<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட...


நீங்கள் ஒரு தனி மனிதரோ, இயக்கமோ, நம்பிக்கையோ, கொள்கையோ "விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட" உயரிய விஷயமாக கருதினால்


எச்சரிக்கை ::

நீங்கள் புதியதாக ஒரு விக்கிரகத்தை, ஒரு பொய்க்கடவுளை கண்டுபிடித்திருக்கிறீர்கள்...

நன்றி:: Philocrites

விரைவில் வரவிருக்கும் "விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்" தொடர்பதிவுக்கு ஒரு முன்னோட்டம்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


அந்த விக்கிரகம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டதா?
ஆம் என்பது விடையானால் அது என்னுடைய பூஜையறையில் இருந்து எடுக்கப் பட்டது!
இல்லை என்று விடை வருமானால் அதுவும் என் பூஜை அறையில் இருந்ததுதான்.

அப்பாடா, எப்படியோ ஒரு விக்கிரகம் கிடைக்க வழி இருக்கு:-))))
 



யக்கா... தங்கமா?? "இந்த" விக்கிரகம் களிமண்ணால் செய்யப்பட்டது.... இந்த விக்கிரகங்கள வீட்டுக்கு இல்ல ஊர் பக்கமே வரவிடாதீங்க...
 



சிக்கி முக்கிக் கற்கள், சிவவகாசி சமாச்சாரங்கள் எல்லாம் முகமூடிகிட்ட நிறைய ஸ்டாக் இருக்கு போல! கொளுத்திப் போட்டுக்கிட்டே போறதுன்னு முடிவு பண்ணிட்டாப்புல இருக்கு.

சரி, வரும் நாட்கள்ல பரபரப்புக்குப் பஞ்சம் இல்லைங்கறீங்க.. நாங்க பதிவு எதுவும் பதிவே பண்ணாம உங்க களத்துல ஆடியன்ஸா வந்துட்றோம்..
 



//நீங்கள் புதியதாக ஒரு விக்கிரகத்தை, ஒரு பொய்க்கடவுளை கண்டுபிடித்திருக்கிறீர்கள்...//

மிகச் சரி ஆனால் ஒரே அளவு கோலை எல்லாவற்றிற்கும் கடைபிடித்தால் விமர்சனம் பாராட்டுக்குறியது, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகோல் என்னும் போது தான் சார்ந்திருக்கும் சாதி முதல் அனைத்தும் விமர்சிக்கப்படும்.

நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரே அளவுகோல் கடைபிடிப்பீர் என நம்பினால்! மன்னிக்கவும் நான் அப்படி உங்களை நம்பவில்லை
 



முகமூடிகளுக்கு அப்பாற்பட்ட விக்கிரகமா இல்லை விமர்சனமா
இல்லை விக்கிரகமே ஒரு முகமூடியா
 



'நச்'சுன்னு சொன்னீங்க குழலி.. சூப்பரா சொன்னீங்க குழலி.. அருமையா சொன்னீங்க குழலி.. அட.. இந்த மாதிரி கருத்தெல்லாம் இப்படி அடுத்தவங்க பதிவிலே தான் சொல்ல முடியும். நம்ம பதிவிலேயே சொல்லிக்க முடியாதே அப்படீன்னு முடிவு பண்ணிட்டு வந்து அருமையா சொல்லிருக்கீங்க குழலி.. 'நச்'சுன்னு சொல்லிருக்கீங்க குழலி.. சூப்பரா சொன்னீங்க குழலி..
 



மாயவரத்தான், பிராமன எதிர்ப்பு என்று எத்தனை நாள் ஜல்லியடிப்பது என்று பதிவு போட்டுக் கொண்டே மரம்வெட்டி என ஜல்லியடிப்பது தான் நடுநிலை என நினைக்கின்றீரோ... நீங்கள் வாழ்க உங்கள் நடுநிலைமை, மொழியஒ வைத்து கலியன் என்று பெயரில் கலைஞரை விமர்சித்துக் கொண்டே மத வெறியை தூண்டும் பாஜகவையும் அத்வானியையும் பற்றி எழுதாமல் இருப்பது தான் நடு நிலைமை என எண்ணுகின்றீரோ, சாதி வெறி கட்சிகள் என கூறிக்கொண்டே இணையத்தில் ஒரு தலைவரின் வெளிநாட்டு பயனத்தை கிண்டலடிப்பது ஆனால் அத்வானியின் பாகிஸ்தான் பயணத்தைப்பற்றி எழுதாமல் (எனக்கு தெரிந்தவரை இவர் எழுதவில்லை, அப்படி எழுதியிருந்தால் சுட்டி தரவும், இந்த கருத்தை திரும்ப பெற்று கொள்கின்றேன்) இருப்பது தான் நடுநிலைமையோ, மற்ற கட்சிகளின் வ்ரிசு அரசியல் பற்றி எழுதிவிட்டு ஜெ.வின் மன்னார்குடி கும்பலைப் பற்றி எழுதாமல் இருப்பது தான் நடுநிலைமையோ...

நல்லா இருக்கு உங்க நடு நிலைமை...

என்னை பொறுத்தவரை ஒரே நிலைமைதான் பாமகவின் சில விடயங்களை ஆதரித்தால் அதே வேலையை வேறு கட்சி செய்யும் போது எதிர்க்க மாட்டேன் தேவையின்றி வம்பிழுத்தால் ஒழிய...
 



வருகை தந்த அனைவருக்கும் நன்றி...

மாயவரத்தான்... குழலி என்னை நம்பவில்லை என்கிறார்.. அது சரிதானே... அவரின் நம்பிக்கைக்கான வரைமுறைகளே வேறு... அந்த மாதிரி நடக்க நம்மால ஆகாதப்பா...
 



குழலி உங்கள் பார்வையில் செக்கூலரிஸ்ட் என்றால் என்ன என்று சொல்லியிருக்கிறீர்கள்... நன்றி... அதற்கான உங்கள் அலசல் குறித்து என் கருத்துக்கள் சில... (என்ன சொல்லி என்ன, குழலி ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்து மனச மூடிட்டார்... அவர்கிட்ட சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு நான் உங்கள பத்தி ஏற்கனவே முடிவுக்கு வரமாட்டேன்...)

பிராமண எதிர்ப்பு... அத எழுதிய சூழ்நிலை குறித்து அதிலேயே சொல்லி இருக்கேன்... ஜாதியை தூக்கிக்கொண்டு அலையும் சிலர் (அதாவது நீங்க 'அவங்க'ன்னு குற்றம் சொல்றீங்களே அவங்கள சொல்லல நான்... 'அவங்கள எதிர்க்கறோம்'ன்னு சொல்லிகிட்டு திரியும் ஜாதியை சேர்ந்தவர்கள்... உங்க பார்வையில் செக்கூலரிஸ்ட் (அ) சமுதாய முன்னேற்றவாதிகள்) பதிவுக்கு சம்பந்தமே இல்லாத நிலையிலும், என் பதிவில் வந்து ஒரே பாட்ட பாடிகிட்டு இருந்தாங்க... அந்த சலிப்பில் எழுதுன கட்டுரை அது... சரி பார்ப்பன எதிர்ப்புக்கும் மரம் வெட்டிக்கும் என்ன சம்பந்தம் நான் பாமக மரம் வெட்டியதைத்தானே சொன்னேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி மரம்வெட்டினார்கள் என்றா சொன்னேன்... பாமக தான் பாட்டாளிகளின் கட்சி... ஒரு குறிப்பிட்ட ஜாதி வர்ணம் பூசுற வேலை வேணாம்னு அய்யா சொல்லியிருக்காரே...

முப்பது வருசமா செக்கு மாடு மாதிரி சுத்தி வந்ததுக்கு கா¨ளை மாடு மாதிரி பாய்ச்சல் காட்டியிருந்தா தமிழகம் எங்கியோ போயிருக்கும்னு கலியன பத்தின என் ஆதங்கத்த சொன்னா, இவன திட்டினியா அவன திட்டினியா ஏன் இவர மட்டும் திட்டணும்னு ஒரு கேள்வி... கலைஞரை விமர்சனம் செய்யும் போதெல்லாம் அத்வானியையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று என்ன குழந்தைத்தனமான சிந்தனை... மேலும் திமுக பாஜக கூட்டணியில் இருந்த போது திமுக மதவாதிகளின் கூட்டணி கட்சி இல்லையா... என்ன குழலி உங்களுக்கும் மூளைச்சலவையா....

அத்வானி பாகிஸ்தான் போறாராம் அவர்கிட்ட நேத்துதான் பேசினேன் என்று யாராவது பதிவு எழுதும்போது அதை பற்றி நான் பதிவு எழுதலாம்... திருமா வெளிநாடு செல்கிறார் என்ற ஒரு பதிவு வந்தபோது, நிறைய பதிவுகளை கிண்டலடித்து நிறைய பதிவுகள் வருவதை போலவே, லூஸ்மோகன் கோயம்பேடு செல்கிறார் என்று பதிந்தேன்... அதில் திருமாவை கேவலப்படுத்தும் நோக்கம் எள்ளளவும் இல்லை. திருமாவை பற்றிய பதிவை கிண்டல் என்றவுடன் பக்தர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது... லூஸ் மோகன் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பெயர்.. அந்த பெயர் கொண்டவரை எழுதினால் அது என்ன அவ்வளவு கேவலமா...

மேலும் தினகரனின் கும்பல் பண்ணும் விஷயத்தை சொல்லாமல் டாக்டரின் வாரிசு அரசியலை விமர்சிக்கிறோம் என்கிறீர்கள்... உபிசவின் (ஒரே) கொள்கையை நாடறியும்... ஆனால் நானோ என் குடும்பமோ பதவிக்கு ஆசைப்பட்டால் என்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று டாக்டர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டு ஒரு உயரத்துக்கு போனவுடன் வசதியாக ப்ளேட்டை மாற்றுவதுதான் இங்கே விமர்சனம்... சவுக்கு இருக்கு இங்கே, டாக்டர் அய்யா எங்கே... உங்கள் அய்யாவை மீடியா விமர்சனம் செய்வதற்கு ஒரே காரணம் அவர் உளறல்கள் மட்டுமே அவர் பாட்டுக்கு தன் மனம் போன படி அரசியல் செய்யட்டும் எவனும் கேக்கப்போவதில்லை... மீடியாவை கண்ட இடம் எல்லாம் சாவுக்கோழி மாதிரி கத்திவிட்டு அப்புறம் தன்னிஷ்டத்துக்கு பொதுக்குழுல அழுதாங்க அதான் இப்படி பண்ணிணோம்னு சர்க்கஸ் பண்றது... முதல்ல நாவடக்க அரசியல் செய்ய சொல்லுங்க...

மேலும் கூவம் நாறுது, அதனாலதான் கொசு உற்பத்தி ஆகுது இதுக்கு எதுனா பண்ணுங்கன்னு சொன்னா, உடனே காவேரில தண்ணி வரமாட்டேங்குதே அத பத்தி எழுதினியா, அதுக்கு காரணம் இதுவா இல்ல அதுவான்னு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சி என் மேல பாயறதுக்கு பதிலா அத நீங்க செய்யலாமே... யாருக்கும் அதில் எந்த ஆட்சேபணை இல்லை...
 



முகமூடி முதலில் உங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி

//திமுக பாஜக கூட்டணியில் இருந்த போது திமுக மதவாதிகளின் கூட்டணி கட்சி இல்லையா... //
நான் சொன்னதில்லை மதவாத கூட்டணி இல்லையென்று, இந்த கட்சி அந்த கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளும் கூட்டணி மாறுகின்றன, என்னமோ பாமக மட்டுமே கூட்டணி மாறுகின்ற மாதிரி பேசுவது தான் எனக்கு புரியவில்லை, கேட்டால் மருத்துவர் அப்படி சொன்னாரே இப்படி சொன்னாரே (ஆக மொத்தத்துல அவரே இத்தனை விளக்கம் கொடுத்திருக்க மாட்டார்...) என பேச்சு, அரசியல்வாதிகளிலிருந்து நடிகர்கள் வரை எல்லோருமே வேண்டுமென்றால் ஒரு மாதிரியும் வேண்டாமென்றால் இன்னொரு மாதிரியும் தான் பேசுகின்றனர்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் பாஜகவின் தீவிர ஆதரவாளனாக இருந்தேன் என்னமோ பாஜக தான் இந்திய தேசத்தையே காக்க வந்த மாதிரி, சோனியா அரசியலில் வந்த போது கடுமையான கோபம் எனக்கு, தற்போது என் சிந்தனைகள் மாறவில்லையா! ஐந்து ஆண்டுகளுக்கு முன் சரியென்ற கோட்பாடெல்லாம் தற்போது எனக்கு தவறாக தெரிகின்றது, தவறு என்று நினைத்ததெல்லாம் தற்போது சரியாக தெரிகின்றது. நான் என்ன பாமகவும் மருத்துவரும் தான் உலகின் தலைசிறந்த கட்சி மற்றும் தலைவர் என்றா சொல்கின்றேன், மற்றவர்களுக்கு கடைபிடிக்கும் அதே அளவுகோள் ஏன் இவர்களுக்கு இல்லை என்பது தான் என் ஆதங்கம்...

//திருமாவை பற்றிய பதிவை கிண்டல் என்றவுடன் பக்தர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது... லூஸ் மோகன் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பெயர்.. அந்த பெயர் கொண்டவரை எழுதினால் அது என்ன அவ்வளவு கேவலமா...
//
உங்கள் வாதத் திறமை நன்றாக தெரிகின்றது, எப்படி எழுதப்பட்ட பதிவு என்று படித்த அனைவருக்கும் (உங்களையும் சேர்த்து தான் சொல்கின்றேன்) தெரியும்.

//ஆனால் நானோ என் குடும்பமோ பதவிக்கு ஆசைப்பட்டால் என்னை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று டாக்டர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டு ஒரு உயரத்துக்கு போனவுடன் வசதியாக ப்ளேட்டை மாற்றுவதுதான் இங்கே விமர்சனம்... //
நல்லா தான் பேசுகின்றீர், இதே அளவுகோல்தான் மற்றவர்களுக்கும் கடைபிடிக்கின்றீரா?? ஊடகங்களும் கடைபிடிக்கின்றதா? இல்லையே

//மீடியாவை கண்ட இடம் எல்லாம் சாவுக்கோழி மாதிரி கத்திவிட்டு //
ஊடகங்கள் என்ன நடுநிலையாகவா நடக்கின்றன, ஒரு நடிக்கரைப்பற்றி ஆஃப் த ரெக்கார்டாக பேசியதை (எல்லா அரசியல்வாதிகளும்,நடிகர்களும் ஆஃப் த ரெக்கார்டாக பேசுவது சாதரணமான ஒன்று, பத்திரிக்கை தர்மப்படி அது பத்திரிக்கையில் வெளிவராது) பதிப்பித்தது தான் தினமலரின் பத்திரிக்கை தர்மம், அது மட்டுமின்றி பொய் தகவல்களை காழ்ப்புணர்ச்சியோடு அள்ளிவிட்டுக்கொண்டு திரியும் ஊடகங்களை அள்ளி அணைக்க சொல்கிண்றீரா??

//மேலும் கூவம் நாறுது, அதனாலதான் கொசு உற்பத்தி ஆகுது இதுக்கு எதுனா பண்ணுங்கன்னு சொன்னா, உடனே காவேரில தண்ணி வரமாட்டேங்குதே அத பத்தி எழுதினியா,//
நல்லாதான் உதாரணம் தரீங்க, ஆனா தப்பான உதாரணம் தருகின்றீரே, கூவம் நாறுதுனு நூறு தடவை புலம்புபவர்கள் ஒரே ஒரு தடவையாவது பக்கத்தில் ஓடுகின்ற அடையாறும் நாறுகின்றதே என்றீரா, பக்கத்தில் ஓடுகின்ற சாக்கடை நாறுகின்றதே என்றீரா? இல்லையே, என்னமோ கொசு உற்பத்திக்கு காரணமே கூவம் மட்டும்தான் மற்றதெல்லாம் பன்னீர் ஓடுவது போலத்தான் எழுதுகின்றனர்...

//அதுவான்னு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சி என் மேல பாயறதுக்கு பதிலா அத நீங்க செய்யலாமே... யாருக்கும் அதில் எந்த ஆட்சேபணை இல்லை...
//
தினமலர் மீது பாய காரணமே அது நடு நிலை நாளிதழ் என்று சொல்லிக்கொண்டு திமுக வையும் பாமகவையும் மதிமுக வையும் திராவிட கொள்கைகளையும் கம்யூனிஸ்ட்களையும் தாக்கி எழுதுவது தான் அதே போலதான் நடுநிலைமையாக எழுதுவது போலவும் செக்கியூலரிஸ்ட் என்று புலம்பிக்கொண்டும் ஒரு குறிப்பிட்ட சில விடயங்களை தாக்கிக் கொண்டும் எழுதும்போது தான் எதிர்வினை தரவேண்டியதுள்ளது, நான் பாமக,திமுக கட்சிகளையும் சில கருத்துகளயும் சில இயம்களையும் எதிர்த்து எழுதுவேன், நீங்கள் நம்பும் மற்றதையெல்லாம் எழுதமாட்டேன்சொல்லிவிடுங்கள் பிறகு ஏன் உங்களுக்கு எதிர்வினை தரப்போகின்றோம், நமது எம்ஜியார்,முரசொலி, சங்கொலி பத்திரிக்கைகள் போன்று என படித்து ரசித்துவிட்டி போய் கொண்டே இருப்போம்
 



குழலி,

நீங்கள் பா.ம.க வின் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்த அளவுக்கு, அவர்களை ஊடகங்கள் பொய்யாக குற்றம் சாட்டுகிறது என்று நியாயம் கற்பித்த அளவுக்கு பாஜகவை ஆதரித்து எழுதவில்லை... அப்பொழுது நீங்கள் நடுநிலைவாதி இல்லையா...

கூவத்தை பற்றி சொல்லும்போதெல்லாம், கருத்து சொல்ல வருபவர்கள் "ஆமாம் கூவத்தில் கொசு உற்பத்தி என்பது கொஞ்சம் நடக்கத்தான் செய்கிறது... ஆனால் கிருஷ்ணாவை பார்க்கும்போது கூவம் பரவாயில்லை" என்று எழுதினால் கூட பரவாயில்லை... ஆனால் கூவத்தில் கொசு வருகிறது என்றால் உடனே வரிந்து கட்டி "கிருஷ்ணா யோக்கியமா" என்று மட்டும் சொன்னால் என்ன சொல்வது...

நீங்கள் கட்சி மேல் உள்ள அபிமானத்தை அவர்களின் செயல்பாடுகளை (பாமக கொள்கையின் படி 5 வருடம் ரொம்ப ஜாஸ்தி) பொறுத்து மாற்றிக்கொள்வது ஒன்றும் தப்பில்லை... நீங்கள் தனிமனிதர் அதனால் சமுதாயத்திற்கும் ஒன்றும் கேடு இல்லை... ஆனால் பாமக கட்சி மாறுவதற்கு காரணம் இதர கட்சியின் செயல்பாடு/கொள்கை என்றால் நீங்கள் சொல்வது உங்களுக்கே சிரிப்பாக வரவில்லையா...

மேலும் கட்சி மாறும் விஷயங்களில் பாமகவை மற்ற கட்சிகளோடு நீங்கள் ஒப்பிடவே முடியாது... அதுதான் பாமகவின் அக்மார்க் பச்சோந்தி தனம்...

அதாவது என்னதான் வெட்கம் கெட்டு கூட்டணி வைத்தாலும் திமுக, மதிமுக இரண்டும் அதிமுக இருக்கும் கூட்டணியில் இருக்காது என்று உறுதியாக கூறலாம்... கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ், முஸ்லீம் லீக் போன்றவை பாஜக சார்ந்த கூட்டணியில் இருக்க மாட்டார்கள்.. ஆனால் பாமக ஒரு குறிப்பிட்ட கட்சி இருக்கும் கூட்டணியில் சேர மாட்டார்கள், அது அவர்களின் கொள்கைக்கு விரோதமானது என்று உங்களால் சொல்ல முடியுமா...

யார் அதிக ஸீட் தருவார்கள், யாருடன் சேர்ந்தால் மந்திரி பதவி கிடைக்கும் இதுதான் பாமகவின் ஒரே கொள்கை... இதை பத்திரிக்கைகள் வெளியே சொன்னால் ஊடக வன்முறை... மீண்டும் சொல்கிறேன், பாமக எது செய்தாலும் இதர கட்சிகள் போல் மௌனமாக செய்தால் கேள்வியே இல்லை, ஒரே குட்டை பல மட்டை என்று போய்க்கிட்டே இருக்கலாம்... ஆனால் நான் இப்படி செய்தால் என் பிறப்பையே கேள்வி கேட்கலாம், நான் அப்படி செய்தால் என்னை சவுக்கால் அடிக்கலாம் என்றெல்லாம் சவடால் விட்டு தம்மை புனிதமானவனாக காட்டி அதை நம்பி வாய் பிளந்து ஓட்டு போட்ட கூட்டத்திற்கு தடாலடியாக போடுகிறார் பாருங்க நாமம் அதுமட்டும்தான் இங்கு கேள்வியே...

இதில் பல கருத்துக்கள்.... சரி ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே...
 



முகமூடி உங்கள் பதிலை படித்தேன் இருவரும் இணைய முடியாத முனைகளில் நிற்கின்றோம் என்பது மட்டும் புரிகின்றது.... உங்கள் கருத்துகள் என் எண்ணத்தையோ என் கருத்துகள் உங்கள் எண்ணத்தையோ மாற்றப்போவதில்லை என்பது உண்மை, உங்கள் செக்கியூலரிசத்தை தொடருங்கள்... உங்கள் செக்கியூலரிசத்தை பற்றியதான விவாதம் மீண்டும் பாமகவைப் பற்றிய விவாதமாக தொடங்கிவிட்டது, ஆனால் ஒன்று உங்கள் செக்கியூலரிசம் புரியவைக்கப்பட்டுவிட்டது அதுதான் நான் எதிர்பார்த்ததும் கூட.

ஆனால் ஒன்று நமது எம்ஜியார்,முரசொலி, துக்ளக்கெல்லாம் நான் படிப்பது உண்டு ரசிப்பதும் உண்டு ஆனால் அதில் சொல்லப்பட்ட கருத்துகளை கண்டுகொள்ள மாட்டேன்... ஏனென்றால் அதெல்லாம் எப்படி எழுதப்படுவது என்று எல்லோருக்கும் தெரியும்...
 



ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கின்றேன்

//நீங்கள் பா.ம.க வின் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்த அளவுக்கு, அவர்களை ஊடகங்கள் பொய்யாக குற்றம் சாட்டுகிறது என்று நியாயம் கற்பித்த அளவுக்கு பாஜகவை ஆதரித்து எழுதவில்லை... //
ஆதரித்து எழுதும்போது எல்லாவற்றையும் ஆதரித்து எழுத வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் எதிர்த்து எழுதும்போது அதுவும் செக்கியூலரிசம் பேசும்போது சிலவற்றை கண்டுகொள்ளாமலும் சிலவற்றை மட்டும் கண்மூடித்தனமாக தாக்கிஎழுதுவதும் ஒன்றா??

பாஜகவின் தலை வெட்டி செய்கைகளுக்கெல்லாம் என்னால் ஆதரவாக எழுத முடியாது, பாஜகவின் ஆதிக்க சாதி வெறிக்கெல்லாம் என்னால் ஆதரவாக எழுத முடியாது, பாஜகவின் மசூதி இடிப்புக்கெல்லாம் என்னால் ஆதரவாக எழுத முடியாது, பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்,பரிவாரங்களின் மத கொலைவெறிக்கெல்லாம் என்னால் ஆதரவாக எழுதமுடியாது இந்தியா ஒளிர்கிறது என்ற புரட்டுக்கெல்லாம் ஆதரவாக என்னால் எழுத முடியாது,
இந்து அமைப்புகளின் வர்ணாசிரம ஆதரவுக்கெல்லாம் என்னால் ஆதரவாக எழுதமுடியாது...

பாஜகவின் கொள்கையற்ற கூட்டணி பற்றி எழுதினால் கேளுங்கள் (வம்பு இழுக்கப்பட்டால் ஒழிய)

இதையெல்லாம் எழுதினால் தான் நான் செக்கியூலரிஸ்ட் என்றால் நான் செக்கியூலரிஸ்ட் ஆகவே இருக்க தேவையில்லை, உங்களையும் பாமக ஆதரவாகவோ, திராவிட கொள்கைகளுக்கு ஆதரவாகவோ எழுத சொல்லவில்லை, ஒரு கட்சியை விமர்சித்து எழுதும்போது அதே அளவுகோல் எல்லாரிடமும் கடைபிடித்துவிட்டு பிறகு பேசுங்கள் செக்கியூலரிசத்தை பற்றி...

மீண்டும் மீண்டும் பாமகவை பற்றிக்கொண்டு தொங்குவதைவிட நீங்கள் செக்கியூலரிஸ்ட் என்று சொல்வதைவிட ஒரே ஒரு டிஸ்கிளைமர் கொடுத்துவிடுங்கள்
 



நான் செக்கூலரா இல்லையான்னு எனக்கு தெரியும்... என் செக்கூலரிஸ்ட் தகுதி பற்றி மற்றவரின் அங்கீகாரமும் எதிர்பார்த்தது இல்லை... மேலும் நான் செக்கூலரிஸ்ட் என்று எங்குமே பிரகடனப்படுத்திக்கொள்ளவும் இல்லை... (கிடைச்சுது சான்ஸ¤, புகுந்து விளையாடுங்க)...

நான் என்ன எழுத வேண்டும், எப்படி எழுதினால் அங்கீகாரம் கிடைக்கும் என்ற உங்கள் தீர்மானத்தின் படி டிஸ்க்ளெய்மர் எப்படி கொடுக்க வேண்டும் எனபதையும் நீங்களே எழுதிவிடுங்க...

பாஜகவை குறித்த உங்கள் கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிடாமல் உங்களுக்கு நிறைய "இணைய நண்பர்கள்" கிடைக்க வாழ்த்துக்கள்
 



Nice comments. I vote for mugamoodi.
 



Thalai vettamal,
Maram vettamal,
Porattam nadathamal,
Pothu makkalukku thollai kudukkamal
Irukkum Arasiyal Katchi Yethavathu sollungal Kuzhali.....

Ungal parvail sonnal kooda, indru ungal thivam, Naalai thavaraga theriyum, ithuthan unmai.

Note : Sorry for writing in Tanglish.
 



//நான் செக்கூலரா இல்லையான்னு எனக்கு தெரியும்...//
அதானே உங்களுக்கு தெரியாதா என்ன?

// என் செக்கூலரிஸ்ட் தகுதி பற்றி மற்றவரின் அங்கீகாரமும் எதிர்பார்த்தது இல்லை... //
//மேலும் நான் செக்கூலரிஸ்ட் என்று எங்குமே பிரகடனப்படுத்திக்கொள்ளவும் இல்லை... //
அப்போ உங்க 8 வரி கவிதையின் நோக்கத்தை நான் தான் தவறாக புரிந்து கொண்டேன் போல... சரி சரி விடுங்க

//பாஜகவை குறித்த உங்கள் கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிடாமல் உங்களுக்கு நிறைய "இணைய நண்பர்கள்" கிடைக்க வாழ்த்துக்கள்//
யாரையும் புகழ்ந்தோ/தாக்கியோ எழுதிதான் எமக்கு நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்ற வறட்சியில் நான் இல்லை, கருத்து மோதலுக்கும் நட்புக்கும் என்னங்க தொடர்பு? நண்பர்கள் என்றால் ஒத்த கருத்தோடுதான் இருக்க வேண்டுமா?? அப்படியெல்லாமில்லை, நீங்கள் எனக்கு நண்பர்தான், நட்பை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லையென்றாலும்
 



குழலி... உங்களின் போன பின்னூட்டத்துக்கு பதில் என் பதிவில் இருக்கிறது.... நீங்கள் மீண்டும் ஒருமுறை கவிதையை மட்டுமன்றி மொத்த பதிவையும் படித்துப்பாருங்கள்... அப்புறம் சொல்லுங்கள்...
 



I cannot for the life of me figure out what language this blog is written in. If you can read my writing, please write back and tell me--thanks.
 



சரி, உங்க கருத்து ??