<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஆட்டோ பய க்ராப்


வலைப்பதிவர் பெயர்: முகமூடி

வலைப்பூ பெயர்: முகமூடி

சுட்டி(உரல்) : http://mugamoodi.blogspot.com

ஊர்: நாடோடிக்கு ஊர் ஏது உலகம் ஏது, தற்போதைக்கு குப்பை கொட்டி கொட்டி பொறுக்குவது லாஸ் ஏஞ்ஜலீஸ் நகரத்தில்

நாடு: தாய்நாடு இந்தியா ; தற்போதைய நாடு புதரகம் (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நமக்கு நாமே திட்டத்தில்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல் 16, 2005 (சனிக்கிழமை)

இது எத்தனையாவது பதிவு: 158

இப்பதிவின் சுட்டி(url): http://mugamoodi.blogspot.com/2006/06/blog-post_10.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அட, நம்மகிட்டயும் சொல்றதுக்கு ஏதோ விஷயம் இருக்குல்ல என்று தோன்றியதால்

சந்தித்த அனுபவங்கள்: வலையுலகத்தை நான் குமுகாயத்தின் sampling என்பதாக பார்க்கிறேன். சின்னஞ்சிறிய இந்த வலையுலகில் பரந்த நம் சமுதாயத்தின் எல்லாவித குணங்களும் காணக்கிடைக்கிறது... சமுதாயத்தில் நண்பர்களை நாம் தேடிப்பெறுவோம். நம் நண்பர்கள் வட்டத்துக்கு அப்பாற்பட்ட வெளியில் சிந்தனைவாதி, அரசியல்வாதி (அல்லது பைத்தியக்காரன்) இருவரும் இருப்பார்கள், ஆனால் இவர்கள் இருவரிடமும் நேரடியாக நாம் கருத்து பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பம் மிகவும் குறைவே... இங்கு இருவரிடமும் கருத்து பரிமாற்றம் நிகழ்த்தும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது... (இங்காவது போலித்தனம் களைந்து நாம் நாமாக இருப்போம் என்றில்லாமல் இணைய நட்பு என்னும் கற்பனை வாழ்க்கைக்காக இமேஜ் பில்டப் செய்து கடைசி வரை சுயத்தை தொலைப்பவர்களை சந்தித்தது தனி அனுபவம்.)

பெற்ற நண்பர்கள்: அது "இணைய நட்பெனப்படுவது யாதெனில்" என்பதை பொறுத்து... ஒரு சிலர் உண்டு, ஆனால் பெயரை சொன்னால் அதற்கு மேல் அவர்கள் நண்பர்களாக தொடர்வார்களா என்ற யோசனை இருப்பதால் விடு ஜூட்.

கற்றவை: நாம் நாமாக இருப்பது வலையுலகில் கூட மிகவும் சோதனையான விஷயம்தான்...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு (அ) எக்ஸ்டென்ஷியலிஸ சுயதம்பட்டம் : மிகச்சிறிய வயதில் ஞானசம்பந்தர் குறித்து ஒரு பேச்சுப்போட்டியில் திக்கித்திணறி பேசியது புகைமூட்டமாக ஞாபகம் இருக்கிறது. ஐந்தாவது வகுப்பு படிக்குபோது ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக எங்கள் வகுப்பு தமிழாசிரியை என்னை கூப்பிட்டு "தெளிவாக தமிழ் பேசும் காரணத்தால்" ராஜா வேஷத்தில் நடிக்க பணித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி குவியல் புகைமூட்டமாகக்கூட இப்போது ஞாபகத்தில் இல்லை... ஆனால் வசனம் எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு இரு ஒத்திகைகளும் பார்க்கப்பட்ட பிறகு, கட்டியங்காரன் பெண்மையான மென்மை குரலில் பேசுவது நாடகத்துக்கு நல்ல துவக்கமாக இல்லையே என்று "கணீர்" குரல் துவக்கம் வேண்டி என்னிடமிருந்து ராஜா வேஷம் பறிக்கப்பட்டு கட்டியங்காரன் ஆக்கப்பட்டேன்... (ராஜா வேஷம் கட்டியவன் பள்ளி தாளாளரின் சொந்தக்காரன் என்பது எதேச்சையான விஷயம்) "ஏண்டா எப்பவும் போல உச்சஸ்தாயில கத்துனியா, கொஞ்சம் மெதுவா பேசக்கூடாது இப்போ பாரு ராஜாவுல இருந்து காவக்காரன் ஆக்கிட்டாங்க" என்ற குடும்பத்தாரிடம் "அது ஒண்ணும் காவக்காரன் இல்ல, கட்டியங்காரன்" என்று சொன்ன சம்பவத்தை தமிழன்னை எனக்கு ஞானப்பாலூட்டிய முதல் நிகழ்வு என்று ஓவர் பீலா விடலாம். ஆனால் 'ழ', 'ஷ' எல்லாம் இயல்பாவே ஸ்பஷ்டமா உச்சரிக்கிறாங்க பையன், சந்தோஷம்... என்று சொன்ன டீச்சரின் அங்கீகாரம் மட்டுமே நிதர்சனம்.

ஒன்பதாம் வகுப்பில், முதல் தமிழ் மாதத்தேர்வு. நாங்கள் 5 பேர் கூட்டுத்தேர்வு (இதை ஆங்கிலத்தில் காப்பி அடிப்பது என்கிறார்கள்) எழுதியதில் எனக்கு மட்டும் கூட்டணியில் மட்டுமல்ல வகுப்பிலேயே முதன் மதிப்பெண் வந்தபோது கூட்டணி கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆச்சர்யம்தான்... கூட்டணி தர்மத்தை மீறி உள்குத்தாக நான்கு பதில்கள் அதிகம் எழுதிவிட்டேனோ என்று சந்தேகத்தில் மார்க் ஆராய்ச்சி மேற்கொண்டதில் தமிழாசிரியர் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைக்கு எல்லாம் கால் அரை மதிப்பெண்கள் குறைக்கிறார் என்பது அறிய வந்தபோது நான் கையறு நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு காலத்தில் எழுத்துப்பிழை இல்லாமல் மட்டுமல்ல, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் முதற்கொண்டு இலக்கண ரீதியாகவும் இயல்பிலேயே சரியாக எழுத வாய்த்திருந்தது என்பதை நினைத்தால் இப்பொழுது பெருமூச்சுதான் விடமுடிகிறது.

ஆங்கில வழி கல்வி என்று பெயர்தான், ஆனால் தமிழில் பேசினால் அபராதம் என்று சொல்லாத அரசுப்பள்ளி என்பதாலும் ; அம்மாவை மம்மி என்றும் கூப்பிடலாம், அப்பாவை டாடி என்றும் கூப்பிடலாம் என்று தெரியாத குடும்ப சூழலாலும் வீட்டிலும் வெளியிலும் தமிழ்தான் பேச்சு மொழியாக இருந்தது. வாரப்பத்திரிக்கை, மாதப்பத்திரிக்கை, நாவல்கள், காமிக்ஸ்கள், தினசரி என்று சம்பளத்தில் கால்வாசி விதவிதமான அச்சு ஊடகத்தில் செலவழிய தமிழ்தான் படிப்பு மொழியாக ஆனது.

கல்லூரியில் தமிழ்ப்பேரவையின் நிர்வாகியாக (போட்டியின்றி தேர்வு) இருந்தபோது நிர்வாகப்பணியில் செலவிட்ட நேரம் கூட தமிழுக்காக செலவழிக்கவில்லை.. நிர்வாகி கவிதை இல்லாமல் பேரவை மலர் வருவதா என்று மலர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நான் மேடையில் பேசிய சில எதுகை மோனை வாக்கியங்களை மடக்கி மடக்கி கவிதையாக்கி தலைப்பு கொடுத்து நான் மனதார வேண்டாம் என்பதையும் மீறி பிரசுரித்ததை பார்த்திருந்தால் தமிழன்னை கண்ணகியோடு சேர்ந்து மியூசியத்துக்கு போயிருப்பாள். கல்லூரியில் படிக்கும்போது சென்னை தமிழ், கோவை தமிழ், திருநெல்வேலி தமிழ், சாதா தமிழ் என்று பல பாஷையில் பேசும் பாண்டித்யம் பெற்றேன். ஆனால் மணியார்டர் பாரத்தில் "பணம் கிடைத்தது" என்று எழுதுவதுதான் அதிக பட்ச எழுத்துத்தமிழ் என்றானது.


அமெரிக்கா வந்தபிறகு எனக்கு வாய்த்த ரூம்வாசி ஈரான் தேசத்தவன். பின்பு வங்காளன், மஹாராஷ்ட்ரன், தெலுங்கி என்றே காலம் கழிந்து சில வருடங்களுக்கு பிறகே தமிழ் பேசும் நண்பர்கள் கிடைத்தார்கள். அதுவரை வாரயிறுதியில் பொழுது போகாமல் தமிழ் நண்பர்களுக்கு தொலைபேசுவதை தவிர்த்து தமிழில் பேசுவதே அருகிவிட்ட நிலையில் எழுதுவது சுத்தமாக நின்றே போனது...

ஆவி, குமுதம், தினமலர், CNN, BBC போன்ற சம்பிரதாயமான வாசிப்புகளின் இடையில் வேலைக்கும், படிப்புக்கும் தேவைப்படுவதை மட்டும் கூகிளில் தேடி படித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் MBA சம்பந்தமான ஒரு தேடலில் மாட்டியது முதல் ப்ளாக். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தான் விடாமல் CAT பரிட்சையில் தோல்வி அடைவதை சுவாரசியமாக (ஆங்கிலத்தில்) எழுதிக்கொண்டிருந்தார். அவரின் ப்ளாக் ரோலை பிடித்து மேய்ந்ததில் இன்னும் சில சுவாரசியங்கள் கிடைத்தது. எல்லாருடைய முகவரியும் ப்ளாக்ஸ்பாட் என்று முடிந்ததால், ஓ ப்ளாக்ஸ்பாட் என்பதில் பெர்சனம் வெப் தளம் உருவாக்கலாம் போலிருக்கிறதே.. நம்முடையதை இதற்கு மாற்றலாம் என்று கல்லூரி முடித்த காலத்தில் உருவாக்கிய freeservers சைட்டை நோண்டினால் "என்ன நக்கலா, இவ்வளவு வருஷமா எட்டிக்கூட பார்க்காம இப்போ வந்தா... எல்லாம் அழித்து தூக்கி போட்டாயிற்று" என்று அன்புடன் சொல்லியது. அப்புறம் மறுநாளுக்கு மறுநாள் ப்ளாக்கர் புரிபட்டு ஒரு ஆங்கில பூ ஆரம்பித்து தபால்காரனுடன் எனக்கு ஏற்பட்ட பிணக்கு, முந்தா நாள் நான் பார்த்த படம் என்று கிறுக்கிக்கொண்டிருந்தேன்.

ஏதோ ஒரு நாள் கமல் பற்றி தேடும்போது எதேச்சையாக கண்ணில் மாட்டியது வெங்கடேஷின் தமிழோவியம் பதிவு. கீழே பின்னூட்டங்களில் ஏகப்பட்ட திட்டு. முதலில் ஒன்றும் புரியாமல் இப்படி திட்டும் அளவு இந்த கட்டுரை வேறு பக்கங்களில் நீண்டு நாம்தான் படிக்காமல் விட்டுவிட்டோமா என்று பார்த்தால் அது ஒரே பக்கம்தான்... அட எப்படி இந்த கட்டுரையை வைத்து ஜாதி ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறார்கள் என்ற வியப்போடு அப்போதைக்கு விடு ஜூட்...

பின்பு ஒரு சோம்பலான வெள்ளி காலை, பிறந்த ஊர் பற்றி ஏதோ தேடும்போது பியர்லஸ் தியேட்டர் பற்றிய ரஜினி ராம்கியின் குறிப்பை படத்துடன் பார்க்கையில் கிடைத்த சின்ன வயது நினைவுகள் தந்த சந்தோஷம் தீரும் முன் அவரின் நிறைய பதிவுகளை படித்து அப்படியே நூல் பிடித்து நிறைய வலைப்பூக்களை மேய்ந்து, தமிழில் எழுதுவது எப்படி என்பதை ஆராய்ந்து ஒரு தமிழ் ப்ளாக் ஆரம்பித்து, தமிழ் ஃபான்ட் மேப்பிங்கை பிரிண்ட் அவுட் எடுத்து மானிட்டரில் ஒட்டி அதை பார்த்து பார்த்து முதல் பதிவை மூன்று மணிநேரமாக தட்டச்சி - ஏறக்குறைய ஐந்து வருடங்கள் கழித்து சேர்த்தார்போல் தமிழ் எழுதுகிறேன் - வலையேற்றி, "எப்படி ஐயா பெரிய பெரிய பதிவு எல்லாம் எழுதுகிறீர்கள், ஏதாவது கருவி உள்ளதா" என்று கிடைத்த நாலு பேருக்கு மடல் அனுப்பி விட்டு படுக்கும்போது சனி காலை மூன்று மணி.

காலையில் எழுந்து பார்த்தால் வன்னியன் என்னை வலையுலகுக்கு வரவேற்று பின்னூட்டம் இட்டிருந்தார்... அப்போது ஆரம்பித்தது ஓட்டம்... ஆரம்பத்தில் நிறைய உற்சாகம் இருந்தது. நல்ல பதிவுகள் ஒருபுறம், சீண்டல்கள் மறுபுறம், கருத்தாளரின் ஜாதி மத பின்புலங்களை இல்லாமல் கருத்தை ஒட்டி நடந்த அனல் பறக்கும் விவாதங்கள் என்று ஆரம்பத்தில் பேச்சுக்கு இல்லாமல் உண்மையிலேயே ஒரு குடும்பம் போலத்தான் இருந்தது தமிழ் வலையுலகம்... "தமிழர் என்றோர் இனம் உண்டு , தனியே அதற்கோர் குணம் உண்டு" என்பது 2005 பிற்பகுதியில் ஒரு பொன்மாலைப்பொழுதில் எனக்கு(ம்) விளங்கிய போது, இனி அது போன்ற காலங்கள் சாத்தியமில்லை என்பது புரிந்த போது ஏற்பட்ட உணர்வுகளை சொன்னால் ஓவர் க்ளீஷேவாக போகும்...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எந்த inhibitionம் இன்றி, மனசுக்கு தோன்றுவதை புறவெளியில் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு...

எதிர்பாராமல் கிடைத்தது:

கல்கி சுட்டி

தினமலர் சுட்டி

இந்தியா டுடே சுட்டி

திசைகள் சுட்டி

இண்டிப்ளாக்கீஸ் சுட்டி

தேன்கூடு

இனி செய்ய நினைப்பவை : இப்போது செய்வதையே தொடர்ந்து செய்வது...

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : சொல்லலாம், ஆனால்... ( எதிர்காலத்தில் "என் குளத்தில் பாறாங்கல்லை எறிந்தவர்கள்" என்று சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறது)


மதுமிதாவின் ஆய்வு

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


மாட்டுக்கார வேலனா, இல்லை சிங்கார வேலனா ? அழகாக இருக்கிறீர்கள்.
 



தற்பெருமை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு :-)
 



இது போன்ற ஒரு பதிவைக் கூட எவ்வளவு ஸ்வாரஸ்யமானதாகச் செய்யலாம், மனமும், குணமும் இருந்தால், என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த வெளிப்பாடு!

மதுமிதாவின் உட்கிடக்கையைப் புரிந்துகொண்டு, எழுதியதுபோன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை!

நானும் இது போல எழுதியிருக்கலாமே என ஏங்க வைக்கும் பதிவு!

சுருக்கமாகச் சொல்லப்போனால், அருண் வைத்யநாதனின் பதிவுகளில் போய் அவரைத் திட்டி, நீங்க ஏன் குஷ்பூ விவகாரத்தைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை எனக் கோபித்துக் கொண்டபோது, போய் முகமூடி என்ற ஒருவர் எழுதிப் படும் பாட்டைப் போய்ப் பாருங்கள் எனச் சொல்லி, உங்களின் அறிமுகம் ஆனது!

அப்போதும், எப்படி பின்னூட்டம் இடுவது 'ப்ளாக்கர்' ஆகாமல், என மயிலிட்ட போது, அதற்கு வழி சொல்லி உதவி, நான் வலைப்பூ பக்கம் வந்ததே உங்களால்தான்!

நான் என்றும் விரும்ம்பிப் படிக்கும் பதிவு உங்களுடையது!

நன்றி!
 



// அழகாக இருக்கிறீர்கள் // எந்த மாற்றமுமின்றி சின்ன வயதிலிருந்து இன்றுவரை நான் கேட்கும் ஒரே வாசகம் இதுதான்.. ஹிஹி... (ஒரு முடிவுலதான் இருக்காப்போல இருக்குன்னு உஷா சவுண்டு விடறாங்க போலருக்கே...)

*

நீங்க வேற உஷா... இதுல வர்ற ஒவ்வொரு தற்பெருமை பாயிண்டும் ஒரு தனிப்பதிவா வந்திருக்க வேண்டியது... நமக்கு எங்க அதெல்லாம்... ஏதோ ஏகலைவனா இருந்து பீலா வுட்றுக்கேன், பாஸா பெயிலான்னு பெரியவங்கதான் சொன்னணும்...

பி.கு: இன்னும் ஏகப்பட்ட விஷயம் இருக்கு... ஆனா கூச்சம் காரணமா இதோட நிறுத்த வேண்டியதாப்போச்சி :)

*

நன்றி SK. டெட்லைனை (வழக்கம் போல) கடைசி நாளில் மீட் பண்ண வேண்டியதாகப்போச்சி... இல்லையெனில் இன்னும் கொஞ்சம் இம்சையை கூட்டியிருப்பேன் :)

// அப்போதும், எப்படி பின்னூட்டம் இடுவது 'ப்ளாக்கர்' ஆகாமல், என மயிலிட்ட போது, அதற்கு வழி சொல்லி உதவி, நான் வலைப்பூ பக்கம் வந்ததே உங்களால்தான்! //

அப்போ நீங்க புகழ் பெற்ற எழுத்தாளர் ஆனதும், என்னால் வெளிச்சத்துக்கு வந்தவர்னு நானும் பெருமையடிச்சிக்கலாம்னு சொல்லுங்க :))
 



இந்தப் பதிவிற்கான ஸ்டாண்டர்டு பின்னூட்ட டெம்ப்ளேட் போடவும் ப்ளீஸ்!
 



சோக்கா சொன்ன தல...

இதெல்லாம் அப்டியே வர்ரத்தான் இல்ல..

சர்தான்...ப்ளாகராவருதுக்கு கூட பொறந்து வர்ணும் போலக்கீது....

அன்புடன்...ச.சங்கர்
 



adade arumai
 



adade arumai
 



மாட்டுக்கார வேலரே!

குழந்தை பருவத்திலேயே
குக்கிராமத்தில்
"தேச சேவை" செய்ததை
ஆதாரத்துடன்
புகைப்படமாக வெளியிட்ட
தேசபக்தரே!
(மாடு மேய்ப்பது தேசபக்தியில்லையென்று
எவன் சொன்னது?
பிச்சிப் புடுவேன் பிச்சி!)

மாட்டுக்கு செய்த
மெயிண்டனன்ஸ் செலவை
(பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, புளியங்கொட்டை நொய், வைக்கோல் பிரி, லாடம் கட்டுவது, சினைக்கு ஓட்டுவது, .யடிப்பது இத்யாதி)
பொதுவில் வெளியிடுகிற
சேவை மனப்பான்மை உமக்கு இருக்கிறதா?

- ஆட்டுக்கார அலமேலு
 



உள்ளேன் ஐயா.

:-)
 



Agent 8860336 ஞான்ஸ்,

ஆட்டுக்கார அலமேலு என்ற பெயர் தங்களுக்கு பொருந்தி வரவில்லை. அடுத்தமுறை வேறு நல்ல பெயரிலும் குறிப்பாக எழுத்துநடை மாற்றியும் எழுதவும் :)

- வழிப்போக்கன்
 



it seems that u were so qute on those days! :-)
 



ஆமா சிறு வயசுல்ல முகமூடி யெல்லாம் போடாம சும்மா சண்டியர் கணக்காகத் தான் இருக்கீங்க:-)
 



ஞான்ஸ், இதுக்கு பின்னூட்ட டெம்ளேட் போடலாம்.. ஆனால் அதற்கு இங்கு பிரயோஜனம் இல்லை.. மற்ற இடங்களில் மட்டுமே உபயோகப்படுத்தப்படும் வகை அவை...

*

நன்றி sankarS, கவிதை

*

அநானிஸ், ஊருக்கு ஒரு வழின்னா நீங்க (ரெண்டு பேருமே) தனி வழில சிந்திக்கறீங்க.. நடத்துங்க..

*

இ.கொ.. (அரசியல்) சங்கக்காரருன்னு நிரூபிக்கிறீங்களே.. கழுவிய மீன்ல நழுவிய மீனா ஒரு ஸ்மைலியோட பின்னூட்டம் போடறதத்தான் சொல்றேன் :)

*

ர.ரா.. அது என்ன those days ன்னு ஒரு உள்குத்து?

*

தேவ், இதெல்லாம் ரொம்ப டூ மச்சின்னு கொரலுடாம இருந்தா ஒண்ணு சொல்றேன்... அதாவது சண்டியர் கூட ஒரே ஒரு (அன்னலஷ்மியோட) மாட்ட மட்டும்தான் அடக்குனாறு.. நாம பாருங்க ரெண்டு காளைய சர்வ சாதாரணமா...
 



மதுமிதா டைரக்டரி மாதிரி உங்க சுய சரிதையிலும் எங்க பேர் வருமில்லே!!
உங்கலைப் பார்க்கும்போது `உத்தமபுத்திரன்' சிவாஜி தான் நினைவுக்கு வர்றார்!!
 



சரி, உங்க கருத்து ??