<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பஸ் எரிப்பு வழக்கின் தீர்ப்பு - ஒரு வழியாக


தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு : 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு தூக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

- தினமலர் கடைசி செய்திகள்

இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுக்க ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளும் சட்ட போராட்டங்களும் இனி நிகழும். எனினும் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று பல காரணங்களுக்காக மனதார விரும்புகிறேன்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள் ::

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு

ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி


****

பிப் 16, 2007 - பத்திரிக்கை செய்தி குறிப்புகள்

முதலில் கண்ணில் பட்ட தினமலர் செய்தி ::

சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு துõக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அ.தி.மு.க., கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். மூன்று பேர் மீது பஸ்சை எரித்தது, மூன்று மாணவிகளை கொலை செய்தது மற்றும் 46 பேரை கொலை செய்ய முயற்சி செய்தது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என தீர்ப்பு கூறிய சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட் நீதிபதி கிருஷ்ணராஜா, இவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என சேலம் முதன்மை கோர்ட் நீதிபதி தெரிவித்திருந்தார். நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் தீர்ப்பு என்பதால், சேலம் நகரம் நேற்று பரபரப்புக்குள்ளாகி இருந்தது. நேற்று முன்தினம் மாலை முதலே அஸ்தம்பட்டி பகுதியிலும், கோர்ட் உள்ளேயும், வெளியேயும் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று கோர்ட்டில் கடும் கெடுபிடி நிலவியது. மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பின்னரே ஒவ்வொருவரும் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட் பணியாளர்கள், வக்கீல்கள் மற்றும் வழக்கு தொடர்புடையவர்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் பழனிசாமி (ஏ15), மாதேஸ் (ஏ27) ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் அழைத்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""உங்கள் மீதான குற்றம் நிரூபணமாகி உள்ளது. தண்டனை அளிக்க போகிறோம். ஏதாவது சொல்வதானால் சொல்லலாம்,'' என்றார். 28 பேரும் நீதிபதி முன் ஆஜராகி தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், கருணை காட்ட வேண்டும் என்றும், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்மதமே இல்லை என்றும் கருத்து கூறினர்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""தண்டனை அளிப்பது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. அதை மாற்ற முடியாது,'' என்றார். பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பில் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்களில் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவர் மீது பஸ்சை எரித்தது, பஸ்சுக்கு தீ வைத்து, மூன்று மாணவிகளை கொலை செய்தது, பஸ்சுக்குள் இருந்த 46 பேரை கொலை செய்ய முயற்சித்தது மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளன. இவர்களுக்கு கொலை செய்தமைக்கு மூன்று முறையும், கொலை முயற்சிக்கு 46 முறையும் தண்டனை வழங்கப்படும். மற்ற 25 பேர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, கலகம் ஏற்படுத்தியது
கொலை குற்றம் நிரூபணமான குற்றவாளிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் துõக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 25 பேருக்கும் மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

****

பிப்ரவரி 16, 2007 பஸ் எரிப்பு தீர்ப்பு: மாணவியின் தந்தை திருப்தி

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சேலம் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு திருப்தி தருவதாக கண்ணீர் மல்க கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியுள்ளார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக பஸ் எரிப்பில் இறந்து போன 3 மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி வந்திருந்தார்.

தீர்ப்புக்குப் பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் தீர்ப்பு உங்களுக்குத் திருப்தி தருகிறதா என்று கேட்டனர். அதற்கு கண்களில் நீர் ததும்ப வீராசாமி கூறுகையில், நாமக்கல்லில் இருந்து தீர்ப்பை அறிவதற்காக வந்துள்ளேன். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் கோரமாக பலியாகி விட்டாள்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருப்தி தருகிறது. சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள்.

வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.

கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம்

****

பிப்ரவரி 16, 2007 பஸ் எரிப்பு: 3 அதிமுகவினருக்கு தூக்கு25 பேருக்கு 7 ஆண்டு சிறை

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர்.

உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்)

ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,

மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

அதிமுக அரசால் ஏகப்பட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதால் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், 28 அதிமுகவினரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

****

Bus-burning case: 3 AIADMK men sentenced to death ::

Salem (TN), Feb. 16 (PTI): Seven years after the death of three girl students in the burning of a bus in Dharmapuri following the conviction of AIADMK leader J Jayalalithaa in a corruption case, a Salem Court today sentenced three AIADMK workers to death on charges of murder, and 25 others to seven years imprisonment.

The three girl students of the Tamil Nadu Agricultural University were charred to death when their institution's bus was set ablaze in neighbouring Dharmapuri district on February 3, 2000 by AIADMK workers protesting the conviction of Jayalalithaa in Kodaikanal Pleasant Stay hotel case.

Eighteen others had received burn injuries after the bus was intercepted by the party's agitated workers and set on fire.

Yesterday, First Additional Sessions Judge D Krishnaraja pronounced Nedu alias Nedunchezhiyan, then Secretary of the Dharmapuri town unit of AIADMK, Madhu alias Ravichandran, then local MGR Forum functionary, and P Muniappan, a former panchayat president, guilty of murder, attempt to murder and various other charges under the IPC.

After the three pleaded innocence, the Judge ordered cancellation of their bail and directed the police to take them into custody.

The Judge also held 25 other accused guilty of rioting and wrongful confinement among other lesser charges while convicting them.

In 2002, Jayalalithaa was cleared of the charges of non-application of mind in granting building permission in the Kodaikanal Hill Area in the hotel case by the Supreme Court.

****

பிப்ரவரி 16, 2007 மாணவிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் கண்ணீர்!

சேலம்: 3 மாணவிகளை உயிரோடு வைத்து எரித்துக் கொலை செய்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை மாணவிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றுள்ளனர்.

பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், தாமதமாக வந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் நீதி வென்றுள்ளது. 3 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை கொடுத்தது போதாது, மற்றவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.

சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள். வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.

கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இன்னொரு மாணவி ஹேமலதாவின் தந்தை கேசவசந்திரன் கூறுகையில், இத்தகைய படு பாதகச் செயலை இனியும் யாரும் செய்யக் கூடாது. இதைப் பார்த்தாவது இனி வன்முறையில் ஈடுபடுவோர் திருந்த வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார்.

இதேபோல பலியான காயத்ரியின் உறவினர்களும் தீர்ப்பை வரவேற்றனர்.

அதே போல தண்டனை விவரத்தை அறிய சேலம் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மறுபக்கம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுது சோகத்தை வெளிப்படுத்தினர். 'அம்மா' நம்ம பக்கம் இருப்பதால் பாதகமான தீர்ப்பு எல்லாம் வராது என இவர்கள் நினைத்திருந்ததாகத் தெரிகிறது.

அம்மாவுக்காக பஸ்ஸை எரித்த வழக்கில் அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கு தண்டனை தந்துவிட மாட்டார்கள் என இந்தக் கொலைகாரக் கும்பலும் கூட நினைத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு நீதி மரண அடி தந்துள்ளது.


****

பிப்ரவரி 16, 2007 தூக்கு தண்டைக்காக போராடிய வக்கீல் சீனிவாசன்

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், மாணவிகளை இரக்கமில்லாமல் எரித்துக் கொன்ற 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மிகத் தீவிரமாக வாதாடினார். அவர் இந்த வழக்கை நடத்திய விதத்தால் தான் இந்த வன்முறைக் கும்பலுக்கு கூண்டோடு தண்டனை கிடைத்துள்ளது.

வழக்கில் தொடர்புடைய 28 அதிமுகவினரும் குற்றவாளிகளே, அதிலும் 3 பேர் நேரடியான கொலையாளிகள் என நேற்று சேலம் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பை அறிவித்தார்.

இதையடுத்து எழுந்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன், கொலைக் குற்றவாளிகள் என நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் நிரூபிக்கப்பட்டுள்ளனர். கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கும் அரிதான வழக்குதான். எனவே இந்த 3 குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் வெளியே வந்தால் சமுதாயத்தில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது.

மாணவிகள் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பியபோது 2வது எதிரியும், 3வது எதிரியும் பஸ்சுக்குத் தீ வைக்கச் சென்றபோது, பேராசிரியைகள் அகிலா, லதா, டிரைவர் கந்தசாமி ஆகியோர் பஸ்சில் மாணவிகள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என காலில் விழாத குறையாக கெஞ்சினார்கள்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத 3வது எதிரி மாது என்கிற ரவீந்திரன், எல்லோரையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தச் சொன்னார். 2வது எதிரி நெடு என்கிற நெடுஞ்செழியன் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி (இதற்காக டிவிஎஸ் 50ல் பெட்ரோல் கேன் எடுத்து வந்தவர் இவர்) ஊற்றி தீ வைத்தார்.

இதற்கு 4வது எதிரி முனிப்பன் உடந்தை. எனவே இந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார் சீனிவாசன்.

சீனிவாசன் சந்தித்த சவால்கள்:

இந்த வழக்கில் 31 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவரான செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

ஆனால், இந்த வழக்கை முதல்வராக ஜெயலலிதா இருந்ததால் அதிமுகவினர் மீதான இந்த வழக்கை தலைமையின் உத்தரவுப்படி போலீசார் மிக அலட்சியமாக நடத்தினர். விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தினாலும் அதிமுகவினரை தப்ப வைக்க அரசும், போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக தெனாவட்டாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டனர்.

மேலும் போலீஸ் மற்றும் அதிமுகவினரின் மிரட்டலால் 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். (மொத்த சாட்சிகள் 22 பேர்). இதனால் இந்தக் கும்பல் மொத்தமாக வழக்கில் இருந்து தப்பிவிடும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை கோவைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று சாடிய நீதிபதி வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு மாற்றினார்.

மேலும் அரசு வக்கீலையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் நியமித்த புதிய வழக்கறிஞரான சீனிவாசனுக்கு போதிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தனர். மேலும் அவருக்கும் கூட மிரட்டல்கள் வந்தன. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.

ஆனாலும் சேர்ந்து போகாமல் வழக்கை நடத்தினால் சீனிவாசன். மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு 123 சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தச் செய்தார்.

அதில் தர்மபுரி கலெக்டர், கோவை விவசாயக் கல்லூரி துணை வேந்தர் ஆகியோரும் அடக்கம். இந்த வழக்கில் பஸ்சில் சென்ற ஆசிரியைகள், மாணவிகள் அளித்த சாட்சியம் தான் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதிமுகவினரின் மிரட்டல்களையும் மீறி எரிக்கப்பட்டபோது பஸ்சில் இருந்த மாணவிகளும் ஆசிரியைகளும் சாட்சியம் அளித்தனர்.

அப்போது அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அவர்கள் அழுத அழுகையும், மயங்கி விழுந்ததும் நீதிமன்றத்தில் இருந்தவர்களை எல்லாம் கண் கலங்கச் செய்தது. ஆனால், அதிமுக மட்டும் கலங்கவே இல்லை. இந்த 31 பேர் கும்பலை காப்பாற்றுவதில் தான் தீவிரமாக இருந்தது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்தனர்.

ஆனால், நீதிமன்றத்தின் உதவியோடு தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து நீதி வெல்ல உதவியிருக்கிறார் வழக்கறிஞர் சீனிவாசன்.

மிக பொருத்தமான தீர்ப்பு: சீனிவாசன்

முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் வாதாடினேன். அதை நீதிபதி ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது மிகப் பொருத்தமான, சரியான தீர்ப்பு.

இனிமேலாவது இதுபோன்ற கொடூர செயலில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு உள்ளவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார் சீனிவாசன்.

****

பிப்ரவரி 16, 2007 பஸ்: விசாரித்த போலீஸ் டீமூக்கு பதவி உயர்வு!

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் விசாரணையை நடத்திய மற்றும் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்களைத் திரட்டிய சிபிசிஐடி போலீஸ் டீமுக்கு முதல்வரின் பதக்கமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதற்கான பரிந்துரையை சிபிசிஐடி டிஐஜியான ராஜேந்திரன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ளார்.

டிஎஸ்பிக்கள் பி.கே.பெரியசாமி, ஏ.பெரியசாமி, கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராஜபாண்டி, தம்பிதுரை, மாதையன், போபாலன்,

போலீஸ்காரர்களான முத்துவேல், ரமேஷ்குமார், குமாரவேலன், சர்புதீன், ராஜன், குணசேகரன் ஆகியோரது பெயர்கள் பதவி உயர்வுக்காகவும் பதக்கத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் போலீஸ்õகரர்களுக்கு எஸ்.ஐ. பதவி தருமாறு ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.

இந்த வழக்கில் அதிமுக ஆட்சியின்போது சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அமுக்கவும் பலத்த நெருக்குதல் தரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

ஆனால், அதையும் மீறித் தான் இந்த அதிகாரிகளும் போலீசாரும் வழக்கை சாட்சியங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு முதன்முறையாக சிபிசிஐடி விசாரித்தபோது அதன் எஸ்.பியாக இருந்தவர் சமுத்திரப்பாண்டியன். இவர் இவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் உள்ளார்.

தீர்ப்பை அறிய சமுத்திரப்பாண்டியனும் சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கருத்து தெரிவிக்கையில், இது சிபிசிஐடி போலீஸுக்குக் கிடைத்த வெற்றி.

இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்களின் சாட்சியம், அவர்கள் கொடுத்த ஆதாரங்களும் பெரும் உதவியாக இருந்தன. 5 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மாணவிகள், நேரில் வந்து சாட்சி கூறியது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார்.

***

Dec 06, 2007 தர்மபுரி பஸ் எரிப்பு-3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் ::

தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வழக்கையே திசை திருப்பினர் போலீசாரும் அதிமுகவினரும். இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.

இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

(மாணவிகளை எரித்துக் கொன்றபோது இந்த நெடுஞ்செழியன் தர்மபுரி நகர அதிமுக செயலாளராக இருந்தார். மாது என்ற ரவிச்சந்திரன் தர்மபுரி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். முனியப்பன் புளியம்பட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார்)

இந்தத் தீர்ப்பை 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி முருகேசன், நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.

9 மாத விசாரணைக்குப் பின் இன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். தங்களது தீர்ப்பில் 3 கொலைகாரர்களுக்கும் சேலம் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரின் சிறை தண்டனையையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

தீர்ப்பின் முழு விவரம்:

அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதை காட்ட அடிக்கடி போராட்டங்கள் சாலை மறியல்கள் செய்கிறார்கள். சில சமயம் தீ எரிப்பு சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதையெல்லாம் ஏற்கவே முடியாது.

பலியான 3 மாணவிகளும் அறியா பருவத்தினர். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பு இல்லை.

தேவையில்லாமல் பஸ்சுக்கு தீ வைத்து எரித்து அவர்கள் 3 பேரையும் கொன்று விட்டனர். அவர்கள் தப்பிவிடாதபடி பஸ்சின் கதவை மூடி தீ வைத்துள்ளனர். 3 மாணவிகள் பலியானதை இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது திட்டமிட்ட கொலை மாதிரி தான்.

தீயில் கருகிய 3 மாணவிகள் துடிக்க, துடிக்க இறந்ததை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, பதபதக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது.

இதனால்தான் அவர்களுக்கு சேலம் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகளை பெற்றவர்கள் அதை ரத்து செய்யவேண்டும் என்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வாதத்தை ஏற்க இயலாது. இதனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக உள்ளன. 123 சாட்சிகள், 242 ஆவணங்கள் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன.

குற்றவாளிகளின் மேல் முறையீட்டை ஏற்று அவர்களை இந்த வழக்கிலிந்து விடுவித்தால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே வீணாகிவிடும். எனவே நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமையாகிறது.

இதனால் இந்த வழக்கை சாதாரணமாக விட்டு விட முடியாது. இவர்களது தண்டனையை குறைக்கவும் முடியாது.

நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்கள் தலா ரூ.59,000 அபராதம் கட்டவும் உத்தரவிடுகிறோம்.

அது போல மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதிபடுத்தப்படுகிறது. அவர்களும் தலா ரூ. 13,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றனர் நீதிபதிகள்.

7 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் விவரம்:

முத்து என்ற அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், ராஜூ, மணி என்ற கூடலர்மணி, மாதுராமன் (இவர் அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் என்பது குறிப்பிடத்தக்கது), முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தெளலத் பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகியோர்.

தண்டனை பெற்ற 28 பேருமே அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

***

jan 04, 2008 பஸ் எரிப்பு அதிமுகவினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு-அரசு உத்தரவு ::

சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.

இதையடுத்து இந்த மூவருக்கும் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படவுடுள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரையும் 2008 ஜனவரி 10ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை தூக்கில் போட கோவை சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனையை 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனும் (பி.எச்.பாண்டியனின் மகன்), அரசு தரப்பில் டி.குமரேசனும் வாதாடினார்கள்.

அதிமுகவினர் சார்பில் பாண்டியன் வாதாடுகையில், தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகல் எங்களுக்கு 14ம் தேதி தான் கிடைத்தது. தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் கிருஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால், 3வது வாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேளையில் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது தவறானதாகும். வரும் 10ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 3 பேரின் உயிருக்கு பாதகம் ஏற்படும் என்றார்.

வாதத்தை கேட்ட பின்னர் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பீல் செய்யப்படுவதற்கு முன்பாக தண்டனையை நிறுத்தி வைக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த பின்னர், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது.

சிறை விதிப்படி செஷன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வாரண்ட் பிறப்பித்து தண்டையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் சார்பில் அணுக வேண்டும். அங்குதான் இதுகுறித்து அவசர உத்தரவுகளை பெறமுடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தண்டனையை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது தவறு. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நிராகரிக்கப்பட்டு பின்னர் கவர்னர், ஜனாதிபதியிடம் கருணா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிராகரிக்கப்பட்டால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதி முருகேசன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டீர்கள். அங்கு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இந்த வழக்கு மீண்டும் 4ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது போன்ற சூழ்நிலையில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா. ஏற்கனவே இதுபோன்று உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதா. இதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல அரசு தரப்பிலும் தனது கருத்தை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார் நீதிபதி.

இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ராஜ இளங்கோ ஒரு பதில் மனு தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், மூன்று குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் கண்காணிப்பாளர் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த மூவரின் மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த உத்தரவின் நகலை நான் இந்த நீதிமன்றத்திடம் வழங்குகிறேன் என்று கூறி கோவை சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய உத்தரவின் பேக்ஸ் நகலை சமர்பித்தார்.

இதையடுத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மூன்று அதிமுகவினரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


***

ஜனவரி 18, 2008 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 அதிமுகவினரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு ஜனவரி 10ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் நவ்லேக்கர், பாஞ்சல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் அல்தப் அகமதுவும், அதிமுகவனர் தரப்பில் பி.எச்.பி. மனோஜ் பாண்டியன், சுசீல் குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.

அல்தப் அகமது வாதாடுகையில், 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அதிமுகவினரின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கு விசாரணை கீழ்க் கோர்ட்டில் சரியாக நடக்கவில்லை. முறைப்படி விசாரிக்கப்படவும் இல்லை. எனவே 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர்.

மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக முழு விபரங்களுடன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.

இதன் மூலம் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்கலாம் எனத் தெரிகிறது.




š இப்பதிவை மின்னஞ்சலிட