<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d3361231228256067100', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அப்படி போடு அறுவாள (சூன் மாத டாப் 10)


டாப் 10.
நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என் பதற்காகத்தான்; நான் ஒன்றும் அரசியல் ஆதாயத்துக்காக தனி தெலுங்கானா பிரச்னையை கையில் எடுக்கவில்லை. "சமமான ஆந்திரா' கோஷம் போடும், சந்திரபாபு, அடுத்த தேர்தலில் தெலுங்கானாவில் தலித் தான் முதல்வர் என்று வாக்குறுதி அளிக்க தயாரா?' - சவால் விடுபவர் நடிகை விஜயசாந்தி (விஜயசாந்திக்கு நடிக்க தெரியலைன்னு யாருப்பா சொன்னது... இக்கட ச்சூடு...)


டாப் 9. திமுக கூட்டணியில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது. குழப்பம் ஏற்படுத்த நினைப்போரின் செயல்களால் பாமக தொண்டர்கள் ஏமாந்து விடக்கூடாது - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (நம்மால் மட்டும்தான் குழப்பமே ஏற்படும் என்பதால் இதில் நாமே குழம்புவதற்கு ஒன்றுமில்லை)

டாப் 8. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னை சென்ட்ரலில் இராதாகிருஷ்ணன் தலைமையில் 100 பா.ஜ.க வினர் மறியல் செய்து கைதாகினர்... மேலும் தர்மபுரியில் 50 பா.ஜ.க வினர் கைதாகினர் (இப்படி தமிழக பா.ஜ.க வினர் எல்லாரும் ஒரே நாள்ல கைதாகிட்டீங்களே... உங்க கட்சி செய்ல்பாடு இதனால ஸ்தம்பிக்காதா?)

டாப் 7. சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்ள சென்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டவுன் பஸ்சிற்கு தீ வைத்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை தேடிவருகின்றனர். (கூட்டணி கட்சியோட கண்டுபிடிப்ப நீங்க செய்யறீங்களே... அவங்க கோச்சிக்க மாட்டாங்களா...)

டாப் 6. இயக்குநர் ராம. நாராயணனின் செல்லக்கிளி என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை காலை திடீரென பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் சென்ற அவர்களை விமான நிலையத்தில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். (போற போக்க பாத்தா *** போறதுக்கெல்லாம் வழியனுப்ப போவாங்க போலருக்கேப்பா...)

டாப் 5. ஈரோடு அருகே விவசாயப் பண்ணை வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த நான்கு பேரை கிராம மக்கள் வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவரான முத்துச்சாமி என்பவர் எழுமாத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக நிர்வாகி (எவ்வளவு நாள்தாங்க வேலைய ஒரே மாதிரியே செய்யறது... ஒரு மாறுதலுக்கு அதே வேலைய வித்தியாசமா செய்யலாம்னு பாத்தா...)

டாப் 4. விடுதலைப்புலிகளுக்கும், அல்குவைதா தீவிரவாதிகளுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. அல்குவைதா தீவிரவாதிகளுக்கு புளுடோனியம் தேவைப்படுகிறது. இதை கல்பாக்கம் மற்றும் மும்பை அருகே உள்ள டிராம்பே ஆகிய இடங்களில் இருக்கும் அணு உலைகளில் இருந்து திருடுவதற்காக அந்தந்த இடங்களின் அருகே விடுதலைப் புலிகள் ரகசிய முகாம் அமைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று நான் கூறியதையடுத்து ராமேஸ்வரம் பகுதியில் போலீசார் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைத்துள்ள விமான தளத்தை நமது விமானப் படையை அனுப்பி அழிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு நான் கடிதம் எழுதினால் அதை சசிகலா கிழித்து எறிந்து விடுவார். அதனால் தான் பத்திரிகைகள் மூலம் கோரிக்கை வைக்கிறேன் - ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி (நமக்கு வேல வக்காத ஒரே மனுசன் சுசாமிதான்யா...)

டாப் 3. தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பெண்கள் உட்பட 300 பேருக்கு ஆட்டோ ரிக்ஷாக்களை நேற்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார் (அம்மா ஆட்டோ ரெண்டையும் ஒரே செய்தில பாக்குற இதய பலவீனமுள்ள மனுசங்கள கருத்தில் கொண்டு இனி இது போன்ற செய்திகளை ஜாக்கிரதையாக அச்சிலேற்றும்படி...)

டாப் 2. பெட்ரோல் பங்க் டீலர்கள் 5 சதவீத கமிஷன் கேட்பது கேலிக்குரியது - மத்திய பெட்ரோலிய அமைச்சர் மணிசங்கர் அய்யர். (அரசியல்வாதிங்க ரேஞ்சுக்கு சாமான்யர்கள் பேசுறது கேலியாக இருக்கும்னு தெரியாதா)


டாப் 1. மரணமடைந்தோர்க்கு ஆண்டுதோறும் திதி, திவசம் என்ற பெயரால் புரோகிதர் மூலம், அரிசி, காய்கறிகள், காசு பண தட்சணை யெல்லாம் அனுப்புகிறோமே, இறந்தோர் தான் மறு ஜென்மம் எடுத்திருப்பாரே... அங்ஙனமாயின் அவருக்கு புரோகித மந்திரப்படி அனுப்பிய அரிசி, பருப்பு, காய்கறி, பணமெல்லாம் எங்கே போய்ச் சேரும்? யார் வாங்கிடுவர்? - கருணாநிதி (பெரியார் சிலைக்கு மாலை போட்டு கண் மூடி கை கூப்பி தியானிக்கும் அக்கணத்தில் கருணாநிதிக்கு இச்சிந்தனை வந்தது என்பதை சுயமரியாதை உள்ள பகுத்தறிவு கொண்ட தமிழன் நம்ப மாட்டான்)

சூப்பர் டாப். சென்னையில் மோட்டார் வாகனச் சோதனை மையம் அமைப்பது தொடர்பாக நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி முயற்சிகள் எடுத்த போது அதற்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, கருணாநிதி இத்திட்டத்திற்கான நற்பெயரைத் தட்டி செல்ல முனைகிறார். சாதனைகள் யாவுமே அவருடைய தலையீட்டினால் தான் சாத்தியமாயிற்று போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது அவரது வாடிக்கை -முதல்வர் ஜெயலலிதா (உங்களுக்காவது வெளில சொல்லி மனச தேத்திக்க முடியுது... சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம புழுங்கிகிட்டே சேது சமுத்திர திட்டத்துல யாரோ மனம் கலங்கியிருந்தாங்களாமே... )

கொசுறு. இந்தியாவில் எப்பொழுதுமே பரம்பரை ஆட்சிதான் நடந்து வருகிறது. ஒரே ஒரு குடும்பத்தினர் தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்துள்ளனர். மவுரியர், முகலாயர், கருணாநிதி, சேர, சோழ, பாண்டியர்கள் என ஒரு குறிப்பிட்ட பரம்பரை ஆட்சிதான் இங்கு நடந்திருக்கிறது (கருத்தின் முடிவில் வர வேண்டிய பெயர் கருத்துக்கு நடுவில் தவறாக அச்சடிக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்)

மே மாத டாப் 10
ஏப்ரல் மாத டாப் 10


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இது என்ன டாப் டென்? இதை விட டாப்பான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..!

இப்போது பரபரப்பான பார்வையில்..!!

நம்பர் 1 கொண்டாட்டம்.

மாயவரத்தான் வலைப்பூ... எப்பவுமே நம்பர் 1.
 பி.ஜே.பி கமெண்டை தவிர மற்றவையெல்லாம் சுமார்தான். பி.ஜே.பி கமெண்ட் பிரமாதம்
 //(இப்படி தமிழக பா.ஜ.க வினர் எல்லாரும் ஒரே நாள்ல கைதாகிட்டீங்களே... உங்க கட்சி செய்ல்பாடு இதனால ஸ்தம்பிக்காதா?)
//

என்ன திடீரென பா.ஜ.க லாம் ஓ.... நடுநிலையோ?

கலக்குங்க.... முகமூடி
 கலக்கிட்டீங்க அண்ணாச்சி. எப்போ ஆகஸ்ட் மாசம் டாப் டென் வரும் :-)
 அது என்னது ஜூலை மாசம் இல்லாம ஆகஸ்ட் மாசத்தை பத்தி கேக்குறீங்க?!
 முகமூடி
டமாசு ...டமாசு .. சரி அதென்ன முக்கியமான ஒரு கட்சி (ப.ம.க) பத்தி செய்தி எதுவும் இல்லெயே..அட அதான்பா நம்ம பச்சொந்தி மக்கள் கட்சி.. !

//அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..!

ப்போது பரபரப்பான பார்வையில்..!!///
இலவசமா சோப்பூ , சீப்பூ , ஷாம்பூ ஏதாச்சும் கொடுத்தீங்கனா. பார்க்கலாம்


வீ எம்
 "விடுதலைப்புலிகளுக்கும், அல்குவைதா தீவிரவாதிகளுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது. அல்குவைதா தீவிரவாதிகளுக்கு புளுடோனியம் தேவைப்படுகிறது. இதை கல்பாக்கம் மற்றும் மும்பை அருகே உள்ள டிராம்பே ஆகிய இடங்களில் இருக்கும் அணு உலைகளில் இருந்து திருடுவதற்காக அந்தந்த இடங்களின் அருகே விடுதலைப் புலிகள் ரகசிய முகாம் அமைத்துள்ளனர்.....- ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி"

அட..அட...அட.நம்ம சூனாசானாவுக்கு எப்படித்தான் இந்த மாதிரி எல்லாம் நியூஸ் எல்லாம் கிடைக்குதோ.

முகமூடி அய்யா,என்னோட கருத்துப் படி இந்த செய்திக்குத்தான் நீங்க முதலிடம் கொடுத்திருக்கணும்.

http://konjamkonjam.blogspot.com
 "உங்களுக்காவது வெளில சொல்லி மனச தேத்திக்க முடியுது... சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம புழுங்கிகிட்டே சேது சமுத்திர திட்டத்துல யாரோ மனம் கலங்கியிருந்தாங்களாமே..."

தமிழ் நாட்டிலிருந்து சென்ற மந்திரிகளுள் டி.ஆர். பாலுவைப் புகழ்ந்து அம்மா கருணாநிதி அவர்கள் வயிற்றில் ஒரு தடவை புளியைக் கரைத்தாரே, நினைவுக்கு வருகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 >>>>(நமக்கு வேல வக்காத ஒரே மனுசன் சுசாமிதான்யா...)<<<<

Loved it!
:))

.:dYNo:.
 மாயவரத்தான்... இலவச விளம்பரமா... அங்க வந்து வச்சிக்கறேன் கச்சேரிய... (இலவச விளம்பரத்துக்குத்தான் ஞானபீட பதிவு இருக்குல்ல... )

நன்றிங்கோ ராஜ்குமார்

குழலி பா.ஜ.க வ பத்தி பேச நமக்கு ஒரு தயக்கமும் இல்ல... ஆனா பா.ஜ.க பத்தி ஏதாவது செய்தி வந்தாத்தானே... முத பக்கத்துல இருந்து கடைசி பக்கம் வரக்கும் டாக்டர் அய்யாவே புடிச்சிக்கிறார்

மாத இறுதியில் விஜய்... ஆமா மாயவரத்தான் கேட்ட மாதிரி ஏன் ஜூலை மாதத்த விட்டுட்டீங்க

வீ.எம்... நம்ம கட்சிய பத்தி நாமே விளம்பரம் செஞ்சுக்க நாம என்ன காகிதப்பூ கடையா... நம்ம கடைக்கு மவுசே தனிதாங்க... சரி, நம்ம கட்சி பத்தி ஊர் உலகத்துல நல்ல விதமா பேசிக்கிறாங்களா...

நன்றி சுதர்சன்... கொடுத்திருக்கலாம், ஆனா சுசாமி சீரியஸா சொன்னாரான்னு ஒரு சந்தேகம்... அதான் ஜார்ஜ் புஷ் கிட்டயும் வ்ளாடிமிர் புடின் கிட்டயும் கேட்ருக்கேன்... கன்பர்ம் ஆனவுடனே மாத்திடறேன்

கலைஞருக்கு என்ன ஆச்சோ என்னமோ டி.ஆர்.பாலுவுக்கு கிலி கண்டிருக்கும் டோண்டு அவர்களே...

நன்றி டைனோ, கருத்தையா சுசாமியையா :-)

-- முகமூடி {சுயவிளம்பரம் தேவைப்படாத ஒரே பதிவு}
 கலக்குறீங்களே அண்ணாச்சி.
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link