்க.. கொஞ்ச நாள் உள்ள வேற வச்சிட்டாய்ங்க... ரெண்டு நாள் இருக்கும், என்னமோ கோரிக்கையின்னு ஒன்ன வச்சி ஊரே மரத்த வெட்டுது... பஸ் எல்லாம் எரிக்கிறாய்ங்க... அத செய்ய சொன்ன தலைவரு நானிருந்த செயிலுக்குத்தான் வந்தாரு, ஒடனேயே ரிலீஸ் பண்ணிட்டாய்ங்க...

அப்பத்தான் என்ன பாக்க செயிலுக்கு தமிழ் தாத்தா வந்தாரு... "ஏண்டா உனக்கு
இது தேவையா, வேல வெட்டிய பாத்துகிட்டு செவனேன்னு கெடக்க வேண்டியதுதானே" ன்னாரு.. இளரத்தம்லா, சட்டம் பேசினேன்.. "ஏன் தாத்தா, அந்த தலைவருக்கு ஒரு சட்டம், எனக்கொரு சட்டமா, என்ன மட்டும் ஏன் இன்னும் ரிலீஸ் பண்ணல" ன்னேன்... "அட அறிவு கெட்டவனே, அவரு மேல கைய வச்சா, அரசாங்க பஸ்ஸ¤ அம்புட்டும் கண்ணாடி இல்லாமதான் ஓடும், பெறவு செல பஸ்ஸ எரிச்சி வேற புடுவாய்ங்க... அவரையும் ஒன்னயும் சேத்து பேசறியே, உனக்கு என்னா நக்கலா" ன்னாரு... "சரி சாமீன்ல எடுக்கிறேன், இனி பேசாம கெடக்கனும்" னு சொல்லி சாமீன்ல எடுத்தாரு..

ஏழ சொல்லு அம்பலம் ஏறாது... எத சொன்னாலும் ஒசந்த எடத்துல இருந்து ஒரு அடையாளத்தோட சொன்னாத்தான் அல்லாருக்கும் புரியும்னு என் மனசுல
பதிஞ்சது அப்போதான்...

சரின்னு கொஞ்ச நாள் போலீஸ் கண்ணுல தெரியாம திரியலாம்னு தலய சுத்தமா கெராப்பு வெட்டிகிட்டேன்... மறுநா இஸ்கூல் போனா ஒரே கேலி, "இன்னாடா கரையான் புத்துல தலய கொடுத்திட்டியா, இன்னா மேட்டரு" ன்னாய்ங்க... "இல்லடா மயிரு வெட்டம்போது தூங்கிட்டேன்" னேன்... அதுக்கும் சோம்பேறி, தத்திப்பயன்னு ஒரே கிண்டலு... என்னய இருக்கரதிலயே ரொம்ப கலாய்ச்சது ரசினி சங்கரு, ரசினி செந்திலு ரெண்டு பேரும்தான்... (அவிங்க ரசினி ரசிகருங்க... அதுனால பேரு அப்படி)... நாலு நாளு கழிச்சி பாத்தா ரசினி அமெரிக்கல இருந்து வாராரு... ஏர்போர்ட்ல ஒரே அதகளம்... என்னமோ முக்கியமான பேட்டி கொடுக்கிறாராம்... டி.வி பொட்டில காமிக்கிராங்க... அவுரு பேசுன விசயத்த விட என்ன ரொம்ப பாதிச்சது ரசினி கிராப்புதான்... அவரும் அமெரிக்கால இஸ்டைல் சலூன்ல தூங்கிட்டாராம், நம்ம கெராப்பு மாதிரியே இருந்திச்சி.... மறுக்கா இஸ்கோல்லதான் கூத்தே.. என்ன என்னன்னெல்லாம் சொன்னாங்க அந்த சங்கரும், செந்திலும் அவிங்க ரெண்டு பேரும் எங்க பார்பரு கிட்ட எஸ்ட்ரா பணம் வேற கொடுத்து என்னய மாதிரியே முடி வெட்டிகிட்டு வந்தாய்ங்க... இப்ப என்ன கேலி செஞ்ச இஸ்கூலே வேற மாதிரி பேசுது.. லேட்டஸ்ட் பேஷினாம்... எனக்கு எப்பிடி இருக்கும் பாருங்க...

அது ஆச்சி ரொம்ப வருசம்... இப்ப எங்க வூட்ட மாத்தி கட்ட ஆரம்பிச்சோம்... வூட்டுக்கு பெயின்ட் அடிக்கற வேல பாக்கி. "அல்லாரும் எளுதராங்களே, நாமலும் பிளாகு எளுதனா என்னா"ன்னு ரோசனையில இருந்தேன்... மேஸ்திரி வந்தாரு "என்னாங்க பெட்ரூமுக்கு வேற கலரு, கிச்சனுக்கு வேற கலரு, மத்த ரூம்புக்கெல்லாம் வேற கலருன்னு சொல்லியிருக்கீங்களாமே, பசங்க சொன்னாங்க"ன்னாரு... "அறிவியல் பூர்வமா என்னாமோ கண்டுபிடிச்சிருக்காங்கலாம் மேஸ்திரி... வர்ணங்களுக்கு எல்லாம் ஏதோ பவுரு இருக்காம்... அதுவுமில்லாம, வர்ண வேறுபாடு இருந்தா சுவாரசியமாத்தானே இருக்கும்"னேன்... "அதுவும் சர்தான்"ன்னாரு மேஸ்திரி... "அப்பால நம்ம பெயிண்டருங்க வருவாங்க... வரப்போ வர்ணங்கள கொண்டாந்துருவாங்க"ன்னுட்டு போய்ட்டாரு... பெயிண்டருங்க வந்து வேலய ஆரம்பிச்சாய்ங்க... அப்பதான் ஆபிஸ்லருந்து வந்த அப்பா, "எலேய் இவனே, நம்ம மணி (எங்க நாய் பேருதான்) நாலு நாளா தன்னத்தானே நக்கிக்கிட்டு கெடக்கான் பாரு, நம்ம வெட்டுகிட்ட அத என்னான்னு காட்டி கூட்டியா"ன்னாங்க... "சரிங்கப்பா"ன்னு சொல்லி திரும்பி பாத்தா அந்த பெயின்டருங்க, ரெண்டு சீவன்கள் அந்த ரூம்புல இருக்கறதோ பேசுறதோ எதுவும் ஒணர்ந்ததா தெரியாம பெயின்ட் அடிக்கிறாய்ங்க....

அடுத்த நாள் யாரோ வர்ண வேறுபாடு வேணும், நாய் தன்னத்தானே நக்கிக்கிது அப்டின்னெல்லாம் சொல்லிட்டாருன்னு ஊரே அமளி துமளியாச்சி. நாய் தன்னத்தானே நக்கத்தானே செய்யும், அது ஒரு பெரிய விசயமான்னு எனக்கு ஒன்னும் வெளங்கல.

நடந்த சம்பவமெல்லாம் நாபகத்துக்கு வந்திச்சி... ஒரே கொயப்பம்... அய்யன் சொல்றபடி பாத்தா, ஆரு என்னா சொன்னாலும் அதுல எவ்ளோ மெய்யி எவ்ளோ பொய்யின்னுதான ஒலகம் பாக்கணும். ஆனா நடக்கற விசயத்த அல்லாம் பாத்தா ஆருங்கரத பொருத்து விசயம் வேற வேற மாதிரி அர்த்தம் ஆவுதேன்னு ஒரே கன்பூசன்... இதுல புளாகு எழுதற பேர்ல வேற ஒரு குயப்பம்..

நம்ம தமிழ் தாத்தாகிட்ட ஓடினேன்... அவரு சொன்னாரு:: கவிஞரு அன்னிக்கே
சொன்னபடி, இருக்கற இடத்துல இருந்தாதான் ஒலகம் ஒன்ன மதிக்கும், இல்லாகாட்டி ஒன்னயே அது மிதிக்கும்... அதுனால ஒரே விசயத்துக்கு, சொல்ற ஆளோட தராதரத்த வச்சி வேற வேற அர்த்தத்துல பாக்கும் இந்த ஒலகம்... அதனால நீ ஆருன்னு சொன்னா பக்கத்து தெருலயாவது வெளங்கிக்கிற அளவு பெரியா ஆளா ஆனப்புறம் ஒன்ன பத்தி யோசிக்கலாம்.. அதுவரக்கும் சொல்றத மட்டும் ஒன் வேலயா வச்சிக்க... மூஞ்சிய காமிக்கனுமா, முகமூடி போடனுமன்றது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லன்னு...

சரின்னு முகமூடிங்கற பேர்ல எளுத ஆரம்பிச்சேன்.... இதேன் நம்ம முகமூடிக்கு பின்னாடி உள்ள கத.


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


As expected Dharmapuri Bus firing incident was not mantioned.
-Nambi
 நம்பி... நீங்க நினைப்பதை எல்லாம் என்னால் எழுத முடியாததற்கு வருந்துகிறேன்...

நான் அதிமுக aka ஜெயலலிதாவுக்கு ஆதரவாளன், அதனால்தான் அவரை தாக்கி எழுதுவதில்லை என்பது உங்கள் எண்ணமென்றால் அது தவறு... என் மற்ற பதிவுகளை முழுவதுமாக படித்துப்பாருங்கள்... நான் ஏற்கனவே இதுபற்றி சொல்லியும் இருக்கிறேன்.. எனக்கு திமுக, அதிமுக, பாமக மற்ற எல்லா கட்சிகளும் ஒன்றுதான்... எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்... ஆகவே உணர்ச்சி வசப்படாதீர்கள்...
 அ.இ.(?)அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளர் எங்கள் முகமூடி அவர்கள் பல்லாண்டு வாழ்க!
 எங்கள் நிறுவனத்தலைவரை வேறு ஒரு கட்சியோடு சம்பந்தப்படுத்தி பேசும் (ஆள்மாறாட்ட போலி பெயர்) டுண்டுவை ப.ம.க வன்மையாக கண்டிக்கிறது
 //எனக்கு திமுக, அதிமுக, பாமக மற்ற எல்லா கட்சிகளும் ஒன்றுதான்... எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்... ஆகவே உணர்ச்சி வசப்படாதீர்கள்...//


ஆனாலும் முகமூடிக்கு கண்ணும் மூடிக்கொள்ளும் போல - காங்கிரஸும், பாரதீய ஜனதாவும் அரசாங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டு நடத்திய இனப்படுகொலைகள் ஏனோ நினைவுக்கு வருவதில்லை.

முகமூடி, இவற்றைக் கொஞ்சம் பார்த்து உங்கள் அறிவாளித்தனத்தைக் காட்டுங்கள்!

பாரதீய ஜனதா கட்சி மற்றும் அரசு நடத்திய குஜராத் இனப்படுகொலை:

http://www.pucl.org/Topics/Religion-communalism/2002/gujarat-nhrc-submission.htm

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1974980.stm

காங்கிரஸ் கட்சி மற்றும் அரசு நடத்திய சீக்கிய இனப் படுகொலை:

http://in.rediff.com/news/2004/nov/01kanch.htm

http://www.witness84.com/massacre/


ஒருவேளை தேசியக் கட்சிகள் இவற்றை நாட்டு நலனுக்காகச் செய்து வருவதாகச் சொல்லுவீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி
 நல்லப் பதிவு முகமூடி அவர்களே. நீங்கள் என்ன உங்களை மறைத்து கொண்டு மற்றவர்கள் ப்ளாக்கர் பெயர் மற்றும் என்ணின் கீழே சவுண்ட் கொடுப்பவரா? ஏன் கவலை? நாங்கள் அசல் யார் நகல் யார் என்பதைப் புரிந்து கொள்வோம்.

நீங்கள் இங்கு எழுதியதையே பேராசிரியர் கல்கி அவர்கள் தன் "ஏட்டிக்கு போட்டி" புத்தகத்தில் எழுதி விட்டார். அவர் எழுதுகிறார்: "கல்கி என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், பெரிய நீதிபதியாக இருக்கலாம், பெரிய தலைவராகவும் இருக்கலாம்".

ஆனால் நான்? அது என் முடிவு. முதலிலிருந்தே நான் என்னை அடையாளம் காட்டிக் கொண்டவன். எதிர்ப்புகளை எதிர்பார்த்தே "என் வெளிப்படையான எண்ணங்களை" எழுதியவன். அதனால் பல பிரச்சினைகளை சந்திப்பவன். நான் கூறுகிறேன். நீங்கள் ஏன் அவ்வாறு செய்திர்ர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் நல்ல பணி. நீங்கள் கண்டறிந்தவற்றை பயப்படாமல் எழுதுங்கள்.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலெடுக்கப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
 இந்த பதிவில் நடுநிலைமை தவறுவதை சுட்டிக்காட்டிய நம்பி மற்றும் சங்கர பாண்டி அவர்களுக்கு நன்றி !! அடுத்த முறையிலிருந்து தாக்கும் பதிவு தயாரித்தால் இந்த விஷயங்களை மனதில் வைக்கிறேன்...

கருணாநிதியை 1 கரண்டி தாக்கினால் அப்போது அவர் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸையோ (1 கரண்டி), பாஜக வையோ (2-3 கரண்டி) தாக்க வேண்டும்

ஜெயலலிதாவை 2 கரண்டி தாக்கினால் கருணாநிதியை 1 கரண்டி தாக்கலாம்

பாமகவை தாக்கும்போது எல்லா கட்சியையும் தாக்க வேண்டும்/தாக்க கூடாது (அப்பொழுது/எதிர்காலத்தில் அவர்கள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது யாருக்கு தெரியும்)

திருமா, வைகோ, ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி, அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோர் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட தூயவர்கள்.

மேலும் ஏதாவது நான் மனதில் வைக்க வேண்டுமென யாராவது கருதினால் தயவு செய்து தெரிவிக்கவும்
 வருகைக்கு நன்றி டோண்டு அவர்களே... என் முகமூடிக்கு காரணம் என்ன என்பதான் இந்த பதிவில் முக்கியமாக சொல்ல வந்தது... ஆனால் விஷயம் வேறுமாதிரியும் கிரகிக்கப்ப்டுகிறது... நான் எழுதும்போது நினைத்தே பார்க்காத விஷயமெல்லாம் பின்னூட்டங்களின் மூலம் தெரிய வருகிறது... மாற்றுசிந்தனை நல்ல விஷயம்தான்...

(காப்பி பேஸ்ட் செய்பவர் வசதிக்காக:: டோண்டுக்கு நன்றி சொல்வதன் மூலம் தெரிகிறது முகமூடியின் சுயரூபம்... )
 டோண்டுக்கு நன்றி சொல்வதன் மூலம் தெரிகிறது முகமூடியின் சுயரூபம்
 தலைவரே

இதயே ஒரு புத்தகமா போடுங்க.. உங்களுக்கு ஒரு விழா எடுத்துடுவோம்..(எனக்கு வசூலுக்கு வழியாச்சு..சதவீத கணக்கு வேணா போட்டுக்கலாம்)

அமெரிக்கா வாங்க இங்க எதாவது ஒரு தமிழ் சங்கதுல வரவேற்பு தந்து எதாவது ஒரு ஊரு மேயர் ஊர் சாவியையும் தருவாரு..

புத்தகத்தை (இந்த கதை மட்டுமே இருக்கும் புத்தக்கத்தை ) நிறைய பேருடைய செய்திகளைப் போட்டு ஒரு 352 பக்க மாக ஆக்கி 80 ரூபாய்க்கு வித்துடலாம். (நாளைக்கு தமிழ் சேவை செய்யலைன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேச முடியாது பாருங்க).

நாம ஆட்சிக்கு வர சொல்ல, அரசுடைமை ஆக்கிடுவொம்.. உங்க குடும்பம் 7 தலைமுறைக்கு வசதியா இருக்கும்..(எல்ல நூலகத்திலயும் 2 வருஷத்துக்கு ஒரு முறை 10 புத்தகம் வாங்குவாங்க..)

அன்புடன்

தலைவர்
ப.ம. க (வெளினாடு வாழ் இந்தியர் அணி)
 I thought mugamodi is already in US. ? His profile says he is from Los Angeles ?
"ithvum poi yaa ?"
 // தலைவர் ப.ம.க (வெளினாடு வாழ் இந்தியர் அணி) // விஷி... நான் பயந்ததுபோலவே ஆகிப்போச்சேப்பா... தலைவர் பதவியெல்லாம் பொதுக்குழு (நானும் என் மகனும்) கூடி கொடுக்கறது... தன்னத்தானே தலைவர் ஆக்கிகிறதுக்கு நாம என்ன அந்த மாதிரி கட்சியா?? இது சரிப்பட்டு வராது...

உளவுத்துறை அளித்த அறிக்கையின் படி என்னை மட்டம் தட்ட வெளிநாட்டு சக்தி ஒன்றுடன் கூட்டு சேர்ந்து விஷி திட்டமிடுவதாக ப.ம.க நடத்தும் கல்லூரியின் முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆகவே விஷியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்க பரிந்துரைக்கிறேன்... (இருக்கறதே ஒரு உறுப்பினர்தான். அவரையும் எதுக்கு கட்சியை விட்டு நீக்கிவிட்டு... 3 நாள் கழிச்சி உங்க மன்னிப்பு கடிதத்த பொதுக்குழு ஏத்துகிச்சின்னு அறிக்கை விடுறேன்... திரும்பியும் சேந்துகுங்க விஷி)

ஆனாலும் உங்க வசூல் ஐடியா எல்லாம் சூப்பராத்தான் இருக்கு... ஹி.ஹி..

***

ஆனந்த் சுசாமியின் லேப்டாப் பொன்ன பொய்யை வைத்து விஷி பொய்யறிக்கை விட்டுவிட்டார்... முகமூடி இது வரை ஓட்டுக்காக தவிர வேறெதற்கும் பொய் சொன்னதில்லை என்பதை ப.ம.க வின் லட்சோப லட்சம் தொண்டர்கள் ஆணையாக இந்நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.
 முகததை மூடி போட்டது போல இடத்தையும் மூடி போட்டு கொண்டீற்களோ என்று நினைத்தேன்..
நம்ப ஊர்லதான் இருக்கீங்க... அடுத்த பொது குழுவில் உங்க தோட்டத்தில் பார்க்கிறேன்...
( இன்னாபா இன்னிக்கு இவ்வளவு வெயில் அடிக்குது LAல.. வெளிய முகம் (!??) காட்ட முடியலை ! )
 ஆனந்த் காலையில தன்மையா மிக அருமையா இருந்தது வெயில்... அத வெளிச்சம்னுதான் சொல்லனும்.மதியம்தான் கொஞ்சம் அதிகம்... ஆனாலும் சூடு ஒன்னும் அதிகமா தெரியல... லாங் வீக்கெண்டுக்கு ஏத்த தட்பவெப்பம்தான்... சரி என்ன திட்டம் நீண்ட விடுமுறைக்கு... (நீங்க வட கலிபோர்னியான்ல நினைச்சேன்)
 பெருசா ஒன்னும் இல்லை . ஒரு லொக்கல் க்ரிக்கட் மேட்ச் இருக்கு.. இந்த முறையாவது July 4th fireworks ஒழுங்கா பார்க்கணும்..
நீங க எப்படி?
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link