<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நவீன மெக்கார்த்திகள்


img crtsy : loc.gov
We must not confuse dissent with disloyalty. We must remember always that accusation is not proof and that conviction depends upon evidence and due process of law. We will not walk in fear, one of another. We will not be driven by fear into an age of unreason, if we dig deep into our history and our doctrine, and remember that we are not descended from fearful men - not from men who feared to write, to speak, to associate and to defend causes that were, for the moment, unpopular - Edward R. Murrow

*

நாற்பதுகளின் இறுதி... கொரியாவில் போர் மோசமான நிலையை அடைந்துகொண்டிருக்க, கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக, கம்யூனிஸ (கம்யூனிஸ்டுகள்) உள்குத்தால் எங்கே தங்கள் ஜனநாயகத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று ஏற்கனவே அமெரிக்க மக்கள் அஞ்சிக்கொண்டிருந்த நேரம்... ஏற்கனவே HUAC கமிட்டி ஹாலிவுட்டில் யார் யார் இடது சாரி கருத்தியல் ஆதரவாளர்கள் என்று ஆராய்ந்து கொண்டிருந்தது...

விஸ்கான்சினை சேர்ந்த செனட்டர் மெக்கார்த்தி ஒரு சா(சோ)தா அரசியல்வாதி... 1950 ஜனவரியில், நண்பர்களுடனான ஒரு பார்ட்டியின் போது "எப்படியாவது புகழ் அடைய வேண்டும், என்ன செய்யலாம்" என்று ஆலோசனை கேட்க, கம்யூனிச எதிர்ப்பை கையில் எடுக்குமாறு நண்பர்கள் சொன்னார்கள். பிப்ரவரி மாதம் மேற்கு விர்ஜீனியாவில் நடந்த ஒரு மகளிர் சங்க கூட்டத்தில், ஒரு பேப்பரை ஆட்டி, தன் கையில் இருப்பது அமெரிக்க உள்துறையில் இருந்துகொண்டே அமெரிக்க கம்யூனிஸ்டு பார்டியிலும் உறுப்பினர்களாக இருக்கும் 57 பேரின் பெயர் பட்டியல் என்ற "திடுக்கிடும் தகவலை" வெளியிட்டார். இந்த பட்டியல் ஒன்றும் ரகசியம் இல்லை. ஏற்கனவே உள்துறை செயலாளரால் வெளியிடப்பட்டிருந்ததுதான். அதில் உள்ளவர்களில் கொஞ்சம் பேர்தான் உண்மையில் கம்யூனிஸ்டுகள்.. மற்றவர்கள் குடிகாரர்கள், ஃபாஸிஸ்டுகள் மற்றும் செக்ஸ் பித்தர்கள். மெக்கார்த்தியே குடிகாரர் மற்றும் செக்ஸ் பித்தர்தான், இருந்தாலும் முதல் அடியை அடித்தது அவராயிற்றே, கேட்க ஆளில்லை... "இப்படி இரட்டை குதிரை சவாரி செய்பவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலத்திதையும் இந்த நாட்டின் கொள்கைகளையும் வகுக்கிறார்கள்" என்ற அவரது சவடாலான பேச்சு, மீடியாவிற்கு அவலானது.. மெக்கார்த்தி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

அச்சத்தில் இருந்த அமெரிக்க சமுதாயத்தில் மெக்கார்த்தியின் பாச்சா நன்றாக பலித்தது. பத்தோடு பதினொன்றாக இருந்திருக்க வேண்டிய செனட்டர் மெக்கார்த்தி chairman of the Government Committee on Operations of the Senate ஆனார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு மெக்கார்த்தியும் ஜால்ராக்களும் கம்யூனிச எதிர்ப்பு ஹிஸ்டீரியா பிடித்து அலைந்தனர். பல அரசாங்க துறைகளும் ஏராளமான தனிநபர்களும் கம்யூனிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்கு ஆதாரம்? அது "பாதுகாக்கப்பட்ட ரகசிய" ஆவணம். ஏகப்பட்ட பேர் வேலையிழந்தனர். நிறைய பேர் சிறையிலடைக்கப்பட்டனர். அரசியல் எதிரிகள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்ற குற்றச்சாட்டு நன்றாக வேலை செய்தது. 1952 தேர்தலில் "கம்யூனிசத்தை கடுமையாக அணுகாமல் மென்மையாக அணுகும் உருப்படாத அரசு" என்று மெக்கார்த்தியினால் குற்றம்சாட்டப்பட்ட ட்ரூமென் அரசு தோற்று ஐசன்ஹோவர் ஜனாதிபதியாக ஆனார். செனட்டில் மெக்கார்த்தியை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். யாரை எல்லாம் மெக்கார்த்தி தன்னுடைய அரசியல் எதிரிகளாக கருதுகிறாரோ அவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். யார் யார் எல்லாம் மெக்கார்த்தியின் செயலை விமர்சிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பட்டார்கள். மெக்கார்த்தியின் விசாரணை முறைகள் நாட்பட மிகவும் கேவலமான முறையில் போக ஆரம்பித்தது.

1953ல் மெக்கார்த்தி ராணுவத்தில் கம்யூனிஸ ஆதிக்கத்தை விசாரிக்க ஆரம்பித்தார்... ராணுவ செயலாளர் ராபர்ட் ஸ்டீவன்ஸிடமும் தன் வேலையை காட்ட ஆரம்பித்த பிறகுதான், ராணுவமும் ஜனாதிபதி ஐசன்ஹோவரும் கடுப்பாகினர். ஆர்மி மெக்கார்த்தியை பற்றிய "உண்மைகளை" மெக்கார்த்தி எதிர்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு தர ஆரம்பித்தது. ஐசன்ஹோவரின் அறிவுரையின் பேரில் உபஜனாதிபதி நிக்சன் மெக்கார்த்தி நடவடிக்கைகளை "Men who have in the past done effective work exposing Communists in this country have, by reckless talk and questionable methods, made themselves the issue rather than the cause they believe in so deeply" என்று, ஆனால் மெக்கார்த்தியின் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

செனட்டர்களுக்கும் மீடியாவுக்கும் ஒருவழியாக தைரியம் வந்து மெக்கார்த்தியின் வண்டவாளங்களை எக்ஸ்போஸ் செய்து மெக்ககர்த்தி சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது ஏற்கனவே மெக்கார்த்தியிசம் என்ற சொல்லாடல் உலகப்பிரபலமாகியிருந்தது.

மெக்கார்த்தியிசம் என்றால், The practice of publicizing accusations of political disloyalty or subversion with insufficient regard to evidence ; The use of unfair investigatory or accusatory methods in order to suppress opposition என்கிறது ஆங்கில அகராதி

*

ஒரு ச்சின்ன ப்ரேக் :: கார்டூனில் தமிழ் மெக்கார்த்திகளுக்கு மொழிப்பாச சட்டை, இனப்பற்று டை, மரபுடைப்பு சூட் ஆகிவற்றை அணிவித்து அழகு பார்க்கும் பொதுஜனத்தை அடையாளம் தெரிகிறதா? டீ சாப்பிட சென்றிருக்கும் மற்ற பொதுஜனங்களையும் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு திராவிட பேனா இலவசம்... (பேனாவின்) வாழ்நாள் முழுமைக்கும் வர்ணாசிரம மை இலவசம்.

*

இவ்வருட ஜனவரி மாதம் வெளிவந்த ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் திருமாவளவன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் ::

சிறுத்தைகள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை; கருத்து சொல்லவில்லை. ஏனென்றால் இனியன் தலித். ஒடுக்கப்பட்டவன்! இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை..

அக்காலகட்டத்தில் குஷ்பு ப்ரச்னையின் போதும் அதற்கு முந்தைய சில சந்தர்ப்பங்களிலும் திருமாவின் பெரியாரிய கருத்து பரப்பு பிரசங்களாலும், கருத்து பிடிப்பு கொள்கைகளாலும் கவரப்பட்டிருந்த நான், திருமாவின் நெற்றியில் திருநீறு பார்த்ததும் ஆச்சரியப்பட்டு - திருமா நாத்திகர் என்று நானே தவறாக நினைத்துக்கொண்டதால் - இவர் பட்டையெல்லாம் அடிக்க மாட்டார் என்று யாரோ சொன்னாங்களே என்று பதிவிட்டேன்.. அது, தமிழ்மண பட்டை குறித்த சில விவாதங்கள் ஓடிக்கொண்டிருந்த, திருமா நாத்திகர் அல்ல என்ற சந்தேகம் எனக்கு வந்து நான அந்த பதிவை இட்ட மூன்று மணிநேரங்களிலே தூக்கிய, பதிவையெல்லாம் (முகமூடி) தூக்கலாமா என்ற முதலாம் பானிபட் யுத்தங்கள் ச்சை அறச்சீற்ற சத்தங்கள் கேட்க ஆரம்பித்த காலகட்டம்...

*

அந்த பதிவு தூக்கப்பட்டது குறித்த முதல் கருத்து வலைப்பதிவாளர் தருமியிடமிருந்து வந்தது :: திருமாவின் பேட்டியில் இரண்டு விஷயங்களே (இனியன் கொலை மற்றும் இன்னொரு சம்பவம்) எனக்கு அந்தக் கட்டுரையில் மனதில் நின்ற விஷயங்கள். அந்த முதல் காரியம் (aka இனியன் கொலை) பற்றிய அவரது மனக்குமுறல் நம் மனதில் கட்டாயம் தைத்தே ஆக வேண்டிய ஒரு காரியம். ஆனால் வாசித்த ஒருவருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் மனசை விடுங்கள், கண்களில்கூட படாமல் போனதுகூட ஆச்சரியமல்ல... (ஜனவரி 30, 2006)

*

தருமிக்கு விளக்கம் கொடுத்தபோது நான் சொன்னது :: அட, முகமூடிக்கு மனதில் வேண்டாம், கண்ணில் கூட ஏன் தைக்கவில்லை என்று அவராக யூகம் செய்து ஒரு கேள்வியை கேட்கிறார். முகமூடிக்கு தைத்ததா இல்லையா, ஒரு வேளை வேறு விதமாக தைத்திருக்கலாம் என்றெல்லாம் யோசிககவில்லை. முகமூடிக்கு தைத்தது வேறுவிதமாக :: இனியன் கொல்லப்பட்டதை தமிழ்நாட்டில் யாரும் கண்டிக்காததற்கு காரணம் இனியன் தலித், தாழ்த்தப்பட்டவன் என்பது திருமாவின் வாதம். இனியன் ஒரு அரசியல் கட்சியின் அங்கம். இனியன் கொலை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவா, சொந்த காரணங்களுக்காகவா, உட்கட்சி பூசலா என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது. சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே "போதிய அளவு" கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா? (பிப்ரவரி 06, 2006)

*

இந்த வார (ஜூலை 26 இதழ்) ஜூனியர் விகடனில் பழிக்குப் பழியா? என்ற தலைப்பில் வந்த செய்தி :: திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் அமைப்பாளராக இருந்த இனியன், சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கான்ஸ்டபிள் சுப்பிரமணியன் மற்றும் சகோதரர் ஆனந்த் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்த போலீஸ், மூன்று பேரை தேடிக் கொண்டிருந்தது. (கொலை செய்யப்பட்ட) இனியன் மற்றும் (கொலை செய்த) சுப்பிரமணியன் இரண்டு தரப்பும் தலித் இனம்தான். வேறு ஒரு சாதியைச் சேர்ந்த முக்கிய புள்ளியின் தூண்டுதல் பேரிலேயே கொலை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஜாமீனில் வந்துவிட்ட கான்ஸ்டபிள் சுப்பிரமணியன், அவருடைய சகோதரரான ஆனந்த் மற்றும் ஸ்ரீதர் ஆகிய மூவரையும் கடந்த 20ம் தேதி காலையில் நாச்சியார்கோயில் அருகே காரை மறித்து வெட்டிக் கொலை செய்திருக்கிறது மர்மக் கும்பல். ‘இனியனின் நெருங்கிய நண்பரான ஒருவர்தான் பழிக்குப்பழி வாங்கும் விதமாக மூன்று பேரையும் கொலை செய்திருக்கக் கூடும் என்ற பேச்சிருக்கிறது. ஒருவேளை, தன்னைப் பற்றி ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில், ஏற்கெனவே சுப்பிரமணியனை தூண்டியதாக கூறப்படும் அந்த முக்கிய புள்ளிகூட, கூலிப்படையை வைத்து இந்தக் கொலைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.

*

அமெரிக்க மெக்கார்த்திக்கு கம்யூனிசம் போல், தமிழகத்து நவீன மெக்கார்த்திகளுக்கு தமிழும் தலித்தியமும்... எங்கெங்கு சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இவ்விரண்டையும் நுழைப்பது நம் மெக்கார்த்திகளுக்கு வசதியாகவும் கைவந்த கலையாகவும் இருக்கிறது... தலித் இறப்பு என்றவுடன் "அவன் தலித் என்பதால் தமிழ்கம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை" என்று மீடியாவுக்கு பேட்டி தந்து தமிழகம் முழுவதும் பரப்புபவர் வலைப்பதிவாளர் அல்ல, அதனால் ஒரு வெங்காய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதற்கு... ஒரு முக்கிய அரசியல்வாதி. இவரும் இவர் ரசிக கண்மணிகளும் சொல்லும் - தலித்தியத்துக்கு எதிராக மேட்டுக்குடி ஊடகங்கள் இருட்டடிப்பு என்னும் வன்முறை - குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பு கொடுத்து இவர்களை போலவே ஊடகங்கள் இந்த விஷயத்தை ஊதியிருந்தால், அப்படியே சுவாரசியத்தை அதிகமாக்க யூகங்கள் அடிப்படையில், கொலை செய்தவன் என்று வேத்து சாதி ஆள் ஒருவனை லேசாக கோடு காட்டியிருந்தால் என்னவாகியிருக்கும்... ஒன்றும் ஆகியிருக்காது... ஜஸ்ட், ஊடக வன்முறைக்கு மாற்றாக ஊர் வன்முறை கோலம் பூண்டிருக்கும்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


வலைப்பதிவுகளின் நவீன மெக்கார்த்திகளில் ஒருவராக முகமூடியையும் சொல்லலாமா?
 



அ) கீழ்க்கண்ட ஸ்டாண்டர்டு பின்னூட்டங்கள் எழுத விரும்புவோரின் கட் பேஸ்ட் வசதிக்காக ::

இனியனை கொலை செய்தது தலித்தான் என்றாலும் கொலை செய்ய சொன்னது வேறு ஒரு சாதி என்பதை ஜூனியர் விகடன் சொல்லியிருப்பதை பற்றிய உங்களின் கருத்து என்ன? ஊருக்குள் வெற்றிவேல், வீரவேல் என்று எல்லாவற்றையும் நேருக்கு நேர் சந்தித்து திரிந்த அந்த வேற்று சாதி ஆளுக்கு, பின்னாலிருந்து இயக்கி கோழைத்தனமாக ஆள்வைத்து அடிக்கும் வித்தையை புகட்டிய ராமர் கற்றுக்கொடுத்த பார்ப்பனீயத்தை (இங்கு பார்ப்பன ஈயம் என்பது பார்ப்பனர்கள் செய்யும் ஈயம் மட்டுமல்ல... வெள்ளாளர்கள் செய்யும் ஈயமும் ஆகும்) கண்டும் காணாமல் இருந்து மட்டையடிப்பது எதற்காக?

ஆ) என்ன செய்வது என்று தெரியாமல் பஞ்சாயத்தில் பொழுதை கழிக்கும் வலைஞர்களுக்கு உதவியாக ::

ஊர் வன்முறையை விட ஊடக வன்முறை சக்தியில் குறைந்தது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க கட்டுரையாளர் முயல்கிறார். முகமூடியை பற்றி நன்றாக புரிந்து (?!) வைத்திருக்கும் எனக்கு இது போன்ற கட்டுரைகள் ஆச்சரியம் அளிக்காது... ஊர் வன்முறை என்பதிலாவது எழவு ஒரு பத்து இருபது பேர் உயிரை விடுவார்கள்.. அதனால் பாதிக்கப்படும் இளந்தாரிகள் இந்த வன்மத்தை மனதில் கொண்டு அலைவார்கள் என்று "சிறிய" அளவில் ப்ரச்னை முடிந்துவிடும்... ஆனால் ஊடக வன்முறை என்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்... அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன? தமிழனுக்கு உயிரை விட பெரிதானது மானம் என்பதை கருத்தில் கொண்டால் blah blah blah, ஊர் வன்முறையை விட ஊடக வன்முறை கொடூரமானது.. -> அயல்நாட்டிலிருந்து அம்ஜத்கான் (எ) அங்கமுத்து.
 



// வலைப்பதிவுகளின் நவீன மெக்கார்த்திகளில் ஒருவராக முகமூடியையும் சொல்லலாமா? //

என்சாய்...
 



இங்கு ஒரு Anonymous மெக்கார்த்தி இந்திய தேசியத் தடியை எடுத்து சிலரை சாத்தியிருப்பத்தைப் பாருங்கள்.

அதே மெக்கார்த்தி உங்களுடைய இந்த பதிவிலும் சொந்த பெயரில் அதே பட்டியலைப் போட்டிருக்கிறார். ஊகத்தை வாசிப்பவர்களுக்கே விட்டுவிடுகிறேன். நான் சொன்னால், பிறகு அதே மெக்கார்த்தி மன்னிப்பு, ஏழு நாள் கெடு, வழக்கு என்று புதிய தடிகளோடு வருவார்.

உங்களின் முந்தைய பதிவில் குறிப்பிட்ட இந்த "நீங்கள்லாம் "ஆழ்சிந்தனை வட்டம்" கோஷ்டின்னு வெளியில பேசிக்கிறாங்க... " என்று முத்திரை குத்துவது எக்கார்த்தி வகையில் சேரும்?

"எல்லாமே ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளைக் கதை" தான் என்பதை உணரமுடியாத அளவுக்கு நீங்களோ, உங்கள் மெக்கார்த்தி நண்பர்களோ முட்டாள்களில்லை.
 



"கீழ்க்கண்ட ஸ்டாண்டர்டு பின்னூட்டங்கள் எழுத விரும்புவோரின் கட் பேஸ்ட் வசதிக்காக"

உங்கள் பதிவும் இதே மாதிரி ப்ரெடிக்டபிளாக தான் இருக்கிறது.
 



சுந்தரமூர்த்தி, ஆழ்சிந்தனை வட்டம்னு சொல்றதை மெக்கார்த்தியிசம்னு எப்படி நினைக்கிறீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா? ஏன்னா (அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ) நிறைய பேருக்கு ஆழ்சிந்தனையாளர்கள்னு இங்க அடையாளம் இருக்கு.. உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம், ஆனா கொஞ்சம் கீழ இறங்கி வந்து என்ன மாதிரி சாமான்யங்க கிட்ட கேட்டு பாருங்க.. சமூகத்து நடைமுறைய விளக்கி சொல்வாங்க... "அவரோட எழுத்தை பார்த்து வாய் பிளந்து நிற்கிறேன், விக்கித்து திணறுகிறேன், புல்லரிக்கிறது, புளகாங்க்தமாய் இருக்கிறது" அப்படீன்னு எல்லாம் சில இடத்துல வெளிப்படையாவே ஸ்லைடு காமிச்சிருக்காங்க... அதனால ஆழ்சிந்தனை வட்டம்கிறது ஒரு பாராட்டு, குற்றச்சாட்டு இல்லைங்கிறத மொதல்ல சொல்லிக்கிறேன்...

அப்புறம் உங்க்ளுக்கு தெரிஞ்ச மெக்கார்த்திங்கள எல்லாம் சுட்டிகாட்டுங்க.. மெக்கார்த்தியிஸத்தையும் பாராட்டையும் மாத்தி புரிஞ்சிகிட்டு சுட்டாதீங்க... உண்மையிலேயே மெக்கார்த்தியிஸத்த பின்பற்றும் மெக்கார்த்திகளை சுட்டுங்க. நான் லிஸ்டுல இருந்தா என்னையும் சேர்த்துதான்... என்னை பற்றிய விஷயங்களுக்கு விளக்கம் இருந்தா நான் தர்றேன்.. ஆனா "என் நண்பர்கள்"னு (நீங்க நினைக்கிறவங்க) பற்றி என்கிட்ட கேட்டா உங்களுக்கு திருப்தியான அளவு விளக்கம் கிடைக்காமல் போனாலும் போகலாம்.. அவங்க அவங்களுக்கு அவங்க அவங்களே வக்கீல், சரியா?
 



prediction :: முன்கூட்டியே கணிப்பது என்பதாக எடுத்துக்கொள்கிறேன்... அதாவது இனியன் கொல்லப்பட்டது தனிப்பட்ட விரோதமாகவும் இருக்கலாம், சிதம்பரம் விவகாரம் பாட விரும்பும் இடத்தினால்தான் இருக்க முடியும் என்று எல்லாவற்றையும் முன்கூட்டியே கணிப்பதைத்தான் அப்படி சொல்கிறீர்களா பாலசந்தர்... உங்கள் பாராட்டுக்கு நன்றி

(மண்டை காயாதீங்க... சும்மா தமாசுக்குதான்.. உங்க கருத்து புரிஞ்சிது.. நானென்ன UPSC தேர்வுக்கு வினாத்தாளா தயார் பண்றேன்... unpredictableஆ பதிவு தயார் செய்ய.. பதிவுதானுங்களே.. கண்டுக்காதீங்க)
 



தலித் பெயரை சொல்லி நடக்கும் நவீன மெக்கார்த்தியிசம், சுடச்சுட >>

சிறுதாவூர் நில விவகாரம்: விசாரிக்க கமிஷன் நியமனம்

சென்னை, ஜூலை 27: சிறுதாவூர் கிராமத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டனவா என்பதை ஆராய ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

நீதிபதி சிவசுப்பிரமணியம் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்வார் என்று அவர் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் புதன்கிழமை முதல்வர் கருணாநிதி படித்த அறிக்கை:

அண்ணாதுரை 1967-ம் ஆண்டு தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில், சிறுதாவூர் கிராமத்தில் தலித் மக்களுக்கும் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கும் வழங்கிய 53 ஏக்கர் நிலத்தில் அவர்கள் தொடர்ந்து சாகுபடி செய்து வந்துள்ளனர்.

அந்த நிலங்கள் சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பிறகு போலிப் பத்திரப் பதிவுகள் மற்றும் பட்டா மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறுதாவூரில் நிலத்தைப் பறிகொடுத்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தலித் மக்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகள் சில வாரங்களாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், விவசாயிகள் சங்கத்துடனும் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதன்கிழமை காலை 11 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் ஊர்வலமாக வந்து தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து அவர்கள் பறிகொடுத்திருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை என்னிடம் தந்து, அவற்றை மீட்டுத் தரவேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அவர்களது கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, அந்த மக்களின் நிலங்கள் உண்மையிலேயே அபகரிக்கப்பட்டிருக்கிறதா? அவை அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களா? அப்படியானால் அவற்றை ஆக்கிரமித்துக்கொண்டவர்கள் யார்? இந்த நிலம் சம்பந்தமாக உரிமை மாற்றம் எதுவும் செய்யப்பட்டுள்ளதா? அப்படி செய்யப்பட்டிருந்தால் அது செல்லத்தக்கதா? அதிகார துஷ்பிரயோகம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? என்பன போன்ற விவரங்களையெல்லாம் விசாரித்து அறிந்து கொள்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் அவர்களைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.
 



அப்டிபோடு அறுவாள ::

அறிவாலயம், முரசொலி அலுவலகம் ஆகியவை தலித் நிலத்தில் கட்டப்பட்டவை :: திருமா

ஜூலை 26, 2006

திருப்போரூர்:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போது தங்கும் சிறுதாவூர் பங்களா, தலித் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை. அந்த நிலத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சனையை வைத்து ஜெயலலிதாவை பழி வாங்க திமுக அரசு முயல்வதாக குற்றம் சாட்டினார்.

சிறுதாவூரில் சசிகலாவால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் தலித்களின் நிலத்தை தனது கட்சியின் 2 எம்எல்ஏக்களுடன் சென்று பார்வையிட்டார் திருமாவளவன். பின்னர் சிறுதாவூர் கிராம பாலாட்டம்மன் கோவில் அருகே கூடியிருந்த மக்களிடம் அவர் பேசுகையில்,

ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் 53 ஏக்கர் நிலத்தை உடனடியாக மீட்டு கொடுக்க மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை சச்சரவு வேண்டாம். தலித் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

பிரச்சனைக்குரிய இந்த இடத்தில் கொட்டகை போடுவது என்ற தேவையில்லாத செயலில் கிராம மக்கள் ஈடுபட வேண்டாம். படிப்படியாக போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த நிலம் உங்களுக்குக் கிடைக்க எங்கள் கட்சி குரல் கொடுக்கும். இதற்காக கிராம மக்கள் சென்னையிலோ, உள்ளூரிலோ போராட்டம் நடத்தினால் அதற்கு எங்களுடைய கட்சி சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி வங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இது பற்றி சட்டமன்றத்தில் பேசுவார்கள்.

அதற்காகத்தான் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த இடத்தை பார்வையிட்டு சிறுதாவூர் தலித் மக்களை சந்திக்க வந்தோம் என்றார்.

இந்த விவகாரத்தில் திருமாவளவன் மிக ஆழ்ந்த அமைதி காத்து வந்தது குறிப்பிடத்தக்கது. நிலப் பிரச்சனையை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கையில் எடுத்துக் கொண்டதையடுத்து ஓடி வந்துள்ளா திருமாவளவன்.

திருமா பேட்டி:

இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

சர்ச்சைக்குரிய சிறுதாவூர் நிலத்தை நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். எனக்குக் கிடைத்த ஆவணங்களின்படி, தலித் மக்களுக்குச் சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை ஆக்கிரமித்து ஜெயலலிதா தங்கும் மாளிகை கட்டப்படவில்லை.

குறிப்பிட்ட அந்த இடத்திற்கும், ஜெயலலிதா தங்கும் மாளிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.மாளிகையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வேலியைத் தாண்டித்தான் அந்த நிலம் உள்ளது.

தேவையில்லாமல் ஜெயலலிதா மீது பொய்யான புகார்களைக் கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம், அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
 



பக்கத்துல இருக்கிற அந்த அண்ணாசாமி டயலாக்க எடுத்துட்டு இந்த பதிவை போட்டிருக்கனும். கருத்து சுதந்திரத்த பாதுகாக்க ஆடிய ஆட்டமே மெக்கார்த்தியிசம்தான்.
குஷ்பு விஷயத்த மறந்துட வேணாம்.
 



முகமூடி, இந்த மாதிரி 'சின்ன' விஷயங்களை எப்படி ஊதி பெருசாக்குகிறீர்கள். கொஞ்சம் டிரெய்னிங் தந்தால் நானு, ஆழ்சிந்தனை வட்டத்தில் என்னை ஐக்கியபடுத்திக் கொள்வேன்
 



// பக்கத்துல இருக்கிற அந்த அண்ணாசாமி டயலாக்க எடுத்துட்டு இந்த பதிவை போட்டிருக்கனும். கருத்து சுதந்திரத்த பாதுகாக்க ஆடிய ஆட்டமே மெக்கார்த்தியிசம்தான். குஷ்பு விஷயத்த மறந்துட வேணாம். //

வாங்க அனானி... அண்ணாசாமி கருத்த எடுத்துவிட்டுத்தான் இந்த பதிவு வந்திருக்க வேண்டுமா? ஏன்? இப்பதிவில் எங்காவது யாருடைய கருத்தாவது தப்பு, என் கருத்துதான் சரி என்று சொல்லப்பட்டிருக்கிறதா? இப்பதிவில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஒரே குறிப்பு தருமியுடையது.. ஏன் அவருடையது சுட்டப்பட்டது?

தருமி படித்தவர், அனுபவமும் முதிர்ச்சியும் கொண்டவர். சமூகத்தின் பலதரப்பட்ட மக்களை சந்தித்து பழகும் வாய்ப்பு கொண்டவர். அவருக்கே "சொந்த காரணுங்களுக்காக கொல்லப்பட்ட இனியன் ஒரு தலித், ஒடுக்கப்பட்டவன் என்பதாலேயே அவன் கொலை கூட அலட்சியம் செய்யப்படுகிறது" என்ற திருமாவின் வாதம் மனக்குமுறலாகவும் மனதில் தைக்கும் ஒரு விஷயமாகவும் படுகிறது என்றால் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டும், வெறியும் உணர்ச்சியும் தலையில் வைத்து, அது கட்டுக்கடங்காமல் போய் சமூகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்த ஒரு சின்ன தீப்பொறி போதும் என்ற நிலையில் அலையும் பாமர இளைஞர்களை இந்த மாதிரி பேட்டி எப்படி போய் சேரும் என்பதை சுட்டிக்காட்டவே.. மற்றபடி நீங்கள் வேறு ஏதாவது கற்பனை செய்தால் அது உங்கள் கலர் கண்ணாடியின் பாதிப்பு...

கருத்து சுதந்திரத்துக்காக ஆடிய ஆட்டமும் குஷ்பு விவகாரமும் மெக்கார்த்தியிசமா? உணர்ச்சிவசப்பட்டாச்சி, ஏதையாவது சொல்லியே ஆவணும் சரி, அதுக்காக இப்படியா? எக்குதப்பா என்ன வேணா போட்டு தாக்குறதா? குஷ்பு விவகாரம் & மெக்கார்த்தியிசம் இரண்டும் mutually exclusive to each other அண்ணாத்தே.

உங்கள சொல்லியும் தப்பில்ல... பெரிய ஆளுங்க பலருக்கே மெக்கார்த்தியிசம்னா என்னன்னு குழப்பம் இருக்க சொல்ல, நீங்க என்ன பண்ணுவீங்க... "தில்" அப்டீன்னு ஒரு படம் பாத்திருப்பீங்க... அதுல விக்ரமுக்கும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் தனிப்பட்ட ப்ரச்னை இருக்கும்.. ஒரு தடவை ஒரு சாதி கூட்டத்துல பந்தோபஸ்துக்கு நிக்கிற இன்ஸ்பெக்டர்கிட்ட விக்ரம் நியாயம் கேக்க போகும்போது இன்ஸ்பெக்டர் விக்ரம அடிச்சிடுவாரு.. உடனே விக்ரம் கட்சி துண்ட தலையில சுத்திகிட்டு "தலைவா, நிறுத்து தலைவா. இவன் நம்ம சாதிய பத்தி கேவலமா பேசுறான் தலைவா"ன்னு ஒரு சவுண்டு.. உடனே கூட்டம் கும்மியடிச்சி இன்ஸ்பெக்டருக்கு பொங்கல் வச்சிருவாங்க... இதுக்கு பேர்தான் அண்ணை மெக்கார்த்தியிசம்...

இப்ப சிதம்பரம் விவகாரத்தையே எடுத்துக்கோங்க... கருவறை நுழையும் போராட்டம்னே செய்யலாம்.. ஆனா, எக்குதப்பா அது backfire ஆகி அதனால ஒரு பத்து ஓட்டு நமக்கு வராதுன்னு தோன்றினால் கூட செயலே படாமல் இருந்துவிடுவார் செயல்படுத்த வேண்டிய தலைவர்... அதனால அடிப்பொடிங்க என்ன செய்றாங்க, தமிழ் கோஷத்தை உள்ள நுழைக்கிறாங்க... தமிழுக்காக போராடின மாதிரியும் ஆச்சி, அதே நேரத்துல நாளைக்கே எதுனா பேக்ஃபயர்னாலும், தமிழ்நாட்டில் தமிழுக்கு இந்த கதின்னு யார் மீதாவது பழிய போட்டு எஸ் ஆகிடலாம்...

இன்னிக்கி திருமா சிறுதாவூர் நிலத்த பற்றி "ஆய்வு" செஞ்சி கொடுத்த அறிக்கைய படிச்சிருப்பீங்க... பத்திரிக்கைகள் அந்த செய்திக்கு என்னன்னமோ தலைப்பு தர்றாங்க.. என்ன பொருத்த வரை நல்ல தலைப்பு "தலித்தியம் விற்பனைக்கு"

தனிப்பட்ட அஜெண்டாவை நிறைவேற்றிக்கொள்ள, பத்திரிக்கையில் படமும் செய்தியும் வந்து புகழ் பெற சாதியையும் மொழியையும் துணைக்கு அழைத்து கழுதை ஊர்வலமும் தமிழ்நாடு கோர்ட்டில் எல்லாம் கேஸும் போட்டு ஆபாசமாக கோஷம் போடுபவர்களை சொல்ல பயன்படுத்தும் பட்டத்தை அவங்களுக்கு தருவீங்களா, இல்ல அத சுட்டிக்காட்டிய எனக்கு தருவீங்களா? அந்த பாஸிஸ செயலை விமர்சித்தது எனக்கு திருமா மீது இருக்கும் தனிப்பட்ட அஜெண்டா காரணமாக என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் வாயால் சிரிக்க முயற்சிக்கிறேன். அதுவும் இல்லாமல் என் செய்தி தரும் பாதிப்பும் திருமா பேட்டி தரும் பாதிப்பும் என்ற நினைப்பு சுகமானது.. துரதிர்ஷ்டவசமாக, சமூக நலனை கருத்தில் கொண்டால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று I can only wish...
 



// முகமூடி, இந்த மாதிரி 'சின்ன' விஷயங்களை எப்படி ஊதி பெருசாக்குகிறீர்கள். கொஞ்சம் டிரெய்னிங் தந்தால் நானு, ஆழ்சிந்தனை வட்டத்தில் என்னை ஐக்கியபடுத்திக் கொள்வேன் //

எற்கனவே ஊதி பெருசாக்குகிறார்கள்னு சொல்லி, அந்த வாக்கியமே பயங்கரமாக ஊதி பெரிதாக்கப்பட்டு ஒருத்தர் பட்ட பாடு தெரியாதா? அப்புறமும் இப்படி கேட்க எப்படி ஒரு தைரியம்?
 



/எற்கனவே ஊதி பெருசாக்குகிறார்கள்னு சொல்லி, அந்த வாக்கியமே பயங்கரமாக ஊதி பெரிதாக்கப்பட்டு ஒருத்தர் பட்ட பாடு தெரியாதா? //

தயவு செய்து அந்த பாதிக்கபட்டவரின் சுட்டியை தந்தால் அதையும் படித்து விட்டு மிக ஆழ் சிந்தனையாளன் ஆகிறேன்.
 



கால்கரிக்காரரே...

அந்த சுட்டி இதோ..

www.thedmk.org

இதிலே மேட்டரு என்னான்னா ஊரிலே போற வர்றவங்களையெல்லாம் ஜாதியை சொல்லி அந்த பெரிய மனுஷன் திட்டும். ஆனால், பாவம் இ.வி.கே.எஸ். இளங்கோவன், பேச்சு வாக்குல சொன்ன மேட்டரை 'ஊதி' பெருசாக்கிட்டாய்ங்க. அதுக்கு இணைய கொள்ளை பரப்பு செயலாளர் வேற டாங்கு டக்குன்னு குதிச்சாரு.

என்ன போங்க. நான் எல்லாரையும் திட்டுவேன். என்னைய யாரும் திட்ட கூட நினைக்க கூடாது அப்படீன்னு நவீன பகுத்தறிவுத்துவம்பத்தி உங்களுக்கு தெரியாதா?!
 



// நவீன பகுத்தறிவுத்துவம்பத்தி உங்களுக்கு தெரியாதா?!
//

நன்றி மாயவரத்தான்,
புரிந்தது இப்போ
நம்ம இனமானத் தலீவர் ஈயத்தைப் பற்றி பேசுவாரு ஆனா அந்த ஈயத்தை உருக்கிற ஊதுகோலைப் பற்றி பேசினால் மலை எறிவிடுவாரு.

இந்த ஊதுற விஷயத்தை பேசினதே பகுத்தறிவு தந்தையின் பேரன் தானே
 



முகமூடி, பிற்போக்குகளை கண்டு பயப்படாதீர்கள். அவை அவ்வப்போது வந்து கண்டதையும் உளறிக்கொண்டுதான் இருக்கும். உங்களுக்கு அறிவு என ஒன்று இருப்பதற்கு ஆதாரமாக நீங்கள் கடைபிடித்து வரும் நிதானத்தைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.
 



aka அப்படீன்னா என்ன ?
 



சரி, உங்க கருத்து ??