<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

செக்கூலரிசம் - 8 வரி கவிதை


தலித் எழுச்சி நாயகன் திருமா வாழ்க

தேவேந்திரர்களின் இந்திரன் கிருஷ்ணசாமி வாழ்க
வயிறு காய்ந்தோர் வழிகாட்டி வாண்டையார் வாழ்க
பாட்டாளிகளின் பகலவன் மருத்துவர் வாழ்க
தமிழர்கள் மானம் காக்கும் கலைஞர் அய்யா வாழ்க
பாவப்பட்டவர்களின் தேவதை மாயாவதி வாழ்க
கால்நடைக்கும் கருணை செய்யும் லாலூஜி வாழ்க
ஜெ, உமா, அத்துவானி வாழ்க இல்லை, வாழ்க இல்லை.


8 வரி
கவிதைப்போட்டிக்கு ஏதோ நம்மாலான சிறு பங்களிப்பு...

பரிசு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கவிதையை (?!) எழுதவில்லை நான்... இதை படித்த பிறகாவது
இணைய நண்பர்கள் என்னை செக்கூலரிஸ்ட் (secularist) என்று அங்கீகரித்து, இனி வரும் என் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுப்பார்கள் என்ற நப்பாசைதான்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


Sooper thalai sooper :-)
Aanaa, Appo kooda JJ, Advani ellarukkum Vaazga illainnu dhaan solreengalae oziya...Oziga Oziga nnu solla manasu vara maataengudhaey...Idhu eppdi irukku?!
 



இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்... இ.பொ.செக்கு முழு தகுதியும் வந்திடுச்சி சிஷ்யா...
 



கோடானு கோடி மக்களின் இதய தெய்வம், பார் புகழும் பாவேந்தன், எங்கள் ஆருயிர் தலைவர் அண்ணன் ராஜ கண்ணப்பனை வேண்டுமென்றே விடச் செய்தமைக்காக போராட்டம் நடத்தி தீக் குளிக்க வைப்போம் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.
 



அப்படியே முதல்யார்களின் மூத்த தலைமகன் A C சண்முகத்தை விட்டு விட்டதையும் நான் கண்டிக்கிறேன் !!!
 



முகமூடி,

உன்னால் ஏன் ஜெயலலிதா, அத்வானி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஒழிக என்று கோஷம் போட முடியவில்லை? எப்படிப் போடுவீர்கள்? நீங்கள் அய்யராயிற்றே!!!

நீங்கள் மட்டுமல்ல.. மாயவரத்தான், அருண்வைத்யநாதன், டோண்டுராகவன் போன்ற பார்ப்பன வலைப்பதிவர்கள் பலரால் இவர்களை ஒழிக என்று கோஷம் போட முடியாது! வாழ்த்தியே பழக்கப்பட்டவர்கள் நீங்கள். பழமையில் ஊறிப்போன மாங்காய் ஊறுகாய் போன்றவர்கள் நீங்கள்.
 



//வாழ்த்தியே பழக்கப்பட்டவர்கள் நீங்கள்.//

பரவாயில்லையே.. எதையோ சொல்லப் போய் வாய் தவறி உண்மையை ஒப்புக் கொன்டமைக்கு. ஆம்.. நாங்கள் வாழ்த்தியே பழக்கப்பட்டவர்கள் தான் - எல்லாரையும். அதான் பாஸிட்டிவ் அப்ரோச்.

உங்களை போல் எதற்கெடுத்தாலும் கண்டபடிக்கு திட்டி நெகட்டி அப்ரோச் என்ற பெயரில் இன்றைக்கு அறிந்து இன்றைக்கே போட்டு இன்றைக்கே தூர எரியப்படும் கிடாரங்காய் ஊறுகாயைவிட நன்றாக ஊறிய மாங்காய் ஊறுகாய் தான் ஆல்வேஸ் பெஸ்ட்.
 



"கோடானு கோடி மக்களின் இதய தெய்வம், பார் புகழும் பாவேந்தன், எங்கள் ஆருயிர் தலைவர் அண்ணன் ராஜ கண்ணப்பனை வேண்டுமென்றே விடச் செய்தமைக்காக போராட்டம் நடத்தி தீக் குளிக்க வைப்போம் என்று எச்சரித்துக் கொள்கிறேன்."

யாரை தீகுளிக்க வைப்பீர்கள்? அண்ணன் ராஜ கண்ணப்பனையா? பாவம் வ்ட்டுவிடுங்கள் அவரை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



"விரும்புவதையே நம்புகிறது மனம்.
ஏனெனில்
விரும்பாததெல்லாமே மிக மிக கனம்.

நம்புவதற்கு எளிது வேண்டும்
கடவுளானாலும் கரன்சியானாலும்!
அவரவர் மனதிலுண்டு ஒரு நம்பிக்கை
அதை தவிர்த்து
அடுத்ததெல்லாமே அவநம்பிக்கை."

(நம்பிக்கை கவிதைப்போட்டி பற்றி எழுதிகீறேன்னு கூட்டி வந்து இப்படி 'செக்யூலரிசம் கவிதை(?) எழுதுனத்துக்கு பழி வாங்க வேற வழி தெர்லீங்க - மத்தபடி, உங்க கவிதைல இருக்கிற அல்லது இல்லாமலிருக்கிற நம்பிக்கையெ நான் குத்தம் சொல்ல வர்லீங்க)
 



தலை இங்கே ... பூ அங்கே...
 



ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...

இது எனது பங்களிப்பு....
 



//யாரை தீகுளிக்க வைப்பீர்கள்? அண்ணன் ராஜ கண்ணப்பனையா? பாவம் விட்டுவிடுங்கள் அவரை.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

உண்மைதான் ராகவன் அவர்களே,

கண்ணப்பன், ஏ.சி.சண்முகம், திருமாவளவன், ராமதாஸ், கருணாநிதி, கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களை தீக்குளிக்க வைப்போம். ஆனால் ஜெயலலிதா, இராம.கோபாலன், சோ, அத்வானி போன்ற "நமது இன" தலைவர்களை விட்டுவிடுவோம். அவர்கள்தான் நம் இனத்தினை நன்கு உரம் போட்டு வளர்க்கிறார்கள்.
 



ஐயா,

நீங்கள் எதையும் ஸீரியஸாய் எடுத்துக் கொள்வதில்லை எனத் தெரிகிறது........

இந்தக் கவிதையை 'எந்த நம்பிக்கையில்' போட்டிக்கு அனுப்பினீர்கள்?

என்றும் அன்புடன்,
ரங்கநாதன்
 



This comment has been removed by a blog administrator.
 



சரி, உங்க கருத்து ??