<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

டாவின்சி கோட் - புதிரா புனிதமா?


img courtesy: danbrown.com

உள்நாட்டு பயணம் ஒன்றின் போது வழித்துணைக்கு இருக்கட்டுமே என்று டாவின்சி கோட் நாவல் வாங்கினேன். அப்போது அது சூடான அடுமனை (hot cake) பொருள். ஆனால் in-flight சஞ்சிகையில் சில சுவாரசியமான விஷயங்கள் இருந்ததால் சரி பொறுமையா படிப்போமே என்று டாவின்சி பெட்டிக்குள் அனுப்பப்பட்டார். (இப்போது இன்-ஃப்ளைட் சஞ்சிகைகளை வீட்டுக்கு எடுத்து வரும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்) ஊருக்கு வந்த பிறகு ஒரு அத்தியாயம் படித்ததோடு சரி.. அப்புறம் படம் குறித்த அறிவிப்புகள் பார்த்தவுடன், சரி படம் பார்த்துவிட்டு படிக்கலாம் என்று டாவின்சி பரணுக்கு அனுப்பப்பட்டார். அது நல்லதுக்கு என்றே இப்போது தோன்றுகிறது. ஏனெனில் படம் பார்த்த பெரும்பான்மையினர் கருத்து :: புத்தகம் அளவு படம் நன்றாக இல்லை. அது பொதுவாக எல்லா படங்களுக்கும் வரும் விமர்சனம்தான். கதாபாத்திரங்கள், சூழ்நிலை எல்லாம் ஒரு மாதிரி கற்பனையில் இருக்க படத்தில் எதிர்விதமாக இருந்தால் இது போன்றுதான் விமர்சனம் வரும். ஆனால் புத்தகத்திற்கும் படத்திற்கும் குறைந்தது ஆறு வித்தியாசங்கள் உண்டு என்கின்றனர் மக்கள்.

பொதுவாக படம் வந்தால் பலதரப்பட்ட விமர்சனங்களையும் படித்துவிட்டு ஒரு குன்ஸான ஐடியா கிடைத்தவுடன் படம் பார்க்க செல்வது வழக்கம். ஆனால் போகலாம் (அ) போக வேண்டாம் என்ற அறிவுரைகளை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.. தமிழில் நிறைய படங்களை சூப்பர் என்று சொல்லப்பட்டு போய் மண்டை காய்ந்து வந்த அனுபவமும், பிளேடு என்று சொல்லப்பட்டு போகாமல் மிஸ் பண்ணிய அனுபவங்களும் நிறைய உண்டு என்பதால். இந்த படத்துக்கு எந்த விமர்சனமும் படிக்கும் முன்பே போகலாம் என்று தீர்மானம் போட்டாயிற்று.

வழக்கம் போலவே படத்துக்கு அரை மணி நேரம் முன்பு போனால், அடுத்த காட்சியும் அதற்கு அடுத்த காட்சியும் அரங்கு நிறைந்துவிட்டது என்று போர்டு தொங்குகிறது. சரி என்று அதற்குக்கும் அடுத்த காட்சிக்கு டிக்கட் வாங்கியாயிற்று (ஒரு நாளைக்கு 14 காட்சிகள். ஒரே வளாகத்தில் உள்ள வெவ்வேறு அரங்குகளில் மாற்றி மாற்றி ஓடும் என்பதால் ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் 45 நிமிடங்கள்தான் வித்தியாசம்) 90 நிமிடங்கள் mall சுற்றி வரலாம் என்று (பர்ஸுக்கு இப்படி வேற தொந்தரவா) நினைத்தால் நீங்க டாவின்சி கோட் என்றால் இப்போதே வரிசையில் நில்லுங்கள் என்று அறிவுருத்தல். முதன் முறையாக புதரகத்தில் வரிசையில் நின்று படம் பார்த்தது இப்படம்தான் என்ற வகையில் இனி இது நீண்ட நாள் நினைவில் இருக்கும். எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம் என்ற அளவுக்கெல்லாம் இல்லையென்றாலும் அரங்கு நிறைந்த காட்சிதான்.

img courtesy: danbrown.comலூவர் அருங்காட்சியகத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்யப்பட்டவர் மியூசியத்தின் பொறுப்பாளர் (க்யூரேட்டருக்கு குணப்படுத்துவர்னு தமிழாக்கினா சரிப்படுமா?). அவர் இறக்கும் அத்தருணத்திலும் பல குறியீடுகளையும் சங்கேத குறிப்புகளையும் ஒரு பெயரையும் எழுதிவிட்டு இறக்கிறார். அது குறியீடுவியளாலர் (symbologist) ராபர்ட் லாங்டனின் பெயர்... சந்தேகத்தின் பெயரிலும் அவர் கொலையுண்டவர் எழுதிய குறியீடுகளை உடைக்க உதவலாம் என்ற காரணத்தாலும் ராபர்ட் மியூசியத்திற்கு வரவழைக்கப்படுகிறார். அவர் தடயவியலாளர் சோஃபியுடன் சேர்ந்து லியனார்டோ-டாவின்சியின் கலைப்படைப்புகளில் பதியப்பட்டுள்ள ரகசிய குறியீடுகளை கட்டுடைக்க கட்டுடைக்க மிகப்பெரும் ரகசியங்கள் சில அவர்களுக்கு தெரிய வருகிறது. இந்த ரகசியங்கள் வெளிப்பட்டால் 2000 ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் மதம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்த நம்பிக்கைகள் தகர்க்கப்படும். அந்த ரகசியங்கள் என்னென்ன, அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை... வில்லன்களின் குறிக்கீடுகளையும் மீறி ரகசியங்கள் கட்டுடைக்கப்பட்டனவா; தானாக சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் உருவாக்கியாவது உதடு கடிக்கும் ஹாலிவுட்டில் சந்தர்ப்பம் வாய்த்தும் ஹீரோ ஏன் ஹீரோயின் நெற்றியில் ஒரே ஒரு மென்மையான முத்தத்துடன் முடித்துக்கொள்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை வெள்ளித்திரையில் காண்க (அப்பாடா.. இப்பத்தான் நாலணா சினிமா பாட்டு புஸ்தகத்தின் முன் உள் அட்டை கதை சுருக்கத்திற்கு பக்கத்திலாவது வருது...)

ராபர்ட் கதாபாத்திரமாக டாம் ஹாங்க்ஸ்.. என்னமோ மிஸ்ஸிங். ஆரம்பத்திலாவது பரவாயில்லை, பிற்பகுதியில் பெரும்பான்மை நேரம் கதாபாத்திரத்துடன் ஒட்டவேயில்லை போல் எனக்கு தோன்றியது.. நாயகி (என்று சொல்லலாமா) சோஃபி பாத்திர தேர்வு பரவாயில்லை. என் அபிமான நடிகர் லியான் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தில் மறக்க முடியாத பாத்திரம் சிலாஸ்.. கொடூரம், அதீத நம்பிக்கை, நன்றியுணர்ச்சி என்ற அவரின் கண்கள் மறக்க முடியாதவை. * spoilers start * சிலாஸ் ராபர்ட் மீது பாயும்போது அரங்கத்தில் இருக்கும் 70 சதவீதம் மக்கள் சத்தமாகவே gaspகிறார்கள். ஒருவேளை அரங்கம் மயான அமைதியாக இருந்ததால் சத்தம் கொஞ்சம் மிகையாகவே கேட்டதோ என்னவோ * spoilers end * தெளிவான வசனம். தி ப்யூட்டிஃபுல் மைன்ட் படத்துக்கு ஆஸ்கர் வாங்கிய அகிவா கோல்ட்ஸ்மானின் சீரான திரைக்கதை.. உண்மையான லூவரா அல்லது செட்டிங் போட்டு எடுத்தாங்களா, கரணம் தப்பினால் காணாமல் போகும் என்ற அளவில் புதிரை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன போன்ற விஷயங்களுக்கு எல்லாம் இனிமேல்தான் கூகிளாண்டவரை நாட வேண்டும். படத்தில் ஒரு முக்கிய சஸ்பென்ஸ் நான் சீக்கிரமே யூகித்து விட்டாலும் (என்னால்) யூகிக்க முடியாத இன்னொரு சஸ்பென்ஸ் கடைசி நிமிடத்தில் வெளியிட்டு அப்படியே படத்தை முடித்ததால் தியேட்டரை விட்டு வெளியேறும்போது கொடுத்த காசுக்கு படம் திருப்தியாக இருந்ததான ஒரு உணர்வு... ( போன வாரம் போன MI III படம் க்ளைமேக்ஸ் சொதப்பல் என்பதால் "ரெண்டாவது தடவையின்னா என்ன, சும்மா கூட வந்து உக்காரக்கூட முடியாதா" என்ற நண்பர்களின் வேண்டுகோளை கூட புறக்கணிக்கும் அளவு )

படம் முடிந்து வெளியே வந்ததும் தோன்றிய நினைப்பு, இதற்கு முன்னர் இதே லைன்ல ஒரு தமிழ்ப்படம் பார்த்திருக்கிறோமே... அது என்ன படம்? "ஹே ராம்" சரித்திரத்தை ஒட்டியே எழுதப்பட்ட கற்பனைக்கதைதான்.. ஆனால் ஹேராம் கூட இல்லை, என்னவோ இன்னொரு படம். சரித்திரத்தின் கூடவே கொஞ்சம் கற்பனை கலந்து சிலதை வெறுமே விட்டு அந்த இடங்களை வாசகர்களை விட்டு நிரப்பி கலக்கிய படம்.. என்னவோ என்னவோ என்றே இருக்கிறது.. இதுவரை நினைவுக்கு வரவேயில்லை.

படம் முடிந்தவுடன் மொத்த அரங்கமும் ஒரு நிமிடமும் கைதட்டியது. (இதற்கு முன் தியேட்டரில் நான் கைதட்டலை கண்டது ஃபாரன்ஹீட் நைன்/இலவன் படத்திற்கு) பாகனிசம், ஓபஸ் dei என்று தமிழ் வலைப்பதிவுலக சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு தீனி போடும் விஷயங்கள் அதிகம். மிகவும் முக்கியமான விஷயம் இப்படத்தை disclaimer - அதாவது இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே - உடன் பார்க்க சொல்கிறார்கள். உங்களால் முடியுமா?




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


AP says ::

LOS ANGELES -- Moviegoers gave their blessing to the "The Da Vinci Code" over the weekend, spending an estimated $77 million to see the Tom Hanks religious thriller.

While the film didn't set a domestic box office record, it was the largest weekend opening of the year so far and became the second largest worldwide release after "Star Wars: Episode III." It garnered some $224 million worldwide, according to Sony Pictures.

... more on 'Da Vinci' Has Second-Biggest World Opening
 



சூப்பர்.........
 



நீங்க கதையைப் படிக்கவில்லை போல. கதை படிச்சிருந்தா இன்னும் சுவாரஸ்யமா இருந்திருக்கும்.
 



நன்றி செந்தழல் ரவி

*

ஓ, அனானி.. நோட்பேட் -> ப்ளாக்கர் போது முதல் பத்தியை மிஸ் பண்ணிவிட்டேன் போலருக்கு.. (எதுக்கு இவ்ளோ பில்டப்பு.. பேசாம முதல் பத்திய மட்டும் ப்ளாக்கர் சாப்பிட்டுவிட்டதுன்னு சொல்லியிருக்கலாம்) இப்போது சேர்த்துவிட்டேன். அதையும் ஒரு லுக்கு விடுங்கள்.

இன்னும் புத்தகத்தை படிக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வதற்கு மாற்றாக புத்தகத்தை படித்த பலர் புத்தகம் அளவு படம் இல்லை என்றே கருத்து கூறினர். புத்தகத்தை எப்படியும் டிவிடி வருவதற்கு முன்பு படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். அப்புறம் ஒருமுறை படத்தை பார்க்க வேண்டியதுதான்.
 



ராபர்ட் லூவரின் பெயர் = Robert Langdon
 



// ராபர்ட் லூவரின் பெயர் = Robert Langdon // இதுக்குத்தான் எழுதினா ஒரு முறையாவது படிச்சி பாத்துட்டுத்தான் பப்ளிஷ் பண்ணனும்னு பெரியவங்க சொல்றாங்க.. கேட்டாதான...

சுட்டியமைக்கு நன்றி. திருத்தப்பட்டது.
 



அருமையான விமர்சனம்.... படம் இந்தியாவுக்கு எப்போ வருமோ என்று ஆவலாக இருக்கிறது....
 



நீங்க நெனைக்கிற அந்தத் தமிழ்ப்படம்...... சிறைச்சாலை??
 



நீங்க நெனைக்கிற அந்தத் தமிழ்ப்படம்...... சிறைச்சாலை??

புதிரும் இல்லை புனிதமும் இல்லை;
புதினம்!!!

:))
 



//மிகவும் முக்கியமான விஷயம் இப்படத்தை disclaimer - அதாவது இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே - உடன் பார்க்க சொல்கிறார்கள். உங்களால் முடியுமா?///

என்னால் முடியும்....சினிமா என்றாலே கற்பனை கதை தான் நானறிந்தவரை...

அன்புடன்
ரவி
 



முழுசா படிச்சவுடனே தான தெரியுது..இதுல உள் குத்து இருக்கு அப்படின்னு...

ம்ம்ம்...அது தெரியாம..சூப்பரப்பு அப்படின்னு பின்னூட்டம் போட்டுட்டேனே அப்பு...:((
 



சுட சுட விமர்சனம் கொடுத்ததிற்கு நன்றி. இந்தியாவில் ஒருவாரம் தள்ளி வெளியிடுகிறார்கள்.
புத்தகங்கள் நமது கற்பனைக்கு வித்திடுவதால் அது 'நம்ம படம்' ஆகி அடுத்தவர் எடுத்ததை குறை சொல்ல வைக்கும். ஆனாலும் டாவின்சி கோட்டில் வரும் குறியீடுகளை உடைக்கும் காட்சிகள் எழுத்தில் வந்ததுபோல் இருக்குமா என ஐயம்தான்.
 



இன்னமும் பார்க்கவில்லை.
நீங்கள் சொல்லும் மற்றைய தமிழ்படம் 'சிறைச்சாலை ' யாக இருக்குமா? அது மலையாளத்தில் ' கலாபரணி ' என வந்தது.
 



விவேகமான பதிவு.
 



முகமூடி

அருமையான அங்கத உணர்வுடனும், சமயோதிடமுள்ள நகைச்சுவையுணர்வும் உங்கள் எழுத்தில் மிளிர்திறது. உங்களது நீரிய எழுத்துப் பணி தொடர என் அன்பான வாழ்த்துக்கள். எனது ஆதரவும் பாராட்டுக்களும் என்றும் உங்களுக்கு உண்டு.

உங்கள் எழுத்துப் பணியைத் தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பு நண்பன்
ச.திருமலைராஜன்


பி.கு இப்ப என்ன திடீரென்று ஆதரவு தருகிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்ப இணையத்தில் யாராவது யாருக்காவது ஆதரவு தருவதுதான் ·பாஷனாமே, நான் எனக்குப் பிடித்த பதிவரான முகமூடிக்கு எனது ஆதரவினை அளிக்கிறேன். அவ்வளவுதான்.
 



சுஜாதா சார் கற்றதும் பெற்றதும்ல எழுதி இருந்தார், ஏன் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க முடியாதுன்னு, பல்வேறு வாசகர்கள் பல்வேறு விதத்தில் கற்பனை பண்ணி வைத்திருப்பாங்க, அதை உடைக்க முடியாதுனு. அது மாதிரி தான். செம கதை. என்னால 1 நாள் புக்க கீழ வைக்க முடியல, ஹ்ம்ம் யாருக்காவது டாவின்ஸி கோட் புத்தகம் சஃப்ட் காபி வேணும்னா மெயில் பண்ணுங்க, டான் பிரவுணோட வேற புத்தகங்கள் கூட இருக்கு. பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியே.
பிரசன்னா
 



18.06.06 ஆனந்த விகடன் மதன் பதில்கள் பகுதியில் வாசகர் ஜி.வெங்கடாத்ரி, சென்னை&27.

கேள்வி ::
‘டாவின்சி கோட்’..?!

பதில் ::
படமா? தடையா?! ‘அது கல்... பேசாது!’ என்று பொறி பறக்க வசனம் எழுதி, கருத்துச் சுதந்திரத்துக்குப் போராடிய கலைஞர் ஒரு திரைப் படத்தைப் பார்க்காமலேயே தடை விதித்தது கொடுமை. எல்லா முதலமைச் சர்களும் படங்களைத் தேர்வு செய்த பிறகே வெளியிடலாம் என்றால், சென்ஸார் போர்டு எதற்கு? டம்மியா? இது, பிரதம ராணுவ தளபதியிடம் பாதுகாப்பு அமைச்சர் போய், ‘எதற்கும் நானும் உங்கள் துப்பாக்கிகளை பர்சனலாக செக் பண்ணி விடுகிறேனே..!’ என்பது போல இருக்கிறது!

இந்தத் தடை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஜீவீக்ஷீணீtமீ டி.வி.டி-&க்கள் விறுவிறுப்பாக விற்பனையாகிக்கொண்டு இருக்கின்றன. யாருக்கு நாம் துணை போகிறோம்?! ‘துரோகம் மோசமானது’ என்கிறார் கலைஞர். முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட அன்றைய கலைஞருக்கு, பிற்போக்குத்தனமாக இன்றைய கலைஞர் ‘துரோகம்’ செய்யலாமா?!
 



மதனுடைய கருத்துதான் என்னுடையதும். பராசக்தி வசனத்தில் இல்லாத இறைமறுப்பா? அட...அவர் வெறும் அரசியல்வாதிதாங்க. அதுக்கு மேல அவர் கிட்ட எதுவும் எதிர் பாக்கக் கூடாது.
 



பெயர் சொல்லவிரும்பாத ஒரு அன்பரின் மடல் ::

வாசகர்களின் பார்வைக்கு -

Silencing The Da Vinci Code - Kalavai Venkat
 



அருமையா எழுதியிருக்கீங்க... புத்தகம் இன்னமும் வாசிக்கேலயா?

புத்தகத்தின் அரைவாசி கூட இல்லை திரைப்படம். புத்தம் வாசித்து விட்டு திரைப்படம் பார்த்தால் அவ்வளவாக இலயிக்காது என்று நினைக்கின்றேன். இதற்கு மற்றுமொரு உதாரணம், Harry Potter!
 



சரி, உங்க கருத்து ??