குமுதம் ஆசிரியருக்கு:: திருமாவின் அபத்த கருத்துக்கள்
குமுதம் ஆசிரியருக்கு,
திரு.திருமாவளவன் கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை- கலாச்சாரம் என்ற பெயரில் சில கருத்துக்களை இந்த வார குமுதத்தில் குறிப்பிட்டுள்ளார்.. அதை பற்றிய ஒரு பாமரனின் எண்ணம்...
எல்லோரும் ஏதோ ஒரு வேலை பார்க்கிறார்கள். யாரையும் ‘சும்மா’ பார்க்க முடியவில்ல. எட்டுமணிநேர வேலை மட்டும் பார்த்தாலே போதும்.. பொருளாதார வசதி அமோகம். இருப்பினும் இருபது மணி நேரம் உழைக்கிறார்கள் இந்தத் தமிழர்கள்.
இதன் மூலம் கனேடிய 'தமிழர்களை' புகழ முயற்சிக்கிறாரா... மேலை நாடுகளின் பொதுவான வேலை முறை 'ஒரு மணிநேரத்துக்கு இவ்வளவு சம்பளம்' என்ற அளவில் இருக்கும்.. ஆக 8 மணி நேரமோ 20 மணிநேரமோ உழைப்புக்கேற்ற காசு கிடைக்கும்... மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கு comp time off என்ற முறையில் அதிக உழைப்புக்கு ஏற்ற விடுமுறை கிடைக்கும்... சில நேரங்களில் 'குறிக்கோளை அடையவேண்டும்' என்பதற்காக சலுகைகள் எதுவுமில்லாமலும் ஒரிரு மாதங்கள் ஒரு சிலர் அதிக நேரம் வேலை பார்க்கலாம்.. ஆனால் ஒரேடியாக - கடின உழைப்பாளிகள் என்ற தோற்றம் தர - 20 மணிநேரம் உழைக்கிறார்கள் என்று சொல்வது அபத்தமாக இல்லையா.. இவர்கள் குடும்பம் குட்டிக்களுக்காக எவ்வளவு மணிநேரம் செலவிடுகிறார்கள்.. தூங்குகிறார்களா...
மக்கள் தொகையில் கறுப்பர்களுக்கு இணயாக தமிழர்களும் இருக்காங்க. இருப்பினும் பிரச்னகள் இல்ல.
கறுப்பர்களுக்கும் தமிழர்களுக்கும் எதற்கு ப்ரச்னை இருக்க வேண்டும்... இல்லை உலகின் வேறு பகுதியில் எங்காவது ப்ரச்னை இருந்து இங்கு மட்டும் இல்லாமல் இருக்கிறார்களா? பொதுவாக தமிழர்களால் எங்குமே ப்ரச்னை இல்லை என்பதுதான் உண்மை (தமிழ்நாட்டை தவிர என்று வேண்டுமானால் சொல்லலாம்)
நயாகராவை அடைந்தபோது நன்றாக இருட்டி விட்டது. இரவில் நிறய காதல் ஜோடிகள் நயாகராவில் குதித்து தற்கொல செய்து கொள்வதால், மெயின் கேட்டை மூடியிருந்தார்கள். அதனால் உள்ளே செல்ல முடியவில்ல.
நயாகரா அருவி அரசின் பூங்காத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது... அருவியை சுற்றி இருக்கும் பூங்கா, அருவி அருகில் செல்ல இயக்கப்படும் தனியார் படகுகள், அருவியின் மீது அடிக்கும் வண்ண விளக்குகள் என்று எல்லாவற்றிற்கும் ஒரு வேலை நேரம் உள்ளது... கனடா பகுதியில் இருந்துதான் சக்தி மிகுந்த வண்ண விளக்குகள் அருவியின் மீது ஒளிபாய்ச்சும்.. இரவில் விளக்கு அணைக்கப்பட்ட பிறகு அருவியை பார்த்தால் இருட்டில் என்ன தெரியப்போகிறது.. அருவியின் மீது கயிறு கட்டி நடந்து சாகசம் செய்த போது தவறி விழுந்தவர்கள், பீப்பாயில் உட்கார்ந்து அருவியில் இருந்து குதித்த போது அடிபட்டு இறந்தவர்கள் என்றுதான் இறந்தவர்கள் பட்டியல் இருக்கிறதே தவிர நிறைய பேர் நயாகராவில் தற்கொலை செய்தார்கள் என்பதற்கான புள்ளிவிபரம் இல்லை. மேலும் தற்கொலை செய்பவர்கள் இரவில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிப்பார்கள் என்பது நகைப்புக்கிறிய விஷயமாக படுகிறது... பகலில் விழுந்தால் தடுக்க அரசாங்கம் என்ன செய்கிறதாம்..
மேற்கத்திய கலாசாரம் அவர்களிடம் எந்தத் தாக்கத்தயும் ஏற்படுத்தவில்ல. பட்டுச் சேலை, வேட்டி கட்டி ஜொலிக்கிறார்கள். தமிழர் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லல. சிறுவர், சிறுமியர் பரதநாட்டியம், தெருக்கூத்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
போகிற போக்கை பார்த்தால் அவர்கள் அரிசி சோறு சாப்பிடுகிறார்கள், வீட்டில் தமிழில்தான் பேசுகிறார்கள், தூங்கும் போது புலம்பினால் கூட தமிழில்தான் புலம்புகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படும் போலிருக்கிறது
கனடா முழுவம் சுற்றியபோது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது... தமிழ்நாட்டை விட கனடாவில் தமிழுணர்வு அதிகமிருக்கிறது.
மேற்சொன்ன இந்த ஒரு கருத்துதான் என்னை இக்கடிதம் எழுத தூண்டியது... "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி" என்று ஒரு சொலவடை உண்டு... மாறுதலை கண்டு ஆச்சரியத்தில் பிரமிப்பவர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள்... கனடாவில் தமிழுணர்வு சிறப்பாக இருக்கிறது என்று சொன்னால் பத்தாதா? எப்போது யார் எந்த வெளிநாடு போனாலும் திரும்பி வந்து 'தமிழ்நாட்டை விட அங்கே தமிழுணர்வு சிறப்பாக இருக்கிறது' என்று, என்ன உளறல் இது... எப்படி கண்டுபிடிக்கிறார்கள் இதை...
வெளிநாட்டில் தங்களை அழைத்தவர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் என்று மிகச்சிலரோடு பேசிவிட்டு, சிலரின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு அவர்கள்தான் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி மாதிரியும் அவர்கள் வாழ்க்கைமுறைதான் தமிழர்களின் வாழ்க்கை முறைமாதிரியும் நினைத்து பொத்தாம்பொதுவாக தமிழ்நாட்டோடு ஒப்பிடுவதை ஒரு வியாதியாகவே வைத்திருக்கிறார்கள்...
இவர்கள் மற்ற நாட்டை பற்றி "அதிகமாக" புகழ்வதை எப்போது நிறுத்தப்போகிறார்கள்... நல்ல விஷயங்களை உள்ளது உள்ளபடி பாராட்டத்தெரியாதா.. ஒரு சுவைக்காக "அதிகமாக்கப்பட்டது" என்றால், அதிக மக்களை சென்றடையும் இது போன்ற செய்திகளுக்கு ஒரு வரைமுறை இல்லையா? எப்போதும் எதற்கெடுத்தாலும் நம் நாட்டோடு ஒரு ஒப்பீடு எதற்கு.. அமெரிக்க/கனடா அரசியல்வாதிகள் இவர்களை போல் மூன்றாம்தர அரசியல் செய்யாமல் கண்ணியமாக அரசியல் செய்கிறார்கள் என்று ஏன் ஒரு ஒப்பீடு செய்வதில்லை இவர்கள்??
****
இக்கடிதம் குமுதம் ஆசிரியருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது... வழக்கம் போல பதிலோ விளக்கமோ எதிர்பார்க்கவில்லை...
மக்கள்ஸ் கருத்து ::
யோவ் முடமூடியாரே... இதையெல்லாமும் விட்டுட்டீங்களே.. சரி..சரி.. இதோ பின்னூட்டமா தர்றேன். (முன் குறிப்பு : உண்மையிலேயே நான் இதை ஜாலியாகத் தான் தருகிறேன். 'வேறு' கண்ணோட்டத்தில் பார்ப்பது அவரவர் மன நிலைக்கு ஏற்றது. இடற்காக சூடத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வந்து சத்தியம் அடித்து 'என்னுடைய பின்னூட்டத்தில் எவ்வித உள் நோக்கமும் இல்லை' என்றேல்லாம் என்னால் கூறிக் கொண்டிருக்க முடியாது!)
நீங்கள் சொல்வது மிகச் சரி. மனதிற்கு கடினமாகவும் உள்ளது. உங்கள் நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
நீங்கள் சொல்லியிருப்பதாலே பலனிருக்குமா இல்லையா என்று சொல்லமுடியாவிட்டாலுங்கூட, கருத்தினைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
சொன்னால், அவருடைய விசிறிகள் கோபப்படலாம்.
ஆனால், அவர் இப்போது குறிவைத்து எழுதுவதெல்லாம், பெரும்பாலும் அவரையே விஷயதானத்துக்கு நம்பியிருக்கின்றவர்களுக்கும் சில "போனவாட்டி வருந்திருப்ப, எங்க வீட்டு பாத்ரூம்ல ஒண்ணுக்குப் போனார்" எழுதுகிற சில பழைய விசிறிமட்டைகளையுமே. அது தவறில்லை; ஆனால், அவருக்குத் தன்னுடைய எல்லை எதுவென்பதையாவது தெரிந்துகொண்டு நடக்கத் - குறைந்த பட்சம் வாயை மூடிக்கொண்டிருக்கவேனும்- தெரிந்திருப்பின், எரிச்சலூட்டாது. அவருக்கு அதுவும் தெரிவதில்லை; அநாவசியத்துக்கு, இந்த மாதிரியான கருத்துகள் தெரிவிக்கும்போது, ஆத்திரம் வருகின்றதுதான்.
அநாவசியமாக மற்றவர்களை மடையர்கள் என்பதுபோலவோ அல்லது உங்களைப் போன்றவர்களோடு சரிசமமாக நாங்களே கீழிறங்கி வந்து செயற்படுகிறோமே பேசுவது எரிச்சலூட்டவே செய்கிறது.
எனக்கோர் ஆசையுண்டு; மேற்படியார் தொடக்கம் அரசியலைமுழுநேரத்தொழிலாகக் கொண்டியங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கெல்லாம் போய் பார்த்திராத தமிழர்களை பற்றி இழிவுப்பார்வை பார்க்கும் பெருந்தகை/லைகள் மற்றவற்றினையும் ஒரு மேசை போட்டு வலப்பக்கமிருத்தி, இவர்கள் எழுதும் விடயங்கள் குறித்தே தமிழிலே எழுதும் சிலரைத் தேர்ந்தெடுத்து இடப்பக்கத்திலே இருத்திவைத்து, அவர்கள் பேசும் விடயங்கள் குறித்து வாதிக்கவிட்டுப்பார்க்கவேண்டும். உ+ம்: எஸ். ராமகிருஷ்ணனையும் தமிழ்ப்பாம்பையும் (சினிமா குறித்து) சுஜாதாவையும் வெங்கட்டையும் (அறிவியல் எழுத்தினைக் குறித்து)....வீரமணியையும், காஞ்சி பிலிம்ஸையும்...(திராவிடம் குறித்து)... என்னதான் தங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?
விஷயமே இல்லாமல் "இட்டு நிரப்புவது" என்பது பொதுவான தமிழ் பத்திரிகைகளின் நடைமுறைதான் என்றாலும் , இந்தக்கட்டுரை அவமானப்படவைக்கிறது. 1 மணி 1 நாள் ஒழுங்காக ஊர் சுற்றி விட்டு வந்தால் கூட இன்னும் சிறப்பாக எழுதமுடியுமென்று தோன்றுகிறது.இன்னும் இது 'அவர்களுக்காக' என்று வாதிட்டால் நாம்தான் முட்டாளாகிப்போய் காட்சியளிப்போம்
எனக்கு நீங்கள் எழுதி இருப்பது பற்றி தெரியாது. ஆனால் வெகுகால் முன் தமிழ் போராட்டம் பற்றி இவருடைய கட்டுரைக்கு நான் எழுதிய கடிதம் கிணற்றுக்குள் போட்ட கல்லாய் காணாமல் போய்விட்டது.எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
அவரு என்னத்த சுத்தினாரு என்னத்த பார்த்தாருன்னு கட்டுரை வேற எழுதி நமக்கெல்லாம் சொல்றாரு அதுக்கு ஒரு பத்திர்க்கை வேற. சிலவற்றில் வழுக்கிவிடுகிறார். அதுக்குத்தான் அவரு மீசையே வெக்கல, எல்லாரும் பாக்கச்சொல்ல பெரிய மீசை வெச்சிருக்காரு... கேட்டா மீசையை முறுக்கினேன்னு சொல்லிடலாம் பாருங்க.. என்னத்த சொல்ல
, கிணத்த சுத்தி நின்னு நாமெல்லா பாத்துட்டே இருக்க வேண்டிதான் ஒரு மண்ணும் நடக்காது.
போனால் போகிறதென்று, இவரையாவது ஓரளவு ஒத்துக்கொள்ளலாம், ______, ________ போன்ற அடுத்த தலைமுறை அறிவுஜீவிகளை நினைத்தால்தான் திகிலாக இருக்கிறது!) மனோபாவத்தையும்கூடக் குற்றம் சொல்லலாம். ஒரே Readers don't digest ரீதியிலான தொல்லைதான்!! ரிட்டர்ன் ஸ்டாம்பாவது ஒட்டினீர்களா இல்லையா? ;-)
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்து தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
முகமூடி திடீர்னு ஏனோ இது என் மனசிலெ தோணிச்சு..
சரின்னு இங்க போட்டு வச்சேன்...
(சரியான இடமென்பதில் ஐயமில்லை.)
மேலே உள்ளது நினைவிலிருந்து எழுதியதால் பத்தி பிரித்தமையில் தவறு இருக்க கூடும்.
இருப்பின் மன்னிக்கவும்.
முகமூடி, என்னதான் மாயவரத்தார் தொடக்கம் இன்னும் சிலர் உங்களோடு பலத்த போட்டிபோட்டாலும், நீங்கதான் தமிழ்வலைப்பதிவிலே மெய்யான "The Great White Hope" என்று எனக்குத் தோன்றுகிறது
;-)
கமலகாசன் அவர்கள் சிங்கப்பூர் சென்று தமிழ்நாட்டுத் தமிழன் வீணாப்போன தமிழன் என்றும் சிங்கப்பூர் தமிழன்தான் ஒரிஜினல் அக்மார்க் தமிழன் என்றும் புகழ்ந்து பேசினார். அங்கே கூட்டத்தில் அமர்ந்து இருந்த தமிழகத்தில் இருந்து சென்றவர் எழுந்து "எதிர்க்கேள்விகள்" கேட்க, அவரை அவசரமாக வெளியேற்றி விட்டு மீண்டும் தனது பேச்சைத் தொடங்கினார். தமிழகத் தமிழர்களை கமல் திட்டிய அன்று எங்கே சென்றீர்கள் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சிங்கமே?!
//தமிழ்நாட்டை விட கனடாவில் தமிழுணர்வு அதிகமிருக்கிறது.//
இது குறித்த உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன் .இங்கே சிங்கப்பூர் வரும் தமிழ் நாட்டு பிரபலங்களும் இப்படித்தான் உளறுவார்கள் ..தங்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் ஒரு சில உண்மையான தமிழுணவுள்ளவர்களை வைத்து எல்லாவற்றையும் எடை போடுகிறார்கள் ..ஊண்மையில் சிங்கையில் இளைய தலைமுறை பேசுவதை இவர்கள் கேட்டதுண்டா?
சோழநாடன்... 'குமுதம் ஆசிரியருக்கு' என்ற வரியை எடுத்துவிட்டு பார்த்தால் இது என்னுடைய இன்னொரு பதிவு... ரவி ஸ்ரிநிவாஸ் சமீபத்திய சுஜாதாவின் அபத்தங்களை பட்டியலிட்டு ஆசிரியருக்கு அனுப்பியதை பார்த்ததும் நாமும் அனுப்பலாமே என்ற எண்ணத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன்... அவ்வளவுதான்...
//அவரை அவசரமாக வெளியேற்றி விட்டு மீண்டும் தனது பேச்சைத் தொடங்கினார்.//
இது அபாண்டம்.அவர் ஒன்றும் வெளியேற்றவில்லை..இவராகவே வெளியேறினார்.
மரத்தடி... எப்போது யார் எந்த வெளிநாடு போனாலும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்... நீங்கள் சொன்ன மாதிரி சம்பவம் நடந்திருந்தால் அந்த "யார்" என்பதில் கமலஹாசன் & co எல்லாம் அடக்கம்தான்...
மற்றபடி வேறு விஷயங்களுக்கு முயற்சி செய்து உங்கள் சக்தியை வீணடிக்காமல், திருமாவின் கருத்தை பற்றிய உங்கள் எண்ணத்தை முடிந்தால் சொல்லுங்கள்
(முன் குறிப்பு : உண்மையிலேயே நான் இதை ஜாலியாகத் தான் தருகிறேன். 'வேறு' கண்ணோட்டத்தில் பார்ப்பது அவரவர் மன நிலைக்கு ஏற்றது. இடற்காக சூடத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வந்து சத்தியம் அடித்து 'என்னுடைய பின்னூட்டத்தில் எவ்வித உள் நோக்கமும் இல்லை' என்றேல்லாம் என்னால் கூறிக் கொண்டிருக்க முடியாது!)
மாயவரத்தான், சந்துல ஓரமா போய்ட்டிருக்கற என்னையும் சைக்கிள் கேப்புல ஒரு இடி இடிச்சிருக்கீங்க, சரிதான் ஜாலிதான் ;-) ஆனா, அப்படியே 3000 ரூபா கொடுத்தும், அமெரிக்கா சலூன்ல தூங்கி தலையை மொட்டையாக்கிக்கிட்ட, அதை "வெள்ளை மனசோட ஒப்புத்துக்கிட்ட" ரஜினி அங்கிள் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்! தேர்தல் சமய மொட்டை வேற - நினைவு இருக்கணுமே? டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் ஏதாவது கொளுத்திக் காட்டணுமா? ;-) என்ன, நாம வலைப்பதிவுல எழுதறோம், மனோரமா ஆச்சி ஓப்பனா ஸ்டேட்மெண்ட்டு விட்டுடறாங்க, அதையெல்லாம் மன்னிச்சு ரஜினி அங்கிள் அருணாச்சலம்ல சான்சு கொடுக்கலியா, அதுமாதிரி சிலுங் அப்படின்னு கோப்பைய மோதி சியர்ஸ் சொல்லிப்போம், சரியா? CHEEEEERS!! ;-) நம்மளுக்கும் ஒரு சான்சு கொடுத்துருங்க சொல்லிப்புட்டேன்!!
பெயரிலி... நீங்கள் என்னை Jack Jefferson உடன் ஒப்பீடு செய்ய வருகிறீர்களா.. இதன் மூலம் புகழ்ச்சியா, இகழ்ச்சியா, வஞ்சப்புகழ்ச்சியா...
என்ன ஒரே 70s காலகட்டத்தில் இருக்கிறீர்கள்... American History X பார்த்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள்...
நன்றி துளசியக்கா... உங்க ஊர்ப்பக்கம் நீங்க யாரையும் அழைப்பதில்லையா... யாரையாவது கூப்பிடுங்கள்... வந்து பார்த்துவிட்டு "நம்ம நாட்டு தாய்மார்களை விட கங்காருக்கள் மேலானவை. தம் குழந்தைகளை அதிகமான பாசத்துடன் பாதுகாக்கின்றன" அப்படீன்னு குங்குமத்துக்கு பேட்டி கொடுக்கட்டும்
மாயவரத்தான் உங்க கருத்த படித்தேன்... அதுக்கு பதில் கொடுக்க நிறைய படிக்கணும், நிறைய யோசிக்கணும்... ஆபத்தில்லாத ஒரே பதில் :: // ரிட்டர்ன் ஸ்டாம்பாவது ஒட்டினீர்களா இல்லையா? // ரிட்டர்ன் மெயில் ஐ.டி கொடுத்திருக்கிறேன்... (என் மின்னஞ்சல் ரீசைக்கிள்டு பேப்பரில் (wordpad) அடிக்கப்பட்டது... அதனால திருப்பி அனுப்பலனாலும் அதிக செலவு ஒன்னும் இல்ல)
ஜோ & மரத்தடி :: கமல் பேசியது குறித்து அதிக விபரம் தெரியாது... திருமா மலேசியா அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில அரசியல் பேசி கண்டிக்கப்பட்டாராமே... அது பற்றியும் எனக்கு அதிக விபரம் தெரியாது...
மாண்டீ :: அந்த மொட்டை நிகழ்ச்சிய நீங்களும் ஞாபகம் வச்சிருக்கீங்களா... (மறக்கக்கூடிய விஷயமா அது..) அது பத்தி நான் கூட என்னோட ஒரு பதிவுல எழுதியிருந்தேன்...
/என்ன ஒரே 70s காலகட்டத்தில் இருக்கிறீர்கள்/
ஐயா, இது 70 ஏர்ல் ஜோன்ஸ், மார்டின் ரிக் சங்கதி இல்லையே.. அதுக்கு முன்னாலேயே 1900 தொடங்கியபோதான சங்கதி அல்லவோ?
ஐயோ இஃது எனது வஞ்சப்புகழ்ச்சி இல்லை :-(
உங்கள் கருத்துகளிலே, எதற்கெடுத்தாலும் சொந்த ஊரோடு ஒத்துப்பார்ப்பது குறித்த கருத்தோடு உடன்பாடே.
American X இற்கும்
சொல்ல மறந்துபோனது - நீங்கள் என்னைத் தவறாக எண்ணமுன்னாலே சொல்லிவிடுவது நல்லது; "சத்தியமாக உங்களை Jack Johson உடன் ஒப்பிடவில்லை."
//உங்க ஊர்ப்பக்கம் நீங்க யாரையும் அழைப்பதில்லையா... யாரையாவது கூப்பிடுங்கள்... வந்து பார்த்துவிட்டு "நம்ம நாட்டு தாய்மார்களை விட கங்காருக்கள் மேலானவை. தம் குழந்தைகளை அதிகமான பாசத்துடன் பாதுகாக்கின்றன//
கூப்புடலாமுன்னு பார்த்தா, இங்கே கங்காரு இல்லையேப்பா! எல்லாம் பறக்கத் தெரியாத 'கிவி'ங்களாச்சே!
ஷ்ரேயா கூப்புட்டாத்தான் உண்டு. ஆனா அங்கேயும் கங்காருங்களை'ஆக்கித் தின்னுடறாங்களாமே!'
முகமூடி,
எனக்கு கமல் மீது வெறுப்போ அல்லது திருமாமீது பற்றுதலோ இல்லை. இவர்கள் இருவரும் என் ஜாதி உன் ஜாதி என்றோ நான் பதம் படுத்திப் பார்க்கவில்லை. ஆனால் திருமா தவவறு செய்தபோது வரிந்து கட்டும் தாங்கள் கமல் தவறு செய்தபோது ஓடி ஒளிந்தீர்களே என்ற ஆதங்கம்தான்! திருமா மலேசியாவில் பேசியதெல்லாம் டெரியும்போது கமல் சிங்கப்பூரில் பேசியதை வசதியாக தெரியாது என ஒற்றை வார்த்தையில் பதில் தந்தீர்கள். இதற்குப் பெயர்தான் ஜால்சாப்பு என்பார்கள்!
இவர்கள் என்றில்லை. பிறந்த பொன்னாட்டை, தவழ்ந்த தமிழ் மொழியை குறை சொல்லும் எவரும் வெளிநாட்டு சென்றபின் பழித்துக் காட்டினால் தகுந்த பதிலடி கொடுங்கள். உங்களுக்குத் தோள் கொடுக்கும் ஆட்களில் முன் வரிசையில் நான். ஆனால் நீங்கள் ஜெயா, பாஜக, கமல், பிராமனம் என ஒரு குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுகிறீர்கள். நடுநிலையாக எழ்துங்கள். நிச்சயம் பெரிய ஆளாக வர வாய்ப்பு இருக்கிறது உங்களுக்கு!
பொதுவாக தமிழர்களால் எங்குமே ப்ரச்னை இல்லை என்பதுதான் உண்மை (தமிழ்நாட்டை தவிர என்று வேண்டுமானால் சொல்லலாம்)
மேற்சொன்ன இந்த ஒரு கருத்துதான் என்னை இக்கடிதம் எழுத தூண்டியது... "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி" என்று ஒரு சொலவடை உண்டு... மாறுதலை கண்டு ஆச்சரியத்தில் பிரமிப்பவர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள்... கனடாவில் தமிழுணர்வு சிறப்பாக இருக்கிறது என்று சொன்னால் பத்தாதா? எப்போது யார் எந்த வெளிநாடு போனாலும் திரும்பி வந்து 'தமிழ்நாட்டை விட அங்கே தமிழுணர்வு சிறப்பாக இருக்கிறது' என்று, என்ன உளறல் இது... எப்படி கண்டுபிடிக்கிறார்கள் இதை...
வெளிநாட்டில் தங்களை அழைத்தவர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் என்று மிகச்சிலரோடு பேசிவிட்டு, சிலரின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு அவர்கள்தான் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி மாதிரியும் அவர்கள் வாழ்க்கைமுறைதான் தமிழர்களின் வாழ்க்கை முறைமாதிரியும் நினைத்து பொத்தாம்பொதுவாக தமிழ்நாட்டோடு ஒப்பிடுவதை ஒரு வியாதியாகவே வைத்திருக்கிறார்கள்...
இவர்கள் மற்ற நாட்டை பற்றி "அதிகமாக" புகழ்வதை எப்போது நிறுத்தப்போகிறார்கள்... நல்ல விஷயங்களை உள்ளது உள்ளபடி பாராட்டத்தெரியாதா.. ஒரு சுவைக்காக "அதிகமாக்கப்பட்டது" என்றால், அதிக மக்களை சென்றடையும் இது போன்ற செய்திகளுக்கு ஒரு வரைமுறை இல்லையா? எப்போதும் எதற்கெடுத்தாலும் நம் நாட்டோடு ஒரு ஒப்பீடு எதற்கு.. அமெரிக்க/கனடா அரசியல்வாதிகள் இவர்களை போல் மூன்றாம்தர அரசியல் செய்யாமல் கண்ணியமாக அரசியல் செய்கிறார்கள் என்று ஏன் ஒரு ஒப்பீடு செய்வதில்லை இவர்கள்??
பெயரிலி உங்க நல்ல மனசு எனக்கு தெரியாததா... என்ன பண்றது.. இந்த சந்தேகம் புடிச்ச மனசு நீங்க 'என் பேரு பெயரிலி' அப்படீன்னு சொன்னாலும் இல்ல இவருக்கு வேற பெயர் இருக்குமோன்னு சந்தேகம் கொள்ள வைக்குது...
// சத்தியமாக உங்களை Jack Johson உடன் ஒப்பிடவில்லை // அப்ப திருமாவையா...
// எதற்கெடுத்தாலும் சொந்த ஊரோடு ஒத்துப்பார்ப்பது குறித்த கருத்தோடு உடன்பாடே. American X இற்கும் // அங்க நிக்கறீங்க... பெயரிலியா கொக்கா....
// இங்கே கங்காரு இல்லையேப்பா! எல்லாம் பறக்கத் தெரியாத 'கிவி'ங்களாச்சே // துளசியக்கா... அப்ப இப்படி மாத்தி படிச்சிக்கோங்க...
தமிழன்தான் எப்போது பார்த்தாலும் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு அலைகிறார்ன்... இந்த கிவிக்கள் பாருங்கள் தன்னடக்கமாக பறக்காமல் இருக்கின்றன...
மரத்தடி... நான் சொன்னது போல் கமல் பேசியது குறித்தும் திருமா மலேசியா விவகாரம் குறித்தும் ஒரு குறிப்பாக படித்தேனே தவிர அதிக விபரம் தெரியாது... // ஆனால் நீங்கள் ஜெயா, பாஜக, கமல், பிராமனம் என // என் பதிவில் இவர்களை புகழ்ந்து எங்கே படித்தீர்கள்... மீண்டும் >> நீங்கள் சொன்ன மாதிரி சம்பவம் நடந்திருந்தால் அந்த "யார்" என்பதில் கமலஹாசன் & co எல்லாம் அடக்கம்தான்... <<
/அப்ப திருமாவையா.../
என் கரெக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே :-(
Jack Johnson... நோ சான்ஸ்!! நான் James J. Jeffries இனை அல்லவா ஒத்துச் சொன்னேன்.
ரமேஷ்... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நீங்க... ஏன் மன்மோகன் சிங் பேண்ட் சட்டை போடுறாரே... அவர கேக்க மாட்டீங்களா... நம்ம டோனி ப்ளேய்ர் , சின்ன அய்யா இவங்கெல்லாம் பேண்ட் சட்டை போடுறாங்களே அவங்கள கேக்க மாட்டீங்களா.. அது ஏங்க இவர மட்டும் கேக்கறீங்க...
அன்பு அதாவது நீங்க அந்த கருத்தெல்லாம் வழிமொழியறீங்க... அப்படின்னு எடுத்துக்கலாமா ?
// James J. Jeffries இனை அல்லவா ஒத்துச் சொன்னேன். // அப்படி பாத்தாலும் johnsonன்னு ஒரு கேரக்டரு இருக்கணுமே... நான் பாட்டுக்கு எனக்கு வசதிப்பட்ட மாதிரி புரிஞ்சி சந்தோஷப்பட்டிருப்பேன்... நீங்க மாயவரம்னு வேற நடுவுல சொல்லி... ஒரே கன்பூசன்... கன்பூசன்...
ரமேஷ்... அதாவது அப்படிப்ப்பட்ட கேள்விகள் உங்கள நோக்கி கேட்கப்படலாம்னு சொல்ல வந்தேன்...
பெயரிலி... அப்படீங்கறீங்க... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் (இது வரைக்கும் அப்படித்தானே இருந்தது)
மரத் தடி அண்ணாச்சி,
முகமூடி அண்ணாச்சி, கமலின் சிங்கப்பூர் பேச்சு குறித்து கமலைப் பிடித்து விளாசவில்லையே என்று நீங்கள் மிகவும் ஆதங்கப்படுவதால், அது குறித்து என் விளாசலை
படிக்குமாறு தங்களை வேண்டுகிறேன் :)))
முகமூடி, பதிவு நல்லாருக்கு, போட்டுத் தாக்கறீங்க !!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
பொதுவாக இணையத்தில் "புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களிடம் தமிழ் உணர்வு மோலோங்கி உள்ளது" என்பது அனைவரும் சொல்கிறார்கள், இதில் பலருக்கும் உடன்பாடே.
நான் மதிக்கின்ற இணைய நண்பர்கள் இதில் வந்து பின்னூட்டம் விடாமல் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
தலித் மக்களுக்கு போராடும் திருமாவை எப்பொழுதும் தாக்கியே தீருவது என்று அலையும் மக்களிடம் பேசி என்ன பலன்?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நன்றி பாலா... உங்கள் பதிவு மூலம் நான் தெரிந்து கொண்டது, கமல் சம்பவம் அக்டோபர் 2004 க்கு முன்பே நடந்த ஒன்றென்பது... நான் பதிவு எழுத வந்தே 4 மாதங்கள்தான் இருக்கும்...
மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு... தங்கள் கருத்துக்கு நன்றி...
திருமா சொன்னது சரியான கருத்துதான், அதில் எனக்கு உடன்பாடே (அ) எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் திருமா சொன்னது சரிதான் (அ) நான் நேற்றுதான் திருமாவிடம் பேசினேன்... அவர் சொன்ன கருத்து குமுதத்தால் திரிக்கப்பட்டு விட்டதாம் என்று ஏதேனும் சொல்லி(ஜல்லி)யிருந்திருக்கலாம் நீங்கள்... ஆனால் - பதிவில் எங்கும் குறிப்பிடப்படாத, பதிவுக்கு அவசியமும் இல்லாத - "தலித் தலைவர் திருமா" என்ற உங்கள் நிலைப்பாட்டில் மீண்டும் ஒருமுறை நின்றுருக்கிறீர்கள்... அவருக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் நோக்கம் நிறைவேறும்..
// நான் மதிக்கின்ற இணைய நண்பர்கள் இதில் வந்து பின்னூட்டம் விடாமல் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. //
இதில் கூட்டணி வேறு... மெத்த மகிழ்ச்சி... இங்கு வந்து பின்னூட்டம் இடாதவர்களை தலித் ஆதரவாளர்கள் (அ) பார்ப்பண எதிர்ப்பாளர்கள் என்று குறுகிய வட்டத்தில் பார்க்க நான் விரும்பவில்லை... ஒரு கருத்துக்கு பின்னூட்டம் இடுவதும் இடாததும் அவரவர் உரிமை.
அல்லது ஒரு வேளை நீங்கள் சொன்னது போன்ற எண்ணத்தில்தான் அவர்கள் வரவில்லை என்றால் அவர்களும் இந்திய அரசியல்வாதிகள கண்டுபிடித்த புதிய "secularism" கொள்கையை கடைபிடிக்கிறார்கள், அவர்களின் பின்னூட்டம் கிடைக்கும் பாக்கியம் நம் பதிவுக்கு இல்லை என்று நினைத்து காலத்தை ஓட்டிக்கொள்ள வேண்டியதுதான்...
// அவர்களும் இந்திய அரசியல்வாதிகள கண்டுபிடித்த புதிய "secularism" கொள்கையை கடைபிடிக்கிறார்கள், அவர்களின் பின்னூட்டம் கிடைக்கும் பாக்கியம் நம் பதிவுக்கு இல்லை என்று நினைத்து காலத்தை ஓட்டிக்கொள்ள வேண்டியதுதான்... // என்றுதான் மனதொடிந்து இருந்தேன்...
அப்புறம் என்னால் ஆன வரை முயற்சி செய்வோம் என்று ஒரு எண்ணம்... இனியாவது.....
ஆனைப்போருக்க பூனைப்போர்…….குமுதத்தில ரொரண்டோவில் இயங்கும் ஒரு வானொலியான கீதவாணியின் பெயரை கீரைவாணி என்று எழுதியிருந்தவை.
சினேகிதி :: கீதவாணிங்கறத விட கீரைவாணின்னு சொன்னா "தமிழ்" மக்களுக்கு நல்லா புரியும்னு அப்படி போட்டுருப்பாங்க...
புஷ்பா :: மரத் தடியே யாரோ ஒருத்தரோட பினாமி பேருன்னு (போலி பேரு இல்ல... இது வேற) யாரோ சமீபத்துல சொல்லிகிட்டு இருந்தாங்க...
//மரத்தடி,
உங்க பேர் மரத்தடியா இல்லை,
மரத் தடியா?//
புஷ்பா அவர்களே, எனது பெயர் மரத் தடி. சேர்த்து இட்டால் யாரோ சண்டைக்கு வந்தார்கள். யார் என்று தெரியவில்லை. அதனால் பிரித்து எழுதினேன். இதற்கும் கண்டனம் சொன்னால் இரும்புக்கழி என பெயர் மாற்றிக் கொள்வதாக உத்தேசம். பெயர் பிடித்து இருக்கிறதா?
//மரத் தடியே யாரோ ஒருத்தரோட பினாமி பேருன்னு (போலி பேரு இல்ல... இது வேற) யாரோ சமீபத்துல சொல்லிகிட்டு இருந்தாங்க... //
முகமூடி அவர்களே,
மரத் தடி என்ற என்னை பினாமி என்றும் சொல்வார்கள். அப்படி ஒரு ஆளே இல்லை என்றும் சொல்வார்கள். அதுவா தற்போது முக்கியம்? பெயரிலி என்று ஒருவர், அனாமதேயம் என ஒருவர், டிசே என ஒருவர், டைனோ என ஒருவர், மாண்ட்ரீசர் என ஒருவர், அப்டிபோடு என ஒருவர்.. இதெல்லாம் உண்மைப் பெயர்களா? சொல்ல வந்த கருத்தினைப் பாருங்கள். ஏன் உங்கள் உண்மைப் பெயர் கூடத்தான் வேறு ஒன்று. பின் ஏன் தாங்கள் முகமூடி என்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்தீர்கள்? உங்களின் உண்மைப் பெயரும் பங்குபெறும் இடங்களும் நானறிவேன். ஆனால் நீங்கள் எல்லாம் கதைப்பது வெறும் கதையேதான்.
தமிழை, தமிழ்நாட்டை, இந்தியனை சென்ற இடத்துக்காக பழித்துக் கூறுவது கமல், திருமா என்றில்லை.. ஜெ, கருணாநிதி, சிதம்பரம் என யாராக இருந்தாலும் கண்டனக் கணைகளைத் தொடுப்போம் நாம்.
கமலின் சிங்கப்பூர் பேச்சில் எனக்கு உடன்பாடு கிடையாது ..அதே நேரம் கமல் தமிழுக்காக என்னத்தை கிழித்தார் என்று சிலர் சந்துக்குள் சிந்து பாடுவது கொஞ்சம் ஓவர் ..தமிழ் நடிகர்களில் தமிழுக்காக கமல் மற்றவர்களை விட அதிகமாகவே கிழித்திருக்கிறார் ..ஒழுங்காக தமிழ் பேசத்தெரிந்த ,பேசுகிற நடிகர்களில் அவர் முதன்மை..தன்னுடைய படங்களில் பாரதி பாடல்களை வசனமாக புகுத்தியவர் ..தெனாலியில் தொலைக்காட்சி அறிவிப்பாளர்களின் தமிங்கிழிசை கிண்டல் பண்ணியவர் ,கவிஞர் ,வசன கர்த்தா ,பாடலாசிரியர்...தனது முந்தைய படங்களுக்கு 'குருதி புனல்' போன்ற சுத்த தமிழ் பெயர்களை வைத்தவர் ...அவருக்கு தன் சகோதரர்களை குறை சொல்ல (குறைந்த பட்சம் இங்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சியை கொட்டும் பலரை விட) அருகதை உண்டு..ஆனால் பேசிய இடம் தான் தவறு.
//கமலின் சிங்கப்பூர் பேச்சில் எனக்கு உடன்பாடு கிடையாது//
ஜோ அவர்களே,
உங்கள் கூற்று உண்மை. அன்றைக்கு நடந்தவற்றை ஊலடகங்கள் வாயிலாகவும் நண்பர்கள் வாயிலாகவும் அறிந்தேன். நீங்கள் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம்.
கமல் என்று மட்டுமில்லை.. பலரும் வெளிநாடு சென்றபின் தமிழகத் தமிழர்களைத் திட்டுகின்றனர். என்னவோ இவர்கள் அங்கேயே குடி இருக்கப் போவதுபோல!
// என்னவோ இவர்கள் அங்கேயே குடி இருக்கப் போவதுபோல! // அங்கேயே குடியிருந்தாலும் அப்படி பேச அவர்களுக்கு உரிமை இல்லை என்பதே என் கருத்து...
சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் புஷ்பா... ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் நிறைய கிடைக்க மாட்டேங்கிறத் என்றுதானே போராட்டமெல்லாம் நடத்துகிறார்கள்... நம் கேள்வி என்னவென்றால், ஏன் எப்பொழுது வெளிநாட்டுக்கு சென்று வந்தாலும் ஒரே மாதிரியாக அந்த நாட்டில் இருக்கும் ஏதோ ஒன்று நம் நாட்டை விட மேன்மையானது என்று சொல்லவேண்டும் என்பதுதான்...
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்தார்போல் என்றொரு பழமொழி உண்டு. ஆனால் எந்த பட்டிக்காட்டானும் மிட்டாய்கடையைப் பார்த்து வாய் பிளந்து நின்று நான் பார்த்தது இல்லை. வெளிநாடு செல்லும் கமலோ, திருமாவோ படிக்காதவர்கள். படித்தவர்கள். அவர்களுக்குத் தெரியும் தமிழ், தமிழர், தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடு என. வெளிநாடு சென்றதும் அவர்கள் கொடுக்கும் விருந்தில் தன்னை மறந்து அவர்களைப் பாராட்டுவதாக நினைத்து தம்மைத் தாமே கு(ரை)றைத்துக் கொள்கின்றனர் என்பது என் கணிப்பு.
இளையராஜா மெட்டமைத்து ஒரு படத்தில் பாடுவார், "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?" மீண்டும் ஒருமுறை இந்தப் பாடலை எனக்காகக் கேட்டுப் பாருங்கள்.
thiruma enpavar 'phd' ku register panniyulladhaaga padiththa nyabagam.
avarukku oor suttri kaatiyavargal aditha gapsakalayum, avargalayum paarthu oru velai
avar yemandhirukalam. aanal indha katurayaal edhum kudi muzugaadhu. kalavarangal
vedikaadhu. sadharana payana katurai. idhil arasiyalum illai. indha katturaiku
ithanai jalliyoo jalli.
ella pulam peyarndhavargalum (peyaradhavargalum ) edho oru nerathil muttai kadayai paarpadhu pol paathadhillai
endru manam vittu sollungal.
தாஸ¤... உம்ம பின்னூட்டத்த படிச்சேன்... இப்ப திருமாவ சொன்னதுதான் ஒரு ப்ரச்னையா போச்சி இல்ல...
// ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் // அப்படீன்னு சொல்றீரே அத பத்தி யாருக்கும் ஒரு ப்ரச்னையும் இல்லை... ஆனா நீர்
// ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழ்நாட்டை விடதமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் // அப்படீன்னு சொன்னா கேள்வி வரத்தான் செய்யும்... எப்படி கண்டுபிடிக்கறீங்க... அளவுகோல் என்னன்னு கேக்க கூடாதா...
கூடாது, எங்க இஷ்டம்.. அப்படித்தான் பேசுவோம்னா ரொம்ப சந்தோஷம்... அப்படியே இதயும் போட்டுக்குங்க...
நியூயார்க்கில் இருந்து பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து பார்ப்பதை விட நிலா அழகாக இருக்கிறது
சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை விட அழகாக இருக்கிறார்கள்
ஆஸ்திரேலியாவில் பிச்சை எடுக்கும் ஒரு தமிழனை பார்த்தேன்.. அவன் தமிழ்நாட்டு பிச்சைகாரனை விட கல்வியறிவில் சிறந்து விளங்குகிறான்.. ஏனெனில் அவன் ஆங்கிலத்தில் பிச்சை எடுக்கிறான்...
அட போங்கய்யா...
திருமாவளவன் அவர்கள் எழுதிய "அடங்க மறு" எனும் கட்டுரைத் தொகுப்பினைப் படித்துப் பாருங்கள் முகமூடி அவர்களே! இந்தியா டுடேயில் அவர் தொடராக எழுதியதன் புத்தகம். அவரை ஒரு சாதிய அரசியல்வாதியாகவே நினைக்கும் நீர், மாயவரத்தான், டோண்டு மற்றும் இன்னபிற தலைகள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நல்ல இலக்கியப் புத்தகம். திருமா எனும் சிந்தனையாளரை அது உமக்குக் காட்டும்!
ஒரு இடத்தில் ஒன்று எளிதாக கிடைக்கும் போது அதன் இனிமை தெரியாது, கிடைக்காதபோதுதான் போற்றி புகழத்தோன்றும் இதே தான் தமிழ் உணர்வு பற்றியும்
தமிழ்நாட்டில் இருக்கும் போது சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, இன்னும் பல வழிகளில் ஏதோ ஒன்றின் வழியாக அடையாளம் (ஐடென்டிட்டி) கிடைக்கின்றது ஆனால் வெளிநாட்டில் தமிழ் மொழியின் வழியாகத்தான் அடையாளம் கிடைக்கின்றது, இது வரை தமிழகத்தில் மொழியினால் எனக்கு நட்பு கிடைத்ததில்லை, இங்கே தமிழ் மொழியால் பலரின் நட்பு கிடைத்துள்ளது...
இது போன்ற செய்திகள் ஒரு வேளை திருமா வெளிநாட்டில் மொழியுணர்வு அதிகமாக இருக்கும் என்பதற்கான காரணிகளாக இருக்கலாம்
அட! தாஸ் பதிவுல போட்ட பின்னூட்டத்த நானும் இங்க போட்டுகிறேன்
தாஸ்,
கமலின் பேச்சை உங்களோடு சேர்ந்து நானும் கண்டித்திருக்கிறேன் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன் .அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் ..சிங்கை வருவதற்கு முன்னர் நானும் கூட கமல் போலத்தான் நினைத்திருந்தேன் (நீங்கள் கூட இருக்கலாம்)..ஏதோ சிங்கப்பூர் தமிழர்கள் தெள்ளுத்தமிழில் துள்ளி விளையாடுவார்கள் என்று ..ஆனால் இங்கு வந்து சில காலங்களுக்கு பின்னர் தான் புரிந்தது..ஊடகங்களில் பணியாற்றும் ஒரு சிலர் ,சில தமிழார்வலர்கள் ,வெகு சில நல்ல உள்ளங்கள் தமிழை பேணிக்காக்கும் அதே நேரத்தில் ,அடுத்த தலை முறை தமிழை கைகழுவும் நிலை தான் இருக்கிறது என்று ..
கமல் போன்ற பிரபலங்களை இங்கு அழைத்து வருபவர்கள் ,அவரோடு அளவளாவ வாய்ப்பு கிடைத்தவர்கள் கண்டிப்பாக தமிழார்வம் மிக்கவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் .கமல் அதை சிங்கப்பூருக்கே பொது என்று நினைத்துக்கொண்டதாகவே படுகிறது ..சிங்கையில் உள்ள இளைய தலைமுறையின் தமிழ் அக்கறையை ஒப்பிடும் போது தமிழகம் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை (கவனிக்க : தமிழகம் என்பது சென்னை மட்டுமல்ல)..
ஆனால் இதை வைத்துக்கொண்டு கமலின் தமிழார்வத்தை குறை சொல்லி ஜல்லியடிப்பது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல .அவர் தமிழ் நாட்டில் சொல்லட்டும் என்று பல முறை கூறுகிறீர்கள் ..பல முறை தன்னுடைய பேட்டிகளிலும் ,திரைப்படங்களிலும் சொல்லியிருக்கிறார்.ஆனால் சிங்கப்பூரில் அவர் உண்மை தெரியாமல் உளறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன்
முகமூடியாரே.. பாத்து.. பாத்து.. தொல் திருமாவளவன், அன்புத்தோழி என்ற படத்தில் புரட்சிவாதியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கையில் துப்பாக்கி ஏந்திப் போராடும் மாவீரனாக சத்தம் இல்லாமல் நடித்து வருகிறார், என்று செய்தி வந்திருக்கிறது.
அடுத்த வாட்டி தொல் திருமாவளவன் பறக்கும் போது, முன் கூட்டியே வெஜிடேரியன் சாப்பாட்டுக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு நினைவு படுத்தி விடுங்கள்.
சரி, உங்க கருத்து ??