<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அப்படி போடு அறுவாள (மே மாத டாப் 14)


சூப்பர் 14. ''தமிழ் இலக்கியம் குறித்து ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க கருணாநிதி தயாரா?'' -அதிமுக பிரச்சாரத்தில் விஜய டி.ராஜேந்தர் (இதயெல்லாம் கேக்கற நெலமயில என்ன வச்சிட்டியே ஆண்டவான்னு யாருப்பா அது கோபாலபுரத்துல)

சூப்பர் 13. இந்த தலைமுறை முன்னால் செல்லத் துடிக்கும் ஆர்வம் உள்ள தலைமுறை. அவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறேன் - நயனதாராவை உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டது பற்றி நடிகர் சிம்பு (அப்பனுக்கு புள்ள தப்பாம... சரி சரி, இதையே உளறல்னா அடுத்த கருத்த பத்தி என்னா சொல்வீங்க)

சூப்பர் 12. இந்தத் தேர்தலினால் தமிழக அரசியல் சூழ்நிலை மாறி விடப் போவதில்லை. எனவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் தவறில்லை. தேர்தல் பிரசாரத்தில் தி.கவினர் ஈடுபட மாட்டார்கள், தேவைப்பட்டால் காஞ்சிபுரத்தில் மட்டும் தனி மேடை அமைத்து பிரசாரம் செய்வார்கள். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதே நேரத்தில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் தமது ஆதரவு தொடரும் - தி.க. தீர்மானத்தில் வீரமணி (எத்த தின்னா பித்தம் தெளியும்னு அலையிறது இதுதான் போலருக்கு... பெரியார் ஆவி: : இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா ஒன்னு சொத்து சேக்காம இருந்திருப்பேன், இல்ல தி.க வையாவது கலைச்சிருப்பேன்)

சூப்பர் 11. சுயமரியதை திருமணங்களை அகில இந்திய அளவில் செல்லுபடியாகும் வகையில் சட்டமாக்க வேண்டும் - பிரதமருக்கு கருணாநிதி கடிதம் (அத்த ரெஜிஸ்டார் ஆபிஸ்ல பதிவு செஞ்சா செல்லுபடி ஆகாதுங்களாண்ணா)

சூப்பர் 10. காஞ்சிபுரம் தொகுதியில் எங்களது கட்சிக்கு 16,500 ஓட்டுக்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டியில் 17,000 ஓட்டுக்கள் உள்ளன. (அப்படியா?) எங்களை மதித்து, ஆதரவு கேட்கும் கட்சிக்கே ஆதரவு - மக்கள் தமிழ் தேசம் கண்ணப்பன். (சென்ஸஸ் எல்லாம் எடுத்து வச்சிகினு கெஞ்சறாரு.... யாராவது தயவு செஞ்சி மதிங்கலேம்பா)

சூப்பர் 9. திமுகவினரும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் தங்களையும் அறியாமல் செய்துவிடும் விதிமீறல்களை தேர்தல் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அதைப் புரிந்து கொண்டு, உடனே தவறை திருத்திக் கொள்கின்றனர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன் - கருணாநிதி (ஒரே தமாசுன்னாலும் இது மாதிரி அப்பப்ப வர டயலாக்னாலதான் 'அப்படி போடு அறுவாள' ங்கற நம்ம தலைப்புக்கே ஒரு மருவாதிங்கறன்)

சூப்பர் 8. தேர்தல் களத்தில் எங்களைப் போல் யாரும் தோற்றது இல்லை. களத்தை இழந்திருப்போமேயொழிய படித்ததை இழக்கவில்லை. அந்த யுத்தம் தொடரும் - மதிமுகவின் 12வது ஆண்டு தொடக்க விழாவில் வைகோ (இப்படி இழக்கறத்துக்கு மட்டும்தான் சண்டைகளத்துக்கு போறோம்னு முன்னமே சொல்லியிருந்தா மதிமுகவுக்கே வந்திருக்க மாட்டோமே தல)

சூப்பர் 7. பீகார் சட்டசபையைக் கலைத்தது நியாயமானது தான். ஆட்சியே அங்கு அமையவில்லை. குதிரை வியாபார முயற்சிகளுக்கு முடிவு கட்டப்பட்டு, ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைய வழி காணப்பட்டுள்ளது. இதை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூற முடியாது - கருணாநிதி (திமுக ஆட்சியை கலைத்தால் மட்டும்தான் அது ஜனநாயக விரோத நடவடிக்கை )

சூப்பர் 6. நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து வரும் உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசு படைத்து வரும் சாதனைகள் ஏராளம். சுனாமியால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளுக்காக 1,000 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கினோம் - ஜெயலலிதா (அப்படியே யாருக்காக உழைக்கறீங்க, யார் அக்கௌன்டில் ஒதுக்கினீங்கன்னும் சொன்னீங்கன்னா புண்ணியமா போவும்னு பொதுஜனம் சொல்லுது)

சூப்பர் 5. இது அண்ணா பிறந்த மண். ஆனால் திராவிட இயக்கக் கொள்கைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் வந்து இங்கு வாக்கு கேட்டுச் சென்றுள்ளார்கள் - காஞ்சிபுரம் தொகுதியில் ராமதாஸ் ( ஓட்டுப் போட அதிமுகவினர் ஒரு கையில் பணம் கொடுத்தால் இரு கை ஏந்தி அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை மட்டும் உதயசூரியனுக்குப் போட்டு விடுங்கள் - இதுவும் ராமதாஸ் சொன்னதுதான்... இதுதான் திராவிட இயக்க கொள்கையான்னு யார்ராவன் கோக்குமாக்கா கேள்வி கேக்குறது)

சூப்பர் 4. அதிகார பலத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை மிரட்டியும், பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கியும் இந்த வெற்றியைத் தட்டிப் பறித்திருக்கிறார்கள். இது பணநாயகத்திற்குக் கிடைத்துள்ள தற்காலிக வெற்றி, ஜனநாயகத்திற்குக் கிடைத்த தற்காலிக தோல்வி - இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து ராமதாஸ் (நாங்க ஜெயிச்சாத்தான் பணநாயகத்திற்குக் நிரந்தர வெற்றி, ஜனநாயகத்திற்குக் நிரந்தர தோல்வி ன்னு அர்த்தம்)

சூப்பர் 3. ஏனோதானோ என்று பேசுவதும், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம். ஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - கருணாநிதி (இல்ல இல்ல நீங்க நினைக்கிற மாதிரி தன்னைப்பத்தி எல்லாம் பேசிக்கல அவரு... ஜெயலலிதாவ பத்தி சொல்றாரு)


சூப்பர் 2. தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சக்திகள், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை வியாபாரத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க நடத்திய சூழ்ச்சி இந்தக் கலைப்பின் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது. கட்சித் தாவல் தடைச் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன – பீகார் நிகழ்வு பற்றி ராமதாஸ் (கட்சித்தாவல் பத்தி சொன்ன நீங்க கட்சி விட்டு கட்சி தாவறத பத்தியும் ஏதாவது சொல்லியிருக்கலாம்)

இந்த மாத சூப்பர் டாப் நாயகன்: அன்புமணி ::- நடிகர் விஜயகாந்த் இப்போது அரசியலுக்கு வரப்போவதாக கூறி வருகிறார். வந்து ஆட்சியை பிடிக்கும் கனவோடு கிளம்பியிருக்கிறார். அவருக்கு நாங்கள் யார் என்பதை புரிய வைப்போம் (காடுவெட்டி ரெடியா). சுயநலத்துக்காக அவர் அரசியலை பயன்படுத்த நினைத்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். (பாமக வின் patentஐ அனுமதியின்றி பயன்படுத்துவதாக காப்பிரைட் சட்டப்படி பாமக வழக்கு போடும்) அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை. (பச்சோந்தி கணக்கா தாவி தாவி முக்கறோம், எங்களுதே இன்னும் எடுபடல) ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள்... இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் எல்லா சினிமாக்காரர்களுக்கும் நாங்கள் எதிரிகள்தான் (அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல...)


ஏப்ரல் மாத டாப் 10 பாத்துட்டீங்களா?

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இதெல்லாம் நிஜமாகவே இவர்கள் கூறியது என்பதை நினைக்கும் போது தமிழத்தின் ஒளிமயமான எதிர்காலம் தெரியவேண்டும். அடைப்புக்குள் உங்கள்
விமர்சன்ம் நச்சுன்னு இருகுப்பா. ஜூன் டாப்ப எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஏமாத்தமாட்டாங்க.
 என்னங்க, ஒரே நகைச்சுவையா இருக்கு, நவரசங்களில் மத்த ரசங்களை எப்போ எழுத போறீங்க
 Supernna
 வாங்க சுரேஷ்... விமர்சனத்துக்கு நன்றி... அரசியல்வாதிங்க டாப்டென்ன அப்படியெல்லாம் கைவிட்டுட மாட்டாங்க கவலைப்படாதீங்க. அப்படியே நம்ம ஏப்ரல் டாப் 10 வாசிச்சீங்களா?
 புலிக்குட்டி, என்னோட மத்த பதிவுகள்ல சில பல மத்த ரசங்களையும் தெளிச்சிருக்கேன் பாருங்க... மேலும் பல சீரியஸ் ரசங்கள் தயாராகிகிட்டு இருக்கு. நேரப்பற்றாக்குறை. (சம்பளம் கேட்காத, 18-25 வயசுக்குள் தமிழ் எழுத தெரிந்த அழகான பெண் உதவிக்கு இருந்தா நல்லாத்தான் இருக்கும்)
 யோவ் முகமூடி, என்னப்பா போட்டு கலாய்சிக்கிட்டே இருக்க? அல்லாவற்றிலும் நக்கலோ நக்கல் இருந்தாலும் அன்புமணி ரொம்ப.........

எந்த ஊருல இருக்கீரு-னு சொன்னா காடுவெட்டி வர வசதியா இருக்கும்???
 ஏப்பு, அதுக்கு பயந்து தானே முகமூடியோட இருக்காரு.. நீங்க அல்வாசிட்டி சம்மியா? அனுகூல சத்ருவா?
 புலிக்குட்டி, ரகசியத்த மனசோட வச்சிக்கப்புன்னு காதோட சொன்னா இப்படியா ஊருக்கே கேக்கற மாதிரி சத்தமா சொல்றது...
 அட்டகாசமான பதிவு. அமர்க்களமான நையாண்டி. மிக ரசித்தேன்.
 முகமூடி,
னிசமாகவே இது தான் நடுனிலை.. இவ்வளவு அபத்தமாக உளறினாலும் இந்த தலைவர்கள் பின்னே செல்ல பெருங்கூட்டம் திரளுதே...படித்தவர்களும் தலைவர்களுக்கு "வக்காலத்து" (இதற்கு தமிழ் என்ன?) வாங்கி பேச, எழுத முற்படுகிறார்களே?

அன்புடன்
விச்சு
 நன்றி மீனாக்ஸ். அப்புறம் விஷி தலைவர்கள் பின்ன கூடற பெருங்கூட்டம் எல்லாம் உளறல் கேக்க கூடுதுன்னு நினைச்சீங்களா.... போவ வர லாரி, பிரியாணி, குவார்ட்டர், பேரணி மட்டும்னா தலைக்கு 75, பொதுக்கூட்டமும் சேத்துன்னா 100 ரூபாய்... படிச்சவங்க பேசி, எழுதறது மட்டும் இல்லாம ஒட்டும் போட்டாங்கன்னா, எதிர்காலத்துல கொஞ்சம் உளறல் கம்மியாகலாம்...
 //(எத்த தின்னா பித்தம் தெளியும்னு அலையிறது இதுதான் போலருக்கு... பெரியார் ஆவி: : இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா ஒன்னு சொத்து சேக்காம இருந்திருப்பேன், இல்ல தி.க வையாவது கலைச்சிருப்பேன்)//

KALAKKAL!!!!
 //சும்மா இருக்க மாட்டோம். (பாமக வின் patentஐ அனுமதியின்றி பயன்படுத்துவதாக காப்பிரைட் சட்டப்படி பாமக வழக்கு போடும்) அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை. (பச்சோந்தி கணக்கா தாவி தாவி முக்கறோம், எங்களுதே இன்னும் எடுபடல) //
Super!
 வாங்க தமிழன்... நன்றி. வலைப்பூ ஒன்னும் வச்சிக்கலயா நீங்க.. சல்லிசா கெடைக்குது... ஒன்னு ஆரம்பிங்க..
 //அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை. (பச்சோந்தி கணக்கா தாவி தாவி முக்கறோம், எங்களுதே இன்னும் எடுபடல) //

இதெல்லாம் இப்பிடி சத்தம்போட்டு முச்சந்தியில சொல்லலாமா முகமூடி அண்ணாத்தே???

just a reminder:
'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்.


குழலியின் விசயகாந்துவின் அரசியல் விஜயம் பற்றிய மீள்பதிவில் உங்கள் பின்னூட்டம்: பத்த வச்சிட்டியே பரட்டை ;) ;)
 // இப்பிடி சத்தம்போட்டு முச்சந்தியில சொல்லலாமா // என் தொண்டர் படை சொல்றத கேளுங்க :: என் தலைவன் மேல கைய வச்சா தமிழ்நாட்டுல ஒரு செடிய விடாம எல்லாத்தையும் வெட்டுவோம் (மரத்தைத்தான் ஏற்கனவே வெட்டிட்டாங்களே) 2 கோடி தொண்டர்களும் தீக்குளிப்பாங்க (முதல்ல தண்ணியில குளிங்கடா)... ஒன்னுமில்ல அனானிமஸ்... 3 ரசிகருங்க வச்சிருக்குற அஜீத் எல்லாம் முதல்வர் ரேஞ்சுல பீலா வுடும்போது நம்ம உட்டா என்னான்னு ஒரு ரோசனை... ஹிஹி...
 // பத்த வச்சிட்டியே பரட்டை // நம்ம ரஜினி ராம்கி வேலைக்கு சேந்த அன்னிக்கி ரிலீஸ் ஆன பதினாறு வயசுல படத்த ஞாபகப்படுத்தி அவருக்கு அடுத்த பதிவுக்கு மேட்டர் கொடுத்திட்டீங்க.... அவர் சார்பா ஒரு டாங்க்ஸ் (ராம்கி அண்ணாத்தே கோச்சிக்காதீங்க - வயச பத்தி சொன்னதுக்கு... ஒரு டமாஸ்தான்)
 This comment has been removed by a blog administrator.
 //சுயநலத்துக்காக அவர் அரசியலை பயன்படுத்த நினைத்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். (பாமக வின் patentஐ அனுமதியின்றி பயன்படுத்துவதாக காப்பிரைட் சட்டப்படி பாமக வழக்கு போடும்) அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை. (பச்சோந்தி கணக்கா தாவி தாவி முக்கறோம், எங்களுதே இன்னும் எடுபடல) ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள்... இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் எல்லா சினிமாக்காரர்களுக்கும் நாங்கள் எதிரிகள்தான் (அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல...)
//


அடடே.. இப்படி ஒரு கமெண்ட்டை உண்மையிலேயே மாயவரத்தான் மிஸ் பண்ணிட்டாம்ப்பா..!

அது சரி, எங்க ஊரு ரஜினி ராம்கி பதினாரு வயதினிலே ரிலிஸானப்ப வேலைக்கு சேர்ந்தாருன்னு ஏன் அவதூறு பரப்புறீங்க?! தெரியலைன்னா தெரியலன்னு கேளுங்க.. அதை சொல்ல தான் நாங்க இருக்கோமில்லே?!

ராம்கி அண்ணாச்சி.. தெரியாத்தனமா இவரு உளரிட்டாரு, கோச்சுக்காதீங்க.

பதினாரு வயதினிலே ரிலிஸானப்ப ரஜினி ராம்கி ரிட்டையர் ஆகிட்டாரு வேலையிலிருந்து (வி.ஆர்.எஸ். இல்லை) .!!
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link