<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இலக்கிய சந்திப்பு


லாஸ் ஏன்ஜலீஸ் நகரில் மே மாதம் 14ம் திகதி நடந்த இலக்கிய சந்திப்பில் பார்வையாளனாக இருந்த ஒரு பாமரனின் நேரடி அனுபவ குறிப்புகள்.

**

சுப்பன் :: டேய் வீக்கெண்டும் அதுவுமா வீட்ல உக்காந்து என்னா பண்ணிகிட்டு இருக்க. நான் ஒரு இடத்துக்கு போய்கிட்டு இருக்கேன், சூப்பர் பிரியாணி கிடைக்கும்... வரியா..

நான் :: சரி... போம்போது வீட்டுக்கு வா, அப்படியே சேந்து போகலாம்

சுப்பன் :: ஏற்கனவே வெளியிலதான் இருக்கேன்.ஃபயர் ஹைட்ரண்ட் கிட்ட மட்டும்தான் ப்ரீ ஸ்பேஸ் இருக்கு.. அதனால நான் உள்ள வரல, நீ சீக்கிரம் வா

**

நான் :: டேய், 50 மைல் சுத்துல எல்லா தேசி கடை பிரியாணியையும் சாப்பிட்டு பாத்தாச்சி... ஒரு இடத்திலயும் பிரியாணி ஆடுநரியா கூட இருக்காது... அப்புறம் என்னத்த சூப்பர் பிரியாணின்னு கத விடுற

சுப்பன் :: இது ரெஸ்டாரெண்ட் இல்லடா. வேற இடம். அங்க பிரியாணியும் பீரும் இலவசம். என்ன கெரகம் அதோட அங்க நடக்கிற கூத்த சகிச்சிக்கணும்... அதுக்கு இலக்கிய திறனாய்வுன்னு பேர் சொல்றாங்க.. நான் போன வாரம் போயிருந்தேன். அதான் முத கூட்டமாம்.... டேய், என்னடா இது 80 மைல் வேகத்துல போய்கிட்டு இருக்கும்போது கதவ தொறக்குற..

நான் :: மாமு, அந்த கூட்டத்துல வேடிக்கை பாக்குறதும் ஒன்னுதான், இப்படியே ரோட்டுல குதிக்கிறதும் ஒன்னுதான்... இந்த விஷப்பரீச்சை எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, அப்பிடி ஓரமா எறக்கி விடு, பொடி நடையா நடந்தாவது வூடு போய் சேர்றேன்

சுப்பன் :: சும்மா உணர்ச்சிவசப்படாதடா... உன்னிய யாரு கலந்துக்க சொன்னாங்க... நீ பாட்டுக்கு ஒரு பீர் பாட்டிலும் கொஞ்சம் பிரியாணியுமா ஒரு ஓரமா செட்டில் ஆயிக்க... பேசாம டிவிடி கிவிடி எதயாவது பாத்து பொழுத ஓட்டு, சீக்கிரம் கிளம்பிறலாம்... இதுக்கு மேல ரெஸ்டாரெண்டுக்கு போயி காஞ்ச பீஸாவ சாப்பிடணுமான்னு யோசிச்சு பாரு.

**

சுப்பன் :: ஹாய் ஹாய் ஹாய் ஹாய்... என்ன ஏற்கனவே ஆரம்பிச்சிட்டிங்க போலருக்கே கச்சேரிய... பீர் நுரை வாசல் வரைக்கும் பொங்கி வழியுதே.

யாரோ :: வாய்யா தொர... போன கூட்டத்துல உம்மூஞ்சி போன போக்க பாக்கவும் சரி அடுத்த கூட்டத்துக்கு ஆள் கம்மின்னு நினைச்சேன்.

சுப்பன் :: நமக்கு இலக்கியமெல்லாம் அவ்வளவா வராதுங்க. ஆனா நம்ம நம்ம ஃபிரண்டுக்கு கொஞ்சம் வரும். அதான் கூட்டியாந்தேன்.

நான் (மெதுவாக) :: அடப்பாவி

யாரோ :: வாங்க தோழரே. என் புனைபேரு காத்துவாயன். நான் அடிப்படையில ஒரு கவிஞன். அட என்னங்க நீங்க தரையில உக்கார பார்க்கறீங்க. முத முறை நம்ம அரண்மனைக்கு வந்திருக்கீங்க, தமிழ் கலாச்சாரம் என்னாகுறது.. டேய் தெலுங்கினி, தோழருக்கு இருக்கையில உம்பக்கத்துல கொஞ்சம் இடம் கொடு. அப்படியே தங்க கழுகு ஒண்ண ஒடச்சி கொடு. சிகப்பு லேபிள் வர தாமதமாகுது தலைவா. அதுவரைக்கும் இதை இடைப்பாடா வச்சிக்கோங்க.

நான் (சுப்பனிடம்) :: தங்க கழுகுன்னா என்னடா.

சுப்பன் (மெதுவாக) :: கிழிஞ்சிது போ... இதுவே புரியலையின்னா போக போக என்னாகப்போறியோ. தங்க கழுகுன்னா golden eagle. கூட்டத்துல எதுனா புரியலையின்னா நம்மல ஒரு லுக்கு விடு. நான் சொல்றேன்

தெலுங்கினி :: டேய் கள்ளுக்கடை, கொஞ்சம் ரீவைண்ட் பண்ணு.. (என்னிடம்) லார்ட் ஆஃப் வார் படங்க. நல்ல படம். படம் முடியிறப்போ கருத்து ஓடுது, நீங்க வந்ததுல மிஸ் பண்ணிட்டேன். என்னன்னு கொஞ்சம் பாப்போம். கவிஞரே கொஞ்சம் தள்ளி உக்காருங்க

நான் :: கவிஞர் கவிஞர்னு சொல்றீங்களே. கவிதை எல்லாம் நிறைய எழுதியிருக்காரா?

தெலுங்கினி :: நீங்க வேற, ரெண்டோ மூணோ கவிதை, அது கவிதையான்னே சந்தேகமா இருக்கு, அவரு ப்ளாக்குல எழுதியிருக்காரு. ஆனா எங்களுக்கு மெயில் அனுப்ப சொல்ல எப்ப பாத்தாலும் கவிஞர்னே கையெழுத்து போடுவாரு. எதுனா கருத்து சொல்லும்போது "ஒரு கவிஞர் என்ற முறையில் என் கருத்து என்னவெனில்" அப்படீன்னு ஆரம்பிப்பாரு. சரி ரொம்பத்தான் ஆசப்படுறாரேன்னு நாங்க கவிஞரேன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். அதுல அவருக்கு ஒரு சந்தோசம்.

நான் :: சரி அது என்னங்க காத்துவாயன்னு பேரு.

தெலுங்கினி :: போட்டோ எடுக்கும்போது வாய தொறந்துகிட்டே போஸ் கொடுத்தாரு. அதனால அப்பிடி வச்சிட்டோம்.

**

கள்ளுக்கடை (டிவிடியை பார்வையிட்டுக்கொண்டே) :: உலகத்துலயே பெரிய ஆயுத வியாபாரியான அமெரிக்கா செக்கூருட்டி கவுன்சிலில் பெரும்புள்ளி.. என்ன கொடுமை பாத்தியா..

கவிஞர் (குடித்துக்கொண்டிருந்த பீரை கோபமாக தரையில் அறைந்து) :: தம்பி, எத்தன தடவ சொல்றது அமெரிக்காவ புதரகம்னு சொல்லுன்னு..

புரியாமல் பார்த்த என்னிடம், சுப்பன் :: அமெரிக்காவ தமிழ்ப் படுத்தி இருக்காங்க...

நான் :: அமெரிக்காவுக்கு தமிழ்ல ஐக்கிய அமெரிக்க நாடுகள்தானே

கவிஞர் :: அதில அமெரிக்கா இங்க்லீஸ் இல்லியா. அதனால அதிபர் பெயரால கூப்பிடணும்னு முதல்ல புஷ்ஷகம்னு வச்சோம். அதுல ஷ வடமொழி சொல்லுங்கறதால அது புஸ்ஸகம்னு ஆச்சி. அப்புறம் நான்தான் புஸ்ஸயும் தமிழ்ப்படுத்தி புதரகம்னு வச்சேன். இனிமே உண்மையான தமிழ் ரத்தம் ஓடற திராவிடருங்க எல்லாம் அமெரிக்காவ புதரகம்னுதான் கூப்பிடணும்னு உலக தமிழர்களுக்கு எல்லாம் ஒரு செயின் மெயில் அனுப்புனோமே, உங்களுக்கு வரலியா?

நான் :: அது ஸ்பாம் பில்டர்ல போயிடுச்சி.. ஸ்பாம் க்ளீன் பண்றப்போ பாத்தேன். ஆனா எழுதியிருந்தத பாத்தவுடனே எவனோ வெட்டிப்பய லூஸுத்தனமா அனுப்பியிருக்கான்னு டெலீட் பண்ணிட்டேன். நீங்கன்னு தெரியாம போச்சி. அத விடுங்க.. உங்க கணக்கு படி பாத்தா ஒவ்வொரு நாலு வருசத்துக்கும் பேர மாத்தணுமே..

காத்துவாயன் :: அதுல ஒன்னியும் ப்ரச்னை இல்ல. என்ன கெஜட்லயா மாத்த போரோம்.. எல்லாம் நம்ம இனத்துக்குள்ளதான.. இதுக்கு முன்னாடி பில் (க்ளின்டன்) காலத்துல ரசீதகம்னு கூப்பிட்டோம்.. இப்ப புதரகம்... எலேய் கள்ளுக்கடை, தோழருக்கு எதுவும் சாப்பிட கொடுக்கலையா?

நான் (சுப்பனிடம்) :: இரு வேற என்னா டிவிடி இருக்குன்னு பாக்கறேன்.

கவிஞர் :: தோழரே நான் உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு கண்டுக்காம போறீங்களே.

நான் :: மன்னிச்சுடுங்க, பொத்தாம் பொதுவா தோழர்னு சொன்னீங்களா, அதான் யாரன்னு புரியல.. நீங்க என் பேர சொல்லியே கூப்பிடலாமே

கவிஞர் கோபமாக :: என்னது தோழர்னு கூப்பிடுறது புடிக்கலையா, என்னங்க சுப்பன், உங்க தோழர் தமிழ் விரோதி மாதிரி இருக்கே.. தொழிற்சங்கவாதிகளின் அடையாளச்சொல் கேவலமா போச்சா உங்க நண்பருக்கு?

தெலுங்கினி :: சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.

சுப்பன் (மெதுவாக) :: இலக்கியவாதின்னு அவனுக்கு அவனே நினைச்சுகிட்டு, இலக்கியவாதின்னா எப்பவுமே சமூகத்து மேல கோவமா அலையணும்னு யாரோ சொன்னத கேட்டு அப்பப்போ இப்படித்தான் சவுண்டு விடுவான். தெலுங்கினி ரெண்டு ரவுண்டு உள்ள போனதால அப்பப்போ ஸ்டாண்டர்டு டயலாக்க அள்ளி தெளிப்பான். எதையும் கண்டுக்காம சும்மா வேடிக்க மட்டும் பாரு...

தெலுங்கினி :: கவிஞரே கவிபாய் வந்திட்டாரு.

கவிஞர் :: வாய்யா பாய். என்ன ரொம்ப நாளா ஆளயே காணோம்.

பாய் :: ஒரு மாசம் முன்னாடி ஒரு தமிழ் ஆய்வு கூட்டத்துக்கு போயிருந்தேன். அங்க சும்மா இருக்காம சில கருத்துக்கள சொல்லப்போயி எல்லாப்பயலும் மொத்திட்டானுவ. தமிழுக்காக வாழறவங்க எத எதயெல்லாம் தாங்க வேண்டியிருக்கு பாருங்க.

கவிஞர் :: விடுங்க. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்குல்ல. அந்த சந்தோஷத்துலயே போயி சேந்துடலாம். தமிழுக்காக உயிர் நீத்தோம்னு பெருமையாவது மிஞ்சும்.

நான் :: என்னங்க இது போருக்கு போனவங்க ரேஞ்சுல பேசிக்கிறாங்க.

தெலுங்கினி (கிசுகிசு பாணியில்) :: இந்த பாய் தமிழ் ஆய்வு கூட்டம்ன்னு சொல்றானே அது சும்மா.. சும்மா இல்லாம அவன் ஊரு மேல்நிலைப்பள்ளி படிப்பாலோசனை கூட்டத்துல போயி, எல்லாரும் காலேஜ்ல தமிழ் இலக்கியம்தான் படிக்கணும். இடம் கிடைக்கலையின்னாத்தான் வேற எதுனாவாவது படிக்கணும்னு ஆவேசமா பேசிபுட்டான். அங்க இருந்தவனுங்களுக்கு எல்லாம் இவன் இஞ்சினியரிங் படிச்சவன், அதுவும் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சிட்டு இப்ப அமெரிக்காவுல இருக்கான்னு தெரிஞ்சிச்சி.. சும்மா விடுவானுங்களா. மூடிக்கிட்டு போ, எங்க பொழப்ப நாங்க பாத்துக்கறோம்னு சொல்லிட்டாங்க. அதுக்குத்தான் இந்த பில்டப்பு.

கவிஞர் :: அடடே வாங்க சகதி.

நான்:: என்னது சகதியா.. என்னய்யா இப்படியெல்லாம் பேரு வக்கிறாங்க.

தெலுங்கினி :: யோவ் அது சக்திய்யா.. இலக்கிய வ/கட்டத்துல அல்லா விதத்திலும் சகல எளுத்தாளர்களையும் ஆட்டிப்படைக்கிறவங்களோட ஜால்ராங்கிறதால அப்பிடி பேரு. அவங்க உண்மையான பேரு அருக்காணி. நாங்க செடிக்கான்னு கூப்பிடுவோம்

நான் :: இது அத விட காமெடியா இருக்கே

கள்ளுக்கடை :: பேர பாத்து சாதாரணமா நினைக்காதீங்க. அக்கா ஆறு ஐஸ்வர்யா கணக்கா செடிக்கா தில்லான ஆளு. அவங்க ஏரியாவுல எதுனா அரசியல் பொதுக்கூட்டமின்னா போதும் அக்கா சவுண்ட கேக்கணுமே. மவனே சுத்துப்பட்டி பதினெட்டு பட்டியும் திரளும்.

நான் :: பொதுக்கூட்டத்துல இருந்தெல்லாம் அழைப்பு வர்ற அளவுக்கு அவ்ளோ சூப்பரா பேசுவாங்களா

தெலுங்கினி :: நீங்க வேற. அக்கா வூட்டுல அல்லாரும் அரசியல்வாதிங்க. அக்காவோ தடாலடியா நான் பேசியே தீரணுமின்னு குதிக்கும். வேற வழி. அதுவுமில்லாம அக்கா காட்டுல காச்சிற சாராயத்த கொடுத்து அக்கா வயக்காடு, தோட்டம் தொரவுல ஆடு மேக்கிறவன், வேலை பாக்குறவன்னு எல்லாப்பயலையும் கூப்பிட்டு சவுண்டு கொடுக்கும். வார்த்தயெல்லாம் ஏக வசனத்துல கேக்க சகிக்காது. இருந்தாலும் சரக்க சாப்பிட்ட சந்தோசத்துல எல்லாப்பயலும் கைதட்டி தீத்துடுவானுங்க.

நான் :: வயசு சின்னதா இருக்கே, எதுக்கு எல்லாரும் அக்கா அக்கான்னு கூப்பிடறீங்க

கள்ளுக்கடை :: அரசியல்வாதி இல்லியா, அல்லாரையும் தம்பி தம்பின்னு தோரணையா கூப்பிட்டு பளகிட்டாங்க. அதான் எல்லாரும் வேற வழியில்லாம அக்கான்றானுங்க.

**

கவிஞர் :: தோழரே கொஞ்சம் சப்தத்த கம்மியா வச்சிக்குங்க.. கள்ளுக்கடை எல்லாருக்கும் அடுத்த ரவுண்டு பீர் கொடுப்பா.. (க்கும் என்று கனைத்துக்கொண்டு சத்தமாக) அனைவருக்கும் வணக்கம். அமுக்கு அமைப்பின் இரண்டாவது கூட்டம் இப்போது துவங்குகிறது

நான் :: அமுக்கு அமைப்பா?

சுப்பன் :: ஆமா... போன கூட்டத்துல இந்த மாதிரி இவங்களுக்கு ஒரு அமைப்பு வேணுமின்னு தீர்மானம் போட்டாங்க. அப்ப என்ன தலைப்பு வைக்கலாம்னு ஒரே குழப்பம், அப்ப பாத்து வறுத்த மீன் ஒண்ணே ஒண்ணுதான் மிச்சம் இருந்தது. தெலுங்கினிக்கும் கள்ளுக்கடைக்கும் அந்த மீன் துண்டு மேல ஒரு கண்ணு. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அந்த மீன் துண்டுக்காக பாஞ்சிட்டானுங்க. கூட இருந்தவனெல்லாம் "விடாத அமுக்கு, அமுக்கி பிடி மீன் உனக்குத்தான்"ன்னு கூச்சல் போட்டானுங்க. உடனே நம்ம கவிஞர் "அமுக்கு"ன்ற பேர அமைப்புக்கு வச்சிட்டாரு..

கவிஞர் :: அமுக்கப்பட்டவன் குரல் சத்தமாக கேட்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியமே நம் இலக்கிய இயக்கத்தின் உயிர்நாடி..

தெலுங்கினி :: சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.

கள்ளுக்கடை :: மொத்தட்டும் மொத்தட்டும். எனக்கும் ரொம்ப குளிருது. கொஞ்சம் மொத்து வாங்கினா இதமாத்தான் இருக்கும்.

சுப்பன் :: ஆனா இந்த பேர ஆமோதிச்சப்ப கள்ளுக்கடை அமுக்கப்பட்டவனா, மீன பறிகொடுத்தவனா இருந்தான்... அதான் செம காமெடி

**

பாய் :: கவிஞரே கவித சொல்லுங்க, திறனாய நேரமாவுதுல்ல... ரொம்ப நாளா திரனாயாம கைகாலெல்லாம் நடுங்குது. பிரியாணி வேற ஆறிப்போவுது.

கவிஞர் :: அட போங்க பாய்... இன்னிக்கி பாத்து என் கற்பன குதிர சுணங்கி போய் படுத்து கிடக்கு... (சத்தமாக சிரிக்கிறார்)

கள்ளுக்கடை :: ஆமா, இவரு குதிரை என்னிக்கி எந்திரிச்சிருக்கு..

கவிஞர் :: பாய் நீங்களும் நம்ம கவித பட்டரையில முங்கி முத்தெடுத்தவராச்சே.. நீங்க ஒரு கவிதை சொல்லுங்களேன்.

பாய் :: அட நீங்க வேற, எனக்கு யாராவது கவிதை சொன்னா அத திறனாய தெரியும். அதனாலதான் கவியரசுன்னு போட்டுக்காம வெறுமே கவிஞர்னு எனக்கு அடைமொழி வச்சிருக்கேன்.. அந்த சிக்கன் 65 கட்டி வந்த பேப்பர நீவிவிடுங்கப்பா.. அதுல எதுனா இலக்கியம் இருக்கான்னு பாப்போம். (பொதுவாக) கண்டதை படித்தால் பண்டிதனாவான்னு சொல்வாங்களே. அதுக்கு உதாரணம் நான் தான்.

தெலுங்கினி (மென்மையான குரலில்) :: சந்தடி சாக்குல தன்ன பண்டிதன்னு சொல்லிக்கிறான் பாருங்க.

பாய் :: கேக்குதுப்பா. நீ கூடத்தான் எழுத்தாளன்னு உன்ன நீயே சொல்லிக்கிற. நாங்க எதுனா கேட்டோமா..

தெலுங்கினி :: யோவ். இதுவரைக்கும் நான் எழுதின பதிவுங்கள 40 ஆயிரம் பேரு படிச்சிருக்கான். இது இலக்கியம் இல்லைன்னா எது இலக்கியம்கிறேன்.

பாய் :: அதுக்காக.. ஷகீலா போஸ்டர கூடத்தான் ஒரு நாளக்கி 40 லட்சம் பேரு பாக்கிறான். அது இலக்கியமாடா..

கவிஞர் :: அட அட அட... கலைஞர்களுக்கு சர்ச்சை தேவைதான்.. ஆனா அது சண்டையா மாறிடக்கூடாது பாருங்க..

செடிக்கா :: என்னடா சொல்ற. கலைஞன்னா நெஞ்சுல கீற மஞ்சா சோத்த பாக்கணும். அதுதாண்டா அழகு. இப்ப என்ன எடுத்துக்க, பெண் எழுத்தாளர்களில் பெயர் சொல்ற அளவு தில்லா இருக்கேன்... காரணம் என்ன..

சுப்பன் (மெதுவாக) :: ஆரம்பிச்சிட்டாங்கடா. இனிமே புல் ஸ்விங்க்தான்.. இவனுங்க கலைஞன், கவிஞன், எழுத்தாளன்னு மாத்தி மாத்தி முதுகு சொறியறத பாக்க முடியாது. பிரியாணிய ஆரம்பி. சீக்கிரம் கிளம்பிரணும்.

கவிஞர் :: பாய்.. சிக்கன் 65 பேப்பர்ல என்ன இருக்கு அத படிங்க முதல்ல.

பாய் :: ஆஹா இதுல ஒரு சூப்பர் கவித இருக்கப்பா... பிரமாதம்.. புல்லரிக்கிது.. அருவி மாதிரியில்ல ஓடுது தமிழ் இதுல..

கள்ளுக்கடை :: பாய்.. போதையில பீர் கேன தட்டி வுட்டு, அது கார்ப்பெட்ல ஓடிகிட்டு இருக்கு பாருங்க..

பாய் :: அத அப்பால தொடச்சிக்கிலாம்பா.. கவிதை அனுபவத்துல கொஞ்ச நேரம் என்ன வாழ விடு...

கவிஞர் :: நீங்க மட்டும் அனுபவிச்சா எப்படி பாய். அந்த கவிதையவே இன்னிக்கி திறனாய்வு சப்ஜெக்டா எடுத்துக்கலாம்.. உரக்க படிங்க..

பாய் ::

அன்பே,
உன்னை கண்டேன்
உலகை மறந்தேன்
உன் தங்கையை கண்டேன்
உன்னையே மறந்தேன்.

கவிஞர், தெலுங்கினி, கள்ளுக்கடை எல்லாரும் கோரஸாக :: ஆஹா ஆஹா..

பாய் :: பின்னி பெடலெடுத்துருக்கான் பாருய்யா கவிஞன்.. இதுல்ல கவித

செடிக்கா :: ஏண்டா மரமண்டைங்களா.. பெண்மைய இழிவு படுத்தி எழுதியிருக்கான் அந்த பொறுக்கிப்பய. இத கொளுத்தாம படிச்சிகிட்டு இருக்கீங்களே.

கள்ளுக்கடை :: அதானே.. நீங்க சொன்னா சரிதாங்க்கா..

பாய் :: இதுல என்ன தப்புங்கறீங்க. இதுக்காக ஒரு கவிஞன பொறுக்கின்னு சொல்றது தப்பில்ல.

செடிக்கா :: கவிஞன் மனசுல இருக்கறதுதான வெளில வருது. அவன் பொறுக்கி இல்லாம என்ன?

பாய் :: அக்கா, அது எழுதினவன பொறுத்து.. இதுவே ஒரு மேட்டுக்குடி வர்க்க கவிதையா இருந்தா எழுத்துக்கு ஆசிரியனே பொறுப்புன்னு நானும் மல்லுக்கு நின்னிருப்பேன். ஆனா இந்த கவிஞர் பேரு கட்டையன்னு போட்டிருக்கு. அப்படீன்னா அது ஒடுக்கப்பட்ட குரல்தானே. இது ஏன் ஒரு ஒரு சமூக நீதி குரலாக இருக்க கூடாது

தெலுங்கினி :: ஓ சமூக நீதி... சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.

கள்ளுக்கடை :: மொத்தட்டும் மொத்தட்டும். எனக்கும் ரொம்ப குளிருது. கொஞ்சம் மொத்து வாங்கினா இதமாத்தான் இருக்கும்.

அதுவரை பார்க்காத ஒரு உருவம், பாத்ரூமிலிருந்து எட்டி பார்த்து :: இது பத்தி சொல்ல எனக்கு நிறைய இருக்கு. இப்போதைக்கு இத்தோட ஒத்து போறேன்னு மாத்திரம் சொல்லிக்கிறேன். அப்புறமா வந்து பொறுமையா சொல்றேன்.

நான் :: இப்ப ரொம்ப முக்கியமா ஓடி வந்து இத சொல்லலையின்னாத்தான் என்ன? டாய்லட் பேப்பர் ரோல தரையெல்லாம் உருட்டிகிட்டு அரைகுறையா ஓடி வந்திருக்கீங்க பாருங்க. அப்புறமா வந்து மொத்தமாவே சொல்லுங்க. இப்ப போங்க.

செடிக்கா, பாயை பார்த்து :: இதுலஎன்ன பெரிய சமூகநீதி வெங்காயம்.. பெண்மைய மொத்தமா இழிவு படுத்தி இருக்கான். ஒடுக்கப்பட்ட குரல்ங்கிறதாலதான் இவ்ளோ நேரம் பேசிகிட்டு இருக்கேன். இல்லையின்னா வெட்டியிருப்பேன்.

தெலுங்கினி :: ஓ சமூக நீதி... சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.

கள்ளுக்கடை :: மொத்தட்டும் மொத்தட்டும். எனக்கும் ரொம்ப குளிருது. கொஞ்சம் மொத்து வாங்கினா இதமாத்தான் இருக்கும்.

நான் :: யோவ், நானும் வந்ததில இருந்து பாத்துகிட்டே இருக்கேன். எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவான்னே சொல்லிகிட்டு இருக்க. அதுக்கு இந்தாளும் ஒத்து ஊதறான். உங்களுக்குள்ளயே மாத்தி மாத்தி பேசிக்கறீங்க. எவனாவது இங்க வந்து என்ன ஏதுன்னு கேக்குறானா? அப்புறம் ஏண்டா இப்படி உளர்றீங்க.

சுப்பன் :: இந்த லட்சணத்துல எவனும் வரலையின்னு வேற அழறானுங்க.

தெலுங்கினி :: உங்ககிட்ட அப்புறம் பேசறேன். திறனாய்வுல கலந்துக்கணும்.. அய்யோ, ஏம்ப்பா இப்படி கத்துறீங்க.. யோவ் பாய் இப்ப நீ யார் கட்சி..

கள்ளுக்கடை :: இந்தா இந்த பீர தலையில கொட்டிக்க அடங்கும் (பாய் தலையில் பீர் கொட்டுகிறார்)

சுப்பன் (மெதுவாக) :: அவனுங்களுக்கு முழுசா ஏறிடுச்சி.. வா நாம நைசா கழண்டுக்கலாம்..

**

சுப்பன் (காருக்கு நடக்கும்போது) :: அப்படியே மொட்டை மாடியில கொஞ்சம் பாரு.

கவிஞர் :: (கட்டை சுவரில் சாயந்தபடி) :: ஹிஹிஹி... நான் இயல்புலயே கவிஞன்டா..

பாய் (சுவரை பிடித்தபடி வானத்தை கைகாட்டி) :: ஏஏஏய். ஷாமர்செட் மாம்.. எளுத்தாளனுக்கு பொழுப்புணர்ச்சி வெய்ணுமா வெய்ணாமா.. ஒனிக்கி இ-மெயில் போட்டனே, ஏன் இன்னும் ரீப்ளை சொல்லாம டீலே பண்ற.. பயந்தாங்கொள்ளி...

**


disclaimer :: this weblog entry is a narration of events actually happened in los angeles, usa on may 14, 2006. any actual resemblance to any other individuals, organisation or events is purely unintentional. © mugamoodi



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


அடப்பாவிகளா..உள்குத்து, வெளிகுத்து, அது இதுன்னு இங்கே ஏகப்பட்ட குத்துக்கள் இருக்கும் போலருக்கே. யாராச்சும் தமிழ் வலைப்பதிவு டிக்ஷனரி போடுங்கப்பா. பாதிக்கு மேல புரிய மாட்டேங்குது.
 



+ குத்தியாச்சு.

ஏம்ப்பா புதரகத்துலே மெய்யாலுமே இப்படியா நடக்குது?
 



யோவ் முகமூடி! இது உண்மையிலேயே நடந்ததா? அப்படி தெரியலியே ராசா. எல்லா கேரக்டரயும் பார்த்தா எனக்கு பல வலைப்பதிவாளர்கள் தான் ஞாபகத்துக்கு வர்றாங்க!..

இந்த கவிஞர்கள் கேரக்டர்தான் இருக்கிறதிலேயே டாப்பு....!!

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சப்பா...
 



முகமூடி,

ஃபார்முக்கு வந்தாச்சு போலிருக்கு. அடிச்சு ஆடுங்க!!!....
 



தலைவா,

தங்கக்கழுகுன்னு சொன்னா இலக்கியவாதியா? நான் கூட போன பதிவுல தங்கக்கழுகு, மீன்கொத்தின்னு எல்லாம் எழுதியிருக்கேன். அப்போ நம்ம பதிவும் இலக்கியமா? நானும் இலக்கியவியாதியா? அப்போ இனிமே கலர் சொக்கா எல்லாம் போட முடியாதா?

யாரங்கே. எனக்கு வெள்ளை பைஜாமா ஜிப்பா என்ற திராவிட உடையை எடுத்து வா.
 



மாயவரத்தான்... உள்குத்து வெளிகுத்துன்னா என்ன?

**

துளசியக்கா.. நன்றி. நியூசியில இதுமாதிரியெல்லாம் நடக்குறது இல்லையா.. பாவம் நீங்க (உண்மையான அர்த்தம் :: கொடுத்து வச்சவங்கன்னு)

**

சிங்கை சிவா.. பல வலைப்பதிவர்கள் ஞாபகத்துக்கு வராங்களா? நியாயம்தான். அந்த கூட்டத்துல இருந்த எல்லாரும் வலைப்பதிவாளர்கள்தான், என்னை தவிர (நான் இலக்கியவாதி/கவிஞன்/எழுத்தாளனாக்கும்)

**

// அடிச்சு ஆடுங்க //

என் பதில் :: நன்றி பெத்த ராயுடு
கவிஞர்/பாய் பதில் :: நான் எங்கங்க எளுதறேன். வார்த்த அதுவா வந்து விழுகுது. படிச்சி பாத்தா எனக்கே புல்லரிக்கிதுன்னா பாருங்களேன்.
 



சுப்பனை தவிர மத்தவங்கல்லாம் யாருன்னு கண்டுபுடிச்சுட்டேன்.சுப்பன் யாருன்னே?
 



// யாராச்சும் தமிழ் வலைப்பதிவு டிக்ஷனரி போடுங்கப்பா//

டிக்ஷ்னரி ப்ளீஸ்!!!
 



// நானும் இலக்கியவியாதியா? //
என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. வலைப்பதிவு ஆரம்பிச்சி உங்க பேர எழுதினாலே இலக்கியவியாதிதான். எதயாவது போண்டா சுத்தி வந்த பேப்பர படிச்சி திறனாய்வு கட்டுரை ஒன்னு போடுங்க. அப்புறம் எழுத்தாளர் அடைமொழி தன்னால வரும் (வரலையின்னா நமக்கு நாமே திட்டம் ஞாபகம் இருக்கட்டும்)
*
// வெள்ளை பைஜாமா ஜிப்பா என்ற திராவிட உடையை எடுத்து வா //
இது திராவிட (சாதாரணன்) உடையா அல்லது திராவிட (பொறுக்கிகள் - அதாங்க ராஸ்கலுக்கு தனித்தமிழ்) உடையா?
**

// சுப்பன் யாருன்னே? //
அதுவேற யாருமில்லை செல்வன். என் மனசாட்சிதான். (அட அரசியல்வாதி டயலாக் இல்லீங்க. உண்மையிலேயே மனசாட்சிதான்)

**
// டிக்ஷ்னரி ப்ளீஸ் //

// செல்வன் சொன்னது :: சுப்பனை தவிர மத்தவங்கல்லாம் யாருன்னு கண்டுபுடிச்சுட்டேன் //
 



//எதயாவது போண்டா சுத்தி வந்த பேப்பர படிச்சி திறனாய்வு கட்டுரை ஒன்னு போடுங்க. அப்புறம் எழுத்தாளர் அடைமொழி தன்னால வரும் //

அய்யய்யோ. வேணாம் தலைவா. நானுண்டு, என் பதிவுண்டு, வர பின்னூட்டமுண்டு, இதுக்கெல்லாம் மேல கட்சிப் பணியுண்டுன்னு இருந்துட்டு போறேன். எனக்கெதுக்கு எளுத்தாளர் பட்டம் கிரகமெல்லாம்.

//இது திராவிட (சாதாரணன்) உடையா அல்லது திராவிட (பொறுக்கிகள் - அதாங்க ராஸ்கலுக்கு தனித்தமிழ்) உடையா?//

அதெல்லாம் தெரியாதுங்க. ஆனா நான் பாத்த இலக்கியவியாதிங்க எல்லாம் அதுதான் போடறாங்க.
 



Nice Parody !
The disclaimer is redundant,though:-).

the day when anyone can write such parody and people who read it move on with a smile is the golden day for tamil lit.
 



முகமூடி,

அடுத்த புதரக இலக்கிய திறனாய்வு கூட்டத்துக்கு என்னை கூட்டி செல்வீர்களா ? .

நிஜமாதான் கேக்குறேன்.
 



அன்பின் நண்பா முகமூடி,

அமுக்கு அமைப்பு, கவிதை திறனாய்வு என்று பல கோணங்களில் பூந்து விளையாடியிருக்கிறாய்! அமுக்கு என்பதன் துவக்கு எப்போது என்றும் சொல்ல முடியுமா!

அடிப்படையில் / பிறப்பால் கவிஞன் என்று முத்துக்கள் உதிர்ந்திருப்பதில் குறையேதும் உளதோ!

பாலைப் பிரதேசத்தில் பெய்த குளிர்ந்த பீர் மழையாய் நகைச்சுவை!

வாழ்க உள்குத்து! வளர்க வெளிக்குத்து!!

Jai Hindh
 



// எனக்கெதுக்கு எளுத்தாளர் பட்டம் கிரகமெல்லாம் //
அட என்னங்க இப்படி சொல்றீங்க.. இன்னிக்கி நிலைமையில பூவாவுக்கு வேலை இருக்கோ இல்லியோ, ஒரு பட்டம் இல்லையின்னா சரிப்படாது. காசா பணமா சும்மா எடுத்துக்கோங்க.

*

// the day when anyone can //
அண்ணன் உதயநிதி ஆட்சியில் திராவிட நன்னாட்டில் கண்டிப்பாக இது நடக்கும், கவலை வேண்டாம்.
 



// அடுத்த புதரக இலக்கிய திறனாய்வு கூட்டத்துக்கு என்னை கூட்டி செல்வீர்களா ? //

சயனைட் சாப்பிட ஆசைப்படலாமா கார்த்திக். கலந்துகொண்ட கூட்டத்தோட எஃபக்டே இன்னும் 113 வருசத்துக்கு தாங்கும். இதுல இன்னொரு கூட்டத்துக்கா...

*

வாய்யா ஞானபீடம். எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம். குறைந்த பட்சம் TMS பாடிய முருகன் பாடலாவது படத்தோட போடும் ஓய். (TMSன் ஜாதி ஆராய்ச்சி வேற சபையில ஓடிகிட்டு இருக்கு.. அதனால எதுக்கு வம்பு. முன்சாக்கிரதையா கே.பி.சுந்தராம்பாள் - அவங்க சாதிய திராவிட்ஸ் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறதுக்கு முந்தி - பாட்டு எதையாவது போட்டு எஸ்கேப் ஆயிடும் ஓய்)
 



// Jai Hindh //

என்னய்யா தமிழ் தேசிய அகராதியில இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் சொல்றீரு..
 



பிரிச்சு மேயறீங்களே தலைவா..!! உங்க பதிவுகளை அலுவலகத்துல படிச்சு சிரிச்சுக்கிட்டிருந்தா என் பொழைப்பு சிரிப்பா சிரிச்சுப் போயிரும் போல..
 



வாய்விட்டுச் சிரித்து ரசித்த பகுதிகள் பின்வருமாறு. இந்தத் திறமையை நையாண்டியோடு நிறுத்தாமல், புனைவு, கதை நாவல் என்று திசைதிருப்பினால் ஜொலிக்கலாம். இல்லையென்றால், நையாண்டியைக் கூட இன்சல்ட் என்று எடுத்துக் கொள்கிற சமூகத்தில், சாபங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். - பி.கே. சிவகுமார்

******

கவிஞர் :: அதில அமெரிக்கா இங்க்லீஸ் இல்லியா. அதனால அதிபர் பெயரால கூப்பிடணும்னு முதல்ல புஷ்ஷகம்னு வச்சோம். அதுல ஷ வடமொழி சொல்லுங்கறதால அது புஸ்ஸகம்னு ஆச்சி. அப்புறம் நான்தான் புஸ்ஸயும் தமிழ்ப்படுத்தி புதரகம்னு வச்சேன். இனிமே உண்மையான தமிழ் ரத்தம் ஓடற திராவிடருங்க எல்லாம் அமெரிக்காவ புதரகம்னுதான் கூப்பிடணும்னு உலக தமிழர்களுக்கு எல்லாம் ஒரு செயின் மெயில் அனுப்புனோமே, உங்களுக்கு வரலியா?

******

காத்துவாயன் :: அதுல ஒன்னியும் ப்ரச்னை இல்ல. என்ன கெஜட்லயா மாத்த போரோம்.. எல்லாம் நம்ம இனத்துக்குள்ளதான.. இதுக்கு முன்னாடி பில் (க்ளின்டன்) காலத்துல ரசீதகம்னு கூப்பிட்டடீம்.. இப்ப புதரகம்... எலேய் கள்ளுக்கடை, தோழருக்கு எதுவும் சாப்பிட கொடுக்கலையா?

******
பாய் :: கேக்குதுப்பா. நீ கூடத்தான் எழுத்தாளன்னு உன்ன நீயே சொல்லிக்கிற. நாங்க எதுனா கேட்டடீமா..

தெலுங்கினி :: யோவ். இதுவரைக்கும் நான் எழுதின பதிவுங்கள 40 ஆயிரம் பேரு படிச்சிருக்கான். இது இலக்கியம் இல்லைன்னா எது இலக்கியம்கிறேன்.

பாய் :: அதுக்காக.. ஷகீலா போஸ்டர கூடத்தான் ஒரு நாளக்கி 40 லட்சம் பேரு பாக்கிறான். அது இலக்கியமாடா..


*****

அதுவரை பார்க்காத ஒரு உருவம், பாத்ரூமிலிருந்து எட்டி பார்த்து :: இது பத்தி சொல்ல எனக்கு நிறைய இருக்கு. இப்போதைக்கு இத்தோட ஒத்து போறேன்னு மாத்திரம் சொல்லிக்கிறேன். அப்புறமா வந்து பொறுமையா சொல்றேன்.

நான் :: இப்ப ரொம்ப முக்கியமா ஓடி வந்து இத சொல்லலையின்னாத்தான் என்ன? டாய்லட் பேப்பர் ரோல தரையெல்லாம் உருட்டிகிட்டு அரைகுறையா ஓடி வந்திருக்கீங்க பாருங்க. அப்புறமா வந்து மொத்தமாவே சொல்லுங்க. இப்ப போங்க.

*****

நான் :: யோவ், நானும் வந்ததில இருந்து பாத்துகிட்டே இருக்கேன். எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவான்னே சொல்லிகிட்டு இருக்க. அதுக்கு இந்தாளும் ஒத்து ஊதறான். உங்களுக்குள்ளயே மாத்தி மாத்தி பேசிக்கறீங்க. எவனாவது இங்க வந்து என்ன ஏதுன்னு கேக்குறானா? அப்புறம் ஏண்டா இப்படி உளர்றீங்க.

சுப்பன் :: இந்த லட்சணத்துல எவனும் வரலையின்னு வேற அழறானுங்க.

*****

பாய் (சுவரை பிடித்தபடி வானத்தை கைகாட்டி) :: ஏஏஏய். ஷாமர்செட் மாம்.. எளுத்தாளனுக்கு பொழுப்புணர்ச்சி வெய்ணுமா வெய்ணாமா.. ஒனிக்கி இ-மெயில் போட்டனே, ஏன் இன்னும் ரீப்ளை சொல்லாம டீலே பண்ற.. பயந்தாங்கொள்ளி
 



தலை..

ரொம்ப நாளைக்கப்புறம் ட்ரேட்மார்க் பதிவு, அடி வாங்கத் தயார் ஆயிட்டீங்களா?

இந்த மாதிரி மீட்டிங்குக்கு பொன்ன, பீர் அடிச்சோமா, பிரியாணி சாபிட்டொமன்னு வராம, திறனாய்வு எழுதறவங்க எந்த வகை தலை?
 



'சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்'!!

உடனே பின்னூட்டம் இட முடியாமல்,
திறனாய்வை மீண்டும் படித்து அதற்கும்
ஒரு திறனாய்வு செய்து, புரிந்த பிறகே
இங்கு வரும்படி செய்துவிட்டிர்கள்!

'ஸடையர்'[நையாண்டி] என்ற அளவில் இது ஒரு அருமையான "இலக்கிய, எழுத்தாள, கவிதைப்" படைப்பு!!!!!!!!!!!!!
 



Mumgamoodi

Superb. Ungala Moththap poraanunga paarunga.

Sa.Thirumalai
 



முகமூடி, சூப்பர்ன்னா, சூப்பர்.

இந்த வாரம் யாழகத்தில்(கனடா தாங்க ஹார்பர் - பிரதமர். ஹார்ப் என்றால் யாழ்) இலவச கொத்தனாரின் வருகையை முன்னிட்டு தமிழ் ஆராய்ச்சிக் கூட்டம் நடைபெறும். மீன்கொத்தியும் சுட்டக் கோழியும். ஜிகர் தண்டாவும் உண்டு.

அனைவரும் வந்து கொத்த சாரி மொத்த வேண்டுகிறேன்
 



முகமுடி,
யார் யாருன்னு கண்டே பிடிக்க முடியலை அகராதியை கொஞ்சம் வெளியேவிடுறது.
 



:-)

//தெலுங்கினி :: சொல்லிட்டீங்க இல்ல, எல்லாப்பயலும் ஓடி வந்து மொத்துவானுங்க பாருங்க.//

நான் இதை வழி மொழிகிறேன் :-)
 



// உங்க பதிவுகளை அலுவலகத்துல படிச்சு சிரிச்சுக்கிட்டிருந்தா //

இதுக்கே சிரிக்கிறீங்களே மீனாக்ஸ்.. இன்னும் சில பதிவுகள்லாம் இருக்கு.. புதியதோர் உலகம் செய்வோம் வகை. காமெடியின் உச்சம். அதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க. சிரிச்சி சிரிச்சி வயிறு உண்மையிலேயே வலிக்கும்.

*

நாவல், கதையா? நீங்க வேற பி.கே.எஸ். நான் எதிர்காலத்துல சினிமாவுல காமெடியெனா ஆகணும்னு ஆசைப்பட்டு அண்ணன் வடிவேலுகிட்ட அட்வைஸ் கேட்டேன். அவரு "டேய், இங்க எனக்கே டப்பா டான்ஸ் ஆடுது.. நீ வேணா முதல்ல காமெடி ட்ராக் எழுத கத்துக்க.. அப்பால பாக்கலாம்"னாரு.. அதுக்காக பதிவு எளுதி காமெடி இலக்கியத்துக்கு ப்ராக்டீஸ் பண்ணிகிருக்கேன். நீங்க வேற...

*

// இந்த மாதிரி மீட்டிங்குக்கு பொன்ன, பீர் அடிச்சோமா, பிரியாணி சாபிட்டொமன்னு வராம, திறனாய்வு எழுதறவங்க எந்த வகை தலை? //

அவங்க எல்லாம் சூப்பர் கேட்டகிரி.. (ஒருவேளை இந்த பதிவ திறனாய்வு கேட்டகிரியில வரா மாதிரி ஒரு லுக் இருக்கோ... அடடா, இது தெரியாம "பாமரனின் அனுபவ குறிப்புகள்"னு முன்னூட்டம் கொடுத்துட்டனே...)

*

// திறனாய்வை மீண்டும் படித்து அதற்கும்
ஒரு திறனாய்வு செய்து //

அடடா, புல்லரிக்க வைக்கிறீங்களே.. மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிதா? தெரிஞ்சிருந்தா இத உரை(றை)கவிதைன்னு சொல்லிருப்பேனே..
 



// Ungala Moththap poraanunga paarunga // வாழ்த்துக்கு நன்றி திருமலை :))

*

// மீன்கொத்தியும் //

மீன்கொத்தியா... ஓ கிங்பிஷரா... என்னங்க நீங்க.. தமிழறிஞராக லாயக்கில்லாம இருக்கீங்க.. கிங்பிஷருக்கு இலக்கிய பெயர்ப்பு :: அரச மீனவன். மொழிபெயர்ப்புன்னா அதுல ஆசிரியனோட சமத்துவ கண்ணோட்டம் தெரிய வேணாமா

*

// நான் இதை வழி மொழிகிறேன் //

நன்றி! நன்றி!! நன்றி!!! அப்புறம் என்ன இலக்கிய ஆக்டிவிடீஸ ரொம்ப கொறச்சிட்டீங்க போல..
 



// யார் யாருன்னு கண்டே பிடிக்க முடியலை அகராதியை கொஞ்சம் வெளியேவிடுறது //

சந்தோஷ்.. என்னங்க அகராதி எல்லாம் கேட்கறீங்க. டிஸ்கி போட்ருக்கேன் பாருங்க. உண்மையிலேயே இது இங்க நடந்த கூட்டத்தோட அனுபவ குறிப்புகள்தான். நம்பலையின்னா ஒரு ஸ்மைலி வேணா போடறேன் :))
 



பிரியா அணி - இலக்கியக் கூட்டமும் தமாசும்.....
 



perfect parody:)

//அதுவரை பார்க்காத ஒரு உருவம், பாத்ரூமிலிருந்து எட்டி பார்த்து :: இது பத்தி சொல்ல எனக்கு நிறைய இருக்கு. இப்போதைக்கு இத்தோட ஒத்து போறேன்னு மாத்திரம் சொல்லிக்கிறேன். அப்புறமா வந்து பொறுமையா சொல்றேன்.
//

Romba super thalaivare.
 



முகமூடி

அருமையான அங்கத உணர்வுடனும், சமயோதிடமுள்ள நகைச்சுவையுணர்வும் உங்கள் எழுத்தில் மிளிர்திறது. உங்களது நீரிய எழுத்துப் பணி தொடர என் அன்பான வாழ்த்துக்கள். எனது ஆதரவும் பாராட்டுக்களும் என்றும் உங்களுக்கு உண்டு.

உங்கள் எழுத்துப் பணியைத் தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பு நண்பன்
ச.திருமலைராஜன்


பி.கு இப்ப என்ன திடீரென்று ஆதரவு தருகிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்ப இணையத்தில் யாராவது யாருக்காவது ஆதரவு தருவதுதான் ·பாஷனாமே, நான் எனக்குப் பிடித்த பதிவரான முகமூடிக்கு எனது ஆதரவினை அளிக்கிறேன். அவ்வளவுதான்.
 



எல்லா அகத்திலயும் இதே கததானா?!
(அமீரகத்திலும்(துபாய்)அவ்வப்போது இதுபோன்ற சந்திப்புகள் ந'டா'த்தி
வருகிறோம் என்பதை தன்னடக்கத்துடன் தெரி'வித்து'
கொள்கிறேன்.)

அன்புடன்,
( துபாய்)ராஜா.
 



சரி, உங்க கருத்து ??