<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மணியம்மையாக குஷ்பு


பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 'பெரியார்' படத்தில் மணியம்மையாக குஷ்பு நடிக்கவுள்ளார். மோகமுள், பாரதி ஆகிய படங்களை உருவாக்கிய ஞானராஜசேகரன்.ஐ.ஏ.எஸ்., தற்போது பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார். பெரியார் வேடத்தில் சத்யராஜும், பெரியாரின் மனைவிகளான நாகம்மை மற்றும் மணியம்மை ஆகியோராக மலையாள நடிகை கீது மோகன்தாஸ் மற்றும் குஷ்பு ஆகியோரும் நடிக்கவுள்ளனர். முன்னதாக மணியம்மை வேடத்தில் நடிக்க ஸ்னேகாவை அணுகியபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது - தட்ஸ்தமிழ் செய்தி

இந்த செய்தி வெளியானதும் பெரியார் திடலில் குஷ்பு எதிர்ப்பு விழா நடந்தது. அதுபற்றிய நமது தினமூடி நிருபரின் லைவ் ரிலே ::

நடிகை சினேகா :: இந்த கேரக்டரை நான் ஏன் ரிஜக்ட் பண்ணிச்சுன்னு என் வீட்டு முன்னாடி ஒரே கூட்டம்... நிறைய பேரு ப்ரூம்ஸ்டிக் எல்லாம் வச்சி நாய்ஸ் கொடுக்கறாங்க... (கண்ணை துடைத்துக்கொள்கிறார்) எனிக்கும் மணி மதர் மாதிரி நடிக்கணும்னு ரொம்ப ஆசைதான்... ஆனா புதுப்பேட்டையில் விபச்சாரியா நடிச்சிட்டு மதர் கேரக்டர்ல நடிச்சா உன் மூஞ்சிய ஷேப் மாத்திருவோம்னு டமிள் டாலிபான்ஸ்னு ஒரு க்ரூப்கிட்ட இருந்து கோழி ப்ளட்ல எழுதி லெட்டர் வந்ததுல அப்பா அப்செட் ஆயிடுச்சி... அதான் நடிக்கில... நீங்களே சொல்லுங்க, என் மேல எதுனா தப்பா (அழுகிறார்)

வாலி ::
குஷ்பு, உனக்கு தேவை money அம்மா,
அதற்கு கிடைத்தது எங்கள் மணியம்மையா?
(திரும்பி கலைஞர் சிரிக்கிறாரா என்று பார்க்கிறார், சிரிக்கிறார் என்று தெரிந்ததும்...)
கற்பு மேட்டரில் தமிழகமே பற்றி எரிந்தபோது
உன் மூடுமந்திரத்தால் எங்களுக்கு காட்டினாய்
உன் ராசதந்திரம்
(கைதட்டல்)
உன்
சாணக்கியத்தனத்தை சந்திக்க முடியாமல்
தடுமாறியது சூர்ப்பனகைகளின்
அயோக்கியத்தனம்
(பலமான கைதட்டல்)

டாக்டர் அய்யா :: மேடையில ஏறுவதற்கு முந்தி நிருபர் கூட்டத்துல இருந்து "கூட்டத்துக்கு தாமதமா வந்தா மன்னிப்பு கேட்பாரா அய்யா"ன்னு ஒரு குரல் வருது... அயோக்கியப்பயலே, எந்த கட்சி பத்திரிக்கைகாரன்டா நீ... (கூல்டவுன் ஆனவராக) ஒரு சினிமா இசைவட்டு நிகழ்ச்சியில கலந்துக்க போயிருந்தேன்.. வழக்கம் போல இந்த சினிமாக்காரனுங்க லேட் பண்ணிட்டானுங்க.. சினிமாக்காரனுங்க புத்தி என்னிக்கி சரியா இருந்திருக்கு... இந்த வாரம் மட்டும் நான் கலந்துகிட்ட பதிமூன்றாவது சினிமா இசை வட்டு வெளியீட்டு விழா இது... ஒரு விழாவாவது நேரத்துக்கு நடக்கணுமே... எல்லா நிகழ்ச்சியிலும் சொன்னத தவறாம இங்கயும் சொல்றேன்.. சமுதாயத்தை கெடுப்பதே சினிமாதான். அதை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்... குறிப்பாக இளைஞர்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்... ம்.. சொல்ல மறந்துட்டனே.. இந்த விழாவுக்கு தம்பி திருமாவும் வந்திருந்தார் (பலமான கைதட்டல்) இந்த விழாவ பத்தி சொன்னேன்.. இனமான உணர்வுல துடிச்சார்... ஆனா அன்புத்தோழி படத்துக்கு டப்பிங் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைய சொல்லி இங்க வர முடியாததற்கு அண்ணன் கருணாநிதி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அன்னை மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவுக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்கிறேன். குஷ்புவுக்கு மணியம்மைன்னா யாருன்னு தெரியுமா? இல்லை குஷ்புதான் தமிழ் நடிகையா... குஷ்பு தோட்டத்துக்கு வந்து என்ன சந்திச்சி மன்னிப்பு கேட்டா இந்த படம் ஒரு ப்ரச்னையும் இல்லாம வெளிவரும்.. இல்லைன்னா அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கி.வீரமணி :: தமிழ் பெயரில் விழா எடுத்து அதற்கு அப்போதைக்கு முதல்வராக இருப்பவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் பெரியார் திடலுக்கு வாடகை கூட வசூல் செய்யாமல் இன உணர்வோடு நடக்கும் ஒரே கட்சி திராவிடர் கழகம்தான் என்பது அனைவரும் அறிந்ததே (கைதட்டல்) இந்த விழாவில் கலந்து கொள்ள 15 மைல் கடந்து வந்த கருணாநிதிக்கு 15 கிலோ எடையில் ஒரு பரிசு வழங்கியிருக்கிறோம்... கடவுளுக்கு சமமான மணியம்மை அவர்களின் வேடத்திற்கு கற்பு பற்றி கருத்து தெரிவிக்கும் குஷ்புவை நியமித்திருப்பது மணியம்மையின் புனிதத்தன்மையை கெடுக்கும் செயல்... அதுவும் பெரியாருக்கும் அம்மைக்கும் கோயில் அமைக்கலாம் என்று ஒரு நபர் குழு முடிவு செய்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கும் ஞானசேகரனின் ஜாதி புத்தியால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த மனவருத்தம் அடைந்திருக்கிறோம்...

கருணாநிதி :: வீரமணி குடும்பத்தினர் மனவருத்தம் அடைந்திருக்கின்றனர் என்பது தெரிந்து வருந்துகிறேன்... வீரமணியின் குடும்பம் மிகவும் பெரியது. அத்தனை பேருக்கு மனவருத்தம் அளித்து தமிழ்கத்தில் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த படத்தை தடை செய்து இந்த இடத்திலேயே சட்டத்திருத்தம் கொண்டு வருகிறேன். (கைத்தட்டல் அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகிறது)

*

திடலுக்கு வெளியே விளக்குமாறு, கறுப்பு கொடி விற்பனை அமோகம்.. முப்பது நாட்களில் முப்பது கோர்ட்களில் கேஸ் போடுவது எப்படி? என்ற புத்தகம் சூடாக விற்பனையாகிறது..

கழுதையுடன் வந்திருக்கும் கழுதை கோபால் சோகமாக :: என்னங்க நம்ம பஞ்ச கல்யாணிக்கு வேலை தராமயே கூட்டத்த முடிச்சிட்டாங்க... போன தடவை தமிழ் கல்ச்சர் கூட்டத்துல கலந்துகிட்டதுல இருந்து நம்ம கல்யாணி கல்ச்சர் கூட்டம்னா சுகுராயிட்றா... அழுக்கு பொதிய சுமந்து சுமந்து மிட் லைஃப் க்ரைசிஸ்ல இருக்கறவளுக்கு மனுச பொதின்னா ஒரு உற்சாகம் வரத்தானுங்களே செய்யும்.. நானும் நாலு காசு பாத்தேன்... என்னவோ போங்க.. ஒரு கழுதை ஊர்வலம் கூட இல்லாம என்னா எதிர்ப்போ...

இதற்கிடையில் தினமூடி நாளிதழ் கருத்து கணிப்பை ஆரம்பித்து வைத்து இந்த பிட் நோட்டீஸை விநியோகித்துக்கொண்டிருந்தது

"மணியம்மையாக குஷ்பு" விஷயம் செல்லப்போகும் திசை ::
கற்பு பற்றி கருத்து சொன்ன குஷ்பு மணியம்மையாக நடிக்க அருகதை இழக்கிறார் கற்பு பற்றி கருத்து சொன்ன குஷ்பு அந்த பாவத்தை கழுவவே மணியம்மையாக நடிக்கிறார்   



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முகமுடி வழக்கம் போல கலக்கல்.
 



எல் எம் ஏ ஓ!
 



ம் நடத்துங்க நல்லாயிருக்கு
 



முகமூடி,

நீங்கள் பலே ஆளுப்பா :-))))
 



மணியம்மை பாத்திரம் என்ன பாவங்களை கழுவும் அமிலமா? அதில் நடித்தால், செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடுமா என்ன? பெரியாரின் 2 மனைவிகளில் ஒருவராக இருப்பது தான் அதற்குண்டான தகுதியா? நல்லாயிருக்கே கதை?
 



//வீரமணியின் குடும்பம் மிகவும் பெரியது. அத்தனை பேருக்கு மனவருத்தம் அளித்து தமிழ்கத்தில் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்//

:)
 



நீர் ஏன் முகத்தை மறைத்துக் கொண்டு போஸ்ட் போடுகிறீர்கள் என்று இப்போதுதான் விளங்குகிறது :-)
 



//எனிக்கும் மணி மதர் மாதிரி நடிக்கணும்னு ரொம்ப ஆசைதான்... ஆனா புதுப்பேட்டையில் விபச்சாரியா நடிச்சிட்டு மதர் கேரக்டர்ல நடிச்சா உன் மூஞ்சிய ஷேப் மாத்திருவோம்னு டமிள் டாலிபான்ஸ்னு ஒரு க்ரூப்கிட்ட இருந்து கோழி ப்ளட்ல எழுதி லெட்டர் வந்ததுல அப்பா அப்செட் ஆயிடுச்சி... //

ஓக்கே...ஓக்கே...
 



பாரதியார் படத்தை சொதப்பினார்கள்.சம்பந்தமில்லாமல் வவேசு ஐயர் ஒரு வழ வழா கொழ கொழா என்று பாரதியார் கூறியது போன்ற வசனங்கள் பாரதியாரின் கருத்தாகப் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்கிற நோக்கத்தில் புகுத்தப்பட்டது.

ராமசாமி நாயக்கரால் விளைந்த நன்மை யூரோப்பிய சமத்துவ கருத்துக்கள் தமிழகத்தில் தைரியத்துடன் பரவியதுதான்.

தற்போதைய சமூக, அரசியல் சூழ்நிலையில் எந்த அளவு நேர்மையாக இந்த படத்தை எடுக்கமுடியும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. இந்த வரலாற்று மனிதரை கடவுளளவுக்கு உயர்த்திப் பிடிக்கும் விஷயம்தான் நடக்கும் என்று தோன்றுகிறது. அவரிடமிருந்த நல்ல விஷயங்களோடு, அவரிடமிருந்த வியாபார நோக்கம், ஜாதி வெறி, பணத்திற்காகக் கொள்கையைத் தளர்த்திக் கொள்வது, பகுத்தறிவின் பெயரில் பகுத்தறிவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தது, எக்ஸட்ரா எக்ஸட்ரா எக்ஸட்ரா பற்றியெல்லாம் கூற வேண்டுமானால் நைஜீரியாவில்தான் இந்த படத்தை எடுக்க முடியும்.
 



மணியம்மையாக நடிப்பவர் பற்றித் தகவல் கொடுத்தீர்கள். சந்தோஷம். வீரமணியாக நடிக்கப் போவது யார்? மணியம்மை என்றவுடன் உடனே நமக்கு ஞாபகம் வருவது வீரமணிதானே. ஒருவேளை அந்த அளவு நடிக்க யாராலும் முடியாது என நினைத்து அதை விட்டுவிடுவார்களோ?
 



இப்ப குஷ்பூவை அந்தப் படத்துல நடிக்க விடாம பண்ணணும்!

அதுக்குத்தானே தன்மானச்சிங்கங்களை உசுப்பேத்துறீங்க!!

ம்ம்ம்... நடத்துங்க!

:))
 



டாக்டர் அய்யா part is too good. Here after you must be called as "Master of Parody".

-Walkingstick
 



முகமூடி,

தமிழர்களின் தலை விதியை நிர்ணயம் செய்யும் விஷயத்தில், தினமூடி நிருபர் ஏன் காங்கிரஸ், பா.ஜ.க, விஜயகாந்த், வை.கோ போன்ற பெரும் தலைவர்களின் கருத்துக்களை ஏன் கேட்கவில்லை அல்லது அவர்களின் கருத்துகள் எதனால் தனி நபரால் தனிக்கை செய்யபட்டது என்று அரசியல் அரங்கில் எழுந்துள்ள கேள்விக்கு சம்பந்தபட்டவர்கள் வடையை சாரி விடையை அளிப்பார்களா ?

இப்படிக்கு
பொதுஜனம்
 



//(திரும்பி கலைஞர் சிரிக்கிறாரா என்று பார்க்கிறார், சிரிக்கிறார் என்று தெரிந்ததும்...)//

:-)
 



மணியம்மையாக குஷ்பு :: 25-06-06 ஜீனியர் விகடனில் தி.க போட்ட பிள்ளையார் சுழி வெளிவந்திருக்கிறது... கடந்த கால "வரலாற்றின்" சுவட்டில், போகப்போக நடக்கும் கூத்துக்களை இங்கு பதிவு செய்துகொள்வதாக உத்தேசம்...

ஜூ.வி : கொதிக்கிறது தி.க. - மணியம்மையாக குஷ்புவா?

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துப் படமெடுக்கலாம் என்றால், தமிழ்த் திரையுலகத்தினர் பிடரியில் கால்பட ஓட்டமெடுப்பார்கள். அதற்கு ஒரே காரணம், கல்லாப் பெட்டி நிறையாது என்பதுதான். ஆனால், அதையும் தாண்டி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ‘பாரதி’ என்ற சினிமாவாக எடுத்து, அதில் வெற்றியும் கண்டவர் இயக்குநர் ஞானராஜசேகரன்.

அடுத்தகட்டமாக, பகுத்தறிவுக் கொள்கையின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாகச் சித்திரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்குக் கைகொடுக்கும் விதமாக நாடெங்கும் இருக்கும் திராவிடர் கழகத்தினரும் பகுத்தறிவு ஆர்வலர்களும் தங்களால் முடிந்த மட்டும் நிதியைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் வேடத்தில் நடிக்க சத்யராஜும், மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவும் தேர்வு செய்யப்பட்டி ருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாக, திராவிடர் கழகத்தினர் நெஞ்சு கொதித்துப் போயிருக்கிறார்கள்.

‘‘மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்புவா? பெரியாருக்கு இன்னொரு கரமாக வாழ்ந்த மணியம்மையின் கேரக்டரில் நடிக்க ஒரு தமிழச்சிக்கூடவா கிடைக்கவில்லை? ஏற்கெனவே சகிக்க முடியாதபடி பல சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் குஷ்புவை நடிக்க வைத்தால், அது மணியம்மையின் சிறப்பை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே இருக்கும்’’ என்கிறார்கள், பெரியார் ஆர்வலர்கள் பலரும்.

அதிலும் தி.க&வின் வலுமிகு கோட்டையாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்ட மண்ணில், ‘குஷ்புவை நீக்கு’ என்ற கோஷம் பலமாகக் கிளம்பி இருக்கிறது. பாரம்பரிய தி.க&காரரும் ‘தஞ்சை தமிழ் இயக்க’ செயலாளருமான கு.திருமாறன் இதுபற்றி ஆவேசம் மேலிட நம்மிடம் பேசினார்:

‘‘உலகம் போற்ற வாழ்ந்த வெண் தாடி வேங்கையைப் பற்றி இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறதே என ரொம்பவே சந்தோஷப்பட்டோம். ஆனால், அதையெல்லாம் குலைத்துப்போடுகின்ற விதத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்புவை நடிக்கவைக்கப் போவதாக செய்திகள் கிளம்பி இருக்கின்றன. பெரியாரின் நிழலாக வாழ்ந்த மணியம்மையை இதற்கு மேல் எப்படி கேவலப்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்றுவரை அரைகுறை ஆடைகளில் கவர்ச்சிக் கன்னியாக வலம்வந்த குஷ்புவை மணியம்மை கேரக்டருக்குப் பேசி முடித்திருக்கிறார்கள். குஷ்புவைப் போல்தான் மணியம்மை இருப்பாரோ என்ற எண்ணம் இப்போதைய தலைமுறையிடம் உண்டாகி விடுமோ என்ற பதற்றத்தில்தான் இப்படி ஆவேசப்படுகிறோம். தலைவருக்கும் (கி.வீரமணி) இதுபற்றி தனியே கடிதம் எழுதி இருக்கிறோம். எங்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு பெரியார் படத்திலிருந்து குஷ்புவை நீக்க வேண்டும். இதை அவசியம் அவர் செய்வார்’’ எனச் சீறலாகச் சொன்னார் கு.திருமாறன்.

பெரியார் படத்துக்கான நிதி திரட்டலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த திராவிட கழகத்தவர்களான இளங்கோவன் மற்றும் முத்துக்குமார், ‘‘ஐயாவைப் பற்றிய படத்தில் குஷ்புவை நடிக்கவைக்க எப்படி துணிச்சல் வந்தது? கற்பு பிரச்னை அதைத் தொடர்ந்து கிளம்பிய அரசியல் ரீதியிலான சர்ச்சை போன்றவற்றால் தமிழர்களிடம் தனக்கான இமேஜைத் தொலைத்துவிட்ட குஷ்பு, அதையெல்லாம் சரிக்கட்டும் விதத்தில் ‘பெரியார்’ படத்தில் நடிக்க வலியவந்து ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். குஷ்புவின் உள்நோக்கத்தைப் படக்குழுவினர் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

கற்பு என்னும் கால்கயிற் றால் தமிழகப் பெண்கள் முடங்கிக்கிடந்த நிலை கண்டு பொறுக்க முடியா மல்தான் தந்தை பெரியார், ‘கற்பு நெறிகளை அறுத் தெறிய வேண்டும்’ என முழங்கினார். ஆனால் குஷ்புவின் கற்பு முழக்கமோ வேறு ரகமானது. தமிழகப் பெண்களை தடம் மாறத் தூண்டும்படியானது. ‘திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பம் ஆகாமலும், பால்வினை நோய் வராமலும் ஒரு பெண் தற்காத்து கொள்ளவேண்டும்’ என்பதுதான் குஷ்புவின் வேதாந்தம். பெரியாரின் படத்தில் நடிப்பதன் மூலம் தன் கற்பு கலாசார முழக்கத்துக்கு இன்னும் வலு சேர்க்கப் பார்க்கிறார் குஷ்பு.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க பெரியாரின் வழிவந்தவர்கள் சாதாரண சினிமா ரசிகர்கள் இல்லை. அண்மையில் தஞ்சைக்கு வந்த வீரமணி ஐயாவின் கவனத்துக்கும் எங்கள் ஆதங்கத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம்’’ என்றார்கள் படபடவென.

தி.க&வின் மாநில இணைப் பொதுச் செயலாளரான குண சேகரனைச் சந்தித்து இதுகுறித்துக் கேட்டோம். ‘‘பெரியார் வாழ்க்கை குறித்த படத்துக்குப் பெரிய அளவில் நிதி திரட்டிக் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம். இந்த நேரத்தில் குஷ்புவை நீக்கும்படியான சர்ச்சைகள் எழுந்துள்ளது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட படக்குழுவினரிடம் நான் இதுகுறித்துப் பேசுகிறேன்’’ என்றார்.

படத்தின் இயக்குநரான ஞானராஜசேகரனிடம் விளக்கம் கேட்டோம்.

‘‘என்னுடைய நான்கு வருடங்களுக்கும் மேலான முயற்சிதான் இந்தப் படம். அது இப்போதுதான் கைகூடப் போகிறது. இந்நிலையில் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. எந்தெந்த கேரக்டருக்கு யார் யார் பொருந்துவார்கள் என கம்ப்யூட்டர் மூலம் நாங்கள் ஒப்பீடு செய்து பார்த்தோம். அப்போது பெரியார் பாத்திரத் துக்கு சத்யராஜும், மணியம்மை பாத்திரத்துக்கு குஷ்பு வும் சரிப்பட்டு வந்தார்கள். உடனே இதுபற்றி சொல்லி சத்யராஜை புக் செய்து விட்டோம். ஆனால், குஷ்பு தரப்பிடம் இன்று வரை எதுவும் பேசவில்லை. இந்நிலையில் புதி தாக இப்படி ஒரு பிரச்னை வந்துள்ளது. பலரும் இது பற்றி எங்களுக்கு கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் முழுமையாகக் கவனத்தில் கொண்டு, மணி யம்மை பாத்திரத்துக்குத் தக்க நாயகியைத் தேர்ந்தெடுப்போம்’’ எனச் சொன்னார் ஞானராஜசேகரன்.
 



ஆட்டோ அனுப்பி இருக்கேன்...ஆனா ஆளுங்களுக்கு சில்லறை கொடுக்க மறந்திட்டேன்...

வேலை முடிஞ்சு அவங்க போகும்போது ஒரு ஒன்னேமுக்காரூவா கொடுத்திடுங்க...

அப்படியே அந்த தடிகளை எல்லாம் கலெக்ட் செஞ்சுக்கிட்டீங்கன்னா வீட்ல சுடுநீர் போட உதவும்..
 



தங்களின் பதிவு வேடிக்கையாக இருந்தாலும் வேதனையான உண்மை.குஷ்பு விவகாரத்தின்போது தி.க மவுனம் சாதித்தது கேவலமான விஷயம்.உண்மையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதுதான் பொருத்தமான விஷயம்.ஆனால் ஏற்கனவே பாரதி பற்றி ஒரு சொதப்பலான படம் கொடுத்த ஞானராஜசேகரன் பெரியாரை என்ன பாடுபடுத்தப்போகிறாரோ?குஷ்பு நடிக்க தி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தால் தி.க.வும் ஒரு ஆணாதிக்க இயக்கம்தான் என்பது உறுதியாகும்.போகிறபோக்கில் MUSE பெரியார் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
 



Why not give that role to be played by Kushboo to Namitha.
If not Namitha my suggestion is
try Raki Sawant or Rahasya or
Teja Sri for that role.
 



மீண்டும் குஷ்பூவா???
 



அப்பப்பா, இந்த தமிழனுங்களுக்கு சினிமா படத்த நிஜ வாழ்க்கையோட கலந்து கொழப்பறதுல போட்டியா யாருங் வர முடியாதப்பா! இப்ப குஷ்பு நடிச்சா இன்னா, இல்ல அந்த சிநேகாதான் நடிச்சா இன்னா? கைய்ல புடிக்கிற பாட்லு எப்பிடி இருந்தா இன்னா? கிக்கு ஏற்னா சர்தாங்! வேலையப்பாரு. இன்னுங் ஒம்பத்ரெண்டு பெரியாரு பொறந்தாலுங், நம்ம தமிழருங்களுக்கு அறிவே பொறக்காதுப்பா, போ! எனுக்கு தெரிஞ்சி, இந்த படத்துல குஷ்புதாங் நடிக்குனுங். ஏன்னா, மொதல்ல அவங்க பூர்வீக தமிழச்சி இல்ல, ரெண்டாவுது ஒரு இந்துவுங் இல்ல, மூனாவுது அவங்க ஒரு துணிச்சலான சுதந்தர மாடர்ன் கேர்ல். இது மாதிரியான பொன்னுங்களதானப்பா நம்ம பெரியாரு சமூகத்துக்கு தேவன்னு பாடுபட்டாரு. அத உட்டுட்டு, எல்லாங் இன்னுமோ கன்னாபின்னானு ஒளரிகினு கடக்கிறாங்க!
 



// //(திரும்பி கலைஞர் சிரிக்கிறாரா என்று பார்க்கிறார், சிரிக்கிறார் என்று தெரிந்ததும்...)

ROTFL :)
 



டிபிகல் முகமூடி பதிவு. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. நடத்துங்க தல!
 



சரி, உங்க கருத்து ??