<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்


என்னடா இது ரெண்டு மூணு வாரமா இந்த பச்ச புள்ளய காணோமேன்னு யாராவது கவலப்பட்டீங்களா...

வீடு வரை மனைவி
வீதி வரை உறவு
காடு வரை பிள்ளை
கடைசி வரை கட்சி

ன்னு கண்ணதாசன் சும்மாவா சொன்னாரு. ஆயிரம்தான் சொந்த பந்தம்னாலும் பச்சை குத்தி, நாக்கறுத்து, மூக்கறுத்து, தீக்குளிச்சின்னு கடைசி வரைக்கும் நம்மையே நினைச்சி நமக்காகவே வாழறது கட்சி தொண்டன் ஒருத்தந்தான்ன்னு நிரூபணம் ஆயிடுச்சி பாருங்க.. இதுக்குத்தான் நமக்குன்னு ஒரு கட்சி வேணுமின்னு எல்லாரும் போராடுறது...

கட்சிய பலப்படுத்தலாம்னு ஒரு சுற்று பயணம் போனேன். கூட்டணி பேரமெல்லாம் ரகசியமா நடக்கணுமின்னு எதிரி கட்சி தலைவர் கேட்டுகிட்டதால செயற்குழுவுக்கு கூட தெரிவிக்காம பயணத்த ரகசியமா வச்சிகிட்டேன். (அட கள்ளத்தோணியெல்லாம் இல்லப்பா, இந்தியாவுக்கு தானே போனேன் அதுக்கு ஏன் கள்ளத்தோணி)

சொல்லாம கொள்ளாம போனனலும் அதையெல்லம் மனசுல வச்சிக்காம, திண்ணை எப்படா காலியாவும்னு இருந்த உள்கட்சி வீரபாண்டிங்க சலசலப்பையெல்லாம் சமாளிச்சு, சிங்கம் எப்ப தூங்கும்ணு காத்திருந்து வாலாட்டுன சிறுநரியான எதிர்(ரி) கட்சி ஆளு - ஒரேயொரு தலைவர் கம் தொண்டர்தானப்பா அந்த கட்சியில, கட்சி பேரு கூட வாயில நுழைய மாட்டேங்குது அவங்க எல்லாம் பழம் தின்னு கொட்டையையும் பழமாக்கின பமகவோட மோதறாங்கலாமா - ஆட்டத்தை அடியோட அடக்கி கட்சியோட உண்மையான விசுவாச தொண்டனா கட்சி மானம் காப்பாத்துன மருத்துவர் சின்ன அய்யா. தம்பி இராமநாதன நினைச்சி நானும் இந்த கட்சியும் பெருமைப்படுறோம், பெருமிதப்படுறோம், புளகாங்கிதம் அடையறோம்.. கட்சி தொண்டருங்க எல்லாரும் இதை நினைச்சு நினைச்சு கூட்டம் போட்டு ஆனந்த கண்ணீர்ல விம்முறாங்க...

(சின்ன அய்யான்னவுடனே மருத்துவர்தான் கட்சியின் அடுத்த வாரிசான்னு கேட்டு குடைச்சல் கொடுக்காதீங்கப்பா... ஆனா, கான்வென்டுல படிக்கிற என் மகனோ மருமகனோ காலேஜ் முடிக்கிற வரைக்கும் அவர்தான் கட்சியின் நிரந்தர நம்பர் இரண்டு என்பதை மட்டும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்)


இராமநாதனின் இந்த சேவையை மெச்சி அவர் படிச்சி முடிச்சவுடனே அவருக்கு அவர் பல்கலைக்கழகத்துலயே நம் சார்பில் டாக்டர் பட்டம் தர ஏற்பாடு செய்யப்படும் என்பதை லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு இதன் மூலம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... உ.ஏ.இ வட்ட செயலாளர் பெனாத்தல் சுரேஷ் என்னவோ உள்குத்து பண்ண முயற்சி பண்ணியிருக்கார்னு தெரியுது.. என்னான்னு இன்னும் 3 நாட்களுக்குள்ள செயற்குழுவுக்கு விளக்கம் அளிக்கலையின்னா அவர் தன்னோட குடும்பத்தோட எதிர்கட்சிக்கு போக அடி போட்டுட்டார்னு என் மனசாட்சி சந்தேகப்படுது... பெனாத்தல் சுரேஷ்ங்கிற பேர பெனாத்தலார்னு நமக்கு நாமே திட்டத்துல போஸ்டர் அடிச்சிகிட்டப்பவே நமக்கு தெரியும் இவருக்கு தலையாக ஆசை வந்திடுச்சின்னு...

**

போன முறைக்கும் இந்த முறைக்கும் விமானத்துலயே வித்தியாசம் தெரிஞ்சுது.. அட பிசினஸ் க்ளாஸ்லாம் இல்லீங்க.. நாமென்ன திராவிட கட்சியா, தொண்டருங்க காசுல பிஸினஸ் க்ளாஸ்ல போக.. விஜயகாந்த மாதிரி கைக்காச போட்டு கட்சி நடத்துற ஆளுங்க. ஜெயிச்சி ஆச்சிய ச்சீ ஆட்சிய பிடிக்கிற வரைக்கும் எக்கானமிதான்... விசயம ப்ளேன்ல இல்ல, ப்ளேன்ல வந்த மக்கள்கிட்ட...

அதாவது இதுக்கு முன்னாடி பயணத்துல எல்லாம் ப்ர்ஸ்ட் ஹாஃப் விமானப்பயணம் சண்டை நடக்காதப்போ இருக்கிற காங்கிரஸ் கட்சி ஆபிஸ் மாதிரி தூங்கி வழிஞ்சிகிட்டு மகா அமைதியா இருக்கும். ஆனா லாஸ்ட் லெக் பயணம் பாக்கணுமே, பயணிகள் ஏறலாம்னு சொல்றதுதான் தெரியும் பாண்டிச்சேரி பாமக ஊர்வலம் மாதிரி அம்ம ஆரம்பிச்சுடுவாங்க நம்மாளுங்க... ஏய் ஓடுறா மாப்ள கடேசியில நம்ம சீட்டுன்னு ரெண்டு பேரு லக்கேஜ் கம்பார்ட்மெண்ட மூட முயற்சி பண்ணிகிட்டு இருந்த விமான பணிப்பெண்ணை இடிச்சி தள்ளிகிட்டு ஒடறானுங்க.. விமானம் கிளம்பினதும் வெள்ளை சொக்காய் வெள்ளை பேண்ட் போட்ட ஒரு எருமை கதவு பக்கத்திலேயே நின்னுகிட்டு பணிப்பெண்கள் அவரை கடக்கும் ஒவ்வொரு முறையும் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒரு ஸ்மால் அளவுக்கு காமிச்சி "மேடம் ஒண் ஸ்மால் ரவுண்ட்" என்று பிச்சை எடுக்காத குறையா இம்சை பண்றான்.. நாலு ரவுண்டுக்கு பிறகு அவங்க பேண்ட்ரி அறையிலயே திரையை விலக்கி தலைய நுழைச்சி கெஞ்ச ஆரம்பிக்க விமான தலைமை சிப்பந்தியே அவரிடம் வந்து பயணம் முழுக்க இப்படி நிக்கக்கூடாது போய் உட்காருங்கன்னு கெஞ்சியும் அதட்டும் குரலில் சொல்லியும் மசியணுமே நம்மாளு.. கடைசியில் பொறுமை இழந்து கால்வாசி பாட்டிலை அப்படியே வாங்கிகிட்டுதான் ஓஞ்சாரு நம்மாளு... பயணம் முழுசுக்குமே சந்தைக்கடை இறைச்சல் கொறயவே இல்ல... ஆனா இந்த முறை எதிர்மாறா ஒரு சத்தமும் காணோம்... மயான அமைதி.. என்னய்யா நடக்குது.. குருவிங்க எல்லாம் எலக்சன் டூட்டியில போயிட்டாங்களா?

மத்தபடி இந்தியா பயணத்துல ஒரு விசேஷமுமில்லை... மின்சார செலவே இல்லாமல் 24 மணிநேரமும் சுடு தண்ணீர் வசதி தரும் அருமையான மெட்ராஸ் வெயில்.. ரொம்ப நாளக்கப்புறம் அட்ரீனலின் அதிகரிக்க வைக்கும் சென்னை சாலை பைக் பயணம்.. ரோஸ் கலர் தந்தூரி சிக்கனையே பார்த்து சலிச்ச நாக்குக்கு வகையா அஞ்சப்பரிலிருந்து விருதுநகர் வரை தேடி தேடி சிறிதளவு ஈயப்பட்ட தென்னிந்திய நடப்பன ஊர்வன வகைகள்.. மத்தபடி ப்ளான் பண்ணிட்டு போன சில பல வேலைகள்..

ப்ளான் பண்ணாம சைக்கிள் கேப்ல நடந்தது வலைப்பதிவாளர் சந்திப்பு... அறிமுகப்படுத்திக்கலாமா வேணாமான்னே போனவன், கூட்டம் முடியிறப்போ அறிமுகப்படுத்திக்கிட்டேன்... ஆனாலும் ஆஜானுபாகுவான மனிதர்னு என்ன பாத்து டோண்டு எழுதியிருந்தது கொஞ்சம் ஓவருங்கண்ணா. 6 அடி உயரமும் அதற்கேற்ற எடையும் (சரி ரெண்டு மாசமா ஜிம் பக்கம் போக முடியாம ஒரு 5 கி அதிகமாயிடுச்சி... அதுக்காக) இருந்தால் ஆஜானுபாகுவா. ஒரு வேளை jeune homme futé என்பதை அப்படி மொழிபெயர்த்துவிட்டாரா? இல்ல, எதிர் கட்சி ஆளுங்க கிட்ட பெட்டி வாங்கிட்டாரா? சரி ரைட்டு.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

ஜெட் வேகத்தில் முடிந்த பெரிய வலைஞர்கள் கூட்டத்துக்கு பின்னாடி ஒரு குறு வலைஞர்கள் கூட்டம் நடந்தது... புளிக்க வைக்கப்பட்ட திராட்சை ரசம் மற்றும் பார்லி தண்ணீரோடு நடந்த இந்த குறுங்கூட்டம் "என்னை பொருத்த வரை" பெருங்கூட்டத்தை விட சுவாரசியமாக இருந்தது என்பதுதான் உண்மை. முந்தைய கூட்டம் வட்ட மேஜை மாநாடாக நடந்திருந்தால் ஒருவேளை என் எதிர்பார்ப்புக்கு நடந்திருக்குமோ என்னவோ. அல்லாமல் செவ்வக மேஜை மாநாடு என்பதால் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே மற்றவருக்கு தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, கூட்டத்தின் பெரும்பான்மையான நேரம் பேச்சு போலியை பற்றி இருந்தது என்று டோண்டு எழுதியதை படித்தவுடன் "அப்படியா" என்று கேட்க தோன்றியது :)

**

வலையில ஐஐடி ப்ரச்னை ஆரம்பிச்சப்போ ஊருக்கு போனேன். கருத்து சொல்லவே முடியல.. நம்ம கருத்து எவனுக்கு வேணும்கிறது ஒரு பக்கம்னாலும் ஊரே நம்ம கருத்த எதிர்நோக்கி வாய பிளந்துகிட்டு உக்காந்து இருக்கிற மாதிரியும் நாம பெரிய கருத்துவியாதி மாதிரியும் செல்ஃப் மார்க்கெட்டிங் பண்ணாத்தான் shine பண்ண முடியுமாமே இந்த காலத்துல.. அது மட்டுமில்லாம சும்மாவெல்லாம் கருத்து சொல்ல முடியுமா.. அதனால ஒரு ப்ரூப், ஒரு ஆத்தண்டிசிட்டிக்கின்னு ஐஐடி அறிவிப்பு பலகை பக்கத்துல குந்தி ஒரு போட்டோ எடுத்துகிட்டேன்.. கூடுதல் தகுதிக்காக ஐஐடி உள்ள ரவுண்டானா வரைக்கும் உலாத்திட்டு வந்தேன்... இனி ஐஐடிக்குள் உலாத்தியவன் என்ற முறையில் நானும் சவுண்டு விடலாம்.. (நான் உடுறதுக்கு முன்னாடி ஐஐடில என்ன ப்ரச்னை எதுக்கு ப்ரச்னைன்னு எதுவும் சொல்லிடாதீங்கப்பு.. அரைகுரையா விட்டாத்தான் சவுண்டுக்கே மதிப்பு...)

**

அவனவன் சிங்கப்பூர்ல உக்காந்துகிட்டு சிலுக்குவார்ப்பட்டிக்கும், குவைத்துல உக்காந்துகிட்டு குஜிலியம்பாறைக்கும் தொகுதி அலசல் பண்ணும்போது நான் தமிழ்நாட்டுல சுற்றுப்பயணமே போயிட்டு வந்துட்டு அலசாம இருந்தா நல்லாவா இருக்கும்... பண்ணிடுவோம். அதாவது நான் பயணம் செஞ்ச வண்டி சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், பாண்டிச்சேரி, கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி, சேத்தியாதோப்பு, திண்டிவனம், மேல்மருவத்தூர், தாம்பரம், சைதாப்பேட்டை ஆகிய ஊர்ங்கல்ல வரும்போதெல்லாம் நான் முழிச்சி பாத்து "என்ன ஊருப்பா"ன்னு கேட்டு கண்ணாடிய இறக்கு எட்டி பாத்தேன்... பண்ருட்டியில பலாப்பழம் வாங்கினோம். பாண்டியிலயும் திண்டிவனத்துலயும் பெட்ரோல் அடிச்சோம். இது போதாதா தொகுதி அலசலுக்கு..

மேல இருக்கிற ஊருங்க எல்லாத்தையும் ஒரு வெள்ள பேப்பர்ல எழுதிகோங்க. பக்கத்துலயே அந்த ஊர் வேட்பாளருங்க எல்லார் பேரும் எழுதிக்கோங்க. வேட்பாளருங்க பேர் தெரியாட்டாலும் ஒண்ணியும் ப்ரச்னை இல்ல.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணின்னு பொதுவா எழுதிக்கோங்க.. அதுல உங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் அல்லது உங்க அய்யா, அம்மா, அப்பத்தா, தோட்டத்துல புல்லு புடுங்கற பெரிய மூக்கி, மாடு மேக்கிற கொண்ண வாயன் இவங்களுக்கு பிடிச்ச வேட்பாளர் பேர போல்டு பண்ணி ஹைலைட்டர் வச்சி கலர் அடிங்க.. ஆச்சா, முடிஞ்சிது தொகுதி அலசல். "என் கணிப்புப்படி"ன்னு எல்லாருக்கும் படிச்சி காமிங்க... காப்பிரைட் நன்றின்னு நம்ம பேர சொல்லிடுங்க..

**

ஊருக்கு போனதில நிறைய புஸ்தகங்கள் வாங்கிட்டு வந்திருக்கேன்... புஸ்தகம் பேரா, நீங்க வேற.. சும்மா இலக்கியத்துல முங்கி முத்தெடுக்கிறவன்னு பீலா வுடுறதுக்காக புஸ்தகம் வாங்குறோம்.. நானும் வாங்கினேன்னு நாம்பாட்டுக்கு பீலா உட நீங்க பாட்டுக்கு ஆஹா இந்த புஸ்தகமான்னு எடக்கு மடக்கா விளக்கம் கேட்டு வைக்க, நானும் பி.காரன் வாந்தி எடுத்தா மாதிரி எதுனா எழுதறதுல என்ன பிரயோசனம் சொல்லுங்க.. அதனால என்னைக்காவது சுறுசுறுப்பு வந்து எதுனா புஸ்தகத்த படிச்சா பேர சொல்றேங்க..

அப்பால வேற என்ன நடக்குது நாட்டுல.. நம்ம சைடுல ஒண்ணியும் பெரிய விஷயமில்லை... ஜெட்லாக் (இதுக்கு தமிழ்ல என்னப்பா) எல்லாம் தீந்தவுடனே விலாவாரியா சந்திப்போம்னு ஒரு சிறு பீட்டர மட்டும் விட்டு இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கிறேன்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தலைவா,

தமிழ்நாட்டையே கலக்கி, சென்றார் வென்றார் எனும் வகையில் அங்கிருக்கும் கட்சிகளெல்லாம் ஆடிப் போகும்படியாக வெற்றி உலா நடத்தி வந்திருக்கும் அண்ணலே,

உம் வருகை பற்றி அறிந்தவுடன் ஆளாளுக்கு இலவச டீ.வி, அரிசி, எருமை மாடு என்றெல்லாம் அள்ளிவிடும் அளவிற்கு பயம் கொண்ட கட்சிகளின் நடுவே சூரியனாய் வலம் வந்த சிங்கமே,

சிறு நரிகள் சலசலப்பையெல்லாம் கிழக்கில் மருத்துவரும் மேற்கே நாங்களும் பார்த்துக் கொள்வோம் என நம்பி கட்சியை எங்களிடம் ஒப்படைத்து சென்ற வள்ளலே,

மால்கேட்டில் இருக்கும் ஒருவர் உங்களை ஓடோடி வந்து பார்த்து நம் கட்சிக்கு என்றும் விசுவாசமாய் இருப்பேன் என்றதை அரசியல் நாகரீகம் கருதி வெளியில் சொல்லாத பண்பாளரே,

புத்துணர்வுடன் கட்சியை மேலும் பல வெற்றிகள் பெற்று வழி நடத்தி செல்ல வந்திருக்கும் தன்மானத் தலைவரே,

உங்களை வருக வருக என வரவேற்கிறேன். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

தலைவர் வாழ்க. கட்சி வளர்க.

இப்படிக்கு
உங்கள் அன்புத் தொண்டன்
இ.கொ.
 



தமிழகம் போய் விட்டு வந்துதான் கருத்துக்கணிப்பு சொல்ல வேண்டுமா? அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டே என் கணிப்பு: திமுக கூட்டணிதான் வெல்லும்; கூட்டணி ஆட்சியும் அமைக்கும். அந்தக்கூட்டணி ஆட்சி 5 வருடம் தாக்குப்பிடிப்பதுதான் கஷ்டம்.

அதுசரீஈஈஈ, இப்போது திராட்சை ரசம் கிடைக்கிறதா என்ன? இந்தியாவின் தேசிய வைனான கோல்கொண்டா என்று சொல்லி விடாதீர்கள், நொந்து விடுவேன்.
 



சிங்கத்தை சீண்ட வேண்டாம் - செல்வன் எச்சரிக்கை

தனியாக ஒரே நபர் இருக்கும் கட்சி என அ.உ.ஆ.சூ.கு.ர.ம கட்சியை கிண்டலடித்த முகமூடிக்கு அ.உ.ஆ.சூ.கு.ர.ம பொருளாளர் செல்வன் மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்து பேசியதாவது.

"முகமூடி பேசியது தனி ஒருவனான என்னைப்பற்றி இருந்திருந்தால் தாங்கிக்கொண்டிருப்பேன்.ஆனால் நம் கட்சியையே கிண்டல் செய்து அதன் உறுப்பினர்களாக இருக்கும் 7 கோடி தமிழர்களையும், 30 கோடி அமெரிக்கர்களையும்,33 முக்கோடி தேவர்களையும் கிண்டல் செய்துள்ளார்.

இது தனி ஒருவன் இருக்கும் கட்சியா?இல்லை இது தனித்து ஆட்சி அமைக்கும் கட்சி.1 man army.

இங்கு தலைவன் ஒருவன்.தொண்டர் பல கோடி.எப்படி கடவுள் ஒருவர் பக்தர் பல கோடியோ அதுபோன்ற கட்சியே எமது கட்சி.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது போல் "ஒன்றே கட்சி,ஒருவனே தலைவன்" என இருக்கும் கொள்கை பிடிப்புள்ள கட்சி எமது.

தேர்தலில் அ.உ.ஆ.சூ.கு.ர.ம, வ.வா சங்கம், மல்லிகை அணி ஆகிய முப்படை கூட்டணி வெற்றி பெற்று முடித்ததும் அடுத்த அறிக்கை வெளிவரும்.

இறுதியாக புரட்சி தளபதி திருமா அன்புத்தோழி படத்தில் சொன்னபடி

"ஆடு தான் கும்பலா வரும்.ஆனா சிறுத்தை எப்பவும் தனியாதான் வரும்" என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 



// அண்ணலே, சிங்கமே, வள்ளலே, தன்மானத்தலைவரே //
இ.கொ. நம் கட்சிக்காகவும் கழகத்துக்காகவும் ஆற்றிய அரும்பணிகளை, சிந்திய ரத்தம் எல்லாவற்றையும் நினைத்து ப்ளாஷ்பேக் கணத்தில் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த நேரம் பார்த்து அவருடைய சேவைக்கு கவுரவம் சேர்த்தே ஆக வேண்டும் என்று என்று என் மனசாட்சியும் கட்சியின் ஒருநபர் பொதுக்குழுவும் வற்புருத்தியதால் இன்று முதல் அருமைத்தம்பி, ஆருயிர் செம்மல் இலவச கொத்தனார் ப.ம.கவின் அகில உலக அமெரிக்க துணை பொதுச்செயலாளர் ஆகிறார்.

**

// தமிழகம் போய் விட்டு வந்துதான் கருத்துக்கணிப்பு சொல்ல வேண்டுமா? அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டே என் கணிப்பு //
நீங்க வலைப்பதிவு இலக்கணத்த மீறாம நடந்துக்கறீங்க. நான் கொஞ்சம் போல மீறிட்டேன் அதான் வித்தியாசம்.. எங்க இருந்து சொன்ன என்ன, அலசல்தான முக்கியம்... என்ன நான் சொல்றது...
 



//குவைத்துல உக்காந்துகிட்டு குஜிலியம்பாறைக்கும் தொகுதி அலசல் பண்ணும்போது //

:-)

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it
 



நீங்க என்ன முயற்சித்தாலும் எங்க வ.வா.சங்கத்தை அடிச்சுக்க முடியாது. எங்க கட்சியிலே எல்லாம் புது ரத்தம், இள ரத்தம். எல்லாம் ரத்தத்தின் ரத்தங்கள்.எங்களுக்கே வெற்றி வலை உலகில் எங்கள் ஆட்சியே?????????????????????
 



// தனியாக ஒரே நபர் இருக்கும் கட்சி //
வேணா போனா போவுதுன்னு "இனமான சிங்கமே நம் கழகத்துக்கு தோள் கொடுக்க வா" ன்னு தினமூடியில ஒரு குறு அறிக்கை ஒன்னு விடறேன். உங்க தொகுதியில மட்டும் நின்னுகிட்டு மத்த தொகுதியில எங்கள ஆதரிங்க.. உங்க நல்லதுக்கு சொல்றேன்.. ஒழுங்கா கேட்டு நடங்க.. நாளைக்குள்ள ஒரு முடிவுக்கு வரலேண்ணா, நீங்க உடற சவடாலுக்கு, என் தாத்தாவோட பேரன விட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு போட வேண்டி வரும்.. சொல்லிட்டேன்...

// ஆடு தான் கும்பலா வரும்.ஆனா சிறுத்தை எப்பவும் தனியாதான் வரும்" //
இப்படி ஏதாவது பேச வேண்டியது. அப்புறம் ஒரு எதுகை மோனைக்காக மிருக ஜாதின்னு சொன்னா கோபப்படுறது.. ஒண்ணும் சரியில்ல சொல்லிட்டேன்.
 



// குவைத்துல உக்காந்துகிட்டு குஜிலியம்பாறைக்கும் தொகுதி அலசல் பண்ணும்போது :-) //
ஐயயோ அது ஒரு எதுகை மோனைக்காக சொன்னது ஆரோக்கியம்... நீங்க ஸ்மைலி போடறத பாத்தா உண்மையிலேயே யாராவது அலசறாங்களா என்ன? இப்ப ஒரு கோடி ரூபாய்க்கு எங்க போவேன்..

*

// வ.வா.சங்கத்தை அடிச்சுக்க முடியாது. //
உங்களுக்காக மேற்கு பகுதி கொ.ப.ச பதவி ரெடியா இருந்திச்சே நம்ம கட்சியில.. நீங்க எப்பங்க வ.வா சங்கத்துல சேந்தீங்க.. இல்ல கட்சியே உங்களதா? எப்பிடி இருந்தாலும் அப்பால கட்சி ஆபிஸுக்கு கட்சி நிதியோட வாங்க.. பேசி தீத்துக்கலாம்.

// எங்க கட்சியிலே எல்லாம் புது ரத்தம், இள ரத்தம் //
என்ன இளரத்தம். எங்க இளைஞர் அணியில 83 வயசுல ஆரம்பிச்சி 57 வயசு வரைக்கும் இளசா சல்லிசா ஓடுது ரத்தம்.. யாருப்பா அங்க.. ப்ரீஸர்ல இருந்து ஒரு க்ளாஸ் ரத்தம் எடுத்து கொடுப்பா அவங்களுக்கு.. அதுக்கு ஈடாகுமா அவங்க கட்சி ரத்தம்னு பாத்து சொல்லட்டும்...
 



இப்படித்தான் ஒரே பதிவா போட்டு விட்டுடறதா? இல்லே முன்னுரை மட்டுமா?

அங்கங்கே போய்ப் பாருங்க. இருவது, முப்பது வாரமுன்னு இழுத்துக்கிட்டு போறதை:-)))
 



welcome back!
 



// இப்படித்தான் ஒரே பதிவா போட்டு விட்டுடறதா //

நீங்க வேற.. இதுக்கே உம்பாடு எம்பாடுன்னு ஆயிப்போச்சி...

// அங்கங்கே போய்ப் பாருங்க. இருவது, முப்பது வாரமுன்னு இழுத்துக்கிட்டு போறதை //

என்னதான் மினுமினுத்தாலும் மின்மினிப்பூச்சி (வானத்து) நட்சத்திரம் ஆயிட முடியுமா? உங்க ரேஞ்ச் என்ன்..

*

நன்றி பொட்(டீ)கடை.. யாவாரம் எல்லாம் எப்படி போகுது... திராவிடர்கள எல்லாம் பாத்தீங்கண்ணா நான் கேட்டதா சொல்லுங்க..
 



அய்யா,

ஒரு போஸ்டர் அடிச்சு ஒட்டினதுக்கு ஒரு புரமோஷனா? நீங்கதான்யா வள்ளல்.

வாழ்க நின் புகழ். வளர்க நின் கொற்றம்.

அப்படியே நீங்க இல்லாத போது கட்சியில் சேர்ந்த பெரும் புள்ளிகளாம் குமரன், ஜிரா, ஜீவா, தேவு தம்பி எல்லாரையும் வரவேற்று ஒரு வரி எழுதுங்க. இல்லைன்னா குமரனுக்கு கோவம் வந்திடப் போகுது.

மருந்து, வேற யாரையாவது விட்டுட்டேனா? அவங்க கோவிச்சுக்கப் போறாங்க.
 



இந்த செவ்வக மேசை மாநாட்டுக்கெல்லாம் சொல்லிக்காம மட்டம் போட்டுடறது உத்தமம்! :-)

ஆனா அந்த குறுங்கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டப்போ கன்னாபின்னான்னு பொகை! why shd guys have all the fun?! :-(
 



முகமூடியாரே

பாவம்யா நீங்க. கடைசிவரைக்கும் முகமூடியை கழட்டவே போறதில்லப்பு.
சொல்லிப்புட்டேன்.

வ.வா.ச வோட வளர்ச்சியும் பலமும் இன்னமும் தெரியலியா.
இல்ல தெரியாத மாதிரி பீலா வுட்டு பாக்குறீங்களா.

நாங்கெ பம்பரம் உடறதுக்கே பாம்பு புடிக்கறவிங்க.(சாட்டை வேணுமில்லியா வென்ரு).

அமெரிக்காவுலெயெ நாங்க கூட்ன கூட்டத்துக்கும், வுட்ட சவுண்டுக்கும் எல்லா பயலுவளும் நமக்கு ஆதரவு கடுதாசு குடுத்துருக்காகப்பூ.

உங்க சின்ன ஐய்யா கூட ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட் நம்பரு போட்டு
மெயில் போட்டுருக்காஹ
 



வாங்க! வாங்க! நீங்க இல்லாம சுரத்து கம்மியாத்தான் இருந்தது!

நா விசாரித்திருந்தேனே!
 



நிம்மி, அது அப்படித்தான் :-(
தோ, கிளம்பிக்கிட்டே இருக்கிறேன். நாம போடுவோம் கேர்ல்ஸ் ஒன்லி சூப்பர் மீட்டிங்க.
 



//நான் முழிச்சி பாத்து "என்ன ஊருப்பா"ன்னு கேட்டு கண்ணாடிய இறக்கு எட்டி பாத்தேன்... பண்ருட்டியில பலாப்பழம் வாங்கினோம். பாண்டியிலயும் திண்டிவனத்துலயும் பெட்ரோல் அடிச்சோம். இது போதாதா தொகுதி அலசலுக்கு..

:-)
 



// வ.வா.ச வோட வளர்ச்சியும் பலமும் இன்னமும் தெரியலியா. //

நீங்களும் பீமபுஷ்டி லேகிய விளம்பரம் கணக்கா வளர்ச்சி பலம்னு ஏதாவது சொல்லிகிட்டுத்தான் இருக்கீங்க. ஆனா ஓமக்குச்சி ரேஞ்சிலயே இருக்கேப்பா உங்க கட்சி.

// உங்க சின்ன ஐய்யா கூட ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட் நம்பரு போட்டு மெயில் போட்டுருக்காஹ //

அது சும்மா உங்க நிதி நிலைமைய பத்தி தெரிஞ்சிக்க போட்ட பிட்டு. பாவம் உங்க கஜானாவுல மொத்த இருப்பே 4 ரூவா 45 பைசான்னு அவருக்கு தெரியாது

*

விசாரிப்புக்கு நன்றி SK.. நீங்க ஒருத்தராவது ஞாபகம் வச்சிருந்தீங்களே... // நீங்க இல்லாம சுரத்து கம்மியாத்தான் இருந்தது // இதுக்காகவே பொதுக்குழுவ கூட்டி உங்களுக்கு அகில உலக பதவி ஒண்ணு தரலாமே.
 



// அந்த குறுங்கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டப்போ கன்னாபின்னான்னு பொகை! why shd guys have all the fun?! //

குறுங்கூட்டத்துல உங்களயெல்லாம் சேத்துக்கறது பத்தி நமக்கு ஒண்ணும் ஆட்சேபம் இல்லீங்க.. ஆனால் நாளக்கி தமிழர் பாதுகாப்பு பேரவைக்கு யார் பதில் சொல்றது. அதனால அவங்ககிட்ட இருந்து ஒரு No Objection Letter வாங்கிட்டு வந்தீங்கன்னா ஜமாய்ச்சிடலாம்.

*

// நாம போடுவோம் கேர்ல்ஸ் ஒன்லி சூப்பர் மீட்டிங்க // அதிக பட்சமா மேங்கோ லஸ்ஸி சாப்பிடுவீங்களா? இல்லாட்டா கேர்ல்ஸ் ஒன்லி மீட்டிங்கோட மெனுவ திராவிட நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் தைரியம் இருக்கா?

*

வாங்க ராம்கி, மத்த தொகுதி அலசல எல்லாம் எலக்சன் முடியறதுக்குள்ள ரிலீஸ் பண்ணுங்க. நீங்களாவது தமிழ்நாட்டுல இருந்து நேர்ல பாத்து எழுதறீங்களா இல்ல வெளிநாட்டு சுற்று பயணத்துல எதுவும் இருக்கீங்களா?
 



//பாவம் உங்க கஜானாவுல மொத்த இருப்பே 4 ரூவா 45 பைசான்னு அவருக்கு தெரியாது//

இந்த ஒரு வாக்கியத்திற்கே உங்கள் மேல் மான நஷ்ட வழக்குப் போடக் கிளம்பிய எங்கள் பேராசிரியர் கார்த்திக்கை அடக்கி வைத்து விட்டு நான் எழுதும் பின்னூட்டம் இது...
நீங்கள் இந்தியா வந்து போன நாளிலிருந்து எங்கள் கஜானாவையே காணோம் எனும்போது அதில் 4 ரூவா 45 பைசா தான் இருக்கிறது என்று நீங்கள் கூறுவதை நான் முதற்கண் ஆட்சேபிக்கிறேன்..
எங்கள் தங்கத் தலைவர். மனிதருள் மாணிக்கம், மால்கேட் மரகதம் கைப்பு உங்களைச் சந்தித்து, உங்களுக்கு எங்கள் சங்க அலுவலகத்தைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றதற்குப் பிறகு எங்கள் கஜானாவைக் காணவில்லை என்பதை தாயுள்ளம் கொண்ட எங்கள் தலைவர் இதுவரை வெளியே கூறாமல் இருக்கிறார். இன்றும் நீங்கள் எங்கள் கஜானாவையும் அதில் இருந்த 2 ரூவா 27 பைசாவையும் சீக்கிரம் அனுப்பி வைத்தால் இனியும் இதைப் பற்றி வெளியே சொல்லாமல் பெருந்தன்மையோடு மன்னிக்க எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார்.. :)

:)
 



Parly water & Pulitha Thiraatchai rasam meeting eppo nadanthalum muraiyana arivippu blogla varanum.illaina unga kalathukku varama velinadappu Paniduvom.Maaveeran.
 



// அதில் இருந்த 2 ரூவா 27 பைசாவையும் // டீ வாங்க காசு கொஞ்சம் கம்மியா இருக்குன்னு எங்கிட்ட 2 ரூவா கைமாத்து வாங்கினாரு. நல்லா கணக்கு கேட்டு அந்த 2 ரூவாய முதல்ல மணி ஆர்டர் பண்ணுங்க..

// இனியும் இதைப் பற்றி வெளியே சொல்லாமல் பெருந்தன்மையோடு மன்னிக்க //

என்னது, உங்க தலைவர் "பெருந்தன்மையா" என்ன மன்னிக்கிறாரா?? ஏற்கனவே இப்படியெல்லாம் சொல்லிகிட்டு ட்ரை-சைக்கிள்ள வந்த உங்க கட்சி ஆளுங்க கதி என்ன ஆச்சின்னு இங்க போயி பாருங்க...
 



//// நாம போடுவோம் கேர்ல்ஸ் ஒன்லி சூப்பர் மீட்டிங்க //

கேர்ள்ஸ் ஒன்லியா?. லேடீஸ் ஒன்லி இல்லையா?! :-)

பச்ங்களே இந்த உள்குத்தை கவனீச்சிங்களா?
 



// eppo nadanthalum muraiyana arivippu blogla varanum // அடுத்த தபா செஞ்சிடுவோம்.. என்ன சாரு நிவேதிதா மாதிரி திரும்பி போகும்போது ரெண்டு பல்லு இல்லாம போனா நாம் பொறுப்பு இல்ல சொல்லிபுட்டேன்
 



என்னடா இருபத்து இரண்டு'க்கும் மேல பின்னூட்டம் எகிறுதேன்னு பாத்தா (புகைச்சல்தான்!)... நன்னி சொல்லியே உம்மோடது 12!

(துளசியக்கா ஸ்டைலில்) "ஆமா நீங்க இந்தியா போயிட்டு வந்தீங்களா? அங்க யாரையாச்சும் சந்திச்சீங்களா?"
 



//"ஹாய் ஹாய் ஹாய் ஹாய்" //

தலைப்பினை வ.வா.சங்கத்தின் (ஆமா எப்பங்க இது கட்சியாச்சு?) நிரந்தர உறுப்பினர் என்ற முறையில் வன்மையாய் கண்டிக்கின்றேன்.

இதையே வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து அஃதாவது கிரந்தம் ஒழித்து, தமிழ்'படுத்து'மாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். முடியுமா உங்களால்?
 



இப்பொவே.. கண்ணக்கட்டுதே...
 



நமக்கு ஏதாவது ஒரு பதவி இருந்தா கூடுங்களேன். பதவி தர மறுத்தால் தனிக்கட்சி ஆரம்பிக்கபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
நாகை சிவா
 



தலைவா,

நன்றி சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டேனே. அதைக் காணுமே. கொஞ்சம் பிளாக்கர் உள்ள போய் பாருங்களேன்.
 



பெனாத்தலார் தயாரித்து அனுப்பிய அறிக்கை. எவ்வளவு கட்சி கட்டுப்பாடு இருந்தால் தனது அறிக்கையை தான்தோன்றித்தனமாக தானே வெளியிடாமல் தலைவர் பார்வைக்கு அனுப்பி இருப்பார் என்பதை பாருங்கள். இந்த கட்டுப்பாடு எதிரி கட்சிக்கு உண்டா?

இனி அறிக்கை ::

களங்கம் இல்லாத என் கட்சிப்பணிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் ஊடக் வன்முறை செய்தோரினால் ஏமாற்றப்படோரின் பட்டியலில் என் தலைவனும் இடம் பிடித்திருப்பது என் மனத்தைப் பிசைகிறது, பிழிகிறது!

நான் கொள்கை விளக்கம் அளித்து, தலைவன் இல்லாத கட்சியை வழிநடத்தி, தேர்தலுக்கு கழகத்தை தயார்படுத்தி வைத்திருப்பதைக்கண்டுமா இந்தச் சந்தேகம்.

உடல் மண்ணுக்கு, உயிர் சின்ன முகமூடிக்கு என்று வாழும் இந்தத் தொண்டனை சந்தேகப்பட்டால், உங்கள் குடும்ப அரசியலை சந்திக்குக் கொண்டுவர ஒரு ஆள் கிடைத்தார் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் பாடுவது உங்கள் காதுகளில் விழவில்லையா? அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதுதான் இத்தொண்டனின், (தற்போதைய) கடைசி ஆசை.
 



---மின்சார செலவே இல்லாமல் 24 மணிநேரமும் சுடு தண்ணீர் ---

அதுக்குள்ள வந்தாச்சா... 'நிம்மதி உங்கள் சாய்ஸ்' இன்னும் சன் டிவியில் வருகிறதா :P
 



இந்தியாவில் எழுச்சிப் பயணம் முடித்துவந்த தலைவா,
வருக வருக.

நம் பலம் தெரியாமல், வரலாறு அறியாமல், உங்களிடம் கைமாத்து வாங்கின பம்மாத்து அறியாமல் இன்னும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் வ.வா.ச வை என்னவென்று சொல்வது.

பதவியும், புகழும் எதிர்ப்பார்த்து செய்யும் கட்சியா நம்ம கட்சி? (சின்ன ஐயானா வரும்படி பெர்சண்டேஜ் ஏறும்தானே??) இருந்தாலும், நீங்க ஆசைப்பட்டு கொடுக்கறதுனால ஏத்துக்கறேன். வந்த சூட்டோட சூடா ஒரு கட்சிப்பதிவு போடுங்க. அப்பவாது இவங்களுக்கு புத்தி தெளிதான்னு பாத்துக்கலாம்.

குஜிலியம்பாறை குஜிலியானந்தாவோட ஊராச்சே.. இதுல அலசறதுக்கு என்ன இருக்கு. அவர் தான் ஜெயிப்பாரு.

செல்வன் நிலைமை பரிதாபமா இருக்கு. அவர் யார் பேர்ல கட்சி ஆரமிச்சு குதிக்கறாரோ, அந்த குமரனே நம்ம கட்சியில சேந்து மாசம் ரெண்டாச்சு. :))

//அதிக பட்சமா மேங்கோ லஸ்ஸி சாப்பிடுவீங்களா? இல்லாட்டா கேர்ல்ஸ் ஒன்லி மீட்டிங்கோட மெனுவ திராவிட நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் தைரியம் இருக்கா?//
:))
 



//இதுக்காகவே பொதுக்குழுவ கூட்டி உங்களுக்கு அகில உலக பதவி ஒண்ணு தரலாமே//

அடுத்த பொதுக்குழுக் கூட்டம் எப்போ?

ஹி ஹி, ஹி!
 



This comment has been removed by a blog administrator.
 



இப்படி தேன் தடவற மாதிரி பேசறதுக்கு என் தல கைப்பு
உங்களுக்கு வாங்கி குடுத்த , கழுவாத டீ கிளாஸ்லே எட்டு ஸ்பூன் சக்கரய யாருக்குமே தெரியாம நீங்க கொட்டிகிட்டதுதான்.
இத நேர்ல பாத்த பொன்ஸ் அக்காவுக்கு நீங்க குடுக்கறதா
சொன்ன 1 சங்கு மார்க் கர்ச்சீப்பை உடனடியாக குரியர்ல அனுப்பி வைக்கவும்.
இல்லைன்னா தம்பி தயாநிதி மாதிரி ஒண்டிக்கு ஒண்டி அறிக்கை விட வேண்டி வருமுன்னு சொல்ற இந்த நேரத்திலதலைவர் கைப்புகிட்டயிருந்து வந்த sms.

நீங்க அவர்கிட்ட இருந்து கைமாத்தா வாங்கின பொடிமட்டையிலேரெண்டெ ரெண்டு மில்லிகிராம்தான் இருந்தாகவும் அடுத்த முறை நீங்க இந்தியா வரும்போது துபாய் செண்டு
வாங்கிட்டு வரச்சொல்றாரப்பு.
 



// கேர்ள்ஸ் ஒன்லியா?. லேடீஸ் ஒன்லி இல்லையா?! :-) //

infact அப்படீன்னு நான் எழுதியத infantனு படிச்சிட்டாங்க போல. நம்மள என்னா பச்ச குழந்தைன்னு நினைச்சிட்டாங்களா?

*

// நன்னி சொல்லியே உம்மோடது 12! //

யோவ், அவனவன் ந ன் னி அப்படீங்கறதையே மூணு பின்னூட்டமா போட்டு எண்ணிக்கய எகிற வைக்கிறான்.

*

// ஹாய் ஹாய் ஹாய் ஹாய் :: இதையே வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து அஃதாவது கிரந்தம் ஒழித்து, தமிழ்'படுத்து'மாறு //

சரி ஓய்.. தமிழ்ப் படுத்தி ட்டேன் :: ஓய் ஓய் ஓய் ஓய்
 



// இப்பொவே.. கண்ணக்கட்டுதே... //

இதுக்கே கண்ண கட்டுதா.. வெளி உலகத்துல எட்டி பாத்தீங்களா.. கண்ணே கூசுது

*

// நன்றி சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டேனே. //

அயல்நாட்டு சதி இ.கொ. இப்பதான் மீண்டு வந்தேன்

*

// அதுக்குள்ள வந்தாச்சா... //

இது என்ன சந்தோஷமா, வருத்தமா? ஸ்மைலி போட்டாதானே தெளிவா புரியும்.
 



வாங்க இராம்ஸ், கட்சி வளர்ச்சி எப்பிடி இருக்கு. என் ஆளு குஜிலிய எனக்கே தெரியாம பேட்டி கண்டுட்டீங்க போலருக்கே.. அப்பால தனியா கவனிச்சிக்கிறேன்.

*

// அடுத்த பொதுக்குழுக் கூட்டம் எப்போ //

இதுக்கெல்லாம் ஒரு ஷெட்யூலா? எனக்கு எப்பப்பெல்லாம் ஓய்வு தேவைப்படுதோ அப்பப்பெல்லாம் பொதுக்குழு கூட்ட வேண்டியதுதான்

*

// நீங்க அவர்கிட்ட இருந்து கைமாத்தா வாங்கின பொடிமட்டையிலே //

உங்க கட்சியிலயும் பொடி போட ஆரம்பிச்சிட்டிங்களா?
 



//சரி ஓய்.. தமிழ்ப் படுத்தி ட்டேன் :: ஓய் ஓய் ஓய் ஓய்//

தவறு "காய் காய் காய் காய்" என்பது தான் சரி ( தினதந்தியில் ஹெலிகாப்டரை கெலிகாப்டர் என்று படித்து கலோ கௌ ஆர் யு என்று பேசி பழுகியதால்)
 



MugaMoodi,

Kindly let me know how did you list of articles displayed in a combo box?. I am successfully attempted to categorize the articles. I want to get the list of all articles.
 



"6 அடி உயரமும் அதற்கேற்ற எடையும் (சரி ரெண்டு மாசமா ஜிம் பக்கம் போக முடியாம ஒரு 5 கி அதிகமாயிடுச்சி... அதுக்காக) இருந்தால் ஆஜானுபாகுவா."

கூறாமல் விட்ட நாலடி அகலத்தையும் சேர்த்திருந்தால் ஆஜானுபாகு என்று கூறாமல் எப்படி கூறுவதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



"காய் காய் காய் காய்" அப்படீன்னா கறிகாய் விக்கிறவன் மாதிரி வருதுங்க.. அதுவுமில்லாம ஓய் ஓய் னாத்தானே திராவிட டச் வருது.

*

பாலசந்தர், காம்போ பாக்ஸ் வழக்கமான ஜாவாஸ்க்ரிப்டுதான் ஒரு ஸ்பெஷலும் இல்லை. மேலும் நான் manualஆகத்தான் வகைப்படுத்துகிறேன், ஆட்டோமாடிக்காக இல்லை. .. மேலும் விபரங்கள் வேண்டுமெனில் மெயில் அனுப்புங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

*

டோண்டு, நீங்க பாட்டுக்கு இப்படி எழுதிட்டீங்க. உண்மையில காக்க காக்க சூர்யா மாதிரி இருந்த என்ன நீங்க எழுதினத படிச்சிட்டு சரத்குமார் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணியிருப்பாங்கன்னு பாத்தா அதவிட பெரிசா பண்ண வச்சிடுவீங்க போலருக்கே. விடு ஜூட்.
 



சரி, உங்க கருத்து ??