<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு


வருசக்கடைசியானா போதும், என்ன பதிவுகள் எழுதலாம்னு யோசிக்கவே வேண்டியதில்லை. போன வருசம் நடந்த பல விசயங்கள பத்தி ஆ(பீ)ராய்ஞ்சி "என் பார்வையில் இது அல்லது அது" அப்படீன்னு கண்ணோட்டப்பதிவா எழுதித்தள்ளிடலாம். ஆமா, இப்படி எழுதறதால என்ன புண்ணியம். புண்ணியமாவது பாவமாவது... பதிவாளன் (பாவபுண்ணிய) கணக்கு பாத்தா என்னவோ கூட மிஞ்சாதுன்னு ப(கி)ழமொழி கேள்விப்பட்டதில்லை?

கண்ணோட்டப்பதிவு சரி, தலைப்பு?
பூமிசூடேற்றம் முந்தைய வருடங்களை விட இவ்வருடம் மட்டும் 3.6 மடங்காக உயர்ந்தது எப்படி?
உலகத்தில் இவ்வருடம் நடந்த நவீன வகை கவலை தரவைக்கும் குற்றங்கள்.
இந்த வருடம் பணவீக்கம் எப்படி, அது வரும் வருடங்களை எப்படி பாதிக்கிறது...
ஸ்டாப் ஸ்டாப்... நீங்க தமிழ் வலைப்பதிவாளர்தானே? என்ன யோசனை இது சிறுபிள்ளத்தனமா... இப்படியெல்லாம் சிந்திக்கப்படாது...


நீங்கள் எழுதவேண்டிய பதிவின் தலைப்பு :
2006 தமிழ் பதிவுகள் - எனது பார்வையில்

சரி. இது ரொம்ப ஈஸிதானே, கண்டமேனிக்கு எழுதலாம்னு ஒரு ஸ்(மை)மால் சந்தோசம்? நோ வே... கண்டமேனிக்கு எழுத இது என்ன இஸம் பற்றிய குறிப்புகளா.. இதுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்குண்ணே..

**

இலக்கண குறிப்புகள் ::

அ) டிஸ்கி விடுதல் :: முதலில் டிஸ்கி எனப்படும் பின்குறிப்பு எழுதிட்டுதான் பதிவே எழுத ஆரம்பிக்க வேண்டும். பின்குறிப்பு எனப்படுவது : "இது, என் பார்வையில் எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே. என் தேர்வுகளில் ஒன்றிரண்டாவது, 'அட சரியாத்தான் சொல்லியிருக்கான்' என்று உங்களுக்கும் தோன்றினால் அது விபத்தே அன்றி வேறல்ல"

இது ஏன் முக்கியம் :: ஒரு சாம்பிள். நியாயமாக பார்த்தால், இடது சாரி மார்க்சீய சிந்தனைகளை பற்றியும் தென் அமெரிக்க புரட்சிகளை பற்றியும் தமிழகத்தில் உரிமைக்குரல் எப்படி மேல்வர்க்க ஆட்களால் நசுக்கப்படுகிறது என்பது பற்றியும் சென்ற வருடம் 70 பதிவுகள் எழுதி 'இது எனது 70வது பதிவு' என்று வேறு ஒரு பதிவு எழுதி அதில் 69 பேர் வந்து வாழ்த்துக்கள் என்று பின்னூட்டமும் விட்டிருப்பார்கள்.. ஆனால் அதை விட்டுவிட்டு "&%#@ பாப்பான்கள்/பாப்பாத்திகள்" என்று (இங்கே &%#@ என்ற இடத்தில் சாப்பிடும், தூங்கும், குளிக்கும், துணிதோய்க்கும், பாத்திரம் தேய்க்கும், பாட மறுக்கும் என்று எதையாவது ஃபில்லப் செய்துகொள்ளலாம்) எழுதி அவா இவா என்று சில பல வார்த்தைகளை தூவி மொத்தமே ஒரு வருடத்தில் 6 இடுகைகள் மட்டும் போட்டிருக்கும் பதிவரின் பதிவை - பலவித இண்டர்னல் அஃபர்ஸ் காரணமாக - சிறந்த புரச்சிகர பதிவு என்று சொன்னால் எவனாவது பொழுது போகாத பொடலைச்சாமி வந்து அதை கேள்வி கேட்கலாம். அப்போது பின்குறிப்புதான் கைகொடுக்கும். <போல்டு>"என் பார்வையில்" ன்னு சொல்லியிருக்கேன் பாருங்கன்னு பொடலைக்கு பதில் சொல்லி ஈஸி எஸ்கேப் ஆகலாம்.

ஆ) பதிவுகள் தேர்வு :: இப்போது சிறந்த பதிவுகள் பட்டியல் தயாரிக்க வேண்டும். தயாரிப்பு என்பது தமிழ் பதிவு சூழலில் கொஞ்சம் டெலிகஸி சார்ந்த விஷயம்.. அது என்ன என்று பார்க்கும் முன், எத்தனை பேரை "சிறந்த" பட்டியலில் சேர்ப்பது என்பதை முடிவு செய்வோம். அப்படியே கொஞ்சம் கொசுவத்தி சுருள் ஓட்டி தமிழக அரசு கலைமாமணி பட்டம் தரும் வைபவத்தை நினைவு படுத்திக்கொள்ளவும். பணமுடிப்பு, பட்டம், விழா ஏற்பாடு என்று செலவு பிடிக்கும் அதையே மானாவரியாக அள்ளி அள்ளிக்கொடுக்கும்போது, நாம் எதற்காக வஞ்சனை செய்யணும்?

இப்ப டெலிகஸி மேட்டருக்கு வருவோம்... உங்கள் பதிவுகள் தேர்வு கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பட்டியல் படித்து முடிக்கும் வாசகருக்கு உங்கள் "பொலிட்டிகல்லி கரெக்ட்னெஸ்" பளிச்சென்று தெரியவேண்டும். ஆனால் அது உங்களுக்கு அமையவிருக்கும் "லைஃப் டைம் தொடர் வாசகர்" வட்டத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் அளவில் அமையக்கூடாது. சில சமயங்களில் சீரியஸ் விவாதப்பதிவுகள் வரும். அப்போது ஒரு கோஷ்டி குழுவாக வந்து கும்மியடிக்கும். அதிலிருந்து பவர்ஃபுல் கோஷ்டி எது, இளிச்சவாய் கோஷ்டி எது என்று அடையாளம் காணலாம். அந்த பவர்ஃபுல் கோஷ்டியில் இருந்து அதிகமாக நாய்ஸ் விடுபவரை உங்களின் பட்டியலில் சேர்ப்பது உங்கள் வலைப்பதிவு எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இ) கேட்டகரி தலைப்புகள் :: எந்த தலைப்பும் தராமல், எனக்கு பிடித்த பதிவுகள் என்று மொட்டையாக எழுதலாம். ஆனால் அது சுவாரசியமற்றதாகவும், உங்கள் 'சீசன்டு' எழுத்தாளர் பட்டத்திற்கு அவமதிப்பாகவும் ஆகலாம். ஆகவே என்ன என்ன கேட்டகரியில் பதிவுகளை அறிவிப்பது என்று யோசிக்க வேண்டிவது ரொம்ப முக்கியம். நாமோ பதிவுகள் தேர்வின்போது எக்கச்சக்கமாக தேர்வு செய்துவிட்டோம். அதில் எதையும் விடவும் முடியாது. இப்ப என்ன செய்வது. கவலைப்படாதீர்கள்... கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது பரிசு தரும் வெப்சைட்டையோ ஃபாலோ செய்து அதிலிருந்து தலைப்பு தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்களே பெர்முட்டேஷன் காம்பினேஷனில் தலைப்பு அமைக்கலாம். உ.ம் :: சிறந்த சமையல் பதிவு, சிறந்த வெங்காய சமையல் பதிவு, சிறந்த சின்ன வெங்காய பதிவு, சிறந்த வெட்டும்போது கண் எரியாமல் இருக்கும் சின்ன வெங்காய பதிவு, இதர இதர இதர...

**

பின் கொறிப்பு :: இந்த பதிவு "மூத்த" வலைஞரான பாஸ்டனை நையாண்டி செய்வது போல் உள்ளது. ஆகையால் (VAI - Vaலைப்பதிவு Aத்தாரிட்டி ஆஃப் Iண்டியா) சட்டத்தின் கீழ் இப்பதிவுக்கு எதாவது 'அடையாள' தண்டனை கொடுத்து கண்காணிக்க வேண்டியது சமூக முன்னேற்றத்துக்கும் சட்ட பாதுகாப்புக்கும் மிகவும் அவசியமானது என்று பெட்டிகோட்சன் போட சுறுசுறுப்பாக மனு தயார் செய்யும் சில்வண்டுகளுக்கு ஒரு வார்த்தை... இது பாஸ்டனை "மட்டும்" குறிவைத்து எழுதப்பட்டது அல்ல

**

கொறிப்புக்கு பின் வரும் குறிப்பு :: பணக்காரனாவது எப்படி என்று எழுதியவனே பிச்சைக்காரனாக இருந்தால் எப்படி? ஆகவே இதோ ஒரு.. 2006 தமிழ் பதிவுகள் - என் பார்வையில்

முன்குறிப்பு :: இது, என் பார்வையில் எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே.

செய்தி :: மருத்துவம், செக்ஸ், வேலைவாய்ப்பு, செய்திக்குறிப்பு, வெட்டி, வீண்வம்பு, தும்பு, அரசியல் கட் பேஸ்ட், அரசியல் அலசல், தன் கட்சி தலைவனை புகழ்தல், எதிர் கட்சியை சேர்ந்த தலைவனை சாதி சொல்லி திட்டுதல், விஞ்ஞானம், அஞ்ஞானம், ஆராய்ச்சி, அபிவிருத்தி, உண்மையான புரட்சி குறிப்பு, சரோஜாதேவி டைப் புரட்சி குறிப்பு, திராவிடம், தமிழ் வளர்ச்சி, தமிழ் அவளர்ச்சி, தமிழுக்காக வெறும் சவுண்டு மட்டும் கொடுப்பது போன்ற கேட்டகரிகளில் சிறந்த பதிவர்களாக நான் கருதும் பதிவர்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் இப்போது, இந்த பட்டியலில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இன்ஷ்டண்ட் பின்னூட்டங்களில் ஒன்றையாவது இப்பதிவில் பின்னூட்டம் இடவில்லை என்றால் அவர்களுக்கு தூங்கும்போது கண் தெரியாமல் போகக்கடவது.

அ) இயர் எண்ட், என்ன பண்ணுவது என்று முழிக்கும் நேரத்தில் அவசியமான பதிவு. நீங்கள் குறிப்பிடும் எல்லாவற்றையும் படிக்கிறேன்.
ஆ) அனைவரையும் என் டெம்பிளேட்டில் சேர்த்துவிட்டேன். இப்போதுதான் பேஜ் லோடிங் ஆக அதிக நேரம் ஆகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
இ) இன்னா நைனா ஒரே கும்மாங்குத்தா கீதே.
ஈ) என் பதிவை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
உ) என் பதிவை "நீங்கள்" குறிப்பிட்டிருப்பது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும், வெட்கமாகவும், சோகமாகவும் இருக்கிறது.



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


""நீங்கள் எழுதவேண்டிய பதிவின் தலைப்பு :
2006 தமிழ் பதிவுகள் - எனது பார்வையில்"""

"எனது பார்வையில்" என்ற எனது ப்ளாகின் பெயரை அனுமதியின்றி உபயோகிக்கும் "முகமூடி"யை காப்பிரைட் சட்டத்தின் படி வன்மையாக கண்டிக்கிறேன்...

ஸ்மைலி போடவில்லை...ஏனெனில் நான் கோபமாக இருக்கிறேன்... சரி ...இதை ஏன் எழுதுரேன்னு கேட்காதீங்க...அப்புறம் நான் கோவமா இருக்குறது அல்லாருக்கும் எப்படி சொல்றது ?

:))))
இந்த ஸ்மைலி எதுக்குன்னா பதிவு நல்லாருந்துச்சுல்ல..அதுக்கு
 



//இலக்கண குறிப்புகள்//

இலக்கண*க்* குறிப்புகள்

//இது பாஸ்டனை "மட்டும்" குறிவைத்து எழுதப்பட்டது அல்ல//

உண்மைல நீங்களே சொல்ற வரைக்கும் பாஸ்டன் நினைவுக்கே வரலைன்னு சொன்னா நம்புவீங்களா? நாங்களும் ப்பிரில்லியண்ட்டு தான். பதிவுக்கு நாடிபிடிக்கத் தெரிஞ்சவுக தான்.
 



இயர் எண்ட், என்ன பண்ணுவது என்று முழிக்கும் நேரத்தில் அவசியமான பதிவு. நீங்கள் குறிப்பிடும் எல்லாவற்றையும் படிக்கிறேன், அடுத்த இயர் எண்ட் வரை.
 



உ) என் பதிவை "நீங்கள்" குறிப்பிட்டிருப்பது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும், வெட்கமாகவும், சோகமாகவும் இருக்கிறது.// :-))))))))))))))
 



கண்கெடாதிருக்கவாவது ஒரு வா(ழ்)த்துச் சொல்வது அவசியமென்பதால் முகமூடியாருக்கு ஜே...
 



என்ன அவசரம் தலை.. கொஞ்ச நேரம் படிச்சிட்டு பின்னூட்டம் விடாம இருந்ததிலேயே தூங்கும்போது கண் தெரியலியே!
எனவே இன்ஷ்டண்த் இல்லாத ஒரு ஸ்பெஷல் சாதா பின்னூட்டம்:

உங்களைப்போன்ற ஒரு அ-பதிவர் என் பதிவைக்குறிப்பிட்டிருப்பது வருத்தத்தையும் வேதனையையும் வாந்திபேதியையும் தருகிறது. தயவுசெய்து அந்த லிஸ்டிலிருந்து என் பெயரை நீக்கி விடவும்.

உங்களுக்கு இந்த லிஸ்ட் போட என்ன தகுதி இருக்கிறது? முகத்தை மூடிக்கொண்டு பதிவிடுகிறோம் என்ற சௌகரியத்தில் என்ன வேண்டுமென்றாலும் எழுதிவிடுவதா?
 



முகமூடி,

சரி..சரி.. இதுக்கெல்லாம் சினுங்குனா எப்படி? இன்னும் 8 நாள் இருக்கு. அதுக்குள்ள உம்ம பதிவை யாராவது லிஸ்டுல போடாமலா போயிருவாங்க?

"என்னது? நான் சினுங்கறனா? மத்தவங்க லிஸ்டுல என் பதிவு இல்லைங்கறதுல எனக்கு பொறாமையா? எப்படி கண்டுபுடிச்சீங்க? என் மனசுல பூந்து பார்த்தீங்களா? இல்லை எழுதறப்ப என் கீபோர்டுல புந்து பார்த்தீங்களா"ன்னு உம்ம வழக்கமான கீறல் ரெக்கார்டு ஆரம்பிக்கு முன் நான் அப்பீட்டு... :)
 



தல கெளப்பீட்டீங்க போங்க. typical

முகமூடி பதிவு
 



// பின் கொறிப்பு :: இந்த பதிவு "மூத்த" வலைஞரான பாஸ்டனை நையாண்டி செய்வது போல் உள்ளது. ஆகையால் (VAI - Vaலைப்பதிவு Aத்தாரிட்டி ஆஃப் Iண்டியா) சட்டத்தின் கீழ் இப்பதிவுக்கு எதாவது 'அடையாள' தண்டனை கொடுத்து கண்காணிக்க வேண்டியது சமூக முன்னேற்றத்துக்கும் சட்ட பாதுகாப்புக்கும் மிகவும் அவசியமானது என்று பெட்டிகோட்சன் போட சுறுசுறுப்பாக மனு தயார் செய்யும் சில்வண்டுகளுக்கு ஒரு வார்த்தை... இது பாஸ்டனை "மட்டும்" குறிவைத்து எழுதப்பட்டது அல்ல //

ஆஹா.. எங்கேயோ போயிட்டீங்க. படிக்கும்போதே "அந்த" நண்பர் ஞாபகம் வந்தார். கடைசியிலே நீங்களும் சொல்லிட்டீங்க. "எல்லாருக்கும் நல்லவரை" நீங்கள் எப்படித் துவைச்சுக் காயப்போட்டாலும் அவர் மாறப்போவதில்லை. தொலைபேசியிலும் நேரிலும் இதமாக, விவாதமாக, காரமாக, சண்டையாக... சொல்லிச் சொல்லி சலித்துப் போய், குடும்ப நண்பரானவரிடம் சும்மா சும்மா சண்டை போடுவதில் என்ன பிரயோசனம் என்று நான் உட்படச் சில நண்பர்கள் அவரிடம் எந்த சீரியஸான விஷயத்தையும் விவாதிப்பதே இல்லை. இது தெரியாமல் போனவாரம் ஒரு நண்பர் வேறு என் முன்னிலையிலேயே அவரிடம் இதே விஷயத்தைப் பேச ஆரம்பித்தார். தெரியாதவர்களுக்குச் சொல்லித்தரலாம். தெரிந்தே செய்பவர்களை என்ன செய்வது என்று அந்த நண்பரிடம் சொன்னேன்.

தெரியாமல் யாரும் இங்கே எதையும் செய்து கொண்டு இல்லை. தெரிந்தே செய்கிறார்கள். அதற்குப் பின்னால் அவர்களில் net survival instinct இருக்கிறது என்று விட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டும்தான். இதைப் படித்துவிட்டும் வழக்கம்போல நியூட்ரல் ஜல்லி அடிப்பதை நிறுத்தப் போவதில்லை. சொல்லப் போனால், அது நியூட்ரல் ஜல்லி இல்லை. நியூட்ரல் ஜல்லி அடிப்பவர்களுக்கும் ஓர் அரசியல் இருக்கிறது. அந்த வகையான அரசியல் ஜல்லிதான் அது. "அந்த பவர்ஃபுல் கோஷ்டியில் இருந்து அதிகமாக நாய்ஸ் விடுபவரை உங்களின் பட்டியலில் சேர்ப்பது உங்கள் வலைப்பதிவு எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்." - என்று அந்த அரசியலையும் சரியாக அடையாளம் காட்டிவிட்டீர்களே. கலக்கிட்டீங்க. ஆனாலும், விடுமுறை நாள் சீசனில் இந்த ஹாட்டான(?!) பதிவு தேவையா. "அந்த" நண்பர் மாதிரியான நபர்களும் களத்தில் இருந்தால்தானே வாழ்க்கை காமெடியாக இருக்கும் என்று நன்றி சொல்வீர்களா.. அதை விட்டுவிட்டு..

Merry Christmas & Happy New Year to all...!

பி.கு.: "அந்த" நண்பருக்கும் எனக்கும் ஏதோ தகராறு என்று சில்வண்டுகள் எதையும் கிளப்பிவிட்டுவிடப் போகின்றன. நண்பருக்கும் எனக்குமான உறவில் எந்தத் தகராறும் இல்லை என்று ஒரு "டிஸ்கி"யையும் போட்டுக் கொள்கிறேன்.

- பி.கே. சிவகுமார்
 



பார்ப்பனர்கள் அப்பாவை மாமா என்றுதான் அழைப்பார்கள் என்று எழுதினார் பொட்டிகடை. அவரை சிறந்த பதிவராக பாஸ்டன் பாலா சொல்கிறார். அந்த பதிவில் உஷாவை தாக்கிவிட்டு பின் உஷாரென்று எழுதியதாக கோழைதனமாக பின்வாங்கியவர் பொட்டிகடை. பொட்டிகடை சிறந்த பதிவர் என்றால் போலிடோண்டுவும் விடாது கருப்புவும் கோபித்து கொள்ள மாட்டார்களா. அவர்களுக்கும் ஏன் சிறந்த பதிவர் பட்டம் தரவில்லை பாலா. பட்டங்கள் விற்று தீர்ந்து விட்டனவா? கோபிக்காமல் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பாலா. உங்கள் வீட்டில் அப்பாவை மாமா என்றுதான் அழைக்கிறீர்களா பாலா. இப்படிபட்ட தரங்கெட்ட பதிவர்களுக்கு விளக்கு பிடித்துதான் உங்கள் பதிவில் விளக்கு எரிய வேண்டுமா பாலா. முகமூடி அவர்களே, இந்த பின்னூட்டத்தில் தனிமனித தாக்குதல் இல்லை. பொட்டிகடை போன்றவர்கள் பயன்படுத்தும் முற்போக்கு தர்க்கவாதம்தான் இருக்கிறது. இதை தயவுசெய்து அனுமதிக்கவும்.
 



வருட கடைசியில் வடை பாயசத்துடன் பீர்கொழம்பு ஊத்தி தந்த விருந்திற்கு நன்றி.
 



அண்ணார் பிகேஸ்,

//ஆஹா.. எங்கேயோ போயிட்டீங்க. படிக்கும்போதே "அந்த" நண்பர் ஞாபகம் வந்தார். கடைசியிலே நீங்களும் சொல்லிட்டீங்க. "எல்லாருக்கும் நல்லவரை" நீங்கள் எப்படித் துவைச்சுக் காயப்போட்டாலும் அவர் மாறப்போவதில்லை. தொலைபேசியிலும் நேரிலும் இதமாக, விவாதமாக, காரமாக, சண்டையாக... சொல்லிச் சொல்லி சலித்துப் போய், குடும்ப நண்பரானவரிடம் சும்மா சும்மா சண்டை போடுவதில் என்ன பிரயோசனம் என்று நான் உட்படச் சில நண்பர்கள் அவரிடம் எந்த சீரியஸான விஷயத்தையும் விவாதிப்பதே இல்லை. இது தெரியாமல் போனவாரம் ஒரு நண்பர் வேறு என் முன்னிலையிலேயே அவரிடம் இதே விஷயத்தைப் பேச ஆரம்பித்தார். தெரியாதவர்களுக்குச் சொல்லித்தரலாம். தெரிந்தே செய்பவர்களை என்ன செய்வது என்று அந்த நண்பரிடம் சொன்னேன்.//

ஏன்? அப்படியே நீர் காலையில் எழுந்து Amway பேஸ்ட்ல் பல் துலக்கியது, Wallmartல் சேல் போடுகிறார்கள் என ஒன்றுக்கு இரண்டாய் டாய்லெட் ரோல் வாங்கியது என்று சேர்த்து எழுத வேண்டியதுதானே?! மேலே உள்ள பத்தியில் இருந்து இங்கு இந்த பதிவை படிக்க வருபவர்களுக்கு நீர் சொல்ல வருவது என்ன? நீரெல்லாம் அறிவுரை சொல்லுமளவுக்கு இருக்கின்றீர் என்றும் அதை புரிந்துகொண்டு திருந்தாத துப்புக்கெட்ட மனிதனாக "அந்த" நண்பர் இருக்கின்றார் என்றா? உமது சொந்த அ(பு)லம்பல்களை எல்லாம் இங்கே படிக்க வருபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டுமா என்ன?

// தெரியாமல் யாரும் இங்கே எதையும் செய்து கொண்டு இல்லை. தெரிந்தே செய்கிறார்கள். அதற்குப் பின்னால் அவர்களில் net survival instinct இருக்கிறது என்று விட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டும்தான்//

இதை நீர் சொல்வதுதான் நகைச்சுவையாக இருக்கிறது! :) அதெப்படி அய்யா முகமூடி ஏதாவது ரகளையாக எழுதும் போதெல்லாம் "ஜங்"கென்று வந்து குதித்து உமது கழிவுகளையெல்லாம் இறக்கி வைத்து பதிவையே உமது பக்கம் திருப்பிக் கொள்கிறீர்? உமது பதிவும் உமது புத்தகம் மாதிரியே போணியாகாமல் இருப்பதனால் இப்படி நான்குபேர் தேடிவந்து படிக்கும் இடத்தில் உமது கோணல் புத்தியைக் காட்டுவதுதான் எனக்கென்னவோ net survival instinct என்று தோன்றுகிறது.

போகுமையா... இப்படியெல்லாம் எப்பவும் அடுத்தவன் மூக்கை அடுத்தவன் கையை வைத்தே நோண்டும் பிழைப்பில் இல்லாமல் பாதியில் நீர் தொங்கலில் விட்டிருக்கும் காந்தியை "கண்டுணரும்" பிழைப்பையாவது பாரும். நாங்களும் மற்ற இடங்களில் உமது கழிவுகளை படித்து உம்மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளாமல் நேரே உமது பதிவிற்கு வந்து சில நல்ல விடயங்களையாவது தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!

என்னது? அதெல்லாம் சரி. நான் யாரா? அது தெரிந்தால் பிறகு அடுத்த முகமூடி பதிவில் "இந்த நண்பருக்கு நான் அன்றே எடுத்தியம்பிய வாழ்க்கைக் குறிப்பு என்னவென்றால்.." அப்படியென கால்சராயை கழட்டிக்கொண்டு உட்காரமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? :)))

ம். சற்றே கவனக்குவிப்புடன் இருந்தால் நல்ல எழுத்தாளராக வளர வேண்டியவர் இன்(று)னும் வலைப்பதிவு அரசியலிலேயே உழண்டு புழுத்துப் போய்க்கொண்டு இருக்கின்றீர்! என்ன சொல்ல :(


முகமூடி, பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டம் எனினும் மேற்கொண்டு உமது விருப்பம்!
 



பி.கு.: இதில் உம்மைச்சுற்றி சில்வண்டுகள் வேறு பறப்பதாக கற்பனை வேறு! :)))) நீரெல்லாம் என்னத்த கண்டுணர்ந்து என்னத்த மனம் முதிர்ந்து...
 



எப்படித்தான் மகா ஜனங்களே இந்த PKSஓட அலம்பலை இன்னும் தாங்குரீங்களோ. ரொம்ப னல்லவங்களா இருகீங்கன்னு வடிவேலு கனக்கா சொல்லனும்.
 



If one person cant defend someone or something with their own identity, that shows a lot to me.

I expect more anony comments criticizing me and defending something that they cannot defend with their real identity.
I request Mugamoodi to permit all of them here.

PS: I also read what Mr. Thirumalai Rajan wrote about the same Boston Friend at Kusumban blog.
I thought that I wrote nicer and lightly. After reading the "anony vedanthangi" I wish, I could have written more in detail :-)
Anyway, there is time for everything. we will see then. Until then, its "anonys" time to criticize me here. Have Fun..

- The same old "PK Sivakumar"
 



// அது தெரிந்தால் பிறகு அடுத்த முகமூடி பதிவில் "இந்த நண்பருக்கு நான் அன்றே எடுத்தியம்பிய வாழ்க்கைக் குறிப்பு என்னவென்றால்.." அப்படியென கால்சராயை கழட்டிக்கொண்டு உட்காரமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? :))) //

அன்றே எடுத்தியம்பியதற்கெல்லாம் நிறையவே ஆதாரம் இருக்கிறது. பாஸ்டனார் விரும்பினால் 'நம்ம வழிப்போக்கன்' பார்வைக்கும் எல்லாவற்றையும் வைக்கிறேன். என்ன பாஸ்டனார் அனுமதி தரவேண்டும். தனிமடல்களைப் பொதுவில் வைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது பாருங்கள். அதனால் நம்ம வழிப்போக்கனார் அவர் அருமை நண்பரிடம் அனுமதி வாங்கித் தந்தால், பொதுவில் வைக்கிறேன். கல்சராயைக் கழட்டுகிறேனா இல்லை வழிப்போக்கனார் கண்களில் கோளாறா என்று அப்போது பொதுமக்கள் அனைவருமே கூட பார்த்துவிட முடியும். என்ன சொல்றீங்க. வழிப்போக்கனாரே. உங்க ஆசையை நிறைவேற்ற நான் தயார். பொதுவில் வை என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. ஜமாய்ச்சுடலாம். :-) எனிவே, எனக்கும் வலைப்பதிவு அரசியலை விட்டால் வேறு வேலை இல்லை பாருங்கள். :-)) அதனால்தான் ஒரு நாளைக்கு பத்து உதவாக்கரை பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் அல்லவா :-)) அதைப் பார்க்கும்போது உதவாக்கரைகளான "நம்ம வழிப்போக்கனார்" போன்றவர்களுக்காக ஆதாரங்கள் வைப்பது எவ்வளவோ மேல்தான். செய்கிறேன். 2006-ஐ உருப்படியாகக் கழித்த திருப்தியும் கிடைக்கும்.

மற்றபடிக்கு - என் புத்தகம் போணியாகவில்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர். :-) உங்கள் நிஜமுகத்தைக் காட்டுகிறேன் என்று சொன்னால், வலைப்பதிவு வாசகர்களுக்காக இன்றுவரையான என் புத்தக விற்பனை விவரங்களைப் பொதுவில் வைக்கத் தயார். என்ன அதைப் பொதுவில் வைத்தால் "நம்ம வழிப்போக்கனார்" மட்டுமல்ல, இன்னும் சிலருக்கும் சேர்ந்து வயிறு எரியலாம். அவ்வளவுதான் :-)

PS: திருமலையின் கமெண்ட் குசும்பன் பதிவில் இருக்கிறது. அங்கும் சொந்தப் பெயர்/அடையாளங்களுடனேயே பதில் எழுதியுள்ளேன். இதுவும் தகவலுக்காகத்தான்.

- "சொந்தப் பெயரில் மட்டுமே அலம்பல்/புலம்பல்/அரசியல் செய்யும்" :-))
பி.கே. சிவகுமார்
 



PKS,

"வழிப்போக்கன்" என்ற பெயரை இதற்கு முன்னால் நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா என்ன? :))))) விடுங்கள்! இந்த ஒருமுறை நான் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.

//If one person cant defend someone or something with their own identity, that shows a lot to me. //

அதுசரி! உமது இந்த அறிய பெரிய தத்துவத்தை "முகமூடி"யின் பதிவிலா எழுத வேண்டும்? :))))) உம் நகைச்சுவைக்கு அளவே இல்லையா? உம் கழிவுகளை இறக்கிவைக்க எந்தவித அடையாளங்களையும் வெளிப்படுத்திக் கொள்ளாத "முகமூடி" என்ற புனைப்பெயரில் எழுதும் ஒருவரின் பதிவு வேண்டும்! ஆனால் "என்னய்யா இது? நண்பருடனான தனிப்பட்ட வாழ்க்கையின் நிகழ்வை இப்படி கடை விரிக்க உமக்கு அசிங்கமாக இல்லையா?" எனக் கேட்பவன் சொந்தப்பெயருடன், ரேஷன் கார்டுடன், பாஸ்போர்ட்டுடன் வந்து உமக்கு அடையாள அணிவகுப்பு நடத்தவேண்டும்?! என்ன கூத்தைய்யா இது?


// பொதுவில் வை என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. ஜமாய்ச்சுடலாம். :-) //

எப்படி அய்யா இப்படியெல்லாம்? தனிப்பட்ட மடல்களை அரசியல் என்று வந்துவிட்டால் பொதுவில் வைத்து ஜமாய்ப்பீரா? ஏன் ஜமாய்க்க மாட்டீர்? இந்த "நம்பிக்கை"யோடு தான் அனைத்து நண்பர்களோடும் பழகுகின்றீரா? இனிமேல் உமக்கு எந்த நம்பிக்கையில் தனிமடல் அனுப்புவது? "அசிங்கத்தைத்தான் ஏன்யா செய்கின்றீர்?" என்று கேட்டால் "அதற்கு ஆதாரமே பொதுவில் வைப்பேன்" என்கிறீர்.

உம்மையில்லை ஓய்! உம்மையும் நண்பனாக நினைத்து பழகியதற்கு "அந்த" நண்பரைத்தான் எதிலாவது அடிக்க வேண்டும்! ச.திருமலையை ஏனைய்யா இழுக்கின்றீர்? அவராவது அவரது உணர்வின் வெளிப்பாடாக நேராக முகத்தில் காறி உமிழ்திருக்கிறார். நல்லதோ கெட்டதோ நேராக சொல்லியிருகிறார். உம்மைப்போல "மேட்டிமைத்தனம்" காட்டுகிறேன் என முயன்று மூக்குடைபட்டா நிற்கின்றார்?

//இன்றுவரையான என் புத்தக விற்பனை விவரங்களைப் பொதுவில் வைக்கத் தயார். என்ன அதைப் பொதுவில் வைத்தால் "நம்ம வழிப்போக்கனார்" மட்டுமல்ல, இன்னும் சிலருக்கும் சேர்ந்து வயிறு எரியலாம். அவ்வளவுதான் :-)//

எங்களுக்கு வயிறெரிவது இருக்கட்டும். முதலில் பொஸ்தகம் போட "போட்ட" காசுக்கும் வந்தகாசுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு வயிறெரிந்து கிடக்கும் உம் துணைவியாருக்கு பதில் சொல்லிவிட்டு இங்கு வாரும்!

ம். அட்லாண்டிக்கிற்கு அப்பால் போயும் அல்பத்தனம்...
 



சரி, உங்க கருத்து ??