<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கலர் (டிவி) கனவுகள்


ஏழை மக்களுக்கு கலர் டி.வி. வழங்க ரூ. 1060 கோடிதான் செலவாகும். கலர் டி.வி. கொடுத்தே தீருவோம். கருணாநிதி சபதம்.

போடுங்க போடுங்க.. உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா.. நீங்கள் உழைத்து சம்பாதித்ததா, நான் உழைத்து சம்பாதித்ததா.. அரசு கஜானாதானே.. நல்லா போடலாம்

ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தந்து பொழுதுபோக்குக்காக, பொது அறிவை பரப்ப, பகுத்தறிவு பாடம் கற்றுத்தர டி.வியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிவித்திருக்கிறேன்.

காலேஜ் பசங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் எப்படி மாமாங்கிற வார்த்தையோட அர்த்தமே கேவலமா ஆச்சோ, அது மாதிரியே திராவிட "கட்சி"ங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் பகுத்தறிவுங்கற வார்த்தையோட அர்த்தமும் கேவலமாயிடுச்சி... டிவியால பொது அறிவு வளருதுன்னு சொன்னா "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" பாட்டுக்கு டான்ஸ் ஆடுற குட்டி பாப்பா கூட கேவலமா சிரிக்கும். தமிழ்நாட்டுல தூர்தர்சன எவ்வளவு பேர் பாக்குறாங்க அதோட ப்ரோக்ராம் என்னன்னு எல்லாம் யாருக்கும் தெரியாது.. ஆனா "பெரும்பான்மை" பார்க்கிற சன் டிவியின் 24 மணிநேர நிகழ்ச்சி நிரல் இங்கே இருக்கு.... இதில் பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் எவ்வளவு, பகுத்தறிவு பாடம் கற்றுத்தரும் நிகழ்ச்சிகள் எவ்வளவு என்பது "கடவுளுக்கே" வெளிச்சம்.

தமிழகத்திலே மொத்தம் 156 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளன.

முப்பது ஆண்டு திராவிட கட்சிகளின் சாதனைன்னு கேட்டா சொல்ல ரொம்ப முக்கியமான புள்ளிவிவரங்கண்ணா.

முதல்கட்டமாக இவர்கள் அனைவருக்கும் கலர் டி.வி வழங்க வேண்டும் என்றால் 53 லட்சம் டி.விக்கள் தேவை.

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வையின்னு வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களுக்கு "முதல்கட்டமா" டி.வி வழங்கணும்னு எப்படிங்கண்ணா தோணுச்சி.. அது சரிதான்.. கும்பி காஞ்ச மக்களுக்கு செவிக்கும் கண்ணுக்கும் சிறிது ஈயவும்னு அய்யன் சொல்லியிருக்காருல்ல.. செய்ய வேண்டியதுதான்... ஆனா சமையல் குறிப்பு ஸ்பெஷல் போடும்போது வினோதினிய வச்சி மைக்ரோவேவ்ல எலிக்கறி சமைப்பது எப்படின்னு சொல்லி கொடுக்க மட்டும் மறக்காதீங்க.. விவசாயம் பொய்ச்சா, இந்த மாதிரி ஒரு அய்ட்டம் செய்யலாம்னே தெரியாம கெரகம் பச்சை எலிய அப்படியே சாப்பிடுறாங்களாம்...

30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது சாதாரண தொகைதான். முடியாதது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்க ஊர் கிழவி பொட்டிக்கடையாண்ட உக்காந்துகிட்டு என்ன சொல்லும்னா "ஏண்டா வெட்டி பயலுவளா, இப்படி பீடி குடிச்சே காச கரியாக்குறீங்களேடா"ன்னும்.. அதுக்கு நம்ம பயலுவ எல்லாம், "கெழவி, மாச சம்பாத்தியாம் 1000 ரூவா வாங்குறோம்.. அதுல 20 ரூவா பீடிக்கட்டுல என்ன பெரிசா ஆயிடப்போவுது"ன்னு சொல்லுவாங்க. "அட கருமாந்திரம் புடிச்ச பசங்களா... சந்தனம் மீந்துச்சின்னா ***யில தடவ சொல்லுதா.. அத உருப்படியா எதுக்காச்சும் செலவு பண்ணுங்கடான்னும்... இந்த மாதிரி கிழவிங்க எல்லாம் இப்ப இல்ல...

இதை 2 ஆண்டில் வழங்குவோம். ரூ.2 ஆயிரத்தில் டி.வி.வழங்க மொத்தம் 1060 கோடி செலவாகும்.

2 ஆயிரத்தில் டி.வியா? சரி.. சரி... நான் கூட கலர் டிவின்ன உடனே கலர்ல தெரியிற டிவின்னு நினைச்சேன்.. தேர் திருவிழாவுல கிடைக்கிற டிவிக்கு கலர் அடிச்சி கொடுக்கிறாங்க போல... இல்ல உண்மையிலேயே 4 இன்ச் கலர் டிவி எதுவும் 2 ஆயிரத்துக்கு கிடைக்கிதா? இதுல மந்திரி/எம்.எல்.ஏ கமிசனே டிவிக்கு 2 ஆயிரம் ஆயிடுமேப்பா..

அதாவது ஆண்டுக்கு ரூ.530 கோடிதான். இது ஒரு பெரிய தொகையே அல்ல.

அப்படியே வீட்டுக்கு ஒரு டூ-வீலரோ காரோ வாங்கி கொடுக்கலாம்.. 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கார் நிறுத்த ஒரு வீடு கட்டி கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே எல்லாருக்கும் மூணு வேளை சோறும் போடலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே அன்ன சத்திரம் கட்டி சீட்டு விளையாட கொஞ்சம் பணமும் கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கோட்டையை இடித்து விட்டு அரண்மனை கட்டி, கார்களுக்கு பதிலாக ரத கஜ துராதிகளை நியமித்துக்கொள்ளலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல....

ச(ப்)பதம் நன்றி :: தமிழ்முரசு




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//போடுங்க போடுங்க.. உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா.. நீங்கள் உழைத்து சம்பாதித்ததா, நான் உழைத்து சம்பாதித்ததா.. அரசு கஜானாதானே.. நல்லா போடலாம்//

என்ன இப்படி சொல்லறீங்க. நாம உழைத்ததுதாங்க. இதுக்கு ஒரு பதிவு தனியா வந்தாச்சே.

//அது மாதிரியே திராவிட "கட்சி"ங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் பகுத்தறிவுங்கற வார்த்தையோட அர்த்தமும் கேவலமாயிடுச்சி..//

அய்யய்யோ, இது பத்தி நீங்க பேசக்கூடாதே. அதுக்கு நடுநிலமைவியாதி என்ற தனித்தகுதி வேணுமே. இதுக்கும் ஒரு பதிவு தனியா வந்தாச்சே.

//முப்பது ஆண்டு திராவிட கட்சிகளின் சாதனைன்னு கேட்டா சொல்ல ரொம்ப முக்கியமான புள்ளிவிவரங்கண்ணா.//

வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்காங்களான்னு பார்க்க டீ.வி. இருக்கறது ஒரு தகுதியா? அப்படி இருந்தா ஒரே நாளுல எல்லாருக்குமே அந்த தகுதி வந்திடுமே.

//முதல்கட்டமாக இவர்கள் அனைவருக்கும் கலர் டி.வி வழங்க வேண்டும் என்றால் 53 லட்சம் டி.விக்கள் தேவை.//

ஆனா இந்த 53 லட்சம் வீட்டுக்கு மின்சாரம் இருக்கோ? அது தரதா சொல்லவே இல்லையே.

//30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது சாதாரண தொகைதான். முடியாதது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//

இல்லை இருக்கவே இருக்காங்களே, இந்த மாத சம்பளம் வாங்கற நடுத்தர மக்கள். அவங்க பாக்கெட்டுலேர்ந்து எடுத்துக்க வேண்டியதுதான். அவங்க மாடா உழைக்கறது இதுக்குத்தானே. (வருமான வரி மத்திய அரசு வாங்கறது.. உளறாதேன்னு சொல்ல வரதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க.)

//இதை 2 ஆண்டில் வழங்குவோம். ரூ.2 ஆயிரத்தில் டி.வி.வழங்க மொத்தம் 1060 கோடி செலவாகும்.//

:-D. நோ காமெண்ட்ஸ்.

//அதாவது ஆண்டுக்கு ரூ.530 கோடிதான். இது ஒரு பெரிய தொகையே அல்ல.//

அதான் மேல சொல்ல்லியாச்சே. அவங்க இருக்கற வரைக்கும் 500 கோடி என்ன 50000 கோடி கூடத்தான் பெரிய தொகை இல்லை. என்னவோ கணக்கு சொல்லறாங்களே. கேபிள் வருமானமே 200 கோடியைத் தாண்டுமாமே. அங்க இதெல்லாம் ஒரு பொருட்டா?

ஏமாற ஆளுங்க இருக்கற வரை ஏமத்தவும் ஆளுங்க இருக்கத்தான் செய்வாங்க.
 



//பகுத்தறிவு பாடம் கற்றுத்தரும் நிகழ்ச்சிகள் எவ்வளவு என்பது "கடவுளுக்கே" வெளிச்சம்.

:-) :-)
 



அருமையான பதிவு முகமூடி.

கலர் டிவி கொடுப்பது முடியுமா முடியாதா என்று பிரச்சினை திசை திருப்பப்பட்டுவிட்ட நேரத்தில், ஆதாரமான கேள்வி - தேவையா இல்லையா? என்ற கேள்வி பலராலும் மறக்கப்பட்டுவிட்டது.
 



முகமூடி,

இது சினிமாவை பார்த்து ஓட்டு போடுற மாங்கா மடையர்களை நம்பி அறிவிக்கப்பட்ட அபத்த திட்டம்...

(கொத்தனார் ..உங்கள் பாயிண்ட்கள் அருமை.பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.நன்றி)
 



நடுநிலமைவியாதி

கொத்தனார்..சூப்பர்பு :)))
 



அண்ணே, அப்படியே வயித்து வலி மாத்திரையும் எல்லோருக்கும் சப்ளை ப்ண்ண சொல்லுங்க. சிரிச்சி, சிரிச்சி வயிறு புண்ணா போச்சி. தமிழன் வாழ்க்கையே அப்படித் தான் ஆயிடிச்சி :-(
 



நான் ஏற்கனவே இது பற்றிப் பதிவி செய்துள்ளேன். பார்வையிட
http://mahendranmahesh.blogspot.com/2006/04/blog-post_05.html
 



நான் இங்கேப் போட்ட பின்னூட்டத்தைக் காரணமாகக் காட்டி எனது பதிவொன்றில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு பின்னூட்டம் போடப்பட்டுள்ளது. மட்டுறுத்தல் வசதியால் அதனை நிறுத்திவிட்டேன்.

பொதுவாய் நான் இது போன்ற அனானி கருத்துகளுக்கு பதில் கூறுவது இல்லை. அதில் நான் இங்கு கருணாநிதியை எதிர்த்து பின்னூட்டம் போட்டதாக சொல்லியுள்ளார்கள். அதை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இங்கு எதிர்ப்பது இந்த இலவசமாக எதையாவது கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரத்தையே தவிர வெறும் கருணாநிதியையோ அல்லது தி,மு,கவை மட்டுமே தாக்கும் எண்ணமில்லை. They have taken this trend to a new low. Hence it was the reference point to vent against this culture.

இதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாமல் ஒரு வெறியோடு இருப்பவர்களிடம் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை. இப்படி எதற்கெடுத்தாலும் எனது குடும்பத்தை பற்றி பேசுவது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த விவாத லட்சணம். இவர்கள் எல்லாம் படித்தவர்கள். இந்திய நாட்டின் மன்னர்கள். கடவுள்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஓ. அந்த நம்பிக்கை கூட இவர்களுக்குக் கிடையாதே. தமிழகத்தைக் காப்பாற்றவே முடியாது போலும்.
 



முகமூடி,

நல்ல விளாசல். ஆனால் உறைக்க வேண்டியவர்களுக்கு நீங்கள் உரைத்தது விளங்காதே.

Princess happily lived ever after என்ற பாணியில் எப்படியோ அனைவருக்கும் கலர் டிவி கிடைத்து சந்தோஷமாக இருந்தார்கள் என்று கதை கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
 



சும்மா ரோட்டில் போகிறவன், வர்றவனுக்கெல்லாம் அதிமுக வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 1,000 2,000 என்று கொடுக்கும்போது யாராவது இதுபோல விமர்சனம் செய்தீர்களா? அதிமுக மட்டும் இலவசத்திட்டங்களை அறிவித்து எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும்.... திமுக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றி பேசி தோற்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா?

வேறு வழியில்லாமலே தான் கலைஞர் "இலவச டிவி" என்று களத்தில் இறங்கி விட்டிருக்கிறார்....

அதிமுகவை எதுவும் சொல்லாமல் திமுகவை மட்டுமே குறைசொல்வது அறிவுஜீவித்தனம் என்று நினைத்துக் கொண்டிருபது மடமை....
 



---இல்ல உண்மையிலேயே 4 இன்ச் கலர் டிவி எதுவும் 2 ஆயிரத்துக்கு கிடைக்கிதா---

A Maker of $14.99 TV's Aims for Higher Ground - New York Times: "Coby has for years made the CX-TV1, a sturdy, five-inch black-and-white television with an AM-FM tuner that sells for $14.99 — $10 less than the price of most newly released DVD movies"

TV Price: Rs. 600
Corruption Charges - Rs. 1400

---இதுல மந்திரி/எம்.எல்.ஏ கமிசனே டிவிக்கு 2 ஆயிரம் ஆயிடுமேப்பா..---

Since, it is a beneficial scheme for Sun TV & SCV, the concerned parties will be willing to make necessary sacrifices.
 



Dinakaran - Karunanidhi's Answer in Nakeeran
 



April 07, 2006 6:28 AM க்கு நம்ம luckylook சொல்றது என்னன்னா:
சும்மா ரோட்டில் போகிறவன், வர்றவனுக்கெல்லாம் அதிமுக வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 1,000 2,000 என்று கொடுக்கும்போது யாராவது இதுபோல விமர்சனம் செய்தீர்களா? அதிமுக மட்டும் இலவசத்திட்டங்களை அறிவித்து எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும்.... திமுக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றி பேசி தோற்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமா?

வேறு வழியில்லாமலே தான் கலைஞர் "இலவச டிவி" என்று களத்தில் இறங்கி விட்டிருக்கிறார்....

அதிமுகவை எதுவும் சொல்லாமல் திமுகவை மட்டுமே குறைசொல்வது அறிவுஜீவித்தனம் என்று நினைத்துக் கொண்டிருபது மடமை....//////


உண்மை....சரியான பதிவு
 



mugamoodi,

POTD :) (POST OF THE DAY, like Shot of the day in cricket) !!!!
 



இன்றைய நிலையில் உள்ளபடி இருக்கும் விஷயம், தமிழகத்தில் ஒரு கணிசமான பொதுமக்கள் கூட்டம், கசாப்புக் கடைக்குப் போகுமுன் முட்ட முட்டத் தின்று விட்டு, களிப்புடன் செல்லும் ஆட்டு மந்தை போல, 'ஓட்டு மந்தை' யாகவே வளர்த்து விடப் பட்டிருக்கிற கொடுமைதான்.

இவர்கள்தான் எப்போதும் நம் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள்!

10ரூபாய் பணம், 100மில்லி சாராயம் என ஆரம்பித்து, படிப்படியாக இந்த நிலைக்கு கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் எழுதும் எதுவும் இவர்களைச் சென்றடையாது; அப்படி மரத்துப் போக வைத்திருக்கிறார்கள் இந்த 'திராவிட ராஸ்கல்கள்'[இது ஏதோ பெருமையான பேராமே!]

நான் இரு கழகங்களையும் தான் சொல்கிறேன்!


ஆண்டவனை வேண்டுவோம்; நாமும் முயல்வோம்.

தொடரட்டும் உங்கள் பணி!
 



தேவையா இல்லையா என்பது முதல் கேள்வி...
செய்யலாமா கூடாதா என்பது அடுத்தது
முடியுமா முடியாதா என்பது அடுத்தது...
விடலாமா கூடாதா என்பது அடுத்தது....

முதல் மூன்றும் மக்கள் யோசிக்க வேண்டியது....
அடுத்தது அ.தி.மு.க விற்கு....
 



இப்போதைக்கு மக்கள் நம்பும்படி எதை வேண்டுமானாலும் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டால் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் தானே.
 



கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி.

**

நமது காசுதான் இலவச கொத்தனார். கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார்களே என்று கேட்கலாம் என்றால் பகுத்தறிவு தடுக்கிறது. உங்கப்பன் வீட்டு சொத்தா என்று கேட்கலாம் என்றால் அரசியல் நாகரீகம் தெரியாதவர்களாகிவிடுவோம். அதனால்தான் வாக்கிய வழக்கப்படி உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா என்று போட்டேன்..ஆனால் இது மக்கள் பணம்தான். மகேஸ் பதிவில் சொல்லியபடி இந்த பணத்தில் எவ்வளவோ நல்ல திட்டங்களை செயல்படுத்தலாம் எனும்போது டி.வி தருவேன் என்று ஆதாயம் பெறுவதையும் வேடிக்கை பார்ப்போம்.

**
// சும்மா ரோட்டில் போகிறவன், வர்றவனுக்கெல்லாம் அதிமுக வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 1,000 2,000 என்று கொடுக்கும்போது யாராவது இதுபோல விமர்சனம் செய்தீர்களா? //
lucky look.. (உங்களுக்கு பல தமிழ் பூனை பெயர்கள் இருக்கணுமே) வெள்ள நிவாரண நிதியும் இதுவும் ஒன்றா.. "போறவன் வர்றவனுக்கெல்லாம் நிவாரண நிதி கொடுக்கிறாங்களே"ன்னா வேற எப்படி கொடுத்திருக்க முடியும்... ஏழைங்க எல்லாம் நிவாரணம் வாங்கணும்னு தர்றாங்க. அதுல வசதியானவனும் போய் நிவாரணம் வாங்கினா அது பிச்சை எடுக்கறதுக்கு சமானம்னு அவனுங்களுக்கே உரைக்கணும்.. அப்படி இல்லாம பரவாயில்ல பிச்சை எடுத்துக்கிறேன்னு போய் எடுத்தா அதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும்..
// வேறு வழியில்லாமலே தான் கலைஞர் "இலவச டிவி" என்று களத்தில் இறங்கி விட்டிருக்கிறார் // லட்டுக்குள்ள மூக்குத்தி, எவர்சில்வர் குடம், காசுன்னு எல்லாரும் கொடுப்பதுதான். ஆனா அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் அது ஓட்டு பிச்சை வாங்க தேர்தலுக்கு முன்னாடி (கொள்ளையடிச்ச) தன்கிட்ட இருக்கிற பணத்தில இருந்து கொடுப்பது. இது (கொள்ளையடிச்ச காச வெளியவே எடுக்காம) ஓட்டு போட்டா இனாம் கொடுக்கிறேன்னு அடுத்தவன் காசுல இருந்து அறிவிக்கிறது.

**

இப்போது தேவைப்பட்டால் கேபிள் கனெக்சனும் தரப்படும்னு அறிவிப்பு... (ஜெயா டிவி சேனலும் காண்பிக்கப்படுமா?) அதென்ன தேவைப்பட்டால்.... கேபிள் கனெக்சன் காசுக்குதானே இந்த இலவச டி.வி திட்டமே.. அப்புறம் எதுக்கு முக்காடு போட்டுகிட்டு...
 



நல்ல பதிவு முகமுடி. கலக்குங்க. அப்படியே உங்க பார்வையை மத்த கட்சி மீதும் விடுறது சும்மா ஜாலியாத்தான் சென்னேன் கொஞ்சம் பொழுதாவது போகும் இல்ல(எங்களுக்கு சென்னேன்).
 



//lucky look.. (உங்களுக்கு பல தமிழ் பூனை பெயர்கள் இருக்கணுமே)//

தன்னைப்போல பிறரை எண்ணும் உங்கள் குணம் வாழ்க!!


//வெள்ள நிவாரண நிதியும் இதுவும் ஒன்றா.. "போறவன் வர்றவனுக்கெல்லாம் நிவாரண நிதி கொடுக்கிறாங்களே"ன்னா வேற எப்படி கொடுத்திருக்க முடியும்... //

இதற்கு முன்னால் எல்லாம் எப்படி நிவாரணம் கொடுத்தார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் யாரென்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆராய்ந்து தானே? ரேஷன் கார்டு இருக்கிறவனுக்கெல்லாம் நிவாரணம் என்று எந்த அரசாவது கொடுத்ததா? வேறு மாநிலங்களில் எல்லாம் நிவாரணம் கொடுப்பதே இல்லையா என்ன? தமிழ்நாட்டில் 30 லட்சம் குடும்பங்களா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது? அரசு நிர்வாகச் சீர்கேட்டை நியாயப்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்....
 



//கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார்களே என்று கேட்கலாம் என்றால் பகுத்தறிவு தடுக்கிறது.//

வெள்ள நிவாரணத்தின் அதிமுக அரசு செய்தது இதைத்தான்.... அதை மறுப்பது தான் உங்கள் பகுத்தறிவா?
 



>>> அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்

நுழைவுத்தேர்வுக்கு படிக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதியில்லை,
நிறைய கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் தங்கள் விளைபொருட்களை விலை நிர்ணயம் செய்ய கட்டமைப்பு வசதியில்லை,
மாணவர்களின் எதிர்காலத்துக்கு தொலைநோக்கோடு பாடதிட்டத்தை வகுக்கும் கட்டமைப்பு இல்லை,
கல்லூரிகளில் பணம் பிடுங்குவதை தடுத்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி வசதிகிடைக்கச்செய்ய கட்டமைப்பு இல்லை,
இதெல்லாவற்றையும் விட "கலர் டீவி கட்டமைப்புதானே" அடுத்தவேளை சோத்துக்கும், நிலையான எதிர்காலத்துக்கும் அல்லாடும் தமிழனின் முக்கிய தேவை ? லக்கிலுக் கொஞ்சம் விளக்கலாமே ?

இங்கே, ஒரு அரசியல்வாதியை எதிர்த்தால், அவரை மட்டும் எதிர்கின்றாய், அடுத்தவரை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விதான் முதலில் எழுகின்றதே, அதைவிடுத்து இவர் செய்வதும் தப்பு, அவர் செய்வதும் தப்பு என்று இவர்களை எதிர்பதைக்காணோம்.....
 



// தன்னைப்போல பிறரை எண்ணும் உங்கள் குணம் வாழ்க // உங்களுது ஸ்டாண்டர்டு பின்னூட்ட டெம்ப்ளேட்ட ஒட்டி இருந்ததால அப்படி கேட்டேன்... வாழ்த்துக்கு நன்றி :))
மற்றபடி நிவாரண நிதி விஷயத்தில் நெல்லுக்கு பாய்ந்த நீர் சிறிது புல்லுக்கும் பாய்ந்தது... அதிமுக திட்டம் போட்டே நிலைமையை சாதகமாக்கி லாபம் பார்த்ததும் வாஸ்தவம். ஆனால் அதையும் டி.வி அறிவிப்பையும் ஒன்றாக கருதினால் சொல்ல ஒன்றுமில்லை.. யாத்ரீகனின் கருத்தையும் ஒருமுறை படித்து பதில் சொல்லுங்கள்.
 



திமுக தன் தேர்தல் அறிக்கையில் பயிர் காப்பீடு திட்டம் பற்றியும் அறிவித்திருக்கிறது.... அதைப் பற்றி தமிழ்நாட்டில் எவனாவது பேசுகிறானா? அதை அறிவித்திருப்பதால் சத்தியமாக திமுகவுக்கு ஓட்டு கிடைக்கப் போவதில்லை.... கலர் டிவி என்ற கவர்ச்சி அறிவிப்பு தான் இப்போது அதிமுக கூடாரத்தை கலங்க வைத்திருக்கிறது.... பத்தாததுக்கு வைகோ வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம்... கேபிள் கனெக்ஷன் கொடுப்பீர்களா என்று கேட்டு அதையும் கொடுப்போம் என்று கலைஞர் அறிவித்துத் தொலைத்து விட்டார்...

உங்களுக்கெல்லாம் மனச்சாட்சி இருந்தால் யோசித்துச் சொல்லுங்கள்... 1996லிருந்து 2001 வரை ஆட்சி செய்த கலைஞர் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தவில்லையா? கிராமங்கள் தோறும் கான்கிரீட் சாலைகள் போட வில்லையா? மாநில வளர்ச்சிக்கு டைடல் பார்க் கொண்டு வரவில்லையா? பெருந்துறை தொழில் பூங்கா கொண்டு வரவில்லியா? நன்றாக தானே ஆட்சி செய்தார்... 2001 தேர்தலில் இந்த கருமத்தையெல்லாம் சொல்லி தானே வாக்கு கேட்டார்... ஏன் தோற்றார்?

காரணம்... மக்களுக்கு நாளை பற்றி கவலை இல்லை... இப்போதைக்கு இலவசமாக ஏதாவது கொடுக்க வேண்டும்... அவ்வளவு தான்... கலைஞரும் மக்களின் கேவலமான மனநிலைக்கு மதிப்பளிக்க முடிவு செய்து விட்டார்....

இங்கிருக்கும் அறிவு ஜீவிகள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்... 1934ல் தமிழ் நாட்டுக்கு மின்சாரம் வந்தது... ஆனால் 1969 வரை தமிழ்நாட்டிலுள்ள 58,000 கிராமங்களில் 30,000த்துக்கும் குறைவான கிராமங்களில் தான் மின்சாரம் இருந்தது.... ஆனால் 1970க்கு பின்னரே கிட்டத்தட்ட 100 சதவீத கிராமங்களுக்கு மின்சாரம் வந்தது... மேலும் தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் பாலங்களில் 60 சதவிகிதம் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்....

ஜெயலலிதாவையும், கலைஞரையும் ஒப்பிட்டு ஊழல் ராணி ஜெயலலிதாவை பாதுகாக்கவே அனைவரும் முயற்சிக்கிறீர்கள் என்பதே உண்மை....
 



தேர்தல் வாக்குறுதிகளை கேட்டாலே டென்ஷன் ஆகுது. இப்படி வாய் கூசாம பேசரானுங்களேன்னு. இதுல நீங்க கொடுக்கற விளக்கத்தை படிச்சா நிஜமா வயிறு எரியுதுங்க.

கேப்டன் சார் வேற தன் பங்குக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கார். இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லன்னு இருக்கறதுதான் நல்லது போலிருக்கு.
 



/ கலைஞரும் மக்களின் கேவலமான மனநிலைக்கு மதிப்பளிக்க முடிவு செய்து விட்டார்....
/
கேவலமான மனநிலையில் மக்கள் இல்லை. தன்னைப்போல் பிறரை எண்ணும் உங்கள் எண்ணட்த்தை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் பெரும்பாலானோர் சாராயம் விரும்பி குடிக்கிறார்கள் என்பதற்காக தெருக்குதெரு சாரயக்கடையை திறப்பதா புத்திசாலித்தனம்.

இலவசங்களால எப்படி நம் எதிர்காலம் சீரழியப்போகிறது, அதில் இருந்து எப்படி நாட்டைக்காப்பற்றலாம் என்பதுதான் நல்ல தலைவனின் செயல் அதை விடுத்து அவன் தருகிறான் நான் அதைவிட அதிகம் தருகிறேன் என்று கூறுவது பதவியைப்பிடிக்கும் ஆசையே தவிர வேறொன்றும் இல்லை.
 



சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.... ஆட்சி அதிகாரம் கைக்கு கிடைத்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற நிலையில் கலைஞர் பாட்டுக்கு 1972 ஸ்டைலையே பாலோ செய்து தேர்தல் அறிக்கை தயாரித்து தோற்பது முட்டாள் தனம்....

முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பதற்கேற்ப கலைஞர் இலவசத்தை இலவசத்தால் வெல்ல நினைக்கிறார்....

ஜெ. கொடுத்த இலவசத்திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நம்ம அறிவு ஜீவிகளும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களேயானால் கலைஞர் இது மாதிரி தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமேயில்லை.....
 



மட்டரகமான தலைவனின்
மட்டரகமான தொண்டன்
 



///கேவலமான மனநிலையில் மக்கள் இல்லை. தன்னைப்போல் பிறரை எண்ணும் உங்கள் எண்ணட்த்தை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.///

ஜெயக்குமார் மற்றவரை பர்சனலாக தாக்காமல் பின்னூட்டம் கூட உங்களால் இட முடியாதா?
 



"""சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.... ஆட்சி அதிகாரம் கைக்கு கிடைத்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற நிலையில்"""""

நல்ல பாயின்ட்தான்...ஆனால் அந்த ஆட்சியை எப்படி பிடிக்கலாம் என்றும் ஒரு வரைமுறை வேண்டுமல்லவா...

""ஒரு ரவுடி பள்ளிக் கூடம் பக்கத்தில் கள்ளச் சாராயம் காய்சினானாம்...ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு நம்ம ஊரில் காலேஜ் இல்லை...அதைக் கட்டலாம் என்று நினைத்தேன் அதற்கு பணம் வேண்டுமல்லவா அதற்காக எனக்குத் தெரிந்த இந்தத் தொழிலை செய்து பணம் சேர்க்கிறேன் என்றானாம்"" அது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது...Ethical...என்று ஒரு விஷயம் இருக்கிறதே???
 



எங்கே ஆளை ரொம்ப நாளா காணோம்?
 



////ஒரு ரவுடி பள்ளிக் கூடம் பக்கத்தில் கள்ளச் சாராயம் காய்சினானாம்...ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு நம்ம ஊரில் காலேஜ் இல்லை...அதைக் கட்டலாம் என்று நினைத்தேன் அதற்கு பணம் வேண்டுமல்லவா அதற்காக எனக்குத் தெரிந்த இந்தத் தொழிலை செய்து பணம் சேர்க்கிறேன் என்றானாம்"" ////

நன்றி அனானி.... இப்போது இதையே தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது என்பதை சரியான நேரத்தில் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள்......
 



திருத்திக்கொள்ளுங்கள், 'லக்கிலுக்',

இதைத்தான், இந்த இரு கழகங்களும் மாறி, மாறி
கடந்த முப்பதாண்டு காலமாக செய்துகொண்டிருக்கிறது;

ஒரு வித்தியாசமும் இல்லாமல்!
 



லக்கி லூக்

இந்த இலவச கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்து தமிழனை கெடுத்த முழு பெருமையும் திமுகவை தான் சேரும்.ஒழுங்காக ஆட்சி செய்து கொண்டிருந்த பக்தவத்சலத்தை "ரூபாய்க்கு 3 படி" என்று சொல்லி கவிழ்த்து அதன் பின் தமிழ்நாட்டில் முதல் முதலாக கள் சாராய கடைகளை திறந்து குடிப்பழக்கமே இல்லாத ஒரு தலைமுறையை குடிக்கு அடிமையாக்கி, லாட்டரி கடைகளை திறந்து "விழுந்தால் வீட்டுக்கு இல்லாவிட்டால் நாட்டுக்கு" என்று சொல்லி மக்களை சூதாடி பழக்கி.....

கலைஞரும் அண்ணாவும் ஆரம்பித்து வைத்த இந்த பழக்கத்தை எம்ஜிஆர் அழகாய் அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார்.இலவச செருப்பு,ரிக்ஷா, வேட்டி சேலை என கொடுத்து வள்ளல் என பெயர் வாங்கினார்.

மீண்டும் கலைஞர் வந்து அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்து கஜானாவை காலியாக்கி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம்(கல்யாணத்துக்கு 10,000 ரூபா) சத்துணவோடு முட்டை,இலவச சமத்துவபுர வீடு என புகுந்து விளையாடிவிட்டு போனார்

சுனாமி நிதி,சைக்கிள் என அம்மா அதை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்று வரலாறு படைத்தார்.

இப்போது இலவச டிவி,தாலிக்கு தங்கம்,இலவச கேபிள்,இலவச பசுமாடு,இலவச நிலம், என அடுத்த லெவலுக்கு இரு கழகங்களும் தமிழகத்தை கொண்டு செல்கின்றன.

அடுத்த தேர்தலுக்கு என்ன ஆகுமோ என்பதை நினைத்தாலே கதி கலங்குகிறது.

இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதாவை காட்டி கருணானிதியை நியாப்படுத்தும் உங்களை போன்ற தொண்டர்களும், கருணானிதியை காட்டி அம்மையாரை நியாயப்படுத்தும் மற்ற வலைபதிவு நண்பர்களும் தான்.

என்றுமே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

"இந்த இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"

நன்றி: கர்ம வீரர் காமராஜர்
 



////ஒழுங்காக ஆட்சி செய்து கொண்டிருந்த பக்தவத்சலத்தை/////

ஆட்சேபிக்கிறேன் மைலார்ட்.... பக்தவத்சலம் ஆட்சிக்காலத்தில் பெரும் அரிசிப்பஞ்சம் வந்து மக்கள் துன்பப்பட்டார்கள்.... மக்களுக்கு கோதுமை மட்டுமே வழங்கப்பட்டது..... அவரும் ஜெயா ஸ்டைலில் மக்கள் ருசிக்காக கோதுமை சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் கதை விட்டார்..... அவுன்ஸ் கணக்கில் அரிசி கொடுத்த புண்ணியவான் தான் பக்தவத்சலம்.... பெருசு யாராவது உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் அவரிடம் கேளுங்கள் பக்தவத்சலம் ஆட்சி லட்சணத்தை......
 



ஆட்சேபிக்கிறேன் மைலார்ட்.... பக்தவத்சலம் ஆட்சிக்காலத்தில் பெரும் அரிசிப்பஞ்சம் வந்து மக்கள் துன்பப்பட்டார்கள்.... மக்களுக்கு கோதுமை மட்டுமே வழங்கப்பட்டது..... அவரும் ஜெயா ஸ்டைலில் மக்கள் ருசிக்காக கோதுமை சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் கதை விட்டார்..... அவுன்ஸ் கணக்கில் அரிசி கொடுத்த புண்ணியவான் தான் பக்தவத்சலம்.... பெருசு யாராவது உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் அவரிடம் கேளுங்கள் பக்தவத்சலம் ஆட்சி லட்சணத்தை...... //

பக்தவத்சலம் ஆட்சிக்கு பின் வந்த அவலட்சணத்துடன் ஒப்பிட்டால் அவரது ஆட்சிக்கு கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும்.அப்போதெல்லாம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை.1979il மொரார்ஜி தேசாய் இந்திய மக்களை திங்கள் தோறும் உண்ணாவிரதம் இருக்க சொன்ன கதை எல்லாம் நடந்தது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத காலத்திலேயே ரூபாய்க்கு மூணு படி என பொய் சொல்லி ஆட்சியை பிடிக்கும் வித்தை பக்தவத்சலத்துக்கு தெரியாது.படி அரிசி தராவிட்டால் முச்சந்தியில் நிறுத்த வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று பித்தலாட்டம் செய்து ஆட்சியை பிடித்து முச்சந்தியில் மக்களை நிறுத்தும் கலையும் அவருக்கு தெரியாது.

ஒழுங்காக லஞ்ச ஊழல் இல்லாமல்,பொய் சொல்லாமல் நேர்மையாக ஆட்சி நடத்தியோர் காங்கிரஸ்காரர்கள்.இந்த அவலட்சண ஆட்சிகள் வந்து தொலையாமல் இருந்திருந்தால் 1967il கர்மவீரர் ஆட்சியை பிடித்திருப்பார்.

எல்லாம் தமிழன் தலையெழுத்து.படித்த நீங்களே இந்த லட்சணத்தில் இருந்தால் படிக்காத கிராமத்தானை எல்லாம் திருத்துவது யார்?

காமராஜரை கறுப்பு காக்கா என்றது,நாட்டுக்காக வாழ்ந்த அப்பெரியவரை சின்னவீடு வைத்திருக்கிறார் என்று போஸ்டர் ஒட்டியது,ராஜாஜியை குல்லூக பட்டர் என்றது,இரா செழியனை ஈனப்பிறவி என்றது,சிதம்பரத்தை ஈ எறும்பு கொசு என்றது,இந்திரா காந்தியை விதவை என்றது

சேஷனை ஆள்வைத்து அடித்தது,சிதம்பரத்தை அடித்தது,சைக்கிள் செயின்,சோடாபாட்டில் கலாச்சாரத்தை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது,சென்னா ரெட்டி மீது அபாண்டப்பழி சுமத்தியது,தமிழ்நாட்டு முஜிபுர் ரகுமான் நான் என்று பெருமை பேசியது இது தான் கழக அவலட்சனங்களின் ஆட்சி.


கொஞ்சம் யோசித்து பாருங்கள்.காமராஜர்,ராஜாஜி,பக்தவத்சலம் என்று எத்தனை பெரியவர்கள் ஆண்டார்கள்.காமராஜர் படிக்காதவர்.அப்படிப்பட்டவர் நினைத்திருந்தால் டாக்டர் பட்டம் வாங்கியிருக்க முடியாதா?செய்தாரா?

அவர் நினைத்திருந்தால் தமிழர் தளபதி என்ன தமிழர் மன்னன் என்றே பட்டம் போட்டுக்கொண்டிருக்க முடியும்.செய்தாரா?ஆயிரம் கார்களில் பவனி வந்தாரா?12 ரூபாய் பணத்தோடு செத்துப்போனார் அவர்.முதல்வர் பதவிக்கு அலையோ அலை என அலையும் இக்காலத்தில் 3 பிரதமர்களை நியமித்து தனக்கு வந்த பிரதமர் பதவியையும் வேண்டாம் என்றவர் அவர்.

யார் ஆட்சியை யாரோடு ஒப்பிடுகிறீர்கள்?
 



சரி, உங்க கருத்து ??