<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

யு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு


இந்தியாவில் இருந்து புதிதாக இங்கு வருபவர்கள் யாரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தாலும் முதலில் நான் அவர்களுக்கு மூன்று குறுவிஷயங்கள் சொல்வேன் ::

அ) நம்மூரில் கறுப்பின மக்களை நீக்ரோ என்று அழைப்பது குறிப்பிடுவது பொதுவான ஒரு சொலவடை. ஆனால் இங்கு அப்படி குறிப்பிடுவது தகாத செயல். அவர்களை ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் அல்லது ப்ளாக் என்று குறிப்பிடவேண்டும். எக்காரணம் கொண்டும் நீக்ரோ என்று குறிப்பிடாதீர்கள்.

ஆ) 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தாலன்றி அவர்களுக்கு காசோ, சிகரெட்டோ, சாராயமோ தராதீர்கள்.

இ) 18 வயது குறைந்தவர்களிடம் பாலியல் நடவடிக்கைகள் எந்த ரூபத்தில் என்றாலும் அது சட்டவிரோதம்.

*

நான் இங்கு வந்த புதுசில் அலுவலகம் முடிந்து பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன்.. பஸ்ஸில் கடைசி இருக்கை தவிர்த்து பார்த்தால் என்னோடு சேர்த்து நாலே பயணிகள். கடைசி இருக்கையில் நாலைந்து இளம் பெண்கள். என்னவோ சத்தமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஓட்டுனர் அவர்களை பின்பார்க்கும் கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்து / முறைத்துக்கொண்டு வந்தது நன்றாக தெரிந்தது. திடீரென அந்த கூட்டத்தில் இருந்து ஒரு பெண் எழுந்து வந்து "உங்க பக்கத்துல உக்காந்துக்கலாமா" என்றாள். எங்கிட்டத்தான் கேக்கிறான்னு புரியவே எனக்கு ஒரு நிமிஷம் ஆச்சு. நடுவுல இரும்புத்திரை ஒண்ணுதான் பாக்கிங்கிற ரேஞ்சுல பல்லவன் & கோவுல எல்லாம் போயிட்டு இங்க ஒரு கிளி தானா வந்து பக்கத்துல உக்காரலாமான்னு கேட்டா பேச்சிலர் பையன் என்னவா ஆவான்.. பேச்சு இலர் தான்... "அஃப் கோர்ஸ்"னு சொன்னப்போ ஜொள்ளுவிட்ட மாதிரி ஞாபகம் இல்ல (ஹை).. அப்புறமா என்கிட்ட பேர் என்ன, என்ன வேலை அப்படி இப்படின்னு சாதாரணமா பேசிகிட்டு இருந்தா.. திடீர்னு உன் தோள் மேல கைய போட்டுக்கலாமான்னு கேட்டா... அடங்கொக்கமக்கான்னு இருந்தாலும் சபலம் சும்மா விடுமா, "ஓக்கே"ன்னேன் நான். அவ என் தோள சுத்தி கைய போட்டதுதான் பாக்கி, கடைசி சீட்ல இருந்து "ஓ"ன்னு ஒரு கூச்சல்.. அவ எம் பக்கத்துல உக்காந்ததுல இருந்து இப்ப வரைக்கும் கடைசி சீட் டெம்பரரியா அமைதியா இருந்ததுங்கிறதே இப்பத்தான் எனக்கு உரைச்சிது. காதலி அருகில் இருந்ததால் உலகமே பேரமைதியா இருக்குதோன்னு தப்புக்கணக்கு போட்டிருக்கிறேன்...

இப்பத்தான் விஷயமே விளங்குது எனக்கு. நன்றாக அயர்ன் செய்யப்பட்ட ப்ளைன் முழுக்கை சட்டை, ஃபார்மல் பேண்ட், கையில் ஒரு கம்ப்யூட்டர் பேக்னு பழம் மாதிரி ஒரு அப்பாவி - சரி சரி நம்ம முக அமைப்பு அபப்டி - இருக்கானே, அவனை கலாய்க்கிறேன்னு பெட்டு கிட்டு கட்டினாளோ என்னவோ... நினைக்கிறதுக்குள்ளே இவ திரும்பி "ஷட் அப்"னு ஒரு குரல் விட்டா, உடனே பின் சீட் கப்சிப். இப்போ என்கிட்ட ஒரு சூப்பர் கதை சொன்னா.. கதையின் சாரம் :: "ப்ரண்ட்ஸ் கூட சினிமா போகலாம்னு கிளம்பினேன், அம்மா காசு தரல, அதனால ஒரு பத்து ரூபா டாலர் இருக்குமா?" ஹை.. திராவிடன்கிட்டயே திருட்டுத்தனமா... "எங்கிட்ட சுத்தமா காசு இல்ல, க்ரடிட் கார்டு வேணுமா"ன்னு (ஜோக் அடிக்கிறேனாம்) கேட்டேன். அவ "பரவாயில்ல, ப்ரண்ட்ஸ் பாத்துப்பாங்க, அட்லீஸ்ட் பாப்கார்ன் (பாப்பான் அல்ல) வாங்க ஒரு ரெண்டு டாலராவது தருவியா"ன்னு கேட்டா, நான் "பஸ்ஸுக்கே கார்டுதான் வச்சிருக்கேன். சுத்தமா நயா பைசா இல்ல"ன்னேன். அவ உடனே என் மேல் பாக்கெட்டுல இருந்த சிகரெட் பாக்கட்ட பாத்தா, "அட்லீஸ்ட் ஒரு சிகரெட்டாவது தருவியா"ன்னு கேட்டுகிட்டே அவளே என் பையில இருந்து பாக்கெட்ட எடுத்து, தலைக்கு மேல ஆட்டி காமிச்சா... உடனே கடைசி சீட்ல இருந்து திருப்பியும் ஒரு "ஓ".. இப்ப ட்ரைவர் "வாட் யுர் டூயிங்" அப்படீன்னு ஒரு குரல் விட்டாரு. உடனே இவ "நத்திங்" அப்படீன்னு சொல்லிட்டு... "இட்ஸ் சோ ச்வீட் ஆஃப் யூ, பட் ஐ டோண்ட் ஸ்மோக்.. தேங்க்ஸ்" அப்படீன்னு சொல்லிட்டு சிகரெட் பாக்கட்ட என் பாக்கட்லயே வச்சிட்டு எந்திரிச்சி போயிட்டா.. அப்புறம் மீண்டும் கலாட்டா ஆரம்பிக்க, என் ஸ்டாப் வந்து நான் இறங்கிட்டேன்.. பஸ் என்ன க்ராஸ் பண்ணப்போ கண்ணாடி வழியா அவ கொடுத்த ப்ளையிங் கிஸ் தெரிஞ்சிது... அட, அவ ஃபோன் நம்பர் கூட வாங்கிக்காம அசமஞ்சமா இருந்திருக்கோமேன்னு நினைப்போடவே வீடு வந்து சேர்ந்தேன்.

மக்கள்ஸ் கிட்ட இந்த கதைய சொன்னவுடனே பூபதி கேட்டான், "அவளுக்கு என்ன வயசு இருக்கும்?".. "தெரில ஒரு 16, 17 வயசு இருக்கும்"னேன் நான். ஆனா யோசிச்சு பாத்தா அத விடவும் கம்மியா இருந்திருக்கும்னுதான் தோணிச்சி.. பூபதி சொன்னான் "நல்லவேலையா நீ எஸ்கேப் மகனே". அதாவது அவ சிகரெட் பாக்கெட்ட கையில வச்சிருக்கிற சமயத்துலயோ, இல்ல சிகரெட் பாக்கெட்ட எடுத்துகிட்டோ போயி அத மாமா பிடிச்சான்னா, அவளுக்கு சிகரெட் தந்ததுக்காக நான் பதில் சொல்ல வேண்டி வருமாம்...

பூகோள ரீதியாக இங்கு ஒருவரின் புறத்தோற்ற சராசரிகள் இந்தியர்களின் தோற்றத்தின் விடவும் மிகவும் மாறுபட்டது. அமெரிக்க சராசரி உயரமும் எடையும் இந்தியர்களை விட அதிகம். ஒரு 14 வயது பையனோ பெண்ணோ எளிதாக 18 வயதினராக தோற்றம் தரலாம். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட், சாராயம் தருவது சட்டப்படி குற்றம். கடையில் அவர்களது அடையாள அட்டை பார்த்து வயதை கன்ஃபர்ம் செய்தே தருவார்கள்/மறுப்பார்கள். ஆகவே யாராவது பணம் தருகிறேன், கொஞ்சம் சிகரெட் வாங்கித்தர முடியுமா என்றால்கூட உடனே மறுத்துவிடுங்கள். அவர்களுக்கு பணம் கூட தராதீர்கள். அதை எதற்கு உபயோகப்படுத்துவார்களோ, யாருக்கு தெரியும். இந்த ஊரில் சட்டங்கள் வித்தியாசமானவை. உங்கள் வீட்டில் தண்ணி பார்ட்டி வைத்து, அதற்கு வருபவர்களில் யாராவது முட்ட முட்ட குடித்துவிட்டு திரும்பி செல்லும் வழியில் மாமாவிடம் மாட்டி, உங்கள் பார்ட்டியில்தான் தண்ணி அடிச்சேன் என்றால் நன்கு குடித்த நிலையிலும் அவர்களை ஏன் மோட்டாரை இயக்க அனுமதித்தாய் என்று கேள்வி கேட்டு மாமா வருவார்.

*

புதிதாக வருபவர்களில் பாதிப்பேருக்கு பொழுதுபோக்கு கம்ப்யூட்டர்தான். புதிய இடம், புதிய சூழல். தனிமை. இங்கு கார் இல்லாமல் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு பயணம் செய்வது மிகவும் கடினம். குறுகிய பயணமாக வருபவர்கள் பெரும்பாலோர் முடிந்த வரை காசு சேர்த்துக்கொண்டு ஊர் போவோமா, கார் வாங்கி அதை போகும்போது விற்று என்று கார் வாங்கவே மாட்டார்கள். கிழக்கு பகுதியில் வருடம் நான்கைந்து மாதம் பனி வேறு. அதோடு குறைந்த விலையில் நிறைந்த இண்டர்நெட் கனெக்சன். இப்பொழுது எப்படியோ, அப்பொழுது டயல் அப்பில் மட்டுமே வளர்ந்த எனக்கெல்லாம சல்லிசாக 24 x 7 ப்ராட்பேண்ட் என்பது அற்புதம். இப்பொழுது பதிவு எழுதி டைம் வேஸ்ட் செய்வது மாதிரி அப்பொழுது டைம் வேஸ்ட் செய்ய பயன்பட்டது சாட்டிங். கார் வாங்கிய பின்புதான் டைம் வேஸ்ட் என்பது டைம் ஸ்பெண்ட் என்பதாக ஆனது.

சாட்டிங் செய்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சைபர் செக்ஸ் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். சுருக்கமாக சொன்னால் சாட்டிங்கில் பாலியல் விஷயங்களை பேசுவது. அமெரிக்க சினிமாக்களை பார்த்து, அமெரிக்க என்பது ஃப்ரீ செக்ஸ் நாடு என்ற பிம்பத்தை வளர்த்துக்கொண்டு இங்கு வருபவர்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உண்டு. இங்கு யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தவறு. பாலிகமி என்பது கூடக்குறைச்சலாக இருந்தாலும் இங்கும் ஒருவனுக்கு ஒருத்திதான். ச்சீட்டிங் என்பது குறித்த உணர்வு உலகம் முழுவதும் ஒன்றுதான். அமெரிக்காவில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது. அதாவது வயதுக்கு வந்த இருவர், இருவரின் முழுச்சம்மதத்தோடு உடல்ரீதியான தொடர்பு கொள்ளலாம் எனினும் அதற்காக காசு பணம் வேறு ஆதாயங்கள் என்று எந்த பரிவர்த்தனையும் கூடாது.


18 வயதுக்கு குறைந்தவர்கள் குழந்தைகளாக கணக்கில் கொள்ளப்படுகிறார்கள். அவர்களோடு எந்த ரூபத்தில் பாலியல் தொடர்பு கொண்டாலும் அது சட்ட விரோதம். அதாவது 18 வயது குறைந்தவர்ளோடு சாட்டிங் செய்து அதில் பாலியல் குறிக்கோள் இருந்தாலோ, அல்லது பாலியல் சம்பந்தப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் இருந்தாலோ அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் அவ்வப்பொழுது கவுண்டி போலீஸ் டிபார்ட்மெண்டே பெண் பெயரில் ச்சாட் செய்து இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்களை பிடிப்பார்கள். லோக்கலாக இப்படி என்றால் தேசிய ரீதியாக NBC Dateline போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இது போன்று பொறி வைத்து பலரை பிடித்து அவர்களை சட்டத்திடம் ஒப்படைக்கின்றது. இது வரை 179 பேர் NBCஆல் பொறிவைத்து பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போன்ற ஒரு ஆப்பரேஷன் போன வாரம் நடந்தது. Petaluma sting என்ற பெயரில் நடந்த இந்த ஆப்பரேஷனின் வீடியோ க்ளிப்பிங்குகளும் அதன் வரிவடிவ கட்டுரைகளும் இந்த சுட்டியில் இருக்க்கிறது. சென்ற வாரம் பிடிபட்ட 29 பேரில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். இந்தியர்கள் புனிதமானவர்கள் என்பதால் அல்ல, Ph.D in Computer Engineering, புதிதாக மேற்படிப்பு படிக்க வந்தவர்கள் என்று சின்ன வயதுக்காரர்களாக இங்கு இருப்பவர்களின் பெற்றோர் பல்லாயிரக்கணக்கான மைல் தள்ளி தம் மகன்கள் ஜெயில் களி தின்கிறார்களே என்பதை நினைத்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்ற அந்த நினைப்பில்...

இந்த சுட்டியில் வலதுபுறம் Dateline Videos என்ற பகுதியில்

Part 2 of the Petaluma investigation
3: Silicon Valley men
4: The man who brought a friend

என்ற தலைப்பில் இருப்பது பூராவும் மாட்டிய இந்தியர்களின் வீடியோ க்ளிப்பிங்குகள். இவை சென்ற வாரம் தேசிய தொலைக்காட்சியான NBCல் ஒளிபரப்பப்பட்டது. இதில் The man who brought a friend என்பது இந்தியாவில் இருந்து புத்தம்புதிதாக வந்த நபர். இந்தியன் accent கூட இன்னும் மாறவில்லை. அவரிடம் கார் இல்லையென்று தன் நண்பனை அழைத்துக்கொண்டு வந்து பிடிபட்டிருக்கிறார். எல்லாரும் 30 ஆயிரம் ரூபாய் டாலர் பத்திரத்தில் பெயில் அளிக்கப்பட்டு கோர்ட் அழைப்பு அன்று சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று கூறி விடுவிக்கப்பட, இந்த நபர் கோர்ட்டுக்கு வராமல் எஸ்கேப். இப்போது அவர் மீதான குற்றம் அதிகரிக்கப்பட்டு அவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சைபர் செக்ஸ் என்பது வயதுக்கே உரிய விஷயம்தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் எதிரே இருப்பவர் ஆணோ பெண்ணோ, வயது 18க்கு கீழ் என்றால் உடனடியாக சேட்டிங்க் விட்டு வெளியேறாவிட்டால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

அதுமட்டுமல்ல (கலிபோர்னியாவை பொறுத்தவரை) Sex Offenders புகைப்படமும் முகவரியும் இந்த வலைத்தளத்திலே நிரந்தரமாக பதியப்படும். இதில் உங்கள் வீட்டு முகவரியை கொடுத்தால் உங்கள் வீட்டு அருகே வாழும் செக்ஸ் அஃபெண்டர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வலைமுகவரியை என்னை போலவே நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். ஹாலோயீன் சமயத்தில் குழந்தையை அழைத்துச்செல்லக்கூடாத இடங்கள் பற்றி விழிப்புணர்வு பரவ இது உதவும்...

18 வயதுக்கு குறைந்தவர்களோடு உடல் ரீதியான தொடர்பு வைத்து பிடிபட்டால் அதோடு எல்லாம் காலி. இங்கே அதற்கான சட்டங்கள் மிகக்கடுமையானவை. வாழ்க்கை முழுவதும் Pedophile என்று அழைக்கபப்டுவார்கள் என்பது சட்ட நடவடிக்கையை ஒப்பிடும்போது ஜுஜுபி. நிறைய மாநிலங்களில் குறைந்த பட்சம் 25 ஆண்டுகளில் இருந்து அதிக பட்சம் ஆயுள் வரை இதற்காக தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனைக்காலம் முழுமைக்கும் பரோல் கிடையாது. இங்கு ஆயுள் என்றால் 14 வருடம் இல்லை... தண்டிக்கப்பட்டவர் உண்மையிலேயே மூச்சை நிறுத்தி சாகும் வரை.

பி.கு :: இதோடு நம்மூரில் பள்ளிகளில் குழந்தைகளிடம் உடல் ரீதியாகவே தகாத முறையில் நடக்கும் வாத்தியான்களுக்கு அளிக்கப்படும் தண்டனை பற்றி ஒரு ஒப்பீடு ஞாபகம் வந்து இம்சை அளிக்கிறது. அதாவது ஒரு பள்ளியில் இருக்கும் எல்லா குழந்தைகளிடமும் தகாத முறையில் நடந்த பிறகு அந்த வாத்தியானே அந்த செய்தியை தைரியமாக வெளியிடலாம். மாநில கல்வி ஆய்வாளர் தலைமையில் ஒரு வெட்டி குழு இதை விசாரித்து அதிக பட்ச தண்டனையாக பணிமாற்றம் செய்வார்கள்.. அதாவது அவனை வேறு பள்ளியில் சென்று இதே வேலையை செய் என்று மா.க.ஆ. குழு மாமா வேலை பார்ப்பார்கள்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//இதோடு நம்மூரில் பள்ளிகளில் குழந்தைகளிடம் உடல் ரீதியாகவே தகாத முறையில் நடக்கும் வாத்தியான்களுக்கு அளிக்கப்படும் தண்டனை பற்றி ஒரு ஒப்பீடு ஞாபகம் வந்து இம்சை அளிக்கிறது. அதாவது ஒரு பள்ளியில் இருக்கும் எல்லா குழந்தைகளிடமும் தகாத முறையில் நடந்த பிறகு அந்த வாத்தியானே அந்த செய்தியை தைரியமாக வெளியிடலாம். மாநில கல்வி ஆய்வாளர் தலைமையில் ஒரு வெட்டி குழு இதை விசாரித்து அதிக பட்ச தண்டனையாக பணிமாற்றம் செய்வார்கள்.. அதாவது அவனை வேறு பள்ளியில் சென்று இதே வேலையை செய் என்று மா.ப.ஆ. குழு மாமா வேலை பார்ப்பார்கள்...
//

இந்த வாத்தியான்களின் #### ஐ வெட்ட ஒரு கூர்மையான கத்தியை ரெடி செய்யவேண்டும்
 



மிகவும் உபயோகமான தகவல்கள். முகமூடியாரே.

நான் எழுதிவரும் பாலியல் கல்வி பதிவில் இதையெல்லாம் பற்றி எழுத நினைத்து, எப்படி இது இந்திய, தமிழக வாழ்க்கையை விட முற்றிலும் வேறுபட்டிருக்கிறது என்ற எண்ணம் வந்து தவிர்த்து விட்டேன்.

இதையும் படிக்கச் சொல்கிறேன், நம் அமெரிக்க இந்திய பெற்றோரை.
மிக்க நன்றி.

[ம்ம். நீங்க படிக்கிறீங்களோ அதை?!!]
:))
 



//
சுத்தமா நயா பைசா இல்ல"ன்னேன்.
//

உண்மைதானா இல்ல காசக் கொடுத்துட்டு டபாய்க்கிறீங்களா?

//
கார் வாங்கிய பின்புதான் டைம் வேஸ்ட் என்பது டைம் ஸ்பெண்ட் என்பதாக ஆனது.
//

மன்னிச்சுகுங்க, டைம் க்கு பதிலா டாலர்ன்னு படிச்சுட்டேன்.


நீங்கள் சொல்லிய அனைத்தும் எந்த ஐரோப்பிய நாட்டுக்குச் செல்பவராக இருந்தாலும் பொருந்தும் (லோக்கல் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு).

என்ன, மற்ற ஐரோப்பிய நாடுகளில் இப்படி மாட்டுவது, பஸ்ஸில் மாங்காவாவது, போன்ற சமாச்சாரங்களில் மொழி தெரியாமல் ஈடுபட முடியாது.
 



இதை ஏன் நீங்கள் ஒரு வெகுஜன (தமிழ்) பத்திரிக்கைக்கு அனுப்பக் கூடாது? அமெரிக்காவைப் பற்றிய தப்பான அபிப்பிராயம் கொஞ்சம் மாறுமே.
 



பொதுவா சீமைக்குப் போறவங்களுக்கு, இதை எடுத்துக்க, அதை மறந்துடாத, எந்த ஏரியாவுல நம்ம சாப்பாடு கெடைக்கும், கிளைமேட் எப்படி, இந்தமாதிரி ரேஞ்சுலதான் உபதேசம் கிடைக்கும்.
அப்படி இல்லாம, வெலாவரியா எழுதீர்கீங்க.

உருப்படியான பதிவு. நன்றி.
 



இங்கு ஏற்படும் தனிமையும், அமெரிக்கா பற்றிய தவறான கண்ணோட்டமும் தான் இந்த மாதிரியான தவறுகளை செய்யத்தூண்டுகின்றன. இந்த வீடியோக்களில் நம்ம ஆளுங்க யாரும் உண்மையை ஒத்துக்கிற மாதிரியே இல்ல வெள்ளைக்காரனுங்க இந்த விஷயத்துல பரவாயில்லை பெரும்பாலும் ஓத்துக்கொள்கிறார்கள்.
 



//அமெரிக்க சினிமாக்களை பார்த்து, அமெரிக்க என்பது ஃப்ரீ செக்ஸ் நாடு என்ற பிம்பத்தை வளர்த்துக்கொண்டு இங்கு வருபவர்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உண்டு//

ரொம்ப சரியா சொன்னீங்க..இங்க நம்ம ஊர விட சில விஷயங்கள் ரொம்ப conservative ஆ இருக்காங்க...அருமையான பதிவு :-)
 



நல்ல பதிவு!!!

வெளி நாடுகளுக்கு வர இளைஞர்களை பாதிப்பது தனிமையே!!! அதுவும் குளிர்காலம் வந்துவிட்டால் பிரச்சனைதான்...

எப்படியோ பிளாக் எழுத பழகிட்டதால விண்டர் ஓட்டிடலாம்னு நினைக்கிறேன்...
 



அவசியமான கருத்துக்கள். இங்கே மூன்று நிலைகளில் குழந்தைகளின் வன்முறையை முறையிட முடியும். இதனால் தவறான கணக்கு (triple count) வந்தாலும் குழந்தைகள் நலன் கருதி அனுமதிக்கிறோம்.
பள்ளி, அக்கம் பக்கத்தார், நண்பர்கள் (குழந்தையே பள்ளி கவுன்சிலரிடம் சொல்லலாம்)
 



பழக்கதோஷத்தில் :-) எழுதப்பட்ட ஒரு சில வார்த்தைகளை நீக்கிப் படித்தால் முகமூடியின் பதிவில் முதல்முறையாக நான் படித்த (மேலும் சிலவும் இருக்கலாம், எனக்குத் தெரியாது) உருப்படியான இடுகை.

எங்கள் நிறுவனத்துக்கு தற்காலிக நேரடி பயிற்சிக்காக அடிக்கடி வந்து செல்லும் தமிழ் பேசும் இந்திய கணிப்பொறியாளர்களுக்கு மிகவும் உதவும். கொடுக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி
 



Dear Mugamoodi

Well written piece. In fact all our Indian IT companies should translate your post and broadcast it to each and every one of its employees.

Yesterday when I suggeted this news items to two of our fellow bloggers they wondered "what is there to write about this?". You got it right. You have a sense of social responsibility. I appreciate.

When I was watching this DateLine NBC program last Friday, I was shocked by the gullibility of many of our Indian guys. In fact even Chris, the anchor of that programme was commenting "I knew there are lot of SW of guys in Silicon Valley, but I never expected so many of them will come for this show :)"

It was pathetic to see two of the Indian IT guys coming to "enjoy" a 13 year old girl with lot of snacks, potato chips in grocery carry bags. When they were allowed to go by the NBC guy, they did not forget to take back those food packets also with them. Their grip did not lose even when the poilce arrested them.

Some of our Indian guys would not be aware that it was a crime to chat with minors. For them even if a 60 year old woman invited them they would have gone there eagerly. Freeaa kidachaa phenoila kooda kudippaanunga namma aalunga.

The guy who was a Phd in Comp Engg was telling the cops that he is a Phd. The cop cooly asks him back, 'O.K do you have anything else to say'. That Phd was working in SUN here, another two boys were already sent out of their jobs. One of them is a Tamil boy. Pathetic Pathetic. Their ignorance killed thier life. Lost job, money, respect, life and above all prison terms in american jails. Imagine. Some of the boys were recently married.

One guy who was caught earlier in one such programme appeared again. NBC's chris was telling him, hey you look familiar to me, that guy responded 'Oh shit not again', it has become a compulsive psychological behavior.


The inventor of Java language was caught by FBI like this only. They used a decoy and caught him. Later he accepted to work for FBI.



There was one 48 year old prominent cancer doctor was among them.

When IT guys are sent to other countries company used to conduct a cross cultural programmes. I would recommend your blog as their course material.

Ignorance is not always a bliss

Regards
Sa.Thirumalai
 



மிக நல்ல பதிவு முகமூடி அவர்களே. இதனை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து இடலாமே?! தமிழர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா ஊர்க்காரர்களுக்கும் ஆகுமே.

ஆப்ரிக்கன் அமெரிக்கர்களை ப்ளாக் (Black) என்று குறிப்பிடுவது கூட அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. கலர்ட் பீபிள் (Coloured People) என்று சொல்லலாம்.

செக்ஸ் ஆஃப்பன்டர்ஸ் சுட்டியைத் தேடவேண்டும் என்று பல நாளாக நினைத்திருந்தேன். இங்கே கொடுத்ததற்கு நன்றி. நான் என் முகவரியை இட்டுப் பார்க்கிறேன். எங்கள் வீட்டு சின்ட்ரெல்லாவைக் கூட்டிக் கொண்டு கோவிந்தா போடப் போக வேண்டும். :-)
 



அமெரிக்காவில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது. அதாவது வயதுக்கு வந்த இருவர், இருவரின் முழுச்சம்மதத்தோடு உடல்ரீதியான தொடர்பு கொள்ளலாம் எனினும் அதற்காக காசு பணம் வேறு ஆதாயங்கள் என்று எந்த பரிவர்த்தனையும் கூடாது. //

சில மாநிலங்களில் விபச்சாரம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.வேகாஸில் தெருவில் பிம்ப்கள் நின்றுகொண்டு பாம்ப்ளெட் கொடுத்தார்கள். அதுபோக ஸ்ட்ரிப்க்ளப்களில் லேப்டான்ஸ் பல மாநிலங்களில் உண்டு.

போர்னோ சட்டரீதியிலான அனுமதியுடன் பெரிய பிசினசாக நடைபெறுகிறது.

//18 வயதுக்கு குறைந்தவர்கள் குழந்தைகளாக கணக்கில் கொள்ளப்படுகிறார்கள். அவர்களோடு எந்த ரூபத்தில் பாலியல் தொடர்பு கொண்டாலும் அது சட்ட விரோதம். அதாவது 18 வயது குறைந்தவர்ளோடு சாட்டிங் செய்து அதில் பாலியல் குறிக்கோள் இருந்தாலோ, அல்லது பாலியல் சம்பந்தப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் இருந்தாலோ அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.//

Age of consent மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தென்கரோலினாவில் பெண்களுக்கு 14 தான் Age of consent

Age of consent யூடாவில் 16.பெரும்பாலான மாநிலங்களில் 16, 17 தான்.கலிபோர்னியாவில் 18.
 



//கலர்ட் பீபிள் (Coloured People) என்று சொல்லலாம். //

No. Kumaran, calling them blacks is more acceptable than calling them colored people. Colored people was a term used by THOSE OLD WHITE MEN in those white old days. African-Americans is probably the best way to address them.
 



Well said / written . '+++'
 



முகமூடி,

உபயோகமான பதிவு.

இப்போது எல்லாம் நம்மாட்கள் அமெரிக்க வருவது சாதாரணம் ஆகியிருக்கும்
நேரத்தில் இது அவசியப்படுகிறது.
 



கால்கரி, உண்மையிலேயே வெட்ட வேண்டும் என்றுதான் எனக்கும் தோன்றும். ஆனால் வருசத்திற்கு நான்கு ஐந்து கேஸ்கள் ஊடகத்திலே வந்துகொண்டுதான் இருக்கின்றன.. இவர்களை எல்லாம் ஏன் கற்பழிப்பு கேஸில் பிடித்து உள்ளே போட மாட்டேன் என்கிறார்கள் என்பது புரியாத புதிர். குறைந்த பட்சம், வேலையை விட்டு கூட தூக்குவதில்லை. வேலை மாற்றம் என்பது என்ன அவ்வளவு பெரிய தண்டனையா? அங்கிருக்கும் சிறுமிகளை நிம்மதியாக வாழவிடுவான்கள் என்பது என்ன நிச்சயம்? Child Molestation குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் (அப்படி ஒரு சட்டம் இருக்கிறதா?)

*

SK, பாலியல் கல்வி கற்கும் அளவு எனக்கு இன்னும் வயசாகவில்லை ஹிஹி.. (சும்மா சொன்னேன், இன்னமும் ஆரம்பிக்கவில்லை... விரைவில் படிக்கிறேன்)

*

வஜ்ரா, அந்த முதல் ஓ இல்லாம இருந்திருந்தா காச கொடுத்திருப்பேன். ஆனா கலாய்க்கிறாங்கன்னு தெரிஞ்சப்புறம் காசு தர நாம என்ன கேனயனா? அப்புறம் டைம், டாலர் எல்லாம் சேத்துதான்.

*

நன்றி அனானி.. முயற்சிக்கிறேன்.

*

கில்லியில் அறிமுகம் கொடுத்து விசயத்தை திசைகள் எட்டும் பரவச்செய்ததற்கு நன்றி பிரகாஷ்.. (அது சரி, விலா வரின்னா என்ன? நோஞ்சானுக்குதானே விலாவில வரி தெரியும்...)

*

வெள்ளைக்காரனுங்களுக்கு விசயம் தெரியும் சந்தோஷ்.. அதுக்கு மேல ஒண்ணும் செய்ய முடியாதுன்னு தலைக்கு மேலே வெள்ளம் போனால் கேஸ் ஆயிடுறானுங்க.. நம்மாளுங்களுக்கு என்ன நடக்கும்னே தெரியாது...

*

நன்றி ச்யாம்.
 



// எப்படியோ பிளாக் எழுத பழகிட்டதால விண்டர் ஓட்டிடலாம்னு நினைக்கிறேன்... // வெட்டிப்பயல் :-))

*

பத்மா, ஒரே குற்றத்தை மூன்று பேர் ஒரே நேரத்தில் தெரிவித்தால் அது மூன்று குற்றங்களாக பதியப்படுமா? நேரம் கிடைத்தால் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன்..

*

சுடலை.. முகமூடி பதிவில் முதல்முறையாக நீங்கள் படித்ததா அல்லது முதன்முறையாக படித்ததேவா...

// இந்திய கணிப்பொறியாளர்களுக்கு மிகவும் உதவும். கொடுக்கிறேன் // அவசியம் கொடுங்க.. நன்றி

*

நன்றி திருமலை.. Ignorance is not always a bliss என்பது முற்றிலும் சரி, அதிலும் சட்ட விஷயங்களில்...
 



நன்றி குமரன்... ஜாக்கிரதையாக உலா சென்று அனுபவியுங்கள்... ஹாலோயீனுக்கு சென்றாலும் கிடைக்கும் சாக்லேட்களை அப்படியே குழந்தையை சாப்பிட விடாதீர்கள்.. அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் வாங்கி வைத்த சாக்லேட்டை உங்கள் குழந்தையிடம் trade-in செய்து அதை சாப்பிட சொல்லுங்கள். அறிமுகம் ஆகாதவர்களிடம் வாங்கிய சாக்லேட்களை எறிந்துவிடுங்கள். இது குறித்து விபரமாக என்றாவது எழுதவேண்டும். Happy Holloween.

*

செல்வன், சட்டங்கள் பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடும். வேகாஸில் விபச்சாரம் சட்டவிரோதம் வேகாஸ் இருக்கும் நெவாடா மாநிலத்தின் பல மாவட்டங்களில் (கவுண்டிகள்) விபச்சாரம் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகாஸ் நகரம் அமைந்த க்ளார்க் கவுண்டியில் விபச்சாரம் சட்டவிரோதம்தான். அங்கே நோட்டீஸ்கள் தருகிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அது விபச்சாரத்துக்கு நேரடியான அழைப்பாக இருக்காது. வேறு ஏதாவது பெயரில் இருக்கும்.

போர்னோ அனுமதிக்குட்பட்டது.. ஆனால் அங்கும் வயது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தனிநபர் கம்ப்யூட்டர் வேறு எதற்காவது மாட்டினால் அதில் சிறுவர்களின் அந்தரங்க பகுதிகள் தெரியும் வண்ணம் புகைப்படம் இருந்தால் அந்த நபர் மாட்டினார்.

ஸ்ட்ரிப் க்ளப்புகள் லைசன்ஸ் வாங்கியவை. லேப்டேன்ஸ் என்பது விபச்சாரம் அல்ல.. அங்கே பெண் ஆடை களைந்தாலும் ஆண் ஆடை களைவதற்கு அனுமதி இல்லை.

Age of consent மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றாலும் நான் 18 என்று சொன்னதற்கு காரணம் கலிபோர்னியா மட்டுமின்றி ஒரு கன்சர்வேட்டிவ் ஃபிகராகவும் இருக்கட்டுமே என்றுதான். எந்த மாநிலத்தில் என்ன வயது என்றெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விட, அதிக பட்ச வயதான 18 என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லதுதானே.

*

// African-Americans is probably the best way to address them. // என்பதே சரி. நன்றி அனானி.

*

நன்றி கார்த்திக்

*

நன்றி முத்து(தமிழினி). உங்க ஏரியா மக்கள் யாராவது வந்தாங்கன்னாலும் இதை சொல்லி அனுப்புங்க.
 



Am in the US since the last 5 years. I never knew that Escort service is illegal. Is it so? Open-a classifieds, yellowbookla ellam varuthe...adhu thavira fantasy clubnu oru matter irke..angayum "gilma" matter allowed aache...nejamava america full-a illegalnu solreenga ?
 



Yes it is Raj... நீங்கள் கேட்ட பிறகு சரிபார்ப்பதற்காக விக்கியை நோண்டினேன்.. இங்கிருக்கிறது சுட்டி நெவாடாவின் சில கவுண்டிகள் மற்றும் ரோட் ஐலண்ட் தவிர அனைத்து மாநிலங்களிலும் விபச்சாரம் சட்டவிரோதம்.
 



Mugamoodi

Also write about the Florida congressman's email to pages. The irony was he was the person instrumental in child abuse prevention laws. He also spoke in that NBC show.

Escort services are meant for giving company only not for other purpose though they use it for other uses. Whether such things are legal are not it is better to keep out of trouble.

Regards
Sa.Thirumalai

PS Also write a note of caution about the identified/known Phedophiles roaming in Tamil blog world
 



முகமூடி,
உபயோககரமான பதிவு.நன்றி!
 



நல்ல பதிவு முகமூடி.
 



வெலாவாரியாய் - விளக்கமாய், விரிவாய் என்றுப் பொருள் கொள்க (சென்னை தமிளு நைனா)

முகமூடியாரே, முழு சைவ பதிவுக்கு நன்றி :-)
 



முகமூடி,

உபயோகமான பதிவு. நன்றி...
 



உண்மையில் மிக பயனுள்ள பதிவு.
எதிர்காலம் u.s.ல் என்று வாழ்பவர்களுக்கு உங்கள் கட்டுரை அருமையான ஒன்று. மேலும் தொடர வாழ்த்துக்கள்

சென்ஷி
 



//ஹாலோயீனுக்கு சென்றாலும் கிடைக்கும் சாக்லேட்களை அப்படியே குழந்தையை சாப்பிட விடாதீர்கள்.. அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் வாங்கி வைத்த சாக்லேட்டை உங்கள் குழந்தையிடம் trade-in செய்து அதை சாப்பிட சொல்லுங்கள். அறிமுகம் ஆகாதவர்களிடம் வாங்கிய சாக்லேட்களை எறிந்துவிடுங்கள்.//

நம்மூர் ரயில்களில் கிடைக்கும் மயக்க பிஸ்கோத்து மாதிரி இருக்கவும் சான்ஸ் இருக்கும் போலிருக்கு.

//Ph.D in Computer Engineering, புதிதாக மேற்படிப்பு படிக்க வந்தவர்கள் என்று சின்ன வயதுக்காரர்களாக இங்கு இருப்பவர்களின் //

படிக்கும்போது அஞ்சரைக்குள்ளவண்டி, மலையாள பிட் பாத்துப் பாத்து பி.எச்.டி கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படிச்சும் கேப்மாறித்தனம் பண்ணி பொறியில மாட்டின ஆட்களை நினைச்சு வருத்தம்!

நல்ல அறிவுறுத்தும் பதிவு.

அன்புடன்,

ஹரிஹரன்
 



மிக பயனுள்ள பதிவு முகமூடி அவர்களே.

Black என்று குறிப்பிடும் தொனி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் கூட வம்பு தான். பொதுவாக இன அடையாளங்களை வைத்து வேடிக்கை, கலாய்த்தல் என்று பேசுவது கூட சிக்கலில் மாட்டி விடும். (Jewish, Spanish கூட - என்ன இந்த பெயர்களை அப்படியே பயன்படுத்தலாம்).

// உங்கள் பார்ட்டியில்தான் தண்ணி அடிச்சேன் என்றால் நன்கு குடித்த நிலையிலும் அவர்களை ஏன் மோட்டாரை இயக்க அனுமதித்தாய் என்று கேள்வி கேட்டு மாமா வருவார்//

வந்தாரே! வந்து ஒரு ரவுண்டு கட்டினாரே! பாவம் பானம் பருகாத நண்பன், சக ஊழியரின் கவனக் குறைவால், accident case ஆனதால், social service and awareness வகுப்புக்குச் செல்ல வேண்டியும் போயிற்று!

offenders list - இன் சுட்டி US முழுமைக்கும் இதோ. offenders -இல் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. ஆக எக்குழந்தையாயினும் விழிப்பு தேவை.
http://www.familywatchdog.us/

மேலும் அமெரிக்கன் லிங்கோ-நம் சொற்கள் குளறுபடிகள், அலுவலகத்தில் பேச்சு முறைகள், ஆனா ஊனா Harrasment என்று கொதிப்பது, அமெரிக்க சமூகம் சார்ந்த இதர வாழ்க்கை மாறுபாடுகள் குறித்தும் எழுதுங்களேன்!

Halloween Candy-இல் இவ்வளவு ஜாக்கிரதை உணர்வா? அதுவும் நன்கு கவர் செய்யப்பட்ட candy-களில் கூடவா? அதற்குப் பேசாமல் அறிமுகம் ஆனவர்கள் இல்லத்திற்கு மட்டும் சென்று வந்து விடலாமே.
 



பின்னூட்டங்களை பார்த்தால் ஹாலோவீன் எச்சரிக்கை கூட தேவை போல இருக்கிறது.
முகமூடி, குழந்தைகள் விஷய்த்தில் எண்ணிக்கை கூடுதலாக வ்வந்தாலும் பரவாயில்லை என்றூ மூன்றூ பேர் கூப்பிட்டாலும் தனித்தனியாக DYFS இல் பதிய வேண்டும். ஏனெனில் வழக்காடுமன்றத்தில் இந்த விவரங்கள் அவசியம். இல்லை எனில் காப்பகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலா. மேலும் எந்த நிலையிலும் நிதி வருவது DYFS க்கு குறையக்கூடாது என்பதும் எல்லாநிலையிலும் மக்கள் ஆவலாக இருப்பது அவசியம்.
அமெரிக்காவில் triple count இந்த மாதிரி விஷயத்தில் யாரும் கவாஇப்படுவதில்லை, மாறாக ஊக்குவிக்கிறார்கள்.
குழந்தைகள் வன்முறை காரணமாக சிறைக்கு செல்பவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஒருமுறை DYFS புகார் போனால் 1 வருடம் வாராவாரம் சோஷியல் ஊழியர் அவர்வீட்டுக்கு சென்றூ குழந்தைகள் ஒழுங்காக கவனித்துக்கொள்கிறார்களா என்பதை கைப்பட எழுத வேண்டும். இதில் கணிணி உபயோகிப்பதை அனுமதிப்பதில்லை. அப்படியும் சில இடங்களில் தவறு நேர்ந்து நம்பி குறிப்பெழுதி அவஸ்தைப்படும் ஊழியர்கள் உண்டு. அமெரிக்கா ஏழைகள் விஷயத்திலும் குழந்தைகள் விஷயத்திலும் நிறைய கவனம் எடுத்துக்கொள்கிற நாடு.தவறுகள் நடந்தாலும் அவைகணிசமான அளவில் குறைவே. எழுத வேண்டும் அமெரிக்காவின் இன்னொரு பக்கம் பற்றி.
 



மிக நல்ல பதிவு ....
 



i could not help thinking of a recent article in j.vikatan.

apparently an mla went to a school and wrote to soem kids , aa nee romba azhaga irukke!!!!he also wrote his phone no and asked another girl to call him to have some jolliya pesalam. yuk. even more yuk is the fact that the parents initially protested and later agreed for compromise on caste grounds. kadavule nee than intha kuzhandhaigalai kaapathanum
 



EnSoY!!!!!
http://vanthiyathevan.blogspot.com/2006/11/blog-post.html
 



EnSoY!!!!!
http://vanthiyathevan.blogspot.com/2006/11/blog-post.html
 



முகமூடி, என்ன வெகஷனா? ஆளே பார்க்க முடியலே வலைப்பதிவுகள்.

அண்ணே சூடா எதாவது டாபிக் ஆரம்பிங்க...
 



Anna!
Vanakkang na!
Masam oru pathivavathu ezhuthunganna!
Daily paathu paathu romba emaathama irukku!
 



நல்ல பதிவுங்கண்ணா
 



Indian jailed in US on paedophilia charges

8/5/2008 6:31:06 PM

Indian techie- 28 years -old Naveen Ningappa
An Indian techie- 28 years -old Naveen Ningappa was arrested in the US on paedophilia charges and has been serving his prison sentence in a Pennsylvania jail for the past 9 months.

Naveen is an associate consultant of HCL, a multinational software company. He had been tried on multiple charges- including solicitation to commit rape and indecent assault and attempted rape.

Prosecutors alleged that the Indian techie hired a chauffeur to drive him to East Norriton in New Jersey to meet who he believed was a 12-year-old girl whom he met over the Internet. Ningappa- the police say was unaware that he was communicating online with an undercover detective.

However, the Indian techie's family says he is being framed- R Ningappa- Naveen's father told TIMES NOW that the family has received four letters from Naveen over the past 9 months. In all the letters, they claim, Naveen says he is innocent and is being framed.

Naveen clarifies that he only chatted with the girl who claimed she was 12 years and did not meet her. He also claimed that he would be released from court only if he could pay up a fine of $500,000- an amount the family says it is no condition to cough up.
 



//இங்கு ஆயுள் என்றால் 14 வருடம் இல்லை... தண்டிக்கப்பட்டவர் உண்மையிலேயே மூச்சை நிறுத்தி சாகும் வரை.//

ரொம்பப் பிடிச்சது இதுதான். 14 வருசமுன்னு சொல்லி, ரொம்பவே நல்லவன்பான்னு 8 இல்லே 10 வருசத்துலே வெளியே விடுவதெல்லாம் நினைச்சால்.... பத்திக்கிட்டு வருது :-(
 



சரி, உங்க கருத்து ??