சுதந்திர தினம்

ஆலையில்லா ஊருக்கு
இலுப்பை சர்க்கரை
அரசியல் வியாதிகளிடமிருந்தும்
அதிகார வர்க்கத்திடமிருந்தும்
நிஜ சுதந்திரம் கிடைக்கும் வரை
ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்ததை
அனுபவித்து கொண்டாடுவோம்
ஜெய் ஹிந்த்
****
குண்டு துளைக்காத காரில் வந்து
குண்டு துளைக்காத கூண்டில் நின்று
கறுப்பு பூனையினர் பாதுகாப்பு அரணில்
பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவார்.
பொதுமக்களிடம் பேச இவ்வருடமும் அனுமதி இல்லை...
மக்கள்ஸ் கருத்து ::
ஜெயலலிதா காலை 8.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சென்னை நகரில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 800 பேர் போலீசாரிடம் சிக்கினர் என்கிறது தினம்லர் செய்தி.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்ததும் இவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கலாம்... கிடைக்கும். அவர்களுக்கும் நமது அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
தனியொருவனுக் கிங்குணவில்லையேல்
இச் சகத்தினை அழித்திடுவோமென்றனர் அன்று
தனியொருவளின் சுதந்திரதினக் கூத்திற்கு
இச் சகத்தினை சிறை பிடித்தனர் இன்று :)
நாடு தன் சுதந்திரத்தை
நினைவுகூர
தம் சுதந்திரத்தைப்
பணயம் வைத்தத்
தியாகிகள் வாழ்க!
இப்பொ இங்கிருந்து ஜூட் :)
சரி, உங்க கருத்து ??