<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நாணயமான கருத்து கணிப்பு


முன்னூட்டம் ::

இந்த கருத்து கணிப்பு என் பார்வையில் எனக்கு தோன்றியதின் அடிப்படையில் எழுதப்பட்டது... இதற்கு எந்த சூட்கேஸ் பிண்ணனியோ, கட்சி அபிமான வரலாறோ, புவியியல் கட்டுப்பாடுகளோ கிடையாது... மூளையை கூட உபயோகிக்கவில்லை. இது முழுக்க முழுக்க என் அனுமானம் மட்டுமே. இது "ஒரு" மாதிரி இருந்தால் நான் மட்டுமே காரணம் அல்ல..

முன்வைப்பு தீர்மானங்கள் ::

சென்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதாச்சார அடிப்பு அடையில் இந்த அலசல் முன்னெடுக்கப்படுகிறது... சென்ற தேர்தல் மைய அரசின் தலைவிதியை நிர்ணயிக்க நடந்தது என்றாலும் என்னை பொறுத்த வரை (என் குடும்ப) வாக்கு வங்கியில் ஒரு மாற்றமும் இல்லை.. சென்ற தேர்தலுக்கு பிறகு இன்று வரை ஆளும் அரசாங்கத்தின் செயல்களால் ஆதாயம் பெற்ற பொது மக்களின் ஓட்டுக்கள், அரசாங்கத்தின் செயல்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் பாதக ஓட்டுக்கள், கூட்டணி மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட மக்களின் மனநிலை மாற்றங்கள், நடிகர்கள் மற்றும் துக்கடா கட்சிகளின் காரணமாக ஏற்படப்போகும் ஓட்டு பிரிப்புகள் போன்ற விஷயங்கள் நம் அரித்மெட்டிக் லாஜிக்குக்கு ஒத்துவராது என்பதால் அவை கணிப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறன...

அரித்மெட்டிக் ::

போன தேர்தலில் தொகுதிகள் 40. இந்த தேர்தலில் தொகுதிகள் 234.. குத்து மதிப்பாக 40 x 6 = 234. பெரிய அளவில் அலைகள் ஏதும் இல்லாத இந்த தேர்தலுக்கு சைக்ளோட்ரான் அரித்மெட்டிக் துல்லியமாக இருக்கும் என்பது என் கணிப்பு... அந்த அரித்மெட்டிக்படி தெளிவாக வரையறுக்கப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்.


இது தற்போதைய நிலவரம்தான்... தேர்தலுக்கு சற்று முன் மீண்டும் ஒரு கருத்து கணிப்பு எடுக்கும் எண்ணம் உள்ளது... போன தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் மேற்கண்ட மாகாணங்களில் அதிமுக, மதிமுக, விசி போட்டியிடவில்லையெனில் இந்த கருத்து கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை...

குறிப்புகள் ::

அ) எதையாவது நினைத்துக்கொண்டு, அதை உண்மை என்று தீவிரமாக நம்பி, அதற்கு சைக்ளோட்ரான் யுக்தி என்று ஒரு பெயரும் கொடுத்து, இப்படியெல்லாம் எழுதும் உங்கள் பெயர் second half சேதுவா என்று பின்னூட்டம் இட நினைப்பவர்கள் தயவு செய்து ஒரு முறை முன்னூட்டத்தை படித்துவிட்டு உங்கள் வசதிக்காகவே இருக்கும் கீழ்க்கண்ட இன்ஸ்டண்ட் பின்னூட்டங்களில் ஒன்றை உபயோகப்படுத்தவும்.

இன்ஸ்டண்ட் பின்னூட்டங்கள் ::

அ) ஒரே ஒருவரின் அனுமானத்தை எழுதி அதை கருத்து கணிப்பு என்று எப்படி கூறலாம் என்று சிலர் கேட்கிறார்கள். இவர்களின் அறியாமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.. ஒரே ஒருவருடையது என்றாலும் கருத்து கருத்துதானே.. தன் கருத்தை (மட்டும்) தானே கணித்தால் அது கருத்து கணிப்பு ஆகாதா..

ஆ) நான் எப்போதும் அண்ணன் தொல்.திருமா அல்லது அய்யா இராமதாசு ஆகியோரை மட்டுமே வழிபடுவது வழக்கம்.. ஆனால் தேர்தல் என்று வந்தால் நான் கண்டிப்பாக நம்பிக்கை வைப்பது க்ரீன் பார்ட்டியின் மீதே.. காரணம் அவர்கள்தான் எனக்கு பிடித்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை தவிர க்ரீன் பார்ட்டி மீது ஒரு வெங்காய அபிப்ராயமும் இல்லை.. வெங்காயம் என்றவுடன் ஞாபகம் வருகிறது... விளக்கெண்ணெயில் வெண்டிக்காய் போட்டு வழவழ அவியல் செய்து கொண்டிருந்தேன்.. பாதியில் விட்டுவிட்டு கருத்து சொல்ல வந்துவிட்டேன்... அதை முடிக்க வேண்டும், வருகிறேன்.. நன்றி. (குறிப்பு :: க்ரீன் பார்ட்டியும் திருமா பார்ட்டியும் என் தொகுதியில் எதிர் எதிரே நின்றால் என் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேட்டு என்னை கடுப்பேற்றாதீர்கள்)

இ) போன தேர்தலின் போது சான்ப்ரான்சிஸ்கோ, நியூயார்க் மாகாண நிலவரம் குறித்து நான் அலசிய அலசலை ஏனோ அப்போது வெளியிட முடியவில்லை.. சரி, எழுதியது வீணாக்க வேண்டாம், அடுத்த தேர்தலின்போது வெளியிட்டுக்கொள்ளலாம் என்று பழைய பேப்பர்காரனுக்கு கூட போடாமல் சேமித்து வைத்திருந்தேன்.. பார்த்தால் நீர் காரியத்தையே கெடுத்த்துவிடுவீர் போலிருக்கிறதே.. தயவு செய்து அம்மாகாண கணிப்பை நீர் எழுதிவிடாதீர். இப்போதாவது என் எழுத்தை வெளியிட ஒரு சந்தர்ப்பம் கொடும்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

காலேஜ் :: சரக்கு வச்சிருக்கேன்


சரக்கு வச்சிருக்கேன் தொடர்ச்சி...


காலேஜில் சேர்ந்து ரொம்ப நாட்கள் சரக்கு என்ற பேச்சே இல்லை (காலேஜில் அதற்கு பெயர் தண்ணி...) டே-ஸ்காலர்னு பேரு, ஆனா சேலத்துக்காரனுங்க நம்ம மும்மூர்த்திங்க ரூம்லதான் பாதி நேரம் கழியும். மூன்று பேரில் ரொம்பவும் கண்டிப்பானவன் மாமா.. குடும்ப நண்பன் என்ற வகையில் நமக்கு நாமே திட்டத்தில் மீதி ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு அதிகாரி வேலை வேறு செய்து கொண்டிருந்தான். அவன் இல்லாத நேரம் காட்டானுக்கு புதிய வென்சர்ஸில் இருக்கும் ஈடுபாடு வெளிவரும்... தண்ணியடிப்பதை பற்றிய காட்டானின் ஆர்வம், மாமா செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருந்த ஒரு நாளில் கன்னா பின்னாவென பீறிட்டது. இருந்தாலும் நாலாவது முறையாக கேட்டான்...

"டேய் ஒண்ணும் ஆகாதில்ல.. மாமா சினிமாவுல இருந்து வந்து கண்டுபிடிச்சிட்டான்னா என் படிப்புகே வேட்டுடா"

"அட நாந்தான் அனுபவசாலி சொல்றேனில்ல.. என் உடம்ப பாரு... எனக்கே கொசு கடிச்ச மாதிரிதான்டா இருந்தது.. உனக்கு என்னடா ஆகும்கிற..."

"சரி இருக்கறதிலேயே லேசு போதையா ஏதாவது ட்ரை பண்ணுவோம்டா..."

"சரி இவ்ளோ பயப்படுற, ஃபர்ஸ்ட் டைம்கிறதால நீ வேணா பீர் சாப்பிடு. எனக்கு ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறதால நமக்கு ஹாட்தான் சரிப்பட்டு வரும்.."


"ஒரு பீரும் ஒரு க்வார்டரும் கொடுங்க"

"க்வார்டர்னு பொதுவா சொன்னா எப்பிடி தம்பி. என்ன வேணுமின்னு சொல்லுங்க.."

என்ன வேணுமா, முன்ன பின்ன செத்திருந்தா சுடுகாடு தெரியும்.. என்னன்னு சொல்றது

"உங்க ஃபேவரிட்டு என்னங்க..."

"நமக்கு வகையில ஒரு ஃபேவரிட்டு இருக்கு தம்பி.. உங்களுக்கு என்ன வேணும், பிராந்தியா விஸ்கியா ரம்மா..."

ரம்.. ரேஸ் குதிரைகள் ஓடுவதற்கு முன் குடிக்கும் சமாச்சாரம் என்று படித்திருக்கிறோம். ஒரு வேளை ஜிவ்வுன்னு சுறுசுறுன்னு இருக்குமோ..

"ரம்மே கொடுங்க... என்னங்க இது ரம் கூலிங்ல இல்லையா"


பீரில் உள்ள வசதி, "கலக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்..." ஆனால் ரம்மு விஷயம் அப்படியா.. ஹாஸ்டலில் ஏது தம்ளர் எல்லாம்.. தண்ணீர் பிடிக்கும் ஜக்கில் ப்ராந்தியும் தம்ஸ்-அப்பும் கலந்த போது கொஞ்சம் வாய்மூடி காரியத்தில் மட்டும் கண்வைத்துக்கொண்டிருந்திருக்கலாம்... ஏதோ பேசப்போய் அது முற்றி போட்டியில் முடிந்தது... அதாவது முதல் தடவை தண்ணி அடிக்கும் காட்டானும் அனுபவசாலியான நானும் யார் முதன் முதலில் சரக்கை காலி பண்ணுவது... பீரை விட ஹாட்டில் பலமடங்கு ஆல்கஹால் அதிகம் என்ற என் வாதத்துக்கு "க்வார்ட்டர் ரம்மோட அளவு எங்க, அத விட நாலு மடங்கு இருக்கிற ஃபுல் பீரோட அளவு எங்க" என்ற அவனின் (சப்பை) எதிர்வாதம் ரூமில் இருந்த எல்லாருக்கும் சரியாக படவே பந்தயம் ஆரம்பமானது... சரி அதையும் பாத்திருவோம்.

நான் ஜக்கை காலியாக்கி தூக்கி போட்டபோது அவன் பீர் பாட்டிலில் பாதிதான் காலியாகியிருந்தது.. பந்தயத்தில் ஜெயித்துவிட்டோம். ஒரு சாதாரண பந்தயத்திற்கு போய், எனக்கு எதற்கு ஏகப்பட்ட பெருமிதம் தலைக்கு ஏறுகிறது.. இல்லை இதற்கு பெயர்தான் போதையா..

"மச்சி.. போதையெல்லாம் இல்ல.. கடக்கி போனது ரெம்ப டயர்டா ஒரு மாரி இருக்கு.. மெஷ்ஷ¤க்கு போம்போது எழுப்பு... அது வரிக்கும் லேஷா.."

தண்ணியடிச்சா தலை தரைக்கு சமமா ஆகக்கூடாது என்ற பாடத்தை வாழ்க்கை சில சமயம் போதையாய் இருக்கும் சமயத்திலும் கற்றுக்கொடுக்க நினைப்பதைத்தான் life is harsh என்றாரோ ஜும்பலயா அறிஞர் ழ்பா..

படுத்த சில நொடிகளில் சினிமாவில் தூங்கிக்கொண்டிருக்கும் ஹீரோயின் தொலைதூர ஹீரோவுக்கு நிகழும் ஏதாவது ஒன்றை நினைத்து திடுக்கென எழுவது போல எழுந்தேன். படுத்தால் பயித்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. நடந்தால் சரியாக போகுமோ... எழுந்து நின்றேன். ஆனால் காலுக்கு கீழே பூமி சுழலுவது போல் ஃபீலிங். 24 மணிநேரத்துக்கு ஒரு தடவை சுற்ற வேண்டியது ஏன் இப்போ மட்டும் ஒரு மணிநேரத்துக்கு 240 தடவை சுற்றுகிறது. உடனே உட்காராவிட்டால் விழுந்துவிடுவேன். உட்கார்ந்தால் பூமி சுற்றுவது நிற்கவில்லை.. மாறாக பூமிக்கு உள்ளேஏஏஏஎ உள்ளேஏஏஎ போகிறேன். ஒன்றும் புரியவில்லை.. ரூமில் எல்லாரும் சிரிப்பது மட்டும் தெரிகிறது... சரி படுத்து பார்ப்போம் என்று படுத்தால் பைத்தியம் பிடிப்பதில் ஏதும் மாற்றம் இல்லை.. அப்பொழுதைய நிலையில் நில், உட்கார், படு என்பதை தவிர வேறு எதுவும் செய்யும் நிலையிலும் நான் இல்லை.. ரூமில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் கொட்டிக்கொண்டு ஃப்ரெஷ் ஏர் வாங்கினால்தான் சரியாகும் என்று ஜன்னல் பக்கம் போனால் இழுத்து உள்ளே வீசப்பட்டேன். மூன்றாவது மாடியில் நின்று கொண்டு காற்று வாங்க ஜன்னலுக்கு வெளியே போவேன் என்று நினைத்துப்பார்க்காத ரூமீஸ் முகத்தில் இப்போது சிரிப்பு மிஸ்ஸிங்..

உடனே பாத்ரூமுக்கு ஓடி ஷவர் திறந்து பச்சை தண்ணீர் நடுமண்டையில் அடிக்க நின்றேன், இல்லை உட்கார்ந்திருந்தேன்.. இரண்டு நிமிசத்தில் ரூம் மக்கள் வந்துவிட்டார்கள்..

"டேய் போதும் வாடா"

"10 நிமிட்ஸ் மச்சி... ஆல்ரைட்.. ஒண்ணும் ப்ரச்னை இல்ல.."

"பத்து நிமிசமா, ஏற்கனவே 40 நிமிசமா நீ தண்ணியில நின்னுகிட்டு இருக்க.. ஜன்னி கின்னி வந்து தொலைய போகுது வந்து தொல.."

"இன்னும் ஒரு 5 நிமிசம்டா"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் வா.."

ரூமுக்கு இழுத்து வந்து தலை துவட்டி விட்டார்கள். ஆனால் நிற்பது, நடப்பது, படுப்பதை தவிர வேறு எதுவும் செய்யத்தெரியாதவனுக்கு ஷவரே சொர்க்கம்..


செமஸ்டர் முடிவில் வந்தது கோவா பயணம்... தேசிய மாணவர் படை மாணவர்கள் இந்திய ராணுவத்தின் பணிகளை அருகிருந்து கவனித்து பயன்பெற ஆர்மி அட்டாச்மெண்ட் கேம்ப்... உண்மையான ஆர்வத்தோடு தேசிய மாணவர் படையில் சேர்ந்த நான் கோவா போகும் பிரிவை எடுத்தது மட்டும், சீனியர் மாணவர்களின் கேம்ப் அனுபவங்களை கேட்டபின் ஏற்பட்ட ஆசையால்தான்... வந்து சேர்ந்துவிட்டோம் என்ற தகவலை வாத்தியாருக்கு தகவல் சொல்வதற்காக போன ஜால்ரா சுப்புவோடு சும்மா துணைக்கு போன கரூர்காரன் வரும்போது தனியாக வந்தான்..

"அவன் வீட்டுக்கு போன் பண்ணிகிட்டு இருக்கான்டா.., சரி நாம எதுக்கு சான்ஸ மிஸ் பண்ணுவானேன்னு..." பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு க்வார்ட்டரை எடுத்தான். டாக்டர்ஸ் ப்ராந்தி. ஏற்கனவே பட்ட அனுபவத்தால் சூடு கண்ட பூனையாக இருந்த எனக்கு தைரியம் ஊட்டி க்வார்ட்டரை நாங்கள் இருவரும் காலி செய்த போது ஒரு மாதிரி ஜிவு ஜிவு என்று நன்றாகவே இருந்தது. அப்படியே மேலதிக தகவலகள் நிறைய விசாரித்து வந்திருந்தான்... பீர் 8 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இருப்பதிலேயே காஸ்ட்லி பீர் கிங்ஃபிஷர், 13 ரூபாய். அதுவும், காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் ஒயின் ஷாப்பிலேயே எடுத்துக்கொண்டு 3 ரூபாய் தருகிறார்கள். இது தவிர ஃபென்னி என்று ஒரு சரக்கு இருக்கிறது.. coconut fenny, cashew fenny என்று பல டைப்பில் கிடைக்கும் ஃபென்னி லோக்கல் சரக்கு... விலையோ மலிவு, தரமோ அதிகம்..

தினமும் எங்கள் கேம்பிலிருந்து ஆர்மி கேம்புக்கு கூட்டி செல்வார்கள். ஒரு இரண்டு மைல் இருக்கும். வரும்போது அவனவன் நைசாக ஒதுங்கி, பீர் பாட்டிலை வாங்கி இடுப்பில் சொருக்கிக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் ரெயின் கோட் இருக்கும் என்பதால், வெளியே தெரியாது... இரண்டு நாட்கள் கழித்து வரும் சீனியர் பசங்க வந்தவுடன் அடிக்க முடியுமோ முடியாதோ என்று முடிந்தவரை இரு நாட்களில் ஃபென்னியும் பீரும் அடித்து மகிழ்ந்திருந்தோம்... இரண்டு நாட்கள் கழித்து வந்த சீனியர்கள் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, கரூர்காரனின் தகவல்களால் மகிழ்ந்து "அடங்கொக்கமக்கா, அப்பிடியா" என்று வாயெல்லாம் பல்லாகி சாதாரணமாக சொன்னார்கள் :: "சரி நாளையிலிருந்து வரும்போது எங்களுக்கும் வாங்கிட்டு வந்திருங்க.."

ஏற்கனவே இடுப்புல ஒண்ணு ரெண்ட எடுத்து வரதுக்கே தாவு தீர்ந்துடுது.. சில சமயம் ராணுவ கேம்ப் அருகிலேயே சான்ஸ் கிடைக்கும். அங்கிருந்து நம்ம கேம்ப் வரை இரு கி.மீக்கு இடுப்பில் பீர் பாட்டிலோடு நடப்பதை நினைத்து பார்த்தாலே திகிலாகிறது... இதுல இவனுங்களுக்கு வேற சேத்தா.. மறுநாள் பீர் மப்பில் பாத்ரூம் வரை நடக்க சோம்பேறித்தனம் கொண்டு "எவ்வளவுதரம்தான் அவ்ளோ தூரம் நடக்கிறது" அப்படியே வேலியோரமாக மூச்சா போக போன எனக்கு வேலியில் ஆள் நுழையும் அளவு இருந்த ஓட்டை தெரிய, அன்றிலிருந்து ரெயின் கோட் கடத்தலுக்கு அவசியம் இல்லாமல் போனது. இரவில் கேம்ப் அமைதியானவுடன், ஓட்டை வழியாக வெளியேறி கேம்புக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒயின் ஷாப்பில் வாங்கிக்கொண்டுவந்து அப்படியே திருப்பியும் கொடுத்து நன்றாகவே போனது பொழுது...

ஒரு நாள் பகலில் கேம்புக்குள் நுழையும்போது கேம்ப் வாசலில் திடீரென முளைத்த ரெயின் கோட்டு சோதனை மையம் மொத்த ரெஜிமெண்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்க ஜாலியாக இருந்தது எங்கள் யூனிட் மட்டும்... மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்... இயற்கை எழில் கொஞ்சும் கோவாவின் சாயங்கால வேளையில் மொத்த ரெஜிமெண்டுக்கும் உதாரணம் காட்டப்பட்ட பெருமிதத்தில் டீ குடித்த படி மற்ற அனைவரும் தண்ணி கடத்தலுக்காக Frog Jump தண்டனை அனுபவித்ததை பார்த்த போது அவர்களை நினைத்து பாவமாக இருந்தது... இல்லை இல்லையா...


அப்புறம் காலேஜில் எவனுக்காவது பிறந்த நாள், எவனுக்காவது ஆல் க்ளியர், எவனாவது முந்தின செமஸ்டர் கப் எல்லாம் க்ளியர், எவனாவது எல்லா சப்ஜெக்டும் காலி (வாஷ் அவுட்) என்று எல்லா விசேஷங்களுக்கும் பார்கள் எங்களால் சுபிச்ஷமடைந்தன... முக்கியமாக காதல் தோல்வி..

ஒரு நாள் கோவிலுக்கு போய்க்கொண்டிருந்த போது, எதிரில் நரியும் சண்முகமும்... நரி சொன்னான், "டேய் தண்ணி அடிக்கப்போயிகிட்டு இருக்கோம். எதுவும் பேசாம எங்கூட வா..."

நரி ஸ்மால் ஆர்டர் செய்தான்.. என் பார்வையை புரிந்து கொண்டவனாய், ட்ரீட் சண்முகத்துது என்றான்... அடப்பாவி சொந்த காசுன்னா பீரு.. அடுத்தவன்னா ஸ்மாலா... சரி ஊரோடு ஒத்து வாழ்...

"பேரர், எனக்கு ஒரு லார்ஜ், அப்படியே சிக்கன் 65 ஒரு ப்ளேட்...

சண்முகம் முகத்தில் சோகம் அப்பிக்கிடக்கிறது.. எதைப்பற்றியும் கவலைப்படாதவனாய் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்...

"என்ன சண்முகம் என்ன விசயம், எதுனா காதல் தோல்வியா"

நரிக்கு ஆச்சரியம் "எப்பிடிடா கண்டுபிடிச்ச"

"என்னது உண்மையிலேயே காதல் தோல்வியா, இவன் கப்பல் கவுந்தா மாதிரி இருக்கறத வச்சி குத்துமதிப்பா கேட்டேன்... பின்ன நாம என்ன கப் வாங்கறதுக்கு எல்லாமா இவ்ளோ ஃபீல் பண்ண போறோம்"

"ஆமாடா, லஷ்மி சண்முகத்துகிட்ட இனிமே ஃபிரண்ட்ஸா மட்டும்னா பழகலாம்னு சொல்லிட்டாலாம்"

"சரி, இப்ப அதுக்கு என்ன"

"என்னது, அதுக்கு என்னவா, சண்முகம் லஷ்மிய எந்தளவுக்கு உயிருக்கு உயிரா நேசிச்சான்னு உனக்கு தெரியாதா"

உண்மையில் தெரியாது...

"நரி, இப்ப எதுக்குடா இவன இங்க கூட்டிகிட்டு வந்த"

"பயங்கர சோகமா இருக்காண்டா.. யார்கிட்டயும் பேச மாட்றான். மதியத்துல இருந்து சாப்பிட கூட இல்ல... திடீர்னு சாயங்காலம் என்னடான்னா படிப்பும் வேணா, ஒரு வெங்காயமும் வேணாம், ஊரப்பாக்க போறேன்னு அனத்த ஆரம்பிச்சிட்டான்... அதான் கொஞ்சம் ஆறுதலா இருக்குமேன்னு... (ரகசியமாக) கொஞ்சம் தற்கொலை எண்ணம்கூட இருக்கும் போல தோணுது"

"சரிதான்.. நீயோ பேசுனா காசு கேப்பாங்களோன்னு மணிரத்னம் பாணில பேசுறவன்.. நீ இவனுக்கு ஆறுதலா..."

"அதான உன்ன துணைக்கு கூப்பிட்டேன்"

"சண்முகம்... இப்ப இந்த நிமிஷத்த எடுத்துக்க... லஷ்மி என்ன பண்ணிகிட்டு இருப்பான்னு நினைக்கிற"

சண்முகம் ஒன்றும் சொல்லவில்லை..

"பேரர், கொஞ்சம் வெங்காயம் கொண்டாங்க... அப்படியே இன்னொரு லார்ஜ்"

"சண்முகம்.. லஷ்மி இந்நேரம் நிம்மதியா தூங்கிகிட்டு இருப்பா... நீ என்னடான்னா... " என்று ஆரம்பித்து காட்டில் மவன் பெரிய படிப்பாளி என்று கனவுகளோடு காத்திருக்கும் அவன் பெற்றோர், இவன் மீது பாசமாக இருக்கும் உடன்பிறப்புகள் என்று சகலரையும் ஞாபகப்படுத்தி "இவ்ளோ பேரு உனக்காக தூக்கம் தொலச்சி இருக்க, நீ என்னடான்னா..." என்று சென்டியை போட்டு தாக்கி பூவே உனக்காக க்ளைமேக்ஸ் பிச்சை வாங்கணும் என்ற கணக்காக காதல் தத்துவங்கள் பலதை சொல்லி குழப்பி கொசுறாக சில சத்தியங்களையும் வாங்கி நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்த பின்னும் சண்முகம் தூங்கவில்லை, நாங்கள் தூங்கிப்போனோம்..

சண்முகம் சம்பவத்துக்கு அப்புறம் எங்கள் சர்க்கிளில் எவனுக்கு காதல் தோல்வி என்றாலும் சபையில் எனக்கு சில பல லார்ஜுகள் ரிசர்வ் செய்யப்பட்டது... தண்ணீ தட்டுப்பாடு என்றால் என்னவென்றே என்னால் உணர முடியாத அளவு யாருக்காவது காதலும் தோல்வி அடைந்துகொண்டே இருந்தது...


சரக்கும் சைடும் தொடரும்...



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சரக்கு வச்சிருக்கேன்


என்றோ போட்ட திட்டம் மீண்டும் மீண்டும் நினைவு "படுத்த" ப்பட்டதன் விளைவாக சென்ற lake tahoe பனி சறுக்கு முடிந்து திரும்பி வரும்போது "சேந்தாப்புல ரெண்டு நாள் இண்டர்நெட் பக்கமே போகாம இருந்து எவ்ளோ நாளாச்சி... இது கூட ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு இல்ல" என்று ஒரு பேச்சுக்கு சொன்னதுதான் தாமதம். அது இரண்டு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, வாங்கிப்போட்டு பார்க்காமலேயே தள்ளிப்போடப்பட்ட படங்களை பார்க்க ஆரம்பித்தாயிற்று. சரி திரைப்பட வாரம்னு ஆயிடுச்சி, "அப்படியே ரொம்ப நாளா சரியான கோணத்துல பொருத்தாம அங்கங்க கெடக்கிற சர்ரவுண்டு ஸ்பீக்கருங்கல செவுத்தில பொருத்தலாமே" என்று தோன்ற அதை செய்தாயிற்று. அப்படியே கொஞ்சம் subtle லைட்டிங் பண்ணினா... சரி லைட்டிங் கடையில் கொஞ்சம் தண்டம் அழுதாயிற்று... என்ன இருந்து என்ன, அட்மாஸ்பியர்ல என்னவோ ஒண்ணு குறையுதே...


பன்னிரண்டாவது முடித்து ரிசல்டுக்கு காத்திருந்த நேரம். வீட்டில் அனைவரும் ஊருக்கு போயிருந்தார்கள். வீட்டுக்கு வெட்டி அரட்டை அடிக்க வந்திருந்த மலையாளத்தானிடம் என்னவோ யோசனையில் கேட்டேன்...

"தண்ணியடிக்கிறாங்களே, அப்படி என்னதாண்டா இருக்கு அதில"

அவனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும்.

"எனக்கும் ரொம்ப நாளா ஆசதாண்டா, ஆனா அத பத்தி ஒரு வெவரமும் தெரியாம, என்ன பண்றதுன்னு இருந்தேன்"

"ஓ அப்ப அடிச்சி பாக்கலாங்கற? சரி இன்னிக்கி நல்ல நாளு.. வீட்டுல யாரும் இல்ல... என்ன சொல்ற"

கடைக்கு போக வர கிடைக்கும் மிச்ச காசு சேமிப்பில் முதன் முதலில் கை வைப்பது ஒரு கெட்ட பழக்கத்துக்கா என்று மனதின் ஒரு மூலையில் குற்ற உணர்ச்சி எல்லாம் வரவில்லை... பீர் பாட்டில் எவ்வளவு விலை இருக்கும் என்று தெரியாததால் குத்து மதிப்பாக கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து திணித்துக்கொண்டு அப்படியே சைக்கிளை உருட்டினோம். யாராவது ஒயின் ஷாப்பில் பார்த்து வீட்டில் போட்டு கொடுத்தால் என்ன ஆகும் என்று நினைக்க கூட முடியவில்லை. சரி அதெல்லாம் இப்ப எதுக்கு... தியேட்டருக்கு பக்கத்தில் இருந்த ஒயின் ஷாப் வசதியாக தோன்றியது. தற்காலிகமாக ஒயின் ஷாப்புக்கு பின்புறம் தியேட்டருக்கு சைக்கிள் விடும் ஸ்டாண்டு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதுதான் நல்ல கடை. யாராவது பார்த்தால் கூட படத்துக்கு சைக்கிள் விட போனவன்னு நினைபாங்க.. சடுதியில் வாங்கி விட வேண்டும்.

"ஏங்க இருக்கறதிலேயே சின்ன பீரா ஒண்ணு குடுங்க"

"1/2 பீர் எதுவும் கூலிங்ல இல்லியே கண்ணு, பரவாயில்லையா?"

"பரவாயில்ல கொடுங்க..."

நம்ம அவசரம் நமக்கு... 11 ரூபாயோ என்னவோ, கல்யாணியோ ப்ளாக் நைட்டோ, சரியாக ஞாபகம் இல்லை. வாங்கி பேண்டில் சொருகிக்கொண்டாயிற்று. வீட்டுக்கு வந்தது தெரியவில்லை. அப்போதெல்லாம் பீர் க்ளாஸ் (mug) என்ன சாதா க்ளாஸே வீட்டில் கிடையாது. நெஸ்கபே காபி எப்பவோ வாங்கிய போது இனாமாக கிடைத்தது குடிக்கும் ஷேப்பில் இல்லை.. என்ன இருந்து என்ன, பீர் க்ளாஸில் குடிக்க வேண்டும் என்றெல்லாம் அறியும் அளவா நமக்கு ஐ.கூ... இருக்கவே இருக்கே எவர்சில்வர் டம்ளர்கள்.

"ஏண்டா படத்துல எல்லாம் வருமே... நெய்யில வறுத்த முந்திரி பருப்பு அப்படி எதுவும் இல்லியா"

"ஏன் அப்பிடியே கையில சுத்திக்க கொஞ்சம் மல்லிப்பூ, சிச்சுவேசனுக்கு தோதா சிலுக்கு சுமிதா டான்ஸ் எல்லாம் வேணுமின்னு கேளேன்... நக்கலா.. வீட்டுல எப்பனா பலகாரம் பண்ணா போடறதுக்கு 10 கிராம் முந்திரி வச்சிருக்காங்க.. அத காலி பண்ணா கத கந்தல், வேணா ஊறுகா இருக்கு பாரு அத தொட்டுக்குவோம்"

எல்லாம் சரி, பீர் பாட்டிலை எப்படி திறப்பது.. நெயில் கட்டரை வைத்து பாட்டில் ஓப்பன் பண்ணலாம் என்பதை கூட கற்றுக்கொடுக்காமல் என்னை வளர்த்திருக்கிறார்களே... இப்போது ஓப்பனருக்கு என்ன செய்வது..

"இப்ப என்னடா பண்றது.."

"இரு தெரு முக்கு கடையில போயி மேட்டர வாங்கியாறேன்."



"என்ன தம்பி எதுனா வவுறு சரியில்லையா... என்ன திடீர்னு கலரு சோடா"

"இல்ல கடைக்காரம்மா.. வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்கு, அதான்... அப்பிடியே ஓப்பனரும் கொடு."

"ஓப்பனரு ஒண்ணுதான் இருக்கு. அத உன்கிட்ட கொடுத்திட்டு நான் என்ன பண்றது. இங்கனதான இருக்கு வீடு. திறந்து தாரேன் அப்பிடியே எடுத்திட்டு போ. அதுக்குள்ள எல்லாம் கேஸு போகாது."

அடப்பாவி மொத்தமா காரியத்தையே கெடுத்திடுவா போலருக்கே.. கலரு வாங்கறதே ஓப்பனருக்குத்தானே..

"அட என்னமோ சோடா கடையாட்டம் பிகு பண்ணிக்கிறியே... இன்னும் 5 நிமிசத்துல எவன் வந்து கலரு வாங்க போறான்.. கொடு உடனே வந்து தந்திர்றேன்."

வீட்டுக்கு வந்தவுடன் அவசர அவசரமாக கலரை திறந்து ரெண்டு க்ளாஸில் ரொப்பிவிட்டு பீரை திறந்தால், சைக்கிளில் குலுக்கிய குலுக்கில் பொங்கி வழிகிறது. அவசர அவசரமாக ஓடிப்போய் தட்டை எடுத்து வருவதற்குள் தரையெல்லாம் பீர்.

"சரி முத முதல்ல அடிக்கிறோம், கால்வாசி பீரு பூமித்தாய்க்குன்னு நினைச்சுக்குவோம். வழியிற பீரை இந்தா இந்த எவர்சில்வர் தட்டில் புடிச்சி வையி. நான் அதுக்குள்ள ஓடிப்போயி நான் இந்த ஓப்பனரையும் காலி பாட்டிலையும் கொடுத்திட்டு வந்திர்றேன்."

என்னடா இது வந்த விருந்தாளி, காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்த மாதிரி ரெண்டு நிமிசத்துல கலர குடிச்சிட்டானா என்று கடைக்காரம்மா யோசித்திருக்க வேண்டும். அதையெல்லாம் எதிர்கொள்ள நேரமில்லை. வீட்டுக்கு ஓடு.

எல்லா முஸ்தீபுகளும் ரெடி. கொஞ்சம் சின்ன வெங்காயம், கொஞ்சம் ஊறுகாய். தம்ளரில் கொஞ்சம், சாப்பாடு தட்டில் கொஞ்சம் என்று பீர். குடிக்க ஆரம்பித்தத்தால் வாயில் வைக்க சகிக்கவில்லை. ஒரே கசப்பு. அடச்சே கருமம், இத எப்படிடா குடிக்கிறானுங்க.

அந்த நேரம் வெளியே சைக்கிள் பெல் சத்தம். கிளியும் கரிபால்டியும். அட எதிர்வீட்டு டீச்சர் மதிய சாப்பாட்டுக்கு வர்ற நேரம் இல்ல... தினம் மதியம் அவங்கள சைட் அடிக்கிறதுக்காக கிளி வேகாத வெயில்ல 2 மைல் சைக்கிள மிதிச்சிட்டு வருவான். நம்ம ஜன்னல் வழியா டீச்சர் வீட்டு வாசல் தெரியும். சும்மா தெரு முனையில இருந்து அவங்க வீட்டுக்குள்ள போற வரைக்கும், அப்புறம் சாப்பாடு முடிஞ்சி அவங்க வெளியில வந்து தெரு முனை வரைக்கும் சைட்டு. நடுவால இருக்க ஒரு மணிநேரம் வெட்டி அரட்டை நடக்கும்.

பகீர்னுச்சி... கிளிக்கு தெரிஞ்சா கதை கந்தலாயிடுமே... ஊர் உலகமெல்லாம் நம்ம பொழப்பு நாறிடுமே... அவசர அவசரமா பீர் பாட்டில என்ன பண்றதுன்னு தெரியாம ரூமுல சுருட்டி வச்சிருந்த மெத்தையில சொருகியாச்சி. அவசர அவசரமா தட்டையும் தம்ளரையும் கொண்டு அடுப்படியில போட்டுட்டு புடுதுணி (சூடான பாத்திரங்களை அடுப்பிலிருந்து இறக்க உபயோகப்படுத்துவது) எடுத்தாந்து பீரை தொடைக்குறதுக்குள்ள அவனுங்களே உள்ள வந்திட்டானுங்க...

"என்னடா, மலையாளத்தானும் நீயும் சேந்தா சும்மானா இருக்க மாட்டீங்களே... என்ன நடக்குது இங்க.. என்னவோ நாறுது வேற.." அவனுங்கள சமாளிக்கிறது பெரும்பாடா ஆய்டிச்சி. அவனுங்க போனப்புறம் மெத்தைக்குள்ள இருந்து பீர் பாட்டில டிஸ்போஸ் பண்ணா வீடு முழுக்க பீர் நாத்தம் அடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். எல்லாம் பிரமையா இருக்கும். கொஞ்சம் ஊதுபத்திய கொளுத்தி மெத்தைக்குள்ள எல்லாம் காட்டிட்டு, வீடு முழுக்க புகை போட்டாயிற்று. இருந்தாலும் ஊரிலிருந்து வந்து மெத்தையை பிரிக்கும் போது அவர்களின் விநோதமான பார்வையை எதிர்கொண்டபோது கொஞ்சம் திடுக்கென இருந்தது..


இத எப்படிடா குடிக்கிறானுங்க என்ற கேள்விக்கு ரெண்டு நாளில் விடை கிடைத்தது. கசப்புக்கு காரணம் பீர் கூலிங்க்ல இல்லாததே... சரி கூலிங்கோட அடிச்சி பாத்துறுவோம்..ஆனா ஊருக்கு போன ஆளுங்க அதுக்குள்ள வந்திட்டாங்களே.. மெடிக்கல் குண்டன பிடிப்போம். குண்டன் என் க்ளாஸ்மேட் மட்டுமல்ல அவங்க குடும்பமே எங்களுக்கு பேமிலி ஃப்ரண்டு... அவன் வீட்டில் மாடிக்கு போக சைடில் படிக்கட்டு என்பதால் வீட்டுக்குள் போகாமலே சைடு வழியாக மேலே சென்று விடலாம்.. ஆனா அவனோ ஒரு பழம்.. உதவிக்கு போயி அதுவே ரீகாயில் ஆகி, இவனே நம்ம வீட்டுல போட்டு குடித்திட்டா...

ஆச்சரியமாக, "அதனால என்னடா"ன்னான் அவன். ஆச்சரியம் அடங்குவதற்குள் ஃபுல் பாட்டில் பீர் வாங்கியாயிற்று. நெயில் கட்டரை வைத்து கூட பாட்டிலை திறக்கலாம் என்ற அளவு இப்போது அறிவு வளர்ந்திருந்தது. ஆனால் சித்திரை வெயிலில் கூலிங்காக வாங்கியிருந்தாலும் இளம்சூட்டில் இருப்பதாக ஒரு ஃபீலிங். குண்டன்கிட்ட சொன்னேன் "டேய் உங்க வீட்டுலதான் ஃப்ரிட்ஜ் இருக்குல்ல, நீ என்ன பண்ற, ரகசியமா போயி கொஞ்சம் ஐஸ் கட்டிங்கள எடுத்திட்டு வா. அப்படியே கொஞ்சம் ஊறுகாய் முடிஞ்சா எடுத்திட்டு வா.."

அவன் வருவதற்குள் நானும் மலையாளத்தானும் கிட்டத்தட்ட முக்கால் பாட்டிலை காலி பண்ணிவிட்டோம். இந்த வாட்டி கொஞ்சமா போதை ஏறிய மாதிரி இருந்தது. இப்ப வந்தான்

"ஏண்டா குண்டா, சட்னு வரவேண்டாம்? இவ்ளோ நேரமாடா எடுப்ப"

"இல்லடா, ஊறுகாய நல்லதா ஒரு ப்ளாஸ்டிக் தாள்ல போட வேணாமா? அதத்தேடுனேன். அப்புறம் ஐஸ் எடுத்திட்டு வரும்போது, அம்மா வேற பாத்திட்டாங்க, எங்கடா போறன்னு கேட்டாங்க... வெயில்ல வந்திருக்கன்னு உனக்காக எடுத்திட்டு போறேன்னு சொன்னேன்.. சரி அதுக்கு ஐஸ்வாட்டர எடுத்திட்டு போக வேண்டியதுதான, என்னத்துக்கு ஐஸ்னு கேட்டாங்க"

"நீ என்ன சொன்ன"

"இல்ல அவங்ககிட்ட பீர் இருக்கு, அதுல போட ஐஸ்தான் வேணுமின்னு சொன்னாங்க"



சைட் டிஷ்

% என் தனிப்பட்ட அபிப்ராயத்தின்படி டின் பியரை விட பாட்டிலில் அடைக்கப்பட்ட பியர் சிறந்தது.

% பாட்டிலோ டின்னோ, பியரை அப்படியே சாப்பிடக்கூடாது. பியர் மக்கில்(mug) ஊற்றியே அருந்த வேண்டும். அதுவும் மக்கை சாய்வாக பிடித்து க்ளாஸோடு க்ளாஸாக அல்ல. மக்கின் கால் பங்கு நுரை ததும்பும் அளவு நடுவில் ஊற்ற வேண்டும். அந்த நுரை, பியரின் நறுமணம் மற்றும் ஆவியாகும் பல சமாச்சாரங்களின் வலை போல் இருந்து பியரின் உண்மையான குணத்தை அறிய உதவும். இது போல் செய்வதால் வயிற்றை நிரப்பும் உணர்வை தராது.

% பியரில் உள்ள கார்போஹைட்ரேட்ஸே பியர் தொப்பைக்கு காரணம். கார்ப்ஸ் எல்லா சரக்கிலும் உள்ளது

% ஸ்காட்ச் விஸ்கியை எதுவும் கலக்காமல் அப்படியே குடிப்பதே ஸ்காட்சின் சுவையை முழுமையாக உணர உதவும். ஸ்காட்சோடு ஐஸை கலப்பது அதன் சுவையையும் நறுமணத்தையும் மட்டுப்படுத்தும் செயல். ஸ்காட்ச் தயாரிக்கப்படும் தண்ணீர் கூட அதன் சுவையை தீர்மானிக்கும் ஒரு காரணி. ஐஸ் என்பது நீங்கள் உங்கள் ஏரியாவில் கிடைக்கும் தண்ணீரை வைத்து தயாரிப்பது. ஸ்காட்சோடு கோக், பெப்ஸி போன்றவற்றை கலப்பது ஸ்காட்சுக்கு செய்யும் துரோகம்.

% "தோ மினிட்ஸ்" என்று சுலபமாக சில நிமிடங்களில் (என்) வீட்டில் செய்யப்படும் சுவையான இரண்டு பிரபல காக்டெயில்கள் :: ப்ளடி மாரி மற்றும் ஸ்க்ரூட்ரைவர்.

% liquer வகையை சேர்ந்த goldschlager பாட்டிலின் உள்ளே நிஜமான தங்கத்துகள்கள் இருக்கும். தங்கம் விக்கிற விலையில் $45 பாட்டிலுக்குள் எப்படி அவ்வளவு தங்கம் கட்டுப்படி ஆகிறது, உண்மையில் பாட்டிலில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று சில இளைஞர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது.


சரக்கும் சைடும் தொடர்ச்சி...



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சாதி ஒழிப்பு, இந்து மத ஒழிப்பு - ஜெயஸ்ரீ கருத்து


சமீபத்தில் சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? என்ற தங்கமணியின் பதிவில் ஜெயஸ்ரீ எழுதியிருந்த ஒரு பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது.. பொதுவாக என்னை கவர்ந்த எழுத்துக்களை என் நூலகம் பதிவிலே சேமிப்பது வழக்கம்.. ஆனால் இக்கருத்தை இங்கு 'சேமிக்க' விரும்புகிறேன்.

இதனை தனிப்பதிவாக வெளியிடுவதில் ஆசிரியருக்கு ஏதும் ஆட்சேபம் இருப்பின் எனக்கு அறியத்தரவும். இப்பதிவில் ஆசிரியரின் கருத்தை அப்படியே வெளியிட்டிருக்கிறேன். இதில் வேறு சில பதிவர்களின் பெயர்களும் வருகின்றது. அப்பதிவர்களுக்கு இதில் ஏதும் ஆட்சேபமிருப்பின் எனக்கு தெரியப்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நீக்கிவிடுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பதிவு சம்பந்தமாக யாராவது கருத்து எதுவும் கூற விரும்பினால் தயவு செய்து அதை தங்கமணியின் பதிவிலேயே தெரிவிக்க வேண்டுகிறேன். இதன் மூலம் அப்பதிவு ஒரு முழுமையான விவாதக்களமாக இருக்கும். நான் லைம்லைட்டுக்கு வருவதற்கும் தங்கமணியின் பதிவை திசை திருப்புவதற்கும் இந்த வேலையை செய்கிறேன் என்று குற்றம் சாட்ட விரும்பி பேனாவை கூர்தீட்டுபவர்கள், please, get a life...

**

ஜெயஸ்ரீ ::

நான் வேதநூல்கள், மனு சாமாசாரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளுகிறேன். கண்ணாலாயே பார்க்காத புத்தங்களையும் அதில் இருக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படிப் பேசமுடியும்? நான்தான் என்று இல்லை, ஸ்ரீரங்கத்தில் பூணூல் போட்ட ரோட்டில் போகும் 10 பையன்களைக் கூப்பிட்டுக் கேட்டாலும் அதையேதான் சொல்வார்கள். யார் இந்த மனு? கீதை தான் வேதமா? அதைத்தான் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் ஒரே ஒரு ஸ்லோகமாவது அல்லது அதன் பொருளாவது என்னையும் சேர்த்து எத்தனை இந்துக்களுக்குத் தெரியும்? மற்ற மதத்துடனான ஒப்பீடலும் அதைவிட எந்தவிதத்தில் இந்துமதம் குறைந்துவிட்டது என்ற கேள்வியையும்கூட தவிர்க்கிறேன். மற்ற மதங்கள் எப்படி இருந்தாலும், கேள்வி இந்துமதத்தில்மேல் மட்டுமே எழுப்பப்பட்டால் அதற்கான பதிலைத்தான் தரவேண்டுமேயன்றி பிற ஒப்பீடுகள் தேவை இல்லாத இடத்தில் பேசவேண்டாம்.

மேலே இருக்கும் இத்தனை அறியாமையுடனும் நான் இந்துதான். அப்படித்தான் ரெகார்டில் இருக்கிறது. இடையில் இருக்கும் ஜாதிகளைவிட்டுவிட்டு நேராக கடைசிக்குப் போகிறேன். என் வாழ்க்கையில் தீண்டாமையோ, பஞ்சமர்களோ எங்கே வந்தார்கள்? ஒரு தோட்டியை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து என்வீட்டில் பாம்பே கக்கூஸ் என்று சொல்லப்படும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக என் வீட்டுக் கழிவறையை நான் தான் சுத்தம் செய்கிறேன். நான் ஊரில் இல்லாத/எனக்கு முடியாத நாள்களில் என் கணவர். என் வீட்டு அத்தனை துணிகளையும் எந்த சலவைக்காரரையும் விடப் பிரமாதமாகத் தோய்ப்பேன். [என் மாமியாரிடமிருந்து இதற்கெல்லாம்- வாழ்நாளில் நினைத்தே பார்க்கமுடியாத விஷயம்- ஸ்பெஷல் பாராட்டு வாங்கியிருக்கினாக்கும். ] பிரமாதமாக ஷூ பாலிஷ் போடுவேன். முடிதிருத்துமிடத்திற்குப் போய்வந்தால் வீட்டிற்கு வந்து குளிப்பது, சுகாதாரத்திற்காக மட்டுமே. இல்லை அதெல்லாம் பொய் என்று சொல்பவர்களுக்கு… இன்று எந்த ஜாதிவித்யாசமும் இல்லாமல் பெண்களும் ப்யூட்டி பார்லர் தொடங்கிவிட்டார்கள். அங்கேபோய்விட்டுவந்தால் நானும்கூடக் குளிப்பேன். (ஸ்ரீரங்கத்தில் என் வீட்டையே ஒரு ப்யூட்டிஷியனுக்குத்தான் குடிவைத்திருக்கிறேன். வீட்டை அதற்கு உபயோகித்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வது முழுக்க முழுக்க அக்கம்பக்கத்தவர்கள் புகார்சொல்லும் சுகாதாரப் பிரச்சினைக்காகத்தான்.) அதே பெண்தான் எனக்குத் திருமணம் என்றால் என் வீட்டிற்கே வந்து அலங்காரம் செய்கிறாள்; நான் அப்படியேதான் மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லி தாலிகட்டிக் கொள்கிறேன். தீண்டாமை முடிவெட்டுபவருக்காக இருந்தால் இது சாத்தியமா? யோசித்தால் குளிப்பது சுகாதாரத்திற்காகத்தான், முடிவெட்டுபவருக்காக இல்லை என்பது தெரியும்.

சரி, மீண்டும் எனக்கே வருகிறேன். மேலே கூறியிருக்கும் அத்தனை வேலைகளையும் செய்யும் நான்தான் என்வீட்டுப் பூஜையறை விளக்கையும் ஏற்றுகிறேன். என் வீட்டு வரவுசெலவு, முக்கியமான முடிவுகளை எடுக்கிறேன். என்வீட்டு அத்தனை நிகழ்வுகளும் என்னை முன்னிறுத்தியே நடக்கின்றன. சமுதாயத்தில் நீங்கள் மேலிருந்து கீழிருக்கும் ஜாதிக்காரர்கள் செய்வதாகச் சொல்லும் அத்தனை வேலைகளையும் நானேதான்- நான் மட்டுமேதான் செய்கிறேன். இப்போது என் வீட்டிலிருப்பவர்களுக்கு நான் என்ன ஜாதி?

மேலே கூறியவற்றில் எல்லாம் பார்த்தால் ஒரே ஒரு விஷயம்தான் எனக்குத் தெரிகிறது. விஞ்ஞான சாதனங்கள் வந்து மேலைநாடுகளைப் போல தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் நிலைவரும்போது இவர்களுக்கான தேவையே இல்லாமல் போகிறது. அப்படித்தான் ஏற்கனவே நிறைய போயிருக்கிறது. அது கிராமங்களில் இல்லை ஏதாவது சில பகுதிகளிலோ இல்லை என்றால் செய்யவேண்டியது என்ன? அங்கும் சுகாதாரமான அல்லது மேம்படுத்தப்பட்ட வீட்டுவசதிகளை உருவாக்கிக் கொள்வது/ உருவாக்கிக்கொள்ள அரசாங்கம் ஆணையிடுவது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை எனக்கு அரசு ஆணையிடமுடியும் என்றால் அதே அரசால் வீட்டின் கழிவறைக்கான திட்டத்தை ஆணையிடமுடியாதா? அடுத்து மனிதனே இன்னும் பாதாளச் சாக்கடையில் இறங்கும் அவலத்தை சரிசெய்ய முடியாமல் ஆனால் வல்லரசு ஆகப் போகிறோம்.

மேலே கூறியவற்றையெல்லாம் சமூகநலச் சிந்தனையாளர்கள் அரசை வற்புறுத்தியோ அல்லது அரசு மக்களை ஆணையிட்டோ சரிசெய்யாமல் இந்துமதத்தை ஒழித்துவிட்டால் எப்படிச் சரியாகும் என்று எனக்குச் சொல்லுங்கள் தங்கமணி. இவர்களின் தொழிலே இல்லாமல்போகவேண்டும் என்று நான் சொல்கிறேன்; இல்லை, இந்துமதத்தை ஒழித்து இவர்களை அர்ச்சகர்களாக்கி– அது எப்படி சாத்தியம்? இந்துமதம் ஒழிக்க முதலில் கோவில்களை இடிக்க வேண்டாமோ?– சுஜாதா வந்து பீயள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். பிரச்சினை ஏன் யாராவது அள்ளவேண்டும் என்ற கேள்வியும் தீர்வு அவரவர் வீட்டில் அவரவரே அள்ளவேண்டும் என்றே நான் சொல்கிறேன். இதற்கும் (இந்து)மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சரி, இவைநீங்கியபின்னும் நீங்கள் குறிப்பிடும் வர்ணாசிரம கொள்கை இருக்கும் என்று சொல்கிறீர்களா? என்வீட்டிற்கு பலதரப்பிலிருந்து நண்பர்கள் வருகிறார்கள். இவர்களை எப்படி உபசரிப்போம் என்று உங்களுக்கே தெரியும். இவர்களின் குடும்பத்தவர்களின் பின்புலங்கள், முந்தைய தொழில் என்ன என்று எனக்குத் தெரியுமா? நாம் பாராட்டுகிறோமா? என்னைப் பொருத்த வரை அவர் இந்த வங்கியில் அல்லது வேறு ஸ்தாபனத்தில் இந்த வேலையைச் செய்பவர். அவ்வளவுதான். எங்கே போயிற்று வர்ணாசிரமம்? அப்படி என்றால் தேவை என்ன? கல்வி. கல்விமட்டுமேதான் சமூக அங்கீகாரமாகி விட்டது.

இந்துமதத்தை ஒழிக்கச் சொல்லும் யாராவது போய் எத்தனை பீயள்ளுபவரின் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்படாமல் இருக்கிறார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறார்களா? ஏன் +2 முடித்ததும்தான் ஒதுக்கீடு? ‘ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளிக்கல்வி’ என்ற பொருளாதார வரையறை இல்லாத அபத்தமான திட்டங்களை அரசு அறிவிக்கும்போது எதிர்த்து அந்தந்தப் பகுதி தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகளை கட்டாயமாக இலவசமாக ஒவ்வொரு வகுப்பிலும் இத்தனை பேரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த முடியாதா? ஒருசாராருக்குத்தான் படிப்புவரும் என்பதெல்லாம் பம்மாத்து. வேண்டுமானால் பள்ளிக்குப் போகாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் ஒரு தலைமுறை மட்டும் சிரமப்படலாம். அடுத்த தலைமுறை, “நான் ஒதுக்கீட்டை அனுபவித்துப் படித்து முன்னேறிவிட்டேன்; என் மகனை/மகளை என்னால் படிக்கவைத்து ஓப்பனிலேயே சீட்வாங்கமுடியும்” என்று சொல்லி, அந்தந்த சமூகத்தினர் அவர்களுக்குக் கீழ் பள்ளி வாசலையே மிதிக்காத பெற்றோரின் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கட்டுமே. எத்தனைபேர் மதத்தை திட்டுவதை நிறுத்திவிட்டு இதைச் செய்வார்கள்? எனக்குத் தெரிந்து மூர்த்தி மட்டும் இதைச் சொல்லி இருக்கிறார்.

அப்புறம் சங்கரமடம்? தெரியாமலே கேட்கிறேன். ஏதோ ஒரு குழுவினர்(சைவ மதத்திலிருக்கு பிராமணர்களிலும் ஒரு பிரிவினர்?) தங்களுக்குள் ஒரு மடம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைத்துவந்திருக்கிறேன். இதுமாதிரி வைணவர்களில்கூட எக்கச்சக்க பிரிவில் மடங்கள் இருக்கின்றன. யாரும் எந்தக் குழுவினரும் தங்களுக்குள் எதையும் நிறுவி வாழ்ந்துகொள்ளலாம். விரும்புவர்கள் செல்வார்கள். விரும்பாதவர்கள் நிராகரிப்பார்கள். இதன் எந்தத் தனி ஒன்றும் முழுமையான இந்துமதத்தைச் சொந்தம் கொண்டாட முடியாது என்பதுபோலவே அல்லாதவர்கள் இங்கே சொந்தம்கொண்டாடத் தேவை இல்லை என்றே நினைத்துவந்திருக்கிறேன். இவை மட்டும்தான் அங்கீகரிக்கப்பட்டவை என்று அரசால் முத்திரைகுத்தப் படவும் இல்லை. இவை தவறும்போது சட்டம் உள்ளே நுழையாமலும் இல்லை. அப்படி ஒன்றிற்கு தலைமைப் பதவியைப் பிடித்து சாதிக்கப் போவது என்ன என்று புரியவில்லை. பிடித்தாலும் இவர்கள் திரும்ப தனியாகப் போய் வேறு மடத்தை நிறுவிக்கொள்ள மாட்டார்களா? சத்தியமூர்த்தி பவனைப் பிடித்தவனே ஒரிஜினல் காங்கிரஸ் மாதிரி விஷயமா இது? இதனால் வாழ்க்கைத் தரம் எந்த விதத்தில் முன்னேறப் போகிறது, சமூக அங்கீகாரம் என்ன கிடைக்கப் போகிறது. இவர்கள் பேச்சை மக்கள் கேட்பவர்களாக இருந்தால், சங்கராச்சாரியார், வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றிச் சொன்னதும் எத்தனை பெண்கள் கைப்பையை கீழே போட்டுவிட்டு வீட்டோடு இருக்கிறார்கள்? புலிநகக் கொன்றை தந்தையைப் போல எந்தத் தந்தை வானமாமலை ஜீயரிடம்போய் தன் பெண் மறுவிவாகத்திற்கு இந்தக் காலத்தில் அனுமதிகேட்டுக்கொண்டு நிற்கப் போகிறார்கள்? [அது என்ன, எல்லாரும் சங்கரமடத்தையே கேட்கிறார்கள். ஏன் வானமாமலையையோ ஆண்டவன் ஆசிரம பீடமோ வேண்டுமென்று கேட்பதில்லை? ]

கோவில்கள், தேர் இழுப்பது எல்லாம் சொல்கிறீர்களா, ஒத்துக்கொள்கிறேன். இவை எல்லாம் ஸ்ரீரங்கம், மதுரை மாதிரி பெரிய ஊர்விழாக்களில் யார் இழுக்கிறார்கள் என்ற பேதமே இல்லை. எங்காவது கிராமங்களில் இருக்கிறதா? அத்துமீறலாம். அரசைத் துணைக்கழைத்துக் கொள்ளலாம். ஆனாலும் இவை எல்லாம் உள்ளிருந்து போராட வேண்டியதே இல்லாமல் மதத்தை ஒழித்து எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். அர்ச்சகராகலாம் என்று அரசு ஆணை வந்தபின் எத்தனைபேர் அர்ச்சகராகப் பயிற்சி எடுக்கிறார்கள் என்ற updation கிடைத்தால் எழுதுங்களேன். ஆனால் மதத்தின் தவறான கொள்கைகளை அடித்து அழித்து எழுதுவது. இதைத்தான் நான் குறிப்பிட்ட social reformers செய்திருக்கிறார்கள்.

பெண்களை இந்துமதம் இழிவுபடுத்தி வைத்திருக்கிறது. அப்படியா? அப்படியா என்று கேட்டால், அவ்வையாரையும் காரைக்கால் அம்மையாரையும் சுட்டிக்காட்டப் போகிறேன் என்று அர்த்தமில்லை. எப்படி என்று யோசிக்கிறேன். பெண்களை இழிவுபடுத்துகிறது என்று சொல்லும்போதே அது ஆண்கள்தான் என்று தெரிகிறது. ஆனால் அதைச் செய்யும் ஆண்கள் நீங்கள் அத்தனைபேரும் யோனியிலிருந்து வந்ததாக மனு(வோ அல்லது வேதமோ) சொல்லிவிட்டதே என்றா பெண்களை இழிவுபடுத்துகிறீர்கள்? இழிவுசெய்வது என்பது பொதுவான ஆணாதிக்க சிந்தனை. அதைச் செய்பவர்கள் யாரும் மதத்தைப் படித்தவர்கள் இல்லை. ஆனால் சில விஷயங்கள் பெண்களுக்கு மறுக்கப்படுவதை வைத்துச் சொல்கிறீர்கள் என்றால் அதுபற்றி யோசிக்கலாம்.

பொதுவில் சமூகத்தில் எல்லாத் துறைகளிலும் சாதிக்க இந்துமதப் பெண்களுக்கு அதிமுக அணி போல எல்லாம் கதவு ஜன்னல்களும் திறந்தே இருக்கின்றன. யார் எந்தத் துறையில் மறுக்கப்பட்டிருக்கிறார்கள் இன்றைக்கு? ஆன்மிக விஷயத்தில் மறுக்கப்படும் விஷயங்களாக (மீண்டும்) கோவில் அர்ச்சகர் தகுதியும், பெற்றோருக்கு ஈமச் சடங்கு செய்வதும் மட்டும்தான். ஆனால் தங்கமணி நமது கோவில்கள் பல்வேறு தன்மைகளைக் கொண்டதாக இருக்கின்றன. ஆண்கள் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சொல்லும் குருவாயூர், ஜரகண்டி என்று கண்சிமிட்டும் நேரத்தில் தள்ளிவிடும் திருப்பதி, பெண்களே அனுமதிக்கப்படாத ஐயப்பன் கோவில், மாதவிலக்கு நாள்களில் கூட பெண்கள் பூஜை செய்யலாம் என்று சொல்லும் ஆதிபராசக்தி, மும்பை மஹாலஷ்மி கோவில்கள், 50 ரூபாயைக் கையில் அழுத்தினால் அர்ச்சகர் பெருமாளையே கையில் தூக்கிக் கொடுக்கும் அருள்மிகு ஸ்ரீரங்கம் கோவில் வரை ….. இவற்றில் எனக்கு ஏற்ற கோவிலுக்குத் தேர்ந்தெடுத்துப் போகும் சுதந்திரம் எனக்கு இருக்கவே செய்கிறது. ஆனால் இங்கே எல்லாம் கருவறை வரை போனால்தான் பெண்களை உயர்வாக வைத்திருக்கிறது என்பதை என்னால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. கோவிலுக்குள் எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்வதுபோன்ற சமூகநீதியாகவோ, அல்லது இது கிடைத்தால் பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிடும் என்றோ, பெண்ணடிமைத்தனத்துக்கு இந்துமதத்தின் இந்த ஒரு கூறுதான் காரணம் என்ற ஜல்லியையோ நம்ப நான் தயாராக இல்லை.

“என் மாதவிலக்கு என் பெர்சனல். அதை நான் பொதுவில் பகிர்ந்துகொள்ள மாட்டேன்” என்றெல்லாம் எங்கள் மாமியார் வீட்டில் மருமகள்கள் முன்வைத்திருக்கிறார்கள். அவை பூஜை செய்யவேண்டும் என்பதற்காக இல்லை; பெர்சனல் விஷயங்களைப் பொதுவில் சொல்லச்சொல்லி எங்களை நிர்பந்திக்கக் கூடாது; தேவை இல்லை என்ற சுயமரியாதை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட கருத்துகளையே நான் வரவேற்கிறேன். மேகத்தைக் கிழித்துக்கொண்டு விமானமே ஓட்டலாம்; ‘நான் ஆணையிடுகிறேன்’ என்று அரசாங்கத்தையே கையில் வைத்துக்கொண்டு சண்டித்தனம் செய்ய முடிகிறது. இவை எல்லாம் போதாது, பூஜை செய்தால்தான் உண்டு என்று பெண்ணியம் பேசுபவர்கள் எத்தனைபேர் ஆதிபராசக்தி கோவில்களுக்குப் போய் ஆர்வமாக பூஜை செய்திருக்கிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

என் ஆன்மிகச் சிந்தனையைப் பொருத்த வரை கோவில்கள் தொழிலாளர் யூனியன் ஆபீஸ் மாதிரிதான்; கம்யூனிசம் அவரவர் மனத்தில்தான் இருக்கிறது. இதை மாதவிலக்கு நாள்களில் தள்ளிவைப்பதற்காக வருத்தப்படும் டீஜேவின் தோழிக்கும் சொல்லிவைக்கிறேன். தினமும் பூஜை செய்தால்தான் கடவுளை உணரமுடியும், அது மறுக்கப்படும்போது வெறுப்புவருகிறது என்பது அவர் இன்னும் வளரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. 15 நாள் எதுவும் செய்யாமல் ஏதாவது பொட்டல்காட்டில் இருந்தாலும், ப்ரேயர் மீட்டிங்கிற்கு உதவிக்காக கிறித்தவ தோழிவீட்டிற்குப் போனாலும், ஜீவ அப்பமே சாப்பிட்டாலும் என் உள்மன உணர்கள் அப்படியேதான் இருக்கும்.

அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதுமுதல் சமூகத்தில் எதை வேண்டுமானாலும் உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள். ஆனால் கேட்பதில் தீர்மானமாக இருங்கள். இன்று உஷாவின் பதிவில் கணவனைப் பிரிந்து இரண்டு வருடங்கள் ஆனபின்னும் ஒர் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்து செய்துகாட்டிய பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார். http://nunippul.blogspot.com/2006/03/blog-post_10.html நமக்கு உண்மையான தேவை எது என்று தீர்மானமாக முடிவு செய்வது, அதைத் தெளிவாக சமுதாயத்தின் முன்வைப்பது. மனதில் உறுதி, வாக்கில் தெளிவு. சிம்பிள். நம்மை யார் கேட்கமுடியும்? ஆனால் இன்று கேட்கும் பெண்ணெல்லாம் தேவை என்பதால்தான் கேட்கிறார்களா? அப்படி இல்லாமல் பெண்களுக்கு அந்த உரிமை எல்லாக் கோவில்களிலும் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அது ஒன்றே மதத்தின் பொருட்டு பெண்களை அதலபாதாளத்தில் இறக்கிவைத்திருக்கிறது என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பெண்கள் செய்திருக்கும் அத்தனை சாதனைகளையும் கண்டுகொள்ளாமல் எதையாவது யோசித்து யோசித்து காரணங்களை அடுக்குவதாகத்தான் தெரிகிறது.

ஆனால் தீர்மானமாக என்னால் சொல்ல முடியும், பெண்கள்- அதிலும் ஆண் வாரிசு இல்லாத வீட்டிலிருக்கும் பெண்களுக்கு ஈமச் சடங்குகளில் உரிமை வேண்டும் என்று கேட்பது மிகச் சரியே. இதுவும் எல்லாருக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. நிச்சயம் விருப்பமிருப்பவர்கள் செய்ய அனுமதிக்கலாம். விக்ரம் படத்தில் கமலஹாசன் கதாநாயகியிடம் சொல்வதைப் போல் ஆண்களால் செய்வதை எல்லாம் பெண்களாலும் செய்யமுடியும் என்பதில்- குறைந்தபட்சம் எனக்கு- நம்பிக்கை இல்லை. என் குழந்தைக்கு உடல் நலமில்லாமல் என்னால் மாதக்கணக்கில் போராட முடிந்தது. ஆனால் இறந்த என் குழந்தையை எடுத்துக்கொண்டு இடுகாட்டுக்குப் போய்ப் புதைக்க என்னால் முடியாது. அப்போதுதான் என்றில்லை, இப்போதும் சென்னையின் அந்தத் தெருவைக் கடந்து அடுத்த தெருவழியாகவே என்னைக் கூட்டிச் செல்லும் என்வீட்டு ஆண்களை நான் முற்றிலும் புரிந்துகொள்கிறேன். என்னை அவர்கள் கீழிறக்கியதாக எல்லாம் நினைப்பதில்லை. (நேற்று காலையில் என்வீட்டில் புறாவின் ரெண்டு முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வந்துவிட்டதற்கே நிலைகொள்ளாமல் இங்கே பதிவில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுகிறேன். நான் அவ்வளவுதான்.)

சாஸ்திரங்கள் என்ன சொல்லுகிறது என்று தெரியாவிட்டாலும், முந்தைய காலங்களைப் போன்ற இடுகாடுகளாக இல்லாமல் நவீன மின்சார இயந்திரங்களும் கட்டிடங்களும் வந்துவிட்டதென்றால் ஒருவேளை பெண்களுக்கும் இது சுலபமாக இருக்கலாம். (இதிலும் நான் இல்லை.)

ஆனால் தங்கமணி, ஈமச் சடங்குகளில் பெண்களை இந்துமதம் முற்றிலும் விலக்கிவைத்துவிட்டது என்று சொல்வது சரியில்லை. கயா’வில் உடன்பிறந்த ஆண்கள் இல்லாத பெண்கள் தங்கள் பெற்றோருக்கும் முன்னோருக்கும் இந்தக் கிரியைகளைச் செய்யக்கூடிய வசதி இருக்கிறது. இராமாயண சீதை சகோதரர்கள் இல்லாததால் தன் பெற்றோருக்கு இங்கே செய்ததாகச் சொல்லப்படுவதை என் வீட்டுப் பெண்களே பலர் செய்திருக்கிறார்கள். கொஞ்சம் முயன்றால் அவரவர் இருக்குமிடத்திலேயே செய்வது சாத்தியம் என்றே தோன்றுகிறது. ஏற்கனவே ஒரு பெண், டிவியில் சுமதியுடன் சேர்ந்து இது பற்றி வாதாடி, தான் தன் தந்தைக்குச் செய்ததாகவும் கூறினார். இந்த மாற்றம் வரும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

இந்தியாவில் விரும்பாதவர்களை இந்துமதம் என்று குறிக்கவேண்டாம் என்றால் அரசைத்தான் கேட்கவேண்டும் என்று யாரோ சொல்ல “இந்து மதம் அப்படித்தான் இருக்கும். வெளியே போங்கடா என்று சொல்றீங்களா?” என்று முத்து(தமிழினி) கேட்டிருக்கிறார். அவர்தானே?

யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கும்கூட அரசு என்னை மத அடையாளங்களோடு எடுத்துக்கொள்வதில் உடன்பாடில்லை. ஆனால் எந்த மதத்தில் இல்லாதவர்களும் இந்தியாவில் இந்துமதமா என்றால் என்னால் இப்படித்தான் யோசிக்கமுடிகிறது.

அப்போது திருச்சி RECல் கணினிப் பிரிவில் புதிதாக கணினி மூலமாக மாணவர்களுக்கு மெஸ்பில் தயாரிக்க ஆரம்பித்தார்கள். manualஆகவும் ஒரு parallel run ஓடிக்கொண்டிருந்தது. A,B,C.. I வரை மெஸ் பெயர்கள். எந்த மெஸ்ஸில் எந்த மாணவன் சாப்பிடுகிறானோ அந்த மெஸ்ஸுக்கான நாள் கணக்குத் தொகை(rate)க்கு எத்தனை நாள் சாப்பிட்ட்டான் என்பதை வைத்து கணினி கணக்கிடும். ஒரு டிரெய்னி மாதிரி போன எனக்கு பில்லைப் பார்த்ததும் என்னைத் தாக்கிய முக்கிய தவறு எந்த மெஸ்ஸிலுமே சாப்பிடாமல் லீவில் போயிருந்தவன் பில்லில், mess rate 0.00 என்று இருந்தது. என்ன அபத்தம்; மெஸ் ரேட் எப்படி பூஜ்யமாக இருக்கும் என்று கேட்டேன். வழக்கம்போல “நாம மயிரு மாதிரி படிச்சுட்டு வந்து ப்ரொகிராம் எழுதறோம். திடீர்னு ஒரு பொண்ணுவந்து போறபோக்குல கேவலமா பேசிட்டுப் போகுமா?” போன்ற சம்பிரதாயங்களுக்குப் பிறகு, ‘தலை’ மட்டும் கூப்பிட்டு விளக்கினார். அதை நாங்கள் கொடுப்பதில்லை. அது ஒரு numeric data. அங்கே எந்த எண்ணும் இல்லை என்றால் அது தன்னைத்தானே 0.00 என்று எழுதிக்கொள்ளும். லாஜிக் தவறாக இருக்கலாம். ஆனாலும் அந்த இடத்தை character data மாதிரி காலியாக விடவே முடியாது” என்று.

இப்போது மதம் பற்றிச் சொல்லும்போதும் எனக்கு அதுவே நினைவுக்கு வருகிறது. நாம் எந்தப் பிற மதமும் இல்லை. எனக்கு இந்து மதமும் சம்மதம் இல்லை/ அல்லது மதம் சம்மதம் என்றாலும் அதைப் பொதுவில் சொல்ல விருப்பமில்லை. என்றால் காலியாக விடலாம்தானே. அது என்ன இந்துமதம் என்று எழுதிக்கொள்ளும் அராஜகம்? பிரான்ஸ் எல்லாம் இல்லையா அதை எல்லாம் தாண்டி?

ஏன் என்றால் என் பிறப்பு, வாழ்க்கை, திருமணம், விவாகரத்து, சொத்துரிமையிலிருந்து இறந்ததும் எரிப்பதா புதைப்பதா வரை சட்டமும் சம்பிரதாயங்களும் மதங்களுக்கு ஒரே மாதிரி இல்லை. என் திருமணம் செல்லுபடியாக, என் கணவன் bigamy செய்தால் காலரில் கைவைக்க, விவாகரத்து செய்யநினைத்தால், என் குடும்பத்திலிருந்து சொத்தைப் பிரித்துவாங்க, வாரிசு உரிமைகள் பேச… இப்படி இறக்கும்வரை சட்டம் மதம் சார்ந்து இருக்கிறது. ஒருவேளை சட்டம் இந்தியாவில் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருந்தால் மதத்தைக் குறிப்பிடத் தேவை இருக்காதா என்று யோசித்தீர்களா? அவ்ளோதான்.

தங்கமணி,

////பெயரிலியோடு சேர்ந்து யுனெஸ்கோவும் சொல்லியது அவர் செய்தது மறுமலர்ச்சிதான் என்று!

PERIYAR, THE PROPHET OF THE NEW AGE
THE SOCRATES OF SOUTH EAST ASIA
FATHER OF THE SOCIAL REFORM MOVEMENT AND
ARCH ENEMY OF IGNORANCE, SUPERSTITIONS,
MEANINGLESS CUSTOMS AND BASE MANNERS.
-UNESCO, 27-6-1970
/////

எனக்கு UNESCOவின் கருத்துகள் எதற்கு தங்கமணி? நாம்தான் நேரிடையாக தமிழகத்தைப் பார்க்கிறோமே. அப்படி என்றால் பெரியார் புரட்சிக்குப் பின் யுனெஸ்கோ சொல்லியிருப்பதைப் போல IGNORANCE, SUPERSTITIONS, MEANINGLESS CUSTOMS AND BASE MANNERS எல்லாம் குறைந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா என்றுதான் ரமணியிடமும் கேட்டேன். நீங்களாவது சொல்லுங்களேன். ஆமாம் என்றால் இப்படியே விட்டுவிடலாம். இந்தப் பதிவுக்கே இனி தேவை இல்லை. எது நடந்துவருகிறதோ அதை அப்படியே நடக்கவிடலாம். எல்லாம் தானே சரியாகிவிடும். இல்லை என்று நினைத்தால் மட்டும் ஏன் இல்லை என்று யோசியுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

நான் பெரியாரை இணையத்தில்தான் படித்தேன் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டாலும் படித்தவைகளில் இரண்டுவகை. ஒன்று பெரியார் நேரிடையாக எழுதியவை/பேட்டி கொடுத்தவை; இரண்டாம் வகை பெரியாரை ஒத்தோ எதிர்த்தோ மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள். முதல் வகையை முற்றிலும் நம்பிப் படிக்கலாம். ஆனால் இந்த இரண்டாம் வகையை ஒரு அடி தள்ளி நின்றுதான் படிக்கமுடியும். ஏனென்றால் இரண்டு பக்கமுமே தன் பக்கத்து சார்புக்காக ஏதாவது வலிந்து எழுதியிருப்பார்கள். எப்பொழுதாவது ரோசாவசந்த் போன்றவர்கள் பின்னூட்டங்களுக்கு இடையில் எடுத்துச் சொல்லும் பெரியார் பற்றிய கருத்துகளை தவிர மற்றவற்றை நான் ஒரு நிச்சயமில்லாத தன்மையோடேயே படிக்கிறேன்.

ஒருமுறை உஷா வலைப்பதிவில் பெரியார் பெண்கள் முன்னேற்றம் அடையவேண்டுமென்றால் இந்தியப் பெண்களும் மேற்கத்தியப் பெண்களைப் போல பேண்ட் அணியவேண்டும்; தலையை பாப்’கட் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்லியிருப்பதாகச் சொன்னார். சத்தியமாக நம்பவில்லை, இப்படி எல்லாம் அபத்தமாகக் கூட நினைப்பார்கள் என்று. ‘நுனிப்புல்’ மேய்ந்துவிட்டாரோ என்றே நினைத்தேன். ஆனால் அதே கருத்தை திண்ணைக் கட்டுரையில் படித்தபோது என்னால் நம்பாமல் இருக்கமுடியவில்லை.

பூணூலை அறுப்பதும் பாப்’கட் செய்துகொள்வது, அசைவ உணவுகளை உண்பது போன்ற இப்படிப் பட்ட மேம்போக்கான புற அடையாளங்களைத் தொலைப்பதுபோன்ற தீர்வுகளை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதால் எப்படி மாற்றம் வரும்? மாற்றம் மனதில் அல்லவா வரவேண்டும். சட்டைக்குள் இருக்கும் பூணூலை அவிழ்த்ததும் மனிதனுக்கு உலகம் வேறுமாதிரி தெரியுமா? அல்லது பூணூல் அணியாதவர்களுக்குள் இந்த பேதமே வருவதில்லையா? ‘காலையில் பிரபந்தம் சொல்லும் என் நண்பர்கள் மாலையில் என்னுடன் சிக்கன் சாப்பிடுகிறார்கள், இதுபோன்ற மாற்றங்கள்தான் ஜாதியை ஒழிக்கும்’ என்று நரேந்திரன் என்பவர் மகிழ்ந்துபோய் எழுதியிருந்தார். அடப்பாவமே, அப்படி என்றால் சிக்கன் வகையறா சாப்பிடும் அத்தனை ஜாதியினருக்கும் இடையில் மட்டும் ஜாதி வேற்றுமை இல்லையா? காலையில் பிரபந்தம் சொல்பவன் மாலையில் சிக்கன் சாப்பிட்டால் அவனுக்கு ஜாதி பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை; சிக்கன் பிடித்திருக்கிறது என்று மட்டும்தான் அர்த்தம்.

எனக்கு வசதி என்பதற்காக நான் பேண்டிலிருந்து எந்த உடையும் அணியலாம். ஆனால் அதுதான் எனக்குத் தன்னம்பிக்கையை தரும் என்று எப்படிச் சொல்லமுடியும்? அல்லது பேண்ட் போட்ட பெண்ணை மட்டும் ஆண் சமுதாயம் எப்படி ஏற்றிவைத்துப் பார்க்கும். இப்படிச் செய்வதாலேயே பேண்ட் போடுவதுதான்/போடுபவர்கள்(ஆண்) தான் உயர்வானவர்கள் சேலை கட்டுவது(பெண்) கேவலம் என்று நானே ஒத்துக்கொண்டதுபோலாகாதா? நானும் பூணூல் போட்டுக்கொள்வேன் என்று சொல்லும்போதே பூணுல் போட்டவன் உசத்தி என்று ஒத்துக்கொள்வது போலாகாதா? ஏற்கனவே ஒருமுறை சொல்லியதை இப்போதும் சொல்கிறேன்: என் வசதிக்காக நான் எந்த உடையும் அணிவேன். ஆனால் புடைவையும் சுடிதாரும், வளையல் தோடு ஜிமிக்கி ஹாரங்களும், கொலுசும் காலாழி, பீலியும் பெண் என்ற பெருமைக்காக அதீத கர்வத்துடனேயே அணிகிறேன். இப்படி இருக்கும்போதே பேண்ட் அணியும்போது இருப்பதைவிட அதிகத் திமிரோடு என்னால் ஆணைப் பார்க்கமுடிகிறது. இவைகளை மறுப்பது நான் பெண் என்பதை நானே கேவலமாக நினைப்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது. (மாறவேண்டும் என்று சொல்லும் அத்தனை ஜாதீயப் புற அடையாளங்களுக்கும் இதுவே என் கருத்து.) இப்படிச் செய்வதால் பெண் தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறாள் என்று சொல்லிப் பெண்ணியம் பேசும் பெண்கள் அப்படி மாறிவிட்ட பெண்களுக்கு மட்டும் விடிவு பிறந்துவிட்டதா என்று சொல்லுங்கள். மேலை நாடுகளில் பாப் வெட்டிக்கொண்டுள்ள பெண்கள் அடிமைத்தனங்களிலிருந்து வெளிவந்துவிட்டார்களா? இங்கிருந்து அமெரிக்கா போய் பேண்ட் போட்டுக்கொள்ளும் நம் ஊர் பெண்களுக்கும் மட்டுமாவது விடுதலை கிடைத்துவிட்டதா என்று வேண்டுமானால் தேன்துளி பத்மாவைக் கேட்டுக்கொள்ளலாம். நான் இருப்பது மாதிரிதான் நான் இருப்பேன். ஆனால் நீ எனக்கான இடத்தைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்றுதான் என்னால் சொல்லமுடியும். ஆணுக்குச் சரியான அறிவை, திறமையை வளர்த்துக்கொள்வதும் அதனோடு இயைந்தே எடுத்துச்செல்லும் அன்பினோடும் மட்டுமே ஆணை அடிக்க முடியும்.

இது பெரியார் தீர்விலிருந்து எடுத்துக்கொண்டிருக்கும் ஒரே ஒரு விஷயம். பெரியார் அந்தத் தீர்வை அப்படிச் சொல்லவில்லை, உங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் பிறந்ததால் பெரியார் புரியவில்லை என்று சொல்வீர்களானால் வேறு எப்படிச் சொல்லி இருக்கிறார் என்றும், ஏன் இப்படி நவீன கவிதை மாதிரி புரியாமலே எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார், இதை எல்லாம் யார் புரியும்படி மொழிபெயர்க்கப் போகிறார்கள் என்றும் சொல்லுங்கள்.

////நாம் அடையாளப்படுத்துகிறோமா? அல்லது ஒவ்வொருவரும் ஒரு அடையாளம்தான் நான் (அந்த நபர்) என்று நம்பி அதைக் காப்பாற்ற, விளம்பரப்படுத்த, பரப்ப, மற்றவரை அந்த அடையாளம் சிறந்தது என்று நம்பவைக்க உழைக்கிறார்களா? இது அரசியல் மட்டுமல்ல ஆன்மீகக் கேள்வியும் கூட. இதில் இருந்து ஒருவர் விரும்பினால் நிறைய பதில்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன். ////

இந்தப் பதிவு முழுக்க ஒரு வசதிக்காக எல்லா இடத்திலும் நான் என்றே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். மரத்தடியில் மதி ‘வாரணமாயிரம்’ பற்றி எழுதச் சொன்னபோது, என் பெர்சனல் விருப்புகளை பொதுவில் எழுதவிருப்பமில்லை என்று ‘சொன்னேன். ஹரியண்ணா, ‘திருப்புளி’ என்றால் என்ன என்று குழுமத்தில் கேட்டதற்கு தயங்கிக்கொண்டு இரண்டுநாள் பதில் சொல்லாமலே இருந்திருக்கிறேன். யாருக்குமே தன்னை பொதுவில் அடையாளப்படுத்திக்கொள்ள விருப்பம் என்பதெல்லாம் சும்மா. ஆனால் என் நினைவலைகளாக நான் எழுத நினைத்தால் பிறந்ததிலிருந்து 21 வருடங்கள் வாழ்ந்த ஊரைப் பற்றி எழுதாமல் வேறு எந்த ஊரை எழுதமுடியும்? எப்படி திருநெல்வேலிக் காரர்களும், மதுரைக்காரர்களும், மன்னார்குடி, மாயவரம் கோவைக் காரர்களும் தங்கள் சொந்த ஊரைப் பற்றி எழுதுகிறீர்களோ அப்படியே நானும் எழுதவேண்டும் என்றால் ஸ்ரீரங்கம் பற்றி மட்டும்தான் எழுதமுடியும். சமையல் குறிப்பு எழுதினால்கூட அப்படித்தான் இருக்கும். ஆனால் அது தவறு என்று சொல்கிறீர்களா? இதில் அடையாளத்தைக் காக்கச் செய்யும் முயற்சி என்ன இருக்கிறது? அல்லது என் ஊர் ஸ்ரீரங்கமாகிவிட்டதாலேயே எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றுக்கருத்தை என் ஊரைப் பற்றி வைக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? சந்தேகம் இல்லாமல் என்னை அருமையாக வளர்த்த ஊர். இன்னும் என் வேர்கள் அங்கேதான் இருக்கின்றன. இங்கே செல்லும்போதுதான் எனக்கும் நீங்கள் எல்லாம் உங்கள் சொந்த ஊருக்குப் போகும்போது தோன்றுவதுபோல “ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” நினைவுகள். இதை எப்படி மறுக்க முடியும்? நீங்கள் சொல்லும் தவறுகளை பெரியவர்கள்(65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இங்கேயும் செய்யலாம். ஆனால் அரிவாள் கலாசாரம் என்று எப்படி தன் ஊர் மக்களைப் பற்றி குழலி வருத்தப்படுகிறாரோ அதுபோன்ற ஒரு அறியாமை அல்லது இப்படி நடக்கவில்லை என்றால் நமக்கு சொர்க்கம்/மோட்சம் கிடைக்காதோ போன்ற தேவை இல்லாத ஆனால் படிந்துவிட்ட அச்சங்கள் மட்டுமே அவர்களிடம் இருப்பதால் என்னால் அவர்களை ஒரு வருத்தத்துடனாவது புரிந்துகொள்ள முடிகிறது. இதற்காக இவர்கள் எல்லாம் கெட்டவர்களோ மனிதநேயமோ இல்லாதவர்கள் இல்லை. எப்படி நாத்திகம் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஊருக்கு உதவாத உருப்படாதவர்களும் இருக்கிறார்களோ அதே போல் இங்கும் நல்லவர்களும் அல்லாதவர்களும் கலந்தே இருக்கிறார்கள். ஆனால் அரிவாள் கலாசாரம் என்றால் சரி அறியாமை என்று ஒப்புக்கொள்ளும் மக்கள் அதே சந்தேகத்தின் பலனை இவர்களுக்குத் தரமாட்டார்கள்; அது அவரவர் விருப்பம். என்றாலும் ஸ்ரீரங்கம் பற்றிய மாற்றுக்கருத்துகள் வந்த வலைப்பதிவுகளிலெல்லாம் ஓடிப்போய் என் பக்கத்தை நியாயப்படுத்த எப்பொழுதும் எதுவும் எழுதியதில்லை; அதற்காக நான் உழைத்ததில்லை இல்லை என்பதை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். இனியும் அந்த எண்ணம் எதுவும் இல்லை.

இப்பொழுதும் என் நம்பிக்கை அந்தப் பெரியவர்களிடம் இல்லை. அங்கிருந்து கிளம்பி, சென்னை, பெங்களூர், டில்லி, மும்பை, அமெரிக்கா, சிங்கை என்று இடம்பெயர்ந்து விட்ட அதன் அடுத்த தலைமுறையையே நான் கண்காணிக்கிறேன். அவர்களிடம் மிகப் பெரிய அளவில் மாற்றம் இருக்கிறதை என்னால் உணரமுடிகிறது. இல்லை என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். (என் அக்காவின் நண்பர்… என்ற விதிவிலக்குகளை எடுத்துக்கொண்டு யாரும் ஓடிவராதீர்கள். விதிவிலக்குகள் இல்லாத மூலையே உலகில் எங்கும் இல்லை.)

மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். இந்த மாற்றத்தை அவர்கள் மனுவைப் படித்து “தூ!” என்று துப்பிவிட்டு எடுக்கவில்லை; பெரியாரைப் படித்து புல்லரித்துப் போயும் எடுக்கவில்லை. ஆனால் தான் படிக்கும், வேலை பார்க்கும் இடங்களில் கலந்துவிட்ட பிற ஜாதிகாரர்களின் நட்பும் சூழ்நிலைகளுமே அவர்களை மாற்றி இருக்கிறது. கோ எஜுகேஷன் என்ற முறை பரவலாக்கப் பட்டதிலேயே ஆண்கள் பெண்களை தரம்தாழ்த்திப் பார்க்காமல் சமமான நட்பாகப் பார்ப்பதும், மனைவியை இணையாக நடத்துவதும் முழுவதுமாக ஆரம்பித்துவிட்டது.

இப்படிப்பட்ட எல்லாருக்குமான கல்வியும், சமுதாயச் சூழ்நிலைகளுமே இந்த வேற்றுமைகளை இந்தியாவில் இன்னும் வேகமாக மாற்றும் என்று திடமாக நம்புகிறேன். நான் சொல்ல நினைத்த தீர்வு இதுதான்; இதுமட்டும்தான்.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு உண்மையிலேயே நன்றி தங்கமணி.

o

நான் எங்குமே பிற மதம் பற்றி பேசவில்லை என்றே நினைக்கிறேன். வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் சொல்வதுபோல் (ஆபரேஷன் செய்யும்போது என் கைகள் நடுங்குவதே இல்லை) பிரச்சினைகள் வரும்போது உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால் இப்படித்தான் என்னால் பதில்சொல்ல முடிகிறது. ஹாங்காங்கில் இருக்கும்போது ஒரு சீனப்பெண் அவ்வப்போது வந்து கிறித்துவமதம் பற்றி பேசிவிட்டுப் போவாள். கடைசி நாள் உன் மதம் பற்றிச் சொல்லேன் என்றாள். எனக்குச் சொல்ல எதுவும் இல்லை. எப்படியும் இருக்கலாம் என்கிற மிகப் பரந்தவெளி. ஒரு துக்கிணி இடத்தை மட்டும் ஆக்கிரமித்துக் கூட மற்றவற்றைப் புறக்கணிக்க முடியும். முற்றிலும் புறக்கணித்தாலும் என்னை மதம் வெளியே பிடித்துத் தள்ளாது. இவர்கள் இப்படித்தான் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத ஒவ்வொரு தனிமனிதனும் இதில் தனித்தனி மதம் தான். எனக்கு விருப்பமான பகுதி இந்த மதத்தில் இதுதான் என்று சொன்னேன். இப்போதும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. மதம் பற்றி பேசாமல் பொதுவில் பேசியிருப்பதால் நான் மதத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறேன் என்று அர்த்தமில்லை. ஏற்கனவே சொன்னமாதிரி இது ஒரு உள்ளுணர்வு. யாராவது வெளியிலிருந்து அழித்துவிட்டதால் அழியக்கூடியது இல்லை. ஆனால் அழிக்கவேண்டும் என்றால் ஏன் அழிக்கவேண்டும் என்ற அறியாமையில் இந்த கடிதத்தை சிந்தித்திருக்கிறேன் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நான் சொல்லியிருப்பவை எல்லாம் தவறு, இந்து மதத்தையும் மனுதர்ம வேதங்களையும் தடை செய்தால்தான் வேற்றுமை அழியும் என்றால், தயவுசெய்து இந்துமதத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்று யாருமே படித்திராத பாகங்களை எடுத்துப் போடாமல், இந்து மதத்தை அழிக்க அடுத்தது என்ன செய்யவேண்டும், இப்படி ஒரு மதத்தையே தவறென்று அழித்துவிட்ட முன்மாதிரியாக வேறு மதங்கள் ஏதாவது இருக்கிறதா, நாளை காலையிலிருந்து அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்லுங்கள். நானும் வந்து வடம் பிடிக்கிறேன்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பொடிமட்டை குறிப்புகள்


பொடிமட்டை பிரிப்பது என்பது ஒரு கலை. இது என்ன பெரிய விஷயமா என்று பலருக்கு இது சாதாரணமாக தோன்றினாலும் ஒருவர் பொடிமட்டையை பிரிக்கும் லாவகத்தை வைத்தே அவரின் பின்புலத்தையும் அனுபவத்தையும் சுலபமாக கண்டுகொள்ளலாம்... பொடிமட்டையை மெதுவாக அழகாக பிரிப்பதிலே ஒரு நளினம், பொடியை கையாளுவதிலே ஒரு நாசூக்கு என்று அனுபவசாலிகள் செய்வதை பார்ப்பது ஒரு கவிதை அனுபவம்... அவசர அவசரமாக பிரித்தோமா, பொடியை இழுத்தோமா என்று கற்றுகுட்டிகள் செய்வதை பார்ப்பதோ பெரும் வதை அனுபவம்...

இதுதான் வயதென்று ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத ஒரு வயது.. அப்பொழுதைய தொல்லைகளில் ஒன்று இந்த தாத்தாக்களுக்கு இலவச எடுபிடி வேலை செய்வது. ஏற்கனவே பக்கத்து தெருவில் கோலி விளையாட்டு ஆரம்பித்து இருக்குமே என்று அவசர அவசரமாக டயரை உருட்டிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் திண்ணையில் இருந்து குரல் வரும்..

"எலேய், இன்னாரு மகன்தானடா நீ... செத்த இங்க வாடா..."
"என்ன தாத்தா"
"வேற ஒண்ணுமில்லடா, நம்ம முருகன் கடைக்கு ஒரே ஓட்டமா போயி பட்டணம் பொடி 10 பைசாவுக்கு வாங்கியா.."
"தாத்தா, அவசரமா போய்ட்டு இருக்கேன், வரும்போது வாங்கியாரவா"
"எலேய் வெளயாடதானடா போற, செத்த நாழி கழிச்சி போனா ஒண்ணும் ஆயிடாது.. இந்தா ஒரே ஓட்டம், வாங்கியாந்து கொடுத்திட்டு உடனே போயிடுவியாம், தங்கமான புள்ளயில்ல"

ஆமா, ஆமா, இதே காதுல விழாத மாதிரி ஓடினா அன்னிக்கி சாயங்காலம் வெளயாட்டு முடிஞ்சிட்டு வரதுகுள்ள தங்கம் உருகி வத்தி புகைஞ்சிருக்கும்...

"ஏண்டா, திண்ண வூட்டு தாத்தா கூப்பிட கூப்பிட காதுல உழுகாத மாதிரி ஓடினியாமே"
"அப்படியா தெரியாதே"
"ஒருத்தர் கூப்பிடுறது கூட தெரியாம அப்பிடி எங்க இருக்கு கவனம்.. இதுவே வண்டிக்காரன் எவனா ஹாரன் அடிச்சாலும் இப்படித்தான் ஓடுவியா"
"ஆமா பெரிய வண்டிங்க... இந்த ஊருல ஓடுறதே ரெண்டு மூணு சைக்கிள்தான்"
"எதுத்து வேற பேச ஆரம்பிச்சிட்டியா"

இத்தனைக்கும் தாத்தாக்கள் ஒரு நாளும் நம்மை சரியான விதத்தில் "கவனித்ததில்லை".. மிட்டாய் தாத்தா பொடி வாங்க அனுப்பும் வரை, கவனிக்கப்பட்டதில்லை என்பது கூட உணராத அப்பாவிகளாக இருந்தோம் என்பதுதான் உண்மை,. மிட்டாய் தாத்தா கூப்பிட்ட போதும் சாதாரணமாகத்தான் போய் நின்றேன். அவரோ பத்து பைசா கொடுத்து
"மிட்டாய் தாத்தா பொடி கேட்டாருன்னு முருகன்கிட்ட சொல்லு.. இந்த பத்து பைசாவுக்கு நீ எதுனா வாங்கிக்க"
"தாத்தா பொடிக்கு காசு..."
"அதெல்லாம் முருகன் கொடுப்பான் போ.. நீ இந்த பைசாவுக்கு எதுனா மிட்டாய் வாங்கி தின்னுக்க"
"இல்ல தாத்தா வேணாம் வீட்டுல திட்டுவாங்க"
"எல்லாம் நான் பாத்துக்குறேன் போடா, பெரிய மனுசனாட்டம்"

அப்பொழுது பத்து பைசா என்பது அடேங்கப்பா.. இந்த பாக்கெட் மணி பஜனையெல்லாம் நமக்கு என்னவென்றே தெரியாத காலம்.. அவ்வப்பொழுது கையில் கொடுக்கப்படும் ஐந்து பைசா, பத்து பைசாவும் மண்ணால் செய்யப்பட்ட யானை உண்டியலில் போடப்படும் (போட வைக்கப்படும்)... உண்டியல் உடைக்கும் கலையெல்லாம் அறிந்திராத வயது.. உண்டியலை தலைகீழாக கவிழ்த்து துடைப்பக்குச்சியால் சில பல காசுகளை எடுக்கலாம் என்று எனக்கு கற்றுக்கொடுத்த ஆசானை என் கண்ணில் காண்பிக்க இன்னும் வருசம் பல இருக்கு என்பதாய் ஆண்டவன் கணக்கு போட்டிருந்தான்... எனவே நமக்கே நமக்கென்று பத்து பைசாவை பார்த்ததும்... அப்பொழுது உடனடியாக நினைவுக்கு வந்தது கமர்கட்டுதான். எவ்வளவு நாள் கனவு..

"என்ன கருமமோ என்னவோ போயும் போயும் அதுக்கு போயி ஆசப்படுறியே.. வீட்டுல செய்யிற பலகாரத்த ஒண்ணு வைக்காத வாயில"
"ஆமா பொறி உருண்டை செய்யிற.. கடிச்சா பல்லு உடைஞ்சிடும் போல"

சின்னதாக உருண்டையாக பழுப்பு நிறத்தில் சாப்பிட்டால் சவ சவ என்று ஜவ்வாய் இருக்கும் கமர்கட்டின் ருசியே தனிதான்.. சில சமயம் கடுக் முடுக் என்று உடைபடும் கமர்கட்டு ஏனோ எனக்கு பிடித்ததில்லை.. அப்பொழுது பத்து பைசாவுக்கு பத்து கமர்கட்டுகளுக்கு மேல் கிடைக்கும்.

மிட்டாய் தாத்தா கடைக்கு போக காசு தர ஆரம்பித்த பிறகு மத்த தாத்தாக்கள் ஓசி வேலை சொன்னால் செய்வதில் ஒரு எரிச்சல் எங்கள் வயது ஆட்கள் எல்லாருக்கும் தோன்றியது என்னவோ உண்மை.. இவர்களுக்கு எல்லாம், நாம பிறந்ததே இங்களுக்கு சேவகம் செய்வதற்குத்தான் என்று ஒரு நினைப்பு.. இது போன்ற நினைப்புக்கள் கூட இப்பொழுதுதான் வருகின்றது.. அப்பொழுதெல்லாம் இந்த வகை சிந்தனை "எரிச்சல்" என்ற ஒற்றை வார்த்தைகளில் அடங்கிவிடும். அதுவும் எரிச்சல், விளையாடுவதற்கு தடையாக இருக்கும்போதுதான்.

முக்கியமாக ஐஸ்பாய் விளையாட்டின் போது... யார் அவுட்டோ அவர்கள் சுவற்றில் முகத்தை வைத்து குதிரைக்கு போடும் கண் கவசம் போல இரு கைகளையும் முகத்தில் வைத்து ஏதோ ஒரு எண் (20?) வரை எண்ண வேண்டும்.. அதற்குள் மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எண்ணி முடித்தவுடன் அவர்கள் ஒளிந்தவர்களை கண்டு பிடித்து, இங்கே கண்டுபிடித்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே கண் பொத்திய சுவற்றை தொடவேண்டும். அதற்குள் ஒளிந்தவர் ஓடி வந்து சுவற்றை தொட்டுவிட்டால் அவர் அவுட் இல்லை. இதுதான் ஐஸ்பாய் (என்று நினைக்கிறேன்... இக்காலத்துக்கேற்ப ரூல்ஸ் மாறியிருக்கலாம்)... என்னை தவிர வேறு யாருக்கும் கண் பொத்தி விடாத லதாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை கல்யாணம் என்றால் என்ன என்பது கூட தெரியாத அந்த பருவத்திலேயே முடிவு செய்திருந்தேன் (லதாவிடம் கண்பொத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது அடிக்கடி அவுட் ஆகியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது) ஒளிவதில்தான் நான் சாம்பியனாக இருக்க ஆசைப்பட்டேன். அப்படி ஓடி ஒளியும் நேரம், திண்ணையில் இருந்து தாத்தா குரல் விடுவார்...

"எலேய் என்னடா இருட்டு சந்துல ஒளியிற.. எதுனா பூச்சி பொட்டு கடிச்சி வைக்க போகுது.."
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தாத்தா, செத்த செவனேன்னு இருங்க, விளையாடிகிட்டு இருக்கோம்"
"வெளயாடுறது இருக்கட்டும்டா, ஒரு ஓட்டம் ஓடிப்போயி முருகன் கடையில...."

தாத்தாவுக்கு எட்டு கட்டை குரல்... யாரும் வர பயப்படும், கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஒளியும் இடத்தில் இருப்பவனை, கேவலம் பொடி விஷயத்திற்காக காட்டி கொடுக்கிறாரே..

அப்புறம் என் கண்ணெதிரிலேயே பொடிமட்டை வழக்கொழிந்து போனது.. மிட்டாய் தாத்தா வெள்ளியில் பொடி டப்பா வாங்கிவிட்டார். இப்பொழுது பொடி டப்பாவை எடுத்து போனால் முருகன் கடையில் டப்பா வழிய வழிய பொடி கொடுத்து அனுப்புவார்கள்.. அவர்கள் டப்பாவை நிரப்பும் அழகே அழகு.. ஒரு அடிக்கு ஒரு எவர்சில்வர் கரண்டி மாதிரி சன்னமாக இருக்கும். அதன் ஒரு முனையில் பழைய நாலணாவின் பாதி விட்டத்துக்கு ஒரு "கரண்டி" இருக்கும். போற போக்கில் விலைவாசி ஏறினால் குண்டூசியை நசுக்கி இந்த கரண்டி தயாரிப்பார்களோ என்று பின்னாளில் நான் நினைத்ததுண்டு.. பல வகை பொடிகள் பெரிய பெரிய பீங்கான் ஜாடிகள் நிறைய இருக்கும்.. பார்க்க எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கிறது, எதற்கு இத்தனை ஜாடி என்று தோன்றும். பத்து பத்து பைசாவாக பொடி விற்றால் என்றைக்கு இவர்கள் இந்த ஜாடியை நிறைய விற்று முடிப்பார்கள் என்று தோன்றும்... ஆனால் ஒரு நாள் கூட பொடிமட்டையை பிரித்து நாமும் கொஞ்சம் பொடி போட்டால் என்ன என்று தோன்றியதேயில்லை..

பின்குறிப்பு கேள்விகள் ::

அ) கமர்கட்டு என்று ஒரு சமாச்சாரம் இப்பொழுதும் தயாரிக்கப்படுகிறதா, எனில் பத்து பைசாவுக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு கமர்கட்டுகள் தருகிறார்கள்?

ஆ) முதல் மரியாதை படத்தில் "போடா பொடிமட்டை" என்றூ மலேசியா வாசுதேவன் ஒரு இடத்தில் சொல்வார். அது வசவா வாழ்த்தா?

இ) ஒரு கம்பீரமான உருவம் குத்துக்காலிட்டு உட்கார்ந்து பொடி தயாரிப்பது போல் ஒரு விளம்பரம் வரும். NS பட்டணம் பொடி என்று ஞாபகம். அது இன்னமும் தயாரிக்கப்படுகிறதா? பட்டணம் பொடி என்றால் என்ன? அதற்கும் சாதா பொடிக்கும் என்ன வித்தியாசம்?

ஈ) பலவித அலங்கார பொடி டப்பாக்கள் புழங்கும் இக்காலத்திலும் பொடிமட்டைகள் வழக்கில் இருக்கிறதா?




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அத்து மீறு


img crtsy: dinamani, tamilmurasu
img crtsy: tamilmurasu



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அடங்க மறு


img crtsy: vikatan.com



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பின்நவீனத்துவ அரசியல்


முட்டைகளை அடைகாத்து முட்டை ஓட்டை தன் அலகினால் லேசாக உடைத்து குஞ்சு முட்டையிலிருந்து வெறியேற வழி செய்து குஞ்சுகளைத் தன் வெதுவெதுப்பான சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்து தானியங்களைத் தின்பதற்கு கற்றுக்கொடுத்து எல்லாம் ஒழுங்கான தாள லயத்துடன் நடந்து கொண்டிருக்கும்போதே ஆகாயத்திலிருந்து சரேலெனப் பாய்ந்து குஞ்சுகளைத் தன் காலிடுக்கில் எடுத்து செல்லும் பருந்துகளுக்கு மிஞ்சிப் பிழைக்கும் குஞ்சுகள் ஒன்பது கூட இல்லை என்றால் இந்த உலகில் ஒழுங்கு எங்கே உள்ளது?

ஸீரோ டிகிரி நாவலிலிருந்து. இதை படிக்கும்போது ராமதாஸ், திருமா, ஜெயலலிதா ஞாபகத்துக்கு வந்தால் ஆசிரியர் பொறுப்பல்ல.

*

தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை ஆகியவையாக ஆனால் அதற்கு பின்நவீனத்துவம் என்று பெயர். எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் ரொம்ப அருமையான பின்நவீனத்துவம் என்று சொல்கிறார்கள்.

திண்ணையில் வந்த ஒரு கட்டுரையில் இருந்து சுடப்பட்டதில் இருந்து சுடப்பட்டது.

*

.... அடுத்தவரின் சார்பு நிலையை குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்று சர்டிபிகேட் கொடுக்க முடிகிறது உங்களால்... அடுத்த எலக்சனில் பாமக கூட்டணி வகிக்கும் கட்சி வி.சிக்களுக்கு இடம் கிடையாது என்று கை விரித்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வி.சிக்கு இடம் தருவோம் என்று பாமக் சொல்லும்பட்சத்தில் சந்தோஷமடைவோம்... அதுவரை காழ்ப்புணர்ச்சி அது இது என்றெல்லாம் சொல்லாமல், முடிந்தால் நடுநிலைமையோடு....

முகமூடி, நவம்பர் 21, 2005

*

போட்டோல கைகள் இணையலை! பொத்திய கைகளுக்குள் விரலைப்பிடிச்சி சீட்டுபேரம் நடக்கறாப்படிதான் தெரியுது! பேரம் படியாமப்போகட்டும்! அன்னைக்கு இருக்கு இதைவிட தமாசு!

இளவஞ்சி, வலைப்பதிவர். நவம்பர் 17, 2005

*

கேள்வி :- அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து உள்ளீர்களே. மனநிலை எப்படி உள்ளது.

திருமாவளவன் :- மகிழ்ச்சியாக இருக்கிறேன். அ.தி.மு.க-விடுதலை சிறுத்தை இயக்க கூட்டணி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் இந்த கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்குவார்கள்.

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

திருமாவளவன் :: அ.தி.மு.க.,வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைத்து கொண்டதற்காக மகிழ்ச்சி அடையவில்லை.

தினமலர், மார்ச் 1, 2006


*

...விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க விரும்பி கூட்டணியில் எங்களை சேர்க்க ராமதாஸ் முயற்சித்தார். ஆனால் கருணாநிதி பா.ம.க. உள் ஒதுக்கீடு செய்யலாம் என்று சொல்லி அக்கட்சியின் வலிமையை குறைத்து மதிப்பிட்டார். பந்தியில் இடம் இல்லை. வேண்டுமானால் பா.ம.க. இலையில் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்பதுதான் அதன் பொருள். கிட்டத்தட்ட எச்சி இலையை எடுப்பது போன்றதுதான் அது. ஒடுக்கப்பட்ட மக்களை இந்த வார்த்தை காயப்படுத்தியது. (அப்படியா??) இந்த நிலையில் பா.ம.க. தரப்பில் கலைஞர் இது போன்ற வார்த்தையை சொல்லி இருக்க வேண்டாம் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை...

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

திருமாவளவன் :- ஆனாலும் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காகத்தான் முழுமூச்சாகப் பாடுபடுவோம். இதில் நட்பு(க்) கட்சி என்று பார்க்க முடியாது. எதிரணியில் யார் போட்டியிட்டாலும் கடுமையாக எதிர்ப்போம்.

தினமணி செய்தியென தேர்தல் வலைப்பதிவு

*

... வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றமில்லாமல், எந்த வித விழிப்புணர்ச்சியும் இல்லாமல், எந்த வித முன்னேற்றமுமில்லாமல் இரண்டு சமூகங்களும் அடித்துக்கொண்டு செத்தபோதெல்லாம் இவர்கள் இணைய மாட்டார்களா என சிறுவயதிலிருந்தே ஆதங்கப்பட்டவன் நான், அந்த சூழலில் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த இணைப்பு எத்தனை முக்கியமென...எத்தனை தேவையென. இளவஞ்சி அவர்கள் சீட்டுக்காகவோ, சுயநலத்திற்காகவோ அல்லது என்ன எழவுக்காக இணைந்தாலும் இந்த இணைப்பு இரு சமூக மக்களிடம் பெரும் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என்பது உண்மை...இது மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ எம் போன்றவர்களுக்கு புரியும்....

...மிதி வண்டி மோதிக்கொண்டால் கூட கலவரம் வெடித்த நிலை மாறி இன்று ஒரே வாகனத்தில் ஒரு புறம் பாமக கொடியும் ஒரு பக்கம் விடுதலை சிறுத்தை கொடியையும் கட்டிக்கொண்டு ஒன்றாக கூட்டங்களுக்கு செல்வதையும் ஒன்றாக பணியாற்றுவதும் வார்த்தைகளால் சொன்னால் அந்த சூழலை பார்க்காதவர்களுக்கு சத்தியமாக இந்த இணைப்பின் மாற்றம் புரியாது....

குழலி, வலைப்பதிவர். நவம்பர் 18, 2005

*

திருமாவளவன் :: ஏழு கட்சி கூட்டணி வைத்துக்கொண்ட கருணாநிதிக்கு எட்டாவது கட்சியாக விடுதலை சிறுத்தைகளை சேர்த்து கொள்வதில் என்ன தயக்கம்?

தினமலர், மார்ச் 1, 2006

*

கேள்வி :- ஈழப்பிரச்சினையில் வேறு கொள்கையுடைய அ.தி.மு.க.வுடன் சேர்ந்து உள்ளீர்களே?

திருமாவளவன் :- ஈழத்தமிழர் பிரச்சினையில் எங்களுக்கு என்ன நிலைப்பாடு இருக்கிற தோ அதே நிலைப்பாடு அ.தி.மு.க.வுக்கும் இருக்கிறது.

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

கேள்வி :- பா.ம.க.வை அழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் நீங்கள் பேசுவீர்களா?

தமிழ் பாதுகாப்பு இயக்க போராளி திருமாவளவன் :- அந்த நிலை பா.ம.க.வுக்கு இல்லை. அவர்கள் பேசுவதற்கான 'சேனல்' இருக்கிறது.

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

// எப்போது இந்த பொய் பிரச்சாரம் //

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

என்ற குறளுக்கு ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும் என்று பொருள் சொல்கிறார்கள்... இங்கு வஞ்சகர் என்பது ஒரு மனைவி மட்டும் கொண்டிருந்தாலும் நம்பியவரை கைவிடுதல், வாக்கு மாறுதல், நம்பகத்தன்மை இல்லாமை, சுயநலத்துக்காக பொதுநல சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்துதல், சுயநலத்துக்காக அப்பாவிகளை உபயோகப்படுத்துதல், தனி மனித வன்முறை, பொது இடத்தில் நாகரீகம் இல்லாமல் கண்டபடி பேசுதல் போன்ற விஷயங்களை... இது உங்களுக்கும் தெரியும், இருந்தாலும் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி மட்டையடித்தால் அதற்கு உண்மைத்தோற்றம் தரலாம் என்றுதான்...

முகமூடி, நவம்பர் 18, 2005

*

தன்னெஞ் அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

திருவள்ளுவர் & திருவாளர் குழலி

*

தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை ஆகியவையாக ஆகும்பொழுது அதற்கு பின்நவீனத்துவம் என்று பெயர். எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் ரொம்ப அருமையான பின்நவீனத்துவம் என்று பொருள்.




š இப்பதிவை மின்னஞ்சலிட