<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

புத்தக விளையாட்டு - புக் மீம்


எழுத படிக்க தெரியாத என்னைய மஸ்ட்டூ இழுத்து விட்டுட்டாரு இந்த விளையாட்டுல... அவரு என்னமோ சும்மாதான் சொல்லியிருப்பாரா இருக்கும், நமக்கு இத்தான் சாக்குன்னு இறங்கிட்டேன் களத்துல... எல்லாரும் தான் படிச்ச/தனக்கு புடிச்ச புத்தகத்த பத்தியே சொல்றாங்களே, நாமாவது வித்தியாசமா நமக்கு பிடிக்க போற புத்தகத்த சொல்லலாம்னு ஒரு பட்டியல போட்டுட்டேன். இந்த புத்தகங்களையெல்லாம் இனிமேத்தான் யாராவது எழுதணும். மணிமேகலை பிரசுரத்துக்கு எழுதி போட்ருக்கேன்... பதில் வந்தா பாக்கலாம்
(கீழ்கண்ட தலைப்புகள்ல யாராவது எழுத நினைச்சீங்கன்னா, என்கிட்ட அனுமதி வாங்கனும். இல்ல, என் வக்கீல கலந்து ஆலோசிச்சு வழக்கு போடுவேன்)

உங்கள் ஆமையை ரேஸில் ஜெயிக்க வைக்க வேண்டுமா?
பொதுக்குழு கண்ணுக்கு மகனை மட்டும் தெரிய வைப்பது எப்படி?
(இரு புத்தக தள்ளுபடி - முதல் புத்தகம் வாங்குபவர்களுக்கு 2ம் புத்தகம் இலவசம்)

அம்மாவை புகழ ஆயிரம் வார்த்தைகள்
சட்டசபையில் அம்மா மனம் குளிரும் வகையில் சத்தம் போடுவது எப்படி?
சட்டசபையில் மேசையை தட்ட 100 வகைகள்.

தேர்தலில் தோற்றால் தமிழனை திட்ட 90 வாக்கியங்கள்
தேர்தலில் ஜெயித்தால் தமிழனை புகழ 2 வாக்கியங்கள்
(மேற்கண்ட இரண்டு புத்தகங்களுக்கும் திமுக வேட்டியுடன் வந்தால் தள்ளுபடி உண்டு)

கோமாளிகளின் கூடாரம் (முதற் பதிப்பு சட்டசபை படங்களுடன் வந்துவிட்டது இரண்டாம் பதிப்பில் சரிசெய்யப்பட்டது)
சொரணை இல்லை என்று திட்டினாலும் தமிழனுக்கு கோபம் வராததற்கு 10 காரணங்கள்
ஊர் கொளுத்துவது எப்படி (நவீன கண்ணகியின் கதை - திராவிட கட்சி வட்டங்களில் best seller. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்)
கூட்டணிக்கட்சிகளுக்கு பட்டை நாமம் போடுவது எப்படி?
பட்டாபட்டி அண்ட்ராயருடன் ரோட்டில் சிரிப்பு நாடகம் நடத்துவது எப்படி (எம்மெல்லே சிறப்பிதழ்)

செத்த பின்னும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?
உங்களிடம் ஏற்கனவே உள்ள பொருட்களை வைத்து சின்னதாக ஒரு மனிதன் செய்வது எப்படி?
வீணாய் போன தொலைபேசியில் பேசுவது எப்படி?
புத்தி இல்லாவிட்டாலும் புத்திசாலி ஆவது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

அழுகாச்சி சினிமா படங்கள் அகர வரிசைப்படி.
கிருதா அளவு எடுத்து வெட்டுவது எப்படி?

உங்களிடம் இருக்கும் பணத்தை பத்திரமாக எப்படி முதலீடு செய்வது? (முகமூடியின் பேங்க் அக்கவுண்ட் நம்பருடன்)

ஆட்டோ அனுப்புவது எப்படி?
புலிகளின் ஏகாதிபத்தியம் (இந்திய காடுகளில் வாழும் புலி என்னும் மிருகத்தை பற்றியது)

பாதுகாப்பாக வாக்கிங் போவது எப்படி?
பள்ளி பிள்ளைகளுக்கு பாலியல் துன்பம் கொடுத்தபிறகு இடமாற்றல் வாங்கி அதை தொடருவது எப்படி? (வாத்தியார்களுக்கு மட்டும்)


தன்னை தானே நக்குவது எப்படி
(நாய்களுக்கு மட்டும்)
30 நாட்களில் உங்கள் நாய் படிக்க வேண்டுமா?
(இரு புத்தகங்களும் சேர்த்து வாங்கி, 30 நாட்களில் உங்கள் நாய்க்கு படிக்க வராவிட்டால் எங்கள் பிரதிநிதிகள் உங்கள் நாயை நக்கிவிடுவார்கள்)

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நாய் கடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? - இந்த புத்தகம் கூட நல்லா இருக்கே... எங்கே கிடைக்கும் நாடோடி
 



இன்னாது எப்படி? வேண்டுமா? புத்தகமா இருக்கு.எல்லாம் மணிமேகலை பிரசுரமா?
 



// எல்லாம் மணிமேகலை பிரசுரமா? // பெரும்பாலானவை அல்வா (சிட்டி) பதிப்பகம் விஜய்
 



பக்கத்திலிருப்பவர் நம்மைப் பைத்தியம் என நினைக்காமல் இடைவிடாமல் பத்து நிமிடம் சிரிப்பது எப்படி?<(முகமூடியின் வலைத்தள முகவரி மற்றும் பதிவுகள் அடங்கிய குறுவட்டுடன் - தனி விலை)
 



நன்றி கோபி.. நல்ல புத்தகமாத்தான் தெரியுது... வட்டு வேற தரீங்க... அப்படியும் சரியா போணியாவலேன்னா சொல்லுங்க, பொரிகடலை, சாஷேயில் சாராயம், உகாண்டாவில் மந்திரித்த தாயத்து மாதிரி ஏதாவது இலவச இணைப்பு கொடுத்து கலக்குவோம்.
 



BEST கண்ணா BEST!
 



\\கற்பழித்துவிட்டு இடமாற்றல் வாங்கி சென்று கற்பழிப்பது எப்படி//
முகமூடி, கற்பழிப்பு என்ற பதம் தவறானது. பாலியல் வன்முறையென்று குறிப்பிடுங்கள். இது பற்றி எவரோ வலைப்பதிவில் விரிவாக எழுதியதாக ஞாபகம்.
 



தார் அடிப்பது எப்படி? ஆளை அடிப்பது எப்படி ?
 



நன்றி கோபி... நன்றி கிஸோ... உங்கள் கருத்தும் சரிதான்... (அந்த பதிவு கிடைத்தால் கொஞ்சம் சொல்லுங்கள்)இப்பொழுது மாற்றிய பிறகு நல்லா இருக்கு
 



நல்லாத்தான் இருக்கு லாடு உங்க பரிந்துரையும்... ஒ.பி.எஸ் பதிவுல உங்கள முதல்வர் ஆக்குற முயற்சி நடக்குது போலருக்கு... ஆரது அது நம்ம பினாமியா?
 



"பெட்டி தூக்குவது எப்படி" - அய்யனார் பெட்டி இல்ல, சினிமாப் பெட்டி...
 



http://malarkal.blogspot.com/2005/02/blog-post.html
 



இப்போதைக்கு 'இங்கே' hot டாபிக் விட்டுட்டீங்களே..

* வழக்கு போடுவது எப்படி?
* வழக்கு போடப் போவதாக மிரட்டுவது எப்படி?!
 



புதிய புத்தகங்களை பரிந்துரைத்த நாடோடி, கோபி,லாடு, அனானிமசு, மாயவரத்தான் ஆகியோருக்கு நன்றி... இந்த புத்தகங்கள் எல்லாம் முகமூடி புக் மீம் இரண்டாம் பதிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்
 



பதிவு இணைப்புக்கு நன்றி கிஸோ... இனி வரும் காலங்களில் மாற்று சொற்களை உபயோகிப்பேன்
 



Mumamoodi

Excellent. Enjoyed your sense of humor.

Regards
Sa.Thirumalai
 



நன்றி திருமலை... புக் மீம் இரண்டாம் பதிப்புக்கு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன்.. உங்கள் விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் சேர்த்துவிடலாம்.
 



//புக் மீம் இரண்டாம் பதிப்பு
I welcome it, release date?
 



நடுவுல ரஜினியோட புத்தக மீம் பதிப்பிச்சதால நம்ம பதிப்பு தேதி தள்ளி போகுது... கொஞ்சம் பொறுத்துகுங்க
 



சரி, உங்க கருத்து ??