<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தண்டனை, இனவிடுதலை ஜல்லிகளும் மாற்றுப்பார்வையும்


ஒரு சில மார்க்ஸீய மற்றும் நக்கீரன் டைப் பத்திரிக்கைகளை படித்துவிட்டு டைகர் பீர் குடித்துக்கொண்டே, தோன்றுவதை எழுதும், நிகழ் சமுதாய எண்ணவோட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் சிந்தனையை வைத்துக்கொண்டு ஆனால் நம் சிந்தனையே சமூக விடுதலைக்கான ஒரே தீர்வு என்று நினைத்துக்கொள்ளும் வலைப்பதிவுலக பெரும்பான்மையின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னவென்றால் தனிமனித சமூக, பொருளாதார விடுதலைக்கு முட்டுக்கட்டை தேசியம் மட்டுமே என்பதாக கற்பித்துக்கொண்டு தேசியத்தை பழித்து எழுதுவது. இவர்களுக்காவது, அதிகாரத்தை முழுமையாக எதிர்க்கும் அல்லது அதிகாரத்தை மக்கள் கையில் முழுமையாக சென்று சேர்க்கும் வகையிலான கொள்கைகளா என்றால் என்றால் அதுவும் இல்லை... இனக்குழுக்களை பிறப்பின் அடிப்படையில் அதே இனத்தில் பிறந்த யாராவது ஒருவர் ஆண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற குண்டுசட்டி நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்...

கிடைக்கின்ற செய்திகளை எல்லாம் அலசி அதில் தன் சுயசிந்தனை கொடுக்கும் மாற்றுப்பார்வையை கலந்து எழுதுவதல்ல இவர்களின் மாற்றுப்பபர்வை... மாற்றுப்பார்வை செய்திகள் என்று கட்டம் கட்டப்பட்ட செய்திளை மட்டுமே தேர்ந்தெடுத்து படித்து அதுவே சத்தியமான செய்தி என்று தீவிரமாக நம்பி அதே கருத்துக்களை மீள்வாந்தி எடுப்பது இவர்களின் வாடிக்கை. உபாதை என்னவென்றாலும் ஒரே மாத்திரையை தரும் தமிழக அரசு மருத்துவமனை மாதிரி எந்த விதமான ப்ரச்னை என்றாலும் தெகல்காவோ, அருந்ததி ராயோ எழுதுவதுதான் சரியான பார்வை என்று மட்டையடிக்கப்படும் கட்டுரைகள் இதில் ஒரு வகை... இந்த கட்டுரைகள் மற்றும் இன்ன பிற பக்கசார்பு கட்டுரைகளை மேற்கோள் காட்டி, இவர்களெல்லாம் எழுத்துலக பிதாமகன்கள் இதை எல்லாம் படித்தாவது உருப்படு என்று இல்லாத பார்வையாளர்களிடம் சலித்துக்கொள்ளும் குட்டி எழுத்தாளர்கள் இன்னொரு வகை... தம்மைப்போலவே இந்த நாசமாய்ப்போன சமூகமும் சிந்திக்காமல் இப்படி உருப்படாமல் கிடக்கிறதே என்ற உண்மையான அக்கரை காரணமாக வரும் புலம்பல் இது என்பதால் அவர்களின் அன்பிற்காக அதை மதிக்கலாம், மறக்கலாம்... ஆனால் அந்த கருத்துக்களை தங்கள் எழுத்தின் உள்ளே புதைக்காமல் என் கருத்தே சாஸ்வதம், மற்றது எல்லாம் திரிப்பு வெறுப்பு தெறிப்பு கொறிப்பு என்றெல்லாம் வெளிப்படையாகவே புலம்பி சலிக்கும் போது மதிப்பு நமக்கு ஆச்சரியமாக மாற ஆரம்பிக்கும்... ஆனால் இடம், பொருள்,ஏவல்,சாதி ஆகியவற்றை பொருத்து கொள்கை மட்டும் விதவிதமாக நிறத்தை மாற்றிக்கொள்ள, புலம்பல் மட்டும் அதேவாக தொடரும் போதுதான் என்ன இழவுடா இது எனும் எரிச்சல்தான் எழுகிறது.

தமது சாதிக்காரன் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதியாக வந்தால்தான் நீதி உருப்படும் என்ற பரந்த எண்ணம் கொண்டவர்கள், தன் கருத்துக்கு எதிராக இந்திய நீதித்துறையால் அளிக்கப்படும் தீர்ப்புக்களின் மீது சலிப்பை கொள்வது இயல்பானது. நீதித்துறை மாசற்றது என்பது அல்ல என் வாதம். அதில் ஏகப்பட்டை ஓட்டைகள், நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தியல் காரணமாக எழும் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரான தீர்ப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் அப்சலின் மரணதண்டனையில் அப்சல் நிரபராதியாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்திற்கு பலமூட்டும் எந்த கருத்துக்களையும் காணோம். அப்சலுக்கு மரணதண்டனை தீர்ப்பு வெளியானதும், மொத்தமாக, மரணதண்டனை என்பதே மனித நேயத்திற்கு எதிரானது என்ற எண்ணம் பலரால் வெளிப்படுத்தப்படுகிறது... இவர்கள் தாங்கள் வகுத்துக்கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருப்பவர்கள். பாம்போ பல்லியோ, எந்த ஜந்துவையும் கொல்ல மாட்டேன் என்று வாழ்பவர்கள் இவர்கள். பாம்போ பல்லியோ, மொத்தமாக கொல்ல மாட்டீர்களா அல்லது உங்கள் வீட்டிற்குள் வராத வரைக்கும் கொல்ல மாட்டீர்களா என்றெல்லாம் கேட்காமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் குடிமுழுகிவிடாது என்பதால் இதை கண்டுகொள்ள வேண்டியதில்லை.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்து, இதற்கு மதச்சாயம், விடுதலை போராட்ட சாயம் எல்லாம் பூசி மெழுகி தனது அழுக்கை வெளிப்படுத்தும் செக்கூலரிஸ்டுகள் எந்த வகையில் சேர்ப்பது என்பதுதான் தெரியவில்லை. வெகுசன ஊடகங்களின் மீது எரிச்சல் கொண்டிருக்கும் இவர்கள், அதே வெகுசன ஊடகங்கள் பரபரப்புக்காக வெளியிடும் குறுக்கப்பட்ட செய்தியாக வரும் தீர்ப்பின் ஒரு பக்கத்தை மட்டும் ப/பிடித்து இவனுக்கு மரணதண்டனை கொடுப்பதால் மட்டும் தீவிரவாதிகள் திருந்தவா போகிறார்கள் என்று உலகம் முழுமைக்குமான தமது அக்கரை வர்ணத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது இவர்களின் வாடிக்கை என்றால் நீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக யாராவது வெளியிட்டு அதை முழுவதுமாக படி என்றால் அதை சொன்னவரின் சாதியை சொல்லி இவன் இப்படித்தான் என்று கும்மியடித்துக்கொண்டு மண்டையை மலத்தால் நிரப்பிக்கொள்வது வேடிக்கை. ஏன் இந்த வாதங்கள் எல்லாம் அப்சலுக்கு கிடைக்கும் மரணதண்டனைக்கு மட்டும் எழுகிறது என்பது போன்ற எல்.கே.ஜி கேள்விகள் இப்போது அர்த்தமற்றவை...

*

தீவிரவாதிக்கு மரணதண்டனை கொடுப்பதால் அவன் திருந்த வாய்ப்பை அடைக்கிறோம். அவனுக்கு மரணதண்டனை என்பதால் ஏற்கனவே உயிரை தர தயாராக இருக்கும் மற்ற தீவிரவாதிகள் திருந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் தவறு, ஆகவே தண்டனையை மாற்றி ஆயுளோ, மன்னிப்போ கொடுக்கலாம்...

சிந்தித்துப்பார்ப்போம். போக்குவரத்தில் சிகப்பு விளக்கை மீறினால் தண்டனை இல்லை என்றால் எத்தனை பேர் குற்ற உணர்ச்சியே இல்லாமல் தாண்டுவோம்... ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டான், இவனை தண்டித்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது என்று யாருக்கும் தண்டனை கொடுக்காமல் போனால் சமூகத்தில் குற்றமா சீவகாருண்யமா எது பெருகும். ஒருவன் ஆசைப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்தால் அதே பெண்ணை கல்யாணம் செய்வது, அல்லது பஞ்சாயத்துக்கு பத்து ரூபாய் அபராதம் கட்டுவது என்பதா அல்லது வன்புணர்ந்தவன் இனி எந்த பெண்ணையுமே புணராத அளவு அவன் உடம்பில் மாற்றம் செய்வது (அட ** அறுப்பதுதான்) , இதில் எது செய்தால் "எதிர்காலத்தில்" இதுபோன்ற குற்றங்கள் குறையும்...

அரசியல், மதம், சாதி என்று எந்த கொளுகையும் இல்லாமல், தன் ஒருத்தன் வருமானத்தில் எப்படி சிக்கனமாக வாழ்ந்தால் கூடப்பிறந்தவளின் கல்யாணம் நடக்கும், குடும்பம் குடிசையில் இருந்து ஓட்டு வீட்டுக்கு மாற எத்தனை வருசங்கள் காத்திருக்க வேண்டும் வேண்டும் என்ற எளிய சிந்தனையில் போய்க்கொண்டிருப்பவன் பக்கத்தில் குக்கர் குண்டு வைத்து அவனை சிதறடிப்பவனின் மன உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் அளவு அந்த குற்றத்தின் காரணமாக சரி செய்யவே முடியாத சேதத்தை அடைந்த, அந்த துயர நாள் முதல் வாழ்க்கையே மாறி எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தின் மன உளைச்சல்களை ஏன் எண்ணிப்பார்ப்பதில்லை... அப்போது கண்ணுக்கு கண்தான் தீர்ப்பா... அவனை கொன்றால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்பவர்களை நினைத்தால் என்னால் வாயால் சிரிக்க முடியவில்லை.

சமூகத்தின் பெரும்பான்மை சட்டத்திற்கு கட்டுப்பட்டது. இதன் அளவீடுகள் மாறுபடலாம். நடுராத்திரி மூன்று மணி ஒருவழிப்பாதையின் அந்தபக்கம் போலீஸ் இருக்கமாட்டான் என்று சத்தியமே செய்தாலும் ஒரு சிலர் அதில் போக மாட்டார்கள். என்னை போன்ற ஆசாமிகள் போலீஸ் இல்லாத நேரம் என்று கண்டிப்பாக தெரிந்த நேரத்தில் கொஞ்சம் தயக்கத்தோடு கடப்போம். ஒரு சிறுபான்மை இருக்கிறது, அரசியல், அதிகார, பணபலம் என்று ஏதோ ஒரு பின்புலம் காரணமாக சட்டத்தின் மீதும் தண்டனையின் மீதும் எந்த மதிப்பும் இல்லாமல் அலையும் கூட்டம். மற்றபடி பொதுபுத்தி தண்டனைக்கு பயந்தே வாழ்கிறது. அந்த பயம்தான் சமூகம் ஓரளவாவது நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. அந்த பயத்தையும் நீக்கிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப்பார்கக் வேண்டும். சமூகத்தின் அமைதியை குலைக்கும் வண்ணம் வன்முறையை தூண்டிவிட்டாலும் சரி, அனுமதி வாங்காமல் அறவழிப்போராட்டம் நடத்தினாலும் சரி எந்த காரணமாக இருந்தாலும் டாக்டர் அய்யா கைவைக்க முடியாதவர் என்பதை நிரூபிப்பதற்காக பேருந்தை எரித்தும் பொதுசொத்தை நொறுக்கியும் ஒரு பக்கம் தொண்டர்கள் விளையாடும்போது, "பேருந்து நம் வரிப்பணம், அது நம் சொத்து, அதை சேதப்படுத்துவது சட்டப்படி குற்றம்" என்று அன்னை சத்யா கார்ப்பரேஷன் சாத்வீகமாக தட்டி எழுதி வைத்துக்கொண்டிருந்ததற்கு பதிலாகஒரு நாலு பேரை பிடித்து மிகக்கடுமையாக தண்டித்து அவன் குடும்பம் கஷ்டப்படுவதை - கட்சி பணரீதியாக குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் என்றாலும் - வெகுசன ஊடகங்கள் வெளிச்சத்தில் கொண்டுவந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்தபோது தீயினால் சூழப்பட்டு வெளிவர முயற்சித்தும் முடியாத கையாலாகத்தனத்தோடு போராடி உயிர் நீத்த மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்குமா என்பதை நினைத்து பார்ப்போம்.. இந்த பஸ் எரிப்பு வழக்கு கேலிக்கூத்து ஒரு முடிவுக்கு வந்து குற்றம் செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால் அதையும் வரவேற்கிறேன்.

ஏதோ ஒரு ஆத்திரத்தில் கண நேர உணர்ச்சி கொந்தளிப்பில் திட்டமிடாத கொலை செய்துவிட்டு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட கைதிக்கு அந்த தண்டனை வழங்குவதை நான் எதிர்க்கிறேன்... ஆனால் என்ன எழவு கொள்கையாக இருந்தாலும் கொழுப்பெடுத்து நிதானமாக திட்டம் போட்டு குற்றம் செய்து அப்பாவிகளை கொல்பவர்களுக்கு தரப்படும் மரணதண்டனையை முழுமனதோடு ஆதரிக்கிறேன். இதில் நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்... இதை சொன்னால்தான் அது, அப்படி சொன்னால்தான் இது, கண்டிசன் போட்டு எழுதினால்தான் எதிர்காலத்தில் எஸ்கேப் ஆகலாம் என்றெல்லாம் எழுதப்படும் பரமார்த்த வழவழ கொழ கொழ வெண்டிக்காய் குரு எழுத்தல்ல இது, இதுதான் என்னுடைய கொள்கை.

குற்றவாளிக்கு ஆதரவாக மக்கள் போராடுகிறார்களே, இவர்கள் என்ன வெட்டியாகவா போராடுகிறார்கள் என்று ஏதோ ஒரு வட இந்திய வெகுசன பத்திரிக்கையில் வந்த படத்தை பார்த்து நாமாக கருத்து எழுதக்கூடாது. இங்கு என்ன ஆர்னால்டு ஷ்வாஷ்னாகர் படமா காண்பிக்கிறார்கள் - டெர்மினேட்டர் பாகம் ஒன்றில் ஆர்னால்டு கெட்டவன், அடுத்த பாகத்தில் அவன் நல்லவன் என்று குத்துமதிப்பாக புரிந்து கொண்டு, எப்படி இருந்தால் என்ன, சண்டை காட்சிகளும் க்ராபிக்ஸும் சூப்பர், படத்தை ரசிப்போம் என்பதற்கு... குஷ்பு ப்ரச்னையில் கழுதை, துடைப்பம், இன்னபிற எல்லாம் கொண்டு போராடிய விசி தொண்டர்களின் படத்தை ஜூ.வியில் பார்த்து ஒரு நாகாலாந்து ப்ளாக்கர் தமிழ் கலாச்சாரம் பற்றி பதிவு எழுதினால் என்ன எழுதுவார் என்பதை நினைக்க வேண்டும்.

*

நாடாளுமன்றத்தை தாக்குவது சுதந்திரபோராட்டமா? இங்குதான் பகுத்தறிவு வேலை செய்ய வேண்டும்... திராவிடனாக பிறப்பதால் பகுத்தறிவு தானாக இருக்காது. மூளை மட்டும்தான் இருக்கும். அதில் பகுத்தறிவை தனிமனிதந்தான் முயற்சி செய்து புகுத்த வேண்டும். நாலு கால் ஒரு வால் இருப்பதால் கழுதையும் குதிரையும் ஒன்றுதான் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு நான் பகுத்தறிவு பாசறை என்றால் சொல்வதற்கு என்ன இருக்கிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் உரிமை ப்ரச்னை இருக்கிறது என்றே கொள்வோம், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை தகர்ப்பது என்பது என்ன, பிறப்புரிமையா? அவன் மனிதனையே வெட்டுகிறான், நாம் மரங்களை வெட்டுவதின் ஒரு குற்ற உணர்ச்சியும் கொள்ள தேவையில்லை என்ற அடிப்படையில் பிறக்கும் சிந்தனை கோட்பாட்டின்படி பார்த்தால்தான் அது பிறப்புரிமை.. அவன் *** தின்கிறான், அதனால் நீயும் *** தின்பாயா என்பதுதான் அவர்களிடம் நாம் கேட்க தேவையில்லாதது... ஆனால் நாடாளுமன்றம் என்றால் என்ன என்பதை கேட்கலாம்...

நாடாளுமன்றம் என்பது என்ன வெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இளைப்பாறும் கூடமா.. சிமெண்ட் செங்கல்லால கட்டப்பட்ட வெறும் கட்டிடமா... அது 100 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக தெரியவில்லையா? அங்கே அறிவுஜீவிகளும் இருக்கலாம், அடிமாட்டு ஜந்துகளும் இருக்கலாம்... தகுதியில்லாத பலர் குறுக்கு வழியில் அதில் உட்காரலாம், மக்கள் உரிமைக்கு எதிரான பல விஷயங்கள் அங்கே சட்டங்கள் ஆக்கபப்டலாம்... ஆனால் எந்த காரணமாக இருந்தாலும் அதை ஒரு இயக்கத்தால் சிதைக்க முடிந்தால், அப்புறம் நாடு என்ற அமைப்புக்கு என்ன மரியாதை. நாடாளுமன்றத்தை புனிதமாக்கவில்லை நான், புனிதம் அல்ல என்பதாலேயே அதை செருப்பால் அடிக்கக்கூடாது என்கிறேன் நான்.

காஷ்மீரும் சரி, வடகிழக்கு மாநிலங்களும் சரி எது மக்களின் உரிமை என்று யார் வரையறை செய்வது. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் நடப்பது அரசியல். இன்று நேற்றல்ல, ரொம்ப காலமாகவே நடக்கிறது இந்த அரசியல். காஷ்மீரை இந்தியா சுத்தமாக வெட்டி விட்டுவிட்டால் அது சகல உரிமைகளோடும் தன்னாட்சி கொண்ட ஒரு நாடாக இருக்கும் என்று எத்தனை பேர் உண்மையாக நம்புகிறீர்கள். நேரு செய்த தவறே இவ்வளவு காலம் நம்மை துரத்திக்கொண்டிருக்கும்போது மேலும் ஒரு தவறு செய்வது குறித்து யோசிக்க வேண்டும்.. இங்கு "நமது" என்று நம் நாடு இந்தியா என்று நினைப்பவர்களை குறிப்பிட்டேன். நமது நாடு தமிழகம் என்பவர்களிடம் எனக்கு சொல்ல எதுவும் இல்லை. சீனா தன்னுடைய பிராந்திய எல்லை போக எவ்வளவு பிரதேசங்களை உரிமை கொண்டாடுகிறது என்பதை கணக்கில் கொண்டு வடகிழக்கு சுதந்திரத்தையும் பற்றி யோசிப்போம்.

வடகிழக்கில் தனி ராஜ்ஜியம் நடக்கிறதாம்.. கட்டப்பஞ்சாயத்துக்களும், தனி ராஜ்ஜியங்களும் எங்கும் இருக்கத்தான் செய்யும். பாப்பாபட்டி கீரிப்பட்டியில் பெரும்பான்மையாக இருக்கும் தேவர்கள் தங்களுக்கு தலைவராக ஒரு தலித் வர விரும்பவில்லை என்று வன்முறையில் ஈடுபட்டால் அரசாங்கம் பின்வாங்குகிறதா? எதற்காக வெட்டியாக அங்கே ஒரு நாடகம் நடந்துகொண்டிருக்கிறது பேசாமல் அதை பொதுத்தொகுதியாக மாற்றிவிடுங்கள் என்றா நாம் சொல்கிறோம். கேட்பவனுக்கு எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தால் நாடு என்ற அமைப்பு சிதைந்துவிடாதா? தனித்தமிழ்நாடு உட்பட அதைத்தான் இங்கு பலரும் விரும்புகிறார்கள் என்றாலும் கூட நான் உட்பட பல பேர் தமிழ்நாடு தனிநாடாக இல்லாமல் இந்தியாவோடு இணைந்திருப்பதையே விரும்புகிறோம். "தமிழன்" என்னை ஆண்டால்தான் என் வீட்டில் பாலும் தேலும் ஓடும் இல்லை பிச்சையெடுப்போம் என்ற மட்டையடி திராவிட கருத்தியலின் மீது எங்கள் யாருக்கும் நம்பிக்கையில்லை. பிறப்பால் தமிழரான கருணாநிதி கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பிறப்பையே தகுதியாக்கி எம்ஜிஆர் மலையாளி, ஜெயலலிதா கன்னடிகா, வைகோ மற்றும் விஜயகாந்த் தெலுங்கர்கள் என்று ஜல்லியடிக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாரும் என்னை பொருத்த வரை தமிழர்கள்தான். எனக்கு மட்டும் இல்லை இன்னும் கோடிக்கணக்கான மக்களும் அதே சிந்தனையில்தான் என்பதை வாணியம்பாடியில் முஸ்லீம்தான் ஜெயிக்க முடியும் என்ற திமுகவின் நம்பிக்கையின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட நாகூர் ஹனீபாவை எதிர்த்து வென்ற இந்து வேட்பாளர் உட்பட பல வெற்றிகள் கடந்த கால தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டிருகின்றன... இனம் மட்டுமல்ல சாதி கூட செல்லாது என்பதே பெரும்பாலான மக்களின் சிந்தனை. வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்பது கூட மருத்துவர் அய்யாவின் மட்டையடி அரசியலை விமர்சனம் செய்யும் அதே வெகுசன ஊடகங்கள் கட்டமைத்த பிம்பங்கள்தான். சாதி பார்த்து ஓட்டு என்பதெல்லாம் பிம்பம் என்பதை கடந்த தேர்தலில் விருத்தாசலம் நிரூபித்தது. ஆனால் தமிழர்கள், வன்னியர்கள் என்று காலங்காலமாக வெகுசன ஊடகங்கள் பிம்பம் ஏற்படுத்தியது. இவர்களின் உரிமைக்காகவும் எழுச்சிக்காகவும் தனிநாடு, தனி மாநிலம் என்றால் என்ன ஆகும்.. தமிழ் இனத்திற்கு கூட பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி தமிழர்களிடம் ஆளக்கொடுப்போம். அப்புறம் தமிழர்களுக்குள்ளே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக தமிழ் நாட்டுக்குள்ளே அவர்களுக்கு ஒரு குட்டி நாடு ஆக்கிக்கொடுப்போம். இப்படி பிரித்துக்கொண்டெ இருப்போம்.

ஒரு பிராந்தியத்தில் ப்ரச்னை என்றால் ப்ரச்னையை தீர்க்க முயலவேண்டும். வடகிழக்கில் ப்ரச்னை என்ன என்பதை ஆராய்ந்து அதை சரி செய்ய முயலவேண்டும். அவர்களின் அடிப்படை தேவைகள், வாழ்க்கை மேம்பட வசதிகள், போக்குவரத்து, தொழிற்சாலைகள், என்று உள்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க உதவி செய்ய வேண்டும். அதை விடுத்து ஒரு இயக்கத்தின் வன்முறையை மக்களின் போராட்டம் என்று வரையறை செய்வதும், அவர்கள் அடக்கப்படுகிறார்கள் அதனால்தான் அப்பாவிகளை கொல்கிறார்கள் அதற்கு நாமும் சமுதாயமும்தான் காரணம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும், அவர்களுக்கு தர வேண்டிய நியாயமான உரிமை என்று மாநிலம் மாநிலமாக வெட்டி விட்டுக்கொண்டே இருப்பதும் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அதற்கு பெயர் என்னை பொருத்தவரை ஒன்றுதான்... கையாலாகாதவர்களின் சொம்புத்தனம்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//
ஏன் இந்த வாதங்கள் எல்லாம் அப்சலுக்கு கிடைக்கும் மரணதண்டனைக்கு மட்டும் எழுகிறது என்பது போன்ற எல்.கே.ஜி கேள்விகள் இப்போது அர்த்தமற்றவை...
//

ஐயா இந்த LKG லயே பரமார்த்த குருவும் சீடர்களும் fail ஆயிடுவாங்களேய்யா...என்னய்யா பண்றது?

//
ஏதோ ஒரு ஆத்திரத்தில் கண நேர உணர்ச்சி கொந்தளிப்பில் திட்டமிடாத கொலை செய்துவிட்டு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட கைதிக்கு அந்த தண்டனை வழங்குவதை நான் எதிர்க்கிறேன்... ஆனால் என்ன எழவு கொள்கையாக இருந்தாலும் கொழுப்பெடுத்து நிதானமாக திட்டம் போட்டு குற்றம் செய்து அப்பாவிகளை கொல்பவர்களுக்கு தரப்படும் மரணதண்டனையை முழுமனதோடு ஆதரிக்கிறேன். இதில் நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்..
//

இதுவே எனது கொள்கையும்.

//
தீர்ப்பை முழுவதுமாக யாராவது வெளியிட்டு அதை முழுவதுமாக படி என்றால் அதை சொன்னவரின் சாதியை சொல்லி இவன் இப்படித்தான் என்று கும்மியடித்துக்கொண்டு மண்டையை மலத்தால் நிரப்பிக்கொள்வது வேடிக்கை.
//

அது அவர்கள் பிறப்புரிமை இல்லையா?

//
அதற்கு பெயர் என்னை பொருத்தவரை ஒன்றுதான்... கையாலாகாதவர்களின் சொம்புத்தனம்...
//

சரி.
An idle brain is devil's workshop என்பார்கள். இவர்கள் மூளை படு பயங்கரமாக மழுங்கிவிட்டதால் தான் இந்த கையாலாகாதத் தனம் வருகின்றது.

இந்த மூளையை மழுங்கடிக்கத்தான் "கொளுகை" கள் இருக்கின்றதே. "திராவிடம்", "மார்க்ஸீயம்" என்று.
 



தலை

காவிரி, ஏழ்மை, கல்வி அறிவின்மை, ஜாதியம், மதவாதம் இப்படி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்தியா என்ற நாட்டின் மூலமே கிடைக்கும் என்பதை மறந்து அதை உடைத்தால் மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறார்கள்.

துப்பாக்கி தூக்கி போரிடுவதில் காட்டும் முனைப்பை ஜனநாயக பாதையில் காட்டினால் இவர்கள் சுட்டும் குறைகள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்து இவர்களே தீர்க்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஓட்டு போடும்படி இவர்கள் தான் போன சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் கேட்டார்கள்.

ஆளுங்கட்சியாய் இருந்துகொண்டே எதிர்கட்சியாய் இருப்பதற்கு தனி சாமார்த்தியம் வேண்டும்.
 



தலை

காவிரி, ஏழ்மை, கல்வி அறிவின்மை, ஜாதியம், மதவாதம் இப்படி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்தியா என்ற நாட்டின் மூலமே கிடைக்கும் என்பதை மறந்து அதை உடைத்தால் மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறார்கள்.

துப்பாக்கி தூக்கி போரிடுவதில் காட்டும் முனைப்பை ஜனநாயக பாதையில் காட்டினால் இவர்கள் சுட்டும் குறைகள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்து இவர்களே தீர்க்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஓட்டு போடும்படி இவர்கள் தான் போன சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் கேட்டார்கள்.

ஆளுங்கட்சியாய் இருந்துகொண்டே எதிர்கட்சியாய் இருப்பதற்கு தனி சாமார்த்தியம் வேண்டும்.
 



அப்சலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் நான் பார்த்த வரையில் கூறப்படவில்லை.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்ஸலுக்கு வெறும் சூழ்நிலை ஒத்துபோகும் காரணங்களை கூறி மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அஃப்ஸல் தாக்குதலிலோ சதியாலோசனையிலோ நேரடியாக பங்கு கொண்டதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மரண தண்டனை வழங்குவது அசாதாரண சம்பவமாகும்.
நீதிமன்றத்தில் அஃப்ஸல் குற்றத்தை ஒத்துக் கொண்டதாக கூறப்படுவது தவறான தகவலாகும். விசாரணை நீதிமன்றத்தில் அஃப்ஸல் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுக்கவும் அரசுதரப்பு வழக்கறிஞரின் வாதங்களை எதிர்க்கவும் செய்திருந்தார். இனி பத்திரிக்கைகளின் முன்னிலையில் அஃப்ஸல் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் காவல்துறையின் வாதம் மட்டுமே மீதம் இருக்கின்றது. ஆனால் இதுவும் பொய்யான தகவல் என அஃப்ஸல் மறுக்கின்றார். அவர் குற்றத்தை மறுத்த பாகத்தை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகள் மறைத்துவிட்டதாக அவர் கூறுகிறார். மேலும் இவ்வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

விசாரணை நீதிமன்றத்தில் அஃப்ஸல் கூறிய பதில்களில் சில:

கேள்வி: உங்களை ஸ்ரீநகரில் வைத்து காவல்துறை உங்களோடு குற்றம் சுமத்தப்பட்டுள்ள சௌகத் ஹுஸைன் குருவோடு சேர்த்து எச்.ஆர்.38 இ 6733 எண்ணிட்ட ட்ரக்கில் வைத்து கைது செய்யவும் ஒரு லாப்டாப் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றியது. இது உண்மையா?

அஃப்ஸல்: என்னை ஸ்ரீநகரில் வைத்து தனியாகத் தான் கைது செய்தனர். என்னிடமிருந்து எதுவும் காவல்துறை கைப்பற்றவில்லை.

கேள்வி: அதன் பிறகு உங்களை டில்லி காவல்துறை டில்லிக்கு கொண்டு வந்தது. அங்கு போலீஸ் முன்னிலையில் நீங்கள் வாக்குமூலம் கொடுத்தீர்கள்.

அஃப்ஸல்: என்னை போலீஸ் டில்லிக்கு கொண்டு வந்து சித்திரவதைப்படுத்தி வாக்குமூலம் எழுதி வாங்கினர்.

கேள்வி: டி.ஸி.பி யின் முன்னிலையில் நீங்கள் வாக்குமூலம் கொடுத்தீர்கள்.

அஃப்ஸல்: இல்லை. அது பொய்.

குற்றம் சம்மதித்து வாக்குமூலம் கொடுத்துள்ளதைக் குறித்து மாற்றி மாற்றி கேட்ட கேள்விகளுக்கு தான் அவ்வாறு குற்றம் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கவில்லை என அஃப்ஸல் கூறியுள்ளார். எதற்காக தான் கைது செய்யப்பட்டுள்ளேன் என்பதைக் குறித்த முறைப்படி கொடுக்கப்படும் முன்னறிவிப்பை அதிகாரிகள் தனக்குத் தரவில்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். ஜெ.கெ.எல்.எஃபில் சேர்ந்திருந்ததாகவும் மற்றவர்களுடன் இணைந்து முஸாஃபராபாத்திற்கு சென்றதாகவும் அஃப்ஸல் கூறியுள்ளார். ஆனால், அங்கு வைத்து பாகிஸ்தான் இராணுவத்தினரிடமிருந்து பரிசீலனை பெற்றதாகவும் அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகவும் கூறப்படும் தகவல் பொய்யானது அவ்வாறு நடக்கவில்லை என அவர் மறுக்கிறார். அதன் பிறகு தான் சரணடைந்ததாகவும் பின்னர் எஸ்.டி.எஃப்பிற்காக தான் பணியாற்றி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எஸ்.டி.எஃப் கேம்பில் வைத்து பழக்கமான தாரீக் மூலம் எஸ்.டி.எஃப்பிற்கான ஏஜண்டாக தான் மாறியதாகவும் அஃப்ஸல் கூறியுள்ளார்.

அதன் பிறகு ஜெய்ஷே முஹம்மதில் இணைந்ததாகக் கூறப்படுவதும், அதன் சுப்ரீம் கமாண்டர் காஸி பாபாயுடன் இணைந்து பணியாற்றியதாக கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார். காஸிபாபாவின் கட்டளைக்கிணங்க கிலானி, சௌகத் ஹுஸைன், பாகிஸ்தானிகளான ராஜா, ஹைதர் போன்றவர்களுடன் பாராளுமன்ற கட்டிடத்தை தாக்க சதியாலோசனை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் அவர் கூறினார்.

குற்றப்பத்திரிக்கை படித்து முடித்த பின் குற்றம் ஒப்புக்கொள்ளவில்லை என மற்றவர்களுடன் அஃப்ஸல் ஒப்பிட்டு கொடுத்துள்ளார். வாக்குமூலத்தில் அஃப்ஸலின் கூட்டாளியாக போலீஸ் கூறும் தாரீக்கைக் குறித்து குற்றப்பத்திரிக்கையில் எங்கும் காணவில்லை. ஆனால் அதே நேரம் தாரீக் எஸ்.டி.எஃப்பின் இன்ஃபார்மர் என அஃப்ஸல் கூறுகின்றார். இவ்வழக்கில் இணைக்க தன்னை பிடிக்கும் பொழுது அவ்விடம் தாரீக் இருந்ததாகவும் எஸ்.டி.எஃப் தனக்கு தந்த பணத்தை அவர் பலம்பிரயோகித்து வாங்கியதாகவும் அஃப்ஸல் கூறியுள்ளார். எஸ்.டி.எஃப் கூறியதற்கிணங்கத்தான் டில்லியில் தான் வந்ததாகவும் அங்கு தங்கியதாகவும் அவருடைய வழக்கறிஞருக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் அஃப்ஸலுக்கு எதிரான மிக முக்கிய பாகமான டில்லி பயணம் எஸ்.டி.எஃபின் ஆலோசனைக்கிணங்க தான் மேற்கொண்டதாக அவர் கூறியிருப்பது இவ்வழக்கில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
JSR
 



//அப்சலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் நான் பார்த்த வரையில் கூறப்படவில்லை.//

நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் எல்லாரும் சுட்டு கொல்லப்பட்டனர். அப்சல் சதிக்கு உதவினார் என்பது தான் குற்றச்சாட்டு. கொலை செய்பவர்களை விட தூண்டுபவர்களுக்கு தான் தண்டனை அதிகம்

//பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்ஸலுக்கு வெறும் சூழ்நிலை ஒத்துபோகும் காரணங்களை கூறி மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அஃப்ஸல் தாக்குதலிலோ சதியாலோசனையிலோ நேரடியாக பங்கு கொண்டதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை.//

முழு பொய்

பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கூட அக்குற்றவாளிகளுடன் அப்சல் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த கடைசி நிமிடத்தில் அப்சலுடன் என்ன காப்பி சாப்பிடவா பேசினர் கொலையாளிகள்?

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்ன சொல்கிறது என பாருங்கள்

The second circumstance is the frequent telephonic contacts which Afzal had established with Mohammed. Even minutes before the attack, as many as three calls were made by Mohammed to Afzal from his phone No. 9810693456 which was operated with the instrument having IMEI No. 35066834011740(2) that was recovered from Mohammed's body, as seen from Ext. PW 35/2. The SIM Card relating thereto was also found in Mohammed's purse. Not only that, there is clear evidence to the effect that the mobile instruments were being freely exchanged between Afzal and Mohammed and other terrorists. This is the third circumstance.

Before going into the details on these aspects, it may be noted that the handset found in the truck in which Afzal was travelling and which he pointed out to the police was having IMEI No. 350102209452430. It was a mobile phone instrument of Nokia make and it was being used for the operation of phone No. 9811489429. It is Ext.P-84. The evidence as to recovery was furnished by PW61 and PW62. Its IMEI number and the cell phone number with which it was being operated is established by the evidence of investigating officer coupled with the call records filed by the witnesses. It is also clear from the call record that it was the last instrument on which the said number 89429 had been operated as late as 13.12.2001.

This mobile number ..89429 was also used in the instrument No. IMEI 449269219639010 recovered from the deceased terrorist Raja and was then used in the handset having number 350102209452430(2) i.e. the instrument recovered from the truck at Srinagar, as pointed out by the High Court at paragraph 325 of the judgment. The instrument recovered from Raja was the one used by Afzal i.e. on phone No. 89429 between 6.11.2001 and 23.11.2001. The mobile instrument recovered from Rana (IMEI 449269405808650) (Cell phone No.9810302438) was used by Mohammed who in turn was using the phone of Afzal also. This was the phone that was purchased by Afzal from PW49 -- Kamal Kishore.
 



முகமூடி.. நீங்க ஒருத்தர்தான் பாக்கி.. "எல்லோரும் ஏறி ஏச்ச குதிரைமேல வண்ணானும் ஏறி வகைமோசம் போனான்"னு இப்ப நீங்களும் இந்தத் துக்குத்தண்டனையைப் பற்றி விமர்சிச்சிருக்கிங்க. அது மட்டுமா.. திராவிடகட்சிகள், திராவிஷம், டைகர்பீர், வடகிழக்குப் பிரச்னை, தனித்தமிழ்நாடு, பாமகா, தேர்தல்னு, என்னன்னவோ அலசிக்கொண்டு போகிறீர்கள். என்னதான் சொல்ல வர்றீங்க...

ஆனா.. உங்க எழுத்து நடை நன்றாய் இருக்கிறது. தனிமனித, இன துவேஷங்களைவிட்டு, எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.
 



// அரசியல், மதம், சாதி என்று எந்த கொளுகையும் இல்லாமல், தன் ஒருத்தன் வருமானத்தில் எப்படி சிக்கனமாக வாழ்ந்தால் கூடப்பிறந்தவளின் கல்யாணம் நடக்கும், குடும்பம் குடிசையில் இருந்து ஓட்டு வீட்டுக்கு மாற எத்தனை வருசங்கள் காத்திருக்க வேண்டும் வேண்டும் என்ற எளிய சிந்தனையில் போய்க்கொண்டிருப்பவன் பக்கத்தில் குக்கர் குண்டு வைத்து அவனை சிதறடிப்பவனின் மன உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் அளவு அந்த குற்றத்தின் காரணமாக சரி செய்யவே முடியாத சேதத்தை அடைந்த, அந்த துயர நாள் முதல் வாழ்க்கையே மாறி எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தின் மன உளைச்சல்களை ஏன் எண்ணிப்பார்ப்பதில்லை... //

வாசகர் மூச்சு விட்டுக் கொள்வதற்காகவாவது
அங்கங்கே முற்றுப் புள்ளி இடலாமே
சிறு வாக்கியங்கள் ஆக்கலாமே
காம்ப்ளெக்ஸ் சென்டன்சுலே என்னை மிஞ்சிடுவீங்க போல இருக்கே.
இப்படி எல்லாவற்றையும் ஒன்றிலே சுருட்டிக் கொடுத்தால்
படிக்கிறவர்கள் தலை திருகிப் போயிடும் தலை.
தனித்தனியாகக் கொடுக்கும்போதே
அரைகுறையாகப் புரிந்து கொண்டும்
புரிந்து கொண்டதைப் புரிந்து கொள்ளாத மாதிரியும்
புரிந்ததைத் திரித்தும் பேசுபவர்கள் இருக்கையிலே
எதற்கு ராஜா இப்படி எழுதுகிறீர்கள்.
தெளிவு என்றால் எளிமை - வாக்கியங்களிலும்.

- பி.கே. சிவகுமார்
 



நல்ல மாற்றுப்பார்வையாக வலுவாக வந்திருக்கும். அதிகப்படியான தனிமனித தாக்குதலில் பதிவின் தரம் காலி.

வருத்தமாய் சொல்கிறேன். கோபமாய் அல்ல
 



உங்களுக்கெல்லாம் எப்ப தான் புத்தி வருமோ..
அந்த பதிவுக்கு போய் இவ்வளவு விளம்பரம் தேவையா? என்னமோ போங்க..
 



செல்வன்,

//ஆளுங்கட்சியாய் இருந்துகொண்டே எதிர்கட்சியாய் இருப்பதற்கு தனி சாமார்த்தியம் //

CPM/PMK/DMK எல்லமெ இதில் தேர்ந்தவர்கள்.//

வஜ்ரா,

யாருங்க அந்த பரமார்த்தகுரு?


பாலா
 



//நாடாளுமன்றத்தை தாக்குவது சுதந்திரபோராட்டமா? இங்குதான் பகுத்தறிவு வேலை செய்ய வேண்டும்... திராவிடனாக பிறப்பதால் பகுத்தறிவு தானாக இருக்காது. மூளை மட்டும்தான் இருக்கும். அதில் பகுத்தறிவை தனிமனிதந்தான் முயற்சி செய்து புகுத்த வேண்டும். நாலு கால் ஒரு வால் இருப்பதால் கழுதையும் குதிரையும் ஒன்றுதான் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு நான் பகுத்தறிவு பாசறை என்றால் சொல்வதற்கு என்ன இருக்கிறது.//

தமிழகத்தில் பகுத்தறிவு என்றாலே வெட்டியான வறட்டு அரசியல் திரா'விட' Rhetoric
பிராந்திய வெட்டிச் சலம்பல்கள் either misleads or disructs National integrity!

//குஷ்பு ப்ரச்னையில் கழுதை, துடைப்பம், இன்னபிற எல்லாம் கொண்டு போராடிய விசி தொண்டர்களின் படத்தை ஜூ.வியில் பார்த்து ஒரு நாகாலாந்து ப்ளாக்கர் தமிழ் கலாச்சாரம் பற்றி பதிவு எழுதினால் என்ன எழுதுவார் என்பதை நினைக்க வேண்டும்.//

இப்படி எல்லாம் நினைச்சா இயக்கத்தை / வயிறை எப்படி வளர்ப்பது?

//ஏதோ ஒரு ஆத்திரத்தில் கண நேர உணர்ச்சி கொந்தளிப்பில் திட்டமிடாத கொலை செய்துவிட்டு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட கைதிக்கு அந்த தண்டனை வழங்குவதை நான் எதிர்க்கிறேன்... ஆனால் என்ன எழவு கொள்கையாக இருந்தாலும் கொழுப்பெடுத்து நிதானமாக திட்டம் போட்டு குற்றம் செய்து அப்பாவிகளை கொல்பவர்களுக்கு தரப்படும் மரணதண்டனையை முழுமனதோடு ஆதரிக்கிறேன்.//

முற்றிலும் சரியான பார்வை! கருத்தை வழிமொழிகிறேன்.

நல்ல பதிவு. தாக்குதல்கள் காரமானதாக இருந்தாலும் அவசியம்.

அன்புடன்,

ஹரிஹரன்
 



குற்றவாளியே தனக்கு எந்த மன்னிப்பும் வேண்டாம், என்று பொத்திக்கொண்டு தூக்கு தண்டனைக்கு ரெடி என்றாலும், இந்த "ரவுடிக்குத் தெர்ஞ்சவங்க" அடிக்கிற லூட்டி தாங்கமுடியல டா சாமி...

அவனுக்கு கொடுக்கப் படும் சாப்பாட்டில் உப்பு கம்மி என்று தான் இவர்கள் இன்னும் சொல்லவில்லை.

He himself has not expressed any remorse or regret for what he did. Then why these half baked intellectuals are advocating clemency?
 



//திராவிடனாக பிறப்பதால் பகுத்தறிவு தானாக இருக்காது. மூளை மட்டும்தான் இருக்கும். அதில் பகுத்தறிவை தனிமனிதந்தான் முயற்சி செய்து புகுத்த வேண்டும். //

முகமூடி,

உண்மையான வார்த்தைகள்
 



//
திராவிடனாக பிறப்பதால் பகுத்தறிவு தானாக இருக்காது. மூளை மட்டும்தான் இருக்கும்.
//

மூளையாவது இருக்கே, அதுவரைக்கும் சந்தோஷம்.
 



குற்றவாளி என்று நாட்டின் உச்ச நீதி மன்றமே தீர்ப்பு வழங்கிய பின், இருக்கும் ஒரே வழி கருணைமனு ஒன்றுதான்.

அப்துல் கலாம் முடிவு செய்யட்டும்.

இவர்கள் அரற்றட்டும்.

நடப்பது... நல்லது... நடந்தே தீரும்.

பதிவை வேஸ்ட் பண்ணாதீர்கள்.
 



//குற்றவாளி என்று நாட்டின் உச்ச நீதி மன்றமே தீர்ப்பு வழங்கிய பின், இருக்கும் ஒரே வழி கருணைமனு ஒன்றுதான்.

அப்துல் கலாம் முடிவு செய்யட்டும்.

இவர்கள் அரற்றட்டும்.//

அப்துல்கலாம் இதில் முடிவு செய்ய ஒன்றுமில்லை.கேபினட் இவ்விஷயத்தில் என்ன சொல்கிறதோ அதை அப்படியே அவர் செயல்படுத்த வேண்டும். கேபினட் என்றால் திமுக, லல்லுகட்சி, முப்திமுகம்மது சையத் ஆகியோர் கட்சி மந்திரிகள் அடங்கிய மந்திரிசபை.

இவர்கள் எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்கும் என அதிகம் யோசிக்க வேண்டியதில்லை:)))))

Acquit
 



அப்துல்கலாம் இதில் முடிவு செய்ய ஒன்றுமில்லை.கேபினட் இவ்விஷயத்தில் என்ன சொல்கிறதோ அதை அப்படியே அவர் செயல்படுத்த வேண்டும்.கேபினட் என்றால் திமுக, லல்லுகட்சி, முப்திமுகம்மது சையத் ஆகியோர் கட்சி மந்திரிகள் அடங்கிய மந்திரிசபை.

இவர்கள் எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்கும் என அதிகம் யோசிக்க வேண்டியதில்லை:)))))

Acquit
 



சரி, உங்க கருத்து ??