<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மஞ்ச மாக்கானும் பூதங்களும்


ஒரு ஊருல ஒரு மஞ்ச மாக்கான் இருந்தான். அவனுக்கு ஒரு நாள் ஒரு அற்புத வெளக்கு கெடச்சிது. ஹா அடிச்சிதுறா லக்கி ப்ரைஸ்னு அதை தேய்ச்சான். வழக்கம் போல ஒரு பூதம் வரும்னு பாத்தா, ஏகப்பட்ட பூதங்க வந்துடிச்சிங்க. இப்ப ப்ரச்சின என்னான்னா அந்த பூதங்களுக்கு மாக்கான் ஏதாவது வேல கொடுத்துகிட்டே இருக்கணும். இல்லன்னா அதுங்களுக்கு அறிவு வந்துடும். அதுங்களுக்கு அறிவு வந்துட்டா அப்புறம் அவனுக்குத்தான் ப்ரச்சினை.

என்ன பண்றது.... சரி எல்லாம் போயி மரம் வெட்டுங்கன்னு உத்தரவு போட்டான். கிடுகிடுன்னு எல்லா பூதங்களும் மரத்த வெட்டி ரோட்டுல போட்டுட்டு அடுத்த வேல என்னான்னு கேக்குதுங்க. சரி இருக்கவே இருக்குது பஸ்ஸ¤, ஓங்க அப்பனுதா எங்க அப்பனுதா போயி அத்த கொளுத்துங்கன்னான். எல்லாம் ஜாலியா போயி பஸ்ஸ கொளுத்திட்டு இப்ப என்னாங்குதுங்க. ஹா மாட்னோம்டான்னு நெனக்கிறதுகுள்ள அவன் சுக்ற தெச அடுத்த வேல தானா வந்திருச்சி. தூக்குங்கடா படப்பொட்டிங்களன்னான் நம்மாளு. சூப்பரு வேலடா மக்கான்னு எல்லா பூதமும் படப்பொட்டிய தூக்கிக்கிட்டு போயி காட்டுல மறச்சி வச்சிட்டு குத்தாட்டம் போட்டிச்சிங்க.

இந்த சமயத்தில என்னாச்சின்னா, கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வைங்கற மாதிரி நம்மாளுக்கு திடீர்னு (சினிமா) தமிழ் மேல பாசம் பொத்துகிச்சி. போதா கொறக்கி பிசாசு கூட்ட தலைவன் ·பாரின் ஷ¤ பக்கிரி வேற எனக்கும் (சினிமா) தமிழ் மேல பாசங்கறான். கள்ளு குடிச்ச குறங்க தேளும் கொட்னா மாதிரி பூதங்களோட இப்ப பிசாசுங்க வேற கூட்டணி சேந்துகிச்சா பேனற கிழிக்கிறதென்னா, தியேட்டர் ஓனற மெரட்டுறதென்னான்னு, ஒரே குஷியும் கும்மாளமும்தான்.

தமிழயும் பண்பாட்டயும் காப்பாத்த வேண்டியது நமக்கும் கடமைங்கறதால, அதுக்காக ரொம்ப போறாடுற மாக்கானுக்கும் பக்கிரிக்கும் என்னால முடிஞ்ச அளவுல சில யோசனைங்க சொல்லியிருக்கேன். ஒங்களால முடிஞ்ச அளவுல யோசனை இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்க.

1. காலம் காலமா தமிழனுக்கு அடையாளம் கோமணம்தான். இப்ப மேற்கத்திய கலாச்சாரத்தினால அத்த வுட்டுட்டு எல்லா தமிழனும் ஜட்டி மாட்டிக்கிட்டு அலையிறான். இப்படியே போனா அடுத்த தலைமுறைக்கு கோமணம்னா என்னன்னே தெரியாம போயிடும். அதனால எல்லா தமிழனும் கோமணம்தான் கட்டணும். (மாண்புமிகு மத்திய அமைச்சர்கள் ரெண்டு பேருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு)

2. சினிமா நடிகனுங்க கார் வச்சிக்கறதால அவனுங்கள அப்பிடியே ·பாலோ பண்ற வீணா போன தமிழ் இளைஞ்சனுங்க கட்ட வண்டியோட அருமையே தெரியாம கார் கார்னு திரியறானுங்க. அதனால சினிமா நடிகனுங்க எல்லாரும் கட்ட வண்டிதான் வச்சிக்கனும். மீறி ஓட்டினாலும் கார்ங்கள கொளுத்த கூடாதுன்னு பூதங்களுக்கு கட்டள போட்டுறுக்கேன். அதையும் மீறி அதுங்க எதாவது பண்ணா நான் பொறுப்பு இல்ல.

பிகு: மஞ்ச மாக்கான், பக்கிரி, பூதம், பிசாசு, தமிழன் எல்லாம் நம்ம கற்பனையே. யாரையும் குறிப்பது அல்ல.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


வணக்கம்!
"புதுசா" வந்தாக்கள் வரவேற்கிறது ஒரு பண்பாடுதானே. அதுதான் வருக வருக எண்டு வரவேற்கிறன்.
 



நன்றி திரு. வன்னியன். அப்படியே என் கன்னிப்பதிவை பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்தாள் மகிழ்ச்சியடைவேன்.

முகமூடி
 



வாங்க முகமூடி,
உங்கள் பதிவுக்குத் தொடர்பான பதிவு இங்கே. இவ்விரு பதிவுகளையும் ஆழ்ந்து நோக்கும், சற்றாவது சிந்திக்கும் பழக்கம் உடைய, நடுநிலை மனம் கொண்டோரின் சிந்தனை கீழேயுள்ள பதிவின் கருத்துக்களை ஒட்டியே இருக்கும்.
http://kumizh.blogspot.com/2005/04/blog-post.html
 



Vazhthukkal Mugamudi. Pathivu nanraga vanthirukku. Thodarnthu Ezhuthungal
 



முத்து மற்றும் அனானிமஸ் - உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. முத்து உங்கள் இணைப்பை நான் மிகவும் ரசித்தேன். நன்றி.
 



ஐயா முகமூடி,

ஒங்க 2 பதிவுகளையும் படித்தேன்! சூப்பரோ சூப்பர்! நல்ல கற்பனை வளம் மிக்கவர் தான் தாங்கள் ;-)
தொடர்ந்து இம்மாதிரி வேஷம் போடும் சென்மங்களை தோலுரியுங்கள்!!! நிறைய எழுத வாழ்த்துக்கள்!

தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு தங்களை வருக வருக என வரவேற்கிறேன் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா
 



Welcome.. welcome.. kalakunga.... as u r in aborad, no fear of auto!
 



நல்லா எழுதனீங்க ராசா.குமிழ் அய்யா கூட எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆனாலும் நீங்க எல்லாரையும் பொதுமை படுத்தி இருக்க வேனாமுன்னு தோனுது
 



அப்படியே மருத்துவர் இராமதாசுவின் மீதான ஊடக வன்முறை தாக்குதல் பற்றிய எனது பதிவை படியுங்கள்.
மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1
இதுவரை 3 பதிவுகள் எழுதியுள்ளேன்.

பத்திரிக்கைகள் விதைத்த விட வித்துக்கள் எத்தனை தூரம் ஒரு குடிமகனின் மனதில் ஆலமரமாக வளர்ந்துள்ளது என்பதற்கு உங்கள் பதிவுகள் ஒரு உதாரணம்.
 



நன்றி குழலி. பத்திரிக்கைகள் விதைத்த விட வித்துக்கள் எல்லாம் இல்லை. திறந்த எண்ணம் கொண்ட எல்லாருக்கும் வரும் சிந்தனைதான். ராமதாஸ் மாதிரி சந்தர்ப்பவாத, சுயநல, சாதி கண்ணோட்டம் கொண்ட அரசியல்வாதிகள் சுயசிந்தனை (?!) யுடன் தன்னை பின்பற்றும் தொண்டர்படையை மட்டும் கெடுத்தது பத்தாது என்று ஒரு தலைமுறையையே பாதிக்கும் முடிவு எல்லாம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்களே என்பதுதான் தாக்குதலுக்கு காரணம். பி.கு: உங்கள் பதிவை நான் இன்னும் படிக்கவில்லை. படிப்பதற்கு முன் ராமதாசை ஏன் எல்லாரும் தாக்குகிறார்கள் என்று ஒரு வலைப்பூ பின்ன எண்ணம்.
 



எல்லாரையும் பொதுமைப்படுத்தவில்லை மோகன். தலைவர் சொன்னார் என்று மரத்தை வெட்டி/ பேருந்தை கொளுத்தி பேயாட்டம் போட்ட 'மனிதர்'களை மட்டும்தான் சொன்னேன்.
 



// பி.கு: உங்கள் பதிவை நான் இன்னும் படிக்கவில்லை. படிப்பதற்கு முன் ராமதாசை ஏன் எல்லாரும் தாக்குகிறார்கள் என்று ஒரு வலைப்பூ பின்ன எண்ணம்.
//
ராமதாசை ஏன் எல்லாரும் தாக்குகிறார்கள் என்று ஒரு வலைப்பூ பின்னுவதற்கு முன் ஒரு முறை என் பதிவுகளை படியுங்கள், உங்களுடைய பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைக்கும்
 



Mugamoodi Anna,

I cannot believe that this is your first topic. TN politics is getting worse day by day. T.R. Ba(a)lu and Arcot Ve(e)raswami have changed their names according to some idiot I mean numerologist. I expected a punch from you on this when this news came. Anyways, please come back soon.

"Aranai" Anani
 



சரி, உங்க கருத்து ??