<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பொடிமட்டை குறிப்புகள்


பொடிமட்டை பிரிப்பது என்பது ஒரு கலை. இது என்ன பெரிய விஷயமா என்று பலருக்கு இது சாதாரணமாக தோன்றினாலும் ஒருவர் பொடிமட்டையை பிரிக்கும் லாவகத்தை வைத்தே அவரின் பின்புலத்தையும் அனுபவத்தையும் சுலபமாக கண்டுகொள்ளலாம்... பொடிமட்டையை மெதுவாக அழகாக பிரிப்பதிலே ஒரு நளினம், பொடியை கையாளுவதிலே ஒரு நாசூக்கு என்று அனுபவசாலிகள் செய்வதை பார்ப்பது ஒரு கவிதை அனுபவம்... அவசர அவசரமாக பிரித்தோமா, பொடியை இழுத்தோமா என்று கற்றுகுட்டிகள் செய்வதை பார்ப்பதோ பெரும் வதை அனுபவம்...

இதுதான் வயதென்று ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத ஒரு வயது.. அப்பொழுதைய தொல்லைகளில் ஒன்று இந்த தாத்தாக்களுக்கு இலவச எடுபிடி வேலை செய்வது. ஏற்கனவே பக்கத்து தெருவில் கோலி விளையாட்டு ஆரம்பித்து இருக்குமே என்று அவசர அவசரமாக டயரை உருட்டிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் திண்ணையில் இருந்து குரல் வரும்..

"எலேய், இன்னாரு மகன்தானடா நீ... செத்த இங்க வாடா..."
"என்ன தாத்தா"
"வேற ஒண்ணுமில்லடா, நம்ம முருகன் கடைக்கு ஒரே ஓட்டமா போயி பட்டணம் பொடி 10 பைசாவுக்கு வாங்கியா.."
"தாத்தா, அவசரமா போய்ட்டு இருக்கேன், வரும்போது வாங்கியாரவா"
"எலேய் வெளயாடதானடா போற, செத்த நாழி கழிச்சி போனா ஒண்ணும் ஆயிடாது.. இந்தா ஒரே ஓட்டம், வாங்கியாந்து கொடுத்திட்டு உடனே போயிடுவியாம், தங்கமான புள்ளயில்ல"

ஆமா, ஆமா, இதே காதுல விழாத மாதிரி ஓடினா அன்னிக்கி சாயங்காலம் வெளயாட்டு முடிஞ்சிட்டு வரதுகுள்ள தங்கம் உருகி வத்தி புகைஞ்சிருக்கும்...

"ஏண்டா, திண்ண வூட்டு தாத்தா கூப்பிட கூப்பிட காதுல உழுகாத மாதிரி ஓடினியாமே"
"அப்படியா தெரியாதே"
"ஒருத்தர் கூப்பிடுறது கூட தெரியாம அப்பிடி எங்க இருக்கு கவனம்.. இதுவே வண்டிக்காரன் எவனா ஹாரன் அடிச்சாலும் இப்படித்தான் ஓடுவியா"
"ஆமா பெரிய வண்டிங்க... இந்த ஊருல ஓடுறதே ரெண்டு மூணு சைக்கிள்தான்"
"எதுத்து வேற பேச ஆரம்பிச்சிட்டியா"

இத்தனைக்கும் தாத்தாக்கள் ஒரு நாளும் நம்மை சரியான விதத்தில் "கவனித்ததில்லை".. மிட்டாய் தாத்தா பொடி வாங்க அனுப்பும் வரை, கவனிக்கப்பட்டதில்லை என்பது கூட உணராத அப்பாவிகளாக இருந்தோம் என்பதுதான் உண்மை,. மிட்டாய் தாத்தா கூப்பிட்ட போதும் சாதாரணமாகத்தான் போய் நின்றேன். அவரோ பத்து பைசா கொடுத்து
"மிட்டாய் தாத்தா பொடி கேட்டாருன்னு முருகன்கிட்ட சொல்லு.. இந்த பத்து பைசாவுக்கு நீ எதுனா வாங்கிக்க"
"தாத்தா பொடிக்கு காசு..."
"அதெல்லாம் முருகன் கொடுப்பான் போ.. நீ இந்த பைசாவுக்கு எதுனா மிட்டாய் வாங்கி தின்னுக்க"
"இல்ல தாத்தா வேணாம் வீட்டுல திட்டுவாங்க"
"எல்லாம் நான் பாத்துக்குறேன் போடா, பெரிய மனுசனாட்டம்"

அப்பொழுது பத்து பைசா என்பது அடேங்கப்பா.. இந்த பாக்கெட் மணி பஜனையெல்லாம் நமக்கு என்னவென்றே தெரியாத காலம்.. அவ்வப்பொழுது கையில் கொடுக்கப்படும் ஐந்து பைசா, பத்து பைசாவும் மண்ணால் செய்யப்பட்ட யானை உண்டியலில் போடப்படும் (போட வைக்கப்படும்)... உண்டியல் உடைக்கும் கலையெல்லாம் அறிந்திராத வயது.. உண்டியலை தலைகீழாக கவிழ்த்து துடைப்பக்குச்சியால் சில பல காசுகளை எடுக்கலாம் என்று எனக்கு கற்றுக்கொடுத்த ஆசானை என் கண்ணில் காண்பிக்க இன்னும் வருசம் பல இருக்கு என்பதாய் ஆண்டவன் கணக்கு போட்டிருந்தான்... எனவே நமக்கே நமக்கென்று பத்து பைசாவை பார்த்ததும்... அப்பொழுது உடனடியாக நினைவுக்கு வந்தது கமர்கட்டுதான். எவ்வளவு நாள் கனவு..

"என்ன கருமமோ என்னவோ போயும் போயும் அதுக்கு போயி ஆசப்படுறியே.. வீட்டுல செய்யிற பலகாரத்த ஒண்ணு வைக்காத வாயில"
"ஆமா பொறி உருண்டை செய்யிற.. கடிச்சா பல்லு உடைஞ்சிடும் போல"

சின்னதாக உருண்டையாக பழுப்பு நிறத்தில் சாப்பிட்டால் சவ சவ என்று ஜவ்வாய் இருக்கும் கமர்கட்டின் ருசியே தனிதான்.. சில சமயம் கடுக் முடுக் என்று உடைபடும் கமர்கட்டு ஏனோ எனக்கு பிடித்ததில்லை.. அப்பொழுது பத்து பைசாவுக்கு பத்து கமர்கட்டுகளுக்கு மேல் கிடைக்கும்.

மிட்டாய் தாத்தா கடைக்கு போக காசு தர ஆரம்பித்த பிறகு மத்த தாத்தாக்கள் ஓசி வேலை சொன்னால் செய்வதில் ஒரு எரிச்சல் எங்கள் வயது ஆட்கள் எல்லாருக்கும் தோன்றியது என்னவோ உண்மை.. இவர்களுக்கு எல்லாம், நாம பிறந்ததே இங்களுக்கு சேவகம் செய்வதற்குத்தான் என்று ஒரு நினைப்பு.. இது போன்ற நினைப்புக்கள் கூட இப்பொழுதுதான் வருகின்றது.. அப்பொழுதெல்லாம் இந்த வகை சிந்தனை "எரிச்சல்" என்ற ஒற்றை வார்த்தைகளில் அடங்கிவிடும். அதுவும் எரிச்சல், விளையாடுவதற்கு தடையாக இருக்கும்போதுதான்.

முக்கியமாக ஐஸ்பாய் விளையாட்டின் போது... யார் அவுட்டோ அவர்கள் சுவற்றில் முகத்தை வைத்து குதிரைக்கு போடும் கண் கவசம் போல இரு கைகளையும் முகத்தில் வைத்து ஏதோ ஒரு எண் (20?) வரை எண்ண வேண்டும்.. அதற்குள் மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எண்ணி முடித்தவுடன் அவர்கள் ஒளிந்தவர்களை கண்டு பிடித்து, இங்கே கண்டுபிடித்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே கண் பொத்திய சுவற்றை தொடவேண்டும். அதற்குள் ஒளிந்தவர் ஓடி வந்து சுவற்றை தொட்டுவிட்டால் அவர் அவுட் இல்லை. இதுதான் ஐஸ்பாய் (என்று நினைக்கிறேன்... இக்காலத்துக்கேற்ப ரூல்ஸ் மாறியிருக்கலாம்)... என்னை தவிர வேறு யாருக்கும் கண் பொத்தி விடாத லதாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை கல்யாணம் என்றால் என்ன என்பது கூட தெரியாத அந்த பருவத்திலேயே முடிவு செய்திருந்தேன் (லதாவிடம் கண்பொத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது அடிக்கடி அவுட் ஆகியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது) ஒளிவதில்தான் நான் சாம்பியனாக இருக்க ஆசைப்பட்டேன். அப்படி ஓடி ஒளியும் நேரம், திண்ணையில் இருந்து தாத்தா குரல் விடுவார்...

"எலேய் என்னடா இருட்டு சந்துல ஒளியிற.. எதுனா பூச்சி பொட்டு கடிச்சி வைக்க போகுது.."
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தாத்தா, செத்த செவனேன்னு இருங்க, விளையாடிகிட்டு இருக்கோம்"
"வெளயாடுறது இருக்கட்டும்டா, ஒரு ஓட்டம் ஓடிப்போயி முருகன் கடையில...."

தாத்தாவுக்கு எட்டு கட்டை குரல்... யாரும் வர பயப்படும், கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஒளியும் இடத்தில் இருப்பவனை, கேவலம் பொடி விஷயத்திற்காக காட்டி கொடுக்கிறாரே..

அப்புறம் என் கண்ணெதிரிலேயே பொடிமட்டை வழக்கொழிந்து போனது.. மிட்டாய் தாத்தா வெள்ளியில் பொடி டப்பா வாங்கிவிட்டார். இப்பொழுது பொடி டப்பாவை எடுத்து போனால் முருகன் கடையில் டப்பா வழிய வழிய பொடி கொடுத்து அனுப்புவார்கள்.. அவர்கள் டப்பாவை நிரப்பும் அழகே அழகு.. ஒரு அடிக்கு ஒரு எவர்சில்வர் கரண்டி மாதிரி சன்னமாக இருக்கும். அதன் ஒரு முனையில் பழைய நாலணாவின் பாதி விட்டத்துக்கு ஒரு "கரண்டி" இருக்கும். போற போக்கில் விலைவாசி ஏறினால் குண்டூசியை நசுக்கி இந்த கரண்டி தயாரிப்பார்களோ என்று பின்னாளில் நான் நினைத்ததுண்டு.. பல வகை பொடிகள் பெரிய பெரிய பீங்கான் ஜாடிகள் நிறைய இருக்கும்.. பார்க்க எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கிறது, எதற்கு இத்தனை ஜாடி என்று தோன்றும். பத்து பத்து பைசாவாக பொடி விற்றால் என்றைக்கு இவர்கள் இந்த ஜாடியை நிறைய விற்று முடிப்பார்கள் என்று தோன்றும்... ஆனால் ஒரு நாள் கூட பொடிமட்டையை பிரித்து நாமும் கொஞ்சம் பொடி போட்டால் என்ன என்று தோன்றியதேயில்லை..

பின்குறிப்பு கேள்விகள் ::

அ) கமர்கட்டு என்று ஒரு சமாச்சாரம் இப்பொழுதும் தயாரிக்கப்படுகிறதா, எனில் பத்து பைசாவுக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு கமர்கட்டுகள் தருகிறார்கள்?

ஆ) முதல் மரியாதை படத்தில் "போடா பொடிமட்டை" என்றூ மலேசியா வாசுதேவன் ஒரு இடத்தில் சொல்வார். அது வசவா வாழ்த்தா?

இ) ஒரு கம்பீரமான உருவம் குத்துக்காலிட்டு உட்கார்ந்து பொடி தயாரிப்பது போல் ஒரு விளம்பரம் வரும். NS பட்டணம் பொடி என்று ஞாபகம். அது இன்னமும் தயாரிக்கப்படுகிறதா? பட்டணம் பொடி என்றால் என்ன? அதற்கும் சாதா பொடிக்கும் என்ன வித்தியாசம்?

ஈ) பலவித அலங்கார பொடி டப்பாக்கள் புழங்கும் இக்காலத்திலும் பொடிமட்டைகள் வழக்கில் இருக்கிறதா?




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இஸ்கூலு படிக்குறப்ப.. தலையாட்டி கடைனு கோவிலோட மேலக்கோபுர வாசல்ல ஒரு ரொம்பா பேர்போன கடை இருக்கும்.. அங்க போய் தாத்தாவுக்கு பொடி வாங்கித்தரது என் வேலைல ஒண்ணு... ஆன அதுக்கு நெறையவே இனாம் கெடைக்கும்... அந்த நெயாபகத்தை கெளப்பி விட்டுட்டீய.. :-) அப்போ , வாசனை பொடிகளும் உண்டு,தாத்தா சந்தோசமா இருந்தா ஏதோ சொல்லுவாரு, அப்போ ஏதோதோ போட்டு இடிச்சு, கலக்கி பொடி குடுப்பாரு பொடி கடை தாத்தா...

அதுக்கப்புறம், இப்போ அந்த பொடிக்கடை இடிச்சு வேற எதோ கடை வந்திருச்சு...

ஆனா இன்னமும் அந்த கடையில வேல பார்த்த ஒருத்தர், அந்த சின்ன தராசு, சின்ன இஸ்பூன் எல்லாம் வச்சுகிட்டு பழைய கடை இருந்த இடத்துக்கு எதித்தாப்ல இருக்காரு..

நல்லவேளை தல, பொடிமட்டைனதும் அஹா அடுத்த சீரியஸ் பதிவானு ஒருமாதிரி ஆகிடிச்சு.. , நீங்க டாப்டென் போட்டு ரொம்ப நாளாச்சு... அந்த வகையான நையாண்டி பதிவெல்லாம் உங்களுக்கு மறந்துபோச்சானு கூட யோசிச்சுருக்கேன்... :-)
 



யாத்ரீகன், உங்களுக்கு வாய்த்த தாத்தாக்கள் தாராளமாக இனாம் தந்திருக்கிறார்கள்.. நம்ம நிலைமைய பாருங்க..

அப்புறம் அந்த சின்ன தராச பத்தி சொல்லாம விட்டுட்டேன்.. பொடி போடற தாத்தாங்க பக்கத்துல போனாலே ஒரு வாசனை வரும். அது கூட எனக்கு பிடிக்கும்.

சீரியஸ் பதிவா.. அதெல்லாம் வேணாம்னு கொஞ்ச நாளாவே முடிவுதான்.. சீரியஸா பின்னூட்டத்துல சில பேரு பேசிக்கிறாங்க.. தேர்தல் நேரத்துல டாப்டென் (அதைக்கூட ஞாபகம் வைத்திருக்கிறீர்களே.. நன்றி) போட ஆரம்பிச்சா டாப் 100 ஆகிடுங்களே..
 



நமக்கும் இப்படித்தான் பக்கத்து வீ்டடு பாய் கிழவிக்கு வெத்தலை வாங்கி கொடுத்தே கால் தேஞ்சது....ஒரு நாள் அந்த வெத்தலை காம்பை கிள்ளி தின்னுட்டன்னு கிழவி பண்ண கலாட்டா..என்னவோ போங்க....

பத்து பைசாவுக்கு பத்து கமர்கட்...புரியுதுப்பா முகமூடியோட வயசு(பெர்சு செளக்கியமா)

//ஆனால் ஒரு நாள் கூட பொடிமட்டையை பிரித்து நாமும் கொஞ்சம் பொடி போட்டால் என்ன என்று தோன்றியதேயில்லை..//

ஆகா இங்கத்தான்யா வெச்சுர்காருய்யா ஆப்பு.....
 



எங்க வீட்லயும் பொடி போடரவங்க இருந்திருக்காங்க. அதுல ஒருத்தர் பொடியிலயிருந்து
புகயிலைக்கு மாறிட்டாங்க. புகயிலைக்கு பொடியே தேவலாம்ன்னு எனக்குத் தோணும்.
பொடி போடரவங்க க்ண்ட இடத்துல துப்ப மாட்டாங்கல்ல. வேட்டில மூக்க தொடைக்கிறட்தோட
பொடி போடரவங்க நிறுத்திக்குவாங்க.

இரண்டு காலி பொடி டப்பவுல நூலக் கோத்து இணச்சு, ஒருத்தர்டிருந்து இருந்து ஒருத்தர் தள்ளி நின்னு டெலிபோன் பேசியிருக்கோம்.

ஐஸ்பாய் நானும் விளையாடியிருக்கேன். எங்க விளையாட்டுல, நான் கண்டு பிடிக்கிறவங்கள
போய் நான் தொடணும். அதுக்குள்ள அவங்க வந்து சுவத்த தொட்டுட்டாங்கன்னா அவங்க அவுட்
இல்லை
அன்புடன்
சாம்
 



கமர்கட்டு - peyar kaaranam ennavo?
 



பொடிமட்டையைப் பற்றி எழுதிய நீங்கள் அந்த அழுக்கு கர்ச்சீf பற்றியும் அடுத்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்!
'அந்த நாள் ஞாபகம் வந்ததே, நண்பனே, நண்பனே!'

BTW, 'பொடிமட்டை பிரிச்சால் காரம் போச்சு' என்று சொல்வார்கள்.
மு.ம. பட வார்த்தையும் இந்த அர்த்தத்தில்தான் சொல்லப்படுகிறது-- சிவாஜியின் உள்ளாசையை, வேறு ஒருவன் போட்டுக் கொடுக்கும் போது, அவனை இப்படி செல்லமாகக் கோபிப்பார்.
 



முகமூடி,

//எனில் பத்து பைசாவுக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு கமர்கட்டுகள் தருகிறார்கள்? // நீர் இந்தியா வந்து எத்தனை வருசம் ஆகுது?? 50 பைசா போட்டாலே பிச்சைக்காரன் பார்க்கற பார்வை சரியில்லை.. இதுல 10 பைசாவுக்கு எத்தனி கமட்கட்டாம்?!!

மற்றபடி பதிவு படிக்க மிக சுவாரசியம்! :)
 



// பத்து பைசாவுக்கு பத்து கமர்கட்...புரியுதுப்பா முகமூடியோட வயசு //

இதுல இன்னாபா முத்து வயசு கண்டுபிடிச்ச... டவுனுகாரங்க உங்களுக்கு தெரியாது கிராமத்து வெலவாசி... இன்னிக்கும் எங்க கிராமத்துல ஒரு நாளக்கி 5 ரூவா இருந்தா காலம் தள்ளலாம்... தெரியுமுல்ல

//ஆகா இங்கத்தான்யா வெச்சுர்காருய்யா ஆப்பு..... //

ஆகா, விடமாட்டீங்க போலருக்கே... உங்களுக்கு மட்டும் எப்படிய்யா இப்படியெல்லாம் தோணுது

*

// இரண்டு காலி பொடி டப்பவுல நூலக் கோத்து இணச்சு, ஒருத்தர்டிருந்து இருந்து ஒருத்தர் தள்ளி நின்னு டெலிபோன் பேசியிருக்கோம்.//

எங்களுக்கு அவ்வளவு வசதியில்ல... நாங்க உபயோகித்தது இரட்டை கிளி தீப்பெட்டிகள்... அப்புறம் சீட்டா பைட் (சிறுத்தைகள் சண்டைன்னு தமிழ்ல எழுதலாமா) னு அழகா கன அட்டையில தீப்பெட்டிகள் வந்து இரட்டை கிளி மவுசயே கொறச்சிடுச்சி...


// எங்க விளையாட்டுல, நான் கண்டு பிடிக்கிறவங்கள
போய் நான் தொடணும். அதுக்குள்ள அவங்க வந்து சுவத்த தொட்டுட்டாங்கன்னா அவங்க அவுட் //

ஸாம், எங்க ஆட்டத்த்திலயும் இதுதான் ரூல்னு நினைக்கிறேன்... சரியா ஞாபகத்துல இல்ல...

*

// கமர்கட்டு - peyar kaaranam ennavo? // எனக்கும் தெரியாது அனானி.. யாராவது இதை கண்டுபிடிக்கலாம்...

*

// அந்த அழுக்கு கர்ச்சீf பற்றியும் அடுத்து எழுதுவீர்கள் //
எந்த அழுக்கு கர்ச்சீஃப்...

// சிவாஜியின் உள்ளாசையை, வேறு ஒருவன் போட்டுக் கொடுக்கும் போது // அடப்பாவமே, முதல் மரியாதை கதையைவே கெடுத்துடுவீங்க போலருக்கே SK... பாரதிராஜாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமுல்ல...

*

// 50 பைசா போட்டாலே பிச்சைக்காரன் //

உண்மைய சொல்லுங்க, இன்னமும் பிச்சைகாரனுக்கு காசு எல்லாம் போடுறீங்களா.. அது கல்யாணத்துக்கு முன்னாடி ஃபிகர் முன்னாடி பண்ற பீலா வேலையின்னு இல்ல நினைச்சேன்..

// இதுல 10 பைசாவுக்கு எத்தனி கமட்கட்டாம் // என்னதான் விலைவாசி ஏறினாலும் குறுநகரங்கள்/கிராமத்துல எல்லாம் பசங்க பாக்கெட் மணி உயர்வுக்கு இன்னும் வழி பிறக்கலையே இளவஞ்சி... அப்படி இருக்க கண்டிப்பா 10 பைசாவுக்கு ஒரு கமர்கட்டுங்கறதுக்கு மேல வித்தா போணியாவாதே...
 



//எந்த அழுக்கு கர்ச்சீஃப்...//

அதாங்க, பொடி போட்டு எறக்கின மூக்கை தொடச்சு, தொடச்சு டெக்னிகலர்ல இந்த தாத்தாங்கள்ளாம் வெச்சுருப்பாங்களே, அந்த அழுக்கு துணியெ சொல்றேன்!

//அடப்பாவமே, முதல் மரியாதை கதையைவே கெடுத்துடுவீங்க போலருக்கே SK... பாரதிராஜாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமுல்ல... //

'அவுகள்ளாம் ஒன் சோட்டுப் பொண்ணுகளா? ஆசையப் பாரு, பேரு மட்டும்தான் பெருசு'ன்னு வயல்ல வேலை செய்யற ஆளு சொல்றதுக்குத்தான், சிவாஜி[ம.வாசு] அப்படி 'போடா, பொடிமட்டை'ன்னு சொல்லுவாரு ! நா ஒண்ணும் கதெய மாத்தல !
:-)
 



NS பட்டணம் பொடி லேபிளுக்காகவே அந்த பொடி மட்டங்களை பொறுக்குவோம் சின்ன புள்ளையிலே. அதில ஒரு சுவாரசியம். கம்மர்கட்டு இன்னும் செஞ்சு விக்கிறாங்களா என்ன? நம்ம ஊரு கேட்பரி சாக்கோபாருல்ல அது!
 



'அவுகள்ளாம் ஒன் சோட்டுப் பொண்ணுகளா? ஆசையப் பாரு, பேரு மட்டும்தான் பெருசு'ன்னு //

அட ஆமாம்.. இந்த சீன எப்படி மறந்தேன்... எப்பவுமே ராதா நினைப்புலவே இருக்கறதால வேற ரூட்டுல நெனப்பு ஓடிடுச்சி... (இனி பாரதிராஜா கோச்சிகிட்டாலும் கவல படாதீங்க... தமிழர் நலன் காக்க புறப்பட்டிருக்கும் தானை தலைவர் விஜயகாந்த் இருக்க கவலையேன்)

*

நாதர், நீங்க லேபிள் பொறுக்கியது கோலி விளையாட்டில் பந்தயம் கட்டவா? நாங்கள் அதற்கு சிகரட் அட்டைகளை பொறுக்குவோம்.. சார்மினார் 50, சிசர்ஸ் 100, வில்ஸ் 500.. கிடைப்பதற்கு அரிய கூல், மோர் மெந்தால் போன்ற அயிட்டங்கள் எல்லாம் 1000த்தை தாண்டும்..
 



சுவாரஸியமான பதிவு. அண்ணா (தி.மு.க. தாங்க) மீட்டிங்-ல ரொம்ப லாவகமா பொடி போடுவார்னு கேள்விப்பட்டேன். உண்மையா?

பொடிமட்டைய பிரிச்சிட்டியே பரட்டை-ங்கீறீங்களா. ஹீ ஹீ
 



ஐயோ, ஐயோ, 'சிகரெட் அட்டை' எல்லாம் சொல்லி ஞாபகத்தைக் கிளப்பிட்டீங்களே!

அந்த 'காப்டன்' படம் போட்ட 'ப்ளேயெர்ஸ்' அட்டைதாண்ணா ரொம்ப மதிப்பு அதிகம். 5000-ம்னு நெனப்பு!

'** நீங்க சொன்ன மாதிரி 'காப்டனுக்கு' [!!!] மதிப்பு அதிகம்தான்!**

மறுபடியும் மட்டையைப் பிரிக்கிறேனா!!??
 



//அது கல்யாணத்துக்கு முன்னாடி ஃபிகர் முன்னாடி பண்ற பீலா வேலையின்னு இல்ல நினைச்சேன்//

நீங்க வேற... கல்யாணத்துக்கு முன்னால நானே பிச்சைக்காரங்க ரேஞ்சுலதான் இருந்தேன்! பிகருங்கதான் அப்பப்ப ஐஸ்கிரீம், பிஸ்சான்னு அப்பப்ப வாங்கிக்கொடுத்து என் உயிரை காப்பாத்திவிட்டாங்க.. ;)

போன வாரம் எங்க கிராமத்துக்கு போனப்ப (தருமபுரி பக்கம்..) கடலைமிட்டாய் 50பைசா.. 50 பைசாவுக்கு 5 தேன்மிட்டாய் வாங்குனேன்! ஒரு பாக்கெட்டு 50 பைசா.. லூசுலயெல்லாம் கிடையாது! கொடலு 10 பைசாவுக்கெல்லாம் கிடையாது. ஒரு பாக்கெட்டு 1 ரூபா.... அந்த காலத்துல 10 சின்ன கொடலு வாங்கி 10 வெரலுல மாட்டிக்கிட்டு ஒவ்வொன்னா தின்னது ஞாபகம் வந்து ஒன்னை எடுத்து என் வெரலும மாட்டுனா என் இல்லாள் பார்வை போன போக்கை பார்க்கனுமே!

எனக்கு தெரிந்து குறைந்தபட்ச காசு இப்போ 50 பைசா. 5,10,25 காசெல்லாம் யாருமே வாங்கறதில்லை!
 



Ó¸ãÊ,
ÍõÁ¡ þÕ측Á À¨Æ ¿¢¨É׸¨Ç ¸¢ÇôÀ¢Å¢ðÎÅ¢ðË÷. ¾£ô¦À¡ðÊ «ð¨¼ ¦À¡Ú츢ÂÐõ, º¢¸¦Ãð «ð¨¼ ¦À¡Ú츢ÂÐõ ÁÈì¸ ÓÊÔÁ¡?
// என்னை தவிர வேறு யாருக்கும் கண் பொத்தி விடாத லதாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை கல்யாணம் என்றால் என்ன என்பது கூட தெரியாத அந்த பருவத்திலேயே முடிவு செய்திருந்தேன்//
அப்படி போடுங்¸! இது பல சிறுவர்¸ளுக்கும் வந்த அனுபவமா¸ இருக்கும் ±ன ¸ருது¸¢றேன். ±ன் ¸¨¾ சோ¸க்¸¨¾ சாமி.
அம்பாசமுத்திரத்தில் இருக்கும்போது ±ன்னமோ முக்கூடல் பக்¸ம் செய்து வரும் பொடி/Ò¨¸Â¢¨Ä சமாச்சாரம் பெரிசு¸ளுக்கு வாங்¸¢க் ¦¸¡டுத்ததா¸ நினவு. ´ரு ¦Àñ டீச்சரும் ¯ண்டு.. பொடி போடும் பெண் டீச்சர் நான் பார்த்தது அவர்¸ள்மட்டும்தான்.
அன்புடன்
¸.சுதா¸ர்
 



போன பின்னூட்டம் யூனிகோடில் ::

முகமூடி,

சும்மா இருக்காம பழைய நினைவுகளை கிளப்பிவிட்டுவிட்டீர். தீப்பொட்டி அட்டை பொறுக்கியதும், சிகரெட் அட்டை பொறுக்கியதும் மறக்க முடியுமா?

// என்னை தவிர வேறு யாருக்கும் கண் பொத்தி விடாத லதாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை கல்யாணம் என்றால் என்ன என்பது கூட தெரியாத அந்த பருவத்திலேயே முடிவு செய்திருந்தேன்//
அப்படி போடுங்க! இது பல சிறுவர்களுக்கும் வந்த அனுபவமாக இருக்கும் என கருதுகிறேன். என் கதை சோகக்கதை சாமி.
அம்பாசமுத்திரத்தில் இருக்கும்போது என்னமோ முக்கூடல் பக்கம் செய்து வரும் பொடி/புகையிலை சமாச்சாரம் பெரிசுகளுக்கு வாங்கிக் கொடுத்ததாக நினவு. ஒரு பெண் டீச்சரும் உண்டு.. பொடி போடும் பெண் டீச்சர் நான் பார்த்தது அவர்கள்மட்டும்தான்.

அன்புடன்
க.சுதாகர்
 



அ) தயாரிக்கப்படுகிறது! எங்க ஊரில் ஒரு கமர்கட்டு இப்போது 25 பைசா

//கொடலு 10 பைசாவுக்கெல்லாம் கிடையாது. ஒரு பாக்கெட்டு 1 ரூபா.//

ஆமாங்க.. இப்ப எல்லாம் கொடலு பாக்கெட்ல தான் வருது லூசுல எல்லாம் கிடைக்கறதில்லை.

இ) NS பட்டணம் பொடி இன்னமும் தயாரிக்கப்படுகிறது! பட்டணம் பொடிக்கும் சாதா பொடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
 



இந்த இடத்தில் எனக்குத் தெரிந்த விஷயத்தைப் பணிவாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
( அய்யோ, தேர்தல்னு சொன்னதுலே இருந்து பேச்சே இப்படித்தான் ஆரம்பிக்குது)

என் தாத்தா( அம்மாவின் அப்பா)வுக்குப் பொடிக்கம்பெனி வியாபாரம்தான். அந்தக் காலத்துலே பிரிட்டனுக்கு ஏற்றுமதி செஞ்சு
அவுங்க மூக்கையும் ஒரு கை பார்த்துருக்காரு....ஹிஹிஹி

பட்டணம் பொடியிலே நெய் கூடுதலா சேர்ப்பாங்க. சாதாரணப்பொடி கொஞ்சம் காரமா இருக்கும்( மூக்குக்கு!)
 



அடப்பாவிகளா, கொடலு, கமர்கட்டு, தேன்மிட்டாய் அது இதுன்னு சொல்லி வவுத்தெரிச்சலை கெளப்பாதீங்கப்பா. இந்த கண்றாவியையெல்லாம் நான் ஊருக்கு போயிட்டு வர்றதுக்கு முன்னாடியே சொல்லி தொலச்சிருக்ககூடாது. எனக்கும் நியாபகம் வந்து தொலையல! இனிமே அடுத்ததபாவுக்கு காத்திருக்கணுமா?! (பஞ்சு முட்டாய் வாங்கி பாதி ரோட்டிலே நின்னு தின்னதையே 'வூட்டிலே' ஒரு மாதிரியா பார்த்தது வேற கதை!)
 



சரி, உங்க கருத்து ??